பை – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

பை (16)

பை உடை நாக பகை கொடியானுக்கு பல்லாண்டு கூறுவனே – நாலாயி:8/4
படுத்த பை நாக_அணை பள்ளிகொண்டானுக்கு பல்லாண்டு கூறுதுமே – நாலாயி:9/4
பை நாக தலை பாய்ந்தவனே உன்னை பல்லாண்டு கூறுதுமே – நாலாயி:10/4
பை அரவு_அணை பள்ளியானோடு கைவைத்து இவள் வருமே – நாலாயி:286/4
பை அரவின்_அணை பாற்கடலுள் பள்ளிகொள்கின்ற பரமமூர்த்தி – நாலாயி:427/1
பை கொண்ட பாம்பு_அணையோடும் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:443/4
பை அரவின்_அணை பள்ளியினாய் பண்டையோம் அல்லோம் நாம் நீ உகக்கும் – நாலாயி:704/1
பை கொள் நாகத்து_அணையான் பயிலும் இடம் என்பரால் – நாலாயி:1379/2
பை அரவு_அணையான் நாமம் பரவி நான் உய்ந்த ஆறே – நாலாயி:1428/4
பை விரியும் வரி அரவில் படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும் – நாலாயி:1584/1
பை நாக_பள்ளியான் பாதமே கைதொழுதும் – நாலாயி:2159/3
கை தெளிந்து காட்டி களப்படுத்து பை தெளிந்த – நாலாயி:2475/2
பை கொள் பாம்பு ஏறி உறை பரனே உன்னை – நாலாயி:3201/3
பை அரவின்_அணை பள்ளியினானுக்கு – நாலாயி:3512/2
பை கொள் பாம்பு_அணையாய் இவள் திறத்து அருளாய் பாவியேன் செயற்பாலதுவே – நாலாயி:3577/4
பை விட பாம்பு_அணையான் திரு குண்டல காதுகளே – நாலாயி:3632/3

மேல்


பைங்கிளி (1)

பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பது ஓர் பாசத்து அகப்பட்டிருந்தேன் – நாலாயி:553/1

மேல்


பைங்கிளிகள் (1)

பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள் – நாலாயி:3519/1

மேல்


பைங்கிளியும் (2)

முற்றிலும் பைங்கிளியும் பந்தும் ஊசலும் பேசுகின்ற – நாலாயி:1215/1
பந்தோடு கழல் மருவாள் பைங்கிளியும் பால் ஊட்டாள் பாவை பேணாள் – நாலாயி:1396/1

மேல்


பைங்கிளியே (2)

சொல்லாய் பைங்கிளியே
சுடர் ஆழி வலன் உயர்த்த – நாலாயி:1946/1,2
சொல்லாய் பைங்கிளியே – நாலாயி:1946/4

மேல்


பைங்கூழ்கள் (1)

எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
மைத்து எழுந்த மா முகிலே பார்த்திருக்கும் மற்று அவை போல் – நாலாயி:694/1,2

மேல்


பைத்த (1)

பைத்த பாம்பு_அணையான் திருவேங்கடம் – நாலாயி:3152/3

மேல்


பைத்து (1)

பைத்து ஏய் சுடர் பாம்பு_அணை நம் பரனையே – நாலாயி:3746/4

மேல்


பைதல்காள் (1)

குயில் பைதல்காள் கண்ணன் நாமமே குழறி கொன்றீர் – நாலாயி:3832/2

மேல்


பைதலே (1)

நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளி பைதலே
இன் குரல் நீ மிழற்றேல் என் ஆருயிர் காகுத்தன் – நாலாயி:3830/1,2

மேல்


பைந்தலை (1)

ஐந்து பைந்தலை ஆடு அரவு_அணை மேவி பாற்கடல் யோக நித்திரை – நாலாயி:3068/3

மேல்


பைம் (49)

படம் படு பைம் தலை மேல் எழ பாய்ந்திட்டு – நாலாயி:215/3
ஆயிரம் பைம் தலைய அனந்தசயனன் ஆளும் மலை – நாலாயி:358/2
பைம் கமல தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன – நாலாயி:503/4
பைம் பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கருவிளைகாள் – நாலாயி:590/1
இலங்கை மன்னன் ஐந்தொடு ஐந்து பைம் தலை நிலத்து உக – நாலாயி:807/1
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின் – நாலாயி:919/2
வரி கொள் வண்டு அறை பைம் பொழில் மங்கையர் கலியனது ஒலி மாலை – நாலாயி:967/3
பைம் கண் ஆனை கொம்பு கொண்டு பத்திமையால் அடி கீழ் – நாலாயி:1008/3
எரிந்த பைம் கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடு இது எ உரு என்று – நாலாயி:1013/1
ஏலம் நாறும் பைம் புறவின் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1062/4
வண்டு பாடும் பைம் புறவின் மங்கையர் கோன் கலியன் – நாலாயி:1067/2
வாசம் அணி வண்டு அறை பைம் புறவின் மனம் ஐந்தொடு நைந்து உழல்வார் மதி_இல் – நாலாயி:1086/3
சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1162/4
பைம் கண் இரண்டு எரி கான்ற நீண்ட எயிற்றொடு பேழ் வாய் – நாலாயி:1175/3
பஞ்சிய மெல் அடி பின்னை திறத்து முன் நாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண் – நாலாயி:1181/1
பைம் கண் விறல் செம் முகத்து வாலி மாள படர் வனத்து கவந்தனொடும் படை ஆர் திண் கை – நாலாயி:1183/1
பதலை கபோதத்து ஒளி மாட நெற்றி பவள கொழும் கால பைம் கால் புறவம் – நாலாயி:1219/3
உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும் உடனே சுவைத்தான் இடம் ஓங்கு பைம் தாள் – நாலாயி:1223/2
படையோடு சங்கு ஒன்று உடையாய் என நின்று இமையோர் பரவும் இடம் பைம் தடத்து – நாலாயி:1226/2
பைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்ட பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல் – நாலாயி:1240/3
நந்து வாரும் பைம் புனல் வாவி நறையூரே – நாலாயி:1494/4
பைம் கண் ஆள் அரி உருவாய் வெருவ நோக்கி பரு வர தோள் இரணியனை பற்றி வாங்கி – நாலாயி:1501/1
பண் ஆர வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை அம்மான்-தன்னை – நாலாயி:1585/3
அன்னம் மன்னு பைம் பூம் பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானை – நாலாயி:1617/1
பைம் கண் மால் விடை அடர்த்து பனி மதி கோள் விடுத்து உகந்த – நாலாயி:1670/3
கார் கொள் பைம் பொழில் மங்கையர்_காவலன் கலிகன்றி ஒலி வல்லார் – நாலாயி:1697/3
கொந்து ஆர் பைம் பொழில் சூழ் குடந்தை கிடந்து உகந்த – நாலாயி:1732/3
உலவு கால் நல் கழி ஓங்கு தண் பைம் பொழிலூடு இசை – நாலாயி:1775/3
பாலை ஆர் அமுதத்தினை பைம் துழாய் – நாலாயி:1850/2
தோட்டு அலர் பைம் தார் சுடர் முடியானை பழமொழியால் பணிந்து உரைத்த – நாலாயி:1941/3
படை நின்ற பைம் தாமரையோடு அணி நீலம் – நாலாயி:2027/1
கள் ஊரும் பைம் துழாய் மாலையானை கனவிடத்தில் யான் காண்பன் கண்ட-போது – நாலாயி:2074/3
பைம் கானம் ஈது எல்லாம் உனதே ஆக பழன மீன் கவர்ந்து உண்ண தருவன் தந்தால் – நாலாயி:2078/3
பைம் கண் மால் யானை படு துயரம் காத்து அளித்த – நாலாயி:2110/3
படை ஆரும் வாள் கண்ணார் பாரசி நாள் பைம் பூம் – நாலாயி:2163/1
பைம் கமலம் ஏந்தி பணிந்தேன் பனி மலராள் – நாலாயி:2185/3
படர் எடுத்த பைம் கமலம் கொண்டு அன்று இடர் அடுக்க – நாலாயி:2194/2
பணிந்தேன் திருமேனி பைம் கமலம் கையால் – நாலாயி:2246/1
பைம் கோத_வண்ணன் படி – நாலாயி:2293/4
கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைம் கழலான் – நாலாயி:2364/3
படிந்து உழு சால் பைம் தினைகள் வித்த தடிந்து எழுந்த – நாலாயி:2370/2
பக்கம் நோக்கு அறியான் என் பைம் தாமரை_கண்ணனே – நாலாயி:3065/4
பைம் தாள் ஏழ் உருவ ஒரு வாளி கோத்த வில்லா – நாலாயி:3072/2
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைம் துழாயான் பெருமை – நாலாயி:3093/3
பணி-மின் திருவருள் என்னும் அம் சீத பைம் பூம் பள்ளி – நாலாயி:3235/1
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர் – நாலாயி:3285/2
கரை கொள் பைம் பொழில் தண் பணை தொலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு – நாலாயி:3497/1
பணங்கள் ஆயிரமும் உடைய பைம் நாக_பள்ளியாய் பாற்கடல் சேர்ப்பா – நாலாயி:3678/3
பைம் தொடி மடந்தையர்-தம் வேய் மரு தோள் இணையே – நாலாயி:3912/4

மேல்


பைம்பொன் (5)

வம்பு மலர்கின்ற பொழில் பைம்பொன் வரு தும்பி மணி கங்குல் வயல் சூழ் – நாலாயி:1440/3
பாரித்த பைம்பொன் முடியான் அடி இணைக்கே – நாலாயி:2325/3
படி சோதி ஆடையொடும் பல் கலனாய் நின் பைம்பொன்
கடி சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே – நாலாயி:3121/3,4
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே – நாலாயி:3245/3
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே – நாலாயி:3247/3

மேல்


பைம்பொன்னின் (1)

அழகிய பைம்பொன்னின் கோல் அம் கை கொண்டு – நாலாயி:42/1

மேல்


பைம்பொன்னும் (2)

பைம்பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து படை மன்னவன் பல்லவர்_கோன் பணிந்த – நாலாயி:1160/3
உரியன ஒண் முத்தும் பைம்பொன்னும் ஏந்தி ஓரோ குடங்கை – நாலாயி:2488/3

மேல்


பைம்பொன்னை (1)

பாவினை பச்சை தேனை பைம்பொன்னை அமரர் சென்னி – நாலாயி:2037/3

மேல்


பைய (5)

பைய ஆட்டி பசும் சிறு மஞ்சளால் – நாலாயி:18/2
பைய உயோகு துயில்கொண்ட பரம்பரனே பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே – நாலாயி:64/2
படு மும்மத புனல் சோர வாரணம் பைய நின்று ஊர்வது போல் – நாலாயி:86/2
பண் இன் மொழியார் பைய நட-மின் என்னாத முன் – நாலாயி:1478/2
பாலகனாய் ஆலிலை மேல் பைய உலகு எல்லாம் – நாலாயி:2314/1

மேல்


பையல் (1)

அளியன் நம் பையல் என்னார் அம்மவோ கொடியவாறே – நாலாயி:908/4

மேல்


பையவே (3)

சங்கம் விட்டு அவர் கையை மறித்து பையவே தலை சாய்ப்பதன் முன்னம் – நாலாயி:376/2
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே – நாலாயி:3442/4
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது – நாலாயி:3834/3

மேல்


பையில் (1)

பையில் துயின்ற பரமன் அடி பாடி – நாலாயி:475/3

மேல்