மெ – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மெச்சப்படான் 1
மெச்சு 1
மெச்சுமே 1
மெத்த 1
மெத்தென்ற 1
மெத்தெனவே 1
மெத்தையாக 1
மெய் 61
மெய்க்கொண்டு 1
மெய்கள் 1
மெய்கொள்ள 1
மெய்செயாது 1
மெய்ஞ்ஞான 2
மெய்ஞ்ஞானத்தால் 1
மெய்ஞ்ஞானத்து 1
மெய்ஞ்ஞானம் 2
மெய்ஞ்ஞானியர் 1
மெய்த்தவனே 1
மெய்த்தன் 1
மெய்தகு 1
மெய்ந்நாவன் 1
மெய்ந்நின்ற 1
மெய்ந்நின்று 2
மெய்ந்நீர்மை 1
மெய்ப்படியால் 1
மெய்ப்படுவன் 1
மெய்ப்பால் 1
மெய்ப்பொருள் 1
மெய்ப்பொருளும் 1
மெய்ம் 3
மெய்ம்மை 9
மெய்ம்மை-கொலோ 1
மெய்ம்மையால் 1
மெய்ம்மையாளன் 1
மெய்ம்மையே 8
மெய்ம்மையை 3
மெய்ய 3
மெய்யடியார்கள்-தம் 2
மெய்யடியான் 1
மெய்யத்துள்ளே 1
மெய்யம் 4
மெய்யர்க்கு 1
மெய்யர்க்கே 1
மெய்யன் 8
மெய்யனார் 1
மெய்யனே 1
மெய்யா 1
மெய்யாக 1
மெய்யானை 1
மெய்யிட 1
மெய்யில் 3
மெய்யின் 1
மெய்யினோடு 1
மெய்யும் 2
மெய்யுமாய் 1
மெய்யுரையும் 1
மெய்யே 8
மெய்யை 2
மெய்விட்டு 1
மெய்வினை 1
மெல் 36
மெல்லியல் 2
மெல்லியற்கா 2
மெல்லியற்கே 1
மெலிகின்றதே 1
மெலிதும் 1
மெலிந்த 1
மெலிந்தேன் 1
மெலிய 5
மெலியும் 4
மெலியுமே 1
மெலிவிக்கும் 1
மெலிவு 3
மெலிவும் 2
மெலிவுற்ற 1
மெலிவேனோ 1
மெழுகாய் 1
மெழுகில் 2
மெழுகு 3
மெழுகும் 1
மெழுமெழுத்து 1
மெள்ள 7
மென் 63
மென்ற 1
மென்று 1

மெச்சப்படான் (1)

மெச்சப்படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன் – நாலாயி:3928/3

மேல்


மெச்சு (1)

மெச்சு ஊது சங்கம் இடத்தான் நல் வேய் ஊதி – நாலாயி:118/1

மேல்


மெச்சுமே (1)

விண் நாட்டை ஒன்று ஆக மெச்சுமே மண் நாட்டில் – நாலாயி:2663/2

மேல்


மெத்த (1)

மெத்த திருவயிறு ஆர விழுங்கிய – நாலாயி:114/3

மேல்


மெத்தென்ற (1)

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி – நாலாயி:492/2

மேல்


மெத்தெனவே (1)

வைத்து அவனை நாடி வலைப்படுத்தேன் மெத்தெனவே
நின்றான் இருந்தான் கிடந்தான் என் நெஞ்சத்து – நாலாயி:2375/2,3

மேல்


மெத்தையாக (1)

வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே – நாலாயி:439/1

மேல்


மெய் (61)

மெய் திமிரும் நான பொடியோடு மஞ்சளும் – நாலாயி:52/1
மெய் என்று சொல்லுவார் சொல்லை கருதி தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று – நாலாயி:147/1
விலங்கி நில்லாது எதிர்நின்று கண்டீர் வெள் வளை கழன்று மெய் மெலிகின்றதே – நாலாயி:262/4
மின் ஒத்த நுண் இடையாய் மெய் அடியேன் விண்ணப்பம் – நாலாயி:324/1
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து – நாலாயி:477/3
பற்றி மெய் பிணக்கு இட்டக்கால் இந்த பக்கம் நின்றவர் என் சொல்லார் – நாலாயி:522/4
நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது – நாலாயி:661/3
மெய் சிலை கரு மேகம் ஒன்று தம் நெஞ்சில் நின்று திகழ போய் – நாலாயி:662/3
மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என் மனம் மெய் சிலிர்க்குமே – நாலாயி:662/4
மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என் மனம் மெய் சிலிர்க்குமே – நாலாயி:662/4
மெய் இல் வாழ்க்கையை மெய் என கொள்ளும் இ – நாலாயி:668/1
மெய் இல் வாழ்க்கையை மெய் என கொள்ளும் இ – நாலாயி:668/1
மெய் துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டு அம்மா என் – நாலாயி:694/3
தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம் தாமோதரா மெய் அறிவன் நானே – நாலாயி:699/4
புள்ளின் மெய் பகை கடல் கிடத்தல் காதலித்ததே – நாலாயி:770/4
இடந்த மெய் குலுங்கவோ இலங்கு மால் வரை சுரம் – நாலாயி:812/2
வீடனாக மெய் செயாத வண்ணம் என்-கொல் கண்ணனே – நாலாயி:837/4
மெய் எல்லாம் போக விட்டு விரி குழலாரில் பட்டு – நாலாயி:904/1
உறிகள் போல் மெய் நரம்பு எழுந்து ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி – நாலாயி:970/1
பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு பொய் நூலை மெய் நூல் என்று என்றும் ஓதி – நாலாயி:1089/1
மெய் வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை – நாலாயி:1406/2
பொய்யால் ஐவர் என் மெய் குடியேறி போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின் அடைந்தேன் – நாலாயி:1610/3
கோவாய் ஐவர் என் மெய் குடியேறி கூறை சோறு இவை தா என்று குமைத்து – நாலாயி:1616/1
மெய் நல தவத்தை திவத்தை தரும் மெய்யை பொய்யினை கையில் ஓர் சங்கு உடை – நாலாயி:1639/1
பூண் உலாம் மென் முலை பாவைமார் பொய்யினை மெய் இது என்று – நாலாயி:1810/1
நோய் எலாம் பெய்தது ஓர் ஆக்கையை மெய் என கொண்டு வாளா – நாலாயி:1814/1
மெய் நின்ற பாவம் அகல திருமாலை – நாலாயி:2021/1
விண்ணும் விழுங்கியது மெய் என்பர் எண்ணில் – நாலாயி:2091/2
என் ஒருவர் மெய் என்பர் ஏழ்_உலகு உண்டு ஆலிலையில் – நாலாயி:2115/1
மேல் அன்று நீ வளர்ந்த மெய் என்பர் ஆல் அன்று – நாலாயி:2150/2
மெய் தவத்தால் காண்பு அரிய மேக மணி_வண்ணனை யான் – நாலாயி:2267/3
வெஃகாவே சேர்ந்தானை மெய் மலர் தூய் கைதொழுதால் – நாலாயி:2357/3
ஒரு பொருளை வானவர் தம் மெய் பொருளை அப்பில் – நாலாயி:2384/3
வீடு ஆக்கும் பெற்றி அறியாது மெய் வருத்தி – நாலாயி:2394/1
மேலை யுகத்து உரைத்தான் மெய் தவத்தோன் ஞாலம் – நாலாயி:2398/2
வேங்கடத்து மேயானை மெய் வினை நோய் எய்தாமல் – நாலாயி:2415/3
வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் வேங்கடமே – நாலாயி:2429/2
மெய் குந்தம் ஆக விரும்புவரே தாமும் தம் – நாலாயி:2460/3
விட துணியார் மெய் தெளிந்தார் தாம் – நாலாயி:2474/4
மெய் தெளிந்தார் என் செய்யார் வேறு ஆனார் நீறு ஆக – நாலாயி:2475/1
மெய் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே – நாலாயி:2478/4
பெறுகின்ற தாயர் மெய் நொந்து பெறார்-கொல் துழாய் குழல் வாய் – நாலாயி:2558/2
மெய் பெற நடாய தெய்வம் மூவரில் – நாலாயி:2580/3
மெல் ஆவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை – நாலாயி:2657/3
விள்ள விழித்து உன்னை மெய் உற்றால் உள்ள – நாலாயி:2660/2
வேரா விதிர்விதிரா மெய் சிலிரா கை மோவா – நாலாயி:2682/3
மெய் குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர் – நாலாயி:2816/2
வீட்டின்-கண் வைத்த இராமாநுசன் புகழ் மெய் உணர்ந்தோர் – நாலாயி:2819/3
வாதில் வென்றான் எம் இராமாநுசன் மெய் மதி கடலே – நாலாயி:2848/4
மெய் கலந்தானே – நாலாயி:2980/4
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே – நாலாயி:3014/4
வேம் கடங்கள் மெய் மேல் வினை முற்றவும் – நாலாயி:3148/1
வம்-மின் புலவீர் நும் மெய் வருத்தி கைசெய்து உய்ம்-மினோ – நாலாயி:3214/1
அறியும் செம் தீயை தழுவி அச்சுதன் என்னும் மெய் வேவாள் – நாலாயி:3266/1
வியர்க்கும் மழை கண் துளும்ப வெவ்வுயிர் கொள்ளும் மெய் சோரும் – நாலாயி:3273/2
மெய் வந்து நின்று எனது ஆவி மெலிவிக்கும் – நாலாயி:3381/2
மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய் – நாலாயி:3477/2
மெய் அமர் பல் கலன் நன்கு அணிந்தானுக்கு – நாலாயி:3512/1
மெய் அமர் காதல் சொல்லி கிளிகாள் விரைந்து ஓடிவந்தே – நாலாயி:3529/4
திரு மெய் உறைகின்ற செங்கண்மால் நாளும் – நாலாயி:3925/3
மெச்சப்படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன் – நாலாயி:3928/3

மேல்


மெய்க்கொண்டு (1)

மெய்க்கொண்டு வந்து புகுந்து வேத பிரானார் கிடந்தார் – நாலாயி:443/3

மேல்


மெய்கள் (1)

மொய்த்து கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று – நாலாயி:666/1

மேல்


மெய்கொள்ள (1)

மெய்கொள்ள காண விரும்பும் என் கண்களே – நாலாயி:3201/4

மேல்


மெய்செயாது (1)

விட கருதி மெய்செயாது மிக்கு ஒர் ஆசை ஆக்கிலும் – நாலாயி:846/3

மேல்


மெய்ஞ்ஞான (2)

வியப்பு ஆய வியப்பு இல்லா மெய்ஞ்ஞான வேதியனை – நாலாயி:3131/1
மெய்ஞ்ஞான சோதி கண்ணனை மேவுதுமே – நாலாயி:3138/4

மேல்


மெய்ஞ்ஞானத்தால் (1)

மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேல் ஒரு நாள் – நாலாயி:2128/3

மேல்


மெய்ஞ்ஞானத்து (1)

கைத்த மெய்ஞ்ஞானத்து இராமாநுசன் என்னும் கார் தன்னையே – நாலாயி:2814/4

மேல்


மெய்ஞ்ஞானம் (2)

ஏதிலர் ஆம் மெய்ஞ்ஞானம் இல் – நாலாயி:2452/4
மெய்ஞ்ஞானம் இன்றி வினை இயல் பிறப்பு அழுந்தி – நாலாயி:3138/2

மேல்


மெய்ஞ்ஞானியர் (1)

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம்-தொறும் திருவாய்மொழியின் – நாலாயி:2850/1

மேல்


மெய்த்தவனே (1)

வெட்டி களைந்த இராமாநுசன் என்னும் மெய்த்தவனே – நாலாயி:2883/4

மேல்


மெய்த்தன் (1)

மெய்த்தன் வல்லை ஆதலால் அறிந்தனன் நின் மாயமே – நாலாயி:836/3

மேல்


மெய்தகு (1)

மெய்யன் ஆகிய தெய்வநாயகன் இடம் மெய்தகு வரை சாரல் – நாலாயி:1150/2

மேல்


மெய்ந்நாவன் (1)

மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன் விரித்த தமிழ் உரைக்க வல்லார் – நாலாயி:422/3

மேல்


மெய்ந்நின்ற (1)

மெய் வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை – நாலாயி:1406/2

மேல்


மெய்ந்நின்று (2)

விரை குழுவு நறும் துளவம் மெய்ந்நின்று கமழுமே – நாலாயி:3952/4
மெய்ந்நின்று கமழ் துளவ விரை ஏறு திருமுடியன் – நாலாயி:3953/1

மேல்


மெய்ந்நீர்மை (1)

மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே – நாலாயி:3014/4

மேல்


மெய்ப்படியால் (1)

மெய்ப்படியால் உன் திருவடி சூடும் தகைமையினார் – நாலாயி:2571/2

மேல்


மெய்ப்படுவன் (1)

ஆரானும் மெய்ப்படுவன் என்றார் அது கேட்டு – நாலாயி:2681/5

மேல்


மெய்ப்பால் (1)

மெய்ப்பால் உண்டு அழு பிள்ளைகள் போல நீ விம்மிவிம்மி அழுகின்ற – நாலாயி:227/3

மேல்


மெய்ப்பொருள் (1)

மெய்ப்பொருள் தான் வேத முதற்பொருள் தான் விண்ணவர்க்கு – நாலாயி:2394/3

மேல்


மெய்ப்பொருளும் (1)

சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப்பொருளும் கொண்டாரே – நாலாயி:612/4

மேல்


மெய்ம் (3)

மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே – நாலாயி:3347/4
மெய்ம் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே – நாலாயி:3555/3
மெய்ம் நான் எய்தி எ நாள் உன் அடி-கண் அடியேன் மேவுவதே – நாலாயி:3555/4

மேல்


மெய்ம்மை (9)

மீள அவன் மகனை மெய்ம்மை கொள கருதி மேலை அமரர்_பதி மிக்கு வெகுண்டு வர – நாலாயி:65/2
மெய்ம்மை பெரு வார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர் – நாலாயி:616/2
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடைதான் தருமேல் மிக நன்றே – நாலாயி:635/4
வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெரும் தக்கோரே – நாலாயி:1507/4
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்ம்மை சொல்லில் வெண் சங்கம் ஒன்று ஏந்திய – நாலாயி:1647/3
மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த விண்ணவர் ஆகலும் ஆமே – நாலாயி:1887/4
வெம் திறல் வாணன் வேள்வியிடம் எய்தி அங்கு ஓர் குறள் ஆகி மெய்ம்மை உணர – நாலாயி:1986/1
கூறும் பரம் அன்று இராமாநுச மெய்ம்மை கூறிடிலே – நாலாயி:2835/4
விண்டிட எங்கள் இராமாநுச முனி வேழம் மெய்ம்மை
கொண்ட நல் வேத கொழும் தண்டம் ஏந்தி குவலயத்தே – நாலாயி:2854/2,3

மேல்


மெய்ம்மை-கொலோ (1)

மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை-கொலோ
சோலைமலை பெருமான் துவாராபதி எம்பெருமான் – நாலாயி:594/2,3

மேல்


மெய்ம்மையால் (1)

வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் வேங்கடமே – நாலாயி:2429/1,2

மேல்


மெய்ம்மையாளன் (1)

பொய் மொழி ஒன்று இல்லாத மெய்ம்மையாளன் புல மங்கை குல வேந்தன் புலமை ஆர்ந்த – நாலாயி:1507/2

மேல்


மெய்ம்மையே (8)

வீய பொருது வியர்த்து நின்றானை மெய்ம்மையே கண்டார் உளர் – நாலாயி:331/4
வரம்பு_இலாத மாய மாய வையம் ஏழும் மெய்ம்மையே
வரம்பு_இல் ஊழி ஏத்திலும் வரம்பு_இலாத கீர்த்தியாய் – நாலாயி:847/1,2
மேவினேன் அவன் பொன் அடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி – நாலாயி:938/2,3
வேட்டத்தை கருதாது அடி இணை வணங்கி மெய்ம்மையே நின்று எம் பெருமானை – நாலாயி:1941/1
மெய்ம்மையே காண விரும்பு – நாலாயி:2303/4
மேல் ஒரு நாள் உண்டவனே மெய்ம்மையே மாலவனே – நாலாயி:2314/2
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளனாய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே – நாலாயி:3210/3,4
அறிய மெய்ம்மையே நின்ற எம் பெருமான் அடி இணை அல்லது ஓர் அரணே – நாலாயி:3707/4

மேல்


மெய்ம்மையை (3)

மேம் பொருள் போகவிட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து – நாலாயி:909/1
மெய்ம்மையை விரிந்த சோலை வியன் திருவரங்கம் மேய – நாலாயி:2038/2
விளக்கினை விதியின் காண்பார் மெய்ம்மையை காண்கிற்பாரே – நாலாயி:2049/4

மேல்


மெய்ய (3)

விலை ஆளா அடியேனை வேண்டுதியோ வேண்டாயோ என்னும் மெய்ய
மலையாளன் வானவர்-தம் தலையாளன் மராமரம் ஏழ் எய்த வென்றி – நாலாயி:1389/2,3
வேய் இரும் சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இ வையம் எல்லாம் – நாலாயி:1760/1
மெய்யானை மெய்ய மலையானை சங்கு ஏந்தும் – நாலாயி:2016/3

மேல்


மெய்யடியார்கள்-தம் (2)

ஆட்டம் மேவி அலந்து அழைத்து அயர்வு எய்தும் மெய்யடியார்கள்-தம்
ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே – நாலாயி:658/3,4
அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய்யடியார்கள்-தம்
எல்லை இல் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தனாம் – நாலாயி:667/1,2

மேல்


மெய்யடியான் (1)

மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன் விரித்த தமிழ் உரைக்க வல்லார் – நாலாயி:422/3

மேல்


மெய்யத்துள்ளே (1)

விடலையை சென்று காண்டும் மெய்யத்துள்ளே – நாலாயி:1852/4

மேல்


மெய்யம் (4)

தண் ஆர்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும் தட வரை மேல் கிடந்தானை பணங்கள் மேவி – நாலாயி:1095/2
விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை – நாலாயி:1524/2
வெருவினாள் மெய்யம் வினவி இருக்கின்றாள் – நாலாயி:1660/2
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று – நாலாயி:2050/3

மேல்


மெய்யர்க்கு (1)

அன்பன் நாளும் தன மெய்யர்க்கு மெய்யனே – நாலாயி:3885/4

மேல்


மெய்யர்க்கே (1)

மெய்யர்க்கே மெய்யன் ஆகும் விதி இலா என்னை போல – நாலாயி:886/1

மேல்


மெய்யன் (8)

ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய் நீ ஒருவர்க்கும் மெய்யன் அல்லை – நாலாயி:454/2
புரி குழல் மங்கை ஒருத்தி-தன்னை புணர்தி அவளுக்கும் மெய்யன் அல்லை – நாலாயி:700/3
மெய்யர்க்கே மெய்யன் ஆகும் விதி இலா என்னை போல – நாலாயி:886/1
மெய்யன் ஆகிய தெய்வநாயகன் இடம் மெய்தகு வரை சாரல் – நாலாயி:1150/2
பொய் இலன் மெய்யன் தன் தாள் அடைவரேல் அடிமை ஆக்கும் – நாலாயி:1428/2
மெய்யன் இராமாநுசன் சரணே கதி வேறு எனக்கே – நாலாயி:2803/4
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும் – நாலாயி:3826/3
மெய்யன் ஆகும் விரும்பி தொழுவார்க்கு எல்லாம் – நாலாயி:3886/1

மேல்


மெய்யனார் (1)

மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடி எம் – நாலாயி:933/2

மேல்


மெய்யனே (1)

அன்பன் நாளும் தன மெய்யர்க்கு மெய்யனே – நாலாயி:3885/4

மேல்


மெய்யா (1)

பவ்வ நீர் உடை ஆடையாக சுற்றி பார் அகலம் திருவடியா பவனம் மெய்யா
செவ்வி மாதிரம் எட்டும் தோளா அண்டம் திருமுடியா நின்றான்-பால் செல்லகிற்பீர் – நாலாயி:1500/1,2

மேல்


மெய்யாக (1)

என்னையும் என் மெய்யுரையும் மெய்யாக கொண்டு வனம் புக்க எந்தாய் – நாலாயி:738/3

மேல்


மெய்யானை (1)

மெய்யானை மெய்ய மலையானை சங்கு ஏந்தும் – நாலாயி:2016/3

மேல்


மெய்யிட (1)

மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல – நாலாயி:8/3

மேல்


மெய்யில் (3)

புலன்கள் நைய மெய்யில் மூத்து போந்து இருந்து உள்ளம் எள்கி – நாலாயி:976/1
வெந்தார் என்பும் சுடு நீறும் மெய்யில் பூசி கையகத்து ஓர் – நாலாயி:995/1
மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் நிரய – நாலாயி:2894/2

மேல்


மெய்யின் (1)

மெய்யின் அளவே அமுதுசெய்ய வல ஐயன் அவன் மேவும் நகர் தான் – நாலாயி:1439/2

மேல்


மெய்யினோடு (1)

வேறு வேறு ஞானம் ஆகி மெய்யினோடு பொய்யுமாய் – நாலாயி:753/3

மேல்


மெய்யும் (2)

சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இ தரணி ஓம்பும் – நாலாயி:1295/1
விரிகின்றது முழு மெய்யும் என் ஆம்-கொல் என் மெல்லியற்கே – நாலாயி:2524/4

மேல்


மெய்யுமாய் (1)

பூணி பேணும் ஆயன் ஆகி பொய்யினோடு மெய்யுமாய்
காணி பேணும் மாணியாய் கரந்து சென்ற கள்வனே – நாலாயி:777/3,4

மேல்


மெய்யுரையும் (1)

என்னையும் என் மெய்யுரையும் மெய்யாக கொண்டு வனம் புக்க எந்தாய் – நாலாயி:738/3

மேல்


மெய்யே (8)

துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே திரியிட்டு சொல்லுகேன் மெய்யே – நாலாயி:146/4
வெம் சின மூக்கு அரிந்த விறலோன் திறம் கேட்கில் மெய்யே
பஞ்சிய மெல் அடி எம் பணை தோளி பரக்கழிந்து – நாலாயி:1210/2,3
மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல் மட மானை இது செய்தார் தம்மை மெய்யே
கட்டுவிச்சி சொல் என்ன சொன்னாள் நங்காய் கடல்_வண்ணர் இது செய்தார் காப்பார் ஆரே – நாலாயி:2062/3,4
மிக கண்டேன் மீண்டு அவனை மெய்யே மிக கண்டேன் – நாலாயி:2262/2
ஏமம் பெற வையம் சொல்லும் மெய்யே பண்டு எல்லாம் அறை கூய் – நாலாயி:2504/2
மெய்யே பெற்று ஒழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர் – நாலாயி:3341/3
வில் புருவ கொடி தோற்றது மெய்யே – நாலாயி:3511/4
யானும் நீ தானே ஆவதோ மெய்யே அரு நரகு அவையும் நீ ஆனால் – நாலாயி:3679/1

மேல்


மெய்யை (2)

மெய் நல தவத்தை திவத்தை தரும் மெய்யை பொய்யினை கையில் ஓர் சங்கு உடை – நாலாயி:1639/1
மெய்யை புரக்கும் இராமாநுசன் நிற்க வேறு நம்மை – நாலாயி:2869/2

மேல்


மெய்விட்டு (1)

ஓதி மற்று எல்லா உயிரும் அஃது என்று உயிர்கள் மெய்விட்டு
ஆதி பரனோடு ஒன்று ஆம் என்று சொல்லும் அ அல்லல் எல்லாம் – நாலாயி:2848/2,3

மேல்


மெய்வினை (1)

விளைந்திடும் சிந்தை இராமாநுசன் என்தன் மெய்வினை நோய் – நாலாயி:2893/3

மேல்


மெல் (36)

பஞ்சி அன்ன மெல் அடியால் பாய்ந்த போது நொந்திடும் என்று – நாலாயி:131/2
மாம் அமரும் மெல் நோக்கி வைதேவீ விண்ணப்பம் – நாலாயி:322/1
உரக மெல் அணையான் கையில் உறை சங்கம் போல் மட அன்னங்கள் – நாலாயி:363/1
மெல் நடை அன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர் உறைவான் தன் – நாலாயி:549/1
மெல் அணை மேல் முன் துயின்றாய் இன்று இனிப்போய் வியன் கான மரத்தின் நீழல் – நாலாயி:732/3
பொருந்தார் கை வேல் நுதி போல் பரல் பாய மெல் அடிகள் குருதி சோர – நாலாயி:734/1
கைம்மாவின் நடை அன்ன மெல் நடையும் கமலம் போல் முகமும் காணாது – நாலாயி:735/3
மின் பற்றா நுண் மருங்குல் மெல் இயல் என் மருகியையும் வனத்தில் போக்கி – நாலாயி:737/2
பந்து அணைந்த மெல் விரலாள் பாவை-தன் காரணத்தால் – நாலாயி:1061/1
பந்து இருக்கும் மெல் விரலாள் பாவை பனி மலராள் – நாலாயி:1066/1
விண்டாரை வென்று ஆவி விலங்கு உண்ண மெல் இயலார் – நாலாயி:1101/1
உரம் தரு மெல் அணை பள்ளி கொண்டான் ஒருகால் முன்னம் மா உருவாய் கடலுள் – நாலாயி:1130/1
பஞ்சிய மெல் அடி பின்னை திறத்து முன் நாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண் – நாலாயி:1181/1
பஞ்சிய மெல் அடி எம் பணை தோளி பரக்கழிந்து – நாலாயி:1210/3
பஞ்சி அன்ன மெல் அடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1319/4
பாடகம் சேர் மெல் அடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1324/4
மின் ஒத்த நுண் மருங்குல் மெல் இயலை திருமார்வில் – நாலாயி:1533/3
பஞ்சி அன்ன மெல் அடி நல் பாவைமார்கள் ஆடகத்தின் – நாலாயி:1595/3
பந்து ஆர் மெல் விரல் நல் வளை தோளி பாவை பூ மகள் தன்னொடும் உடனே – நாலாயி:1609/1
பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்கு ஆகி பகலவன் மீது இயங்காத இலங்கை_வேந்தன் – நாலாயி:1624/1
பாடக மெல் அடியார் வணங்க பல் மணி முத்தொடு இலங்கு சோதி – நாலாயி:1759/3
கொல்லை முல்லை மெல் அரும்பு ஈனும் குறுங்குடியே – நாலாயி:1804/4
பஞ்சிய மெல் அடி பிள்ளைகள் உண்கின்று பாகம் தான் வையார்களே – நாலாயி:1917/2
மெல் விரல்கள் சிவப்பு எய்த தடவி ஆங்கே மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே – நாலாயி:2066/4
பொங்கு ஆர் மெல் இளம் கொங்கை பொன்னே பூப்ப பொரு கயல் கண் நீர் அரும்ப போந்து நின்று – நாலாயி:2068/1
தடம் போது ஒடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே – நாலாயி:2553/4
இறுகின்றதால் இவள் ஆகம் மெல் ஆவி எரி கொள்ளவே – நாலாயி:2558/4
கிளரி கிளரி பிதற்றும் மெல் ஆவியும் நைவும் எல்லாம் – நாலாயி:2560/3
மெல் ஆவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை – நாலாயி:2657/3
மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல் – நாலாயி:2724/1
நொந்து ஆரா காதல் நோய் மெல் ஆவி உள் உலர்த்த – நாலாயி:3017/1
வேவு ஆரா வேட்கை நோய் மெல் ஆவி உள் உலர்த்த – நாலாயி:3018/1
திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல் இயல் செ இதழே – நாலாயி:3764/4
மெல் இலை செல்வ வண் கொடி புல்க வீங்கு இளம் தாள் கமுகின் – நாலாயி:3765/1
வடிவு இணை இல்லா மலர்_மகள் மற்றை நில_மகள் பிடிக்கும் மெல் அடியை – நாலாயி:3801/3
மா மணி_வண்ணா உன் செங்கமல வண்ண மெல் மலர் அடி நோவ நீ போய் – நாலாயி:3919/3

மேல்


மெல்லியல் (2)

வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும் வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும் – நாலாயி:2064/2
மெல்லியல் ஆக்கை கிருமி குருவில் மிளிர்தந்து ஆங்கே – நாலாயி:2525/1

மேல்


மெல்லியற்கா (2)

மின் அனைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை_வேந்தன் முடி ஒரு பதும் தோள் இருபதும் போய் உதிர – நாலாயி:1232/1
மின்னின் அன்ன நுண் மருங்குல் வேய் ஏய் தடம் தோள் மெல்லியற்கா
மன்னு சினத்த மழ விடைகள் ஏழ் அன்று அடர்த்த மாலது இடம் – நாலாயி:1353/1,2

மேல்


மெல்லியற்கே (1)

விரிகின்றது முழு மெய்யும் என் ஆம்-கொல் என் மெல்லியற்கே – நாலாயி:2524/4

மேல்


மெலிகின்றதே (1)

விலங்கி நில்லாது எதிர்நின்று கண்டீர் வெள் வளை கழன்று மெய் மெலிகின்றதே – நாலாயி:262/4

மேல்


மெலிதும் (1)

பலபல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பலபல சூழல் உடைத்து அம்ம வாழி இ பாய் இருளே – நாலாயி:2493/3,4

மேல்


மெலிந்த (1)

போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை – நாலாயி:3599/1

மேல்


மெலிந்தேன் (1)

மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன் நங்காய் – நாலாயி:21/4

மேல்


மெலிய (5)

உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலிய புகுந்து என்னை – நாலாயி:582/3
பேணாத வலி அரக்கர் மெலிய அன்று பெரு வரை தோள் இற நெரித்து அன்று அவுணர்_கோனை – நாலாயி:1094/1
அங்கம் மெலிய வளை கழல ஆது-கொலோ என்று சொன்ன பின்னை – நாலாயி:1794/2
மான் ஏய் நோக்கு நல்லீர் வைகலும் வினையேன் மெலிய
வான் ஆர் வண் கமுகும் மது மல்லிகை கமழும் – நாலாயி:3429/1,2
சூடு மலர் குழலீர் துயராட்டியேன் மெலிய
பாடும் நல் வேத ஒலி பரவை திரை போல் முழங்க – நாலாயி:3431/1,2

மேல்


மெலியும் (4)

போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் பொரு கடல் புலம்பிலும் புலம்பும் – நாலாயி:1110/2
மெலியும் மட நெஞ்சினார் தந்து போயின வேதனையே – நாலாயி:2555/4
மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல் – நாலாயி:3252/1
வேய் மரு தோள் இணை மெலியும் ஆலோ மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்கா – நாலாயி:3913/1

மேல்


மெலியுமே (1)

பொன் செய் பூண் மென் முலைக்கு என்று மெலியுமே – நாலாயி:3251/4

மேல்


மெலிவிக்கும் (1)

மெய் வந்து நின்று எனது ஆவி மெலிவிக்கும்
கைவந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால் – நாலாயி:3381/2,3

மேல்


மெலிவு (3)

பொன் அம் கலைகள் மெலிவு எய்த போன புனிதர் ஊர் போலும் – நாலாயி:1596/2
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலிவு எய்தி – நாலாயி:3364/3
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என் – நாலாயி:3856/3

மேல்


மெலிவும் (2)

உண்ணலுறாமையும் உள் மெலிவும் ஓத_நீர்_வண்ணன் என்பான் ஒருவன் – நாலாயி:623/2
வேய் மரு தோள் இணை மெலியும் ஆலோ மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்கா – நாலாயி:3913/1

மேல்


மெலிவுற்ற (1)

மேகலையால் குறைவு இல்லா மெலிவுற்ற அகல் அல்குல் – நாலாயி:3316/1

மேல்


மெலிவேனோ (1)

மீன் ஆய கொடி நெடுவேள் வலி செய்ய மெலிவேனோ
தேன் வாய வரி வண்டே திருவாலி நகர் ஆளும் – நாலாயி:1201/2,3

மேல்


மெழுகாய் (1)

தீயோடு உடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ – நாலாயி:3544/4

மேல்


மெழுகில் (2)

வெடிப்பு நின் பசுநிரை மேய்க்க போக்கு வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே – நாலாயி:3918/4
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு வெள் வளை மேகலை கழன்று வீழ – நாலாயி:3919/1

மேல்


மெழுகு (3)

மெழுகு ஊற்றினால் போல் ஊற்று நல் வேங்கடத்து உள் நின்ற – நாலாயி:604/2
ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல் – நாலாயி:2702/1
எண்ணும்-தோறும் என் நெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே – நாலாயி:3444/4

மேல்


மெழுகும் (1)

அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள் – நாலாயி:3044/2

மேல்


மெழுமெழுத்து (1)

மிடறு மெழுமெழுத்து ஓட வெண்ணெய் விழுங்கி போய் – நாலாயி:239/1

மேல்


மெள்ள (7)

மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம் – நாலாயி:479/7
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வர கூவாய் – நாலாயி:546/4
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன் – நாலாயி:968/2
துள்ளு நீர் மெள்ள துயின்ற பெருமானே – நாலாயி:1744/2
மெள்ள தொடர்ந்து பிடித்து ஆருயிர் உண்ட – நாலாயி:1896/3
சிறியான் ஓர் பிள்ளையாய் மெள்ள நடந்திட்டு – நாலாயி:1975/3
வெள்ளத்து ஓர் பிள்ளையாய் மெள்ள துயின்றானை – நாலாயி:2374/3

மேல்


மென் (63)

செறி மென் கூந்தல் அவிழ திளைத்து எங்கும் – நாலாயி:16/3
செப்பு இள மென் முலை தேவகி நங்கைக்கு – நாலாயி:123/1
செப்பு இள மென் முலையார்கள் சிறுபுறம் பேசி சிரிப்பர் – நாலாயி:156/3
செப்பு ஓது மென் முலையார்கள் சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு – நாலாயி:194/1
சுரும்பு ஆர் மென் குழல் கன்னி ஒருத்திக்கு சூழ் வலை வைத்து திரியும் – நாலாயி:228/3
மருட்டார் மென் குழல் கொண்டு பொழில் புக்கு வாய்வைத்து அ ஆயர்-தம் பாடி – நாலாயி:229/1
சுருட்டு ஆர் மென் குழல் கன்னியர் வந்து உன்னை சுற்றும் தொழ நின்ற சோதி – நாலாயி:229/2
செப்பு அன்ன மென் முலை செ வாய் சிறு மருங்குல் – நாலாயி:493/5
நீலார் தண் அம் துழாய் கொண்டு என் நெறி மென் குழல் மேல் சூட்டிரே – நாலாயி:628/4
மழலை மென் நகை இடையிடை அருளா வாயிலே முலை இருக்க என் முகத்தே – நாலாயி:714/3
சிங்கமாய தேவதேவ தேன் உலாவு மென் மலர் – நாலாயி:775/3
பண் உலாவு மென் மொழி படை தடம் கணாள் பொருட்டு – நாலாயி:842/1
செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம் சிரியாத முன்னம் – நாலாயி:974/3
மின் கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி மென் முலை பொன் பயந்திருந்த – நாலாயி:1113/3
பொன் குலாம் பயலை பூத்தன மென் தோள் பொரு கயல் கண் துயில் மறந்தாள் – நாலாயி:1116/1
சந்து அணி மென் முலை மலராள் தரணி மங்கை தாம் இருவர் அடி வருடும் தன்மையானை – நாலாயி:1139/2
சாறு கொண்ட மென் கரும்பு இளம் கழை தகை விசும்பு உற மணி நீழல் – நாலாயி:1151/3
விரை கமழ்ந்த மென் கரும் குழல் காரணம் வில் இறுத்து அடல் மழைக்கு – நாலாயி:1155/1
மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து மகரம் சுழல சுழல் நீர் பயந்த – நாலாயி:1164/1
வாள் ஆய கண் பனிப்ப மென் முலைகள் பொன் அரும்ப – நாலாயி:1202/1
சிற்றில் மென் பூவையும் விட்டு அகன்ற செழும் கோதை-தன்னை – நாலாயி:1215/2
மதலை தலை மென் பெடை கூடும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1219/4
துளை ஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம் துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா – நாலாயி:1225/1
விடை ஓட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா விளங்கு சுடர் ஆழி என்னும் – நாலாயி:1226/1
மான் போலும் மென் நோக்கின் செய்ய வாயார் மரகதம் போல் மட கிளியை கை மேல் கொண்டு – நாலாயி:1283/3
தேன் போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1283/4
பாலின் நல்ல மென் மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1323/4
பண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1326/4
காந்தள் விரல் மென் கலை நல் மடவார் – நாலாயி:1358/3
மான் ஆய மென் நோக்கி வாள் நெடும் கண் நீர் மல்கும் வளையும் சோரும் – நாலாயி:1390/1
தாய் வாயில் சொல் கேளாள் தன் ஆயத்தோடு அணையாள் தட மென் கொங்கையே – நாலாயி:1391/1
சாந்து ஏந்து மென் முலையார் தடம் தோள் புணர் இன்ப வெள்ளத்து – நாலாயி:1471/1
விடை ஏழ் வென்று மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பனாய் – நாலாயி:1492/1
விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுதான் மென் மலர் மேல் – நாலாயி:1511/2
விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும் மென் தளிர் போல் அடியினானை – நாலாயி:1585/2
மா வளரும் மென் நோக்கி மாதராள் மாயவனை கண்டாள் என்று – நாலாயி:1657/1
வார் கொள் மென் முலை மடந்தையர் தடம் கடல்_வண்ணனை தாள் நயந்து – நாலாயி:1697/1
அன்னம் மென் கமலத்து அணி மலர் பீடத்து அலை புனல் இலை குடை நீழல் – நாலாயி:1752/3
அன்ன மென் நடையினார் கலவியை அருவருத்து அஞ்சினாயேல் – நாலாயி:1809/2
பூண் உலாம் மென் முலை பாவைமார் பொய்யினை மெய் இது என்று – நாலாயி:1810/1
பண் உலாம் மென் மொழி பாவைமார் பணை முலை அணைதும் நாம் என்று – நாலாயி:1811/1
சந்து சேர் மென் முலை பொன் மலர் பாவையும் தாமும் நாளும் – நாலாயி:1815/3
தனம்கொள் மென் முலை நோக்கம் ஒழிந்து தஞ்சமே சில தாபதர் என்று – நாலாயி:1865/2
புனம்கொள் மென் மயிலை சிறைவைத்த புன்மையாளன் நெஞ்சில் புக எய்த – நாலாயி:1865/3
நெறித்திட்ட மென் கூழை நல் நேர் இழையோடு உடன் ஆய வில் என்ன வல் ஏய் அதனை – நாலாயி:1905/1
மாழை மென் நோக்கி மணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய் – நாலாயி:1938/3
பொன் அம் கலை அல்குல் அன்ன மென் நடை பூம் குழல் – நாலாயி:1966/3
மான் அமரும் மென் நோக்கி வைதேவி இன் துணையா – நாலாயி:1992/1
மெல் விரல்கள் சிவப்பு எய்த தடவி ஆங்கே மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே – நாலாயி:2066/4
காம்பு ஏய் மென் தோளி கடை வெண்ணெய் உண்டாயை – நாலாயி:2103/3
மென் கால் கமல தடம் போல் பொலிந்தன மண்ணும் விண்ணும் – நாலாயி:2519/2
தண் மென் கமல தடம் போல் பொலிந்தன தாம் இவையோ – நாலாயி:2540/2
விளரி குரல் அன்றில் மென் பெடை மேகின்ற முன்றில் பெண்ணை – நாலாயி:2560/1
மென் தோளி காரணமா வெம் கோட்டு ஏறு ஏழ் உடனே – நாலாயி:2632/3
சின்ன மலர் குழலும் அல்குலும் மென் முலையும் – நாலாயி:2738/1
விதியினால் பெடை மணக்கும் மென் நடைய அன்னங்காள் – நாலாயி:2934/1
அணி மென் குழலார் இன்ப கலவி அமுது உண்டார் – நாலாயி:3235/2
தூ மென் மொழி மடவார் இரக்க பின்னும் துற்றுவார் – நாலாயி:3237/2
பொன் செய் பூண் மென் முலைக்கு என்று மெலியுமே – நாலாயி:3251/4
காதல் மென் பெடையோடு உடன் மேயும் கரு நாராய் – நாலாயி:3452/1
அமுத மென் மொழியாளை நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர் – நாலாயி:3496/2
பூண் புனை மென் முலை தோற்றது பொற்பே – நாலாயி:3514/4
மேவு தண் மதியம் வெம் மதியம் ஆலோ மென் மலர் பள்ளி வெம் பள்ளி ஆலோ – நாலாயி:3872/2

மேல்


மென்ற (1)

மென்ற பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன் – நாலாயி:1012/1

மேல்


மென்று (1)

நானிலம் வாய் கொண்டு நல் நீர் அற மென்று கோது கொண்ட – நாலாயி:2503/1

மேல்