பீ – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பீடத்து 1
பீடு 7
பீடே 1
பீதக 10
பீர் 1
பீலி 7
பீளை 1
பீளையோடு 1
பீற 1
பீன 1

பீடத்து (1)

அன்னம் மென் கமலத்து அணி மலர் பீடத்து அலை புனல் இலை குடை நீழல் – நாலாயி:1752/3

மேல்


பீடு (7)

பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்ற பேரதே – நாலாயி:804/4
பேர்த்து ஓத பீடு அழிவு ஆம் பேச்சு இல்லை ஆர்த்து ஓதம் – நாலாயி:2599/2
பின்னை நெடும் பணை தோள் மகிழ் பீடு உடை – நாலாயி:2972/3
பெருமலை எடுத்தான் பீடு உறை கோயில் – நாலாயி:3113/2
பேணி வானோர் காணமாட்டா பீடு உடை அப்பனையே – நாலாயி:3300/4
பீடு உடை நான்முகனை படைத்தானுக்கு – நாலாயி:3509/1
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன் – நாலாயி:3803/2

மேல்


பீடே (1)

பிறங்கு இரும் கூந்தல் இழந்தது பீடே – நாலாயி:3508/4

மேல்


பீதக (10)

உடுத்து களைந்த நின் பீதக ஆடை உடுத்து கலத்தது உண்டு – நாலாயி:9/1
பின்னல் துலங்கும் அரசிலையும் பீதக சிற்றாடையொடும் – நாலாயி:88/2
கரும் கண் தோகை மயில் பீலி அணிந்து கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை – நாலாயி:284/1
பீதக ஆடை பிரானார் பிரம குரு ஆகி வந்து – நாலாயி:450/2
சக்கரமும் தட கைகளும் கண்களும் பீதக ஆடையொடும் – நாலாயி:459/3
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக
வண்ண ஆடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே – நாலாயி:627/3,4
பீதக ஆடை உடை தாழ பெரும் கார் மேக கன்றே போல் – நாலாயி:641/3
வெளிய சங்கு ஒன்று உடையானை பீதக ஆடை உடையானை – நாலாயி:644/1
பீதக ஆடை முடி பூண் முதலா – நாலாயி:2578/6
வசிசெய் உன் தாமரை கண்ணும் வாயும் கைகளும் பீதக உடையும் காட்டி – நாலாயி:3920/3

மேல்


பீர் (1)

மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்கு ஆகும் பீர் சிறிதும் – நாலாயி:2950/3

மேல்


பீலி (7)

பீலி தழையை பிணைத்து பிறகிட்டு – நாலாயி:172/3
தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கம் மத்தளி தாழ் பீலி
குழல்களும் கீதமும் ஆகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு – நாலாயி:254/1,2
கரும் கண் தோகை மயில் பீலி அணிந்து கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை – நாலாயி:284/1
மங்கல நல் வன மாலை மார்வில் இலங்க மயில் தழை பீலி சூடி – நாலாயி:706/1
பீலி மா மயில் நடம் செயும் தடம் சுனை பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:958/4
பிச்ச சிறு பீலி பிடித்து உலகில் பிணம் தின் மடவார்-அவர் போல் அங்ஙனே – நாலாயி:1085/1
பிச்ச சிறு பீலி சமண் குண்டர் முதலாயோர் – நாலாயி:1102/1

மேல்


பீளை (1)

பீளை சோர கண் இடுங்கி பித்து எழ மூத்து இருமி – நாலாயி:971/1

மேல்


பீளையோடு (1)

கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால் – நாலாயி:1478/1

மேல்


பீற (1)

பீற கடைந்த பெருமான் திருநாமம் – நாலாயி:2430/3

மேல்


பீன (1)

நெட்டு இலைய கரும் கமுகின் செம் காய் வீழ நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு பீன
தெட்ட பழம் சிதைந்து மது சொரியும் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1185/3,4

மேல்