பூ – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

பூ (4)

மாலை விலை பகர்வார் கிள்ளி களைந்த பூ
சால மருவியதோர் தன்மைத்தால் காலையே – முத்தொள்:44/1,2
கடம்பம் பூ கொண்டு ஏத்தி அற்றால் தொடங்கு அமருள் – முத்தொள்:90/2
செம் கண் நெடியான் மேல் தேர் விசையன் ஏற்றிய பூ
பைம் கண் வெள்_ஏற்றான்-பால் கண்டு அற்றால் எங்கும் – முத்தொள்:91/1,2
முடி மன்னர் சூடிய பூ மொய் மலர் தார் மாறன் – முத்தொள்:91/3

மேல்


பூசல் (2)

யார்க்கு இடுகோ பூசல் இனி – முத்தொள்:57/4
போர் வேந்தன் பூசல் இலன் – முத்தொள்:93/4

மேல்


பூட்டு-மின் (1)

மல்லல் நெடு மதில் வாங்கு வில் பூட்டு-மின்
வள் இதழ் வாடாத வானோரும் வானவன் – முத்தொள்:17/2,3

மேல்


பூண் (5)

ஆய் மணி பைம் பூண் அலங்கு தார் கோதையை – முத்தொள்:7/3
ஆய் மணி பைம் பூண் அலங்கு தார் கோதையை – முத்தொள்:8/1
மரகத பூண் மன்னவர் தோள் வளை கீழா – முத்தொள்:21/1
பூண் ஆகம் தா என்று புல்ல பெறுவேனோ – முத்தொள்:79/3
ஏம மணி பூண் இமையார் திருந்து அடி – முத்தொள்:97/3

மேல்


பூண்டதுவும் (1)

கையது அவன் கடலுள் சங்கம் ஆல் பூண்டதுவும்
செய்ய சங்கு ஈன்ற செழு முத்து ஆல் மெய்யதுவும் – முத்தொள்:67/1,2

மேல்


பூத்து (1)

வேர் அறுகை பம்பி சுரை படர்ந்து வேளை பூத்து
ஊர் அறியலாகா கிடந்தனவே போரின் – முத்தொள்:23/1,2

மேல்


பூம் (5)

பூம் புனல் வஞ்சி அகம் – முத்தொள்:15/4
தளை அவிழும் பூம் கோதை தாயரே ஆவி – முத்தொள்:63/1
புன வட்ட பூம் தெரியல் பொன் தேர் வழுதி – முத்தொள்:75/3
புறப்படா பூம் தார் வழுதி புறப்படின் – முத்தொள்:83/2
பூம்_தொடியை புல்லிய ஞான்று உண்டு ஆல் யாங்கு ஒளித்தாய் – முத்தொள்:92/2

மேல்


பூம்_தொடியை (1)

பூம்_தொடியை புல்லிய ஞான்று உண்டு ஆல் யாங்கு ஒளித்தாய் – முத்தொள்:92/2

மேல்


பூமி (1)

பூமி மிதியா பொருள் – முத்தொள்:97/4

மேல்


பூழியர் (1)

புகலும் களி யானை பூழியர் கோ கோதைக்கு – முத்தொள்:13/3

மேல்


பூழியனை (1)

புண்ணுற்று அழைக்கும் குறுநரித்தே பூழியனை
கண்ணுற்று வீழ்ந்தார் களம் – முத்தொள்:21/3,4

மேல்