த – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

தக்கதோ (1)

சீர் ஒழுகு செங்கோல் செழியற்கே தக்கதோ
நீர் ஒழுக பால் ஒழுகாவாறு – முத்தொள்:59/3,4

மேல்


தகைமைத்தே (1)

குறியெதிர்ப்பை கொள்ளும் தகைமைத்தே எம் கோன் – முத்தொள்:101/3

மேல்


தட (2)

தண்டப்படுவ தட மென் தோள் கண்டாய் – முத்தொள்:33/2
பிடி வீசும் வண் தட கை பெய் தண் தார் கிள்ளி – முத்தொள்:42/3

மேல்


தடவந்தேன் (1)

செங்காந்தள் மென் விரலால் சேக்கை தடவந்தேன்
என் காண்பேன் என் அலால் யான் – முத்தொள்:61/3,4

மேல்


தடித்த (1)

தடித்த குடர் திரியா மாட்டி எடுத்தெடுத்து – முத்தொள்:51/2

மேல்


தடுமாறல் (1)

தடுமாறல் ஆகிய தன்மைத்தே தென்னன் – முத்தொள்:89/3

மேல்


தண் (8)

தண் ஆர மார்பின் தமிழ்நர் பெருமானை – முத்தொள்:24/3
பேயோ பெரும் தண் பனி வாடாய் பெண் பிறந்தாரேயோ – முத்தொள்:40/1
பிடி வீசும் வண் தட கை பெய் தண் தார் கிள்ளி – முத்தொள்:42/3
பெரும் தண் உறந்தையார் கோ – முத்தொள்:47/4
தத்து நீர் தண் உஞ்சை தான் மிதியா பிற்றையும் – முத்தொள்:49/2
எளியேன் ஓர் பெண்பாலேன் ஈர் தண் தார் மாறன் – முத்தொள்:58/3
தண் கண் அருள் பெறுமா தான் – முத்தொள்:62/4
கொடி பாடி தேர் பாடி கொய் தண் தார் மாறன் – முத்தொள்:69/1

மேல்


தண்டப்படுவ (1)

தண்டப்படுவ தட மென் தோள் கண்டாய் – முத்தொள்:33/2

மேல்


தண்படா (1)

தண்படா யானை தமிழ்நர் பெருமாற்கு என் – முத்தொள்:70/3

மேல்


தத்து (1)

தத்து நீர் தண் உஞ்சை தான் மிதியா பிற்றையும் – முத்தொள்:49/2

மேல்


தந்த (1)

முன் தந்த மன்னர் முடி தாக்க இன்றும் – முத்தொள்:47/2

மேல்


தந்து (1)

பல் யானை மன்னர் படு திறை தந்து உய்-மின் – முத்தொள்:17/1

மேல்


தம் (5)

தம் கோலம் வவ்வுதல் ஆமோ அவர் தாய்மார் – முத்தொள்:5/3
வெள்ளம் தீப்பட்டது என வெரீஇ புள்ளினம் தம்
கை சிறகால் பார்ப்பு ஒடுக்கும் கவ்வை உடைத்தரோ – முத்தொள்:14/2,3
களிகள் களிகட்கு நீட்ட தம் கையால் – முத்தொள்:15/1
பணியாரே தம் பார் இழக்க அணி ஆகம் – முத்தொள்:56/2
புரைசை அற நிமிர்ந்து பொங்கா அரசர் தம்
முன்முன்னா வீழ்ந்தார் முடிகள் உதைத்த மா – முத்தொள்:95/2,3

மேல்


தமர் (1)

செய்யார்-எனினும் தமர் செய்வர் என்னும் சொல் – முத்தொள்:80/1

மேல்


தமிழ்நர் (2)

தண் ஆர மார்பின் தமிழ்நர் பெருமானை – முத்தொள்:24/3
தண்படா யானை தமிழ்நர் பெருமாற்கு என் – முத்தொள்:70/3

மேல்


தமிழால் (1)

இன் தமிழால் யாம் பாடும் பாட்டு – முத்தொள்:90/4

மேல்


தரும் (1)

நாடு அறி கௌவை தரும் – முத்தொள்:83/4

மேல்


தலை (6)

இரு_தலை_கொள்ளியின் உள் எறும்பு போல – முத்தொள்:29/3
முடி தலை வெள் ஓட்டு மூளை நெய்யாக – முத்தொள்:51/1
செறிவார் தலை மேல் நடந்து மறி திரை – முத்தொள்:66/2
தலை படுப தார் வேந்தர் மார்பு – முத்தொள்:87/4
அரு மணி ஐம் தலை ஆடு அரவம் வானத்து – முத்தொள்:96/1
கொடி தலை தார் தென்னவன் தோற்றான் போல் நின்றான் – முத்தொள்:107/1

மேல்


தவம்-கொலோ (1)

நீர்நிலை நின்ற தவம்-கொலோ கூர் நுனை வேல் – முத்தொள்:65/2

மேல்


தளிர் (1)

கொய் தளிர் அன்ன நிறம் – முத்தொள்:56/4

மேல்


தளை (2)

இளையளாய் மூத்து இலள்-கொல்லோ தளை அவிழ் தார் – முத்தொள்:54/2
தளை அவிழும் பூம் கோதை தாயரே ஆவி – முத்தொள்:63/1

மேல்


தன் (7)

கடும் பனி திங்கள் தன் கை போர்வையாக – முத்தொள்:7/1
திங்கள் மேல் நீட்டும் தன் கை – முத்தொள்:19/4
சுடர் இலை வேல் சோழன் தன் பாடலம் ஏறி – முத்தொள்:26/1
தானை கொண்டு ஓடுவது-ஆயின் தன் செங்கோன்மை – முத்தொள்:42/1
சிலம்பி தன் கூடு இழந்தவாறு – முத்தொள்:46/4
மதி வெம் களி யானை மாறன் தன் மார்பம் – முத்தொள்:74/3
ஏனைய பெண்டிர் எரி மூழ்க கண்டு தன்
தானையால் கண்புதைத்தான் தார் வழுதி யானையும் – முத்தொள்:104/1,2

மேல்


தன்மை (2)

கண் தன்மை கொண்டு அலரும் காவிரி நீர் நாட்டு – முத்தொள்:37/3
பெண் தன்மை இல்லை பிடி – முத்தொள்:37/4

மேல்


தன்மைத்தால் (1)

சால மருவியதோர் தன்மைத்தால் காலையே – முத்தொள்:44/2

மேல்


தன்மைத்தே (1)

தடுமாறல் ஆகிய தன்மைத்தே தென்னன் – முத்தொள்:89/3

மேல்


தன்னுடன் (1)

வன்கண்ணன் வாள் மாறன் மால் யானை தன்னுடன் வந்து – முத்தொள்:63/3

மேல்


தனது (1)

மன் உயிர் காவல் தனது ஆன அ உயிருள் – முத்தொள்:59/1

மேல்


தனி (2)

அடைத்தாள் தனி கதவம் அன்னை அடைக்குமேல் – முத்தொள்:4/2
தான் ஏல் தனி குடை காவலனார் காப்பதுவும் – முத்தொள்:58/1

மேல்