ஆ – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆ 1
ஆக 4
ஆகம் 3
ஆகவும் 1
ஆகிய 1
ஆகுமே 1
ஆங்கு 1
ஆட 1
ஆடவர் 1
ஆடி 1
ஆடில் 1
ஆடு 3
ஆடுகோ 1
ஆணையால் 1
ஆதிரையான் 2
ஆம்பல் 1
ஆமா 1
ஆமோ 1
ஆய் 4
ஆய்_இழையாய் 1
ஆயிரமும் 1
ஆயிற்றே 1
ஆயினும் 1
ஆர் 8
ஆர்ப்ப 2
ஆர 1
ஆரத்தால் 1
ஆரம் 1
ஆல் 10
ஆவி 1
ஆவொடு 1
ஆள்வார் 1
ஆளும் 1
ஆற்ற 1
ஆற்றல் 1
ஆறில் 1
ஆறு 1
ஆன் 1
ஆன 1
ஆனக்கால் 1
ஆனை 1

ஆ (1)

ஆ புகு மாலை அணி மலையில் தீயே போல் – முத்தொள்:83/3

மேல்


ஆக (4)

அறிவார் ஆர் யாம் ஒரு நாள் பெண்டிரேம் ஆக
செறிவார் தலை மேல் நடந்து மறி திரை – முத்தொள்:66/1,2
ஏடு கோடு ஆக எழுதுகோ நீடு – முத்தொள்:75/2
மருப்பு ஊசி ஆக மறம் கனல் வேல் மன்னர் – முத்தொள்:99/1
உருத்தகு மார்பு ஓலை ஆக திருத்தக்க – முத்தொள்:99/2

மேல்


ஆகம் (3)

நல் நாகம் நின்று அலரும் நல் நாடன் என் ஆகம்
கங்குல் ஒரு நாள் கனவினுள் தைவந்தான் – முத்தொள்:6/2,3
பணியாரே தம் பார் இழக்க அணி ஆகம்
கைதொழுதேனும் இழக்கோ நறு மாவின் – முத்தொள்:56/2,3
பூண் ஆகம் தா என்று புல்ல பெறுவேனோ – முத்தொள்:79/3

மேல்


ஆகவும் (1)

நீள் நீல தார் வளவன் நின் மேலான் ஆகவும்
நாண் நீர்மை இன்றி நடத்தியால் நீள் நிலம் – முத்தொள்:37/1,2

மேல்


ஆகிய (1)

தடுமாறல் ஆகிய தன்மைத்தே தென்னன் – முத்தொள்:89/3

மேல்


ஆகுமே (1)

ஓங்கு எழில் யானை மிதிப்ப சேறு ஆகுமே
பூம் புனல் வஞ்சி அகம் – முத்தொள்:15/3,4

மேல்


ஆங்கு (1)

வேட்டு ஆங்கு சென்ற என் நெஞ்சு அறியாள் கூட்டே – முத்தொள்:55/2

மேல்


ஆட (1)

அலங்கல் அம் பேய்மகளிர் ஆட வருமே – முத்தொள்:50/3

மேல்


ஆடவர் (1)

ஆன் போய் அரிவையர் போய் ஆடவர் போய் ஆயிற்றே – முத்தொள்:106/3

மேல்


ஆடி (1)

கூந்தல்மா கொன்று குடம் ஆடி கோவலனாய் – முத்தொள்:92/1

மேல்


ஆடில் (1)

ஏற்ப குடைந்து ஆடில் ஏசுவர் அல்லா-கால் – முத்தொள்:84/1

மேல்


ஆடு (3)

வண்டு ஆடு பக்கமும் உண்டு குறுநரி – முத்தொள்:18/3
அலங்கு தார் செம்பியன் ஆடு எழில் தோள் நோக்கி – முத்தொள்:28/1
அரு மணி ஐம் தலை ஆடு அரவம் வானத்து – முத்தொள்:96/1

மேல்


ஆடுகோ (1)

ஆடுகோ சூடுகோ ஐதா கலந்துகொண்டு – முத்தொள்:75/1

மேல்


ஆணையால் (1)

காமர் நெடும் குடை காவலன் ஆணையால்
ஏம மணி பூண் இமையார் திருந்து அடி – முத்தொள்:97/2,3

மேல்


ஆதிரையான் (2)

ஆதிரையான் ஆதிரையான் என்றென்று அயருமால் – முத்தொள்:1/3
ஆதிரையான் ஆதிரையான் என்றென்று அயருமால் – முத்தொள்:1/3

மேல்


ஆம்பல் (1)

அள்ளல் பழனத்து அரக்கு ஆம்பல் வாய்_அவிழ – முத்தொள்:14/1

மேல்


ஆமா (1)

ஆமா உகளும் அணி வரையின் அப்புறம் போய் – முத்தொள்:98/3

மேல்


ஆமோ (1)

தம் கோலம் வவ்வுதல் ஆமோ அவர் தாய்மார் – முத்தொள்:5/3

மேல்


ஆய் (4)

தேய திரிந்த குடுமியவே ஆய் மலர் – முத்தொள்:2/2
ஆய்_இழையாய் என்னை அவன் மேல் எடுத்துரைப்பார் – முத்தொள்:4/3
ஆய் மணி பைம் பூண் அலங்கு தார் கோதையை – முத்தொள்:7/3
ஆய் மணி பைம் பூண் அலங்கு தார் கோதையை – முத்தொள்:8/1

மேல்


ஆய்_இழையாய் (1)

ஆய்_இழையாய் என்னை அவன் மேல் எடுத்துரைப்பார் – முத்தொள்:4/3

மேல்


ஆயிரமும் (1)

காணா-கால் ஆயிரமும் சொல்லுவேன் கண்ட-கால் – முத்தொள்:79/2

மேல்


ஆயிற்றே (1)

ஆன் போய் அரிவையர் போய் ஆடவர் போய் ஆயிற்றே
ஈன் பேய் உறையும் இடம் – முத்தொள்:106/3,4

மேல்


ஆயினும் (1)

மல்லல் நீர் மாந்தையார் மா கடுங்கோக்கு ஆயினும்
சொல்லவே வேண்டும் நம குறை நல்ல – முத்தொள்:12/1,2

மேல்


ஆர் (8)

பொற்பு ஆர் உறந்தை அகம் – முத்தொள்:44/4
கல் ஆர் தோள் கிள்ளி களிறு – முத்தொள்:48/4
அளியானேல் அன்று என்பார் ஆர் – முத்தொள்:58/4
கூர் ஆர் வேல் மாறன் என் கை பற்ற வாரா – முத்தொள்:64/2
அறிவார் ஆர் யாம் ஒரு நாள் பெண்டிரேம் ஆக – முத்தொள்:66/1
மெய்யாதல் கண்டேன் விளங்கு_இழாய் கை ஆர்
வரி வளை நின்றன வையையார் கோமான் – முத்தொள்:80/2,3
கண் ஆர் கதவம் திற-மின் களிறொடு தேர் – முத்தொள்:93/1
பண் ஆர் நடை புரவி பண்விடு-மின் நண்ணாதீர் – முத்தொள்:93/2

மேல்


ஆர்ப்ப (2)

பாற்று இனம் ஆர்ப்ப பருந்து வழிப்படர – முத்தொள்:50/1
உருமின் இடி முரசு ஆர்ப்ப அரவு உறழ்ந்து – முத்தொள்:98/2

மேல்


ஆர (1)

தண் ஆர மார்பின் தமிழ்நர் பெருமானை – முத்தொள்:24/3

மேல்


ஆரத்தால் (1)

ஆரத்தால் தீமூட்டும் அம் பொதியில் கோமாற்கு என் – முத்தொள்:71/3

மேல்


ஆரம் (1)

முடி பாடி முத்து ஆரம் பாடி தொடி உலக்கை – முத்தொள்:69/2

மேல்


ஆல் (10)

கையது அவன் கடலுள் சங்கம் ஆல் பூண்டதுவும் – முத்தொள்:67/1
செய்ய சங்கு ஈன்ற செழு முத்து ஆல் மெய்யதுவும் – முத்தொள்:67/2
மன் பொரு வேல் மாறன் வார் பொதியில் சந்தனம் ஆல்
என் பெறா வாடும் என் தோள் – முத்தொள்:67/3,4
பைய நடக்கவும் தேற்றாய் ஆல் நின் பெண்மை – முத்தொள்:73/3
அணி இழை அஞ்ச வரும் ஆல் மணி யானை – முத்தொள்:76/2
காணா-கால் கை வளையும் சோரும் ஆல் காணேன் நான் – முத்தொள்:78/2
பூம்_தொடியை புல்லிய ஞான்று உண்டு ஆல் யாங்கு ஒளித்தாய் – முத்தொள்:92/2
வேம் ஆல் வயிறெரிய வேந்து – முத்தொள்:98/4
இரு கோடும் செய்தொழில் வேறு ஆல் ஒரு கோடு – முத்தொள்:100/2
மாற்றார் மதில் திறக்கும் ஆல் – முத்தொள்:100/4

மேல்


ஆவி (1)

தளை அவிழும் பூம் கோதை தாயரே ஆவி
களையினும் என் கை திறந்து காட்டேன் வளை கொடுப்போம் – முத்தொள்:63/1,2

மேல்


ஆவொடு (1)

அந்தணர் ஆவொடு பொன் பெற்றார் நாவலர் – முத்தொள்:46/1

மேல்


ஆள்வார் (1)

மர கண்ணோ மண் ஆள்வார் கண் என்று இரக்கண்டாய் – முத்தொள்:39/2

மேல்


ஆளும் (1)

மண் ஆளும் செங்கோல் வளவனை யான் இதன்றோ – முத்தொள்:31/3

மேல்


ஆற்ற (1)

நால் திசையும் ஓடி நரி கதிப்ப ஆற்ற
அலங்கல் அம் பேய்மகளிர் ஆட வருமே – முத்தொள்:50/2,3

மேல்


ஆற்றல் (1)

அயில் கதவம் பாய்ந்து உழக்கி ஆற்றல் சால் மன்னர் – முத்தொள்:20/1

மேல்


ஆறில் (1)

அரவு அகல் அல்குலாய் ஆறில் ஒன்றன்றோ – முத்தொள்:34/3

மேல்


ஆறு (1)

கண்டு எவ்வம் தீர்வதோர் ஆறு – முத்தொள்:78/4

மேல்


ஆன் (1)

ஆன் போய் அரிவையர் போய் ஆடவர் போய் ஆயிற்றே – முத்தொள்:106/3

மேல்


ஆன (1)

மன் உயிர் காவல் தனது ஆன அ உயிருள் – முத்தொள்:59/1

மேல்


ஆனக்கால் (1)

காவலனே ஆனக்கால் காவானோ மாலை-வாய் – முத்தொள்:35/3

மேல்


ஆனை (1)

கோட்டு ஆனை தென்னன் குளிர் சாந்து அணி அகலம் – முத்தொள்:77/3

மேல்