இ – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இகுகரையின் 1
இங்கு 1
இசைக்கும் 1
இசைத்தால் 1
இடம் 1
இடம்கொடா 1
இடம்பெறுதல் 1
இடர் 1
இடறி 1
இடி 1
இடுகோ 1
இதழ் 1
இதன்றோ 1
இது 1
இப்பி 1
இமிழ் 1
இமைபொருந்த 1
இமையார் 1
இயம்ப 1
இயல்பு 1
இரக்கண்டாய் 1
இரண்டும் 1
இரத்தம் 1
இரத்தல் 1
இரப்பல் 1
இரவே 1
இரா 3
இரியல் 1
இரு 2
இரு_தலை_கொள்ளியின் 1
இருக்க 1
இருக்கும் 1
இருந்தாள் 1
இரும் 1
இரேவதி 1
இல்லத்து 1
இல்லேன் 1
இல்லை 1
இலங்க 1
இலங்கு 4
இலள்-கொல்லோ 1
இலன் 1
இலனே 1
இலை 8
இலைய 1
இவர் 1
இவற்றை 1
இவன் 2
இவை 1
இவையானால் 1
இழக்க 1
இழக்கோ 1
இழந்தவாறு 1
இழந்திருந்தவாறு 1
இழந்தேன் 1
இழப்பது 1
இழாய் 2
இழுக்கி 1
இழை 1
இழைத்து 1
இழைப்பாள் 1
இழையாது 1
இழையாய் 1
இள 1
இளங்கோ 1
இளம் 3
இளையளாய் 1
இற்செறித்து 1
இற்ற 1
இறந்த 1
இறந்துபடின் 1
இறை 2
இறை_குடிகள் 1
இறையோ 1
இன் 1
இன்றி 2
இன்று 1
இன்றும் 1
இன்னள் 1
இன 1
இனம் 1
இனி 2

இகுகரையின் (1)

நகுவாரை நாணி மறையா இகுகரையின்
ஏ மான் பிணை போல நின்றதே கூடலார் – முத்தொள்:60/2,3

மேல்


இங்கு (1)

உனக்கு இங்கு இறை_குடிகள் நீயோ – முத்தொள்:40/2

மேல்


இசைக்கும் (1)

நாவலோஓ என்று இசைக்கும் நாள் ஓதை காவலன்-தன் – முத்தொள்:43/2

மேல்


இசைத்தால் (1)

கொல் யானை மேலிருந்து கூற்று இசைத்தால் போலுமே – முத்தொள்:43/3

மேல்


இடம் (1)

ஈன் பேய் உறையும் இடம் – முத்தொள்:106/4

மேல்


இடம்கொடா (1)

புகுவார்க்கு இடம்கொடா போதுவார்க்கு ஒல்கா – முத்தொள்:60/1

மேல்


இடம்பெறுதல் (1)

இறையோ என வந்து இடம்பெறுதல் இன்றி – முத்தொள்:94/3

மேல்


இடர் (1)

எல்லாம் எனக்கோ இடர் – முத்தொள்:84/4

மேல்


இடறி (1)

முடி இடறி தேய்ந்த நகமும் பிடி முன்பு – முத்தொள்:48/2

மேல்


இடி (1)

உருமின் இடி முரசு ஆர்ப்ப அரவு உறழ்ந்து – முத்தொள்:98/2

மேல்


இடுகோ (1)

யார்க்கு இடுகோ பூசல் இனி – முத்தொள்:57/4

மேல்


இதழ் (1)

வள் இதழ் வாடாத வானோரும் வானவன் – முத்தொள்:17/3

மேல்


இதன்றோ (1)

மண் ஆளும் செங்கோல் வளவனை யான் இதன்றோ
கண்ணார கண்டறியாவாறு – முத்தொள்:31/3,4

மேல்


இது (1)

இரா அளிப்பட்டது இது – முத்தொள்:86/4

மேல்


இப்பி (1)

இப்பி ஈன்றிட்ட எறி கதிர் நித்திலம் – முத்தொள்:68/1

மேல்


இமிழ் (1)

தொழுதேனை தோள் நலமும் கொண்டான் இமிழ் திரை – முத்தொள்:57/2

மேல்


இமைபொருந்த (1)

ஓராற்றால் என் கண் இமைபொருந்த அ நிலையே – முத்தொள்:64/1

மேல்


இமையார் (1)

ஏம மணி பூண் இமையார் திருந்து அடி – முத்தொள்:97/3

மேல்


இயம்ப (1)

புரி வளை போந்து இயம்ப கேட்டு – முத்தொள்:80/4

மேல்


இயல்பு (1)

உலகம் கிடந்த இயல்பு – முத்தொள்:12/4

மேல்


இரக்கண்டாய் (1)

மர கண்ணோ மண் ஆள்வார் கண் என்று இரக்கண்டாய்
வாள் உழுவை வெல் கொடியான் வண் புனல் நீர் நாடற்கு என் – முத்தொள்:39/2,3

மேல்


இரண்டும் (1)

நின் கால் மேல் வைப்பன் என் கை இரண்டும் நன்பால் – முத்தொள்:38/2

மேல்


இரத்தம் (1)

கண் இரத்தம் தீர்க்கும் மருந்து – முத்தொள்:108/4

மேல்


இரத்தல் (1)

மண் இரத்தல் என்ப வயங்கு தார் மா மாறன் – முத்தொள்:108/3

மேல்


இரப்பல் (1)

பிடியே யான் நின்னை இரப்பல் கடி கமழ் தார் – முத்தொள்:72/2

மேல்


இரவே (1)

நில்லாய் இரவே நெடிது என்பர் நல்ல – முத்தொள்:86/2

மேல்


இரா (3)

என் கண் புகுந்தான் இரா – முத்தொள்:63/4
எய்தாது இரா கழிந்தவாறு – முத்தொள்:85/4
இரா அளிப்பட்டது இது – முத்தொள்:86/4

மேல்


இரியல் (1)

இரியல் மகளிர் இலை ஞெமலுள் ஈன்ற – முத்தொள்:52/1

மேல்


இரு (2)

இரு_தலை_கொள்ளியின் உள் எறும்பு போல – முத்தொள்:29/3
இரு கோடும் செய்தொழில் வேறு ஆல் ஒரு கோடு – முத்தொள்:100/2

மேல்


இரு_தலை_கொள்ளியின் (1)

இரு_தலை_கொள்ளியின் உள் எறும்பு போல – முத்தொள்:29/3

மேல்


இருக்க (1)

வண்டு இருக்க நக்க தார் வாமான் வழுதியால் – முத்தொள்:65/3

மேல்


இருக்கும் (1)

இழைப்பாள் போல் காட்டி இழையாது இருக்கும்
பிழைப்பில் பிழைபாக்கு அறிந்து – முத்தொள்:82/3,4

மேல்


இருந்தாள் (1)

மாற்றி இருந்தாள் என உரைப்பர் வேல் கண்ணாய் – முத்தொள்:84/2

மேல்


இரும் (1)

இரும் களிறு ஒன்று மட பிடி சாரல் – முத்தொள்:109/1

மேல்


இரேவதி (1)

இலங்கு இலை வேல் கிள்ளி இரேவதி நாள் என்னோ – முத்தொள்:46/3

மேல்


இல்லத்து (1)

பெரும் செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல – முத்தொள்:8/3

மேல்


இல்லேன் (1)

நனவு என்று எழுந்திருந்தேன் நல்வினை ஒன்று இல்லேன்
கனவும் இழந்திருந்தவாறு – முத்தொள்:64/3,4

மேல்


இல்லை (1)

பெண் தன்மை இல்லை பிடி – முத்தொள்:37/4

மேல்


இலங்க (1)

வெருவரு வெம் சமத்து வேல் இலங்க வீழ்ந்தார் – முத்தொள்:103/1

மேல்


இலங்கு (4)

இலங்கு இலை வேல் கிள்ளி இரேவதி நாள் என்னோ – முத்தொள்:46/3
இலங்கு இலை வேல் கிள்ளி களிறு – முத்தொள்:50/4
நின்று இலங்கு வென்றி நிரை கதிர் வேல் மாறனை – முத்தொள்:90/3
இலங்கு அருவி நீரால் தெளிக்கும் நலம் கிளர் வேல் – முத்தொள்:109/2

மேல்


இலள்-கொல்லோ (1)

இளையளாய் மூத்து இலள்-கொல்லோ தளை அவிழ் தார் – முத்தொள்:54/2

மேல்


இலன் (1)

போர் வேந்தன் பூசல் இலன் – முத்தொள்:93/4

மேல்


இலனே (1)

திருந்து அடி புண்ணாகி செவ்வி இலனே
பெரும் தண் உறந்தையார் கோ – முத்தொள்:47/3,4

மேல்


இலை (8)

நச்சு இலை வேல் கோ கோதை நாடு – முத்தொள்:14/4
நகை இலை வேல் காய்த்தினார் நாடு – முத்தொள்:23/4
சுடர் இலை வேல் சோழன் தன் பாடலம் ஏறி – முத்தொள்:26/1
இலங்கு இலை வேல் கிள்ளி இரேவதி நாள் என்னோ – முத்தொள்:46/3
இலங்கு இலை வேல் கிள்ளி களிறு – முத்தொள்:50/4
இரியல் மகளிர் இலை ஞெமலுள் ஈன்ற – முத்தொள்:52/1
மொய் இலை வேல் மாறன் களிறு – முத்தொள்:99/4
அழல் இலை வேல் காய்த்தினார் பெண்டிர் கழல் அடைந்து – முத்தொள்:108/2

மேல்


இலைய (1)

என்னை அழியும் சொல் சொல்லுவர் நுண் இலைய
தெங்கு உண்ட தேரை படுவழி பட்டேன் யான் – முத்தொள்:27/2,3

மேல்


இவர் (1)

என்-கொல் இவர் அறிந்தவாறு – முத்தொள்:6/4

மேல்


இவற்றை (1)

மன்னிய நாள்மீன் மதி கனலி என்று இவற்றை
முன்னம் படைத்த முதல்வனை பின்னரும் – முத்தொள்:1/1,2

மேல்


இவன் (2)

இவன் என் நலம் கவர்ந்த கள்வன் இவன் எனது – முத்தொள்:10/1
இவன் என் நலம் கவர்ந்த கள்வன் இவன் எனது – முத்தொள்:10/1

மேல்


இவை (1)

என் நெஞ்சும் நாணும் நலனும் இவை எல்லாம் – முத்தொள்:34/1

மேல்


இவையானால் (1)

என் கண் இவையானால் எவ்வாறே மா மாறன் – முத்தொள்:62/3

மேல்


இழக்க (1)

பணியாரே தம் பார் இழக்க அணி ஆகம் – முத்தொள்:56/2

மேல்


இழக்கோ (1)

கைதொழுதேனும் இழக்கோ நறு மாவின் – முத்தொள்:56/3

மேல்


இழந்தவாறு (1)

சிலம்பி தன் கூடு இழந்தவாறு – முத்தொள்:46/4

மேல்


இழந்திருந்தவாறு (1)

கனவும் இழந்திருந்தவாறு – முத்தொள்:64/4

மேல்


இழந்தேன் (1)

கூடல் இழந்தேன் கொடி அன்னாய் நீள் தெங்கின் – முத்தொள்:30/2

மேல்


இழப்பது (1)

மாமையே அன்றோ இழப்பது மாமையின் – முத்தொள்:3/2

மேல்


இழாய் (2)

நனவில் எதிர்விழிக்க நாணும் புனை_இழாய் – முத்தொள்:62/2
மெய்யாதல் கண்டேன் விளங்கு_இழாய் கை ஆர் – முத்தொள்:80/2

மேல்


இழுக்கி (1)

குங்கும ஈர்ம் சாந்தின சேறு இழுக்கி எங்கும் – முத்தொள்:89/2

மேல்


இழை (1)

அணி இழை அஞ்ச வரும் ஆல் மணி யானை – முத்தொள்:76/2

மேல்


இழைத்து (1)

காராட்டு உதிரம் தூய் அன்னை களன் இழைத்து
நீராட்டி நீங்கு என்றால் நீங்குமோ போராட்டு – முத்தொள்:11/1,2

மேல்


இழைப்பாள் (1)

இழைப்பாள் போல் காட்டி இழையாது இருக்கும் – முத்தொள்:82/3

மேல்


இழையாது (1)

இழைப்பாள் போல் காட்டி இழையாது இருக்கும் – முத்தொள்:82/3

மேல்


இழையாய் (1)

ஆய்_இழையாய் என்னை அவன் மேல் எடுத்துரைப்பார் – முத்தொள்:4/3

மேல்


இள (1)

தெள் நீர் நறு மலர் தார் சென்னி இள வளவன் – முத்தொள்:35/1

மேல்


இளங்கோ (1)

களி யானை தென்னன் இளங்கோ என்று எள்ளி – முத்தொள்:56/1

மேல்


இளம் (3)

வரி இளம் செம் கால் குழவி அரையிரவில் – முத்தொள்:52/2
நந்தின் இளம் சினையும் புன்னை குவி மொட்டும் – முத்தொள்:88/1
பந்தர் இளம் கமுகின் பாளையும் சிந்தி – முத்தொள்:88/2

மேல்


இளையளாய் (1)

இளையளாய் மூத்து இலள்-கொல்லோ தளை அவிழ் தார் – முத்தொள்:54/2

மேல்


இற்செறித்து (1)

காப்பு அடங்கு என்று அன்னை கடி மனை இற்செறித்து
யாப்பு அடங்க ஓடி அடைத்த பின் மா கடுங்கோன் – முத்தொள்:53/1,2

மேல்


இற்ற (1)

கொடி மதில் பாய்ந்து இற்ற கோடும் அரசர் – முத்தொள்:48/1

மேல்


இறந்த (1)

முறைசெயும் என்பரால் தோழி இறை இறந்த
அம் கோல் அணி வளையே சொல்லாதோ மற்று அவன் – முத்தொள்:36/2,3

மேல்


இறந்துபடின் (1)

இறந்துபடின் பெரிதாம் ஏதம் உறந்தையர் கோன் – முத்தொள்:24/2

மேல்


இறை (2)

முறைசெயும் என்பரால் தோழி இறை இறந்த – முத்தொள்:36/2
உனக்கு இங்கு இறை_குடிகள் நீயோ – முத்தொள்:40/2

மேல்


இறை_குடிகள் (1)

உனக்கு இங்கு இறை_குடிகள் நீயோ – முத்தொள்:40/2

மேல்


இறையோ (1)

இறையோ என வந்து இடம்பெறுதல் இன்றி – முத்தொள்:94/3

மேல்


இன் (1)

இன் தமிழால் யாம் பாடும் பாட்டு – முத்தொள்:90/4

மேல்


இன்றி (2)

நாண் நீர்மை இன்றி நடத்தியால் நீள் நிலம் – முத்தொள்:37/2
இறையோ என வந்து இடம்பெறுதல் இன்றி
முறையோ என நின்றார் மொய்த்து – முத்தொள்:94/3,4

மேல்


இன்று (1)

விளைந்தவா இன்று வியன் கானல் வெண்_தேர் – முத்தொள்:25/3

மேல்


இன்றும் (1)

முன் தந்த மன்னர் முடி தாக்க இன்றும்
திருந்து அடி புண்ணாகி செவ்வி இலனே – முத்தொள்:47/2,3

மேல்


இன்னள் (1)

அன்னையும் இன்னள் என உரையல் பின்னையும் – முத்தொள்:70/2

மேல்


இன (1)

நனவினுள் முன் விலக்கும் நாணும் இன வங்கம் – முத்தொள்:32/2

மேல்


இனம் (1)

பாற்று இனம் ஆர்ப்ப பருந்து வழிப்படர – முத்தொள்:50/1

மேல்


இனி (2)

என்னை-கொல் கைம்மாறு இனி – முத்தொள்:53/4
யார்க்கு இடுகோ பூசல் இனி – முத்தொள்:57/4

மேல்