கொ – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

கொடி (4)

கூடல் இழந்தேன் கொடி அன்னாய் நீள் தெங்கின் – முத்தொள்:30/2
கொடி மதில் பாய்ந்து இற்ற கோடும் அரசர் – முத்தொள்:48/1
கொடி பாடி தேர் பாடி கொய் தண் தார் மாறன் – முத்தொள்:69/1
கொடி தலை தார் தென்னவன் தோற்றான் போல் நின்றான் – முத்தொள்:107/1

மேல்


கொடியான் (1)

வாள் உழுவை வெல் கொடியான் வண் புனல் நீர் நாடற்கு என் – முத்தொள்:39/3

மேல்


கொடுப்போம் (1)

களையினும் என் கை திறந்து காட்டேன் வளை கொடுப்போம்
வன்கண்ணன் வாள் மாறன் மால் யானை தன்னுடன் வந்து – முத்தொள்:63/2,3

மேல்


கொண்ட (1)

மண் கொண்ட தானை மறம் கனல் வேல் மாறனை – முத்தொள்:54/3

மேல்


கொண்டாடு (1)

கொண்டாடு பக்கமும் உண்டு – முத்தொள்:18/4

மேல்


கொண்டான் (1)

தொழுதேனை தோள் நலமும் கொண்டான் இமிழ் திரை – முத்தொள்:57/2

மேல்


கொண்டிருக்க (1)

கொண்டிருக்க பெற்ற குணம் – முத்தொள்:65/4

மேல்


கொண்டு (4)

கண் தன்மை கொண்டு அலரும் காவிரி நீர் நாட்டு – முத்தொள்:37/3
தானை கொண்டு ஓடுவது-ஆயின் தன் செங்கோன்மை – முத்தொள்:42/1
கதவம் கொண்டு யாமும் தொழ – முத்தொள்:74/4
கடம்பம் பூ கொண்டு ஏத்தி அற்றால் தொடங்கு அமருள் – முத்தொள்:90/2

மேல்


கொணர்ந்து (1)

நின்றீ-மின் மன்னீர் நெருநல் திறை கொணர்ந்து
முன் தந்த மன்னர் முடி தாக்க இன்றும் – முத்தொள்:47/1,2

மேல்


கொம்பு (1)

குடத்து விளக்கே போல் கொம்பு அன்னார் காமம் – முத்தொள்:83/1

மேல்


கொய் (3)

கொய் தளிர் அன்ன நிறம் – முத்தொள்:56/4
கொடி பாடி தேர் பாடி கொய் தண் தார் மாறன் – முத்தொள்:69/1
கொய் தார் வழுதி குளிர் சாந்து அணி அகலம் – முத்தொள்:85/3

மேல்


கொல் (3)

கொல் யானை மேலிருந்து கூற்று இசைத்தால் போலுமே – முத்தொள்:43/3
கொல் யானை மாறன் குளிர் புனல் வையை நீர் – முத்தொள்:84/3
பறை நிறை கொல் யானை பஞ்சவர்க்கு பாங்காய் – முத்தொள்:106/1

மேல்


கொல்லியர் (1)

மீன் சேர் மதி அனையன் விண் உயர் கொல்லியர்
கோன் சேரன் கோதை என்பான் – முத்தொள்:16/3,4

மேல்


கொள் (1)

குடை தோன்ற ஞாலத்து அரசர் திறை கொள்
இறையோ என வந்து இடம்பெறுதல் இன்றி – முத்தொள்:94/2,3

மேல்


கொள்ளா (1)

கோட்டு மண் கொள்ளா முலை – முத்தொள்:77/4

மேல்


கொள்ளாதார் (1)

விடுமாற்றம் கொள்ளாதார் நாடு – முத்தொள்:105/4

மேல்


கொள்ளியின் (1)

இரு_தலை_கொள்ளியின் உள் எறும்பு போல – முத்தொள்:29/3

மேல்


கொள்ளும் (2)

புரவலர் கொள்ளும் பொருள் – முத்தொள்:34/4
குறியெதிர்ப்பை கொள்ளும் தகைமைத்தே எம் கோன் – முத்தொள்:101/3

மேல்


கொளலுற்ற (1)

பீர் மேல் கொளலுற்ற பேதையர்க்கு என் வாய்ச்சொல் – முத்தொள்:28/3

மேல்


கொற்கை (2)

கொற்கையே அல்ல படுவது கொற்கை
குருதி வேல் மாறன் குளிர் சாந்து அகலம் – முத்தொள்:68/2,3
திரை வரவு பார்த்திருக்கும் தென் கொற்கை கோமான் – முத்தொள்:81/3

மேல்


கொற்கையார் (1)

கார் கடல் கொற்கையார் காவலனும் தானேயால் – முத்தொள்:57/3

மேல்


கொற்கையே (1)

கொற்கையே அல்ல படுவது கொற்கை – முத்தொள்:68/2

மேல்


கொற்ற (1)

கொற்ற போர் கிள்ளி குடை – முத்தொள்:45/4

மேல்


கொன்று (1)

கூந்தல்மா கொன்று குடம் ஆடி கோவலனாய் – முத்தொள்:92/1

மேல்