கூ – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

கூகை (1)

ஓகை உயர் மாடத்து உள்ளிருந்து கூகை
படு பேய்க்கு பாட்டு அயரும் பண்பிற்றே தென்னன் – முத்தொள்:105/2,3

மேல்


கூட்டே (1)

வேட்டு ஆங்கு சென்ற என் நெஞ்சு அறியாள் கூட்டே
குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன் போல் அன்னை – முத்தொள்:55/2,3

மேல்


கூட (3)

கோள் தெங்கு சூழ் கூடல் கோமானை கூட என – முத்தொள்:55/1
கூட ஒரு நாள் பெற – முத்தொள்:66/4
கூட பெறுவனேல் கூடு என்று கூடல் – முத்தொள்:82/2

மேல்


கூடல் (6)

கூடல் இழந்தேன் கொடி அன்னாய் நீள் தெங்கின் – முத்தொள்:30/2
கோள் தெங்கு சூழ் கூடல் கோமானை கூட என – முத்தொள்:55/1
எலாஅ மட பிடியே எம் கூடல் கோமான் – முத்தொள்:73/1
கூடல் பெருமானை கூடலார் கோமானை – முத்தொள்:82/1
கூட பெறுவனேல் கூடு என்று கூடல்
இழைப்பாள் போல் காட்டி இழையாது இருக்கும் – முத்தொள்:82/2,3
நெடு மாட கூடல் அகம் – முத்தொள்:89/4

மேல்


கூடலார் (3)

ஏ மான் பிணை போல நின்றதே கூடலார்
கோமான் பின் சென்ற என் நெஞ்சு – முத்தொள்:60/3,4
கூடல் பெருமானை கூடலார் கோமானை – முத்தொள்:82/1
தென்னவனே தேர் வேந்தே தேறு நீர் கூடலார்
மன்னவனே மார்பின் மறு – முத்தொள்:92/3,4

மேல்


கூடி (1)

நரி பரந்து நால் திசையும் கூடி எரி பரந்த – முத்தொள்:22/2

மேல்


கூடு (3)

சிலம்பி தன் கூடு இழந்தவாறு – முத்தொள்:46/4
வெறும் கூடு காவல்கொண்டாள் – முத்தொள்:55/4
கூட பெறுவனேல் கூடு என்று கூடல் – முத்தொள்:82/2

மேல்


கூந்தல்மா (1)

கூந்தல்மா கொன்று குடம் ஆடி கோவலனாய் – முத்தொள்:92/1

மேல்


கூர் (4)

கூர் ஆர் வேல் மாறன் என் கை பற்ற வாரா – முத்தொள்:64/2
நீர்நிலை நின்ற தவம்-கொலோ கூர் நுனை வேல் – முத்தொள்:65/2
ஊரகத்து மெல்ல நடவாயோ கூர் வேல் – முத்தொள்:74/2
மலை படுப யானை வய மாறன் கூர் வேல் – முத்தொள்:87/3

மேல்


கூரிய (1)

ஏரிய-ஆயினும் என் செய்யும் கூரிய
கோட்டு ஆனை தென்னன் குளிர் சாந்து அணி அகலம் – முத்தொள்:77/2,3

மேல்


கூற்று (1)

கொல் யானை மேலிருந்து கூற்று இசைத்தால் போலுமே – முத்தொள்:43/3

மேல்


கூற்றும் (1)

காற்றின் நிமிர்ந்த செலவிற்றாய் கூற்றும்
குறியெதிர்ப்பை கொள்ளும் தகைமைத்தே எம் கோன் – முத்தொள்:101/2,3

மேல்


கூறிடுவாய் (1)

கூறிடுவாய் நீயோ குளிர் வாடாய் சோறு அடுவார் – முத்தொள்:71/2

மேல்