நெ – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

நெகிழ்ப்ப (1)

நாண் ஒருபால் வாங்க நலன் ஒருபால் உள் நெகிழ்ப்ப
காமரு தோள் கிள்ளிக்கு என் கண் கவற்ற யாமத்து – முத்தொள்:29/1,2

மேல்


நெஞ்சம் (4)

நெஞ்சம் நிறை அழித்த கள்வன் என்று அம்_சொலாய் – முத்தொள்:10/2
நெஞ்சம் களம்கொண்ட நோய் – முத்தொள்:11/4
அழலும் என் நெஞ்சம் கிடந்து – முத்தொள்:13/4
கண்டன உண்கண் கலந்தன நல் நெஞ்சம்
தண்டப்படுவ தட மென் தோள் கண்டாய் – முத்தொள்:33/1,2

மேல்


நெஞ்சு (6)

காணிய சென்ற என் நெஞ்சு – முத்தொள்:7/4
வரும் செல்லும் பேரும் என் நெஞ்சு – முத்தொள்:8/4
திரிதரும் பேரும் என் நெஞ்சு – முத்தொள்:29/4
வேட்டு ஆங்கு சென்ற என் நெஞ்சு அறியாள் கூட்டே – முத்தொள்:55/2
கோமான் பின் சென்ற என் நெஞ்சு – முத்தொள்:60/4
உரை வரவு பார்த்திருக்கும் நெஞ்சு – முத்தொள்:81/4

மேல்


நெஞ்சும் (1)

என் நெஞ்சும் நாணும் நலனும் இவை எல்லாம் – முத்தொள்:34/1

மேல்


நெஞ்சே (1)

வர கண்டு நாணாதே வல்லையால் நெஞ்சே
மர கண்ணோ மண் ஆள்வார் கண் என்று இரக்கண்டாய் – முத்தொள்:39/1,2

மேல்


நெடிது (1)

நில்லாய் இரவே நெடிது என்பர் நல்ல – முத்தொள்:86/2

மேல்


நெடியான் (1)

செம் கண் நெடியான் மேல் தேர் விசையன் ஏற்றிய பூ – முத்தொள்:91/1

மேல்


நெடு (5)

மல்லல் நெடு மதில் வாங்கு வில் பூட்டு-மின் – முத்தொள்:17/2
நாம நெடு வேல் நலங்கிள்ளி சோணாட்டு – முத்தொள்:41/1
நெடு வீதி நேர்பட்ட-போது – முத்தொள்:42/4
புலாஅல் நெடு நல் வேல் மாறன் உலாஅம்-கால் – முத்தொள்:73/2
நெடு மாட கூடல் அகம் – முத்தொள்:89/4

மேல்


நெடும் (3)

நெடும் கடை நின்றது-கொல் தோழி நெடும் சின வேல் – முத்தொள்:7/2
நெடும் கடை நின்றது-கொல் தோழி நெடும் சின வேல் – முத்தொள்:7/2
காமர் நெடும் குடை காவலன் ஆணையால் – முத்தொள்:97/2

மேல்


நெய்யாக (1)

முடி தலை வெள் ஓட்டு மூளை நெய்யாக
தடித்த குடர் திரியா மாட்டி எடுத்தெடுத்து – முத்தொள்:51/1,2

மேல்


நெருநல் (1)

நின்றீ-மின் மன்னீர் நெருநல் திறை கொணர்ந்து – முத்தொள்:47/1

மேல்


நெருப்பு (1)

நீர் மேல் எழுந்த நெருப்பு – முத்தொள்:28/4

மேல்


நெறி (1)

செல்லு நெறி எலாம் சேரலர் கோ கோதைக்கு – முத்தொள்:10/3

மேல்