நி – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

நித்திலம் (1)

இப்பி ஈன்றிட்ட எறி கதிர் நித்திலம்
கொற்கையே அல்ல படுவது கொற்கை – முத்தொள்:68/1,2

மேல்


நித்திலமும் (1)

நீர் படுப வெண் சங்கும் நித்திலமும் சாரல் – முத்தொள்:87/2

மேல்


நிமிர் (1)

நேமி நிமிர் தோள் நிலவு தார் தென்னவன் – முத்தொள்:97/1

மேல்


நிமிர்ந்த (1)

காற்றின் நிமிர்ந்த செலவிற்றாய் கூற்றும் – முத்தொள்:101/2

மேல்


நிமிர்ந்து (1)

புரைசை அற நிமிர்ந்து பொங்கா அரசர் தம் – முத்தொள்:95/2

மேல்


நிரை (4)

நிரை பொரு வேல் மாந்தை கோவே நிரை வளையார் – முத்தொள்:5/2
நிரை பொரு வேல் மாந்தை கோவே நிரை வளையார் – முத்தொள்:5/2
நின்று இலங்கு வென்றி நிரை கதிர் வேல் மாறனை – முத்தொள்:90/3
நிரை கதிர் வேல் மாறனை நேர்நின்றார் யானை – முத்தொள்:95/1

மேல்


நில்லாய் (1)

நில்லாய் இரவே நெடிது என்பர் நல்ல – முத்தொள்:86/2

மேல்


நிலத்தது (1)

உகு வாய் நிலத்தது உயர் மணல் மேல் ஏறி – முத்தொள்:81/1

மேல்


நிலம் (1)

நாண் நீர்மை இன்றி நடத்தியால் நீள் நிலம்
கண் தன்மை கொண்டு அலரும் காவிரி நீர் நாட்டு – முத்தொள்:37/2,3

மேல்


நிலவிய (1)

கலவி களி மயங்கி காணேன் நிலவிய சீர் – முத்தொள்:31/2

மேல்


நிலவு (1)

நேமி நிமிர் தோள் நிலவு தார் தென்னவன் – முத்தொள்:97/1

மேல்


நிலையே (1)

ஓராற்றால் என் கண் இமைபொருந்த அ நிலையே
கூர் ஆர் வேல் மாறன் என் கை பற்ற வாரா – முத்தொள்:64/1,2

மேல்


நிழலும் (1)

நீரும் நிழலும் போல் நீண்ட அருள் உடைய – முத்தொள்:13/1

மேல்


நிழற்றுமே (1)

முற்று நீர் வையம் முழுதும் நிழற்றுமே
கொற்ற போர் கிள்ளி குடை – முத்தொள்:45/3,4

மேல்


நிற்பன் (1)

புலவி புறக்கொடுப்பன் புல்லியின் நாண் நிற்பன்
கலவி களி மயங்கி காணேன் நிலவிய சீர் – முத்தொள்:31/1,2

மேல்


நிறம் (1)

கொய் தளிர் அன்ன நிறம் – முத்தொள்:56/4

மேல்


நிறீஇ (1)

தொழில் தேற்றா பாலகனை முன் நிறீஇ பின் நின்று – முத்தொள்:108/1

மேல்


நிறை (2)

நெஞ்சம் நிறை அழித்த கள்வன் என்று அம்_சொலாய் – முத்தொள்:10/2
பறை நிறை கொல் யானை பஞ்சவர்க்கு பாங்காய் – முத்தொள்:106/1

மேல்


நிறைமதி (1)

நிறைமதி போல் யானை மேல் நீல தார் மாறன் – முத்தொள்:94/1

மேல்


நின் (3)

நீள் நீல தார் வளவன் நின் மேலான் ஆகவும் – முத்தொள்:37/1
நின் கால் மேல் வைப்பன் என் கை இரண்டும் நன்பால் – முத்தொள்:38/2
பைய நடக்கவும் தேற்றாய் ஆல் நின் பெண்மை – முத்தொள்:73/3

மேல்


நின்ற (1)

நீர்நிலை நின்ற தவம்-கொலோ கூர் நுனை வேல் – முத்தொள்:65/2

மேல்


நின்றது-கொல் (1)

நெடும் கடை நின்றது-கொல் தோழி நெடும் சின வேல் – முத்தொள்:7/2

மேல்


நின்றதே (2)

பொல்லாமை நாணி புறங்கடை நின்றதே
கல் ஆர் தோள் கிள்ளி களிறு – முத்தொள்:48/3,4
ஏ மான் பிணை போல நின்றதே கூடலார் – முத்தொள்:60/3

மேல்


நின்றன (1)

வரி வளை நின்றன வையையார் கோமான் – முத்தொள்:80/3

மேல்


நின்றார் (1)

முறையோ என நின்றார் மொய்த்து – முத்தொள்:94/4

மேல்


நின்றான் (1)

கொடி தலை தார் தென்னவன் தோற்றான் போல் நின்றான்
மடித்த வாய் சுட்டிய கையால் பிடித்த வேல் – முத்தொள்:107/1,2

மேல்


நின்றீ-மின் (1)

நின்றீ-மின் மன்னீர் நெருநல் திறை கொணர்ந்து – முத்தொள்:47/1

மேல்


நின்று (5)

நல் நாகம் நின்று அலரும் நல் நாடன் என் ஆகம் – முத்தொள்:6/2
நாணா-கால் பெண்மை நலன் அழியும் முன் நின்று
காணா-கால் கை வளையும் சோரும் ஆல் காணேன் நான் – முத்தொள்:78/1,2
நின்று இலங்கு வென்றி நிரை கதிர் வேல் மாறனை – முத்தொள்:90/3
சேட்கு அணித்தாய் நின்று அழைக்கும் செம்மற்றே தென்னவன் – முத்தொள்:103/3
தொழில் தேற்றா பாலகனை முன் நிறீஇ பின் நின்று
அழல் இலை வேல் காய்த்தினார் பெண்டிர் கழல் அடைந்து – முத்தொள்:108/1,2

மேல்


நின்னை (1)

பிடியே யான் நின்னை இரப்பல் கடி கமழ் தார் – முத்தொள்:72/2

மேல்