நா – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

நாகம் (1)

நல் நாகம் நின்று அலரும் நல் நாடன் என் ஆகம் – முத்தொள்:6/2

மேல்


நாட்டு (2)

பாளையில் தேன் தொடுக்கும் பாய் புனல் நீர் நாட்டு
காளையை கண்படையுள் பெற்று – முத்தொள்:30/3,4
கண் தன்மை கொண்டு அலரும் காவிரி நீர் நாட்டு
பெண் தன்மை இல்லை பிடி – முத்தொள்:37/3,4

மேல்


நாடற்கு (2)

கரை உரிஞ்சி மீன் பிறழும் காவிரி நீர் நாடற்கு
உரையாயோ யான் உற்ற நோய் – முத்தொள்:38/3,4
வாள் உழுவை வெல் கொடியான் வண் புனல் நீர் நாடற்கு என் – முத்தொள்:39/3

மேல்


நாடன் (2)

நல் நாகம் நின்று அலரும் நல் நாடன் என் ஆகம் – முத்தொள்:6/2
மன்னன் புனல் நாடன் வௌவினான் என்னே – முத்தொள்:34/2

மேல்


நாடு (8)

நச்சு இலை வேல் கோ கோதை நாடு – முத்தொள்:14/4
செம் கண் சிவப்பித்தார் நாடு – முத்தொள்:22/4
நகை இலை வேல் காய்த்தினார் நாடு – முத்தொள்:23/4
நல் யானை கோ கிள்ளி நாடு – முத்தொள்:43/4
நாமம் பாராட்டாதார் நாடு – முத்தொள்:52/4
நாடு அறி கௌவை தரும் – முத்தொள்:83/4
நகை முத்த வெண்குடையான் நாடு – முத்தொள்:88/4
விடுமாற்றம் கொள்ளாதார் நாடு – முத்தொள்:105/4

மேல்


நாண் (3)

நாண் ஒருபால் வாங்க நலன் ஒருபால் உள் நெகிழ்ப்ப – முத்தொள்:29/1
புலவி புறக்கொடுப்பன் புல்லியின் நாண் நிற்பன் – முத்தொள்:31/1
நாண் நீர்மை இன்றி நடத்தியால் நீள் நிலம் – முத்தொள்:37/2

மேல்


நாணா-கால் (1)

நாணா-கால் பெண்மை நலன் அழியும் முன் நின்று – முத்தொள்:78/1

மேல்


நாணாதே (1)

வர கண்டு நாணாதே வல்லையால் நெஞ்சே – முத்தொள்:39/1

மேல்


நாணி (4)

காணிய சென்று கதவு அடைத்தேன் நாணி
பெரும் செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல – முத்தொள்:8/2,3
பொல்லாமை நாணி புறங்கடை நின்றதே – முத்தொள்:48/3
நகுவாரை நாணி மறையா இகுகரையின் – முத்தொள்:60/2
பிடி முன் பழக அது அழில் நாணி முடி உடை – முத்தொள்:102/2

மேல்


நாணும் (3)

நனவினுள் முன் விலக்கும் நாணும் இன வங்கம் – முத்தொள்:32/2
என் நெஞ்சும் நாணும் நலனும் இவை எல்லாம் – முத்தொள்:34/1
நனவில் எதிர்விழிக்க நாணும் புனை_இழாய் – முத்தொள்:62/2

மேல்


நாணோடு (1)

நாணோடு உடன்பிறந்த நான் – முத்தொள்:79/4

மேல்


நாம (1)

நாம நெடு வேல் நலங்கிள்ளி சோணாட்டு – முத்தொள்:41/1

மேல்


நாமம் (1)

நாமம் பாராட்டாதார் நாடு – முத்தொள்:52/4

மேல்


நாராய் (1)

செம் கால் மட நாராய் தென் உறந்தை சேறியேல் – முத்தொள்:38/1

மேல்


நால் (3)

நரி பரந்து நால் திசையும் கூடி எரி பரந்த – முத்தொள்:22/2
நால் திசையும் ஓடி நரி கதிப்ப ஆற்ற – முத்தொள்:50/2
துடி அடி தோல் செவி தூங்கு கை நால் வாய் – முத்தொள்:72/1

மேல்


நாவலர் (1)

அந்தணர் ஆவொடு பொன் பெற்றார் நாவலர்
மந்தரம் போல் மாண்ட களிறு ஊர்ந்தார் எந்தை – முத்தொள்:46/1,2

மேல்


நாவலோஓ (1)

நாவலோஓ என்று இசைக்கும் நாள் ஓதை காவலன்-தன் – முத்தொள்:43/2

மேல்


நாவாய் (1)

பாய் தோய்ந்த நாவாய் போல் தோன்றுமே எம் கோமான் – முத்தொள்:20/3

மேல்


நாள் (5)

கங்குல் ஒரு நாள் கனவினுள் தைவந்தான் – முத்தொள்:6/3
நாவலோஓ என்று இசைக்கும் நாள் ஓதை காவலன்-தன் – முத்தொள்:43/2
இலங்கு இலை வேல் கிள்ளி இரேவதி நாள் என்னோ – முத்தொள்:46/3
அறிவார் ஆர் யாம் ஒரு நாள் பெண்டிரேம் ஆக – முத்தொள்:66/1
கூட ஒரு நாள் பெற – முத்தொள்:66/4

மேல்


நாள்மீன் (1)

மன்னிய நாள்மீன் மதி கனலி என்று இவற்றை – முத்தொள்:1/1

மேல்


நாளும் (1)

மடங்கா மயில்_ஊர்தி_மைந்தனை நாளும்
கடம்பம் பூ கொண்டு ஏத்தி அற்றால் தொடங்கு அமருள் – முத்தொள்:90/1,2

மேல்


நாறி (1)

பெரும் புலவும் செம் சாந்தும் நாறி சுரும்பொடு – முத்தொள்:18/2

மேல்


நான் (2)

காணா-கால் கை வளையும் சோரும் ஆல் காணேன் நான்
வண்டு எவ்வம் தீர் தார் வயமான் வழுதியை – முத்தொள்:78/2,3
நாணோடு உடன்பிறந்த நான் – முத்தொள்:79/4

மேல்