தெ – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

தெங்கின் (1)

கூடல் இழந்தேன் கொடி அன்னாய் நீள் தெங்கின்
பாளையில் தேன் தொடுக்கும் பாய் புனல் நீர் நாட்டு – முத்தொள்:30/2,3

மேல்


தெங்கு (3)

புன்னாக சோலை புனல் தெங்கு சூழ் மாந்தை – முத்தொள்:6/1
தெங்கு உண்ட தேரை படுவழி பட்டேன் யான் – முத்தொள்:27/3
கோள் தெங்கு சூழ் கூடல் கோமானை கூட என – முத்தொள்:55/1

மேல்


தெரியல் (1)

புன வட்ட பூம் தெரியல் பொன் தேர் வழுதி – முத்தொள்:75/3

மேல்


தெள் (1)

தெள் நீர் நறு மலர் தார் சென்னி இள வளவன் – முத்தொள்:35/1

மேல்


தெளிக்கும் (1)

இலங்கு அருவி நீரால் தெளிக்கும் நலம் கிளர் வேல் – முத்தொள்:109/2

மேல்


தெளியாதே (1)

அளியான் அளிப்பானே போன்றான் தெளியாதே
செங்காந்தள் மென் விரலால் சேக்கை தடவந்தேன் – முத்தொள்:61/2,3

மேல்


தென் (2)

செம் கால் மட நாராய் தென் உறந்தை சேறியேல் – முத்தொள்:38/1
திரை வரவு பார்த்திருக்கும் தென் கொற்கை கோமான் – முத்தொள்:81/3

மேல்


தென்னவர் (1)

தென்னவர் கோமான் களிறு – முத்தொள்:102/4

மேல்


தென்னவன் (4)

நேமி நிமிர் தோள் நிலவு தார் தென்னவன்
காமர் நெடும் குடை காவலன் ஆணையால் – முத்தொள்:97/1,2
உருவ தார் தென்னவன் ஓங்கு எழில் வேழத்து – முத்தொள்:100/1
சேட்கு அணித்தாய் நின்று அழைக்கும் செம்மற்றே தென்னவன்
வாட்கு அணித்தாய் வீழ்ந்தார் களம் – முத்தொள்:103/3,4
கொடி தலை தார் தென்னவன் தோற்றான் போல் நின்றான் – முத்தொள்:107/1

மேல்


தென்னவனே (1)

தென்னவனே தேர் வேந்தே தேறு நீர் கூடலார் – முத்தொள்:92/3

மேல்


தென்னன் (7)

களி யானை தென்னன் இளங்கோ என்று எள்ளி – முத்தொள்:56/1
களி யானை தென்னன் கனவில் வந்து என்னை – முத்தொள்:61/1
கோட்டு ஆனை தென்னன் குளிர் சாந்து அணி அகலம் – முத்தொள்:77/3
திகழ் முத்தம் போல் தோன்றும் செம்மற்றே தென்னன்
நகை முத்த வெண்குடையான் நாடு – முத்தொள்:88/3,4
தடுமாறல் ஆகிய தன்மைத்தே தென்னன்
நெடு மாட கூடல் அகம் – முத்தொள்:89/3,4
தேர் வேந்தன் தென்னன் திரு உத்திராடநாள் – முத்தொள்:93/3
படு பேய்க்கு பாட்டு அயரும் பண்பிற்றே தென்னன்
விடுமாற்றம் கொள்ளாதார் நாடு – முத்தொள்:105/3,4

மேல்