தொ – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

தொட்டார்க்கு (1)

நல் நலம் காண கதவம் துளை தொட்டார்க்கு
என்னை-கொல் கைம்மாறு இனி – முத்தொள்:53/3,4

மேல்


தொடங்கு (1)

கடம்பம் பூ கொண்டு ஏத்தி அற்றால் தொடங்கு அமருள் – முத்தொள்:90/2

மேல்


தொடர்பு (1)

படர்தந்தான் பைம்_தொடியார் காண தொடர்பு உடைய – முத்தொள்:26/2

மேல்


தொடாஅன் (1)

துன்னரும் போர் கோதை தொடாஅன் செருக்கின – முத்தொள்:109/3

மேல்


தொடி (1)

முடி பாடி முத்து ஆரம் பாடி தொடி உலக்கை – முத்தொள்:69/2

மேல்


தொடியார் (1)

படர்தந்தான் பைம்_தொடியார் காண தொடர்பு உடைய – முத்தொள்:26/2

மேல்


தொடியாள் (1)

உண்டாயிருக்க அ ஒண்_தொடியாள் மற்று அவனை – முத்தொள்:9/3

மேல்


தொடியை (1)

பூம்_தொடியை புல்லிய ஞான்று உண்டு ஆல் யாங்கு ஒளித்தாய் – முத்தொள்:92/2

மேல்


தொடுக்கும் (1)

பாளையில் தேன் தொடுக்கும் பாய் புனல் நீர் நாட்டு – முத்தொள்:30/3

மேல்


தொலைந்து (1)

விலங்கி யான் வேண்டா எனினும் நலன் தொலைந்து
பீர் மேல் கொளலுற்ற பேதையர்க்கு என் வாய்ச்சொல் – முத்தொள்:28/2,3

மேல்


தொழ (1)

கதவம் கொண்டு யாமும் தொழ – முத்தொள்:74/4

மேல்


தொழில் (1)

தொழில் தேற்றா பாலகனை முன் நிறீஇ பின் நின்று – முத்தொள்:108/1

மேல்


தொழுது (1)

தோள் அழுவம் தோன்ற தொழுது – முத்தொள்:39/4

மேல்


தொழுதேனை (1)

தொழுதேனை தோள் நலமும் கொண்டான் இமிழ் திரை – முத்தொள்:57/2

மேல்