பீ-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


பீடத்து (8)

பாடக செம் பதும மலர் பாவையர் பல்லாண்டு இசைப்ப பைம் பொன் பீடத்து
ஏடு துற்ற வடிவேலோன் தனை இருத்தி கடன்முறைகள் யாவும் நேர்ந்து – பால:5 59/2,3
பல் நகமும் நகு வெள்ளி பனிவரையும் பாற்கடலும் பதும பீடத்து
அ நகரும் கற்பக நாட்டு அணி நகரும் மணி மாட அயோத்தி என்னும் – பால:6 8/2,3
வீங்கு இரும் காதல் காட்டி விரி முகம் கமல பீடத்து
ஓங்கிய மகுடம் சூடி உவகை வீற்றிருப்ப காணான் – அயோ:3 104/3,4
பழிப்பு அறு நிலைமை ஆண்மை பகர்வது என் பதும பீடத்து
உழி பெருந்தகைமை சான்ற அந்தணன் உயிர்த்த எல்லாம் – ஆரண்:15 53/1,2
அருக்கர் வெயில் பறித்து அமைத்த அரிமுகத்தின் மணி பீடத்து அமர்ந்தான்-மன்னோ – ஆரண்-மிகை:10 1/4
பொன் அரி சுமந்த பீடத்து இமையவர் போற்றி செய்ய – யுத்1:14 27/3
ஆண்டு ஒரு செம்பொன் பீடத்து இருந்து தன் வருத்தம் ஆறி – யுத்2:16 6/1
இட்டதோர் இரண பீடத்து அமரரை இருக்கை நின்றும் – யுத்2:17 8/1

TOP


பீடம் (3)

துன்னு பொன் பீடம் மேல் பொலிந்து தோன்றினான் – பால:5 13/4
தாங்கிய அமளி-மாட்டு ஓர் தவிசு உடை பீடம் சார்ந்தான் – யுத்2:16 12/4
ஆணிப்பொன் சுற்றி முற்றி அழகுற சமைத்த பீடம்
ஏண் உற்ற பளிக்கு மாடத்து இட்டனர் அதனின் மீது – யுத்4-மிகை:42 25/2,3

TOP


பீடம்-தன்-மேல் (1)

பொன் மலர் பீடம்-தன்-மேல் நான்முகன் பொலிய தோன்றும் – யுத்3:24 49/3

TOP


பீடமும் (2)

பாழி துற்று அரி பற்றிய பீடமும்
தாழ்வு இல் கொற்றத்து அமரர்கள் தந்தனர் – யுத்4:39 4/3,4
துய்ய நல் மணி பீடமும் தோற்றுவித்து – யுத்4-மிகை:39 10/2

TOP


பீடமே (1)

பாய்ந்த பொன் கால் உடை பளிக்கு பீடமே – பால:7 14/4

TOP


பீடிப்புறு (1)

பீடிப்புறு புண் உடலோடு பெயர்ந்தார் – யுத்2:18 251/3

TOP


பீடு (3)

பின் செய்தோம் சில அவை இனி பீடு இன்று பெறுமோ – யுத்1:5 71/2
பேர் அளப்பு இலர் பட்டனர் பீடு இலார் – யுத்3-மிகை:31 37/4
பீடு உள குன்றம் போலும் பெரும் திசை எல்லை யானை – யுத்4:37 211/2

TOP


பீடை (1)

பெருக்கிய உடலர் பொய்ம்மை பிதற்றுவோர் பீடை செய்வோர் – யுத்4-மிகை:41 66/4

TOP


பீடையால் (1)

பெண் உடை தன்மையன் ஆய பீடையால்
புண் உடை செவியொடு மூக்கும் பொன்றலால் – யுத்2:16 292/2,3

TOP


பீரிடும் (1)

பீரிடும் உருவர் தெற்றி பிணங்கிடு தாளர் பேழ் வாய் – சுந்:6 55/2

TOP


பீலி (4)

நாணின தொகு பீலி கோலின நடம் ஆடல் – அயோ:9 4/2
அகில் இடு தூபம் அன்ன ஆய் மயில் பீலி ஆர்த்த – அயோ:13 58/1
பொங்கு ஒலி வரி கண் பீலி பேர் ஒலி வேயின் பொம்மல் – யுத்3:22 7/2
ஆனையின் கோடும் பீலி தழைகளும் ஆரத்தோடு – யுத்3:22 142/1

TOP


பீலியின் (1)

மயிலுடை பீலியின் விதானம் மேல் வகுத்து – அயோ:10 47/1

TOP


பீலியும் (1)

மணியும் பொன்னும் மயில் தழை பீலியும்
அணியும் ஆனை வெண்கோடும் அகிலும் தண் – பால:1 7/1,2

TOP


பீழை (8)

பேரா இடர்ப்பட்டு அயலார் உறு பீழை கண்டும் – அயோ:4 143/3
பிரியவும் தான் பிரியாதே இனிது இருக்கும் உடல் பொறை ஆம் பீழை பாராது – ஆரண்:4 27/3
பிரிவித்தனென் என்பது ஓர் பீழை பொறாது – ஆரண்:14 65/3
பெண்பால் ஒரு நீ பசி பீழை ஒறுக்க நொந்தாய் – சுந்:1 56/1
பிறிவு எனும் பீழை தாங்கள் பிறந்த நாள் தொடங்கி என்றும் – யுத்2:17 77/1
பெண் தான் உற்ற பெரும் பீழை உலகுக்கு எல்லாம் பெரிது அன்றோ – யுத்3:23 4/4
பேதாய் பிரிவு துயர் பீழை பிணித்தது என்றான் – யுத்4:41 31/4
தன் நெடும் பீழை நீங்க தழுவினாள் தளிர் கை நீட்டி – யுத்4:42 19/3

TOP


பீழையது (1)

பிறக்கும் என்பது ஓர் பீழையது ஆதலால் – பால:16 35/2

TOP


பீழையர் (1)

பிதுங்கல் ஆம் உடலினர் முடிவு_இல் பீழையர்
பதங்கள் தீ பருகிட பதைக்கின்றார் பல – கிட்:14 23/2,3

TOP


பீழையால் (1)

பிழை-கொல் நன்மை-கொல் பெறுவது என்று ஐயுறு பீழையால் பெரும் தென்றல் – சுந்:2 196/2

TOP


பீறி (2)

ஆளையும் சீறி பீறி அணி மலர் கமுகில் பாய்ந்த – பால-மிகை:2 1/3
பிச்சரின் பிதற்றி அல்குல் பூம் துகில் கலாபம் பீறி
குச்சரி திறத்தின் ஓசை களம் கொள குழு கொண்டு ஈண்டி – சுந்:2 187/2,3

TOP


பீறிற்றாம் (1)

பீறிற்றாம் அண்டம் என்பது ஓர் ஆகுலம் பிறக்க – யுத்4:35 33/1

TOP


பீறின (1)

பீறின நெடும் திசை பிளந்தது அண்டமே – சுந்:11 3/4

TOP


பீன (2)

பீன தனத்தவள் பேறு இலள் என்பார் – பால:13 31/4
பீன வெம் முலையின் இட்ட பெரு விலை ஆரம் ஆட – பால:16 20/2

TOP