ந-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு(நத் முதல் நரை வரை)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நத்தின் 1
நத்து 2
நதம் 1
நதி 32
நதி-தோறும் 1
நதி-அதனினோடும் 1
நதிக்கு 2
நதிகள் 3
நதிகளும் 5
நதியகத்து 1
நதியாய் 1
நதியின் 7
நதியினும் 1
நதியும் 1
நதியை 2
நந்த 1
நந்தல் 7
நந்தல்_இல் 5
நந்தவனங்களில் 1
நந்தவானத்து 2
நந்தன 3
நந்தனங்கள் 1
நந்தனவனங்கள் 1
நந்தனவனத்துள் 1
நந்தனவனம் 1
நந்தா 5
நந்தாத 1
நந்தாது 1
நந்தாமல் 1
நந்தி 2
நந்திதான் 1
நந்திய 1
நந்தியம் 2
நந்தியம்பதி 1
நந்தியம்பதியில் 1
நந்தியம்பதியின் 1
நந்தியம்பதியை 2
நந்தியின் 1
நந்தினர் 3
நந்தினான் 1
நந்து 4
நந்துதல் 1
நந்தும் 2
நம் 117
நம்-கண் 1
நம்-தம் 4
நம்-தம்-பால் 1
நம்-தமக்கு 2
நம்-பால் 9
நம்-பொருட்டு 1
நம்-மேல் 2
நம்-வயின் 5
நம்ப 7
நம்பற்கு 1
நம்பன் 3
நம்பனும் 1
நம்பனே 1
நம்பனை 2
நம்பி 28
நம்பி-தன் 3
நம்பிக்கு 1
நம்பிமீர் 2
நம்பியர் 1
நம்பியரில் 1
நம்பியும் 6
நம்பியே 1
நம்பியை 10
நம்பியோ 1
நம்பீ 1
நம்பு 1
நம்மனோர்க்கு 1
நம்மால் 3
நம்மிடை 1
நம்மில் 1
நம்மின் 2
நம்முடை 1
நம்முழை 1
நம்முள் 1
நம்முன் 1
நம்மை 19
நம்மோடு 1
நம 4
நமக்கு 17
நமக்கும் 1
நமது 3
நமர் 4
நமர்கட்கு 1
நமரங்காள் 7
நமன் 5
நமன்-தன் 1
நமன்-தனொடு 1
நமன்-தானும் 1
நமனாய் 1
நமனார் 5
நமனுக்கு 1
நமனுக்கும் 1
நமனுடை 1
நமனும் 4
நமனே 1
நமனை 2
நமனையும் 1
நமித்திரர் 1
நமை 6
நமோ 2
நய 3
நயக்க 1
நயக்கமாட்டேன் 1
நயக்கல்-பாலதோ 2
நயக்கல்-பாலார் 1
நயக்கிலாய் 1
நயக்கும் 2
நயத்தால் 2
நயத்தி 1
நயத்தியோ 1
நயத்தினை 1
நயந்த 2
நயந்தது 1
நயந்தனன் 2
நயந்தார் 1
நயந்தாள் 2
நயந்தான் 5
நயந்திலன் 1
நயந்து 14
நயந்துள 1
நயந்தோ 1
நயந்தோர் 1
நயப்பது 1
நயப்பு 1
நயப்புறு 1
நயப்புறுதல் 1
நயம் 10
நயம்_இல் 1
நயமொழி 1
நயவான் 1
நயவேல் 1
நயன் 3
நயன 4
நயனங்கள் 9
நயனங்களை 1
நயனத்தார்-மாட்டு 1
நயனத்தார்களும் 1
நயனத்தாள் 2
நயனத்தான் 2
நயனத்தான்-பால் 1
நயனத்திடை 1
நயனத்தின் 1
நயனத்து 2
நயனம் 21
நயனமும் 3
நயனியர் 1
நரக 1
நரகத்தார் 1
நரகத்திடை 1
நரகத்து 3
நரகதர்க்கு 1
நரகதில் 1
நரகம் 10
நரகமும் 4
நரகன் 1
நரகிடை 3
நரகில் 5
நரகின் 4
நரகினர் 1
நரகினின் 1
நரகினை 1
நரகு 6
நரகையும் 1
நரகோ 1
நரசிங்கம் 3
நரசிங்கமும் 1
நரந்த 2
நரந்தம் 2
நரபாலரை 1
நரம்பிடை 1
நரம்பின் 5
நரம்பினால் 1
நரம்பினும் 2
நரம்பினோடு 1
நரம்பு 11
நரம்பும் 1
நரம்பையும் 1
நரம்பொடு 1
நரர் 6
நரர்க்கும் 1
நரரும் 1
நரரொடு 1
நரல் 1
நரலை 1
நரலையும் 1
நரன் 3
நரன்-கொலாம் 1
நரன்-தன்னோடு 1
நராதிபர் 1
நராந்தகன் 2
நராபதி 1
நராயணர் 1
நரி 6
நரிகள் 3
நரிகளும் 2
நரியொடும் 1
நருக்கி 1
நருமதை 4
நரை 3
நரை-அதுவாய் 1
நரைத்த 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


நத்தின் (1)

அம்சு வள் நத்தின் முத்து ஒளிர் ஆரத்து அணி கொண்டாள் – சுந்:2 77/4

TOP


நத்து (2)

நத்து ஒலி முரசு ஒலி நடுக்கலால் தலை – யுத்2:19 38/3
நத்து உலாய கை நாரணன் நான்முகன் – யுத்4-மிகை:41 109/3

TOP


நதம் (1)

நதம் உலாவு நளி நீர்-வயின் அழுந்த நவை தீர் – ஆரண்:1 44/2

TOP


நதி (32)

நல் மலை அல்லன நதி தரு நிதியம் – பால:2 47/3
கை வழி நிதி எனும் நதி கலைமறையோர் – பால:5 119/3
எம் முனாள் நங்கை இந்த இரு நதி ஆயினாள் என்று – பால:8 5/1
கங்கை என்னும் அ கரை பொரு திரு நதி கண்டார் – பால:9 5/4
சுரர் தொழுது இறைஞ்சற்கு ஒத்த தூ நதி யாவது என்றே – பால-மிகை:8 2/1
மீது உற படாலுற்றாள் விழு நதி வடிவம் ஆகி – பால-மிகை:8 10/2
மன் பெரும் புவி-அதனில் வான் நதி கடிது அணுகி – பால-மிகை:9 44/3
மாக மா நதி புவியிடை நடக்கின் மற்று அவள்-தன் – பால-மிகை:9 45/1
பெருகு நல் தவம் புரிக என வர நதி பெயர்ந்தாள் – பால-மிகை:9 47/4
வந்து தோன்றினள் வர நதி மலை_மகள்_கொழுநன் – பால-மிகை:9 51/3
புல் நுனி தரு பனி என வர நதி புனிதன் – பால-மிகை:9 52/1
மன்னன் நிற்றலும் வருந்தல் நம் சடையள் வான் நதி இன்று – பால-மிகை:9 52/3
மண்தலத்து வந்து அடைந்தது இ மா நதி மைந்த – பால-மிகை:9 56/4
கார் மழை பொழியவும் கழனி பாய் நதி
வார் புனல் பெருகவும் மறுக்கின்றார்கள் யார் – அயோ:1 81/3,4
பொன் உந்திய நதி கண்டு உளம் மகிழ்தந்தனர் போனார் – அயோ:7 7/4
கங்கை என்னும் கடவுள் திரு நதி
தங்கி வைகும் தபோதனர் யாவரும் – அயோ:7 10/1,2
புண்ணிய நதி ஆடி புனிதரை வழிபாடு உற்று – அயோ:8 30/3
கன்று நீர் நுகர் காளிந்தி எனும் நதி கண்டார் – அயோ:9 34/4
நீங்கினான் அந்த நெடு நதி இரு கையால் நீந்தி – அயோ:9 36/4
பேறு உள பெரு நதி நீங்கி பெட்பொடும் – அயோ-மிகை:13 2/3
நடந்தனர் காவதம் பலவும் நல் நதி
கிடந்தன நின்றன கிரிகள் கேண்மையின் – ஆரண்:4 1/1,2
ஈர்த்து எழுந்தன குருதியின் பெரு நதி இராமன் – ஆரண்:8 13/2
மெய்யின் மேற்கோடு கிழக்கு உறு பெரு நதி விரவும் – ஆரண்:15 37/2
கூடு நல் நதி தடம்-தொறும் குடைந்தன படிவுற்று – கிட்:10 39/3
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திரு நதி பின்பு ஒழிய நாக – கிட்:13 31/3
அ நதி முழுதும் நாடி ஆய் வளை மயிலை யாண்டும் – கிட்:15 30/1
பின்றா நின்றனர் உதிர பெரு நதி பெருகாநின்றன அருகு ஆரும் – சுந்:10 31/2
நீத்து ஆய் ஓடின உதிர பெரு நதி நீராக சிலை பாராக – சுந்:10 38/1
நதி காய் நெடு மானமும் நாணும் உறா – யுத்2:18 7/1
சென்று கங்கையின் திரு நதி தென் கரை சேர்ந்தான் – யுத்4-மிகை:41 137/4
தானமாகிய தீர்த்தம் ஆம் திரு நதி சார்ந்தார் – யுத்4-மிகை:41 139/4
ஏழ் கடல்-அதனில் தோயம் இரு நதி பிறவில் தோயம் – யுத்4-மிகை:42 16/1

TOP


நதி-தோறும் (1)

நகு மலர் நிறை மாலை கொம்புகள் நதி-தோறும்
துகில் புரை திரை நீரில் தோய்வன துறை ஆடும் – அயோ:9 11/2,3

TOP


நதி-அதனினோடும் (1)

மேல் முறை அமரர் போற்றும் விழு நதி-அதனினோடும்
ஆன கோமதி வந்து எய்தும் அரவம் அது என்ன அப்பால் – பால-மிகை:8 1/2,3

TOP


நதிக்கு (2)

நதிக்கு வந்து அவர் எய்தலும் அருணன் தன் நயன – பால:9 2/1
இந்த மா நதிக்கு உற்று உள தகைமை யாவும் – பால-மிகை:9 29/1

TOP


நதிகள் (3)

குளனொடு நதிகள் தம் குறைகள் தீரவே – பால:5 43/4
நறையும் அல்லது நளிர் புனல் பெருகலா நதிகள் – பால:9 10/4
பொங்கு நீர் நதிகள் யாவும் படிந்து அலால் புன்மை போகா – யுத்4:41 22/2

TOP


நதிகளும் (5)

பெரும் புனல் நதிகளும் குளனும் பெட்பு உற – பால:5 44/1
பொய்கையும் நதிகளும் பொழிலும் ஓதிமம் – பால:5 87/3
பெரும் திரை நதிகளும் வயலும் பெட்பு உறு – அயோ:12 46/1
அலை புனல் நதிகளும் அருவி சாரலும் – ஆரண்:3 2/2
தண் நறும் கானும் குன்றும் நதிகளும் தவிர போனார் – ஆரண்:16 9/1

TOP


நதியகத்து (1)

நின்று அந்த நதியகத்து நிறை தவத்தின் குறை முடித்து – ஆரண்:6 106/3

TOP


நதியாய் (1)

போதுக நதியாய் என்னா பூ_மகன் உலகு புக்கான் – பால-மிகை:8 10/4

TOP


நதியின் (7)

செய்ய நதியின் கரை-வாய் சென்றே மறைய நின்றேன் – அயோ:4 73/4
நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை அற்றே – அயோ:4 129/1
குயின்றன குல மணி நதியின் கூலத்தில் – அயோ:5 9/1
பால் பொத்தின நதியின் கிளர் படி பொத்தின படர் வான் – ஆரண்:7 99/2
சுர நதியின் அயலது வான் தோய் குடுமி சுடர் தொகைய தொழுதோர்க்கு எல்லாம் – கிட்:13 24/3
சேடு உறு தண் புனல் தெய்வ திரு நதியின் இரு கரையும் தெரிதிர்-மாதோ – கிட்:13 29/4
நளில் தீர்த்த நாகபுரம் புக்கு இழிந்த பகழி வழி நதியின் ஓடி – யுத்4:33 24/3

TOP


நதியினும் (1)

நதியினும் குளத்தும் பூவா நளினங்கள் குவளையோடு – பால:17 9/1

TOP


நதியும் (1)

செய்_தவம் உடைமைகள் தெரிதர நதியும்
மை தவழ் பொழில்களும் வாவியும் மருவி – பால:5 125/2,3

TOP


நதியை (2)

போன பின் பவங்கள் தீர்க்கும் புனித மா நதியை உற்றார் – பால-மிகை:8 1/4
நருமதை ஆம் எனும் நதியை நீங்கினார் – கிட்:14 10/4

TOP


நந்த (1)

நந்த வானத்து நாள் மலர் நாறின – சுந்:6 35/2

TOP


நந்தல் (7)

நந்தல் இல் விளக்கம் அன்ன நங்கையும் நடக்கலுற்றாள் – பால:22 23/4
நந்தல்_இல் நகருளார் நாட்டுளார்கள் தம் – அயோ:4 182/2
நந்தல்_இல் கேகயன் பயந்த நங்கை-தன் – அயோ:5 5/2
நந்தல் இல் அறம் நந்தினர் ஆம் என – அயோ:14 8/1
நயம் கிளர் நான நெய் அளாவி நந்தல்_இல் – ஆரண்:10 18/1
நந்தல்_இல் புவி-கண் இடர் பின் களைதல் நன்றால் – சுந்:5 9/4
நந்தல்_இல் தெய்வம் ஆய் நல்கும் நான்மறை – யுத்1:3 65/3

TOP


நந்தல்_இல் (5)

நந்தல்_இல் நகருளார் நாட்டுளார்கள் தம் – அயோ:4 182/2
நந்தல்_இல் கேகயன் பயந்த நங்கை-தன் – அயோ:5 5/2
நயம் கிளர் நான நெய் அளாவி நந்தல்_இல்
வியன் கருப்பூரம் மென் பஞ்சின் மீக்கொளீஇ – ஆரண்:10 18/1,2
நந்தல்_இல் புவி-கண் இடர் பின் களைதல் நன்றால் – சுந்:5 9/4
நந்தல்_இல் தெய்வம் ஆய் நல்கும் நான்மறை – யுத்1:3 65/3

TOP


நந்தவனங்களில் (1)

நந்து நந்தவனங்களில் நாள்_மலர் – அயோ:14 14/1

TOP


நந்தவானத்து (2)

நந்தவானத்து நாள் மலர் நாறின – சுந்:6 35/1
நந்தவானத்து நாயகர் ஓடினர் நடுங்கி – சுந்:7 55/2

TOP


நந்தன (3)

நந்தன வனம் அல நறை விரி புறவம் – பால:2 48/4
நந்தன வனத்து அலர் கொய்து நவ்வி போல் – பால:3 68/1
வானவர்கள் நந்தன வனத்தையும் மடித்த – சுந்:6 11/4

TOP


நந்தனங்கள் (1)

நந்தனங்கள் கலங்கி நடுங்கவே – சுந்:6 26/4

TOP


நந்தனவனங்கள் (1)

மகர வேலையின் வெந்தன நந்தனவனங்கள் – சுந்:13 23/4

TOP


நந்தனவனத்துள் (1)

நந்தனவனத்துள் நின்ற நாயகன் தூதன்-தானும் – சுந்:8 15/1

TOP


நந்தனவனம் (1)

சின்னம் தரும் மலர் சிந்திய செறி நந்தனவனம் நல் – அயோ:7 7/3

TOP


நந்தா (5)

நந்தா விளக்கின் நடுங்குகின்ற நங்கைமார் – அயோ:4 110/2
நந்தா விளக்கு அனைய நாயகனே நானிலத்தோர் – அயோ:14 58/1
நந்தா நாள்_மலர் சிந்தி நண்பொடும் – கிட்:8 11/3
நந்தா விளக்கின் வரும் எம் குல நாதன் வாழும் – சுந்:4 89/2
நந்தா விளக்கை நறும் தார் இளம் கொழுந்தை – யுத்1:3 164/2

TOP


நந்தாத (1)

நந்தாத பெரும் தவ நாடு-அது நீ – ஆரண்:2 16/3

TOP


நந்தாது (1)

நந்தாது ஒலிக்கும் நரலை பெரு வேலை எல்லாம் – பால:16 41/3

TOP


நந்தாமல் (1)

நரை திரை மூப்பு இவை மாற்றி இந்திரனும் நந்தாமல்
குரை கடலை நெடு வரையால் கடைந்து அமுது கொடுத்தானும் – பால:12 6/3,4

TOP


நந்தி (2)

நந்தி அம் பதியிடை நாதன் பாதுகம் – அயோ:14 138/1
நந்தி சாபத்தின் நமை அடும் குரங்கு எனின் நம்-பால் – யுத்1:2 106/1

TOP


நந்திதான் (1)

நாலு தோள் நந்திதான் நவின்ற சாபத்தால் – யுத்1:2 80/2

TOP


நந்திய (1)

மாய நந்திய வாள் முகத்து ஒரு தனி மயன் மகள் உறை மாடம் – சுந்:2 193/4

TOP


நந்தியம் (2)

நந்தியம் பதி இறைவனை நாதனும் அழைத்தே – யுத்4-மிகை:41 112/1
நம்பியும் பரதனோடு நந்தியம் பதியை நண்ணி – யுத்4-மிகை:41 292/1

TOP


நந்தியம்பதி (1)

நந்தியம்பதி இருந்தனன் பரதன் நின் நாமம் – யுத்4-மிகை:41 168/3

TOP


நந்தியம்பதியில் (1)

நம்பியும் வசிட்டன் கூற நந்தியம்பதியில் சென்று – யுத்4-மிகை:41 300/1

TOP


நந்தியம்பதியின் (1)

நந்தியம்பதியின் தலை நாள்-தொறும் – யுத்4:41 46/1

TOP


நந்தியம்பதியை (2)

நம்பியும் பரதனோடு நந்தியம்பதியை நண்ணி – யுத்4:42 1/1
நிருதியின் திசையில் தோன்றும் நந்தியம்பதியை நீங்கி – யுத்4-மிகை:42 1/1

TOP


நந்தியின் (1)

சிங்கல்_இல் சிறு கூதாளி நந்தியின் திரள் பூ சேர்ந்த – கிட்:13 40/1

TOP


நந்தினர் (3)

நந்தினர் நகை ஒளி விளக்கம் நங்கைமார் – அயோ:4 172/3
நந்தல் இல் அறம் நந்தினர் ஆம் என – அயோ:14 8/1
நந்தினர் தம்மொடு நனி நடந்ததோ – யுத்1:2 39/2

TOP


நந்தினான் (1)

இடை உறு திரு என இந்து நந்தினான்
படர் திரை கரும் கடல் பரமன் மார்பிடை – பால:19 67/2,3

TOP


நந்து (4)

பல் நந்து உகு தரளம் தொகு படர் பந்திகள் படு நீர் – அயோ:7 7/1
அன்னம் துயில் வதி தண்டலை அயல் நந்து உளை புளினம் – அயோ:7 7/2
நந்து நந்தவனங்களில் நாள்_மலர் – அயோ:14 14/1
சிந்த வால் நந்து இரிந்த திரை கடல் – சுந்:6 35/4

TOP


நந்துதல் (1)

நந்துதல் இலாது இறைவனாயிட நயந்தோ – யுத்1-மிகை:2 8/2

TOP


நந்தும் (2)

மூக்கில் தாக்குறும் மூரி நந்தும் நேர் – பால:2 57/1
நந்தும் நின் பெரும் செல்வம் மால் அருளினால் நயக்க – பால-மிகை:9 16/3

TOP


நம் (117)

திருவும் அ நகர் உறை செனமும் நம் இடரோடு – பால:5 124/2
வேனில் வேள் இருந்த அ மிதிலை நோக்கி நம்
சேனையும் அரசரும் செல்க முந்து எனா – பால:14 7/2,3
இப்போது நம் அனிகம்-தனை எழுக என்று இனிது இசையா – பால:24 2/2
மன்னன் நிற்றலும் வருந்தல் நம் சடையள் வான் நதி இன்று – பால-மிகை:9 52/3
நம் குல குரவர்கள் நவையின் நீங்கினார் – அயோ:1 16/1
மைந்த நம் குல மரபினில் வந்து அருள் வேந்தர் – அயோ:1 63/1
நாளும் நம் குல நாயகன் நறை விரி கமல – அயோ:1 66/2
தேர் மிசை நம் வாயில் கடிது ஏகுதல் செய்வானோ – அயோ:3 100/2
மெய் திறத்து நம் வேந்தனை நீ என்றான் – அயோ:4 14/4
வையம் முழுதும் துயரால் மறுகும் முனிவனுடன் நம்
ஐயன் வரினும் வருமால் அயரேல் அரசே என்றாள் – அயோ:4 69/3,4
வன் திண் சிலை நம் குரிசில் வருமே வருமே என்றான் – அயோ:4 70/4
மா காதல் இராமன் நம் மன்னவன் வையம் ஈந்தும் – அயோ:4 146/2
போகா உயிர் தாயர் நம் பூம் குழல் சீதை என்றே – அயோ:4 146/3
நஞ்சினும் வலிய நம் நலம் என்றார் சிலர் – அயோ:4 183/4
முழு கலின் வலிய நம் மூரி நெஞ்சினை – அயோ:4 188/1
நம் குலத்து உதித்தவர் நவையின் நீங்கினர் – அயோ:14 41/1
மேய நம் குல தருமம் மேவினேன் – அயோ:14 106/2
செம் வழித்து அன்று நம் செயல் என்று எண்ணினார் – அயோ:14 128/3
ஆரிய நம் குடிக்கு அதிப நீயும் ஒர் – அயோ-மிகை:1 12/3
இன் உருவம் இது கொண்டு இங்கு இருந்து-ஒழியும் நம் மருங்கே ஏகாள் அப்பால் – ஆரண்:6 125/2
சிரித்து நன்று நம் சேவகம் தேவரை தேய – ஆரண்:7 73/2
என் என்று நினைத்தது இழைத்து உளம் நம்
கன்னங்களின் வேறு உள காணுதுமால் – ஆரண்:11 53/1,2
நாள் அனைத்தையும் கடந்தனன் தமியன் நம் தாதை – ஆரண்:13 90/3
அளவையது ஆகுதல் அறிதி ஐய நம்
கிளர் பெரும் துயரமும் கீண்டது ஆம் என – ஆரண்:15 7/3,4
மகனே கண்டிலையோ நம் வாழ்வு எலாம் – கிட்:8 15/4
தீர்த்தனும் கவிகளும் செறிந்து நம் பகை – கிட்:10 18/1
அறம் மறந்தனன் அன்பு கிடக்க நம்
மறம் அறிந்திலன் வாழ்வின் மயங்கினான் – கிட்:11 2/3,4
அம்பும் உண்டு என்று சொல்லு நம் ஆணையே – கிட்:11 4/4
அடல் கொண்டு ஓங்கிய சேனைக்கு நாமும் நம் அறிவால் – கிட்:12 35/1
இற்றது நம் செயல் இனி என்று எண்ணினார் – கிட்:16 4/4
அழுதுமோ இருந்து நம் அன்பு பாழ்பட – கிட்:16 10/3
எல்லை நம் இறுதி யாய்க்கும் எந்தைக்கும் யாவரேனும் – கிட்:16 14/1
கோ முதல்வர்க்கு ஏறு ஆகிய கொற்ற குமரா நம்
நாமம் நிறுத்தி பேர் இசை வைக்கும் நவை இல்லோன் – கிட்:17 7/3,4
தணிகின்ற நம் சொல் தொடர் தன்மையது அன்று தன்மை – சுந்:4 91/1
தனி ஒரு குரங்கு போலாம் நன்று நம் தருக்கு என்கின்றார் – சுந்:7 11/2
உய்யுமேல் இல்லை நம் உயிர் என்று ஓடுவார் – சுந்:12 1/4
நகை புலன் பிறிது ஒன்று உண்டோ நம் குலம் நவை இன்றாமே – சுந்:12 109/4
சீரியது அன்று நம் செய்கை தீர்வு அரும் – சுந்:14 16/2
வெல்வான் நம் கோன் தின்னு-மின் வம் என்பவர் மெய்யும் – சுந்-மிகை:3 24/2
வந்தது போலும் நம் வாழ்வு நன்று எனா – சுந்-மிகை:10 13/2
நல் கடன் இது நம் உயிர் நாயகர் – சுந்-மிகை:13 4/1
விண்டவன் நம் எதிர் மீண்டுளானெனின் – சுந்-மிகை:14 35/2
உலங்கும் நம் மேல் வரின் ஒழிக்கல்-பாலதோ – யுத்1:2 20/4
ஓயும் நம் வலி என உணர கூறினான் – யுத்1:2 21/4
ஒலி கழல் ஒருவ நம் உயிருக்கு அன்பினால் – யுத்1:2 33/4
வருவதும் குரங்கு நம் வாழ்க்கை ஊர் கடந்து – யுத்1:2 35/3
வந்து நம் இருக்கையும் அரணும் வன்மையும் – யுத்1:2 36/1
கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம் – யுத்1:2 52/4
ஆனவரும் மானுடர் நம் ஆண்மை அழகு அன்றோ – யுத்1:2 63/4
நினைவு_அரும் தகையர் நம் வினையினால் மனிதர் ஆய் எளிது நின்றார் – யுத்1:2 85/4
இந்துவின் திருமுகத்து இறைவி நம் உறையுளாள் என்றலோடும் – யுத்1:2 94/2
வந்து நம் நகரமும் வாழ்வையும் கண்டு உவந்து அகல்வர்-மன்னோ – யுத்1:2 94/4
வலத்த கால் முந்துற தந்து நம் மனையிடை புகுவ மன்னோ – யுத்1:2 95/4
கோயிலும் நகரமும் மட நலார் குழலும் நம் குஞ்சியோடும் – யுத்1:2 96/3
மன்னும் நம் பகைஞர் ஆம் வானுளோர் அவரொடும் மாறுகோடல் – யுத்1:2 98/3
இந்திராதியர் சித்தர்கள் இயக்கர் நம் இறுதி – யுத்1:2 106/3
குரவர் நம் குலத்து உள்ளவர் அவன் கொல குறைந்தார் – யுத்1:3 50/2
ஆலம் அன்ன நம் அரக்கர்கள் வயங்கு எரி மடுத்தலின் அனுமன்-தன் – யுத்1:3 86/3
ஏயும் நம் பகைஞனுக்கு இனிய நண்பு செய் – யுத்1:4 3/3
நாயகன் மலர்_கழல் நணுகி நம் மனத்து – யுத்1:4 22/3
வந்தனன் இலங்கையர் மன்னன் ஆகும் நம்
சிந்தனை முடிந்தன என்னும் சிந்தையார் – யுத்1:4 35/3,4
இளவல் நம் சேனையின் நடுவண் எய்தினான் – யுத்1:4 49/4
மாண்டு ஒழிவு இன்றி நம் மருங்கு வந்தவன் – யுத்1:4 61/3
மாற்றவன் தம்பி நம் மருங்கு வந்து இவண் – யுத்1:4 65/3
விண்டவர் நம் புகல் மருவி வீழ்வரோ – யுத்1:4 87/4
அளவு_அறு நம் குலத்து அரசும் அல்லவர் – யுத்1:8 4/2
நீலனை இனிது நோக்கி நேமியோன் விரைய நீ நம்
பால் வரு சேனைக்கு எல்லாம் பாடிவீடு அமைத்தி என்ன – யுத்1:9 14/1,2
நகம் நிறை கானின் வைகும் நம் இனத்தவரும் அல்லர் – யுத்1:9 28/2
நன்று நன்று நம் மந்திரம் நன்று எனா – யுத்1:9 48/3
நொய்தினின் அடைத்து மான தானையான் நுவன்ற நம் ஊர் – யுத்1:9 66/2
மீண்டு நம் இருக்கை சேர்தும் என்பது மேற்கொண்டேமே – யுத்1:9 68/2
நம் பரத்து அடங்கும் மெய்யன் நாவினில் பொய் இலாதான் – யுத்1:9 80/2
நம் திரு நகரே ஆதி வேறு உள நகர்கட்கு எல்லாம் – யுத்1:10 7/1
நாள்_மலர் தெரியல் மார்ப நம் பலம் காண்பான் மாடத்து – யுத்1:10 23/1
கன்னி மா மதில் நகர்-நின்று நம் பலம் காண்பான் – யுத்1:12 1/2
போதியது நம் அரசு பொன்ற வரு காலம் – யுத்1-மிகை:2 21/4
ஓம் அரியாய நம் என ஒழிவுறாது ஓதும் – யுத்1-மிகை:3 4/1
அடங்கும் இன்று நம் வாழ்வு என அயர்ந்து ஒரு படியாய் – யுத்1-மிகை:3 8/3
அன்று வானரம் வந்து நம் சோலையை அழிக்க – யுத்1-மிகை:4 2/1
அழிவு இலா வலி படைத்துள நம் படை அரக்கர் – யுத்1-மிகை:11 9/1
ஆளும் நம் தவத்தின் செல்வம் அவன் தனக்கு அளிப்பென் என்றான் – யுத்1-மிகை:14 1/4
பட சிதைந்தது நம் படை என்றனர் – யுத்2:15 83/4
ஈண்டு நம் தூதர் தம்மை இவ்வழி தருதி என்றான் – யுத்2:16 6/3
கங்கம் வந்து உற்ற செய்ய களத்து நம் குலத்துக்கு ஒவ்வா – யுத்2:16 15/3
கிளைதரு சுற்றம் வெற்றி கேண்மை நம் கல்வி செல்வம் – யுத்2:16 33/3
மந்திரம் அன்று நம் வலி எலாம் உடன் – யுத்2:16 84/3
புழுங்கும் நம் பெரும் படை இரியல்போகின்றது – யுத்2:16 107/3
மன்னர் நம் பதியின் வந்து வரி சிலை பிடித்த கல்வி – யுத்2:19 120/3
நன்று நம் படை நாற்பது வெள்ளமும் – யுத்2:19 157/3
ஈடுற தக்க போலாம் நம் எதிர் என்னா ஏந்தல் – யுத்2:19 194/3
ஈண்டு நம் சேனை வெள்ளம் இருபதிற்று_இரட்டி மாள – யுத்2:19 229/1
பண்ணவற்கு இவன் பிழைக்குமேல் படுக்கும் நம் படையை – யுத்3:22 78/3
உரவு நம் படை மெலிந்துளது அருந்துதற்கு உணவு – யுத்3:22 86/2
மாதாவும் நம் சுற்றமும் நாடும் மறையோரும் – யுத்3:22 214/1
திடல் முந்நீரிடை படுத்து பறித்தனன் நம் துயர் என்றார் தேவர் எல்லாம் – யுத்3:24 35/4
ஐயன்மீர் நம் குலத்து அழிவு இது ஆதலின் – யுத்3:24 69/1
வழியும் காத்து நம் மரபும் காத்தனை – யுத்3:24 111/4
நம் கிளை உலந்தது எல்லாம் உய்ந்திட நணுகும் அன்றே – யுத்3:26 2/1
வெறிது நம் வென்றி என்றான் மாலி மேல் விளைவது ஓர்வான் – யுத்3:26 8/4
விண்டது-போலும் நம் வாழ்வு என வெந்தான் – யுத்3:26 31/2
இருந்தனள் தேவி யானே எதிர்ந்தனன் கண்களால் நம்
அருந்ததி கற்பினாளுக்கு அழிவு உண்டோ அரக்கன் நம்மை – யுத்3:26 94/1,2
அம்பினால் சிறு மனிதரே நன்று நம் ஆற்றல் – யுத்3:30 36/3
இரிந்து சேனை சிந்தி யாரும் இன்றி ஏக நின்று நம்
விரிந்த சேனை கண்டு யாதும் அஞ்சல் இன்றி வெம் சரம் – யுத்3:31 73/1,2
கொடுத்தும் நம் உயிர் என ஒருமை கூறினான் – யுத்3:31 177/4
விடியலுற்றது நம் பெரும் துயர் என வியந்தார் – யுத்3-மிகை:20 9/4
நன்று நம் ஆணை என்னா நகைசெய்யா அவனை பார்த்து – யுத்3-மிகை:28 1/2
நன்று நும் உரை நாயகர் பிழைத்து நம் உயிர் கொண்டு – யுத்3-மிகை:31 8/3
அன்றியும் ஒருவன் இங்கு அமரில் நம் படை – யுத்3-மிகை:31 50/1
அழுந்துகின்றது நம் பலம் அமரரும் அஞ்சி – யுத்4:35 35/3
மழ விடை அனைய நம் படைஞர் மாண்டனர் – யுத்4:37 60/3
சென்று தா நம் தேவியை சீரொடும் – யுத்4:40 24/4
இனிய சிந்தனை இராகவன் உவகையோடு இனி நம்
வினையம் முற்றியது என்று கொண்டு ஏறினன் விண்ணோர் – யுத்4:41 4/2,3
ஒன்று அலாத பல் முகமன் அங்கு உரைத்து நம் பூசை – யுத்4-மிகை:41 102/2
நன்று நம் பதியை காண நாயக அழைத்தி என்ன – யுத்4-மிகை:41 121/2
இன்று நம் சுற்றம் எல்லாம் இயல்புடன் அழைத்திடு என்றான் – யுத்4-மிகை:41 121/4
இளவலை அண்ணலுக்கு எதிர் கொண்ம் என்று நம்
வளை மதி அயோத்தியில் வாழும் மக்களை – யுத்4-மிகை:41 211/1,2
பேசியது அமையும் நம் கோன் எங்கு உளன் பெரும என்றான் – யுத்4-மிகை:41 258/4

TOP


நம்-கண் (1)

நம்-கண் அன்பு இலன் என்று உள்ளம் தள்ளுற நடுங்கி நைவார் – அயோ:3 90/2

TOP


நம்-தம் (4)

வெறுவிது நம்-தம் வீரம் என்று ஒரு மேன்மை தோன்ற – யுத்2:15 147/2
முடிந்தது நம்-தம் எண்ணம் மூ_உலகிற்கும் கங்குல் – யுத்3:26 45/1
அழுவதே நன்று நம்-தம் வில் தொழில் ஆற்றல் அம்மா – யுத்3:26 66/4
மேய வானரர்கள் ஆய வீரர்க்கும் பிறர்க்கும் நம்-தம்
நாயக கோயில் உள்ள நலம் எலாம் தெரித்தி என்றான் – யுத்4-மிகை:42 10/3,4

TOP


நம்-தம்-பால் (1)

நீலனை நெடிது நோக்கி நேமியான் பணிப்பான் நம்-தம்-பால்
வரும் சேனை தன்னை பகைஞர் வந்து அடரா வண்ணம் – சுந்-மிகை:14 44/1,2

TOP


நம்-தமக்கு (2)

எடுத்து நம்-தமக்கு இயம்புவ என கரிந்து இருண்ட – அயோ:10 23/2
கேடு நம்-தமக்கு என்பது மனம்-கொண்டு கிளர்ந்தான் – யுத்4:32 25/4

TOP


நம்-பால் (9)

பாவியர் ஆம் இவர் பண்பு இலர் நம்-பால்
மேவிய காரணம் வேறு இலை என்பான் – ஆரண்:14 50/1,2
நல்லன நிமித்தம் பெற்றேம் நம்பியை பெற்றேம் நம்-பால்
இல்லையே துன்பம் ஆனது இன்பமும் எய்திற்று இன்னும் – கிட்:2 34/1,2
களைதியேல் ஆவி நம்-பால் இவன் வந்து கண்ணின் கண்ட – சுந்:12 111/3
ஆண்டையின் அருக்கன் மைந்தன் ஐய கேள் அரிவை நம்-பால்
காண்டலுக்கு எளியள் ஆனாள் என்றலும் காலம் தாழ – சுந்:14 49/1,2
நிரம்பிடுவது அன்று அதுவும் நின்றது இனி நம்-பால்
உரம் படுவதே இதனின் மேல் உறுதி உண்டோ – யுத்1:2 54/3,4
நந்தி சாபத்தின் நமை அடும் குரங்கு எனின் நம்-பால்
வந்த சாபங்கள் எனை பல அவை செய்த வலி என் – யுத்1:2 106/1,2
பின்றும் என்றாலும் நம்-பால் புகழ் அன்றி பிறிது உண்டாமோ – யுத்1:4 106/4
பூசற்கு முயன்று நம்-பால் பொரு திரை புணரி வேலி – யுத்1:9 72/1
பாதமே பணியின் நம்-பால் பகை விடுத்து அவன் போம் என்றான் – யுத்2-மிகை:16 4/4

TOP


நம்-பொருட்டு (1)

சொன்ன நம்-பொருட்டு உம்பர்-தம் சூழ்ச்சியின் துணிவால் – யுத்1:2 111/3

TOP


நம்-மேல் (2)

குலங்களோடு அடங்க கொன்று கொடும் தொழில் குறித்து நம்-மேல்
விலங்குவார் என்னின் தேவர் விண்ணையும் நிலத்து வீழ்த்தும் – யுத்3:26 71/3,4
வேல்-கொடு நம்-மேல் எய்தான் என்று ஒரு வெகுளி பொங்க – யுத்3:27 180/1

TOP


நம்-வயின் (5)

தஞ்சு என நம்-வயின் சார்ந்துளான் அலன் – யுத்1:4 68/2
பாதகர் நம்-வயின் படர்வராம் எனின் – யுத்1:4 72/3
திருத்தியது ஆகும் அன்றே நம்-வயின் சேர்ந்த செய்கை – யுத்1:4 104/4
தளை அவிழ் அலங்கல் மார்ப நம்-வயின் தங்கிற்று அன்றால் – யுத்2:19 289/2
வந்தது நம்-வயின் எத்தனை மன்னா – யுத்3:20 9/2

TOP


நம்ப (7)

நாசம் உற்றிட நடப்பன கொடுத்தன பிடித்துடையர் நம்ப – யுத்1:2 86/4
இளையவன் தனக்கும் ஆற்றாது என் பெரும் சேனை நம்ப – யுத்2:16 16/4
நான்முகன் படையால் அன்றி சாகிலன் நம்ப என்றான் – யுத்2:18 203/4
நாகமே அனைய நம்ப நாழிகை ஒன்று நான்கு – யுத்2:19 180/1
நம்ப உன் தாதை ஆணைக்கு அஞ்சினன் மருங்கு நண்ண – யுத்3:29 50/2
நம்ப சேனையும் வானரமே என நக்கார் – யுத்3:30 36/4
நடுங்கி நஞ்சு அடை கண்டனை வானவர் நம்ப
ஒடுங்கி யாம் கரந்து உறைவிடம் அறிகிலம் உயிரை – யுத்3:31 24/1,2

TOP


நம்பற்கு (1)

அறம் என நின்ற நம்பற்கு அடிமை பெற்று அவன்-தனாலே – யுத்2:16 129/1

TOP


நம்பன் (3)

நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான் – பால:1 3/2
நாக நம்பன் இளம் கிளை நன்கு உணராத – சுந்-மிகை:5 8/3
நாதன் ஒத்தனன் என்னினோ துயில்கிலன் நம்பன்
வேதம் ஒத்தனன் மாருதி வேதத்தின் சிரத்தின் – யுத்2:15 220/2,3

TOP


நம்பனும் (1)

நம்பனும் அரக்கன் கை நடுவண் பூட்டுறும் – யுத்2-மிகை:16 46/3

TOP


நம்பனே (1)

நல் மத்தம் நாகத்து அயல் சூடிய நம்பனே போல் – சுந்:4 84/3

TOP


நம்பனை (2)

அறிவு வந்து உதவ நம்பனை அறிந்து பகர்வான் – ஆரண்:1 46/4
நம்பனை தந்த கேசரி கடல் என நடந்தான் – கிட்:12 5/4

TOP


நம்பி (28)

நங்கையும் நம்பி ஒத்தாள் நாம் இனி புகல்வது என்னோ – பால:22 21/4
நாமம் நம்பி நடக்கும் என்று நடுங்குகின்ற மனத்தவாய் – அயோ:3 53/3
சங்கை_இல் முகத்தார் நம்பி தம்பியர் அனையர் ஆனார் – அயோ:3 69/2
நால் தெண் திரை வேலையின் நம்பி தன் ஆணையாலே – அயோ:4 137/3
வல்லவன் முகமே நம்பி வந்திலன் என்னும் மாற்றம் – அயோ:6 11/2
நாயகன் பின்னும் தன் தேர் பாகனை நோக்கி நம்பி
சேயனோ அணியனோ என்று உரைத்தலும் தேர் வலானும் – அயோ:6 12/1,2
நள்ளில் போன வரி சிலை கை நம்பி செய்கை நடத்துவாம் – அயோ:6 38/4
நல்லவன் உரை-செய நம்பி கூறலும் – அயோ:12 22/1
நம்பி முன்னே இனி நாம் உயிர் மாய்வது நன்று அன்றோ – அயோ:13 19/4
நீளம் கொள் சிலையோன் மற்றை நேர்_இழை நெடிய நம்பி
தோளின்-கண் நயனம் வைத்தாள் சுடர் மணி தடங்கள் கண்டாள் – ஆரண்:5 4/3,4
நம்பி எம் அடிமை தொழில் நன்று எனா – ஆரண்:7 12/2
தா அரும் பெரு வலி தம்பி நம்பி நின் – கிட்:6 15/2
நீ என நின்ற நம்பி நெறியினின் நோக்கும் நேர்மை – கிட்:7 125/2
நண்ணும் வேலையில் நம்பி தம்பியும் – கிட்:9 4/3
நடந்து தனியே புகுதும் நம்பி நனி மூதூர் – சுந்:2 63/2
நல்லது உரைத்தாய் நம்பி இவன் நவையே செய்தான் ஆனாலும் – சுந்:12 112/1
நாள்கள் மேல் உலகில் சென்ற எண் என நம்பி கண்ண – சுந்:14 6/3
நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா – யுத்1:0 1/4
நல் தவ பயன் தந்து உய்ப்ப முந்துற போந்த நம்பி – யுத்1:9 23/4
நன்று என அவனை கூவி நம்பி நீ நண்ணலார்-பால் – யுத்1:14 10/1
நம்பி இவன்-தனை காணின் கொல்லும் இறை நல்கானால் – யுத்2:16 352/2
நம்பி குல கிழவன் கூறும் நலம் ஓராய் – யுத்2:18 271/2
நம்பி தம்பி எனது எம்பிரான் வரு துணை தரிக்கிலை நலித்தியேல் – யுத்2:19 79/3
நாசமும் உற்றது நம்பி நடந்தாய் – யுத்3:20 12/2
நாசம் போய் எய்தும் நம்பி தம்பிக்கும் நாசம் இல்லை – யுத்3:24 8/2
நம்பி நீயும் உன் தனிமையை அறிந்திலை நடந்தாய் – யுத்3:31 42/4
நல்லாரும் தீயாரும் நரகத்தார் சொர்க்கத்தார் நம்பி நம்மோடு – யுத்4:38 9/3
நாவிடை உரைப்பது ஒன்றும் உணர்ந்திலன் நின்ற நம்பி
ஆவியும் உடலும் ஒன்ற தழுவினன் அழுது சோர்வான் – யுத்4:41 116/3,4

TOP


நம்பி-தன் (3)

நாரணன் ஒக்கும் இந்த நம்பி-தன் கருணை என்பார் – அயோ:3 94/2
நல் கலை மதி உற வயங்கு நம்பி-தன்
எல் கலை திரு அரை எய்தி ஏமுற – ஆரண்:6 15/1,2
நாள் வெயில் பரந்தது என்ன நம்பி-தன் தம்பி மார்பில் – யுத்3:28 67/2

TOP


நம்பிக்கு (1)

நம்பிக்கு ஒரு நன் மகனோ இனி நான் – யுத்2:18 11/4

TOP


நம்பிமீர் (2)

நாண் இலேன் உரை-கொடு நடந்த நம்பிமீர்
நீள் நிலை அறநெறி நின்றுளோர்க்கு எலாம் – ஆரண்:13 47/1,2
நம்பிமீர் ஈது என் தன்மை நீர் இவண் நடந்தவாற்றை – கிட்-மிகை:16 8/3

TOP


நம்பியர் (1)

நம்பியர் இருக்க என நாயகனை முன்னா – யுத்1:2 47/2

TOP


நம்பியரில் (1)

நல் உறுப்பு அமையும் நம்பியரில் முன்னவன் நயந்து – கிட்:3 7/1

TOP


நம்பியும் (6)

நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான் அயல் நின்றான் – அயோ:13 30/1
அளக்கரை கடந்து மேல் அறிந்து நம்பியும்
விளக்கு ஒளி பரத்தலின் பாலின் வெண் கடல் – யுத்1:4 15/1,2
முடுகு என்றான் அரக்கன் தம்பி நம்பியும் சென்று மூண்டான் – யுத்3:27 100/4
நம்பியும் பரதனோடு நந்தியம்பதியை நண்ணி – யுத்4:42 1/1
நம்பியும் பரதனோடு நந்தியம் பதியை நண்ணி – யுத்4-மிகை:41 292/1
நம்பியும் வசிட்டன் கூற நந்தியம்பதியில் சென்று – யுத்4-மிகை:41 300/1

TOP


நம்பியே (1)

நம்பியே என்னை சேர்ந்த நண்பரின் நல்ல ஆமே – யுத்2:19 240/3

TOP


நம்பியை (10)

வந்த நம்பியை தம்பி-தன்னொடும் – பால:6 18/1
நம்பியை காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும் – பால:13 43/1
நன்றி வானவர் எலாம் இருந்த நம்பியை
துன்று இரும் கரும் கடல் துவைப்ப தோன்றிய – பால:23 80/1,2
நன்று சொல்லினை நம்பியை நளி முடி சூட்டி – அயோ:1 47/2
நன்று சொல்லினை நம்பியை நளிர் முடி சூட்டல் – அயோ:2 91/1
நல் இயல் அரும் கடன் கழித்த நம்பியை
புல்லுதியோ என பொருமி பொங்கினாள் – ஆரண்:13 49/3,4
நல்லன நிமித்தம் பெற்றேம் நம்பியை பெற்றேம் நம்-பால் – கிட்:2 34/1
நன்று இது கருமம் என்னா நம்பியை நணுக ஓடி – யுத்2:16 43/1
நம்பியை முதல்வர் ஆன மூவர்க்கும் நால்வர் ஆன – யுத்3:27 72/3
நணியனாய் தமியன் தோன்றும் நம்பியை வளைந்த வஞ்சர் – யுத்3-மிகை:31 66/1

TOP


நம்பியோ (1)

நம்பியோ இந்திரனை நாம பொறி துடைத்த – யுத்2:17 78/3

TOP


நம்பீ (1)

நல் நுதல் சீதையால் என் ஞாலத்தால் பயன் என் நம்பீ
உன்னை யான் தொடர்வல் என்னை தொடரும் இ உலகம் என்றால் – யுத்1:12 38/2,3

TOP


நம்பு (1)

நம்பு பாமாலையாலே நரர்க்கும் இன் அமுதம் ஈந்தான் – பால-மிகை:0 16/4

TOP


நம்மனோர்க்கு (1)

நல் நெடும் திசைமுகன் அகத்தும் நம்மனோர்க்கு
உன்ன_அரும் உயிருளும் ஒக்க வைகுவான் – அயோ:10 48/3,4

TOP


நம்மால் (3)

வள் உகிர்க்கு உவமை நம்மால் மயர்வு_அற வகுக்கலாமோ – கிட்:13 47/2
நன்று இது புரிதும் அன்றே நளிர் கடல் பெருமை நம்மால்
இன்று இது தீரும் என்னில் எளிவரும் பூதம் எல்லாம் – யுத்1:7 22/1,2
சிற்பத்தின் நம்மால் பேச சிறியவோ என்னை தீரா – யுத்2:16 27/3

TOP


நம்மிடை (1)

பேருமாறும் நம்மிடை பிழைக்குமாறும் எங்ஙனே – யுத்3:31 75/4

TOP


நம்மில் (1)

உய்வார் யாரே நம்மில் என கொண்டு உணர்-தோறும் – ஆரண்:11 15/3

TOP


நம்மின் (2)

மாளாத நம்மின் மனம் வலியார் ஆர் என்பார் – அயோ:4 102/4
நலம் கையில் அகன்றது-கொல் நம்மின் என நைந்தார் – ஆரண்:10 44/3

TOP


நம்முடை (1)

நாரும் மூரியும் அறா நம்முடை சிலைகள் போல் நலிவ ஆமோ – யுத்1:2 89/2

TOP


நம்முழை (1)

உடன் கொள தகையர் நம்முழை வந்து ஒன்றினால் – யுத்1:4 79/4

TOP


நம்முள் (1)

நம்முள் ஈண்டு ஒருவனை வெல்லும் நன்கு எனின் – யுத்3:31 185/1

TOP


நம்முன் (1)

எ வழி உறைந்தான் நம்முன் என்றலும் எயினர் வேந்தன் – அயோ:13 38/3

TOP


நம்மை (19)

கண்பால் உறும் மாயை கவற்றுதல் கற்ற நம்மை
மண்பாலவரே-கொல் விளைப்பவர் மாயை என்றான் – ஆரண்:10 150/3,4
நாயகன் அல்லன் நம்மை நனி பயந்தெடுத்து நல்கும் – கிட்:9 14/1
செறி பொன் தார் அலங்கல் வீர செய்திலம் குற்றம் நம்மை
கறுவு உற்ற பொருளுக்கு என்னோ காரணம் கண்டது என்றான் – கிட்:11 79/3,4
நயம் தெரி அனுமன் வேண்ட நல்கினன் நம்மை இன்னும் – கிட்:11 80/4
இறுக்குறும் இன்னே நம்மை குரங்கு என இரங்கி ஏங்கி – சுந்:9 65/1
அ தலை நம்மை நோனா அமரர்க்கும் நகையிற்றாமால் – சுந்:12 110/2
நஞ்சு தின்றனர்கள்தாம் நண்ணுவார் நரகம் என்று எண்ணி நம்மை
அஞ்சுகின்றிலர்கள் நின் அருள் அலால் சரண் இலா அமரர் அம்மா – யுத்1:2 92/3,4
சிந்தியாதவர் யார் அவை நம்மை என் செய்த – யுத்1:2 106/4
நாம் உற வல்லவர் நம்மை நண்ணினால் – யுத்1:4 80/2
கண மயில் குழுவின் நம்மை காண்கின்றார் தம்மை காணாய் – யுத்1:10 22/4
விளைந்தது பெரும் போர் என்று விட்டது விடாது நம்மை
உளைந்தனம் என்ன எண்ணி என் செயற்கு உரிய என்றான் – யுத்1:13 11/3,4
கொண்டனன் எறிந்து நம்மை கொல்லும் என்று அச்சம் கொண்டார் – யுத்2:19 174/3
மன்னவ நம்மை ஈண்டு வாழ்விக்கும் உபாயம் வல்லன் – யுத்3:24 16/2
அருந்ததி கற்பினாளுக்கு அழிவு உண்டோ அரக்கன் நம்மை
வருந்திட மாயம் செய்து நிகும்பலை மருங்கு புக்கான் – யுத்3:26 94/2,3
நஞ்சு வாய் இட்டால் அன்ன அமுது அன்றோ நம்மை அம்மா – யுத்3:31 47/3
பரந்த தேவர் மாயன் நம்மை வேர் அறுத்த பண்டை நாள் – யுத்3:31 74/2
பழித்துமோ நம்மை நாம் படுவது அஞ்சினால் – யுத்3:31 176/2
என்னை இது நம்மை இடை எய்தல் என எண்ணா – யுத்4:36 18/1
நைவித்த இரவு நான்கால் மருந்துக்கு நடந்து நம்மை
உய்வித்த வீரன்-தன்னை கண்ட இடம் உது கண்டாயே – யுத்4-மிகை:41 131/3,4

TOP


நம்மோடு (1)

நல்லாரும் தீயாரும் நரகத்தார் சொர்க்கத்தார் நம்பி நம்மோடு
எல்லாரும் பகைஞரே யார் முகத்தே விழிக்கின்றாய் எளியை ஆனாய் – யுத்4:38 9/3,4

TOP


நம (4)

நாராயணாய_நம என்னும் நல் நெஞ்சர் – பால-மிகை:0 7/1
ஆதி அரி ஓம் நம நராயணர் திருக்கதை அறிந்து அனுதினம் பரவுவோர் – பால-மிகை:0 37/1
இருக்கும் தெய்வமும் இரணியனே நம என்னும் – யுத்1:3 10/4
இரணியாய நம என்று கொண்டு ஏத்தல் கேட்டிருக்கும் – யுத்1-மிகை:3 3/4

TOP


நமக்கு (17)

மீளான் நமக்கு விதி கொடிதே காண் என்பார் – அயோ:4 102/2
இன்று இறுதி வந்தது நமக்கு என இருந்தார் – ஆரண்:10 48/2
புக்க அந்தமும் நமக்கு உரை செயும் புரையவோ – கிட்:3 12/2
மற துறை நமக்கு என வலிக்கும் வன்மையோர் – கிட்:10 100/2
நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா – யுத்1:0 1/4
மெலியவர் கடன் நமக்கு இறுதி வேண்டுவோர் – யுத்1:2 33/2
யாவது உண்டு இனி நமக்கு என்ன சொல்லினான் – யுத்1:2 38/2
புகல் மதித்து உணர்கிலாமையின் நமக்கு எளிமை சால் பொறைமை கூர – யுத்1:2 93/1
கன்மம் அன்று இது நமக்கு உறுதி என்று உணர்தலும் கருமம் அன்றால் – யுத்1:2 98/4
தீது இலராய் நமக்கு அன்பு செய்வரோ – யுத்1:4 72/4
காய்த்தவர் அவர்களே கையுற்றார் நமக்கு
ஏத்த_அரும் உறுதியும் எளிதின் எய்துமால் – யுத்1:4 92/3,4
பந்தனை செய்குதல் பணி நமக்கு என – யுத்1:8 2/3
நணியர் வந்து மனிதர் நமக்கு இனி – யுத்1:9 42/1
வரும் நமக்கு உயிர் மாய்வு எனா – யுத்2:16 119/2
நன்று இது அன்று நமக்கு எனா – யுத்2:16 121/1
நாராயண நரர் என்று இவர் உளராய் நமக்கு எல்லாம் – யுத்3:27 140/1
அடைத்த பேர் அணை அளித்தது நமக்கு உயிர் அடைய – யுத்3:31 29/1

TOP


நமக்கும் (1)

நினையும் தேவர்க்கும் நமக்கும் ஒத்து ஒரு நெறி நின்ற – அயோ:10 1/1

TOP


நமது (3)

ஆக்கினான் நமது உருவின் என்று அரும் பெறல் உவகை – கிட்:10 38/3
வந்தனர் நமது கொற்றம் வஞ்சகம் கடப்பது என்னும் – யுத்1-மிகை:9 17/3
நண்ணலும் இமையவர் நமது உறு கருமம் – யுத்4:37 88/3

TOP


நமர் (4)

நக்கான் அரக்கன் நடுங்கல் என்றான் ஐய நமர் எல்லாம் – சுந்:8 50/3
கொன்று பெயர்வோம் நமர் கொடி படையை எல்லாம் – யுத்1:2 57/3
பொன்றினர் நமர் எலாம் இளவல் போயினான் – யுத்3:24 74/3
அளப்ப அரும் வெள்ள சேனை நமர் திறத்து அழிந்தது அல்லால் – யுத்3-மிகை:20 1/1

TOP


நமர்கட்கு (1)

என்று அழைத்து இரங்கி ஏங்க இ துயர் நமர்கட்கு எல்லாம் – யுத்3:29 54/1

TOP


நமரங்காள் (7)

நாக குன்றின் நின்றன காண்-மின் நமரங்காள் – யுத்4:33 4/4
நளின காடே ஒப்பன காண்-மின் நமரங்காள் – யுத்4:33 6/4
நாவாய் மான செல்வன காண்-மின் நமரங்காள் – யுத்4:33 8/4
நட கால் காட்டும் கண்ணுளர் ஒக்கும் நமரங்காள் – யுத்4:33 9/4
நழுவி தள்ளி போவன காண்-மின் நமரங்காள் – யுத்4:33 10/4
நாளின் முற்றா வெண் பிறை போலும் நமரங்காள் – யுத்4:33 14/4
நகரம் நோக்கி செல்வன காண்-மின் நமரங்காள் – யுத்4:33 16/4

TOP


நமன் (5)

கால் பொத்தினர் நமன் தூதுவர் கடிது உற்று உயிர் கவர்வார் – ஆரண்:7 99/4
துற்றிய புகுதரும் தோற்றத்தால் நமன்
கொற்ற வாய்தல் செயல் குறித்த வாயினான் – ஆரண்:15 17/3,4
நால் ஐம்பதோடும் சென்று நமன் திசை வாயில் நண்ணி – யுத்1:13 19/4
ஓய்வன நமன் தமர் கால்கள் ஓயவே – யுத்2:18 117/4
நமன் குலம் களைவென் என்றான் நாளை வா என்ற வீரன் – யுத்4-மிகை:41 27/4

TOP


நமன்-தன் (1)

நலம் கிளர் கையின் மாண்டது இவண் என நமன்-தன் வாயில் – யுத்4-மிகை:41 58/3

TOP


நமன்-தனொடு (1)

தென் திசை நமன்-தனொடு தேவர் குலம் எல்லாம் – ஆரண்:10 48/1

TOP


நமன்-தானும் (1)

வரு காலனும் அவன் தூதரும் நமன்-தானும் அ வரைப்பின் – யுத்3:31 106/2

TOP


நமனாய் (1)

நல்லை போர் வா வா என்றான் நமனுக்கும் நமனாய் நின்றான் – யுத்3:27 90/4

TOP


நமனார் (5)

அறியாரோ நமனார் அது அன்று எனின் – கிட்:8 6/3
நள்ளின் சாகிலன் பகலிடை சாகிலன் நமனார்
கொள்ள சாகிலன் ஆர் இனி அவன் உயிர் கொள்வார் – யுத்1:3 17/3,4
பொருவோர் நமனார் பதி புக்கு உறைவோர் – யுத்2:18 36/3
வார் தங்கிய கழலான் ஒரு மரன் நின்றது நமனார்
போர் தண்டினும் வலிது ஆயது கொண்டான் புகழ் கொண்டான் – யுத்2:18 155/3,4
புக்கார் நமனார் உறை தென் புலமே – யுத்3:27 30/4

TOP


நமனுக்கு (1)

ஆயிர கோடி தூதர் உளர்-கொலோ நமனுக்கு அம்மா – சுந்:10 26/4

TOP


நமனுக்கும் (1)

நல்லை போர் வா வா என்றான் நமனுக்கும் நமனாய் நின்றான் – யுத்3:27 90/4

TOP


நமனுடை (1)

பொய் உடல் கொண்டு செல்லும் நமனுடை தூதர் போன்றார் – யுத்3:23 32/4

TOP


நமனும் (4)

தென் திசை நமனும் உள்ளம் துணுக்கென சிந்தி வானில் – சுந்:8 18/2
வெறுத்தனன் நமனும் வேலை உதிரத்தின் வெள்ளம் மீள – யுத்2:15 148/3
நல் அறம் ஆர்த்தது நமனும் ஆர்த்தனன் – யுத்3:22 42/4
நமனும் வரி சிலையும் அறனும் நடன் நவில – யுத்3:31 164/4

TOP


நமனே (1)

முடியாய் நமனே முறையோ முறையோ – யுத்3:23 12/2

TOP


நமனை (2)

உம்பர் வானகத்து ஒரு தனி நமனை சென்று உற்றான் – யுத்1:5 62/3
நண்ணினன் நடந்து எதிர் நமனை இன்று இவன் – யுத்2:16 301/3

TOP


நமனையும் (1)

நராபதி ஆகி பின்னும் நமனையும் வெல்லுவாரே – யுத்4-மிகை:42 75/4

TOP


நமித்திரர் (1)

நமித்திரர் நடுக்கு உறு நலம் கொள் மொய்ம்பு உடை – பால:5 88/1

TOP


நமை (6)

பதியின் பிழை அன்று பயந்து நமை புரந்தாள் – அயோ:4 129/2
பொருந்தா நயனம் பொருந்தி நமை பொன்ற சூழ்ந்த என புரண்டார் – அயோ:6 31/4
விட்டு நீத்தான் நமை என்பார் வெய்ய ஐயன் வினை என்பார் – அயோ:6 32/2
நோக்கினால் நமை நோக்கு அழி கண்ட நுண் மருங்குல் – கிட்:10 38/1
செவ்வை இல் துயில் நமை செகுத்தது ஈது எனா – சுந்:3 55/2
நந்தி சாபத்தின் நமை அடும் குரங்கு எனின் நம்-பால் – யுத்1:2 106/1

TOP


நமோ (2)

ஓம் நமோ நாராயணாய என்று உரைத்து உளம் உருகி – யுத்1:3 23/1
நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய – யுத்1:3 42/4

TOP


நய (3)

நன் மகன் இந்த நாடு இறவாமை நய என்றான் – அயோ:3 36/4
நல் நய காலினால் நடத்தல் மேயினான் – அயோ-மிகை:13 3/4
நய துறை நூலின் நீதி நாம் துறந்து அமைதல் நன்றோ – யுத்1:14 8/2

TOP


நயக்க (1)

நந்தும் நின் பெரும் செல்வம் மால் அருளினால் நயக்க
முந்தும் என்று சாபத்தினின் மோக்கமும் மொழிந்தான் – பால-மிகை:9 16/3,4

TOP


நயக்கமாட்டேன் (1)

நாட்டிலே குகனார் செய்த நன்மையை நயக்கமாட்டேன்
கேட்டிலேன் அல்லேன் இன்று கண்டும் அ கிளி_அனாளை – யுத்1:12 39/2,3

TOP


நயக்கல்-பாலதோ (2)

நன்றதோ உலகமும் நயக்கல்-பாலதோ – கிட்:16 12/4
நகையுறல் அன்றியும் நயக்கல்-பாலதோ – யுத்1:4 60/4

TOP


நயக்கல்-பாலார் (1)

பழி பட வந்த வாழ்வை யாவரே நயக்கல்-பாலார் – யுத்3:27 164/4

TOP


நயக்கிலாய் (1)

நன்று அது நாயக நயக்கிலாய் எனின் – யுத்2:16 82/3

TOP


நயக்கும் (2)

நாவுள் ஆகுதி நயக்கும் வேள்வியால் – பால:6 25/2
நயக்கும் மாளிகை வீதியை நண்ணினான் – சுந்:2 166/4

TOP


நயத்தால் (2)

நாயகனை திசை நோக்கி நயத்தால்
மேயது ஒர் இன்பம் விளங்கிட நின்றான் – சுந்-மிகை:11 17/3,4
நல் நகர் அழிந்தது என நாணினை நயத்தால்
உன் உயிர் எனத்தகைய தேவியர்கள் உன் மேல் – யுத்1:2 50/1,2

TOP


நயத்தி (1)

நன்றி இன்று ஒன்று காண்டியேல் எமை செல நயத்தி
என்று கைதொழுது இறைஞ்சினர் அரக்கனும் இசைந்தான் – சுந்:9 4/3,4

TOP


நயத்தியோ (1)

நலம் கடிந்து அறம் கெட நயத்தியோ எனா – அயோ:4 186/2

TOP


நயத்தினை (1)

நன்றி ஈது என்று கொண்டால் நயத்தினை நயந்து வேறு – யுத்2:16 35/1

TOP


நயந்த (2)

நன்று இது நன்று எனா நயந்த சிந்தையாள் – சுந்:3 36/2
நாகம் நானிலம் நான்முகன் நாடு என நயந்த
பாகம் மூன்றையும் வென்று கொண்டு அமரர் முன் பணித்த – யுத்4:35 16/1,2

TOP


நயந்தது (1)

நல் நெடும் செரு செய்வாயோ சொல்லுதி நயந்தது என்றான் – யுத்2:18 186/4

TOP


நயந்தனன் (2)

நாள் முதற்கு அமைந்த யாவும் நயந்தனன் இயற்றி நாம – அயோ:8 24/1
நல் நுதலினாள் முலை நயந்தனன் அ நல்லாள் – கிட்:14 57/2

TOP


நயந்தார் (1)

நங்கை அங்கு ஒரு பொன் நயந்தார் உய்ய – பால:21 38/1

TOP


நயந்தாள் (2)

நாடி கொண்டாள் குற்றம் நயந்தாள் முனிவு ஆற்றாள் – பால:17 26/1
நல் தவற்கு ஒரு தீங்கு இலை என அவண் நயந்தாள் – யுத்1-மிகை:3 16/4

TOP


நயந்தான் (5)

நாயகனும் அது செய்ய நயந்தான் – பால:8 10/4
நன்று நன்று நின் நிலை என அருள் இறை நயந்தான்
என்ற காலத்து அ வெய்யவன் பகழி மூன்று எய்தான் – ஆரண்:8 18/3,4
நன்று இது நன்று இது என்ன நயந்தான்
சென்று அணைவுற்றது அரக்கன சேனை – சுந்-மிகை:11 23/3,4
நன்று இலங்கையர் நாயகன் மொழி என நயந்தான்
ஒன்று தன் பெரும் துணைவரும் புடை செல உரவோன் – யுத்1:5 76/1,2
நன்று நாயகன் அறிவொடு நினைவன நயந்தான்
சென்று சேனையை நாடினன் திரிந்து வந்து எய்தி – யுத்4-மிகை:41 30/2,3

TOP


நயந்திலன் (1)

பொருள் நயந்திலன் போகின்றதே இவன் – பால:21 34/2

TOP


நயந்து (14)

தீவினை நயந்து செய்த தேவர்_கோன் தனக்கு செம் கண் – பால:9 15/3
நயந்து உரைத்து கரை ஏறல் நான்முகற்கும் அரிது ஆம் பல் – பால:12 15/3
நஞ்சினும் கொடிய நாட்டம் அமுதினும் நயந்து நோக்கி – பால:17 7/1
நாயகன் இரு பதம் நயந்து சிந்தை மீது – பால-மிகை:5 6/2
நல் உறுப்பு அமையும் நம்பியரில் முன்னவன் நயந்து
எல் உறுப்பு அரிய பேர் எழு சுடர் கடவுள்-தன் – கிட்:3 7/1,2
நூலை நயந்து நுண்ணிது உணர்ந்தீர் நுவல் தக்கீர் – கிட்:17 9/2
நல் நெறி குமரர் போக நயந்து உடன் புணர்ந்த சேனை – சுந்:14 52/2
தேவியை நயந்து சிறை வைத்த செயல் நன்றோ – யுத்1:2 49/3
நஞ்சினின் கொடியனை நயந்து கோடியோ – யுத்1:4 68/3
நகையுறல் இன்றியே நயந்து கேட்டியால் – யுத்1:4 76/4
பொருள் நயந்து நல் நூல் நெறி அடுக்கிய புல்லில் – யுத்1:6 2/2
நன்று நன்று என நயந்து எனை வரும்படி அழைத்து – யுத்1-மிகை:2 26/2
நல் துணைவரை முகம் நயந்து நோக்குறா – யுத்1-மிகை:4 4/4
நன்றி ஈது என்று கொண்டால் நயத்தினை நயந்து வேறு – யுத்2:16 35/1

TOP


நயந்துள (1)

நல்லன நிமித்தங்கள் நனி நயந்துள
அல்லதும் உண்டு நான் அறிந்தது ஆழியாய் – யுத்1:4 96/3,4

TOP


நயந்தோ (1)

நந்துதல் இலாது இறைவனாயிட நயந்தோ
சிந்தையில் விரும்புதல் செய் மங்கையர் திறத்தோ – யுத்1-மிகை:2 8/2,3

TOP


நயந்தோர் (1)

நல் வித்தாய் நடந்தான் முன்னே என்பரோ நயந்தோர் தத்தம் – யுத்2:19 210/3

TOP


நயப்பது (1)

நாற்றம் கேட்டலும் தின்ன நயப்பது ஓர் – பால:7 41/3

TOP


நயப்பு (1)

நாடி நால் பெரும் பண்ணும் நயப்பு உற – சுந்:2 176/3

TOP


நயப்புறு (1)

நயப்புறு சித்தரை நலிந்து வவ்வின – ஆரண்:7 46/4

TOP


நயப்புறுதல் (1)

தீயினை நயப்புறுதல் செய்தனை தெரிந்தாய் – யுத்1:2 48/3

TOP


நயம் (10)

நன்றோ பழுது உளதோ நடு உரை நீ நயம் என்ன – பால:24 6/2
நல் நயம் உணர்ந்தோன் ஆகி நஞ்சு என கனன்று நக்கான் – பால-மிகை:11 23/4
நன்றியை மறந்திடும் நயம்_இல் நாவினோன் – அயோ:11 102/3
நயம் கிளர் நான நெய் அளாவி நந்தல்_இல் – ஆரண்:10 18/1
நயம் தெரி அனுமன் வேண்ட நல்கினன் நம்மை இன்னும் – கிட்:11 80/4
நயம் தெரி காவலர் இருவர் நண்ணினார் – யுத்1:4 39/4
நயம் மேவிய நாமம் மத கரி அன்று – யுத்1-மிகை:3 18/3
நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும் – யுத்2:16 1/2
நயம் படைப்பென் என்று ஒரு கதை நாதன் மேல் எறிந்தான் – யுத்4-மிகை:37 8/4
நயம் தெரி ததிமுகன் கோசமுகன் முதல நண்ணார் – யுத்4-மிகை:42 43/3

TOP


நயம்_இல் (1)

நன்றியை மறந்திடும் நயம்_இல் நாவினோன் – அயோ:11 102/3

TOP


நயமொழி (1)

நான் உனை இரந்து கூறும் நயமொழி ஒன்றும் கேளாய் – யுத்3-மிகை:27 5/1

TOP


நயவான் (1)

இசையா இலங்கை அரசோடும் அண்ணல் அருள் இன்மை கண்டு நயவான்
விசையால் அனுங்க வட மேரு வையம் ஒளியால் விளங்க இமையா – யுத்2:19 244/2,3

TOP


நயவேல் (1)

நல்லை ஆகுதி பிழைப்பு இனி உண்டு என நயவேல் – யுத்2:15 254/4

TOP


நயன் (3)

நையுறு சிந்தையள் நயன் வாரியின் – சுந்:4 96/1
நன்று என நினைந்தேன் என்றான் நாதனும் நயன் இது என்றான் – யுத்2:16 122/4
நான்முகத்து ஒருவன் ஏவ நயன் அறி மயன் என்று ஓதும் – யுத்4:42 13/1

TOP


நயன (4)

நதிக்கு வந்து அவர் எய்தலும் அருணன் தன் நயன
கதிக்கு முந்துறு கலின மான் தேரொடும் கதிரோன் – பால:9 2/1,2
தையலாள் நயன வேலும் மன்மதன் சரமும் பாய – பால:9 18/1
நறை கமழ் அலங்கலான் நயன கோசரம் – பால:10 40/2
கொலை பயில் நயன வேல்கள் கொழும் கடை சிவந்த கொற்ற – யுத்3:25 7/3

TOP


நயனங்கள் (9)

கூற்று உறழ் நயனங்கள் சிவப்ப கூன் நுதல் – பால:19 21/1
ஆய் மலர் நயனங்கள் அருவி சோர்தர – அயோ:11 45/2
நாளம் கொள் நளின பள்ளி நயனங்கள் அமைய நேமி – ஆரண்:5 4/1
எரிந்த நயனங்கள் எயிறின் புறம் இமைப்ப – ஆரண்:10 47/2
துள்ளி ஓங்கு செந்தாமரை நயனங்கள் சொரிய – ஆரண்:13 93/1
துளி படா நயனங்கள் துளிப்ப சோரும் என்று – கிட்:1 9/3
நங்கையை கண்ட வள்ளல் நயனங்கள் பனிப்ப நைந்தான் – கிட்:11 51/4
பொடித்த தீ நயனங்கள் பொறுக்கலாமையால் – யுத்2:16 275/3
காதங்கள் கோடி கடை சென்று காணும் நயனங்கள் வாரி கலுழ – யுத்2:19 245/1

TOP


நயனங்களை (1)

நஞ்சங்களை வெல ஆகிய நயனங்களை உடையான் – அயோ:7 3/2

TOP


நயனத்தார்-மாட்டு (1)

உழை குலாம் நயனத்தார்-மாட்டு ஒன்று ஒன்றே விரும்பற்கு ஒத்த – பால:22 20/3

TOP


நயனத்தார்களும் (1)

நஞ்சு தொக்கு என புரை நயனத்தார்களும் – ஆரண்:7 45/4

TOP


நயனத்தாள் (2)

கான்று எரி நயனத்தாள் கதிக்கும் சொல்லினாள் – அயோ:2 47/3
நல்லாள் அ ஊர் வைகு உறை ஒக்கும் நயனத்தாள்
நில்லாய் நில்லாய் என்று உரை நேரா நினையா-முன் – சுந்:2 79/2,3

TOP


நயனத்தான் (2)

தந்தனன் நெடு நாவாய் தாமரை நயனத்தான்
அந்தணர்-தமை எல்லாம் அருளுதிர் விடை என்னா – அயோ:8 31/2,3
ஊட்டு அரக்கு உண்ட போலும் நயனத்தான் ஒருப்பட்டானை – சுந்:10 1/3

TOP


நயனத்தான்-பால் (1)

புண்டரிக நயனத்தான்-பால் இனி யான் போவேனோ – சுந்:2 225/3

TOP


நயனத்திடை (1)

கன்றி நயனத்திடை பிறந்தன கடை தீ – யுத்1-மிகை:2 14/2

TOP


நயனத்தின் (1)

அஞ்சன நயனத்தின் அவிழ்ந்த கூந்தலின் – கிட்:10 4/2

TOP


நயனத்து (2)

துஞ்சல்_இல் நயனத்து ஐய சூட்டுதி மகுடம் என்றான் – யுத்1:4 141/4
பால் உறு பசு வெண் திங்கள் பங்கய நயனத்து அண்ணல் – யுத்1:9 19/2

TOP


நயனம் (21)

கை வழி நயனம் செல்ல கண் வழி மனமும் செல்ல – பால:10 8/3
நம்பியை காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும் – பால:13 43/1
அண்ணிய விண்ணில் ஆளிக்கு ஆயிர நயனம் என்றான் – பால-மிகை:9 61/4
ஒரு மா முனிவன் மனையோடு ஒளி ஒன்றில ஆம் நயனம்
தரு மா மகனே துணை ஆய் தவமே புரி போழ்தினின்-வாய் – அயோ:4 74/1,2
பொருந்தா நயனம் பொருந்தி நமை பொன்ற சூழ்ந்த என புரண்டார் – அயோ:6 31/4
எல்லை காண்பு அளவும் நின்றான் இமைப்பு_இலன் நயனம் என்றான் – அயோ:13 42/4
புண்டரிக வாள் நயனம் நீர் பொழிய நின்றான் – ஆரண்:3 46/2
தோளின்-கண் நயனம் வைத்தாள் சுடர் மணி தடங்கள் கண்டாள் – ஆரண்:5 4/4
இந்திரற்கு ஆயிரம் நயனம் ஈசற்கு – ஆரண்:6 5/2
என்று அவள் உரைத்தலோடும் எரிந்தன நயனம் திக்கில் – ஆரண்:12 62/1
சிந்தின நயனம் வந்தனைய செய்கையான் – ஆரண்:14 82/4
நயனம் நன்கு இமையார் துயிலார் நனி – கிட்:13 19/1
குழை தொடர் நயனம் கூர் வேல் குமரர் நெஞ்சு உருவ கோட்டி – சுந்:2 114/2
என்று அற துறை கேட்டலும் இருபது நயனம்
மின் திறப்பன ஒத்தன வெயில் விடு பகு வாய் – சுந்:3 133/1,2
செ வழி நயனம் செல்லும் நெடு வழி சேறு செய்ய – சுந்:4 83/2
தன் பெரு நயனம் என்னும் தாமரை தடத்து நீரால் – யுத்1:12 34/4
நாள் ஒத்த நளினம் அன்ன முகத்தியர் நயனம் எல்லாம் – யுத்2:16 4/1
ஞானம் தொடர்ந்த சுடர் என்னும் ஒன்று நயனம் தொடர்ந்த ஒளியால் – யுத்2:19 255/2
மானிடை கயலில் வாளில் மலரிடை நயனம் வாங்கி – யுத்2:19 283/2
தன் புல நயனம் என்னும் தாமரை சொரியும் தாரை – யுத்3:28 64/2
தாங்கினன் சிறிது போது தாமரை நயனம் சேப்ப – யுத்4-மிகை:41 241/3

TOP


நயனமும் (3)

கருதின் வேம் உள்ளமும் காணின் வேம் நயனமும் – பால:7 5/4
நாவி நாறு ஓதி நவ்வி நயனமும் குயமும் புக்கு – ஆரண்:10 89/3
கையும் கால்களும் நயனமும் கமலமே அனைய – யுத்2:15 214/3

TOP


நயனியர் (1)

நஞ்சு அடுத்த நயனியர் நவ்வியின் – அயோ:14 11/3

TOP


நரக (1)

நரக தேயத்துள் நடுக்கு உறா இருளையும் நக்க – சுந்:12 40/2

TOP


நரகத்தார் (1)

நல்லாரும் தீயாரும் நரகத்தார் சொர்க்கத்தார் நம்பி நம்மோடு – யுத்4:38 9/3

TOP


நரகத்திடை (1)

வையம் மா நரகத்திடை வைகுமோ – அயோ:7 25/4

TOP


நரகத்து (3)

தீ எரி நரகத்து கடிது செல்க யான் – அயோ:11 99/4
வெம் துயர் நரகத்து வீழ்க யானுமே – அயோ:11 101/4
நாறு தன் குல கிளை எலாம் நரகத்து நடுவான் – யுத்1:12 2/1

TOP


நரகதர்க்கு (1)

நரகதர்க்கு அறம் நல்கும் நலத்த நீர் – அயோ:14 16/1

TOP


நரகதில் (1)

போ என உரைக்க போந்தேன் நரகதில் பொருந்துவேனோ – யுத்3:27 174/4

TOP


நரகம் (10)

நன்று இது என்றோர் தாமும் நரகம் அது எய்திடாரே – பால-மிகை:0 32/4
நாண் அலன் நரகம் உண்டு என்னும் நல் உரை – அயோ:11 108/3
அம்மை வெம்மை சேர் நரகம் ஆள யான் – அயோ:14 108/2
அம்மைக்கு அரு மா நரகம் தருமால் – ஆரண்:13 13/3
நரகம் ஒக்குமால் நல் நெடும் துறக்கம் இ நகர்க்கு – சுந்:2 14/4
நஞ்சு தின்றனர்கள்தாம் நண்ணுவார் நரகம் என்று எண்ணி நம்மை – யுத்1:2 92/3
நரகம் எய்துவென் நாவும் வெந்து உகும் என நவின்றான் – யுத்1:3 37/4
வாழ்வு எலாம் தம்பி கொள்ள வயங்கு எரி நரகம் என்னும் – யுத்1:9 37/3
பின்றுமேல் அவனுக்கு அன்றோ பழியொடு நரகம் பின்னை – யுத்2:16 35/4
மா துயர் நரகம் நண்ணா-வண்ணமும் காத்தி-மன்னோ – யுத்2:16 160/4

TOP


நரகமும் (4)

நாமம் இல்லை நரகமும் இல்லையே – அயோ:2 29/4
பிறந்திலன் அன்றே ஒன்றோ நரகமும் பிழைப்பது அன்றால் – கிட்:11 64/4
மண்டலம் குளிர்ந்த மீளா நரகமும் குளிர்ந்த மாதோ – சுந்:12 125/4
எம்மையே பழியும் பூண நரகமும் எமக்கே ஆக – யுத்3:27 175/4

TOP


நரகன் (1)

நல்லவன் தோற்பதே நரகன் வெல்வதே – ஆரண்:13 46/2

TOP


நரகிடை (3)

மீள_அரு நரகிடை கடிது வீழ்க யான் – அயோ:11 100/4
மெய் கொடு நரகிடை விரைவின் வீழ்க யான் – அயோ-மிகை:11 4/4
மிண்டி ஏறினர் நரகிடை வீழ்ந்தவர் எல்லாம் – யுத்4-மிகை:41 12/4

TOP


நரகில் (5)

தென் புலம் தங்கு எரி நரகில் சிந்திய – கிட்:14 21/3
மெய்யினை பொய் என்றானும் மீள்கிலா நரகில் வீழ்வார் – யுத்1:4 114/4
விற்று உண்டேன் எனக்கு மீளும் விதி உண்டோ நரகில் வீழ்ந்தால் – யுத்2:17 40/4
சாகினும் பெயர்ந்த தன்மை பழி தரும் நரகில் தள்ளும் – யுத்3:31 54/2
மண்டி புக்கனன் மறலி-தன் பெரும் பதம் நரகில்
தண்டிப்புண்டு அறுப்புண்டு எரிப்புண்டவர்-தம்மை – யுத்4-மிகை:41 12/1,2

TOP


நரகின் (4)

வெஃகிய மன்னன் வீழ் நரகின் வீழ்க யான் – அயோ:11 104/4
கூற்று உறு நரகின் ஓர் கூறு கொள்க யான் – அயோ:11 111/4
அ உலகத்தினும் நரகின் ஆழ்ந்து பின் – அயோ:14 74/2
எண்ணுறு நரகின் வீழ்வது அறிஞரும் இயற்றுவாரோ – யுத்2:16 140/4

TOP


நரகினர் (1)

நரகினர் ஆம் என நடுங்கும் நாவினர் – ஆரண்:10 11/3

TOP


நரகினின் (1)

பிறவியின் பெயர்ந்தேன் பின்னும் நரகினின் பிழைப்பதானேன் – யுத்1:4 126/4

TOP


நரகினை (1)

நஞ்சமும் கொல்வது அல்லால் நரகினை நல்காது அன்றே – கிட்:11 94/4

TOP


நரகு (6)

என்று இவர் உறு நரகு என்னது ஆகவே – அயோ:11 102/4
அரு நரகு ஆள்வது காண்டி ஆழியாய் – அயோ:14 37/4
அனைத்து உள நரகு எனக்கு ஆக என்று அவள் – அயோ-மிகை:11 6/3
போக்கலாம் புகலாம் பின்னை நரகு அன்றி பொருந்திற்று உண்டோ – யுத்2:16 142/4
அறம் துணை ஆவது அல்லால் அரு நரகு அமைய நல்கும் – யுத்3:27 172/1
என்று இவர் முதலா மற்றும் எழு நரகு அடையும் பாவம் – யுத்4-மிகை:41 79/1

TOP


நரகையும் (1)

வைகுறும் நரகையும் நகும் வயிற்றினான் – ஆரண்:15 16/4

TOP


நரகோ (1)

தெருளா வினை தீயவர் சேர் நரகோ
அருளான் நெறி ஓடும் அவாவதுவோ – பால:23 9/1,2

TOP


நரசிங்கம் (3)

வன் தூணிடை தோன்றிட மா நரசிங்கம் என்ன – கிட்:7 38/4
நகம் பல் என்று இவை இல்லது ஓர் நரசிங்கம் அனையான் – யுத்1:5 33/3
நகம் படை ஆக கொல்லும் நரசிங்கம் நடந்தது என்ன – யுத்3:22 120/2

TOP


நரசிங்கமும் (1)

அன்றியும் நரசிங்கமும் ஆடக – யுத்4:37 26/3

TOP


நரந்த (2)

நரந்த நறை குழல் நங்கையும் நாமும் – பால:13 29/3
நாகமும் நரந்த காவும் நளின வாவிகளும் நண்ணி – கிட்:3 30/3

TOP


நரந்தம் (2)

நடுக்கு உறு சந்தம் சிந்தூரத்தொடு நரந்தம் நாகம் – பால:1 13/2
விரிந்தன நரந்தம் முதல் வெண் மலர் வளாகத்து – சுந்:2 161/1

TOP


நரபாலரை (1)

பனி வார் கடல் புடை சூழ் படி நரபாலரை அருளா – பால:24 21/3

TOP


நரம்பிடை (1)

வீணையின் நரம்பிடை விளைத்த தேமறை – ஆரண்:10 13/3

TOP


நரம்பின் (5)

நரம்பின் நான்ற தேன் தாரை கொள் நறு மலர் யாழின் – பால:9 7/3
நெய் திரள் நரம்பின் தந்த மழலையின் இயன்ற பாடல் – பால:10 8/1
பண்ணும் நரம்பின் பகையா இயல் பாணி ஓதை – பால:16 44/2
இலக்கண மரபிற்கு ஏற்ற எழு வகை நரம்பின் நல் யாழ் – சுந்:2 103/1
நரம்பின் இன் இசை செவி புக நாசியில் கற்பக விரை நாற – சுந்:2 195/4

TOP


நரம்பினால் (1)

ஆவினான் புகழ் அம் கை நரம்பினால்
நாடி நால் பெரும் பண்ணும் நயப்பு உற – சுந்:2 176/2,3

TOP


நரம்பினும் (2)

கிளையினும் நரம்பினும் நிரம்பும் கேழன – அயோ:4 175/1
நரம்பினும் இனிய சொல் நாக நாடியர் – சுந்:12 16/2

TOP


நரம்பினோடு (1)

நரம்பினோடு இனிது பாடி நாடக மயிலோடு ஆடி – பால:16 13/2

TOP


நரம்பு (11)

கள் என நரம்பு வீக்கி கையொடு மனமும் கூட்டி – பால:10 11/2
அம் கையும் மிடறும் கூட்டி நரம்பு அளைந்து அமுதம் ஊறும் – பால:16 9/3
இன் நரம்பு அயில்கின்றனர் ஏழைமார் – பால:16 29/4
முழவு எழும் ஒலி இல முறையின் யாழ் நரம்பு
எழ எழும் ஒலி இல இமைப்பு இல் கண்ணினர் – அயோ:4 203/1,2
குழுவு நுண் தொளை வேயினும் குறி நரம்பு எறிவு உற்று – அயோ:10 28/1
கீதம் ஒத்த கின்னரங்கள் இன் நரம்பு வருடு-தொறும் கிளக்கும் ஓதை – கிட்:13 28/3
நரம்பு இயல் இமிழ் இசை நவில நாடகம் – சுந்:5 57/2
நரம்பு இழைத்த நின் பாடலின் நல்கிய – சுந்:12 98/2
நரம்பு கண்ணகத்துள் உறை நறை நிறை பாண்டில் – சுந்-மிகை:12 3/1
வெட்டிய தலையன நரம்பு வீச மேல் – யுத்2:19 42/1
நரம்பு இயல் கின்னரம் முதல் நன்மையே – யுத்3:24 105/2

TOP


நரம்பும் (1)

சூழ் அமைந்த சுரும்பும் நரம்பும் தம் – அயோ:11 33/1

TOP


நரம்பையும் (1)

நரம்பையும் அமிழ்த நாறும் நறவையும் நல் நீர் பண்ணை – கிட்:13 36/3

TOP


நரம்பொடு (1)

கண்டினின் குயின்ற வீணை நரம்பொடு கமழும் தேறல் – யுத்3-மிகை:22 1/2

TOP


நரர் (6)

ஏறு கடல் ஏறி நரர் வானரரை எல்லாம் – யுத்1:2 56/2
யாரும் ஒழியாமை நரர் வானரரை எல்லாம் – யுத்1:2 64/3
அ நரர் இன்று நாளை அழிவதற்கு ஐயம் இல்லை – யுத்1:14 27/1
பிணங்களின் குப்பை மற்றை நரர் உயிர் பிரிந்த யாக்கை – யுத்3:22 3/3
நாராயண நரர் என்று இவர் உளராய் நமக்கு எல்லாம் – யுத்3:27 140/1
அன்னது ஓர் நரர் வலியர் என்றே அவர்க்கு அறைந்தான் – யுத்3:30 38/4

TOP


நரர்க்கும் (1)

நம்பு பாமாலையாலே நரர்க்கும் இன் அமுதம் ஈந்தான் – பால-மிகை:0 16/4

TOP


நரரும் (1)

உரகரும் நரரும் வானத்து உம்பரும் பரவி ஏத்த – யுத்4-மிகை:42 36/4

TOP


நரரொடு (1)

நன்று இனி நரரொடு குரங்கை நாம் அற – யுத்1:2 41/2

TOP


நரல் (1)

மீன் நரல் வேலையும் வெற்பும் ஆர்த்தன – யுத்2:16 287/3

TOP


நரலை (1)

நந்தாது ஒலிக்கும் நரலை பெரு வேலை எல்லாம் – பால:16 41/3

TOP


நரலையும் (1)

நன்று என அவனும் நேர்ந்தான் நரலையும் நடுங்க ஆர்த்து – சுந்-மிகை:14 4/1

TOP


நரன் (3)

நரன் இருந்து தோள் பார்க்க நான் கிடந்து புலம்புவதோ – ஆரண்:6 101/2
அ நரன் அல்லன் ஆகின் நாரணன் அனையன் அன்றேல் – யுத்2:19 120/1
அ நரன் அம்பினில் ஆவி அழிந்தார் – யுத்3-மிகை:20 3/4

TOP


நரன்-கொலாம் (1)

நரன்-கொலாம் உலக நாதன் என்று கொண்டு அரக்கன் நக்கான் – யுத்1:14 22/4

TOP


நரன்-தன்னோடு (1)

இ நரன்-தன்னோடு ஒப்பார் யார் உளர் ஒருவர் என்றான் – யுத்2:19 120/4

TOP


நராதிபர் (1)

நராதிபர் செல்வமும் புகழும் நல்குமே – பால-மிகை:0 30/2

TOP


நராந்தகன் (2)

தேவராந்தகன் நராந்தகன் திரிசிரா என்னும் – யுத்1:5 51/1
நாந்தகம் மின்ன தேரை நராந்தகன் நடத்தி வந்தான் – யுத்2:18 207/4

TOP


நராபதி (1)

நராபதி ஆகி பின்னும் நமனையும் வெல்லுவாரே – யுத்4-மிகை:42 75/4

TOP


நராயணர் (1)

ஆதி அரி ஓம் நம நராயணர் திருக்கதை அறிந்து அனுதினம் பரவுவோர் – பால-மிகை:0 37/1

TOP


நரி (6)

ஞாளியோடு நின்று உளைக்கின்ற நரி குலம் பலவால் – ஆரண்:7 70/4
நாய் ஏறின தலை மேல் நெடு நரி ஏறின எரி கால் – ஆரண்:7 100/2
அரி நரி நாய் என அணி முகத்தினர் – சுந்-மிகை:3 14/2
குடரும் ஈரலும் கண்ணும் ஓர் குறு நரி கொள்ள – யுத்3:20 62/3
நரி உண்டி உகப்பன நண்ணினவால் – யுத்3:27 38/2
நரி உண கண்டேன் ஊணின் நாய் உணும் உணவு நன்றால் – யுத்3:29 36/4

TOP


நரிகள் (3)

ஞாளிகள் பூண்டன நரிகள் பூண்டன – ஆரண்:7 31/3
நரிகள் ஈர்த்தன வணங்கவும் இணங்கவும் நல்கா – யுத்3:20 63/2
பேய் மொய்த்து நரிகள் ஈண்டி பெரும் பிணம் பிறங்கி தோன்றும் – யுத்3:31 229/3

TOP


நரிகளும் (2)

பேயினும் பெரிய பேம் நரிகளும் திரிதரும் பிறிதும் எண்ணின் – யுத்1:2 96/2
வளைந்த பேய் கணமும் நாயும் நரிகளும் இரிய வந்தான் – யுத்3:24 3/3

TOP


நரியொடும் (1)

நரியொடும் வாழ்வது உண்டோ நாயினும் கடைப்பட்டோனே – யுத்2:17 68/4

TOP


நருக்கி (1)

நட்பு அகத்து இலா அரக்கரை நருக்கி மா மேரு – யுத்4:41 35/2

TOP


நருமதை (4)

ஓடுகின்ற நருமதை உன்னுவீர் – கிட்:13 13/4
நாகு சேர் நருமதை யாறு நண்ணினார் – கிட்:14 7/4
நருமதை ஆம் எனும் நதியை நீங்கினார் – கிட்:14 10/4
கங்கையோடு யமுனை கோதாவரி நருமதை காவேரி – யுத்4:41 22/1

TOP


நரை (3)

நரை திரை மூப்பு இவை மாற்றி இந்திரனும் நந்தாமல் – பால:12 6/3
நாழி நரை தீர் உலகு எலாம் ஆக நளினத்து நீ தந்த நான்முகனார்-தாமே – ஆரண்:2 29/1
நரை திரை என்று இல்லாத நான்முகனே முதல் அமரர் – ஆரண்:6 116/1

TOP


நரை-அதுவாய் (1)

ஆங்கு ஒரு நரை-அதுவாய் அணுகிற்றாம் என – அயோ-மிகை:1 2/2

TOP


நரைத்த (1)

நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினி – அயோ:7 22/2

TOP