தை-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தை 1
தைக்க 4
தைக்கின்ற 1
தைத்த 11
தைத்தது 2
தைத்தவே 2
தைத்தன 3
தைத்தான் 1
தைத்திட 1
தைத்து 3
தைப்ப 1
தைப்பாய் 1
தைப்புறு 1
தையல் 22
தையல்-தன் 1
தையல்-பால் 1
தையல்-மேல் 1
தையலர் 1
தையலார் 11
தையலார்களே 1
தையலாரும் 1
தையலாருள் 1
தையலாரை 1
தையலாள் 4
தையலாளை 2
தையலாளொடும் 1
தையலீர் 1
தையலும் 6
தையலை 12
தையலோ 2
தைவந்திடு 1
தைவந்து 1
தைவர 2
தைவரு 2
தைவரும் 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


தை (1)

புள் தை வெம் முலை புளினம் ஏய் தடத்து – கிட்:15 12/1

TOP


தைக்க (4)

சரங்கள் ஓடின தைக்க அரக்கர்-தம் – ஆரண்:7 20/3
தனுவின் ஆயிரம் கோடி வெம் கடும் கணை தைக்க
நினைவும் செய்கையும் மறந்துபோய் நெடு நிலம் சேர்ந்தான் – யுத்3:22 169/3,4
தருக்கி வெம் சரம் தலைத்தலை மயங்கின தைக்க
உருக்கு செம்பு அன கண்ணினன் நெடு நிலம் உற்றான் – யுத்3:22 170/3,4
சத்திரம் மார்பில் தைக்க உயிர்_இலன் என்ன சாய்ந்தான் – யுத்3:26 58/4

TOP


தைக்கின்ற (1)

தைக்கின்ற வேல் நோக்கினாள் தன் உயிர் அன்ன மன்னன் – பால:17 20/1

TOP


தைத்த (11)

தாக்கு அணங்கு அனைய மேனி தைத்த வேள் சரங்கள் பாராள் – பால:21 15/1
தைத்த அ கணை தெறிப்ப மெய் சிலிர்த்து உதறவே – ஆரண்:1 32/4
தைத்த வாளிகள் இன்று உள குன்றின் வீழ் தடித்தின் – யுத்1:2 116/4
தைத்த அம்பொடும் திரிந்தன தாலமீன் சாலம் – யுத்1:6 22/4
தரு மணி இமைக்கும் தோளாய் தசமுகன் முடியில் தைத்த
திரு மணி பறித்து தந்த வென்றியே சீரிது அன்றோ – யுத்1:12 46/3,4
தன் தனி புதல்வன் வென்றி தசமுகன் முடியில் தைத்த
மின் தளிர்த்து அனைய பல் மா மணியினை வெளியில் கண்டான் – யுத்1:12 49/1,2
வைத்தலை கருதி அன்று வானவர் மார்பின் தைத்த
மு தலை அயிலின் உச்சி முதுகு உற மூரி வால்-போல் – யுத்2:16 189/2,3
எதிர் எதிர் பகழி தைத்த யாக்கையன் எரியும் கண்ணன் – யுத்2:19 200/2
தயங்கு பேர் ஆற்றலானும் தன் உடல் தைத்த வாளிக்கு – யுத்2:19 203/3
தையலை இராமன் மேனி தைத்த வேல் தடம் கணாளை – யுத்3:23 32/1
அமலன் மேனியில் தைத்த அனந்தமால் – யுத்4:37 32/4

TOP


தைத்தது (2)

தைத்தது பூதம் அ தவனும் வேந்தனை – பால:5 85/2
சத்திரம் மார்பிடை தைத்தது ஒத்ததே – பால:19 45/4

TOP


தைத்தவே (2)

தாக்கு அணங்கு_அனையவள் தனத்தில் தைத்தவே – பால:10 36/4
வான நாடியர் மார்பினும் தைத்தவே – பால:21 33/4

TOP


தைத்தன (3)

ஊழை ஒத்தன ஒரு கணை தைத்தன உதிர – யுத்2:16 213/3
தைத்தன இளைய வீரன் சரம் எனும் தாரை மாரி – யுத்2:18 183/4
சால்புடை மாதலி மார்பில் தைத்தன
கோலினும் இலக்குவன் கோல மார்பின் வீழ் – யுத்4:37 77/2,3

TOP


தைத்தான் (1)

தைத்தான் அவர் கழல் திண் பசும் காய் ஒத்தனர் சரத்தால் – யுத்3:31 110/2

TOP


தைத்திட (1)

நீள் ஆர் அயில் என மயிர் தைத்திட மணி நெடு வால் அவன் உடல் நிமிர்வுற்று – சுந்:10 36/3

TOP


தைத்து (3)

தலையினில் தைத்து வேறு ஓர் தலை என நின்றது அன்ன – யுத்2:16 193/1
தைத்து உளதாய் நின்றது என ஒன்றேயும் காண்பு அரிய தகையும் காண்-மின் – யுத்4:33 25/4
மாணிக்க பலகை தைத்து வயிர திண் கால்கள் சேர்த்தி – யுத்4-மிகை:42 25/1

TOP


தைப்ப (1)

வரிந்த வில் அனங்கன் வாளி மனங்களில் தைப்ப மாதர் – பால:21 18/1

TOP


தைப்பாய் (1)

தங்கள் தங்கள் இடங்கள் மறுத்தமை தைப்பாய் – சுந்-மிகை:5 4/4

TOP


தைப்புறு (1)

வன் தைப்புறு நீள் வயிரத்தினையோ – கிட்:10 57/2

TOP


தையல் (22)

தையல் தளிர் கை தட கை பிடித்தான் – பால:23 89/4
தையல் பாகனும் சதுமுக கடவுளும் கூடி – பால-மிகை:9 17/3
தையல் சிற்றிடையாள் ஒரு தாழ் குழல் – பால-மிகை:21 1/1
தகுதற்கு ஒத்த சனகன் தையல் கையை பற்றி – அயோ:4 59/3
தையல் கடல்-நின்று எடுத்து அவனை தயில கடலின் தலை உய்த்தான் – அயோ:6 27/4
தூய தையல் தொழிலுறுவார் உனை – அயோ-மிகை:11 2/2
தாம் உரை-செய்கின்றது ஒரு தையல் வரும் என்னா – ஆரண்:6 27/3
தமியை நீ வருதற்கு ஒத்த தன்மை என் தையல் என்றான் – ஆரண்:6 35/4
தாரணி புரந்த சாலகடங்கட மன்னன் தையல்
போர் அணி பொலம் கொள் வேலாய் பொருந்தலை இகழ்தற்கு ஒத்த – ஆரண்:6 43/2,3
தாமரை இருந்த தையல் சேடி ஆம் தரமும் அல்லள் – ஆரண்:10 69/3
தன்னது அன்ன சரித தையல் சமைத்த வினை இன்று – ஆரண்-மிகை:1 2/2
சான்று உள அன்னவை தையல் கேட்டியால் – கிட்:7 25/4
தருவல் என்று இரங்கினாயோ தாமரை மறந்த தையல்
உருவினை காட்டி காட்டி ஒளிக்கின்றாய் ஒளிக்கின்றாயால் – கிட்:10 60/3,4
தத்துறல் ஒழிந்திலை தையல் நீ எனா – சுந்:5 39/2
கண்ணினும் உளை நீ தையல் கருத்தினும் உளை நீ வாயின் – சுந்:14 30/1
சாலையில் இருந்தாள் ஐய தவம் செய்த தவம் ஆம் தையல் – சுந்:14 31/4
தாழ்வு_இலா தவத்து ஓர் தையல் தனித்து ஒரு சிறையில் தங்க – யுத்1:9 37/1
வேக வெம் களிற்றின் வன் தோல் மெய்யுற போர்த்த தையல்
பாகனின் பொலிந்து தோன்றும் பவள மாளிகையை பாராய் – யுத்1:10 20/3,4
தையல் காண காட்டு-மின்கள் கண்டால் அன்றி தனது உள்ளத்து – யுத்3:23 3/2
சங்கையள் ஆய தையல் சிறிது உயிர் தரிப்பதானாள் – யுத்3:23 29/4
போயினள் தையல் இப்பால் புரிக என புலவர் கோமான் – யுத்3:24 1/1
போனகம் துறந்த தையல் மருங்குற நெருங்கி புக்கார் – யுத்4:40 29/4

TOP


தையல்-தன் (1)

தையல்-தன் கற்பும் தன் தகவும் தம்பியும் – அயோ:5 47/1

TOP


தையல்-பால் (1)

தனி இருந்த உடல் அன்ன தையல்-பால் – ஆரண்:9 26/4

TOP


தையல்-மேல் (1)

தையல்-மேல் ஓடலோடும் மகோதரன் தடுத்தான் ஈன்ற – யுத்2:17 60/3

TOP


தையலர் (1)

தையலர் அறுகு தூவி வாழ்த்தினர் தழுவ சார்ந்தான் – யுத்2:19 206/4

TOP


தையலார் (11)

தையலார் இழிந்து பாரின் மகளிரை தழுவி கொண்டார் – பால:13 41/2
தையலார் முகங்கள் செய்ய தாமரை பூத்த அன்றே – பால:18 3/4
சந்தனம் நீரொடு கலந்து தையலார்
பந்தியில் சிவறியால் சிதற பார் மிசை – பால-மிகை:5 15/2,3
சமிரணன் அகன்றதன் பின் தையலார் தவழ்ந்து சென்றே – பால-மிகை:8 6/1
தையலார் இரைத்து நோக்க தாரணி தேரில் சென்றான் – அயோ:3 86/4
சாந்து அயர் மகிழ்நர்-தம் முடியில் தையலார்
கூந்தலின் வறுமைய மலரின் கூலமே – அயோ:4 208/3,4
சடை என புனைந்திலன் என்னின் தையலார்
உடை உயிர் யாவையும் உடையுமால் என்றாள் – ஆரண்:6 16/3,4
தையலார் நெடு விழி என கொடியன கரங்கள் – ஆரண்:7 81/4
தழுவினர் இருவரும் தழுவி தையலார்
குழுவொடும் வீரர்-தம் குழாத்தினோடும் புக்கு – கிட்:11 105/2,3
தா அரும் திரு நகர் தையலார் முதல் – சுந்:10 49/1
தப்புதல் இன்றி கொன்று தையலார் கருவும் தள்ளி – யுத்1:3 142/2

TOP


தையலார்களே (1)

தம் மனம் என மருள் தையலார்களே – பால:5 42/4

TOP


தையலாரும் (1)

தாங்கினர் என்ற போதும் மைந்தரும் தையலாரும்
வீங்கிய உவகை மேனி சிறக்கவும் மேன்மேல் துள்ளி – யுத்4:42 7/2,3

TOP


தையலாருள் (1)

தக்கன் நனி வயிற்று உதித்தார் ஐம்பதின்மர் தடம் கொங்கை தையலாருள்
தொக்க பதின்மூவரை அ காசிபனும் புணர்ந்தனன் அ தோகைமாருள் – ஆரண்-மிகை:4 1/1,2

TOP


தையலாரை (1)

சஞ்சலம் கலந்த போது தையலாரை உய்ய வந்து – பால:13 49/3

TOP


தையலாள் (4)

தையலாள் நயன வேலும் மன்மதன் சரமும் பாய – பால:9 18/1
தையலாள் அமிழ்த மேனி தயங்கு ஒளி தழுவிக்கொள்ள – பால:22 9/2
தாடகை எனும் பெயர் தையலாள் பட – அயோ:2 57/2
தையலாள் வர கண்டனன் ஆம் என தளிர்ப்பான் – கிட்:12 29/2

TOP


தையலாளை (2)

தையலாளை ஓர் தார் அணி தோளினான் – பால:18 25/1
தாவியாது தீது எனாது தையலாளை மெய் உற – ஆரண்:10 92/1

TOP


தையலாளொடும் (1)

சந்திர மௌலியும் தையலாளொடும்
வந்தனன் மலர் அயன் வாக்கினாளுடன் – பால:23 82/2,3

TOP


தையலீர் (1)

தாழுமே இராகவன் தனிமை தையலீர் – ஆரண்:12 6/4

TOP


தையலும் (6)

தனியும் தானும் அ தையலும் ஆயினான் – பால:11 2/4
தம் தமது உலகு புக்கார் தையலும் கிடந்தாள் கல்லாய் – பால-மிகை:9 60/4
தன் துணை தம்பியும் தானும் தையலும்
தென் திசை நெறியினை சேறல் மேயினான் – அயோ:14 139/3,4
பூவின்-மேல் இருந்த தெய்வ தையலும் பொதுமை உற்றாள் – யுத்2:17 62/1
தராதல மகளும் பூவில் தையலும் மகிழ சூடும் – யுத்4-மிகை:41 210/2
தராதல மகளும் பூவின் தையலும் மகிழ சூடும் – யுத்4-மிகை:41 255/2

TOP


தையலை (12)

தூய தையலை நோக்கினன் சொல்லுவான் – அயோ:4 225/4
தையலை நோக்கினன் சாலை நோக்கினான் – அயோ:14 81/2
காத்தி தையலை என்று தன் கற்பகம் – ஆரண்:7 17/2
தரு சொல் கருதேன் ஒரு தையலை யான் – ஆரண்:14 65/2
போய தையலை தருதிர் என்று இராகவன் புகல – கிட்:10 45/2
தாய் உலகு அனைத்தும் வென்று தையலை தருதற்கு ஒத்தீர் – கிட்:17 23/2
தன்னது இன் ஒளி தழைப்பு உற துயில்வு உறு தையலை தகைவு_இல்லான் – சுந்:2 197/2
தையலை நோக்கிய தலையன் கையினன் – சுந்:14 22/3
தையலை வணங்கற்கு ஒத்த இடை பெறும் தன்மை நோக்கி – சுந்:14 37/1
தையலை விட்டு அவன் சரணம் தாழ்ந்து நின் – யுத்2:16 83/1
தையலை இராமன் மேனி தைத்த வேல் தடம் கணாளை – யுத்3:23 32/1
தையலை துணை இலாளை தவத்தியை தரும கற்பின் – யுத்3:26 64/1

TOP


தையலோ (2)

தான் இயக்கியோ தானவர் தையலோ ஐயுறும் தகை ஆனாள் – சுந்:2 199/2
தையலோ தருமமேயோ யார் அவள் தன்மை தேர்வார் – யுத்2:17 33/4

TOP


தைவந்திடு (1)

தன் தன் செய்ய கையால் தைவந்திடு கோசலையை – அயோ:4 70/2

TOP


தைவந்து (1)

தான் உற பற்றி முற்றும் தைவந்து தட கை வீர – கிட்:11 78/2

TOP


தைவர (2)

நாவி ஓதியை நானிலம் தைவர பரப்பி – அயோ:3 3/2
இள முலைச்சியர் ஏந்து அடி தைவர
விளை துயிற்கு விருந்து விரும்புவான் – கிட்:11 18/3,4

TOP


தைவரு (2)

தைவரு மகர வீணை தண்ணுமை தழுவி தூங்க – பால:10 8/2
தைவரு சூரியசத்துரு என்பான் – யுத்3:20 21/2

TOP


தைவரும் (1)

தாமரை கையால் தாளை தைவரும் குறங்கை தட்டும் – யுத்2:19 223/1

TOP