நு-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நுக 1
நுகம் 4
நுகர் 17
நுகர்கிலர்கள் 1
நுகர்கின்ற 1
நுகர்ச்சியது 1
நுகர்தற்கு 1
நுகர்தி 1
நுகர்தியோ 1
நுகர்ந்த 2
நுகர்ந்தன 1
நுகர்ந்தனர் 1
நுகர்ந்தனை 1
நுகர்ந்தார் 1
நுகர்ந்தான் 1
நுகர்ந்திருந்த 1
நுகர்ந்து 2
நுகர்ந்தே 1
நுகர்ந்தேன் 1
நுகர்வது 4
நுகர்வாரும் 1
நுகர்வாரை 1
நுகர்வீர் 1
நுகர்வென் 1
நுகர 2
நுகரவேயும் 1
நுகரா 1
நுகரார் 1
நுகரும் 5
நுகருவது 1
நுங்க 4
நுங்கலாம் 1
நுங்கள் 7
நுங்களால் 1
நுங்கி 1
நுங்கிய 8
நுங்கின் 1
நுங்கினர் 1
நுங்கினான் 1
நுங்கு 1
நுங்குகின்றது 1
நுங்குதல் 1
நுங்குவ 1
நுங்குவர் 1
நுங்கை 1
நுசுப்பின் 1
நுசுப்பினார் 1
நுசுப்பினாள் 1
நுசுப்பு 1
நுடக்கம் 1
நுடங்க 3
நுடங்கல் 1
நுடங்கலால் 1
நுடங்கி 1
நுடங்கிட 3
நுடங்கிய 2
நுடங்கின 1
நுடங்கு 3
நுடங்குகின்ற 2
நுடங்கும் 3
நுடங்குவ 2
நுடங்குவாள் 1
நுடங்குறு 1
நுண் 63
நுண்ணிதின் 1
நுண்ணிது 1
நுண்ணிய 2
நுண்ணெனும் 1
நுண்புலம் 1
நுண்மை 1
நுண்மையும் 1
நுணங்க 1
நுணங்கி 2
நுணங்கிய 4
நுணங்கியரும் 1
நுணங்கியோன் 1
நுணங்கு 8
நுணுகும் 1
நுணுகுற 1
நுத்தையும் 1
நுதல் 73
நுதல்-காறும் 1
நுதல்-தன்னை 2
நுதல்-தன்னொடும் 1
நுதலவள் 2
நுதலவன் 1
நுதலார் 1
நுதலார்க்கு 2
நுதலால் 1
நுதலாள் 2
நுதலாளொடு 1
நுதலாளோடு 1
நுதலானினும் 1
நுதலி 4
நுதலிக்கு 1
நுதலிய 1
நுதலியர் 2
நுதலியை 1
நுதலியோடும் 1
நுதலில் 4
நுதலின் 1
நுதலினன் 3
நுதலினார் 1
நுதலினாரும் 1
நுதலினால் 1
நுதலினாள் 1
நுதலினாளை 1
நுதலினோடு 1
நுதலை 4
நுதற்கு 2
நுதி 10
நுதியால் 2
நுந்த 2
நுந்துவென் 1
நுந்துவெனால் 1
நுந்தை 9
நுந்தைக்கு 4
நுந்தைபால் 1
நுந்தையை 1
நும் 47
நும்-பால் 4
நும்-மேல் 1
நும்பி 3
நும்பிக்கு 1
நும்மனோர் 1
நும்மினை 1
நும்முடை 2
நும்முனை 1
நும்முனோனை 1
நும்மை 3
நும்மொடும் 1
நும்மோடும் 1
நும 1
நுமக்கு 3
நுமக்கே 1
நுமது 1
நுமரில் 1
நுமரொடும் 1
நுரை 7
நுரைய 1
நுரையின் 1
நுரையினை 1
நுரையும் 1
நுரையை 1
நுரையொடு 1
நுவல் 3
நுவல்-காலையின் 1
நுவல்-போது 1
நுவல்-மின் 1
நுவல்க 1
நுவல்கில்லாள் 1
நுவல்தி 1
நுவல்வதாயினான் 2
நுவல்வது 7
நுவல்வார் 1
நுவல்வென் 1
நுவல்வோர் 1
நுவல 5
நுவலகிற்றிலம் 1
நுவலகிற்றிலள் 1
நுவலல் 1
நுவலல்-பாலார் 1
நுவலற்கு 1
நுவலா 1
நுவலாதே 1
நுவலும் 1
நுவன்ற 3
நுவன்றது 1
நுவன்றனன்-அரோ 1
நுவன்றான் 2
நுவன்றிலென் 1
நுவன்றுழி 1
நுவன்றுளாள் 1
நுவன்றேன் 1
நுழை 5
நுழை-தொறும் 1
நுழைகில 1
நுழைகிற்க 1
நுழைகிற்ப 1
நுழைகிற்பன 1
நுழைகின்ற 1
நுழைகின்றார் 1
நுழைதரு 1
நுழைதலின் 1
நுழைதலும் 1
நுழைதலோடும் 1
நுழைதியோ 1
நுழைந்த 2
நுழைந்தது 2
நுழைந்தன 2
நுழைந்தார் 1
நுழைந்தால் 3
நுழைந்து 10
நுழைந்து-ஆங்கு 1
நுழைய 10
நுழையா 3
நுழையாது 1
நுழையும் 3
நுழைவ 1
நுழைவது 1
நுழைவன 3
நுழைவாய் 1
நுழைவான் 1
நுழைவினர் 1
நுளைச்சியர் 4
நுறுக்கி 1
நுறுக்கின 1
நுறுக்கினன் 1
நுறுக்கினார் 1
நுறுக்கினான் 4
நுறுங்க 2
நுன் 5
நுன்-பால் 1
நுன்கண் 1
நுன்முன் 1
நுன்னின் 1
நுன்னை 1
நுனி 2
நுனிக்கும் 2
நுனித்த 3
நுனித்தது 1
நுனித்திடத்திற்கு 1
நுனித்து 6
நுனிந்த 1
நுனிப்ப 2
நுனிப்ப_அரும் 1
நுனிப்பது 1
நுனிப்பு 1
நுனை 4

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


நுக (1)

தொளை கொள் வான் நுக சுடர் நெடும் தேர் மிசை தோன்றி – யுத்2:16 225/1

TOP


நுகம் (4)

பெரும் பியலில் பளிக்கு நுகம் பிணைத்து அதனோடு அணைத்து ஈர்க்கும் – பால:13 16/2
நெரிந்தன நுகம் புடை நெரிந்தன அதன் கால் – சுந்:8 27/2
நுகம் படு தேர் அவை நூற்று_இரு_கோடி – சுந்-மிகை:11 15/1
நுகம் பயில் தேரினோடும் நுறுக்கினன் நூழில் தீர்த்தான் – யுத்3:22 126/3

TOP


நுகர் (17)

வாக்கு தேன் நுகர் மாக்களை மானுமே – பால:1 10/4
நுதல் அணி ஓடை பொங்க நுகர் வரி வண்டு கிண்ட – பால:1 16/2
காதைகள் சொரிவன செவி நுகர் கனிகள் – பால:2 51/4
வவ்வி நுகர் பெரு வேள்விக்கு உரிய எலாம் வருக என்றான் – பால:12 19/4
பொங்கு தேன் நுகர் பூ மிஞிறு ஆம் என – பால:16 34/1
அரும் கலம் அனைய மாதர் தேன் நுகர் அளியின் மொய்த்தார் – பால:21 2/4
வையம் நுகர் கொற்றவனும் மா தவரும் அல்லார் – பால:22 34/2
கன்று நீர் நுகர் காளிந்தி எனும் நதி கண்டார் – அயோ:9 34/4
நஞ்சினை நுகர் என நடுங்குவாரினும் – அயோ:12 12/3
உம்பர்_கோன் நுகர் இன் அமுது ஊட்டினார் – அயோ:14 10/4
ஊற்றமே மிக ஊனொடு மீன் நுகர்
நாற்றம் மேய நகை இல் முகத்தினான் – அயோ-மிகை:8 1/1,2
ஊன் நுகர் அரக்கர் உருமை சுடு சினத்தின் – ஆரண்:3 45/2
உரு இது மெய்யது அன்றால் ஊன் நுகர் வாழ்க்கையாளை – ஆரண்:6 56/3
தாம் நுகர் சாகம் எல்லாம் முறைமுறை சிலவர் தந்தார் – சுந்:14 5/4
தின்று_தின்று உவகை கூரும் தேன் நுகர் அளியின் மொய்த்தே – சுந்-மிகை:14 4/4
புனை மது சோலை புக்கான் மது நுகர் புனித சேனை – சுந்-மிகை:14 10/3
பொலம் குழை மகளிரோடும் பால் நுகர் புதல்வரோடும் – யுத்3:26 71/2

TOP


நுகர்கிலர்கள் (1)

முகமும் அவர் அருளும் நுகர்கிலர்கள் துயர் முடுக – அயோ:5 15/2

TOP


நுகர்கின்ற (1)

நானா விதம் உறு போகமும் நுகர்கின்ற அ நாள்-வாய் – பால:24 1/2

TOP


நுகர்ச்சியது (1)

செவி அமை நுகர்ச்சியது எனினும் தேவர்-தம் – அயோ:2 34/3

TOP


நுகர்தற்கு (1)

தேன் உள திணை உண்டால் தேவரும் நுகர்தற்கு ஆம் – அயோ:8 27/1

TOP


நுகர்தி (1)

என்னையே நுகர்தி என்றனள் எழுந்து விழுவாள் – ஆரண்:1 39/4

TOP


நுகர்தியோ (1)

எச்சிலை நுகர்தியோ என்று எயிற்று அரும்பு இலங்க நக்காள் – பால:19 11/4

TOP


நுகர்ந்த (2)

கொன்றனர் நுகர்ந்த பொருளின் கடிது கொன்ற – ஆரண்:9 7/4
கானிடை புகுந்து இரும் கனி காயொடு நுகர்ந்த
ஊன் உடை பொறை உடம்பினன் என்று கொண்டு உணர்ந்த – யுத்1:6 9/1,2

TOP


நுகர்ந்தன (1)

ஈன்று அளிக்க நுகர்ந்தன யானையே – அயோ:14 15/4

TOP


நுகர்ந்தனர் (1)

காம நறையின் திறம் நுகர்ந்தனர் களித்தார் – சுந்:2 159/2

TOP


நுகர்ந்தனை (1)

மேல் முறை வைத்தேம் அண்ணல் நுகர்ந்தனை மெலிவு தீர்தி – சுந்:14 5/2

TOP


நுகர்ந்தார் (1)

நஞ்சு நுகர்ந்தார் என உடலம் நடுங்காநின்றார் என்றாலும் – அயோ:6 23/2

TOP


நுகர்ந்தான் (1)

ஆலம் நுகர்ந்தான் என்ன வய போர் அடர்கிற்பீர் – கிட்:17 9/4

TOP


நுகர்ந்திருந்த (1)

நாறுகின்றது நுகர்ந்திருந்த நாம் எலாம் – யுத்1:2 13/4

TOP


நுகர்ந்து (2)

நாற்றம் நுகர்ந்து உயர் நாசியை நாம – யுத்3:20 6/2
இந்தியம் களைந்து இரும் கனி காய் நுகர்ந்து இவுளி – யுத்4-மிகை:41 168/1

TOP


நுகர்ந்தே (1)

ஈந்து அளவு இல்லது ஓர் இன்பம் நுகர்ந்தே
ஆய்ந்து உணர் கேள்வி அரும் தவரோடும் – பால:23 102/1,2

TOP


நுகர்ந்தேன் (1)

இருந்தேன் நுகர்ந்தேன் இதன்-மேல் இனி ஈவது என்னோ – சுந்:1 49/4

TOP


நுகர்வது (4)

செவி புலம் நுகர்வது ஓர் தெய்வ தேன்-கொலாம் – அயோ:12 23/4
மிச்சிலே நுகர்வது வேறுதான் ஒன்றும் – கிட்:11 113/2
நுன் துணை கோ_மகன் நுகர்வது ஆதலான் – கிட்:11 114/3
உதிர வாரி நுகர்வது ஒர் ஊணினான் – யுத்2:16 58/2

TOP


நுகர்வாரும் (1)

இன் இசை மணி யாழின் இசை மது நுகர்வாரும்
சென்னியர் திரிவாரும் விறலியர் செறிவாரும் – பால:23 31/2,3

TOP


நுகர்வாரை (1)

நஞ்சு நுகர்வாரை இது நன்று எனலும் நன்றோ – ஆரண்:11 24/4

TOP


நுகர்வீர் (1)

நங்கைமார்களை புல்லுதிரோ நலம் நுகர்வீர் – ஆரண்:8 4/4

TOP


நுகர்வென் (1)

மீண்டால் நுகர்வென் நின் விருந்து என வேண்டி மெய்ம்மை – சுந்:1 51/3

TOP


நுகர (2)

தேன் தரு கமல செவ்வாய் திறந்தனள் நுகர நாணி – பால:19 19/3
ஆனன நுகர குளரும் ஆன அடி பற்றா – சுந்:6 11/2

TOP


நுகரவேயும் (1)

நோயினை நுகரவேயும் நுணங்கி நின்று உணங்கும் ஆவி – யுத்2:17 14/1

TOP


நுகரா (1)

தொட்டான் நுகரா ஒரு சோர்வு இலனால் – யுத்1:3 115/2

TOP


நுகரார் (1)

நூல் ஏந்து கேள்வி நுகரார் புலன் நோக்கல் உற்றார் – சுந்-மிகை:1 4/1

TOP


நுகரும் (5)

பழையர்-தம் மனையன பழ நறை நுகரும்
உழவர்-தம் மனையன உழு தொழில் புரியும் – பால:2 50/1,2
புக்கு பெரு நீர் நுகரும் பொரு போதகம் என்று ஒலி மேல் – அயோ:4 75/1
உரம் எலாம் உருவி என் உயிர் எலாம் நுகரும் நின் – கிட்:7 128/3
போனகம் நுகரும் பேய்கள் வாய் புற புடைப்பொடு ஆர்ப்ப – யுத்3:21 13/4
காமமே நுகரும் செல்வ கடவுளர் ஈட்டம் கண்டான் – யுத்3:24 46/3

TOP


நுகருவது (1)

எச்சிலை நுகருவது இன்பம் ஆவதோ – அயோ:1 25/4

TOP


நுங்க (4)

அணைவு இல் திங்களை நுங்க அராவினை – ஆரண்:6 70/1
கந்தார வீணை களி செம் செவி காது நுங்க – சுந்:1 62/4
நெரிஞ்சுற கடலின் வீழ்ந்தார் நெடும் சுறா மகரம் நுங்க – சுந்-மிகை:1 3/4
ஒன்றிற்கு ஒன்று உற்று அம்பு தலைப்பட்டு உயிர் நுங்க
பொன்றி சிங்கம் நாக அடுக்கல் பொலிகின்ற – யுத்4:33 5/2,3

TOP


நுங்கலாம் (1)

அள்ளி நுங்கலாம் ஆர் இருள் பிழம்பினை அழித்தான் – யுத்3:22 186/2

TOP


நுங்கள் (7)

வையம் என் புயத்திடை நுங்கள் மாட்சியால் – அயோ:1 13/3
மன் புகழ் பெருமை நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம் – அயோ:13 36/3
வேறும் எனும் நுங்கள் குலம் வேரொடும் அடங்க – ஆரண்:10 56/3
கவ்வை இன்றாக நுங்கள் வரவு என கருணையோனும் – கிட்:2 14/3
ஐய நுங்கள் அரும் குல கற்பின் அ – கிட்:7 110/1
இ திரு பெறுகிற்பானும் இந்திரன் இலங்கை நுங்கள்
பொய் திரு பெறுகிற்பானும் வீடணன் புலவர் கோமான் – யுத்2:17 55/1,2
கொற்ற வெம் சிலை கும்பகன்னனும் நுங்கள் கோமான் – யுத்3:30 44/1

TOP


நுங்களால் (1)

பெற்ற நுங்களால் எங்களை பிரிந்து தன் பெரும் செவி மூக்கோடும் – யுத்2:16 321/3

TOP


நுங்கி (1)

போயினன் அரக்கன் பின்னை பொங்கு அரா நுங்கி கான்ற – சுந்:3 147/1

TOP


நுங்கிய (8)

வாள் அரா நுங்கிய மதியும் போலவே – பால:10 47/4
உறு பதம் நுங்கிய ஒருவன் ஆக யான் – அயோ:11 109/4
உரும் ஒத்த வலத்து உயிர் நுங்கிய திங்கள் ஓடி – ஆரண்:10 136/1
விடம் நுங்கிய கண் உடையார் இவர் மெல்லமெல்ல – ஆரண்:10 144/3
வையம் நுங்கிய வாய் இதழ் துடித்தது மலர் கண் – கிட்:3 70/3
நண்ணுதல் அரும் கடல் நஞ்சம் நுங்கிய
கண்ணுதல் கண்டத்தின் காட்சி ஆம் என – கிட்:10 3/1,2
பச்சிலை கிழங்கு காய் பரமன் நுங்கிய
மிச்சிலே நுகர்வது வேறுதான் ஒன்றும் – கிட்:11 113/1,2
ஆயவர் அளவிலர் அறத்தை நுங்கிய
தீயவர் தேவரை செறுத்து தேவர் ஊர் – யுத்1-மிகை:5 7/1,2

TOP


நுங்கின் (1)

தோட்ட நுங்கின் தொளை உறு மூக்கினை – ஆரண்:7 8/2

TOP


நுங்கினர் (1)

தோட்டு நுங்கினர் புவியினை பாதலம் தோன்ற – பால-மிகை:9 33/4

TOP


நுங்கினான் (1)

நூறு நூறு குடம் களும் நுங்கினான்
ஏறுகின்ற பசியை எழுப்பினான் – யுத்2:16 55/2,3

TOP


நுங்கு (1)

நின்றன எல்லாம் பெய்தால் உடன் நுங்கு நெருப்பும் காண்டும் – யுத்4:34 15/2

TOP


நுங்குகின்றது (1)

நுங்குகின்றது இ உலகை ஓர் நொடி வரை என்ன – யுத்4:37 98/1

TOP


நுங்குதல் (1)

காகாதிகள் நுங்குதல் காணுதியால் – யுத்2:18 80/4

TOP


நுங்குவ (1)

நுங்குவ அருந்துவ நீக்கி நோற்பவர் – சுந்:3 68/2

TOP


நுங்குவர் (1)

நுங்குவர் உலகை ஓர் நொடியில் என்றனர் – பால:5 16/4

TOP


நுங்கை (1)

சொல்வித்தும் பழித்தும் நுங்கை மூக்கினை துணிந்தோராலே – யுத்3:27 168/1

TOP


நுசுப்பின் (1)

உம்பரின் கொம்பர் ஒத்த ஒரு பிடி நுசுப்பின் செ வாய் – சுந்-மிகை:11 4/2

TOP


நுசுப்பினார் (1)

மின் பிறழ் நுசுப்பினார் தாமும் விம்மலால் – பால:5 111/3

TOP


நுசுப்பினாள் (1)

சுமை உற நுடங்குகின்ற நுசுப்பினாள் பூண் செய் தோளுக்கு – பால:22 10/2

TOP


நுசுப்பு (1)

இல்லையே நுசுப்பு என்பார் உண்டு உண்டு என்னவும் – பால:13 63/1

TOP


நுடக்கம் (1)

செயிர் இல் சிற்றிடை ஆய் உற்ற சிறு கொடி நுடக்கம் தீர – கிட்:13 41/3

TOP


நுடங்க (3)

சிற்றிடை நுடங்க ஒளிர் சீறடி பெயர்த்தாள் – பால:22 27/4
நூறு யோசனை அகலமும் ஆழமும் நுடங்க
கூறு செய்தனர் என்பரால் வட குண திசையில் – பால-மிகை:9 34/1,2
வல்லிகள் நுடங்க கண்டான் மங்கை-தன் மருங்குல் நோக்க – ஆரண்:5 6/2

TOP


நுடங்கல் (1)

ஓய்வு_அறு துயர் என நுடங்கல் நோன்மையோ – ஆரண்:14 86/4

TOP


நுடங்கலால் (1)

நுரை கொழுந்து எழுந்து ஓங்கி நுடங்கலால்
நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினி – அயோ:7 22/1,2

TOP


நுடங்கி (1)

மழை உறா மின்னின் அன்ன மருங்குல் போல் நுடங்கி நின்றாள் – பால:21 9/4

TOP


நுடங்கிட (3)

மின்னை ஏய் இடை நுடங்கிட விரைந்து தொடர்வாள் – ஆரண்:1 39/2
தளர்ந்த சிந்தை தம் இடையினும் நுடங்கிட உயிரொடு தடுமாறி – சுந்:2 190/2
தள்ளி தாமரை சேவடி நுடங்கிட தளர்ந்தான் – யுத்3:22 186/4

TOP


நுடங்கிய (2)

நுடங்கிய மின் என நொய்தின் எய்தினாள் – பால:13 56/3
நுடங்கிய துகில் கொடி நூழை கைம் மலை – பால:14 12/1

TOP


நுடங்கின (1)

வஞ்சி போலியர் மருங்கு என நுடங்கின வல்லி – கிட்:10 44/4

TOP


நுடங்கு (3)

நோய் ஆற்றுகில்லா உயிர் போல நுடங்கு இடையார் – அயோ:4 142/3
நுடங்கு மாளிகை துகில் கொடி நிகர்ப்பன நோக்காய் – அயோ:10 4/4
நூறு நூறு ஏவி வெய்தின் நுடங்கு உளை மடங்கல் மாவும் – யுத்2:19 117/2

TOP


நுடங்குகின்ற (2)

மின் என நுடங்குகின்ற மருங்குலாள் ஒருத்தி வெள்ளை – பால:19 16/1
சுமை உற நுடங்குகின்ற நுசுப்பினாள் பூண் செய் தோளுக்கு – பால:22 10/2

TOP


நுடங்கும் (3)

வடம் கொள நுடங்கும் இடையாள் மறுகி வானோர் – பால:7 31/2
விலைக்கு ஓட்டும் பேர் அல்குல் மின் நுடங்கும் இடையாரை – பால:12 17/2
நூக்குறுத்து அங்கும் இங்கும் தள்ளுற நுடங்கும் நோன்மை – சுந்:1 78/2

TOP


நுடங்குவ (2)

மாதரின் நுடங்குவ வரம்பு_இல் கோடியே – அயோ:12 30/4
எஞ்சல்_இல் குழையன இடை நுடங்குவ
வஞ்சிகள் பொலிந்தன மகளிர் மானவே – கிட்:10 118/3,4

TOP


நுடங்குவாள் (1)

நூல் உறு மருங்குல் போல் நுடங்குவாள் நெடும் – பால:10 41/2

TOP


நுடங்குறு (1)

கொம்பின் நின்று நுடங்குறு கொள்கையார் – அயோ:14 10/1

TOP


நுண் (63)

தேயும் நுண் இடை சென்று வணங்கவும் – பால:2 28/3
இளைப்பன நுண் இடை இளைப்ப மென் முலை – பால:3 52/3
ஈந்தே கடந்தான் இரப்போர் கடல் எண்_இல் நுண் நூல் – பால:4 5/1
இழைக்கும் நுண் இடை இடைதர முகடு உயர் கொங்கை – பால:9 11/1
ஐய நுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு கண்டார் – பால:10 8/4
கடகமும் குழையும் பூணும் ஆரமும் கலிங்க நுண் நூல் – பால:10 17/1
சீத நுண் துளி மலர் அமளி சேர்த்தினார் – பால:10 46/4
வேலை வெண் முத்தும் பொன்னும் காசும் நுண் துகிலும் வீசி – பால:13 37/2
நுண் சிலம்பி வலந்தன நுண் துகில் – பால:14 45/1
நுண் சிலம்பி வலந்தன நுண் துகில் – பால:14 45/1
நுண் திரை புரை நோக்கிய நோக்கினை – பால:14 46/2
சந்த நுண் துகிலும் வீழ தளிர் கையால் அணைத்து சார – பால:14 54/3
ஏய அரு நுண் பொடி படிந்து உடன் எழுந்து ஒண் – பால:15 20/3
கம்பிக்கின்ற நுண் இடை நோவ கசிவாளும் – பால:17 28/2
பாகு ஒக்கும் சொல் நுண் கலையாள்-தன் படர் அல்குல் – பால:17 30/1
அச்ச நுண் மருங்குலாள் ஓர் அணங்கு_அனாள் அளகபந்தி – பால:19 11/1
தூவு தண் சுண்ணமும் கனக நுண் தூளியும் – பால:20 12/3
நிறம் செய் கோசிக நுண் தூசு நீவி நீவாத அல்குல் – பால:22 13/1
நுனிப்ப அரு நுண் வினை சிலம்பு நோன் கழல் – பால:23 66/3
புள்ளி நுண் பனி பொடிப்பன பொன்னிடை பொதிந்த – அயோ:1 56/3
துவளும் நுண் இடையார் ஆடும் தோகை அம் குழாத்தின் தொக்கார் – அயோ:3 74/4
சின்ன நுண் துகிலினை செறிக்கின்றார் சிலர் – அயோ:4 189/4
வள்ளி நுண் இடை மா மலராளொடும் – அயோ:7 19/2
குழைந்த நுண் இடை குவி இள வன முலை கொம்பே – அயோ:10 9/2
அலவும் நுண் துளி அருவி நீர் அரம்பையர் ஆட – அயோ:10 25/2
குழுவு நுண் தொளை வேயினும் குறி நரம்பு எறிவு உற்று – அயோ:10 28/1
நூற்றினால் நுண் பொடிபட நூறினான் – ஆரண்:9 19/4
மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண் இடையினாளை – ஆரண்:10 76/3
ஐய நுண் மருங்குல் நங்கை அஃது உரை-செய்ய ஐயன் – ஆரண்:11 61/1
வெற்றியர் உளர் எனின் மின்னின் நுண் இடை – ஆரண்:13 54/1
கல் அகல் வெள்ளிடை கானின் நுண் மணல் – ஆரண்:14 93/1
ஈர்ந்த நுண் பளிங்கு என தெளிந்த ஈர்ம் புனல் – கிட்:1 2/1
நோக்கினால் நமை நோக்கு அழி கண்ட நுண் மருங்குல் – கிட்:10 38/1
இலங்கு நுண் இடை ஏந்து இள மென் முலை – கிட்:11 44/2
ஆல் இலை படிவம் தீட்டும் ஐய நுண் பலகை நொய்ய – கிட்:13 39/1
பரவிய கனக நுண் பராகம் பாடு உற – கிட்:14 13/1
உள் இடை யாவும் நுண் பொடியொடு ஒடிய – கிட்:14 20/3
தெள்ளு நுண் பொடிபட கடிது செல்கின்றான் – கிட்:16 26/2
உறைவன கனக நுண் தூளி ஒற்றலான் – கிட்-மிகை:14 2/2
வள்ளி நுண் மருங்குல் என்ன வானவர் மகளிர் உள்ளம் – சுந்:2 36/1
சிந்து நுண் துளியின் சீகர திவலை உருக்கிய செம்பு என தெறிப்ப – சுந்:3 87/4
மாலையும் சாந்தும் கலவையும் பூணும் வயங்கு நுண் தூசொடு காசும் – சுந்:3 89/1
நோற்கின்றார்களும் நுண் பொருள் நுண்ணிதின் – சுந்:3 102/1
கரை இல் நுண் புகை படலையில் கரந்தனர் கலிங்க – சுந்:13 22/3
பரவை நுண் மணல் எண்ணினும் எண்ண_அரும் பரப்பின் – யுத்1:3 50/1
முறிந்து நுண் பொடி ஆயின முடிந்தன முனிவு இலான் முழு மேனி – யுத்1:3 83/2
கூதிர் நுண் குறும் பனி திவலை கோவை கால் – யுத்1:4 28/1
சுண்ண நுண் பொடி ஆகி தொலைந்தன – யுத்1:8 44/3
நூற்று இதழ் கமலம் தந்த நுண் நறும் சுண்ணம் உண்டு – யுத்1:9 20/1
அரவ நுண் இடை அரக்கியர் கணவர்-தம் அற்ற – யுத்2:15 235/1
இளைத்த நுண் மருங்குல் நங்காய் என் எதிர் எய்திற்று எல்லாம் – யுத்2:17 27/3
அயிர் ஒப்பன நுண் துகள்-செய்து அவர்-தம் – யுத்2:18 61/3
பற்றி வந்த மரம் வேறுவேறு உற நொறுக்கி நுண் பொடி பரப்பினான் – யுத்2:19 71/4
வணங்கு நுண் இடை வன முலை செக்கர் வார் கூந்தல் – யுத்3:20 61/1
தசும்பு நுண் நெடும் கோளொடு காலமும் சார – யுத்3:22 162/4
ஆடல் நுண் இடையார் மற்றும் யாவரும் – யுத்3:29 4/2
அகழும் வேலையை காலத்தை அளக்கர் நுண் மணலை – யுத்4:35 17/1
சுனையின் நுண் மணல் தொகையன சுமந்தது தொக்க – யுத்4:35 22/4
எண்ணின் நுண் மணலின் பல வெம் கணை – யுத்4:37 190/2
தேம்பும் நுண் இடை நோவ திரள் முலை – யுத்4:40 8/2
வணங்கு நுண் இடை திரிசடை வணங்க வான் கற்பிற்கு – யுத்4:41 5/1
மின்னின் நுண் இடை மெல்_இயல் சோபனம் – யுத்4-மிகை:40 3/2
மன்னும் நுண் தூசும் மாவும் மதமலை அரசும் ஈயா – யுத்4-மிகை:42 54/2

TOP


நுண்ணிதின் (1)

நோற்கின்றார்களும் நுண் பொருள் நுண்ணிதின்
பார்க்கின்றாரும் பெறும் பயன் பார்த்தியேல் – சுந்:3 102/1,2

TOP


நுண்ணிது (1)

நூலை நயந்து நுண்ணிது உணர்ந்தீர் நுவல் தக்கீர் – கிட்:17 9/2

TOP


நுண்ணிய (2)

இழைக்கும் நுண்ணிய மருங்குலாள் இணை நெடும் கண்கள் – சுந்:3 6/3
எண்ணின் நுண்ணிய என் செயல்-பாற்று எனா – யுத்4:37 190/4

TOP


நுண்ணெனும் (1)

கண்டு நுண்ணெனும் மனத்தினன் கபில மா முனி-தன் – பால-மிகை:9 37/2

TOP


நுண்புலம் (1)

நுண்புலம் நுணங்கு கேள்வி நுழைவினர் எனினும் நோக்கும் – சுந்-மிகை:1 21/3

TOP


நுண்மை (1)

காலமாய் குணித்த நுண்மை கணக்கையும் கடந்து நின்ற – அயோ:3 95/3

TOP


நுண்மையும் (1)

நொந்தனன் இராமன் என்னும் நுண்மையும் நொய்தின் நோக்கி – யுத்3:24 6/3

TOP


நுணங்க (1)

நூல்_முகம் முற்றும் நுணங்க உணர்ந்தாய் – யுத்3:26 33/2

TOP


நுணங்கி (2)

நொய்ய பாசம் புறம் பிணிப்ப நோன்மை இலன் போல் உடல் நுணங்கி
வெய்ய அரக்கர் புறத்து அலைப்ப வீடும் உணர்ந்தே விரைவு இல்லா – சுந்:12 117/1,2
நோயினை நுகரவேயும் நுணங்கி நின்று உணங்கும் ஆவி – யுத்2:17 14/1

TOP


நுணங்கிய (4)

நூல் வரை தொடர்ந்து பயத்தொடு பழகி நுணங்கிய நுவல அரும் உணர்வே – பால:3 7/3
நூல் பெரும் கடல் நுணங்கிய கேள்வியன் நோக்கினன் மறம் கூரும் – சுந்:2 204/1
நூலினால் நுணங்கிய அறிவு நோக்கினை – யுத்1:2 66/1
நுணங்கிய கேள்வியன் நுவல்வதாயினான் – யுத்1:4 84/4

TOP


நுணங்கியரும் (1)

தவன் நுணங்கியரும் வேத தலைவரும் உணரும் தன்மை – யுத்2:16 110/1

TOP


நுணங்கியோன் (1)

நூல் முகத்து ஓங்கு கேள்வி நுணங்கியோன் வணங்கு நெஞ்சன் – யுத்4:42 13/2

TOP


நுணங்கு (8)

நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும் நுணங்கு கேள்வி – பால:4 4/3
நோக்கினன் களிப்பு எழ நுணங்கு கேள்வி நூல் – பால-மிகை:5 14/1
நொந்தனென் அருள்க என நுணங்கு கேள்வியாய் – பால-மிகை:7 5/3
நோக்கினர் இருவரும் நுணங்கு கேள்வியார் – ஆரண்:15 19/4
நுந்துவென் உயிரினை நுணங்கு கேள்வியீர் – கிட்:16 9/3
நோக்கினன் நின்றனன் நுணங்கு கேள்வியான் – கிட்:16 29/1
நுண்புலம் நுணங்கு கேள்வி நுழைவினர் எனினும் நோக்கும் – சுந்-மிகை:1 21/3
நூறினான் வாளினால் நுணங்கு கல்வியான் – யுத்2:16 302/4

TOP


நுணுகும் (1)

நுணுகும் வீங்கும் மற்று அவன் நிலை யாவரே நுவல்வார் – சுந்:2 132/3

TOP


நுணுகுற (1)

நீற்று இயல் நுணுகுற பிசைந்து நீங்கு எனா – யுத்2:16 253/3

TOP


நுத்தையும் (1)

ஒன்றிய திறங்களும் உரைத்து நுத்தையும்
இன்று உனை கூவினன் எனவும் சொல்லினார் – சுந்-மிகை:10 14/3,4

TOP


நுதல் (73)

நுதல் அணி ஓடை பொங்க நுகர் வரி வண்டு கிண்ட – பால:1 16/2
குதை வரி சிலை நுதல் கொவ்வை வாய்ச்சியர் – பால:3 48/1
சோதி நுதல் கரு நெடும் கண் துவர் இதழ் வாய் தரள நகை துணை மென் கொங்கை – பால:5 35/3
பாங்கு உள மற்றவை அருளி பனி பிறையை பழித்த நுதல் பணைத்த வேய் தோள் – பால:5 36/2
நல் நுதல் மடந்தையர் நவை_இல் மாதவன் – பால:5 41/2
செவ்வி நுதல் திருவினொடும் போந்து ஏறுக என ஏறி சிறந்தான்-மன்னோ – பால:5 63/4
இங்கு நின்று எய்யவும் எரிதரும் நுதல் விழி – பால:7 1/2
பட்ட வாள் நுதல் மடந்தையர் பார்ப்பு எனும் தூதால் – பால:9 8/1
சிலை நுதல் கடை உறை செறிந்த வேர்வு தன் – பால:10 48/3
கொழுந்து சேர் நுதல் கோது அறு சுட்டி போய் – பால:11 11/3
உதைய கிரி எனும் கடவுள் நுதல் கிழித்த விழியே போல் உதயம் செய்தான் – பால:11 13/4
கண்_நுதல் வானவன் கனக சடை விரிந்தால் என விரிந்த கதிர்கள் எல்லாம் – பால:11 16/4
சிலை கோட்டு நுதல் குதலை செம் கனி வாய் கரு நெடும் கண் – பால:12 17/1
வாள் நுதல் மங்கையும் வாழ்வு இலள் என்பார் – பால:13 28/4
திலக வாள் நுதல் பிடிகளும் குருளையும் செறிந்த – பால:15 7/2
கண்_நுதல் பொருந்த வரு கண்ணனின் வரும் கார் – பால:15 19/2
வாள் நுதல் கொடிச்சி மாதர் மகவொடு தவழும்-மாதோ – பால:16 7/4
மதி நுதல் வல்லி பூப்ப நோக்கிய மழலை தும்பி – பால:17 9/2
நான் நக நகுகின்றாள் இ நல் நுதல் தோழி ஆம் என்று – பால:18 8/3
மடன் ஒக்கும் மடனும் உண்டோ வாள் நுதல் ஒருத்தி காண – பால:19 10/2
கூற்று உறழ் நயனங்கள் சிவப்ப கூன் நுதல்
ஏற்றி வாள் எயிறுகள் அதுக்கி இன் தளிர் – பால:19 21/1,2
மன்றல் நாறு ஒரு சிறை இருந்து ஓர் வாள்_நுதல் – பால:19 28/1
நல் நுதல் ஒருத்தி தன்-பால் அகத்து உள நாணும் நீத்தாள் – பால:19 57/2
மாம் தளிர் மேனியாள் ஓர் வாள்_நுதல் மதனன் எங்கும் – பால:21 11/1
பைம் கரும் கூந்தல் செ வாய் வாள் நுதல் ஒருத்தி உள்ளம் – பால:21 14/1
மை தவழ்ந்த கரும் கண் ஓர் வாள்_நுதல் – பால:21 22/1
வண்ண வாய் ஒரு வாள்_நுதல் மானிடற்கு – பால:21 25/1
மனம் நெகும்படி வாடி ஓர் வாள்_நுதல் – பால:21 26/2
நாமத்தால் அழிவாள் ஒரு நல்_நுதல் – பால:21 39/1
ஒழிந்த என் இனி ஒள்_நுதல் தாதை-தன் – பால:21 53/1
அளக வாள் நுதல் அரும்_பெறல் திலகமும் அழித்தாள் – அயோ:3 2/4
வில் திரு நுதல் மாதே அம் மலர் விரி கோங்கின் – அயோ:9 12/2
அன்ன மென் நடையாய் நின் அளக நல் நுதல் அப்பும் – அயோ:9 14/3
வில்லி வாங்கிய சிலை என பொலி நுதல் விளக்கே – அயோ:10 13/1
வில் கொள் வாள் நுதல் விளங்கு இழை இளம் தளிர் கொழுந்தே – அயோ:10 17/1
மன்னர் மன்னவன் மைந்த இ வாள்_நுதல் – ஆரண்:4 36/3
நல் நுதல் மகளிர் சிந்தை நல் நெறி பால அல்ல – ஆரண்:6 37/2
பேர விட்டவன் நுதல் அணி ஓடையின் பிறங்கும் – ஆரண்:8 19/3
வண்டு அலங்கு நுதல் திசைய வய களிற்றின் மருப்பு ஒடிய அடர்ந்த பொன்_தோள் – ஆரண்:10 3/1
வில் ஒக்கும் நுதல் என்றாலும் வேல் ஒக்கும் விழி என்றாலும் – ஆரண்:10 74/1
புது மதி சேர் நுதல் அரம்பை-தனை புணர உதித்தனம் யாம் புவனி மீதே – ஆரண்-மிகை:4 5/4
அயில் விழி குமுத செம் வாய் சிலை நுதல் அன்ன போக்கின் – கிட்:11 76/1
நல் நுதல் தேவியை காண்டும் நாம் எனின் – கிட்:16 20/3
கண் நுதல் மிடறு என கருகி கார் விசும்பு – கிட்-மிகை:10 1/3
கண்_நுதல் ஒழிய செல்லும் கைலை அம் கிரியும் ஒத்தான் – சுந்:1 25/4
அந்தம்_இல் கீழ் திசை அளக வாள் நுதல்
சுந்தரி முகம் என பொலிந்து தோன்றிற்றே – சுந்:2 51/3,4
நாயகன் திருமனை-நின்று நல்_நுதல் – சுந்:3 52/3
வில் கூடு நுதல் திரு நின்னிடை மேவ ஏவி – சுந்:4 94/2
இந்து_நுதல் நின்னொடு இவண் எய்தி இகல் வீரன் – சுந்:5 9/1
முழுமுதல் கண்_நுதல் முருகன் தாதை கைம் – சுந்:9 45/1
பிள்ளப்பட்டன நுதல் ஓடை கரி பிறழ் பொன் தேர் பரி பிழையாமல் – சுந்:10 28/1
காரே பட்டன நுதல் ஓடை கட கரியே பட்டன கடிது என்றார் – சுந்:10 29/3
திங்கள் வாள் நுதல் மடந்தையர் சேயரி கிடந்த – சுந்:12 49/1
வில் கடந்த நுதல் சிலர் வீடினார் – சுந்-மிகை:13 4/4
மாண் பிறந்து அமைந்த கற்பின் வாள்_நுதல் நின்-பால் வைத்த – சுந்-மிகை:14 41/1
இந்து அன்ன நுதல் பேதை இருந்தாள் நீங்கா இடர் கொடியேன் – யுத்1:1 8/1
வஞ்சனை மனிதரை இயற்றி வாள் நுதல்
பஞ்சு அன மெல் அடி மயிலை பற்றுதல் – யுத்1:2 16/1,2
நன்_நுதல் தீண்டுமேல் நணுகும் கூற்று என – யுத்1:4 98/3
நல் நுதல் சீதையால் என் ஞாலத்தால் பயன் என் நம்பீ – யுத்1:12 38/2
மந்திர சுற்றத்தாரும் வாள்_நுதல் சுற்றத்தாரும் – யுத்2:16 5/1
வீரபட்டம் என நுதல் வீக்கினான் – யுத்2:16 69/4
கண் ஆர் நுதல் பெருமான் இவர்க்கு அரிதோ என கடை பார்த்து – யுத்3:27 139/3
மொய் வித்தகன் தடம் தோளினும் நுதல் சூட்டினும் மூழ்க – யுத்3:27 161/4
ஏற்ற மா நுதல் விழியிடை தோன்றினர் இவரால் – யுத்3:30 25/2
சாலும் மா பெரும் தலைவர்கள் தயங்கு எரி நுதல் கண் – யுத்3-மிகை:30 4/1
கண்டு போய் வரும் காட்சியின் கண்_நுதல்_பரமன் – யுத்4-மிகை:35 3/2
வீரபட்டம் என நுதல் வீக்கினான் – யுத்4-மிகை:39 8/8
மருங்கு அடர் களப கொங்கை மதி நுதல் மிதிலை வல்லி – யுத்4-மிகை:41 55/2
காவல் மா மலை கொணர்ந்து நீ கண்_நுதல் கோயில் – யுத்4-மிகை:41 111/3
தேய்ந்த மா மதி போலும் சிலை நுதல்
வாய்ந்த வானர வாரணம் மாருதி – யுத்4-மிகை:41 118/1,2
நல்_நுதல் தன்னை தேடி தென் திசை நடக்கும் ஐயன் – யுத்4-மிகை:41 235/2
கங்கை வார் சடையின் ஏற்றான் கண்_நுதல் ஒருவன் இ நாள் – யுத்4-மிகை:42 29/2
திலக வாள் நுதல் வெண் திங்கள் சிந்தை நொந்து எளிதின் தேய – யுத்4-மிகை:42 37/2

TOP


நுதல்-காறும் (1)

நாட்டின் நீவிரும் நன்_நுதல்-காறும் இ – ஆரண்:4 38/3

TOP


நுதல்-தன்னை (2)

நன்_நுதல்-தன்னை நோக்கி அறிதியோ நங்கை என்றார் – சுந்:6 47/4
நன்_நுதல்-தன்னை தேடி நால் பெரும் திசையும் போந்த – சுந்:12 77/2

TOP


நுதல்-தன்னொடும் (1)

இந்து நன்_நுதல்-தன்னொடும் ஏகினார் – ஆரண்:3 26/4

TOP


நுதலவள் (2)

பிறை எனும் நுதலவள் பெண்மை என் படும் – பால:10 40/1
நல்_நுதலவள் நின் கேள் நளிர் கடல் நிலம் எல்லாம் – அயோ:8 40/3

TOP


நுதலவன் (1)

நுதலவன் சிலை விலின் நோன்மை நூறிய – அயோ:11 49/3

TOP


நுதலார் (1)

நல் நுதலார் மூவருக்கும் நாலு கூறிட்டு அளித்தான் – பால:12 21/4

TOP


நுதலார்க்கு (2)

பெரும் தடம் கண் பிறை_நுதலார்க்கு எலாம் – பால:2 36/1
பிறை உடை நுதலார்க்கு ஏற்ற பிறந்த இல் கடன்கள் செய்ய – யுத்2:17 37/1

TOP


நுதலால் (1)

நுதியால் பல நுதலால் பல நொடியால் பல பயிலும் – யுத்2:18 157/3

TOP


நுதலாள் (2)

சந்தி கலா வெண்மதி வாள் நுதலாள் தனக்கும் – பால:17 22/1
இழைவாள் நுதலாள் இடை போல் இடையே – கிட்:10 54/3

TOP


நுதலாளொடு (1)

பாகம் தரும் நுதலாளொடு பவளம் தரும் இதழான் – அயோ:7 4/2

TOP


நுதலாளோடு (1)

இந்துவின் நுதலாளோடு இளவலொடு இனிது ஏறா – அயோ:8 31/4

TOP


நுதலானினும் (1)

கரிய மாலினும் கண்_நுதலானினும் – அயோ:2 15/1

TOP


நுதலி (4)

தனு எனும் திரு நுதலி வந்தனள் சரதம் வன் துயர் தவிர்தியே – கிட்:10 66/4
பொன் திணி விசும்பினிடை நல் நுதலி போனாள் – கிட்:14 70/4
காட்டினன் ஓர் ஆழி அது வாள் நுதலி கண்டாள் – சுந்:4 63/4
திறம் தெரிவது என்னை-கொல் இ நல்_நுதலி செய்கை – சுந்:4 64/4

TOP


நுதலிக்கு (1)

குனி வரு நுதலிக்கு கொழுநன் இன்றியே – பால:19 50/2

TOP


நுதலிய (1)

வாழ்வினை நுதலிய மங்கலத்து நாள் – அயோ:4 158/1

TOP


நுதலியர் (2)

வகுத்த வாள் நுதலியர் வதன ராசி போல் – அயோ:5 4/2
வாள் உலாம் நுதலியர் மருங்குல் அல்லதே – அயோ:12 48/4

TOP


நுதலியை (1)

இந்து நோக்கிய நுதலியை காத்து அயல் இருண்ட – ஆரண்:6 83/3

TOP


நுதலியோடும் (1)

நின்று நிலைபெற்றுளது நீள் நுதலியோடும்
குன்று புரை தோளவர் எழுந்து நெறி கொண்டார் – கிட்:14 70/2,3

TOP


நுதலில் (4)

ஐயவி நுதலில் சேர்த்தி ஆய் நிற அயினி சுற்றி – பால:22 18/3
நகை எழுந்தன நிவந்தன புருவம் நல் நுதலில்
சிகை எழும் சுடர் விழியினன் அசனியும் திகைப்ப – பால-மிகை:9 12/2,3
என்றலும் இரு கை கூப்பி இரு நிலம் நுதலில் தோய – சுந்-மிகை:7 2/1
கால் தரு காலில் கையில் கழுத்தினில் நுதலில் கண்ணில் – யுத்3:27 94/2

TOP


நுதலின் (1)

வேளையே பொடியதாக விழிக்கும் நீள் நுதலின் வெண் பூம் – யுத்4-மிகை:42 22/3

TOP


நுதலினன் (3)

ஏற்றிய நுதலினன் இருண்ட கார் மழை – ஆரண்:7 131/1
கண் உடை நுதலினன் கணிச்சி வானவன் – கிட்:10 98/1
எரி விழி நுதலினன் இசையும் நின் தவத்து – யுத்1-மிகை:2 5/1

TOP


நுதலினார் (1)

வில் பகை நுதலினார் தம் கலவியில் வெறுத்து நீத்த – பால:16 22/3

TOP


நுதலினாரும் (1)

வில் கலை நுதலினாரும் மைந்தரும் வெறுத்து நீத்த – பால:10 5/3

TOP


நுதலினால் (1)

பவர்ந்த வாள் நுதலினால் தன் பவள வாய்க்கு உவமை பாவித்து – கிட்:13 50/3

TOP


நுதலினாள் (1)

நல் நுதலினாள் முலை நயந்தனன் அ நல்லாள் – கிட்:14 57/2

TOP


நுதலினாளை (1)

ஓடை வாள் நுதலினாளை ஒளிக்கலாம் உபாயம் உன்னி – கிட்:10 59/1

TOP


நுதலினோடு (1)

கொதி நுனை வேல் கண் மாதர் குறத்தியர் நுதலினோடு
மதியினை வாங்கி ஒப்பு காண்குவர் குறவர் மன்னோ – பால:16 6/3,4

TOP


நுதலை (4)

நானே அவண் உய்ப்பென் இ நன்_நுதலை – ஆரண்:13 16/3
நல் நாளும் நளினம் நாணும் தளிர்_அடி நுதலை நாணி – கிட்:13 56/1
நஞ்சம் கொண்ட கண்_நுதலை போல் நகுகின்றான் – சுந்:2 84/3
நடித்து வாழ் தகைமையதோ அடிமைதான் நன்_நுதலை – சுந்:2 218/1

TOP


நுதற்கு (2)

பிசைந்து சிந்தூரமாக பெரு நுதற்கு அணிந்து கொண்டான் – யுத்2-மிகை:16 32/4
பிசைந்து மோந்து உடல் பூசினன் பெரு நுதற்கு அணிந்தே – யுத்4-மிகை:41 26/4

TOP


நுதி (10)

கூர்த்த நுதி மு தலை அயில் கொடிய கூற்றை – பால:7 32/2
நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல் இணை – பால:10 36/1
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார் – பால:13 34/2
கவரும் கூர் நுதி கண் எனும் காலவேல் – பால:14 28/2
நோக்கிய மானை நோக்கி நுதி உடை மதியின் ஒன்றும் – ஆரண்:11 56/1
கரும் கயல்களின் பிறழ் கண் மூக்கின் நுதி காண – கிட்:14 44/4
கொட்புறு புரவி தெய்வ கூர் நுதி குலிசத்தாற்கும் – சுந்:1 24/1
எல் அரக்கும் அயில் நுதி வேல் இராவணனும் இ ஊரும் – சுந்:2 228/3
நோக்கிய கண்களை நுதி கொள் மூக்கினால் – சுந்:5 60/3
ஏறும் நுதி வேலின் இறைப்பொழுதில் – யுத்3:20 98/2

TOP


நுதியால் (2)

மலைகளின் புரண்டு வீழ வள் உகிர் நுதியால் வாங்கி – யுத்1:3 141/1
நுதியால் பல நுதலால் பல நொடியால் பல பயிலும் – யுத்2:18 157/3

TOP


நுந்த (2)

நுந்த நுந்த முறைமுறை நூறினான் – யுத்2:19 159/4
நுந்த நுந்த முறைமுறை நூறினான் – யுத்2:19 159/4

TOP


நுந்துவென் (1)

நுந்துவென் உயிரினை நுணங்கு கேள்வியீர் – கிட்:16 9/3

TOP


நுந்துவெனால் (1)

நூறு_ஆயிரம் ஆயினும் நுந்துவெனால் – யுத்2:18 41/4

TOP


நுந்தை (9)

துறந்து போயினான் நுந்தை தோன்றல் நீ – அயோ:11 125/1
வானின் நுந்தை சொல் மரபினால் உடை – அயோ-மிகை:14 7/1
நோக்கினால் ஐய நொய்து இவண் எய்திய நுந்தை
மூக்கினால் இது முறிந்தமை முடிந்ததால் மொய்ம்பின் – ஆரண்:13 82/1,2
துடைத்தனன் நுந்தை தன் குவவு தோளினால் – ஆரண்:13 111/4
மூலமே தந்த நுந்தை ஆம் என முறையின் நிற்றி – கிட்:9 26/4
புகல்_அரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை – யுத்1:4 143/4
யாவரும் வந்து நுந்தை அடி தொழுது ஏவல் செய்வார் – யுத்2:17 54/2
தன்னொடே பொருதியோ சொல் நுந்தை தலை தள்ள நின்ற தனி வள்ளலாம் – யுத்2:19 75/2
கூயினன் நுந்தை என்றார் குன்று என குவிந்த தோளான் – யுத்3:22 2/1

TOP


நுந்தைக்கு (4)

மாதுலன் அவன் நுந்தைக்கு வாழ்வு இனி உண்டோ – அயோ:2 81/3
மற்றும் நுந்தைக்கு வான் பகை பெரிது உள மறத்தார் – அயோ:2 82/1
சொல்லுதி நுந்தைக்கு என்றான் நன்று என தொழுது போனான் – கிட்:11 77/4
சுரக்கும் நுந்தைக்கு நீ செய கடவன கடன்கள் – யுத்3:22 65/3

TOP


நுந்தைபால் (1)

வெய்தின் ஏற்றினார் வீர நுந்தைபால்
பொய்_இல் மா கடன் கழித்தி போந்து என்றார் – அயோ:11 123/3,4

TOP


நுந்தையை (1)

செயிரின் ஒரு பொழுதில் நுந்தையை யாம் சீறி – யுத்1:3 167/2

TOP


நும் (47)

எது வினை இடர் இலை இனிது நும் மனையும் – பால:5 130/3
உள்ளத்து ஆர் உயிர்_அன்னாள் மேல் உதைபடும் என்று நீர் நும்
கள்ளத்தால் புதைத்தி என்னா முன்னையின் கனன்று மிக்காள் – பால:19 59/3,4
யாது நும் கருத்து என இனைய கூறினான் – அயோ:1 30/4
நும் மகன் கையடை நோக்கும் ஈங்கு என்றான் – அயோ:1 84/4
மன்னவன் பணி அன்று ஆகின் நும் பணி மறுப்பனோ என் – அயோ:3 114/1
நோயீர் அல்லீர் நும் கணவன் தன் உயிர் உண்டீர் – அயோ:11 74/1
முன்னை நும் குல முதலுளோர்கள்-தாம் – அயோ:11 115/1
மூக்கு அரிந்து நும் குலத்தை முதல் அரிந்தீர் இனி உமக்கு – ஆரண்:6 117/3
அ பழியால் உலகு அனைத்தும் நும் பொருட்டால் அழிந்தன ஆம் அறத்தை நோக்கி – ஆரண்:6 126/2
மூக்கொடு அன்றி நும் முதுகொடும் போம் பழி முயன்றீர் – ஆரண்:8 6/4
அனக மா நெறி படர் அடிகள் நும் அலால் – ஆரண்:12 39/1
உரிய நும் குலத்து உளேன் ஒருவன் யான் என – ஆரண்-மிகை:10 13/1
செம்மலுக்கு ஏவல் செய்வேன் தேவ நும் வரவு நோக்கி – கிட்:2 16/2
பூதர புயத்து வீரர் நும் ஒக்கும் புனிதர் யாரே – கிட்:2 21/2
ஈண்டு நும் கோயில் எய்தி இனிதின் நும் இருக்கை காண – கிட்:3 29/3
ஈண்டு நும் கோயில் எய்தி இனிதின் நும் இருக்கை காண – கிட்:3 29/3
வேண்டும் நும் அருள் என் என்றான் வீரனும் விழுமிது என்றான் – கிட்:3 29/4
நூல் இயற்கையும் நும் குலத்து உந்தையர் – கிட்:7 95/1
எற்றும் நும் அரசு எய்துவையாம் என – கிட்:7 100/3
பாவியாது பருகுதிர்-போலும் நும்
காவி நாள்_மலர் கண்ணியர் காதல் நீர் – கிட்:11 30/3,4
தொடர்ந்து நும் பணியின் தீர்ந்தால் அதுவும் நும் தொழிலே அன்றோ – கிட்:11 56/2
தொடர்ந்து நும் பணியின் தீர்ந்தால் அதுவும் நும் தொழிலே அன்றோ – கிட்:11 56/2
பூண்டு நின்று உய்த்தல்-பாலார் நும் கழல் புகுந்துளோரும் – கிட்:11 58/4
எங்கு இருந்தான் நும் கோமான் என்றலும் எதிர்கோள் எண்ணி – கிட்:11 100/2
ஒப்பு உறின் ஒப்பார் நும் அலது இல்லீர் ஒருகாலே – கிட்:17 10/3
இற்றை நும் அருளும் எம் கோன் ஏவலும் இரண்டு-பாலும் – கிட்:17 24/3
நன் மான்களை நோக்கி நும் நாமமும் மாய்ப்பென் இன்றே – சுந்:4 87/3
எண்தான் உழந்து இட்ட நும் ஏந்து இழை யாங்கள் காட்ட – சுந்:4 90/3
எங்கு உலப்புறும் நும் சீர்த்தி நும்மொடும் இயைந்தது என்றால் – சுந்:12 83/3
போய் இற்றீர் நும் புலன் வென்று போற்றிய – சுந்:12 88/1
என் நினைந்து என்ன செய்தீர் நும் உயிர்க்கு இறுதி என்ன – சுந்-மிகை:14 6/4
நில்லு-மின் என்று நீர் யாவிர் நும் நிலை – யுத்1:4 50/3
ஒப்புற நோக்கி நும் உணர்வினால் என்றான் – யுத்1:4 55/4
நூல் வலி காட்டும் சிந்தை நும் பெரும் தூதன் வெம் போர் – யுத்1:12 42/1
கல் கொண்டும் மரங்கள் கொண்டும் கை கொண்டும் களித்து நும் வாய் – யுத்2:15 139/1
கூயினன் நும் முன் என்று அவர் கூறலும் – யுத்2:16 65/1
காக்கலாம் நும் முன்-தன்னை எனின் அது கண்டது இல்லை – யுத்2:16 142/1
அஞ்சினேன் அடியனேன் நும் அடைக்கலம் அமுதின் வந்தீர் – யுத்2:17 10/4
கண் எலாம் நும் கண் ஆக்கி காமவேள் என்னும் நாமத்து – யுத்2:17 12/2
சொல்லும் நும் கருத்து என முனிந்து சொல்லினான் – யுத்2:18 6/4
மெய் எப்படி செய்தனன் நும் முன் விரைந்து – யுத்2:18 50/2
சென்று தீய நும் முனோன் தெரிந்து தீமை தேடினான் – யுத்2-மிகை:16 7/2
மனிதரை காட்டி நும் தம் மலை-தொறும் வழிக்கொளீரே – யுத்3:27 98/4
நினையும் நல் வரவு ஆக நும் வரவு என நிரம்பி – யுத்3:30 33/3
நன்று நும் உரை நாயகர் பிழைத்து நம் உயிர் கொண்டு – யுத்3-மிகை:31 8/3
முன்பு நான் நினைந்திருந்தது அ பரிசு நும் முயற்சி – யுத்4:41 13/3
நோற்றனள் வயிற்றின் வந்து உதித்து நும் முனாற்கு – யுத்4:41 97/2

TOP


நும்-பால் (4)

மானவ மற்றும் கேளாய் வழி பகை உடையன் நும்-பால்
ஈனம் இல் எந்தை சீற்றம் நீக்கினான் என்ன முன் ஓர் – பால:24 32/2,3
வேண்டுமோ துணையும் நும்-பால் வில்லினும் மிக்கது உண்டோ – கிட்:11 58/2
மல்லினால் செய்த புயத்தவன் மாற்றங்கள் நும்-பால்
வில்லினால் சொல்லின் அல்லது வெம் திறல் வெள்க – யுத்2:16 231/2,3
ஆர் உமக்கு அறையல்-பாலார் அனுமனும் உளனோ நும்-பால் – யுத்2:17 45/4

TOP


நும்-மேல் (1)

கடவுளர் படையை நும்-மேல் வெய்யவன் துரந்த-காலை – யுத்3:22 20/1

TOP


நும்பி (3)

கண்டான் நும்பி அறம் கடக்கிலான் – கிட்:16 41/2
தெரிந்து காட்டினன் நும்பி சினத்தினான் – யுத்1:9 62/4
இறந்தனன் நும்பி அம்பின் கொன்றனன் இராமன் என்றார் – யுத்2:17 75/4

TOP


நும்பிக்கு (1)

நன்று நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து – அயோ:4 5/3

TOP


நும்மனோர் (1)

கணம் கொள்கை நும்மனோர் கடன்மை காண் என – யுத்1:4 84/2

TOP


நும்மினை (1)

நும்மினை கொல்லாம் நெஞ்சம் அஞ்சலை நுவல்தி என்றான் – சுந்:12 84/4

TOP


நும்முடை (2)

இணங்கர் இன்மையால் இறைவ நும்முடை
கணங்கள் காவல் உன் கடன்மை என்றனர் – கிட்:3 62/3,4
தூயவர் துணிதல் உண்டோ நும்முடை சூழல் எல்லாம் – சுந்:6 48/2

TOP


நும்முனை (1)

நும்முனை வாலின் சுற்றி நோன் திசை நான்கும் தாவி – யுத்2:16 187/1

TOP


நும்முனோனை (1)

நொய்தினில் துளக்கி ஐய நுன் எதிர் நும்முனோனை
எய்து இற துணித்து வீழ்த்தல் இனிது அன்று என்று இனைய சொன்னேன் – யுத்2:16 166/2,3

TOP


நும்மை (3)

வெல்லும்படி நும்மை விளம்பும் என – யுத்2:18 70/3
மற்று எலாம் நும்மை போல வாயினால் சொல்ல மாட்டேன் – யுத்3:27 84/1
நினைவதற்கு அரிது நும்மை பிரிக என்றல் நீவிர் வைப்பும் – யுத்4-மிகை:42 67/3

TOP


நும்மொடும் (1)

எங்கு உலப்புறும் நும் சீர்த்தி நும்மொடும் இயைந்தது என்றால் – சுந்:12 83/3

TOP


நும்மோடும் (1)

ஐய நும்மோடும் எங்கள் அரி_குலத்து அரசனோடும் – கிட்:11 62/1

TOP


நும (1)

தம் தாரமும் உறு கிளையும் தமை எதிர் தழுவும்-தொறும் நும தமர் அல்லேம் – சுந்:10 41/1

TOP


நுமக்கு (3)

உரை உளது நுமக்கு உறுதி உணர்வு உளதேல் என்று உரைப்பாள் – ஆரண்:6 116/4
ஏவர் ஓடினர் இராக்கதர் நுமக்கு இடைந்து ஓடும் – ஆரண்:8 3/3
அறம் துணை நுமக்கு உற்றான் தன் வாய்மையை அழிக்கும்-ஆயின் – கிட்:11 64/3

TOP


நுமக்கே (1)

கண்ணி உணர்ந்தீர் கருமம் நுமக்கே கடன் என்ன – கிட்:17 16/2

TOP


நுமது (1)

வம்-மின் அட வம்-மின் எதிர் வந்து நுமது ஆர் உயிர் வரங்கள் பிறவும் – யுத்3:31 147/1

TOP


நுமரில் (1)

சீறிய நுமரில் எம் கோன் தாக்கிட அரக்கன் சீறி – யுத்4-மிகை:41 8/3

TOP


நுமரொடும் (1)

நொய்தின் அ மலை நீங்கி நுமரொடும்
பொய்கையின் கரை பிற்பட போதிரால் – கிட்:13 15/1,2

TOP


நுரை (7)

துகிலினொடு இகலுவ சுதை புரை நுரை கார் – பால:2 45/3
நுரை கொழுந்து எழுந்து ஓங்கி நுடங்கலால் – அயோ:7 22/1
தூய மலர் போல் நுரை தொகையும் முத்தும் சிந்தி புடை சுருட்டி – யுத்1:1 3/3
வெள்ளி வண்ண நுரை கலவை வெதும்பும் அண்ணல் திருமேனிக்கு – யுத்1:1 9/3
கடல் நுரை துகில் சுற்றி கதிர் குழாம் – யுத்2:16 68/3
நுரை குடையும் வெண் குடையும் சாமரையும் என சுமந்து பிணத்தின் நோன்மை – யுத்4:33 21/3
உரு விளை பவள வல்லி பால் நுரை உண்டது-என்ன – யுத்4:40 32/1

TOP


நுரைய (1)

கவரி வெண்குடை எனும் நுரைய கை_மலை – ஆரண்:7 119/1

TOP


நுரையின் (1)

ஆவி விரி பால் நுரையின் ஆடை அணை ஆக – அயோ:5 10/3

TOP


நுரையினை (1)

பிழிந்த பால் வழி நுரையினை பொருவின பிடவம் – கிட்:10 46/4

TOP


நுரையும் (1)

நீரும் நீர் நுரையும் என நின்றவன் – யுத்2:15 98/2

TOP


நுரையை (1)

சுதை கண் நுரையை பொருவு தூசு கொடு தூய்தா – பால:15 16/2

TOP


நுரையொடு (1)

வான யாறுகள் வாசி வாய் நுரையொடு மயங்கி – யுத்3:22 99/2

TOP


நுவல் (3)

நூலை நயந்து நுண்ணிது உணர்ந்தீர் நுவல் தக்கீர் – கிட்:17 9/2
நோய் தந்தவனே நுவல் தீர்வும் எனா – யுத்1:3 113/3
என்ற போதில் அரக்கனும் நோக்கினன் எம்பிரான் நுவல் மாற்றம் – யுத்2-மிகை:16 54/1

TOP


நுவல்-காலையின் (1)

நூறு_ஆயிரம் படுத்தான் இது நுவல்-காலையின் இளையோன் – யுத்2:18 162/2

TOP


நுவல்-போது (1)

நூறு_ஆயிரம் மத மால் கரி ஒரு நாழிகை நுவல்-போது
ஆறாய் நெடும் கடும் சோரியின் அளறு ஆம் வகை அரைப்பான் – யுத்3:22 117/1,2

TOP


நுவல்-மின் (1)

நோக்கிய இலங்கை வேந்தன் உற்றது நுவல்-மின் என்றான் – யுத்2:18 260/1

TOP


நுவல்க (1)

நொவ் இடை குயிலே நுவல்க என்றனன் – சுந்:3 97/3

TOP


நுவல்கில்லாள் (1)

நோக்கும் நுவல கருதும் ஒன்றும் நுவல்கில்லாள்
மேக்கு நிமிர் விம்மலள் விழுங்கலுறுகின்றாள் – சுந்:4 67/3,4

TOP


நுவல்தி (1)

நும்மினை கொல்லாம் நெஞ்சம் அஞ்சலை நுவல்தி என்றான் – சுந்:12 84/4

TOP


நுவல்வதாயினான் (2)

நுணங்கிய கேள்வியன் நுவல்வதாயினான் – யுத்1:4 84/4
நொடிகுவது உளது என நுவல்வதாயினான் – யுத்3:24 81/4

TOP


நுவல்வது (7)

நொய்யவே நொய்ய என்றோ பலபட நுவல்வது அம்மா – பால:22 14/4
உறு வலி அன்பின் ஊங்கு ஒன்று உண்டு என நுவல்வது உண்டோ – அயோ:6 5/4
நொடிகுவென் யான் அது நுவல்வது எங்ஙனம் – அயோ:11 90/2
நொந்து மாழ்கினான் நுவல்வது ஓர்கிலா – அயோ-மிகை:11 9/3
நொந்தனர் தளர்ந்தனர் நுவல்வது ஓர்கிலார் – கிட்:11 109/4
நொந்தனென் ஆதலின் நுவல்வது ஆயினேன் – யுத்1:2 73/4
நுனித்தது ஒன்று நுவல்வது ஒன்று ஆயினாள் – யுத்4:40 10/3

TOP


நுவல்வார் (1)

நுணுகும் வீங்கும் மற்று அவன் நிலை யாவரே நுவல்வார்
அணுவில் மேருவில் ஆழியான் என செலும் அனுமன் – சுந்:2 132/3,4

TOP


நுவல்வென் (1)

நொந்தனென் ஆக்கை நொய்தின் ஆற்றி மேல் நுவல்வென் என்னா – யுத்2:19 207/3

TOP


நுவல்வோர் (1)

நூறு_ஆயிர மத யானையின் வலியோர் என நுவல்வோர்
மாறு ஆயினர் ஒரு கோல் பட மலை-போல் உடல் மறிவார் – யுத்3:31 104/1,2

TOP


நுவல (5)

நூல் வரை தொடர்ந்து பயத்தொடு பழகி நுணங்கிய நுவல அரும் உணர்வே – பால:3 7/3
நோக்கும் நுவல கருதும் ஒன்றும் நுவல்கில்லாள் – சுந்:4 67/3
நோய் தெரிந்து உணரான் தேடி கொண்டனன் நுவல யாங்கள் – யுத்1:9 32/2
நுவல யாம் வர வேண்டிய நோக்கதோ – யுத்1:9 58/1
நூறு_ஆயிரம் மத வெம் கரி ஒரு நாழிகை நுவல
கூறு ஆயின பயமுற்று ஒரு குலைவு ஆயின உலகம் – யுத்2:18 146/1,2

TOP


நுவலகிற்றிலம் (1)

நொய்து சென்று உற்றது நுவலகிற்றிலம்
எய்தும் வந்து என்பது ஓர் இறையும் கண்டிலம் – கிட்:16 8/2,3

TOP


நுவலகிற்றிலள் (1)

நோம் உரும் நோய் நிலை நுவலகிற்றிலள்
ஊமரின் மனத்திடை உன்னி விம்முவாள் – பால:10 42/1,2

TOP


நுவலல் (1)

நோக்கினால் சுமந்திரன் நுவலல் உற்றதை – அயோ:12 4/1

TOP


நுவலல்-பாலார் (1)

நோயும் நின் முனியும் அல்லால் வெல்வரோ நுவலல்-பாலார் – யுத்4:37 210/4

TOP


நுவலற்கு (1)

நோனாது அதனை நுவலற்கு அரும் கோடி வெள்ளம் – பால:16 43/2

TOP


நுவலா (1)

நூக்கி நொய்தினில் வெய்து இழையேல் என நுவலா
மூக்கும் காதும் வெம் முரண் முலை கண்களும் முறையால் – ஆரண்:6 86/2,3

TOP


நுவலாதே (1)

நோய் தந்து என்னை நோவன செய்து நுவலாதே
தாய் தந்து என்ன தன்னை இரந்தால் தழல் வெம் கண் – அயோ:3 33/2,3

TOP


நுவலும் (1)

நொய்தின் ஆர் அமுதம் கொண்ட நோன்மையே நுவலும் நாகர் – சுந்:1 21/2

TOP


நுவன்ற (3)

நொய்து அலர் வலி தொழில் நுவன்ற மொழி ஒன்றோ – ஆரண்:10 51/3
நொய்தினின் அடைத்து மான தானையான் நுவன்ற நம் ஊர் – யுத்1:9 66/2
நூல் மறைந்து ஒளிப்பினும் நுவன்ற பூதங்கள் – யுத்2:18 101/1

TOP


நுவன்றது (1)

நோக்கினள் நின்றனள் நுவன்றது ஓர்கிலள் – பால:19 51/3

TOP


நுவன்றனன்-அரோ (1)

நொடிதி நின் குறை என் என்றலும் நுவன்றனன்-அரோ
முடிவு_இல் வெம் செரு எனக்கு அருள் செய்வான் முயல்க எனா – கிட்:5 5/3,4

TOP


நுவன்றான் (2)

நூறுவதுவே கருமம் என்பது நுவன்றான் – யுத்1:2 56/4
நூழில் வெம் சமம் நோக்கி அ இராவணன் நுவன்றான்
தாழ் இல் என் படை தருக்கு அறும் என்பது ஓர் தன்மை – யுத்4:32 11/3,4

TOP


நுவன்றிலென் (1)

நொந்திலென் இனையது ஒன்றும் நுவன்றிலென் மனிதன் நோன்மை – யுத்2:19 288/3

TOP


நுவன்றுழி (1)

நொவ் இடை மயில் அனாட்கு நுவன்றுழி வருணன் நோனாது – யுத்4:41 24/3

TOP


நுவன்றுளாள் (1)

நோய் உனக்கு யான் என நுவன்றுளாள் அவள் – யுத்1:2 81/3

TOP


நுவன்றேன் (1)

நொதுமல் திண் திறல் அரக்கனது இலங்கையை நுவன்றேன்
அது மற்று அவ்வழி அரணமும் பெருமையும் அறைந்தேன் – யுத்1:5 67/1,2

TOP


நுழை (5)

நுழை கலி கரும் கண்ணியர் நூபுர – பால:14 47/2
குன்றின் முழை-தோறும் நுழை கோள் அரிகள் ஒத்தார் – பால:15 24/4
முரண் தொகு முழை நுழை முழு வெண் திங்களை – ஆரண்:15 14/3
புற்றினூடு நுழை நாகம் அன்ன புகை வேக வாளிகள் புக புக – யுத்2:19 86/2
இருப்பு கம்மியற்கு இழை நுழை ஊசி என்று இயற்றி – யுத்4:37 121/1

TOP


நுழை-தொறும் (1)

வெம்பு காட்டிடை நுழை-தொறும் வெரிந் உற பாய்ந்த – ஆரண்:8 5/2

TOP


நுழைகில (1)

தாக்குகின்றன நுழைகில தலையது தாமரை தடம் கண்ணான் – யுத்2:16 328/1

TOP


நுழைகிற்க (1)

புண் நுழைகிற்க உழைக்கும் ஆனை போல்வான் – அயோ:3 19/4

TOP


நுழைகிற்ப (1)

நொய்து என்று ஓதும் தன்மைய ஆக நுழைகிற்ப – யுத்4:37 138/4

TOP


நுழைகிற்பன (1)

மருமத்தினும் நுழைகிற்பன மழை ஒப்பன வானோர் – யுத்4:37 47/2

TOP


நுழைகின்ற (1)

பை அரா நுழைகின்ற போன்றன பண் கனிந்து எழு பாடலே – அயோ:3 58/4

TOP


நுழைகின்றார் (1)

மன்றல் மணம் நாறு பட மாடம் நுழைகின்றார்
குன்றின் முழை-தோறும் நுழை கோள் அரிகள் ஒத்தார் – பால:15 24/3,4

TOP


நுழைதரு (1)

வான மா மழை நுழைதரு மதி பிதிர்ப்பாள் போல் – அயோ:3 1/3

TOP


நுழைதலின் (1)

நூறு வெம் கணை மார்பின் நுழைதலின்
ஊறு சோரியொடு உள்ளமும் சோர்தர – யுத்2:19 126/1,2

TOP


நுழைதலும் (1)

நூறு கோல் கவசம் கீறி நுழைதலும் குழைவு தோன்ற – யுத்2:18 193/1

TOP


நுழைதலோடும் (1)

நூறு கோல் நொய்தின் எய்தான் அவை உடல் நுழைதலோடும்
ஆறு போல் சோரி சோர அனுமனும் அலக்கண் உற்றான் – யுத்2:15 138/3,4

TOP


நுழைதியோ (1)

நூறி நொய்தினை ஆகி நுழைதியோ
வேறும் இன்னும் நகை ஆம் வினை தொழில் – சுந்:12 99/2,3

TOP


நுழைந்த (2)

அந்தி இடு அகில் புகை நுழைந்த குளிர் அன்னம் – கிட்:10 75/2
முரம்பினில் நிரம்பன முழைஞ்சிடை நுழைந்த – கிட்:10 82/4

TOP


நுழைந்தது (2)

வெந்த கொடும் புணில் வேல் நுழைந்தது ஒப்ப – அயோ:3 24/2
இருபது செவியினூடும் நுழைந்தது அ எழுந்த ஓசை – சுந்:7 1/4

TOP


நுழைந்தன (2)

செக்கர் மேகத்து சிறு பிறை நுழைந்தன செய்கைய வலி சிந்தி – யுத்1:3 89/3
ஒன்று அல கோடி_கோடி நுழைந்தன வலியும் ஓய்ந்தார் – யுத்3:27 99/4

TOP


நுழைந்தார் (1)

நொய்யது ஆகும் என்று ஆரும் என் காவலின் நுழைந்தார் – யுத்1:3 54/4

TOP


நுழைந்தால் (3)

புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தால் என செவியில் புகுதலோடும் – பால:6 12/2
புண் திறந்ததில் எரி நுழைந்தால் என புகைவாள் – சுந்:3 12/4
மீண்டு மீண்டு புக்கு எரி நுழைந்தால் என மெலிவாள் – சுந்:3 13/4

TOP


நுழைந்து (10)

மனங்களில் நுழைந்து அவர் மாந்து தேறலை – பால:19 55/3
நுழைந்து போகின்ற மதி இறால் ஒப்ப நோக்காய் – அயோ:10 9/4
ஆசுற எங்கணும் நுழைந்து அளாயது – சுந்:2 57/2
நுழைந்து நொய்தினின் மெய் உற நோக்கினான் – சுந்:2 167/3
நோக்கினீர் தானை எங்கும் நுழைந்து நீர் இனி வேறு ஒன்றும் – யுத்1:9 38/1
வாயில் வல்லை நுழைந்து மதி தொடும் – யுத்2:16 65/3
உற்றன ஒளி கிளர் கவசம் நுழைந்து உறுகில தெறுகில அனுமன் உடல் – யுத்3:28 23/3
ஆணியின் நிலையவன் விசிகம் நுழைந்து ஆயிரம் உடல் புக அழிபடு செம் – யுத்3:28 26/1
கண் வாளி கடை சிறை காண நுழைந்து
எண் வாய் உற மொய்த்தன இன் நறை உற்று – யுத்3:31 206/2,3
புண்ணினுள் நுழைந்து ஓடிய புந்தியோர் – யுத்4:37 190/3

TOP


நுழைந்து-ஆங்கு (1)

வெந்துறு புண்ணின் வேல் நுழைந்து-ஆங்கு வெண் மதி பசும் கதிர் விரவ – சுந்:3 87/2

TOP


நுழைய (10)

நுழைவன அன்னவை நுழைய நோவொடு – பால:3 46/3
இயங்கு தென்றல் மன்மத வேள் எய்த புண்ணின் இடை நுழைய
உயங்கும் உணர்வும் நல் நலமும் உருகி சோர்வாள் உயிர் உண்ண – பால:10 64/2,3
எரிந்த பூ உள இள முலை இழை இடை நுழைய
விரிந்த பூ உள மீன் உடை வான்-நின்றும் வீழ்வ – அயோ:1 55/3,4
புண் மேல் நுழைய துடிக்கின்றனள் போல் புரண்டாள் – ஆரண்:13 36/4
ஊறு அளாவிய கடு என உடலிடை நுழைய – சுந்:12 48/4
நொய்தின் இட்ட வன் தறி பறித்து உடல் எரி நுழைய
மொய் தட செவி நிறுத்தி வால் முதுகினில் முறுக்கி – சுந்:13 30/2,3
நூறும் ஆயிர கோடியும் கடும் கணை நுழைய
ஆறு கீழ் பட அளறு பட்டு அழுந்திய அளக்கர் – யுத்1:6 21/2,3
நூறும் ஆயிரமும் வாளி உடலிடை நுழைய சோரி – யுத்2:19 199/2
நோகின்றன திசை யானைகள் செவி நாண் ஒலி நுழைய – யுத்3:27 117/4
புற்றிடை அரவு என நுழைய நெடும் பொரு சரம் அவன் அவை உணர்கிலனால் – யுத்3:28 23/4

TOP


நுழையா (3)

அம்பும் அனலும் நுழையா கன அந்தகார – ஆரண்:10 142/1
ஊசி நுழையா வகை சரத்து அணி வகுக்கும் அவை உண்ணும் உயிரை – யுத்3:31 139/2
தொடு கார் விசை நுழையா எதிர் மீளாது இடை சோரா – யுத்3-மிகை:27 7/3

TOP


நுழையாது (1)

விள்ளா நெடும் கவசத்திடை நுழையாது உக வெகுண்டான் – யுத்3:27 125/4

TOP


நுழையும் (3)

கண் வழி நுழையும் ஓர் கள்வனே கொலாம் – பால:10 55/4
நொய்தின் இ உலகு எலாம் நுழையும் நோன்மையாள் – ஆரண்:6 3/3
பேய் முகம் உடையன பிலமுகம் நுழையும்
வாய்முகம் வரி அரவு அனையன வருவ – யுத்4:37 90/3,4

TOP


நுழைவ (1)

எண்ணுவன அனைய எல்லை இல நுழைவ – யுத்3:31 167/4

TOP


நுழைவது (1)

தீயிடை நுழைவது ஒர் தெளிவினை உடையான் – ஆரண்:2 37/2

TOP


நுழைவன (3)

நுழைவன அன்னவை நுழைய நோவொடு – பால:3 46/3
மருமமும் அழிபட நுழைவன வடி கணை – யுத்2:18 130/2
நொய்து அவன் கவசம் கீறி நுழைவன பிழைப்பு இலாத – யுத்2:18 192/4

TOP


நுழைவாய் (1)

நுழைவாய் மலர்வாய் நொடியாய் கொடியே – கிட்:10 54/2

TOP


நுழைவான் (1)

தானுடை இட வகை தழுவினன் நுழைவான் – ஆரண்:2 33/4

TOP


நுழைவினர் (1)

நுண்புலம் நுணங்கு கேள்வி நுழைவினர் எனினும் நோக்கும் – சுந்-மிகை:1 21/3

TOP


நுளைச்சியர் (4)

கற்றிலாத கரும் கண் நுளைச்சியர்
முற்றில் ஆர முகந்து தம் முன்றிலில் – பால:2 30/2,3
சென்று இசைக்கும் நுளைச்சியர் செவ்வழி – பால:2 34/4
ஏங்க நாகமும் நாறின நுளைச்சியர் ஐம்பால் – கிட்:10 47/2
இன் நகை நுளைச்சியர் இழைக்கும் ஆழி சால் – யுத்1:4 27/3

TOP


நுறுக்கி (1)

நூல் ஒன்று வரி விலானும் அதனையும் நுறுக்கி வீழ்த்தான் – யுத்3:27 179/4

TOP


நுறுக்கின (1)

வெற்பு_இனங்களை நுறுக்கின கவிகளை வீழ்த்த – யுத்3:22 106/4

TOP


நுறுக்கினன் (1)

நுகம் பயில் தேரினோடும் நுறுக்கினன் நூழில் தீர்த்தான் – யுத்3:22 126/3

TOP


நுறுக்கினார் (1)

நூக்கினார் படைகளால் நுறுக்கினார் குழம்பு – யுத்2:18 125/3

TOP


நுறுக்கினான் (4)

நூறு வெம் பகழி-தன்னால் நுறுக்கினான் களிறு நூக்கி – யுத்2:18 218/4
பேருமே கொடிய வாளியால் முறி பெறுக்கலா-வகை நுறுக்கினான் – யுத்2:19 85/4
நூக்கினான் கணை நுறுக்கினான் அரக்கனும் நூழில் – யுத்4:32 21/2
நூறி நூறி இராமன் நுறுக்கினான் – யுத்4:37 187/4

TOP


நுறுங்க (2)

நூறிய சரம் எலாம் நுறுங்க வாளியால் – ஆரண்:7 106/1
கூம்பல் மா மரம் எரிந்து உக குறும் துகள் நுறுங்க
சாம்பர் ஆயின தட வரை சுடு கணை தடிய – யுத்2:15 193/3,4

TOP


நுன் (5)

நுன் துணை கோ_மகன் நுகர்வது ஆதலான் – கிட்:11 114/3
நூற்றுஇரண்டு ஆய வெள்ள நுன் பெரும் படைஞர் சுற்ற – யுத்1:13 20/3
நொய்தினில் துளக்கி ஐய நுன் எதிர் நும்முனோனை – யுத்2:16 166/2
நோக்குவார் நோக்காமை நுன் கணையால் என் கழுத்தை – யுத்2:16 353/2
நோவன செய்தல் தீது என்று உரைப்ப நுன் தாதை சீறி – யுத்3:27 174/3

TOP


நுன்-பால் (1)

நொய்தினின் வென்று பற்றி தருகுவென் நொடியில் நுன்-பால் – சுந்:10 4/4

TOP


நுன்கண் (1)

மேவுகின்றது நுன்கண் விலக்கினை – சுந்:3 109/3

TOP


நுன்முன் (1)

நூறு பத்துடை நொறில் பரி தேரின் மேல் நுன்முன்
மாறு இல் பேர் அரக்கன் பொர நிலத்து நீ மலைதல் – யுத்2:15 217/1,2

TOP


நுன்னின் (1)

நோயின் நீங்கினெம் நுன்னின் என் எங்களை – ஆரண்:4 29/3

TOP


நுன்னை (1)

நோக்கி கூசலர் நுன்னை இ தன்மையை – ஆரண்:7 3/2

TOP


நுனி (2)

புல் நுனி தரு பனி என வர நதி புனிதன் – பால-மிகை:9 52/1
நுனி படா நின்ற வீரன் அவன் ஒன்று நோக்கா-வண்ணம் – யுத்4:37 17/3

TOP


நுனிக்கும் (2)

நூல் வரும் தகையன நுனிக்கும் நோன்மைய – பால:23 71/1
நுனிக்கும் வானவர் முதலிய உயிர் தொகை நோக்கில் – யுத்1-மிகை:3 6/2

TOP


நுனித்த (3)

நோற்ற நோன்பு உடைய வாழ் நாள் வரம் இவை நுனித்த எல்லாம் – சுந்:3 116/3
நூல் பட தொடர்ந்த பைம் பொன் சித்திரம் நுனித்த பத்தி – யுத்1:10 14/1
நூறு ஆகிய வெள்ளம் நுனித்த கணக்கு – யுத்3-மிகை:27 1/1

TOP


நுனித்தது (1)

நுனித்தது ஒன்று நுவல்வது ஒன்று ஆயினாள் – யுத்4:40 10/3

TOP


நுனித்திடத்திற்கு (1)

நுனித்திடத்திற்கு அரும் கடுப்பின் நொடி வரைக்குள் எங்குமாய் – யுத்3-மிகை:31 19/1

TOP


நுனித்து (6)

காலம் நுனித்து உணர் காசிபன் என்னும் – பால:8 11/1
நூல் உற நோக்கி தெய்வம் நுனித்து அறம் குணித்த மேலோர் – அயோ:1 7/2
காவலின் நுனித்து உணர் கணித மாக்களும் – ஆரண்:10 129/3
நோக்கி இங்கு இது சங்கரன் கவசம் என்று உணர்வுற நுனித்து உன்னி – யுத்2:16 328/2
நூல் இயல் தரும நீதி நுனித்து அறம் குணித்த மேலோர் – யுத்4:41 26/3
நொய்தினின் இயற்ற நோன்பின் மாதவர் நுனித்து காட்ட – யுத்4:42 15/3

TOP


நுனிந்த (1)

நூல்முகம் நுனிந்த நெறி நூறு வர நொய்தா – கிட்:14 56/1

TOP


நுனிப்ப (2)

நுனிப்ப அரு நுண் வினை சிலம்பு நோன் கழல் – பால:23 66/3
நூல் கடல் புலவராலும் நுனிப்ப_அரும் வலத்தது ஆய – யுத்1:13 27/1

TOP


நுனிப்ப_அரும் (1)

நூல் கடல் புலவராலும் நுனிப்ப_அரும் வலத்தது ஆய – யுத்1:13 27/1

TOP


நுனிப்பது (1)

மலரின் மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது நுனிப்பது ஒரு வரம்பு_இல் ஆற்றல் – ஆரண்:10 2/2

TOP


நுனிப்பு (1)

நோக்கினேன் அரக்கியர் நுனிப்பு இல் கோடியர் – சுந்-மிகை:4 5/1

TOP


நுனை (4)

கொதி நுனை வேல் கண் மாதர் குறத்தியர் நுதலினோடு – பால:16 6/3
புல் நுனை நீரின் நொய்தா போதலே புரிந்து நின்ற – ஆரண்:12 68/1
புல் நுனை பனி நீர் அன்ன மனிசரை பொருள் என்று உன்னி – யுத்2:16 40/3
புல் நுனை பகழிக்கு ஓயும் தரத்தரோ புலம்பி உள்ளம் – யுத்2:19 233/3

TOP