வே முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வேகத்து 1
வேகத்துடன் 1
வேகத்துடனே 1
வேகமுடன் 1
வேகமுடனே 1
வேகமொடு 1
வேகுறு 1
வேங்கை 1
வேஷம் 1
வேசரி 5
வேசரியில் 1
வேசாறலாய் 1
வேசி 7
வேசிகள் 1
வேசிகளாய் 1
வேசித்தன 1
வேசித்தனத்தின் 1
வேசித்தனத்தை 1
வேசித்தனம் 3
வேசித்தனம்செய்ய 1
வேசியாய் 1
வேசியானவள் 1
வேசியின் 1
வேசியும்தான் 1
வேசியை 1
வேசிவேசி 1
வேசை 1
வேசையை 1
வேட்டியின் 1
வேட்டை 2
வேட்டைக்கு 2
வேட்டையாடையில் 1
வேட 2
வேடம் 2
வேடம்போட்டு 1
வேடமதடி 1
வேடமானது 1
வேடிக்கை 2
வேடிக்கைக்காரி 1
வேடிக்கையாய் 1
வேண்டடா 1
வேண்டாம் 3
வேண்டாமோ 1
வேண்டி 2
வேண்டியதோ 1
வேண்டின 3
வேண்டினேன் 1
வேண்டும் 1
வேண்டுவதோ 1
வேண்டுவாள் 1
வேண 2
வேணவிதம் 1
வேணும் 3
வேத 37
வேதங்கள் 1
வேதத்தில் 2
வேதத்தின் 1
வேதத்து 1
வேதத்துள் 1
வேதத்துளோர் 1
வேதத்தை 1
வேதந்தனையதுமே 1
வேதநாயக 1
வேதநாயகன் 8
வேதநாயகனும் 1
வேதபந்தனர் 1
வேதபாரகர் 3
வேதம் 14
வேதமாம் 1
வேதமொழிப்படி 1
வேதன் 3
வேதனார் 1
வேதனை 2
வேதனையுளானவர்க்கும் 1
வேதாகமத்தின் 2
வேதாத்த 1
வேதாந்த 3
வேதாந்தக்காரியுட 1
வேதாந்தமாய் 1
வேதாளத்தை 1
வேந்தன் 2
வேந்தனும் 2
வேம்பு 1
வேய்களை 1
வேர் 1
வேரடா 1
வேரோடே 1
வேல் 1
வேலை 1
வேலைக்காக 1
வேலைக்கு 1
வேலையதாக 1
வேலையாள் 1
வேலையில் 1
வேளாளர் 1
வேளைக்கு 1
வேளையில் 1
வேளையிலே 1
வேற்றுரு 1
வேறாக 1
வேறாய் 1
வேறு 4
வேறுபட்டதால் 1
வேறே 5

வேகத்து (1)

வாகு ஒத்து இயல் அறிந்தவர் செறிந்தவர் வேகத்து எனை நயங்கொடு செயங்கொடு வாழ்வித்து அதி நலம் தரு பலம் தருவார் மெய்ப்புடனே – பெத்ல-குற:2 15/4

மேல்

வேகத்துடன் (1)

வேகத்துடன் மோசே உண்டாக்கி தூக்கிய வெண்கலச்சற்பத்தை நோக்கி பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 688/4

மேல்

வேகத்துடனே (1)

வேகத்துடனே சத்திய வேதத்து இயல் நீடு – பெத்ல-குற:22 306/2

மேல்

வேகமுடன் (1)

வேகமுடன் தொழுதே பண்புசெய்யவும் வீறும் சமணர் துலுக்கர் மதத்துடன் – பெத்ல-குற:43 591/3

மேல்

வேகமுடனே (1)

வீறு உள ரோமாபுரியின் தீய சபை மீதினிலும் வேகமுடனே பரனின் ஞான வலை வீசி தென்பாய் – பெத்ல-குற:61 811/2

மேல்

வேகமொடு (1)

மாகம் மிசை படர் மேகமதனில் விவேகமுடன் அதி வேகமொடு முழு – பெத்ல-குற:23 354/1

மேல்

வேகுறு (1)

கத்தி ஆகிறு மனம் மெத்த நோகுறு பாபேல் பத்தி வேகுறு
வெறி கருங்குர் என்கிறு பொறி கிரங்கிர் என்கிறு சின்ன – பெத்ல-குற:66 859/6,7

மேல்

வேங்கை (1)

வேங்கை மூங்கில் வேம்பு போந்து – பெத்ல-குற:22 325/2

மேல்

வேஷம் (1)

விஸ்தரித்து உரைக்க என்றால் வெண்ணிலாவே புவி வேஷம் முழுவதும் போம் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 174/3

மேல்

வேசரி (5)

சங்கமுடன் கிறிஸ்து இறைவன் வேசரி வாகன பவனி சார்ந்திட்டானே – பெத்ல-குற:9 76/4
கந்தம் மிகும் கேருபின் வாகனத்துடையவன் வேசரி வாகனத்தில் ஏறி – பெத்ல-குற:10 86/3
சங்கையுடன் வேசரி வாகனத்து ஏறி பவனிவந்த தன்மை கண்டே – பெத்ல-குற:12 96/2
பத்தியின் உருவே அடியவர் புத்தியின் குருவே வேசரி பவனி வந்தவனே முழுதும் இவ் அவனி தந்தவனே – பெத்ல-குற:13 108/4
தேவாதி வேசரி வாகன பவனி எழுந்து வந்த திறமை காண்க – பெத்ல-குற:14 118/2

மேல்

வேசரியில் (1)

அனை எனும் மரியாள் சூசை மனை எனும் பெரியாள் பணிசெயும் அற்புதன் இவன்தான் வேசரியில் பவனி வந்தான் – பெத்ல-குற:13 114/4

மேல்

வேசாறலாய் (1)

வேசாறலாய் மலடி அன்னாளும் சாமுவேலை பெற்ற வித்தை அறிவேன் சற்றும் – பெத்ல-குற:33 476/3

மேல்

வேசி (7)

ஆனாலும் தாமார் வேசி நானே என்று உருக்கொண்டே அடுத்த மாமன் யூதாவை கெடுத்தாள் அல்லோ – பெத்ல-குற:17 148/2
இந்த மலை ஏழும் இப்போ கள்ளர் மலை அம்மே எல்லவரையும் கெடுக்கும் வேசி மலை அம்மே – பெத்ல-குற:25 376/3
மாயக்கார வேசி கள்ளர் மறுபிறப்பாம் வாசல் இது – பெத்ல-குற:30 436/3
மிருகம் என்றும் வேசி என்றும் விளம்பின சொல் ஆரை அடி வஞ்சி முழு – பெத்ல-குற:32 472/1
மேட்டிமையாகிய ரோமையின் பாப்பு என்ற வேசி பராபரனோடே சரி என்று – பெத்ல-குற:41 579/1
மகா வேசி பின்பு படும் கொடும் ஆக்கினை மட்டில்லை என்று வசனித்து சொன்ன – பெத்ல-குற:56 759/2
வேசி கீதையோன் ஈபத்தா சிம்சோன் பாறா – பெத்ல-குற:67 865/3

மேல்

வேசிகள் (1)

நாணாத வேசிகள் தொட்டியர் ரெட்டியர் நாவிதரும் வந்து ஞானஸ்நானம் பெற – பெத்ல-குற:47 642/4

மேல்

வேசிகளாய் (1)

நிசமாக இருவர்களும் விபசாரம்பண்ணி நித்தியனை விட்டு முழு வேசிகளாய் போனார் – பெத்ல-குற:28 410/2

மேல்

வேசித்தன (1)

வேசித்தன பாத்திரத்தை கையில் வைத்துக்கொண்டு வெறியெடுக்க குடித்து அலைந்து வெளியரங்கமாக – பெத்ல-குற:27 398/1

மேல்

வேசித்தனத்தின் (1)

பிள்ளையின் வேசித்தனத்தின் பணையமதை பெற்று பெரு நரகில் வீழ்வன் என்று பேசு தலம் அம்மே – பெத்ல-குற:27 397/4

மேல்

வேசித்தனத்தை (1)

வெட்கம் இல்லாமல் திருட்டளவாய் செய்த வேசித்தனத்தை வெளியாக்கிவிட்டிடும் – பெத்ல-குற:45 616/4

மேல்

வேசித்தனம் (3)

ரோசம் இலாமலே வேசித்தனம் செய்ய ரோமி விக்கிரகத்து அண்டை சென்றாப்போலே – பெத்ல-குற:49 663/4
வேறு உள செம்பு மரம் சிலை யாவையும் வேசித்தனம் செய்யும் நோக்கமாய் பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 700/4
அந்நாளில் வேசித்தனம் செய்த இஸ்திரீயானவளை கண்டு கையும்களவுமாய் – பெத்ல-குற:56 755/1

மேல்

வேசித்தனம்செய்ய (1)

வெட்கமில்லா மதுபானத்தில் ரோமி வெறிகொண்டு வேசித்தனம்செய்ய போனாப்போல் – பெத்ல-குற:63 838/4

மேல்

வேசியாய் (1)

கோப்பு குறித்து விருதா பொல்லாப்பு ஆக்குவித்து கூசாமல் பத்தாவை விட்டு வேசியாய் போனாள் – பெத்ல-குற:17 156/3

மேல்

வேசியானவள் (1)

மாறுபாட்டுக்கார ரோமி என்று ஓதும் மகா வேசியானவள் மட்டுத்திட்டம் அற்று – பெத்ல-குற:52 700/1

மேல்

வேசியின் (1)

விக்கிரக பத்திக்கார ரோமாபுரி வேசியின் செய்தியை கண்டறிந்தோர் எலாம் – பெத்ல-குற:60 803/1

மேல்

வேசியும்தான் (1)

பெண்ணான பாப்பு என்ற வேசியும்தான் அம்மே பெரியோனின் பேரை வைத்து விபசாரி ஆனாள் – பெத்ல-குற:25 378/1

மேல்

வேசியை (1)

போதனை வேசியை போக்கி விழச்செய்ய – பெத்ல-குற:71 930/3

மேல்

வேசிவேசி (1)

விரிவாய் விசுவாசித்த எரிகோவின் ராகாப்புவை வேசிவேசி என்று எழுதி ஏசவும் ஆச்சே – பெத்ல-குற:17 149/1

மேல்

வேசை (1)

திட்டமாக சொன்ன அவன் வாயை கிழித்து ரோமி தேடி தின்னும் வேசை என்று பாடி அறைந்து – பெத்ல-குற:37 508/3

மேல்

வேசையை (1)

மூப்பரை கூட்டி வழக்கிட்டு வேசையை மொட்டையடிப்பதும் உண்டு செய்த – பெத்ல-குற:33 482/2

மேல்

வேட்டியின் (1)

வேட்டியின் ஓரத்தையே ஈட்டமாய் தொட்டவளும் – பெத்ல-குற:67 867/3

மேல்

வேட்டை (2)

வேட்டை கறிக்குமா நாட்டமடா ஈசாக்கு அண்ணே இவ் வேளைக்கு ஏதாகிலும் கொண்டுபோய் மாய்மாலம் பண்ணேன் – பெத்ல-குற:62 816/1
வெம்பி பறவையின் வேட்டைக்கு போய் ஞான வேட்டை எல்லாம் தப்பிப்போச்சே – பெத்ல-குற:64 842/1

மேல்

வேட்டைக்கு (2)

அங்கு ஒருநாள் வேட்டைக்கு போன ஏசாவை அல்லாமல் யாக்கோப்பு ஆசீர்வாதம் பெற்றான் – பெத்ல-குற:53 707/2
வெம்பி பறவையின் வேட்டைக்கு போய் ஞான வேட்டை எல்லாம் தப்பிப்போச்சே – பெத்ல-குற:64 842/1

மேல்

வேட்டையாடையில் (1)

வாகான சீஷர்கள் மீன் வேட்டையாடையில் வந்து எல்லா மீனும் வலைக்குள் பட்டாப்போலும் – பெத்ல-குற:57 766/2

மேல்

வேட (2)

மேகத்தினில் எழுந்தவர் தொழும் தவர் மாகத்து அருகு உயர்ந்தவர் பெயர்ந்தவர் வேட கணம் முனிந்தவர் சினந்தவர் மீதில் குறமே – பெத்ல-குற:2 15/2
விந்தை கோட்டாற்றினுக்குள் வந்த பிராஞ்சுக்கார வேட சவரியாரை கொண்டாடிக்கொள்வாள் – பெத்ல-குற:17 160/2

மேல்

வேடம் (2)

பறையதும் இலங்க மிகுந்த பொறையதும் துலங்க வேதம் பண்டு தந்தவனே வேடம் கொண்டு வந்தவனே – பெத்ல-குற:13 112/4
வெற்றி மிகும் பராபரனின் மைந்தனும் தான் கொண்ட இந்த வேடம் எல்லாம் மனுடரின் சந்தோடமே என்பார் – பெத்ல-குற:14 126/1

மேல்

வேடம்போட்டு (1)

உசியா யூதித்து என்பாளும் விசையாய் வேடம்போட்டு அல்லோ ஓலப்பர் நேசர் தலை நீலி போல் கொய்தாள் – பெத்ல-குற:17 152/3

மேல்

வேடமதடி (1)

பெத்தரிக்க பவுலிஸ்தர் பற்றின உடையை விடாய் அம்மே முழு பேதைகளை ஏய்க்க கொண்ட பாத வேடமதடி அம்மே – பெத்ல-குற:36 503/3

மேல்

வேடமானது (1)

மேவியே வளர்ந்து ஓங்கிய நாடு வேடமானது நீங்கிய நாடு – பெத்ல-குற:26 384/3

மேல்

வேடிக்கை (2)

மெய் புகல் சுவிசேடத்தை விட்டு விழுந்தாள் பல வேடிக்கை கதைகள் எல்லாம் நாடி பகர்வாள் – பெத்ல-குற:40 570/3
வேடிக்கை பூ ஏண்டி சிங்கி ஆரோன் – பெத்ல-குற:71 921/2

மேல்

வேடிக்கைக்காரி (1)

விண் சேர மயக்காமல் உண்மை சொல்லடி ஞான விசுவாச சிங்கி என்ற வேடிக்கைக்காரி – பெத்ல-குற:40 562/4

மேல்

வேடிக்கையாய் (1)

கையிலே மின்னவே வேடிக்கையாய் கட்டு – பெத்ல-குற:71 912/1

மேல்

வேண்டடா (1)

தேவ சுதனை வேண்டடா மிகும் – பெத்ல-குற:55 722/1

மேல்

வேண்டாம் (3)

கன்னியர்க்குள் நான் ஒரு பெண் வெண்ணிலாவே எனை காய்ந்து கொல்ல வேண்டாம் சொன்னேன் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 170/4
திண் சேரும் பெத்லகேம் நல் நகர்க்குள்ளே மெத்த தித்திரிப்பாய் பேச வேண்டாம் சித்திரக்கள்ளி – பெத்ல-குற:40 562/3
போக்கற்ற பேச்சு புகல வேண்டாம் இங்கே – பெத்ல-குற:71 927/3

மேல்

வேண்டாமோ (1)

பெட்டக பேயை பிடித்து ஓட்ட வேண்டாமோ
கிட்டி நெருங்கடி சிங்கி வாக்கு – பெத்ல-குற:71 929/1,2

மேல்

வேண்டி (2)

முந்து மனுடர்-தமை நிந்தைப்படுத்த வேண்டி முடுகி வனத்தில் அடுத்தாய் ஆதி – பெத்ல-குற:20 187/1
ஏவலுக்காய் வேண்டி போறதாய் காட்டியே எட்டி நடந்து கடந்து ஓடிப்போனாப்போல் – பெத்ல-குற:63 836/4

மேல்

வேண்டியதோ (1)

தோழி மேல் மயலோ சுகத்தை வேண்டியதோ
ஊழியும் வாழ்க உகந்த வாஞ்சையதோ – பெத்ல-குற:39 549/1,2

மேல்

வேண்டின (3)

பொன் துகிலும் வேண்டின பொருளும் அளித்து இரத்தின பூடணத்தால் முற்றினும் சிங்காரித்துவிட்டு – பெத்ல-குற:40 566/3
வெட்டுக்கிளியை அழைப்பித்து நீக்கவும் வேண்டின யாவையும் செய்யவும் மோசேயின் – பெத்ல-குற:46 621/4
வீதி நகர் அடுத்தது அங்கே விசையாய் ராகேல் வேண்டின யாக்கோபு நிகர் ஏங்கினானே – பெத்ல-குற:70 888/4

மேல்

வேண்டினேன் (1)

விளங்கு மெய் குறிக்காய் வேண்டினேன் உன்னை – பெத்ல-குற:39 543/2

மேல்

வேண்டும் (1)

வெள்ளிக்கிழமையில் ஆதி பிதா மகன் வேண்டும் பலபல பாடுகள் பட்டபின் – பெத்ல-குற:52 696/1

மேல்

வேண்டுவதோ (1)

பொருளை வேண்டுவதோ போன காரியமோ – பெத்ல-குற:39 547/1

மேல்

வேண்டுவாள் (1)

முன்னாள் கள்ள பிரம்பூர் சின்னப்பவுடையானையும் முத்தப்பவுடையானையும் மெத்த வேண்டுவாள்
சொன்னாலும் கோபம்கொள்வாள் கன்னாப்பின்னா என்று ஓதும் துலுக்கன் செபத்தியார்க்காய் பிலுக்கிக்கொள்வாள் – பெத்ல-குற:17 161/2,3

மேல்

வேண (2)

வேதபாரகர் துதிக்கின்ற நாடு வேண தீர்க்கர் உதிக்கின்ற நாடு – பெத்ல-குற:26 386/1
மெத்தவும் முன்னிலும் கெட்ட நடக்கையாய் வேண விதம் எல்லாம் பாவத்துக்கு உட்பட்டு – பெத்ல-குற:52 698/2

மேல்

வேணவிதம் (1)

மீண்டும் சிகையை பிடித்து அறுத்து அங்கு அதை வேணவிதம் கண்ணி தெத்தி கொடுத்த பின் – பெத்ல-குற:45 613/3

மேல்

வேணும் (3)

தபமவனின் புத்திரர்கள் தம்பி அல்லோ வேணும் தம்பிகட்கு கேட்ட மனு தரக்கூடாது என்பானேன் – பெத்ல-குற:28 406/2
கத்தனுட சுதன் இவட்கு கொழுந்தன் அல்லோ வேணும் கன்னி இவள் மனைவி என்ற காரணம் ஏது அம்மே – பெத்ல-குற:28 407/4
ஒன்றினம் குறி எனக்கு உரைக்கவே வேணும் சபை குற்ற தலை பசாசு வென்றி இங்கு ஓதுவது ஏனோ – பெத்ல-குற:40 566/4

மேல்

வேத (37)

நா அணிந்த மறை வேத குறவஞ்சி நாடகத்தை நயந்து கூற – பெத்ல-குற:1 2/2
மட்டு மிகும் உபத்திரமே தென்றல் மதனே பழைய மானுடன் வேத
திட்டம் இனம் அறியாத புது கிறிஸ்தோரை சகியாய் செப்புவேனே – பெத்ல-குற:1 5/3,4
பறவைகளே நரர் சாதி பிணிக்கும் வலை சுவிசேடம் பழைய வேத
மறையது இல்லா அந்தி பேயை பொய் தெரிசியாய் நெடுக வசனித்தேனே – பெத்ல-குற:1 6/3,4
மெட்டாக சிகிரியில் நகரியில் விஸ்தார கடல் மிசை திடல் மிசை மெய் போதத்து அருள் மொழி ஒரு வழி வேத நல் குறமே – பெத்ல-குற:2 14/3
நா பற்றிய பா பயன் ஆ பயன் நாட்டில் பல பாட்டினில் ஏட்டினில் நால் திக்கினும் ஏற்றுவர் போற்றுவர் நவ வேத சபையோர் – பெத்ல-குற:2 17/4
ஆதி சத்திய வேத போதகர் நீதி உத்தம ஞான காரணர் ஆயர் மெய் குடிலூடு உலாவிய நேய பாலகனார் – பெத்ல-குற:3 21/1
நேத்திர இம்மானுவேல் வந்தான் சுவிசேட வேத
சாத்திர கிருபாநதி வந்தான் வேதாகமத்தின் – பெத்ல-குற:7 52/2,3
புண்ணியன் வேத முறைப்படி நடந்து மற்று அப்புறரை தனை போல் நேசிக்க தொடர்ந்து – பெத்ல-குற:8 63/2
தந்திர பேய் மதங்கள்-தனை முனிந்து வேத சத்திய வாய்மையினில் மனம் கனிந்து – பெத்ல-குற:8 65/2
வேத நாயகன் வந்தனன் என ஈதமாய் முரசு ஒலிக்கவே – பெத்ல-குற:9 84/4
தாபத்தை துணிந்தான் நீதியின் கோபத்தை தணித்தான் வேத சாஸ்திரம் பணித்தான் ஒரு நட்சேத்திரம் கணித்தான் – பெத்ல-குற:13 107/4
சத்திய வேத கிறிஸ்தவர்கள் பாரித்து சமஸ்த நாளும் துதிசெயும் – பெத்ல-குற:16 134/3
வில்லை புருவம் அமைந்து எல்லை பொருதும் முத்து பல்லினாள் வேத மேன்மை அனைத்தும் கற்று ஞான மனத்தை பெற்ற சொல்லினாள் – பெத்ல-குற:16 137/1
கையொப்பி மற்றோரையும் பொய்யொப்பி தொழ வேத கட்டி மனுவை எல்லாம் தெட்டிக்கெடுத்தாள் – பெத்ல-குற:17 159/3
சத்திய வேத சாஸ்திரப்படிக்கு – பெத்ல-குற:22 329/2
ஆதி முதலில் அனாதி அருளிய போத மதி உள வேத மறை தரு – பெத்ல-குற:23 353/1
நீதியின் ஆடையது அணிந்து ஞானாபரண வேத செபமாலை புனைந்து மெஞ்ஞானமுடன் – பெத்ல-குற:24 360/1
வேத ஓசை முழங்கிட வந்து அருள் வித்தகன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 380/4
விண்ணுலகுள்ளோரும் வந்து பணிந்தது இந்த தலமே மெய்யான வேத முதல் முளைத்தது இந்த தலமே – பெத்ல-குற:27 393/2
ஞானியர்கள் நாவலர்கள் விண்ணுலகோர் மண்ணோர் நாவில் அடங்கா வேத நாயகன் காண் அம்மே – பெத்ல-குற:28 412/4
வேத புரட்டனாம் தீதுற்ற ரோமையின் பாதக பாப்புவை சாதித்த சொல் அபரஞ்சி – பெத்ல-குற:32 472/2
நான் உனக்கு உரைத்த வேத நல் கதை பயனை எல்லாம் – பெத்ல-குற:33 473/2
மெய் என நீ எண்ணினது சித்தியாம் அம்மே அருள் வேத சுதனால் உமக்கு முத்தியாம் அம்மே – பெத்ல-குற:35 495/3
புத்தியாய் சுறுக்கிலே தவத்திலே முயற்சிசெய்வாய் அம்மே நரர் போற்றுதற்கு அரிய வேத சாஸ்திரத்தையும் சற்று பார் அம்மே – பெத்ல-குற:36 502/3
வேத நாயகனே விமல சற்குருவே – பெத்ல-குற:39 516/1
ஒப்புவிக்க வேத ஞாயம் ஒன்றும் அறியாள் கட்டு உபதேசம்-தனை கொண்டு இங்கு ஓத வருவாள் – பெத்ல-குற:40 570/2
வேத சுவிசேடத்தையே கைக்குள்ளே வைத்து – பெத்ல-குற:41 579/3
திரு வேத பொருள் போதித்து அருள் நீதிப்படியாய் மக்களையே சிக்கிடவே வைத்திடும் ஞான கனி – பெத்ல-குற:44 601/4
மாலிகைக்கு இசைந்த வேத மறை-தனில் வகுத்த ஞான – பெத்ல-குற:46 617/3
பூசுரர் வேத பிராமணர் வள்ளுவர் பூக்காரர் பட்டுநூல்காரர் மராட்டியர் – பெத்ல-குற:47 641/3
வேத நாயகனை போற்றடா அவர் மேலே பதங்களை சாற்றடா – பெத்ல-குற:55 726/1
வேத புரட்டனை விட்டு விலகு என்றும் வீண் வசனிப்பை விளம்பவேண்டாம் என்றும் – பெத்ல-குற:57 771/1
ஆதி முதலான பெத்லேம் பதி வேத முறை பேசி அனுதின – பெத்ல-குற:58 774/1
மெய்க்கியானமாகிய ஞான வலை என்ற வேத சுவிசேட மார்க்கத்திலே வந்து – பெத்ல-குற:60 803/4
வேத பொருளை பயன் கொண்டு மூடி விளக்கிநின்றாள் அத்தை மேவ என்று எண்ணி யான் – பெத்ல-குற:65 850/1
வம்பிக்கு பேச்சது ஆச்சுது என்றே வேத வாக்கியத்தை கொண்டு மூர்க்கமாய் பேச்சிட்டு – பெத்ல-குற:65 851/2
வேத மறை சொன்னவனை – பெத்ல-குற:72 945/1

மேல்

வேதங்கள் (1)

சந்தோடமாக பதங்கள் வண்ணங்கள் சங்கீதங்கள் கீதங்கள் வேதங்கள் பாடியே – பெத்ல-குற:63 835/3

மேல்

வேதத்தில் (2)

வெட்டுக்கிளியா மகமது பட்சியும் வேதத்தில் சேராத கூழைக்கடாக்களும் – பெத்ல-குற:48 651/1
வேதத்தில் உள்ள கருத்தை எடுத்து – பெத்ல-குற:71 935/1

மேல்

வேதத்தின் (1)

தாலத்தில் உத்தம வேதத்தின் தோற்பார் அஞ்சாதுக்கு – பெத்ல-குற:71 907/3

மேல்

வேதத்து (1)

வேகத்துடனே சத்திய வேதத்து இயல் நீடு – பெத்ல-குற:22 306/2

மேல்

வேதத்துள் (1)

மாயம் மிகும் அரியான பதிதரும் வாய்மையதாய் சத்திய வேதத்துள் ஆகவும் – பெத்ல-குற:43 591/4

மேல்

வேதத்துளோர் (1)

சத்திய வேதத்துளோர் என்று சொல்லியும் சாமி அருள் சுவிசேடத்தை சற்றெனும் – பெத்ல-குற:43 598/1

மேல்

வேதத்தை (1)

வேதத்தை கேட்டும் அதின்படி செய்யாமல் மீறி நடக்கின்ற தாறுமாறுக்காரர் – பெத்ல-குற:43 592/1

மேல்

வேதந்தனையதுமே (1)

வேதந்தனையதுமே தந்தனையதும் வீசும் திறம் உளர் மா சுந்தரம் உளர் வீறின் புரவலர் பேறின் புரவலர் மேவி புகழ்வார் – பெத்ல-குற:2 16/4

மேல்

வேதநாயக (1)

தேவசகாய வேதநாயக நாவலன் ஓது பாவின் மேவிய தேசு மகா பிரகாசர் ஆகிய யேசு நாயகரே – பெத்ல-குற:3 26/2

மேல்

வேதநாயகன் (8)

மிஞ்சு புகழ் தேவசகாயன்-தன் பாலன் வேதநாயகன் திருநெல்வேலி மேவும் – பெத்ல-குற:1 7/3
கரிசித்த தேவசகாய வேதநாயகன்
தெரிசித்த பெத்தலேம் சீமானின் மீது – பெத்ல-குற:4 32/1,2
வேதநாயகன் பாட்டனுக்கு மேல் வானவர் நாட்டனுக்கு – பெத்ல-குற:5 39/3
சித்திரக்கவி சொல் வாயன் வேதநாயகன் மெய் தமிழுக்கு உதவு தூயன் – பெத்ல-குற:12 102/2
மிக்க உலகை கடை அழிக்க வரு சக்கியன் மயல் சிக்கி வேதநாயகன்
செம் சொல் மிகும் குறவஞ்சி படித்து – பெத்ல-குற:15 132/12,13
தீட்டும் வேதநாயகன் பாட்டும் பெருக்கம் ஆச்சு சேரடா ஒருகை வந்து பாரடா தவிது வங்கிஷ – பெத்ல-குற:20 190/3
தேவசகாய வேதநாயகன் கவிக்கு அருள் தேவ சுதன் வருகும் வாசல் இது – பெத்ல-குற:30 434/4
வேதநாயகன் காண் சிங்கா – பெத்ல-குற:71 935/4

மேல்

வேதநாயகனும் (1)

எல்லையில்லா கவி கொண்டு இன வேதநாயகனும் கண்டு – பெத்ல-குற:10 92/3

மேல்

வேதபந்தனர் (1)

நீதி தந்தனர் வேதபந்தனர் நிறை புகன்றனர் குறைவு அகன்றனர் – பெத்ல-குற:22 308/2

மேல்

வேதபாரகர் (3)

பெருமை கொண்ட பரன் அருளும் மைந்தன் உயர் பெத்தலேகருட தாசன் நான் பேசும் என் தமிழை வேதபாரகர் பிரதான ஞானியர் தளார்களே – பெத்ல-குற:4 28/4
வேதபாரகர் துதிக்கின்ற நாடு வேண தீர்க்கர் உதிக்கின்ற நாடு – பெத்ல-குற:26 386/1
பரிசேயருடன் வேதபாரகர் கூடிய வாசல் இது – பெத்ல-குற:30 429/1

மேல்

வேதம் (14)

பாப்புடைய வேதம் எல்லாம் பாழடைந்துபோக – பெத்ல-குற:4 33/2
வேதம் கதிகமே நமோ நமோ நிறைவே தங்கு அதிகமே நமோ நமோ – பெத்ல-குற:6 45/4
பறையதும் இலங்க மிகுந்த பொறையதும் துலங்க வேதம் பண்டு தந்தவனே வேடம் கொண்டு வந்தவனே – பெத்ல-குற:13 112/4
ஞான சலமோன் அரசன் அக்கியான வழி சிலதை நடத்தினான் வேதம் இவன் திடத்தினான் என்பார் – பெத்ல-குற:14 123/1
முந்த வரைந்த கடந்த சுதந்தர வேதம் முதல்வன் ஆவி – பெத்ல-குற:15 130/8
மிஞ்சிய ரஞ்சித வஞ்சி இலஞ்சிய ஞானி வேதம் உணர்ந்த – பெத்ல-குற:15 131/5
மோச பசாசர் மனம் நாச படுத்த நிற்கும் நிலையினாள் வேதம் முழுதும் அறிந்து மோட்ச வழியும் தெரிந்த ஞான கலையினாள் – பெத்ல-குற:16 140/3
வினய பெருமை பாப்பை முனைய சினந்து நோக்கி சீறினார் ரோமி வேதம் கடந்த சத்திய போதம் தொடர்ந்து எல்லார்க்கும் கூறினார் – பெத்ல-குற:16 143/4
சொல்ல காண்பது ஞான புராணம் துலங்க காண்பது சத்திய வேதம்
வெல்ல காண்பது ஐம்பொறி மாய்கை மிதிக்க காண்பது பேயின் சிரத்தை – பெத்ல-குற:26 387/1,2
மக்க காண்பது பாப்புவின் வேதம் மடிய காண்பது அக்கியான மார்க்கம் – பெத்ல-குற:26 389/3
வேதம் எல்லாம் உணர்ந்து அறிந்த கிறிஸ்தவர்கள் அம்மே மேலான பாதை கண்ட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 415/1
சத்திய வேதம் சிறந்த கிறிஸ்தவர்கள் அம்மே சன்மார்க்க விளக்கமுற்ற கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 417/1
சத்திய வேதம் தரும் கிறிஸ்து ஏசு – பெத்ல-குற:33 475/1
பாக்கியம் உமக்கு மா விசேடமாம் அம்மே கெட்ட பாப்புவுட வேதம் எங்கும் நாசமாம் அம்மே – பெத்ல-குற:35 498/1

மேல்

வேதமாம் (1)

வேதமாம் என தீர்க்கர்கள் ஓதின மேன்மையால் விடை மேவிய வீட்டில் – பெத்ல-குற:26 382/3

மேல்

வேதமொழிப்படி (1)

மோகன வேதமொழிப்படி நீச – பெத்ல-குற:22 250/1

மேல்

வேதன் (3)

வேதன் இது அல்லோ வந்தான் வாதை படுவாய் போடா – பெத்ல-குற:20 185/2
வேதன் உரைப்படி சீனா வனாந்திரம் மேவ சிவந்தசமுத்திரத்து ஊடாக – பெத்ல-குற:50 667/4
மெய்யாக தாவிளை என்று அழுதுகொண்டு வேதன் எருசலேமை நோக்கி பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 694/4

மேல்

வேதனார் (1)

மேலுள் மேவிய பெத்லகேம் என்ற வேதனார் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 381/4

மேல்

வேதனை (2)

வெட்டி அக்கினி சுவாலையில் இட்டு கொடும் வேதனை வாதைகளை மேல் வரவிட்டு – பெத்ல-குற:8 60/1
போதனை விளைவான் அன்பர்கள் வேதனை களைவான் சாதனை பொய்யர்க்கும் எய்யான் அடுத்திடு மெய்யர்க்கு மெய்யான் – பெத்ல-குற:13 106/1

மேல்

வேதனையுளானவர்க்கும் (1)

ஆதரவு_இல்லாதவர்க்கும் வேதனையுளானவர்க்கும் யாவருக்கும் நீதிசெய்யும் வாசல் இது – பெத்ல-குற:30 433/4

மேல்

வேதாகமத்தின் (2)

சாத்திர கிருபாநதி வந்தான் வேதாகமத்தின்
காத்திர மேசியா வந்தான் யூதர்களின் – பெத்ல-குற:7 52/3,4
பானுக்குள் ஒளியாய் நின்ற பரம வேதாகமத்தின்
தேனுக்குள் மதுரமான திருமொழி குறி சொல் மின்னே – பெத்ல-குற:35 493/1,2

மேல்

வேதாத்த (1)

வேதாத்த நாயகன் பாதாரவிந்தத்தை – பெத்ல-குற:51 675/2

மேல்

வேதாந்த (3)

பேசரிய வேதாந்த கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 418/4
விரைந்து விரைந்து பறந்து குத்தடா வேதாந்த பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 714/4
வேதாந்த மதங்கி என் வங்கண – பெத்ல-குற:65 846/4

மேல்

வேதாந்தக்காரியுட (1)

வேதாந்தக்காரியுட நாதாந்தத்தை நினைந்து – பெத்ல-குற:66 856/5

மேல்

வேதாந்தமாய் (1)

ஞானம் தரும் பட்சி மெஞ்ஞான பட்சியும் நாதாந்த பட்சியும் வேதாந்தமாய் பேசி – பெத்ல-குற:48 648/4

மேல்

வேதாளத்தை (1)

அந்தமும் ஆதியும் இல்லாதவனோடே ஆண்மை அறைந்த வேதாளத்தை போலவே – பெத்ல-குற:44 606/1

மேல்

வேந்தன் (2)

மின் இலங்கு பெத்தலேம் பதியில் உற்ற மேசியா வேந்தன் மீது – பெத்ல-குற:1 1/2
உச்சிதமாய் தாவீது வேந்தன் உலகு எல்லாம் ஓர் குடையில் ஆண்டு செங்கோல் செலுத்தினது இ தலமே – பெத்ல-குற:27 391/3

மேல்

வேந்தனும் (2)

மீது சீயோனின் மலை வாசம் வேந்தனும் தவீது – பெத்ல-குற:15 130/2
திட்டமதாகவே யூதர்கள் வேந்தனும் தீயர்க்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட ராத்திரி – பெத்ல-குற:45 610/1

மேல்

வேம்பு (1)

வேங்கை மூங்கில் வேம்பு போந்து – பெத்ல-குற:22 325/2

மேல்

வேய்களை (1)

மேக்குறும் வளர்பிறையில் வெண்ணிலாவே வெட்டும் வேய்களை உளுத்து அழித்தாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 173/4

மேல்

வேர் (1)

வேர் இல்லா பூமரம் போல் உன்றன் கொண்டையில் – பெத்ல-குற:71 921/1

மேல்

வேரடா (1)

வேரடா உனை வெற்றிகொண்டாரடா பத்திரம் சொன்னேன் – பெத்ல-குற:20 190/4

மேல்

வேரோடே (1)

வேரோடே அத்திமரம் பட்டுப்போகவும் மேய்ச்சல் உள்ள தலத்து ஆடுகள் மேய்க்கவும் – பெத்ல-குற:46 629/1

மேல்

வேல் (1)

ஆல வேல் விழிகட்கு அஞ்சனம் தீட்டி – பெத்ல-குற:22 334/1

மேல்

வேலை (1)

நாடியே சிங்கனும் நானுமாய் வேலை நடத்தி மனுவை பிடிக்க கருத்தொடு – பெத்ல-குற:45 611/2

மேல்

வேலைக்காக (1)

செய்த வேலைக்காக தையல் இரேபெக்காள் – பெத்ல-குற:71 912/3

மேல்

வேலைக்கு (1)

படிப்பான போதகர் சொல் தொடுப்பாய் நின்று பாடுபட மார்த்தாள் வேலைக்கு ஓடியே போனாள் – பெத்ல-குற:17 154/2

மேல்

வேலையதாக (1)

சீலையிலும் எழுத்து வேலையதாக பண்ணி தேரிலும் தூற்றுக்குடி ஊரிலுமே – பெத்ல-குற:17 167/1

மேல்

வேலையாள் (1)

அறுப்பு மிகுதியது எனவும் வேலையாள் கொஞ்சம் என்றும் அருளி செய்த – பெத்ல-குற:54 712/1

மேல்

வேலையில் (1)

வித்தகா எனக்கு இவ் வேலையில் உதவாய் – பெத்ல-குற:39 520/2

மேல்

வேளாளர் (1)

தேசமினூடு எழு நால் வகை சாதியில் தேர்ந்த வேளாளர் முதலியர் ஆரியர் – பெத்ல-குற:47 641/2

மேல்

வேளைக்கு (1)

வேட்டை கறிக்குமா நாட்டமடா ஈசாக்கு அண்ணே இவ் வேளைக்கு ஏதாகிலும் கொண்டுபோய் மாய்மாலம் பண்ணேன் – பெத்ல-குற:62 816/1

மேல்

வேளையில் (1)

மேசியாவே இவ் வேளையில் உதவாய் – பெத்ல-குற:39 538/2

மேல்

வேளையிலே (1)

கஸ்தியுறும் வேளையிலே மணி கூடை மாத்திரைக்கோல் கையில் வாங்கி – பெத்ல-குற:22 198/3

மேல்

வேற்றுரு (1)

தோப்புற்று எதிர் பேய் புகலாய் புகல் தோற்றத்தனை மாற்றுரு வேற்றுரு சூட்டி பகை காட்டிய மூட்டிய துரு ரோமை பதி வாழ் – பெத்ல-குற:2 17/1

மேல்

வேறாக (1)

பங்கு பிரிக்கையில் என் பங்கு வேறாக பாதி தர குற பாசாங்கு எல்லாம் பண்ணும் – பெத்ல-குற:45 615/4

மேல்

வேறாய் (1)

கூறாய் ராகேலை கேட்க வேறாய் யாக்கோபை கூடும் கூச்ச பார்வை லேயாள் சொன்ன பேச்சையும் கேளேன் – பெத்ல-குற:17 147/3

மேல்

வேறு (4)

அங்கு இவரை படைத்துவிட்ட முறைமையை பார்த்தாக்கால் ஆண்ட பரன் தந்தை அல்லால் வேறு இலை காண் அம்மே – பெத்ல-குற:28 408/4
பொன்னகர் ஒன்று இணை அலது வேறு இலை என்று ஓங்கு பெத்லேம் புதுமை நாட்டில் – பெத்ல-குற:30 426/1
விட்டு ஆகாமி பல ஸ்திரீ மார்க்கமாய் வேறு பாதையில் சென்றதை என் சொல்வேன் – பெத்ல-குற:49 652/2
வேறு உள செம்பு மரம் சிலை யாவையும் வேசித்தனம் செய்யும் நோக்கமாய் பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 700/4

மேல்

வேறுபட்டதால் (1)

நாழிகைக்கு நாழிகை வேறுபட்டதால் யாக்கோபு லாபானை விட்டு ஓடிப்போனாப்போல் – பெத்ல-குற:63 829/4

மேல்

வேறே (5)

வெட்டுக்கிளியை யொவான் தின்றுபோட்டானே வேறே கிளியை நாம் தேடி பிடிக்கவே – பெத்ல-குற:53 710/4
மெஞ்ஞான பொஸ்தகம் ஒன்று தருகிறேன் வேறே தங்க முலாம் பூசினதும் தாறேன் – பெத்ல-குற:57 764/1
எல்லை இது அன்றி வேறே வித பட்சியும் ஏராளமான பெரும் கூட்டமாய் வந்து – பெத்ல-குற:60 801/4
வித்தகனான சவுல் என்ற பட்சியும் வேறே திருச்சபை ஏழு என்ற பட்சியும் – பெத்ல-குற:60 802/4
தப்பாமலே குட்டை தாரா கறி ஒரு சட்டி வேறே தாளித்து எனக்கு படைத்தால் அல்லோ மெத்த கெட்டி – பெத்ல-குற:62 822/2

மேல்