நெ முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நெஷ்டூரனோடே 1
நெஞ்ச 2
நெஞ்சகத்தர் 1
நெஞ்சகத்தாலே 1
நெஞ்சத்திலே 1
நெஞ்சத்து 1
நெஞ்சத்துடைய 1
நெஞ்சத்தை 1
நெஞ்சத்தோடே 1
நெஞ்சம் 4
நெஞ்சனை 1
நெஞ்சி 1
நெஞ்சில் 2
நெஞ்சினில் 3
நெஞ்சினிலும் 1
நெஞ்சுடைத்தாய் 1
நெஞ்சை 1
நெட்டில் 1
நெட்டூரன் 1
நெட்டை 2
நெடிய 3
நெடிலுற்ற 1
நெடுக 1
நெடுமையின் 1
நெப்தூனுக்கு 1
நெய்யடா 1
நெய்யே 1
நெரிப்பாள் 1
நெருக்கம் 1
நெருக்கி 1
நெருக்கிய 1
நெருங்கடி 1
நெருங்கி 3
நெருங்கு 1
நெருப்பிடை 1
நெருப்பு 1
நெற்றிக்கிடை 1
நெற்றியில் 1
நெற்றியிலும் 1
நெறி 12
நெறிகள் 1
நெறித்தே 1
நெறியால் 1
நெறியினை 1
நெறியுடனே 1
நெறியே 1
நெறியோர் 1

நெஷ்டூரனோடே (1)

நிக்கிரகமாகி அவன் சேனைகள் எல்லாம் அந்த நெஷ்டூரனோடே கூட வீழ்குவார் அம்மே – பெத்ல-குற:35 497/2

மேல்

நெஞ்ச (2)

தேர்ந்த நெஞ்ச பாங்கு மிஞ்சித்து ஈண்டு துன்ப தீங்கை நிந்தித்து – பெத்ல-குற:22 268/1
பற்றிய நெஞ்ச துயர் என்று நீங்கி பரதாபம் தீருவன் நானே – பெத்ல-குற:64 843/4

மேல்

நெஞ்சகத்தர் (1)

கல் பதித்த நெஞ்சகத்தர் கர்ம வினையை தேவ – பெத்ல-குற:61 804/1

மேல்

நெஞ்சகத்தாலே (1)

நேசனை போல் தன்னை காண்பித்து வஞ்சக நெஞ்சகத்தாலே கிறிஸ்துவை விட்டு எழு – பெத்ல-குற:63 831/3

மேல்

நெஞ்சத்திலே (1)

வஞ்சகத்திலே துணிந்து கொடுமை எல்லாம் நெஞ்சத்திலே அணிந்து – பெத்ல-குற:12 103/1

மேல்

நெஞ்சத்து (1)

வந்து அற்பம் மிகும் துற்குண அண்டத்தன மிண்டு அக்கிரம வம்பர்க்குறு இடும்பத்தன வஞ்ச பகை நெஞ்சத்து இருள் – பெத்ல-குற:44 605/4

மேல்

நெஞ்சத்துடைய (1)

எத்தனாம் கொடு நெஞ்சத்துடைய மதத்தனாம் சதியின் சத்துரு விழ வெட்டுமாம்படி நிந்தைப்பட வலை எழு ரோமான் – பெத்ல-குற:3 27/1

மேல்

நெஞ்சத்தை (1)

நெஞ்சத்தை உடைய பராபரன் மேல் எவ்வாறு குறம் நிகழ்த்தலாம் என்று – பெத்ல-குற:1 4/3

மேல்

நெஞ்சத்தோடே (1)

நீதி பெருக்கில் எனை வைத்து கூடியே நெஞ்சத்தோடே மெத்த கொஞ்சிக்கொண்டாள் அந்த – பெத்ல-குற:65 850/4

மேல்

நெஞ்சம் (4)

சுரர்களின் நெஞ்சம் பணிந்து எச்சம் படைத்து அங்கம் சுபத்தால் ஐயும் – பெத்ல-குற:22 297/1
நீண்ட பவத்தை சமைத்த துரோகரை நெஞ்சம் பதைக்க உதைத்து கீழே தள்ளி – பெத்ல-குற:45 613/2
பாதி பொருளை விபரிக்கும் முன்னமே பாவி என் நெஞ்சம் பரவசம்கொண்டதால் – பெத்ல-குற:65 850/3
நெஞ்சம் பதறி திடுக்கிட்டு எழுந்து அந்த நெட்டூரன் இட்ட திருச்சபை கட்டளை – பெத்ல-குற:65 852/2

மேல்

நெஞ்சனை (1)

வானம் ஒத்து உறைவான் அருள் அபிமானம் வைத்து அறைவான் சற்றெனும் வஞ்சனை நினையான் எளிமையின் நெஞ்சனை முனையான் – பெத்ல-குற:13 105/2

மேல்

நெஞ்சி (1)

மஞ்சு திகழ் பரன் அஞ்சு குறியினை நெஞ்சி நினைவுடன் அஞ்சலிகள் செய்து – பெத்ல-குற:23 356/3

மேல்

நெஞ்சில் (2)

எட்டு எனும் தினமே சுன்னத்து இட்டனன் இனமே ஆலையத்து எண் அஞ்சில் புகுந்தான் சிமியோன் உள் நெஞ்சில் தொகுந்தான் – பெத்ல-குற:13 115/1
அஞ்சு குறியின் சருவ விஞ்சையனை நெஞ்சில் நிதம் – பெத்ல-குற:22 348/1

மேல்

நெஞ்சினில் (3)

நெஞ்சினில் அன்பு உயர்ந்த யோவான் கோலே ஐயர் நிறை மிகு நல் குரு எனவே நின்ற காலை – பெத்ல-குற:1 7/2
மிஞ்சிய நெஞ்சினில் ஆசை பிடித்து – பெத்ல-குற:15 132/15
நெஞ்சினில் மகிழ்ந்து பல வஞ்சியர் நிறைந்து அடிகள் – பெத்ல-குற:22 242/2

மேல்

நெஞ்சினிலும் (1)

நெஞ்சினிலும் செப விஞ்சை இறைஞ்சு அவதானி நித்திய காலம் – பெத்ல-குற:15 131/6

மேல்

நெஞ்சுடைத்தாய் (1)

பொறுமை நெஞ்சுடைத்தாய் பொறி பகையுடைத்தாய் – பெத்ல-குற:39 527/2

மேல்

நெஞ்சை (1)

பட்டப்பகலை இரவது ஆக்கவும் பார்வோனின் நெஞ்சை கடினமது ஆக்கவும் – பெத்ல-குற:46 621/3

மேல்

நெட்டில் (1)

நெட்டில் வனவாசம் அடுத்து குணப்பட்டவர் – பெத்ல-குற:7 49/2

மேல்

நெட்டூரன் (1)

நெஞ்சம் பதறி திடுக்கிட்டு எழுந்து அந்த நெட்டூரன் இட்ட திருச்சபை கட்டளை – பெத்ல-குற:65 852/2

மேல்

நெட்டை (2)

கட்டை வெள்ளை புள்ளும் நெட்டை ஞான புள்ளும் கல்வி புள்ளும் பல புள்ளி புள்ளுமாக – பெத்ல-குற:48 647/4
நெட்டை கண்ணியை நெருக்கி குத்தினால் நீர்க்காக்காய் படுமே குழுவா – பெத்ல-குற:54 718/2

மேல்

நெடிய (3)

அலுக்கும் நெடிய தலை துலுக்கும் எங்கடா போகும் – பெத்ல-குற:20 188/4
சாலை அழகோ உரிய தாரின் அழகோ நெடிய
சோலை அழகோ பயில்செய் தோகை அழகோ செரியும் – பெத்ல-குற:22 319/1,2
லீபனோனே கானாவில் பெரிய மலையேனும் நெடிய பெத்தலேம் மலைக்கு நிகர் மலை ஏது அம்மே – பெத்ல-குற:25 371/4

மேல்

நெடிலுற்ற (1)

படிவில் பருதியிட்ட நெடிலுற்ற கவசத்தை சாத்தினாள் அருள் பயில் பொன் சரிகை தைத்த ஒயில் உத்தரீகத்தையே போர்த்தினாள் – பெத்ல-குற:16 141/2

மேல்

நெடுக (1)

மறையது இல்லா அந்தி பேயை பொய் தெரிசியாய் நெடுக வசனித்தேனே – பெத்ல-குற:1 6/4

மேல்

நெடுமையின் (1)

நெடுமையின் கோலை எகிப்தின் கடுமையின் காலை ஒரு பத்து நீதியின் விதத்தை வாதைகள் மோதும் உச்சிதத்தை – பெத்ல-குற:13 111/2

மேல்

நெப்தூனுக்கு (1)

நாமமாய் யூரானிஸ்க்கு நாலு நெப்தூனுக்கு ஒன்று – பெத்ல-குற:18 169/3

மேல்

நெய்யடா (1)

கட்டி கொழுப்பு உருக்கு நெய்யடா அன்ன பட்சி திவ்விய காரிகை சீயோன் மகள் வாங்குவாள் உனை மெச்சி – பெத்ல-குற:62 818/2

மேல்

நெய்யே (1)

காட்டுக்கோழி கறி காட்டு கறி கெட்டுது ஐயே பெட்டை கான மயில் கறியானது எல்லாம் முழு நெய்யே – பெத்ல-குற:62 816/2

மேல்

நெரிப்பாள் (1)

சாத்திரிப்பாய் கையை நெரிப்பாள்
பாத்திரத்தில் அப்பம் பின் ஓர் பாத்திரத்தில் ரசம் வாங்கி – பெத்ல-குற:69 885/2,3

மேல்

நெருக்கம் (1)

வழியும் சத்தியம் சீவன் உழையும் நெருக்கம் என்ற வழுவது அன்றிய மோட்ச வாசல் இது – பெத்ல-குற:30 436/4

மேல்

நெருக்கி (1)

நெட்டை கண்ணியை நெருக்கி குத்தினால் நீர்க்காக்காய் படுமே குழுவா – பெத்ல-குற:54 718/2

மேல்

நெருக்கிய (1)

மேலே இடுப்பில் இறுக்கி நெருக்கிய
வித்தை இது என்னடி சிங்கி நித்திய – பெத்ல-குற:71 909/1,2

மேல்

நெருங்கடி (1)

கிட்டி நெருங்கடி சிங்கி வாக்கு – பெத்ல-குற:71 929/2

மேல்

நெருங்கி (3)

மா வீதி நிறைய எருசலையில் எங்கும் மிக நெருங்கி வருகின்றாரே – பெத்ல-குற:14 118/4
தந்து நெருங்கி அடைந்த சனங்களையும் – பெத்ல-குற:22 220/2
நீச வாகனத்தாய் நெருங்கி வா கனத்தாய் – பெத்ல-குற:39 524/1

மேல்

நெருங்கு (1)

தங்கு கூர்மை நெருங்கு வாள் பிரசங்கம் வாயில் அலங்கவே – பெத்ல-குற:9 83/3

மேல்

நெருப்பிடை (1)

தொகையாகவே நரகத்தின் நெருப்பிடை சுட்டெரிக்க திடுக்கிட்டு விழித்தல் போல் – பெத்ல-குற:56 759/4

மேல்

நெருப்பு (1)

முண்டுத்தனமான நாவும் நெருப்பு என்று முந்தி யக்கோபு அப்போஸ்தலன் சொன்னானே – பெத்ல-குற:57 768/3

மேல்

நெற்றிக்கிடை (1)

இரத்த குருசு சித்திர வெற்றி கொடி கட்டி கன நெற்றிக்கிடை பொன் பட்டமும் இட்டு சபையை பற்றியே – பெத்ல-குற:44 602/5

மேல்

நெற்றியில் (1)

நெற்றியில் வட்டமாய் கட்டியிருக்கிற – பெத்ல-குற:71 919/1

மேல்

நெற்றியிலும் (1)

நெற்றியிலும் மார்பிலேயும் கத்தனின் சிலுவை வரை அம்மே ஒரு நேராக நின்று கன சீராக பணிந்துகொள் அம்மே – பெத்ல-குற:36 502/1

மேல்

நெறி (12)

உருகி மனம்திரும்பி தவசுபண்ணி நெறி ஒழுங்கில் நடந்து அதிக செபங்கள் நண்ணி – பெத்ல-குற:8 62/2
சாஸ்திரப்படியே சொன்ன நெறி மேவி வரும் சகல சனங்களும் ஒன்றாய் குலாவி – பெத்ல-குற:8 74/2
முதிய மறையது முழுதும் ஒருவன் என மொழி நவில முதன்மைபெறும் அமுத வடிவே முருகு உலவு செப முறையின் நெறி ஒழுகு அவர் இதைய முளரி-தனில் நிறையும் முதலே – பெத்ல-குற:11 94/2
எரி அலகை பதறி நரகதனினிடை விழ முனிவின் இடியின் எதிர் பகரும் வசனா இசையின் நெறி தவறி ஒழுகிய பழைய உலகமதை எழு புனலில் அழியவிடுவாய் – பெத்ல-குற:11 95/2
சித்திய விதத்தின் நெறி எத்திசையும் உத்தமரில் ஓங்க தயாபரனை – பெத்ல-குற:15 133/11
வந்த நரர் பதற வஞ்சர் நெறி சிதற – பெத்ல-குற:22 207/2
இலங்கி அறிவு துலங்கி நெறி மறை – பெத்ல-குற:23 351/2
நீதி நெறி தவறாது நரர் புரி ஏதம் மிகு பல தீதது அகலிட – பெத்ல-குற:23 353/2
நிற்க காண்பது நல் நெறி மார்க்கம் நினைக்க காண்பது எண்ணின எண்ணம் – பெத்ல-குற:26 389/2
நேர் மிகுத்த பத்து நெறி கிறிஸ்தவர்கள் அம்மே நிலை ஞாயப்பிரமாண கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 414/2
நீதி நெறி தவறாது ஒழுகிய மாது எங்கு போயினளோ – பெத்ல-குற:58 774/2
கள்ளர் எரிகோவில் சென்றவனை கொள்ளையிட்ட நெறி போல் சிங்கியை – பெத்ல-குற:58 788/1

மேல்

நெறிகள் (1)

தீட்சை கொடுத்து ஆத்துமத்தை சுத்திகரித்து சுவிசேட நெறிகள் எல்லாம் மெத்த விரித்து – பெத்ல-குற:8 58/1

மேல்

நெறித்தே (1)

நோவையை பார்த்தே அவன் குலம் யாவையும் காத்தே ஆபிராம் நோன்மையை குறித்தே அவனை நல் மேன்மையின் நெறித்தே
ஆவியும் மூட்டி அவனுட தேவியும் கூட்டி கல்தேயர் அருப்பத்தை கடந்து திருவுள விருப்பத்தை தொடர்ந்து – பெத்ல-குற:13 110/1,2

மேல்

நெறியால் (1)

ஆதி அமலனை பணிந்து சத்திய மறை ஓது நெறியால் ஐ துணிந்து வெகுவிதமாய் – பெத்ல-குற:24 360/2

மேல்

நெறியினை (1)

நீதியாய் தருவோம் என்று சொன்ன நெறியினை நிறைவேற்றுதற்காக – பெத்ல-குற:26 380/2

மேல்

நெறியுடனே (1)

நெறியுடனே மனுடன் உரு எடுத்ததினால் அம்மே நேயனுக்கும் இவர்க்கும் இப்போ முறைகள் என்ன அம்மே – பெத்ல-குற:28 409/3

மேல்

நெறியே (1)

அன்ன நிகரே நடைகள் அண்ணல் நெறியே உடைகள் – பெத்ல-குற:22 344/1

மேல்

நெறியோர் (1)

நேரான நீதி மன்னர் நெறியோர் வாழி நித்திய சுப சோபன நீடூழிதானே – பெத்ல-குற:72 955/4

மேல்