ஓ முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஓக்கத்தில் 1
ஓகை 1
ஓகோ 1
ஓங்க 2
ஓங்கடா 1
ஓங்கல் 1
ஓங்கி 11
ஓங்கிய 5
ஓங்கியே 1
ஓங்கியோங்கி 1
ஓங்கு 5
ஓங்கும் 2
ஓசன்னா 2
ஓசனா 2
ஓசை 1
ஓசைபட 1
ஓசையா 1
ஓசையாய் 1
ஓசையுடன் 1
ஓட்ட 2
ஓட்டங்கள் 1
ஓட்டடா 1
ஓட்டவும் 1
ஓட்டா 1
ஓட்டாய் 1
ஓட்டி 3
ஓட்டியர் 1
ஓட்டினாள் 1
ஓடாமல் 1
ஓடி 11
ஓடிப்போகும் 2
ஓடிப்போகையில் 2
ஓடிப்போச்சுதே 1
ஓடிப்போம் 1
ஓடிப்போய் 1
ஓடிப்போய்விடும் 1
ஓடிப்போனாப்போல் 3
ஓடிப்போனாள் 1
ஓடியதான 1
ஓடியதோர் 1
ஓடியவன் 1
ஓடியாடி 1
ஓடியும் 1
ஓடியே 2
ஓடிவந்து 4
ஓடின 1
ஓடினாப்போல் 1
ஓடினாய் 1
ஓடினான் 1
ஓடும் 5
ஓடையே 1
ஓத 3
ஓதடா 1
ஓதடி 1
ஓதமுத்து 1
ஓதாமல் 1
ஓதி 7
ஓதிய 3
ஓதியும் 1
ஓதியுமே 1
ஓதில் 1
ஓதின 4
ஓதினதும் 1
ஓது 5
ஓதுதற்கு 1
ஓதும் 4
ஓதுவது 2
ஓதுவம் 1
ஓந்தையில் 1
ஓம்பி 1
ஓய்ந்து 1
ஓய்வு 1
ஓயாமல் 1
ஓர் 28
ஓர்க்கில் 1
ஓர்ந்த 1
ஓர்வருக்கோர்வர் 1
ஓரத்தையே 1
ஓரமாகவும் 1
ஓரான் 1
ஓரே 1
ஓரேப்பு 1
ஓரேழ் 1
ஓலப்பர் 1
ஓலம் 1
ஓலை 2
ஓலையாள் 1
ஓவாது 1
ஓவியமிட்டு 1
ஓனாயான 1

ஓக்கத்தில் (1)

மோனம் புகழ் வானம்பாடியும் ஆடியும் ஓக்கத்தில் உள்ளானும் மார்க்கத்தில் உள்ளானும் – பெத்ல-குற:48 648/3

மேல்

ஓகை (1)

தந்தனை உணர் மாதம்-தனை உணவோரும் பலன் உறவோரும் பலனுற ஊரங்க முனணி சீர் அங்க முனணி ஓகை பரனார் – பெத்ல-குற:2 16/2

மேல்

ஓகோ (1)

ஓகோ போறேன் ஓட்டாய் தாத்தா பாட்டால் ஓட்டா – பெத்ல-குற:22 265/1

மேல்

ஓங்க (2)

சித்திய விதத்தின் நெறி எத்திசையும் உத்தமரில் ஓங்க தயாபரனை – பெத்ல-குற:15 133/11
நூவன் வந்தானே தேவ திருச்சபை நூங்கு பெத்லேம் பதி ஓங்க இரு கழல் – பெத்ல-குற:44 601/1

மேல்

ஓங்கடா (1)

இடைவிடாமலே ஓங்கடா – பெத்ல-குற:55 723/4

மேல்

ஓங்கல் (1)

யோனத்தான் தாவீதை ஓங்கல் சவுலை முன் – பெத்ல-குற:70 895/2

மேல்

ஓங்கி (11)

ஒருவன் அன்று இரு புன் மறியில் ஏறினவன் உதையம் மூன்றினில் எழுந்தவன் ஊழி நாலு வினை மாற ஓங்கி ஐந்து அப்பம் ஈந்து அறு தினத்திலே – பெத்ல-குற:4 28/1
சிந்தைப்படி கொடுத்து அவரை தாங்கி சற்றும் தீமை இடுக்கண் செய்யாமல் ஓங்கி
தந்திர பேய் மதங்கள்-தனை முனிந்து வேத சத்திய வாய்மையினில் மனம் கனிந்து – பெத்ல-குற:8 65/1,2
புத்தியும் சாற்றி எளியவர் கஸ்தியும் மாற்றி மிகுந்த பொறுமையும் ஓங்கி பாவிகள் சிறுமையும் தாங்கி – பெத்ல-குற:13 116/1
ஆர்ந்த புந்திக்கு ஓர்ந்த பண்புற்று ஆய்ந்த இன்பத்து ஓங்கி நன்றிட்டு – பெத்ல-குற:22 268/2
சூழ்ந்து பதத்தை கூர்ந்து மனத்து உற சோம்பல் அறுத்திட்டு ஓங்கி உரைத்து – பெத்ல-குற:22 270/1
பெரு மதி சேர் விசுவாச குறவஞ்சி எனும் மேன்மை பெயர் கொண்டு ஓங்கி
வரு மதி பொன் பெத்தலேம் மலை தங்கி நிறை அணங்கி நளின சிங்கி மிக முழங்கி வருகின்றாளே – பெத்ல-குற:23 349/3,4
சட்டமாய் சபையில் ஓங்கி சகல துன்பமும் நீங்கி – பெத்ல-குற:24 363/6
திரு ஞான பெத்தலேம் அதிபதியின் கிருபை மிகும் திறம் கொண்டு ஓங்கி
வரும் ஞான குறவஞ்சி-தன்னை மகிழ்ந்து எருசலேம் மகளும் நோக்கி – பெத்ல-குற:25 365/1,2
தீட்டியதோர் ஆகமத்தின் பயனை எலாம் உணர்த்து அறிந்து திடன்கொண்டு ஓங்கி
நாட்டமுடன் பெத்லேக மலை ஞான சிங்கனுக்கு நயமாய் அன்பு – பெத்ல-குற:44 599/1,2
பலம் திகழ் வரங்கள் ஓங்கி பரம சீவாற்றில் தங்கி – பெத்ல-குற:51 673/3
சிறப்பு மிகும் பெத்லகேம் நாதர் வளர் பண்ணை எல்லாம் திடன்கொண்டு ஓங்கி
வெறுப்பு மிகும் பவ துயரை தவிர்த்து உயர்ந்த சிங்கனின் முன் விரைவினோடு – பெத்ல-குற:54 712/2,3

மேல்

ஓங்கிய (5)

ஒக்கும் மணி ஓரேழ் மூவேழ் வினாடியும் நொடி ஐம்பதே உற்ற சனியின் வளையம் அப்படி ஓங்கிய திங்களோ எனில் – பெத்ல-குற:21 195/8
மேவியே வளர்ந்து ஓங்கிய நாடு வேடமானது நீங்கிய நாடு – பெத்ல-குற:26 384/3
பெண்ணே தவக்கொடியே கற்பில் ஓங்கிய பேரின்பமே – பெத்ல-குற:37 504/2
அண்டி குடியிருந்து ஓங்கிய லாபான் அண்டையின் நீடி அடைந்து சேர்ந்தாப்போலே – பெத்ல-குற:49 655/4
நற்குணத்து ஓங்கிய ஆகீசு எனும் காத்தின் ராசனை தாவீது நேசமாய் சேர்ந்தாப்போல் – பெத்ல-குற:49 658/4

மேல்

ஓங்கியே (1)

விதித்து வலையை துதித்து வாங்கி விண்ணின் நிலை கண்டு ஓங்கியே
விரைந்து விரைந்து பறந்து குத்தடா வேதாந்த பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 714/3,4

மேல்

ஓங்கியோங்கி (1)

பக்கிஷமாக முப்பத்தொன்பது என பரம சீயோன் மகள் பாங்குடன் மகிழ்ந்து ஓங்கியோங்கி பணிந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 195/10

மேல்

ஓங்கு (5)

பொன்னகர் ஒன்று இணை அலது வேறு இலை என்று ஓங்கு பெத்லேம் புதுமை நாட்டில் – பெத்ல-குற:30 426/1
உன்னதம் சேர் எருசலேம் பட்டண சீயோன் மலை மேல் ஓங்கு கோவில் – பெத்ல-குற:30 426/3
யூதேயா நாட்டினிலே ஓங்கு கோத்திரம் நாலது உண்டு – பெத்ல-குற:31 444/2
உத்த லுத்தருக்கு கல்வீனை போலவும் ஓங்கு சிங்கனுக்கு பாங்கனை போலவும் – பெத்ல-குற:44 604/2
உத்தமனான சகேயு ஆயக்காரன் ஒப்பதற்று ஓங்கு கிறிஸ்துவை காணவே – பெத்ல-குற:52 693/1

மேல்

ஓங்கும் (2)

நாட்டி அங்கு சீவவிருட்சத்தை ஓங்கும் உயர் நல் ஈந்து தென்னம் குருத்தோலை வாங்கும் – பெத்ல-குற:8 71/1
உற்ற அரசர் துரைகளின் முன்னிலும் ஓங்கும் இடர்கட்கு உதவிசெய்தோர் முனும் – பெத்ல-குற:57 767/3

மேல்

ஓசன்னா (2)

ஆக்கி அர்ச்சனைபுரிந்து மனம் தேறும் தவிது ஆதிபனுக்கு ஓசன்னா என்று கூறும் – பெத்ல-குற:8 72/1
ஓசன்னா பவ_நாசன்னா என ஓசையாய் கிறிஸ்து ஏசுவே – பெத்ல-குற:9 80/3

மேல்

ஓசனா (2)

ஓசனா என்றே உரைத்திட பவனி – பெத்ல-குற:22 249/1
அல்லேலூயா ஓசனா என்று அருளின சொற்கு அர்த்தம் என்ன வஞ்சி கத்தாவின் – பெத்ல-குற:32 470/1

மேல்

ஓசை (1)

வேத ஓசை முழங்கிட வந்து அருள் வித்தகன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 380/4

மேல்

ஓசைபட (1)

காசு பலகைகளை ஓசைபட புரட்டி வீசி துரத்துகின்ற வாசல் இது – பெத்ல-குற:30 435/4

மேல்

ஓசையா (1)

ஓசையா மல்கியா தீர்க்கன் உயர் யோவேல் செபானியா சகாரியா தீர்க்கன் – பெத்ல-குற:34 491/2

மேல்

ஓசையாய் (1)

ஓசன்னா பவ_நாசன்னா என ஓசையாய் கிறிஸ்து ஏசுவே – பெத்ல-குற:9 80/3

மேல்

ஓசையுடன் (1)

ஓசையுடன் நினைந்து உருகி பெத்தலேமுக்கு ஓடினான் சிங்கி-தனை தேடினானே – பெத்ல-குற:65 844/4

மேல்

ஓட்ட (2)

சக்கர ஓட்ட கால வரிசை தபனனை சுற்றி சாமன் எண்பத்தேழு நாள் மணி இருபத்துமூன்றே வினாடிக்கு – பெத்ல-குற:21 195/1
பெட்டக பேயை பிடித்து ஓட்ட வேண்டாமோ – பெத்ல-குற:71 929/1

மேல்

ஓட்டங்கள் (1)

வீரியமாய் கிரகங்கள் ஓட்டங்கள் இவை எல்லாம் வியந்தான் அந்த – பெத்ல-குற:21 191/3

மேல்

ஓட்டடா (1)

கதியை கைமேலே காட்டடா மனக்கவலையை விடுத்து ஓட்டடா – பெத்ல-குற:55 728/2

மேல்

ஓட்டவும் (1)

தீர்ப்புக்கு எதிர்த்திடில் ரோமியை மானுவேல் தேசம் விட்டு ஓட்டவும் விண்டு சற்றும் – பெத்ல-குற:33 482/3

மேல்

ஓட்டா (1)

ஓகோ போறேன் ஓட்டாய் தாத்தா பாட்டால் ஓட்டா
ஆகா ஈஈ ஆத்தே மாட்டேன் மூட்டாய் கூக்கூ – பெத்ல-குற:22 265/1,2

மேல்

ஓட்டாய் (1)

ஓகோ போறேன் ஓட்டாய் தாத்தா பாட்டால் ஓட்டா – பெத்ல-குற:22 265/1

மேல்

ஓட்டி (3)

கானத்தில் ஓட்டி இரட்சிப்பின் தானத்தை காட்டி கொலைசெய்த காயனை முனிந்தான் ஆபேல் நேயனை கனிந்தான் – பெத்ல-குற:13 109/3
சனுவுடன் ஆயர் பணியவும் கனிவுறு சேயர் குடிலிடை தாரகை காட்டி பாரினில் சேர் மிகை ஓட்டி
வினவுடன் வானோர் தவ சபை அனைவரும் ஆனோர் விண்ணில் மெய் புகழ் பலவே மனது ஒருமிப்பொடு சொலவே – பெத்ல-குற:13 114/2,3
கங்குல் மதம் கலகங்களையும் கெட ஓட்டி கடைசியிலே – பெத்ல-குற:15 132/7

மேல்

ஓட்டியர் (1)

அன்பான அங்கர் கிராடர் திராவடர் ஆந்திரர் ஓட்டியர் பாஞ்சாலர் பாண்டியர் – பெத்ல-குற:47 639/2

மேல்

ஓட்டினாள் (1)

கடியை தீ நரகுக்குள் முடிய பதறி விழ ஓட்டினாள் நயம் கண்டு புவியை சயம்கொண்டு சிலுவைக்கொடி நாட்டினாள் – பெத்ல-குற:16 141/4

மேல்

ஓடாமல் (1)

தன்னாலே சந்திரன் சூரியன் ஓடாமல் தான் நடுவானத்தில் மேவி நிற்க சொன்ன – பெத்ல-குற:43 594/4

மேல்

ஓடி (11)

மஞ்சுற்று உலவு கொடி சஞ்சு ஒத்து ஒளிர் சிறந்த கொண்டையாள் மணி மாடப்புறாவின் கண் என்று ஓடி பரந்த விழி கெண்டையாள் – பெத்ல-குற:16 136/2
ஆனாலும் நான் நம்பமாட்டேன் என்று அப்பாலே ஓடி ஓர் கப்பற்குள் ஏக – பெத்ல-குற:34 490/3
ஓலம் உயர்த்தி பயிற்கத்தி யோசனை வைத்து சிரித்திட்டு ஓவியமிட்டு துகில் கட்டி ஓடி நடித்து பொழில் புக்கி – பெத்ல-குற:44 604/4
நித்தன் வருவதை காண தடை என நேடி முன்னால் விரைந்து ஓடி துரிதமாய் – பெத்ல-குற:52 693/3
திட்டமதாய் கட்டு வலையடா சுற்று தேசம் எங்கும் ஓடி கலையடா – பெத்ல-குற:55 727/1
தப்பும் முன் ஓடி தொடர்ந்து பிடிக்க சதி நினைத்தே வரும் போது சமுத்திரத்து – பெத்ல-குற:56 753/3
கூசாமல் வந்த உன் சத்தத்தை கேட்டு அல்லோ கூட்ட குருவி கலைந்து ஓடி போகுது – பெத்ல-குற:57 762/2
உச்சத்தில் ஓடி பறக்கும் கணக்கற்ற பக்கியே நீங்கள் ஓடிவந்து பாப்பின் மாங்கிஷத்தை தின்பீர் முக்கியே – பெத்ல-குற:59 796/4
தன் மறை விட்டு அகன்று ஓடி புறத்தியில் சண்டாள லோக பொருள்-தனை நாடியே – பெத்ல-குற:63 837/3
அண்டம் எண் திசையும் ஓடி பாபேல் எனும் – பெத்ல-குற:69 886/1
ஊர் எங்கும் ஓடி உலைவதேன் பெத்தலேம் – பெத்ல-குற:72 939/1

மேல்

ஓடிப்போகும் (2)

வஞ்சகமாய் தப்பி ஓடிப்போகும் செங்கால் நாரையே எனை வஞ்சகமாய் தப்பி ஓடிப்போனாள் செம் கால் நாரியே – பெத்ல-குற:59 794/1
கூப்பிட்டு கூப்பிட்டிட்டு ஓடிப்போகும் கரும் குயிலே கெஞ்சி கூப்பிடக்கூப்பிட வாராதது ஏன் அந்த குயிலே – பெத்ல-குற:59 795/1

மேல்

ஓடிப்போகையில் (2)

நீக்கி அழிவுக்கு தப்ப மெய் தூதர் கை நீடிய நால்வர் கடந்து ஓடிப்போகையில்
நோக்கமதாகவே சோதோம் பட்டணத்தை லோத்தின் பெண்சாதி திரும்பிப்பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 686/3,4
வீரமுடன் தள்ளிவிட்டு ஓடிப்போகையில் மிக்க சாமாரியன் பக்கிஷத்தோடு அங்கு – பெத்ல-குற:56 756/3

மேல்

ஓடிப்போச்சுதே (1)

பண்ணை கடாக்களும் வாச்சுதே பட்ட பாடுகளும் ஓடிப்போச்சுதே – பெத்ல-குற:55 738/2

மேல்

ஓடிப்போம் (1)

கப்பலில் நோவாவை விட்டு ஓடிப்போம் புறா வெள்ளன் பட்டிக்காட்டு புறா எல்லாம் பத்திரமாய் கட்டு கள்ளன் – பெத்ல-குற:62 815/1

மேல்

ஓடிப்போய் (1)

ரோமியை ஓடிப்போய் அழையடா அவள் நூலை அறு முழு பிழையடா – பெத்ல-குற:55 745/1

மேல்

ஓடிப்போய்விடும் (1)

வஞ்சக கள்ள குருவிகள் வந்தாலும் மாறாட்டம்பண்ணி ஒளித்து ஓடிப்போய்விடும்
கொஞ்சு கிளிகள் சகோதர பட்சிகள் கூட்டை விட்டு அக்கியான காட்டுக்குள் ஏகாது – பெத்ல-குற:53 708/2,3

மேல்

ஓடிப்போனாப்போல் (3)

நாழிகைக்கு நாழிகை வேறுபட்டதால் யாக்கோபு லாபானை விட்டு ஓடிப்போனாப்போல் – பெத்ல-குற:63 829/4
செம்மை இலாமலே சீடர் பயந்து தெறிபட்டு திக்குக்குத்திக்காய் ஓடிப்போனாப்போல் – பெத்ல-குற:63 832/4
ஏவலுக்காய் வேண்டி போறதாய் காட்டியே எட்டி நடந்து கடந்து ஓடிப்போனாப்போல் – பெத்ல-குற:63 836/4

மேல்

ஓடிப்போனாள் (1)

வஞ்சகமாய் தப்பி ஓடிப்போகும் செங்கால் நாரையே எனை வஞ்சகமாய் தப்பி ஓடிப்போனாள் செம் கால் நாரியே – பெத்ல-குற:59 794/1

மேல்

ஓடியதான (1)

பாலும் தேன் அதி ஓடியதான பண்புறும் கானான் தேசத்தை முற்றும் – பெத்ல-குற:26 381/2

மேல்

ஓடியதோர் (1)

கரும் கடலில் ஓடியதோர் கப்பல் என மழை புனலை கனிந்து பாரில் – பெத்ல-குற:1 9/3

மேல்

ஓடியவன் (1)

புண்ணியன் யோனா என்பார் கடவுளை விட்டு ஓடியவன் போனானே மீன் வயிற்றுள் ஆனானே என்பார் – பெத்ல-குற:14 124/1

மேல்

ஓடியாடி (1)

ஓடியாடி பாடி குத்தடா உல்லாச பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 715/4

மேல்

ஓடியும் (1)

தந்தை கெட்டமகன் அண்டையும் ஓடியும்
கூவி ஏபேசுவின் மூப்பர் பவுலையும் – பெத்ல-குற:70 896/2,3

மேல்

ஓடியே (2)

படிப்பான போதகர் சொல் தொடுப்பாய் நின்று பாடுபட மார்த்தாள் வேலைக்கு ஓடியே போனாள் – பெத்ல-குற:17 154/2
முந்து யக்கோபு தான் ஒண்டியாய் ஓடியே
வந்து பதானராம் அண்டை கிணற்றிலே – பெத்ல-குற:70 893/1,2

மேல்

ஓடிவந்து (4)

ஒண்டியதாய் மேசோப்பொத்தாமியாவுக்கு ஓடிவந்து பதானாராமுக்குள் புறம் – பெத்ல-குற:49 655/3
உரிமையாய் பறவை எல்லாம் ஓடிவந்து உலவும் இப்போ – பெத்ல-குற:57 760/3
உச்சத்தில் ஓடி பறக்கும் கணக்கற்ற பக்கியே நீங்கள் ஓடிவந்து பாப்பின் மாங்கிஷத்தை தின்பீர் முக்கியே – பெத்ல-குற:59 796/4
சாற்றவே கேட்டு இவனும் தேட்டமாய் ஓடிவந்து
வேட்டியின் ஓரத்தையே ஈட்டமாய் தொட்டவளும் – பெத்ல-குற:67 867/2,3

மேல்

ஓடின (1)

ஓடின பேருக்கு பந்தயம் கிட்டும் என்று ஓதின வார்த்தையை சாதனையாய் பற்றி – பெத்ல-குற:45 611/1

மேல்

ஓடினாப்போல் (1)

ஊரையும் விட்டு துரத்த அபிசலோமுக்கு பயந்து தவிது ஓடினாப்போல் – பெத்ல-குற:63 830/4

மேல்

ஓடினாய் (1)

ஓதாமல் ஓடினாய் சிங்கி நான் – பெத்ல-குற:71 904/2

மேல்

ஓடினான் (1)

ஓசையுடன் நினைந்து உருகி பெத்தலேமுக்கு ஓடினான் சிங்கி-தனை தேடினானே – பெத்ல-குற:65 844/4

மேல்

ஓடும் (5)

ஏடும் புராணங்கள் கொண்டு ஓடும் பிசாசகள் உண்டு எக்கசக்கமான பாப்பின் பொய்க்கதை உண்டு – பெத்ல-குற:17 168/2
நயமாக பால் நதியும் தேன் நதியும் ஓடும் நன்மை மிகும் கானானு தேயம் இந்த தலமே – பெத்ல-குற:27 392/3
ஓரே எனும் கிரிக்கே இரவும் பகல் ஓயாமல் ஓடும் பெலன் தரும் சுட்ட அடை – பெத்ல-குற:46 623/4
நீர் ஓடும் சீவநதியினில் காட்டவும் நேராய் தொழுவத்தில் கொண்டுபோய் சேர்க்கவும் – பெத்ல-குற:46 629/2
வாடி துட்ட பேய் அருண்டே ஓடும் எட்ட நோவும் உனை – பெத்ல-குற:68 878/3

மேல்

ஓடையே (1)

பஞ்ச வன்ன படி மேடையே சீவ பரம நதியின் ஓடையே
கொஞ்சு கிளி குரல் சாடையே கண்டு கூட குதிக்குது காடையே – பெத்ல-குற:55 737/1,2

மேல்

ஓத (3)

புல்லு மண் கல் மயிர் எலும்பு எல்லாம் அர்ச்சீட்டது என்று போதித்து செத்தோரை துதித்து ஓத சொல்லுவாள் – பெத்ல-குற:17 165/3
தானாக அழிவுற செய்வோம் அதை சாற்றுவாய் நீ என்று யோனாவுக்கு ஓத
ஆனாலும் நான் நம்பமாட்டேன் என்று அப்பாலே ஓடி ஓர் கப்பற்குள் ஏக – பெத்ல-குற:34 490/2,3
ஒப்புவிக்க வேத ஞாயம் ஒன்றும் அறியாள் கட்டு உபதேசம்-தனை கொண்டு இங்கு ஓத வருவாள் – பெத்ல-குற:40 570/2

மேல்

ஓதடா (1)

கத்தரின் செபத்தை ஓதடா தூதர் காளத்தை வாங்கிக்கொண்டு ஊதடா – பெத்ல-குற:55 730/1

மேல்

ஓதடி (1)

உன்னியுன்னி சொன்ன குறி ஒப்பிப்பாயானால் அவன் ஊரும் பேரும் ஏது என்று எனக்கு ஓதடி பெண்ணே – பெத்ல-குற:40 560/4

மேல்

ஓதமுத்து (1)

ஓதமுத்து அலையே தாவிய கடல் மீது அமிழ்த்திய கோலாகலர் உறவோர்-தமக்கு ஒரு கானான் நாடு அருள் ஒரு தேவர் – பெத்ல-குற:3 22/2

மேல்

ஓதாமல் (1)

ஓதாமல் ஓடினாய் சிங்கி நான் – பெத்ல-குற:71 904/2

மேல்

ஓதி (7)

சோதி பற்றிய தேவ சாயலர் ஓதி உற்று எழு மாசிலாதவர் தூசு பெத்தலை ராசராசர் என் ஏசு நாயகரே – பெத்ல-குற:3 21/2
செத்தவர்-தமையும் எழுப்பி வைத்தவர் சுமையும் நுகத்தடி சின்னது என்று ஆதி மனுடருக்கு இன்ன நன்று ஓதி
பத்தர்கள் பாவத்தை ஒழிக்க நினைத்தவர் தவத்தை புரிந்து பாடுற இறந்தே உயிர்த்து விண் நாடுற திறந்தே – பெத்ல-குற:13 116/2,3
எட்டினுட இட்ட நவ சட்டம் வெகு நட்டணைகள் ஓதி விதத்துடனே – பெத்ல-குற:15 131/12
சோதி அடி இணை காதலொடு தொழுது ஓதி அவையிடை சாதி முறை கொடு – பெத்ல-குற:23 353/4
உற்ற இதினால் இவர் சகோதிரங்கள் ஆச்சே ஓதி என் பெண்சாதி என்பது ஏது முறை அம்மே – பெத்ல-குற:28 407/2
ஓதி மிகுத்து செப சித்தமாய் கிறிஸ்துவின் நீதி மிகுத்து தவ சுத்தமாய் சிங்கனை கண்டு – பெத்ல-குற:44 604/3
பாவ வினை தீர மனுவான பரனார் தமது பாதமதையே தினமும் ஆவலுடன் ஓதி
நாவதினால் ஏக பரனார் தயவதாய் அருளும் ஞான சுவிசேடம் என்ற தேவ வசனத்தை கொண்டு – பெத்ல-குற:61 810/1,2

மேல்

ஓதிய (3)

ஓதிய வாசாலனுக்கு உயர் மனுவேலனுக்கு – பெத்ல-குற:5 36/4
உரமது மிஞ்சும் தல சுத்தம் கன துங்கம் புதைத்து ஓதிய – பெத்ல-குற:22 297/2
வால் அருள் மகர்க்கு ஈவம் என்று ஓதிய வாய்மையாம் அந்த யூதேயா தேசம் – பெத்ல-குற:26 381/3

மேல்

ஓதியும் (1)

ஓதியும் மானிடனாம் இவன் ஓதுவது – பெத்ல-குற:22 235/2

மேல்

ஓதியுமே (1)

வானாம் பதம் மேவிய வானவர் தேனாம் புகல் ஓதியுமே தொழு – பெத்ல-குற:22 328/1

மேல்

ஓதில் (1)

நீதி கலை ஓதில் பெறு பயன் நேர் தப்பினும் ஓர் தப்பு இலை என நேச கவிராச திறமையர் நிச்சயத்து உணவார் – பெத்ல-குற:2 12/4

மேல்

ஓதின (4)

வேதமாம் என தீர்க்கர்கள் ஓதின மேன்மையால் விடை மேவிய வீட்டில் – பெத்ல-குற:26 382/3
திரியேக பராபரன் என்று ஓதின போது அம்மே திரித்துவத்தில் இரண்டாம் ஆள் சுதன் அல்லவோ அம்மே – பெத்ல-குற:28 409/1
ஓடின பேருக்கு பந்தயம் கிட்டும் என்று ஓதின வார்த்தையை சாதனையாய் பற்றி – பெத்ல-குற:45 611/1
காதுளோன் கேட்கக்கடவன் என்று ஓதின
போதகம் பெற்றதால் சிங்கா – பெத்ல-குற:71 915/3,4

மேல்

ஓதினதும் (1)

யோசுவா கீபெயோன் ஊராருக்கு ஓதினதும் யூகமோ இவன் அளவும் யோகமோ என்பார் – பெத்ல-குற:14 122/1

மேல்

ஓது (5)

தேவசகாய வேதநாயக நாவலன் ஓது பாவின் மேவிய தேசு மகா பிரகாசர் ஆகிய யேசு நாயகரே – பெத்ல-குற:3 26/2
பா ஓது புகழுடையான் பெத்லெகேம் நாதன் ஒரு பரமன் மைந்தன் – பெத்ல-குற:14 118/1
ஓது சுவிசேட பிரகாசம் ஒளி அனந்த – பெத்ல-குற:15 130/4
ஆதி அமலனை பணிந்து சத்திய மறை ஓது நெறியால் ஐ துணிந்து வெகுவிதமாய் – பெத்ல-குற:24 360/2
ஓது அடங்காத ஒருவனே சரணம் – பெத்ல-குற:39 516/2

மேல்

ஓதுதற்கு (1)

ஓதுதற்கு தங்கை இல்லை தம்பி இல்லை அம்மே ஒன்றான பரன் குலத்தை உணர்ந்துகொள்ளும் அம்மே – பெத்ல-குற:28 411/4

மேல்

ஓதும் (4)

உள்ள நன்மை யாவும் விட்டோன் ஓதும் நேர்மை நீதி கெட்டோன் – பெத்ல-குற:10 93/3
சொன்னாலும் கோபம்கொள்வாள் கன்னாப்பின்னா என்று ஓதும் துலுக்கன் செபத்தியார்க்காய் பிலுக்கிக்கொள்வாள் – பெத்ல-குற:17 161/3
ஓதும் லேவியர் சேனையின் நாடு உலாவும் ஆசாரியோர்களின் நாடு – பெத்ல-குற:26 386/3
மாறுபாட்டுக்கார ரோமி என்று ஓதும் மகா வேசியானவள் மட்டுத்திட்டம் அற்று – பெத்ல-குற:52 700/1

மேல்

ஓதுவது (2)

ஓதியும் மானிடனாம் இவன் ஓதுவது – பெத்ல-குற:22 235/2
ஒன்றினம் குறி எனக்கு உரைக்கவே வேணும் சபை குற்ற தலை பசாசு வென்றி இங்கு ஓதுவது ஏனோ – பெத்ல-குற:40 566/4

மேல்

ஓதுவம் (1)

உங்களை சகோதரர் என்று ஓதுவம் என்றானே உரிய சபை மணவாளி ஆவது எவ்வாறு அம்மே – பெத்ல-குற:28 408/1

மேல்

ஓந்தையில் (1)

ரோமையை கெடுத்த பாப்பு எனும் ஊமையை அடுத்த பொல்லார் ஓந்தையில் கிடந்தோர் முழு குருட்டு ஆந்தையை தொடர்ந்தோர் – பெத்ல-குற:13 117/1

மேல்

ஓம்பி (1)

பாம்பின் உருவம் கொண்டு ஓம்பி மனுக்களை தீம்புசெய்த வினைக்காம் புகலாய் அபரஞ்சி – பெத்ல-குற:32 471/4

மேல்

ஓய்ந்து (1)

பத்தியினால் உணர்ந்து ஆய்ந்து ஓய்ந்து பாராமல் பாப்புவின் கட்டளை மூப்பு என்று சொல்லியே – பெத்ல-குற:43 598/2

மேல்

ஓய்வு (1)

அருளி யாவினையும் ஏழை ஓய்வு பகல் ஆக்கி விர்த்தசேதனமது எட்டாம் தினத்தில் ஏற்று ஒன்பது அன்புறா அசடர் குட்டமது அகற்றியே – பெத்ல-குற:4 28/2

மேல்

ஓயாமல் (1)

ஓரே எனும் கிரிக்கே இரவும் பகல் ஓயாமல் ஓடும் பெலன் தரும் சுட்ட அடை – பெத்ல-குற:46 623/4

மேல்

ஓர் (28)

நீதி கலை ஓதில் பெறு பயன் நேர் தப்பினும் ஓர் தப்பு இலை என நேச கவிராச திறமையர் நிச்சயத்து உணவார் – பெத்ல-குற:2 12/4
எண்ணிய மற்ற தெரிசிகளை சொன்னாலும் இவர்கள் மேல் ஏதமது உண்டு இவன் மேல் ஓர் தீதது உண்டோ என்பார் – பெத்ல-குற:14 124/2
பிக்கில்லாத வற்சரம் எண்பத்துமூன்று நாளுமே பெருகிய இருநூற்று ஈரேழு மணி ஓர் எட்டு வினாடியும் – பெத்ல-குற:21 195/9
அறிவுடன் உதகம் ஓர் அறு திரி குடமது – பெத்ல-குற:22 230/1
கன்னியர்க்குள் அவதானி அன்னாள் எனும் ஓர்
அன்னையினும் மிகு ஞானி ஞான மண – பெத்ல-குற:24 362/1,2
ஓர் மலையோ ஏதோமின் எல்லை மலை அம்மே உச்சிதமாய் ஆறோனும் மரித்த மலை அம்மே – பெத்ல-குற:25 370/1
உச்சிதமாய் தாவீது வேந்தன் உலகு எல்லாம் ஓர் குடையில் ஆண்டு செங்கோல் செலுத்தினது இ தலமே – பெத்ல-குற:27 391/3
சுயமாய் ஓர் முந்திரிகை குலையதனை இரு பேர் தோள் மேலே சுமந்துகொண்டு போன தலம் அம்மே – பெத்ல-குற:27 392/4
ஆனாலும் நான் நம்பமாட்டேன் என்று அப்பாலே ஓடி ஓர் கப்பற்குள் ஏக – பெத்ல-குற:34 490/3
வருகும் ஓர் குறியோ வந்த செய்திகளோ – பெத்ல-குற:39 547/2
எட்டு திக்குக்குள்ளே கத்தனை அல்லாமல் இன்னம் ஓர் தெய்வத்தை கைதொழுவோர்களை – பெத்ல-குற:45 610/3
சூரை செடியில் படுத்தவன்-தன்னையே தூதன் எழுப்பி ஓர் பாத்திர தண்ணீரும் – பெத்ல-குற:46 623/2
எலியாவின் சீடன் ஓர் சால்வையை வீசி எழுந்த யோர்தானை கடந்து எரிகோவில் – பெத்ல-குற:46 624/1
சலியாமல் ஓர் புது தோண்டியில் உப்பினை தாபித்து நீரூற்றில் சேவித்து போட்டு – பெத்ல-குற:46 624/2
சேர்க்கையதாய் வெகு பாத்திரம் வாங்கி ஓர் சின்ன குடத்து எண்ணெய்-தன்னை அவைகளில் – பெத்ல-குற:46 626/3
சூரியரின் படையானதின் கண்களை சூழ் மயக்கம் செய்த ஓர் வழி மூலிகை – பெத்ல-குற:46 628/2
ஆன பொருட்கு எல்லாம் ஆமனது ஆனவர் அன்று ஓர் குருடனின் கண்ணில் உமிழ்ந்ததால் – பெத்ல-குற:46 631/1
பொட்டை குருட்டு ரோமாபுரி பட்சியும் பொய் போதக பட்சி அப்பால் ஓர் கூட்டமாய் – பெத்ல-குற:48 651/4
ஏதன் மலையிலிருந்து ஓர் ஆறது எழும்பியே நான்கு நதியாய் பிரிந்தது – பெத்ல-குற:51 677/1
ஆலையத்தின் தலைவரில் ஓர் தன்யவீரு கிறிஸ்துவின் அண்டையில் சென்று அவர் – பெத்ல-குற:52 689/1
நாவதிலே ஒலிவ இலை வைத்து நடந்து ஓர் புறாவும் திரிந்து அலுவலாய் – பெத்ல-குற:53 705/2
ஒட்டுக்கு எல்லாத்தையும் மாட்டடா ஓர் அட்டி துண்டும் கொண்டு மூட்டடா – பெத்ல-குற:55 740/2
அந்த பொல்லாத அபிசலோம் ஓர் மர தண்டி கொம்பில் பட்டு வெம்பி விழித்தாப்போல் – பெத்ல-குற:56 754/4
திட்டத்தோடே தினம் கூவி திரியும் கோகிலமே எந்தன் தேவி அழகு பெரும் விலைதான் ஓர் அகிலமே – பெத்ல-குற:59 793/4
பஞ்சமாபாவி போல் பேசும் பஞ்சவன்ன கிளியே அந்த பாவையை காட்டாட்டால் போடுவேன் உன் மேல் ஓர் பழியே – பெத்ல-குற:59 794/4
நம்பிக்கையற்றான் உளையுக்குள் ஓர் விசை நாணம் இல்லாமலே யான் விழுந்தேன் அது – பெத்ல-குற:65 851/1
தேசத்துக்கு எங்கும் இது சொல்லே என்ன செய்யட்டும் எனக்கு இது ஓர் தொல்லை அந்த – பெத்ல-குற:66 857/3
பாத்திரத்தில் அப்பம் பின் ஓர் பாத்திரத்தில் ரசம் வாங்கி – பெத்ல-குற:69 885/3

மேல்

ஓர்க்கில் (1)

ஒத்தாப்போல் சற்று ஊக்கத்து ஓர்க்கில்
செத்தால் பாக்கிய தீர்க்கத்து ஏற்ற – பெத்ல-குற:22 282/1,2

மேல்

ஓர்ந்த (1)

ஆர்ந்த புந்திக்கு ஓர்ந்த பண்புற்று ஆய்ந்த இன்பத்து ஓங்கி நன்றிட்டு – பெத்ல-குற:22 268/2

மேல்

ஓர்வருக்கோர்வர் (1)

ஓர்வருக்கோர்வர் முத்தி செய்ய – பெத்ல-குற:70 899/3

மேல்

ஓரத்தையே (1)

வேட்டியின் ஓரத்தையே ஈட்டமாய் தொட்டவளும் – பெத்ல-குற:67 867/3

மேல்

ஓரமாகவும் (1)

இல்லாத ஏழை வழக்கு ஓரமாகவும் எந்நேரம் பார்த்தாலும் நச்சுநச்சாகவும் – பெத்ல-குற:57 769/4

மேல்

ஓரான் (1)

கெடுவதும் பாரான் சனங்களை விடுவதும் ஓரான் மனத்தினை கெட்டியும் படுத்தி கடல் விழ தட்டியும் அடுத்தி – பெத்ல-குற:13 111/3

மேல்

ஓரே (1)

ஓரே எனும் கிரிக்கே இரவும் பகல் ஓயாமல் ஓடும் பெலன் தரும் சுட்ட அடை – பெத்ல-குற:46 623/4

மேல்

ஓரேப்பு (1)

நாட்டம் உள்ள ஓரேப்பு மலை குறவன் அம்மே ஞாயப்பிரமாணமதின் தலை குறவன் அம்மே – பெத்ல-குற:25 369/1

மேல்

ஓரேழ் (1)

ஒக்கும் மணி ஓரேழ் மூவேழ் வினாடியும் நொடி ஐம்பதே உற்ற சனியின் வளையம் அப்படி ஓங்கிய திங்களோ எனில் – பெத்ல-குற:21 195/8

மேல்

ஓலப்பர் (1)

உசியா யூதித்து என்பாளும் விசையாய் வேடம்போட்டு அல்லோ ஓலப்பர் நேசர் தலை நீலி போல் கொய்தாள் – பெத்ல-குற:17 152/3

மேல்

ஓலம் (1)

ஓலம் உயர்த்தி பயிற்கத்தி யோசனை வைத்து சிரித்திட்டு ஓவியமிட்டு துகில் கட்டி ஓடி நடித்து பொழில் புக்கி – பெத்ல-குற:44 604/4

மேல்

ஓலை (2)

ஓலை திருநாள் செய்து மேலைக்கு மீடேறாமேல் உச்சமாய் சடங்கது எல்லாம் மிச்சமாய் கொண்டு – பெத்ல-குற:17 167/3
கொந்தள ஓலை குழையினில் கூட்டி – பெத்ல-குற:22 335/2

மேல்

ஓலையாள் (1)

மாசற்று ஒளிர் சங்கீத நேசத்து இலங்கு செப மாலையாள் ஞான மன்னன் மகிழும் ரத்தின பொன்னின் நலம் கிருத ஓலையாள்
தேசுற்ற பரலோக ரோச புஷ்பம் கன்னி கற்பினாள் சால்மோன் செய்த ஆலயத்தில் எய்த கற்பனை பெட்டி பொற்பினாள் – பெத்ல-குற:16 140/1,2

மேல்

ஓவாது (1)

ஓவாது அங்கண் ஒருத்தரொருத்தராய் ஒன்றின் பிறகால் ஒன்றாய் வந்து சேர்ந்தாப்போல் – பெத்ல-குற:49 661/4

மேல்

ஓவியமிட்டு (1)

ஓலம் உயர்த்தி பயிற்கத்தி யோசனை வைத்து சிரித்திட்டு ஓவியமிட்டு துகில் கட்டி ஓடி நடித்து பொழில் புக்கி – பெத்ல-குற:44 604/4

மேல்

ஓனாயான (1)

உள்ளே திருட்டு ஓனாயான பாப்பு என்றவன் உத்தமன் போல் ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்டு – பெத்ல-குற:53 711/1

மேல்