கொ முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கொக்கரித்து 1
கொக்கு 5
கொக்கும் 2
கொங்கணர் 1
கொங்கை 2
கொங்கையாள் 1
கொஞ்ச 1
கொஞ்சத்தனத்தை 1
கொஞ்சம் 1
கொஞ்சமட்டிலே 1
கொஞ்சமிலா 1
கொஞ்சி 2
கொஞ்சிக்கொண்டாள் 1
கொஞ்சிய 1
கொஞ்சியும் 1
கொஞ்சியே 1
கொஞ்சு 3
கொஞ்சுது 1
கொஞ்சுறார் 1
கொட்டமிட்டு 1
கொட்டி 1
கொட்டிலுக்குள் 1
கொட்டுள் 1
கொடி 5
கொடிய 5
கொடியவர் 1
கொடியா 2
கொடியான் 1
கொடியே 3
கொடு 7
கொடுக்கப்போச்சு 1
கொடுக்காத 1
கொடுக்கும் 2
கொடுடா 1
கொடுத்த 4
கொடுத்தது 1
கொடுத்ததும் 1
கொடுத்ததோ 1
கொடுத்தனர் 1
கொடுத்தார் 3
கொடுத்தான் 1
கொடுத்திடுறேன் 1
கொடுத்து 10
கொடுத்தோம் 3
கொடுப்பார் 1
கொடுப்பான் 1
கொடுப்பேன் 1
கொடுப்பேனே 1
கொடுப்போம் 2
கொடுபட்டான் 1
கொடுபோய் 1
கொடுபோனான் 1
கொடும் 4
கொடுமுடியில் 1
கொடுமை 1
கொடுமைக்குள் 1
கொடூரங்கள் 1
கொடையாய் 1
கொடையானை 1
கொடோம் 1
கொண்ட 15
கொண்டதால் 1
கொண்டது 2
கொண்டதும் 1
கொண்டலாத்தியும் 1
கொண்டலாத்தியே 1
கொண்டவள் 2
கொண்டவன் 1
கொண்டவனை 1
கொண்டாடவோ 1
கொண்டாடி 3
கொண்டாடிக்கொள்வாள் 1
கொண்டாடிட 1
கொண்டாடிய 2
கொண்டாடியே 1
கொண்டாடும் 1
கொண்டாந்து 1
கொண்டாய் 1
கொண்டாவே 1
கொண்டான் 1
கொண்டு 42
கொண்டுசென்று 1
கொண்டுபோ 1
கொண்டுபோம் 1
கொண்டுபோய் 5
கொண்டுபோனால் 2
கொண்டும் 2
கொண்டுமே 3
கொண்டுவந்து 1
கொண்டுவருகின்றானே 1
கொண்டுவா 2
கொண்டுவை 1
கொண்டை 1
கொண்டையாள் 1
கொண்டையில் 1
கொணர்ந்து 2
கொத்தி 2
கொத்திக்கொத்தி 1
கொத்திரம் 1
கொத்து 1
கொந்தள 1
கொப்புளத்து 1
கொம்பது 1
கொம்பி 1
கொம்பில் 1
கொம்பு 4
கொம்புமான 1
கொம்புளதும் 1
கொம்பொடு 1
கொய்தாள் 1
கொய்து 1
கொர்னேலியு 2
கொரிந்தியர் 1
கொல்கதாத்தான் 1
கொல்ல 3
கொல்லடா 1
கொல்லர் 1
கொல்லர்கள் 1
கொல்லும்படி 1
கொல்லுறு 1
கொல்லை 1
கொலுவேன் 1
கொலை 1
கொலைசெய்த 1
கொலைபாதகக்காரர் 1
கொலையின் 1
கொழு 1
கொழுத்த 2
கொழுத்தினை 1
கொழுந்தன் 1
கொழுந்து 1
கொழுப்பு 1
கொள் 4
கொள்க 1
கொள்கையை 1
கொள்ளவே 3
கொள்ளாதவன் 1
கொள்ளி 1
கொள்ளிவாய் 1
கொள்ளும் 1
கொள்ளையிட்ட 1
கொள்ளோம் 1
கொள 2
கொளும் 1
கொற்றவன் 3
கொன்ஸ்தந்தீன் 1
கொன்ற 2
கொன்றவர் 1
கொன்றாய் 1
கொன்றால் 1
கொன்று 5
கொன்றைகள் 1
கொன்றையே 1
கொன்னி 1
கொனஸ்தந்தீன் 1
கொனஸ்தாஞ்சியர் 1

கொக்கரித்து (1)

கொம்பி குதித்து எழுந்து கூத்தாடி கொக்கரித்து
வம்புக்கென்றே தினமும் வந்து அடுத்த பேய் கணத்தை – பெத்ல-குற:53 701/1,2

மேல்

கொக்கு (5)

வாடிய ஆந்தை சகோர பட்சி கோட்டான் வவ்வால் நாரை கொக்கு எல்லாம் தீட்டாம் அல்லோ – பெத்ல-குற:53 709/4
கொக்கு மேன்மை குருகே பழமொழிக்கு ஒக்கும் மேன்மை குருகே நிலா – பெத்ல-குற:58 785/1
பெட்டை கொக்கு கறி சுட்டு தின்றால் ஒரு போக்கு அதை போத துவட்டலதாக புளியிட்டே ஆக்கு – பெத்ல-குற:62 819/1
மை கவுதாரிக்கு சிக்க கண்ணிவைத்து கொக்கு படுக்கவே போனேன் – பெத்ல-குற:64 841/3
கொக்கு பிடிக்க பதுக்கிடம் பாரடா – பெத்ல-குற:71 928/3

மேல்

கொக்கும் (2)

படர்ந்த கண்ணியை இறுக்கி குத்தினால் பரும் கொக்கும் படுமே குழுவா – பெத்ல-குற:54 717/2
கொக்கும் நிலாமுக்கியும் கூட பட்டுது என் தொக்கான சிங்கியை காணேன் – பெத்ல-குற:64 841/4

மேல்

கொங்கணர் (1)

தென்பான கொங்கணர் கேரளர் கேகையர் சீனர் கரூசர் கலிங்கர் யுகந்தரர் – பெத்ல-குற:47 639/3

மேல்

கொங்கை (2)

ஏனோ இளையவளுக்கு இன்னம் இல்லை கொங்கை என்றான் – பெத்ல-குற:24 357/3
நிண்ணயமாய் இளையவட்கு கொங்கை இன்னம் இல்லை நீடு பெத்தலேகம் எங்கள் நீதி மலை அம்மே – பெத்ல-குற:25 378/4

மேல்

கொங்கையாள் (1)

சொன்னம்-தனில் பதித்து மின்னும் தற்சீசின் ரத்தின செம் கையாள் மயல் தோன்றும் வெளிமான் கன்று என்று ஊன்று முந்திரிகை குலை கொங்கையாள்
உன்னும் லீலியா புஷ்பம் துன்னும் கோதுமை அம்பார பண்டியாள் கிறிஸ்து உளத்தை கட்டிக்கொண்ட கழுத்தை கிட்டி கண்ட கண்டியாள் – பெத்ல-குற:16 138/2,3

மேல்

கொஞ்ச (1)

கொஞ்ச அறிவால் தணிந்து செத்த நரரை தஞ்சம் எனவே பணிந்து – பெத்ல-குற:12 103/2

மேல்

கொஞ்சத்தனத்தை (1)

கெம்பித்து என் கொஞ்சத்தனத்தை அறிந்து எனை கிட்ட அணைத்து ஒரு முத்தமிட்டாள் அந்த – பெத்ல-குற:65 851/4

மேல்

கொஞ்சம் (1)

அறுப்பு மிகுதியது எனவும் வேலையாள் கொஞ்சம் என்றும் அருளி செய்த – பெத்ல-குற:54 712/1

மேல்

கொஞ்சமட்டிலே (1)

குள்ள பதிதர் வந்து மெள்ள கலைத்தால் அவள் கொஞ்சமட்டிலே விடாள் ஐயே பொல்லா – பெத்ல-குற:66 859/1

மேல்

கொஞ்சமிலா (1)

கொஞ்சமிலா பரஸ்திரீகள் கூட உழன்றே நரக குழிக்குள் வீழ்ந்த – பெத்ல-குற:1 4/1

மேல்

கொஞ்சி (2)

கிள்ளை மொழி போல் குளறி கொஞ்சி கொஞ்சியே மன கெம்பீரத்தினால் மிகுந்து உடம்பு பூரித்தாள் – பெத்ல-குற:40 564/4
பையவே நடப்பள் கொஞ்சி ஐயை அவள் தானே வஞ்சி – பெத்ல-குற:67 864/4

மேல்

கொஞ்சிக்கொண்டாள் (1)

நீதி பெருக்கில் எனை வைத்து கூடியே நெஞ்சத்தோடே மெத்த கொஞ்சிக்கொண்டாள் அந்த – பெத்ல-குற:65 850/4

மேல்

கொஞ்சிய (1)

கொஞ்சிய வஞ்சியர் கூட நடித்து – பெத்ல-குற:15 132/16

மேல்

கொஞ்சியும் (1)

சதிரொடு கொஞ்சியும் இருபுறமும் புடை தரவு நடந்து உயர்வாய் – பெத்ல-குற:22 342/2

மேல்

கொஞ்சியே (1)

கிள்ளை மொழி போல் குளறி கொஞ்சி கொஞ்சியே மன கெம்பீரத்தினால் மிகுந்து உடம்பு பூரித்தாள் – பெத்ல-குற:40 564/4

மேல்

கொஞ்சு (3)

பஞ்ச வினை படு நஞ்சி நினைவொடு கொஞ்சு பெருமைகள் மிஞ்சி எழும் எழு – பெத்ல-குற:23 356/1
கொஞ்சு கிளிகள் சகோதர பட்சிகள் கூட்டை விட்டு அக்கியான காட்டுக்குள் ஏகாது – பெத்ல-குற:53 708/3
கொஞ்சு கிளி குரல் சாடையே கண்டு கூட குதிக்குது காடையே – பெத்ல-குற:55 737/2

மேல்

கொஞ்சுது (1)

கொஞ்சுது என் மனது கூட குதிக்குது குறி கேள் அம்மே – பெத்ல-குற:40 556/4

மேல்

கொஞ்சுறார் (1)

பனியில் சிரம் நனைந்தேன் கனிவு தமியே என்று கொஞ்சுறார் வாயில் படியை திறவும் என்று விடியும்-தனிலும் நின்று கெஞ்சுறார் – பெத்ல-குற:16 143/2

மேல்

கொட்டமிட்டு (1)

வட்டமிட்டு அடர்ந்து அடர்ந்து கொட்டமிட்டு அலறும் பேய்கள் – பெத்ல-குற:12 101/3

மேல்

கொட்டி (1)

நூல் வலை கட்டி திறப்பட்டு நூதன வித்தை செயல் கட்டு நூபுரம் ரெட்டை பதத்து இட்டு நோன்மை மிகுத்து கையை கொட்டி – பெத்ல-குற:44 604/5

மேல்

கொட்டிலுக்குள் (1)

பட்டு அழிய அன்று மாட்டு கொட்டிலுக்குள் அற்புதமாய் – பெத்ல-குற:12 101/4

மேல்

கொட்டுள் (1)

கதிர் கொட்டுள் பிறப்பட்டு கழல் கட்டை கருத்துற்று – பெத்ல-குற:22 313/2

மேல்

கொடி (5)

மஞ்சுற்று உலவு கொடி சஞ்சு ஒத்து ஒளிர் சிறந்த கொண்டையாள் மணி மாடப்புறாவின் கண் என்று ஓடி பரந்த விழி கெண்டையாள் – பெத்ல-குற:16 136/2
சூட்டி வெற்றி கொடி விருது பிடித்து மறைப்புலி நூவன் தோன்றினானே – பெத்ல-குற:44 599/4
இரத்த குருசு சித்திர வெற்றி கொடி கட்டி கன நெற்றிக்கிடை பொன் பட்டமும் இட்டு சபையை பற்றியே – பெத்ல-குற:44 602/5
அந்தக்கரணன் அந்த பல கந்தை கொடி அறுந்து அற்றிட அண்ட பரமண்டல செப அங்கத்தொடு சங்கத்திடை – பெத்ல-குற:44 605/5
கோது அகல தழுவுதற்கு கூடும் காலை கொடி போன்ற மின்னல் ஒளி குறுக்கிட்டாப்போல் – பெத்ல-குற:70 888/3

மேல்

கொடிய (5)

சதிசெய் பல கொடிய விட அலகை தலை சிதற மிகு சமரது இடு விசைய வரதா சகல உயிர்களையும் அனுதினமும் அகமதில் அறிவு தர வளமை பொழியும் நயனா – பெத்ல-குற:11 94/3
கொம்பொடு உடம்பு படும்படியும் படியுண்டு கொடிய வஞ்ச – பெத்ல-குற:15 133/8
குருவும் சீஷனையும் கூட்டி பிடிக்கும் வலை கொடிய பேரை விழுக்காட்டி பிடிக்கும் வலை – பெத்ல-குற:42 584/1
கோப்பு பூசை வலை மீட்பு தரிக்க தல கொடிய வலை சுருப வலை சன்னியாசி வலை – பெத்ல-குற:42 587/3
கொடிய ரோமாபுரியாள் திட மனதாக வந்து குறி சொல்வது எல்லாம் முழு பொய்யே – பெத்ல-குற:66 859/2

மேல்

கொடியவர் (1)

மோன சத்தியனே ஒரு நிதான நித்தியனே பரம மோக்கிடத்து உடையான் கொடியவர் நோக்கிட கிடையான் – பெத்ல-குற:13 105/3

மேல்

கொடியா (2)

வெற்றியின் கொடியா வெறி மருள் கொடியா – பெத்ல-குற:39 531/1
வெற்றியின் கொடியா வெறி மருள் கொடியா
சுற்று மண்டலத்தாய் சோதி மண்டலத்தாய் – பெத்ல-குற:39 531/1,2

மேல்

கொடியான் (1)

வென்றி சேர் சிலுவை விருது எனும் கொடியான் – பெத்ல-குற:22 266/2

மேல்

கொடியே (3)

நல் அறம் சேர் ஞானம் மிகும் குறவஞ்சி கொடியே நீ நயத்தினாலே – பெத்ல-குற:28 399/3
சீர் உயரும் பெத்தலேம் மலை குறவஞ்சி கொடியே செப்பு என்றாளே – பெத்ல-குற:32 464/4
தப்பிதக்காரி அவளின் கெட்ட வழியை சொல்லி சஞ்சலப்படுவானேனாம் வஞ்சி கொடியே – பெத்ல-குற:40 570/4

மேல்

கொடு (7)

எத்தனாம் கொடு நெஞ்சத்துடைய மதத்தனாம் சதியின் சத்துரு விழ வெட்டுமாம்படி நிந்தைப்பட வலை எழு ரோமான் – பெத்ல-குற:3 27/1
சோதி அடி இணை காதலொடு தொழுது ஓதி அவையிடை சாதி முறை கொடு – பெத்ல-குற:23 353/4
யாகம் உயிர் கொடு தாகமொடு சொலி மூகமுடன் அதி மோகமுடன் வளர் – பெத்ல-குற:23 354/3
சாடும்படியாய் அங்கு அவன் மேலும் பல கோபம் படு தாவும் கலை வாளும் பரன் நூலின் கன மேலும் கொடு
வாடும் பல பேயும் சில நாயும் கழுகு காகத்து இனம் மா பந்தயமோடும் கொலுவேன் என்று உரை தானும் சொலி – பெத்ல-குற:44 606/4,5
மா வனம் வந்தது உண்டோ அரும் கொடு மா வனமே சொல்லுவீர் – பெத்ல-குற:58 777/2
தேங்கு வன வன்னியே துயர் கொடு தேங்கு வன வன்னியே செழித்த – பெத்ல-குற:58 778/1
வைக்கும் வலையுக்குள் மிக சிக்கும் மனுவை கிருபை அப்பன் அருளை கொடு திருப்பு தொழிலாலே நான் – பெத்ல-குற:61 809/2

மேல்

கொடுக்கப்போச்சு (1)

முன் நாளில் அப்பத்தை காக்காய் கொண்டுசென்று முந்தும் எலியாவுக்கு கொடுக்கப்போச்சு
உன்னதமாக உறாஞ்சிய பட்சியை உத்தமன் ஆபிரகாம் துரத்திவிட்டான் – பெத்ல-குற:53 704/2,3

மேல்

கொடுக்காத (1)

நல்ல கனி கொடுக்காத மரம் எல்லாம் நாசமதாய் வெட்டப்பட்டு நரகத்தில் – பெத்ல-குற:45 614/1

மேல்

கொடுக்கும் (2)

எந்தை உனை அழிக்க வந்தது அறிவாய் நீ செய் இடக்கும் பவத்தின் இச்சை கொடுக்கும் அக்கினி அம்பை – பெத்ல-குற:20 187/3
இல்லார்க்கு கேட்டது எல்லாம் கொடுக்கும் இந்த கையே ஏழைகளை ஆதரித்து தாங்கும் இந்த கையே – பெத்ல-குற:38 511/1

மேல்

கொடுடா (1)

நித்தியனுக்கு பலியாக கொண்டுபோய் கொடுடா – பெத்ல-குற:62 813/4

மேல்

கொடுத்த (4)

நீதி என்ற நால் வரமும் கொடுத்த மலை அம்மே நித்தியமும் சாகாமல் நின்ற மலை அம்மே – பெத்ல-குற:25 367/2
செயமான இசறாவேல் கோத்திரத்துக்கு எல்லாம் செல்லு நித்திய உம்பளிக்கையாய் கொடுத்த தலமே – பெத்ல-குற:27 392/2
மீண்டும் சிகையை பிடித்து அறுத்து அங்கு அதை வேணவிதம் கண்ணி தெத்தி கொடுத்த பின் – பெத்ல-குற:45 613/3
நேசமாய் முத்தி கொடுத்த நேர் கிட்டி நீ – பெத்ல-குற:70 894/4

மேல்

கொடுத்தது (1)

முன் உமக்கு கொடுத்தது உண்டோ அதில் செய்ய மூவுலகில் ஈடதும் உண்டோ – பெத்ல-குற:12 99/1

மேல்

கொடுத்ததும் (1)

தான் அத்தை பின்னும் எழுப்பி கொடுத்ததும் சாவு பானைக்குள் இருக்குது என்றோர்களுக்கு – பெத்ல-குற:46 627/2

மேல்

கொடுத்ததோ (1)

கர்த்தர் கொடுத்ததோ சிங்கி அடர் – பெத்ல-குற:71 924/2

மேல்

கொடுத்தனர் (1)

மேவி கொடுத்தனர் சிங்கா – பெத்ல-குற:71 924/4

மேல்

கொடுத்தார் (3)

ஏக பரன் சேயீரின் மலை தேசம் முழுதும் ஏசாவின் புத்திரர்க்கு சுதந்திரமாய் கொடுத்தார்
நாகம் என்ற கீலேயாத்து ரூபனுட பங்கு நாடி வந்து லாபான் யாக்கோபை கண்ட மலையே – பெத்ல-குற:25 372/1,2
மாதையும் சிட்டித்து எனக்கே ஆதரவாய் தான் கொடுத்தார்
ஏது அவளுக்கு இணை சொல காதல் மிக ஆகுது ஐயே – பெத்ல-குற:67 863/2,3
கொடுத்தார் வல பக்கத்தின் அடுத்த கள்ளனும் சாட்சி – பெத்ல-குற:67 869/4

மேல்

கொடுத்தான் (1)

ஞானத்தை கொடுத்தான் ஒரு மரத்து ஈனத்தை தடுத்தான் கனி தின்ற ஞாயத்தை கேட்டான் உரு எனும் காயத்தை சூட்டான் – பெத்ல-குற:13 109/2

மேல்

கொடுத்திடுறேன் (1)

சூட்சத்திலே ஞான பாறையும் காட்டுறேன் சொல்லாத காரியத்தையும் கொடுத்திடுறேன் – பெத்ல-குற:57 765/4

மேல்

கொடுத்து (10)

திட்டமாய் தீட்சைகள் கொடுத்து மதத்த வஞ்ச – பெத்ல-குற:7 49/4
செய்ய யோர்தான் எனும் நதி அடுத்து தமை சேர்ந்தவர் எவர்க்கும் ஞான தீட்சை கொடுத்து – பெத்ல-குற:8 57/2
தீட்சை கொடுத்து ஆத்துமத்தை சுத்திகரித்து சுவிசேட நெறிகள் எல்லாம் மெத்த விரித்து – பெத்ல-குற:8 58/1
தொடர்ந்து இரண்டு சட்டை_உளோன் ஒன்று எடுத்து படும் துயர தரித்திரருக்கே கொடுத்து
அடர்ந்து பொசிப்புள்ளோர் இந்தப்படியே இடர் ஆன அனைவருக்கும் சிந்தைப்படியே – பெத்ல-குற:8 64/1,2
சிந்தைப்படி கொடுத்து அவரை தாங்கி சற்றும் தீமை இடுக்கண் செய்யாமல் ஓங்கி – பெத்ல-குற:8 65/1
அடிமைக்குள் இருந்தும் பார்வோன் கொடுமைக்குள் வருந்தும் யூதர்க்கான நயம் கொடுத்து மோசே ஆரோனையும் விடுத்து – பெத்ல-குற:13 111/1
கொல்லும்படி மூவாசை தொல்லைகளை மனதில் கொடுத்து மிக தியக்கிறாய் இன்று – பெத்ல-குற:20 188/2
மண்ணுலகை ஆண்டு அருளும் கோடான கோடி மன்னவர்கள் பொன் கொடுத்து வணங்கினது இ தலமே – பெத்ல-குற:27 393/3
ஐந்து அப்பத்தை கொடுத்து ஐயாயிரம் பேருக்கு அற்புதமாய் பொசிக்க தந்த மந்திரம் – பெத்ல-குற:43 597/2
சூரியன்-தன் வெளிச்சத்தினில் சேர்ந்திட தோழனுக்கு அங்கு அவன் பாரியையும் கொடுத்து
ஊரையும் விட்டு துரத்த அபிசலோமுக்கு பயந்து தவிது ஓடினாப்போல் – பெத்ல-குற:63 830/3,4

மேல்

கொடுத்தோம் (3)

சீகாராய் பாங்காட்டில் அடிமைகளை விடுத்தோம் சீனாயி மலையதைத்தான் சீதனமாய் கொடுத்தோம்
வாகான ஞான மணவாளியர்க்கு செல்லும் மகிமை பெத்தலேகம் எங்கள் வளமை மலை அம்மே – பெத்ல-குற:25 373/3,4
வண்ணம் இதால் ஞான மணவாளனுக்கு சீயோன் மகள்-தனையும் கலியாணமாய் முடித்து கொடுத்தோம்
திண்ணமுடன் புது எருசலேம் மலையும் மற்ற தேசமதின் மலைகள் எல்லாம் சீதனமாய் கொடுத்தோம் – பெத்ல-குற:25 378/2,3
திண்ணமுடன் புது எருசலேம் மலையும் மற்ற தேசமதின் மலைகள் எல்லாம் சீதனமாய் கொடுத்தோம்
நிண்ணயமாய் இளையவட்கு கொங்கை இன்னம் இல்லை நீடு பெத்தலேகம் எங்கள் நீதி மலை அம்மே – பெத்ல-குற:25 378/3,4

மேல்

கொடுப்பார் (1)

தானதர்மம் ஏழைகட்கு யாவர்களும் கொடுப்பார் சண்டாள பாவம் எல்லாம் அண்டாது தடுப்பார் – பெத்ல-குற:25 366/3

மேல்

கொடுப்பான் (1)

வெட்டுக்கிளி யொவானுக்கு மெத்தமெத்த பிரியம் அதை மிச்சமாய் கொண்டுபோனால் கொடுப்பான் தீட்சை துரியம் – பெத்ல-குற:62 818/1

மேல்

கொடுப்பேன் (1)

மருந்து ஒன்று சொல்லி கொடுப்பேன் கேள் ஐயே – பெத்ல-குற:68 874/1

மேல்

கொடுப்பேனே (1)

கட்டழகி-தன் விசுவாசத்தை கெடுப்பானே அப்போ கள்ளனோடு என் மாது சொல்வாள் உனை கொடுப்பேனே
உச்சத்தில் ஓடி பறக்கும் கணக்கற்ற பக்கியே நீங்கள் ஓடிவந்து பாப்பின் மாங்கிஷத்தை தின்பீர் முக்கியே – பெத்ல-குற:59 796/3,4

மேல்

கொடுப்போம் (2)

மங்களம் சேர் தீட்சைபெற்றோர்க்கு எங்கள் பெண்ணை கொடுப்போம் மாறாட்டக்காரருக்கு வீறாப்பாய் திரிவோம் – பெத்ல-குற:25 377/3
புங்கமுடன் கிறிஸ்தவர்க்கு மலைகள் எல்லாம் கொடுப்போம் புகழ் பெறு பெத்லேகம் எங்கள் புதுமை மலை அம்மே – பெத்ல-குற:25 377/4

மேல்

கொடுபட்டான் (1)

இருடியன் ஏனோக்கு என்பார் அவன் வானில் இருந்தா போல் எடுபட்டான் இவன் நரர்க்கு கொடுபட்டான் என்பார் – பெத்ல-குற:14 119/4

மேல்

கொடுபோய் (1)

அலகை சுதன்-தனை கொடுபோய் ஏற்றும் மலை அம்மே ஆரண மா மலை அதற்கு பெயர் இலை காண் அம்மே – பெத்ல-குற:25 374/2

மேல்

கொடுபோனான் (1)

அந்நாள் படுத்திடு மாடப்புறாவினை ஆதி பரன் சுதன் தானே கொடுபோனான்
முன் நாளில் அப்பத்தை காக்காய் கொண்டுசென்று முந்தும் எலியாவுக்கு கொடுக்கப்போச்சு – பெத்ல-குற:53 704/1,2

மேல்

கொடும் (4)

வெட்டி அக்கினி சுவாலையில் இட்டு கொடும் வேதனை வாதைகளை மேல் வரவிட்டு – பெத்ல-குற:8 60/1
தீகளை போல் கொடும் பாவத்தை செய்யவே தேவன் எரிந்து சினந்தவர்-தங்களை – பெத்ல-குற:52 688/2
சித்தம் இரங்கி தயவுசெய்யா கொடும் தீயவை சூரியவானும் நரகத்தில் – பெத்ல-குற:52 691/3
மகா வேசி பின்பு படும் கொடும் ஆக்கினை மட்டில்லை என்று வசனித்து சொன்ன – பெத்ல-குற:56 759/2

மேல்

கொடுமுடியில் (1)

கார் முகில் சூழ் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறி கானாவை மோசேசு கண்ட மலை அம்மே – பெத்ல-குற:25 370/2

மேல்

கொடுமை (1)

வஞ்சகத்திலே துணிந்து கொடுமை எல்லாம் நெஞ்சத்திலே அணிந்து – பெத்ல-குற:12 103/1

மேல்

கொடுமைக்குள் (1)

அடிமைக்குள் இருந்தும் பார்வோன் கொடுமைக்குள் வருந்தும் யூதர்க்கான நயம் கொடுத்து மோசே ஆரோனையும் விடுத்து – பெத்ல-குற:13 111/1

மேல்

கொடூரங்கள் (1)

இங்கு அவன் செய்த கொடூரங்கள் மெத்தவாம் தென்றலே அதை எண்ணி முடியுமோ சொல்லி முடியுமோ தென்றலே – பெத்ல-குற:19 178/2

மேல்

கொடையாய் (1)

வலிய சங்குடையாய் வானம் நல் கொடையாய் – பெத்ல-குற:39 532/2

மேல்

கொடையானை (1)

மட்டில்லாத கொடையானை
படையானை வாழ்த்துகிறேன் – பெத்ல-குற:72 941/3,4

மேல்

கொடோம் (1)

பின் குலத்தில் பெண்கள் கொடோம் பெண்களையும் கொள்ளோம் பேசுதற்கு இங்கு எங்கள் குலம் ராசர் குலம் அம்மே – பெத்ல-குற:25 377/2

மேல்

கொண்ட (15)

பெருமை கொண்ட பரன் அருளும் மைந்தன் உயர் பெத்தலேகருட தாசன் நான் பேசும் என் தமிழை வேதபாரகர் பிரதான ஞானியர் தளார்களே – பெத்ல-குற:4 28/4
அணி கொண்ட வானத்தானை அனைத்தையும் அமைத்து ஆண்டானை – பெத்ல-குற:6 41/1
தணி கொண்ட மனத்தினானை சமஸ்த சாஸ்திரவித்தானை – பெத்ல-குற:6 41/2
துணி கொண்ட ஒளியினானை தூய சுத்தாங்கத்தானை – பெத்ல-குற:6 41/3
மணி கொண்ட சயனத்தானை வாழ்த்துவோம் போற்றுவோம் – பெத்ல-குற:6 41/4
மணி கொண்ட அச்சயனே நமோ நமோ அம்மணி கொண்ட அ சயனே நமோ நமோ – பெத்ல-குற:6 42/1
மணி கொண்ட அச்சயனே நமோ நமோ அம்மணி கொண்ட அ சயனே நமோ நமோ – பெத்ல-குற:6 42/1
வெற்றி மிகும் பராபரனின் மைந்தனும் தான் கொண்ட இந்த வேடம் எல்லாம் மனுடரின் சந்தோடமே என்பார் – பெத்ல-குற:14 126/1
வாய்களுக்கு பூட்டுவைத்த கிறிஸ்தவர்கள் அம்மே வலியோனின் சலுகை கொண்ட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 425/1
தங்கு உலகத்தை மூன்று அங்குலியில் கொண்ட துங்கன் மூன்று ஆணியில் தொங்கலையோ அபரஞ்சி – பெத்ல-குற:32 468/4
பெத்தரிக்க பவுலிஸ்தர் பற்றின உடையை விடாய் அம்மே முழு பேதைகளை ஏய்க்க கொண்ட பாத வேடமதடி அம்மே – பெத்ல-குற:36 503/3
திலத ஒளி தீபம் கொண்ட கையை காட்டாய் புத்தி சித்தியால் எண்ணெய் கொண்டுபோம் கையை காட்டாய் – பெத்ல-குற:37 507/2
ஈனகம் கொண்ட பரவோன் சிறைக்குள் இருந்த இசராவேல் பட்சிகளானது – பெத்ல-குற:51 678/1
மேலும் ஈராறு வருடங்களாக மிக பிணி கொண்ட பெரும்பாட்டு இஸ்திரீ – பெத்ல-குற:52 689/3
சீப்பிட்டு சீப்பிட்டு சேர்த்த கொண்டை கொண்டலாத்தியே எந்த தேசத்திலே சுற்றப்போனாளோ நான் கொண்ட லாத்தியே – பெத்ல-குற:59 795/3

மேல்

கொண்டதால் (1)

சிந்தை கருவம் கொண்டதால் வெண்ணிலாவே நீ தேய்ந்து குறைந்துபோனாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 172/4

மேல்

கொண்டது (2)

மீன் ஆர் மோசேயின் தங்கை தானா மீரியாம் அன்று வெண்குட்டம் கொண்டது மெத்த சங்கட்டம் தானே – பெத்ல-குற:17 148/3
திங்கள் என்ற பேர் கொண்டது என் வெண்ணிலாவே செவ்வாய்க்கு பின் பிறந்ததும் வெண்ணிலாவே நீ – பெத்ல-குற:18 171/1

மேல்

கொண்டதும் (1)

சாதனையாய் நீ சிநேக காய்ச்சல் கொண்டதும் உந்தன் தந்திரம் எல்லாம் கர்த்தரின் மந்திரம் சொல்லும் – பெத்ல-குற:40 561/3

மேல்

கொண்டலாத்தியும் (1)

நட்டணை கோட்டுவனோடு திரிஞ்சலும் ராசாளியும் கொண்டலாத்தியும் ஆகாது – பெத்ல-குற:53 710/1

மேல்

கொண்டலாத்தியே (1)

சீப்பிட்டு சீப்பிட்டு சேர்த்த கொண்டை கொண்டலாத்தியே எந்த தேசத்திலே சுற்றப்போனாளோ நான் கொண்ட லாத்தியே – பெத்ல-குற:59 795/3

மேல்

கொண்டவள் (2)

ஒன்றும் இலாத காலம் நன்றாய் பொருள் அனைத்தும் உண்டு செய்தோன் மேல் காதல் கொண்டவள் யான் – பெத்ல-குற:17 145/1
விண்டிடேன் விசுவாசத்தை கொண்டவள் அவள் வடிவில் – பெத்ல-குற:67 870/4

மேல்

கொண்டவன் (1)

பித்து உளத்தி பயித்தியம் மெத்த கொண்டவன் இரத்த பிரியன் அவன் பேதுருவுக்கு இணை எங்கனை – பெத்ல-குற:40 568/4

மேல்

கொண்டவனை (1)

பக்கிஷம் இல்லாமல் கொண்டவனை விட்டு பார்த்தவனோடே பரஸ்திரீ போம் போலே – பெத்ல-குற:45 616/2

மேல்

கொண்டாடவோ (1)

அதி சித்திர மிக முக்கிய மதன பெண் பிரபலத்தை பாடவோ அவள் அருமை துரை என சொல் பெருமை கிறிஸ்துவை கொண்டாடவோ
நிதி உத்தம சுபத்தி கதி உற்பன விதத்தை சாற்றவோ வரும் நிருப தவிது இசரேல் மரபு பரமவஸ்தை ஏற்றவோ – பெத்ல-குற:16 135/1,2

மேல்

கொண்டாடி (3)

மங்களம் என கொண்டாடி வாழ்த்தினார் போற்றினாரே – பெத்ல-குற:5 34/4
சூத்திரன்-தனை கொண்டாடி தொல் மறை வசனத்தாலே – பெத்ல-குற:42 580/2
சங்க நவ சேனைகளும் தற்பரனை கொண்டாடி
இங்கித மகிழ்ச்சி துதி ஏத்திடு பெத்லேகர் வெற்பில் – பெத்ல-குற:67 860/1,2

மேல்

கொண்டாடிக்கொள்வாள் (1)

விந்தை கோட்டாற்றினுக்குள் வந்த பிராஞ்சுக்கார வேட சவரியாரை கொண்டாடிக்கொள்வாள்
சந்த பாப்பு என்றவன் தான் அந்திக்கிறிஸ்து பேய்க்கு சரியாயிருந்தும் பின்னும் பெருமை சொல்வாள் – பெத்ல-குற:17 160/2,3

மேல்

கொண்டாடிட (1)

பொன்னுலோகர் கொண்டாடிட வந்து அருள் புண்ணியன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 383/4

மேல்

கொண்டாடிய (2)

நாவலோர் புகழ் பாடிய நாடு ஞானிமார்கள் கொண்டாடிய நாடு – பெத்ல-குற:26 384/2
வந்தனையாய் புகழ்ந்து ஏற்றி கொண்டாடிய வாணர்க்கு வந்த வினை பறந்தாப்போலே – பெத்ல-குற:63 835/4

மேல்

கொண்டாடியே (1)

பத்திக்கு வித்தாய் முளைத்த பராபரன் பாதத்தை நா ஒத்து பாடி கொண்டாடியே
தத்தித்திமித்தெய்ய தாதிந்தத்தா என்று – பெத்ல-குற:41 575/1,2

மேல்

கொண்டாடும் (1)

ஆடம்பரங்களும் கொண்டாடும் நாடகங்கள் உண்டு அந்தர வீச்சுகளான மந்திரங்கள் உண்டு – பெத்ல-குற:17 168/1

மேல்

கொண்டாந்து (1)

சாப்பிட்டு சாப்பிட்டு கெம்பீரிக்கும் தாரா கூட்டமே வெகு தர்மம் உண்டு என் பெட்டை தாராவை கொண்டாந்து காட்டுமே – பெத்ல-குற:59 795/4

மேல்

கொண்டாய் (1)

சொன்னாலே சொல்லுங்கோ என்று சொல்லி விடுத்த அன்றுதொட்டு காதல் கொண்டாய் அல்லோ சுவிசேட பெண்ணே – பெத்ல-குற:40 563/4

மேல்

கொண்டாவே (1)

நம்பிக்கையாய் குழுவா ஞான கண்ணி கொண்டாவே – பெத்ல-குற:53 701/4

மேல்

கொண்டான் (1)

தாட்டிக இறையோன் பரர் பொருள் கூட்டியது இறையோன் சாலமோன்-தன்னையும் கொண்டான் அரசு என நல் நயம் விண்டான் – பெத்ல-குற:13 113/3

மேல்

கொண்டு (42)

பிணத்து பசாசர்களை திணத்தி கோடரி கொண்டு
சணத்தில் முறித்து வெட்டி தணித்து போடுவார் என்று – பெத்ல-குற:7 51/5,6
கனிந்து இருதயத்தின் நினைவு கண்டு அதை கண்டவிடத்து அலையாமல் முனைவு கொண்டு
நினைந்திருந்து ஆவியின் கனிகள் முன்னம் கன நேசம் தயை நீண்ட சாந்தமோடு இன்னம் – பெத்ல-குற:8 66/1,2
எல்லையில்லா கவி கொண்டு இன வேதநாயகனும் கண்டு – பெத்ல-குற:10 92/3
பறையதும் இலங்க மிகுந்த பொறையதும் துலங்க வேதம் பண்டு தந்தவனே வேடம் கொண்டு வந்தவனே – பெத்ல-குற:13 112/4
சித்தி-தனில் எண்ணெய் கொண்டு ஏகாத கன்னியர்கள் தியங்குவார் மயங்கி விழுந்து உறங்குவார் திகைப்பார் – பெத்ல-குற:14 125/2
வெம்பி இடும்பு புலம்பி எழும் புகை கொண்டு வெகுண்டு சீறும் – பெத்ல-குற:15 133/7
பண்ணாத கோவில் எல்லாம் திண்ணமாய் பண்ணி பண்ணி படங்கள் கண்ணாடிகள் கொண்டு அடங்கவைத்தே – பெத்ல-குற:17 166/2
ஓலை திருநாள் செய்து மேலைக்கு மீடேறாமேல் உச்சமாய் சடங்கது எல்லாம் மிச்சமாய் கொண்டு
மாலை மயங்க ஒரு காலை ரோமி கூத்துண்டு மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 167/3,4
ஏடும் புராணங்கள் கொண்டு ஓடும் பிசாசகள் உண்டு எக்கசக்கமான பாப்பின் பொய்க்கதை உண்டு – பெத்ல-குற:17 168/2
தன் ஒளி உனக்கு இல்லாததால் வெண்ணிலாவே ஆதி தன் ஒளியை கொண்டு உயர்ந்தாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 170/2
என்ன மதி கொண்டு எழுந்தாய் வெண்ணிலாவே சாலேம் எருசலேம் வீதியிலே வெண்ணிலாவே – பெத்ல-குற:18 170/3
கும்ப முலை மங்கயர் கதம்பமது கொண்டு அணுக – பெத்ல-குற:22 245/2
பங்கம் கங்கம் பஞ்சம் கஞ்சம் புஞ்சம் கொண்டு அங்கு – பெத்ல-குற:22 262/1
அறிவுடன் நின்றும் கனம் பற்றும் பெருக்கம் கொண்டு இருப்பாகிய – பெத்ல-குற:22 296/1
பெருகு மனம் கொண்டு அனந்தம் சிந்தனைக்கும் சஞ்சரித்தே பினும் – பெத்ல-குற:22 299/2
கருணைகள் உதவியும் அனுதினம் உனது இரு கண் கொண்டு அருளாய் என – பெத்ல-குற:22 301/2
பெரு மதி சேர் விசுவாச குறவஞ்சி எனும் மேன்மை பெயர் கொண்டு ஓங்கி – பெத்ல-குற:23 349/3
திரு ஞான பெத்தலேம் அதிபதியின் கிருபை மிகும் திறம் கொண்டு ஓங்கி – பெத்ல-குற:25 365/1
வன்பு கொண்டு மயங்காத கிறிஸ்தவர்கள் அம்மே வாக்குத்தத்தத்தினுடைய கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 419/3
தேசத்து இராசாத்தி நேசித்து காணிக்கை கொண்டு ஆசித்து போற்ற வரும் வாசல் இது – பெத்ல-குற:30 428/4
பாம்பின் உருவம் கொண்டு ஓம்பி மனுக்களை தீம்புசெய்த வினைக்காம் புகலாய் அபரஞ்சி – பெத்ல-குற:32 471/4
தில்லுமுல்லதாக செல்ல கல்லி குறிகள் கொண்டு செப்பவாறாய் ஆனதற்கு இங்கு ஒப்பவும் மாட்டேன் – பெத்ல-குற:40 558/3
ஒப்புவிக்க வேத ஞாயம் ஒன்றும் அறியாள் கட்டு உபதேசம்-தனை கொண்டு இங்கு ஓத வருவாள் – பெத்ல-குற:40 570/2
வித்தகம் சேர் சுவிசேட ஞான வலை கண்ணிகளும் வெகுவாய் கொண்டு
சுத்த உபதேசி என பெத்தலேம் மலை குழுவன் தோன்றினானே – பெத்ல-குற:41 572/3,4
அரசர் அமைச்சரையும் அடுத்து பிடிக்கும் வலை அனைத்தும் கொண்டு ஐயை நினைத்து தோத்திரம் செய்யும் – பெத்ல-குற:42 584/4
தாகமாக ஏசுநாத சுவாமி அன்று தந்த வலையை கொண்டு எந்தனிடத்து உள்ளாக்கும் – பெத்ல-குற:42 585/4
தான் கொண்டு மேவவும் சாகாது இருக்கவும் – பெத்ல-குற:43 590/4
சாடை பயில் நாடி திறமாய் சிங்கியை கொண்டு ஆடி புகழ் பாடி சபையூடு எழுந்து சொல் – பெத்ல-குற:44 603/3
பொத்தகம் கொண்டு புறகாலே வா என்பான் போன வழிக்கு எல்லாம் நானும் கூட போவேன் – பெத்ல-குற:45 612/2
கல்லி பயல்களை சொல் கோடாலி கொண்டு கண்டங்கண்டம் பல துண்டந்துண்டங்களாய் – பெத்ல-குற:45 614/3
வன்மனம் கொண்டு எழுந்து ஏசு கிறிஸ்துவின் மார்க்கத்துள்ளோர்களை வாதைசெய்தானதால் – பெத்ல-குற:51 682/2
ஞான கண்ணி கொண்டு வா பெத்தலேகமின் – பெத்ல-குற:53 703/1
பாதகரை சற்று தேற்றடா கவி பாவலரையும் கொண்டு ஆற்றடா – பெத்ல-குற:55 726/2
ஒட்டுக்கு எல்லாத்தையும் மாட்டடா ஓர் அட்டி துண்டும் கொண்டு மூட்டடா – பெத்ல-குற:55 740/2
இடுக்கம்பிடித்தவரை கொண்டு தூற்றியே எப்போதும் கோளும் புறணியும் சொல்லி – பெத்ல-குற:57 770/3
நாவதினால் ஏக பரனார் தயவதாய் அருளும் ஞான சுவிசேடம் என்ற தேவ வசனத்தை கொண்டு – பெத்ல-குற:61 810/2
சிந்தையில் கொண்டு தியானித்து உருக்கமாய் தேச சனங்கட்கு எல்லாம் உபதேசித்து – பெத்ல-குற:63 835/2
வரம் புரியும் என்று நினைத்து அகந்தையாக மதி அழிந்து நினைவு அழிந்து மயக்கம் கொண்டு
கரம் குவித்து வணங்கி ஒரு பலனும் காணா கசடருக்கு ஏது உரைத்தாலும் கருதார் என்று – பெத்ல-குற:64 839/2,3
வேத பொருளை பயன் கொண்டு மூடி விளக்கிநின்றாள் அத்தை மேவ என்று எண்ணி யான் – பெத்ல-குற:65 850/1
வம்பிக்கு பேச்சது ஆச்சுது என்றே வேத வாக்கியத்தை கொண்டு மூர்க்கமாய் பேச்சிட்டு – பெத்ல-குற:65 851/2
மேலே மயல்கொண்டு திரிவாள் ரண்டு விழி கொண்டு என்னொடு தினம் பொருவாள் அந்த – பெத்ல-குற:66 856/4
மா ஞானக்காரி தந்த மேல் ஞானம் கொண்டு மனம் – பெத்ல-குற:66 858/5

மேல்

கொண்டுசென்று (1)

முன் நாளில் அப்பத்தை காக்காய் கொண்டுசென்று முந்தும் எலியாவுக்கு கொடுக்கப்போச்சு – பெத்ல-குற:53 704/2

மேல்

கொண்டுபோ (1)

துஷ்டகன் பாப்பு விழுதல் ரோமாபுரிக்கு அழுகை அந்த தோஷியை கொத்தி தின்க கொண்டுபோ பெரும் கழுகை – பெத்ல-குற:62 824/2

மேல்

கொண்டுபோம் (1)

திலத ஒளி தீபம் கொண்ட கையை காட்டாய் புத்தி சித்தியால் எண்ணெய் கொண்டுபோம் கையை காட்டாய் – பெத்ல-குற:37 507/2

மேல்

கொண்டுபோய் (5)

நீர் ஓடும் சீவநதியினில் காட்டவும் நேராய் தொழுவத்தில் கொண்டுபோய் சேர்க்கவும் – பெத்ல-குற:46 629/2
நித்தியனுக்கு பலியாக கொண்டுபோய் கொடுடா – பெத்ல-குற:62 813/4
காட்டாமல் கொண்டுபோய் கூட்டு கறி ரண்டு செய்யே – பெத்ல-குற:62 814/2
தப்பிதமற்ற பறவை எல்லாம் கண்ணாய் பார்ப்பாய் பார்த்து சந்தோடமா எந்தன் சிங்கிக்கு கொண்டுபோய் சேர்ப்பாய் – பெத்ல-குற:62 815/2
வேட்டை கறிக்குமா நாட்டமடா ஈசாக்கு அண்ணே இவ் வேளைக்கு ஏதாகிலும் கொண்டுபோய் மாய்மாலம் பண்ணேன் – பெத்ல-குற:62 816/1

மேல்

கொண்டுபோனால் (2)

வெட்டுக்கிளி யொவானுக்கு மெத்தமெத்த பிரியம் அதை மிச்சமாய் கொண்டுபோனால் கொடுப்பான் தீட்சை துரியம் – பெத்ல-குற:62 818/1
அகல கட்டையதாம் வாசற்கு அழைத்து உனை கொண்டுபோனால்
விகலும் எந்தனையும் மோட்ச வீட்டினில் சேர்ப்பாய் அல்லோ – பெத்ல-குற:69 880/1,2

மேல்

கொண்டும் (2)

கனமொடு கொண்டும் கஞ்சம் பொங்கும் – பெத்ல-குற:22 257/1
விசை மணி கொண்டும் பதம் கட்டும் கவி சிந்தும் படித்தே மிகு – பெத்ல-குற:22 298/2

மேல்

கொண்டுமே (3)

தொந்தந்திகு தொந்தந்தன தந்தந்தன என்றும் சொலி சுந்தரம் கொள அனந்தன் பயிலின் பொன் கணியும் கொண்டுமே – பெத்ல-குற:44 603/5
ஐந்து அப்பத்தை பிட்டு ஏழு அப்பத்தை பிட்டு ஆறிரு அப்போஸ்தலமார்களை கொண்டுமே
பந்திவைத்து தர ஐயாயிரம் பட்சி பண்பான நாலாயிரம் பட்சியும் கூடி – பெத்ல-குற:51 679/3,4
கிருபை பரமன் திருமுகம் கொண்டுமே கீர்த்தியாய் பேதுருவை நோக்கி பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 695/4

மேல்

கொண்டுவந்து (1)

மானுவேலை தினம் பணியடா செபமாலை கொண்டுவந்து அங்கு அணியடா – பெத்ல-குற:55 724/1

மேல்

கொண்டுவருகின்றானே (1)

மறைப்புலி நூவனும் ஞான மார்க்கமாய் கண்ணி கொண்டுவருகின்றானே – பெத்ல-குற:54 712/4

மேல்

கொண்டுவா (2)

ஞான கண்ணி கொண்டுவா குழுவா – பெத்ல-குற:53 702/1
ஞான கண்ணி கொண்டுவா – பெத்ல-குற:53 702/2

மேல்

கொண்டுவை (1)

வித்தகன் சரீரத்துக்கு ஒப்புற்ற கோதும்பை அப்பம் வை அம்மே ஞான விந்தை சேரும் முந்திரிகைக்கு அந்த ரசமும் கொண்டுவை அம்மே – பெத்ல-குற:36 501/1

மேல்

கொண்டை (1)

சீப்பிட்டு சீப்பிட்டு சேர்த்த கொண்டை கொண்டலாத்தியே எந்த தேசத்திலே சுற்றப்போனாளோ நான் கொண்ட லாத்தியே – பெத்ல-குற:59 795/3

மேல்

கொண்டையாள் (1)

மஞ்சுற்று உலவு கொடி சஞ்சு ஒத்து ஒளிர் சிறந்த கொண்டையாள் மணி மாடப்புறாவின் கண் என்று ஓடி பரந்த விழி கெண்டையாள் – பெத்ல-குற:16 136/2

மேல்

கொண்டையில் (1)

வேர் இல்லா பூமரம் போல் உன்றன் கொண்டையில்
வேடிக்கை பூ ஏண்டி சிங்கி ஆரோன் – பெத்ல-குற:71 921/1,2

மேல்

கொணர்ந்து (2)

முன்னாகவே பிடித்து கொணர்ந்து விட்டு மோசேசு இவ்வித பேர்களை சாகவே – பெத்ல-குற:56 755/2
எடுத்து திமிர்வாதனை படுக்கையோடே கொணர்ந்து
தடத்தில் இடம் இல்லாத இடுக்கால் தளம் திறந்து – பெத்ல-குற:67 869/1,2

மேல்

கொத்தி (2)

சூத்திரமாக அப்போஸ்தல பட்சிகள் சுற்றிச்சுற்றி தின்று பற்றிப்பற்றி கொத்தி – பெத்ல-குற:51 680/4
துஷ்டகன் பாப்பு விழுதல் ரோமாபுரிக்கு அழுகை அந்த தோஷியை கொத்தி தின்க கொண்டுபோ பெரும் கழுகை – பெத்ல-குற:62 824/2

மேல்

கொத்திக்கொத்தி (1)

வானக மீதில் இருந்து பெய்யச்செய்த மன்னாவை கண்டு மகிழ்ந்து கொத்திக்கொத்தி – பெத்ல-குற:51 678/4

மேல்

கொத்திரம் (1)

சாமாரியா தேசமதில் சார்ந்தது ஒன்றரை கொத்திரம் தான் – பெத்ல-குற:31 449/1

மேல்

கொத்து (1)

கொத்து செபமாலை கட்டி கத்தி குறி சொல்வது வீண் அம்மே அந்த கோரணி குறிகள் எல்லாம் காரணத்தை காட்டாதடி அம்மே – பெத்ல-குற:36 503/4

மேல்

கொந்தள (1)

கொந்தள ஓலை குழையினில் கூட்டி – பெத்ல-குற:22 335/2

மேல்

கொப்புளத்து (1)

கட்டளையாய் மிருகத்தின் மேல் மாந்தர் மேல் காய்ச்சலுடன் கொப்புளத்து எரிபந்தத்தை – பெத்ல-குற:46 621/1

மேல்

கொம்பது (1)

குற்றம் மிகும் ரோமாவின் பாப்புவுக்கு சிரத்து இரண்டு கொம்பது உண்டே இவர்க்கு ஏதும் வம்பது உண்டோ என்பார் – பெத்ல-குற:14 126/4

மேல்

கொம்பி (1)

கொம்பி குதித்து எழுந்து கூத்தாடி கொக்கரித்து – பெத்ல-குற:53 701/1

மேல்

கொம்பில் (1)

அந்த பொல்லாத அபிசலோம் ஓர் மர தண்டி கொம்பில் பட்டு வெம்பி விழித்தாப்போல் – பெத்ல-குற:56 754/4

மேல்

கொம்பு (4)

கள்ளத்தீர்க்கன் மா அக்கியானன் கடிய கொம்பு இரண்டு உண்டானன் – பெத்ல-குற:10 93/1
பத்து கொம்பு மிருகம் வளர் பாபல் ரோமை யான் அறிவேன் – பெத்ல-குற:31 462/2
எத்தன் முழு பெத்தரிக்க இரண்டு கொம்பு மிருகம் எனும் – பெத்ல-குற:31 463/1
திக்கில் எழு தலை பத்து கொம்பு உள்ள சிவப்பு மிருகத்து உவப்புடன் ஏறிக்கொண்டு – பெத்ல-குற:63 838/1

மேல்

கொம்புமான (1)

உள்ள பத்து கொம்புளதும் ரண்டு கொம்புமான உயர்ந்த வலு மிருகமது ஒன்றாகும் என்ற தலமே – பெத்ல-குற:27 397/2

மேல்

கொம்புளதும் (1)

உள்ள பத்து கொம்புளதும் ரண்டு கொம்புமான உயர்ந்த வலு மிருகமது ஒன்றாகும் என்ற தலமே – பெத்ல-குற:27 397/2

மேல்

கொம்பொடு (1)

கொம்பொடு உடம்பு படும்படியும் படியுண்டு கொடிய வஞ்ச – பெத்ல-குற:15 133/8

மேல்

கொய்தாள் (1)

உசியா யூதித்து என்பாளும் விசையாய் வேடம்போட்டு அல்லோ ஓலப்பர் நேசர் தலை நீலி போல் கொய்தாள்
வசையாய் சவுலின் மகள் திசை சேர் மிகாள் மலடி மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 152/3,4

மேல்

கொய்து (1)

வெள்ளை நிலை துகிலதனை கொய்து உடுக்கும் கையே மேலான நன்மை எல்லாம் விளையும் இந்த கையே – பெத்ல-குற:38 510/4

மேல்

கொர்னேலியு (2)

பத்தியோடே செபம்செய்த கொர்னேலியு பட்சியும் கல்லன் வலைக்குள்ளே பட்டது – பெத்ல-குற:60 802/3
பத்தி கொர்னேலியு அத்தனையும் கண்டு மகிழ்வான் சீமோன் பண்ணும் பிரசங்கத்தால் இ புறாவினை புகழ்வான் – பெத்ல-குற:62 821/2

மேல்

கொரிந்தியர் (1)

இந்துஸ்தானியர் அல்மாஞ்ஞர் கொரிந்தியர் இக்கோனியர் இஸ்பாஞ்சர் கொனஸ்தாஞ்சியர் – பெத்ல-குற:47 637/2

மேல்

கொல்கதாத்தான் (1)

பற்பல பாடான மலை கொல்கதாத்தான் அம்மே பரன் சுதனார் பாடுபட்டு மரித்த மலை அம்மே – பெத்ல-குற:25 375/3

மேல்

கொல்ல (3)

கன்னியர்க்குள் நான் ஒரு பெண் வெண்ணிலாவே எனை காய்ந்து கொல்ல வேண்டாம் சொன்னேன் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 170/4
கொல்ல காண்பது மூவாசை ஆனதை கொற்றவன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 387/4
துன்னாமலே கல்லெறிந்து கொல்ல சொல்லி சொன்னான் அதற்கு நீர் சொல்வது ஏது என்னவே – பெத்ல-குற:56 755/3

மேல்

கொல்லடா (1)

தந்திர பேயினை கொல்லடா பக்கி தாவுகளை பார்த்து செல்லடா – பெத்ல-குற:55 732/2

மேல்

கொல்லர் (1)

கொல்லர் நிடதர் இலாடர் எரவணர்கள் கூற்சரர் உருமருணர் குகுரர் சகர் – பெத்ல-குற:47 640/1

மேல்

கொல்லர்கள் (1)

காணாப்புதரையர் கோலியர் கொல்லர்கள் கம்மாளர் கல்தச்சர் கன்னார் தட்டாருடன் – பெத்ல-குற:47 642/3

மேல்

கொல்லும்படி (1)

கொல்லும்படி மூவாசை தொல்லைகளை மனதில் கொடுத்து மிக தியக்கிறாய் இன்று – பெத்ல-குற:20 188/2

மேல்

கொல்லுறு (1)

சிந்தை சொல்லுறு மனம் நைந்து கொல்லுறு கடி வந்து வெல்லுறு – பெத்ல-குற:66 857/6

மேல்

கொல்லை (1)

தொல்லை சீவவிருட்ச கொல்லை தலத்தின் முக்கிய சுகத்தினாள் தேவ சோதி பிரவை தங்கும் நீதி கிருபை பொங்கும் முகத்தினாள் – பெத்ல-குற:16 137/4

மேல்

கொலுவேன் (1)

வாடும் பல பேயும் சில நாயும் கழுகு காகத்து இனம் மா பந்தயமோடும் கொலுவேன் என்று உரை தானும் சொலி – பெத்ல-குற:44 606/5

மேல்

கொலை (1)

தேசு உலவு தவிது அரசன் உரியாவை கொன்று கொலை செய்தானே இவன் பாவம் செய்தானோ என்பார் – பெத்ல-குற:14 122/4

மேல்

கொலைசெய்த (1)

கானத்தில் ஓட்டி இரட்சிப்பின் தானத்தை காட்டி கொலைசெய்த காயனை முனிந்தான் ஆபேல் நேயனை கனிந்தான் – பெத்ல-குற:13 109/3

மேல்

கொலைபாதகக்காரர் (1)

கல்லாத மூடர் கொலைபாதகக்காரர் காமாவிகாரிகள் போறாமைக்காரர் – பெத்ல-குற:49 659/3

மேல்

கொலையின் (1)

பொங்கு பவங்கள் அறும் கொலையின் கடு சூட்டி புரக்கவென்று – பெத்ல-குற:15 132/8

மேல்

கொழு (1)

கூபம் உறு சீத்திமும் கொழு நகர்மூன்றும் அறிவேன் – பெத்ல-குற:31 460/2

மேல்

கொழுத்த (2)

கண் சேர மயங்கும் முன் பெத்தரிக்கமோ உந்தன் கல்வி மதமோ கொழுத்த வாயின் மதமோ – பெத்ல-குற:40 562/2
கெட்டகுமாரன் துவக்கத்திலே மெத்த சுட்டி தந்தை கிட்டினாப்போல் அடித்தான் கொழுத்த கன்றுக்குட்டி – பெத்ல-குற:62 824/1

மேல்

கொழுத்தினை (1)

தீர்க்கதெரிசிகளை துன்பம் செய்தனை தென்றலே நீ தீயினில் மூவரை போட்டு கொழுத்தினை தென்றலே – பெத்ல-குற:19 176/1

மேல்

கொழுந்தன் (1)

கத்தனுட சுதன் இவட்கு கொழுந்தன் அல்லோ வேணும் கன்னி இவள் மனைவி என்ற காரணம் ஏது அம்மே – பெத்ல-குற:28 407/4

மேல்

கொழுந்து (1)

சொன்ன முடி வெண்மை என்ன இரு விழி துன்னு கனல் கொழுந்து அன்னதாய் – பெத்ல-குற:9 82/2

மேல்

கொழுப்பு (1)

கட்டி கொழுப்பு உருக்கு நெய்யடா அன்ன பட்சி திவ்விய காரிகை சீயோன் மகள் வாங்குவாள் உனை மெச்சி – பெத்ல-குற:62 818/2

மேல்

கொள் (4)

கங்குல் அகல விளங்கு கதிரின் முகம் கொள் பார்வை துலங்கவே – பெத்ல-குற:9 83/2
முந்தும் ஏவாள் சாராளும் ரேபக்காள் முதன்மை லேயாளுடன் ராகேல் முறை கொள் தாமார் சிப்பொறாள் இராகாப்பு மோசே முன் மீரியாம் தெபோறாள் – பெத்ல-குற:15 127/1
பாதை இருபாலும் நிறை சாரிகளிலே படர் கொள்
கேதர் வனமோ பெரிய சேதர் வனமோ அரிய – பெத்ல-குற:22 318/1,2
மையல் கொள் சீயோன் மகட்கு செய்ய நல் குறிகள் சொல்ல – பெத்ல-குற:24 359/2

மேல்

கொள்க (1)

அத்தகை சந்திரன் என கொள்க செவ்வாய் பதினாலு கோடியே ஐம்பத்தைந்து லட்சம் முப்பத்து மூவாயிரத்து அறுநூற்று அறுபத்தேழ் – பெத்ல-குற:21 196/4

மேல்

கொள்கையை (1)

கொற்றவன் பவனிவந்த கொள்கையை குறித்து எலோர்க்கும் – பெத்ல-குற:13 104/3

மேல்

கொள்ளவே (3)

பெத்தலகேம் ராசன் உனை கொள்ளவே வாறான் நாளை பேணும் உந்தன் நாணம் எல்லாம் காணவேபோறேன் – பெத்ல-குற:40 565/1
தேசம் எல்லாம் மந்திரித்தனம் செய்கையில் சேர்ந்து சகோதரர் தானியம் கொள்ளவே
பாசத்துடன் வந்து பென்யமீன் சாக்கினில் பாத்திரம் கண்டு பயந்து விழித்தாப்போல் – பெத்ல-குற:56 752/3,4
கொள்ளவே பட்சமாய் சொல்வது இலட்சணம் – பெத்ல-குற:70 900/4

மேல்

கொள்ளாதவன் (1)

எட்டு திசையும் கொள்ளாதவன் மைந்தன் எம் எசு சுவாமி எழுந்தருளி தர்மப்பெட்டிக்கு – பெத்ல-குற:52 690/1

மேல்

கொள்ளி (1)

கொள்ளி பாம்பாம் பாப்பும் வந்து குணம்பெறவே தானும் வந்து – பெத்ல-குற:10 93/4

மேல்

கொள்ளிவாய் (1)

சாகவும் சாக கடிக்கவும் கொள்ளிவாய் சற்பத்தை விட்டதினால் கடியுண்டவர் – பெத்ல-குற:52 688/3

மேல்

கொள்ளும் (1)

தருணமான போது அறிவுள்ளோர்களையும் தர்க்கத்தால் மடக்கி சிக்கி கொள்ளும் வலை – பெத்ல-குற:42 584/3

மேல்

கொள்ளையிட்ட (1)

கள்ளர் எரிகோவில் சென்றவனை கொள்ளையிட்ட நெறி போல் சிங்கியை – பெத்ல-குற:58 788/1

மேல்

கொள்ளோம் (1)

பின் குலத்தில் பெண்கள் கொடோம் பெண்களையும் கொள்ளோம் பேசுதற்கு இங்கு எங்கள் குலம் ராசர் குலம் அம்மே – பெத்ல-குற:25 377/2

மேல்

கொள (2)

சொக்கு சனி இருபத்தீராயிரம் முன்னூற்று ஐம்பத்து ஒன்றுமாம் தோற்றும் வளையம் அப்படி கொள சோதியாகிய திங்களோ – பெத்ல-குற:21 194/5
தொந்தந்திகு தொந்தந்தன தந்தந்தன என்றும் சொலி சுந்தரம் கொள அனந்தன் பயிலின் பொன் கணியும் கொண்டுமே – பெத்ல-குற:44 603/5

மேல்

கொளும் (1)

கனங்களும் தனங்களும் பயன்களும் கொளும் திண் – பெத்ல-குற:22 327/2

மேல்

கொற்றவன் (3)

கொற்றவன் பவனிவந்த கொள்கையை குறித்து எலோர்க்கும் – பெத்ல-குற:13 104/3
கொல்ல காண்பது மூவாசை ஆனதை கொற்றவன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 387/4
கோலத்தொடு தொட ஆர் தொட்டது என்றுமே கொற்றவன் சுற்றி திரும்பி பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 689/4

மேல்

கொன்ஸ்தந்தீன் (1)

வந்த கொன்ஸ்தந்தீன் அரசன் விந்தை மலை அம்மே மதி மயக்க பாப்பு அங்கே நுழைந்த மலை அம்மே – பெத்ல-குற:25 376/2

மேல்

கொன்ற (2)

சத்திய சாட்சிகளை மெத்தவும் கொன்ற அவன் இரத்த பழிவாங்கும் வாசல் இது – பெத்ல-குற:30 438/4
சீசேராவை சுத்தியால் கொன்ற யாகேலின் சித்திர வித்தையது அறிவேன் அன்று – பெத்ல-குற:33 476/1

மேல்

கொன்றவர் (1)

சங்கை இராது தகனித்து கொன்றவர் தென்றலே இரத்தச்சாட்சிகள் காட்சிகள் ஆச்சரியம் தரும் தென்றலே – பெத்ல-குற:19 178/3

மேல்

கொன்றாய் (1)

ஆணவம்கொண்டு இசரேலரின் பாலரை தென்றலே நீ ஆற்று தண்ணீரில் அமிழ்த்தி கொன்றாய் அல்லோ தென்றலே – பெத்ல-குற:19 177/2

மேல்

கொன்றால் (1)

கங்குல் பகலினும் கண்ணுறங்கான் சற்றும் தென்றலே அந்த கன்மியை வன்மியை காய்ந்து கொன்றால் நலம் தென்றலே – பெத்ல-குற:19 178/4

மேல்

கொன்று (5)

கணப்படு குழியில் கொன்று சுட்டெரித்து – பெத்ல-குற:7 51/4
தேசு உலவு தவிது அரசன் உரியாவை கொன்று கொலை செய்தானே இவன் பாவம் செய்தானோ என்பார் – பெத்ல-குற:14 122/4
அரிய யாகேலும் தன்னை பரிவாய் அடைந்த சீசேராவையும் ஆணியால் கொன்று உசாவினாள் அன்றோ – பெத்ல-குற:17 149/2
ஏலியின் மக்கள் செய்த இடர் சகிக்காமல் கொன்று
சோலியற்று உயர்ந்த பெத்லேம் தோன்றலின் கிருபையாலே – பெத்ல-குற:46 617/1,2
ஊரியாவை யுத்தத்தில் அனுப்பி கொன்று உற்றவன் தேவியை தான் எடுத்துக்கொண்டு – பெத்ல-குற:63 830/1

மேல்

கொன்றைகள் (1)

தாழை குங்கும நேரு கொன்றைகள் – பெத்ல-குற:22 324/2

மேல்

கொன்றையே (1)

வீணினில் மாய்ந்தவர் கோடியில் கோடியே தென்றலே நீ மிக்க அப்போஸ்தலமாரையும் கொன்றையே தென்றலே – பெத்ல-குற:19 177/4

மேல்

கொன்னி (1)

மின்னி நடை பின்னி இடை சின்னி மொழி கொன்னி அருள் – பெத்ல-குற:24 362/5

மேல்

கொனஸ்தந்தீன் (1)

கோப்பு ரோமாபுரிக்கு சீமோன் வருகையில் அங்கே கொனஸ்தந்தீன் ராயனுக்கு பட்டமும் உண்டுமோ – பெத்ல-குற:40 567/4

மேல்

கொனஸ்தாஞ்சியர் (1)

இந்துஸ்தானியர் அல்மாஞ்ஞர் கொரிந்தியர் இக்கோனியர் இஸ்பாஞ்சர் கொனஸ்தாஞ்சியர்
விந்தை செறி கானானீயர் அம்மோனியர் வெஸ்தியர் இஸ்தேக்கியர் கிருகாசியர் – பெத்ல-குற:47 637/2,3

மேல்