சு முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சுக்கோத்தும் 1
சுக 1
சுகத்தி 1
சுகத்தினாள் 1
சுகத்தை 2
சுகந்த 1
சுகம் 3
சுகமாம் 1
சுகமாய் 1
சுகித்து 1
சுட்ட 3
சுட்டது 1
சுட்டி 2
சுட்டு 3
சுட்டும் 1
சுட்டெரிக்க 1
சுட்டெரித்து 2
சுடர் 2
சுடராக 2
சுடரின் 1
சுடும் 1
சுத்த 10
சுத்தத்தின் 1
சுத்தம் 2
சுத்தமாம் 2
சுத்தமாய் 1
சுத்தமில்லா 1
சுத்தனார் 1
சுத்தனுக்கு 1
சுத்தாங்கத்தானை 1
சுத்திகரித்து 1
சுத்தியால் 1
சுதந்தர 1
சுதந்திரமாய் 1
சுதன் 19
சுதன்-தனை 1
சுதனவர் 2
சுதனார் 5
சுதனால் 1
சுதனின் 1
சுதனுக்கு 1
சுதனே 1
சுதனை 2
சுந்தர 2
சுந்தரம் 8
சுந்தரி-தனை 1
சுப்பி 1
சுப 10
சுபங்கள் 1
சுபத்தால் 1
சுபத்தி 1
சுமந்தவன் 1
சுமந்துகொண்டு 1
சுமப்பாள் 1
சுமையும் 1
சுயமாய் 2
சுர 1
சுரக்குதே 1
சுரகுரு 1
சுரர்க்கு 1
சுரர்களின் 1
சுரர்களுக்கு 1
சுரரும் 1
சுரலோகத்து 1
சுரி 2
சுருக்கடா 1
சுருக்கி 1
சுருதி 1
சுருப 1
சுரூப 1
சுரூபத்தை 1
சுவாமி 7
சுவாமியே 1
சுவார்சு 1
சுவாலையில் 1
சுவிசேட 29
சுவிசேடத்தின் 2
சுவிசேடத்தை 3
சுவிசேடத்தையும் 1
சுவிசேடத்தையே 1
சுவிசேடம் 6
சுவிசேடனை 1
சுழிக்கும் 1
சுழியினாள் 1
சுற்ற 2
சுற்றடா 1
சுற்றப்போனாளோ 1
சுற்றார் 1
சுற்றி 11
சுற்றிச்சுற்றி 2
சுற்றித்திரிந்து 1
சுற்றியே 1
சுற்று 4
சுற்றும் 3
சுற்றுளார்கள் 1
சுறுக்கிலே 1
சுறுசுறுப்போடு 1
சுன்னத்து 1

சுக்கோத்தும் (1)

சாத்திரமாய் சுக்கோத்தும் சதுர் பட்டணம் யான் அறிவேன் – பெத்ல-குற:31 459/2

மேல்

சுக (1)

தங்கும் உங்கள் இன்ப சுக சாகதத்தை யார் அறிவார் – பெத்ல-குற:67 860/3

மேல்

சுகத்தி (1)

முத்தி மனத்தி குணத்தி கணத்தி முகத்தி சுகத்தி அறத்தி திறத்தி – பெத்ல-குற:23 355/3

மேல்

சுகத்தினாள் (1)

தொல்லை சீவவிருட்ச கொல்லை தலத்தின் முக்கிய சுகத்தினாள் தேவ சோதி பிரவை தங்கும் நீதி கிருபை பொங்கும் முகத்தினாள் – பெத்ல-குற:16 137/4

மேல்

சுகத்தை (2)

தோழி மேல் மயலோ சுகத்தை வேண்டியதோ – பெத்ல-குற:39 549/1
நேற்று ஏழாம் மணியிலே ஆற்று மகன் சுகத்தை
சாற்றவே கேட்டு இவனும் தேட்டமாய் ஓடிவந்து – பெத்ல-குற:67 867/1,2

மேல்

சுகந்த (1)

கஞ்சத்தத லீலியாவின் சுத்தத்தின் சுகந்த விழியினாள் பரம காணி காசு என பொன் ஆணி பட்டம் தரித்த நுதலினாள் – பெத்ல-குற:16 136/3

மேல்

சுகம் (3)

வைபோக மனதில் அந்தரங்கம் புண்ணிய சுகம்
மிஞ்சிய ரஞ்சித வஞ்சி இலஞ்சிய ஞானி வேதம் உணர்ந்த – பெத்ல-குற:15 131/4,5
வாசியே உள்ளானே அவள் சுகம் வாசியே உள்ளானே – பெத்ல-குற:58 784/2
பேரான ஞான சுகம் தருகும் அன்ன பேடையை சாடையாய் பேசும் கிளி-தனை – பெத்ல-குற:65 847/2

மேல்

சுகமாம் (1)

ஆசுக மாங்குயிலே மனை பயிலா சுகமாம் குயிலே வான – பெத்ல-குற:58 784/1

மேல்

சுகமாய் (1)

உகமை எலிசப்பெத்தும் சுகமாய் இஸ்நாதகனை ஊமையாம் சகரியாவுக்காம் அலோ பெற்றாள் – பெத்ல-குற:17 153/2

மேல்

சுகித்து (1)

நன்மை வந்தால் கன சந்தோடமாகவே நாடி சுகித்து பிரதாபித்து பற்பல – பெத்ல-குற:63 837/1

மேல்

சுட்ட (3)

சர்ப்பார்த்தூர் கைமை சுட்ட அப்பம் எலியாவுக்கு தந்தாளே அல்லால் ஏதை தந்தாள் சொல்லும் – பெத்ல-குற:17 150/2
சீருடன் சுட்ட அடை ஒன்றும் தந்து அதை தின்ற திறத்தினால் நாற்பது நாள் வரை – பெத்ல-குற:46 623/3
ஓரே எனும் கிரிக்கே இரவும் பகல் ஓயாமல் ஓடும் பெலன் தரும் சுட்ட அடை – பெத்ல-குற:46 623/4

மேல்

சுட்டது (1)

நாக்கு சுட்டது போல் சுடும் வெண்ணிலாவே நீ நாட்குறிப்பு காணாய் அல்லோ வெண்ணிலாவே – பெத்ல-குற:18 173/1

மேல்

சுட்டி (2)

சுட்டி ஒளி விட்டிடில் அது எட்டில் ஒரு மட்ட திரு சோதி சுரூப நுதல் – பெத்ல-குற:15 131/10
கெட்டகுமாரன் துவக்கத்திலே மெத்த சுட்டி தந்தை கிட்டினாப்போல் அடித்தான் கொழுத்த கன்றுக்குட்டி – பெத்ல-குற:62 824/1

மேல்

சுட்டு (3)

பொற்பு தட்டி கிச்சு கஸ்தி பக்கத்துக்கு உட்புக்கி சுட்டு – பெத்ல-குற:22 278/2
பலகாரம் தோசைகள் சுட்டு அவள் படைத்து படைத்து குறி கேட்கலையோ அம்மே – பெத்ல-குற:34 488/4
பெட்டை கொக்கு கறி சுட்டு தின்றால் ஒரு போக்கு அதை போத துவட்டலதாக புளியிட்டே ஆக்கு – பெத்ல-குற:62 819/1

மேல்

சுட்டும் (1)

காட்சியாய் ஞான கண்ணாடி ஒன்று அல்லாமல் கள்ள பாப்பை சுட்டும் கண்ணாடியும் தந்து – பெத்ல-குற:57 765/3

மேல்

சுட்டெரிக்க (1)

தொகையாகவே நரகத்தின் நெருப்பிடை சுட்டெரிக்க திடுக்கிட்டு விழித்தல் போல் – பெத்ல-குற:56 759/4

மேல்

சுட்டெரித்து (2)

கணப்படு குழியில் கொன்று சுட்டெரித்து
பிணத்து பசாசர்களை திணத்தி கோடரி கொண்டு – பெத்ல-குற:7 51/4,5
சுட்டெரித்து போடுவார் மெய் இதிலே ஒரு தூற்றுக்கூடை இருக்குது கையதிலே – பெத்ல-குற:8 60/2

மேல்

சுடர் (2)

யோசுவன் வன் சமரிட்ட நாளதில் மேலிடும் படை கெட்டு வீழ்க விண்ணூடு எழும் சுடர் நிற்கவே செயும் உவகையான் – பெத்ல-குற:3 24/1
புத்தியுற்ற கன்னியர்கள் மாப்பிள்ளைக்கு எதிர்கொண்டு பொங்கு சுடர் தீபங்கள் செம் கையில் வைத்து எழுவார் – பெத்ல-குற:14 125/1

மேல்

சுடராக (2)

நேமியது வாய்காட்டாது அடங்கி நின்ற தலமே நிருபனுட ஆவி சுடராக வந்த தலமே – பெத்ல-குற:27 396/3
ஆவி அக்கினி சுடராக சீடர் சிரத்தில் மேவி நிறைந்து இருந்த வாசல் இது – பெத்ல-குற:30 437/2

மேல்

சுடரின் (1)

மாசற்ற பரன் சுடரின் வார்த்தையே மனுவாக – பெத்ல-குற:4 31/1

மேல்

சுடும் (1)

நாக்கு சுட்டது போல் சுடும் வெண்ணிலாவே நீ நாட்குறிப்பு காணாய் அல்லோ வெண்ணிலாவே – பெத்ல-குற:18 173/1

மேல்

சுத்த (10)

சுத்த எண் கலையான் எமை கரிசித்த கண் கலையான் பரம சொற்கத்தின் நிலையான் பரிசெயர் தர்க்கத்தின் மலையான் – பெத்ல-குற:13 108/2
சுத்த வியாழம் நாற்பத்தொன்பது கோடியோடு அறுபத்தேழு தொகை லட்சம் அறுபத்தையாயிரத்து இருநூற்று எண்பத்தொன்றதே – பெத்ல-குற:21 196/5
சுத்த தற்பர சொற்க பொன் படர் – பெத்ல-குற:22 214/2
அத்தனின் பழையேற்பாட்டின் புஸ்தகத்தையும் எடுத்தா அம்மே சுத்த ஆசாரி சால்வையினை கூசாமல் அருகில் வைப்பாய் அம்மே – பெத்ல-குற:36 501/2
சுத்த வெள்ளை துகில் கூறை ஒன்று வருகும் தேவ துய்ய அபரஞ்சி செபமாலை வருகும் – பெத்ல-குற:40 565/2
சுத்த உபதேசி என பெத்தலேம் மலை குழுவன் தோன்றினானே – பெத்ல-குற:41 572/4
சுத்த வலையை விரித்துமே – பெத்ல-குற:54 713/4
சுத்த சுவிசேடம் எனும் பொத்தகத்தை படிக்கையில் – பெத்ல-குற:66 855/2
சுத்த மயில் அழகி ஐயே விசுவாச சிங்கி – பெத்ல-குற:67 861/1
சுத்த மயில் அழகி ஐயே என் சிங்கி ஐயே – பெத்ல-குற:67 861/2

மேல்

சுத்தத்தின் (1)

கஞ்சத்தத லீலியாவின் சுத்தத்தின் சுகந்த விழியினாள் பரம காணி காசு என பொன் ஆணி பட்டம் தரித்த நுதலினாள் – பெத்ல-குற:16 136/3

மேல்

சுத்தம் (2)

சுத்தம் மிகும் சத்தியசபை பெத்தலேம் குறவஞ்சி தோன்றினாளே – பெத்ல-குற:22 198/4
உரமது மிஞ்சும் தல சுத்தம் கன துங்கம் புதைத்து ஓதிய – பெத்ல-குற:22 297/2

மேல்

சுத்தமாம் (2)

சுத்தமாம் திருவாய்மைகள் சாற்றி – பெத்ல-குற:15 133/14
சுத்தமாம் பறவை எல்லாம் மொத்தமாய் திரட்டி ஒரு தொகையாய் சேர்த்து – பெத்ல-குற:62 812/3

மேல்

சுத்தமாய் (1)

ஓதி மிகுத்து செப சித்தமாய் கிறிஸ்துவின் நீதி மிகுத்து தவ சுத்தமாய் சிங்கனை கண்டு – பெத்ல-குற:44 604/3

மேல்

சுத்தமில்லா (1)

சுத்தமில்லா பக்கியை சீமோன் முற்றிலும் பழிப்பான் கூண்டு சொற்பனம் மூன்று தரம் தோற்றது ஏது என்று விழிப்பான் – பெத்ல-குற:62 821/1

மேல்

சுத்தனார் (1)

பத்து வாய்மை நினைத்திட தவ பத்தியே தரு சுத்தனார் – பெத்ல-குற:9 85/4

மேல்

சுத்தனுக்கு (1)

பத்து இலட்சணத்தனுக்கு சுத்தனுக்கு மங்களம் – பெத்ல-குற:5 38/1

மேல்

சுத்தாங்கத்தானை (1)

துணி கொண்ட ஒளியினானை தூய சுத்தாங்கத்தானை
மணி கொண்ட சயனத்தானை வாழ்த்துவோம் போற்றுவோம் – பெத்ல-குற:6 41/3,4

மேல்

சுத்திகரித்து (1)

தீட்சை கொடுத்து ஆத்துமத்தை சுத்திகரித்து சுவிசேட நெறிகள் எல்லாம் மெத்த விரித்து – பெத்ல-குற:8 58/1

மேல்

சுத்தியால் (1)

சீசேராவை சுத்தியால் கொன்ற யாகேலின் சித்திர வித்தையது அறிவேன் அன்று – பெத்ல-குற:33 476/1

மேல்

சுதந்தர (1)

முந்த வரைந்த கடந்த சுதந்தர வேதம் முதல்வன் ஆவி – பெத்ல-குற:15 130/8

மேல்

சுதந்திரமாய் (1)

ஏக பரன் சேயீரின் மலை தேசம் முழுதும் ஏசாவின் புத்திரர்க்கு சுதந்திரமாய் கொடுத்தார் – பெத்ல-குற:25 372/1

மேல்

சுதன் (19)

பார் உலவு பரன் சுதன் பொன் பாதம் இரண்டும் துணையே – பெத்ல-குற:4 29/4
காட்சி மிகும் சுதன் இப்போது வருவார் செயும் கருமத்துக்கு தக்கது பலன் தருவார் – பெத்ல-குற:8 58/2
சூட்டுதற்கு எனக்கு பின்னால் தோன்றும் அரியோர் தேவ சோதி சுதன் ஏசு கிறிஸ்து எனும் பெரியோர் – பெத்ல-குற:8 73/1
அன்ன மெல்கிசேதேக்கும் அங்கு இடத்து அட்டவணை அற்ற பதன் இவன் கடவுள் பெற்ற சுதன் என்பார் – பெத்ல-குற:14 121/4
தானத்து ஏசு சுதன் மானத்து அருள் நீதி வெண் ஆடையாள் பல சாத்திர விற்பனத்தோரை சூத்திரத்தினில் பிணிக்கும் சாடையாள் – பெத்ல-குற:16 142/2
பிடித்து பரன் அருள் பெலத்து சுதன் என – பெத்ல-குற:22 248/1
கத்தனுட சுதன் இவட்கு கொழுந்தன் அல்லோ வேணும் கன்னி இவள் மனைவி என்ற காரணம் ஏது அம்மே – பெத்ல-குற:28 407/4
திரியேக பராபரன் என்று ஓதின போது அம்மே திரித்துவத்தில் இரண்டாம் ஆள் சுதன் அல்லவோ அம்மே – பெத்ல-குற:28 409/1
நேசம் மிகும் சற்குணராம் கிறிஸ்தவர்கள் அம்மே நீதி தரும் பரம சுதன் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 418/2
மான பரன் தவிது மோன சுதன் சலமோன் ஞான பரன் துதிக்கும் வாசல் இது – பெத்ல-குற:30 427/2
தேவசகாய வேதநாயகன் கவிக்கு அருள் தேவ சுதன் வருகும் வாசல் இது – பெத்ல-குற:30 434/4
செய்ய சுதன் சிலுவையினில் சேலையற்று நிற்பதும் ஏன் வஞ்சி திருச்சித்தமதாய் – பெத்ல-குற:32 467/3
அந்தர வானும் புவியும் படைத்த அரும் பொருளான் பரம்பொருளின் சுதன்
மந்திரமாகிய ஞான உபதேச மார்க்கத்துள் வந்த கிறிஸ்துவ பட்சிகள் – பெத்ல-குற:50 672/1,2
அந்நாள் படுத்திடு மாடப்புறாவினை ஆதி பரன் சுதன் தானே கொடுபோனான் – பெத்ல-குற:53 704/1
செம்மறியாட்டை சுதன் எடுத்துகொண்டான் தேற்றரவாளன் புறாவை ஏற்றுக்கொண்டான் – பெத்ல-குற:53 706/1
தேவ சுதன் மனுவான பெத்லெகேம் நாட்டில் வெகு திறமையாக – பெத்ல-குற:58 772/1
வந்தனை புரிந்து பரனின் சுதன் இயம்பு பரமண்டல மந்திரம்-தன்னை இரண்டு விசை சொல்லிக்கொண்டு – பெத்ல-குற:61 808/2
சஞ்சலம் என்று பரன் சுதன் வாக்காலே தப்பாமல் யாவர்க்கும் ஒப்புவித்த அப்புறம் – பெத்ல-குற:65 852/3
விண்டு பல ஞானங்கள் புரிவாள் அதின் விஸ்தரிப்பையும் சொல்லித்தருவாள் சுதன்
மேலே மயல்கொண்டு திரிவாள் ரண்டு விழி கொண்டு என்னொடு தினம் பொருவாள் அந்த – பெத்ல-குற:66 856/3,4

மேல்

சுதன்-தனை (1)

அலகை சுதன்-தனை கொடுபோய் ஏற்றும் மலை அம்மே ஆரண மா மலை அதற்கு பெயர் இலை காண் அம்மே – பெத்ல-குற:25 374/2

மேல்

சுதனவர் (2)

பேதித்து இயல் சாதித்தவர் அருள் பேசு உத்தமர் ஏக சுதனவர் பேரில் கன சீரில் பரவிய பெத்தலை குறமே – பெத்ல-குற:2 12/2
சரணு சுதனவர் சரணு அருபியர் – பெத்ல-குற:3 19/2

மேல்

சுதனார் (5)

பண்டபரன் சுதனார் இணை மேவி – பெத்ல-குற:15 131/16
பற்பல பாடான மலை கொல்கதாத்தான் அம்மே பரன் சுதனார் பாடுபட்டு மரித்த மலை அம்மே – பெத்ல-குற:25 375/3
எந்தை பரன் சுதனார் வனத்துக்குள் இருந்து உதவ பிரசங்கம் இயம்புகில் – பெத்ல-குற:51 679/1
ஆத்தும பாடு படும் தினத்தன்றைக்கு ஆதி பரன் சுதனார் தயவாகவே – பெத்ல-குற:51 680/1
வள்ளல் பரன் சுதனார் சொன்ன செய்தியை மாத்திரம் புத்தியில் வைத்துக்கொண்டே நாமும் – பெத்ல-குற:53 711/3

மேல்

சுதனால் (1)

மெய் என நீ எண்ணினது சித்தியாம் அம்மே அருள் வேத சுதனால் உமக்கு முத்தியாம் அம்மே – பெத்ல-குற:35 495/3

மேல்

சுதனின் (1)

ஆதி பரன் சுதனின் சுவிசேடத்தின் ஆனந்த பாதையில் ஞானந்தமாக வர – பெத்ல-குற:47 638/4

மேல்

சுதனுக்கு (1)

தோத்திர செபமாலை தொட்ட கையை காட்டாய் தேவ சுதனுக்கு அமுது அளித்த கையை காட்டாய் – பெத்ல-குற:37 506/1

மேல்

சுதனே (1)

தட்டாமல் தமிழ் உரை இமிழ் உரை தப்பாமல் சொலவிடு நிலவிடு தற்கா ஐ_கடவுளர் அடவுளர் சாயலில் சுதனே – பெத்ல-குற:2 14/4

மேல்

சுதனை (2)

தேவ சுதனை வேண்டடா மிகும் – பெத்ல-குற:55 722/1
திரும்பித்திரும்பி செவியடா ஏசு திரு சுதனை கைக்குவியடா – பெத்ல-குற:55 742/1

மேல்

சுந்தர (2)

சொன்ன குறியதினாலே பெற்ற சுந்தர மோதிரம் இந்தா பார் அம்மே – பெத்ல-குற:34 486/4
சுந்தர மாது நலாள் இங்கே எங்கும் வந்தனளோ சொல்லுங்கோ – பெத்ல-குற:58 775/2

மேல்

சுந்தரம் (8)

வேதந்தனையதுமே தந்தனையதும் வீசும் திறம் உளர் மா சுந்தரம் உளர் வீறின் புரவலர் பேறின் புரவலர் மேவி புகழ்வார் – பெத்ல-குற:2 16/4
சுந்தரம் சேர் யூதேயா வனாந்தரத்திலே அன்று தூயவன் இஸ்நாதக யொவான் திரத்திலே – பெத்ல-குற:8 55/1
சுந்தரம் விளங்கிய கபங்கள் சொலொணாத – பெத்ல-குற:22 227/2
சுந்தரம் சேர் ஞான மணவாளன் எனக்கு அளித்த துய்ய பெத்தலேகம் எங்கள் சொந்த மலை அம்மே – பெத்ல-குற:25 376/4
சுந்தரம் சேர் தீட்சையினால் யொவான் குருவாச்சு அம்மே துய்யவனும் யொவான்-தனக்கு சுவாமி அல்லோ அம்மே – பெத்ல-குற:28 403/4
சுந்தரம் சேர் வானாட்டு கிறிஸ்தவர்கள் அம்மே சொன்ன மொழி தவறாத கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 416/2
சுந்தரம் இலங்கும் பெத்லேம் தொல் நகர்க்கு அரசாய் வந்த – பெத்ல-குற:43 588/2
தொந்தந்திகு தொந்தந்தன தந்தந்தன என்றும் சொலி சுந்தரம் கொள அனந்தன் பயிலின் பொன் கணியும் கொண்டுமே – பெத்ல-குற:44 603/5

மேல்

சுந்தரி-தனை (1)

துக்க மெய் விசுவாசத்தின் சுந்தரி-தனை காணாதால் – பெத்ல-குற:66 853/1

மேல்

சுப்பி (1)

தொலையாத கவலையினாலே காட்டில் சுப்பி ஒடிக்க வந்த கைம்பெண்டீண்டை – பெத்ல-குற:34 488/2

மேல்

சுப (10)

திரு நன் மறை-தனில் உரிய சுப மொழி – பெத்ல-குற:3 20/1
திரியேக நாதனுக்கு சுப மங்களம் – பெத்ல-குற:5 35/2
அதிக சுப பரம சபையின் எருசலை மின் வந்தாள் சம்பிரமமாக – பெத்ல-குற:15 128/1
அதிக சுப பரம சபையின் எருசலை மின் வந்தாள் – பெத்ல-குற:15 128/2
அதிக சுப பரம சபையின் எருசலை மின் வந்தாள் அறிவின் உயரும் மறை முறை மனது உவந்தாள் – பெத்ல-குற:15 129/1
நித்திய மனத்தினில் நினைத்து உருகி வைத்த அனுசாரி நிச்சய சுப
மங்களமாக மகிழ்ந்து உறவாடி – பெத்ல-குற:15 130/12,13
சஞ்சு_அறும் அஞ்சுகம் மஞ்சு எனும் சுப மேனி சர்ப்பத்தால் வந்த – பெத்ல-குற:15 131/7
தோத்திர ஞான சுப செபமாலையான் – பெத்ல-குற:22 273/2
சுப முகமனா யாரையும் முத்திசெய் – பெத்ல-குற:70 897/3
நேரான நீதி மன்னர் நெறியோர் வாழி நித்திய சுப சோபன நீடூழிதானே – பெத்ல-குற:72 955/4

மேல்

சுபங்கள் (1)

துன்பம் அகன்று இழிவும் தவறுண்டு சுபங்கள் துலங்கிடவே – பெத்ல-குற:22 341/2

மேல்

சுபத்தால் (1)

சுரர்களின் நெஞ்சம் பணிந்து எச்சம் படைத்து அங்கம் சுபத்தால் ஐயும் – பெத்ல-குற:22 297/1

மேல்

சுபத்தி (1)

நிதி உத்தம சுபத்தி கதி உற்பன விதத்தை சாற்றவோ வரும் நிருப தவிது இசரேல் மரபு பரமவஸ்தை ஏற்றவோ – பெத்ல-குற:16 135/2

மேல்

சுமந்தவன் (1)

சிலுவை சுமந்தவன் பேச மறுகி அழும் வித்தை தெரியும் என்றும் – பெத்ல-குற:33 479/2

மேல்

சுமந்துகொண்டு (1)

சுயமாய் ஓர் முந்திரிகை குலையதனை இரு பேர் தோள் மேலே சுமந்துகொண்டு போன தலம் அம்மே – பெத்ல-குற:27 392/4

மேல்

சுமப்பாள் (1)

துலையாத சாமி என்று விலைபோட்டு வாங்கிவைத்து தூர துலை கல்லைறை மண் வாரி சுமப்பாள்
மலையாமல் விக்கிரக சிலை எல்லாம் ரோமி செய்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 163/3,4

மேல்

சுமையும் (1)

செத்தவர்-தமையும் எழுப்பி வைத்தவர் சுமையும் நுகத்தடி சின்னது என்று ஆதி மனுடருக்கு இன்ன நன்று ஓதி – பெத்ல-குற:13 116/2

மேல்

சுயமாய் (2)

நயமாய் பிரகாசியாரை சுயமாய் சுவாமி என்று நால் திசையில் ரோமி நித்தம் போற்றவில்லையோ – பெத்ல-குற:17 162/1
சுயமாய் ஓர் முந்திரிகை குலையதனை இரு பேர் தோள் மேலே சுமந்துகொண்டு போன தலம் அம்மே – பெத்ல-குற:27 392/4

மேல்

சுர (1)

பின்னையும் பேரின்ப சுர தண்டனை என்றாய் தம்பிரானின் சிநேகத்து ஆவல்கொண்டனை என்றாய் – பெத்ல-குற:40 560/3

மேல்

சுரக்குதே (1)

வங்கார பட்சிகள் பறக்குதே எந்தன் வாயிலே நீர் ஊறி சுரக்குதே – பெத்ல-குற:55 736/2

மேல்

சுரகுரு (1)

தொக்கு நொடி இருபத்தேழானது சுரகுரு பதினொரு சமை தோற்றும் நாள் முந்நூற்று பதினைந்து ஏற்றம் ஏழிரு மணியுமாய் – பெத்ல-குற:21 195/6

மேல்

சுரர்க்கு (1)

எதிர்ப்பட்டு அற்புதத்தை சொல் சுரர்க்கு அச்சத்து இசைப்பட்டு – பெத்ல-குற:22 313/1

மேல்

சுரர்களின் (1)

சுரர்களின் நெஞ்சம் பணிந்து எச்சம் படைத்து அங்கம் சுபத்தால் ஐயும் – பெத்ல-குற:22 297/1

மேல்

சுரர்களுக்கு (1)

விஞ்சை சுரர்களுக்கு மிஞ்சி தலைமைபெற்ற வரத்தினாள் கர்மேல் விந்தை பருவதம் போல் அந்தத்து அபரஞ்சி பொன் சிரத்தினாள் – பெத்ல-குற:16 136/1

மேல்

சுரரும் (1)

விண்ணுலகிடையே மின்னிய சுரரும்
மண்ணுலகிடையே மன்னிய நரரும் – பெத்ல-குற:22 210/1,2

மேல்

சுரலோகத்து (1)

சுரலோகத்து உற்ற சித்தத்து அடையாளம் உணர்ந்து அறிஞர் துதிக்க வந்த – பெத்ல-குற:27 390/3

மேல்

சுரி (2)

சுரி குழல் எஸ்தர் என்பாள் பெரிய அகாசுவேராம் துலுக்கன் பெண்டு ஆனவட்கு மெலுக்கு ஏது உண்டு – பெத்ல-குற:17 151/2
சுரி குழல் முடித்து தொங்கலும் தூக்கி – பெத்ல-குற:22 331/1

மேல்

சுருக்கடா (1)

சிட்டு கறி எல்லாம் சுருக்கடா வெள்ளை செங்கால் நாரை கறி பெருக்கடா – பெத்ல-குற:55 740/1

மேல்

சுருக்கி (1)

தொடர்ந்த கண்ணியை சுருக்கி குத்தினால் சொன்னது எல்லாம் படுமே குழுவா – பெத்ல-குற:54 717/3

மேல்

சுருதி (1)

தொந்தத்துடன் நீலக்கல் தந்தத்தினில் பதித்த மேனியாள் தேவ சுருதி மறை அனைத்தும் மருவி கற்ற அவதானியாள் பந்தத்து – பெத்ல-குற:16 139/3

மேல்

சுருப (1)

கோப்பு பூசை வலை மீட்பு தரிக்க தல கொடிய வலை சுருப வலை சன்னியாசி வலை – பெத்ல-குற:42 587/3

மேல்

சுரூப (1)

சுட்டி ஒளி விட்டிடில் அது எட்டில் ஒரு மட்ட திரு சோதி சுரூப நுதல் – பெத்ல-குற:15 131/10

மேல்

சுரூபத்தை (1)

ஒட்டக கல்லணைக்குள் சுரூபத்தை ஒளித்தவள் வித்தையும் அறிவேன் புள்ளி – பெத்ல-குற:33 477/1

மேல்

சுவாமி (7)

பராக்கு சுவாமி பராக்கு – பெத்ல-குற:11 94/5
பராக்கு சுவாமி பராக்கு – பெத்ல-குற:11 95/5
நயமாய் பிரகாசியாரை சுயமாய் சுவாமி என்று நால் திசையில் ரோமி நித்தம் போற்றவில்லையோ – பெத்ல-குற:17 162/1
மயமா அமுதநாதரையுமே சுவாமி என்பாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 162/4
சுந்தரம் சேர் தீட்சையினால் யொவான் குருவாச்சு அம்மே துய்யவனும் யொவான்-தனக்கு சுவாமி அல்லோ அம்மே – பெத்ல-குற:28 403/4
தாகமாக ஏசுநாத சுவாமி அன்று தந்த வலையை கொண்டு எந்தனிடத்து உள்ளாக்கும் – பெத்ல-குற:42 585/4
எட்டு திசையும் கொள்ளாதவன் மைந்தன் எம் எசு சுவாமி எழுந்தருளி தர்மப்பெட்டிக்கு – பெத்ல-குற:52 690/1

மேல்

சுவாமியே (1)

தன்னிகர்_இல்லாத யேசு சுவாமியே கிறிஸ்து நாதா – பெத்ல-குற:12 99/3

மேல்

சுவார்சு (1)

தஞ்சையினில் புதிதாய் வந்திருந்த போது சத்திய சுவார்சு ஐயர் தந்த உரையை சார்ந்து – பெத்ல-குற:1 7/1

மேல்

சுவாலையில் (1)

வெட்டி அக்கினி சுவாலையில் இட்டு கொடும் வேதனை வாதைகளை மேல் வரவிட்டு – பெத்ல-குற:8 60/1

மேல்

சுவிசேட (29)

மன் இலங்கு சுவிசேட குறவஞ்சி நாடகத்தை மகிழ்ந்து கூற – பெத்ல-குற:1 1/3
சுவிசேட சபையாரை ஒருவனையே தெய்வம் என தொழுதுள்ளோரை – பெத்ல-குற:1 10/1
ஏதம்_இல்லா பெத்தலேகர் ஏசு ஞான சுவிசேட
போதகர் வருகை-தன்னை புகழ்ந்து கட்டியம் கூற – பெத்ல-குற:7 48/3,4
ஆன தினையே அருந்தி சுவிசேட மறை – பெத்ல-குற:7 50/2
நேத்திர இம்மானுவேல் வந்தான் சுவிசேட வேத – பெத்ல-குற:7 52/2
தீட்சை கொடுத்து ஆத்துமத்தை சுத்திகரித்து சுவிசேட நெறிகள் எல்லாம் மெத்த விரித்து – பெத்ல-குற:8 58/1
துதி மனுவேலுட காதல் மிகுந்தாள் சுவிசேட சபை முன் மேவி எழுந்தாள் – பெத்ல-குற:15 129/2
ஓது சுவிசேட பிரகாசம் ஒளி அனந்த – பெத்ல-குற:15 130/4
மங்காத சுவிசேட நித்தம் வழுத்திய பின் – பெத்ல-குற:15 132/4
தரு ஞானமொடு பேசி சுவிசேட சபையில் உற்ற தையலே உன் – பெத்ல-குற:25 365/3
ஞானம் மிகும் சுவிசேட கிறிஸ்தவரின் மகிமை சற்று நவிலுவாயே – பெத்ல-குற:29 413/4
பேர் மிகுத்த சத்திய மறை கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 414/4
பேதம் இல்லா சினேகிதத்தின் கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 415/4
அந்தர பரமண்டலத்தின் கிறிஸ்தவர்கள் அம்மே அருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 416/4
பெத்தரிக்கம் பேசாத கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 417/4
பேசரிய வேதாந்த கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 418/4
பின் புறணி பேசாத கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 419/4
பிக்கானது ஒன்றும் இலா கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 420/4
பிள்ளைகளுக்கு அறிவு உணர்த்தும் கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 421/4
அல்லல் அற்று வாழ்ந்திருக்கும் கிறிஸ்தவர்கள் அம்மே அருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 422/4
பின் திரும்பி முகம் நோக்கா கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 423/4
எதிராளிக்கு அதிரான கிறிஸ்தவர்கள் அம்மே எழிலான சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 424/4
பேய்களை சங்கரித்தவரின் கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 425/4
சொன்னாலே சொல்லுங்கோ என்று சொல்லி விடுத்த அன்றுதொட்டு காதல் கொண்டாய் அல்லோ சுவிசேட பெண்ணே – பெத்ல-குற:40 563/4
வித்தகம் சேர் சுவிசேட ஞான வலை கண்ணிகளும் வெகுவாய் கொண்டு – பெத்ல-குற:41 572/3
சகலர்க்கும் அருளிட்ட கிருபைக்கு முடிவற்ற சாமிக்கு உகந்த சுவிசேட சபை நடுவே – பெத்ல-குற:41 575/3
விழித்துக்கொள்ளுது ஐயே பெத்தலேம் பதி வித்தகனின் சுவிசேட வலைக்குள்ளே – பெத்ல-குற:56 748/1
நாவாயின் நோவாவே எலாருட நா வாயின் நோவாவே சுவிசேட
ஆவாய மத்தேயே அழும் எனது ஆவாய் அ மத்தேயே – பெத்ல-குற:58 791/1,2
மெய்க்கியானமாகிய ஞான வலை என்ற வேத சுவிசேட மார்க்கத்திலே வந்து – பெத்ல-குற:60 803/4

மேல்

சுவிசேடத்தின் (2)

தண் தமிழ் சேர் சுவிசேடத்தின் பாதையில் – பெத்ல-குற:47 635/3
ஆதி பரன் சுதனின் சுவிசேடத்தின் ஆனந்த பாதையில் ஞானந்தமாக வர – பெத்ல-குற:47 638/4

மேல்

சுவிசேடத்தை (3)

மெய் புகல் சுவிசேடத்தை விட்டு விழுந்தாள் பல வேடிக்கை கதைகள் எல்லாம் நாடி பகர்வாள் – பெத்ல-குற:40 570/3
சத்திய வேதத்துளோர் என்று சொல்லியும் சாமி அருள் சுவிசேடத்தை சற்றெனும் – பெத்ல-குற:43 598/1
சீலத்து எல்லாத்தையும் முடியடா சுவிசேடத்தை வாசித்து படியடா – பெத்ல-குற:55 744/2

மேல்

சுவிசேடத்தையும் (1)

அஞ்ஞானம்-தன்னை அகற்றும் சம்பாஷணை ஆனத்தையும் சுவிசேடத்தையும் தாறேன் – பெத்ல-குற:57 764/2

மேல்

சுவிசேடத்தையே (1)

வேத சுவிசேடத்தையே கைக்குள்ளே வைத்து – பெத்ல-குற:41 579/3

மேல்

சுவிசேடம் (6)

பறவைகளே நரர் சாதி பிணிக்கும் வலை சுவிசேடம் பழைய வேத – பெத்ல-குற:1 6/3
வள்ள சுவிசேடம் அற்றோன் மாயலோக வாழ்வில் உற்றோன் – பெத்ல-குற:10 93/2
கோத்திர வளம் நாளாகமம் காட்டும் சுவிசேடம் குறையும் காட்டும் – பெத்ல-குற:26 379/3
இசைவான சுவிசேடம் அசையாத புஸ்தகம் பார் அம்மே நன்றாய் ஈராறு அப்போஸ்தலமார் மாறாத வாக்கியம் சேர் அம்மே – பெத்ல-குற:36 500/3
நாவதினால் ஏக பரனார் தயவதாய் அருளும் ஞான சுவிசேடம் என்ற தேவ வசனத்தை கொண்டு – பெத்ல-குற:61 810/2
சுத்த சுவிசேடம் எனும் பொத்தகத்தை படிக்கையில் – பெத்ல-குற:66 855/2

மேல்

சுவிசேடனை (1)

திருமறை சுவிசேடனை ஏடனை திட வரப்பிரசாதனை நீதனை திவிய பெத்தலைநாயனை ஆயனை செகநாயகனை – பெத்ல-குற:2 11/1

மேல்

சுழிக்கும் (1)

சின்ன பதிதர் மனம் குன்ன சுழிக்கும் உந்தி சுழியினாள் எஸ்ப்போன் தேச பதராபீமின் வாசல் குளம் வளைந்த விழியினாள் – பெத்ல-குற:16 138/4

மேல்

சுழியினாள் (1)

சின்ன பதிதர் மனம் குன்ன சுழிக்கும் உந்தி சுழியினாள் எஸ்ப்போன் தேச பதராபீமின் வாசல் குளம் வளைந்த விழியினாள் – பெத்ல-குற:16 138/4

மேல்

சுற்ற (2)

கற்புக்கு ஒற்றி பற்று சுற்ற கட்டற்று அற்பத்து உற்று செத்து – பெத்ல-குற:22 278/1
மோசமாய் விரியன் சுற்ற நாசமாய் உதறிப்போட்டு – பெத்ல-குற:68 876/2

மேல்

சுற்றடா (1)

சீச்சு கைப்பட்டதை சுற்றடா நம்மள் சின்ன சிங்கி பெரும் முத்தடா – பெத்ல-குற:55 735/2

மேல்

சுற்றப்போனாளோ (1)

சீப்பிட்டு சீப்பிட்டு சேர்த்த கொண்டை கொண்டலாத்தியே எந்த தேசத்திலே சுற்றப்போனாளோ நான் கொண்ட லாத்தியே – பெத்ல-குற:59 795/3

மேல்

சுற்றார் (1)

சுற்றார் கோப்பக்கத்து ஏர் தோற்ற – பெத்ல-குற:22 286/1

மேல்

சுற்றி (11)

தோணும்படி பரவோன் செய்த பாதகம் தென்றலே மிக சுற்றி அவனை கடலில் தணித்ததே தென்றலே – பெத்ல-குற:19 177/3
சக்கர ஓட்ட கால வரிசை தபனனை சுற்றி சாமன் எண்பத்தேழு நாள் மணி இருபத்துமூன்றே வினாடிக்கு – பெத்ல-குற:21 195/1
துத்தியம் என்றும் சுற்றி வளைத்தும் – பெத்ல-குற:22 252/2
சுற்றி வளர் இராச குல நேச குலம் அம்மே சொல்லரிய வண்மை உள்ள தெய்வ குலம் அம்மே – பெத்ல-குற:28 400/3
நாசரேத்து பற்றும் சாமாரியா பற்றும் நல் தமஸ்கு தீரு சீதோன் பற்றும் சுற்றி – பெத்ல-குற:50 669/4
சேர்த்த பெத்சாயிதா நாயீன் பட்டணமும் சேபுல் தீபேரியா சீர் அணியும் சுற்றி – பெத்ல-குற:50 670/4
பந்தமதாகிய ரோமாபுரி என்ற பாபிலோனை சுற்றி கீழ்நரகத்துக்குள் – பெத்ல-குற:50 672/4
கோலத்தொடு தொட ஆர் தொட்டது என்றுமே கொற்றவன் சுற்றி திரும்பி பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 689/4
பேசாரு ஐயே பொறுபொறு பறவைகள் பெத்தலேகேம் எங்கும் சுற்றி படுக்கையில் – பெத்ல-குற:57 762/1
விம்மிய யூதர்கள் சுற்றி வளைந்து அவர் மேலே கரங்களை போட்டு பிணிக்கையில் – பெத்ல-குற:63 832/2
கண்ணை சுற்றி கருங்கோடு ஒன்று போட்ட இவ் – பெத்ல-குற:71 918/1

மேல்

சுற்றிச்சுற்றி (2)

சூத்திரமாக அப்போஸ்தல பட்சிகள் சுற்றிச்சுற்றி தின்று பற்றிப்பற்றி கொத்தி – பெத்ல-குற:51 680/4
பன்னும் மணவறை பந்தியிலே வந்து பாத்திபன் நின்று சுற்றிச்சுற்றி பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 692/4

மேல்

சுற்றித்திரிந்து (1)

சிங்கம் போல கெற்சித்து எங்கும் சுற்றித்திரிந்து தீமை செய தொடுக்கிறாய் கன – பெத்ல-குற:20 189/1

மேல்

சுற்றியே (1)

ஏர் உளதாகிய கப்பர்நகூம் பட்டணம் மேலக்குளத்து கரை பற்றும் சுற்றியே – பெத்ல-குற:50 671/4

மேல்

சுற்று (4)

உத்தரிக்க தலம் என்ற சுற்று வழி சள்ளை குறி அம்மே ஊரார் உடமையை பறிப்பதற்கு இடம்வைத்த கள்ள குறி அம்மே – பெத்ல-குற:36 503/2
சுற்று மண்டலத்தாய் சோதி மண்டலத்தாய் – பெத்ல-குற:39 531/2
மேசியாவின் அன்பினால் நீ காய்ச்சல்கொண்டது மற்ற வித்தை எல்லாம் நீ படித்த சுற்று அறியேனோ – பெத்ல-குற:40 559/4
திட்டமதாய் கட்டு வலையடா சுற்று தேசம் எங்கும் ஓடி கலையடா – பெத்ல-குற:55 727/1

மேல்

சுற்றும் (3)

திசை பல சந்தம் பயன் சுற்றும் புகழ் புங்கம் செயற்று ஆலியும் – பெத்ல-குற:22 298/1
சுற்றும் பிசாசுக்கு சத்துரு நான் என்றும் தோற்றும் பல மத கூற்றனுமாம் என்றும் – பெத்ல-குற:44 605/1
சுற்றும் உறாஞ்சுற பட்சியை நன்றாக அறிவான் பட்சி தோன்றும் முன் ஆபிரகாம் பெரும் கல்லை விட்டெறிவான் – பெத்ல-குற:62 817/2

மேல்

சுற்றுளார்கள் (1)

போதனைக்கு எருசலையும் யூதேயாவும் அப்புறத்து நதி சுற்றுளார்கள் யாவும் – பெத்ல-குற:8 56/1

மேல்

சுறுக்கிலே (1)

புத்தியாய் சுறுக்கிலே தவத்திலே முயற்சிசெய்வாய் அம்மே நரர் போற்றுதற்கு அரிய வேத சாஸ்திரத்தையும் சற்று பார் அம்மே – பெத்ல-குற:36 502/3

மேல்

சுறுசுறுப்போடு (1)

சுறுசுறுப்போடு எனை விருப்பமொடு திருப்ப மிக வருத்தும் – பெத்ல-குற:66 855/3

மேல்

சுன்னத்து (1)

எட்டு எனும் தினமே சுன்னத்து இட்டனன் இனமே ஆலையத்து எண் அஞ்சில் புகுந்தான் சிமியோன் உள் நெஞ்சில் தொகுந்தான் – பெத்ல-குற:13 115/1

மேல்