சோ – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சோகத்தோடு 1
சோகம் 1
சோடையாய் 1
சோணாட்டில் 4
சோணாட்டு 2
சோதி 47
சோதித்தால் 1
சோதித்து 2
சோதிய 1
சோதியன் 1
சோதியாய் 3
சோதியார் 2
சோதியார்-தம் 1
சோதியாலும் 1
சோதியில் 1
சோதியின் 1
சோதியினுள் 1
சோதியை 2
சோபன 1
சோபனம் 2
சோபான 2
சோபானத்தால் 1
சோபானம் 1
சோமாசிமாறர் 1
சோர் 3
சோர்கின்ற 1
சோர்ந்தான் 1
சோர்ந்திலர் 1
சோர்ந்து 4
சோர்வாள் 1
சோர 6
சோரவும் 1
சோரா 1
சோரி 1
சோரும் 3
சோலை 84
சோலை-தொறும் 1
சோலை-தோறும் 1
சோலைகள் 4
சோலைகளின் 2
சோலைகளும் 1
சோலைய 1
சோலையில் 1
சோலையிலும் 1
சோலையின் 3
சோலையும் 1
சோழர் 11
சோழர்-தம் 2
சோழர்-தாம் 1
சோழன் 5
சோழனார் 1
சோழனார்-தம் 1
சோற்று 5
சோற்றுத்துறை 3
சோறு 16
சோறும் 2

சோகத்தோடு (1)

நீடிய சோகத்தோடு நிறை மலர் பாதம் பற்றி – 3.இலை:3 173/3

மேல்


சோகம் (1)

சித்த சோகம் தெரியாமே வந்து திரு தாள் இறைஞ்சினார் – 13.வெள்ளானை:1 7/4

மேல்


சோடையாய் (1)

பவனமாய் சோடையாய் எனும் திருப்பதிகம் முன் பாடினாரே – 6.வம்பறா:1 518/4

மேல்


சோணாட்டில் (4)

தண் தரள வெண் கவிகை தார் வளவர் சோணாட்டில்
வண்டு அறை பூம் சோலை வயல் மருத தண் பணை சூழ்ந்து – 3.இலை:2 1/2,3
துலையில் புறவின் நிறை அளித்த சோழர் உரிமை சோணாட்டில்
அலையில் தரளம் அகிலொடு சந்து அணி நீர் பொன்னி மணி கொழிக்கும் – 12.மன்னிய:4 1/1,2
அந்தம்_இல் சீர் சோணாட்டில் அகல் நாடு-தொறும் அணியார் – 12.மன்னிய:4 14/3
திரு தகும் யாழில் இட்டு பரவுவார் செழும் சோணாட்டில்
விருப்புறு தானம் எல்லாம் பணிந்து போய் விளங்கும் கூடல் – 12.மன்னிய:5 1/2,3

மேல்


சோணாட்டு (2)

மாலை வெண்குடை வளவர் சோணாட்டு வண் புகலி – 6.வம்பறா:1 685/1
நலம் பெருகும் சோணாட்டு நாட்டியத்தான் குடி வேளாண் – 10.கடல்:5 1/1

மேல்


சோதி (47)

சோதி வெண் கயிலை தாழ்வரை முழையில் துதிக்கையோன் ஊர்தியை கண்டு – 1.திருமலை:1 8/2
சோதி வானவர் தோத்திர ஓசையும் – 1.திருமலை:3 2/2
சோதி மா மணி நீள் சுடர் முன்றில் சூழ் – 1.திருமலை:4 1/3
சோதி மணி மார்பின் அசை நூலினொடு தோளின் – 1.திருமலை:5 30/2
சோதி மணி வேதிகைகள் தூ நறும் சாந்து அணி நீவி – 1.திருமலை:5 121/1
சோதி ஆய் எழும் சோதி உள் சோதிய – 1.திருமலை:5 193/3
சோதி ஆய் எழும் சோதி உள் சோதிய – 1.திருமலை:5 193/3
கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி – 2.தில்லை:1 2/1
மால் அயற்கு அரிய நாதன் வடிவு ஒரு சோதி ஆக – 2.தில்லை:4 25/1
சோதி வெண் கொடிகள் ஆடும் சுடர் நெடு மறுகில் போகி – 2.தில்லை:5 8/3
மரகதம் ஒளி கொள் நீல மணிகளும் இமைக்கும் சோதி
பொர இரு சுடருக்கு அஞ்சி போயின புடைகள்-தோறும் – 3.இலை:3 130/2,3
துடி இடை பாகாம் ஆன தூய நல் சோதி போற்றி – 3.இலை:6 20/3
சோதி சூழும் மணி மௌலி சோழர் பொன்னி திரு நாட்டு – 4.மும்மை:2 1/3
தூண்டு சோதி ஒன்று எழுந்து இருள் துரக்கும் சுரர்கள் வந்து சூழ் உருத்திர சோலை – 4.மும்மை:5 84/1
விரவு மரகத சோதி வேதி திண்ணை விளிம்பின் ஒளி துளும்பு முறைப்படி மீது ஏறும் – 4.மும்மை:5 97/2
சோதி நீள் மணி தூபமும் தீபமும் – 4.மும்மை:5 104/2
இலகு மணி மதில் சோதி எதிர்கொள் திருவதிகையினில் – 5.திருநின்ற:1 62/3
நீடிய மணியின் சோதி நிறை திரு முன்றின் மாடும் – 5.திருநின்ற:1 170/1
பிரியாத பெரிய திரு தாண்டக செந்தமிழ் பாடி பிறங்கு சோதி
விரியா நின்று எ உலகும் விளங்கிய பொன் அம்பலத்து மேவி ஆடல் – 5.திருநின்ற:1 175/2,3
தூண்டா விளக்கு அன்ன சோதி முன் நின்று துதித்து உருகி – 5.திருநின்ற:1 223/2
சோலை மறைக்காட்டு அமர்ந்து அருளும் சோதி அருள் பெற்று அகன்று போய் – 5.திருநின்ற:1 291/1
மலர்ந்த சோதி திருச்சிராப்பள்ளி மலையும் கற்குடியும் – 5.திருநின்ற:1 302/3
சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும் சுடர் விட்டு எழுந்தது அது நோக்கி – 5.திருநின்ற:7 14/1
மன்னர் பாத நீழல் மிகும் வளர் பொன் சோதி மன்னினார் – 5.திருநின்ற:7 32/4
தூ மருவு சோதி விரிய துகள் அடக்கி – 6.வம்பறா:1 29/3
சோதி அணி மணி சதங்கை தொடுத்த வடம் புடைசூழ்ந்த – 6.வம்பறா:1 51/2
சோதி மணி மனை முன்றில் தொடர்ந்து அழுது பின் சென்றார் – 6.வம்பறா:1 56/4
சோதி மா மணி வாயிலின் புறம் சென்று சோபன ஆக்கமும் சொல்லி – 6.வம்பறா:1 155/3
சோதி முத்தின் சிவிகை சூழ் வந்து பார் – 6.வம்பறா:1 216/1
தூ நறும் பூரணகும்பம் சோதி மணி விளக்கினொடு தூபம் ஏந்தும் – 6.வம்பறா:1 314/2
பல்லிய நாதம் பொங்க படர் திருநீற்றின் சோதி
நல் ஒளி வட்டம் ஆகி நண்ணி மேல் வருவது என்ன – 6.வம்பறா:1 743/1,2
இமைத்த சோதி அடங்கி பின் ஈதலால் – 6.வம்பறா:1 829/3
மேதினி புனிதம் ஆக வெண் நீற்றின் விரிந்த சோதி
மாதிரம் தூய்மை செய்ய அமண் இருள் மாய்ந்தது அன்றே – 6.வம்பறா:1 858/3,4
தண் அளி விரிந்த சோதி வெள்ளத்தில் தகைவின் நீள – 6.வம்பறா:1 1098/3
கற்பகம் ஈன்ற செவ்வி காமரு பவள சோதி
பொன் திரள் வயிர பத்தி பூம் துணர் மலர்ந்த போலும் – 6.வம்பறா:1 1108/1,2
திருவடி மலர் மேல் பூத்த செழு நகை சோதி என்ன – 6.வம்பறா:1 1210/1
மேற்பட விரிந்த சோதி வெண் சுடர் எழுந்தது என்ன – 6.வம்பறா:1 1215/2
மாகம் ஆர் சோதி மல்க மன்னி வீற்றிருந்த வெள்ளை – 6.வம்பறா:1 1237/3
யாவரும் எம்-பால் சோதி இதன் உள் வந்து எய்தும் என்று – 6.வம்பறா:1 1246/3
கோயில் உள் பட மேல் ஓங்கும் கொள்கையால் பெருகும் சோதி
வாயிலை வகுத்து காட்ட மன்னு சீர் புகலி மன்னர் – 6.வம்பறா:1 1247/1,2
நாதன் எழில் வளர் சோதி நண்ணி அதன் உள் புகுவார் – 6.வம்பறா:1 1253/3
கொள்ள நீடிய சோதி குறி நிலை அ வழி கரப்ப – 6.வம்பறா:1 1254/2
இலகு சோதி பரம்பொருளை இறைஞ்சி முன் நின்று ஏத்துவார் – 6.வம்பறா:2 231/4
தூண்டு சோதி விளக்கு அனையார்-தம்-பால் கனவில் தோன்றினார் – 6.வம்பறா:2 237/4
சோதி மணி மாளிகையின்-கண் சுடரும் பசும்பொன் கால் அமளி – 7.வார்கொண்ட:4 71/1
தூண்டும் சோதி விளக்கு அனையார் அமைக்க துணைவர் சொல்லுதலும் – 7.வார்கொண்ட:4 72/2
தூ நலம் திகழ் சோதி வெள் ஆனையும் கொண்டு வன் தொண்டர்க்கு – 13.வெள்ளானை:1 32/2

மேல்


சோதித்தால் (1)

பனிப்பு இல் சிந்தையினில் உண்மை பான்மை சோதித்தால் என்ன – 1.திருமலை:3 22/2

மேல்


சோதித்து (2)

அண்ணலார்க்கு ஆம் பரிசு தாம் சோதித்து அமைப்பதற்கு – 3.இலை:3 147/3
முத்திரையே முதல் அனைத்தும் முறை தானம் சோதித்து
வைத்த துளை ஆராய்ச்சி வக்கரனை வழி போக்கி – 3.இலை:7 24/1,2

மேல்


சோதிய (1)

சோதி ஆய் எழும் சோதி உள் சோதிய
ஆதி மால் அயன் காணா அளவின – 1.திருமலை:5 193/3,4

மேல்


சோதியன் (1)

அலகு_இல் சோதியன் அம்பலத்து ஆடுவான் – 0.பாயிரம்:1 1/3

மேல்


சோதியாய் (3)

சோதியாய் உணர்வும் ஆகி தோன்றிய பொருளும் ஆகி – 2.தில்லை:1 1/2
தொழும்பனார் உரைத்த போதில் சோதியாய் எழுந்து தோன்ற – 2.தில்லை:4 24/3
ஊன்ற உள் எழும் சோதியாய் நின்றனன் – 6.வம்பறா:1 835/3

மேல்


சோதியார் (2)

பானல் குல மா மலரில் படர் சோதியார் முன் – 3.இலை:3 65/2
சோதியார் அறிதல் அன்றி துணிவது என் அவர் தாள் சூடி – 7.வார்கொண்ட:1 18/3

மேல்


சோதியார்-தம் (1)

தூய நீரால் சிறுத்தொண்டர் சோதியார்-தம் கழல் விளக்கி – 7.வார்கொண்ட:3 71/1

மேல்


சோதியாலும் (1)

ஐந்தும் ஆறு அடக்கி உள்ளார் அரும் பெரும் சோதியாலும்
எந்தையார் திருக்காளத்தி மலையினில் இரவு ஒன்று இல்லை – 3.இலை:3 131/3,4

மேல்


சோதியில் (1)

தூய மால் வரை சோதியில் மூழ்கி ஒன்று – 1.திருமலை:1 7/3

மேல்


சோதியின் (1)

ஈறு_இல் பெரும் சோதியின் உள் எல்லாரும் புக்கதன் பின் – 6.வம்பறா:1 1252/4

மேல்


சோதியினுள் (1)

மருவிய பிறவி நீங்க மன்னு சோதியினுள் புக்கார் – 6.வம்பறா:1 1249/4

மேல்


சோதியை (2)

செம்பொன் புற்றின் மாணிக்க செழும் சோதியை நேர் தொழும் சீலம் – 5.திருநின்ற:7 7/1
ஆதி சுடர் சோதியை அன்பின் அகத்துள் ஆக்கி – 6.வம்பறா:1 836/2

மேல்


சோபன (1)

சோதி மா மணி வாயிலின் புறம் சென்று சோபன ஆக்கமும் சொல்லி – 6.வம்பறா:1 155/3

மேல்


சோபனம் (2)

மற்று உமக்கு சோபனம் ஆகுவது என்று வாய் மொழிந்தார் – 3.இலை:5 27/4
கிளர் ஒளி செம் கனக மயம்-தான் ஆய் மாடு கீழ் நிலையோர் நீல சோபனம் பூண – 4.மும்மை:5 91/1

மேல்


சோபான (2)

நிரந்தரம் மிடைந்த விமான சோபான நீடு உயர் வழியினால் ஏறி – 1.திருமலை:1 9/3
சிமை அடையும் சோபான நிரையும் விண்ணும் தெரிவு_அரிய தூய்மையினால் அவற்றுள் சேர்ந்து – 4.மும்மை:5 96/2

மேல்


சோபானத்தால் (1)

தாழ்ந்து எழுந்து திரு மலையை தொழுது கொண்டே தடம் சிலாதலம் சோபானத்தால் ஏறி – 6.வம்பறா:1 1022/1

மேல்


சோபானம் (1)

பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறி – 3.இலை:3 103/2

மேல்


சோமாசிமாறர் (1)

சொல்லார் சீர் சோமாசிமாறர் திறம் சொல்லுவாம் – 6.வம்பறா:5 12/4

மேல்


சோர் (3)

சோர் தரு கண்ணீர் வார போய் வர துணிந்தார் ஆகி – 3.இலை:3 113/3
உளம் பதைத்து உற்று நோக்கி உதிரம் சோர் வடிவும் மேனி – 5.திருநின்ற:5 28/2
சோர் மழையின் விடு மதத்து சுடரும் நெடு மின் ஓடை – 8.பொய்:2 4/3

மேல்


சோர்கின்ற (1)

சொல் திறம் கேட்க வேண்டி சோர்கின்ற ஆவி தாங்கும் – 2.தில்லை:5 20/3

மேல்


சோர்ந்தான் (1)

ஒருவரும் இங்கு இருமருங்கும் இராது போம் என்று அமணரை பார்த்து உரைத்த அரசன் உணர்வு சோர்ந்தான் – 6.வம்பறா:1 716/4

மேல்


சோர்ந்திலர் (1)

நெஞ்சு சோரவும் பீலிகை சோர்ந்திலர் நின்றார் – 6.வம்பறா:1 788/4

மேல்


சோர்ந்து (4)

தங்கள் வாய் சோர்ந்து தாமே தனி வாதில் அழிந்தோம் ஆகில் – 6.வம்பறா:1 798/3
ஆவி சோர்ந்து அழிவார் அங்கு ஒரு மருங்கு மறைந்து அயர்ந்தார் – 6.வம்பறா:2 261/4
பை வளர் வாள் அரவு அணிந்தார் பாத மலர் நிழல் சோர்ந்து
மெய் வகைய வழி அன்பின் மீளாத நிலை பெற்றார் – 8.பொய்:3 8/3,4
சோர்ந்து வீழ்ந்து அரற்றும் தோகை மயில் என துளங்கி மண்ணில் – 10.கடல்:1 7/2

மேல்


சோர்வாள் (1)

தன் ஆவி நீங்கும் அவன் தன்மை கண்டு சாயல் இளம் கன்னி நிலை தளர்ந்து சோர்வாள் – 6.வம்பறா:1 473/4

மேல்


சோர (6)

நிறைத்த செம் குருதி சோர வீழ்கின்றார் நீண்ட கையால் – 2.தில்லை:5 16/3
கொந்து அலர் பள்ளி தாமம் குஞ்சி நின்று அலைந்து சோர
பைம் தழை அலங்கல் மார்பர் நிலத்திடை பதைத்து வீழ்ந்தார் – 3.இலை:3 170/3,4
அல்லல் உற்று அழுங்கி சோர அங்கையில் தீண்டிற்று அன்றே – 5.திருநின்ற:5 24/4
துன்றிய குருதி சோர தொடர் குடர் சொரிந்து உள் ஆவி – 6.வம்பறா:2 403/2
வார்ந்து இழி குருதி சோர மலர் கரும் குழலும் சோர – 10.கடல்:1 7/1
வார்ந்து இழி குருதி சோர மலர் கரும் குழலும் சோர
சோர்ந்து வீழ்ந்து அரற்றும் தோகை மயில் என துளங்கி மண்ணில் – 10.கடல்:1 7/1,2

மேல்


சோரவும் (1)

நெஞ்சு சோரவும் பீலிகை சோர்ந்திலர் நின்றார் – 6.வம்பறா:1 788/4

மேல்


சோரா (1)

பெரு முகிலின் குலங்கள் புடை பெயர்வு ஒழிய புனல் சோரா
இரு விசும்பினிடை முழங்கா எழு கடலும் இடை துளும்பா – 3.இலை:7 35/3,4

மேல்


சோரி (1)

கல்லின் புறம் தேய்ந்த முழங்கை கலுழ்ந்து சோரி
செல்லும் பரப்பு எங்கணும் என்பு திறந்து முளை – 4.மும்மை:1 21/1,2

மேல்


சோரும் (3)

வெம்பிடும் அலறும் சோரும் மெய் நடுக்குற்று வீழும் – 1.திருமலை:3 23/4
அலறு பேர் ஆவை நோக்கி ஆருயிர் பதைத்து சோரும்
நில மிசை கன்றை நோக்கி நெடிது உயிர்த்து இரங்கி நிற்கும் – 1.திருமலை:3 25/1,2
தன் இளம் கன்று காணா தாய் முகம் கண்டு சோரும்
அ நிலை அரசன் உற்ற துயரம் ஓர் அளவிற்று அன்று-ஆல் – 1.திருமலை:3 33/3,4

மேல்


சோலை (84)

சோலை வாய் வண்டு இரைத்து எழு சும்மையும் – 1.திருமலை:2 18/2
கொங்கு அலர் சோலை மூதூர் குறுகினார் எதிரே வந்து – 1.திருமலை:5 10/3
நெருங்கிய பீலி சோலை நீல நீர் தரங்கத்தாலும் – 1.திருமலை:5 22/3
அலர் கொண்ட நறும் சோலை திரு துறையூர் அமர்ந்து அருளும் – 1.திருமலை:5 80/2
வரி வளர் பூம் சோலை சூழ் மடத்தின்-கண் வன் தொண்டர் – 1.திருமலை:5 84/1
தேன் ஆர்க்கும் மலர் சோலை திரு புன்கூர் நம்பர்-பால் – 1.திருமலை:5 115/1
மாது உடன் கூட வைகி மாளிகை மருங்கு சோலை
போது அலர் வாவி மாடு செய் குன்றின் புடை ஓர் தெற்றி – 1.திருமலை:5 183/1,2
நனை மலர் சோலை வாவி நண்ணி தம் உண்மை காப்பார் – 2.தில்லை:2 37/3
வண்டு அறை பூம் சோலை வயல் மருத தண் பணை சூழ்ந்து – 3.இலை:2 1/3
பூ அலர் வாவி சோலை சூழ்ந்த பொத்தப்பி நாடு – 3.இலை:3 1/4
செம் கண் ஏறு உடையார் வைகும் திருமலை சாரல் சோலை – 3.இலை:3 95/4
அளி மிடை கரை சூழ் சோலை அலர்கள் கொண்டு அணைந்த ஆற்றின் – 3.இலை:3 100/1
செழு மலர் சோலை வேலி திருப்பனந்தாளில் சேர்ந்தார் – 3.இலை:4 25/4
மஞ்சு ஆலும் மலர் சோலை கஞ்சாற்றின் மருங்கு அணைய – 3.இலை:5 20/4
மை வைத்த சோலை மலயம் தர வந்த மந்த – 4.மும்மை:1 3/2
போது சூழும் தடம் சோலை பொய்கை சூழும் பூம்புகலூர் – 4.மும்மை:2 1/4
தண்ணென் சோலை எம்மருங்கும் சாரும் மட மென் சாரிகையின் – 4.மும்மை:2 3/3
தேன் அளிப்பன நறு மலர் செறி செழும் சோலை
ஆன் அளிப்பன அஞ்சு உகந்து ஆடுவார்க்கு அ ஊர் – 4.மும்மை:3 2/2,3
புனல் மழையோ மது மழையோ பொழிவு ஒழியா பூம் சோலை – 4.மும்மை:4 3/4
தூங்கு தீம் கனி சூத நீள் வேலிய சோலை – 4.மும்மை:5 27/4
தூண்டு சோதி ஒன்று எழுந்து இருள் துரக்கும் சுரர்கள் வந்து சூழ் உருத்திர சோலை
வேண்டினார்கள் தம் பிறப்பினை ஒழிக்கும் மெய் நெறி-கண் நின்றார்கள் தாம் விரும்பி – 4.மும்மை:5 84/1,2
பாய சோலை தருவே பயத்தன – 4.மும்மை:5 107/4
வைய_மகள் கை அணைத்தால் போல் உயர்வ மலர் சோலை – 5.திருநின்ற:1 9/4
விரை செறியும் சோலை சூழ் திருவதிகை-தனை மேவி – 5.திருநின்ற:1 91/3
பூ அலர் சோலை மணம் அடி புல்ல பொருள் மொழியின் – 5.திருநின்ற:1 136/3
தேன் ஆரும் மலர் சோலை திருப்புலியூர் மருங்கு அணைந்தார் – 5.திருநின்ற:1 156/4
பண் பயில் வண்டு அறை சோலை சூழும் காழி பரமர் திரு கோபுரத்தை பணிந்து உள் புக்கு – 5.திருநின்ற:1 186/1
செறி விரை நல் மலர் சோலை பழையாறு எய்தி திருச்சத்தி முற்றத்தில் சென்று சேர்ந்தார் – 5.திருநின்ற:1 192/4
பெரு வாச மலர் சோலை பெரு வேளூர் பணிந்து ஏத்தி – 5.திருநின்ற:1 217/1
கொய் உலாம் மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் ஆரூராரை – 5.திருநின்ற:1 224/2
ஆர் தரு சோலை சூழ் தரு சாந்தை அயவந்தி – 5.திருநின்ற:1 240/2
மன்றல் விரவு மலர் புன்னை மணம் சூழ் சோலை உப்பளத்தின் – 5.திருநின்ற:1 264/1
சோலை மறைக்காட்டு அமர்ந்து அருளும் சோதி அருள் பெற்று அகன்று போய் – 5.திருநின்ற:1 291/1
மொழி வேந்தரும் முன் எழுந்தருள முருகு ஆர் சோலை பைஞ்ஞீலி – 5.திருநின்ற:1 304/3
சீத மலர் மென் சோலை சூழ் திருவோத்தூரில் சென்று அடைந்தார் – 5.திருநின்ற:1 315/4
மருவாரும் மலர் சோலை மயிலாப்பூர் வந்து அடைந்தார் – 5.திருநின்ற:1 331/4
செழு மதியம் தவழ் சோலை பூந்துருத்தி திரு பதியின் – 5.திருநின்ற:1 398/2
முருகு அலர் சோலை மூதூர் அதன் முதல் வணிகரோடும் – 5.திருநின்ற:4 37/1
சோலை பயிலும் குளிர்ந்த இருள் சுரும்பு பயிலும் அரும் பூகம் – 5.திருநின்ற:7 2/3
செப்பும் ஒலி வளர் பூக செழும் சோலை புறம் சூழ – 6.வம்பறா:1 3/2
சோலை மலர் போல மலர் மா மழை சொரிந்தே – 6.வம்பறா:1 30/2
வான் அணையும் மலர் சோலை தோன்றுவது எ பதி என்ன மகிழ்ச்சி எய்தி – 6.வம்பறா:1 114/2
மா அணை மலர் மென் சோலை வளம் பதி கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 118/4
மலர் முகம் பொலிந்து அசைய மென் கொம்பர் நின்று ஆடுவ மலர் சோலை – 6.வம்பறா:1 149/4
தேன் கமழும் சோலை திருவேட்களம் கடந்து – 6.வம்பறா:1 169/3
நெருங்கு சோலை சூழ் இ பதி அடியேன் பதி என நெடிது இன்புற்று – 6.வம்பறா:1 178/3
மொய் திகழ் சோலை அம் மூதூர் முன் அகன்று அ நெறி செல்வார் – 6.வம்பறா:1 296/1
பண் பயில் வண்டு இனம் பாடும் சோலை பைஞ்ஞீலி வாணர் கழல் பணிந்து – 6.வம்பறா:1 322/1
செழு மலர் சோலை திரு கற்குடி மலை சேர வந்தார் – 6.வம்பறா:1 342/4
தொழுது போந்து வந்து எய்தினார் சோலை சூழ் – 6.வம்பறா:1 358/3
மொய் தரும் சோலை சூழ் முளரி முள் அடவி போய் – 6.வம்பறா:1 361/1
தே மருவு மலர் சோலை திரு குடமூக்கினில் செல்வ – 6.வம்பறா:1 406/1
கடியாரும் மலர் சோலை மருங்கு சூழும் கவின் மருகன் பெருமானே காவாய் என்றும் – 6.வம்பறா:1 476/4
மங்குல் தவழ் சோலை மலி புகலி வேந்தர் மணம் புணரும் பெரு வாழ்வு வகுத்து விட்டார் – 6.வம்பறா:1 483/4
தேனொடு வண்டு முரலும் சோலை திரு பதி மற்று அதன் எல்லை சேர்ந்தார் – 6.வம்பறா:1 499/4
பிரச மென் மலர் சோலை சூழ் பெரும் திருவாரூர் – 6.வம்பறா:1 506/2
மஞ்சு இவர் சோலை புகலி மேவும் மா மறையோர்-தமை நோக்கி வாய்மை – 6.வம்பறா:1 558/3
போது அவிழ் சோலை வேலி புகலி காவலனார் செய்ய – 6.வம்பறா:1 607/2
பூ விரியும் தடம் சோலை புடை பரப்ப புனல் பரக்கும் – 6.வம்பறா:1 930/1
காரின் மல்கிய சோலை அண்ணாமலை அன்பர் காட்டிட கண்டார் – 6.வம்பறா:1 969/4
காரின் மல்கிய சோலை சூழ் கழுமல தலைவர் – 6.வம்பறா:1 1065/2
கார் கெழு சோலை சூழ் காழி மன்னவர் – 6.வம்பறா:1 1112/2
மன்றல் விரி நறும் சோலை திருமலையை வலம்கொண்டு – 6.வம்பறா:1 1130/3
கார் உலவு மலர் சோலை கழுமலத்தை வந்து எய்தி – 6.வம்பறா:1 1168/2
நிழலார் சோலை கரை பொன்னி வட-பால் ஏறி நெடு மாடம் – 6.வம்பறா:2 72/3
குரவலர் சோலை அணி திரு பாண்டி கொடு முடி அணைந்தனர் கொங்கில் – 6.வம்பறா:2 85/4
தேன் ஆரும் மலர் சோலை மருங்கு சூழ்ந்த திரு எதிர்கொள்பாடியினை எய்த செல்வார் – 6.வம்பறா:2 120/4
கந்த மலி மலர் சோலை நாவலர்-தம் காவலனார் – 6.வம்பறா:2 139/4
கொங்கு அலரும் மலர் சோலை திரு கோலக்கா அணைய – 6.வம்பறா:2 153/2
தேன் ஆர்ந்த மலர் சோலை திருக்கழுக்குன்றத்து அடியார் – 6.வம்பறா:2 173/1
சோலை எழும் மென் சுரும்பின் ஒலி துரக செருக்கால் சுலவும் ஒலி – 7.வார்கொண்ட:4 2/2
சூத வகுள சரள நிரை துதையும் சோலை வள நகர் தான் – 7.வார்கொண்ட:4 4/3
முருகு விரியும் மலர் சோலை மூதூர் அதன்-கண் முறை மரபின் – 7.வார்கொண்ட:4 5/1
கார் ஆரும் மலர் சோலை கானப்பேர் கடந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:4 117/3
மா அலரும் சோலை மாகோதையினில் மன்னி மலை – 7.வார்கொண்ட:4 173/3
கார் ஏறும் கோபுரங்கள் கதிர் ஏறும் மலர் சோலை
தேர் ஏறும் அணி வீதி திசை ஏறும் வசையில் அணி – 8.பொய்:2 7/1,2
வரும் மஞ்சு உறையும் மலர் சோலை மருங்கு சூழ்ந்த வளம் புறவில் – 8.பொய்:5 1/3
கார் உலவும் மலர் சோலை கன்னி மதில் புடைசூழ்ந்து – 8.பொய்:6 1/3
வேரியார் மலர் சோலை விளங்கு திருக்கடவூரில் – 9.கறை:1 9/3
வெறி உண் சோலை திரு முருகன் பூண்டி வேடர் வழி பறிக்க – 9.கறை:5 7/3
குலையில் பெருகும் சந்திரதீர்த்தத்தின் மருங்கு குளிர் சோலை
நிலையில் பெருகும் தரு மிடைந்த நெடும் தண் கானம் ஒன்று உளது-ஆல் – 12.மன்னிய:4 1/3,4
ஈர மது வார் மலர் சோலை எழில் ஆரூரில் இருக்கும் நாள் – 13.வெள்ளானை:1 3/2
குரவ மலர் பூம் தண் சோலை குலவு மலை நாடு அணைகின்றார் – 13.வெள்ளானை:1 14/4
தேன் அலம்பு தண் சோலை சூழ் மகோதையில் திருவஞ்சைக்களம் சேர – 13.வெள்ளானை:1 32/3

மேல்


சோலை-தொறும் (1)

சோலை-தொறும் நுழைந்து புறப்படும் பொழுது துதைந்த மலர் – 6.வம்பறா:1 8/2

மேல்


சோலை-தோறும் (1)

தூ மலர் சோலை-தோறும் சுடர் தொடு மாடம்-தோறும் – 7.வார்கொண்ட:2 2/1

மேல்


சோலைகள் (4)

மேக சாலம் மலி சோலைகள் ஆகி மீது கோகிலம் மிடைந்து மிழற்ற – 1.திருமலை:5 93/3
பொங்கரில் வண்டு புறம்பு அலை சோலைகள் மேல் ஓடும் – 3.இலை:7 7/1
முன்பு நின்று எடுத்த கைகளால் காட்டி முருகு அலர் சோலைகள் சூழ்ந்து – 6.வம்பறா:1 662/2
வண்டு உலா மலர் சோலைகள் சூழ்ந்து மாட மாளிகை நீடு வெண் பாக்கம் – 6.வம்பறா:2 278/3

மேல்


சோலைகளின் (2)

சுரமகளிர் கற்பக பூம் சோலைகளின் மருங்கு இருந்து – 3.இலை:7 33/1
நாறு விரை பூம் சோலைகளின் நனைவாய் திறந்து பொழி செழும் தேன் – 9.கறை:5 1/2

மேல்


சோலைகளும் (1)

கொய் தளிர் மென் சோலைகளும் குலைந்து அசைய குளிர்க்கு ஒதுங்கி – 6.வம்பறா:1 330/2

மேல்


சோலைய (1)

வரு நெடும் கதிர் கோலு சோலைய மாளவத்தினை நண்ணினார் – 5.திருநின்ற:1 351/4

மேல்


சோலையில் (1)

தூ மணி வாயில் சூழும் சோலையில் வாசம் சூழும் – 3.இலை:1 3/2

மேல்


சோலையிலும் (1)

வாள் நிழல் நல் சோலையிலும் மலர் வாவி கரை மாடும் – 6.வம்பறா:1 387/2

மேல்


சோலையின் (3)

மாடு விரை பொலி சோலையின் வான் மதி வந்து ஏற – 3.இலை:7 1/1
முகில் சூழ் நறும் சோலையின் மொய் ஒளி மாட வீதி – 4.மும்மை:1 49/3
குயில் ஒடுங்கா சோலையின் மென் தளிர் கோதி கூவி எழ – 6.வம்பறா:1 388/2

மேல்


சோலையும் (1)

துணர் இணர் சோலையும் சாலி வேலி துறை நீர் பழனமும் சூழ் கரும்பின் – 6.வம்பறா:1 498/1

மேல்


சோழர் (11)

சூட்டிய வளர் புலி சோழர் காவிரி – 1.திருமலை:2 1/3
சோதி சூழும் மணி மௌலி சோழர் பொன்னி திரு நாட்டு – 4.மும்மை:2 1/3
நீடு வண் புகழ் சோழர் நீர் நாட்டிடை நிலவும் – 6.வம்பறா:2 1/1
பூம் கழலார் புகழ் சோழர் திருத்தொண்டு புகல்கின்றாம் – 8.பொய்:1 3/4
மலர் புகழ் வண் தமிழ் சோழர் வள நாட்டு மா மூதூர் – 8.பொய்:2 1/3
பொன்னி நதி புரவலனார் புகழ் சோழர் என பொலிவார் – 8.பொய்:2 8/4
பிரசம் கொள் நறும் தொடையல் புகழ் சோழர் பெருமையினை – 8.பொய்:2 41/2
கொற்ற வேந்தர் கோச்செங்கண் சோழர் பெருமை கூறுவாம் – 12.மன்னிய:3 5/4
துலையில் புறவின் நிறை அளித்த சோழர் உரிமை சோணாட்டில் – 12.மன்னிய:4 1/1
முறையில் சிலம்பி-தனை சோழர் குலத்து வந்து முன் உதித்து – 12.மன்னிய:4 6/3
தொன்மை தரு சோழர் குலத்து அரசனாம் சுபதேவன் – 12.மன்னிய:4 7/1

மேல்


சோழர்-தம் (2)

தொன்மையாம் முதல் சோழர்-தம் திரு குலத்து உரிமை – 8.பொய்:4 1/2
வரும் நீர்மை உடைய செம் கண் சோழர்-தம் மலர் தாள் வாழ்த்தி – 12.மன்னிய:4 18/2

மேல்


சோழர்-தாம் (1)

கோதை வேலர் கோச்செங்கண் சோழர்-தாம் இ குவலயத்தில் – 12.மன்னிய:4 12/1

மேல்


சோழன் (5)

தூய பொன் அணி சோழன் நீடு ஊழி பார் – 0.பாயிரம்:1 8/3
அ நெறி வழியே ஆக அயல் வழி அடைத்த சோழன்
மன்னிய அநபாயன் சீர் மரபின் மா நகரம் ஆகும் – 3.இலை:1 2/2,3
சென்னி அபயன் குலோத்துங்க சோழன் தில்லை திரு எல்லை – 4.மும்மை:6 8/1
உறையூர் சோழன் மணியாரம் சாத்தும் திறத்தை உணர்ந்து அருளி – 6.வம்பறா:2 76/4
தேவி புதல்வர் பெற்று இறக்க செங்கோல் சோழன் சுபதேவன் – 12.மன்னிய:4 11/1

மேல்


சோழனார் (1)

தொன் மதுரை நகரின் கண் இனிது இருந்த சோழனார்
அன்னவர்கள் உடன் கூட அணைய அவரும் கூடி – 7.வார்கொண்ட:4 92/2,3

மேல்


சோழனார்-தம் (1)

கொற்றவர் வளவர்-தங்கள் குல புகழ் சோழனார்-தம்
பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்டவர்த்தனமாம் பண்பு – 3.இலை:1 11/2,3

மேல்


சோற்று (5)

தொழும் பணி மேற்கொண்டு அருளி திரு சோற்று துறை முதலா – 5.திருநின்ற:1 212/2
பெருமை தரு சண்பை நகர் வேந்தர் நாவுக்கரசர் இவர் பெரும் சோற்று பிறங்கல் ஈந்தார் – 6.வம்பறா:1 571/4
சொல் ஊதியமா அணிந்தவர்-தம் சோற்று துறையின் மருங்கு எய்தி – 6.வம்பறா:2 69/3
மிசை கொள் பண்ணும் பிடி வெள்ளம் மேவும் சோற்று வெள்ளம் கண்டு – 7.வார்கொண்ட:4 143/3
செண்டு ஆடும் தொழில் மகிழ்வும் சிறு சோற்று பெரும் சிறப்பும் – 7.வார்கொண்ட:4 155/1

மேல்


சோற்றுத்துறை (3)

துனை புனல் பொன்னி திரை வலம்கொள் சோற்றுத்துறை தொழ சென்று அடைவார் – 6.வம்பறா:1 353/4
அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோம் என்று – 6.வம்பறா:1 354/1
தொல்லை நீள் திரு சோற்றுத்துறை உறை – 6.வம்பறா:1 355/1

மேல்


சோறு (16)

மொய் வரை தினை மென் சோறு மூங்கில் வன் பதங்கள் மற்றும் – 3.இலை:3 34/2
கழிக்கரை பொதி சோறு அவிழ்ப்பன மடல் கைதை – 4.மும்மை:5 36/4
சொல்லால் சாற்றி சோறு இட்டார் துயர் கூர் வறுமை தொலைத்திட்டார் – 5.திருநின்ற:1 259/4
சோறு நாளும் தொண்டர் மகிழ்ந்து உண்ணஉண்ண தொலையாதே – 5.திருநின்ற:1 261/3
இங்கு என்-பாலே பொதி சோறு உண்டு இதனை உண்டு தண்ணீர் இ – 5.திருநின்ற:1 306/3
உண்ணும் என்று திருமறையோர் உரைத்து பொதி சோறு அளித்தலுமே – 5.திருநின்ற:1 307/2
சிற்றில் முற்றவும் இழைத்து உடன் அடும் தொழில் சிறு சோறு
உற்ற உண்டிகள் பயின்று ஒளி மணி ஊசல் ஆடி – 6.வம்பறா:1 1048/2,3
சால மிக பசித்தீர் இ பொதி சோறு தருகின்றேன் – 6.வம்பறா:2 159/2
வன் தொண்டர் அது கேட்டு மறை முனிவர் தரும் பொதி சோறு
இன்று நமக்கு எதிர் விலக்கல் ஆகாது என்று இசைந்து அருளி – 6.வம்பறா:2 160/1,2
பொன் தயங்கு நூல் மார்பர் தரும் பொதி சோறு அது வாங்கி – 6.வம்பறா:2 160/3
புண்ணியனார் தாம் அளித்த பொதி சோறு பொலிந்ததால் – 6.வம்பறா:2 161/4
இப்பொழுதே சோறு இரந்து இங்கு யான் உமக்கு கொணர்கின்றேன் – 6.வம்பறா:2 177/2
தொண்டனார்க்கு எந்நாளும் சோறு அளிக்கும் திருத்தொண்டர் – 7.வார்கொண்ட:3 36/3
வெம்மை இறைச்சி சோறு இதனில் மீட்டு படையும் என படைத்தார் – 7.வார்கொண்ட:3 78/3
சோறு நாளும் உண்பீர் முன் உண்பது என் நம் உடன் துய்ப்ப – 7.வார்கொண்ட:3 79/2
உண்ட சோறு கழிக்கவே – 8.பொய்:2 23/4

மேல்


சோறும் (2)

மேவும் திருநீற்று அந்தணராய் விரும்பும் பொதி சோறும் கொண்டு – 5.திருநின்ற:1 305/2
தண்ணீரும் பொதி சோறும் கொண்டு வழி சார்கின்றார் – 6.வம்பறா:2 156/4

மேல்