சை – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

சைய (1)

சைய மால் வரை பயில் தலைமை சான்றது – 1.திருமலை:2 3/1

மேல்


சைவ (51)

தந்தையார் சடையனார்-தம் தனி திரு மகற்கு சைவ
அந்தணர் குலத்துள் தங்கள் அரும் பெரும் மரபுக்கு ஏற்ப – 1.திருமலை:5 7/1,2
சைவ விடங்கின் அணி புனைந்து சாந்தமும் மாலையும் தாரும் ஆகி – 1.திருமலை:5 130/2
சைவ முதல் திருத்தொண்டர் தம்பிரான் தோழனார் நம்பி என்றாள் – 1.திருமலை:5 171/4
சைவ மெய் திருவின் கோலம் தழைப்ப வீதியினை சார்ந்தார் – 1.திருமலை:5 185/4
நாவலூர் வந்த சைவ நல் தவ களிறே என்றும் – 1.திருமலை:5 186/1
சைவ மெய் திருவின் சார்வே பொருள் என சாரும் நீரார் – 2.தில்லை:2 2/4
ஞாலம் உய்ய நாம் உய்ய நம்பி சைவ நல் நெறியின் – 2.தில்லை:6 9/1
ஒக்க நெடு நாள் இ உலகில் உயர்ந்த சைவ பெருந்தன்மை – 2.தில்லை:6 10/1
சைவ வெண் திருநீற்று முண்டகத்து ஒளி தழைப்பும் – 2.தில்லை:7 7/2
மன்றில் நடம் செய்பவர் சைவ வாய்மை வளர மா தவத்தோர் – 4.மும்மை:6 12/3
சொல்லார் மறைகள் துதி செய்ய சூழ் பல்லியங்கள் எழ சைவ
நல் ஆறு ஓங்க நாயகமாம் நங்கள் பெருமான் தொழுது அணைந்தார் – 4.மும்மை:6 57/3,4
சைவ நெறி ஏழ்_உலகும் பாலிக்கும் தன்மையினால் – 5.திருநின்ற:1 12/3
பொருள் சமய முதல் சைவ நெறி தான் பெற்ற புண்ணிய கண் இரண்டு எனவும் புவனம் உய்ய – 5.திருநின்ற:1 185/2
சைவ நெறி வைதிகம் நிற்க சழக்கு நெறியை தவம் என்னும் – 5.திருநின்ற:1 286/1
நின்ற நிலைமை அழிவித்து சைவ நெறி பாரித்து அன்றி – 5.திருநின்ற:1 288/3
பெருமை விளங்கும் அ பதியில் பேணும் நீற்று சைவ நெறி – 5.திருநின்ற:7 4/1
வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவ துறை விளங்க – 6.வம்பறா:1 1/1
மன்னிய சைவ துறையின் வழிவந்த குடி வளவர் – 6.வம்பறா:1 2/2
மரபு இரண்டும் சைவ நெறி வழிவந்த கேண்மையினார் – 6.வம்பறா:1 17/1
சைவ மா மறை தலைவர்-பால் பெறும் தனி காளம் – 6.வம்பறா:1 221/2
அதன் மருங்கு கடந்து அருளால் திருக்கானூர் பணிந்து ஏத்தி ஆன்ற சைவ
முதன் மறையோர் அன்பில் ஆலந்துறையின் முன்னவனை தொழுது போற்றி – 6.வம்பறா:1 308/1,2
தன்னில் எழுந்தருளினார் சைவ சிகாமணியார் மெய் தவத்தோர் சூழ – 6.வம்பறா:1 459/4
நிறை செல்வ திருச்சாத்தமங்கையினில் நீலநக்கர்-தாமும் சைவ
மறையவனார் எழுந்தருளும்படி கேட்டு வாழ்ந்து வழி விளக்கி எங்கும் – 6.வம்பறா:1 460/1,2
மை வளர் கண்டர் சைவ வேடத்தால் வந்து வாய்மூர் – 6.வம்பறா:1 593/3
மன்னிய சைவ வாய்மை வைதிக வழக்கம் ஆகும் – 6.வம்பறா:1 600/3
அறியும் அ சமய நூலின் அளவினில் அடங்கி சைவ
நெறியினில் சித்தம் செல்லா நிலைமையில் நிகழும்-காலை – 6.வம்பறா:1 602/3,4
ஓங்கிய சைவ வாய்மை ஒழுக்கத்தில் நின்ற தன்மை – 6.வம்பறா:1 604/3
மன்னிய புகலி வேந்தர் வைதிக வாய்மை சைவ
செந்நெறி விளக்குகின்றார் திருமறைக்காடு சேர்ந்த – 6.வம்பறா:1 605/2,3
சைவ நன் மரபில் வந்த தட மயில் மட மென் சாயல் – 6.வம்பறா:1 642/2
தரை செய் தவ பயன் விளங்க சைவ நெறி தழைத்து ஓங்க – 6.வம்பறா:1 653/2
மாவலாய் உன்-தன் மதுரையில் சைவ வேதியர் தாம் – 6.வம்பறா:1 683/3
மன்னிய சைவ நீதி மா மறை சிறுவர் வந்தால் – 6.வம்பறா:1 722/3
முன் அணைந்து ஏக சைவ முதல்வனார் மடத்தை சார்ந்தார் – 6.வம்பறா:1 725/4
சைவ மைந்தர் சொல்லின் வென்றி சந்த இன் சொல்_மாலையால் – 6.வம்பறா:1 774/1
போற்றுவார் எல்லாம் சைவ நெறியினை போற்றும் என்பார் – 6.வம்பறா:1 808/4
ஏறு உயர்த்தார் சைவ நெறி ஆணை உய்க்க எதிர் விலக்கும் இடையூற்றை எறிந்து நீக்கும் – 6.வம்பறா:1 909/1
வஞ்சனையோ இது-தான் மற்றவர்-தம் சைவ வாய்மையோ என மருண்டு மனத்தில் கொள்வார் – 6.வம்பறா:1 911/2
வேதமோடு சைவ நெறி விளங்க வந்த கவுணியனார் – 6.வம்பறா:1 985/3
வந்து அணைந்த மா தவத்தோர் வணங்கி தாழ்ந்து மறை வாழ்வே சைவ சிகாமணியே தோன்றும் – 6.வம்பறா:1 1020/1
தாண்டவம் புரியும் தம்பிரானாரை தலைப்பட கிடைத்த பின் சைவ
ஆண்தகையாருக்கு அடுத்த அ நிலைமை விளைவை யார் அளவு அறிந்து உரைப்பார் – 6.வம்பறா:2 90/3,4
தாது அவிழ் கொன்றை வேய்ந்தார் தர அருள் பெறுவார் சைவ
வேதியர் தலைவர் மீண்டும் மெய்யில் வெண்பொடியும் பாட – 6.வம்பறா:2 106/3,4
சைவ நெறி மெய் உணர்ந்தோர் ஆன் இனங்கள் தாமே முன் – 6.வம்பறா:3 16/2
இ இயல்பு சைவ நெறி அல்லவற்றுக்கு இல்லை என – 7.வார்கொண்ட:1 5/3
தக்க அணி கொள் மாடங்கள்-தொறும் சைவ மேன்மை சாற்றுவன – 7.வார்கொண்ட:4 3/3
அருதி அழியும் கலி நீக்கி அறம் கொள் சைவ திறம் தழைப்ப – 7.வார்கொண்ட:4 5/2
மண் மேல் சைவ நெறி வாழ வளர்ந்து முன்னை வழி அன்பால் – 7.வார்கொண்ட:4 7/1
செய்ய சடையார் சைவ திரு நெறியால் அரசு அளிப்பார் – 8.பொய்:8 1/3
தேவர் பெருமான் சைவ நெறி விளங்க செங்கோல் முறை புரியும் – 9.கறை:5 6/3
சைவ நெறி வைதிகத்தின் தரும நெறியொடும் தழைப்ப – 10.கடல்:2 5/1
மாசு_இல் புகழ் நெடுமாறன் தனக்கு சைவ வழித்துணையாய் நெடும் காலம் மன்னி பின்னை – 12.மன்னிய:2 2/3
கரும்பு ஆர் கழனி திருநாவலூரில் சைவ கலை மறையோர் – 12.மன்னிய:5 12/2

மேல்


சைவத்து (2)

தவ்வை சைவத்து நிற்றலின் தருமசேனரும் தாம் – 5.திருநின்ற:1 83/1
அறு வகை விளங்கும் சைவத்து அளவு_இலா விரதம் சாரும் – 6.வம்பறா:1 1203/1

மேல்


சைவம் (10)

உலகம் உய்யவும் சைவம் நின்று ஓங்கவும் – 1.திருமலை:1 40/1
அரு_மறை சைவம் ஓங்க அருளினால் அவதரித்த – 1.திருமலை:5 2/2
மழை வளர் உலகில் எங்கும் மன்னிய சைவம் ஓங்க – 3.இலை:1 7/1
முந்தை செயலாம் அமண் போய் முதல் சைவம் ஓங்கில் – 4.மும்மை:1 39/3
உலகு எங்கும் நிரம்பிய சைவம் உயர்ந்து மன்ன – 4.மும்மை:1 45/4
தருக்கு ஒழிய சைவம் முதல் வைதிகமும் தழைத்து ஓங்க – 6.வம்பறா:1 22/4
இருவர்-தம் பாங்கும் அன்றி சைவம் அங்கு எய்தாது ஆக – 6.வம்பறா:1 603/4
வேதம் வளர்க்கவும் சைவம் விளக்குதற்கும் வேத வனத்து அரு மணியை மீண்டும் புக்கு – 6.வம்பறா:1 618/1
மந்த உணர்வு உடையவரை நோக்கி சைவம் அல்லாது மற்று ஒன்றும் இல்லை என்றே – 6.வம்பறா:1 925/2
அரு_மறை சைவம் தழைப்ப அரசு அளிக்கும் அந்நாளில் – 8.பொய்:2 9/4

மேல்


சைவமுடன் (1)

தரும நெறி தழைத்து ஓங்க தாரணி மேல் சைவமுடன்
அரு_மறையின் துறை விளங்க அரசு அளிக்கும் அந்நாளில் – 8.பொய்:8 2/3,4

மேல்


சைவமும் (1)

விண்ணின் பயனாம் பொழி மழையும் வேத பயனாம் சைவமும் போல் – 4.மும்மை:6 9/3

மேல்


சைவமே (1)

நின்றனவும் சரிப்பனவும் சைவமே ஆம் நிலைமை அவர்க்கு அருள்செய்து சண்பை வேந்தர் – 6.வம்பறா:1 926/3

மேல்


சைவர் (7)

தாழ்ந்த வேணியர் சைவர் தபோதனர் – 1.திருமலை:3 11/1
சைவர் வாழ் மடத்து அமணர்கள் இட்ட தீ தழல் போய் – 6.வம்பறா:1 704/3
இகல் இலர் எனினும் சைவர் இருந்து வாழ் மடத்தில் தீங்கு – 6.வம்பறா:1 854/2
சார்வு அறியா சாக்கியர்-தம் போதிமங்கை சார்தலும் மற்று அது அறிந்த சைவர் எல்லாம் – 6.வம்பறா:1 904/2
முன் தொழுது விழுந்து எழுந்து சைவர் ஆனார் முகை மலர்_மாரியின் வெள்ளம் பொழிந்தது எங்கும் – 6.வம்பறா:1 926/2
பம்பு சடை திரு முனிவர் கபால கையர் பல வேட சைவர் குல வேடர் மற்றும் – 6.வம்பறா:1 1018/3
வேரி மலர்ந்த பூம் கழல் சூழ் மெய் அன்பு உடைய சைவர் என – 10.கடல்:3 2/3

மேல்


சைவராம் (1)

முப்போதும் அர்ச்சிப்பார் முதல் சைவராம் முனிவர் – 11.பத்தராய்:5 1/4

மேல்


சைவராய் (1)

பெருகு சைவராய் பெயர்ந்து தம் பிணி ஒழித்து உய்ந்தார் – 5.திருநின்ற:1 80/3

மேல்


சைவருடன் (1)

சத்திரமண்டபத்தின் மிசை ஏறி நீடு சைவருடன் எழுந்தருளி இருந்து சாரும் – 6.வம்பறா:1 912/3

மேல்


சைவன் (4)

அனைத்து நூல் உணர்ந்தீர் ஆதி சைவன் என்று அறிவீர் என்னை – 1.திருமலை:5 54/1
அரு_மறை நாவல் ஆதி சைவன் ஆரூரன் செய்கை – 1.திருமலை:5 59/1
சைவன் ஆகி நம் விருத்தியும் தவிர்க்கும் மற்று இனி நாம் – 5.திருநின்ற:1 82/3
சைவன் அணைந்தான் என் துணையாம் தலைவன் அணைந்தான் தரணி எலாம் – 13.வெள்ளானை:1 17/3

மேல்