ஐ – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஐ 1
ஐ_இரு 1
ஐது 1
ஐந்தின் 3
ஐந்தினும் 1
ஐந்து 12
ஐந்து_எழுத்தும் 1
ஐந்தும் 16
ஐம் 3
ஐம்_புலனால் 1
ஐம்படை 1
ஐம்படையின் 1
ஐம்பால் 1
ஐம்புலனில் 1
ஐம்பொறி 2
ஐய 1
ஐயடிகள் 3
ஐயம் 6
ஐயமுற 1
ஐயர் 30
ஐயர்-தம் 2
ஐயர்-தம்மை 2
ஐயரே 2
ஐயரை 2
ஐயவி 2
ஐயன் 6
ஐயன்-தன் 1
ஐயனுக்கு 1
ஐயனே 4
ஐயா 4
ஐயாண்டு 1
ஐயாற்றில் 3
ஐயாற்று 1
ஐயாறு 8
ஐயாறும் 1
ஐயுறவால் 1
ஐராவத 1
ஐவகை 1
ஐவரை 1
ஐவன 1
ஐவனம் 1

ஐ (1)

மேய விதி ஐ_இரு தினத்தினும் விளைத்தார் – 6.வம்பறா:1 40/4

மேல்


ஐ_இரு (1)

மேய விதி ஐ_இரு தினத்தினும் விளைத்தார் – 6.வம்பறா:1 40/4

மேல்


ஐது (1)

ஐது வெயில் விரிப்பதுவும் அடங்குவதும் ஆகும்-ஆல் – 6.வம்பறா:1 330/4

மேல்


ஐந்தின் (3)

அனையன பலவும் செய்தே ஐந்தின் மேல் ஆன ஆண்டின் – 3.இலை:3 25/1
தன்மை நிலவு பதி ஐந்தின் ஒன்றாய் நீடும் தகைத்தது அ ஊர் – 4.மும்மை:6 8/4
காரண பங்கயம் ஐந்தின் கடவுளர்-தம் பதம் கடந்து – 11.பத்தராய்:3 1/1

மேல்


ஐந்தினும் (1)

அங்கம் எட்டினும் ஐந்தினும் அளவு_இன்றி வணங்கி – 6.வம்பறா:1 666/1

மேல்


ஐந்து (12)

தட கை ஐந்து உடை தாழ் செவி நீள் முடி – 0.பாயிரம்:1 3/3
தேடிய அயனும் மாலும் தெளிவுறா ஐந்து_எழுத்தும் – 1.திருமலை:5 71/1
ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பு_அரும் காரணங்கள் நான்கும் – 1.திருமலை:5 106/1
வான்உற நீள் திரு வாயில் நோக்கி மண்உற ஐந்து உறுப்பால் வணங்கி – 1.திருமலை:5 124/1
தம்மை ஐந்து புலனும் பின் செல்லும் தகையார் அறு_தொழிலின் – 4.மும்மை:6 2/3
ஐந்து வருடம் அவர்க்கு அணைய அங்கம் ஆறும் உடன் நிறைந்த – 4.மும்மை:6 13/1
மேல் நிறைந்த ஐந்து பேரிய ஒலியும் விரிஞ்சன் முதல் – 5.திருநின்ற:1 428/2
நாள் உடைய ஈர்_ஐந்து திங்களினும் நலம் சிறப்ப – 6.வம்பறா:1 21/3
ஐந்து புலன் நிலை கலங்கும் இடத்து அஞ்சேல் என்பார் தம் ஐயாறு என்று – 6.வம்பறா:1 301/3
ஆவின் ஐந்து உகந்து ஆடுவார் அறை அணி நல்லூரை அணைந்து ஏத்தி – 6.வம்பறா:1 968/2
துன்றும் புலன் ஐந்து உடன் ஆறு தொகுத்த குற்றம் – 6.வம்பறா:6 5/1
கொள்ளும் பிராயம் ஐந்து உளனாய் உறுப்பில் குறைபாடு இன்றித்தாய் – 7.வார்கொண்ட:3 54/3

மேல்


ஐந்து_எழுத்தும் (1)

தேடிய அயனும் மாலும் தெளிவுறா ஐந்து_எழுத்தும்
பாடிய பொருளாய் உள்ளான் பாடுவாய் நம்மை என்ன – 1.திருமலை:5 71/1,2

மேல்


ஐந்தும் (16)

ஆன பயம் ஐந்தும் தீர்த்து அறம் காப்பான் அல்லன்ஓ – 1.திருமலை:3 36/4
பூதம் ஐந்தும் நிலையில் கலங்கினும் – 1.திருமலை:4 7/1
எண்ணிய ஓசை ஐந்தும் விசும்பிடை நிறைய எங்கும் – 1.திருமலை:5 69/1
மங்குல் வானின் மிசை ஐந்தும் முழங்கும் வாச மாலைகளில் வண்டு முழங்கும் – 1.திருமலை:5 99/2
நன் புலன் ஆகிய ஐந்தும் ஒன்றி நாயகன் சேவடி எய்தப்பெற்ற – 1.திருமலை:5 126/3
அதிர் தரும் ஓசை ஐந்தும் ஆர்கலி முழக்கம் காட்ட – 3.இலை:3 101/2
ஐந்தும் ஆறு அடக்கி உள்ளார் அரும் பெரும் சோதியாலும் – 3.இலை:3 131/3
வன் பூத படையாளி எழுத்து_ஐந்தும் வழுத்தி தாம் – 3.இலை:7 22/2
கண்ணின் பயனாம் பெருகு ஒளியும் கருத்தின் பயனாம் எழுத்து ஐந்தும்
விண்ணின் பயனாம் பொழி மழையும் வேத பயனாம் சைவமும் போல் – 4.மும்மை:6 9/2,3
தூய திருமஞ்சனம் ஐந்தும் அளிக்கும் உரிமை சுரபிகள் தாம் – 4.மும்மை:6 20/4
தென் இலங்கை இராவணன்-தன் சிரம் ஈர்_ஐந்தும் துணித்த – 5.திருநின்ற:1 408/1
நல் தமிழ்_மாலை புனைந்து அருளி ஞானசம்பந்தர் புலன்கள் ஐந்தும்
செற்றவர் மூக்கீச்சரம் பணிந்து திருச்சிராப்பள்ளி சிலம்பு அணைந்தார் – 6.வம்பறா:1 343/3,4
நின்ற உரு வேதனையே குறிப்பு செய்கை நேர் நின்ற ஞானம் என நிகழ்ந்த ஐந்தும்
ஒன்றிய அகம் அந்த விவேக முத்தி என்ன உரை செய்தான் பிடகத்தின் உணர்வு மிக்கான் – 6.வம்பறா:1 916/3,4
தாங்கிய ஞானத்துடனாம் அந்தம் ஐந்தும் தாம் வீந்து கெட்டன வேல் தலைவன்-தானும் – 6.வம்பறா:1 917/2
ஏடு உலாம் மலர் தூவி எட்டினொடு ஐந்தும் ஆகும் உறுப்பினால் – 6.வம்பறா:2 98/3
விரவு மெய் அங்கம் ஐந்தும் எட்டினும் வணங்கி வேட்கை – 6.வம்பறா:2 114/2

மேல்


ஐம் (3)

நாடும் ஐம் பெரும் பூதமும் நாட்டுவ – 1.திருமலை:1 6/2
ஐம் படை சதங்கை சாத்தி அணி மணி சுட்டி சாத்தி – 1.திருமலை:5 4/3
வென்ற ஐம்_புலனால் மிக்கீர் விருப்புடன் இருக்க நம்-பால் – 2.தில்லை:2 42/3

மேல்


ஐம்_புலனால் (1)

வென்ற ஐம்_புலனால் மிக்கீர் விருப்புடன் இருக்க நம்-பால் – 2.தில்லை:2 42/3

மேல்


ஐம்படை (1)

மருவு திரு கண்ட நாண் மார்பினில் ஐம்படை கையில் – 7.வார்கொண்ட:3 21/2

மேல்


ஐம்படையின் (1)

நாட்டார் அறிய முன் நாளில் நன்னாள் உலந்த ஐம்படையின்
பூட்டார் மார்பில் சிறிய மறை புதல்வன்-தன்னை புக்கொளியூர் – 5.திருநின்ற:7 33/1,2

மேல்


ஐம்பால் (1)

உளர்த்தும் ஐம்பால் உடையோர் முகத்தினும் – 3.இலை:6 3/2

மேல்


ஐம்புலனில் (1)

பூண்ட ஐம்புலனில் புலப்படா இன்பம் புணர்ந்து மெய் உணர்வினில் பொங்க – 6.வம்பறா:2 90/2

மேல்


ஐம்பொறி (2)

அணையும் ஐம்பொறி அளவினும் எளிவர அருளினை என போற்றி – 6.வம்பறா:1 161/2
தருக்கிய ஐம்பொறி அடக்கி மற்றவர்-தம் தாள் வணங்கி – 11.பத்தராய்:4 2/3

மேல்


ஐய (1)

அன்பின் துணிவால் இது செய்திடல் ஐய உன்-பால் – 4.மும்மை:1 22/1

மேல்


ஐயடிகள் (3)

ஆய மா தவத்து ஐயடிகள் எனும் – 8.பொய்:7 7/3
ஐயடிகள் நீதியால் அடிப்படுத்தும் செங்கோலார் – 8.பொய்:8 1/4
ஐயடிகள் காடவனார் அடி இணை தாமரை வணங்கி – 8.பொய்:8 8/2

மேல்


ஐயம் (6)

ஐயம் நீங்க வினவுவோர் அந்தணர் – 1.திருமலை:1 18/4
அன்னது எம்பிரான் அடியவர் உடைமை ஐயம் இல்லை நீர் அருள்செயும் என்ன – 2.தில்லை:3 7/2
வரும் தியான பொருள் என்று இறைஞ்சி தாம் முன் வல்ல மறை கேட்டு ஐயம் தீர்ந்து வாழ்ந்தார் – 6.வம்பறா:1 265/4
சிந்தை மயக்குறும் ஐயம் தெளிய எல்லாம் செழு மறையோர்க்கு அருளி அவர் தெருளும் ஆற்றால் – 6.வம்பறா:1 266/2
ஐயம் உடன் அருகு துயில் சேடியாரை அணைந்து எழுப்பி – 6.வம்பறா:2 253/4
ஐயம் இன்றி அரிய திருப்பணி – 8.பொய்:7 6/1

மேல்


ஐயமுற (1)

இத்தகைய வேடம் என ஐயமுற எய்தி – 1.திருமலை:5 32/4

மேல்


ஐயர் (30)

ஐயர் வீற்றிருக்கும் தன்மையினாலும் அளப்பு_அரும் பெருமையினாலும் – 1.திருமலை:1 12/2
என்றலும் நின்ற ஐயர் இங்கு உளேன் இருப்பும் சேயது – 1.திருமலை:5 47/1
ஐயர் தாம் வெளியே ஆடுகின்றாரை அஞ்சலி மலர்த்தி முன் குவித்த – 1.திருமலை:5 105/2
புவனங்கள் உய்ய ஐயர் பொங்கு நஞ்சு உண்ண யாம் செய் – 2.தில்லை:2 4/2
ஆறு சூடிய ஐயர் மெய் அடிமை அளவு_இலாதது ஓர் உளம் நிறை அருளால் – 2.தில்லை:3 3/1
ஐயர் கைதவம் அறிவுறாது அவர் கடிது அணுகி – 2.தில்லை:7 20/1
அழிவு இல் வான் பதம் கொடுத்து எழுந்தருளினார் ஐயர் – 2.தில்லை:7 47/4
ஆணையாம் சிவத்தை சாரா அணைபவர் போல ஐயர்
நீள் நிலை மலையை ஏறி நேர்பட செல்லும் போதில் – 3.இலை:3 103/3,4
மை வரை என்ன ஐயர் மருங்கு-நின்று அகலா நின்றார் – 3.இலை:3 127/4
ஊனமும் உகந்த ஐயர் உற்று முன் பிடிக்கும் போதும் – 3.இலை:3 184/2
ஒருங்கிய நெஞ்சொடு கரங்கள் உச்சியின் மேல் குவித்து ஐயர்
பெரும் கருணை திறம் போற்றும் பெரும் பேறு நேர் பெற்றார் – 3.இலை:5 33/3,4
ஆட்கொள்ளும் ஐயர் தாம் இங்கு அமுது செய்திலர்-கொல் என்னா – 3.இலை:6 17/1
ஆசு_இல் வண் கையை மாற்ற அம்பலத்து ஆடும் ஐயர்
வீசிய செய்ய கையும் மாவடு விடேல் விடேல் என் – 3.இலை:6 18/2,3
மன்றுளே ஆடும் ஐயர் மழ விடை உகைத்து சென்றார் – 3.இலை:6 21/4
அ நின்ற நிலை பெயர்ப்பார் ஐயர் திரு மருங்கு அணைந்தார் – 3.இலை:7 40/4
ஐயர் திருவடி நீழல் அருள் ஆகி குளிர்ந்ததே – 5.திருநின்ற:1 98/4
செய்ய ஐயர் திருவோத்தூர் ஏத்தி போந்து செழும் புவனம் – 5.திருநின்ற:1 317/1
ஐயர் கோலம் அங்கு அளித்து அகன்றிட அடி தொண்டர் – 5.திருநின்ற:1 383/1
ஆறு உலவு செய்ய சடை ஐயர் அருளாலே – 6.வம்பறா:1 43/1
ஐயர் அவர் திருவருளால் எடுத்த பாடலுக்கு இசைந்த அளவால் ஒத்த – 6.வம்பறா:1 103/3
ஐயர் நீர் அவதரித்திட இ பதி அளவு_இல் மா தவம் முன்பு – 6.வம்பறா:1 179/1
ஐயர் சேவடி பணியும் அ பொருப்பினில் ஆதரவுடன் சென்றார் – 6.வம்பறா:1 181/4
அ வினைக்கு இ வினை என்று எடுத்து ஐயர் அமுது செய்த – 6.வம்பறா:1 335/1
ஐயர் நீர் யாழ் இதனை முரிக்கும் அது என் ஆளுடையாள் உடனே கூட – 6.வம்பறா:1 451/1
அலகு_இல் புகழீர் தவிர்வதாகும் என்றே அருள்புரிந்தார் திருவீழிமிழலை ஐயர் – 6.வம்பறா:1 564/4
ஐயர் கமல சேவடி கீழ் ஆர்வம் பெருக விழுந்து எழுந்து – 6.வம்பறா:2 75/3
ஐயர் தமக்கு மிக அஞ்சி ஆர தழுவி கொண்டு இருந்த – 6.வம்பறா:2 188/2
அ மொழி விளம்பும் நம்பிக்கு ஐயர் தாம் அருளி செய்வார் – 6.வம்பறா:2 352/1
ஐயர் அங்கு அணைந்த போதில் அகிலலோகத்து உள்ளாரும் – 6.வம்பறா:2 363/1
மடு பொதி வேணி ஐயர் மகிழ்ந்து உறைவதற்கு ஓர் கோயில் – 12.மன்னிய:1 4/3

மேல்


ஐயர்-தம் (2)

ஆரம் என்பு புனைந்த ஐயர்-தம் அன்பர் என்பது ஓர் தன்மையால் – 2.தில்லை:4 3/1
சார் வலை தொடக்கு அறுக்க ஏகும் ஐயர்-தம் முன்னே – 3.இலை:3 70/2

மேல்


ஐயர்-தம்மை (2)

அப்பரே வேத வனத்து ஐயர்-தம்மை அபிமுகத்து திரு வாயில் திறந்து புக்கே – 6.வம்பறா:1 581/1
ஐயர்-தம்மை அரங்கு ஆட வல்லார் அவரே அழகியர் என்று – 6.வம்பறா:2 53/3

மேல்


ஐயரே (2)

ஐயரே அம்பலவர் அருளால் இ பொழுது அணைந்தோம் – 4.மும்மை:4 30/1
ஓக்குதலும் தடுத்து அருளி ஐயரே உற்ற இசை அளவினால் நீர் – 6.வம்பறா:1 450/2

மேல்


ஐயரை (2)

ஆறு உலாவிய சடை முடி ஐயரை பணிந்து – 6.வம்பறா:1 516/2
அரு_மறை முனிவரான ஐயரை தையலார்-தாம் – 6.வம்பறா:2 345/1

மேல்


ஐயவி (2)

அலர் பகல் கழிந்த அந்தி ஐயவி புகையும் ஆட்டி – 3.இலை:3 27/1
ஐயவி உடன் பல அமைத்த புகையாலும் – 6.வம்பறா:1 39/1

மேல்


ஐயன் (6)

அழிவுறும் ஐயன் என்னும் அன்பினில் பொலிந்து சென்று – 2.தில்லை:4 21/2
இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய்ய வல்லார் என்று – 2.தில்லை:5 21/3
ஐயன் அடையாளமும் ஆக அணிந்து தாங்கும் – 4.மும்மை:1 41/3
ஐயன் திரு நடம் எதிர் கும்பிடும் அவர் ஆர்வம் பெருகுதல் அளவு இன்றால் – 5.திருநின்ற:1 167/4
ஐயன் திரு கூத்து கும்பிட்டு அணைவுறும் நாள் – 6.வம்பறா:1 166/4
ஐயன் அணைந்தான் எனை ஆளும் அண்ணல் அணைந்தான் ஆரூரில் – 13.வெள்ளானை:1 17/2

மேல்


ஐயன்-தன் (1)

ஐயன்-தன் திரு செவியின் அருகு அணைய பெருகியது-ஆல் – 3.இலை:7 37/4

மேல்


ஐயனுக்கு (1)

ஐயனுக்கு அழகிது ஆம் என்று ஆய் இழை மகளிர் போற்ற – 1.திருமலை:5 185/3

மேல்


ஐயனே (4)

ஐயனே தடுத்தாண்டு அருள்செய் என – 1.திருமலை:1 28/4
ஆடுமாறு அது வல்லான் ஐயாற்று எம் ஐயனே என்று நின்று – 6.வம்பறா:1 303/3
ஐயனே அடியனேனை அஞ்சல் என்று அருள வல்ல – 6.வம்பறா:1 865/3
ஐயனே இன்று அமணர்கள்-தாம் என்னை அவமானம் செய்ய – 6.வம்பறா:4 11/3

மேல்


ஐயா (4)

இந்த மா நிலத்தில் இல்லை என் சொன்னாய் ஐயா என்றார் – 1.திருமலை:5 52/2
மாசு_இலா மறையோர் ஐயா மற்று உங்கள் பேரனார்-தம் – 1.திருமலை:5 60/3
ஐயா நீர் அருளி செய்த வண்ணம் யான் செய்வதற்கு – 2.தில்லை:2 28/1
அளவு_இலா மகிழ்ச்சியினார்-தமை நோக்கி ஐயா நீர் – 6.வம்பறா:1 133/1

மேல்


ஐயாண்டு (1)

அந்தணாளர் வணங்கி அரும் புதல்வர் இருவர் ஐயாண்டு
வந்த பிராயத்தினர் குளித்த மடுவில் முதலை ஒரு மகவை – 13.வெள்ளானை:1 6/1,2

மேல்


ஐயாற்றில் (3)

மாது_ஓர்_பாகனார் மகிழும் ஐயாற்றில் ஓர் வாவி – 5.திருநின்ற:1 371/3
வேத முதல்வர் ஐயாற்றில் விரவும் சராசரம் எல்லாம் – 5.திருநின்ற:1 384/3
மன்றில் நிறைந்து நடமாட வல்லார் தொல்லை ஐயாற்றில்
கன்று தடை உண்டு எதிர் அழைக்க கதறி கனைக்கும் புனிற்று ஆ போல் – 7.வார்கொண்ட:4 135/1,2

மேல்


ஐயாற்று (1)

ஆடுமாறு அது வல்லான் ஐயாற்று எம் ஐயனே என்று நின்று – 6.வம்பறா:1 303/3

மேல்


ஐயாறு (8)

மிடையும் நீள் கொடி வீதிகள் விளங்கிய ஐயாறு
உடைய நாயகர் சேவடி பணிய வந்து உறுவார் – 5.திருநின்ற:1 373/1,2
அழல் நக்க பங்கய வாவி ஐயாறு சென்று அடைகின்றார் – 6.வம்பறா:1 299/4
ஐந்து புலன் நிலை கலங்கும் இடத்து அஞ்சேல் என்பார் தம் ஐயாறு என்று – 6.வம்பறா:1 301/3
நீடு திரு நெய்த்தானம் ஐயாறு நேர்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 949/2
தேவர் பெருமான் கண்டியூர் பணிந்து திரு ஐயாறு அதனை – 6.வம்பறா:2 71/1
ஐயாறு அதனை கண்டு தொழுது அருள ஆரூர்-தமை நோக்கி – 7.வார்கொண்ட:4 132/1
அரவம் புனைவார்-தமை ஐயாறு உடைய அடிகளோ என்று – 7.வார்கொண்ட:4 134/2
ஆய செயலின் அதிசயத்தை கண்டு அக்கரையில் ஐயாறு
மேய பெருமான் அருள் போற்றி வீழ்ந்து தாழ்ந்து மேல்-பால் போய் – 7.வார்கொண்ட:4 140/1,2

மேல்


ஐயாறும் (1)

செங்கையாளர் ஐயாறும் திகழ்வது – 1.திருமலை:1 35/4

மேல்


ஐயுறவால் (1)

வரும் ஐயுறவால் மனம் தளர்ந்து மன்றுள் ஆடும் கழல் பணிவார் – 7.வார்கொண்ட:6 5/4

மேல்


ஐராவத (1)

துளை கை ஐராவத களிறும் துரங்க அரசும் திருவும் – 8.பொய்:2 6/1

மேல்


ஐவகை (1)

நால் தடம் கடல் முழக்கு என ஐவகை நாதம் மீது எழுந்து ஆர்ப்ப – 13.வெள்ளானை:1 34/2

மேல்


ஐவரை (1)

ஐவரை கொன்று நின்றார் அரு_வரை அனைய தோளார் – 3.இலை:1 25/4

மேல்


ஐவன (1)

ஐவன அடிசில் வெவ்வேறு அமைந்தன புல்-பால் சொன்றி – 3.இலை:3 34/1

மேல்


ஐவனம் (1)

அன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கும் எங்கும் – 3.இலை:3 3/4

மேல்