சே – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சே 18
சே_இழை 1
சே_இழை-தன்னை 1
சே_இழை-பால் 1
சே_இழையார் 1
சே_இழையாருடன் 1
சே_இழையை 1
சேக்கை 4
சேக்கைய 1
சேகரர் 1
சேடர் 2
சேடர்கள் 1
சேடரின் 1
சேடன் 1
சேடி 2
சேடிமாரில் 1
சேடியர் 5
சேடியர்கள் 1
சேடியரான 1
சேடியாரை 1
சேடு 6
சேடை 2
சேண் 24
சேண்படு 1
சேணிடை 4
சேணிடையும் 1
சேணும் 1
சேதாம்பல் 1
சேதி 3
சேதியர் 1
சேதுவின்-கண் 1
சேந்தன் 1
சேம 4
சேமங்கள் 1
சேமத்து 1
சேமம் 2
சேமிப்பது 1
சேய்ஞலூர் 6
சேய்த்து 3
சேய்ந்த 1
சேய 11
சேயடியின் 1
சேயது 2
சேயவர்-தம்மில் 1
சேயவன் 1
சேயும் 1
சேயையும் 1
சேர் 61
சேர்-மின் 1
சேர்க 1
சேர்கின்றார் 3
சேர்த்த 1
சேர்த்தார் 2
சேர்த்தி 6
சேர்த்து 2
சேர்த்தும் 1
சேர்தும் 1
சேர்ந்த 13
சேர்ந்தனம் 1
சேர்ந்தனர் 3
சேர்ந்தனரே 1
சேர்ந்தார் 50
சேர்ந்தார்கள் 2
சேர்ந்தாரை 1
சேர்ந்தாள் 1
சேர்ந்தான் 2
சேர்ந்து 27
சேர்ந்தும் 1
சேர்ப்பவர் 1
சேர்ப்பார் 1
சேர்வதற்கு 2
சேர்வதனுக்கு 1
சேர்வது 1
சேர்வன் 3
சேர்வான் 1
சேர்விலார் 1
சேர்வு 3
சேர்வுற்ற 1
சேர்வுற்றார் 4
சேர்வுறும் 1
சேர 27
சேரமான் 7
சேரர் 36
சேரருடன் 2
சேரலர் 1
சேரலர்-தம்-பால் 1
சேரலன் 2
சேரலன்-தன் 1
சேரலனார் 7
சேரவே 1
சேரன்-தனக்கு 1
சேரனார் 1
சேரார் 2
சேரும் 10
சேல் 6
சேலும் 1
சேலூர் 1
சேலூருடன் 1
சேவகத்தில் 1
சேவகம் 2
சேவகர் 1
சேவகராய் 1
சேவகனார் 1
சேவடி 54
சேவடிக்கு 2
சேவடிகள் 12
சேவடியவர் 1
சேவடியாய் 1
சேவடியார் 5
சேவடியார்-தம் 2
சேவடியாரை 2
சேவடியில் 3
சேவடியின் 4
சேவலும் 1
சேவலோடும் 1
சேவார் 1
சேவிக்க 1
சேவிக்கப்பெற 1
சேவிக்கும் 1
சேவித்து 14
சேவிப்ப 1
சேவில் 3
சேவின் 4
சேற்றிடை 1
சேற்றின் 1
சேற்றினை 1
சேற்று 1
சேறு 10
சேறே 1
சேனாபதி 2
சேனாபதியாம் 1
சேனை 15
சேனை-தன்னை 1
சேனை-தான் 1
சேனையின் 1
சேனையும் 2

சே (18)

சென்றவர் முனியை காணார் சே_இழை-தன்னை கண்டார் – 2.தில்லை:3 31/1
சே உயர் கொடியார்-தம்மை சென்று முன் வணங்கி பாடி – 5.திருநின்ற:1 172/2
தேட அரும் திரு மரபில் சே_இழையை மகன்_பேச – 5.திருநின்ற:4 7/3
சே உகைத்தவர் ஆட்கொண்ட திருநாவுக்கரசர் செய்ய – 5.திருநின்ற:5 36/3
சே ஆண்ட கொடியவர்-தம் சிரபுரத்து சிறுவருக்கு – 6.வம்பறா:1 54/3
சே உகைத்தவர் திருத்தொண்டர் ஆனவர்கள் முன் சென்று சீத – 6.வம்பறா:1 521/2
சே உகைத்தார் அருள் பெற்ற பிள்ளையார் தம் திரு மடத்தில் அமுது ஆக்குவாரை நோக்கி – 6.வம்பறா:1 567/2
திரு மடம் சார சென்று சே அரி கண்ணினார் முன் – 6.வம்பறா:1 726/1
சே உயர் கொடியினார்-தம் திரு உள்ளம் அறிவேன் என்று – 6.வம்பறா:1 736/3
சே இடை கழிய போந்து வந்து அடைந்தார் தென் திசை கற்குடி மலையில் – 6.வம்பறா:2 92/4
சே ஆரும் கொடியாரை திரு மூலட்டானத்துள் – 6.வம்பறா:2 125/2
சிந்தை நிறை மகிழ்ச்சி உடன் சே_இழையாருடன் அமர்ந்தார் – 6.வம்பறா:2 139/3
சே_இழையார் திருப்பள்ளி எழுச்சிக்கு மலர் தொடுக்கும் – 6.வம்பறா:2 255/1
சே_இழை துனி நீர்த்து அன்றி மீள்வது செய்யார் என்று – 6.வம்பறா:2 348/4
சென்று அணை நீ அ சே_இழை-பால் என்று அருள்செய்து – 6.வம்பறா:2 374/2
வென்று உயர் சே மேல் வீதிவிடங்கப்பெருமாள் தம் – 6.வம்பறா:2 374/3
சே வீற்றிருந்தார் திருவஞ்சை களமும் நிலவி சேரர் குல – 7.வார்கொண்ட:4 1/3
சே ஏந்தும் வெல் கொடியான் அடி சார்ந்தாரும் செப்பிய அப்பாலும் அடிச்சார்ந்தார் தாமே – 11.பத்தராய்:7 1/4

மேல்


சே_இழை (1)

சே_இழை துனி நீர்த்து அன்றி மீள்வது செய்யார் என்று – 6.வம்பறா:2 348/4

மேல்


சே_இழை-தன்னை (1)

சென்றவர் முனியை காணார் சே_இழை-தன்னை கண்டார் – 2.தில்லை:3 31/1

மேல்


சே_இழை-பால் (1)

சென்று அணை நீ அ சே_இழை-பால் என்று அருள்செய்து – 6.வம்பறா:2 374/2

மேல்


சே_இழையார் (1)

சே_இழையார் திருப்பள்ளி எழுச்சிக்கு மலர் தொடுக்கும் – 6.வம்பறா:2 255/1

மேல்


சே_இழையாருடன் (1)

சிந்தை நிறை மகிழ்ச்சி உடன் சே_இழையாருடன் அமர்ந்தார் – 6.வம்பறா:2 139/3

மேல்


சே_இழையை (1)

தேட அரும் திரு மரபில் சே_இழையை மகன்_பேச – 5.திருநின்ற:4 7/3

மேல்


சேக்கை (4)

வைகு சேக்கை கண் மேல்செல வந்தது – 1.திருமலை:5 158/3
மாறு_இல் மலர் சேக்கை மிசை மணி நிலா முன்றில் மருங்கு இருந்தாள் வந்து – 1.திருமலை:5 170/4
குறி அளக்க உளைக்கும் செம் குடுமி வாரண சேக்கை
வெறி மலர் தண் சினை காஞ்சி விரி நீழல் மருங்கு எல்லாம் – 4.மும்மை:4 9/2,3
மாகம் இகந்து வந்து இருக்கும் சேக்கை எனவும் வானவர் கோன் – 4.மும்மை:6 4/3

மேல்


சேக்கைய (1)

மழலை மென் கிளி மருது அமர் சேக்கைய மருதம் – 4.மும்மை:5 10/3

மேல்


சேகரர் (1)

மலர் மிசை புத்தேள் வழிபடும் புகலி வைதிக சேகரர் பாதம் – 6.வம்பறா:1 656/3

மேல்


சேடர் (2)

சேடர் பயில் திருச்சேறை திருநாலூர் குடவாயில் – 6.வம்பறா:1 403/2
சேடர் பயில் திரு பதியை தொழுது போந்து திருப்பாசூர் அதன் மருங்கு செல்லல் உற்றார் – 6.வம்பறா:1 1011/4

மேல்


சேடர்கள் (1)

சேடர்கள் வாழும் திருப்பைஞ்ஞீலி சிவபெருமானை இறைஞ்ச சென்றார் – 6.வம்பறா:1 321/4

மேல்


சேடரின் (1)

சேடரின் மிக்க செய்கை திண்ணன் வில் பிடிக்கின்றான் என்று – 3.இலை:3 29/2

மேல்


சேடன் (1)

பணி உலகு ஆளும் சேடன் பணம் விரித்து அடைதல் காட்ட – 6.வம்பறா:1 1105/4

மேல்


சேடி (2)

பங்கினாள் திரு சேடி பரவை ஆம் – 1.திருமலை:3 5/3
அவ்வளவில் அருகு இருந்த சேடி நேர் முகம் நோக்கி ஆரூர் ஆண்ட – 1.திருமலை:5 171/1

மேல்


சேடிமாரில் (1)

பொது கடிந்து உரிமை செய்யும் பூம் குழல் சேடிமாரில்
கதிர்த்த பூண் ஏந்து கொங்கை கமலினி அவதரித்தாள் – 1.திருமலை:5 131/3,4

மேல்


சேடியர் (5)

திங்கள் வாள் முக சேடியர் எய்தினார் – 1.திருமலை:1 23/3
அன்பு முதிர் கலவியினில் பரிந்து சிந்தும் அணி மணி சேடியர் தொகுக்கும் அவையும் ஆகி – 4.மும்மை:5 94/3
போற்றுவார் குழல் சேடியர் உடன் புறம் போந்து – 6.வம்பறா:1 1055/3
தரையில் வீழ்தர சேடியர் வெருக்கொடு தாங்கி – 6.வம்பறா:1 1059/1
மாடு சேடியர் இனம் புடைசூழ்ந்து வந்து அணைய – 6.வம்பறா:1 1082/2

மேல்


சேடியர்கள் (1)

இனம் கொண்ட சேடியர்கள் புடைசூழ எய்து பெரும் காதலோடும் – 1.திருமலை:5 169/2

மேல்


சேடியரான (1)

எம் பிராட்டி அர்ச்சனை புரிவதனுக்கு இயல்பில் வாழ் திரு சேடியரான
கொம்பனார்கள் பூம் பிடகை கொண்டு அணைய குலவு மென் தளிர் அடி இணை ஒதுங்கி – 4.மும்மை:5 59/2,3

மேல்


சேடியாரை (1)

ஐயம் உடன் அருகு துயில் சேடியாரை அணைந்து எழுப்பி – 6.வம்பறா:2 253/4

மேல்


சேடு (6)

சேடு கொண்ட ஒளி தேர் நிரை-தோறும் செந்நெல் அன்ன மலை சாலைகள்-தோறும் – 1.திருமலை:5 101/3
சேடு கொண்ட கை_விளி சிறந்த ஓசை செல்லவும் – 3.இலை:3 72/3
சேடு உயர் மூ_இலை சூலம் சின விடையின் உடன் சாத்த – 5.திருநின்ற:1 152/4
சேடு உயர் பொன் கதவு திருக்காப்பு நீங்கா செய்கையினால் வாகீசர் சிந்தை நொந்து – 6.வம்பறா:1 582/2
சேடு உயரும் வேதிகைகள் செழும் சாந்து கொடு நீவி – 6.வம்பறா:1 1174/3
சேடு உயர் மாடம் மன்னும் செழும் திரு வீதி சார்ந்தார் – 6.வம்பறா:2 111/4

மேல்


சேடை (2)

பூ நெருங்கு தோரை மலி சேடை நல்கி போர் வேடர் கோமானை போற்றி நின்றாள் – 3.இலை:3 48/4
சென்று அங்கு வள்ளல் திரு நெற்றியில் சேடை சாத்தி – 3.இலை:3 66/2

மேல்


சேண் (24)

வலம்கொள்வது போல் புடை குழும் காட்சி மேவி மிகு சேண் செல ஓங்கும் – 1.திருமலை:5 95/3
தென் திரு வாயில் கடந்து முன் போந்து சேண் படும் திரு எல்லை இறைஞ்சி – 1.திருமலை:5 110/3
சேண் ஆர் மேரு சிலை வளைத்த சிவனார் அடியார் திரு கூட்டம் – 2.தில்லை:6 8/1
திண் திறல் மறவர் ஆர்ப்பு சேண் விசும்பு இடித்து செல்ல – 3.இலை:3 38/3
சேண் உயர் திருக்காளத்தி மலை மிசை எழுந்து செவ்வே – 3.இலை:3 96/3
சேண் உலாவு சீர் சேரனார் திருமலைநாட்டு – 4.மும்மை:5 4/2
சேண் திகழ் வீதிகள் பொலிய திரு மலி மங்கலம் செய்தார் – 5.திருநின்ற:1 218/4
சேண் நிலவு திருமலையில் திருப்பணி ஆயின செய்து – 5.திருநின்ற:1 347/1
திரு நதி துறை யாவையும் பயில் சேண் நெடும் கிரி வட்டையும் – 5.திருநின்ற:1 351/2
செம்பொன்னும் நவமணியும் சேண் விளங்க ஆங்கு எவையும் – 5.திருநின்ற:1 417/1
சேண் உயர் மாடம் ஓங்கும் திரு பதி அதனில் செய்ய – 6.வம்பறா:1 128/3
சேண் அளவு பட ஓங்கும் திருக்கடைக்காப்பு சாத்தி செம் கண் நாக – 6.வம்பறா:1 457/2
சேண் உயர் மாட புகலி உள்ளார் திருஞானசம்பந்த பிள்ளையாரை – 6.வம்பறா:1 550/1
சேண் உயர் விண்ணின்-நின்று இழிந்த இந்த சீர் கொள் விமானத்து காட்டுகின்றோம் – 6.வம்பறா:1 555/2
சென்னி மிசை கரம் குவித்து முன்பு சென்று சேண் நிலத்து வணங்குதலும் திருந்து சண்பை – 6.வம்பறா:1 577/3
சேண் உயர்ந்த வாயில் நீடு சீர் கொள் சண்பை மன்னனார் – 6.வம்பறா:1 990/1
திரு எல்லையினை பணிந்து சென்று அணைவார் சேண் விசும்பை – 6.வம்பறா:1 1137/1
சேண் உயர்ந்த திருத்தோணி வீற்றிருந்த சிவபெருமான் – 6.வம்பறா:1 1149/1
சேண் உயரும் மாடங்கள் திரு பெருகு மண்டபங்கள் – 6.வம்பறா:1 1173/1
சிந்தை மலர்ந்து திரு வீழிமிழலை இறைஞ்சி சேண் விசும்பின் – 6.வம்பறா:2 58/2
சேண் ஆரும் தழல் பிழம்பாய் தோன்றிது தெளிந்தாராய் – 7.வார்கொண்ட:1 8/4
திங்கள் முடியார் திருப்புத்தூர் இறைஞ்சி போந்து சேண் விளங்கும் – 7.வார்கொண்ட:4 90/3
திரு மலியும் புகழ் விளங்க சேண் நிலத்தில் எ உயிரும் – 8.பொய்:8 2/1
சிலம்பு தெண் திரை கானலின் சேண் எலாம் – 9.கறை:4 3/4

மேல்


சேண்படு (1)

சேண்படு புலத்தாரேனும் சென்று அடி பணிந்தார் ஒத்தார் – 6.வம்பறா:1 606/4

மேல்


சேணிடை (4)

தே_மொழி அவரும் சூழ சேணிடை கழிந்து சென்றார் – 5.திருநின்ற:4 42/4
சேணிடை சென்று நின்றார் சிதறினார் திகைத்தார் மன்னன் – 6.வம்பறா:1 816/3
தேசு தங்கிய யானையும் புரவியும் இழிந்து சேணிடை செல்வார் – 13.வெள்ளானை:1 40/3
சென்று கண்_நுதல் திரு முன்பு தாழ்ந்து வீழ்ந்து எழுந்து சேணிடை விட்டு – 13.வெள்ளானை:1 42/1

மேல்


சேணிடையும் (1)

சேணிடையும் தீங்கு அடையா திருத்தொண்டர் உரைசெய்தார் – 2.தில்லை:2 34/4

மேல்


சேணும் (1)

சேணும் அறிய_அரிய திருத்தொண்டில் செறிய சிறந்து உள்ளார் – 6.வம்பறா:4 2/4

மேல்


சேதாம்பல் (1)

சேதாம்பல் வாய் திறக்கும் திருவாரூர் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:4 120/4

மேல்


சேதி (3)

மெய்ப்பொருள் சேதி வேந்தன் செயலினை விளம்பல்உற்றேன் – 2.தில்லை:4 27/4
சேதி நல் நாட்டு நீடு திருக்கோவலூரின் மன்னி – 2.தில்லை:5 1/1
நன் நெறி காத்த சேதி நாதனார் பெருமை-தன்னில் – 2.தில்லை:5 24/2

மேல்


சேதியர் (1)

சேதியர் பெருமான் கோயில் திரு மணி வாயில் சேர்ந்தான் – 2.தில்லை:5 8/4

மேல்


சேதுவின்-கண் (1)

சேதுவின்-கண் செம் கண் மால் பூசை செய்த சிவபெருமான்-தனை பாடி பணிந்து போந்து – 6.வம்பறா:1 889/1

மேல்


சேந்தன் (1)

சேந்தன் அளித்த திருமறையோர் மூதூர் செல்வ சேய்ஞலூர் – 4.மும்மை:6 1/4

மேல்


சேம (4)

சேம துணையாம் அவர் பேர் அருளை தொழுதே திரு நாவலர் கோன் மகிழ – 1.திருமலை:5 180/3
சேம உதய பரிதியில் திகழ் பிரானை – 6.வம்பறா:1 41/2
செரு எழும் தனு அது ஒன்றும் சேம வில் ஒன்றும் ஆக – 6.வம்பறா:1 1097/3
தேடும் அ பெரும் சேம வைப்பாம் என – 9.கறை:4 2/2

மேல்


சேமங்கள் (1)

திருகு கரும் தாள் கொளுவி சேமங்கள் செய்து அமைத்தார் – 5.திருநின்ற:1 96/4

மேல்


சேமத்து (1)

சிந்தை செய்து வேறு இடத்து ஒரு சேமத்து வைத்தார் – 2.தில்லை:7 16/4

மேல்


சேமம் (2)

சேமம் நிலவு திருநீற்றின் சிறந்த வெண்மை திருந்து ஒளியால் – 4.மும்மை:2 2/2
தீங்கு புரிந்தவன்-தன்னை சேமம் உற கொடு போகி – 5.திருநின்ற:1 123/2

மேல்


சேமிப்பது (1)

சேர என்பொடு சாம்பல் சேமிப்பது தெளிவார் – 6.வம்பறா:1 1065/4

மேல்


சேய்ஞலூர் (6)

சேந்தன் அளித்த திருமறையோர் மூதூர் செல்வ சேய்ஞலூர் – 4.மும்மை:6 1/4
பெருமை பிறங்கும் சேய்ஞலூர் பிள்ளையார்-தம் உள்ளத்தில் – 4.மும்மை:6 37/1
சீலம் திகழும் சேய்ஞலூர் பிள்ளையார் தம் திரு கையில் – 4.மும்மை:6 58/2
செய் தலை பணிலம் முத்து ஈனும் சேய்ஞலூர் – 6.வம்பறா:1 242/4
திரு மலி புகலி மன் சேர சேய்ஞலூர்
அரு_மறையவர் பதி அலங்கரித்து முன் – 6.வம்பறா:1 243/1,2
வேதியர் சேய்ஞலூர் விமலர்-தம் கழல் – 6.வம்பறா:1 248/1

மேல்


சேய்த்து (3)

சென்றனர் இப்பொழுது அதுவும் சேய்த்து அன்று நணித்து என்றார் – 5.திருநின்ற:5 8/4
வந்து கோபுர மணி நெடு வாயில் சேய்த்து ஆக – 6.வம்பறா:1 225/1
மங்கை_பாகர்-தம் திரு முன்பு சேய்த்து ஆக வந்தித்து மகிழ்வு எய்தி – 13.வெள்ளானை:1 45/1

மேல்


சேய்ந்த (1)

தேன் அலர் கொன்றையார் தம் திருமேனி பூங்க சேய்ந்த
மான வன் கயிறு பூண்டு கழுத்தினால் வருந்தல்உற்றார் – 3.இலை:4 27/3,4

மேல்


சேய (11)

சேய காலம் தொடர்ந்தும் தெளிவு இலா – 3.இலை:6 5/2
சேய ஒளியிடை அலைய திருவாளன் எழுத்து_அஞ்சும் – 3.இலை:7 26/3
சேய நீள் விழி பரத்தியர் தொடுப்பன செருந்தி – 4.மும்மை:5 34/2
சேய தண் நறும் செழு முகை செறியும் முண்டகங்கள் – 4.மும்மை:5 37/2
சேய ஓடை களிறே திகைப்பன – 4.மும்மை:5 107/3
சேய பொருள் திரு மறையும் தீம் தமிழும் சிறக்க வரு – 6.வம்பறா:1 44/3
சேய மலர் சேவடி விளக்கி தெளித்து கொண்ட செழும் புனலால் – 6.வம்பறா:2 34/2
சேய நீர்மை அடைந்தாராய் நம்பி செம்பொன் கழல் பணிந்தார் – 7.வார்கொண்ட:4 78/4
சேய கொங்க நாடு அணைந்தார் திருவாரூரர் சேரருடன் – 7.வார்கொண்ட:4 140/4
சேய புல தெவ்வர் எதிர் நெல்வேலி செரு களத்து – 9.கறை:3 3/2
சேய நல் நெறி குறுகிட குறுகினார் திருவஞ்சைக்களம்-தன்னில் – 13.வெள்ளானை:1 28/4

மேல்


சேயடியின் (1)

செருப்பு_அடி அ இளம் பருவ சேயடியின் சிறப்பு உடைத்து-ஆல் – 3.இலை:3 158/4

மேல்


சேயது (2)

என்றலும் நின்ற ஐயர் இங்கு உளேன் இருப்பும் சேயது
அன்று இந்த வெண்ணெய்நல்லூர் அது நிற்க அறத்து ஆறு இன்றி – 1.திருமலை:5 47/1,2
சேயது ஆக்கினார் திருவையாறு அமர்ந்து அமை திகழ – 5.திருநின்ற:1 382/4

மேல்


சேயவர்-தம்மில் (1)

சேயவர்-தம்மில் மூத்த திருநாவுக்கரசை வாழை – 5.திருநின்ற:5 23/3

மேல்


சேயவன் (1)

சேயவன் திரு பேரம்பலம் செய்யா – 0.பாயிரம்:1 8/2

மேல்


சேயும் (1)

தீ விடம் நீங்க உய்ந்த திரு மறையவர் தம் சேயும்
மேவிய உறக்கம் நீங்கி விரைந்து எழுவானை போன்று – 5.திருநின்ற:5 36/1,2

மேல்


சேயையும் (1)

காதலர் இவர்க்கு மூத்த சேயையும் காட்டும் முன்னே – 5.திருநின்ற:5 32/2

மேல்


சேர் (61)

கொங்கு சேர் குழற்கு ஆம் மலர் கொய்திட – 1.திருமலை:1 23/2
பெருமை சேர் பெரும்பற்றப்புலியூர் என்று – 1.திருமலை:1 31/3
பெருமை சேர் பதியே ஆக பேசியது உமக்கு இ ஊரில் – 1.திருமலை:5 64/3
நீறு சேர் திரு மேனியர் மனத்து நினைத்த யாவையும் வினைப்பட முடித்து – 2.தில்லை:3 3/2
பாரில் நீடிய பெருமை சேர் பதி பழையாறை – 2.தில்லை:7 1/4
சேர் வில் பொலி கங்கண மீது திகழ்ந்த முன்கை – 3.இலை:3 60/3
நிலவிய இருவினை வலையிடை நிலை சுழல் பவர் நெறி சேர்
புலனுறு மனனிடை தடைசெய்த பொறிகளின் அலவு உளவே – 3.இலை:3 85/3,4
திங்கள் சேர் சடையார்-தம்மை சென்று அவர் காணா முன்னே – 3.இலை:3 104/1
ஆறு சேர் சடையார்-தம்மை அணுக வந்து அணையா நின்றார் – 3.இலை:3 167/4
நீறு சேர் திரு மேனியர் நிலா திகழ் முடி மேல் – 4.மும்மை:5 19/1
துண்ட மதி சேர் சடை கொன்றை மாலை வாங்கி சூட்டினார் – 4.மும்மை:6 56/4
செவ்வாறு சேர் திலகவதியார் தாள் சேர்வன் என – 5.திருநின்ற:1 59/4
நாலூர் தென் திருச்சேறை குடவாயில் நறையூர் சேர்
பாலூரும் இன் மொழியாள் பாகனார் கழல் பரவி – 5.திருநின்ற:1 216/1,2
இலை கொள் சூல படையார் சேர் இடங்கள் பிறவும் தொழ அணைவார் – 5.திருநின்ற:1 300/4
சேர் வரும் பழுவம் புரண்டு புரண்டு சென்றனர் செம்மையோர் – 5.திருநின்ற:1 359/4
பெருமை சேர் வடிவம் வேண்டி பெற்றனள் என்று பின்றை – 5.திருநின்ற:4 58/2
இழுதும் இருள் சேர் இரவு புறம் கடையில் துயில இல்லத்து – 5.திருநின்ற:7 23/3
திங்கள் சேர் சடையார் தம் திருவருட்கு செய் தவத்தின் – 6.வம்பறா:1 53/2
வேத காரணர் ஆய வெண் பிறை சேர் செய்ய சடை – 6.வம்பறா:1 79/1
காரைகள் கூகை முல்லை என நிகழ் கலை சேர் வாய்மை – 6.வம்பறா:1 115/1
பல்கு வெண் கதிர் பத்தி சேர் நித்தில சிவிகை – 6.வம்பறா:1 219/1
மன்னும் அ கோயில் சேர் மான் மறி கையர்-தம் – 6.வம்பறா:1 364/1
செற்றவர் சேர் பதி பிறவும் சென்று போற்றி திருமறைக்காட்டு-அதன் மருங்கு சேர்ந்தார் அன்றே – 6.வம்பறா:1 575/4
பீலி சேர் சமண் கையர் பிள்ளையார்-தமை சூழ்வார் – 6.வம்பறா:1 756/2
மாசு சேர் அமணர் எல்லாம் மதியினில் மயங்கி கூற – 6.வம்பறா:1 818/1
பாடு சேர் அமணர் அஞ்சி பதைப்புடன் பணிந்து நின்றார் – 6.வம்பறா:1 848/4
பொருப்புறு கை சிலையார் சேர் பதி பிறவும் தொழ போவார் – 6.வம்பறா:1 882/4
நீறு சேர் தவ குழாத்தினை நீளிடை கண்டே – 6.வம்பறா:1 1074/2
வெந்த சாம்பலோடு என்பு சேர் குடத்தை வேறு எடுத்து – 6.வம்பறா:1 1081/4
மங்கை என்பு சேர் குடத்தினை வைத்து முன் வணங்க – 6.வம்பறா:1 1083/2
நீறு சேர் திருத்தொண்டரும் நிகர் இலாதவருக்கு – 6.வம்பறா:1 1182/3
கடி சேர் மலர் தாள் தொழுது உய்ய கருணை அளிக்க வேண்டும் என – 6.வம்பறா:2 39/2
தொடி சேர் தளிர் கை இவர் எனக்கு தூய மக்கள் என கொண்டபடியே – 6.வம்பறா:2 39/3
முந்தை இழிந்த மொய் ஒளி சேர் கோயில்-தன்னை முன் வணங்கி – 6.வம்பறா:2 58/3
பனி மதி சேர் சடையார் தம் பதி பலவும் பணிந்து போய் – 6.வம்பறா:2 149/3
ஆலாலம் சேர் கறை மிடற்றார் அருளால் முன்னை அநிந்திதையார் – 6.வம்பறா:2 207/4
கடி சேர் மணமும் இனி நிகழும் காலம் என்ன கற்பு வளர் – 6.வம்பறா:2 210/3
பெற்ற தாதை சுற்றத்தார் பிறை சேர் முடியார் விதியாலே – 6.வம்பறா:2 219/1
கன்னிமாடம் மருங்கு அமைத்து கடி சேர் முறைமை காப்பு இயற்றி – 6.வம்பறா:2 220/3
அக்கணமே மணி ஒளி சேர் திரு மேனி ஆயினார் – 6.வம்பறா:2 299/4
பெருமானை திரு மூலட்டானம் சேர் பிஞ்ஞகனை – 6.வம்பறா:2 308/2
செம்மை நெறி சேர் திருநாவலூர் ஒற்றியூர் சேர்ந்து – 6.வம்பறா:2 314/1
முல்லை முகை வெண் நகை பரவை முகில் சேர் மாடத்திடை செல்ல – 6.வம்பறா:2 330/3
செம்மை சேர் சிந்தை மாந்தர் சென்று எதிர்கொண்டு போற்ற – 6.வம்பறா:2 400/1
முன்னாக எதிர்கொண்டு கொடு புகுந்து முந்நூல் சேர்
பொன் மார்பில் சிறுத்தொண்டர் புகலி காவலனார்-தம் – 7.வார்கொண்ட:3 23/2,3
வடி சேர் சூல கபாலத்தார் வட தேசத்தோம் என்றார் வண் – 7.வார்கொண்ட:3 43/2
துடி சேர் கரத்து பயிரவர் யாம் சொல்ல இங்கும் இராதே போய் – 7.வார்கொண்ட:3 43/3
கடி சேர் திரு ஆத்தியின் நிழல் கீழ் இருந்தார் கணபதீச்சரத்து – 7.வார்கொண்ட:3 43/4
கொடி சேர் விடையார் திரு முகம் கைக்கொடுத்து வணங்க கொற்றவனார் – 7.வார்கொண்ட:4 31/2
ஒன்றும் உணர்வால் நமை போற்றி உரை சேர் பதிகம் பாடுதலால் – 7.வார்கொண்ட:4 44/3
மறி சேர் கரத்தார் கோயில் பல வணங்கி மகிழ்ந்து வழிக்கொள்வார் – 7.வார்கொண்ட:4 61/4
சேர் ஊராம் திரு முருகன் பூண்டியினில் சென்று எய்தி – 7.வார்கொண்ட:4 168/3
கிளர் ஒளி சேர் நெடு வான_பேர்_ஆற்று கொடு கெழுவும் – 8.பொய்:2 2/3
திரு_மகட்கு வாழ் சேர் இடம் ஆதலில் யாவும் – 8.பொய்:4 3/2
வாகு சேர் வலை நாள் ஒன்றில் மீன் ஒன்று வரினும் – 8.பொய்:4 12/1
ஞான முனிவர் இமையவர்கள் நெருங்கு நலம் சேர் முன்றிலின் உள் – 10.கடல்:3 3/2
தம்பிரானை தோழமை கொண்டு அருளி தமது தடம் புயம் சேர்
கொம்பு அனார்-பால் ஒரு தூது செல்ல ஏவி கொண்டு அருளும் – 12.மன்னிய:6 1/1,2
நன்று மகிழ்வுற்று இன்புற்று நலம் சேர் தலமும் கானமும் – 13.வெள்ளானை:1 15/2
மாசு_இல் வெண்மை சேர் பேர் ஒளி உலகு எலாம் மலர்ந்திட வளர் மெய்ம்மை – 13.வெள்ளானை:1 40/1
விரை செய் கொன்றை சேர் வேணியாய் இனியொரு விண்ணப்பம் உளது என்று – 13.வெள்ளானை:1 46/4
நன்மை சேர் கண நாதராய் அவர் செயும் நயப்பு உறு தொழில் பூண்டார் – 13.வெள்ளானை:1 49/4

மேல்


சேர்-மின் (1)

காழி நகர் சேர்-மின் என கடை முடிந்த திருப்பதிகம் – 6.வம்பறா:1 1148/3

மேல்


சேர்க (1)

சென்று பொன் கழல் சேர்க என திரையொடும் திரிந்தார் – 8.பொய்:4 17/4

மேல்


சேர்கின்றார் (3)

செய்ய சடையார்-தமை சேரார் தீங்கு நெறி சேர்கின்றார் என்று – 5.திருநின்ற:1 253/3
செற்ற சிலையார் திருப்பைஞ்ஞீலியினை சென்று சேர்கின்றார் – 5.திருநின்ற:1 303/4
திருநாவலூர் மன்னர் சேர்கின்றார் என கேட்டு – 6.வம்பறா:2 169/1

மேல்


சேர்த்த (1)

சிலை மிசை பொலிந்த செம் கை திண்ணனார் சேர்த்த கல்லை – 3.இலை:3 124/3

மேல்


சேர்த்தார் (2)

பணை முரசு இயம்ப வாழ்த்தி பைம்பொன் நாண் காப்பு சேர்த்தார் – 1.திருமலை:5 12/4
ஏற்ப வைத்து அணிந்த முத்தின் எழில் வளர் மகுடம் சேர்த்தார் – 6.வம்பறா:1 1215/4

மேல்


சேர்த்தி (6)

காசொடு தொடுத்த காப்பு கலன் புனை அரை_ஞாண் சேர்த்தி
தேசு உடை மருப்பில் தண்டை செறி மணி குதம்பை மின்ன – 3.இலை:3 21/2,3
குலம் விளங்கு கரிய குன்றின் கோலம் முன்கையில் சேர்த்தி
மலை உறை மாக்கள் எல்லாம் வாழ்த்த எடுத்து இயம்பினார்கள் – 3.இலை:3 33/3,4
முறி கொண்ட கண்ணிக்கு இடை மொய் ஒளி பீலி சேர்த்தி
வெறி கொண்ட முல்லை பிணை மீது குறிஞ்சி வெட்சி – 3.இலை:3 57/2,3
திரையில் படு வெள் அலகு ஆர்த்து விளிம்பு சேர்த்தி
நிரையில் பொலி நீள் உடை தோல் கரிகை புறம் சூழ் – 3.இலை:3 61/2,3
சென்னி சேர்த்தி மகிழ்ந்த சிறப்பினார் – 5.திருநின்ற:2 10/4
செப்ப_அரும் பதிக மாலை கண் காட்டு நுதல் முன் சேர்த்தி
முப்புரம் செற்றார் பாதம் சேரும் முக்குளமும் பாடி – 6.வம்பறா:1 126/2,3

மேல்


சேர்த்து (2)

செற்றவர் செய்ய பாத தாமரை சென்னி சேர்த்து
பெற்றனம் பெருமை இன்று பிறந்தனம் பிறவா மேன்மை – 6.வம்பறா:1 771/2,3
கற்பக பூம் கொம்பு அன்னார் தம்மையும் காப்பு சேர்த்து
பொற்புறும் சடங்கு முன்னர் பரிவுடன் செய்து அ வேலை – 6.வம்பறா:1 1222/3,4

மேல்


சேர்த்தும் (1)

சேர்த்தும் இன் இசை பதிகமும் திருக்கடைக்காப்பு – 6.வம்பறா:1 668/1

மேல்


சேர்தும் (1)

திருஅரத்துறை சேர்தும் என்று ஏகுவார் – 6.வம்பறா:1 185/4

மேல்


சேர்ந்த (13)

செல்லும் மா மறையோன்-தன் பின் திரி முக காந்தம் சேர்ந்த
வல் இரும்பு அணையும் மா போல் வள்ளலும் கடிது சென்றார் – 1.திருமலை:5 50/1,2
சென்று தேவ ஆசிரியனை சேர்ந்த பின் – 1.திருமலை:5 155/4
செந்தாமரை மேலன நித்திலம் சேர்ந்த கோவை – 4.மும்மை:1 6/4
திரண்டு வரும் திருநீற்று தொண்டர் குழாம் இரு திறமும் சேர்ந்த போதில் – 5.திருநின்ற:1 233/3
சேர்ந்த நயன பயன் பெற்று திளைப்ப திருவேகம்பர்-தமை – 5.திருநின்ற:1 323/3
புக்கு இறைஞ்சி எதிர்நின்று போற்றுகின்றார் பொங்கு திரை நதி புனலும் பிறையும் சேர்ந்த
செக்கர் முடி சடை மவுலி வெண்நீற்றார்-தம் திரு மேனி ஒரு பாகம் பசுமை ஆக – 6.வம்பறா:1 485/1,2
செந்நெறி விளக்குகின்றார் திருமறைக்காடு சேர்ந்த
நல் நிலை கன்னிநாட்டு நல்_வினை பயத்தால் கேட்டார் – 6.வம்பறா:1 605/3,4
ஆசு_இலா நெறியில் சேர்ந்த அரசனும் அவரை விட்டு – 6.வம்பறா:1 818/2
செம்பொன் நேர் சடையார்-தம் கொள்ளம்பூதூர்-தனை சேர அக்கரையில் சேர்ந்த பின்பு – 6.வம்பறா:1 899/2
செம்பொன் மலை வில்லியார் திருக்காளத்தி சேர்ந்த திருத்தொண்டர் குழாம் அடைய ஈண்டி – 6.வம்பறா:1 1018/2
தாம நீள் கண்ணி சேர்ந்த சலாகை தூக்கியதே போலும் – 6.வம்பறா:1 1104/3
சந்த விரை சூழ் புயம் சேர்ந்த பரிசு தெரிய சாற்றுவாம் – 6.வம்பறா:2 206/4
மாசு சேர்ந்த முடை உடலார் மாற்றம் கேட்டு மறு மாற்றம் – 6.வம்பறா:4 7/1

மேல்


சேர்ந்தனம் (1)

செப்ப_அரும் சீர் சிறுத்தொண்டர்-தமை காண சேர்ந்தனம் யாம் – 7.வார்கொண்ட:3 40/3

மேல்


சேர்ந்தனர் (3)

செப்பியே சென்று சேர்ந்தனர் சேர்விலார் – 6.வம்பறா:1 354/3
செம் கண் மால் விடையார் பாதம் சேர்ந்தனர் சிறப்பினோடும் – 6.வம்பறா:2 408/4
செய்ய பாத திரு நிழல் சேர்ந்தனர் – 8.பொய்:7 6/4

மேல்


சேர்ந்தனரே (1)

செவ் வண்ணர் கோயில் திரு வீரட்டானத்தை சேர்ந்தனரே – 5.திருநின்ற:1 142/4

மேல்


சேர்ந்தார் (50)

திரு மலி சிறப்பின் ஓங்கி சீர் மண பருவம் சேர்ந்தார் – 1.திருமலை:5 6/4
தர வரு மகிழ்ச்சி பொங்க தளர் நடை பருவம் சேர்ந்தார் – 1.திருமலை:5 133/4
சில முறை ஆண்டு செல்ல சிலை பயில் பருவம் சேர்ந்தார் – 3.இலை:3 27/4
குளிர் வரு நதி ஊடு ஏகி குல வரை சாரல் சேர்ந்தார் – 3.இலை:3 100/4
செழு மலர் சோலை வேலி திருப்பனந்தாளில் சேர்ந்தார் – 3.இலை:4 25/4
திருப்பணி பலவும் செய்து சிவ பத நிழலில் சேர்ந்தார் – 3.இலை:4 34/4
தீது_இலா நிலை சிவபுரி எல்லையில் சேர்ந்தார் – 4.மும்மை:3 8/4
சீர் ஆர் திருவதிகை வீரட்டானம் சேர்ந்தார் – 5.திருநின்ற:1 42/4
தெருள் கலை ஞான கன்றும் அரசும் சென்று செம் சடை வானவர் கோயில் சேர்ந்தார் அன்றே – 5.திருநின்ற:1 185/4
செறி விரை நல் மலர் சோலை பழையாறு எய்தி திருச்சத்தி முற்றத்தில் சென்று சேர்ந்தார் – 5.திருநின்ற:1 192/4
சேர்ந்தார் செல்வ திருமறைக்காடு எல்லை_இல்லா சீர்த்தியினார் – 5.திருநின்ற:1 263/4
சென்று சேர்ந்தார் தென் புகலி கோவும் அரசும் திரு முன்பு – 5.திருநின்ற:1 264/4
திரை வளர் வேலை கரை போய் திருவொற்றியூர் சேர்ந்தார் – 5.திருநின்ற:1 332/4
தேடிய மாலுக்கு அரியார் திருப்பூந்துருத்தியை சேர்ந்தார் – 5.திருநின்ற:1 386/4
தீண்டு கொடி மதில் மதுரை திருஆலவாய் சேர்ந்தார் – 5.திருநின்ற:1 402/4
திருமண திறம் சேவித்து நம்பர் தாள் சேர்ந்தார் – 5.திருநின்ற:6 37/4
சீர் வளர் தொண்டரை கொண்டு திரு மாளிகையினில் சேர்ந்தார் – 6.வம்பறா:1 272/4
செம் சடை வேதியர் மன்னும் திருமங்கலக்குடி சேர்ந்தார் – 6.வம்பறா:1 293/4
செம் கண் மாலுக்கு அரியார் தந்திருந்து தேவன்குடி சேர்ந்தார் – 6.வம்பறா:1 294/4
நீறு அணி செம் பவள பொருப்பின் நெடுங்கள மா நகர் சென்று சேர்ந்தார் – 6.வம்பறா:1 348/4
தருவார் தம் திருச்சத்திமுற்றத்தின் புறம் சேர்ந்தார் – 6.வம்பறா:1 390/4
செம்மலார் திருவாவடுதுறையினை சேர்ந்தார் – 6.வம்பறா:1 417/4
தெள் நிலா அணிவார் திரு கோழம்பம் சேர்ந்தார் – 6.வம்பறா:1 431/4
தேனொடு வண்டு முரலும் சோலை திரு பதி மற்று அதன் எல்லை சேர்ந்தார் – 6.வம்பறா:1 499/4
பக்கம் பாரிடம் பரவ நின்று ஆடுவார் பாம்புரம் நகர் சேர்ந்தார் – 6.வம்பறா:1 537/4
சிவன் மகிழும் தானங்கள் வணங்க போவார் தென் திருவாஞ்சிய மூதூர் சென்று சேர்ந்தார் – 6.வம்பறா:1 572/4
செம்பொன் மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தி திருமலிவெண்துறை தொழுவான் சென்று சேர்ந்தார் – 6.வம்பறா:1 574/4
செற்றவர் சேர் பதி பிறவும் சென்று போற்றி திருமறைக்காட்டு-அதன் மருங்கு சேர்ந்தார் அன்றே – 6.வம்பறா:1 575/4
தேடு மா மறைகள் கண்டார் திருமறைக்காடு சேர்ந்தார் – 6.வம்பறா:1 597/4
தேன் கமழ் கைதை நெய்தல் திருமறைக்காடு சேர்ந்தார் – 6.வம்பறா:1 608/4
செப்புவான் புறத்து உளோரும் தென்னவன் மதுரை சேர்ந்தார் – 6.வம்பறா:1 635/4
திண்ணிய பொன் சிலை தட கை இராமன் செய்த திரு இராமேசுரத்தை சென்று சேர்ந்தார் – 6.வம்பறா:1 887/4
நன்றும் இன்புற பணிந்து செல்வார் திருக்கோவலூர் நகர் சேர்ந்தார் – 6.வம்பறா:1 967/4
செம்மை நெறி வழுவாத பதியின் மாடு ஓர் செழும் பதியில் அன்று இரவு பள்ளி சேர்ந்தார் – 6.வம்பறா:1 1008/4
செம் கை சென்னி மேல் குவிந்திட திரு முன்பு சேர்ந்தார் – 6.வம்பறா:1 1077/4
சிரபுரத்து பெருந்தகையார் தம் திரு மாளிகை சேர்ந்தார் – 6.வம்பறா:1 1151/4
திகழ முற்றிய செம்மலார் திரு முன்பு சேர்ந்தார் – 6.வம்பறா:1 1184/4
சிவன் அமர்ந்து உறையும் நல்லூர் திரு பெருமணத்தை சேர்ந்தார் – 6.வம்பறா:1 1206/4
சென்னி முகில் தோய் தடம் குவட்டு திரு திருக்காளத்தி மலை சேர்ந்தார் – 6.வம்பறா:2 195/4
தண் தளிர் செம் கை பற்றிக்கொண்டு மாளிகை உள் சேர்ந்தார் – 6.வம்பறா:2 380/4
திங்கள் அணி சடையார் திருக்காளத்தி மலை சேர்ந்தார் – 6.வம்பறா:3 4/4
செற்றம் முதல் கடிந்தவர்-தாம் ஆவடுதண்துறை சேர்ந்தார் – 6.வம்பறா:3 24/4
தெருள் பொழி வண் தமிழ்நாட்டு செங்காட்டங்குடி சேர்ந்தார் – 7.வார்கொண்ட:3 35/4
உம்பர் மகிழ அரசு அளித்தே உமையாள் கணவன் அடி சேர்ந்தார் – 7.வார்கொண்ட:6 7/4
வாய்ந்த மனம் போல் உடம்பும் வட கயிலை மலை சேர்ந்தார் – 9.கறை:2 4/4
மண்ணில் அருள்புரிந்து இறைவர் மலர் அடியின் நிழல் சேர்ந்தார் – 10.கடல்:2 10/4
பொன் நாட்டின் அமரர் தொழ புனிதர் அடி நிழல் சேர்ந்தார் – 10.கடல்:4 6/4
அடைவுறு நலத்தர் ஆகி அரன் அடி நீழல் சேர்ந்தார் – 12.மன்னிய:3 4/4
செந்தமிழ் பாணனாரும் திருவருள் பெற்று சேர்ந்தார் – 12.மன்னிய:5 6/4
அமரர் நாடு ஆளாது ஆரூர் ஆண்டவர் ஆரூர் சேர்ந்தார் – 12.மன்னிய:5 7/4

மேல்


சேர்ந்தார்கள் (2)

செறற்கு_அரும் போர் வீரர்க்கு இரு மருங்கும் சேர்ந்தார்கள் – 3.இலை:2 12/4
சேர்ந்தார்கள் தம் பெருமான் திருவீழிமிழலையினை – 5.திருநின்ற:1 249/4

மேல்


சேர்ந்தாரை (1)

சீலம் இலரே எனினும் திருநீறு சேர்ந்தாரை
ஞாலம் இகழ்ந்த அரு நரகம் நண்ணாமல் எண்ணுவார் – 8.பொய்:3 7/1,2

மேல்


சேர்ந்தாள் (1)

பூ அணை அமளி புக்கான் பொங்கு எழில் தேவி சேர்ந்தாள் – 6.வம்பறா:1 689/4

மேல்


சேர்ந்தான் (2)

சேதியர் பெருமான் கோயில் திரு மணி வாயில் சேர்ந்தான் – 2.தில்லை:5 8/4
படர் புனல் கன்னிநாட்டோர் பட்டினம் மருங்கு சேர்ந்தான் – 5.திருநின்ற:4 34/4

மேல்


சேர்ந்து (27)

சிமை அடையும் சோபான நிரையும் விண்ணும் தெரிவு_அரிய தூய்மையினால் அவற்றுள் சேர்ந்து
தமர்களுடன் இழிந்து ஏறும் மைந்தர் மாதர்-தங்களையும் விசும்பிடை-நின்று இழியா நிற்கும் – 4.மும்மை:5 96/2,3
சேர்ந்து அடை கருங்கலே சிவிகை ஆயிட – 5.திருநின்ற:1 131/2
சென்று சேர்ந்து திரு சத்தி முற்றத்து இருந்த சிவ கொழுந்தை – 5.திருநின்ற:1 193/1
திருவான்மியூர் மருந்தை சேர்ந்து பணிந்த அன்பினொடும் – 5.திருநின்ற:1 331/1
சிலை தட கை கண்ணப்பர் திரு பாதம் சேர்ந்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 346/2
சேர்ந்து விருப்பொடும் புக்கு திரு நட மாளிகை முன்னர் – 5.திருநின்ற:1 387/1
அடைவுற சென்று சேர்ந்து அங்கு அளவு_இல் பல் வளங்கள் முற்றி – 5.திருநின்ற:4 34/2
ஆடும் மா நடமும் நீ கண்டு ஆனந்தம் சேர்ந்து எப்போதும் – 5.திருநின்ற:4 61/3
நாதர்-தம் பாதம் சேர்ந்து நல் தமிழ் பதிகம் செய்வார் – 5.திருநின்ற:5 42/4
நிறை மதி பிள்ளை நீள் நிலம் சேர்ந்து என – 6.வம்பறா:1 188/2
கன்னி இளம் கொடி உணர்வு கழிந்து நிலம் சேர்ந்து அதனை கண்டு நோக்கி – 6.வம்பறா:1 317/1
திகழ்ந்த ஞாயிறு துணை புணர் ஓரை உள் சேர்ந்து
நிகழ்ந்த தன்மையில் நிலவும் ஏழ் கடல் நீர்மை குன்ற – 6.வம்பறா:1 384/2,3
திருவின் ஆர்ந்த கோச்செங்கணான் அ நகர் செய்த கோயிலை சேர்ந்து
மருவு வாய்மை வண் தமிழ்_மாலை அ வளவனை சிறப்பித்து – 6.வம்பறா:1 532/2,3
செந்தமிழ் சொல் வேந்தரும் செய்தவரும் சேர்ந்து அருள – 6.வம்பறா:1 547/2
அன்னவர் வாது செய்தால் வென்றவர் பக்கம் சேர்ந்து
துன்னுவது உறுதியாகும் சுழிவுறேல் மன்ன என்றார் – 6.வம்பறா:1 693/3,4
நீறு அணிந்த செல்வர் பதி பிறவும் சேர்ந்து நிலவு திருப்பதிகங்கள் நிகழ பாடி – 6.வம்பறா:1 885/2
செப்ப_அரிய புகழ் திருவாடானை சேர்ந்து செந்தமிழ்_மாலைகள் சாத்தி சிவனார் மன்னும் – 6.வம்பறா:1 891/3
மன்னு திருத்தொண்டருடன் மீண்டு சேர்ந்து மன்னவனும் மங்கையருக்கரசியாரும் – 6.வம்பறா:1 893/2
சீர் நிலவு திருத்தெளிச்சேரியினை சேர்ந்து சிவபெருமான்-தனை பரவி செல்லும் போது – 6.வம்பறா:1 904/1
செம் கண் விடையார் திருப்பழனம் சேர்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 950/1
செம் கண் நுதலார் மேவு திரு வலிவலத்தை சேர்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 43/2
சேவில் வருவார் திரு ஆலம்பொழிலில் சேர்ந்து தாழ்ந்து இரவு – 6.வம்பறா:2 71/3
தெள் நீர் முடியார் திருவொற்றியூரில் சேர்ந்து செல் கதியும் – 6.வம்பறா:2 218/2
சீத மலர் தாமரை அடி கீழ் சேர்ந்து வீழ்ந்து செந்நின்று – 6.வம்பறா:2 240/3
செம்மை நெறி சேர் திருநாவலூர் ஒற்றியூர் சேர்ந்து
கொம்மை முலையார் சங்கிலியார் தம்மை குலவு மணம் புணர்ந்த – 6.வம்பறா:2 314/1,2
உவளகம் சேர்ந்து ஒதுங்குவது ஒக்கும்-ஆல் – 9.கறை:4 4/4
சேர்ந்து அயர்ந்து உரிமை தேவி புலம்பிட செம்பொன் புற்றுள் – 10.கடல்:1 7/3

மேல்


சேர்ந்தும் (1)

கார் வரை அடவி சேர்ந்தும் காணுதற்கு அரியார்-தம்மை – 3.இலை:3 128/2

மேல்


சேர்ப்பவர் (1)

சீத நீர் முடி சேர்ப்பவர் செய்கையும் – 1.திருமலை:2 11/2

மேல்


சேர்ப்பார் (1)

அரி தரு செந்நெல் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்
பரிவுற தடிந்த பன் மீன் படர் நெடும் குன்று செய்வார் – 1.திருமலை:2 23/1,2

மேல்


சேர்வதற்கு (2)

நல் நெறியே சேர்வதற்கு நாதன் தாள் நண்ணுவார் – 5.திருநின்ற:1 41/4
கற்றை வேணி முடியார்-தம் கழல் சேர்வதற்கு கலந்த வினை – 12.மன்னிய:3 5/1

மேல்


சேர்வதனுக்கு (1)

செங்கமல மலர் பாதம் சேர்வதனுக்கு உரியார்கள் – 11.பத்தராய்:1 5/4

மேல்


சேர்வது (1)

உற்று உமை சேர்வது எனும் திரு இயமகம் உவகையால் எடுத்து ஓதி – 6.வம்பறா:1 954/3

மேல்


சேர்வன் (3)

செவ்வாறு சேர் திலகவதியார் தாள் சேர்வன் என – 5.திருநின்ற:1 59/4
வென்றவர் பக்கம் சேர்வன் விரகு உண்டேல் அழையும் என்ன – 6.வம்பறா:1 723/2
அந்தம்_இல் சிவன் தாள் சேர்வன் என்னும் ஆதரவு பொங்க – 6.வம்பறா:1 1242/4

மேல்


சேர்வான் (1)

செப்ப_அரும் நிலைமை எண்ணி திருக்கோவலூரில் சேர்வான் – 2.தில்லை:5 6/4

மேல்


சேர்விலார் (1)

செப்பியே சென்று சேர்ந்தனர் சேர்விலார்
முப்புரம் செற்ற முன்னவர் கோயில் முன் – 6.வம்பறா:1 354/3,4

மேல்


சேர்வு (3)

சென்று உம்பர் தரத்தார்க்கும் சேர்வு அரியார் என செப்ப – 1.திருமலை:5 147/4
சேர்வு பெற கச்சில் செறிந்த உடை மேல் வீக்கி – 3.இலை:2 11/2
சேர்வு ஆகும் திரு வாயில் தீம் தமிழின் மாலைகளும் செம்பொன் தாளே – 5.திருநின்ற:1 225/2

மேல்


சேர்வுற்ற (1)

சேர்வுற்ற தந்திரியும் தேவர் பிரான் அர்ச்சனைகட்கு – 4.மும்மை:4 14/3

மேல்


சேர்வுற்றார் (4)

சென்னி மதி தோய் மாடம் மலி கொடுங்கோளூரை சேர்வுற்றார் – 5.திருநின்ற:3 7/4
தெள் நீர் முடியார் திருவண்ணாமலை சென்று சேர்வுற்றார் – 6.வம்பறா:1 970/4
திங்கள் முடியார் இனிது அமரும் திருவோத்தூரை சேர்வுற்றார் – 6.வம்பறா:1 973/4
செம் கண் விடை கொடியார் தம் இடை சுரத்தை சேர்வுற்றார் – 6.வம்பறா:1 1125/4

மேல்


சேர்வுறும் (1)

சென்னி வைத்து உடன் சேர்வுறும் விருப்பினால் சிறந்தார் – 5.திருநின்ற:6 22/4

மேல்


சேர (27)

சேர தாழ்ந்து எழுந்து அருகு சென்று எய்தி நின்று அழியா – 1.திருமலை:5 201/2
கை வடி நெடு வாள் ஏந்தி ஆள் உறா கானம் சேர
வெவ் வினை கொடியோன்-தன்னை விட்ட பின் மீண்டு போந்தான் – 2.தில்லை:5 19/3,4
அண்டர் வானவர்கட்கு எட்டா அருள் கழல் நீழல் சேர
கொண்டவர் இடையறாமல் கும்பிடும் கொள்கை ஈந்தார் – 2.தில்லை:5 23/3,4
செய் வரை போல் புயம் இரண்டும் செறிய புல்லி செழும் புலித்தோல் இருக்கையின் முன் சேர வைத்தான் – 3.இலை:3 52/4
கண்டத்திடை வெண் கவடி கதிர் மாலை சேர
கொண்ட கொடு பல் மணி கோத்து இடை ஏன கோடு – 3.இலை:3 59/1,2
சேர தொடு நீடு செருப்பு விருப்பு வாய்ப்ப – 3.இலை:3 62/2
தெள்ளும் சடையார் தேவர்கள் தம்பிராட்டி உடனே சேர மிசை – 4.மும்மை:6 22/3
உய்வான் சேர உற்ற நெறி இதுவே என்று அன்பினில் உய்த்தார் – 5.திருநின்ற:3 5/4
செவ்விய திரு உள்ளத்து ஓர் தடுமாற்றம் சேர நோக்கி – 5.திருநின்ற:5 33/2
செம் கை யாழ் திருநீலகண்ட பெரும்பாணருடன் சேர
மங்கையார் புகழ் மதங்க சூளாமணியாருடன் வர வந்தார் – 6.வம்பறா:1 177/3,4
திரு மலி புகலி மன் சேர சேய்ஞலூர் – 6.வம்பறா:1 243/1
செம் கை மான் மறியார் தம் திருமழபாடி புறத்து சேர செல்வார் – 6.வம்பறா:1 306/1
செழு மலர் சோலை திரு கற்குடி மலை சேர வந்தார் – 6.வம்பறா:1 342/4
சேர வரும் தொண்டருடன் திருப்பட்டீச்சரம் அணைந்தார் – 6.வம்பறா:1 396/4
திருஞானசம்பந்தர் திரு குடமூக்கினை சேர
வருவார் தம் பெருமானை வண் தமிழின் திருப்பதிகம் – 6.வம்பறா:1 407/1,2
சேர எழுந்தருளிய அ பேறு கேட்டு திறை மறைக்காட்டு அகன் பதியோர் சிறப்பில் பொங்கி – 6.வம்பறா:1 576/2
சிவ நெறி வளர்க்க வந்தார் திரு மடம் சேர செய்தார் – 6.வம்பறா:1 697/4
செம்பொன் நேர் சடையார்-தம் கொள்ளம்பூதூர்-தனை சேர அக்கரையில் சேர்ந்த பின்பு – 6.வம்பறா:1 899/2
சென்று சிவனார் பதிகள் பணிய வேண்டி திருக்கடவூர் அதன் மருங்கு சேர வந்தார் – 6.வம்பறா:1 926/4
சேர என்பொடு சாம்பல் சேமிப்பது தெளிவார் – 6.வம்பறா:1 1065/4
திரு கழுத்து ஆரம் தெய்வ கண்டிகை மாலை சேர
பருத்த முத்து ஒழுங்கு கோத்த படர் ஒளி வடமும் சாத்தி – 6.வம்பறா:1 1214/1,2
இம்பர் வாழ இன்னம்பர் நகரை சேர எய்தினார் – 6.வம்பறா:2 94/4
அடுக்கல் சேர அணைந்து பணிந்து அருளால் ஏறி அன்பு ஆறும் – 6.வம்பறா:2 196/3
செய்ய தாள் இணை முன் சேர விரைவினால் சென்று வீழ்ந்தார் – 6.வம்பறா:2 363/4
சிலை நாட்டிய வெல் கொடியாரை சேர தந்தார் என கங்கை – 7.வார்கொண்ட:4 79/3
கரு நீல மிடற்றார் செய்ய கழல் அடி நீழல் சேர
வரும் நீர்மை உடைய செம் கண் சோழர்-தம் மலர் தாள் வாழ்த்தி – 12.மன்னிய:4 18/1,2
தேன் அலம்பு தண் சோலை சூழ் மகோதையில் திருவஞ்சைக்களம் சேர
கால் நிலம் கொள வலம்கொண்டு மேவினார் கடி மதில் திரு வாயில் – 13.வெள்ளானை:1 32/3,4

மேல்


சேரமான் (7)

பான்மை நண்பால் சேரமான் தோழர் என்று பார் பரவும் – 7.வார்கொண்ட:4 66/3
தெருவு நீங்கி கோயிலின் உள் புகுந்தார் சேரமான் தோழர் – 7.வார்கொண்ட:4 67/4
சேரமான் தோழரும் அ சேரர் பிரானும் பணி பூண் – 7.வார்கொண்ட:4 91/1
திங்கள் முடியார் திருவருளை பரவி சேரமான் பெருமாள் – 7.வார்கொண்ட:4 128/2
செய்யாள் பிரியா சேரமான் பெருமாள் அருளி செய்கின்றார் – 7.வார்கொண்ட:4 132/2
நம்பி பாதம் சேரமான் பெருமாள் பணிய நாவலூர் – 7.வார்கொண்ட:4 137/1
எம்பிரானை சேரமான் பெருமாள் இணை_இல் துணைவராம் – 12.மன்னிய:6 1/3

மேல்


சேரர் (36)

சேரர் திரு நாட்டு ஊர்களின் முன் சிறந்த மூதூர் செங்குன்றூர் – 2.தில்லை:6 2/4
சே வீற்றிருந்தார் திருவஞ்சை களமும் நிலவி சேரர் குல – 7.வார்கொண்ட:4 1/3
திருகு சின வெம் களி யானை சேரர் குலமும் உலகும் செய் – 7.வார்கொண்ட:4 5/3
சேரர் பெருமான் தொழ கண்டு சிந்தை கலங்கி முன் வணங்கி – 7.வார்கொண்ட:4 19/1
சேரர் பிரானும் அடிச்சேரன் அடியேன் என்று திருநீற்றின் – 7.வார்கொண்ட:4 19/3
கூடும் அன்பில் அர்ச்சனை மேல் கொண்டார் சேரர் குல பெருமாள் – 7.வார்கொண்ட:4 23/4
சேரர் பெருமான் அருள்செய்ய திருந்து மதிநூல் மந்திரிகள் – 7.வார்கொண்ட:4 34/1
நல் நீர் நாட்டு செல நயந்தார் நாம சேரர் கோமானார் – 7.வார்கொண்ட:4 45/4
வந்து சேரர் பெருமானார் மன்னும் திருவாரூர் எய்த – 7.வார்கொண்ட:4 64/1
மான சேரர் பெருமானார் தாமும் வன் தொண்டரும் கலந்த – 7.வார்கொண்ட:4 66/2
தாண்டும் புரவி சேரர் குல பெருமாள் தமக்கு திரு அமுது – 7.வார்கொண்ட:4 72/1
சேரர் பெருமான் எழுந்தருளி அமுது செய்ய செய் தவத்தால் – 7.வார்கொண்ட:4 74/1
சேரர் பிரானும் ஆரூரர்-தம்மை பிரியா சிறப்பாலும் – 7.வார்கொண்ட:4 82/1
அருள் காரணர்-தம் திருமறைக்காடு அணைந்தார் சேரர் ஆரூரர் – 7.வார்கொண்ட:4 85/4
அறைந்த பதிக தமிழ்_மாலை நம்பி சாத்த அருள் சேரர்
சிறந்த அந்தாதியில் சிறப்பித்தனவே ஓதி திளைத்து எழுந்தார் – 7.வார்கொண்ட:4 87/3,4
சேரமான் தோழரும் அ சேரர் பிரானும் பணி பூண் – 7.வார்கொண்ட:4 91/1
படி ஏறு புகழ் சேரர் பெருமானும் பார் மிசை வீழ்ந்து – 7.வார்கொண்ட:4 94/1
பொருவு_அரும் சீர் வன் தொண்டர் புகழ் சேரர் உடன் புனிதர் – 7.வார்கொண்ட:4 106/2
திருநாவலூர் வேந்தர் சேரர் குல வேந்தருடன் – 7.வார்கொண்ட:4 121/1
நம்பி ஆரூரரும் சேரர் நல் நாட்டு அரசனார் ஆய – 7.வார்கொண்ட:4 129/2
செம்பொன் முந்நூல் மணி மார்பர் சேரர் பெருமான் எதிர்வணங்கி – 7.வார்கொண்ட:4 137/2
செம் சொல் தமிழ் நாவலர் கோனும் சேரர் பிரானும் தம் பெருமான் – 7.வார்கொண்ட:4 138/1
சேரர் உடனே திருவமுது செய்த பின்பு கை கோட்டி – 7.வார்கொண்ட:4 153/1
ஆரூரர் மொழிந்து அருள அது கேட்ட அருள் சேரர்
பாரோடு விசும்பு ஆட்சி எனக்கு உமது பாத மலர் – 7.வார்கொண்ட:4 159/1,2
இருமை மரபும் தூயவர் தாம் சேரர் நாட்டில் எய்திய பின் – 7.வார்கொண்ட:6 5/3
சேரர் பெருமாள்-தனை நினைந்து தெய்வ பெருமாள் கழல் வணங்கி – 13.வெள்ளானை:1 3/3
தென் ஆரூரர் எழுந்தருளா நின்றார் என்று சேரர் பிரார்க்கு – 13.வெள்ளானை:1 16/2
தெருவு கழிய எதிர் வந்தார் சேரர் குலம் உய்ந்திட வந்தார் – 13.வெள்ளானை:1 18/4
சிலை நாட்டிய வெல் கொடி தானை சேரர் பெருமான் எதிர் சென்று – 13.வெள்ளானை:1 19/2
ஆய செய்கையில் நாள் பல கழிந்த பின் அரசர்கள் முதல் சேரர்
தூய மஞ்சன தொழிலினில் தொடங்கிட துணைவராம் வன் தொண்டர் – 13.வெள்ளானை:1 28/1,2
சேரர் தம்பிரான் தோழர்-தம் செயல் அறிந்து அப்போதே – 13.வெள்ளானை:1 35/1
சேரர் வீரரும் சென்றனர் மன்றவர் திருமலை திசை நோக்கி – 13.வெள்ளானை:1 38/4
அங்கண் எய்திய திரு அணுக்கன் திரு வாயிலின் அடல் சேரர்
தங்கள் காவலர் தடை உண்டு நின்றனர் தம்பிரான் அருளாலே – 13.வெள்ளானை:1 41/1,2
சேரர் காவலர் பரிவுடன் கேட்பித்த திரு உலா புறம் கொண்டு – 13.வெள்ளானை:1 48/1
முன்னை நல் வினை தொழில் தலை நின்றார் முதல் சேரர் பெருமானும் – 13.வெள்ளானை:1 49/3
சேரர் காவலர் விண்ணப்பம் செய்த அ திரு உலா புறம் அன்று – 13.வெள்ளானை:1 52/1

மேல்


சேரருடன் (2)

செம்பியனார் உடன் செழியர் தாம் பணிந்து சேரருடன்
நம்பியும் முன் புறத்து அணைய நண்ணிய பேர் உவகையால் – 7.வார்கொண்ட:4 95/1,2
சேய கொங்க நாடு அணைந்தார் திருவாரூரர் சேரருடன் – 7.வார்கொண்ட:4 140/4

மேல்


சேரலர் (1)

பொங்கும் அன்பினில் சேரலர் போற்றிட புது மதி அலைகின்ற – 13.வெள்ளானை:1 45/2

மேல்


சேரலர்-தம்-பால் (1)

முரசம் இயம்ப கலியாணம் முடித்து முடி சேரலர்-தம்-பால்
குரவ மலர் பூம் தண் சோலை குலவு மலை நாடு அணைகின்றார் – 13.வெள்ளானை:1 14/3,4

மேல்


சேரலன் (2)

புரசை களிற்று சேரலன் ஆர் புடைசூழ்ந்து அவரோடு அமுது செய – 7.வார்கொண்ட:4 73/3
சென்று சேரலன் திரு மணி வாயிலின் புறத்தினன் என செப்ப – 13.வெள்ளானை:1 44/2

மேல்


சேரலன்-தன் (1)

நல்கார் ஆகி சேரலன்-தன் மலை நாடு அணைய நண்ணுவார் – 7.வார்கொண்ட:6 4/4

மேல்


சேரலனார் (7)

பாணனார் பத்திரனாரும் பைம்பொன் மௌலி சேரலனார்
காண கொடுத்த நிதி எல்லாம் கண்டு மகிழ்வுற்று அதிசயித்து – 7.வார்கொண்ட:4 36/1,2
பொன் ஆர் மௌலி சேரலனார் போற்றும் அமைச்சர்க்கு அஃது இயம்பி – 7.வார்கொண்ட:4 46/1
சிந்தை மகிழ எழு நிலை கோபுரத்தை அணைந்தார் சேரலனார் – 7.வார்கொண்ட:4 53/4
சிந்தை மகிழ எதிர்கொண்டு சென்று கிடைத்தார் சேரலனார்
சந்தம் விரைத்தார் வன் தொண்டர் முன்பு விருப்பின் உடன் தாழ்ந்தார் – 7.வார்கொண்ட:4 64/3,4
தா_இல் பெருமை சேரலனார் தம்பிரானார் தாம் கொண்டார் – 7.வார்கொண்ட:4 69/4
சிலை மலிந்த கொடி தானை சேரலனார் கழல் போற்றி – 7.வார்கொண்ட:4 175/2
சிந்தை மகிழும் சேரலனார் திரு ஆரூரர் எனும் இவர்கள் – 13.வெள்ளானை:1 20/1

மேல்


சேரவே (1)

திங்கள் சூடிய செல்வர் மேவும் திரு புறம் பயம் சேரவே – 6.வம்பறா:2 96/4

மேல்


சேரன்-தனக்கு (1)

பரவும் சேரன்-தனக்கு உனக்கு பைம்பொன் காணம் பட்டு ஆடை – 7.வார்கொண்ட:4 27/2

மேல்


சேரனார் (1)

சேண் உலாவு சீர் சேரனார் திருமலைநாட்டு – 4.மும்மை:5 4/2

மேல்


சேரார் (2)

செய்ய சடையார்-தமை சேரார் தீங்கு நெறி சேர்கின்றார் என்று – 5.திருநின்ற:1 253/3
செப்ப_அரும் பதியில் சேரார் திரு முதுகுன்றை நோக்கி – 6.வம்பறா:2 101/1

மேல்


சேரும் (10)

அ வழி அந்தி மாலை அணைதலும் இரவு சேரும்
வெவ் விலங்கு உள என்று அஞ்சி மெய்மையின் வேறு கொள்ளா – 3.இலை:3 127/1,2
சிந்தை யோகத்து முனிவர் யோகினிகள் சேரும் யோக பீடமும் உளது என்றும் – 4.மும்மை:5 83/2
முப்புரம் செற்றார் பாதம் சேரும் முக்குளமும் பாடி – 6.வம்பறா:1 126/3
கரு கோடி நீப்பார்கள் சேரும் கஞ்சனூர் கைதொழ சென்றார் – 6.வம்பறா:1 292/4
பூழியன் மதுரை உள்ளார் புறத்து உளார் அமணர் சேரும்
பாழியும் அருகர் மேவும் பள்ளியும் ஆன எல்லாம் – 6.வம்பறா:1 871/1,2
தேம் கமழ் ஆரம் சேரும் திரு நுதல் விளக்கம் நோக்கில் – 6.வம்பறா:1 1096/2
பாத மெய் நீழல் சேரும் பருவம் ஈது என்று பாட – 6.வம்பறா:1 1245/4
சேரும் உள்ளம் மிக்கு எழ மெய் பதிகம் பாடி சென்றார் – 6.வம்பறா:2 95/4
வென்று இங்கு இது நல் நெறி சேரும் விளக்கம் என்றே – 6.வம்பறா:6 5/2
தட நாகம் மதம் சொரிய தனம் சொரியும் கலம் சேரும்
கடல் நாகை அதிபத்தர் கடன் ஆகை கவின் உரைப்பாம் – 8.பொய்:3 9/3,4

மேல்


சேல் (6)

சேல் பாய் தடத்தும் உள செய்யுள் மிக்கு ஏறு சங்கம் – 4.மும்மை:1 5/4
நெருங்கு சேல் குலம் உயர்த்துவ நீள் கரை படுத்து – 4.மும்மை:5 25/3
மலை விழிப்பன என வயல் சேல் வரை பாறை – 4.மும்மை:5 42/1
சேல் உலாம் புனல் பொன்னி தென் கரை ஏறி சென்று – 5.திருநின்ற:1 213/3
சேல் அலம்பும் தண் புனல் தடம் படிந்து அணை சீத மாருதம் வீச – 6.வம்பறா:1 151/2
செங்கமல பொதி அவிழ சேல் பாயும் வயல் மதுவால் சேறு மாறா – 6.வம்பறா:1 310/2

மேல்


சேலும் (1)

தெள்ளும் திரைகள் மதகு-தொறும் சேலும் கயலும் செழு மணியும் – 10.கடல்:3 1/3

மேல்


சேலூர் (1)

சேலூர் தண் பணை சூழ்ந்த தென் திருவாஞ்சியம் அணைந்தார் – 5.திருநின்ற:1 216/4

மேல்


சேலூருடன் (1)

இன் இசை தமிழ் புனைந்து இறைவர் சேலூருடன்
பன்னு பாலைத்துறை பதி பணிந்து ஏகினார் – 6.வம்பறா:1 364/3,4

மேல்


சேவகத்தில் (1)

ஓவா அணுக்க சேவகத்தில் உள்ளோர் பூத கண நாதர் – 6.வம்பறா:2 332/3

மேல்


சேவகம் (2)

தென்றலும் எதிர்கொண்டு எய்தும் சேவகம் முன்பு காட்ட – 6.வம்பறா:2 376/4
சார முன் சென்று சேவகம் ஏற்றனர் தனி தொண்டர் மேல் கொண்ட – 13.வெள்ளானை:1 38/2

மேல்


சேவகர் (1)

முப்புரங்கள் எரித்த சேவகர் கோயில் வாயிலின் முன்னினார் – 6.வம்பறா:2 97/4

மேல்


சேவகராய் (1)

பொன்_தொடியை கொடு வந்து போர் கோல சேவகராய் புரங்கள் மூன்றும் – 6.வம்பறா:1 312/3

மேல்


சேவகனார் (1)

இன்னவாறு ஏத்தும் நம்பிக்கு ஏறு சேவகனார் தாமும் – 1.திருமலை:5 195/1

மேல்


சேவடி (54)

செய்ய சேவடி நீங்கும் சிறுமையேன் – 1.திருமலை:1 28/2
நன் புலன் ஆகிய ஐந்தும் ஒன்றி நாயகன் சேவடி எய்தப்பெற்ற – 1.திருமலை:5 126/3
சென்று மாதவன் சேவடி பணிந்து திகைத்து நின்றனள் திருவினும் பெரியாள் – 2.தில்லை:3 9/4
தில்லை அம்பலத்து உள் ஆடும் சேவடி போற்றி என்ன – 2.தில்லை:3 32/4
செய்வார் பெரியோய் என சேவடி தாழ்ந்து செப்ப – 4.மும்மை:1 40/4
நாதன் கழல் சேவடி நண்ணினர் அண்ணலாரே – 4.மும்மை:1 48/4
ஞான வரம்பின் தலை நின்றார் நாகம் புளை வார் சேவடி கீழ் – 4.மும்மை:2 5/3
மாயனார் அறியா மலர் சேவடி வழுத்தும் – 4.மும்மை:3 4/2
ஆடு சேவடி அருகுஉற அணைந்தனர் அவர்க்கு – 4.மும்மை:3 9/2
நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்து உருகி – 5.திருநின்ற:1 140/2
ஆலம் ஆர் மணி_மிடற்றார் அணி மலர் சேவடி நினைந்து – 5.திருநின்ற:1 213/2
வென்றி விடையார் சேவடி கீழ் விழுந்தார் எழுந்தார் விம்மினார் – 5.திருநின்ற:1 252/4
உடைய நாயகர் சேவடி பணிய வந்து உறுவார் – 5.திருநின்ற:1 373/2
என்னை இனி சேவடி கீழ் இருத்திடும் என்று எழுகின்ற – 5.திருநின்ற:1 426/3
அண்ணலார் சேவடி கீழ் ஆண்ட அரசு அமர்ந்து இருந்தார் – 5.திருநின்ற:1 427/4
எடுத்து அருளும் சேவடி கீழ் என்றும் இருக்கின்றாரை – 5.திருநின்ற:4 65/3
அனைய நிலை தலை நின்றே ஆய சேவடி கமலம் – 6.வம்பறா:1 19/2
திருத்தோணி வீற்றிருந்தார் சேவடி கீழ் வழிபட்டு – 6.வம்பறா:1 20/2
கா மரு சேவடி கமலம் கருத்தில்உற இடையறா காதல் கொண்டு – 6.வம்பறா:1 99/3
தண் தலை பல வளத்தொடும் வரு புனல் தாழ்ந்து சேவடி தாழ – 6.வம்பறா:1 146/2
ஐயர் சேவடி பணியும் அ பொருப்பினில் ஆதரவுடன் சென்றார் – 6.வம்பறா:1 181/4
தேன் அலம்பு தண் கொன்றையார் சேவடி திளைத்த அன்பொடு தாழ்ந்தார் – 6.வம்பறா:1 182/4
தேடு சேவடி தோன்ற முன் சென்று பின் – 6.வம்பறா:1 196/4
பங்கய சேவடி பணிந்து பாடுவார் – 6.வம்பறா:1 236/4
செழு வாச மலர் கமல சேவடி கீழ் சென்று தாழ்ந்து எழுந்து நின்று – 6.வம்பறா:1 307/2
முன்றில் வலம்கொண்டு இறைஞ்சி வீழ்ந்து மொய் கழல் சேவடி கைதொழுவார் – 6.வம்பறா:1 350/2
திரு வலஞ்சுழி உடையவர் சேவடி தலத்தில் – 6.வம்பறா:1 381/3
இலகு சேவடி இறைஞ்சி இன் தமிழ் கொடு துதித்து – 6.வம்பறா:1 434/2
துணை மலர் சேவடி பணிந்து துதித்து அருள தோணிபுர தோன்றலாரும் – 6.வம்பறா:1 453/2
புரவலனார் சேவடி கீழ் வீழ்ந்து தாங்கள் போந்ததுவும் புகுந்ததுவும் புகலல்உற்றாள் – 6.வம்பறா:1 479/4
செம் கண் ஏற்றவர் சேவடி வணங்கி முன் திளைத்து – 6.வம்பறா:1 513/2
நீற்று அழகர் சேவடி கீழ் நின்று அலைந்து நீடினார் – 6.வம்பறா:1 545/4
புண்டரிக சேவடி கீழ் பொருந்த நிலமுற விழுந்தார் – 6.வம்பறா:1 729/3
பூ மருவும் சேவடி கீழ் புக்கு ஆர்வத்தோடும் பணிந்தார் – 6.வம்பறா:1 876/4
சிந்தையினில் அது தெளிந்து புத்தர் சண்பை திரு மறையோர் சேவடி கீழ் சென்று தாழ்ந்தார் – 6.வம்பறா:1 925/4
திங்கள் பகவு அணியும் சென்னியார் சேவடி கீழ் – 6.வம்பறா:1 946/3
சூடு மதி கண்ணியார் துணை மலர் சேவடி பாடி – 6.வம்பறா:1 1000/2
செல்வம் மல்கிய சிரபுர தலைவர் சேவடி கீழ் – 6.வம்பறா:1 1038/1
சேய மலர் சேவடி விளக்கி தெளித்து கொண்ட செழும் புனலால் – 6.வம்பறா:2 34/2
செம்மை மறையோர் திரு கலையநல்லூர் இறைவர் சேவடி கீழ் – 6.வம்பறா:2 67/1
ஐயர் கமல சேவடி கீழ் ஆர்வம் பெருக விழுந்து எழுந்து – 6.வம்பறா:2 75/3
புண்டரிக சேவடி கீழ் பொருந்த நிலம் மிசை பணிந்தார் – 6.வம்பறா:2 144/4
ஏர் வலர் பொன் திரு மன்றுள் எடுத்த சேவடி இறைஞ்சி – 6.வம்பறா:2 167/2
பெரு நாத சிலம்பு அணி சேவடி வருந்த பெரும் பகல் கண் – 6.வம்பறா:2 181/3
செய்ய கமல சேவடி கீழ் திருந்து காதலுடன் வீழ்ந்தார் – 6.வம்பறா:2 188/4
மணம் கொள் மலர் சேவடி பணிந்து வாழ்ந்து போந்து மன்னும் பதி – 6.வம்பறா:2 197/3
மன்றல் மலர் சேவடி இணை கீழ் வணங்கி மகிழ்ந்தார் வன் தொண்டர் – 6.வம்பறா:2 236/4
வெற்றி மழ_விடையார்-தம் சேவடி கீழ் வீழ்ந்து எழுந்தார் – 6.வம்பறா:2 252/4
செம் கயல் கண் மலை_வல்லி பணிந்த சேவடி நினைந்து – 6.வம்பறா:2 287/2
வென்றி நெடு வேல் மைந்தரும் தம் விரை பூம் கமல சேவடி கீழ் – 7.வார்கொண்ட:3 87/2
முன் இறைஞ்சி உள் அணைந்து முதல்வர் சேவடி தாழ்ந்து – 7.வார்கொண்ட:4 116/3
மாதரார் கை தடிந்த கலிக்கம்பர் மலர் சேவடி வணங்கி – 8.பொய்:5 10/2
சேவடி போது எப்போதும் சென்னியினும் மலர்ந்தன-ஆல் – 10.கடல்:5 13/4
திருவாளன்-தன் சேவடி கீழ் சீல மறையோனொடு வீழ்ந்தாள் – 13.வெள்ளானை:1 12/3

மேல்


சேவடிக்கு (2)

ஆடு சேவடிக்கு அடியரும் அற்புதம் எய்தி – 2.தில்லை:7 33/4
அரும் சிலம்பு அணி சேவடிக்கு ஆள் செய்வார் – 8.பொய்:7 2/4

மேல்


சேவடிகள் (12)

திரு புன்கூர் சிவலோகன் சேவடிகள் மிக நினைந்து – 4.மும்மை:4 16/1
மன்றுள் ஆடும் சேவடிகள் வழுத்து நெறியாவதும் என்று – 4.மும்மை:6 23/3
திருப்புகலூர் அமர்ந்து அருளும் சிவபெருமான் சேவடிகள் கும்பிட்டு ஏத்தும் – 5.திருநின்ற:1 230/1
கடி மலர் மென் சேவடிகள் கைதொழுது குலச்சிறையார் – 5.திருநின்ற:1 429/3
மை தழையும் கண்டர் சேவடிகள் மனத்து உற வணங்கி – 5.திருநின்ற:4 28/2
அருச்சித்த சேவடிகள் ஆர்வமுற பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 391/2
ஆடிய சேவடிகள் ஆர்வமுற உட்கொண்டு – 6.வம்பறா:1 546/3
ஆடல் மருவும் சேவடிகள் பரவி பிரியாது அமர்கின்றார் – 6.வம்பறா:2 193/2
வில்லால் எயில் மூன்று எரித்த பிரான் விரை ஆர் கமல சேவடிகள்
அல்லால் வேறு காணேன் யான் அது நீர் அறிதற்கு ஆர் என்பார் – 6.வம்பறா:4 9/1,2
நல் நாம சேவடிகள் போற்றி இசைத்து நலம் சிறந்தார் – 7.வார்கொண்ட:3 23/4
பேறு பெற்றார் சேவடிகள் தலை மேல் கொண்டு பிற உயிர்கள் – 7.வார்கொண்ட:3 88/3
தில்லை நகர் மணி மன்றுள் ஆடுகின்ற சேவடிகள்
அல்கிய அன்புடன் இறைஞ்சி அமர்கின்றார் புரம் எரித்த – 9.கறை:1 4/1,2

மேல்


சேவடியவர் (1)

சிலம்பு அலம்பு சேவடியவர் பயிலுறும் செம்மையால் திருத்தொண்டு – 6.வம்பறா:1 157/2

மேல்


சேவடியாய் (1)

செம் சேவடியாய் சிவதா சிவதா – 3.இலை:1 18/4

மேல்


சேவடியார் (5)

எடுத்த சேவடியார் அருளினால் தரளம் எறி புனல் மறி திரை பொன்னி – 1.திருமலை:5 108/2
காய்ந்த சேவடியார் நீடி இருப்பது கடவூர் ஆகும் – 3.இலை:4 1/4
தேசு உடைய மலர் கமல சேவடியார் அடியார்-தம் – 4.மும்மை:5 114/1
நடமே புரியும் சேவடியார் நம்மை உடையார் என்றும் மெய்ம்மை – 4.மும்மை:6 16/1
பொன் மணி மன்றுள் எடுத்த சேவடியார் புரி நடம் கும்பிட பெற்றால் – 6.வம்பறா:2 91/3

மேல்


சேவடியார்-தம் (2)

சென்னி வளர் மதி அணிந்த சிலம்பு அணி சேவடியார்-தம்
மன்னிய சைவ துறையின் வழிவந்த குடி வளவர் – 6.வம்பறா:1 2/1,2
ஆடிய சேவடியார்-தம் அடியார் விண்ணோர் ஆர்ப்பு எழுந்த அகிலாண்டம் அனைத்தும் மூழ்க – 6.வம்பறா:1 582/4

மேல்


சேவடியாரை (2)

நடம் ஆடிய சேவடியாரை நண்ணினார் போல் உள் நிறைந்து – 6.வம்பறா:2 198/3
எ உலகும் உய்ய எடுத்து அருளிய சேவடியாரை
செவ்விய அன்புற வணங்கி சிந்தை களிவர திளைத்து – 6.வம்பறா:3 7/1,2

மேல்


சேவடியில் (3)

சேவடியில் தொடு தோலும் செம் கையினில் வெண் கோலும் – 3.இலை:7 18/1
திரு ஏகம்பத்து அமர்ந்த செழும் சுடரை சேவடியில்
ஒரு போதும் தப்பாதே உள் உருகி பணிகின்றார் – 6.வம்பறா:1 999/1,2
நாட்ட மலரும் திரு நுதலார் நறும் பொன் கமல சேவடியில்
கூட்டும் உணர்வு கொண்டு எழுந்து கோது_இல் அமுத இசை கூட – 6.வம்பறா:2 204/2,3

மேல்


சேவடியின் (4)

அண்ணலார் சேவடியின் சார்வாக அணைவிப்பார் – 4.மும்மை:5 112/2
செக்கர் நிகர் சடை முடியார் சேவடியின் கீழ் தாழ்ந்தார் – 6.வம்பறா:1 1122/4
செக்கர் நெடும் சடை முடியார் சிலம்பு அலம்பு சேவடியின்
அ கருணை திரு நிழல் கீழ் ஆராமை அமர்ந்திருந்தார் – 8.பொய்:2 40/3,4
திருவருள் சிறப்பினாலே செய்ய சேவடியின் நீழல் – 10.கடல்:1 12/3

மேல்


சேவலும் (1)

சிவலும் சேவலும் மாறியும் சிறு கழிச்சியர்கள் – 4.மும்மை:5 44/2

மேல்


சேவலோடும் (1)

வாரண சேவலோடும் வரி மயில் குலங்கள் விட்டு – 3.இலை:3 11/1

மேல்


சேவார் (1)

சேவார் கொடியார் திருத்தொண்டர் கண்ட போது சிந்தை நிறை – 6.வம்பறா:2 227/2

மேல்


சேவிக்க (1)

நாயகன் கழல் சேவிக்க நான்_முகன் – 1.திருமலை:1 7/1

மேல்


சேவிக்கப்பெற (1)

பிறிவு இன்றி சேவிக்கப்பெற வேண்டும் என தொழுதார் – 6.வம்பறா:1 140/4

மேல்


சேவிக்கும் (1)

தேவருடன் முனிவர்கள் முன் சேவிக்கும் அடியார்களுடன் சேவித்து – 5.திருநின்ற:1 229/2

மேல்


சேவித்து (14)

திருவிழா அணி சேவித்து திருமடத்து அடியார் – 2.தில்லை:7 5/2
தேவருடன் முனிவர்கள் முன் சேவிக்கும் அடியார்களுடன் சேவித்து
மூவுலகும் களிகூர வரும் பெருமை முறைமை எலாம் கண்டு போற்றி – 5.திருநின்ற:1 229/2,3
திருமண திறம் சேவித்து நம்பர் தாள் சேர்ந்தார் – 5.திருநின்ற:6 37/4
யாவர் என்னாது உடன் சேவித்து எல்லா குலத்தில் உள்ளோரும் – 5.திருநின்ற:7 22/2
மேவ அன்பர் தாமும் உடன் சேவித்து அணைந்து விண்ணவர்-தம் – 5.திருநின்ற:7 22/3
பொழுது வைக சேவித்து புனிதர் மீண்டும் கோயில் புக – 5.திருநின்ற:7 23/1
தங்கள் பெருமான் திருமணலிக்கு எழுச்சி சேவித்து உடன் நண்ண – 5.திருநின்ற:7 24/3
திரு நிலவு மணி முத்தின் சிவிகையின் மேல் சேவித்து
வரு நிலவு தரு மதி போல் வளர் ஒளி வெண்குடை நிழற்ற – 6.வம்பறா:1 648/1,2
திருமணத்துடன் சேவித்து முன் செலும் சிறப்பினாலே – 6.வம்பறா:1 1249/3
தேவாசிரியன் முறை இருக்கும் தேவர் எலாம் சேவித்து
போவார் தம்மில் வேண்டுவார் போத ஒழிந்தார் புறத்து ஒழிய – 6.வம்பறா:2 332/1,2
முன்பு உடன் போதாதாரும் முறைமையில் சேவித்து ஏக – 6.வம்பறா:2 358/3
மல்லல் பவனி சேவித்து வாழ்ந்து நாளும் மனம் மகிழ்ந்து – 7.வார்கொண்ட:4 80/3
சேவித்து அணையும் பரிசனங்கள் சூழ திருவாரூர் இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 84/1
புரசை யானை முன் சேவித்து வந்தனன் பொழியும் நின் கருணை தொண்டு – 13.வெள்ளானை:1 46/2

மேல்


சேவிப்ப (1)

செந்தமிழ் மாருதம் எதிர்கொண்டு எம்மருங்கும் சேவிப்ப – 6.வம்பறா:1 649/4

மேல்


சேவில் (3)

சேவில் திகழ்ந்தவர் மைந்தர் ஆன திருஞானசம்பந்தர் சிந்தை அன்பு – 6.வம்பறா:1 493/2
சேவில் வருவார் திரு ஆலம்பொழிலில் சேர்ந்து தாழ்ந்து இரவு – 6.வம்பறா:2 71/3
சேவில் வரும் பசுபதியார் செழும் கோயில் வலம் வந்து – 6.வம்பறா:3 9/3

மேல்


சேவின் (4)

சேவின் திகழ்பவர் பொன் கழல் தெளிவுஉற்றனர் பெரியோர் – 5.திருநின்ற:1 114/4
சேவின் மேலவர் மைந்தராம் திரு மறை சிறுவர் – 5.திருநின்ற:6 35/3
சேவின் மேல் அண்ணலார் திருநலூர் நண்ணினார் – 6.வம்பறா:1 365/4
சேவின் மேல் உமையோடும் வருவார் தம் திருவருளின் – 6.வம்பறா:2 24/3

மேல்


சேற்றிடை (1)

நான மான்_மத நளிர் பெரும் சேற்றிடை நறும் பொன் – 6.வம்பறா:1 502/1

மேல்


சேற்றின் (1)

குங்குமத்தின் செழும் சேற்றின் கூட்டு அமைப்போர் இனம் குழும – 6.வம்பறா:1 1180/1

மேல்


சேற்றினை (1)

சிந்தையில் விரும்பி நீரில் சேற்றினை அலம்பி ஊற்றி – 2.தில்லை:4 19/2

மேல்


சேற்று (1)

சேற்று அலவன் கரு உயிர்க்க முருகு உயிர்க்கும் செழும் கமலம் – 4.மும்மை:4 2/4

மேல்


சேறு (10)

உழுத சால் மிக ஊறி தெளிந்த சேறு
இழுது செய்யினுள் இந்திர தெய்வதம் – 1.திருமலை:2 12/1,2
ஆன தண் பனி நீர் கூட்டி அமைந்த சந்தன சேறு ஆட்டி – 1.திருமலை:5 17/2
ஆர நறும் சேறு ஆட்டி அரும் பனி நீர் நறும் திவலை அருகு வீசி – 1.திருமலை:5 173/1
சேறு அணி தண் பழன வயல் செழு நெல்லின் கொழும் கதிர் போய் – 3.இலை:5 4/1
சேறு செய்பவர் செந்நெலின் வெண் முளை சிதறி – 4.மும்மை:5 24/2
செங்கமல பொதி அவிழ சேல் பாயும் வயல் மதுவால் சேறு மாறா – 6.வம்பறா:1 310/2
சேறு அணிந்த வயல் பழன கழனி சூழ்ந்த சிரபுரத்து வந்து அருளும் செல்வர் செம் கண் – 6.வம்பறா:1 885/3
வாய்ந்த அகிலின் நறும் சாந்து வாசம் நிறை மான் மத சேறு
தோய்ந்த புகை நாவியின் நறு நெய் தூய பசும் கர்ப்பூரம் உடன் – 6.வம்பறா:2 35/2,3
மாலை தண் கலவை சேறு மான் மத சாந்து பொங்கும் – 6.வம்பறா:2 377/1
சேறு நறு வாசம் கமழும் செல்வ நீடூர் திருநீடூர் – 9.கறை:5 1/4

மேல்


சேறே (1)

எண்_இல் குங்கும சேறே இழுக்கின – 4.மும்மை:5 108/4

மேல்


சேனாபதி (2)

மன்னிய நீடிய வளவர் சேனாபதி குடி ஆம் – 6.வம்பறா:2 5/2
செங்கோல் அரசன் அருள் உரிமை சேனாபதி ஆம் கோட்புலியார் – 6.வம்பறா:2 37/1

மேல்


சேனாபதியாம் (1)

அ பதியில் குல பதியாய் அரசர் சேனாபதியாம்
செப்ப வரும் குடி விளங்க திரு அவதாரம் செய்தார் – 3.இலை:5 7/1,2

மேல்


சேனை (15)

பண்ணுறும் உறுப்பு நான்கில் பரந்து எழு சேனை எல்லாம் – 3.இலை:1 33/1
மழை மத_யானை சேனை வரவினை மாற்றி மற்ற – 3.இலை:1 37/3
அ நிலை எழுந்த சேனை ஆர்கலி ஏழும் ஒன்றாய் – 3.இலை:1 53/1
சேனை வேடர் மேல் அடர்ந்து சீறி அம்பில் நூறினார் – 3.இலை:3 78/4
தீது_இலா சேனை செய்யும் திருப்பணி நேர்படாமை – 3.இலை:4 26/2
சேனை கடலும் கொடு தென் திசை நோக்கி வந்தான் – 4.மும்மை:1 11/4
சென்று அணைந்த அமைச்சர் உடன் சேனை வீரரும் சூழ்ந்து – 5.திருநின்ற:1 92/1
எண்_இல் அமண் எனும் பாவ இரும் சேனை இரிந்து ஓட – 6.வம்பறா:1 650/2
சேனை வீரர் புடை பரந்து செல்வது அங்கண் மலை சூழ்ந்த – 7.வார்கொண்ட:4 48/3
அரவ சேனை கடல் தரங்கம் மடுத்து மேல்மேல் அடர்வன போல் – 7.வார்கொண்ட:4 49/2
நிரவி பரந்த நெடும் சேனை நேமி நெளிய சென்றன-ஆல் – 7.வார்கொண்ட:4 49/4
திசைகள்-தோறும் வரும் பெருமை அமைச்சர் சேனை பெரு வெள்ளம் – 7.வார்கொண்ட:4 143/1
வளவனார் பெரும் சேனை வஞ்சி மலர் மிலைந்து ஏற – 8.பொய்:2 19/1
முற்றும் பொரு சேனை முனை தலையில் – 8.பொய்:2 28/1
உதியர் பெருமாள் பெரும் சேனை ஓதம் கிளர்ந்தது என ஆர்ப்ப – 13.வெள்ளானை:1 22/1

மேல்


சேனை-தன்னை (1)

வந்துற சேனை-தன்னை வல் விரைந்து எழ முன் சாற்ற – 3.இலை:1 29/2

மேல்


சேனை-தான் (1)

வரும் கரும் சிலை தட கை மான வேடர் சேனை-தான்
பொரும் தடம் திரை கடல் பரப்பிடை புகும் பெரும் – 3.இலை:3 73/2,3

மேல்


சேனையின் (1)

உதியர் மன்னவர்-தம் பெரும் சேனையின் உடன் சென்ற படை வீரர் – 13.வெள்ளானை:1 37/1

மேல்


சேனையும் (2)

சேனையும் ஆனை பூண்ட திரளும் எய்த்து எழாமை நோக்கி – 3.இலை:4 27/1
தேர் மலி தானை மன்னன் சேனையும் களிறும் எல்லாம் – 3.இலை:4 29/2

மேல்