மொ – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மொய் 41
மொய்க்கும் 1
மொய்த்த 6
மொய்த்து 5
மொய்ப்ப 3
மொய்ம் 1
மொய்ம்பில் 1
மொய்யார் 1
மொய்வார் 1
மொழி 91
மொழி-மின் 2
மொழிக்கு 3
மொழிகள் 7
மொழிகளால் 2
மொழிகின்றாம் 1
மொழிகின்றார் 6
மொழிகின்றேன் 2
மொழிகின்றோம் 1
மொழிகேன் 1
மொழிந்த 20
மொழிந்தது 1
மொழிந்தமை 1
மொழிந்தவர்க்கு 1
மொழிந்தவா 1
மொழிந்தனர் 1
மொழிந்தனை 1
மொழிந்தாய் 1
மொழிந்தார் 20
மொழிந்தார்கள் 1
மொழிந்தால் 1
மொழிந்தான் 1
மொழிந்திடலும் 1
மொழிந்தீர் 2
மொழிந்து 39
மொழிய 15
மொழியப்பெற்றேன் 1
மொழியார் 2
மொழியால் 9
மொழியாலே 1
மொழியாள் 5
மொழியாள்-தன் 1
மொழியில் 1
மொழியின் 2
மொழியினார் 1
மொழியும் 3
மொழியேன் 1
மொழிவது 4
மொழிவாம் 3
மொழிவார் 9
மொழிவான் 1
மொழிவேன் 3

மொய் (41)

மொய் வரை உலகம் போலும் முளரி நீர் மருத வைப்பு – 1.திருமலை:2 25/4
மொய் அலர் வாவி புக்கு மூழ்குவாய் என மொழிந்தார் – 2.தில்லை:2 28/4
மொய் வரை தினை மென் சோறு மூங்கில் வன் பதங்கள் மற்றும் – 3.இலை:3 34/2
முறி கொண்ட கண்ணிக்கு இடை மொய் ஒளி பீலி சேர்த்தி – 3.இலை:3 57/2
மொய் குரல் துடி குலங்கள் பம்பை முன் சிலைத்து எழ – 3.இலை:3 77/3
மொய் வலைகளை அற நிமிர்வுற முடுகிய கடு விசையில் – 3.இலை:3 87/4
முன்பு நின்று அரிதில் நீங்கி மொய் வரை இழிந்து நாணன் – 3.இலை:3 114/1
மொய் காட்டும் இருள் வாங்கி முகம் காட்டும் தேர் இரவி – 3.இலை:3 134/1
முன் செய்தார் தம்மை காணேன் மொய் கழல் வேடர் என்றும் – 3.இலை:3 175/2
மொய் வாச நறும் கொன்றை முடி சடையார் அடி தொண்டர் – 3.இலை:7 36/3
மொய் வைத்த வண்டின் செறி குழல் முரன்ற சந்தின் – 4.மும்மை:1 3/1
மொய் வண்ண விளங்கு ஒளி எய்தினர் மூர்த்தியார்-தாம் – 4.மும்மை:1 23/4
மொய் புன் சடை மா முடியே முடி ஆவது என்றார் – 4.மும்மை:1 41/4
முகில் சூழ் நறும் சோலையின் மொய் ஒளி மாட வீதி – 4.மும்மை:1 49/3
மொய் தயங்கு தண் பொழில் திருவான்மியூர் முதலா – 4.மும்மை:5 40/2
மாடு மொய் வரை சந்தன சினை மிசை வளரும் – 4.மும்மை:5 41/2
மொய் அளி சூழ் நிரை நீல முழு வலயங்களின் அலைய – 5.திருநின்ற:1 9/1
மொய் ஒளி வெண் நிலவு அலர்ந்து முரன்ற யாழ் ஒலியினதாய் – 5.திருநின்ற:1 98/3
முன் முழுகி காளத்தி மொய் வரையின் தாழ்வரையில் – 5.திருநின்ற:1 344/2
மொய் கடும் கனல் வெம் பரல் புகை மூளும் அத்தம் முயங்கியே – 5.திருநின்ற:1 358/3
மொய் திகழும் சடையானை முளைத்தானை என்று எடுத்து – 5.திருநின்ற:1 404/2
மொய் தரு பூம் குழல் மடவார் புகுந்தபடி-தனை மொழிந்தார் – 5.திருநின்ற:4 28/4
முந்துற செல்வேன் என்று மொய் குழலவர்-பால் வந்தான் – 5.திருநின்ற:4 44/4
மொய் வைத்து அமர்ந்த மேனியராம் பரிசு கண்டு முடி குவித்த – 5.திருநின்ற:7 29/3
மொய் கொள் மா மணி கொழித்து முத்தாறு சூழ் முது குன்றை அடைவோம் என்று – 6.வம்பறா:1 181/1
முத்தின் சிவிகை மேல் கொண்டு மொய் ஒளி தாமம் நிரத்த – 6.வம்பறா:1 282/3
மொய் திகழ் சோலை அம் மூதூர் முன் அகன்று அ நெறி செல்வார் – 6.வம்பறா:1 296/1
முன்னுற வந்து எதிர்கொண்டு பணிந்து ஏத்தி மொய் கரங்கள் – 6.வம்பறா:1 325/3
மொய் பனி கூர் குளிர் வாடை முழுது உலவும் பொழுதேயாய் – 6.வம்பறா:1 330/1
முன்றில் வலம்கொண்டு இறைஞ்சி வீழ்ந்து மொய் கழல் சேவடி கைதொழுவார் – 6.வம்பறா:1 350/2
மொய் தரும் சோலை சூழ் முளரி முள் அடவி போய் – 6.வம்பறா:1 361/1
முன் உற பணிந்து போய் மொய் வரை திரு_மகள் – 6.வம்பறா:1 992/3
முன்னுற கண்டார்க்கு எல்லாம் மொய் கரும் குழலின் பாரம் – 6.வம்பறா:1 1095/2
முழவு அறாதன மொய் குழலியர் நட அரங்கம் – 6.வம்பறா:2 3/2
முந்தை இழிந்த மொய் ஒளி சேர் கோயில்-தன்னை முன் வணங்கி – 6.வம்பறா:2 58/3
மொய் மலர் தவிசின் மீது முகம் மலர்ந்து இருந்த போது – 6.வம்பறா:2 400/4
முந்துற வந்து இறைஞ்சி மொய் ஒளி மாளிகை புகுந்தார் – 8.பொய்:2 12/4
முரி உற்றன உற்றன மொய் களமே – 8.பொய்:2 26/4
முன் வந்த கரும் தலை மொய் குவை-தான் – 8.பொய்:2 32/2
முருகுறு செங்கமல மது மலர் துதைந்த மொய் அளிகள் – 10.கடல்:2 2/1
மொய் வளர் வண் புகழ் பெருக முறை புரியும் அந்நாளில் – 10.கடல்:2 5/4

மேல்


மொய்க்கும் (1)

நின்று எங்கும் மொய்க்கும் சிலை வேடர்கள் நீங்க புக்கு – 3.இலை:3 66/1

மேல்


மொய்த்த (6)

மொய்த்த நீள் பத்தியின்-பால் முதிர் தலை வணங்கி மற்றை – 1.திருமலை:2 22/3
மொய்த்த பல் சகுனம் எல்லாம் முறைமுறை தீங்கு செய்ய – 3.இலை:3 168/2
மொய்த்த அந்தணர் குழாம் முன் செல பின் செலும் – 6.வம்பறா:1 367/2
கடி கொள் மாலை மொய்த்த பந்தர் கந்த நீர் தசும்புடன் – 6.வம்பறா:1 987/2
பாங்கு அணி சுரும்பு மொய்த்த பனி மலர் அளக பந்தி – 6.வம்பறா:1 1096/1
மொய்த்த முகைத்தார் வன் தொண்டர்-தம்மை முன்னே கண்டு இறைஞ்ச – 13.வெள்ளானை:1 7/2

மேல்


மொய்த்து (5)

மொய்த்து வளர் பேர் அழகு மூத்த வடிவேயோ – 1.திருமலை:5 32/1
மொய்த்து எழு சுடர் விடு சுரிகையை முனை பெற எதிர் உருவி – 3.இலை:3 91/3
மது மலர் ஈக்கள் மொய்த்து மருங்கு எழும் ஒலி-கொல் என்றான் – 3.இலை:3 101/4
மொய்த்து இழி தாரை கண் பொழி நீர் மெய் முழுது ஆர – 5.திருநின்ற:1 238/3
முற்ற இ தலத்தில் உள்ளோர் மொய்த்து உடன் படரும் போதில் – 6.வம்பறா:1 1205/2

மேல்


மொய்ப்ப (3)

முழை அரவு உமிழ்ந்த செய்ய மணி வெயில் ஒரு-பால் மொய்ப்ப
தழை கதிர் பரிதியோடும் சந்திரன் தலை உவாவில் – 3.இலை:3 129/2,3
மூழி நீர் கையில் பற்றி அமணரே ஆகி மொய்ப்ப – 6.வம்பறா:1 601/4
முன் துயில் உணர்ந்து சூழ்ந்த பரிசனம் மருங்கு மொய்ப்ப
மின் திகழ் பொலம் பூ_மாரி விண்ணவர் பொழிந்து வாழ்த்த – 6.வம்பறா:2 376/1,2

மேல்


மொய்ம் (1)

முன்னம் ஆங்கு அவன் மொய்ம் முகை நாள் மலர் – 1.திருமலை:1 26/1

மேல்


மொய்ம்பில் (1)

மொய்ம்பில் உவரின் பொதி சுமந்தோர் வண்ணான் முன்னே வர கண்டார் – 7.வார்கொண்ட:4 17/4

மேல்


மொய்யார் (1)

மொய்யார் வாச கரக நீர் வார்க்க முட்ட முதல் தொண்டர் – 8.பொய்:5 7/3

மேல்


மொய்வார் (1)

மொய்வார் சடையார் மூதூர்கள் இறைஞ்ச முறைமையால் நினைந்தார் – 7.வார்கொண்ட:4 81/4

மேல்


மொழி (91)

வெருள் இல் மெய் மொழி வான் நிழல் கூறிய – 0.பாயிரம்:1 9/3
அரும்பு அல்ல முலை என்ன அமுது அல்ல மொழி என்ன – 1.திருமலை:2 15/3
இந்த மொழி கேண்-மின் எதிர் யாவர்களும் என்றான் – 1.திருமலை:5 33/3
நன்று-ஆல் மறையோன் மொழி என்று எதிர் நோக்கி நக்கார் – 1.திருமலை:5 38/4
முறையால் வரு மதுரத்துடன் மொழி இ தளம் முதலில் – 1.திருமலை:5 75/1
பக்கம் முன் போதுவார்கள் பயில் மொழி பயிற்றி செல்ல – 1.திருமலை:5 187/2
எல்லை_இல் வண் புகழாரை எடுத்து இசைப்பா மொழி என்றார் – 1.திருமலை:5 199/4
தம் பெருமான் கொடுத்த மொழி முதல் ஆக தமிழ்_மாலை – 1.திருமலை:5 202/1
முன் பெரு நிதியம் ஏந்தி மொழி வழி ஏவல் கேட்ப – 2.தில்லை:4 26/3
முந்தை அந்தணர் மொழி கொண்டு முன்பு தாம் கொடுக்கும் – 2.தில்லை:7 16/2
மற்று அவன்-தன் மொழி கேட்ட வரை சூராட்டி மனம் மகிழ்ந்து இங்கு அன்போடு வருகின்றேனுக்கு – 3.இலை:3 51/1
இன்ப மொழி தோத்திரங்கள் மந்திரங்கள் யாவையினும் – 3.இலை:3 162/2
அன்பில் நினைந்து எனையல்லால் அறிவுறா மொழி நல்ல – 3.இலை:3 162/4
அருள்செய்த மொழி கேளா அடல் சுரிகை-தனை உருவி – 3.இலை:5 30/1
எண்_இல் அரு முனிவர் குழாம் இருக்கு மொழி எடுத்து ஏத்த – 3.இலை:7 41/2
முறைமையாம் என உலகினில் மிகு மொழி உடைத்து-ஆல் – 4.மும்மை:5 5/4
கொண்டு மகனார் திரு முதுகில் புடைத்து கொடிதாம் மொழி கூற – 4.மும்மை:6 49/2
மற்றவர்-தம் மொழி கேட்டு மதி கெட்ட மன்னவனும் – 5.திருநின்ற:1 108/1
சொல் துணை வேதியன் என்னும் தூய் மொழி
நல் தமிழ்_மாலை ஆம் நமச்சிவாய என்று – 5.திருநின்ற:1 126/1,2
வீடு அறியா சமணர் மொழி பொய் என்று மெய் உணர்ந்த – 5.திருநின்ற:1 146/1
சிவ முன் பயில் மொழி பகர்கின்றன வளர் சிறை மென் கிளியொடு சிறு பூவை – 5.திருநின்ற:1 160/4
செம் சொல் திருமறை மொழி அந்தணர் பயில் தில்லை திரு நகர் எல்லை-பால் – 5.திருநின்ற:1 161/3
சித்தம் பெருகிய பரிவால் இன்புறு திரு நேரிசை மொழி பகர்கின்றார் – 5.திருநின்ற:1 168/4
கண் பயிலும் புனல் பொழிய அரசும் வாய்மை கலை பயிலும் மொழி பொழிய கசிந்து பாடி – 5.திருநின்ற:1 186/4
முன்றில் அணைந்து செய்து தமிழ் மொழி மாலைகளும் சாத்துவார் – 5.திருநின்ற:1 193/4
சுற்றமுடன் களிகூர தொழுது எழுந்து சூழ்ந்து மொழி
கொற்றவரை அமுது செய குறை கொள்வார் இறைகொள்ள – 5.திருநின்ற:1 202/2,3
முத்து விதான மணி பொன் கவரி மொழி மாலை – 5.திருநின்ற:1 235/4
அ மொழி மாலை செந்தமிழ் கேளா அணி சண்பை – 5.திருநின்ற:1 236/1
மூல அன்பர் இருவர்களும் மொழி மாலைகளும் பல சாத்தி – 5.திருநின்ற:1 262/3
முன்பு பணிந்து போற்றி இசைத்து பரவி மொழி மாலைகள் பாடி – 5.திருநின்ற:1 270/3
மூண்ட அன்பின் மொழி மாலை சாத்தி ஞான முனிவரொடு – 5.திருநின்ற:1 283/3
சாலு மொழி வண் தமிழ் பாடி தலைவர் மிழலை வந்து அடைந்தார் – 5.திருநின்ற:1 291/4
மொழி வேந்தரும் முன் எழுந்தருள முருகு ஆர் சோலை பைஞ்ஞீலி – 5.திருநின்ற:1 304/3
முக்கண்பிரானை விரும்பும் மொழி திருத்தாண்டகங்கள் முதலாக – 5.திருநின்ற:1 316/3
தக்க மொழி மாலைகள் சாத்தி சார்ந்து பணி செய்து ஒழுகுவார் – 5.திருநின்ற:1 316/4
வேத மொழி மூலத்தை விழுந்து இறைஞ்சி எழுந்து பெரும் – 5.திருநின்ற:1 345/2
வேற்றும் ஆகி விண் ஆகி நின்றார் மொழி விரும்பி – 5.திருநின்ற:1 370/2
ஈர நல் மொழி எய்த இசைத்து உள்ளார் – 5.திருநின்ற:2 3/4
தணிவு_இல் பெரு மன காதல் ததும்ப வரும் மொழி பயின்றார் – 5.திருநின்ற:4 3/4
அ மொழி கேட்ட போதே அணங்கனார் சுற்றத்தாரும் – 5.திருநின்ற:4 41/1
தே_மொழி அவரும் சூழ சேணிடை கழிந்து சென்றார் – 5.திருநின்ற:4 42/4
ஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளி செய்தார் – 5.திருநின்ற:4 58/4
மடுத்த புனல் வேணியினார் அம்மை என மதுர மொழி
கொடுத்து அருளப்பெற்றாரை குலவிய தாண்டவத்தில் அவர் – 5.திருநின்ற:4 65/1,2
கூறும் என எதிர் மொழிந்தார் கோது_இல் மொழி கொற்றவனார் – 5.திருநின்ற:5 12/4
வெம்மை மொழி யான் கேட்க விளம்பினீர் என விளம்பி – 5.திருநின்ற:5 14/4
அந்தி மதியம் அணிந்த பிரான் அருளால் எழுந்த மொழி கேளா – 5.திருநின்ற:7 12/3
மெய்ம்மை மொழி திருப்பதிகம் பிரமபுரம் மேவினார் – 6.வம்பறா:1 76/2
இருக்கு மொழி பிள்ளையார் எதிர்தொழுது நின்று அருள – 6.வம்பறா:1 80/2
என்று இனைய பல கூறி இருக்கு மொழி அந்தணரும் ஏனையோரும் – 6.வம்பறா:1 94/1
பைம்_தொடியாள் திரு முலையின் பால் அறா மதுர மொழி பவள வாயார் – 6.வம்பறா:1 98/4
மண்டிய ஆர்வம் பெருக மதுர மொழி அருள்செய்தார் – 6.வம்பறா:1 271/4
செந்தமிழ்_மாலை விகற்ப செய்யுள்களான் மொழி மாற்றும் – 6.வம்பறா:1 276/1
வந்த சொல் சீர் மாலை மாற்றும் வழி மொழி எல்லா மடக்கு – 6.வம்பறா:1 276/2
மதுர மொழி மறை தலைவர் மருங்கு இமையோர் பொழி வாச – 6.வம்பறா:1 394/3
முன் தொழுது விழுந்து எழுந்து மொழி மாலை போற்றி இசைத்தார் – 6.வம்பறா:1 397/4
வண் தமிழின் மொழி விரகர் மணி முத்தின் சிவிகையினை – 6.வம்பறா:1 401/1
தந்தையார் மொழி கேட்டலும் புகலியார் தலைவர் – 6.வம்பறா:1 423/1
மொழி காதல் தமிழ்_மாலை புனைந்து அருளி அங்கு அகன்றார் மூதூர்-நின்றும் – 6.வம்பறா:1 467/4
பண் அமரும் மொழி உமையாள் முலையின் ஞான பால் அறா வாயருடன் அரசும் பார் மேல் – 6.வம்பறா:1 562/3
மெய்ப்பொருள் வண் தமிழ் பாடி அருளும் என்ன விளங்கு மொழி வேந்தர் அது மேற்கொண்டு என்னை – 6.வம்பறா:1 581/3
முன்பு நிற்பதுவும் ஆற்றார் மொழி தடுமாற ஏத்தி – 6.வம்பறா:1 585/3
சண்பை நாடு உடைய பிள்ளை தமிழ் மொழி தலைவரோடு – 6.வம்பறா:1 598/1
அ மொழி விளம்பினோர்க்கு வேண்டுவ அடைய நல்கி – 6.வம்பறா:1 644/1
மூல நெறி அறியாதே தங்கள் தெய்வ மொழி நவில் மந்திரம் கொண்டு முன்னும் பின்னும் – 6.வம்பறா:1 715/2
இந்த மெய் மொழி பயன் உலகம் இன்புற – 6.வம்பறா:1 821/2
வேறு மொழி போர் ஏற்பான் வந்த புத்தன் மேனியும் தலையினையும் வெவ்வேறாக – 6.வம்பறா:1 909/3
ஆங்கு அவன் தான் உரைத்த மொழி கேட்ட அன்பர் அதனை அனுவாதம் செய்தவனை நோக்கி – 6.வம்பறா:1 917/1
செவ்வாறு மொழி நாவலர் திருஞானசம்பந்தர்க்கு – 6.வம்பறா:1 936/3
முப்புரம் செற்றவர் தம்மை மொழி மாலை சாத்தினார் – 6.வம்பறா:1 1002/4
எஞ்சல்_இலா வகை முறையே பழையன் ஊரார் இயம்பு மொழி காத்த கதை சிறப்பித்து ஏத்தி – 6.வம்பறா:1 1010/2
வருத்தம் அகன்றிட மதுர மொழி அருளி விடைகொடுத்து – 6.வம்பறா:1 1120/2
மன்னும் இசை மொழி வண்டார் குழல் அரிவை என்று எடுத்து – 6.வம்பறா:1 1147/1
மற்றவர்-தம் மொழி கேட்டு மா தவத்தின் கொழுந்து அனையார் – 6.வம்பறா:1 1157/1
மதுர மொழி பல மொழிந்து வரன் முறையால் சிறப்பு அளிப்ப – 6.வம்பறா:1 1165/2
மண்டு காதல் உற வணங்கி வாய்ந்த மதுர மொழி மாலை – 6.வம்பறா:2 51/3
பண் நீர்மை மொழி பரவையார் கொழுநர் வரும் பாங்கர் – 6.வம்பறா:2 156/2
பண் ஆர் மொழி சங்கிலியாரை நோக்கி பயந்தாரொடும் கிளைஞர் – 6.வம்பறா:2 218/1
யாழின் மொழி எழில் முறுவல் இரு குழை மேல் கடை பிறழும் – 6.வம்பறா:2 268/1
பண் அமரும் மொழி பரவையார் பாடல் ஆடல்-தனை – 6.வம்பறா:2 271/3
முன் நின்று முறைப்பாடு போல் மொழிந்த மொழி மாலை – 6.வம்பறா:2 281/1
அ மொழி விளம்பும் நம்பிக்கு ஐயர் தாம் அருளி செய்வார் – 6.வம்பறா:2 352/1
மலர்ந்த மொழி திருமூலத்தேவர் மலர் கழல் வணங்கி – 6.வம்பறா:3 28/2
முன்னாக சாக்கியர்-தாம் மொழி அறத்தின் வழி சார்ந்து – 7.வார்கொண்ட:1 3/3
நாதர் தமக்கு அங்கு அமுது ஆக்க நறும் மென் குதலை மொழி புதல்வன் – 7.வார்கொண்ட:3 58/3
ஒருவர் ஒருவரில் கலந்த உணர்வால் இன்ப மொழி உரைத்து – 7.வார்கொண்ட:4 67/1
மேல் அவரை தொழுது இனிய மொழி விளம்பி விடைகொடுத்தார் – 8.பொய்:3 7/4
வண் தமிழின் மொழி வெண்பா ஓரொன்றா வழுத்துவார் – 8.பொய்:8 4/4
யாவர்க்கும் மனம் உவக்கும் இன்ப மொழி பயன் இயம்ப – 9.கறை:2 3/1
எதிர்கொண்ட தமர்க்கு எல்லாம் இனிய மொழி பல மொழிந்து – 10.கடல்:5 7/1
பேசுவன பணிந்த மொழி இனியனவே பேசுவார் – 11.பத்தராய்:1 1/4
வார் அணியும் முலை உமையாள் காண ஆடும் மாணிக்க கூத்தர் மொழி வாய்மையாலே – 11.பத்தராய்:6 3/4

மேல்


மொழி-மின் (2)

நின்றது இவண் நீர் மொழி-மின் நீர் மொழிவது என்றார் – 1.திருமலை:5 34/4
வந்தது மொழி-மின் என்றான் வலிய ஆட்கொள்ளும் வள்ளல் – 1.திருமலை:5 61/4

மேல்


மொழிக்கு (3)

இ தன்மை நிகழ்ந்துழி நாவின் மொழிக்கு இறை ஆகிய அன்பரும் இ நெடு நாள் – 5.திருநின்ற:1 75/1
காதல் அன்பர் முன்பு திருக்காப்பு நீங்க கலை மொழிக்கு
நாதர் ஞான முனிவருடன் தொழுது விழுந்தார் ஞாலத்துள் – 5.திருநின்ற:1 269/2,3
கொற்ற மன்னவன் மொழிக்கு எதிர் குறித்து உரை செய்வார் – 6.வம்பறா:1 687/4

மேல்


மொழிகள் (7)

அன்ன இ மொழிகள் சொல்லி அமுது செய்வித்த வேடர் – 3.இலை:3 126/1
மன் பெரு மா மறை மொழிகள் மா முனிவர் மகிழ்ந்து உரைக்கும் – 3.இலை:3 162/1
எய்தும் அவர் குறிப்பு அறிந்தே இன் மொழிகள் பல மொழிந்து – 4.மும்மை:5 118/1
வேத மொழிகள் எடுத்து ஏத்த விமல மூர்த்தி திரு உள்ளம் – 4.மும்மை:6 53/2
முடிவு ஏது என்று அறிந்திலேன் என மொழிகள் தடுமாற – 7.வார்கொண்ட:4 94/3
ஆரண மொழிகள் முழங்கிட ஆடினர் குணலைகள் அந்தணர் – 13.வெள்ளானை:1 23/1
நான்_மறை முனிவர்கள் மங்கல நாம நல் மொழிகள் விளம்பிட – 13.வெள்ளானை:1 25/2

மேல்


மொழிகளால் (2)

மாடு நிறை மடவார்கள் மங்கலமாம் மொழிகளால் வாழ்த்தி வாச – 6.வம்பறா:1 96/2
விரும்பு ஆர்வத்தோடும் ஏத்தி மெய் மொழிகளால் துதித்து – 6.வம்பறா:1 132/3

மேல்


மொழிகின்றாம் (1)

முன்னர் வய பரி உகைக்கும் திரு தொழில் பின் மொழிகின்றாம் – 7.வார்கொண்ட:4 174/4

மேல்


மொழிகின்றார் (6)

மற்றவர் திண்ணனார்க்கு மொழிகின்றார் வழி வந்து ஆற்ற – 3.இலை:3 93/1
முழுதும் தருமம் புரி மனையார் வந்து உள் புகுத மொழிகின்றார் – 5.திருநின்ற:7 23/4
முதிர் உணர்வின் மா தவரும் அணைந்த திறம் மொழிகின்றார் – 6.வம்பறா:1 1165/4
சங்கரர் தாள் பணிந்து இருந்து தமிழ் வேந்தர் மொழிகின்றார்
மங்கை அவள்-தனை பிரியா வகை சபதம் செய்வதனுக்கு – 6.வம்பறா:2 248/1,2
நீட பரவி மொழிகின்றார் நெடுமால் பிரமன் அரு_மறை முன் – 7.வார்கொண்ட:4 43/3
வாய்ந்த கூடு அவை கட்டி வழி கொள்வார் மொழிகின்றார் – 10.கடல்:5 3/4

மேல்


மொழிகின்றேன் (2)

முடிவு_இல் புகழ் திருத்தொண்டின் முயற்சியினை மொழிகின்றேன் – 5.திருநின்ற:1 429/4
மூ ஆண்டில் உலகு உய்ய நிகழ்ந்தது அதனை மொழிகின்றேன் – 6.வம்பறா:1 54/4

மேல்


மொழிகின்றோம் (1)

குலவு நீற்று வண் கூற்றுவனார் திறம் கொள்கையின் மொழிகின்றோம் – 7.வார்கொண்ட:5 7/4

மேல்


மொழிகேன் (1)

இ தகைமைத்து என்று என் மொழிகேன் என்று அருள்செய்தார் – 5.திருநின்ற:1 235/3

மேல்


மொழிந்த (20)

பொன்றுவித்தல் மரபு அன்று மறை மொழிந்த அறம் புரிதல் – 1.திருமலை:3 38/3
முந்தை மறை ஆயிரம் மொழிந்த திரு வாயான் – 1.திருமலை:5 33/4
தம்பிரான் தோழர் அவர் தாம் மொழிந்த தமிழ் முறையே – 1.திருமலை:5 203/3
முறைமையின் வழிபட மொழிந்த பூசைகள் – 2.தில்லை:2 14/3
மற்று அவர் மொழிந்த மாற்றம் மணி கடை காப்போர் கேளா – 3.இலை:1 27/1
முந்தை முறைமையின் விரும்பி மொழிந்த மண திறம் கேட்டே – 3.இலை:5 17/2
முந்தை மறை நூல் மரபின் மொழிந்த முறை எழுந்த வேய் – 3.இலை:7 13/1
இங்கு நாத நீ மொழிந்த ஆகமத்தின் இயல்பினால் உனை அர்ச்சனை புரிய – 4.மும்மை:5 52/3
பேதமும் புரந்து அருளும் அ கருணை பிரான் மொழிந்த ஆகம வழி பேணி – 4.மும்மை:5 54/2
சந்த மறைகள் உட்பட முன் தலைவர் மொழிந்த ஆகமங்கள் – 4.மும்மை:6 13/2
வண் தமிழால் எழுது மறை மொழிந்த பிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார் – 5.திருநின்ற:1 180/4
பண்பின் மொழிந்த உரை கொண்டு பதிகம் பாடும் அவ்வளவில் – 5.திருநின்ற:1 272/2
வேதங்கள் மொழிந்த பிரான் மெய் தொண்டர் நிலை கண்டு – 5.திருநின்ற:4 18/1
புதிய செந்தமிழ் பழ மறை மொழிந்த பூசுரனார் – 5.திருநின்ற:6 33/4
வெள்ள நீர் சடையாரை அவர் மொழிந்த மெய் பதிகம் – 6.வம்பறா:1 138/2
இங்கு நான் மொழிந்த அதனுக்கு இசைந்தீர் ஆகில் ஈசர் சிவநெறி போற்றி இருப்பீர் என்று – 6.வம்பறா:1 894/4
இன்று என் திறத்து நீர் மொழிந்த இது என் பரிசுக்கு இசையாது – 6.வம்பறா:2 213/2
முன் நின்று முறைப்பாடு போல் மொழிந்த மொழி மாலை – 6.வம்பறா:2 281/1
முன் உறு நிலைமை அங்கு புகுந்தது மொழிந்த போது – 10.கடல்:1 9/2
ஆகாது என்று அங்கு உரைத்த அகற்பம் நீக்கி ஆம் என்று முன் மொழிந்த மூன்று பேதம் – 11.பத்தராய்:6 1/3

மேல்


மொழிந்தது (1)

அவ்வாறு மொழிந்தது கேட்ட அமைச்சரோடு – 4.மும்மை:1 40/1

மேல்


மொழிந்தமை (1)

முந்தை நாளிலே மொழிந்தமை நினைந்து அருள் முன்னி – 6.வம்பறா:1 423/2

மேல்


மொழிந்தவர்க்கு (1)

வரு திறத்தின் மறை நான்கும் தந்தோம் என்று மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால் – 6.வம்பறா:1 264/3

மேல்


மொழிந்தவா (1)

என் இது மொழிந்தவா நீ யான் வைத்த மண் ஓடு அன்றி – 2.தில்லை:2 24/2

மேல்


மொழிந்தனர் (1)

முன்னர் ஞானசம்பந்தர் மொழிந்தனர் – 6.வம்பறா:1 824/4

மேல்


மொழிந்தனை (1)

முன்பு எனை பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே – 1.திருமலை:5 73/2

மேல்


மொழிந்தாய் (1)

நங்கை நின் தன்மைக்கு ஏற்கும் நன்மையே மொழிந்தாய் என்று – 6.வம்பறா:2 367/1

மேல்


மொழிந்தார் (20)

யாதினை அறிந்து என் சொல்லி பாடுகேன் என மொழிந்தார் – 1.திருமலை:5 72/4
மொய் அலர் வாவி புக்கு மூழ்குவாய் என மொழிந்தார் – 2.தில்லை:2 28/4
தேனும் உடன் கலந்து இது தித்திக்கும் என மொழிந்தார் – 3.இலை:3 150/4
மற்று உமக்கு சோபனம் ஆகுவது என்று வாய் மொழிந்தார் – 3.இலை:5 27/4
தெய்வ மறை முனிவர்களும் தீ அமைத்தபடி மொழிந்தார் – 4.மும்மை:4 30/4
வந்த பரிசே செய்கின்றான் என்றான் என்று வாய் மொழிந்தார் – 4.மும்மை:6 42/4
மூளும் அரும் துயர் உழந்தீர் எழுந்தீர் என மொழிந்தார் – 5.திருநின்ற:1 64/4
முன் உணர்வின் முயற்சியினால் திருவிருத்தம் பல மொழிந்தார் – 5.திருநின்ற:1 426/4
மொய் தரு பூம் குழல் மடவார் புகுந்தபடி-தனை மொழிந்தார் – 5.திருநின்ற:4 28/4
கூறும் என எதிர் மொழிந்தார் கோது_இல் மொழி கொற்றவனார் – 5.திருநின்ற:5 12/4
ஏதமே என மொழிந்தார் எங்கள் பிரான் சம்பந்தர் – 6.வம்பறா:1 79/4
முற்றும் என்னையும் கொடுத்தனன் யான் என்று மொழிந்தார் – 6.வம்பறா:1 1053/4
வந்தவாறு கண்டு இந்த வழக்கை முடிப்பது என மொழிந்தார் – 6.வம்பறா:4 17/4
ஏதம் இன்றி அமைத்த கறியாம் இட்டு உண்பது என மொழிந்தார் – 7.வார்கொண்ட:3 51/4
இன்பம் பெருகும் திருத்தொண்டுக்கு இடையூறு ஆக இவர் மொழிந்தார்
அன்பு நிலைமை வழுவாமை அரசு புரக்க அருள் உண்டேல் – 7.வார்கொண்ட:4 13/1,2
வார வேடம் நினைப்பித்தீர் வருந்தாது ஏகும் என மொழிந்தார் – 7.வார்கொண்ட:4 19/4
புரந்த அரசும் கொள்ளும் என மொழிந்தார் பொறையர் புரவலனார் – 7.வார்கொண்ட:4 35/4
நின்று மொழிந்தார் பொன்னி மா நதியும் நீங்கி நெறி காட்ட – 7.வார்கொண்ட:4 135/4
அன்றினார் முனை முருக்கி அரசு ஆளும் என மொழிந்தார் – 7.வார்கொண்ட:4 158/4
எவ்வுலகும் புகழ்ந்து ஏத்தும் இன் தமிழ் வெண்பா மொழிந்தார் – 8.பொய்:8 6/4

மேல்


மொழிந்தார்கள் (1)

முதிர வரும் பாதகத்தோர் முடை வாயால் மொழிந்தார்கள் – 5.திருநின்ற:1 102/4

மேல்


மொழிந்தால் (1)

வழக்கு என்று நீர் மொழிந்தால் மற்று அது தான் வலிப்பட்டு – 1.திருமலை:3 35/1

மேல்


மொழிந்தான் (1)

ஆசு_இல் கனி அவன் அருளால் அழைத்து அளிப்பாய் என மொழிந்தான் – 5.திருநின்ற:4 29/4

மேல்


மொழிந்திடலும் (1)

பெருகு சின கொடுங்கோலான் மொழிந்திடலும் பெருந்தகையை – 5.திருநின்ற:1 96/2

மேல்


மொழிந்தீர் (2)

மன் உலகில் பெற மொழிந்தீர் மந்திரிகள் வழக்கு என்றான் – 1.திருமலை:3 37/4
மங்கலம் ஆம் திரு வேடத்துடன் இன்று இவ்வகை மொழிந்தீர்
எங்கு உறைவீர் நீர்-தாம் யார் இயம்பும் என இயம்பினார் – 5.திருநின்ற:5 15/3,4

மேல்


மொழிந்து (39)

என மொழிந்து மற்று இதனுக்கு இனி இதுவே செயல் இ ஆன் – 1.திருமலை:3 42/1
முப்புரிநூல் மார்பர் உடன் முன் அணைவாய் என்ன மொழிந்து
அ பரிசே தில்லை வாய் அந்தணர்க்கும் எரி அமைக்க – 4.மும்மை:4 28/2,3
மறையவர்கள் மொழிந்து அதன் பின் தென் திசையின் மதில் புறத்து – 4.மும்மை:4 31/1
எய்தும் அவர் குறிப்பு அறிந்தே இன் மொழிகள் பல மொழிந்து
செய் தவத்தீர் திருமேனி இளைத்து இருந்தது என் என்று – 4.மும்மை:5 118/1,2
முன்னம் உயிர் நீப்பன் என மொழிந்து இடரின் அழுந்தினார் – 5.திருநின்ற:1 33/4
உய்யும் நெறி தாண்டகம் மொழிந்து அங்கு ஒழியா காதல் சிறந்து ஓங்க – 5.திருநின்ற:1 253/4
மாதரார்க்கும் புகுந்தபடி மொழிந்து விடியல் விரைவோடு – 5.திருநின்ற:7 28/3
தூ நறும் தமிழ் சொல் இருக்கு குறள் துணை மலர் மொழிந்து ஏத்தி – 6.வம்பறா:1 182/2
புனையும் வண் தமிழ் மொழிந்து அடி பணிந்து போந்து அணைந்தார் – 6.வம்பறா:1 235/3
முன் அணைய கொணர்வித்தேன் இது புகுந்தபடி என்று மொழிந்து நின்றான் – 6.வம்பறா:1 317/4
செய்ய இன் இசை செந்தமிழ்_மாலைகள் மொழிந்து
நையும் உள்ளத்தராய் திருநல்லத்தில் நண்ணி – 6.வம்பறா:1 433/3,4
படி அறிய பழுது என்றே மொழிந்து உய்யும் நெறி காட்டும் பவள வாயர் – 6.வம்பறா:1 443/4
அணைபவர் அள்ளல் கழனி ஆரூர் அடைவோம் என மொழிந்து அன்பு பொங்க – 6.வம்பறா:1 498/3
என்று பிள்ளையார் மொழிந்து அருள்செய்திட இரும் தவத்து இறையோரும் – 6.வம்பறா:1 528/1
மூலம் ஆகிய திரு இருக்கு குறள் மொழிந்து
சீல மா தவ திருத்தொண்டர்-தம்மொடும் திளைத்தார் – 6.வம்பறா:1 667/2,3
யாழின் மென் மொழியார் மொழிந்து எதிர் கழல் வணங்க – 6.வம்பறா:1 673/1
மொழிந்து அருள அது கேட்டு முன் இறைஞ்சி முகம் மலர்வார் – 6.வம்பறா:1 735/1
முன் உற ஒக்க தீர்க்க மொழிந்து மற்று அவரால் தீர்ந்தது – 6.வம்பறா:1 748/3
முத்து நிரை சிவிகையின் மேல் மணியை வந்து முறை பணிந்து புகுந்தபடி மொழிந்து நின்றார் – 6.வம்பறா:1 907/4
முந்தை அறிவிலன் ஆகி உறங்கினானை நிந்தித்து மொழிந்து உடல் மீது ஆடினார்க்கு – 6.வம்பறா:1 918/3
உள்ள பரிசு எல்லாம் மொழிந்து ஆங்கு உவந்து இருந்தார் – 6.வம்பறா:1 943/4
முன்ன மா முடக்கு கான் முயற்கு அருள்செய்த வண்ணமும் மொழிந்து ஏத்தி – 6.வம்பறா:1 963/2
முற்றியது ஆயினும் கூடாது என்று அவர் முன் மொழிந்து அருள – 6.வம்பறா:1 1157/4
மதுர மொழி பல மொழிந்து வரன் முறையால் சிறப்பு அளிப்ப – 6.வம்பறா:1 1165/2
இனியன மொழிந்து தாமும் குண்டையூர் எய்த வந்தார் – 6.வம்பறா:2 18/4
முத்தி தரும் பெருமானை துருத்தி கூட மூப்பதிலை எனும் பதிகம் மொழிந்து வாழ்ந்தார் – 6.வம்பறா:2 121/4
சாற்றும் என கோல் தொடியார் மொழிந்து அருள தனி தொண்டர் – 6.வம்பறா:2 131/4
ஏதம் எய்தா வகை மொழிந்து போக்க அவர் ஆங்கு எய்தா முன் – 6.வம்பறா:2 215/2
முடிவேன் என்று துணிந்து இருந்தாள் என் நான் செய்வது என மொழிந்து – 6.வம்பறா:2 327/4
முந்துற ஒழியாது என்று மொழிந்து அருள்செய்ய கேட்டு – 6.வம்பறா:2 391/4
நன்று என மொழிந்து நானும் நண்ணுவேன் இவர் முன்பு என்பார் – 6.வம்பறா:2 403/4
முற்றவே மொழிந்து அருள அவர் மீண்டு போனதன் பின் – 6.வம்பறா:3 24/2
முடியாது உமக்கு செய்கை அரிது ஒண்ணா என்று மொழிந்து அருள – 7.வார்கொண்ட:3 46/4
காலம் தப்பாமே வருவேன் என்று மொழிந்து கைதொழுதார் – 7.வார்கொண்ட:3 49/4
அதுவும் முனைவர் மொழிந்து அருள கேட்ட தொண்டர் அடியேனுக்கு – 7.வார்கொண்ட:3 52/1
கண்டு அருளும் படி கழறிற்றறிவார்க்கு மொழிந்து அருளி – 7.வார்கொண்ட:4 114/1
ஆரூரர் மொழிந்து அருள அது கேட்ட அருள் சேரர் – 7.வார்கொண்ட:4 159/1
நிறை மதி நீடு அமைச்சர்க்கு மொழிந்து அருளி நிகழும் நாள் – 8.பொய்:2 14/4
எதிர்கொண்ட தமர்க்கு எல்லாம் இனிய மொழி பல மொழிந்து
மதி தங்கு சுடர் மணி மாளிகையின்-கண் வந்து அணைந்து – 10.கடல்:5 7/1,2

மேல்


மொழிய (15)

நெற்றி_விழியான் மொழிய நின்ற நிகர் இல்லான் – 1.திருமலை:5 36/1
மறையவன் இத்திறம் மொழிய மா மறையோர் உரைசெய்வார் – 2.தில்லை:2 33/3
அரும் தவ தொண்டர்-தாமும் அந்தணர் மொழிய கேட்டு – 2.தில்லை:2 36/1
முடியா முதலாய் எனவே மொழிய – 3.இலை:1 19/4
தேம் பொதிந்த சில் மழலை மென் மொழிய செவ்வழி யாழ் – 4.மும்மை:5 38/4
முண்ட நீற்றர் நின் பூசனை என்றும் முடிவது இல்லை நம்-பால் என மொழிய – 4.மும்மை:5 68/4
மறையோர் மொழிய கேட்டு அஞ்சி சிறு மாணவகன் செய்த இது – 4.மும்மை:6 43/1
சென்று அவனுக்கு உரை என்று திலகவதியார் மொழிய
அன்று அவனும் மீண்டு போய் புகுந்தபடி அவர்க்கு உரைத்தான் – 5.திருநின்ற:1 58/3,4
செம் சொல் தமிழ்_மாலைகள் மொழிய தேவர் பெருமான் அருளாலே – 5.திருநின்ற:3 8/2
திரு மறையோர் அது மொழிய திருநாவுக்கரசர் அவர் – 5.திருநின்ற:5 16/1
கிளருறும் ஓகை கூறி வந்தவர் மொழிய கேட்டார் – 6.வம்பறா:1 643/4
மன்னும் மந்திரியார் வரும் திறம் எலாம் மொழிய
அன்ன மென் நடையார்-தமக்கு அருள்செய்து போக்கி – 6.வம்பறா:1 674/2,3
அப்பரிசு அங்கு அவர் மொழிய ஆண்ட அரசினை காணும் – 6.வம்பறா:1 929/1
பாங்கு அறிய மொழிய அவர் பயத்தின் உடன் அதிசயமும் – 6.வம்பறா:2 254/3
மன்னவனார் அது மொழிய வன் தொண்டர் எதிர் மொழிவார் – 7.வார்கொண்ட:4 160/1

மேல்


மொழியப்பெற்றேன் (1)

முனைவனார் தொண்டர்க்கு அங்கு நிகழ்ந்தது மொழியப்பெற்றேன் – 3.இலை:6 13/4

மேல்


மொழியார் (2)

தழைத்த மொழியார் உப்பாலார் தாம் இங்கு எப்பால் மறைவது என – 5.திருநின்ற:1 280/4
யாழின் மென் மொழியார் மொழிந்து எதிர் கழல் வணங்க – 6.வம்பறா:1 673/1

மேல்


மொழியால் (9)

சாலும் மொழியால் வழி தடுத்து அடிமை கொள்வான் – 1.திருமலை:5 28/2
நீங்கு மா தவர் விசும்பிடை கரந்து நீள் மொழியால்
ஓங்கு நாவினுக்கு அரசனே எழுந்திர் என்று உரைப்ப – 5.திருநின்ற:1 367/2,3
மேவிய சங்கரனை எதிர்நின்று விருப்புறு மொழியால்
பாவு திரு நேர் இசைகள் முதலான தமிழ் பாடி – 5.திருநின்ற:1 409/2,3
வேத மொழியால் ஒலி விளங்கி எழும் எங்கும் – 6.வம்பறா:1 31/4
உள் நிறைந்து பொழிந்து எழுந்த உயர் ஞான திரு மொழியால் – 6.வம்பறா:1 74/4
மூவலூர் உறை முதல்வரை பரவிய மொழியால்
மேவு காதலில் ஏத்தியே விருப்பொடும் போந்து – 6.வம்பறா:1 437/1,2
தாங்கிய மொழியால் தகுவன விளம்பி தலை அளித்து அருளும் அப்பொழுதில் – 6.வம்பறா:1 661/2
இணங்கு இலா மொழியால் உளோம் போகீர் என்று இயம்பினார் ஏதிலார் போல – 6.வம்பறா:2 279/4
மொழியால் புகழ முடியுமோ முடியாது எவர்க்கும் முடியாது-ஆல் – 12.மன்னிய:7 1/4

மேல்


மொழியாலே (1)

துணிந்த மறை மொழியாலே துடி செய்து சுடர் திங்கள் – 3.இலை:3 140/2

மேல்


மொழியாள் (5)

பாலூரும் இன் மொழியாள் பாகனார் கழல் பரவி – 5.திருநின்ற:1 216/2
பண்ணின் நேரு மொழியாள் என்று எடுத்து பாட பயன் துய்ப்பான் – 5.திருநின்ற:1 268/2
யாழின் மொழியாள் தனி பாகரை போற்றும் யாகம் – 6.வம்பறா:6 2/1
தேனும் குழலும் பிழைத்த திரு மொழியாள் புலவி தீர்க்க மதி – 7.வார்கொண்ட:6 9/1
யாழின் மொழியாள் உமை ஞானம் ஊட்ட உண்ட எம்பெருமான் – 12.மன்னிய:5 10/2

மேல்


மொழியாள்-தன் (1)

ஏழ் இசை மொழியாள்-தன் திருவருள் பெற்றனை என்பார் – 6.வம்பறா:1 91/4

மேல்


மொழியில் (1)

முன்னும் திருத்தொண்டர் நிலை முடிந்தபடி தான் மொழியில்
துன்னிய மெய் அன்புடனே எழுந்த வினை தூயவர்க்கு – 7.வார்கொண்ட:1 13/2,3

மேல்


மொழியின் (2)

யாழின் மொழியின் குழல் இன் இசையும் சுரும்பும் – 4.மும்மை:1 4/3
பூ அலர் சோலை மணம் அடி புல்ல பொருள் மொழியின்
காவலர் செல்வ திரு கெடிலத்தை கடந்து அணைந்தார் – 5.திருநின்ற:1 136/3,4

மேல்


மொழியினார் (1)

திரு அமுது செய்வித்தார் திருந்திய தேன் மொழியினார் – 7.வார்கொண்ட:4 124/4

மேல்


மொழியும் (3)

நிறை உடைய வேட்கோவர் நீர் மொழியும் புகுந்தது என – 2.தில்லை:2 33/4
ஆதி முதல்வரை வணங்கி ஆட்சி கொண்டார் என மொழியும்
கோயில் திருப்பதிக இசை குலாவிய பாடலில் போற்றி – 6.வம்பறா:1 1133/1,2
முடி மேல் கொண்டு கூத்து ஆடி மொழியும் குழறி பொழி கண்ணீர் – 7.வார்கொண்ட:4 31/3

மேல்


மொழியேன் (1)

எண்ணாது அடியேன் மொழியேன் நீர் அமுது செய்யும் இயல்பு-அதனை – 7.வார்கொண்ட:3 47/1

மேல்


மொழிவது (4)

நின்றது இவண் நீர் மொழி-மின் நீர் மொழிவது என்றார் – 1.திருமலை:5 34/4
நாவல் நகர் ஊரன் இது நான் மொழிவது என்றான் – 1.திருமலை:5 37/2
முந்தையோரை எ கூற்றின் மொழிவது என்று – 6.வம்பறா:1 831/3
மோகாதி குற்றங்கள் அறுக்கும் நீற்றை மொழிவது நம் இருவினைகள் கழிவதாக – 11.பத்தராய்:6 1/4

மேல்


மொழிவாம் (3)

செயல் உடைப்புற திருத்தொண்டர் திறத்தினை மொழிவாம் – 4.மும்மை:3 10/4
முன்னம் எய்தியது ஒன்றினை நிகழ்ந்தவா மொழிவாம் – 6.வம்பறா:1 1033/4
செய்தவராம் செருத்துணையார் திருத்தொண்டின் செயல் மொழிவாம் – 10.கடல்:2 11/4

மேல்


மொழிவார் (9)

மது மலர் குழல் மனைவியார் கலங்கி மனம் தெளிந்த பின் மற்று இது மொழிவார் – 2.தில்லை:3 8/4
தங்கும் கருணை பெரு வெள்ளம் இட தகுமோ என இன்னன தாம் மொழிவார் – 5.திருநின்ற:1 72/4
வைகு நாள் எண்_இறந்த வண் தமிழ்_மாலைகள் மொழிவார் – 5.திருநின்ற:1 413/4
வான் அளவு நிறைந்த பெரு மனம் மகிழ்ச்சியொடு மொழிவார் – 6.வம்பறா:1 1166/4
சங்கிலியார் கனவு உரைப்ப கேட்ட தாதியர் மொழிவார் – 6.வம்பறா:2 257/4
சென்று மொழிவார் திருவொற்றியூரில் நிகழ்ந்த செய்கை எலாம் – 6.வம்பறா:2 317/2
அடியேன் உய்ந்தேன் எங்கு உற்றார் உரையாய் என்ன அவர் மொழிவார்
வடி சேர் சூல கபாலத்தார் வட தேசத்தோம் என்றார் வண் – 7.வார்கொண்ட:3 43/1,2
அண்ணல் திரு முன்பு அணைந்து இறைஞ்சி அன்பர் மொழிவார் அடியேன்-பால் – 7.வார்கொண்ட:3 68/1
மன்னவனார் அது மொழிய வன் தொண்டர் எதிர் மொழிவார்
என் உயிருக்கு இன் உயிராம் எழில் ஆரூர் பெருமானை – 7.வார்கொண்ட:4 160/1,2

மேல்


மொழிவான் (1)

மன்னவன் மொழிவான் என்னே மதித்த இ காலம் ஒன்றில் – 6.வம்பறா:1 768/1

மேல்


மொழிவேன் (3)

ஒரு மண திறத்தின் ஆங்கு நிகழ்ந்தது மொழிவேன் உய்ந்தேன் – 1.திருமலை:5 27/4
செய் வண்ண திறம் மொழிவேன் தீ_வினையின் திறம் ஒழிவேன் – 3.இலை:3 141/4
இழுதையேன் திரு முன்பே என் மொழிவேன் என்று இறைஞ்சி – 6.வம்பறா:2 285/4

மேல்