சீ – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சீக்கும் 1
சீகரம் 1
சீகாழி 2
சீத 18
சீதம் 3
சீதள 1
சீப்ப 1
சீர் 222
சீர்த்தி 7
சீர்த்தியினார் 1
சீரணி 1
சீராட்டே 1
சீரார் 2
சீராரும் 1
சீராள 1
சீராளா 1
சீரியார் 1
சீரில் 1
சீரின் 10
சீரினில் 1
சீரும் 2
சீல 9
சீலத்தார் 1
சீலத்தார்கள் 1
சீலத்தால் 2
சீலத்தின் 1
சீலத்து 3
சீலம் 17
சீலமும் 1
சீலமே 2
சீலர் 1
சீலராய் 1
சீற்றத்தினாலே 1
சீற்றம் 1
சீறடி 2
சீறடிகள் 1
சீறடியார் 1
சீறடியில் 1
சீறி 6
சீறு 1
சீறும் 2
சீறூர் 3

சீக்கும் (1)

மா மணி அணிந்த தூய வளர் ஒளி இருள் கால் சீக்கும்
நாம நீள் கலன்கள் சாத்தி நன் மண_கோலம் கொண்டார் – 1.திருமலை:5 18/3,4

மேல்


சீகரம் (1)

மன்றல் செய் மதுர சீதம் சீகரம் கொண்டு மந்த – 6.வம்பறா:2 376/3

மேல்


சீகாழி (2)

உள்ளம் ஆதரவு ஓங்கிட ஓங்கு சீகாழி
வள்ளலாரை தம் மனையிடை அமுது செய்வித்தார் – 5.திருநின்ற:6 27/3,4
வரு பெரும் தவ மறையவர் வாழி சீகாழி
ஒருவர்-தம் திரு கல்லியாணத்தினில் உடனே – 5.திருநின்ற:6 37/2,3

மேல்


சீத (18)

சீத நீர் முடி சேர்ப்பவர் செய்கையும் – 1.திருமலை:2 11/2
மங்கையர் வதன சீத மதி இரு மருங்கும் ஓடி – 1.திருமலை:5 1/3
சீத மதி வெண்குடை வளவர் மகளார் தென்னன் தேவியாம் – 5.திருநின்ற:1 284/2
சீத மலர் மென் சோலை சூழ் திருவோத்தூரில் சென்று அடைந்தார் – 5.திருநின்ற:1 315/4
சீத நீர் வயல் சூழ் திங்களூரில் அப்பூதியாராம் – 5.திருநின்ற:4 66/3
வந்து அணைந்த வாகீசர் மந்த மாருத சீத
பந்தர் உடன் அமுதம் ஆம் தண்ணீரும் பார்த்து அருளி – 5.திருநின்ற:5 6/1,2
சீத நல் நீர் முதலான கொண்டு இங்கு அணைவாய் என செப்ப – 5.திருநின்ற:7 25/3
சீத வள வயல் புகலி திருஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 1/3
சேல் அலம்பும் தண் புனல் தடம் படிந்து அணை சீத மாருதம் வீச – 6.வம்பறா:1 151/2
சீத வாச நீர் நிறை குடம் தீபங்கள் திசை எலாம் நிறைந்து ஆர – 6.வம்பறா:1 155/2
சீத முத்தின் சிவிகை மேல் ஏற்றிட – 6.வம்பறா:1 209/2
சே உகைத்தவர் திருத்தொண்டர் ஆனவர்கள் முன் சென்று சீத
பூவினில் பொலி புனல் புகலியார் போதகத்து எதிர் பணிந்தே – 6.வம்பறா:1 521/2,3
சீத முத்து அணி சிவிகை-நின்று இழிந்து எதிர் செல்பவர் திரு தோணி – 6.வம்பறா:1 952/2
தாங்கி சீத விரை பனி நீர் தெளித்து தைவந்து அது நீங்க – 6.வம்பறா:2 212/3
சீத மலர் பூ மண்டபத்து திரை சூழ் ஒரு-பால் சென்று இருந்து – 6.வம்பறா:2 222/4
சீத மலர் தாமரை அடி கீழ் சேர்ந்து வீழ்ந்து செந்நின்று – 6.வம்பறா:2 240/3
சீத மலர் கண் கொடுத்து அருள செவ்வே விழித்து முகம் மலர்ந்து – 6.வம்பறா:2 310/3
சீத மதி அரவினுடன் செம் சடை மேல் செறிவித்த – 7.வார்கொண்ட:3 15/1

மேல்


சீதம் (3)

சீதம் மலி காலத்து திருக்குறிப்புத்தொண்டர்-பால் – 4.மும்மை:5 116/1
மன்றல் செய் மதுர சீதம் சீகரம் கொண்டு மந்த – 6.வம்பறா:2 376/3
சந்த யாழ் தரையில் சீதம் தாக்கில் வீக்கி அழியும் என்று – 12.மன்னிய:5 6/2

மேல்


சீதள (1)

சீதள தரள பந்தர் செழும் தவிசி இழிந்து தங்கள் – 1.திருமலை:5 183/3

மேல்


சீப்ப (1)

காது கொள் குழைகள் வீசும் கதிர் நிலவு இருள் கால் சீப்ப
மாது கொள் புலவி நீக்க மனையிடை இரு கால் செல்ல – 3.இலை:7 42/2,3

மேல்


சீர் (222)

பொரு அரும் சீர் புகலல் உற்றேன் முற்ற – 0.பாயிரம்:1 6/2
ஆய சீர் அநபாயன் அரசு அவை – 0.பாயிரம்:1 8/4
தான மாக்கள் முழக்கமும் தா_இல் சீர்
வான துந்துபி ஆர்ப்பும் மருங்கு எலாம் – 1.திருமலை:1 4/3,4
உன்ன_அரும் சீர் உப மன்னிய முனி – 1.திருமலை:1 13/4
அந்தம்_இல் சீர் அனிந்திதை ஆய் குழல் – 1.திருமலை:1 24/1
தொன்று சீர் திருத்தொண்டத்தொகை விரி – 1.திருமலை:1 37/3
அலகு_இல் சீர் நம்பி ஆரூரர் பாடிய – 1.திருமலை:1 40/2
சீர் அணங்கிய தேவர்களே அலால் – 1.திருமலை:3 10/3
அலகு_இல் சீர் திருவாரூர் விளங்கும்-ஆல் – 1.திருமலை:3 12/4
மன்னு சீர் அநபாயன் வழி முதல் – 1.திருமலை:3 13/3
திரு மலி சிறப்பின் ஓங்கி சீர் மண பருவம் சேர்ந்தார் – 1.திருமலை:5 6/4
சீர் விளங்கு மணி நா ஒலியாலும் திசைகள் நான்கு எதிர் புறப்படலாலும் – 1.திருமலை:5 97/2
அன்பின் வந்து எதிர்கொண்ட சீர் அடியார் அவர் கேளா நம்பிஆரூரர் தாமோ – 1.திருமலை:5 98/1
தம்பிரான் மயிலாடுதுறை வணங்கி தாவு_இல் சீர்
அம்பர் மாகாளத்தின் அமர்ந்த பிரான் அடி பணிந்தார் – 1.திருமலை:5 116/3,4
சீர் பரவை ஆயினாள் திரு உருவின் மென் சாயல் – 1.திருமலை:5 148/3
தாவு_இல் சீர் பெருமை ஆரூர் மறையவர் தலைவ என்றும் – 1.திருமலை:5 186/3
விண்ணவர் ஒழிய மண் மேல் மிக்க சீர் அடியார் கூடி – 1.திருமலை:5 189/2
மன்னு சீர் அடியார் தங்கள் வழி தொண்டை உணர நல்கி – 1.திருமலை:5 195/3
மன்னு சீர் வயல் ஆரூர் மன்னவரை வன் தொண்டர் – 1.திருமலை:5 200/1
அளவு_இல் சீர் ஆணை போற்றி ஆண்டுகள் பலவும் செல்ல – 2.தில்லை:2 9/2
மல்கு சீர் தொண்டனார் வணங்கி வாங்கிக்கொண்டு – 2.தில்லை:2 17/2
பொய் இல் சீர் புதல்வன் இல்லை என் செய்கேன் புகலும் என்ன – 2.தில்லை:2 28/2
மயல்_இல் சீர் தொண்டனாரை யான் அறிவகையால் வாழ்த்தி – 2.தில்லை:2 44/2
மிக்க சீர் அடியார்கள் யார் எனினும் வேண்டும் யாவையும் இல்லை என்னாதே – 2.தில்லை:3 2/3
மிக்க சீர் வளர் திருவிழா விருப்புடன் வணங்கி – 2.தில்லை:7 4/2
மன்னிய அநபாயன் சீர் மரபின் மா நகரம் ஆகும் – 3.இலை:1 2/3
ஆன சீர் தொண்டர் கும்பிட்டு அடியனேன் களிப்ப இந்த – 3.இலை:1 52/1
எண் திசையும் ஏறிய சீர் எயின் மூதூர் எயினன் ஊர் – 3.இலை:2 1/4
விறல் பெரும் சீர் காளையர்கள் வேறு இடத்து நின்றார் – 3.இலை:2 12/2
அண்டர் பிரான் சீர் அடியார் ஆயினார் என்று மனம் – 3.இலை:2 38/3
புண்ணிய பொருளாய் உள்ள பொருவு_இல் சீர் உருவினானை – 3.இலை:3 17/3
மாசு_இல் சீர் வெட்சி முன்னா வரு துறை கண்ணி சூடி – 3.இலை:3 37/3
கொண்ட சீர் விழவு பொங்க குறிச்சியை வலம்கொண்டார்கள் – 3.இலை:3 38/4
தெய்வ நிகழ் குற முதியாள் சென்ற பின்பு திண்ணனார் சிலை தாதை அழைப்ப சீர் கொள் – 3.இலை:3 52/1
செறி கொண்ட வண்டின் குலம் சீர் கொள பின்பு செய்து – 3.இலை:3 57/4
எய்திய சீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக்கு ஏற்ப – 3.இலை:3 135/1
ஏய்ந்த சீர் மறையோர் வாழும் எயில் பதி எறி நீர் கங்கை – 3.இலை:4 1/2
புயல் எலாம் கமுகின் காடு அ புறம் எலாம் அதன் சீர் போற்றல் – 3.இலை:4 2/3
மின் இடை மடவார் கூற மிக்க சீர் கலயனார்-தாம் – 3.இலை:4 20/1
சீர் உடை அடிசில் நல்ல செழும் கறி தயிர் நெய் பாலால் – 3.இலை:4 22/3
செப்ப உயர்ந்த சிறப்பின் மலிந்தது சீர் மேவும் – 3.இலை:7 8/3
அந்தம்_இல் சீர் இடை ஈட்டின் அங்குலி எண்களின் அமைத்து – 3.இலை:7 13/4
சீர் மன்னு செல்வ_குடி மல்கு சிறப்பின் ஓங்கும் – 4.மும்மை:1 1/1
செப்ப தகு சீர் குடி செய் தவம் செய்ய வந்தார் – 4.மும்மை:1 8/2
பாடு பெற்ற சீர் உருத்திர பசுபதியார்-ஆம் – 4.மும்மை:3 9/3
பகர்ந்து உலகு சீர் போற்றும் பழைய வளம் பதியாகும் – 4.மும்மை:4 1/1
சீர் ஏறும் இசை பாடி திருத்தொண்டர் திரு வாயில் – 4.மும்மை:4 17/1
சேண் உலாவு சீர் சேரனார் திருமலைநாட்டு – 4.மும்மை:5 4/2
அந்தம்_இல் சீர் காஞ்சியை வந்து அடைந்தார்க்கு அன்றி அடை களங்கம் அறுப்பர் என்று அறிந்து சூழ – 4.மும்மை:5 87/3
சீர் நிலவு திருக்குறிப்புத்தொண்டர் திரு தொழில் போற்றி – 4.மும்மை:5 128/1
பெரு நாம சீர் பரவல்உறுகின்றேன் பேர் உலகில் – 5.திருநின்ற:1 1/3
சிறந்த திருமுனைப்பாடி திறம் பாடும் சீர் பாடு – 5.திருநின்ற:1 11/4
மாதினியார் திரு வயிற்றின் மன்னிய சீர் புகழனார் – 5.திருநின்ற:1 19/1
குணம் பேசி குலம் பேசி கோது_இல் சீர் புகழனார் – 5.திருநின்ற:1 24/3
சீர் ஆர் திருவதிகை வீரட்டானம் சேர்ந்தார் – 5.திருநின்ற:1 42/4
மேவுற்ற இ வேலையில் நீடிய சீர் வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால் – 5.திருநின்ற:1 74/1
மையல் துறை ஏறி மகிழ்ந்து அலர் சீர் வாகீசர் மனத்தொடு வாய்மையுடன் – 5.திருநின்ற:1 77/1
செம் சடையார் சீர் விளக்கும் திறல் உடையார் தீ விடத்தால் – 5.திருநின்ற:1 104/3
எங்கள் எதிர் ஏறு அழிய யானையால் இவ்வண்ணம் நின் சீர்
பங்க படுத்தவன் போக பரிபவம் தீரும் உனக்கு – 5.திருநின்ற:1 121/2,3
தப்பியது அதன் மிசை இருந்த தாவு_இல் சீர்
மெய் பெருந்தொண்டனார் விளங்கி தோன்றினார் – 5.திருநின்ற:1 128/3,4
வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரை – 5.திருநின்ற:1 131/1
சீர் உடை அந்தணர் வாழும் செழும் பதியின் அகத்து எய்தி – 5.திருநின்ற:1 149/2
ஆனாத சீர் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற – 5.திருநின்ற:1 156/1
காழி வரும் பெருந்தகை சீர் கேட்டலுமே அதிசயம் ஆம் காதல் கூர – 5.திருநின்ற:1 178/3
செப்ப_அரும் சீர் அப்பூதிஅடிகள் ஊர் திங்களூர் – 5.திருநின்ற:1 200/4
ஒன்று-கொலாம் என பதிகம் எடுத்து உடையான் சீர் பாட – 5.திருநின்ற:1 208/3
சீர் தரு செங்காட்டம் குடி நீடும் திருநள்ளாறு – 5.திருநின்ற:1 240/1
எள் அரும் சீர் நீலநக்கர் தாமும் எழுந்தருளினார் – 5.திருநின்ற:1 242/4
பாங்கில் வரும் சீர் அடியார் பலரும் உடன் பயில் கேண்மை – 5.திருநின்ற:1 243/3
வரும் சீர் செம் சடை கரந்தார் திருவம்பர் வணங்கினார் – 5.திருநின்ற:1 246/4
சீர் மன்னும் திருக்கடவூர் திருமயானமும் வணங்கி – 5.திருநின்ற:1 248/1
சீர் ஆர் பதியின்-நின்று எழுந்து செல்லும் திருநாவுக்கரசர் – 5.திருநின்ற:1 278/1
தெய்வ நீறு நினைந்து எழுந்தார் சீர் கொள் சண்பை திரு மறையோர் – 5.திருநின்ற:1 286/4
எதிர்கொண்டு இறைஞ்சும் சீர் அடியார்-தம்மை இறைஞ்சி எழுந்தருளி – 5.திருநின்ற:1 321/1
சீர் வளரும் மதில் கச்சி நகர் திருமேற்றளி முதலாம் – 5.திருநின்ற:1 326/1
தரை வளர் சீர் திருமயிலை சங்கரனார் தாள் வணங்கி – 5.திருநின்ற:1 332/2
அ மலர் சீர் பதியை அகன்று அயல் உளவாம் பதி அனைத்தின் – 5.திருநின்ற:1 341/1
பழுது_இல் சீர் திருவையாற்றில் காண் என பணித்தார் – 5.திருநின்ற:1 369/4
மன்னிய சீர் சண்பை நகர் மறையவனார் வருகின்றார் – 5.திருநின்ற:1 391/4
எண் பெருக உரைத்து அருள எல்லை_இல் சீர் வாகீசர் – 5.திருநின்ற:1 400/3
ஆண்ட அரசு அங்கணர் சீர் அருள் பெற்ற பதி-நின்றும் – 5.திருநின்ற:1 402/1
சீர் திகழும் பாண்டிமாதேவியார் திருநீற்றின் – 5.திருநின்ற:1 405/1
செப்ப_அரும் சீர் குல சிறையார் திண்மை – 5.திருநின்ற:2 2/3
இன்ன நல் ஒழுக்கத்தினார் ஈறு_இல் சீர்
தென்னவன் நெடுமாறற்கு சீர் திகழ் – 5.திருநின்ற:2 8/1,2
தென்னவன் நெடுமாறற்கு சீர் திகழ் – 5.திருநின்ற:2 8/2
பாய சீர் புனை பாண்டிமாதேவியார் – 5.திருநின்ற:2 9/3
ஊனம்_இல் சீர் பெரு வணிகர் குடி துவன்றி ஓங்கு பதி – 5.திருநின்ற:4 1/2
நீடிய சீர் கடல் நாகை நிதிபதி என்று உலகின்-கண் – 5.திருநின்ற:4 7/1
மன்னிய சீர் கணவன் தான் மனையிடை முன் வைப்பித்த – 5.திருநின்ற:4 23/2
வடு_இல் சீர் வணிக மாக்கள் மரக்கலம் சமைப்பித்தார்கள் – 5.திருநின்ற:4 32/4
தொலைவு_இல் சீர் கணவனார்க்கு சொல்லி முன் செல்ல விட்டார் – 5.திருநின்ற:4 43/4
ஆய்ந்த சீர் இரட்டை மாலை அந்தாதி எடுத்து பாடி – 5.திருநின்ற:4 53/1
அடுத்த பெரும் சீர் பரவல் ஆர் அளவு ஆயினது அம்மா – 5.திருநின்ற:4 65/4
ஆண்ட சீர் அரசின் பாதம் அடைந்து அவர் அறியா முன்னே – 5.திருநின்ற:5 1/3
வடிவு தாம் காணார் ஆயும் மன்னு சீர் வாக்கின் வேந்தர் – 5.திருநின்ற:5 3/1
செப்ப_அரும் சீர் அப்பூதிஅடிகளார் செய்து அமைத்தார் – 5.திருநின்ற:5 7/3
படியில் சீர் தொண்டனார் முன் பணிந்து எழுந்து அமுது செய்து எம் – 5.திருநின்ற:5 30/3
நீடு சீர் திருநீலகண்ட பெரும்பாணர் – 5.திருநின்ற:6 24/1
தமது சீர் மனை தங்கிட வேண்டுவ சமைத்தார் – 5.திருநின்ற:6 28/4
ஏதம்_இல் சீர் சிவபாதஇருதயர்-தாம் இடர் உழந்தார் – 6.வம்பறா:1 18/4
சீர் ஆடும் திரு மகனார் காண்பதன் முன் செய்து அதன் பின் – 6.வம்பறா:1 60/2
சீர் அணங்கு சிவபெருமான் அருளுதலும் சென்று அணைந்து – 6.வம்பறா:1 67/3
சீர் மறையோர் சிவபாதஇருதயரும் சிறு பொழுதில் – 6.வம்பறா:1 72/1
தாது அவிழ் செந்தாமரையின் அக இதழ் போல் சீர் அடிகள் தரையின் மீது – 6.வம்பறா:1 113/1
சீர் இயல் பதிகம் பாடி திருக்கடைக்காப்பு-தன்னில் – 6.வம்பறா:1 115/2
மன்னு சீர் தொண்டர் எல்லாம் மகிழ்ந்து எதிர்கொள்ள புக்கார் – 6.வம்பறா:1 121/4
மன்னு சீர் சண்பை ஆளும் மன்னரை கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 124/4
எண்_அரும் சீர் திருத்தோணி எம்பெருமான் கழல் பரவி – 6.வம்பறா:1 137/1
மேவிய சீர் அடியார்கள் புடைவர வெம் குரு வேந்தர் – 6.வம்பறா:1 144/2
எல்லை_இல் சீர் சண்பை இள ஏறு எழுந்தருளி – 6.வம்பறா:1 171/2
ஆசு_இல் சீர் சண்பை ஆண்தகையார்க்கு எதிர் – 6.வம்பறா:1 204/2
அந்தம்_இல் சீர் அரத்துறை ஆதியார் – 6.வம்பறா:1 211/3
அசைவு_இல் சீர் தொண்டர் தம் உடன் அ பதி அமர்ந்தார் – 6.வம்பறா:1 228/4
எண்_இல் சீர் பணிகள் செய்து ஏத்தும் தன்மையில் – 6.வம்பறா:1 237/2
சீர் வளர் கோயிலை அணைந்து தே மலர் – 6.வம்பறா:1 252/1
சீர் அணங்கு மணி முத்தின் சிவிகை மீது செழும் தரள குடை நிழல் கீழ் சென்று கண்டார் – 6.வம்பறா:1 258/4
சீர் வளர் தொண்டரை கொண்டு திரு மாளிகையினில் சேர்ந்தார் – 6.வம்பறா:1 272/4
வந்த சொல் சீர் மாலை மாற்றும் வழி மொழி எல்லா மடக்கு – 6.வம்பறா:1 276/2
நாடு சீர் நீடூர் வணங்கி நம்பர் திருப்புன்கூர் நண்ணி – 6.வம்பறா:1 287/3
செப்ப_அரும் சீர் தொண்டரோடும் சென்று தொழுது இசை பாடி – 6.வம்பறா:1 290/2
செப்ப_அரும் சீர் திருப்பாண்டி கொடுமுடி சென்று அணைந்தார் – 6.வம்பறா:1 337/4
சிறந்த சீர் திரு வேதிக்குடியினில் – 6.வம்பறா:1 356/4
பழுது_இல் சீர் திரு வெண்ணி பதியினில் – 6.வம்பறா:1 358/4
பன்னு சீர் பதி பலவும் அப்பால் சென்று பணிவார் – 6.வம்பறா:1 374/4
பழுது_இல் சீர் திரு பரிதி நல் நியமும் பணிந்து அங்கு – 6.வம்பறா:1 375/1
செப்ப_அரும் சீர் திருவாறை வட தளியில் சென்று இறைஞ்சி – 6.வம்பறா:1 399/2
நாடிய சீர் நறையூர் தென் திருப்புத்தூர் நயந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 403/3
எண் ஆர்ந்த சீர் அடியார் உடன் பணிவுற்று எழுந்தருளி – 6.வம்பறா:1 410/4
எடுத்த வண் தமிழ் பதிக நால் அடியின் மேல் இரு சீர்
தொடுத்த வைப்பொடு தொடர்ந்த இன் இசையினால் துதிப்பார் – 6.வம்பறா:1 425/1,2
நீதியால் நிகழ்கின்ற நீலநக்கர்-தம் பெரும் சீர் நிகழ வைத்து – 6.வம்பறா:1 464/3
மன்னிய சீர் வணிகர் குல மணியே யானும் வாழேன் என்று என்று அயர்வாள் மதியினாலே – 6.வம்பறா:1 475/3
திக்கு நிறை சீர் முருகர் முன்பு செல்ல அவர் மடம் சென்று புக்கார் – 6.வம்பறா:1 490/4
பொங்கு சீர் புகலூர் தொழ அருளினால் போவார் – 6.வம்பறா:1 517/3
நாவினுக்கு அரசரும் நம்பி சீர் முருகரும் மற்று நாம – 6.வம்பறா:1 521/1
தேவர்-தம் தலைவனார் கோயில் புக்கு அனைவரும் சீர் நிலத்துஉற வணங்கி – 6.வம்பறா:1 522/1
தா_இல் சீர் முருகனார் திரு மனைக்கு எய்தி அ தனி முதல் தொண்டர்-தாமே – 6.வம்பறா:1 522/3
எண்_இல் சீர் திரு நாவினுக்கு அரசரும் மற்று அவர்க்கு இசைக்கின்றார் – 6.வம்பறா:1 526/4
பரவி ஏத்தி அங்கு அரிதினில் போந்து பார் பரவு சீர் அரசோடு – 6.வம்பறா:1 535/1
சீர் பட்ட எல்லை இனிது செல்ல திரு தோணி மேவிய செல்வர்-தாமே – 6.வம்பறா:1 554/3
சேண் உயர் விண்ணின்-நின்று இழிந்த இந்த சீர் கொள் விமானத்து காட்டுகின்றோம் – 6.வம்பறா:1 555/2
நீடு சீர் திருவாய்மூரில் நிலவிய சிவனார்-தம்மை – 6.வம்பறா:1 597/1
பூழியர் தமிழ்நாட்டு உள்ள பொருவு_இல் சீர் பதிகள் எல்லாம் – 6.வம்பறா:1 601/1
நின்றவர்-தம்மை நோக்கி நிகர்_இல் சீர் சண்பை மன்னர் – 6.வம்பறா:1 612/1
திருந்திய சீர் புனல் நாட்டு தென் மேல்-பால் திசை நோக்கி – 6.வம்பறா:1 625/2
சீர் நாடும் தென் பாண்டி நல் நாடு சென்று அணைவார் – 6.வம்பறா:1 628/4
சீர் மலி அசோகு-தன் கீழ் இருந்த நம் தேவர் மேலே – 6.வம்பறா:1 637/1
அன்பராய் அவர் முன் பணிந்த சீர் அடியார் அண்ணலார் அடி இணை வணங்கி – 6.வம்பறா:1 662/1
பழுது_இல் சீர் அடியாருடன் பகல் வர கண்ட – 6.வம்பறா:1 678/2
தா_இல் சீர் கழுமலத்தான் சங்கரன் அருள் பெற்று இங்கு – 6.வம்பறா:1 691/3
தேன் நக்க மலர் கொன்றை செம் சடையார் சீர் தொடுக்கும் – 6.வம்பறா:1 728/3
என்று அமண் கையர் கூற ஏறு சீர் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 797/1
மான சீர் தென்னன் நாடு வாழ வந்து அணைந்தார் என்பார் – 6.வம்பறா:1 802/4
சீர் கெழு கணவன்-தன்-பால் விரைவுற செல்லுமா போல் – 6.வம்பறா:1 812/2
மேவுற்ற சீர் உற்றது என்றனர் வேத வாயர் – 6.வம்பறா:1 841/4
போற்று சீர் பிள்ளையார் தம் புகழ் சய தம்பம் ஆகும் – 6.வம்பறா:1 856/4
சீர் உடை பிள்ளையாரும் சிறப்பு உடை அடியாரோடும் – 6.வம்பறா:1 868/1
நீடு சீர் தென்னர் கோனும் நேரியன் பாவையாரும் – 6.வம்பறா:1 869/1
பொன்னி வளம் தரு நாடு புகுந்து மிக்க பொருவு_இல் சீர் திருத்தொண்டர் குழாத்தினோடும் – 6.வம்பறா:1 896/1
சீர் நிலவு திருத்தெளிச்சேரியினை சேர்ந்து சிவபெருமான்-தனை பரவி செல்லும் போது – 6.வம்பறா:1 904/1
அந்தம்_இல் சீர் மறைகள் ஆகமங்கள் ஏனை அகில கலை பொருள் உணர்ந்தார் அருளி செய்ய – 6.வம்பறா:1 925/3
மை அறு சீர் தொண்டர் குழாம் வந்து புடைசூழ உலகு – 6.வம்பறா:1 940/3
மிக்க சீர் வளர் அதிகை வீரட்டமும் மேவுவார் தம் முன்பு – 6.வம்பறா:1 964/3
பா அலர்ந்த செந்தமிழ் கொடு பரவுவார் பரவு சீர் அடியார்கள் – 6.வம்பறா:1 968/3
நண்பின் மிக்க சீர் அடியார் சூழ நம்பர் கோபுரம் சூழ் – 6.வம்பறா:1 975/2
சேண் உயர்ந்த வாயில் நீடு சீர் கொள் சண்பை மன்னனார் – 6.வம்பறா:1 990/1
அந்தம்_இல் சீர் காளத்தி மலை ஆம் என்ன அவனி மேல் பணிந்து எழுந்து அஞ்சலி மேல் கொண்டு – 6.வம்பறா:1 1020/3
மன்னு சீர் பெரும் வணிகர்-தம் தோன்றலார் திறத்து – 6.வம்பறா:1 1033/3
அளவு_இல் சீர் அனங்கன் வென்றி கொடி இரண்டு அனைய ஆக – 6.வம்பறா:1 1100/4
சீர் கெழு முகிழை காட்டும் செவ்வியில் திகழ்ந்து தோன்ற – 6.வம்பறா:1 1103/4
சீர் கெழு சிவ நேசர்-தம்மை முன்னமே – 6.வம்பறா:1 1112/1
தெள்ளு நீதியின் முறை கேட்ட சீர் கிளை – 6.வம்பறா:1 1116/1
திருந்திய சீர் தாதையார் சிவபாதஇருதயரும் – 6.வம்பறா:1 1142/1
அந்தம்_இல் சீர் அடியார்கள் அவரோடும் இனிது அமர்ந்து – 6.வம்பறா:1 1154/2
ஏதம்_இல் சீர் மறையவரில் ஏற்ற குலத்தோடு இசைவால் – 6.வம்பறா:1 1161/1
திருஞானசம்பந்தர் சீர் பெருக மணம் புணரும் – 6.வம்பறா:1 1162/1
சீர் உடைய பிள்ளையார்க்கு அவர் நேர்ந்தபடி செப்பி – 6.வம்பறா:1 1168/3
சீர் மறை தொழில் சடங்கு செய் திருந்து நூல் முனிவர் – 6.வம்பறா:1 1187/2
சீர் அணி தெருவினூடு திருமணம் செல்ல முத்தின் – 6.வம்பறா:1 1220/1
இகல் இல் சீர் மறையோர் சூழ இனிதின் அங்கு இருந்த வேலை – 6.வம்பறா:1 1231/4
வாயிலை வகுத்து காட்ட மன்னு சீர் புகலி மன்னர் – 6.வம்பறா:1 1247/2
ஆன சீர் நமச்சிவாய திருப்பதிகத்தை அங்கண் – 6.வம்பறா:1 1248/2
சீர் பெருகு நீலநக்கர் திரு முருகர் முதல் தொண்டர் – 6.வம்பறா:1 1250/1
ஏர் கெழுவு சிவபாதஇருதயர் நம்பாண்டார் சீர்
ஆர் திரு மெய் பெரும்பாணர் மற்று எனையோர் அணைந்துளோர் – 6.வம்பறா:1 1250/2,3
மன்னிய சீர் வன் தொண்டர்க்கு அமுது ஆக வழுவாமல் – 6.வம்பறா:2 11/3
எண்_இல் சீர் பரவை இல்லத்து இ நெல்லை எடுக்க ஆளும் – 6.வம்பறா:2 19/3
வளம் மல்கிய சீர் திருப்பனையூர் வாழ்வார் ஏத்த எழுந்தருளி – 6.வம்பறா:2 54/1
சீர் வளரும் திரு தில்லை திரு வீதி பணிந்து புகுந்து – 6.வம்பறா:2 167/1
சீர் கொள் மரபில் வரும் செயலே அன்றி தெய்வ நிகழ் தன்மை – 6.வம்பறா:2 209/1
மேவிய சீர் ஆரூரர் மெய் சபதம் வினை முடிப்ப – 6.வம்பறா:2 261/1
செம் கண் வளவன் பிறந்த சீர் நாடு நீர் நாடு – 6.வம்பறா:2 293/4
சீர் பெருகும் திரு தேவாசிரியன் முன் சென்று இறைஞ்சி – 6.வம்பறா:2 306/1
மறு_இல் சீர் பரவையார்-தம் மாளிகை புகுந்தார் வந்து – 6.வம்பறா:2 361/4
சீர் வளர் கயிலை வெள்ளி திருமலை போன்றது அன்றே – 6.வம்பறா:2 362/4
சொல்லார் சீர் சோமாசிமாறர் திறம் சொல்லுவாம் – 6.வம்பறா:5 12/4
மன்னிய சீர் சங்கரன் தாள் மறவாமை பொருள் என்றே – 7.வார்கொண்ட:1 6/2
கோது_இல் சீர் தொண்டர் கொண்ட குறிப்பினை அவர்க்கு நல்கும் – 7.வார்கொண்ட:1 18/2
எண்_இல் பெரும் சீர் அடியார் இடைவிடாது அமுது செய – 7.வார்கொண்ட:3 16/3
அங்கணர்-தம் சீர் அடியார்க்கு அளவு_இறந்த நிதி அளித்து – 7.வார்கொண்ட:3 19/2
சீர் பெருக செய்ய வளர் திரு மகனார் சீறடியில் – 7.வார்கொண்ட:3 20/3
அந்தம்_இல் சீர் அடியாரை தேடி அவர் புறத்து அணைந்தார் – 7.வார்கொண்ட:3 37/3
செப்ப_அரும் சீர் சிறுத்தொண்டர்-தமை காண சேர்ந்தனம் யாம் – 7.வார்கொண்ட:3 40/3
சீர் ஆர் தவத்து சிறுத்தொண்டர் மீண்டும் செல்வ மனை எய்தி – 7.வார்கொண்ட:3 42/2
சீர் கொள் நிதியும் எண்_இறந்த எல்லாம் பொதி செய்து ஆளின் மேல் – 7.வார்கொண்ட:4 34/3
பாரின் மலி சீர் வன் தொண்டர் அருளி செய்ய பரிகலங்கள் – 7.வார்கொண்ட:4 74/3
பொருவு_அரும் சீர் வன் தொண்டர் புகழ் சேரர் உடன் புனிதர் – 7.வார்கொண்ட:4 106/2
சீர் ஊரும் திரு முருகன் பூண்டி வழி செல்கின்றார் – 7.வார்கொண்ட:4 164/4
இ பெரும் சிறப்பு எய்திய தொண்டர் தாம் ஏறு சீர் வளர் காழி – 7.வார்கொண்ட:5 5/1
சீர் தாங்கும் இவர் வேணி சிரம் தாங்கி வர கண்டும் – 8.பொய்:2 36/3
என்று மற்று உளோர் இயம்பவும் ஏறு சீர் தொண்டர் – 8.பொய்:4 17/1
செப்ப_அரும் சீர் மனையாரை விற்பதற்கு தேடுவார் – 8.பொய்:6 12/4
ஓங்கு சீர் தொண்டின் உயர்ந்தனர் – 8.பொய்:7 4/4
திரு கிளர் சீர் மாடங்கள் திருந்து பெரும் குடி நெருங்கி – 9.கறை:1 1/1
தேவர்க்கு முதல் தேவர் சீர் அடியார் எல்லார்க்கும் – 9.கறை:2 3/2
சொல் விளங்கும் சீர் தொண்டை நல் நாட்டினிடை – 9.கறை:4 1/1
மன்னு சீர் மயிலை திரு மா நகர் – 9.கறை:4 6/1
சீர் ஆரும் திரு நீடூர் முனையடுவார் திறம் உரைப்பாம் – 9.கறை:4 10/4
பெருக்கிய சீர் திருவாரூர் பிறந்தார்கள் ஆதலினால் – 11.பத்தராய்:4 2/2
சீர் அணியும்படி வெந்து கொண்ட செல்வ திருநீறாம் அநுகற்பம் தில்லை மன்று உள் – 11.பத்தராய்:6 3/3
திரு நாடு போல் செழியர் தென்னர் நாடு சீர் விளக்கும் செய்ய சீறடிகள் போற்றி – 12.மன்னிய:2 3/2
சீர் வளர் சிறப்பின் மிக்க செயல் முறை ஒழுக்கம் குன்றா – 12.மன்னிய:3 1/1
அந்தம்_இல் சீர் சோணாட்டில் அகல் நாடு-தொறும் அணியார் – 12.மன்னிய:4 14/3
எருக்கத்தம்புலியூர் மன்னி வாழ்பவர் இறைவன்-தன் சீர்
திரு தகும் யாழில் இட்டு பரவுவார் செழும் சோணாட்டில் – 12.மன்னிய:5 1/1,2

மேல்


சீர்த்தி (7)

செப்பற்கு அரிய பெரும் சீர்த்தி சிவனார் செய்ய கழல் பற்றி – 2.தில்லை:6 4/2
செம் பவள வாய் பிள்ளை திருநாவுக்கரசர் என சிறந்த சீர்த்தி
எம் பெரு மக்களும் இயைந்த கூட்டத்தில் அரன் அடியார் இன்பம் எய்தி – 5.திருநின்ற:1 183/2,3
புன்னாக மணம் கமழும் பூம் புகலூர் வந்து இறைஞ்சி பொருவு_இல் சீர்த்தி
மின் ஆரும் புரி முந்நூல் முருகனார் திருமடத்தில் மேவும் காளை – 5.திருநின்ற:1 231/3,4
எண் திசையும் நிறைவித்தார் ஆடை வீசி இரு விசும்பின் வெளி தூர்த்தார் ஏறு சீர்த்தி
வண் தமிழ் நாயகரும் இழிந்து எதிரே சென்று வணங்கி அவருடன் கூடி மகிழ்ந்து புக்கார் – 6.வம்பறா:1 259/3,4
சிறுத்தொண்டர் உடன் கூட செங்காட்டங்குடியில் எழுந்தருளி சீர்த்தி
நிறுத்த எண் திக்கிலும் நிலவும் தொண்டர்-அவர் நண்பு அமர்ந்து நீலகண்டம் – 6.வம்பறா:1 469/1,2
மண் பயில் சீர்த்தி செல்வ மா மறை காட்டு வைகி – 6.வம்பறா:1 598/2
அம்புய மலராள் மார்பன் அனபாயன் என்னும் சீர்த்தி
செம்பியன் செங்கோல் என்ன தென்னன் கூன் நிமிர்ந்தது அன்றே – 6.வம்பறா:1 847/3,4

மேல்


சீர்த்தியினார் (1)

சேர்ந்தார் செல்வ திருமறைக்காடு எல்லை_இல்லா சீர்த்தியினார் – 5.திருநின்ற:1 263/4

மேல்


சீரணி (1)

சீரணி நீடு திருக்கயிலை செல்வ திருவாரூர் மேய பண்பும் – 6.வம்பறா:1 346/2

மேல்


சீராட்டே (1)

காழியர்-தம் சீராட்டே கவுணியர் கற்பகமே என்று – 6.வம்பறா:1 48/2

மேல்


சீரார் (2)

சீரார் காஞ்சி மன்னும் திரு காமகோட்டம் சென்று இறைஞ்சி – 6.வம்பறா:2 190/1
சீரார் வண்ண பொன் வண்ணத்து திரு அந்தாதி திருப்படி கீழ் – 7.வார்கொண்ட:4 56/2

மேல்


சீராரும் (1)

சீராரும் திருத்தொண்டர் சில நாள் அங்கு அமர்ந்து அருளி – 7.வார்கொண்ட:4 117/2

மேல்


சீராள (1)

சீராள தேவர் எனும் திரு மைந்தர் அவதரித்தார் – 7.வார்கொண்ட:3 17/4

மேல்


சீராளா (1)

செய்ய மணியே சீராளா வாராய் சிவனார் அடியார் யாம் – 7.வார்கொண்ட:3 81/3

மேல்


சீரியார் (1)

சீரியார் நெடுமாறர் திருத்தொண்டு செப்புவாம் – 9.கறை:2 5/4

மேல்


சீரில் (1)

சீரில் நீடிய செம்பியர் பொன்னி நல் நாட்டு – 2.தில்லை:7 1/1

மேல்


சீரின் (10)

சீரின் மல்கிய அன்பின் மேன்மை திருந்த மன்னிய சிந்தையும் – 2.தில்லை:4 2/3
சீரின் விளங்கும் திருத்தொண்டர் இருந்து சில நாள் சென்று அதன் பின் – 5.திருநின்ற:1 255/1
சீரின் மலிந்த சிறப்பின் மேவும் சிறுத்தொண்டர் நண்பருடன் செல்ல நல்ல – 6.வம்பறா:1 488/1
சீரின் மல்கிய திருப்பதிகத்தினில் திருக்கடைக்காப்பு ஏற்றி – 6.வம்பறா:1 955/1
சீரின் மன்னிய பதிகம் முன் பாடி அ திருவறைஅணிநல்லூர் – 6.வம்பறா:1 969/1
சீரின் மன்னும் திருக்கடைக்காப்பு ஏற்றி சிவனார் அருள் பெற்று – 6.வம்பறா:1 981/1
சீரின் மன்னிய சிவநேசர் கண்டு உளம் மயங்கி – 6.வம்பறா:1 1065/1
சீரின் மிக்கது சிவபுரி என தகும் சிறப்பால் – 6.வம்பறா:2 4/4
சீரின் மலிந்த திரு நகரம்-அதனில் செங்கோல் பொறையன் எனும் – 7.வார்கொண்ட:4 10/2
சீரின் விளங்கும் அ பதியில் திருந்து வேளாண் குடி முதல்வர் – 10.கடல்:3 2/1

மேல்


சீரினில் (1)

சீரினில் திகழ்ந்த பாட்டில் திருக்கடைக்காப்பு போற்றி – 6.வம்பறா:1 123/1

மேல்


சீரும் (2)

தார் மணி இசைப்பும் வேழ முழக்கமும் தடம் தேர் சீரும்
வீரர்-தம் செருக்கின் ஆர்ப்பும் மிக்கு எழுந்து ஒன்றாம் எல்லை – 3.இலை:1 32/2,3
சீரும் திருவும் பொழியும் திருவாரூர் எய்தி – 6.வம்பறா:6 4/1

மேல்


சீல (9)

சீல மா முனிவர் சென்று முன் துன்னி திரு பிரம்பின் அடி கொண்டு திளைத்து – 1.திருமலை:5 103/2
சீல மெய் திருத்தொண்டரோடு அமுது செய்து அருளி – 5.திருநின்ற:6 29/1
பொய் தீர் வாய்மை அரு_மறை நூல் புரிந்த சீல புகழ்-அதனால் – 5.திருநின்ற:7 1/3
சீல மறையோர்கள் உடன் ஓம வினை செய்தார் – 6.வம்பறா:1 30/4
சீல மிக்கார் திருக்காப்பு நீக்கினார் – 6.வம்பறா:1 200/4
சீல மெய் தவர்களும் கூடவே கும்பிடும் செய்கை நேர் நின்று வாய்மை – 6.வம்பறா:1 523/2
சீல மா தவ திருத்தொண்டர்-தம்மொடும் திளைத்தார் – 6.வம்பறா:1 667/3
சீல மா தவத்தோர் முன்பு சிவிகை-நின்று இழிந்து புக்கார் – 6.வம்பறா:1 863/4
திருவாளன்-தன் சேவடி கீழ் சீல மறையோனொடு வீழ்ந்தாள் – 13.வெள்ளானை:1 12/3

மேல்


சீலத்தார் (1)

செய்த படி சொல்லுவதே கடன் என்னும் சீலத்தார்
மை தழையும் கண்டர் சேவடிகள் மனத்து உற வணங்கி – 5.திருநின்ற:4 28/1,2

மேல்


சீலத்தார்கள் (1)

சீலத்தார்கள் பிரியாத திருவாரூரின்-நின்றும் போய் – 12.மன்னிய:5 9/3

மேல்


சீலத்தால் (2)

தெரிவுற உரைக்க வேண்டும் சீலத்தால் சிந்தை நொந்து – 5.திருநின்ற:5 34/3
வாய்மை மறை நூல் சீலத்தால் வளர்க்கும் செம் தீ என தகுவார் – 5.திருநின்ற:7 5/1

மேல்


சீலத்தின் (1)

செவ்விய அன்பு உடை மனத்தார் சீலத்தின் நெறி நின்றார் – 4.மும்மை:5 111/3

மேல்


சீலத்து (3)

கைப்படுத்த சீலத்து கவுணியர் கோத்திரம் விளங்க – 6.வம்பறா:1 15/2
ஆங்கு அவர்-தம் சீலத்து அளவு இன்மையும் நினைந்தே – 6.வம்பறா:1 169/1
ஊனம்_இல் சீலத்து உம்-பால் மகள்_பேச வந்தது என – 6.வம்பறா:1 1166/2

மேல்


சீலம் (17)

சீலம் ஆக வருட சிவந்தன – 1.திருமலை:5 192/4
சீலம் ஆர் கொள்கை என்றும் திருந்து வேட்கோவர்-தம்-பால் – 2.தில்லை:2 19/3
சீலம் ஆர் பூசை செய்த திருத்தொண்டர்-தம்மை நோக்கி – 2.தில்லை:4 25/4
மெய்ப்பொருள் வேந்தன் சீலம் அறிந்து வெண் நீறு சாத்தும் – 2.தில்லை:5 6/2
சீலம் உய்ய திருத்தொண்டத்தொகை முன் பாட செழு மறைகள் – 2.தில்லை:6 9/2
சீலம் கொடு வெம் புலன் தெவ்வுடன் வென்று நீக்கி – 4.மும்மை:1 47/2
சீலம் உடைய கோ குலங்கள் சிறக்கும் தகைமை தேவருடன் – 4.மும்மை:6 21/1
சீலம் திகழும் சேய்ஞலூர் பிள்ளையார் தம் திரு கையில் – 4.மும்மை:6 58/2
அடை மாலை சீலம் உடை அப்பூதிஅடிகள்-தமை – 5.திருநின்ற:1 211/2
சீலம் உய்த்த அ திரு மறையோர் செழு மூதூர் – 5.திருநின்ற:6 4/1
செம்பொன் புற்றின் மாணிக்க செழும் சோதியை நேர் தொழும் சீலம்
தம் பற்று ஆக நினைந்து அணைந்து தாழ்ந்து பணிந்து வாழ்ந்து போந்து – 5.திருநின்ற:7 7/1,2
சீலம் கொள் தென்னவனும் தேவியரும் உடன் போத – 6.வம்பறா:1 883/4
சீலம் ஆர் திருவருளினால் மணத்தின் மேல் செல்வார் – 6.வம்பறா:1 1196/4
சீலம் உடைய அன்பருடன் தேவாசிரியன் மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:2 312/4
சீலம் உடைய மறை முனிவர் ஆகி தனியே சென்று அணைந்தார் – 6.வம்பறா:2 337/4
சீலம் இலரே எனினும் திருநீறு சேர்ந்தாரை – 8.பொய்:3 7/1
குல முதல் சீலம் என்றும் குறைவு இலா மறையோர் கொள்கை – 12.மன்னிய:1 2/3

மேல்


சீலமும் (1)

செற்றம் மேவிய சீலமும் உடையாராய் திகழ்வார் – 6.வம்பறா:1 1036/4

மேல்


சீலமே (2)

சீலமே ஆலவாயில் சிவபெருமானே என்றார் – 6.வம்பறா:1 740/4
சீலமே தலை நின்றவர்-தம் திறம் தெரிந்தே – 8.பொய்:4 14/3

மேல்


சீலர் (1)

சாதியினில் தலை ஆன தரும சீலர் தத்துவத்தின் நெறி உணர்ந்தோர் தங்கள் கொள்கை – 11.பத்தராய்:6 6/1

மேல்


சீலராய் (1)

சீலராய் சாலும் ஈகை திறத்தினில் சிறந்த நீரார் – 7.வார்கொண்ட:2 3/4

மேல்


சீற்றத்தினாலே (1)

அளவு_இல் சீற்றத்தினாலே யார் செய்தார் என்றும் கேளான் – 3.இலை:1 28/3

மேல்


சீற்றம் (1)

செம் கண் வாள் அரியில் கூடி கிடைத்தனர் சீற்றம் மிக்கார் – 3.இலை:1 22/4

மேல்


சீறடி (2)

சீறடி மேல் நூபுரங்கள் அறிந்தன போல் சிறிது அளவே ஒலிப்ப முன்னார் – 1.திருமலை:5 170/1
தங்கு பேர் ஒளி சீறடி தளி நடை பயில – 6.வம்பறா:1 1045/4

மேல்


சீறடிகள் (1)

திரு நாடு போல் செழியர் தென்னர் நாடு சீர் விளக்கும் செய்ய சீறடிகள் போற்றி – 12.மன்னிய:2 3/2

மேல்


சீறடியார் (1)

சீறடியார் திரு அலகும் திரு மெழுக்கும் தோண்டியும் கொண்டு – 5.திருநின்ற:1 68/3

மேல்


சீறடியில் (1)

சீர் பெருக செய்ய வளர் திரு மகனார் சீறடியில்
தார் வளர் கிண்கிணி அசைய தளர் நடையின் பதம் சார்ந்தார் – 7.வார்கொண்ட:3 20/3,4

மேல்


சீறி (6)

சென்று அவர் தடுத்த போதில் இயற்பகையார் முன் சீறி
வன் துணை வாளே ஆக சாரிகை மாறி வந்து – 2.தில்லை:3 21/1,2
பாய்தலும் மிசை கொண்டு உய்க்கும் பாகரை கொண்டு சீறி
காய் தழல் உமிழ் கண் வேழம் திரிந்து மேல் கதுவ அச்சம் – 3.இலை:1 24/1,2
நாளொடு சீறி மலைப்பவர் நாடிய போர் செய் களத்தினில் – 3.இலை:2 18/4
சேனை வேடர் மேல் அடர்ந்து சீறி அம்பில் நூறினார் – 3.இலை:3 78/4
வந்து அடைந்த சிறு மறையோன் உயிர் மேல் சீறி வரும் காலன் பெரும் கால வலயம் போலும் – 6.வம்பறா:1 477/1
சீறி ஆவி செகுத்தனர் – 8.பொய்:2 22/4

மேல்


சீறு (1)

செம் கண் விழி கனல் சிந்திய சீறு பொறி செலவு ஒத்தன – 3.இலை:2 17/4

மேல்


சீறும் (2)

சீறும் சிலையாய் சிவதா சிவதா – 3.இலை:1 17/4
கந்து சீறும் மால் யானை மீனவர் கருத்து நேர் – 6.வம்பறா:1 773/1

மேல்


சீறூர் (3)

அரு_வரை குறவர் தங்கள் அகன் குடி சீறூர் ஆயம் – 3.இலை:3 15/1
மல்கிய வளங்கள் எல்லாம் நிறைந்திட மாறு_இல் சீறூர்
எல்லையில் அடங்கா வண்ணம் ஈண்டினர் கொணர்ந்தார் எங்கும் – 3.இலை:3 31/1,2
தேன் நிறைந்த செந்தினை இடி தரு மலை சீறூர்
பால் நிறைந்த புல் பதத்தன முல்லை நீள் பாடி – 4.மும்மை:5 9/1,2

மேல்