ஊ – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஊக்க 1
ஊக்கத்தால் 1
ஊசல் 4
ஊசலும் 1
ஊட்ட 12
ஊட்டி 10
ஊட்டிடவும் 1
ஊட்டியும் 1
ஊட்டியை 1
ஊட்டு 2
ஊட்டுதற்கு 1
ஊட்டும் 7
ஊட்டுவது 1
ஊட்டுவார் 2
ஊட்டுவான்-தனை 1
ஊடலால் 1
ஊடி 1
ஊடு 16
ஊடுருக்கும் 1
ஊடுருவும் 1
ஊடே 1
ஊணும் 2
ஊணொடு 1
ஊத்தை 1
ஊத 6
ஊதி 6
ஊதியம் 2
ஊதியமா 1
ஊதியமும் 1
ஊது 1
ஊதும் 3
ஊர் 41
ஊர்-தொறும் 1
ஊர்க 1
ஊர்கள்-தொறும் 1
ஊர்களின் 1
ஊர்களும் 1
ஊர்தி 4
ஊர்திகளின் 1
ஊர்தியை 1
ஊர்ந்த 2
ஊர்ந்தவர் 1
ஊர்ந்தான் 1
ஊர்ந்து 1
ஊர்வதும் 1
ஊர 1
ஊரர் 2
ஊரன் 3
ஊரனுக்கும் 1
ஊரனே 1
ஊரனை 1
ஊராம் 2
ஊராயேல் 1
ஊரார் 1
ஊரால் 1
ஊரான் 1
ஊரில் 5
ஊரிலே 1
ஊரின் 1
ஊரினில் 3
ஊரும் 11
ஊரை 1
ஊழி 7
ஊழி-தொறும் 1
ஊழியாம் 1
ஊழியில் 1
ஊழின் 2
ஊற்றி 1
ஊற்று 1
ஊறி 4
ஊறு 10
ஊறு_இலாத 1
ஊறும் 2
ஊன் 20
ஊன்ற 2
ஊன்றி 2
ஊன்றுகோல் 1
ஊன 1
ஊனம் 17
ஊனம்_இல் 9
ஊனமாம் 1
ஊனமும் 1
ஊனாய் 1
ஊனாலும் 1
ஊனில் 1
ஊனின் 2
ஊனுக்கு 1
ஊனும் 4

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்.

ஊக்க (1)

உள்ளம் அன்பு கொண்டு ஊக்க ஓர் பேர் இடா – 2.தில்லை:4 17/1

மேல்


ஊக்கத்தால் (1)

துன்னும் யானையை தூற்றில் வாழ் முயல் முன் துரக்க எய்திய தொலைவு_இல் ஊக்கத்தால்
தன் நிலத்து-நின்று அகற்றுதல் செய்யும் தானம் அன்றியும் தனு எழும் தரணி – 4.மும்மை:5 77/2,3

மேல்


ஊசல் (4)

ஆடும் மென் கழங்கும் பந்தும் அம்மனை ஊசல் இன்ன – 1.திருமலை:5 135/2
அலர் நீடு மறுகு ஆட்டும் அணி ஊசல் பல காட்டும் – 5.திருநின்ற:1 14/2
ஊசல் கரம் எதிர் சுற்றிட உரறி பரி உழறா – 5.திருநின்ற:1 111/3
உற்ற உண்டிகள் பயின்று ஒளி மணி ஊசல் ஆடி – 6.வம்பறா:1 1048/3

மேல்


ஊசலும் (1)

யோகமும் தவமும் எங்கும் ஊசலும் மறுகும் எங்கும் – 1.திருமலை:2 31/3

மேல்


ஊட்ட (12)

மலை மருவு நெடும் கானில் கன்னி_வேட்டை மகன் போக காடு பலி மகிழ்வு ஊட்ட
தலை மரபின் வழி வந்த தேவராட்டி-தனை அழை-மின் என அங்கு சார்ந்தோர் சென்று – 3.இலை:3 47/2,3
கொற்றவன் தெய்வங்கள் மகிழ ஊட்ட வேண்டுவன குறைவு இன்றி கொண்டு போனாள் – 3.இலை:3 51/4
விதிமுறை தீபம் ஏந்தி மேவும் இன் அடிசில் ஊட்ட
அது நுகர்ந்து இன்பம் ஆர்ந்தார் அரு_மறை கலயனார்-தாம் – 3.இலை:4 21/3,4
அடைய நிறை சிவம் பெருக வளர் ஞானம் குழைத்து ஊட்ட அமுது செய்த – 5.திருநின்ற:1 177/3
உண் அடிசில் என ஊட்ட உமை அம்மை எதிர்நோக்கும் – 6.வம்பறா:1 68/2
மங்கை செம் கையால் ஊட்ட உண்டு அருளிய மதலையார் வந்தார் என்று – 6.வம்பறா:1 154/2
முற்றும் ஆனவன் ஞானமே முலை சுரந்து ஊட்ட
பெற்ற பால் அறா வாயன் வந்தான் என பிடிக்க – 6.வம்பறா:1 222/3,4
படியால் வந்தோம் உத்தர பதியோம் எம்மை பரிந்து ஊட்ட
முடியாது உமக்கு செய்கை அரிது ஒண்ணா என்று மொழிந்து அருள – 7.வார்கொண்ட:3 46/3,4
உரிய நாளும் அதற்கு இன்றால் ஊட்ட அரிதாம் உமக்கு என்றார் – 7.வார்கொண்ட:3 48/4
தம்மை ஊட்ட வேண்டி அவர் உண்ண புகலும் தடுத்து அருளி – 7.வார்கொண்ட:3 78/4
ஊறு_இலாத தனி புதல்வன்-தன்னை அரிந்து அங்கு அமுது ஊட்ட
பேறு பெற்றார் சேவடிகள் தலை மேல் கொண்டு பிற உயிர்கள் – 7.வார்கொண்ட:3 88/2,3
யாழின் மொழியாள் உமை ஞானம் ஊட்ட உண்ட எம்பெருமான் – 12.மன்னிய:5 10/2

மேல்


ஊட்டி (10)

வாச நெய் ஊட்டி மிக்க மலர் விரை அடுத்த தூ நீர் – 1.திருமலை:5 15/1
ஊணும் மேன்மையில் ஊட்டி நல் கந்தை கீள் உடைகள் – 2.தில்லை:7 11/2
குல முது குறத்தி ஊட்டி கொண்டு கண் துயிற்றி கங்குல் – 3.இலை:3 27/2
ஒன்றிய இலை பூ சூட்டி ஊட்டி முன் பறைந்து ஓர் பார்ப்பான் – 3.இலை:3 109/3
இதம் உண் துறையுள் நல் தண்ணீர் ஊட்டி அச்சம் எதிர் நீக்கி – 4.மும்மை:6 26/2
தொண்டர் பலரும் வந்து ஈண்டி உண்ண தொலையா அமுது ஊட்டி
கொண்டு செல்ல இருநிதியம் முகந்து கொடுத்து குறைந்து அடைவார் – 5.திருநின்ற:3 3/1,2
ஏதம் உறாது இனிது உண்ண ஊட்டி அங்கண் இரு திறத்து பெரும் தவரும் இருந்த நாளில் – 6.வம்பறா:1 566/4
நாளும் நல் அமுதம் ஊட்டி நயந்தன எல்லாம் நல்கி – 7.வார்கொண்ட:2 4/3
முறைமையினில் திரு அமுது முன் ஊட்டி பின் உண்ணும் – 7.வார்கொண்ட:3 13/2
உள் நிறைந்த அன்பினால் உறு கொள்ளை மிக ஊட்டி
தண் அளியால் நெடும் காலம் திருநீற்றின் நெறி தழைப்ப – 10.கடல்:2 10/2,3

மேல்


ஊட்டிடவும் (1)

நஞ்சு கலந்து ஊட்டிடவும் நம் சமயத்தினில் விடம் தீர் – 5.திருநின்ற:1 107/1

மேல்


ஊட்டியும் (1)

ஊட்டியும் அரிய நின்றார் உறு பிறப்பு அரிவார் ஒத்தார் – 3.இலை:6 17/4

மேல்


ஊட்டியை (1)

ஒல்லை_இல் அரிவாள் பூட்டி ஊட்டியை அரியல் உற்றார் – 3.இலை:6 16/4

மேல்


ஊட்டு (2)

காட்டில் உறை தெய்வங்கள் விரும்பி உண்ண காடு பலி ஊட்டு என்றான் கவலை இல்லான் – 3.இலை:3 50/4
பொழிகின்ற பால் அடிசில் பொன் வள்ளத்து ஊட்டு என்ன – 6.வம்பறா:1 66/4

மேல்


ஊட்டுதற்கு (1)

ஆர இன் அமுது ஊட்டுதற்கு ஆசையால் – 2.தில்லை:4 10/2

மேல்


ஊட்டும் (7)

உய்யவே சுரந்து அளித்து ஊட்டும் நீரது – 1.திருமலை:2 3/4
எண்_இறந்த கடவுளருக்கு இடும் உணவு கொண்டு ஊட்டும்
வண்ண எரி வாயின்-கண் வைத்தது என காளத்தி – 3.இலை:3 147/1,2
கர மலரின் அமுது ஊட்டும் கனி வாய் மென் கிள்ளையுடன் – 3.இலை:7 33/2
குரவலரும் குழல் மடவார் அடியில் ஊட்டும் குழம்பு அடுத்த செம் பஞ்சின் சுவட்டு கோலம் – 4.மும்மை:5 97/3
ஓங்கு பெருமையினால் நஞ்சு ஊட்டும் என உரைப்ப – 5.திருநின்ற:1 103/2
நண்பு கூர்ந்து அமுது ஊட்டும் நலத்தினார் – 5.திருநின்ற:2 6/4
பாதம் பணிந்தார் அமுது ஊட்டும் நல் பண்பின் மிக்கார் – 6.வம்பறா:6 1/4

மேல்


ஊட்டுவது (1)

மதி செய்வது இனி கொடிய வல் விடம் ஊட்டுவது என்று – 5.திருநின்ற:1 102/3

மேல்


ஊட்டுவார் (2)

ஏதம் தீர் நல் விருந்தாம் இன் அடிசில் ஊட்டுவார் – 5.திருநின்ற:4 18/4
கற்புடைய மடவாரும் கடப்பாட்டில் ஊட்டுவார் – 5.திருநின்ற:4 22/4

மேல்


ஊட்டுவான்-தனை (1)

கொண்டு அவர்-பால் ஊட்டுவான்-தனை விட்டார் குறிப்பு உணர்த்த – 5.திருநின்ற:1 55/4

மேல்


ஊடலால் (1)

மானமும் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கை – 2.தில்லை:2 5/2

மேல்


ஊடி (1)

ஊடி நின்று உரைத்தது என்-தன் உணர்வு எலாம் ஒழித்தது என்ன – 2.தில்லை:2 25/4

மேல்


ஊடு (16)

அம் புனிற்று ஆவின் கன்று ஓர் அபாயத்தின் ஊடு போகி – 1.திருமலை:3 23/1
மன்றல் ஆர் செல்வ மறுகின் ஊடு ஏகி மன்னிய திருப்பதி-அதனில் – 1.திருமலை:5 110/2
துன்னிய விசும்பின் ஊடு துணையுடன் விடை மேல் கண்டார் – 2.தில்லை:2 40/4
குளிர் வரு நதி ஊடு ஏகி குல வரை சாரல் சேர்ந்தார் – 3.இலை:3 100/4
தங்கிய பாசடை சூழ் கொடி ஊடு தவழ்ந்து ஏறி – 3.இலை:7 4/3
என்பு ஊடு கரைந்து உருக்கும் இன் இசை வேய்ம் கருவிகளில் – 3.இலை:7 22/4
ஊடு செவி இசை நிறைந்த உள்ளமொடு புள் இனமும் – 3.இலை:7 31/2
நீடும் களிற்றின் மிசை நீள் மறுகு ஊடு போந்தார் – 4.மும்மை:1 43/4
நனை சினை மென் குளிர் ஞாழல் பொழில் ஊடு வழி கொண்டு நண்ணும் போதில் – 5.திருநின்ற:1 174/2
மீனவன் செவியின் ஊடு மெய் உணர்வளிப்போர் கூற – 6.வம்பறா:1 721/1
பொன் அணி மாட வீதி ஊடு எழுந்தருளி புக்கார் – 6.வம்பறா:1 745/3
உம்பர் உய்ய நஞ்சு உண்டார் அருளால் ஓடம் செல செல்ல உந்துதலால் ஊடு சென்று – 6.வம்பறா:1 899/1
பொற்பு உடைய ஆர்ப்பு ஒலியும் செவியின் ஊடு புடைத்த நாராசம் என புக்க போது – 6.வம்பறா:1 906/2
வியன் நெடும் தெருவின் ஊடு மிக்க தொண்டர் ஆர்ப்பு எழ – 6.வம்பறா:1 991/1
தக்க திருக்கடைக்காப்பு சாற்றி தேவர்-தம் பெருமான் திரு வாயில் ஊடு சென்று – 6.வம்பறா:1 1031/3
ஊடு புக்கு இறைஞ்சி ஓங்கும் ஒளி வளர் கனக மன்றில் – 6.வம்பறா:2 113/2

மேல்


ஊடுருக்கும் (1)

என்பு ஊடுருக்கும் புலவியோ பிரிவோ இரண்டின் இடைப்பட்டார் – 6.வம்பறா:2 315/4

மேல்


ஊடுருவும் (1)

பயில் விளியால் கலை அழைத்து பாடு பெற ஊடுருவும்
அயில் முக வெம் கணை போக்கி அடி ஒற்றி மரை இனங்கள் – 3.இலை:3 143/1,2

மேல்


ஊடே (1)

புனிற்று இளம் கன்று துள்ளி போந்தது அ மறுகின் ஊடே – 1.திருமலை:3 22/4

மேல்


ஊணும் (2)

ஊணும் மேன்மையில் ஊட்டி நல் கந்தை கீள் உடைகள் – 2.தில்லை:7 11/2
ஊணும் உறக்கமும் இன்றி அணங்கு உறைவாளையும் கொண்டு – 3.இலை:3 153/2

மேல்


ஊணொடு (1)

ஆன ஊணொடு எழுந்தவே – 8.பொய்:2 25/4

மேல்


ஊத்தை (1)

உள்ளவாறு என்று அருள ஊத்தை வாய் பறி தலையார் – 6.வம்பறா:1 757/2

மேல்


ஊத (6)

வாழிய நம் தோன்றலார் மணி அதரம் வைத்து ஊத – 3.இலை:7 23/4
கூறி ஊத குலவு பொன் சின்னங்கள் – 6.வம்பறா:1 195/2
உய்ய ஞானசம்பந்தன் வந்தான் என ஊத – 6.வம்பறா:1 221/4
உணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தான் என ஊத – 6.வம்பறா:1 223/4
எண்_இல் முரசு இரங்கி எழ பணிலம் ஆர்ப்ப இலங்கிய காளம் சின்னம் எங்கும் ஊத
கண் வளர் மென் கரும்பு மிடை கதிர் செம் சாலி கதலி கமுகு உடன் ஓங்கும் கழனி நாட்டு – 6.வம்பறா:1 256/2,3
பார் குலவு தனிக்காளம் சின்னம் எல்லாம் பரசமய கோளரி வந்தான் என்று ஊத – 6.வம்பறா:1 904/4

மேல்


ஊதி (6)

முன்பு ஊதி வரும் அளவின் முறைமையே எ உயிரும் – 3.இலை:7 22/3
ஒழிந்து நீங்கிட ஊதி முன் துமிப்பவர் போல – 5.திருநின்ற:6 12/3
பொழிந்த அன்பினால் ஊதி மேல் துமிந்தனர் போக – 5.திருநின்ற:6 12/4
சுதை சிலம்பி மேல் விழ ஊதி துமிந்தனன் என்றார் – 5.திருநின்ற:6 13/4
முன் அணைந்து வந்து ஊதி வாய் நீர் பட முயன்றாய் – 5.திருநின்ற:6 15/3
உள்ளம் வைத்து எமை ஊதி முன் துமிந்த பால் ஒழிய – 5.திருநின்ற:6 18/3

மேல்


ஊதியம் (2)

ஊதியம் அறியாதேனுக்கு உணர்வு தந்து உய்ய கொண்ட – 1.திருமலை:5 72/2
செப்பு ஊதியம் கை கொண்டார் திருநாவுக்கரசர் பாதம் – 5.திருநின்ற:5 43/4

மேல்


ஊதியமா (1)

சொல் ஊதியமா அணிந்தவர்-தம் சோற்று துறையின் மருங்கு எய்தி – 6.வம்பறா:2 69/3

மேல்


ஊதியமும் (1)

எ ஊதியமும் என கொள்ளும் எண்ணம் உடையார் பல நாளும் – 5.திருநின்ற:7 6/3

மேல்


ஊது (1)

உரை செய்து இருப்போர் பலவும் ஊது மணி சின்னம் எலாம் – 6.வம்பறா:1 653/3

மேல்


ஊதும் (3)

அயல் ஆமை அடுப்பு ஏற்றி அரக்கு ஆம்பல் நெருப்பு ஊதும்
வயல் மாதர் சிறுமகளிர் விளையாட்டு வரம்பு எல்லாம் – 1.திருமலை:2 16/3,4
பொங்க ஊதும் பொருவு_அரும் சின்னமும் – 6.வம்பறா:1 201/3
புத்தர் இனம் புடைசூழ புத்தநந்தி பொருவு_இல் ஞான புனிதர் திரு முன்பு ஊதும்
மெய்த்த விறல் சின்னங்கள் விலக்கும்-காலை வெகுண்டு எழுந்த திருத்தொண்டர் வெறுத்து நோக்கி – 6.வம்பறா:1 907/1,2

மேல்


ஊர் (41)

உள்ளம் ஆர் உருகாதவர் ஊர் விடை – 1.திருமலை:3 8/1
ஊர் விளங்கு திரு வாயில்கள் நான்கின் உத்தர திரு வாயில் முன் எய – 1.திருமலை:5 97/4
உள்ளும் நான் மிதியேன் என்று ஊர் எல்லை புறம் வணங்கி – 1.திருமலை:5 112/2
எண் திசையும் ஏறிய சீர் எயின் மூதூர் எயினன் ஊர் – 3.இலை:2 1/4
வள்ளலார் மணம் அ ஊர் மருங்கு அணையா முன் மலர் கண் – 3.இலை:5 21/1
ஓதம் கிளர் வேலையை ஒத்து ஒலி மிக்கது அ ஊர் – 4.மும்மை:1 35/4
ஆன் அளிப்பன அஞ்சு உகந்து ஆடுவார்க்கு அ ஊர்
தான் அளிப்பன தருமமும் நீதியும் சால்பும் – 4.மும்மை:3 2/3,4
அயலிடை வேறு அடி நெருங்க குடி நெருங்கி உளது அ ஊர் – 4.மும்மை:4 5/4
மற்று அ ஊர் புறம் பணையின் வயல் மருங்கு பெரும் குலையில் – 4.மும்மை:4 6/1
அ பதியில் ஊர் புலைமை ஆன்ற தொழில் தாயத்தார் – 4.மும்மை:4 11/3
வருத்தமுறும் காதலினால் வந்து அ ஊர் மருங்கு அணைந்தார் – 4.மும்மை:4 16/4
சென்று இவையும் கடந்து ஊர் சூழ் எயில் திருவாயிலை புக்கார் – 4.மும்மை:4 24/2
விளைத்த பாசொளி விளங்கு நீள் விசும்பிடை ஊர் கோள் – 4.மும்மை:5 26/3
ஊர் ஒலிக்கும் பெரு வண்ணார் என ஒண்ணா உண்மையினார் – 4.மும்மை:5 113/2
தன்மை நிலவு பதி ஐந்தின் ஒன்றாய் நீடும் தகைத்தது அ ஊர் – 4.மும்மை:6 8/4
ஓது கிடையின் உடன் போவார் ஊர் ஆன் நிரையின் உடன் புக்க – 4.மும்மை:6 17/1
ஓங்கு சபையோர் அவனை பார்த்து ஊர் ஆன் நிரை மேய்த்து உன் மகன் செய் – 4.மும்மை:6 41/3
சென்ற மறையோன் திருமகனார் சிறந்த ஊர் ஆன் நிரை கொடு போய் – 4.மும்மை:6 45/1
தெய்வ நெறி சிவம் பெருக்கும் திரு ஆம் ஊர் திருவாமூர் – 5.திருநின்ற:1 12/4
செப்ப_அரும் சீர் அப்பூதிஅடிகள் ஊர் திங்களூர் – 5.திருநின்ற:1 200/4
பல் ஊர் வெண்தலை கரத்தார் பயிலும் இடம் பல பணிந்து – 5.திருநின்ற:1 215/2
சொல் ஊர் வண் தமிழ் பாடி வலம் சுழியை தொழுது ஏத்தி – 5.திருநின்ற:1 215/3
அல் ஊர் வெண் பிறை அணிந்தார் திருக்குடமூக்கு அணைந்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 215/4
மெய் புகழ் விளங்கும் அ ஊர் விரும்ப ஓர் வணிகன் பெற்ற – 5.திருநின்ற:4 35/3
எய்தும் பெருமை எண் திசையும் ஏறு ஊர் ஏம பேர் ஊரால் – 5.திருநின்ற:7 1/4
தெவ் ஊர் எரித்த வரி சிலையார் திரு பாதங்கள் வணங்கினார் – 5.திருநின்ற:7 6/4
தொழுது தம் ஊர் மருங்கு அணைந்து தூய மனை உள் புகுதாதே – 5.திருநின்ற:7 23/2
நிரந்தரம் நீள் இலை கடையால் ஒழுகுதலால் நெடிது அ ஊர்
மரங்களும் ஆகுதி வேட்கும் தகைய என மணந்து உளது-ஆல் – 6.வம்பறா:1 7/3,4
கொற்றவனார் அருள் பெற்ற தொண்டர் குழாத்துடன் அ ஊர் குறுக வந்தார் – 6.வம்பறா:1 492/4
மற்று அ ஊர் தொழுது ஏத்தி மகிழ்ந்து பாடி மால் அயனுக்கு அரிய பிரான் மருவும் தானம் – 6.வம்பறா:1 575/1
ஊர் அடைய அலங்கரித்து விழவு கொள்ள உயர் கமுகு கதலி நிறை குடம் தீபங்கள் – 6.வம்பறா:1 576/3
ஊர் உளோர் ஓடி காண கண்டனம் என்று உரைப்பார் – 6.வம்பறா:1 637/4
கன்னி மதில் கழுமலம் நாம் கருதும் ஊர் என சிறந்த – 6.வம்பறா:1 754/2
அங்கண் அ ஊர் தமக்கு ஒரு-பால் அடியார்-தங்கட்கு அமுத ஆக்க – 6.வம்பறா:5 6/1
கற்ற சூதால் நியதியாம் கருமம் முடித்தே கருதார் ஊர்
செற்ற சிலையார் திரு குடந்தை அடைந்தார் வந்து சில நாளில் – 6.வம்பறா:5 7/3,4
மன்னனார் அருளி செய்த மறை திரு ஆக்கூர் அ ஊர் – 7.வார்கொண்ட:2 1/4
உளைத்த கடல் இவற்று ஒன்று பெற வேண்டி உம்பர் ஊர்
வளைத்தது போன்று உளது அங்கண் மதில் சூழ்ந்த மலர் கிடங்கு – 8.பொய்:2 6/3,4
நின்ற ஊர் பூசலார்-தம் நினைவினை உரைக்கல்உற்றார் – 12.மன்னிய:1 1/4
நிலவிய செல்வம் மல்கி நிகழ் திருநின்ற ஊர் ஆம் – 12.மன்னிய:1 2/4
நின்ற ஊர் பூசல் அன்பன் நெடிது நாள் நினைந்து செய்த – 12.மன்னிய:1 10/1
தண் தலை சூழல் சூழ்ந்த நின்ற ஊர் வந்து சார்ந்தான் – 12.மன்னிய:1 11/4

மேல்


ஊர்-தொறும் (1)

ஊர்-தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே – 3.இலை:4 22/1

மேல்


ஊர்க (1)

முன் இவனை அ வீதி முரண் தேர்க்கால் ஊர்க என – 1.திருமலை:3 43/2

மேல்


ஊர்கள்-தொறும் (1)

உடை மடைய கரும்பு அடு கட்டியின் அடைப்ப ஊர்கள்-தொறும் – 5.திருநின்ற:1 5/4

மேல்


ஊர்களின் (1)

சேரர் திரு நாட்டு ஊர்களின் முன் சிறந்த மூதூர் செங்குன்றூர் – 2.தில்லை:6 2/4

மேல்


ஊர்களும் (1)

இ வகைய திரு நாட்டில் எனை பல ஊர்களும் என்றும் – 5.திருநின்ற:1 12/1

மேல்


ஊர்தி (4)

வழி திரு மைந்தன் ஆவி கொள வரும் மறலி ஊர்தி
கழுத்து அணி மணியின் ஆர்ப்போ என்ன தன் கடை முன் கோளா – 1.திருமலை:3 28/2,3
மயில் உடை கொற்ற ஊர்தி வரை உரம் கிழித்த திண்மை – 3.இலை:3 12/3
உம்பரின் இந்திரன் களிற்றின் முழக்கும் தெய்வ உயர் இரவி மா கலிப்பும் அயன் ஊர்தி தேர் – 4.மும்மை:5 98/3
மேல் ஊர்தி விடை கொடியார் மேவும் இடம் பல பாடி – 5.திருநின்ற:1 216/3

மேல்


ஊர்திகளின் (1)

நிரை செறியும் விமான_ஊர்திகளின் மேலும் நிலம் மிசையும் பல முறையும் நிரந்து நீங்கார் – 4.மும்மை:5 100/4

மேல்


ஊர்தியை (1)

சோதி வெண் கயிலை தாழ்வரை முழையில் துதிக்கையோன் ஊர்தியை கண்டு – 1.திருமலை:1 8/2

மேல்


ஊர்ந்த (2)

ஆழி மணி சிறு தேர் ஊர்ந்த அ இரத பொடி ஆடும் – 6.வம்பறா:1 11/3
பெற்றம் ஊர்ந்த பிரான் கழல் பேணுவார் – 6.வம்பறா:1 193/3

மேல்


ஊர்ந்தவர் (1)

ஊர்ந்தவர் படிமேல் செல்ல உற்று எதிர் உடன்று பொங்கி – 2.தில்லை:3 20/3

மேல்


ஊர்ந்தான் (1)

மருமம் தன் தேர் ஆழி உற ஊர்ந்தான் மனு வேந்தன் – 1.திருமலை:3 44/3

மேல்


ஊர்ந்து (1)

பொருப்பு ஊர்ந்து அருளும் பிரானை பொய்யிலியை கண்டேன் என்று – 5.திருநின்ற:1 388/2

மேல்


ஊர்வதும் (1)

பெற்றம் ஊர்வதும் இன்றி நீடிய பேதையாள்உடன் இன்றி ஓர் – 2.தில்லை:4 8/3

மேல்


ஊர (1)

இளமை மீது ஊர இன்ப துறையினில் எளியர் ஆனார் – 2.தில்லை:2 3/4

மேல்


ஊரர் (2)

சென்றார் வெகுண்டார் சிரித்தார் திரு நாவல் ஊரர்
நன்று-ஆல் மறையோன் மொழி என்று எதிர் நோக்கி நக்கார் – 1.திருமலை:5 38/3,4
வேலை இல் நாவல் ஊரர் வெகுண்டு மேல் விரைந்து சென்று – 1.திருமலை:5 43/3

மேல்


ஊரன் (3)

நாவல் நகர் ஊரன் இது நான் மொழிவது என்றான் – 1.திருமலை:5 37/2
உரிமையால் ஊரன் ஏவ மீளவும் உன்-பால் வந்தோம் – 6.வம்பறா:2 364/2
ஊரன் ஆகிய ஆலாலசுந்தரன் உடன் அமர்ந்து இருவீரும் – 13.வெள்ளானை:1 48/3

மேல்


ஊரனுக்கும் (1)

பேணாது ஏகும் ஊரனுக்கும் பிரான் ஆம் தன்மை பிறை சூடி – 2.தில்லை:6 8/2

மேல்


ஊரனே (1)

ஒன்றும் மேனியர் ஊரனே வந்தனை என்றனர் உலகு உய்ய – 13.வெள்ளானை:1 42/4

மேல்


ஊரனை (1)

ஒன்று சிந்தை நம் ஊரனை உம்பர் வெள் யானையின் உடன் ஏற்றி – 13.வெள்ளானை:1 31/3

மேல்


ஊராம் (2)

சேர் ஊராம் திரு முருகன் பூண்டியினில் சென்று எய்தி – 7.வார்கொண்ட:4 168/3
உலகில் வளர் அணிக்கு எல்லாம் உள்ளுறை ஊராம் உறையூர் – 8.பொய்:2 1/4

மேல்


ஊராயேல் (1)

விழைவுஉறு மனமும் பொங்க வெண்ணெய் நல் ஊராயேல் உன் – 1.திருமலை:5 48/3

மேல்


ஊரார் (1)

எஞ்சல்_இலா வகை முறையே பழையன் ஊரார் இயம்பு மொழி காத்த கதை சிறப்பித்து ஏத்தி – 6.வம்பறா:1 1010/2

மேல்


ஊரால் (1)

எய்தும் பெருமை எண் திசையும் ஏறு ஊர் ஏம பேர் ஊரால் – 5.திருநின்ற:7 1/4

மேல்


ஊரான் (1)

ஆசு_இல் வேதியன் இ ஊரான் என்று அவர் அழைக்க ஒட்டான் – 12.மன்னிய:1 13/3

மேல்


ஊரில் (5)

பெருமை சேர் பதியே ஆக பேசியது உமக்கு இ ஊரில்
வரு முறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக என்றார் – 1.திருமலை:5 64/3,4
நாவலர் கோன் ஆரூரன்-தனை வெண்ணெய் நல் ஊரில்
மேவும் அருள் துறை அமர்ந்த வேதியர் ஆட்கொண்டு அதன் பின் – 1.திருமலை:5 78/1,2
ஊரில் விடும் பறை துடைவை உணவு உரிமையா கொண்டு – 4.மும்மை:4 13/1
இந்த ஊரில் இருக்கிலோம் என்றே ஓட்டினார் இது மேல் – 6.வம்பறா:4 17/3
அங்கணரை பணிந்து உறையும் ஆரூரர்க்கு அ ஊரில்
கங்குலிடை கனவின்-கண் காளையாம் திரு வடிவால் – 7.வார்கொண்ட:4 112/1,2

மேல்


ஊரிலே (1)

வேதியன் அதனை கேட்டு வெண்ணெய் நல் ஊரிலே நீ – 1.திருமலை:5 49/1

மேல்


ஊரின் (1)

நீடு திரு நின்றி ஊரின் நிமலனார் நீள் கழல் ஏத்தி – 6.வம்பறா:1 287/1

மேல்


ஊரினில் (3)

நம்பரை நலம் திகழ் நாரை ஊரினில்
கும்பிடும் விருப்பொடு குறுகி கூடிய – 6.வம்பறா:1 253/1,2
பெருகும் இ ஊரினில் நாங்கள் பின்னை இருக்கிலோம் என்று – 6.வம்பறா:4 10/2
வரிஞ்சை ஊரினில் வாய்மை வேளாண் குலம் – 8.பொய்:7 2/1

மேல்


ஊரும் (11)

ஊரும் சடையீர் விடை மேல் வருவீர் உமது அன்பிலர் போல் யானோ உறுவேன் – 1.திருமலை:5 177/4
பாகம் நுகர வரும் மாலும் அயனும் ஊரும் படர் சிறை புள் – 4.மும்மை:6 4/2
நீர் ஊரும் சடை முடியார் நிதி கோமான் தனை ஏவ – 6.வம்பறா:2 14/2
கார் ஊரும் நெடும் விசும்பும் கரக்க நிறைந்து ஓங்கியது-ஆல் – 6.வம்பறா:2 14/4
தேர் ஊரும் நெடும் வீதி திருவாரூர்க்கு எழுந்தருள – 7.வார்கொண்ட:4 159/3
நேர் ஊரும் மன காதல் நீக்கவும் அஞ்சுவன் என்றார் – 7.வார்கொண்ட:4 159/4
கார் ஊரும் மலை நாடு கடந்து அருளி கல் சுரமும் – 7.வார்கொண்ட:4 164/2
நீர் ஊரும் கான் யாறும் நெடும் கானும் பல கழிய – 7.வார்கொண்ட:4 164/3
சீர் ஊரும் திரு முருகன் பூண்டி வழி செல்கின்றார் – 7.வார்கொண்ட:4 164/4
நீர் ஊரும் செம் சடையார் அருளினால் நீங்க அவர் – 7.வார்கொண்ட:4 168/2
போர் ஊரும் மழ_விடையார் கோயிலை நாடி புக்கார் – 7.வார்கொண்ட:4 168/4

மேல்


ஊரை (1)

நல்ல அந்தணர்கள் வாழும் வெண்ணெய் நல் ஊரை நண்ணி – 1.திருமலை:5 50/4

மேல்


ஊழி (7)

தூய பொன் அணி சோழன் நீடு ஊழி பார் – 0.பாயிரம்:1 8/3
ஞாலம் தனி நேமி நடாத்தி நலம் கொள் ஊழி
காலம் உயிர்கட்கு இடர் ஆன கடிந்து காத்து – 4.மும்மை:1 47/3,4
அளந்து அறியா பல் ஊழி ஆற்றுதலால் அகல் இடத்து – 6.வம்பறா:1 6/3
ஊழி முதல்வர்க்கு உரிமை தொழில் சிறப்பால் – 6.வம்பறா:1 162/1
ஊழி முடிவில் உயர்ந்த வெள்ளத்து ஓங்கிய காழி உயர் பதியில் – 6.வம்பறா:1 551/1
ஊழியாம் ஒரு கணம் தான் அ ஊழி ஒரு கணம் ஆம் – 6.வம்பறா:2 268/4
ஊழி மா கடல் வெள்ளத்து மிதந்து உலகினுக்கு ஒரு முதலாய் – 7.வார்கொண்ட:5 1/3

மேல்


ஊழி-தொறும் (1)

பவம் பெருக்கும் புரை நெறிகள் பாழ்பட நல் ஊழி-தொறும்
தவம் பெருக்கும் சண்பையிலே தாவு_இல் சராசரங்கள் எலாம் – 6.வம்பறா:1 26/2,3

மேல்


ஊழியாம் (1)

ஊழியாம் ஒரு கணம் தான் அ ஊழி ஒரு கணம் ஆம் – 6.வம்பறா:2 268/4

மேல்


ஊழியில் (1)

ஊழியில் தனி ஒருவர்-தம் திருவஞ்சைக்களத்தில் உய்த்து உணர்வித்தான் – 13.வெள்ளானை:1 51/4

மேல்


ஊழின் (2)

ஈறு_இல் விதத்து பரிவட்டம் ஊழின் நிரைத்தே எதிர் இறைஞ்சி – 6.வம்பறா:2 36/3
ஊழின் முறைமை வழுவாது உலகங்கள் ஆன – 6.வம்பறா:6 2/2

மேல்


ஊற்றி (1)

சிந்தையில் விரும்பி நீரில் சேற்றினை அலம்பி ஊற்றி
வெம் தழல் அடுப்பின் மூட்ட விறகு இல்லை என்ன மேலோர் – 2.தில்லை:4 19/2,3

மேல்


ஊற்று (1)

பெருகு தெண் கடல் ஊற்று உண் பெரு நசை – 0.பாயிரம்:1 6/3

மேல்


ஊறி (4)

உழுத சால் மிக ஊறி தெளிந்த சேறு – 1.திருமலை:2 12/1
உள் நனைந்து அமுதம் ஊறி ஒழுகிய மழலை தீம் சொல் – 3.இலை:3 22/3
அன்பு ஊறி மிசை பொங்கும் அமுத இசை குழல் ஒலியால் – 3.இலை:7 22/1
மழையில் கரைந்து அங்கு உவர் ஊறி மேனி வெளுத்த வடிவினால் – 7.வார்கொண்ட:4 18/1

மேல்


ஊறு (10)

ஊறு செய் காலம் சிந்தித்து உரு மிக தெரியா போதின் – 3.இலை:3 133/3
ஊறு கண்டு அஞ்சி தம் கண் இடந்து அப்ப உதவும் கையை – 3.இலை:3 185/2
செய் வண்ணம் ஒழிந்திட தேய்ந்த புண் ஊறு தீர்ந்து – 4.மும்மை:1 23/2
ஊறு நீர் தரும் ஒளி மலர் கலிகை மா நகரை – 4.மும்மை:5 19/3
வெவ் ஊறு அகற்றும் பெருமான்-தன் விரை சூழ் மலர் தாள் பணிவுறுதல் – 5.திருநின்ற:7 6/2
ஊறு காதலில் ஒளி வளர் புற்று இடம் கொண்ட – 6.வம்பறா:1 516/1
வந்தவாறு அமணர் தம்மில் மாறுகொண்டு ஊறு செய்ய – 6.வம்பறா:1 634/2
ஊறு உடை நெஞ்சில் அச்சம் வெளிப்பட ஒளிப்பார் போன்று – 6.வம்பறா:1 817/3
ஊறு_இலாத தனி புதல்வன்-தன்னை அரிந்து அங்கு அமுது ஊட்ட – 7.வார்கொண்ட:3 88/2
உற்ற ஊறு அது நீங்கி ஒளி விளங்க உச்சியின் மேல் – 8.பொய்:6 16/2

மேல்


ஊறு_இலாத (1)

ஊறு_இலாத தனி புதல்வன்-தன்னை அரிந்து அங்கு அமுது ஊட்ட – 7.வார்கொண்ட:3 88/2

மேல்


ஊறும் (2)

உடனே தோன்றும் உணர்வின் கண் ஒழியாது ஊறும் வழி அன்பின் – 4.மும்மை:6 16/2
திருப்பாசூர் நகர் எய்தி சிந்தையினில் வந்து ஊறும்
விருப்பு ஆர்வம் மேற்கொள்ள வேய் இடம் கொண்டு உலகு உய்ய – 5.திருநின்ற:1 339/1,2

மேல்


ஊன் (20)

ஊன் அடைந்த உடம்பின் பிறவியே – 0.பாயிரம்:1 2/1
கயல் பாய் பைம் தடம் நந்து ஊன் கழிந்த பெரும் கரும் குழிசி – 1.திருமலை:2 16/1
புலர ஊன் உணவு நல்கி புரி விளையாட்டின் விட்டு – 3.இலை:3 27/3
கான ஊன் அமுதம் ஆக்கும் சிலையினை காப்பு செய்தார் – 3.இலை:3 32/4
கைவினை எயினர் ஆக்கி கலந்த ஊன் கிழங்கு துன்ற – 3.இலை:3 34/3
வெந்த ஊன் அயில்வார் வேரி விளங்கனி கவளம் கொள்வார் – 3.இலை:3 35/2
ஊன் அமுது அமைத்து கொண்டு மஞ்சனம் ஆட்ட உன்னி – 3.இலை:3 121/2
மன்னனார் திருக்காளத்தி மலையினார்க்கு இனிய நல் ஊன்
இன்னமும் வேண்டும் என்னும் எழு பெரும் காதல் கண்டு – 3.இலை:3 126/2,3
திண்ணனார் திருவாயில் அமைத்தார் ஊன் திரு அமுது – 3.இலை:3 147/4
ஊன் அமுது கல்லை உடன் வைத்து இது முன்னையின் நன்று-ஆல் – 3.இலை:3 150/1
எய்யும் வரி சிலையவன்-தான் இட்ட ஊன் எனக்கு இனிய – 3.இலை:3 161/4
மாறு_இல் ஊன் அமுதும் நல்ல மஞ்சன புனலும் சென்னி – 3.இலை:3 167/1
உற்ற நோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன் எனும் உரை முன் கண்டார் – 3.இலை:3 177/4
ஆர்வம் அங்கு உயிர் கொண்டு உகைக்கும் உடம்பு அடங்கவும் ஊன் கெட – 5.திருநின்ற:1 359/3
ஊன் அடை வனப்பை எல்லாம் உதறி எற்பு உடம்பே ஆக – 5.திருநின்ற:4 50/3
ஊன் எலாம் உருக ஏத்தி உச்சி மேல் குவித்தார் செம் கை – 6.வம்பறா:1 122/4
ஊன் ஆகி உயிர் ஆகி உணர்வும் ஆகி உலகங்கள் அனைத்தும் ஆய் உலகுக்கு அப்பால் – 6.வம்பறா:1 563/2
ஊன் அமர்ந்து உருக ஏத்தி உளம் களித்து உறையும் நாளில் – 6.வம்பறா:1 872/4
ஊன் நெகிழும்படி அழிந்து அங்கு ஒழுகு கண்ணீர் பாய்ந்து இழிய உணர்வு இன்றி வீழ கண்டே – 6.வம்பறா:1 884/2
ஊன் உடம்பில் பிறவி விடம் தீர்ந்து உலகத்தோர் உய்ய – 6.வம்பறா:3 26/1

மேல்


ஊன்ற (2)

திண்ணனார் கண்ணில் ஊன்ற தரித்திலர் தேவ தேவர் – 3.இலை:3 182/4
ஊன்ற உள் எழும் சோதியாய் நின்றனன் – 6.வம்பறா:1 835/3

மேல்


ஊன்றி (2)

எண்ணுவர் தம்பிரான்-தன் திரு கண்ணில் இட கால் ஊன்றி
உள் நிறை விருப்பினோடும் ஒரு தனி பகழி கொண்டு – 3.இலை:3 182/2,3
கை தருவார்-தமை ஊன்றி காணாமே இரவின்-கண் – 5.திருநின்ற:1 61/3

மேல்


ஊன்றுகோல் (1)

வணங்கி நீர் மகிழ் கோயில் உளீரே என்ற வன் தொண்டர்க்கு ஊன்றுகோல் அருளி – 6.வம்பறா:2 279/3

மேல்


ஊன (1)

ஊன வெம் சூலை நீங்கி உடன் இருப்பதனுக்கு என்றார் – 6.வம்பறா:2 401/4

மேல்


ஊனம் (17)

ஊனம் மிகு பகை திறத்தால் கள்வரால் உயிர் தம்மால் – 1.திருமலை:3 36/3
ஒருமையால் உலகை வெல்வார் ஊனம் மேல் ஒன்றும் இல்லார் – 1.திருமலை:5 196/2
ஊனம் மேல் ஒன்றும் இல்லார் உலகு எலாம் புகழ்ந்து போற்றும் – 2.தில்லை:1 7/3
ஊனம்_இல் தொண்டர் கும்பிட்டு உடன் உறை பெருமை பெற்றார் – 2.தில்லை:3 35/3
ஊனம்_இல் பலிகள் போக்கி உறு கடன் வெறி ஆட்டோடும் – 3.இலை:3 13/2
ஊனம்_இல் ஆயம் உலப்பு_இல பல்க அளித்து உள்ளார் – 3.இலை:7 10/4
ஊனம் இன்றி நிறை அன்பால் உருகு மனத்தார் முருகனார் – 4.மும்மை:2 5/4
ஊனம்_இல் அறம் அனேகமும் உலகு உய்ய வைத்த – 4.மும்மை:5 49/3
ஊனம் தான் இலர் ஆகி உவந்து இருந்தார்-தமை கண்டே – 5.திருநின்ற:1 101/3
ஊனம்_இல் சீர் பெரு வணிகர் குடி துவன்றி ஓங்கு பதி – 5.திருநின்ற:4 1/2
ஊனம்_இல் இசையுடன் விளங்கிய திருப்பதிகம் – 6.வம்பறா:1 382/3
ஊனம் வந்து அடையில் யாமும் உயிர் துறந்து ஒழிவது என்றார் – 6.வம்பறா:1 696/4
ஊனம்_இல் வேத வேள்வி என்று எடுத்து துரையின் மாலை – 6.வம்பறா:1 739/3
ஊனம்_இல் புகழ் அடியார்-பால் கேட்டு உவந்து உளராய் – 6.வம்பறா:1 1037/4
ஊனம்_இல் சீலத்து உம்-பால் மகள்_பேச வந்தது என – 6.வம்பறா:1 1166/2
ஊனம் ஆகும் திருத்தொண்டுக்கு எனினும் உடையான் அருளாலே – 7.வார்கொண்ட:4 15/2
ஊனம் நிகழ் மேனியராய் ஒருவர் நீறு அணிந்து அணைந்தார் – 8.பொய்:3 5/4

மேல்


ஊனம்_இல் (9)

ஊனம்_இல் தொண்டர் கும்பிட்டு உடன் உறை பெருமை பெற்றார் – 2.தில்லை:3 35/3
ஊனம்_இல் பலிகள் போக்கி உறு கடன் வெறி ஆட்டோடும் – 3.இலை:3 13/2
ஊனம்_இல் ஆயம் உலப்பு_இல பல்க அளித்து உள்ளார் – 3.இலை:7 10/4
ஊனம்_இல் அறம் அனேகமும் உலகு உய்ய வைத்த – 4.மும்மை:5 49/3
ஊனம்_இல் சீர் பெரு வணிகர் குடி துவன்றி ஓங்கு பதி – 5.திருநின்ற:4 1/2
ஊனம்_இல் இசையுடன் விளங்கிய திருப்பதிகம் – 6.வம்பறா:1 382/3
ஊனம்_இல் வேத வேள்வி என்று எடுத்து துரையின் மாலை – 6.வம்பறா:1 739/3
ஊனம்_இல் புகழ் அடியார்-பால் கேட்டு உவந்து உளராய் – 6.வம்பறா:1 1037/4
ஊனம்_இல் சீலத்து உம்-பால் மகள்_பேச வந்தது என – 6.வம்பறா:1 1166/2

மேல்


ஊனமாம் (1)

ஊனமாம் சமணை நீக்கி உலகு எலாம் உய்ய கொண்ட – 6.வம்பறா:1 859/2

மேல்


ஊனமும் (1)

ஊனமும் உகந்த ஐயர் உற்று முன் பிடிக்கும் போதும் – 3.இலை:3 184/2

மேல்


ஊனாய் (1)

பரு சுழியத்துடன் ஊனாய் உயிர் எனும் பா மலர் புனைந்தார் – 7.வார்கொண்ட:4 111/4

மேல்


ஊனாலும் (1)

ஊனாலும் உயிராலும் உள்ள பயன் கொள நினைந்து – 5.திருநின்ற:1 156/3

மேல்


ஊனில் (1)

ஊனில் வளர் உயிர்க்கு எல்லாம் ஒழியாத கருணையினால் – 6.வம்பறா:2 284/2

மேல்


ஊனின் (2)

பொச்சை இன் நறவும் ஊனின் புழுக்கலும் உணவு கொள்ளும் – 3.இலை:3 7/3
இலை மிசை படைத்த ஊனின் திரு அமுது எதிரே வைத்து – 3.இலை:3 124/4

மேல்


ஊனுக்கு (1)

உற்ற நோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன் எனும் உரை முன் கண்டார் – 3.இலை:3 177/4

மேல்


ஊனும் (4)

ஊனும் உயிரும் உருக்கும் அன்பால் உச்சி குவித்த செம் கைகளோடும் – 1.திருமலை:5 124/3
தொலைவு_இல் பல் நறவும் ஊனும் பழங்களும் கிழங்கும் துன்ற – 3.இலை:3 30/3
சிந்திட கையில் ஊனும் சிலையுடன் சிதறி வீழ – 3.இலை:3 170/2
ஊனும் உயிரும் கரைந்து உருக உச்சி குவித்த கையினுடன் – 6.வம்பறா:2 203/3

மேல்