கீ – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீத (5)

கீத ஓசையுமாய் கிளர்வுஉற்றவே – 1.திருமலை:3 2/4
மங்கல கீத நாத மறையவர் குழாங்களோடு – 1.திருமலை:5 21/1
அரம்பையர்-தம் கீத ஒலி அறா தில்லை மருங்கு அணைந்தார் – 1.திருமலை:5 91/4
வேத கீத நாதமும் மிக்கு எழுந்து விம்மவே – 6.வம்பறா:1 988/2
நாத மங்கலங்கள் கீத நயப்பு ஒலி ஒரு-பால் ஆக – 6.வம்பறா:1 1200/4

மேல்


கீதம் (4)

பண்களில் நிறைந்த கீதம் பாடுவார் ஆடுவார்கள் – 1.திருமலை:5 25/4
மங்கல கீதம் பாட மழை நிகர் தூரியம் முழங்க – 1.திருமலை:5 122/1
கீதம் முன் பாடும் அம்மை கிளர் ஒளி மலர் தாள் போற்றி – 5.திருநின்ற:4 66/2
பொங்கிய ஒலியின் ஓங்கி பூசுரர் வேத கீதம்
எங்கணும் எழுந்து மல்க திருமணம் எழுந்தது அன்றே – 6.வம்பறா:1 1199/3,4

மேல்


கீதமும் (1)

வேத கீதமும் விம்மிட விரை கமழ் வாச – 6.வம்பறா:1 1186/2

மேல்


கீதர் (2)

வெறுத்து உண்டி பிச்சை நுகர் மெய் தொண்டருடன் அணைந்தார் வேத கீதர் – 6.வம்பறா:1 469/4
வேத கீதர் திருப்பதிகள் பிறவும் பணியும் விருப்புறுவார் – 6.வம்பறா:1 972/4

மேல்


கீர்த்தி (1)

மண் பரவும் பெரும் கீர்த்தி வாகீசர் மனம் மகிழ்ந்து – 5.திருநின்ற:1 393/2

மேல்


கீரை (1)

அன்பு போல் தூய செந்நெல் அரிசி மாவடு மென் கீரை
துன்பு போம் மனத்து தொண்டர் கூடையில் சுமந்து போக – 3.இலை:6 14/2,3

மேல்


கீழ் (83)

மீது எழு பண்டை செம் சுடர் இன்று வெண் சுடர் ஆனது என்று அதன் கீழ்
ஆதி ஏனம்-அதாய் இடக்கலுற்றான் என்று அதனை வந்து அணைதரும் கலுழன் – 1.திருமலை:1 8/3,4
மேல் உற எழுந்து மிகு கீழ் உற அகழ்ந்து – 1.திருமலை:5 28/3
தக்க வகையால் தம் பெருமான் அருளினாலே தாள் நிழல் கீழ்
மிக்க கண நாயகர் ஆகும் தன்மை பெற்று விளங்கினார் – 2.தில்லை:6 10/3,4
இத்தனை காலமும் நினது சிலை கீழ் தங்கி இனிது உண்டு தீங்கு இன்றி இருந்தோம் இன்னும் – 3.இலை:3 46/1
தன் நெடும் குடை கீழ் தம்தம் நெறிகளில் சரிந்து வாழும் – 4.மும்மை:1 29/2
திங்கள் குடை கீழ் உரிமை செயல் சூழ்ந்து செய்வார் – 4.மும்மை:1 37/4
ஞான வரம்பின் தலை நின்றார் நாகம் புளை வார் சேவடி கீழ்
ஊனம் இன்றி நிறை அன்பால் உருகு மனத்தார் முருகனார் – 4.மும்மை:2 5/3,4
அரவம் அணிந்த அரையாரை அருச்சித்து அவர் தம் கழல் நிழல் கீழ்
விரவு புகலூர் முருகனார் மெய்மை தொண்டின் திறம் போற்றி – 4.மும்மை:2 14/1,2
வேத காரணர் ஆய ஏகம்பர் விரை மலர் செய்ய தாமரை கழல் கீழ்
ஏதம் நீங்கிய பூசனை முடிந்ததின்மை-தான் அறிவிப்பதற்கு இறைஞ்சி – 4.மும்மை:5 67/3,4
கிளர் ஒளி செம் கனக மயம்-தான் ஆய் மாடு கீழ் நிலையோர் நீல சோபனம் பூண – 4.மும்மை:5 91/1
பொங்கும் அன்பால் மண்ணி மணல் புளின குறையில் ஆத்தியின் கீழ்
செம் கண் விடையார் திருமேனி மணலால் ஆக்கி சிவ ஆலயமும் – 4.மும்மை:6 32/2,3
இறையோன் அடி கீழ் மறையவனார் எடுத்து திருமஞ்சனம் ஆட்டும் – 4.மும்மை:6 38/1
தொடுத்த இதழி சூழ் சடையார் துணை தாள் நிழல் கீழ் விழுந்தவரை – 4.மும்மை:6 54/1
புடை மாலை மதி கண்ணி புரி சடையார் பொன் கழல் கீழ்
அடை மாலை சீலம் உடை அப்பூதிஅடிகள்-தமை – 5.திருநின்ற:1 211/1,2
வென்றி விடையார் சேவடி கீழ் விழுந்தார் எழுந்தார் விம்மினார் – 5.திருநின்ற:1 252/4
இருப்போம் திருவடி கீழ் நாம் என்னும் குறுந்தொகை பாடி – 5.திருநின்ற:1 388/4
அத்தனார் திருவடி கீழ் நினைவு அகலா அன்பு உருகும் – 5.திருநின்ற:1 422/2
என்னை இனி சேவடி கீழ் இருத்திடும் என்று எழுகின்ற – 5.திருநின்ற:1 426/3
அண்ணலார் சேவடி கீழ் ஆண்ட அரசு அமர்ந்து இருந்தார் – 5.திருநின்ற:1 427/4
செய்யாள் கோனும் நான்_முகனும் அறியா செம்பொன் தாள் இணை கீழ்
உய்வான் சேர உற்ற நெறி இதுவே என்று அன்பினில் உய்த்தார் – 5.திருநின்ற:3 5/3,4
பூம் குழலார் அவர் தாமும் பொரு விடையார் திருவடி கீழ்
ஓங்கிய அன்புறு காதல் ஒழிவு இன்றி மிக பெருக – 5.திருநின்ற:4 14/2,3
உம்பர் பிரான் திருவடி கீழ் உணர்வு மிக ஒழுகு நாள் – 5.திருநின்ற:4 15/4
அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார் – 5.திருநின்ற:4 60/4
எடுத்து அருளும் சேவடி கீழ் என்றும் இருக்கின்றாரை – 5.திருநின்ற:4 65/3
நம்மை உடையவர் கழல் கீழ் நயந்த திருத்தொண்டாலே – 5.திருநின்ற:5 14/1
திருத்தோணி வீற்றிருந்தார் சேவடி கீழ் வழிபட்டு – 6.வம்பறா:1 20/2
வைகும் அந்நாளில் கீழ் பால் மயேந்திர பள்ளி வாசம் – 6.வம்பறா:1 129/1
சென்று அணைந்து தாழ்ந்தார் திருக்களிற்றுப்படி கீழ் – 6.வம்பறா:1 173/4
சீர் அணங்கு மணி முத்தின் சிவிகை மீது செழும் தரள குடை நிழல் கீழ் சென்று கண்டார் – 6.வம்பறா:1 258/4
நீண்ட சடையார் அடி கீழ் பணி உற்று நீடு அருள் பெற்றே – 6.வம்பறா:1 281/2
செழு வாச மலர் கமல சேவடி கீழ் சென்று தாழ்ந்து எழுந்து நின்று – 6.வம்பறா:1 307/2
அங்கு அணைந்து கோயில் வலம்கொண்டு அருளி அரவு அணிந்தார் அடி கீழ் வீழ்ந்து – 6.வம்பறா:1 470/1
புரவலனார் சேவடி கீழ் வீழ்ந்து தாங்கள் போந்ததுவும் புகுந்ததுவும் புகலல்உற்றாள் – 6.வம்பறா:1 479/4
நீற்று அழகர் சேவடி கீழ் நின்று அலைந்து நீடினார் – 6.வம்பறா:1 545/4
அங்கண் அமர்வார் அரனார் அடி இணை கீழ்
தங்கிய காதலினால் காலங்கள் தப்பாமே – 6.வம்பறா:1 548/1,2
சீர் மலி அசோகு-தன் கீழ் இருந்த நம் தேவர் மேலே – 6.வம்பறா:1 637/1
புண்டரிக சேவடி கீழ் பொருந்த நிலமுற விழுந்தார் – 6.வம்பறா:1 729/3
கீழ் உற பறித்து போக்கி கிளர் ஒளி தூய்மை செய்தே – 6.வம்பறா:1 871/3
பூ மருவும் சேவடி கீழ் புக்கு ஆர்வத்தோடும் பணிந்தார் – 6.வம்பறா:1 876/4
ஆலின் கீழ் நால்வர்க்கு அன்று அறம் உரைத்த அங்கணனை – 6.வம்பறா:1 883/1
சிந்தையினில் அது தெளிந்து புத்தர் சண்பை திரு மறையோர் சேவடி கீழ் சென்று தாழ்ந்தார் – 6.வம்பறா:1 925/4
திங்கள் பகவு அணியும் சென்னியார் சேவடி கீழ்
தங்கு மனத்தோடு தாள் பரவி செல்லும் நாள் – 6.வம்பறா:1 946/3,4
அங்கு அரிதில் புறம் போந்து அங்கு அயன் மால் போற்ற அரியார்-தம் திருமலை கீழ் அணைந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 1024/3
செல்வம் மல்கிய சிரபுர தலைவர் சேவடி கீழ்
எல்லை இல்லது ஓர் காதலின் இடையறா உணர்வால் – 6.வம்பறா:1 1038/1,2
பூம்_கொடிக்கு அழகின் மாரி பொழிந்திட புயல் கீழ் இட்ட – 6.வம்பறா:1 1096/3
செக்கர் நிகர் சடை முடியார் சேவடியின் கீழ் தாழ்ந்தார் – 6.வம்பறா:1 1122/4
சித்திர விதானத்தின் கீழ் செழும் திருநீலநக்கர் – 6.வம்பறா:1 1239/2
செம்மை மறையோர் திரு கலையநல்லூர் இறைவர் சேவடி கீழ்
மும்மை வணக்கம் பெற இறைஞ்சி முன்பு பரவி தொழுது எழுவார் – 6.வம்பறா:2 67/1,2
ஐயர் கமல சேவடி கீழ் ஆர்வம் பெருக விழுந்து எழுந்து – 6.வம்பறா:2 75/3
மற்று அதனில் வட கீழ் பால் கரை மீது வந்து அருளி – 6.வம்பறா:2 130/1
புண்டரிக சேவடி கீழ் பொருந்த நிலம் மிசை பணிந்தார் – 6.வம்பறா:2 144/4
ஆல நிழல் கீழ் இருந்தார் அவர் தம்மை எதிர் நோக்கி – 6.வம்பறா:2 159/1
செய்ய கமல சேவடி கீழ் திருந்து காதலுடன் வீழ்ந்தார் – 6.வம்பறா:2 188/4
மன்றல் மலர் சேவடி இணை கீழ் வணங்கி மகிழ்ந்தார் வன் தொண்டர் – 6.வம்பறா:2 236/4
சீத மலர் தாமரை அடி கீழ் சேர்ந்து வீழ்ந்து செந்நின்று – 6.வம்பறா:2 240/3
தங்கும் இடம் திரு மகிழ் கீழ் கொள வேண்டும் என தாழ்ந்தார் – 6.வம்பறா:2 248/4
கொங்கு அலர் பூ மகிழின் கீழ் கொள்க என குறித்து அருள – 6.வம்பறா:2 251/4
வெற்றி மழ_விடையார்-தம் சேவடி கீழ் வீழ்ந்து எழுந்தார் – 6.வம்பறா:2 252/4
போதுவீர் என மகிழ் கீழ் அவர் போத போய் அணைந்தார் – 6.வம்பறா:2 259/4
அம்பிகா வல்லவர் செய்ய அடி தாமரையின் கீழ் விழுந்தார் – 6.வம்பறா:2 325/4
மேவுவார் புற குட-பால் மிக்கு உயர்ந்த அரசின் கீழ்
தே இருக்கை அமர்ந்து அருளி சிவயோகம் தலை நின்று – 6.வம்பறா:3 25/2,3
அத்தர் திரு அடி இணை கீழ் சென்று அணைய அவருடைய – 7.வார்கொண்ட:3 25/2
வண்ண மலர் ஆத்தியின் கீழ் இருக்கின்றோம் மற்று அவர்-தாம் – 7.வார்கொண்ட:3 41/2
கடி சேர் திரு ஆத்தியின் நிழல் கீழ் இருந்தார் கணபதீச்சரத்து – 7.வார்கொண்ட:3 43/4
புடை வண்டு அறையும் ஆத்தியின் கீழ் இருந்த புனிதர் முன் சென்றார் – 7.வார்கொண்ட:3 67/4
வென்றி நெடு வேல் மைந்தரும் தம் விரை பூம் கமல சேவடி கீழ்
நின்ற தொண்டர் மனைவியார் நீடு மகனார் தாதியார் – 7.வார்கொண்ட:3 87/2,3
காரின் மலிந்த கொடை நிழல் மேல் கவிக்கும் கொற்ற குடை நிழல் கீழ்
தாரின் மலிந்த புயத்து அரசன் தரணி நீத்து தவம் சார்ந்தான் – 7.வார்கொண்ட:4 10/3,4
சீரார் வண்ண பொன் வண்ணத்து திரு அந்தாதி திருப்படி கீழ்
பார் ஆதரிக்க எடுத்து ஏத்தி பணிந்தார் பருவ மழை பொழியும் – 7.வார்கொண்ட:4 56/2,3
விரவும் காதல் மிக்கு ஓங்க வேதம் படியும் திரு படி கீழ்
இரவும் பகலும் பணிந்து ஏத்தி இன்பம் சிறக்கும் அ நாளில் – 7.வார்கொண்ட:4 59/3,4
சிரம் மலி மாலை சடையார் திருவடி கீழ் ஆட்செய்யும் – 7.வார்கொண்ட:4 102/3
நிலவு தரு மதி குடை கீழ் நெடு நிலம் காத்து இனிது அளிக்கும் – 8.பொய்:2 1/2
ஒரு குடை கீழ் மண்_மகளை உரிமையினில் மணம் புணர்ந்து – 8.பொய்:2 9/1
விளங்கு திரு மதி குடை கீழ் வீற்றிருந்து பார் அளிக்கும் – 8.பொய்:2 16/1
அ கருணை திரு நிழல் கீழ் ஆராமை அமர்ந்திருந்தார் – 8.பொய்:2 40/4
களத்தில் நஞ்சம் அணிந்து அவர் தாள் நிழல் கீழ் அடியாருடன் கலந்தார் – 8.பொய்:5 9/4
பல் நெடு நாள் ஆற்றிய பின் பரமர் திருவடி நிழல் கீழ்
மன்னு சிவலோகத்து வழி அன்பர் மருங்கு அணைந்தார் – 8.பொய்:8 7/2,3
பொன் மதில் சூழ் புகலி காவலர் அடி கீழ் புனிதராம் – 9.கறை:3 10/1
திகழ நெடு நாள் செய்து சிவபெருமான் அடி நிழல் கீழ்
புகல் அமைத்து தொழுது இருந்தார் புண்ணிய மெய் தொண்டனார் – 9.கறை:4 9/3,4
பெற்றம் உகந்து ஏறுவார் பீடத்தின் கீழ் ஒரு காசு – 10.கடல்:4 5/1
அ பூம் கானில் வெண் நாவல் அதன் கீழ் முன் நாள் அரி தேடும் – 12.மன்னிய:4 2/1
சென்னி உற பணிந்து ஏத்தி திரு படி கீழ் வழிபடு நாள் – 12.மன்னிய:4 7/4
மேவினார் திருத்தில்லை வேந்தர் திரு அடி நிழல் கீழ் – 12.மன்னிய:4 17/4
திருவாளன்-தன் சேவடி கீழ் சீல மறையோனொடு வீழ்ந்தாள் – 13.வெள்ளானை:1 12/3

மேல்


கீழ்-பால் (2)

மாடு பொன் கொழி காவிரி வட கரை கீழ்-பால்
ஆடு பூம் கொடி மாடம் நீடிய அணி நகர்-தான் – 6.வம்பறா:2 1/2,3
நண்ணி நிற்க கீழ்-பால் நீர் வடிந்த நடுவு நல்ல வழி – 7.வார்கொண்ட:4 136/2

மேல்


கீழ்க்கோட்டத்து (1)

வந்து அணைந்து திரு கீழ்க்கோட்டத்து இருந்த வான் பொருளை – 6.வம்பறா:1 408/1

மேல்


கீழ்மை (1)

கிளர் ஒலி கிண்கிணி எடுப்ப கீழ்மை நெறி சமயங்கள் – 6.வம்பறா:1 50/3

மேல்


கீழ்மையோர் (1)

கிளர்ந்த அச்சம் முன் கெழுமிய கீழ்மையோர் கூடி – 6.வம்பறா:1 699/2

மேல்


கீழ்வேளூர் (3)

கார் ஆரும் கறை_கண்டர் கீழ்வேளூர் கன்றாப்பூர் கலந்து பாடி – 5.திருநின்ற:1 228/3
விழி காவி மலர் பழன கீழ்வேளூர் விமலர் கழல் வணங்கி ஏத்தி – 6.வம்பறா:1 467/3
காவில் பயிலும் புறம்பு அணையை கடந்து போந்து கீழ்வேளூர்
மேவி பரமர் கழல் வணங்கி போந்து வேலை கழி கானல் – 7.வார்கொண்ட:4 84/2,3

மேல்


கீழே (1)

மாதர் அவர் மகிழ் கீழே அமையும் என மனம் அருள்வார் – 6.வம்பறா:2 259/1

மேல்


கீள் (3)

கந்தை கீள் உடை கோவணம் கருத்து அறிந்து உதவி – 2.தில்லை:7 3/3
ஊணும் மேன்மையில் ஊட்டி நல் கந்தை கீள் உடைகள் – 2.தில்லை:7 11/2
கந்தை கீள் உடை கோவணம் அன்றி ஓர் காப்பு – 2.தில்லை:7 16/3

மேல்


கீளும் (3)

ஒருநாளும் தம் செயலில் வழுவாது அன்பர்க்கு உடை கீளும் கோவணமும் நெய்து நல்கும் – 12.மன்னிய:2 3/3
பாங்கு உடை உடையும் கீளும் பழுது_இல் கோவணமும் நெய்வார் – 12.மன்னிய:3 3/4
உடையொடு நல்ல கீளும் ஒப்பு_இல் கோவணமும் நெய்து – 12.மன்னிய:3 4/1

மேல்


கீளொடு (1)

கீளொடு கோவணம் சாத்தி கேடு இலா – 2.தில்லை:2 11/1

மேல்


கீறி (2)

முறை என கீறி இட்டார் முறை இட்டான் முடிவு இலாதான் – 1.திருமலை:5 45/4
காதல் என் அடியான் என்ன காட்டிய ஓலை கீறி
மூது அறிவீர் முன் போந்தான் இது என்றன் முறைப்பாடு என்றான் – 1.திருமலை:5 51/3,4

மேல்


கீறு (1)

கீறு கோவணம் அன்று நெய்து அமைத்தது கிளர் கொள் – 2.தில்லை:7 24/2

மேல்