மெ – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மெச்சும் 1
மெத்த 1
மெத்தெனவே 1
மெய் 256
மெய்க்கு 1
மெய்கள் 1
மெய்ஞ்ஞான 4
மெய்ஞ்ஞானம் 9
மெய்ஞ்ஞானமே 1
மெய்ஞ்ஞீர்மையினில் 1
மெய்த்த 9
மெய்த்திரு 1
மெய்த்து 1
மெய்ப்படு 3
மெய்ப்பொருட்கு 1
மெய்ப்பொருள் 17
மெய்ப்பொருளாம் 1
மெய்ப்பொருளின் 2
மெய்ப்பொருளை 2
மெய்ம்மறந்து 1
மெய்ம்மை 27
மெய்ம்மையில் 1
மெய்ம்மையும் 1
மெய்ம்மையே 2
மெய்மகிழ்ந்து 1
மெய்மறந்த 1
மெய்மை 3
மெய்மையாம் 1
மெய்மையின் 1
மெய்யர் 2
மெய்யருள் 1
மெய்யனே 1
மெய்யான 1
மெய்யில் 6
மெய்யின் 3
மெய்யினால் 2
மெய்யினில் 1
மெய்யுடன் 1
மெய்யும் 4
மெய்யுற 2
மெய்யுறவே 1
மெய்யுறாமல் 1
மெய்யுறு 2
மெய்யை 1
மெல் 25
மெல்_இயலை 1
மெல்ல 4
மெல்லியர் 1
மெல்லியல்-தன் 1
மெல்லியலார் 1
மெல்லியலுக்கு 1
மெலிந்து 1
மெலிவன் 1
மெலிவாரும் 1
மெலிவித்தும் 1
மெலிவு 1
மெழுக்கிட்டு 1
மெழுக்கு 2
மெழுக்கும் 1
மெழுக்குஉற 1
மென் 116
மென்_குழலாரும் 1
மென்மை 1
மென்றாலும் 1
மென்றிடலால் 1

மெச்சும் (1)

மெச்சும் மனத்தால் அடுக்களையின் மேவார் வேறு கொண்டு அணைவார் – 7.வார்கொண்ட:3 61/4

மேல்


மெத்த (1)

மெத்த மகிழ்ச்சியினோடும் விரைந்து சென்று வெண் தரள சிவிகையின்-நின்று இழிந்து வேறு ஓர் – 6.வம்பறா:1 912/2

மேல்


மெத்தெனவே (1)

சிலை தனி திரு நுதல் திரு முலைக்கும் செம் தளிர் கரங்களுக்கும் மெத்தெனவே
கொலை களிற்று உரி புனைந்த தம் மேனி குழைந்து காட்டினார் விழைந்த கொள்கையினார் – 4.மும்மை:5 64/3,4

மேல்


மெய் (256)

வெருள் இல் மெய் மொழி வான் நிழல் கூறிய – 0.பாயிரம்:1 9/3
மெய் ஒளி தழைக்கும் தூய்மையினாலும் வெற்றி வெண்குடை அநபாயன் – 1.திருமலை:1 12/3
மெய் தவ_கொடி காண விருப்புடன் – 1.திருமலை:1 32/2
சொற்ற மெய் திருத்தொண்டத்தொகை என – 1.திருமலை:1 38/3
அந்த மெய் பதிகத்து அடியார்களை – 1.திருமலை:1 39/1
செற்றம் நீக்கிய செம்மையின் மெய் மனு – 1.திருமலை:3 15/3
வெம்பிடும் அலறும் சோரும் மெய் நடுக்குற்று வீழும் – 1.திருமலை:3 23/4
மெய் வண்ணம் தெரிந்து உணர்ந்த மனு என்னும் விறல் வேந்தன் – 1.திருமலை:3 39/2
மெய் தழைந்து விதிர்ப்புஉறு சிந்தையார் – 1.திருமலை:4 5/2
மெய் தாயினும் இனியானை அ வியன் நாவலர் பெருமான் – 1.திருமலை:5 74/2
மெய் வளர் கோலம் எல்லாம் பொலிய மிக்க விழு தவ வேந்தர் என்ன – 1.திருமலை:5 130/3
அள்ளுதற்கு அமைந்த பொற்பால் அநங்கன் மெய் தனங்கள் ஈட்டம் – 1.திருமலை:5 136/2
உள்ள மெய் தன்மை முன்னை உண்மையும் தோன்ற உய்ப்பார் – 1.திருமலை:5 136/4
மின் நேர் செம் சடை அண்ணல் மெய் அருள் பெற்று உடையவனோ – 1.திருமலை:5 144/3
சைவ மெய் திருவின் கோலம் தழைப்ப வீதியினை சார்ந்தார் – 1.திருமலை:5 185/4
மெய் அடியார்கட்கு ஆன பணி செயும் விருப்பில் நின்றார் – 2.தில்லை:2 2/2
சைவ மெய் திருவின் சார்வே பொருள் என சாரும் நீரார் – 2.தில்லை:2 2/4
முந்தை நாள் உன்-பால் வைத்த மெய் ஒளி விளங்கும் ஓடு – 2.தில்லை:2 20/3
ஆறு சூடிய ஐயர் மெய் அடிமை அளவு_இலாதது ஓர் உளம் நிறை அருளால் – 2.தில்லை:3 3/1
விதி மண குல மடந்தை இன்று உனை இ மெய் தவர்க்கு நான் கொடுத்தனன் என்ன – 2.தில்லை:3 8/3
மெய் தரு சிந்தையாரை மீளவும் அழைக்கல்உற்றான் – 2.தில்லை:3 28/4
மெய் எல்லாம் நீறு பூசி வேணிகள் முடித்து கட்டி – 2.தில்லை:5 7/1
மெய் தவ வேடமே மெய்ப்பொருள் என தொழுது வென்றார் – 2.தில்லை:5 15/4
மெய் பத்தர்கள்-பால் பரிவுடையார் எம்பிரானார் விறன்மிண்டர் – 2.தில்லை:6 4/4
இழைத்த அன்பினில் இறை திருநீற்று மெய் அடிமை – 2.தில்லை:7 43/1
மெய் மலர் நெருங்கு வாச நந்த வனத்து முன்னி – 3.இலை:1 9/2
மெய் தவர் சென்ற போது வேறு ஒன்றும் புகுதா விட்ட – 3.இலை:1 38/2
நிலைப்பட்ட மெய் உணர்வு நேர்பட்ட போதில் – 3.இலை:2 27/3
காசு உடை வட தோல் கட்டி கவடி மெய் கலன்கள் பூண்டார் – 3.இலை:3 37/2
மெய் வண்ணம் தளர மூப்பின் பருவம் எய்தி வில்_உழவின் பெரு முயற்சி மெலிவன் ஆனான் – 3.இலை:3 43/4
மெய் பொற்பு உடை வேட்டையின் மேல் கொண்டு எழுந்து போந்தார் – 3.இலை:3 67/4
மெய் காட்டும் அன்புடைய வில்லியர் தனி வேட்டை – 3.இலை:3 134/2
மெய் மலரும் அன்பு மேல் விரிந்தன போல் விழுதலால் – 3.இலை:3 160/2
மின் செய்வார் பகழி புண்கள் தீர்க்கும் மெய் மருந்து தேடி – 3.இலை:3 175/3
என்று மெய் தொண்டர்-தம்மை ஏத்தி அங்கு எம்பிரானுக்கு – 3.இலை:4 31/1
உறு கவின் மெய் புறம் பொலிய ஒளி நுசுப்பை முலை வருத்த – 3.இலை:5 15/1
அஞ்சலி மெய் தொண்டரை பார்த்து அணங்கு இவள்-தன் மயிர் நமக்கு – 3.இலை:5 29/3
விழுந்து எழுந்து மெய்மறந்த மெய் அன்பர் தமக்கு மதி – 3.இலை:5 32/1
நெல் அறுத்து மெய் நீடிய அன்பினால் – 3.இலை:6 9/2
மெய் வாழும் புலன் கரணம் மேவிய ஒன்று ஆயினவால் – 3.இலை:7 36/2
மெய் அன்பர் மனத்து அன்பின் விளைந்த இசை குழல் ஓசை – 3.இலை:7 37/1
மெய் வைத்த காலும் தரும் ஞாலம் அளந்த மேன்மை – 4.மும்மை:1 3/3
மெய் பற்று என பற்றி விடாத விருப்பின் மிக்கார் – 4.மும்மை:1 8/4
தாழும் சமண் கையர் தவத்தை மெய் என்று சார்ந்து – 4.மும்மை:1 14/1
நட்டம் புரிவார் அணி நல் திரு மெய் பூச்சு இன்று – 4.மும்மை:1 20/1
மின் ஆம் என நீடிய மெய் நிலையாமை வெல்ல – 4.மும்மை:1 24/4
மெய் வாழ் உலகத்து விரைந்து அணைவார்களே போல் – 4.மும்மை:1 25/2
மெய் வாழ் தரு நூல் அறிவின் மிகு மாந்தர்-தாமும் – 4.மும்மை:1 40/2
மெய் பரிவு சிவன் கழற்கே விளைத்த உணர்வொடும் வந்தார் – 4.மும்மை:4 11/2
மெய் விரவு பேர் அன்பு மிகுதியினால் ஆடுதலும் – 4.மும்மை:4 15/3
மெய் திருத்தொண்டு செய்து விரவுவார் மிக்கு எழுந்த – 4.மும்மை:4 20/2
மெய் திகழ் வெண் நூல் விளங்க வேணி முடி கொண்டு எழுந்தார் – 4.மும்மை:4 32/4
மெய் தரும் புகழ் திரு மயிலாபுரி விரை சூழ் – 4.மும்மை:5 40/1
மெய் வளம் தரு சிறப்பினால் உலகு எலாம் வியப்ப – 4.மும்மை:5 48/2
கொய்த பன் மலர் கம்பை மா நதியில் குலவு மஞ்சனம் நிலவு மெய் பூச – 4.மும்மை:5 60/1
மெய் தரும்படி வேண்டின எல்லாம் வேண்டும் போதினில் உதவ மெய் பூச – 4.மும்மை:5 60/3
மெய் தரும்படி வேண்டின எல்லாம் வேண்டும் போதினில் உதவ மெய் பூச – 4.மும்மை:5 60/3
கம்பர் காதலி தழுவ மெய் குழைய கண்டு நிற்பவும் சரிப்பவும் ஆன – 4.மும்மை:5 65/1
மாது மெய் பயன் கொடுப்பவே கொண்டு வளை தழும்புடன் முலை சுவடு அணிந்தார் – 4.மும்மை:5 66/4
தடைபடாது மெய் நெறி அடைவதற்காம் தவங்களாகவும் உவந்து அருள்செய்தார் – 4.மும்மை:5 70/4
நித்தம் எய்திய ஆயுள் மெய் தவர்கள் நீடு வாழ் திரு பாடியும் அனேகம் – 4.மும்மை:5 82/2
வேண்டினார்கள் தம் பிறப்பினை ஒழிக்கும் மெய் நெறி-கண் நின்றார்கள் தாம் விரும்பி – 4.மும்மை:5 84/2
அன்பு உருகி மெய் பொழிய கண்ணீர் வாரும் அடியவரும் அனைய உள அலகு_இலாத – 4.மும்மை:5 92/4
புண்ணிய மெய் தொண்டர் திரு குறிப்பு அறிந்து போற்று நிலை – 4.மும்மை:5 112/3
மெய் கொண்ட குளிர் குடைந்து விட மாட்டேன் மேல் கடல்-பால் – 4.மும்மை:5 119/2
மேவார் போல் கங்குல் வர மெய் குளிரும் விழுந்தவர் பால் – 4.மும்மை:5 123/3
விழுந்த மழை ஒழியாது மெய் தவர் சொல்லிய எல்லை – 4.மும்மை:5 124/1
மேல் நிறைந்த துணைவியொடும் வெளி நின்றார் மெய் தொண்டர் – 4.மும்மை:5 126/3
பேர் அருளின் மெய் தொண்டர் பித்தன் என பிதற்றுதலால் – 4.மும்மை:5 128/3
மீது சென்று மிகும் பரிவால் வெகுண்டு விலக்கி மெய் உணர்ந்து – 4.மும்மை:6 17/4
மெய் ஒளியின் நிழல் காணும் ஆடி என வெண் மதியை – 5.திருநின்ற:1 9/3
மெய் வளங்கள் ஓங்க வரும் மேன்மையன ஆங்கு அவற்றுள் – 5.திருநின்ற:1 12/2
மின் ஆர் செம்_சடை_அண்ணல் மெய் அடிமை விருப்பு உடையார் – 5.திருநின்ற:1 22/3
வீடு அறியும் நெறி இதுவே என மெய் போல் தங்களுடன் – 5.திருநின்ற:1 38/3
மெய் தருவான் நெறி அடைவார் வெண் புடைவை மெய் சூழ்ந்து – 5.திருநின்ற:1 61/2
மெய் தருவான் நெறி அடைவார் வெண் புடைவை மெய் சூழ்ந்து – 5.திருநின்ற:1 61/2
மெய் தன்மை அறிந்து துதிப்பதுவே மேல் கொண்டு வணங்கினர் மெய்யுறவே – 5.திருநின்ற:1 75/4
மெய் உற்ற திருப்பணி செய்பவராய் விரவும் சிவ சின்னம் விளங்கிடவே – 5.திருநின்ற:1 77/2
மெய் வகை திறம் அறிந்திடில் வேந்தனும் வெகுண்டு – 5.திருநின்ற:1 82/2
ஒப்பு_அரும் ஆழ் கடல் புக்க உறைப்பு உடை மெய் தொண்டர் தாமும் – 5.திருநின்ற:1 125/2
மெய் பெருந்தொண்டனார் விளங்கி தோன்றினார் – 5.திருநின்ற:1 128/4
அருளும் மெய் அஞ்சு_எழுத்து அரசை இ கடல் – 5.திருநின்ற:1 129/3
மெய் தவ குழாம் எலாம் மேவி ஆர்த்து எழ – 5.திருநின்ற:1 132/2
மெய் வண்ண நீற்று ஒளி மேவும் குழாங்கள் விரவி செல்ல – 5.திருநின்ற:1 142/2
வீடு அறியா சமணர் மொழி பொய் என்று மெய் உணர்ந்த – 5.திருநின்ற:1 146/1
ஓலம் பெருகிய நிலை ஏழ் கோபுரம் உற மெய் கொடு தொழுது உள் புக்கார் – 5.திருநின்ற:1 164/4
மெய் தன்மையினில் விருத்த திருமொழி பாடி பின்னையும் மேல்மேலும் – 5.திருநின்ற:1 168/3
மொய்த்து இழி தாரை கண் பொழி நீர் மெய் முழுது ஆர – 5.திருநின்ற:1 238/3
பொங்கு புளகம் எய்திட மெய் பொழியும் கண்ணீர் பரந்து இழிய – 5.திருநின்ற:1 274/2
மெய் ஆர்வமுற தொழுது விருப்பினோடு மேவு நாள் – 5.திருநின்ற:1 325/4
செம் கதிர் கனல் போலும் அ திசை திண்மை மெய் தவர் நண்ணினார் – 5.திருநின்ற:1 356/4
மெய் கலந்து எழு சிந்தை அன்பின் விருப்பு மீமிசை பொங்கிட – 5.திருநின்ற:1 358/2
மெய் புறத்தில் உறுப்பு அழிந்த பின் மெல்ல உந்து முயற்சியும் – 5.திருநின்ற:1 360/3
தேசு உடை சடை மவுலியும் நீறும் மெய் திகழ – 5.திருநின்ற:1 363/2
ஆசு_இல் மெய் தவர் ஆகி நின்றவர்-தமை நோக்கி – 5.திருநின்ற:1 363/3
கொண்டு கை குவித்து எதிர் விழுந்து எழுந்து மெய் குலைய – 5.திருநின்ற:1 380/2
மெய் தன்மை உணர்வு உடைய விழு தவத்து மேலோர்-தம் – 5.திருநின்ற:1 422/3
மின் நிலவும் சடையார்-தம் மெய் அருள் தான் எய்த வரும் – 5.திருநின்ற:1 425/3
மேய தொண்டுக்கு மெய் தொண்டர் ஆயினார் – 5.திருநின்ற:2 9/4
மெய் தன்மையினை உலகு அறிய விதியால் வணங்கி மெய் அடியார் – 5.திருநின்ற:3 4/2
மெய் தன்மையினை உலகு அறிய விதியால் வணங்கி மெய் அடியார் – 5.திருநின்ற:3 4/2
வேதங்கள் மொழிந்த பிரான் மெய் தொண்டர் நிலை கண்டு – 5.திருநின்ற:4 18/1
மெய் வழி அன்று என விளம்பல் விடமாட்டார் விதிர்ப்பு உறுவார் – 5.திருநின்ற:4 27/4
மெய் புகழ் விளங்கும் அ ஊர் விரும்ப ஓர் வணிகன் பெற்ற – 5.திருநின்ற:4 35/3
மெய் விரித்து உரையும் என்ன விளம்புவார் விதிர்ப்புற்று அஞ்சி – 5.திருநின்ற:5 33/4
மெய் பூதி அணிந்தார்-தம்மை விரும்பு சொல்_மாலை வேய்ந்த – 5.திருநின்ற:5 43/2
சீல மெய் திருத்தொண்டரோடு அமுது செய்து அருளி – 5.திருநின்ற:6 29/1
இசை முழுதும் மெய் அறிவும் இடம் கொள்ளும் நிலை பெருக – 6.வம்பறா:1 24/4
மெய் மேல் கண் துளி பனிப்ப வேறு எங்கும் பார்த்து அழுவார் – 6.வம்பறா:1 63/1
உறை என வந்து உலகு அடைய நிறைந்திட ஓவா மெய்
பொறை பெருகும் தவ முனிவர் எனும் கடல் புடைசூழ – 6.வம்பறா:1 82/3,4
மெய் நிறைந்த செம் பொருளாம் வேதத்தின் விழு பொருளை வேணி மீது – 6.வம்பறா:1 102/1
ஆரும் மெய் காதலோடும் பணிவதற்கு அணைந்தார் அன்றே – 6.வம்பறா:1 123/4
மெய் வகை ஞானம் உண்ட வேதியர் விரவி போற்றி – 6.வம்பறா:1 130/2
விரும்பு ஆர்வத்தோடும் ஏத்தி மெய் மொழிகளால் துதித்து – 6.வம்பறா:1 132/3
வெள்ள நீர் சடையாரை அவர் மொழிந்த மெய் பதிகம் – 6.வம்பறா:1 138/2
மெய் மாலை சொல் பதிகம் பாடி விரை கொன்றை – 6.வம்பறா:1 167/2
சண்பை ஆளியார் தாம் கண்ட மெய் அருள் – 6.வம்பறா:1 207/1
மேய சின்னங்கள் கொண்டு மெய் அன்பரோடு – 6.வம்பறா:1 210/3
புணர்ந்த மெய் தவ குழாத்தொடும் போதுவார் முன்னே – 6.வம்பறா:1 223/1
தெருளும் மெய் கலை விளங்கவும் பார் உளோர் சிந்தை – 6.வம்பறா:1 224/1
கண்ட கவுணியர் கன்றும் கருத்தில் பரவு மெய் காதல் – 6.வம்பறா:1 271/1
மெய் தவர் அந்தணர் நீங்கா விடைகொண்டு மீள்வார்கள் மீள – 6.வம்பறா:1 282/2
மன்னு பெரும் பிணியாகும் முயலகன் வந்து அணைவுற மெய் வருத்தம் எய்தி – 6.வம்பறா:1 311/3
மெய் மகிழ்வு எய்தி உளம் குளிர விளங்கிய சொல் தமிழ்_மாலை வேய்ந்து – 6.வம்பறா:1 344/3
மெய் தரும் பரிவிலான் வேள்வியை பாழ்பட – 6.வம்பறா:1 361/2
மெய் விரவு புளகம் உடன் மேதினியின் மிசை தாழ்ந்தார் – 6.வம்பறா:1 393/4
மெய் பயமும் பரிவும் உற பிள்ளையார் கழல் இணை வீழ்ந்து நோக்கி – 6.வம்பறா:1 449/2
பாக்கியத்தின் மெய் வடிவாம் பால் அறா வாயர் பணித்து அருளுகின்றார் – 6.வம்பறா:1 450/4
தன்னில் எழுந்தருளினார் சைவ சிகாமணியார் மெய் தவத்தோர் சூழ – 6.வம்பறா:1 459/4
வெறுத்து உண்டி பிச்சை நுகர் மெய் தொண்டருடன் அணைந்தார் வேத கீதர் – 6.வம்பறா:1 469/4
மெய் தன்மை விளங்கு திரு செவியில் சார மேவுதலும் திரு உள்ள கருணை மேல்மேல் – 6.வம்பறா:1 478/3
திரு புகலூர் திருத்தொண்டரோடும் செம்மை முருகனார் மெய் மகிழ்ந்த – 6.வம்பறா:1 489/1
மேவுற்ற காதல் மிக பெருக விரைந்து எதிர்கொள்ள மெய் அன்பரோடும் – 6.வம்பறா:1 493/3
வந்து இறைஞ்சும் மெய் தொண்டர்-தம் குழாத்து எதிர்வணங்கி – 6.வம்பறா:1 507/1
ஞான வித்தகர் மெய் தவர் சூழ அ நகரார் – 6.வம்பறா:1 508/2
அஞ்சு_எழுத்தின் மெய் உணர்ந்தவர் திரு மடத்து அணைந்தார் – 6.வம்பறா:1 512/4
எங்கும் மெய் தவர் குழாம் எதிர்கொள தொழுது எழுந்தருளி வந்தார் – 6.வம்பறா:1 520/3
சீல மெய் தவர்களும் கூடவே கும்பிடும் செய்கை நேர் நின்று வாய்மை – 6.வம்பறா:1 523/2
உம்பரும் பரவுதற்கு உரிய சொல் பிள்ளையார் உள்ளம் மெய் காதல் கூர – 6.வம்பறா:1 524/3
மெய் பெருமை அந்தணர்கள் வெங்குரு வாழ் வேந்தனார் – 6.வம்பறா:1 539/2
மெய் போத போது அமர்ந்தார் தம் கோயில் மேவினார் – 6.வம்பறா:1 542/3
தே இயலும் மெய் கண்டு சிந்தை வியப்பு எய்தினார் – 6.வம்பறா:1 543/4
மெய் திரு மறைகள் போல மேதினி புக்கு போற்ற – 6.வம்பறா:1 589/2
பெரு மறையுடன் மெய் தொண்டர்க்கு இடையீடு பெரிதாம் அன்றே – 6.வம்பறா:1 592/4
மெய் வகை தெரிந்த வாக்கின் வேந்தர் தாம் துயிலும் போதில் – 6.வம்பறா:1 593/2
கூடு மெய் அன்பு பொங்க இருவரும் கூடி மீண்டு – 6.வம்பறா:1 597/3
மெய் வகை நெறியில் நில்லா வினை அமண் சமயம் மிக்கு – 6.வம்பறா:1 599/3
மெய் வகை அமைச்சனார்க்கும் விளங்கும் நன் நிமித்தம் மேல்மேல் – 6.வம்பறா:1 642/4
பொங்கு காதலின் மெய் மயிர் புளகமும் பொழியும் – 6.வம்பறா:1 666/2
துன்னு மெய் தொண்டர் சூழ வந்து அருளும் அப்பொழுது – 6.வம்பறா:1 674/4
மன் புரக்கும் மெய் முறை வழு என மனம் கொண்டார் – 6.வம்பறா:1 703/4
வேந்தனுக்கு மெய் விதிர்ப்புற வெதுப்புறும் வெம்மை – 6.வம்பறா:1 711/1
காந்து வெம் தழல் கதும்என மெய் எலாம் கவர்ந்து – 6.வம்பறா:1 711/2
மீனவன் செவியின் ஊடு மெய் உணர்வளிப்போர் கூற – 6.வம்பறா:1 721/1
உரை குழறி மெய் நடுங்கி ஒன்றும் அறிந்திலர் ஆகி – 6.வம்பறா:1 730/1
விரைவுறு மெய் அன்பினால் விடாது ஒழிவார்-தமை கண்டு – 6.வம்பறா:1 730/4
மெய் அணி நீற்று தொண்டர் வெள்ளமும் தாமும் போந்து – 6.வம்பறா:1 737/2
மெய் தெரிந்த தர்க்க வாதம் வெல்லலால் ஆவது அன்று வேறு – 6.வம்பறா:1 774/3
நன்மை உய்க்கும் மெய் பதிகத்தின் நாதன் என்று எடுத்தும் – 6.வம்பறா:1 784/1
படு பொருள் இன்றி நெல்லில் பதடி போல் உள் இலார் மெய்
அடுபவர் பொருளை அத்தி நாத்தி என்று எழுதி ஆற்றில் – 6.வம்பறா:1 814/1,2
தேறு மெய் உணர்வு இலாதார் கரை மிசை ஓடி சென்றார் – 6.வம்பறா:1 815/2
நிலவு மெய் நெறி சிவ நெறியது என்பதும் – 6.வம்பறா:1 820/2
இந்த மெய் மொழி பயன் உலகம் இன்புற – 6.வம்பறா:1 821/2
வேத முதல்வன் எனும் மெய் திருப்பாட்டினில் நேர் – 6.வம்பறா:1 840/1
வெறியார் பொழில் சண்பையர் வேந்தர் மெய் பாசுரத்தை – 6.வம்பறா:1 844/1
மீனவற்கு உயிரை நல்கி மெய் நெறி காட்டி மிக்க – 6.வம்பறா:1 859/1
மெய் எலாம் பொழிய வேத முதல்வரை பணிந்து போற்றி – 6.வம்பறா:1 865/2
அருப்புறு மெய் காதல் புரி அடியவர்கள்-தம்மோடும் – 6.வம்பறா:1 882/3
கோது_இல் புகழ் பாண்டிமாதேவியார் மெய் குலச்சிறையார் குறை அறுத்து போற்றி செல்ல – 6.வம்பறா:1 889/3
மெய் படியே கரணங்கள் உயிர்-தாம் இங்கு வேண்டுதியால் நும் இறைவற்கு ஆன போது – 6.வம்பறா:1 920/2
மேவி இனிது அமர்ந்து இறைஞ்சி விருப்புறு மெய் தொண்டரோடு – 6.வம்பறா:1 930/3
முற்றும் மெய் எலாம் புளகங்கள் முகிழ்த்து எழ முகந்து கண் களிகூர – 6.வம்பறா:1 954/1
மெய் பெருந்தொண்டர் மீள்பவர் தமக்கு எலாம் விடைகொடுத்து அருளி போய் – 6.வம்பறா:1 961/3
தொக்க மெய் திருத்தொண்டர் வந்து எதிர்கொள தொழுது எழுந்து அணைவுற்றார் – 6.வம்பறா:1 964/4
வேத பாலகர் பணிந்து மெய் உணர்வுடன் உருகிய விருப்போடும் – 6.வம்பறா:1 965/3
குன்ற வார் சிலை எனும் திருப்பதிகம் மெய் குலவிய இசை பாடி – 6.வம்பறா:1 967/3
சூடினார் மெய் முகிழ்த்தார் சூகரமும் அன்னமுமாய் – 6.வம்பறா:1 996/3
பருகிய மெய் உணர்வினொடும் பரவியே புறத்து அணைந்தார் – 6.வம்பறா:1 997/4
வேலை விடம் உண்டவர் தம் கருணை போற்றி மெய் உருகி திருப்பதிகம் விளம்பல்உற்றார் – 6.வம்பறா:1 1009/4
வீழ்ந்து எழுவார் கும்பிட்ட பயன் காண்பார் போல் மெய் வேடர் பெருமானை கண்டு வீழ்ந்தார் – 6.வம்பறா:1 1022/4
போற்றி மெய் அருள் திறம் பெறு பரிவுடன் வணங்கி – 6.வம்பறா:1 1079/1
அன்ன மெய் திரு வாக்கு எனும் அமுதம் அ அங்கம் – 6.வம்பறா:1 1088/3
தில்லையில் வாழ் அந்தணர் மெய் திருத்தொண்டர் சிறப்பினொடு – 6.வம்பறா:1 1136/2
எங்கணும் மெய் திருத்தொண்டர் மறையவர்கள் ஏனையோர் – 6.வம்பறா:1 1176/1
சந்த மென் மலர் தாது அணி நீறு மெய் தரித்து – 6.வம்பறா:1 1194/1
காதல் மெய் அருள் முன் பெற்று கவுணியர் தலைவர் போந்து – 6.வம்பறா:1 1208/2
புனித மெய் கோல நீடு புகலியார் வேந்தர்-தம்மை – 6.வம்பறா:1 1238/1
காதல் மெய் பதிகம் நல்லூர் பெரு மணம் எடுத்து கண்டோர் – 6.வம்பறா:1 1245/1
பாத மெய் நீழல் சேரும் பருவம் ஈது என்று பாட – 6.வம்பறா:1 1245/4
ஞான மெய் நெறி-தான் யார்க்கும் நமச்சிவாய அ சொலாம் என்று – 6.வம்பறா:1 1248/1
ஆர் திரு மெய் பெரும்பாணர் மற்று எனையோர் அணைந்துளோர் – 6.வம்பறா:1 1250/3
பெருத்து எழும் மெய் அன்பினால் பிரியாது அங்கு உறையும் நாள் – 6.வம்பறா:2 9/4
மெய் வகை விரும்பு தம் பெருமானார் விழு நிதி குவை அளித்து அருள – 6.வம்பறா:2 82/2
இங்கு இவர்-தம்மை மறக்க ஒண்ணாது என்று எழுந்த மெய் குறிப்பினில் எடுப்ப – 6.வம்பறா:2 86/4
உலகு எலாம் உய்ய உறுதி ஆம் பதிகம் உரைத்து மெய் உணர்வு அறா ஒருமை – 6.வம்பறா:2 88/1
மெய் தவர் சூழ வலம்கொண்டு முன்பு மேவுவார் தம் எதிர் விளங்க – 6.வம்பறா:2 89/2
பூண்ட ஐம்புலனில் புலப்படா இன்பம் புணர்ந்து மெய் உணர்வினில் பொங்க – 6.வம்பறா:2 90/2
சேரும் உள்ளம் மிக்கு எழ மெய் பதிகம் பாடி சென்றார் – 6.வம்பறா:2 95/4
மெய் பரம்பொருளாய் உள்ளார் வேதியர் ஆகி நின்றார் – 6.வம்பறா:2 101/3
மேவிய காதல் தொண்டு விரவு மெய் விருத்தி பெற்றார் – 6.வம்பறா:2 110/1
விரவு மெய் அங்கம் ஐந்தும் எட்டினும் வணங்கி வேட்கை – 6.வம்பறா:2 114/2
சாற்றிய மெய் திருப்பதிகம் சிம்மாந்து என்னும் தமிழ்_மாலை புனைந்து ஆங்கு சாரும் நாளில் – 6.வம்பறா:2 117/4
மின் இடையார் சிறு முறுவல் உடன் விளம்ப மெய் உணர்ந்தார் – 6.வம்பறா:2 128/2
மீட்டும் அவர் பரவுதலும் மெய் அன்பர் அன்பில் வரும் – 6.வம்பறா:2 137/1
புரிவுறு மெய் தொண்டர் எதிர்கொள்ள புக்கு அணைந்தார் – 6.வம்பறா:2 143/4
மெய் தகைய திருப்பதிகம் விளம்பியே சென்று அடைந்தார் – 6.வம்பறா:2 163/4
கூடிய மெய் அன்பு உருக கும்பிட்டு புறத்து அணைந்தார் – 6.வம்பறா:2 174/4
மெய் பசியால் மிக வருந்தி இளைத்து இருந்தீர் வேட்கை விட – 6.வம்பறா:2 177/1
வீழ்ந்து போற்றி பரவசமாய் விம்மி எழுந்து மெய் அன்பால் – 6.வம்பறா:2 189/1
மேவிய சீர் ஆரூரர் மெய் சபதம் வினை முடிப்ப – 6.வம்பறா:2 261/1
அழுக்கு மெய் கொடு என்று எடுத்த சொல் பதிகம் ஆதி நீள் புரி அண்ணலை ஓதி – 6.வம்பறா:2 276/1
கூடிய மெய் தொண்டருடன் கும்பிட்டு இனிது அமர்வார் – 6.வம்பறா:2 289/4
தாள் ஆதரிக்கும் மெய் அடியார் தமக்கு ஆம் இடர் நீர் தரியீர் என்று – 6.வம்பறா:2 309/3
சாலும் மெய் கலன்கள் கூட சாத்தும் பூண் ஆடை வர்க்கம் – 6.வம்பறா:2 377/3
நன்று மெய் மகிழ்ந்து போற்றி வணங்கினார் நாவலூரர் – 6.வம்பறா:2 394/4
வவ்விய மெய் உணர்வின் கண் வரும் ஆனந்த கூத்தை – 6.வம்பறா:3 7/3
சைவ நெறி மெய் உணர்ந்தோர் ஆன் இனங்கள் தாமே முன் – 6.வம்பறா:3 16/2
ஈனம் இவர்க்கு அடுத்தது என மெய் தீண்ட அதற்கு இசையார் – 6.வம்பறா:3 17/4
காணும் கண்ணால் காண்பது மெய் தொண்டே ஆன கருத்து உடையார் – 6.வம்பறா:4 2/1
மெய் வகையால் நான்கு ஆகும் விதித்த பொருள் என கொண்டே – 7.வார்கொண்ட:1 5/2
துன்னிய மெய் அன்புடனே எழுந்த வினை தூயவர்க்கு – 7.வார்கொண்ட:1 13/3
வேத காரணர் அடியார் வேண்டிய மெய் பணி செய்ய – 7.வார்கொண்ட:3 12/1
மெய் தன்மை அன்பு நுகர்ந்து அருளுதற்கு விடையவர்-தாம் – 7.வார்கொண்ட:3 25/3
வென்ற தாதையார் தலையை பிடிக்க விரைந்து மெய் தாயார் – 7.வார்கொண்ட:3 62/4
பொருவு_இல் பெருமை புத்திரன் மெய் தன்மை அளித்தான் என பொலிந்து – 7.வார்கொண்ட:3 64/1
மேய விருப்பின் உடன் இருப்ப கழறிற்றறிவார் மெய் தொண்டின் – 7.வார்கொண்ட:4 78/3
மெய் பரிவில் திரு ஆலவாயுடையார் விரை மலர் தாள் – 7.வார்கொண்ட:4 100/3
மெய் கொண்ட காதலினால் விரைந்து ஏகி மென் கரும்பும் – 7.வார்கொண்ட:4 172/3
மெய் பெரும் திருஞான போனகர் கழல் மேவிய விருப்பாலே – 7.வார்கொண்ட:5 5/2
உலகம் உய்ய நஞ்சு உண்டவர் தொண்டினில் உறுதி மெய் உணர்வு எய்தி – 7.வார்கொண்ட:5 7/1
மெய் உணர்வின் பயன் இதுவே என துணிந்து விளங்கி ஒளிர் – 8.பொய்:1 1/2
பெற்றியினில் மெய் அடிமை உடையாராம் பெரும் புலவர் – 8.பொய்:1 2/3
விடு சுடர் மெய் உறை அடுக்கல் முகில் படிய விளங்குதலால் – 8.பொய்:2 5/3
மெய் வகைய வழி அன்பின் மீளாத நிலை பெற்றார் – 8.பொய்:3 8/4
விட நாகம் அணிந்த பிரான் மெய் தொண்டு விளைந்த நிலை – 8.பொய்:3 9/1
இகல் இல் மெய் திருத்தொண்டர் முன் இறைவர் தாம் விடை மேல் – 8.பொய்:4 18/3
புண்ணிய மெய் தொண்டர் செயல் புலப்படுப்பார் அருளாலே – 8.பொய்:6 8/2
தூய திரு விளக்கு எரித்தார் துளக்கு அறு மெய் தொண்டனார் – 9.கறை:1 5/4
மெய் வருந்தி அரிந்து எடுத்து கொடு வந்து விற்கும் புல் – 9.கறை:1 6/2
புகல் அமைத்து தொழுது இருந்தார் புண்ணிய மெய் தொண்டனார் – 9.கறை:4 9/4
தவல்_அரும் அன்பில் தாழ்ந்து தக்க மெய் தொண்டு செய்வார் – 10.கடல்:1 3/2
மெய் வழிபாட்டு அர்ச்சனைகள் விதி வழி மேல்மேல் விளங்க – 10.கடல்:2 5/3
மெய் தவரை கண்டு இருக்கும் வேல் மன்னர் வினவுதலும் – 10.கடல்:2 8/1
மெய் தருவார் நெறி அன்றி வேறு ஒன்றும் மேல் அறியா – 10.கடல்:2 11/3
வேரி மலர்ந்த பூம் கழல் சூழ் மெய் அன்பு உடைய சைவர் என – 10.கடல்:3 2/3
மின் ஆர் செம் சடையார்க்கு மெய் அடிமை தொழில் செய்து – 10.கடல்:4 6/3
கூசியே உடல் கம்பித்திடுவார் மெய் குணம் மிக்கார் – 11.பத்தராய்:1 6/4
ஒன்றிய மெய் உணர்வோடும் உள் உருகி பாடுவார் – 11.பத்தராய்:2 2/3
பூரண மெய் பரஞ்சோதி பொலிந்து இலங்கு நாதாந்த – 11.பத்தராய்:3 1/2
மெய் போத நெறி வந்த விதி முறைமை வழுவாமே – 11.பத்தராய்:5 1/2
முந்த எதிர் அணியாதே அணியும் போது முழுவதும் மெய் புண்டரம் சந்திரனில் பாதி – 11.பத்தராய்:6 5/3
ஆதி வரும் மும்மலமும் அறுத்த வாய்மை அரு முனிவர் முழுவதும் மெய் அணிவர் அன்றே – 11.பத்தராய்:6 6/4
மெய் பெரு மறையோர் எல்லாம் வருக என்று உரைத்தான் வேந்தன் – 12.மன்னிய:1 12/4
மெய் பூம் கழலார் வெளிப்படலும் மிக்க தவத்தோர் வெள்ளானை – 12.மன்னிய:4 2/2
தன் பெரும் பணியாம் என்று தமக்கு மெய் உணர்த்தலாலே – 12.மன்னிய:5 4/2
வீர வெண் களிறு உகைத்து விண் மேல் செலும் மெய் தொண்டர்-தமை கண்டார் – 13.வெள்ளானை:1 35/3

மேல்


மெய்க்கு (1)

பூதி மெய்க்கு அணிந்து வேந்தன் புனிதனாய் உய்ந்த போது – 6.வம்பறா:1 858/1

மேல்


மெய்கள் (1)

கால் கழல் கட்டிய மள்ளர்கள் கைகளின் மெய்கள் அடக்கிய – 3.இலை:2 16/1

மேல்


மெய்ஞ்ஞான (4)

கொங்கில் குட புலம் சென்று அணைந்தார் கோது_இல் மெய்ஞ்ஞான கொழுந்து அனையார் – 6.வம்பறா:1 323/4
மெய்ஞ்ஞான பிள்ளையாருடன் மேவும் பரிசனங்கள் – 6.வம்பறா:1 333/2
அலகு_இல் மெய்ஞ்ஞான தொல்லை அடைவுறும் குறிப்பால் அங்கண் – 6.வம்பறா:1 1243/2
முந்தை உடல் பொறை காணார் முழுது உணர்ந்த மெய்ஞ்ஞான
சிந்தையினில் வந்த செயல் ஆராய்ந்து தெளிகின்றார் – 6.வம்பறா:3 22/3,4

மேல்


மெய்ஞ்ஞானம் (9)

உவமை இலா கலை ஞானம் உணர்வு அரிய மெய்ஞ்ஞானம்
தவ முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில் – 6.வம்பறா:1 70/3,4
தாதையாரையும் வெளியே தாங்க_அரிய மெய்ஞ்ஞானம் தம்-பால் வந்து – 6.வம்பறா:1 100/2
மங்கலமாம் மெய்ஞ்ஞானம் மண் களிப்ப பெற்ற பெரு வார்த்தையாலே – 6.வம்பறா:1 110/1
பொங்கு கொங்கையில் கறந்த மெய்ஞ்ஞானம் ஆம் போனகம் பொன் குன்றம் – 6.வம்பறா:1 154/1
செவ்விய மெய்ஞ்ஞானம் உணர் திருஞானசம்பந்தன் வந்தான் என்றே – 6.வம்பறா:1 313/2
செவ்விய மெய்ஞ்ஞானம் உணர் சிரபுரத்து பிள்ளையார் – 6.வம்பறா:1 393/2
வீழிமிழலையின் வேதியர்கள் கேட்டு மெய்ஞ்ஞானம் உண்டாரை முன்னா – 6.வம்பறா:1 551/3
முற்று மெய்ஞ்ஞானம் பெற்ற மூர்த்தியார் செம் கை பற்ற – 6.வம்பறா:1 1222/1
ஏகமாம் சிவ மெய்ஞ்ஞானம் இசைந்தவர் வல-பால் எய்தி – 6.வம்பறா:1 1237/1

மேல்


மெய்ஞ்ஞானமே (1)

அண்ணலார் தமக்கு அளித்த மெய்ஞ்ஞானமே ஆன அம்பலமும் தம் – 6.வம்பறா:1 160/1

மேல்


மெய்ஞ்ஞீர்மையினில் (1)

மெய்ஞ்ஞீர்மையினில் அன்புருக விரும்பும் தமிழ்_மாலைகள் பாடி – 5.திருநின்ற:1 310/3

மேல்


மெய்த்த (9)

மெய்த்த நெறி வைதிகம் விளைந்த முதலேயோ – 1.திருமலை:5 32/3
மெய்த்த விறல் திண்ணனை உன் மரபில் சால மேம்படவே பெற்று அளித்தாய் விளங்கு மேன்மை – 3.இலை:3 46/3
மெய்த்த ஆகம விதி வழி வேத காரணரை – 5.திருநின்ற:6 6/1
மெய்த்த இசை பதிகங்கள் கொண்டு போற்றி விரை மலர் தாள் மனம் கொண்டு மீண்டு போந்து – 6.வம்பறா:1 267/3
மெய்த்த காதலில் விள நகர் விடையவர் பாதம் – 6.வம்பறா:1 440/3
மெய்த்த காதலின் அவரொடும் புறத்தினில் மேவி – 6.வம்பறா:1 676/2
மெய்த்த நல் திரு ஏட்டினை கழற்றி மெய்மகிழ்ந்து – 6.வம்பறா:1 783/3
மெய்த்த விறல் சின்னங்கள் விலக்கும்-காலை வெகுண்டு எழுந்த திருத்தொண்டர் வெறுத்து நோக்கி – 6.வம்பறா:1 907/2
மெய்த்த நம் பெருமான் பாதம் மேவும் உள்ளத்தால் செய்ய – 6.வம்பறா:1 1239/4

மேல்


மெய்த்திரு (1)

மெய்த்திரு ஞானசம்பந்தர் வாக்கின் வேந்தரை விருப்பினாலே – 6.வம்பறா:1 495/1

மேல்


மெய்த்து (1)

மெய்த்து எழுந்த பெரும் காதல் பிள்ளையார்க்கு விளம்புதலும் அவரும் அது மேவி நேர்வார் – 5.திருநின்ற:1 188/4

மேல்


மெய்ப்படு (3)

மெய்ப்படு மயிர் புளகம் மேவி அறியாமே – 6.வம்பறா:1 27/3
மெய்ப்படு விருப்பொடு மேவு நாள் அரன் – 6.வம்பறா:1 254/2
மெய்ப்படு தீ கனாவும் வேறுவேறு ஆக கண்டு – 6.வம்பறா:1 635/3

மேல்


மெய்ப்பொருட்கு (1)

மெய்ப்பொருட்கு உரியார் கொள்வர் மேன்மை-ஆல் – 0.பாயிரம்:1 7/4

மேல்


மெய்ப்பொருள் (17)

வெள்ள நீர் சடை மெய்ப்பொருள் ஆகிய – 1.திருமலை:1 21/2
மெய்ப்பொருள் சேதி வேந்தன் செயலினை விளம்பல்உற்றேன் – 2.தில்லை:4 27/4
மெய்ப்பொருள் வேந்தன் சீலம் அறிந்து வெண் நீறு சாத்தும் – 2.தில்லை:5 6/2
மெய் தவ வேடமே மெய்ப்பொருள் என தொழுது வென்றார் – 2.தில்லை:5 15/4
மெய்ப்பொருள் தொண்டர் மூப்பால் விரைந்து பின் செல்ல மாட்டார் – 3.இலை:1 15/2
மெய்ப்பொருள் ஆனார் அருளி அம்பலத்தே மேவினார் – 4.மும்மை:4 28/4
மெய்ப்பொருள் தேர் நாவினுக்கு வேந்தர் தாம் மேவினார் – 5.திருநின்ற:1 200/3
மெய்ப்பொருள் ஞானம் பெற்றவர் வேணுபுரத்து எங்கள் – 5.திருநின்ற:1 241/3
மெய்ப்பொருள் ஆனார் தம்மை விடைகொண்டு வணங்கி போந்து – 5.திருநின்ற:4 62/2
ஆய்ந்த மெய்ப்பொருள் நீறு என வளர்க்கும் அ காப்பில் – 5.திருநின்ற:6 3/1
தூய்மை திருநீற்று அடைவே மெய்ப்பொருள் என்று அறியும் துணிவினார் – 5.திருநின்ற:7 5/2
மெய்ப்பொருள் ஆயினாரை வெண்காடு மேவினாரை – 6.வம்பறா:1 126/1
துணிந்த மெய்ப்பொருள் ஆனவர்-தமை கண்டு துதிப்பார் – 6.வம்பறா:1 511/3
மெய்ப்பொருள் வண் தமிழ் பாடி அருளும் என்ன விளங்கு மொழி வேந்தர் அது மேற்கொண்டு என்னை – 6.வம்பறா:1 581/3
சாற்றும் மெய்ப்பொருள் தரும் திருமுறையினை தாமே – 6.வம்பறா:1 782/1
மெய்ப்பொருள் வண் தமிழ் மலை விளம்பிய மீண்டு அணைந்தார் – 6.வம்பறா:2 151/4
மெய்ப்பொருள் ஆவன ஈசர் கழல் என்னும் விருப்பு உடையார் – 9.கறை:1 2/4

மேல்


மெய்ப்பொருளாம் (1)

மன்னும் மெய்ப்பொருளாம் என காட்டிட வன்னி – 6.வம்பறா:1 784/3

மேல்


மெய்ப்பொருளின் (2)

வேத வளத்தின் மெய்ப்பொருளின் அருளால் விளங்கும் மணி கதவம் – 5.திருநின்ற:1 269/1
நீடு மெய்ப்பொருளின் உண்மை நிலை பெறும் தன்மை எல்லாம் – 6.வம்பறா:1 796/1

மேல்


மெய்ப்பொருளை (2)

மெய்ப்பொருளை அறிந்து உணர்ந்தார் விழுமிய வேளாண் குடிமை – 3.இலை:5 7/3
விண்ணவர் போற்றி செய் ஆனைக்காவில் வெண் நாவல் மேவிய மெய்ப்பொருளை
நண்ணி இறைஞ்சி முன் வீழ்ந்து எழுந்து நால் கோட்டு நாகம் பணிந்ததுவும் – 6.வம்பறா:1 345/1,2

மேல்


மெய்ம்மறந்து (1)

மெய்ம்மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர்-தான் – 5.திருநின்ற:4 25/2

மேல்


மெய்ம்மை (27)

நற்றமிழ் நாவலர் கோன் உடம்பால் நன்மையின் தன்மையை மெய்ம்மை பெற்றார் – 1.திருமலை:5 125/4
மெய்ம்மை பொருளாம் தமிழ் நூலின் விளங்கு வாய்மை – 4.மும்மை:1 7/2
விடை மேல் வருவார்க்கு ஆளான மெய்ம்மை தவத்தால் அவர் கற்றை – 4.மும்மை:2 6/3
மெய்ம்மை ஒழுக்கம் ஏழு உலகும் போற்றும் மறையோர் விளங்குவது – 4.மும்மை:6 2/4
நடமே புரியும் சேவடியார் நம்மை உடையார் என்றும் மெய்ம்மை
உடனே தோன்றும் உணர்வின் கண் ஒழியாது ஊறும் வழி அன்பின் – 4.மும்மை:6 16/1,2
மெய்ம்மை பணி செய்த விருப்பு-அதனால் விண்ணோர் தனி நாயகனார் கழலில் – 5.திருநின்ற:1 78/1
அந்நாள் மறையோர் திருப்பதியில் இருந்தார் மெய்ம்மை அரும் தவர்கள் – 5.திருநின்ற:1 254/4
வேடம் அவர் முன் மறைத்தலுமே மெய்ம்மை தவத்து மேலவர்-தாம் – 5.திருநின்ற:1 309/2
மெய்ம்மை நிலை வழுவாத வேளாள விழு குடிமை – 5.திருநின்ற:1 341/3
மெய்ம்மை மொழி திருப்பதிகம் பிரமபுரம் மேவினார் – 6.வம்பறா:1 76/2
உம்பரும் வணங்கும் மெய்ம்மை உயர் தவ தொண்டரோடு – 6.வம்பறா:1 117/3
மெய்ம்மை போற்றி விடாத விருப்பினால் – 6.வம்பறா:1 213/1
மெய்ம்மை விளங்கும் திருப்பதிகம் பாடி மகிழ்ந்தனர் வேத வாயர் – 6.வம்பறா:1 557/4
குன்று என நின்ற மெய்ம்மை குலச்சிறையார்-தமக்கும் – 6.வம்பறா:1 612/3
வென்றிடில் பொருள் கருத்து மெய்ம்மை ஆவது என்றிரேல் – 6.வம்பறா:1 778/3
என்னினும் உடையோம் மெய்ம்மை இனி ஒன்று காண்பது என்றார் – 6.வம்பறா:1 794/4
மெய்ம்மை ஆகி விளங்கு ஒளி தாம் என – 6.வம்பறா:1 830/2
மங்கையர்க்கு நாயகியார் தாமும் மெய்ம்மை மந்திரியாரும் சூழ் மணி நீள் வாயில் – 6.வம்பறா:1 888/2
நீடு காஞ்சி வாணரும் நிலவு மெய்ம்மை அன்பரும் – 6.வம்பறா:1 986/1
உள்ளத்தில் தெளிகின்ற அன்பின் மெய்ம்மை உருவினையும் அ அன்பின் உள்ளே மன்னும் – 6.வம்பறா:1 1023/1
அருமையான் முன் செய் மெய்ம்மை அரும் தவ மனைவியாரும் – 6.வம்பறா:1 1232/2
மெய்ம்மை புராணம் பலவும் மிக சிறப்பித்து இசையின் விளம்பினார் – 6.வம்பறா:2 67/4
மெய்ம்மை வார்த்தை தாம் அவர்-பால் விட்டார் வந்து கட்டு உரைப்ப – 6.வம்பறா:2 314/3
நம்பர்-தாம் அதனை கேட்டு நகையும் உள் கொண்டு மெய்ம்மை
தம் பரிசு அறிய காட்டார் தனி பெரும் தோழனார்-தம் – 6.வம்பறா:2 346/1,2
மெய்ம்மை புரி செயல் விளங்க வேண்டியவாறே சரித்து – 7.வார்கொண்ட:3 10/3
அந்தம்_இலா அரன் அங்கி ஆறு மெய்ம்மை அறிவித்த குரு நன்மை அல்லா பூமி – 11.பத்தராய்:6 5/2
மாசு_இல் வெண்மை சேர் பேர் ஒளி உலகு எலாம் மலர்ந்திட வளர் மெய்ம்மை
ஆசு_இல் அன்பர்-தம் சிந்தை போல் விளங்கிய அணி கிளர் மணி வாயில் – 13.வெள்ளானை:1 40/1,2

மேல்


மெய்ம்மையில் (1)

மெய்ம்மையில் விளங்கு காதல் விருப்புறு வெள்ளம் ஓங்கி – 6.வம்பறா:1 644/2

மேல்


மெய்ம்மையும் (1)

சொற்ற மெய்ம்மையும் தூக்கி அ சொல்லையே காக்க – 4.மும்மை:5 3/3

மேல்


மெய்ம்மையே (2)

மெய்ம்மையே செயும் விருப்புடன் மிக்கது ஓர் அன்பால் – 6.வம்பறா:1 1035/2
மெய்ம்மையே புரி அதிபத்தர் விளங்கும் தாள் வணங்கி – 8.பொய்:4 20/2

மேல்


மெய்மகிழ்ந்து (1)

மெய்த்த நல் திரு ஏட்டினை கழற்றி மெய்மகிழ்ந்து
கைத்தலத்திடை கொண்டனர் கவுணியர் தலைவர் – 6.வம்பறா:1 783/3,4

மேல்


மெய்மறந்த (1)

விழுந்து எழுந்து மெய்மறந்த மெய் அன்பர் தமக்கு மதி – 3.இலை:5 32/1

மேல்


மெய்மை (3)

விரவு புகலூர் முருகனார் மெய்மை தொண்டின் திறம் போற்றி – 4.மும்மை:2 14/2
மெய்மை சிவனார் பூசனையை விரும்பும் வேட்கை விரைந்து எழலும் – 4.மும்மை:6 31/4
பாக்கிய பயனாய் உள்ள பால் அறா வாயர் மெய்மை
நோக்கி வண் தமிழ் செய் மாலை பதிகம் தான் நுவலல் உற்றார் – 6.வம்பறா:1 738/3,4

மேல்


மெய்மையாம் (1)

மெய்மையாம் விருப்பினோடும் மேவி உள் புகுந்து மிக்க – 6.வம்பறா:2 400/3

மேல்


மெய்மையின் (1)

வெவ் விலங்கு உள என்று அஞ்சி மெய்மையின் வேறு கொள்ளா – 3.இலை:3 127/2

மேல்


மெய்யர் (2)

விசயமங்கையின் இடம் அகன்று மெய்யர் தாள் – 6.வம்பறா:1 240/1
மேயின மெய்யர் ஆகி விதிர்ப்புற்று விரைவின் வீழ்ந்தார் – 6.வம்பறா:1 584/4

மேல்


மெய்யருள் (1)

மெய்யருள் உடைய தொண்டர் செய் வினை விளம்பல் உற்றாம் – 10.கடல்:1 13/4

மேல்


மெய்யனே (1)

மெய்யனே என்று வீடல் ஆலவாய் விளம்பல் உற்றார் – 6.வம்பறா:1 865/4

மேல்


மெய்யான (1)

மென் புல்லும் விளக்கு எரிக்க போதாமை மெய்யான
அன்பு புரிவார் அடுத்த விளக்கு தம் திரு முடியை – 9.கறை:1 7/2,3

மேல்


மெய்யில் (6)

மெய்யில் ஆனந்த வாரி விரவிட – 1.திருமலை:1 18/2
மேவி தலம் உற மெய்யில் தொழுத பின் மேல்மேல் எழுதரும் விரைவோடும் – 5.திருநின்ற:1 157/2
மெய்யில் வழியும் கண் அருவி விரவ பரவும் சொல்_மாலை – 5.திருநின்ற:1 253/2
மேல் நெறி உணர்வு கூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில்
ஊன் அடை வனப்பை எல்லாம் உதறி எற்பு உடம்பே ஆக – 5.திருநின்ற:4 50/2,3
துன்னிய அழுக்கு மெய்யில் தூசு இலார் பலரும் ஈண்டி – 6.வம்பறா:1 636/3
வேதியர் தலைவர் மீண்டும் மெய்யில் வெண்பொடியும் பாட – 6.வம்பறா:2 106/4

மேல்


மெய்யின் (3)

மெய்யின் வெண் புரி நூலுடன் விளங்கும் மான் தோலும் – 2.தில்லை:7 7/3
வாயின் இன் மெய்யின் வழுத்து மனத்தின் வினை பாலில் – 3.இலை:7 9/3
வேந்தன் அது கண்டு அப்பொழுதே விழித்து மெய்யின் மயிர் முகிழ்ப்ப – 6.வம்பறா:4 15/1

மேல்


மெய்யினால் (2)

செல்வம் மேவிய நாளில் இ செயல் செய்வது அன்றியும் மெய்யினால்
அல்லல் நல்குரவு ஆன போதினும் வல்லர் என்று அறிவிக்கவே – 2.தில்லை:4 6/1,2
மெய்யினால் செய்த வீர திருத்தொண்டர் – 8.பொய்:7 6/2

மேல்


மெய்யினில் (1)

மெய்யினில் துவளும் நூலும் நெற்றியில் விளங்கும் நீறும் – 1.திருமலை:5 185/2

மேல்


மெய்யுடன் (1)

எல்லை_இலா மறை முதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை – 6.வம்பறா:1 75/1

மேல்


மெய்யும் (4)

மெய்யும் தரை மிசை விழும் முன்பு எழுதரும் மின் தாழ் சடையொடு – 5.திருநின்ற:1 167/3
பொய்யும் மெய்யும் ஆம் என்னும் பொருள் மேற்கொள்ளும் புரை நெறியார் – 5.திருநின்ற:7 10/4
மற்றவர்கள் நிலைமையையும் புத்தநந்தி வாக்கின் போர் ஏற்றவன்-தன் தலையும் மெய்யும்
அற்று விழ அத்திர வாக்கு-அதனால் அன்பர் அறுத்ததுவும் கண்ட அரசன் அடியார் எல்லாம் – 6.வம்பறா:1 910/1,2
மெய்யும் முகிழ்ப்ப கண் பொழி நீர் வெள்ளம் பரப்ப விம்முவார் – 6.வம்பறா:2 75/4

மேல்


மெய்யுற (2)

வேண்டுவ இரந்து கூறி மெய்யுற அணையும் போதில் – 2.தில்லை:2 6/3
உரைத்து மெய்யுற பணிந்து போந்து உலவும் அ நதியின் – 6.வம்பறா:1 436/3

மேல்


மெய்யுறவே (1)

மெய் தன்மை அறிந்து துதிப்பதுவே மேல் கொண்டு வணங்கினர் மெய்யுறவே – 5.திருநின்ற:1 75/4

மேல்


மெய்யுறாமல் (1)

பொற்புற மெய்யுறாமல் பொருந்துவ போற்றி செய்ய – 2.தில்லை:2 8/2

மேல்


மெய்யுறு (2)

மெய்யுறு நடுக்கத்தோடு மிக்கு எழும் மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:2 363/3
உளம் மன்னிய மெய்யுறு துயரம் ஒன்றும் ஒழியா வகை அகற்றி – 7.வார்கொண்ட:4 40/2

மேல்


மெய்யை (1)

பொய்யினால் மெய்யை ஆக்க புகுந்த நீர் போம்-மின் என்றான் – 6.வம்பறா:1 792/4

மேல்


மெல் (25)

விரவு பெரும் காதலினால் மெல் இயலார்-தமை வேண்டி – 1.திருமலை:5 150/3
பஞ்சின் மெல் அடி பாவையர் உள்ளமும் – 1.திருமலை:5 159/1
மின் தயங்கு நுண் இடையாள் வெவ் உயிர்த்து மெல் அணை மேல் வீழ்ந்த போது – 1.திருமலை:5 172/4
நாதனே அமுது செய்ய நல்ல மெல் இறைச்சி நானே – 3.இலை:3 112/3
புனித மெல் இறைச்சி நல்ல போனகம் ஒரு கை ஏந்தி – 3.இலை:3 122/2
கோப்பு அமை கிண்கிணி அசைய குறும் தளிர் மெல் அடி ஒதுங்கி – 3.இலை:5 13/4
பொன்னின் அரி மெல் அணை சாமரை காமர் பூம் கால் – 4.மும்மை:1 44/3
கூர் உகிர் மெல் அடி அலகின் குறும் பார்ப்பு குழு சுழலும் – 4.மும்மை:4 7/1
கொல்லை மெல் இணர் குருந்தின் மேல் படர்ந்த பூம் பந்தர் – 4.மும்மை:5 16/3
சாயன் மெல் இடை அளத்தியர் அளப்பன தரளம் – 4.மும்மை:5 34/4
அணி கிளர் மெல் அடி தளர்வுற்று அசையும் நடை பருவத்தே – 5.திருநின்ற:4 3/2
பஞ்சின் மெல் அணை பள்ளியில் பள்ளிகொள்கின்றார் – 5.திருநின்ற:6 17/4
பந்து அணை மெல் விரலாளும் பரமரும் பாய் விடை மீது – 6.வம்பறா:1 268/1
எ உயிர்க்கும் அவன் கேளா மெல்_இயலை விட்டு எதிரே விரைந்து செல்வான் – 6.வம்பறா:1 313/4
அன்ன மெல் நடையினாரும் அணி மணி சிவிகை ஏறி – 6.வம்பறா:1 725/2
பாடக மெல் அடி எடுத்து பாடி நின்று பரவினார் கண் அருவி பரந்து பாய – 6.வம்பறா:1 902/4
மழலை மெல் கிளி குலம் என மனையிடை ஆடி – 6.வம்பறா:1 1047/4
பெரும் தடம் கண் மெல் கொடிஅனாள் தலை மிசை பிறங்கி – 6.வம்பறா:1 1061/3
நஞ்சு சூழ்வன நயனியர் நளின மெல் அடி செம் – 6.வம்பறா:2 2/3
வண்டு மருவும் திரு மலர் மெல் மாலை காலங்களுக்கு ஏற்ப – 6.வம்பறா:2 223/3
பஞ்சி அஞ்சும் மெல் அடியார் பரிந்து திரு மஞ்சனம் ஆட்டி – 7.வார்கொண்ட:3 60/3
விடையில் வருவார் தொண்டர்-தாம் விரைந்து சென்று மெல் மலரின் – 7.வார்கொண்ட:3 67/3
விரை செறி மலர் மென் கூந்தல் உரிமை மெல் இயலார்-தம்முள் – 10.கடல்:1 4/3
பந்து அணையும் மெல் விரலாள் பாகத்தார் திரு பாதம் – 10.கடல்:4 7/1
அலத்த மெல் அடி கமலினியாருடன் அனிந்திதையார் ஆகி – 13.வெள்ளானை:1 50/3

மேல்


மெல்_இயலை (1)

எ உயிர்க்கும் அவன் கேளா மெல்_இயலை விட்டு எதிரே விரைந்து செல்வான் – 6.வம்பறா:1 313/4

மேல்


மெல்ல (4)

வேறு ஒருவர் உடன் பேசாள் மெல்ல அடி ஒதுங்கி மாளிகையின் மேலால் – 1.திருமலை:5 170/2
மல்லல் நீடிய செல்வம் மெல்ல மறைந்து நாள்-தொறும் மாறி வந்து – 2.தில்லை:4 6/3
வெற்றி கொள் வேட்டை காடு குறுகுவோம் மெல்ல என்றார் – 3.இலை:3 93/4
மெய் புறத்தில் உறுப்பு அழிந்த பின் மெல்ல உந்து முயற்சியும் – 5.திருநின்ற:1 360/3

மேல்


மெல்லியர் (1)

எம் பிராட்டிக்கு மெல்லியர் ஆனார் என்றும் ஏகம்பர் என்று எடுத்து ஏத்த – 4.மும்மை:5 65/3

மேல்


மெல்லியல்-தன் (1)

மின் ஆரும் கொடி மருங்குல் பரவை எனும் மெல்லியல்-தன்
பொன் ஆரும் முலை ஓங்கல் புணர் குவடே சார்வு ஆக – 1.திருமலை:5 181/2,3

மேல்


மெல்லியலார் (1)

மீது தோன்றி அ மெல்லியலார் உடன் – 1.திருமலை:1 27/3

மேல்


மெல்லியலுக்கு (1)

விண் கொள்ளா பேர் ஒளியான் எதிர் நோக்கும் மெல்லியலுக்கு
எண்_கொள்ளா காதலின் முன்பு எய்தாதது ஒரு வேட்கை – 1.திருமலை:5 143/2,3

மேல்


மெலிந்து (1)

ஆதுலர் ஆய் மெலிந்து மிக அழுக்கு அடைந்த கந்தையுடன் – 4.மும்மை:5 116/2

மேல்


மெலிவன் (1)

மெய் வண்ணம் தளர மூப்பின் பருவம் எய்தி வில்_உழவின் பெரு முயற்சி மெலிவன் ஆனான் – 3.இலை:3 43/4

மேல்


மெலிவாரும் (1)

நலிவாரும் மெலிவாரும் உணர்வு ஒன்றாய் நயத்தலினால் – 3.இலை:7 34/1

மேல்


மெலிவித்தும் (1)

தந்திரிகள் மெலிவித்தும் சமம் கொண்டும் வலிவித்தும் – 3.இலை:7 27/2

மேல்


மெலிவு (1)

உடையானை உடையானே தகுமோ இந்த ஒள்_இழையார் உள் மெலிவு என்று எடுத்து பாட – 6.வம்பறா:1 482/4

மேல்


மெழுக்கிட்டு (1)

நலம் மலி ஆன் சாணத்தால் நன்கு திரு மெழுக்கிட்டு
மலர் கொய்து கொடு வந்து மாலைகளும் தொடுத்து அமைத்து – 5.திருநின்ற:1 44/2,3

மேல்


மெழுக்கு (2)

திரு மஞ்சனமும் கொணர்ந்து திரு அலகும் இட்டு திரு மெழுக்கு
வரும் அன்புடன் இன்புற சாத்தி மற்றும் உள்ள திருப்பணிகள் – 7.வார்கொண்ட:4 9/1,2
அல்லும் நண்பகலும் திரு அலகிட்டு திரு மெழுக்கு அமைப்போர் – 7.வார்கொண்ட:5 3/3

மேல்


மெழுக்கும் (1)

சீறடியார் திரு அலகும் திரு மெழுக்கும் தோண்டியும் கொண்டு – 5.திருநின்ற:1 68/3

மேல்


மெழுக்குஉற (1)

வினை வாய்ந்த தழல் வேதி மெழுக்குஉற வெண் சுதை ஒழுக்கும் – 6.வம்பறா:1 10/2

மேல்


மென் (116)

ஆடும் மென் கழங்கும் பந்தும் அம்மனை ஊசல் இன்ன – 1.திருமலை:5 135/2
சீர் பரவை ஆயினாள் திரு உருவின் மென் சாயல் – 1.திருமலை:5 148/3
எய்து மென் பெடையோடு இரை தேர்ந்து உண்டு – 1.திருமலை:5 158/1
கந்தம் கமழ் மென் குழலீர் இது என் கலை வாள் மதியம் கனல்வான் எனை இ – 1.திருமலை:5 175/1
பூண் தயங்கு இள மென் சாயல் பொன் கொடி அனையார்-தம்மை – 2.தில்லை:2 6/2
விறல் உடை தொண்டனாரும் வெண் நகை செவ்வாய் மென் தோள் – 2.தில்லை:2 43/1
ஈரம் மென் மதுர பதம் பரிவு எய்த முன்னுரை செய்த பின் – 2.தில்லை:4 3/4
மன்றல் அம் குழல் மென் சாயல் மா தேவி இருப்ப கண்டான் – 2.தில்லை:5 10/4
வாரி சொரியும் கதிர் முத்தும் வயல் மென் கரும்பில் படு முத்தும் – 2.தில்லை:6 2/1
பலவும் மென் துகில் பட்டுடன் இடஇட உயர – 2.தில்லை:7 34/3
வேழ கரும்பினோடு மென் கரும்பு தண் வயலில் – 3.இலை:2 2/1
வண்ண மென் பவள செவ் வாய் குதட்டியே வளரா நின்றார் – 3.இலை:3 22/4
மொய் வரை தினை மென் சோறு மூங்கில் வன் பதங்கள் மற்றும் – 3.இலை:3 34/2
மென் தசையும் ஈயலொடு நறவும் வெற்பில் விளை வளனும் வேண்டிற்று எல்லாம் – 3.இலை:3 49/3
அருப்புறும் மென் மலர் முன்னை அவை நீக்கும் ஆதரவால் – 3.இலை:3 158/2
தண்ணீர் மென் கழுநீர்க்கு தடம் சாலி தலை வணங்கும் – 3.இலை:5 2/3
யாப்புறும் மென் சிறு மணி மேகலை அணி சிற்றாடையுடன் – 3.இலை:5 13/3
புனை மலர் மென் கரங்களினால் போற்றிய தாதியர் நடுவண் – 3.இலை:5 14/1
நறு முகை மென் கொடி மருங்குல் நளிர் சுருள் அம் தளிர் செம் கை – 3.இலை:5 15/3
விரும்பு மென் கண் உடையவாய் விட்டு நீள் – 3.இலை:6 1/3
அன்பு போல் தூய செந்நெல் அரிசி மாவடு மென் கீரை – 3.இலை:6 14/2
மேவி உறங்குவ மென் சிறை வண்டு விரை கஞ்ச – 3.இலை:7 2/2
தூ நறு மென் புல் அருந்தி விரும்பிய தூ நீர் உண்டு – 3.இலை:7 10/3
புன் தலை மென் சிலை ஆனொடு நீடு புனிற்று ஆவும் – 3.இலை:7 11/2
பாசிலை மென் கொடியின் வடம் பயில நறுவிலி புனைந்து – 3.இலை:7 15/3
கர மலரின் அமுது ஊட்டும் கனி வாய் மென் கிள்ளையுடன் – 3.இலை:7 33/2
நண்ணும் இசை தேர் மது கரங்கள் நனை மென் சினையின் மருங்கு அலைய – 4.மும்மை:2 3/1
தண்ணென் சோலை எம்மருங்கும் சாரும் மட மென் சாரிகையின் – 4.மும்மை:2 3/3
பிரச மென் சுரும்பு அறைந்திட கரு வரால் பிறழும் – 4.மும்மை:3 5/2
ஆர் சிறு மென் குரைப்பு அடக்கும் அரைக்கு அசைத்த இருப்பு மணி – 4.மும்மை:4 7/4
தன் சினை மென் பெடை ஒடுங்கும் தடம் குழிசி புதை நீழல் – 4.மும்மை:4 8/2
மென் சினைய வஞ்சிகளும் விசி பறை தூங்கு இன மாவும் – 4.மும்மை:4 8/3
மழலை மென் கிளி மருது அமர் சேக்கைய மருதம் – 4.மும்மை:5 10/3
முல்லை மென் புதல் முயல் உகைத்து தடங்கு நீள் முல்லை – 4.மும்மை:5 16/4
வாச மென் மலர் மல்கிய முல்லை சூழ் மருதம் – 4.மும்மை:5 20/1
தாம் அரும் கிளையுடன் தட மென் மலர் மிலைந்து – 4.மும்மை:5 33/2
தேம் பொதிந்த சில் மழலை மென் மொழிய செவ்வழி யாழ் – 4.மும்மை:5 38/4
கோடு கொண்டு எழும் திரை கடல் பவள மென் கொழுந்து – 4.மும்மை:5 41/1
பாளை உக்கவும் விரவலில் பரத்தியர் பணை மென்
தோளும் உழத்தியர் மகளிர் மாறு ஆடி முன் தொகுக்கும் – 4.மும்மை:5 46/2,3
கொம்பனார்கள் பூம் பிடகை கொண்டு அணைய குலவு மென் தளிர் அடி இணை ஒதுங்கி – 4.மும்மை:5 59/3
தண் காஞ்சி மென் சினை பூம் கொம்பர் ஆடல் சார்ந்து அசைய அதன் மருங்கு சுரும்பு தாழ்ந்து – 4.மும்மை:5 86/1
பாகம் மருங்கு இரு புடையும் உயர்ந்து நீண்ட படர் ஒளி மாளிகை நிரைகள் பயில் மென் கூந்தல் – 4.மும்மை:5 90/1
நடையில் படர் மென் கொடி மௌவல் நனையில் திகழும் சினை காஞ்சி – 4.மும்மை:6 7/4
முன்பு போல மணல் கோயில் ஆக்கி முகை மென் மலர் கொய்து – 4.மும்மை:6 46/2
வாச மலர் மென் கழல் வணங்க வந்த பிறப்பை வணங்குவாம் – 4.மும்மை:6 60/4
வெயில் கதிர் மென் குழை மகளிர் விரவிய மாடமும் மேவி – 5.திருநின்ற:1 10/3
வண் தமிழ் மென் மலர் மாலை புனைந்து அருளி மருங்கு உள்ள – 5.திருநின்ற:1 155/1
சிவ முன் பயில் மொழி பகர்கின்றன வளர் சிறை மென் கிளியொடு சிறு பூவை – 5.திருநின்ற:1 160/4
நனை சினை மென் குளிர் ஞாழல் பொழில் ஊடு வழி கொண்டு நண்ணும் போதில் – 5.திருநின்ற:1 174/2
வார் திகழ் மென் முலையான் ஒரு பாகன் திருமருகல் – 5.திருநின்ற:1 240/3
சீத மலர் மென் சோலை சூழ் திருவோத்தூரில் சென்று அடைந்தார் – 5.திருநின்ற:1 315/4
வம்பு அலர் மென் பூம் கமல வாவியினில் புக எறிந்தார் – 5.திருநின்ற:1 417/4
உற்பலம் மென் முகிழ் விரல் வட்டணையோடும் கை பெயர – 5.திருநின்ற:1 420/2
கடி மலர் மென் சேவடிகள் கைதொழுது குலச்சிறையார் – 5.திருநின்ற:1 429/3
மயிலை புறம் கொள் மென் சாயல் மகளிர் கிளவி யாழினொடும் – 5.திருநின்ற:3 11/3
தளிர் அடி மென் நகை மயிலை தாது அவிழ் தார் காளைக்கு – 5.திருநின்ற:4 11/3
வாய்ப்புறு மென் சுவை அடிசில் மாங்கனியோடு இனிது அருந்தி – 5.திருநின்ற:4 21/3
பூ பயில் மென் குழல் மடவார் செயல் உவந்து போயினார் – 5.திருநின்ற:4 21/4
அறல் இயல் நறும் மென் கூந்தல் அணங்கனார் திறத்தில் அற்றம் – 5.திருநின்ற:4 36/2
மென் மலர் தடம் படிய மற்றவருடன் விரவி – 5.திருநின்ற:6 2/2
துணர் மென் கமலம் இடைஇடையே சுடர் விட்டு எழுந்து தோன்றுவன – 5.திருநின்ற:7 3/2
தேம் மரு மென் சுரும்பு இசையால் செழும் சாமம் பாடும்-ஆல் – 6.வம்பறா:1 9/4
உளர் கரு மென் சுருள் குஞ்சியுடன் அலைய செந்நின்று – 6.வம்பறா:1 50/2
மா அணை மலர் மென் சோலை வளம் பதி கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 118/4
கலவ மென் மயில் இனம் களித்து தழைத்திட கடி மண குளிர் கால் வந்து – 6.வம்பறா:1 149/1
மலர் முகம் பொலிந்து அசைய மென் கொம்பர் நின்று ஆடுவ மலர் சோலை – 6.வம்பறா:1 149/4
அரும்பு மென் மலர் தளிர் பல மூலம் என்று அனைத்தின் ஆகரம் ஆன – 6.வம்பறா:1 153/2
கண் வளர் மென் கரும்பு மிடை கதிர் செம் சாலி கதலி கமுகு உடன் ஓங்கும் கழனி நாட்டு – 6.வம்பறா:1 256/3
புடை வளர் மென் கரும்பினொடு பூகம் இடை மழபாடி போற்ற சென்றார் – 6.வம்பறா:1 305/4
அ நகரில் கொல்லி மழவன் பயந்த அரும் பெறல் ஆர் அமுத மென் சொல் – 6.வம்பறா:1 311/1
மன்னும் கவுணியர் போற்றி நிற்க மழவன் பயந்த மழலை மென் சொல் – 6.வம்பறா:1 319/2
கொய் தளிர் மென் சோலைகளும் குலைந்து அசைய குளிர்க்கு ஒதுங்கி – 6.வம்பறா:1 330/2
தோடு அலர் மென் குழல் மடவார் துணை கலச வெம் முலையுள் – 6.வம்பறா:1 331/3
விரி மலர் மென் புறவு அணிந்த மீப்புலத்து வைப்பு எல்லாம் – 6.வம்பறா:1 332/4
பிறை அணிந்தவர் அருள் பெற பிரச மென் மலர் வண்டு – 6.வம்பறா:1 378/3
பண்பு நீடிய வாச மென் மலர் பொதி பனி நீர் – 6.வம்பறா:1 385/2
குயில் ஒடுங்கா சோலையின் மென் தளிர் கோதி கூவி எழ – 6.வம்பறா:1 388/2
பிரச மென் மலர் சோலை சூழ் பெரும் திருவாரூர் – 6.வம்பறா:1 506/2
பைம் புனல் மென் பணை தேவூர் அணைந்து போற்றி பரமர் திருநெல்லிக்கா பணிந்து பாடி – 6.வம்பறா:1 574/2
சைவ நன் மரபில் வந்த தட மயில் மட மென் சாயல் – 6.வம்பறா:1 642/2
யாழின் மென் மொழியார் மொழிந்து எதிர் கழல் வணங்க – 6.வம்பறா:1 673/1
அன்ன மென் நடையார்-தமக்கு அருள்செய்து போக்கி – 6.வம்பறா:1 674/3
மிக்க பெரும் காதலுடன் தொண்டர் சூழ மென் புனல் நாட்டினை அகன்று வெற்பும் கானும் – 6.வம்பறா:1 1014/1
நீல வல் விடம் தொடர்ந்து எழ நேர்_இழை மென் பூ – 6.வம்பறா:1 1058/3
பருவ மென் கொடிகள் பண்டு புரம் எரித்தவர் தம் நெற்றி – 6.வம்பறா:1 1097/1
எரி அவிழ் காந்தள் மென் பூ தலை தொடுத்து இசைய வைத்து – 6.வம்பறா:1 1102/1
பிணி அவிழ் மலர் மென் கூந்தல் பெண் அமுது அனையாள் செம்பொன் – 6.வம்பறா:1 1105/1
கரி இளம் பிடி கை வென்று கதலி மென் தண்டு காட்ட – 6.வம்பறா:1 1106/2
பூ அலர் நறும் மென் கூந்தல் பொன் கொடி கணைக்கால் காமன் – 6.வம்பறா:1 1107/1
சந்த மென் மலர் தாது அணி நீறு மெய் தரித்து – 6.வம்பறா:1 1194/1
பைம்பொனின் மாலை வேய்ந்த பவள மென் கொடி ஒப்பாரை – 6.வம்பறா:1 1223/2
குனி சிலை புருவ மென் பூம் கொம்பனார் உடனே கூட – 6.வம்பறா:1 1238/2
அருப்பு மென் முலையினார்-தம் அணி மலர் கை பிடித்து அங்கு – 6.வம்பறா:1 1241/1
பொருப்பு அரையன் மட பாவை இட-பாலானை போற்றி இசைத்து புறம் போந்து தங்கி பூ மென்
கருப்பு வயல் வாழ்கொளிபுத்தூரை நீங்கி கான் நாட்டு முள்ளூரில் கலந்த போது – 6.வம்பறா:2 119/3,4
தூ நாண் மென் மலர் கொன்றை சடையார் செய்ய துணை பாத மலர் கண்டு தொழுதேன் என்று – 6.வம்பறா:2 120/2
வேனில் உறு வெயில் வெம்மை தணிப்பதற்கு விரை குளிர் மென்
பான் நல் மலர் தடம் போலும் பந்தர் ஒரு-பால் அமைத்தே – 6.வம்பறா:2 157/1,2
வாரும் அணிய அணியவாம் வளர் மென் முலைகள் இடை வருத்த – 6.வம்பறா:2 209/3
கொண்ட உணர்வு தலை நிற்ப குலவு மென் கொடி அனையார் – 6.வம்பறா:2 223/2
கோவா முத்தும் சுரும்பு ஏறா கொழு மென் முகையும் அனையாரை – 6.வம்பறா:2 227/1
வம்பு அணி மென் முலை அவர்க்கு மனம் கொடுத்த வன் தொண்டர் – 6.வம்பறா:2 247/1
மென் பூம் சயனத்திடை துயிலும் மேவார் விழித்தும் இனிது அமரார் – 6.வம்பறா:2 315/1
நின்று பாவாய் திறவாய் என்று அழைப்ப நெறி மென்_குழலாரும் – 6.வம்பறா:2 338/2
இணையும் கொங்கை சங்கிலியார் எழில் மென் பணை தோள் எய்துவிக்க – 6.வம்பறா:6 6/3
மது மென் கமல மலர் பாதம் பணிந்து மனையில் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:3 52/4
நாதர் தமக்கு அங்கு அமுது ஆக்க நறும் மென் குதலை மொழி புதல்வன் – 7.வார்கொண்ட:3 58/3
மேய இல்லம் எம்மருங்கும் வீசி விரை மென் மலர் சாந்தம் – 7.வார்கொண்ட:3 71/3
பூ மென் குழலார்-தம்மோடும் புறம் போய் அழைக்க புகும் போது – 7.வார்கொண்ட:3 80/4
சோலை எழும் மென் சுரும்பின் ஒலி துரக செருக்கால் சுலவும் ஒலி – 7.வார்கொண்ட:4 2/2
ஆரம் நறு மென் கலவை மான் மத சாந்து ஆடை அணி மணி பூண் – 7.வார்கொண்ட:4 153/2
ஈர விரை மென் மலர் பணிகள் இனைய முதலாயின வருக்கம் – 7.வார்கொண்ட:4 153/3
மெய் கொண்ட காதலினால் விரைந்து ஏகி மென் கரும்பும் – 7.வார்கொண்ட:4 172/3
விருப்பின் உடன் செந்தமிழின் வெண்பா மென் மலர் புனைந்தார் – 8.பொய்:8 5/4
மென் புல்லும் விளக்கு எரிக்க போதாமை மெய்யான – 9.கறை:1 7/2
விரை செறி மலர் மென் கூந்தல் உரிமை மெல் இயலார்-தம்முள் – 10.கடல்:1 4/3
தூய மென் பள்ளி தாமம் தொடுக்கு மண்டபத்தின் பாங்கர் – 10.கடல்:1 5/3
கடிது முற்றி மற்று அவள்-தன் கரு மென் கூந்தல் பிடித்து ஈர்த்து – 10.கடல்:3 5/1

மேல்


மென்_குழலாரும் (1)

நின்று பாவாய் திறவாய் என்று அழைப்ப நெறி மென்_குழலாரும்
ஒன்றும் துயிலாது உணர்ந்து அயர்வார் உடைய பெருமான் பூசனை செய் – 6.வம்பறா:2 338/2,3

மேல்


மென்மை (1)

தெரிவுறும் அவர்க்கு மென்மை செழு முழந்தாளின் செவ்வி – 6.வம்பறா:1 1106/3

மேல்


மென்றாலும் (1)

மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும் – 11.பத்தராய்:1 7/2

மேல்


மென்றிடலால் (1)

நையும் மனத்து இனிமையினால் நைய மிக மென்றிடலால்
செய்யும் மறை வேள்வியோர் முன்பு தரும் திருந்து அவியில் – 3.இலை:3 161/2,3

மேல்