யா – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யாக்கை 5
யாக்கையின் 1
யாக்கையும் 1
யாக்கையை 2
யாக 1
யாகம் 2
யாகமும் 2
யாங்கள் 2
யாணர் 2
யாத்த 1
யாதவர் 1
யாதவன் 1
யாதானும் 1
யாதினை 1
யாது 13
யாதும் 9
யாதொன்றும் 1
யாப்பு 1
யாப்புறும் 1
யாம் 17
யாம 4
யாமத்தினிடை 1
யாமத்து 6
யாமம் 4
யாமும் 5
யார் 28
யார்-கொல் 1
யார்க்கும் 7
யாராலும் 1
யாரும் 10
யாரே 3
யாரை 1
யாரோ 2
யாவது 2
யாவதும் 1
யாவர் 10
யாவர்க்கும் 5
யாவர்களும் 5
யாவரால் 1
யாவருக்கும் 1
யாவரும் 18
யாவரையும் 3
யாவரோடும் 1
யாவும் 5
யாவையின் 1
யாவையினும் 2
யாவையும் 24
யாழ் 21
யாழ்ப்பாணர் 2
யாழ்ப்பாணரும் 1
யாழ்ப்பாணரொடும் 1
யாழ்ப்பாணரோடும் 1
யாழ்ப்பெரும்பாணனார்-தாமும் 1
யாழில் 8
யாழின் 8
யாழின்-கண் 1
யாழினால் 2
யாழினை 2
யாழினொடும் 1
யாழுக்கும் 1
யாழை 2
யாறு 2
யாறும் 1
யான் 94
யானங்கள் 1
யானத்திடை-நின்று 1
யானத்தின் 1
யானத்து 1
யானம் 2
யானும் 13
யானே 4
யானை 31
யானை-தன்னை 1
யானைக்கும் 1
யானையால் 1
யானையின் 4
யானையினை 1
யானையும் 3
யானையை 2
யானோ 1

யாக்கை (5)

பயில் வடு பொலிந்த யாக்கை வேடர்-தம் பதியாம் நாகற்கு – 3.இலை:3 12/1
இன்புறு வேதகத்து இரும்பு பொன் ஆனால் போல் யாக்கை
தன் பரிசும் வினை இரண்டும் சாரும் மலம் மூன்றும் அற – 3.இலை:3 154/2,3
தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு எழுந்து ஒளி திகழ்வார் – 5.திருநின்ற:1 367/4
எம்பெருமான் ஓர் எற்பின் யாக்கை அன்பு என்னே என்ன – 5.திருநின்ற:4 57/3
கருகிய மாசு உடை யாக்கை தீயோர் தங்கள் கை தூங்கு குண்டிகை நீர் தெளித்து காவாய் – 6.வம்பறா:1 716/1

மேல்


யாக்கையின் (1)

அங்கண் மாயை யாக்கையின் மேல் அளவு இன்று உயர்ந்த சிவமயமாய் – 4.மும்மை:6 55/2

மேல்


யாக்கையும் (1)

உம்பரே முதல் யோனிகள் எல்லாம் உயிரும் யாக்கையும் உருகி ஒன்றாகி – 4.மும்மை:5 65/2

மேல்


யாக்கையை (2)

இன்னுயிர் இன்றி வாழும் யாக்கையை ஒக்கும் என்பார் – 4.மும்மை:1 29/4
வீர யாக்கையை மேல் கொண்டு சென்று போய் வில்லவர் பெருமானை – 13.வெள்ளானை:1 38/1

மேல்


யாக (1)

தாழ்வு_இல் தரளம் சொரி குலைப்பால் சமைத்த யாக தடம் சாலை – 4.மும்மை:6 6/2

மேல்


யாகம் (2)

யாகம் நிலவும் சாலை-தொறும் மறையோர் ஈந்த அவி உணவின் – 4.மும்மை:6 4/1
யாழின் மொழியாள் தனி பாகரை போற்றும் யாகம்
ஊழின் முறைமை வழுவாது உலகங்கள் ஆன – 6.வம்பறா:6 2/1,2

மேல்


யாகமும் (2)

யாகமும் சடங்கும் எங்கும் இன்பமும் மகிழ்வும் எங்கும் – 1.திருமலை:2 31/2
இருமைக்கும் இன்பம் அளிக்கும் யாகமும் யான் செய வேண்டும் – 6.வம்பறா:1 280/3

மேல்


யாங்கள் (2)

பற்பலரும் பிழைத்து உய்ய அற முன் சொன்ன பான்மையான் யாங்கள் தொழும் பரமன் என்றான் – 6.வம்பறா:1 915/4
யாங்கள் உமக்கு பணி செய்ய ஈசற்கு ஏற்ற பணி விரும்பி – 6.வம்பறா:2 221/1

மேல்


யாணர் (2)

யாணர் வெண் கிழி கோவணம் ஈவது கேட்டு – 2.தில்லை:7 11/3
யாணர் பதிகம் எடுத்து ஏத்தி எண்_இல் நிதி பெற்று இனிது இருந்தார் – 6.வம்பறா:2 191/4

மேல்


யாத்த (1)

குன்றவர் அதனில் வாழ்வார் கொடும் செவி ஞமலி யாத்த
வன் திரள் விளவின் கோட்டு வார் வலை மருங்கு தூங்க – 3.இலை:3 3/1,2

மேல்


யாதவர் (1)

வேதி யாதவர் தம்மை வேதிப்பன – 1.திருமலை:5 193/2

மேல்


யாதவன் (1)

யாதவன் துவரைக்கு இறை ஆகிய – 1.திருமலை:1 14/1

மேல்


யாதானும் (1)

யாதானும் இ உடம்பால் செய் வினைகள் ஏறு உயர்த்தார் – 11.பத்தராய்:1 4/1

மேல்


யாதினை (1)

யாதினை அறிந்து என் சொல்லி பாடுகேன் என மொழிந்தார் – 1.திருமலை:5 72/4

மேல்


யாது (13)

வந்த புண்ணியம் யாது என மாதவன் – 1.திருமலை:1 30/4
யாது நான் இனி செய் பணி என்றே இறைஞ்சி நின்றவர்-தம் எதிர் நோக்கி – 2.தில்லை:3 10/2
யாது நான் செய்கேன் என்ன எம்பிரான் அடியார் போக – 2.தில்லை:5 17/3
நலம் கொள் கோவணம் தரும் பரிசு யாது என நம்பர் – 2.தில்லை:7 30/4
இ திருநாடு-தன்னில் இவர் திருப்பதி யாது என்னில் – 3.இலை:3 2/1
இவர் தமக்கு வந்தது இனி யாது செயல் என்று அழிந்தார் – 5.திருநின்ற:1 52/3
யாது போற்றினேன் மேல் இனி ஏத்துகேன் – 5.திருநின்ற:2 11/3
உற்ற செய் தொழில் யாது செய்கோம் என உரைப்ப – 6.வம்பறா:1 687/2
அவன் நிலை அதுவாம் அ நாள் அருகர்-தம் நிலை யாது என்னில் – 6.வம்பறா:1 697/2
கெழுவுறு பதி யாது என்று விருப்புடன் கேட்ட போது – 6.வம்பறா:1 753/4
இசை விளங்கும் தமிழ் விரகர் திருக்காளத்தி திருமலை இ மலைகளில் யாது என்று கேட்டார் – 6.வம்பறா:1 1019/4
ஆசை உடம்பால் மற்று இனி வேறு அடையும் இன்பம் யாது என்று – 7.வார்கொண்ட:4 42/2
எண் திசையோரும் ஏத்த எடுத்த ஆலயம் தான் யாது இங்கு – 12.மன்னிய:1 14/2

மேல்


யாதும் (9)

ஈர அன்பினர் யாதும் குறைவு இலார் – 1.திருமலை:4 9/3
எத்தனை தீங்கு சொன்னால் யாதும் மற்று அவற்றால் நாணேன் – 1.திருமலை:5 41/2
என்ன அ உரை கேட்டு இயற்பகையார் யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில் – 2.தில்லை:3 7/1
யாதும் ஒன்றும் கூசாதே எடுத்த கோல் கொண்டு அவன் புடைப்ப – 4.மும்மை:6 17/3
யாதும் ஒரு செயல் இல்லாமையில் இறைஞ்சி எதிர் அகன்றார் – 5.திருநின்ற:1 424/4
யாதும் ஒன்று உரையார் இப்போது இங்கு அவன் உதவான் என்றார் – 5.திருநின்ற:5 32/4
யாதும் ஒன்று அறிவு இலாதார் இருள் என அணைய சென்று – 6.வம்பறா:1 763/1
யாதும் ஆராய்ச்சி இல்லையாம் என்றது ஆம் – 6.வம்பறா:1 832/4
யாதும் அரியது இல்லை இனி ஈண்ட அருளி செய்யும் என – 7.வார்கொண்ட:3 51/1

மேல்


யாதொன்றும் (1)

யாதொன்றும் இல்லையாகி இரு பகல் உணவு மாறி – 3.இலை:4 9/1

மேல்


யாப்பு (1)

கொண்ட வல் வினை யாப்பு அவிழ் கொள்கைய ஆன – 6.வம்பறா:1 1188/2

மேல்


யாப்புறும் (1)

யாப்புறும் மென் சிறு மணி மேகலை அணி சிற்றாடையுடன் – 3.இலை:5 13/3

மேல்


யாம் (17)

புவனங்கள் உய்ய ஐயர் பொங்கு நஞ்சு உண்ண யாம் செய் – 2.தில்லை:2 4/2
கூடவே மடிவது அன்றி கொடுக்க யாம் ஓட்டோம் என்றார் – 2.தில்லை:3 18/4
இலகு மணி பீடத்து குணக்கும் மேற்கும் யாம் அளித்தோம் உமக்கு இந்த காலம் தீர்ந்தால் – 6.வம்பறா:1 564/3
மேவலால் இன்று கண்டு முட்டு யாம் என்று விளம்ப – 6.வம்பறா:1 683/4
ஆன பேர் அந்தணர்கள்-பால் அருள் உடைமை யாம் என்று – 6.வம்பறா:1 1166/3
எம்முடைய குல_கொழுந்தை யாம் உய்ய தருகின்றோம் – 6.வம்பறா:1 1167/3
இன்று யாம் முதுகுன்று எய்த வழி எமக்கு இயம்பும் என்ன – 6.வம்பறா:2 102/2
துன்பம் ஒழி நீ யாம் உனக்கோர் தூதன் ஆகி இப்பொழுதே – 6.வம்பறா:2 329/3
செப்ப_அரும் சீர் சிறுத்தொண்டர்-தமை காண சேர்ந்தனம் யாம்
எ பரிசும் அவர் ஒழிய இங்கு இரோம் என்று அருளி – 7.வார்கொண்ட:3 40/3,4
துடி சேர் கரத்து பயிரவர் யாம் சொல்ல இங்கும் இராதே போய் – 7.வார்கொண்ட:3 43/3
பெரிய பயிரவ கோல பெருமான் அருளி செய்வார் யாம்
பரியும் தொண்டீர் மூ இருது கழித்தால் பசு வீழ்த்திட உண்பது – 7.வார்கொண்ட:3 48/2,3
எனை இங்கு உய்ய நீ பயந்தான்-தன்னை அழைப்போம் யாம் என்றார் – 7.வார்கொண்ட:3 56/4
யாம் இங்கு என் செய்தால் ஆகும் என்பார் விரைவுற்று எழுந்து அருளால் – 7.வார்கொண்ட:3 80/3
செய்ய மணியே சீராளா வாராய் சிவனார் அடியார் யாம்
உய்யும் வகையால் உடன் உண்ண அழைக்கின்றார் என்று ஓலம் இட – 7.வார்கொண்ட:3 81/3,4
செய்ய மேனி கரும் குஞ்சி செழும் அஞ்சுகத்து பயிரவர் யாம்
உய்ய அமுது செய்யாதே ஒளித்தது எங்கே என தேடி – 7.வார்கொண்ட:3 84/1,2
கான பேர் யாம் இருப்பது என கழறி கங்கை எனும் – 7.வார்கொண்ட:4 113/1
தேசு உடைய பாடல் பெறும் தவத்தினாரை செப்புவது யாம் என் அறிந்து தென்னர் கோமான் – 12.மன்னிய:2 2/2

மேல்


யாம (4)

யாம இருளும் வெளி ஆக்கும் இரவே அல்ல விரை மலர் மேல் – 4.மும்மை:2 2/3
செறி வலி திண் கடைஞர் வினை செயல் புரிவை கறை யாம
குறி அளக்க உளைக்கும் செம் குடுமி வாரண சேக்கை – 4.மும்மை:4 9/1,2
யாம இரவும் பகலும் உணர் ஒழியா இன்பம் எய்தினார் – 5.திருநின்ற:7 5/4
காந்த அழிந்து தோய்ந்து எழார் கங்குல் இடை யாம கடலுள் – 6.வம்பறா:2 321/4

மேல்


யாமத்தினிடை (1)

ஞாலம் இருள் நீங்க வரும் புகலி வேந்தர் நடு இடை யாமத்தினிடை தொழுது உணர்ந்து – 6.வம்பறா:1 1009/3

மேல்


யாமத்து (6)

யாமத்து இருளும் புலர கதிரோன் எழு காலையில் வந்து அடியார் கூடி – 1.திருமலை:5 180/2
நண்ணல் செய்யா நடு இருள் யாமத்து – 2.தில்லை:4 16/4
மாலை இடை யாமத்து பள்ளிகொள்ளும் மறையவனார் தம் முன்பு கனவிலே வந்து – 6.வம்பறா:1 1009/1
நீண்ட கங்குல் யாமத்து நீங்கி வானில் நிறை மதியம் – 6.வம்பறா:2 237/2
மாறு_இல் திரு அத்த யாமத்து இறைஞ்ச வந்து அணைந்தார் – 6.வம்பறா:2 304/4
என்னை உடையாய் நினைந்த அருளாய் இந்த யாமத்து எழுந்தருளி – 6.வம்பறா:2 323/2

மேல்


யாமம் (4)

வரும் கறை பொழுது நீங்கி மல்கிய யாமம் சென்று – 3.இலை:3 132/1
மாலை யாமம் புலர்வுறும் வைகறை – 6.வம்பறா:1 208/1
அருகு சூழ்ந்தார் துயின்று திரு அத்த யாமம் பணி மடங்கி – 6.வம்பறா:2 322/1
முன்பு திரு விளக்கு எரிக்கும் முறை யாமம் குறையாமல் – 9.கறை:1 7/1

மேல்


யாமும் (5)

சற்று நீ அருந்தி யாமும் தின்று தண்ணீர் குடித்து – 3.இலை:3 93/3
ஊனம் வந்து அடையில் யாமும் உயிர் துறந்து ஒழிவது என்றார் – 6.வம்பறா:1 696/4
அன்னவர்-தம்மை இங்கே அழைத்தனை அவரும் யாமும்
முன் உற ஒக்க தீர்க்க மொழிந்து மற்று அவரால் தீர்ந்தது – 6.வம்பறா:1 748/2,3
என்னினும் யாமும் தீர்த்தோம் ஆகவும் இசைவாய் என்றார் – 6.வம்பறா:1 748/4
ஏடுற எழுதி மற்று அ ஏட்டினை யாமும் நீரும் – 6.வம்பறா:1 796/2

மேல்


யார் (28)

ஏவண சிலையினாரை யார் தொடர்ந்து எட்ட வல்லார் – 1.திருமலை:5 44/4
இங்கு என்னை பலகாலும் மிதித்தனை நீ யார் என்ன – 1.திருமலை:5 87/3
இன் தொண்டை செம் கனி வாய் இளம்_கொடி-தான் யார் என்ன – 1.திருமலை:5 147/2
இறு மருங்குலார்க்கு யார் பிழைப்பார் என்று – 1.திருமலை:5 160/2
இன்னவாறு இன்ன பண்பு என்று ஏத்துகேன் அதற்கு யான் யார்
பன்னு பா_மாலை பாடும் பரிசு எனக்கு அருள்செய் என்ன – 1.திருமலை:5 198/3,4
மிக்க சீர் அடியார்கள் யார் எனினும் வேண்டும் யாவையும் இல்லை என்னாதே – 2.தில்லை:3 2/3
இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய்ய வல்லார் என்று – 2.தில்லை:5 21/3
அளவு_இல் சீற்றத்தினாலே யார் செய்தார் என்றும் கேளான் – 3.இலை:1 28/3
திரை செய் நீர் உலகின் மன்னர் யார் உளார் தீங்கு செய்தார் – 3.இலை:1 36/3
இந்த அனுசிதம் கெட்டேன் யார் செய்தார் என்று அழிவார் – 3.இலை:3 136/4
அழிந்து போய் வீழ்ந்தார் தேறி யார் இது செய்தார் என்னா – 3.இலை:3 171/3
எம்மை பணி கொள் கருணை திறம் இங்கு யார் பெற்றனர் என்ன இறைஞ்சினரே – 5.திருநின்ற:1 78/4
ஆதி தேவர் தம் திருவருள் பெருமை யார் அறிந்தார் – 5.திருநின்ற:1 371/1
தொண்டனார்க்கு அங்கு நிகழ்ந்தன யார் சொல வல்லார் – 5.திருநின்ற:1 380/4
எய்தவரும் கனி அளித்தார் யார் என்னும் கணவனுக்கு – 5.திருநின்ற:4 28/3
இ பந்தர் இ பெயர்இட்டு இங்கு அமைத்தார் யார் என்றார்க்கு – 5.திருநின்ற:5 7/1
அங்கணர்-தம் புவனத்தில் அறியாதார் யார் உளரே – 5.திருநின்ற:5 15/2
எங்கு உறைவீர் நீர்-தாம் யார் இயம்பும் என இயம்பினார் – 5.திருநின்ற:5 15/4
யார் அளித்த பால் அடிசில் உண்டது நீ என வெகுளா – 6.வம்பறா:1 72/4
இன்று இ மா நகர் அணைந்தது என் அவர்கள் யார் என்றான் – 6.வம்பறா:1 684/4
என்பது யார் உணர்வான் எனும் சென்று எட்ட ஒணா – 6.வம்பறா:1 827/2
ஆண்தகையாருக்கு அடுத்த அ நிலைமை விளைவை யார் அளவு அறிந்து உரைப்பார் – 6.வம்பறா:2 90/4
இந்த அதிசயம் என்னே யார் பெறுவார் என தொழுவார் – 6.வம்பறா:2 135/4
யார் என்று அடியேனை கொண்டது அடியேன் அடி வண்ணான் என – 7.வார்கொண்ட:4 19/2
மற்றவர்-தம் பெருமை யார் அறிந்து உரைக்க வல்லார்கள் – 8.பொய்:1 2/4
ஆங்கு அவன் யார் என்று அருள அதிகன் அவன் அணித்து ஆக – 8.பொய்:2 17/1
இந்த வெவ் வினை அஞ்சாதே யார் செய்தார் என்னும் எல்லை – 10.கடல்:1 8/4
மாசு_இலா பூசலார் தாம் யார் என மறையோர் எல்லாம் – 12.மன்னிய:1 13/2

மேல்


யார்-கொல் (1)

என்னை உள்ளம் திரிவித்தாள் யார்-கொல் என்று அங்கு இயம்புதலும் – 6.வம்பறா:2 228/4

மேல்


யார்க்கும் (7)

தன்னை யார்க்கும் அறிவு அரியான் என்றும் – 1.திருமலை:1 1/3
இன்ன பரிசு ஆனான் என்று அறிந்திலன் வேந்தனும் யார்க்கும்
முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ – 1.திருமலை:3 47/3,4
நக்கான் முகம் நோக்கி நடுங்கி நுடங்கி யார்க்கும்
மிக்கான் மிசை உத்தரிய துகில் தாங்கி மேல் சென்று – 1.திருமலை:5 39/1,2
புற்று இடம் கொண்ட புராதனனை பூங்கோயில் மேய பிரானை யார்க்கும்
பற்று இடம் ஆய பரம்பொருளை பார்ப்பதி_பாகனை பங்கயத்தாள் – 1.திருமலை:5 125/1,2
வருந்தியே அணையும் போழ்து மாசுணம் கவர்ந்தது யார்க்கும்
அரும் தவர் அமுது செய்ய தாழ்க்க யான் அறையேன் என்று – 5.திருநின்ற:5 26/2,3
பற்றிய கையில் ஏந்தி பண்பினால் யார்க்கும் காட்ட – 6.வம்பறா:1 852/3
ஞான மெய் நெறி-தான் யார்க்கும் நமச்சிவாய அ சொலாம் என்று – 6.வம்பறா:1 1248/1

மேல்


யாராலும் (1)

இ தகைமை அளப்பு_அரிதால் யாராலும் என உரைப்பார் – 6.வம்பறா:3 20/4

மேல்


யாரும் (10)

சுற்றத்தார் யாரும் அறியா வகை சுடர் வாள் – 3.இலை:2 33/1
யாரும் அன்பொடு வீழ்ந்து அஞ்சலி முகிழ்த்து – 5.திருநின்ற:2 3/3
என்னை உயிர் விட்டு அகன்றாய் யான் என் செய்கேன் இ இடுக்கண் தீர்க்கின்றார் யாரும் இல்லை – 6.வம்பறா:1 475/2
தொடை தமிழாளி யாரும் தொழுது எழ தொண்டர் ஆர்த்தார் – 6.வம்பறா:1 588/2
கூடிய நீரில் ஏடு குலச்சிறை யாரும் கூடி – 6.வம்பறா:1 850/2
இம்மையிலே புவி உள்ளோர் யாரும் காண ஏழ்_உலகும் போற்றி இசைப்ப எம்மை ஆளும் – 6.வம்பறா:1 1008/1
ஆன வாகனம் ஏறுவார் யாரும் மேற்கொள்ள – 6.வம்பறா:1 1198/1
குன்ற வில்லாளி யாரும் கூடலையாற்றூர் ஏற – 6.வம்பறா:2 102/3
யாரும் அறிய யான் ஆள உரியான் உன்னை எனை இரந்தான் – 6.வம்பறா:2 239/3
யாவும் யாரும் கழறினவும் அறியும் உணர்வும் ஈறு_இல்லா – 7.வார்கொண்ட:4 14/2

மேல்


யாரே (3)

இனையது ஒன்று யாரே செய்தார் இயற்பகை பித்தன் ஆனால் – 2.தில்லை:3 13/2
மண் பகிர்ந்தவனும் காணா மலர் அடி இரண்டும் யாரே
பண்பு உடை அடியார் அல்லால் பரிந்து நேர் காண வல்லார் – 3.இலை:4 30/3,4
பெற்றம் மேல் உயர்த்தீர் செய்யும் பெருமையை அறிந்தார் யாரே
உற்றவன் தொண்டற்கே ஆம் உறுதியே செய்தீர் என்ன – 6.வம்பறா:2 393/2,3

மேல்


யாரை (1)

இகத்தும் பரத்தும் இனி யாரை காணேன் யானும் திருநீறு – 7.வார்கொண்ட:3 77/3

மேல்


யாரோ (2)

என்னே என் மனம் திரித்த இவன் யாரோ என நினைந்தார் – 1.திருமலை:5 144/4
மச்சு இது செய்தார் யாரோ என்றலும் மருங்கு நின்ற – 3.இலை:3 108/3

மேல்


யாவது (2)

கயிலை மால் வரை யாவது காசினி மருங்கு – 5.திருநின்ற:1 365/1
யாவது செயல் என்று எண்ணி இடர் உழன்று அமுங்கினார்கள் – 6.வம்பறா:1 641/4

மேல்


யாவதும் (1)

யாவதும் உரை ஆடாதே எண்ணத்தில் கவலையோடும் – 6.வம்பறா:1 689/3

மேல்


யாவர் (10)

முன்பு இறைஞ்சினர் யாவர் என்று அறியா முறைமையால் எதிர்வணங்கி மகிழ்ந்து – 1.திருமலை:5 98/2
நேர வந்தவர் யாவர் ஆயினும் நித்தம் ஆகிய பத்தி முன் – 2.தில்லை:4 3/2
வென்றவர் இவர் யாவர் என்றான் வெடிபட முழங்கும் சொல்லான் – 3.இலை:1 35/4
எம்-தம் பெரு மக்களை யாவர் தடுக்க வல்லார் – 4.மும்மை:1 16/4
எவ்வாறு அருள்செய்தனை மற்று அவை அன்றி யாவர்
செய்வார் பெரியோய் என சேவடி தாழ்ந்து செப்ப – 4.மும்மை:1 40/3,4
யாவர் இ தன்மை செய்தார் என்று முன் எழுந்து சென்றே – 5.திருநின்ற:5 35/2
யாவர் என்னாது உடன் சேவித்து எல்லா குலத்தில் உள்ளோரும் – 5.திருநின்ற:7 22/2
யாவர் இ செயல் புரிந்தனர் என்று அவர் இழிப்ப – 6.வம்பறா:2 8/2
யாவர் எனாது அரன் அடியார்-தமை இகழ்ந்து பேசினரை – 8.பொய்:6 17/3
யாவர் எனினும் இகல் எறிந்தே ஈசன் அடியார்-தமக்கு இன்பம் – 9.கறை:5 6/1

மேல்


யாவர்க்கும் (5)

யாவர்க்கும் தவிராத ஈகை வினை துறை நின்றார் – 5.திருநின்ற:1 36/4
யாவர்க்கும் வியப்புற மஞ்சு உறைவான் இடையே ஒரு வாய்மை எழுந்ததுவே – 5.திருநின்ற:1 74/4
யாவர்க்கும் தந்தை தாய் எனும் இவர் இப்படி அளித்தார் – 6.வம்பறா:1 69/1
யாவர்க்கும் மேல் ஆய ஈசன் அருள் ஆழி பெற்று – 6.வம்பறா:1 841/3
யாவர்க்கும் மனம் உவக்கும் இன்ப மொழி பயன் இயம்ப – 9.கறை:2 3/1

மேல்


யாவர்களும் (5)

இந்த மொழி கேண்-மின் எதிர் யாவர்களும் என்றான் – 1.திருமலை:5 33/3
எல்லையினை தலைப்பட்டார் யாவர்களும் கண்டிலரால் – 4.மும்மை:4 35/4
யாவர்களும் போற்றி இசைப்ப திருத்தொண்டர் எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 400/4
யாவர்களும் அறிவ_அரிய இறைவன்-தன்னை ஏழ்_உலகும் உடையானை எண்_இலாத – 6.வம்பறா:1 1025/1
யாவர்களும் அர்ச்சிக்கும்படி கண்டால் இனிது உவந்து – 11.பத்தராய்:1 2/2

மேல்


யாவரால் (1)

யாவரால் எடுக்கல் ஆகும் இ செயல் அவர்க்கு சொல்ல – 6.வம்பறா:2 16/2

மேல்


யாவருக்கும் (1)

இம்பர் உலகில் யாவருக்கும் எய்த ஒண்ணா இரும் தவத்து – 6.வம்பறா:2 235/3

மேல்


யாவரும் (18)

அ பொருட்கு உரை யாவரும் கொள்வர்-ஆல் – 0.பாயிரம்:1 7/2
யாவரும் காண உன்னை வளைத்து நான் கொண்டே அன்றி – 2.தில்லை:2 26/3
எண்ணும் இ உலகத்தவர் யாவரும்
துண்எனும்படி தோன்ற முன் தோன்றிடில் – 2.தில்லை:4 16/1,2
எ உகங்களும் உள்ளது என்று யாவரும் ஏத்தும் – 4.மும்மை:5 48/3
யாவரும் தனை அடைவது மண் மேல் என்றும் உள்ளது காஞ்சி மற்று அதனுள் – 4.மும்மை:5 53/2
யாவரும் தொழுது உடன் ஏத்த எய்தினார் – 6.வம்பறா:1 238/2
இன்று நீர் உவகை எய்த யாவரும் காண வாதில் – 6.வம்பறா:1 734/3
ஈனம் இன்மை கண்டு யாவரும் வியப்புற எடுத்தார் – 6.வம்பறா:1 789/3
எண்_அரும் பெருமை தொண்டர் யாவரும் மகிழ்ச்சி எய்தி – 6.வம்பறா:1 862/1
இன்ன வண்ணம் யாவரும் இன்பம் எய்த எய்துவார் – 6.வம்பறா:1 992/1
எல்லை_இல் தனம் முகந்து கொண்டு யாவரும் உவப்ப – 6.வம்பறா:1 1041/3
யாவரும் பெரு மகிழ்ச்சியால் இன்புற பயந்த – 6.வம்பறா:1 1044/1
கரை_இல் கல்வியோர் யாவரும் அணைந்து தம் காட்சி – 6.வம்பறா:1 1064/3
ஏலுமா செய யாவரும் வியப்பு எய்தும் நாளில் – 6.வம்பறா:1 1068/4
யாவரும் இருந்த வண்ணம் எம்பிரான் கருணை என்றே – 6.வம்பறா:1 1093/3
எண் திசை திறத்து யாவரும் புகலி வந்து எய்தி – 6.வம்பறா:1 1195/1
யாவரும் எம்-பால் சோதி இதன் உள் வந்து எய்தும் என்று – 6.வம்பறா:1 1246/3
ஈனமாம் பிறவி தீர யாவரும் புகுக என்ன – 6.வம்பறா:1 1248/4

மேல்


யாவரையும் (3)

யாவரையும் வேறு அடிமையா உடைய எம்மான் – 1.திருமலை:5 37/4
எம்பெருமான் யாவரையும் கண்டிலர் தேடி போனார் – 7.வார்கொண்ட:3 39/2
ஈசனுக்கே அன்பு ஆனார் யாவரையும் தாம் கண்டால் – 11.பத்தராய்:1 1/1

மேல்


யாவரோடும் (1)

யாவரோடும் உரை இயம்பாது இருந்து – 1.திருமலை:5 156/2

மேல்


யாவும் (5)

யாவும் தெளிந்த பொருள் நிலையே எய்த உணர்ந்த உள்ளத்தால் – 4.மும்மை:6 18/3
ஏயும் யாவும் இவர் வடிவு என்பது ஆம் – 6.வம்பறா:1 826/4
ஓது என்று உரை செய்தனர் யாவும் ஓதாது உணர்ந்தோர் – 6.வம்பறா:1 840/4
யாவும் யாரும் கழறினவும் அறியும் உணர்வும் ஈறு_இல்லா – 7.வார்கொண்ட:4 14/2
திரு_மகட்கு வாழ் சேர் இடம் ஆதலில் யாவும்
தருதலின் கடல்-தன்னினும் பெரிது என திரை போல் – 8.பொய்:4 3/2,3

மேல்


யாவையின் (1)

பூதம் யாவையின் உள் அலர் போது என – 1.திருமலை:1 33/1

மேல்


யாவையினும் (2)

இன்ப மொழி தோத்திரங்கள் மந்திரங்கள் யாவையினும்
முன்பு இருந்து மற்று அவன்-தன் முகம் மலர அகம் நெகிழ – 3.இலை:3 162/2,3
எண்_இல் பெருகும் தலை யாவையினும்
நண்ணி கொணரும் தலை ஒன்றின் நடு – 8.பொய்:2 33/2,3

மேல்


யாவையும் (24)

துன்னிய யாவையும் தூய்மை செய்வது – 2.தில்லை:2 16/2
மிக்க சீர் அடியார்கள் யார் எனினும் வேண்டும் யாவையும் இல்லை என்னாதே – 2.தில்லை:3 2/3
நீறு சேர் திரு மேனியர் மனத்து நினைத்த யாவையும் வினைப்பட முடித்து – 2.தில்லை:3 3/2
புவனம் யாவையும் நேர் நிலா என்பது புகழோ – 2.தில்லை:7 39/4
ஈறு_இல் பெரும் திரு உடையார் உடையார் என்று யாவையும் நேர் – 3.இலை:5 9/3
எய்த ஆகம விதி எலாம் செய்தாள் உயிர்கள் யாவையும் ஈன்ற எம் பிராட்டி – 4.மும்மை:5 60/4
நிரந்த காதல் செய் உள்ளத்தள் ஆகி நீடு நன்மைகள் யாவையும் பெருக – 4.மும்மை:5 61/2
நண்ணும் மன் உயிர் யாவையும் பல்க நாடு காதலின் நீடிய வாழ்க்கை – 4.மும்மை:5 71/3
ஈண்டு தீ_வினை யாவையும் நீக்கி இன்பமே தரும் புண்ணிய தீர்த்தம் – 4.மும்மை:5 78/1
தீண்டில் யாவையும் செம்பொன் ஆக்குவது ஓர் சிலையும் உண்டு உரை செய்வதற்கு அரிது-ஆல் – 4.மும்மை:5 84/3
திரு நதி துறை யாவையும் பயில் சேண் நெடும் கிரி வட்டையும் – 5.திருநின்ற:1 351/2
பன்மை யோனிகள் யாவையும் பயில்வன பணிந்தே – 5.திருநின்ற:1 374/3
தாணு மா மறை யாவையும் தனித்தனி முழங்க – 5.திருநின்ற:1 375/4
திங்கள் சடை அண்ணலார்-தம் திரு பதி யாவையும் கும்பிட்டு – 6.வம்பறா:1 279/2
விழை சிறப்பின வியல் இடம் யாவையும் மிடைந்து – 6.வம்பறா:1 505/3
யாவையும் குறை அறுத்திட அமர்ந்து அருளுவார் இனிதின் அங்கு உறையும் நாளில் – 6.வம்பறா:1 522/4
திருத்தகும் தொழில் யாவையும் செய்யவும் மேல்மேல் – 6.வம்பறா:1 713/2
சூழ்க என்றது தொல் உயிர் யாவையும்
வாழி அஞ்சு_எழுத்து ஓதி வளர்கவே – 6.வம்பறா:1 823/3,4
அமைத்து இங்கு யாவையும் ஆங்கு அவை வீந்த போது – 6.வம்பறா:1 829/2
ஈங்கு உளன் என்ற அவனுக்கு விடயம் ஆக யாவையும் முன் இயற்றுதற்கு விகாரமே செய்து – 6.வம்பறா:1 917/3
ஈறு_இலாத பூசனைகள் யாவையும் மிக செய்து – 6.வம்பறா:1 1042/2
திருந்து செய் வினை யாவையும் கடந்து தீர்ந்து_இலது-ஆல் – 6.வம்பறா:1 1061/4
நகர நீள் மறுகு யாவையும் நலம் புனைந்து அணியால் – 6.வம்பறா:1 1071/3
ஏல இ நலம் யாவையும் எழுச்சி முன் காட்டும் – 6.வம்பறா:1 1196/1

மேல்


யாழ் (21)

நரம்பு உடை யாழ் ஒலி முழவின் நாத ஒலி வேத ஒலி – 1.திருமலை:5 91/3
குழல் செய் வண்டு இனம் குறிஞ்சி யாழ் முரல்வன குறிஞ்சி – 4.மும்மை:5 10/1
மா மருங்கு தண் நீழலின் மருத யாழ் முரலும் – 4.மும்மை:5 33/3
தேம் பொதிந்த சில் மழலை மென் மொழிய செவ்வழி யாழ் – 4.மும்மை:5 38/4
முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன் – 5.திருநின்ற:1 76/3
மொய் ஒளி வெண் நிலவு அலர்ந்து முரன்ற யாழ் ஒலியினதாய் – 5.திருநின்ற:1 98/3
தாங்கு நூலவர் மகிழுற சகோட யாழ் தலைவர் – 5.திருநின்ற:6 31/3
தரு நீர்மை யாழ் கொண்டு சண்பையிலே வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 131/4
ஏயும் இசை யாழ் உங்கள் இறைவருக்கு இங்கு இயற்றும் என – 6.வம்பறா:1 134/2
மேய தொடை தந்திரி யாழ் வீக்கி இசை விரிக்கின்றார் – 6.வம்பறா:1 134/4
பண் அமை யாழ் இசை கூட பெரும்பாணர் பாடிய பின் – 6.வம்பறா:1 137/2
சொல் தமிழ்_மாலையின் இசைகள் சுருதி யாழ் முறை தொடுத்தே – 6.வம்பறா:1 141/3
செம் கை யாழ் திருநீலகண்ட பெரும்பாணருடன் சேர – 6.வம்பறா:1 177/3
நண்பு உடை யாழ் கருவியினில் முன்பு போல் கைக்கொண்டு நடத்த புக்கார்க்கு – 6.வம்பறா:1 448/3
ஐயர் நீர் யாழ் இதனை முரிக்கும் அது என் ஆளுடையாள் உடனே கூட – 6.வம்பறா:1 451/1
தங்கி இசை யாழ் பெரும்பாணர் உடன் மறையோர் தலைவனார் சென்று சார்ந்தார் – 6.வம்பறா:1 454/3
யாழ் நரம்பில் ஆர இயல் இசை கூட பாடியே எண்_இல் கற்ப – 6.வம்பறா:1 457/1
பாடும் யாழ் பெரும்பாணரும் தங்க அங்கு இரவு பள்ளி மேவி – 6.வம்பறா:1 463/2
ஏதம்_இல் விபஞ்சி வீணை யாழ் ஒலி ஒரு-பால் ஏத்தும் – 6.வம்பறா:1 1200/3
சந்த யாழ் தரையில் சீதம் தாக்கில் வீக்கி அழியும் என்று – 12.மன்னிய:5 6/2
ஞானம் உண்டார் கேட்டு அருளி நல்ல இசை யாழ் பெரும்பாணர்க்கு – 12.மன்னிய:5 11/1

மேல்


யாழ்ப்பாணர் (2)

ஏழ் இசையும் பணி கொண்ட நீலகண்ட யாழ்ப்பாணர் – 6.வம்பறா:1 139/4
சிரபுரத்து பிள்ளையார் செல்லும் போது திருநீலகண்ட யாழ்ப்பாணர் பின்னே – 6.வம்பறா:1 261/3

மேல்


யாழ்ப்பாணரும் (1)

பாடும் பதிக இசை யாழ்ப்பாணரும் பயிற்றி – 6.வம்பறா:1 168/1

மேல்


யாழ்ப்பாணரொடும் (1)

தாழ்வு_இல் யாழ்ப்பாணரொடும் தாதையார்-தம்மோடும் – 6.வம்பறா:1 144/1

மேல்


யாழ்ப்பாணரோடும் (1)

ஈண்டு புகழ் தாதையார் பின் எய்திட யாழ்ப்பாணரோடும்
காண்தகு காழி தொழுது காதலினால் புறம் போந்தார் – 6.வம்பறா:1 281/3,4

மேல்


யாழ்ப்பெரும்பாணனார்-தாமும் (1)

இன் இசை பாடின எல்லாம் யாழ்ப்பெரும்பாணனார்-தாமும்
மன்னும் இசை வடிவான மதங்கசூளாமணியாரும் – 6.வம்பறா:1 278/1,2

மேல்


யாழில் (8)

யாழில் எழும் ஓசையுடன் இருவர் மிடற்று இசை ஒன்றி – 6.வம்பறா:1 136/1
அறிவு அரிய திருப்பதிக இசை யாழில் இட்டு அடியேன் – 6.வம்பறா:1 140/3
இ பெரியோர் அருள்செய்த திருப்பதிகத்து இசை யாழில் ஏற்பன் என்ன – 6.வம்பறா:1 449/3
பாணனார் யாழில் இட-பால் அறா வாயர் அருள் பணித்த போது – 6.வம்பறா:1 457/4
திரு தகும் யாழில் இட்டு பரவுவார் செழும் சோணாட்டில் – 12.மன்னிய:5 1/2
ஏவலார் குழலாள் பாகர் பாணிகள் யாழில் இட்டார் – 12.மன்னிய:5 2/4
முன்பு இருந்து யாழில் கூடல் முதல்வரை பாடுகின்றார் – 12.மன்னிய:5 4/4
மேன்மை பதிகத்து இசை யாழில் இட பெற்று உடனே மேய பின் – 12.மன்னிய:5 11/3

மேல்


யாழின் (8)

யாழின் மொழியின் குழல் இன் இசையும் சுரும்பும் – 4.மும்மை:1 4/3
யாழின் முறைமையின் இட்டே எ உயிரும் மகிழ்வித்தார் – 6.வம்பறா:1 139/3
சிறிய மறை களிறு அளித்த திருப்பதிக இசை யாழின்
நெறியில் இடும் பெரும்பாணர் பின்னும் நீர் அருள்செய்யும் – 6.வம்பறா:1 140/1,2
யாழின் மென் மொழியார் மொழிந்து எதிர் கழல் வணங்க – 6.வம்பறா:1 673/1
யாழின் மொழி எழில் முறுவல் இரு குழை மேல் கடை பிறழும் – 6.வம்பறா:2 268/1
யாழின் மொழியாள் தனி பாகரை போற்றும் யாகம் – 6.வம்பறா:6 2/1
தரு நீர்மை இசை கொள் யாழின் தலைவராய் உலகம் ஏத்தும் – 12.மன்னிய:4 18/3
யாழின் மொழியாள் உமை ஞானம் ஊட்ட உண்ட எம்பெருமான் – 12.மன்னிய:5 10/2

மேல்


யாழின்-கண் (1)

இலகும் இசை யாழின்-கண் அடங்காமையான் காட்டப்பெறுவன் என்றார் – 6.வம்பறா:1 446/4

மேல்


யாழினால் (2)

அருமை உடை பதிகம் தாம் யாழினால் பயிற்றும் பேறு அருளி செய்தார் – 6.வம்பறா:1 444/4
வீக்கு நரம்பு உடை யாழினால் விளைந்தது இது என்று அங்கு அதனை போக்க – 6.வம்பறா:1 450/1

மேல்


யாழினை (2)

இந்த யாழினை கொண்டே இறைவர் திருப்பதிக இசை இதனில் எய்த – 6.வம்பறா:1 452/2
தந்த யாழினை தொழுது கைகொண்டு பெரும்பாணர் தலை மேல் கொண்டார் – 6.வம்பறா:1 452/4

மேல்


யாழினொடும் (1)

மயிலை புறம் கொள் மென் சாயல் மகளிர் கிளவி யாழினொடும்
குயிலை பொருவும் காரைக்கால்அம்மை பெருமை கூறுவாம் – 5.திருநின்ற:3 11/3,4

மேல்


யாழுக்கும் (1)

நேர் வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலை வகையில் – 4.மும்மை:4 14/2

மேல்


யாழை (2)

தெள் அமுத இன் இசையின் தேம் பொழி தந்திரி யாழை சிறக்க வீக்கி – 6.வம்பறா:1 458/2
இறைஞ்சி வீழ்ந்து பணிந்து எழுந்து போற்றி யாழை பழித்து என்னும் – 7.வார்கொண்ட:4 87/2

மேல்


யாறு (2)

அலை தரு தண் புனல் பெண்ணை யாறு கடந்து ஏறிய பின் – 1.திருமலை:5 82/2
ஓடும் யாறு என ஒத்தது – 8.பொய்:2 24/3

மேல்


யாறும் (1)

நீர் ஊரும் கான் யாறும் நெடும் கானும் பல கழிய – 7.வார்கொண்ட:4 164/3

மேல்


யான் (94)

நாட்டு இயல்பு அதனை யான் நவிலல் உற்றனன் – 1.திருமலை:2 1/4
என்னிடையும் நின்னிடையும் நின்ற இசைவால் யான்
முன் உடையது ஓர் பெரு வழக்கினை முடித்தே – 1.திருமலை:5 35/2,3
மற்ற அது முடித்தல் அலது யான் வதுவை செய்யேன் – 1.திருமலை:5 36/3
மனத்தினால் உணர்தற்கு எட்டா மாயை என் சொல்லுகேன் யான்
எனக்கு இது தெளிய ஒண்ணாது என்றனன் எண்ணம் மிக்கான் – 1.திருமலை:5 54/3,4
யான் இதற்கு இசையேன் என்ன இசையுமோ என்று நின்றார் – 1.திருமலை:5 63/4
செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன் என தெளிந்து – 1.திருமலை:5 88/1
எண்_இலார் இருந்த போதில் இவர்க்கு யான் அடியேன் ஆக – 1.திருமலை:5 189/3
இன்னவாறு இன்ன பண்பு என்று ஏத்துகேன் அதற்கு யான் யார் – 1.திருமலை:5 198/3
எம்பிரான் யான் செயும் பணி எது என்றனர் – 2.தில்லை:2 15/1
என் இது மொழிந்தவா நீ யான் வைத்த மண் ஓடு அன்றி – 2.தில்லை:2 24/2
ஐயா நீர் அருளி செய்த வண்ணம் யான் செய்வதற்கு – 2.தில்லை:2 28/1
பொங்கு புனல் யான் மூழ்கி தருகின்றேன் போதும் என – 2.தில்லை:2 29/4
வந்து இருந்த பேரவையில் மன்னுவன் யான் என சென்றார் – 2.தில்லை:2 30/4
இந்த வேட்கோவன்-பால் யான் வைத்த பாத்திரத்தை – 2.தில்லை:2 32/2
மயல்_இல் சீர் தொண்டனாரை யான் அறிவகையால் வாழ்த்தி – 2.தில்லை:2 44/2
சாதி வேதியர் ஆகிய தலைவர் தையல்-தன்னை யான் தனி கொடு போக – 2.தில்லை:3 10/3
என்று அவன் கூற கேட்டே யான் அவற்கு உறுதி கூற – 2.தில்லை:5 10/1
அடியார்களில் யான் ஆரா அணைவாய் – 3.இலை:1 19/3
கோட்டம்_இல் என் குல மைந்தன் திண்ணன் எங்கள் குல தலைமை யான் கொடுப்ப கொண்டு பூண்டு – 3.இலை:3 50/1
இவர்-தமை பிரிய ஒண்ணாது என் செய்கேன் இனி யான் சால – 3.இலை:3 111/3
ஆவது ஒன்று அறிகிலேன் யான் என் செய்கேன் என்று பின்னும் – 3.இலை:3 174/4
ஈறு_இலாத இ பதியின் உள் எல்லா அறமும் யான் செய அருள்செய வேண்டும் – 4.மும்மை:5 69/2
இ கந்தை அழுக்கு ஏறி எடுக்க ஒணாது எனினும் யான்
மெய் கொண்ட குளிர் குடைந்து விட மாட்டேன் மேல் கடல்-பால் – 4.மும்மை:5 119/1,2
இசைவு நினைந்து அழிந்து இனி யான் என் செய்கேன் என நின்றார் – 4.மும்மை:5 122/4
இச்சை வழியே யான் மேய்ப்பேன் என்று எம் பசுக்கள்-தமை கறந்து – 4.மும்மை:6 40/2
ஈங்கு யான் உமக்கு இளையார் ஏவலினால் வந்தது என – 5.திருநின்ற:1 56/3
என்று அவன் முன் கூறுதலும் யான் அங்கு உன் உடன் போந்து – 5.திருநின்ற:1 58/1
அ வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனி யான்
எவ்வாறு செய்வன் என ஈசர் அருள் கூடுதலால் – 5.திருநின்ற:1 59/1,2
தீய தொழிலும் பல கெட்டேன் சொல்ல இசையேன் யான் என்றார் – 5.திருநின்ற:1 287/4
செப்புவார் யான் திருப்பைஞ்ஞீலிக்கு போவது என்று உரைப்ப – 5.திருநின்ற:1 308/3
ஒப்பு_இலாரும் யான் அங்கு போகின்றேன் என்று உடன் போந்தார் – 5.திருநின்ற:1 308/4
தாழும் உடல் இது கொண்டு தாங்குவன் யான் என தரித்தார் – 5.திருநின்ற:1 394/4
உம்மால் இங்கு என்ன குறை உடையேன் யான் திருவாரூர் – 5.திருநின்ற:1 423/2
படியை யான் அறிந்தபடி பகர்ந்தேன் அ பர முனிவன் – 5.திருநின்ற:1 429/2
யான் உமது அருளால் வாழ்வேன் இ இளம் குழவி-தானும் – 5.திருநின்ற:4 45/3
எண் திசை மக்களுக்கு யான் எ உருவாய் என் என்பார் – 5.திருநின்ற:4 54/4
வெம்மை மொழி யான் கேட்க விளம்பினீர் என விளம்பி – 5.திருநின்ற:5 14/4
தெருளும் உணர்வு இல்லாத சிறுமையேன் யான் என்றார் – 5.திருநின்ற:5 16/4
அரும் தவர் அமுது செய்ய தாழ்க்க யான் அறையேன் என்று – 5.திருநின்ற:5 26/3
உன்னை யான் இனி துறந்தனன் ஈங்கு என உரைத்தார் – 5.திருநின்ற:6 15/4
இருமைக்கும் இன்பம் அளிக்கும் யாகமும் யான் செய வேண்டும் – 6.வம்பறா:1 280/3
என்னை உயிர் விட்டு அகன்றாய் யான் என் செய்கேன் இ இடுக்கண் தீர்க்கின்றார் யாரும் இல்லை – 6.வம்பறா:1 475/2
இந்த விட கொடு வேகம் நீங்குமாறும் யான் இடுக்கண் குழி-நின்றும் ஏறுமாறும் – 6.வம்பறா:1 477/3
போயது எங்கு நீர் அங்கு யான் பின் வர போவது என்று அருள்செய்தார் – 6.வம்பறா:1 527/4
என்று முன் கூறி பின்னும் யான் உற்ற பிணியை தீர்த்து – 6.வம்பறா:1 723/1
நோக்கிட விதி இலாரை நோக்கி யான் வாது செய்ய – 6.வம்பறா:1 738/1
சிந்தை உள் மகிழ்ந்து போந்தார் செயலை யான் சமயத்து உள்ளோர் – 6.வம்பறா:1 747/2
யான் எளியேன் அலேன் என்று எழும் திருப்பதிகம் பாடி – 6.வம்பறா:1 760/4
வெப்பு எனும் தீயில் யான் முன் வீடு பெற்று உய்ய நீங்கள் – 6.வம்பறா:1 793/1
நெறியே சிறிது யான் அறி நீர்மை கும்பிட்டேன் அன்பால் – 6.வம்பறா:1 844/4
உன்னை யான் அறிந்திலேனை உறு பிணி தீர்த்து ஆட்கொள்ள – 6.வம்பறா:1 867/3
யான் உம்மை பிரியாத வண்ணம் இ நாட்டு இறைவர் பதி எனை பலவும் பணிவீர் என்று – 6.வம்பறா:1 884/3
இப்பொழுது தாங்கிவர பெற்று உய்ந்தேன் யான் என்றார் – 6.வம்பறா:1 935/4
முற்றும் என்னையும் கொடுத்தனன் யான் என்று மொழிந்தார் – 6.வம்பறா:1 1053/4
பெற்ற பெண் விடத்தினால் வீந்த பின்னை யான்
கற்றை வார் சடையவர் கருணை காண்வர – 6.வம்பறா:1 1114/2,3
போவன் யான் என்று போந்தார் புகுந்தவாறு அருளி செய்து – 6.வம்பறா:2 16/3
அன்னே உன்னை அல்லல் யான் ஆரை நினைக்கேன் என ஏத்தி – 6.வம்பறா:2 74/1
இப்பொழுதே சோறு இரந்து இங்கு யான் உமக்கு கொணர்கின்றேன் – 6.வம்பறா:2 177/2
மேய ஒருவர்க்கு உரியது யான் வேறு என் விளையும் என வெருவுற்று – 6.வம்பறா:2 211/3
வென்றி விடையார் அருள்செய்தார் ஒருவர்க்கு உரியேன் யான் இனிமேல் – 6.வம்பறா:2 213/3
திண்ணம் எல்லாம் உடைவித்தாள் செய்வது ஒன்றும் அறியேன் யான்
தண் நிலா மின் ஒளிர் பவள சடையீர் அருளும் என தளர்வார் – 6.வம்பறா:2 233/3,4
பேற்றுக்கு என் யான் செய்வது என பெரிய கருணை பொழிந்து அனைய – 6.வம்பறா:2 238/3
யாரும் அறிய யான் ஆள உரியான் உன்னை எனை இரந்தான் – 6.வம்பறா:2 239/3
எம்பிரானே நீர் அருளி செய்தார்க்கு உரியேன் யான் இமையோர் – 6.வம்பறா:2 241/1
என் செய்தால் இது முடியும் அது செய்வன் யான் அதற்கு – 6.வம்பறா:2 246/1
அங்கு அவளோடு யான் வந்தால் அப்பொழுது கோயில் விட – 6.வம்பறா:2 248/3
பெற்றது யான் என கண்கள் பெரும் தாரை பொழிந்து இழிய – 6.வம்பறா:2 252/3
கொம்பு அனையீர் யான் செய்வது எங்கு என்று கூறுதலும் – 6.வம்பறா:2 258/4
மேவாது இங்கு யான் அகலேன் என நின்று விளம்பினார் – 6.வம்பறா:2 260/3
எண்ணாத பிழை பொறுத்து இங்கு யான் காண எழில் பவள – 6.வம்பறா:2 286/3
கொடி ஏர் இடையாள் பரவை தான் அறிந்து தன்-பால் யான் குறுகில் – 6.வம்பறா:2 327/3
நோ தக ஒழித்தற்கு அன்றே நுன்னை யான் வேண்டிக்கொண்டது – 6.வம்பறா:2 344/3
யான் மிகை உமக்கு இன்று ஆனால் என் செய்வீர் போதா என்றார் – 6.வம்பறா:2 354/4
கொண்டு அணைந்த வரை யான் உட்கொண்டிலேன் பாவியேன் என்று – 6.வம்பறா:2 360/3
கம்பியாதவனை யான் முன் காணும் நாள் எ நாள் என்று – 6.வம்பறா:2 386/4
ஏதம் இங்கு எய்த எய்தில் யான் செய்வது என்னாம் என்பார் – 6.வம்பறா:2 396/4
யான் மிக வருந்துகின்றேன் ஏயர்கோனார் தாம் உற்ற – 6.வம்பறா:2 401/3
அல்லால் வேறு காணேன் யான் அது நீர் அறிதற்கு ஆர் என்பார் – 6.வம்பறா:4 9/2
எல்லாம் காண்பான் யான் கண்டால் என் செய்வீர் என்று எடுத்து உரைத்தார் – 6.வம்பறா:4 9/4
மன்ன கேள் யான் மழவிடையார் மகிழும் தீர்த்த குளம் கல்ல – 6.வம்பறா:4 16/1
பின்னும் கயிறு தடவுதற்கு யான் பிணித்த தறிகள் அவை வாங்கி – 6.வம்பறா:4 16/3
என்னை வலிசெய்து யான் கல்லும் கொட்டை பறித்தார் என்று இயம்பி – 6.வம்பறா:4 16/4
அந்தன் ஆன உனக்கு அறிவும் இல்லை என்றார் யான் அதனுக்கு – 6.வம்பறா:4 17/1
எந்தை பெருமான் அருளால் யான் விழிக்கில் என் செய்வீர் என்ன – 6.வம்பறா:4 17/2
ஏய்ந்த அடிமை சிவனுக்கு யான் என்னில் இன்று என் கண் பெற்று – 6.வம்பறா:4 19/1
எங்கள் பிரான்-தனை எறியாது அயர்ந்தேன் யான் என எழுந்து – 7.வார்கொண்ட:1 15/2
ஏல அருளி செயப்பெற்றால் யான் போய் அமுது கடிது அமைத்து – 7.வார்கொண்ட:3 49/3
இன்று உமது பிரிவு ஆற்றேன் என் செய்கேன் யான் என்ன – 7.வார்கொண்ட:4 158/2
திரை சரிந்த கடல் உலகில் திருநீற்றின் நெறி புரந்து யான்
அரசு அளித்தபடி சால அழகு இது என அழிந்து அயர்வார் – 8.பொய்:2 35/3,4
மணி வண்ண சுடர் விளக்கு மாளில் யான் மாள்வன் என – 8.பொய்:6 14/3
அத்தன் அடியாரை யான் அமுது செய்விப்பது முட்ட – 10.கடல்:2 8/2
மேவு_அரிய பெரும் தவம் யான் முன்பு விளைத்தன என்னோ – 10.கடல்:5 13/1
எம்பிரான்-தன் மேனியின் மேல் சருகு விழாமை யான் வருந்தி – 12.மன்னிய:4 5/1
சிந்தை மகிழ்ந்தார் மறையோனும் மனைவி-தானும் சிறுவனை யான்
அந்த முதலையின் வாய்-நின்றும் அழைத்து கொடுத்த அவிநாசி – 13.வெள்ளானை:1 9/2,3

மேல்


யானங்கள் (1)

உயர்ந்த வாகன யானங்கள் மிசை கொண்டார் உழையர் ஆனார் – 1.திருமலை:5 20/4

மேல்


யானத்திடை-நின்று (1)

நீடு திருத்தொண்டர் புடைசூழ அங்கண் நித்தில யானத்திடை-நின்று இழிந்து சென்று – 6.வம்பறா:1 902/1

மேல்


யானத்தின் (1)

தூய யானத்தின் மிசை எழுந்தருளுவீர் என்றலும் சுடர் திங்கள் – 6.வம்பறா:1 527/2

மேல்


யானத்து (1)

நீடு மன களிப்பினொடும் எதிர்கொள்ள நித்தில யானத்து நீங்கி – 6.வம்பறா:1 300/4

மேல்


யானம் (2)

யானம் முன் இழிந்து எதிர் இறைஞ்சி எய்தினார் – 6.வம்பறா:1 244/4
பண்பு நீடி யானம் முன்பு இழிந்து இறைஞ்சு பான்மை கண்டு – 6.வம்பறா:1 989/2

மேல்


யானும் (13)

தனது உறு பேர் இடர் யானும் தாங்குவதே கருமம் என – 1.திருமலை:3 42/3
பெரு முனி வெண்ணெய் நல்லூர் பித்தனுக்கு யானும் என்-பால் – 1.திருமலை:5 59/2
தலைவ யானும் என் மனைவியும் சிறுவனும் தகுமேல் – 2.தில்லை:7 40/3
யானும் இ இளைப்புற்று எய்க்கும் இது பெற வேண்டும் என்று – 3.இலை:4 27/2
என்னை இனி தனி கைவிட்டு ஏகுவீர் எனில் யானும்
முன்னம் உயிர் நீப்பன் என மொழிந்து இடரின் அழுந்தினார் – 5.திருநின்ற:1 33/3,4
ஈது எம்பெருமான் அருள் ஆகில் யானும் போவேன் என்று எழுந்து – 5.திருநின்ற:1 277/2
மன்னிய சீர் வணிகர் குல மணியே யானும் வாழேன் என்று என்று அயர்வாள் மதியினாலே – 6.வம்பறா:1 475/3
யானும் என் பதியும் செய்த தவம் என்-கொல் என்றார் – 6.வம்பறா:1 672/4
என்று கூறலும் கேட்டு முட்டு யானும் என்று இயம்பி – 6.வம்பறா:1 684/1
கண்டு முட்டு அடிகள்மார்கள் கேட்டு முட்டு யானும் காதல் – 6.வம்பறா:1 692/2
மன்னனே அமணர்-தங்கள் மாய்கையால் மயங்கி யானும்
உன்னை யான் அறிந்திலேனை உறு பிணி தீர்த்து ஆட்கொள்ள – 6.வம்பறா:1 867/2,3
இகத்தும் பரத்தும் இனி யாரை காணேன் யானும் திருநீறு – 7.வார்கொண்ட:3 77/3
யானும் பரவி தீர்க்கின்றேன் ஏழு பிறப்பின் முடங்கு கூன் – 7.வார்கொண்ட:6 9/4

மேல்


யானே (4)

என்று அவர் அருளி செய்ய யானே முன் செய் குற்றேவல் – 2.தில்லை:3 11/1
யானே இனி இ நிரை மேய்ப்பன் என்றார் அஞ்சி இடை_மகனும் – 4.மும்மை:6 24/1
தீ மாயையினை யானே போய் சிதைத்து வருகின்றேன் என்ன – 5.திருநின்ற:1 289/2
தொழுது தம் குறையை விளம்புவார் யானே தொடங்கும் துரிசு இடைப்பட்டு – 6.வம்பறா:2 326/3

மேல்


யானை (31)

மல்லல் யானை ஒலியுடன் மா ஒலி – 1.திருமலை:3 3/3
கவன வாம் புரவி யானை தேர் படை தொழில்கள் கற்று – 1.திருமலை:3 18/3
பொன் அணி ஓடை யானை பொரு பரி காலாள் மற்றும் – 2.தில்லை:5 5/3
இந்த வல் இடும்பை செய்த யானை எங்கு உற்றது என்ன – 3.இலை:1 21/2
பற்றலர் இலாதாய் நின் பொன் பட்ட மால் யானை வீழ – 3.இலை:1 27/3
மழை மத_யானை சேனை வரவினை மாற்றி மற்ற – 3.இலை:1 37/3
யானை மேற்கொண்டு சென்றார் இவுளி மேற்கொண்டு வந்தார் – 3.இலை:1 52/4
கான மேதி யானை வெம் புலி கணங்கள் கான் மரை – 3.இலை:3 78/2
யானை குதிரை கருவி படை வீரர் திண் தேர் – 4.மும்மை:1 11/3
கண் கட்டி விடும் களி யானை அ காவல் மூதூர் – 4.மும்மை:1 32/1
பணை நெடும் கை மத_யானை உரித்தவர் தம் பதி பிறவும் பணிய செல்வார் – 6.வம்பறா:1 453/4
பரும் கை யானை வாழ் வளவர் கோன் பாவையார் என்ன – 6.வம்பறா:1 670/3
கந்து சீறும் மால் யானை மீனவர் கருத்து நேர் – 6.வம்பறா:1 773/1
வன் தனி கை யானை மன்னன் முன்பு வம்-மின் என்றனர் – 6.வம்பறா:1 778/4
ஆடு இயல் யானை மன்னன் அற்புதம் எய்தி நின்றான் – 6.வம்பறா:1 848/3
எ திசையும் தொழுது ஏத்த மத்த யானை எடுத்து எதிர்கொள்பாடியினை அடைவோம் என்னும் – 6.வம்பறா:2 121/1
திருகு சின வெம் களி யானை சேரர் குலமும் உலகும் செய் – 7.வார்கொண்ட:4 5/3
கும்ப யானை மேல் கொண்டு கொற்றக்குடையும் சாமரையும் – 7.வார்கொண்ட:4 17/2
இழையில் சிறந்த ஓடை நுதல் யானை கழுத்தின்-நின்று இழிந்து – 7.வார்கொண்ட:4 18/3
யானை மிசை-நின்று இழிந்து அருளி இலங்கும் மணி மண்டபத்தின்-கண் – 7.வார்கொண்ட:4 21/1
பட்ட நுதல் வெம் களி யானை பிடர் மேல் கொண்டு பனி மதியம் – 7.வார்கொண்ட:4 47/3
யானை அணிகள் பரந்து வழி எங்கும் நிரந்து செல்லுவன – 7.வார்கொண்ட:4 48/1
சின யானை உரித்து அணிந்தார் திரு பாதம் தொழுது இருந்தார் – 7.வார்கொண்ட:4 118/4
குசை கொள் வாசி நிரை வெள்ளம் கும்ப யானை அணி வெள்ளம் – 7.வார்கொண்ட:4 143/2
வாரியார் மத_யானை வழுதியர்-தம் மதி மரபில் – 9.கறை:2 5/3
பனை நெடும் கை மத_யானை பஞ்சவனார் படை குடைந்து – 9.கறை:3 7/2
சென்ற யானை அநுசிதம் என்று அதனை சிதைக்க சிலம்பி-தான் – 12.மன்னிய:4 4/2
அன்று கழித்த பிற்றை நாள் அடல் வெள் யானை அழித்தது-ஆல் – 12.மன்னிய:4 4/4
கும்ப யானை கை நிலத்தில் மோதி குலைந்து வீழ்ந்தது-ஆல் – 12.மன்னிய:4 5/4
யானை மேல் கொண்டு செல்கின்ற பொழுதினில் இமையவர் குழாம் என்னும் – 13.வெள்ளானை:1 39/1
புரசை யானை முன் சேவித்து வந்தனன் பொழியும் நின் கருணை தொண்டு – 13.வெள்ளானை:1 46/2

மேல்


யானை-தன்னை (1)

வென்றி மால் யானை-தன்னை மேல் கொண்ட பாகரோடும் – 3.இலை:1 13/1

மேல்


யானைக்கும் (1)

மறையில் பொருளும் தரும் ஆற்றான் மத_யானைக்கும் வரம் கொடுத்து – 12.மன்னிய:4 6/2

மேல்


யானையால் (1)

எங்கள் எதிர் ஏறு அழிய யானையால் இவ்வண்ணம் நின் சீர் – 5.திருநின்ற:1 121/2

மேல்


யானையின் (4)

களி யானையின் ஈர் உரியாய் சிவதா – 3.இலை:1 16/1
யானையின் கையில் பிழைத்த வினை அமண் கையர்கள் எல்லாம் – 5.திருநின்ற:1 120/1
பாழி மால் யானையின் உரி புனைந்தார் பனையூர் பணிந்து – 6.வம்பறா:1 519/3
ஒன்று சிந்தை நம் ஊரனை உம்பர் வெள் யானையின் உடன் ஏற்றி – 13.வெள்ளானை:1 31/3

மேல்


யானையினை (1)

அருவி மத மால் யானையினை அணைந்து மிசை கொண்ட அரசர் பெரும் – 13.வெள்ளானை:1 18/3

மேல்


யானையும் (3)

எழுந்தது பாகரோடும் யானையும் எழுந்தது அன்றே – 3.இலை:1 48/4
ஆடி அ யானையும் மன்னற்கு ஆகுலம் ஆக்கியது அன்றே – 5.திருநின்ற:1 119/4
தேசு தங்கிய யானையும் புரவியும் இழிந்து சேணிடை செல்வார் – 13.வெள்ளானை:1 40/3

மேல்


யானையை (2)

பரும் கை யானையை உரித்தவர் இருந்த அ பாசூர் – 4.மும்மை:5 32/3
துன்னும் யானையை தூற்றில் வாழ் முயல் முன் துரக்க எய்திய தொலைவு_இல் ஊக்கத்தால் – 4.மும்மை:5 77/2

மேல்


யானோ (1)

ஊரும் சடையீர் விடை மேல் வருவீர் உமது அன்பிலர் போல் யானோ உறுவேன் – 1.திருமலை:5 177/4

மேல்