பை – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு


பை (21)

பை அம் சுடர் விடு நாக பள்ளி கொள்வான் உள்ளத்தானும் – தேவா-அப்:41/1
பை வாய் பாம்பு அரை ஆர்த்த பரமனை கைகாள் கூப்பி தொழீர் – தேவா-அப்:88/2
பாடு அரவத்தர் பணம் அஞ்சு பை விரித்து – தேவா-அப்:171/3
பை அரவு அசைத்த அல்குல் பனி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:221/1
பை அரா அரையில் ஆர்த்து பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:562/4
பை மறித்து இயற்றி அன்ன பாங்கு இலா குரம்பை நின்று – தேவா-அப்:656/2
பை மாண் அரவு அல்குல் பங்கய சீறடியாள் வெருவ – தேவா-அப்:810/1
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனார் – தேவா-அப்:1088/2
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பழனம்-பால் – தேவா-அப்:1418/3
வரி பை ஆடு அரவு ஆட்டி மத கரி – தேவா-அப்:1482/1
பை கொள் பாம்பு அரையான் படை ஆர் மழு – தேவா-அப்:1764/2
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனே – தேவா-அப்:2035/4
பை கிளரும் நாகம் அசைத்தான் கண்டாய் பராபரன் கண்டாய் பாசூரான் கண்டாய் – தேவா-அப்:2318/3
பை ஆடு அரவம் கை ஏந்தினானை பரிதி போல் திரு மேனி பால் நீற்றானை – தேவா-அப்:2383/1
பை ஆடு அரவம் மதி உடனே வைத்த சடையானை பாய் புலி தோல் உடையான்-தன்னை – தேவா-அப்:2550/3
பஞ்சு அடுத்த மெல்விரலாள்_பங்கர் போலும் பை நாகம் அரைக்கு அசைத்த பரமர் போலும் – தேவா-அப்:2621/1
பை உலாம் நாகம் கொண்டு ஆட்டுவாரும் பரவுவார் பாவங்கள் பாற்றுவாரும் – தேவா-அப்:2678/2
பையானை பை அரவம் அசைத்தான்-தன்னை பரந்தானை பவள மால் வரை போல் மேனி – தேவா-அப்:2750/3
பை ஆடு அரவம் அசைத்தார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2866/3
பை தானத்து ஒண் மதியும் பாம்பும் நீரும் படர் சடை மேல் வைத்து உகந்த பண்பன் மேய – தேவா-அப்:2996/3
பை அரவ கச்சையாய் பால் வெண் நீற்றாய் பளிக்கு குழையினாய் பண் ஆர் இன்சொல் – தேவா-அப்:3059/1
மேல்


பைக்கையும் (1)

பைக்கையும் பாந்தி விழிக்கையும் பாம்பு சடையிடையே – தேவா-அப்:852/1
மேல்


பைங்கழலான் (1)

கனையும் பைங்கழலான் கரக்கோயிலை – தேவா-அப்:1258/3
மேல்


பைங்குழலாள் (1)

ஆ தங்கு பைங்குழலாள் பாகம் கொண்டார் அனல் கொண்டார் அந்தி வாய் வண்ணம் கொண்டார் – தேவா-அப்:2182/3
மேல்


பைங்கொடியாள் (1)

பண்ணியனை பைங்கொடியாள்_பாகன்-தன்னை படர் சடை மேல் புனல் கரந்த படிறன்-தன்னை – தேவா-அப்:2634/1
மேல்


பைங்கொடியாள்_பாகன்-தன்னை (1)

பண்ணியனை பைங்கொடியாள்_பாகன்-தன்னை படர் சடை மேல் புனல் கரந்த படிறன்-தன்னை – தேவா-அப்:2634/1
மேல்


பைஞ்ஞீலி (8)

பத்தர்தாம் தொழுது ஏத்து பைஞ்ஞீலி எம் – தேவா-அப்:1477/3
பழுது ஒன்று இன்றி பைஞ்ஞீலி பரமனை – தேவா-அப்:1478/3
கண்டம் கார் வயல் சூழ்ந்த பைஞ்ஞீலி எம் – தேவா-அப்:1481/3
திரு பைஞ்ஞீலி திசை தொழுவார்கள் போய் – தேவா-அப்:1482/3
தேர் உலாம் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலி எம் – தேவா-அப்:1484/3
பட அரவம் ஒன்று கொண்டு அரையில் ஆர்த்த பராபரனை பைஞ்ஞீலி மேவினானை – தேவா-அப்:2288/1
பந்திப்ப அரியாயும் நீயே என்றும் பைஞ்ஞீலி மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2497/3
பழனம் பனந்தாள் பாதாளம் பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட்டூர் தண் – தேவா-அப்:2792/3
மேல்


பைஞ்ஞீலியார் (3)

படை கொள் பாரிடம் சூழ்ந்த பைஞ்ஞீலியார்
சடையின் கங்கை தரித்த சதுரரை – தேவா-அப்:1476/2,3
தாழை தண் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியார்
யாழின் பாட்டை உகந்த அடிகளே – தேவா-அப்:1480/3,4
பாடல் வண்டு இசை கேட்கும் பைஞ்ஞீலியார்
பேடும் ஆணும் பிறர் அறியாதது ஓர் – தேவா-அப்:1483/2,3
மேல்


பைஞ்ஞீலியான் (1)

படித்தான் தலை அறுத்த பாசுபதன் காண் பராய்த்துறையான் பழனம் பைஞ்ஞீலியான் காண் – தேவா-அப்:2162/3
மேல்


பைஞ்ஞீலியானை (1)

பாரார் பரவும் பழனத்தானை பருப்பதத்தானை பைஞ்ஞீலியானை
சீரார் செழும் பவள குன்று ஒப்பானை திகழும் திரு முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2306/1,2
மேல்


பைஞ்ஞீலியிடம் (1)

பகலவன்-தன் பல் உகுத்த படிறன்-தன்னை பராய்த்துறை பைஞ்ஞீலியிடம் பாவித்தானை – தேவா-அப்:2424/1
மேல்


பைஞ்ஞீலியும் (1)

பாரார் பரவும் சீர் பைஞ்ஞீலியும் பந்தணைநல்லூரும் பாசூர் நல்லம் – தேவா-அப்:2157/2
மேல்


பைஞ்ஞீலியுள் (1)

சென்று பார் இடம் ஏத்து பைஞ்ஞீலியுள்
என்றும் மேவி இருந்த அடிகளே – தேவா-அப்:1479/3,4
மேல்


பைதல் (3)

பைதல் பிண குழை காளி வெம் கோபம் பங்கப்படுப்பான் – தேவா-அப்:967/1
பைதல் பிறையொடு பாம்பு உடன்வைத்த பரிசு அறியோம் – தேவா-அப்:1013/3
பைதல் வெண் பிறை பாம்பு உடன் வைப்பதே – தேவா-அப்:1158/4
மேல்


பைம் (47)

பைம் கிளி பேடையொடு ஆடி பறந்து வருவன கண்டேன் – தேவா-அப்:30/4
பாலில் திகழும் பைம் கனியை பராய்த்துறை எம் பசும்பொன்னை – தேவா-அப்:149/3
பாரமும் பூண்பர் நன் பைம் கண் மிளிர் அரவு – தேவா-அப்:167/3
பாலை நகு பனி வெண் மதி பைம் கொன்றை – தேவா-அப்:173/1
பைம் தளிர் கொம்பர் அன்ன படர் கொடி பயிலப்பட்டு – தேவா-அப்:512/2
பைம் கண் வெள் ஏறு அது ஏறி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:566/4
பண்ணின் ஆர் முழவம் ஓவா பைம் பொழில் பழனை மேய – தேவா-அப்:661/3
பாட்டின் ஆர் முழவம் ஓவா பைம் பொழில் பழனை மேயார் – தேவா-அப்:664/3
பாடினார் சாமவேதம் பைம் பொழில் பழனை மேயார் – தேவா-அப்:666/3
பத்தர்-தம் பாவம் தீர்க்கும் பைம் பொழில் பழனை மேய – தேவா-அப்:668/3
பொடி கொள் அகலத்து பொன் பிதிர்ந்து அன்ன பைம் கொன்றை அம் தார் – தேவா-அப்:804/3
பழக ஒர் ஊர்தி அரன் பைம் கண் பாரிடம் பாணிசெய்ய – தேவா-அப்:811/1
பைம் கண் தலைக்கு சுடலை களரி பரு மணி சேர் – தேவா-அப்:831/2
பைம் போது உழக்கி பவளம் தழைப்பன பாங்கு அறியா – தேவா-அப்:892/2
அறை மல்கு பைம் கழல் ஆர்க்க நின்றான் அணி ஆர் சடை மேல் – தேவா-அப்:950/1
பைம் கால் தவளை பறை கொட்ட பாசிலை நீர் படுகர் – தேவா-அப்:1003/1
பவள கொழுந்து அன்ன பைம் முக நாகம் அ நாகத்தொடும் – தேவா-அப்:1060/3
படை கொள் புதத்தன் பைம் கொன்றைத்தாரினன் – தேவா-அப்:1180/1
என் பொனே இமையோர் தொழு பைம் கழல் – தேவா-அப்:1195/1
உலவு பைம் பொழில் சூழ் திரு ஒற்றியூர் – தேவா-அப்:1311/3
பைம் கண் ஆனையின் ஈர் உரி போத்தவர் – தேவா-அப்:1434/2
இறைவனார் இமையோர் தொழு பைம் கழல் – தேவா-அப்:1451/1
பச்சை தீரும் என் பைம் கொடி பால் மதி – தேவா-அப்:1457/2
பரு வெண் கோட்டு பைம் கண் மத வேழத்தின் – தேவா-அப்:1561/1
பைம் கண் ஏற்றினர் பாலைத்துறையரே – தேவா-அப்:1588/4
பைம் கண் ஆனையின் ஈர் உரி போர்த்தவர் – தேவா-அப்:1608/2
ஆடு பைம் கழல் அம்ம அழகிதே – தேவா-அப்:1624/4
வார் கொள் பைம் பொழில் மாற்பேறு கைதொழுவார்கள் – தேவா-அப்:1666/3
ஓது பைம் கிளிக்கு ஒண் பால் அமுது ஊட்டி – தேவா-அப்:1937/1
பைம் மாலும் அரவா பரமா பசு – தேவா-அப்:2021/1
செய்யனே கரியனே கண்டம் பைம் கண் வெள் எயிற்ற ஆடு அரவனே வினைகள் போக – தேவா-அப்:2121/1
பாதம் கம் நீறு ஏற்றார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2182/4
பாடலார் ஆடலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2183/4
பாத தொடு கழலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2184/4
பார் உலாம் புகழ் ஏற்றார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2185/4
பண்டை வினை அறுப்பார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2186/4
படம் மன்னு திரு முடியார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2187/4
பற்றார் மதில் எரித்தார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2188/4
பண் அமரும் பாடலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2189/4
பாறு ஏறு வெண் தலையார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2190/4
பல் ஊர் பலி திரிவார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2191/4
பைம் தளிர் கொன்றை அம் தாரர் போலும் படை கணாள் பாகம் உடையார் போலும் – தேவா-அப்:2252/1
பண் நிலவு பைம் பொழில் சூழ் பழனத்தானை பசும்பொன்னின் நிறத்தானை பால் நீற்றானை – தேவா-அப்:2276/2
சரத்தானை சரத்தையும் தன் தாள் கீழ் வைத்த தபோதனனை சடாமகுடத்து அணிந்த பைம் கண் – தேவா-அப்:2592/3
பயில்வு ஆய பராய்த்துறை தென்பாலைத்துறை பண்டு எழுவர் தவத்துறை வெண்துறை பைம் பொழில் – தேவா-அப்:2807/2
பால் ஆகி தேன் ஆகி பழமும் ஆகி பைம் கரும்பாய் அங்கு அருந்தும் சுவைஅனானை – தேவா-அப்:2827/2
பார் கெழுவு புகழ் மறையோர் பயிலும் மாட பைம் பொழில் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2962/3
மேல்


பைம்பூண் (1)

கீள் அலால் உடையும் இல்லை கிளர் பொறிஅரவம் பைம்பூண்
தோள் அலால் துணையும் இல்லை தொத்து அலர்கின்ற வேனில் – தேவா-அப்:400/1,2
மேல்


பைம்பொனே (1)

பைம்பொனே பவள குன்றே பரமனே பால் வெண் நீற்றாய் – தேவா-அப்:612/1
மேல்


பைய (2)

பைய நின் ஆடல் காண்பான் பரம நான் வந்த ஆறே – தேவா-அப்:235/4
வெம்ப வருகிற்பது அன்று கூற்றம் நம் மேல் வெய்ய வினை பகையும் பைய நையும் – தேவா-அப்:3016/1
மேல்


பையர் (2)

பொடி நாறு மேனியர் பூதி பையர் புலித்தோலர் பொங்கு அரவர் பூண நூலர் – தேவா-அப்:2205/1
பொடி ஆரும் மேனியர் பூதி பையர் புலித்தோலர் பொங்கு அரவர் பூண நூலர் – தேவா-அப்:2259/2
மேல்


பையானை (1)

பையானை பை அரவம் அசைத்தான்-தன்னை பரந்தானை பவள மால் வரை போல் மேனி – தேவா-அப்:2750/3

மேல்