மொ – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு


மொட்டரை (1)

முடையரை தலை முண்டிக்கும் மொட்டரை
கடையரை கடிந்தார் கனல் வெண் மழு – தேவா-அப்:1655/1,2
மேல்


மொட்டின் (1)

மறையிடை பொருளர் மொட்டின் மலர் வழி வாச தேனர் – தேவா-அப்:623/1
மேல்


மொட்டு (1)

மொட்டு இடு கமல பொய்கை திரு ஐயாறு அமர்ந்த தேனோடு – தேவா-அப்:386/3
மேல்


மொட்டை (1)

முற்றாத முழுமுதலை முளையை மொட்டை முழு மலரின் மூர்த்தியை முனியாது என்றும் – தேவா-அப்:2888/1
மேல்


மொண்ணரை (1)

மாசினை ஏறிய மேனியர் வன்கண்ணர் மொண்ணரை விட்டு – தேவா-அப்:979/1
மேல்


மொண்ணை (1)

மொண்ணை மா மருதா என்று என் மொய் குழல் – தேவா-அப்:1220/3
மேல்


மொந்தை (6)

கொடுகொட்டி கொக்கரை தக்கை குழல் தாளம் வீணை மொந்தை
வடு விட்ட கொன்றையும் வன்னியும் மத்தமும் வாள் அரவும் – தேவா-அப்:1046/2,3
முரலும் கின்னரம் மொந்தை முழங்கவே – தேவா-அப்:1630/1
குழலோடு கொக்கரை கைத்தாளம் மொந்தை குறள் பூதம் முன் பாட தான் ஆடுமே – தேவா-அப்:2124/1
பீடு உலாம்-தனை செய்வார் பிடவம் மொந்தை குட முழவம் கொடுகொட்டி குழலும் ஓங்க – தேவா-அப்:2183/3
குரு மணியை குழல் மொந்தை தாளம் வீணை கொக்கரையின் சச்சரியின் பாணியானை – தேவா-அப்:2375/2
அறை கலந்த குழல் மொந்தை வீணை யாழும் அந்தரத்தின் கந்தருவர் அமரர் ஏத்த – தேவா-அப்:2487/1
மேல்


மொந்தையும் (1)

பாடும் பறண்டையும் மொந்தையும் ஆர்ப்ப பரந்து பல் பேய் – தேவா-அப்:891/1
மேல்


மொய் (13)

முற்பிறைக்கண்ணியினானை மொய் குழலாளொடும் பாடி – தேவா-அப்:29/1
முத்து இசையும் புனல் பொன்னி மொய் பவளம் கொழித்து உந்த – தேவா-அப்:132/1
மூன்று-கொல் ஆம் அவர் சூலத்தின் மொய் இலை – தேவா-அப்:179/2
முளைத்த வெண் பிறை மொய் சடை உடையாய் எப்போதும் என் நெஞ்சு இடம்கொள்ள – தேவா-அப்:206/1
முடக்கினார் முகிழ் வெண் திங்கள் மொய் சடை கற்றை-தன் மேல் – தேவா-அப்:269/2
முளை எயிற்று இள நல் ஏனம் பூண்டு மொய் சடைகள் தாழ – தேவா-அப்:531/1
மொய் கை அரக்கனை ஊன்றினன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:852/3
மொய் மலர் வேய்ந்த விரி சடை கற்றை விண்ணோர் பெருமான் – தேவா-அப்:857/2
முத்தின் திரளும் பளிங்கினின் சோதியும் மொய் பவள – தேவா-அப்:957/3
மொண்ணை மா மருதா என்று என் மொய் குழல் – தேவா-அப்:1220/3
முல்லை வெண் நகை மொய் குழலாய் உனக்கு – தேவா-அப்:1522/1
முத்து ஊரும் புனல் மொய் அரிசிற்கரை – தேவா-அப்:1680/1
முத்து அனைய முகிழ் முறுவல் உடையார் போலும் மொய் பவள கொடி அனைய சடையார் போலும் – தேவா-அப்:2623/1
மேல்


மொய்த்த (5)

ஆயிரம் திங்கள் மொய்த்த அலை கடல் அமுதம் வாங்கி – தேவா-அப்:517/1
மொய்த்த கான் முகிழ் வெண் திங்கள் மூர்த்தி என் உச்சி-தன் மேல் – தேவா-அப்:753/3
மொய்த்த கதிர் மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர் – தேவா-அப்:917/3
நீறு தடவந்து இடபம் ஏறி நித்தம் பலி கொள்வர் மொய்த்த பூதம் – தேவா-அப்:2254/2
பாட அடியார் பரவ கண்டேன் பத்தர் கணம் கண்டேன் மொய்த்த பூதம் – தேவா-அப்:2850/1
மேல்


மொய்த்து (3)

மோத்தையை கண்ட காக்கை போல வல்வினைகள் மொய்த்து உன் – தேவா-அப்:732/1
முற்றி கிடந்து முந்நீரின் மிதந்து உடன் மொய்த்து அமரர் – தேவா-அப்:796/1
முந்தி பொழிவன முத்தி கொடுப்பன மொய்த்து இருண்டு – தேவா-அப்:883/2
மேல்


மொழி (7)

பண்ணின் இசை மொழி பாடிய வானவர்தாம் பணிவார் – தேவா-அப்:868/2
ஆர்ந்த மட மொழி மங்கை ஓர்பாகம் மகிழ்ந்து உடையான் – தேவா-அப்:869/2
குழலின் நேர் மொழி கூறிய கேண்-மினோ – தேவா-அப்:1469/2
நாறு சாந்து அணி நல் முலை மென் மொழி
மாறு இலா மலைமங்கை ஒர்பாகமா – தேவா-அப்:1777/1,2
கரும்பு அமரும் மொழி மடவாள் பங்கன்-தன்னை கன வயிர குன்று அனைய காட்சியானை – தேவா-அப்:2091/1
பால் ஆரும் மொழி மடவாள் பாகன் கண்டாய் பசு ஏறி பலி திரியும் பண்பன் கண்டாய் – தேவா-அப்:2484/3
பண் தங்கு மொழி மடவாள் பாகத்தான் காண் பரமன் காண் பரமேட்டி ஆயினான் காண் – தேவா-அப்:2610/3
மேல்


மொழிய (1)

எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாம் மொழிய
பண்ணின் இசை மொழி பாடிய வானவர்தாம் பணிவார் – தேவா-அப்:868/1,2
மேல்


மொழியர் (1)

மறையுறு மொழியர் போலும் மால் மறையவன்-தன்னோடு – தேவா-அப்:644/2
மேல்


மொழியவரும் (1)

பண் மலிந்த மொழியவரும் யானும் எல்லாம் பணிந்து இறைஞ்சி தம்முடைய பின்பின் செல்ல – தேவா-அப்:2666/3
மேல்


மொழியவள் (1)

யாழின் மொழியவள் அஞ்ச அஞ்சாது அரு வரை போன்ற – தேவா-அப்:19/2
மேல்


மொழியா (1)

எளியனா மொழியா இலங்கைக்கு இறை – தேவா-அப்:1304/1
மேல்


மொழியார் (1)

குழலை யாழ் மொழியார் இசை வேட்கையால் – தேவா-அப்:1189/1
மேல்


மொழியால் (1)

உற்ற நல் மொழியால் அருள்செய்த நல் – தேவா-அப்:1709/2
மேல்


மொழியாள் (2)

பண்ணின் நேர் மொழியாள் உமை_பங்கரோ – தேவா-அப்:1163/1
பால் இன் மொழியாள் ஓர்பாகம் கண்டேன் பதினெண் கணமும் பயில கண்டேன் – தேவா-அப்:2851/1
மேல்


மொழியாளை (1)

பண்டு ஒத்த மொழியாளை ஒர்பாகமாய் – தேவா-அப்:1145/1
மேல்


மொழியாளொடும் (1)

திங்கள் மதிக்கண்ணியானை தே_மொழியாளொடும் பாடி – தேவா-அப்:30/1
மேல்


மொழியை (1)

சிலையவன் காண் செய்ய வாய் கரிய கூந்தல் தேன்_மொழியை ஒருபாகம் சேர்த்தினான் காண் – தேவா-அப்:2569/2
மேல்


மொழிவர் (1)

மருதங்களா மொழிவர் மங்கையோடு வானவரும் மால் அயனும் கூடி தங்கள் – தேவா-அப்:2442/1
மேல்


மொழிவழி (1)

மொழிவழி ஓடி முடிவேன் முடியாமை காத்துக்கொண்டாய் – தேவா-அப்:996/2
மேல்


மொழிவானை (1)

முடுகுவது அன்று தன்மம் என நின்று பாகன் மொழிவானை நன்று முனியா – தேவா-அப்:144/2

மேல்