து – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

துக்க 6
துக்கம் 5
துகள் 2
துகில் 4
துகிலும் 1
துங்க 2
துச்சுளே 1
துஞ்ச 1
துஞ்சா 4
துஞ்சாத 1
துஞ்சிடை 1
துஞ்சு 6
துஞ்சும் 3
துஞ்சும்போதாக 1
துஞ்சும்போதும் 3
துஞ்சுவேற்கு 1
துட்டங்கனாய் 1
துட்டர் 1
துட்டரேல் 1
துட்டன் 1
துட்டனாய் 1
துட்டனை 1
துட்டு 2
துடக்கி 3
துடி 12
துடி_இடையாள் 1
துடிக்கின்ற 1
துடித்த 1
துடியின் 2
துடியும் 1
துடும்பல்செய் 1
துடைக்கினும் 1
துடைத்து 1
துடைப்பவர்-தம் 1
துடைப்பாய் 1
துடையூரும் 1
துண்ட 4
துண்டத்தாய் 1
துண்டத்தானை 1
துண்டத்தில் 1
துண்டத்து 1
துண்டம் 1
துண்டமும் 1
துண்டனே 1
துண்ணென்று 2
துண்ணெனா 1
துணி 8
துணித்த 3
துணிந்தே 1
துணியானே 1
துணிவன 1
துணிவு 1
துணை 36
துணைமாலை 1
துணையாய் 3
துணையிலி 1
துணையிலியை 1
துணையினானை 1
துணையும் 6
துணையே 1
துணையை 3
துத்தி 2
துத்தியம்செய 1
துதி 2
துதிக்கல் 1
துதிசெய்து 1
துதிசெய 1
துதித்து 2
துதித்தும் 1
துதியாதே 1
துதைந்த 4
துதைந்தார் 1
துதைந்து 6
துதைய 2
துதையிலே 1
துப்பறை 1
துப்பினை 1
துப்பு 1
துப்புரவு 1
தும்பி 3
தும்புருவும் 1
தும்பை 2
துய்ப்பனவும் 1
துயக்கம் 1
துயக்கின 1
துயக்கினவா 1
துயக்கு 3
துயர் 21
துயரங்கள் 1
துயரம் 8
துயரமே 3
துயரிலே 1
துயரும் 1
துயில் 14
துர்ச்சனவர் 1
துரக்கனை 1
துரக்கும் 1
துரகம் 1
துரந்த 3
துரந்தவன் 1
துரந்தனை 1
துரந்து 2
துரப்பது 1
துரப்பர் 1
துரப்பன 1
துரவை 1
துரிசர்-தம்மை 1
துரிசு 3
துரிசுபட்டேனுக்கும் 1
துருத்தி 13
துருத்தியார் 1
துருத்தியானை 8
துருத்தியும் 1
துருவி 1
துலங்கல் 1
துலங்காமே 1
துலங்கி 1
துலங்கும் 1
துலை 2
துவர் 5
துவரால் 1
துவலை 4
துவள 2
துவையூரும் 1
துழனி 1
துழாய் 2
துள் 1
துள்ளலை 1
துள்ளியும் 1
துள்ளு 1
துள்ளும் 1
துள்ளுவர் 1
துளக்கம் 1
துளக்கிலியை 1
துளக்கு 3
துளக்கும் 1
துளங்க 7
துளங்கா 2
துளங்காத 1
துளங்காது 1
துளங்கான் 1
துளங்கி 1
துளங்கில் 1
துளங்கு 2
துளங்கும் 2
துளி 2
துளியானை 1
துளியில் 1
துளும்புகின்றேன் 1
துளை 5
துளைக்கின்ற 1
துளைத்தானை 1
துற்ற 1
துற்றவர் 1
துற்றி 1
துற 1
துறக்கப்படாத 1
துறக்கல் 1
துறந்த 1
துறந்தார்-தம் 1
துறந்தார்க்கு 1
துறந்தான்-தன்னை 1
துறந்தானை 1
துறந்து 5
துறந்தேன்-தன்னை 1
துறந்தோர் 1
துறப்பித்தவா 1
துறப்பிப்பாய் 1
துறம் 1
துறவா 2
துறவாதே 2
துறவி 6
துறும்பு 1
துறை 7
துறை-தொறும் 1
துறைகள் 1
துறையராய் 1
துறையனே 1
துறையும் 1
துறையூர் 1
துறையூரும் 1
துன் 3
துன்ப 6
துன்பங்கள் 1
துன்பத்து 1
துன்பம் 10
துன்பமும் 2
துன்பு 3
துன்பே 1
துன்மதியால் 1
துன்றி 3
துன்று 7
துன்றும் 1
துன்ன 2
துன்னத்தின் 1
துன்னம் 1
துன்னி 1
துன்னிய 7
துன்னினும் 1
துன்னு 2
துன்னும் 1
துன்னுவார் 2


துக்க (6)

துக்க மா மூடர்-தம்மை துயரிலே வீழ்ப்பர் போலும் – தேவா-அப்:543/3
துறப்பித்தவா துக்க நோய்வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:880/2
துயக்கினவா துக்க நோய் வினை காட்டி துயக்கின நோய் – தேவா-அப்:881/1
சலம் துக்க சென்னி சடையான் கண்டாய் தாமரையான் செங்கண்மால்தானே கண்டாய் – தேவா-அப்:2319/3
மலம் துக்க மால் விடை ஒன்று ஊர்ந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2319/4
இடர் பாவம் என மிக்க துக்க வேட்கை வெறுப்பே என்று அனைவீரும் உலகை ஓடி – தேவா-அப்:2360/1
மேல்


துக்கம் (5)

மேவித்து நின்று விளைந்தன வெம் துயர் துக்கம் எல்லாம் – தேவா-அப்:833/1
துக்கம் தீர் வகை சொல்லுவன் கேண்-மினோ – தேவா-அப்:1497/2
தொடரும் தொண்டரை துக்கம் தொடர்ந்து வந்து – தேவா-அப்:1586/1
நிலம் துக்கம் நீர் வளி தீ ஆனான் கண்டாய் நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2319/2
சுழி துணை ஆம் பிறவி வழி துக்கம் நீக்கும் சுருள் சடை எம்பெருமானே தூய தெண் நீர் – தேவா-அப்:2492/1
மேல்


துகள் (2)

சொல்லானை சொல் ஆர்ந்த பொருளானை துகள் ஏதும் – தேவா-அப்:68/3
தோடு ஏறும் மலர் கடுக்கை வன்னி மத்தம் துன்னிய செஞ்சடையான் காண் துகள் தீர் சங்கம் – தேவா-அப்:2843/2
மேல்


துகில் (4)

சூழும் அரவ துகிலும் துகில் கிழி கோவண கீளும் – தேவா-அப்:19/1
உடுத்த துகில் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:772/4
கீறு கோவண ஐ துகில் ஆடையர் – தேவா-அப்:1429/2
துகில் உடுத்து பொன் பூண்டு திரிவார் சொல்லும் சொல் கேட்க கடவோமோ துரிசு அற்றோமே – தேவா-அப்:3048/4
மேல்


துகிலும் (1)

சூழும் அரவ துகிலும் துகில் கிழி கோவண கீளும் – தேவா-அப்:19/1
மேல்


துங்க (2)

துங்க நகத்தால் அன்றி தொலையா வென்றி தொகு திறல் அ இரணியனை ஆகம் கீண்ட – தேவா-அப்:2919/1
பொருந்து புனல் தழுவு வயல் நிலவு துங்க பொழில் கெழுவுதரும் ஓமாம்புலியூர் நாளும் – தேவா-அப்:2959/3
மேல்


துச்சுளே (1)

துச்சுளே அழுந்தி வீழ்ந்து துயரமே இடும்பை-தன்னுள் – தேவா-அப்:676/2
மேல்


துஞ்ச (1)

துஞ்ச வண்ணத்தர் துஞ்சாத கண்ணார் தொழும் – தேவா-அப்:168/3
மேல்


துஞ்சா (4)

துஞ்சா போர் வாள் அரக்கன் தோள் நெரிய கண் குருதி – தேவா-அப்:197/2
வஞ்ச பெண் அரங்கு கோயில் வாள் எயிற்று அரவம் துஞ்சா
வஞ்ச பெண் இருந்த சூழல் வான் தவழ் மதியம் தோயும் – தேவா-அப்:730/1,2
துஞ்சா பலி தேரும் தோன்றால் போற்றி தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி – தேவா-அப்:2136/2
சுற்றி நின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில் சொல்லுகேன் கேள் நெஞ்சே துஞ்சா வண்ணம் – தேவா-அப்:2401/2
மேல்


துஞ்சாத (1)

துஞ்ச வண்ணத்தர் துஞ்சாத கண்ணார் தொழும் – தேவா-அப்:168/3
மேல்


துஞ்சிடை (1)

துஞ்சிடை கண்டு கனவின்-தலை தொழுதேற்கு அவன்தான் – தேவா-அப்:946/3
மேல்


துஞ்சு (6)

துஞ்சு இருளில் ஆடல் உகந்தானை தன் தொண்டர் – தேவா-அப்:194/2
துஞ்சு அடை இருள் கிழிய துளங்கு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:218/4
துஞ்சு இருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்து இராதே – தேவா-அப்:683/1
கழுது துஞ்சு இருள் காட்டகத்து ஆடலான் – தேவா-அப்:1478/2
துஞ்சு இடைய வந்து துடியும் கொட்ட துண்ணென்று எழுந்திருந்தேன் சொல்லமாட்டேன் – தேவா-அப்:2217/3
துஞ்சு இருளில் ஆடல் உகந்தாய் போற்றி தூ நீறு மெய்க்கு அணிந்த சோதீ போற்றி – தேவா-அப்:2409/3
மேல்


துஞ்சும் (3)

பலவும் அன்னங்கள் பல் மலர் மேல் துஞ்சும்
கலவ மஞ்ஞைகள் கார் என எள்குறும் – தேவா-அப்:1311/1,2
துஞ்சும் போழ்து நின் நாம திரு எழுத்து – தேவா-அப்:1337/3
கண் துஞ்சும் கரு நெடு மால் ஆழி வேண்டி கண் இடந்து சூட்ட கண்டு அருளுவான் காண் – தேவா-அப்:2610/1
மேல்


துஞ்சும்போதாக (1)

துஞ்சும்போதாக வந்து துணை எனக்கு ஆகி நின்று – தேவா-அப்:548/3
மேல்


துஞ்சும்போதும் (3)

துஞ்சும்போதும் துயில் இன்றி ஏத்துவார் – தேவா-அப்:1159/1
துஞ்சும்போதும் துணை எனல் ஆகுமே – தேவா-அப்:1475/4
துஞ்சும்போதும் சுடர்விடு சோதியை – தேவா-அப்:1991/1
மேல்


துஞ்சுவேற்கு (1)

எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சுவேற்கு ஒருவர் வந்து – தேவா-அப்:256/1
மேல்


துட்டங்கனாய் (1)

பட்டி துட்டங்கனாய் பலி தேர்வது ஓர் – தேவா-அப்:2029/2
மேல்


துட்டர் (1)

துட்டர் வான் புரம் சுட்ட சுவண்டரோ – தேவா-அப்:1165/2
மேல்


துட்டரேல் (1)

துட்டரேல் அறியேன் இவர் சூழ்ச்சிமை – தேவா-அப்:1319/3
மேல்


துட்டன் (1)

துட்டன் ஆகி மலை எடுத்து அஃதின் கீழ் – தேவா-அப்:1721/1
மேல்


துட்டனாய் (1)

துட்டனாய் வினை அது என்னும் கழித்தலை அகப்பட்டேனை – தேவா-அப்:552/1
மேல்


துட்டனை (1)

துட்டனை துட்டு தீர்த்து சுவைபட கீதம் கேட்ட – தேவா-அப்:763/2
மேல்


துட்டு (2)

துட்டனை துட்டு தீர்த்து சுவைபட கீதம் கேட்ட – தேவா-அப்:763/2
துட்டு அடக்கிய தோணிபுரத்து உறை – தேவா-அப்:1526/3
மேல்


துடக்கி (3)

தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட – தேவா-அப்:1/3
வஞ்சம் இது ஒப்பது கண்டு அறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட – தேவா-அப்:2/2
வார்த்தை இது ஒப்பது கேட்டு அறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட – தேவா-அப்:5/3
மேல்


துடி (12)

தொண்டை கொப்பளித்த செ வாய் துடி இடை பரவை அல்குல் – தேவா-அப்:248/1
சுரி புரி விரிகுழலாள் துடி இடை பரவை அல்குல் – தேவா-அப்:254/3
தொடக்கினார் தொண்டை செ வாய் துடி இடை பரவை அல்குல் – தேவா-அப்:269/3
துடி உடை வேடர் ஆகி தூய மந்திரங்கள் சொல்லி – தேவா-அப்:486/3
துடி கொண்ட கையும் துதைந்த வெண் நீறும் சுரி குழலாள் – தேவா-அப்:786/2
துடி ஆம் துடியின் முழக்கம்தான் ஆம் சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பான் ஆம் – தேவா-அப்:2240/1
கான் ஏறு கரி கதற உரித்தார் போலும் கட்டங்கம் கொடி துடி கை கொண்டார் போலும் – தேவா-அப்:2615/2
துடி ஆர் இடை உமையாள் பங்கா போற்றி சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2664/2
துடி அனைய இடை மடவாள்_பங்கா என்றும் சுடலை-தனில் நடம் ஆடும் சோதீ என்றும் – தேவா-அப்:2697/3
துடி கொண்ட இடை மடவாள் பாகம் கொண்டு சுடர் சோதி கடல் செம்பொன் மலை போல் இ நாள் – தேவா-அப்:2834/3
சொக்கன் காண் கொக்கு இறகு சூடினான் காண் துடி_இடையாள் துணை முலைக்கு சேர்வு அது ஆகும் – தேவா-அப்:2947/2
துடி கொண்டார் கங்காளம் தோள் மேல் கொண்டார் சூலை தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3027/4
மேல்


துடி_இடையாள் (1)

சொக்கன் காண் கொக்கு இறகு சூடினான் காண் துடி_இடையாள் துணை முலைக்கு சேர்வு அது ஆகும் – தேவா-அப்:2947/2
மேல்


துடிக்கின்ற (1)

துடிக்கின்ற பாம்பு அரை ஆர்த்து துளங்கா மதி அணிந்து – தேவா-அப்:989/1
மேல்


துடித்த (1)

துடித்த தோள் வலி வாள் அரக்கன்-தனை – தேவா-அப்:1395/1
மேல்


துடியின் (2)

கரந்தன கொள்ளி விளக்கும் கறங்கு துடியின் முழக்கும் – தேவா-அப்:16/1
துடி ஆம் துடியின் முழக்கம்தான் ஆம் சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பான் ஆம் – தேவா-அப்:2240/1
மேல்


துடியும் (1)

துஞ்சு இடைய வந்து துடியும் கொட்ட துண்ணென்று எழுந்திருந்தேன் சொல்லமாட்டேன் – தேவா-அப்:2217/3
மேல்


துடும்பல்செய் (1)

துடும்பல்செய் சடை தூ மணி சோதியான் – தேவா-அப்:1905/2
மேல்


துடைக்கினும் (1)

துடைக்கினும் போகேன் தொழுது வணங்கி தூ நீறு அணிந்து உன் – தேவா-அப்:787/3
மேல்


துடைத்து (1)

துறந்தார்க்கு தூ நெறியாய் நின்றான்-தன்னை துன்பம் துடைத்து ஆள வல்லான்-தன்னை – தேவா-அப்:2281/1
மேல்


துடைப்பவர்-தம் (1)

துரவை ஆக துடைப்பவர்-தம் இடம் – தேவா-அப்:1146/2
மேல்


துடைப்பாய் (1)

துஞ்சா பலி தேரும் தோன்றால் போற்றி தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி – தேவா-அப்:2136/2
மேல்


துடையூரும் (1)

துறையூரும் துவையூரும் தோழூர்-தானும் துடையூரும் தொழ இடர்கள் தொடரா அன்றே – தேவா-அப்:2800/4
மேல்


துண்ட (4)

பிறை துண்ட வார்சடையாய் பெரும் காஞ்சி எம் பிஞ்ஞகனே – தேவா-அப்:959/4
துண்ட வெண் பிறை வைத்த இறையவர் – தேவா-அப்:1124/3
துண்ட வான் பிறை தோணிபுரவரை – தேவா-அப்:1519/3
துண்ட மா மதி சூடிய சோதியே – தேவா-அப்:1807/4
மேல்


துண்டத்தாய் (1)

நீர் ஊரும் செஞ்சடையாய் நெற்றிக்கண்ணாய் நிலா திங்கள் துண்டத்தாய் நின்னை தேடி – தேவா-அப்:2345/1
மேல்


துண்டத்தானை (1)

துண்டத்தானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1994/4
மேல்


துண்டத்தில் (1)

துண்டத்தில் துணி பொருளை சுடு தீ ஆகி சுழல் காலாய் நீர் ஆகி பாராய் இற்றை – தேவா-அப்:2352/2
மேல்


துண்டத்து (1)

துண்டத்து துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:423/4
மேல்


துண்டம் (1)

சுடர் பொதி மூ இலை வேல் உடை காலனை துண்டம் அதா – தேவா-அப்:1022/3
மேல்


துண்டமும் (1)

பாதி பிறையும் படு தலை துண்டமும் பாய் புலி தோல் – தேவா-அப்:1048/3
மேல்


துண்டனே (1)

துண்டனே சுடர் கொள் சோதீ தூ நெறி ஆகி நின்ற – தேவா-அப்:384/2
மேல்


துண்ணென்று (2)

துண்ணென்று ஒன்றில் துரக்கும் வழி கண்டேன் – தேவா-அப்:1843/2
துஞ்சு இடைய வந்து துடியும் கொட்ட துண்ணென்று எழுந்திருந்தேன் சொல்லமாட்டேன் – தேவா-அப்:2217/3
மேல்


துண்ணெனா (1)

துண்ணெனா மனத்தால் தொழு நெஞ்சமே – தேவா-அப்:1257/1
மேல்


துணி (8)

துணி உடை அரக்கன் ஓடி எடுத்தலும் தோகை அஞ்ச – தேவா-அப்:333/3
வெள்ளி குழை துணி போலும் கபாலத்தன் வீழ்ந்து இலங்கு – தேவா-அப்:1050/1
சுடலை பொடி கடவுட்கு அடிமை-கண் துணி நெஞ்சமே – தேவா-அப்:1051/4
கட்டி ஒக்கும் கரும்பினிடை துணி
வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார் – தேவா-அப்:1117/1,2
வாக்கு அ பாம்பினை கண்ட துணி மதி – தேவா-அப்:1420/2
துணி வண்ண சுடர் ஆழி கொள்வான் எண்ணி – தேவா-அப்:1664/1
துண்டத்தில் துணி பொருளை சுடு தீ ஆகி சுழல் காலாய் நீர் ஆகி பாராய் இற்றை – தேவா-அப்:2352/2
துணி உடையர் தோல் உடையர் என்பார் போலும் தூய திரு மேனி செல்வர் போலும் – தேவா-அப்:2366/1
மேல்


துணித்த (3)

ஓர் ஆழி தேர் உடைய இலங்கை_வேந்தன் உடல் துணித்த இடர் பாவம் கெடுப்பித்து அன்று – தேவா-அப்:2269/3
பொடி ஏறு திரு மேனி உடையாய் என்றும் புரந்தரன்-தன் தோள் துணித்த புனிதா என்றும் – தேவா-அப்:2396/2
வள்ளலே போற்றி மணாளா போற்றி வானவர்_கோன் தோள் துணித்த மைந்தா போற்றி – தேவா-அப்:2412/2
மேல்


துணிந்தே (1)

துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:3/2
மேல்


துணியானே (1)

துணியானே தோலானே சுண்ண வெண் நீற்றானே – தேவா-அப்:126/2
மேல்


துணிவன (1)

துணிவன சீலத்தர் ஆகி தொடர்ந்து விடாத தொண்டர்க்கு – தேவா-அப்:885/3
மேல்


துணிவு (1)

துணிவு இலேன் தூயனல்லேன் தூ மலர் பாதம் காண்பான் – தேவா-அப்:267/3
மேல்


துணை (36)

சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை சங்க வெண் குழை காது உடை எம்பெருமான் – தேவா-அப்:8/2
நல் துணை பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன் – தேவா-அப்:29/4
சொல் துணை வேதியன் சோதி வானவன் – தேவா-அப்:104/1
பொன் துணை திருந்து அடி பொருந்த கைதொழ – தேவா-அப்:104/2
கல் துணை பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும் – தேவா-அப்:104/3
நல் துணை ஆவது நமச்சிவாயவே – தேவா-அப்:104/4
துணை ஆர முயங்கி போய் துறை சேரும் மட நாராய் – தேவா-அப்:120/1
சுரி புரிகுழலியோடும் துணை அலால் இருக்கை இல்லை – தேவா-அப்:396/2
உற்ற நோய் தீர்ப்பர் போலும் உறு துணை ஆவர் போலும் – தேவா-அப்:540/1
துஞ்சும்போதாக வந்து துணை எனக்கு ஆகி நின்று – தேவா-அப்:548/3
கல் துணை வில் அது ஆக கடி அரண் செற்றார் போலும் – தேவா-அப்:641/1
பொன் துணை பாதர் போலும் புலி அதள் உடையார் போலும் – தேவா-அப்:641/2
சொல் துணை மாலை கொண்டு தொழுது எழுவார்கட்கு எல்லாம் – தேவா-அப்:641/3
நல் துணை ஆவர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:641/4
முன் துணை ஆயினானை மூவர்க்கும் முதல்வன்-தன்னை – தேவா-அப்:679/1
சொல் துணை ஆயினானை சோதியை ஆதரித்து – தேவா-அப்:679/2
நல் துணை ஆவர் போலும் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:679/4
துணை அமர் பெண்ணர் போலும் தூ மணி குன்றர் போலும் – தேவா-அப்:702/2
புலம்பும் பொழுதும் புணர் துணை ஆவன பொன் அனையாள் – தேவா-அப்:894/2
உற்றார் இலாதார்க்கு உறு துணை ஆவன ஓதி நன் நூல் – தேவா-அப்:895/1
சுணங்கு முகத்து துணை முலை பாவை சுரும்பொடு வண்டு – தேவா-அப்:900/1
தூம்பினை தூர்த்து அங்கு ஓர் சுற்றம் துணை என்று இருத்திர் தொண்டீர் – தேவா-அப்:986/2
நடலைக்கு நல் துணை ஆகும் கண்டீர் அவர் நாமங்களே – தேவா-அப்:1007/4
தொலைவு இலா கதவம் துணை நீக்குமே – தேவா-அப்:1167/4
துணை இலாமையில் தூங்கு இருள் பேய்களோடு – தேவா-அப்:1219/1
துஞ்சும்போதும் துணை எனல் ஆகுமே – தேவா-அப்:1475/4
உற்ற நல் துணை ஆவான் உறை பதி – தேவா-அப்:1748/2
சுற்றமும் துணை நல் மடவாளொடு – தேவா-அப்:1771/1
பெண்டிர் மக்கள் பெரும் துணை நல் நிதி – தேவா-அப்:1831/1
மற்று ஒருவர் இல்லை துணை எனக்கு மால் கொண்டால் போல மயங்குவேற்கு – தேவா-அப்:2213/3
நோக்கும் துணை தேவர் எல்லாம் நிற்க நொடி வரையில் நோவ விழித்தான்-தன்னை – தேவா-அப்:2444/2
சுழி துணை ஆம் பிறவி வழி துக்கம் நீக்கும் சுருள் சடை எம்பெருமானே தூய தெண் நீர் – தேவா-அப்:2492/1
உற்றானை பல் உயிர்க்கும் துணை ஆனானை ஓங்காரத்து உட்பொருளை உலகம் எல்லாம் – தேவா-அப்:2717/2
தோற்றவன் காண் தோற்ற கேடு இல்லாதான் காண் துணையிலி காண் துணை என்று தொழுவார் உள்ளம் – தேவா-அப்:2727/2
சொக்கன் காண் கொக்கு இறகு சூடினான் காண் துடி_இடையாள் துணை முலைக்கு சேர்வு அது ஆகும் – தேவா-அப்:2947/2
சுந்தரனை துணை கவரி வீச கொண்டார் சுடுகாடு நடம் ஆடும் இடமா கொண்டார் – தேவா-அப்:3029/2
மேல்


துணைமாலை (1)

துறந்தார்-தம் தூ நெறி-கண் சென்றேன்அல்லேன் துணைமாலை சூட்ட நான் தூயேன்அல்லேன் – தேவா-அப்:2563/1
மேல்


துணையாய் (3)

தோன்றா துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே – தேவா-அப்:913/4
தூயானை சுடர் பவள சோதியானை தோன்றிய எ உயிர்க்கும் துணையாய் நின்ற – தேவா-அப்:2587/1
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ – தேவா-அப்:3015/3
மேல்


துணையிலி (1)

தோற்றவன் காண் தோற்ற கேடு இல்லாதான் காண் துணையிலி காண் துணை என்று தொழுவார் உள்ளம் – தேவா-அப்:2727/2
மேல்


துணையிலியை (1)

சூலத்தானை துணையிலியை தோளை குளிர தொழுதேனே – தேவா-அப்:149/4
மேல்


துணையினானை (1)

தொண்டர்கள் துணையினானை துருத்தி நான் கண்டவாறே – தேவா-அப்:422/4
மேல்


துணையும் (6)

தொண்டு அலால் துணையும் இல்லை தோல் அலாது உடையும் இல்லை – தேவா-அப்:397/1
தோள் அலால் துணையும் இல்லை தொத்து அலர்கின்ற வேனில் – தேவா-அப்:400/2
சகம் அலாது அடிமை இல்லை தான் அலால் துணையும் இல்லை – தேவா-அப்:401/1
சுற்றமும் துணையும் மனை வாழ்க்கையும் – தேவா-அப்:1904/1
வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு வான் புலன்கள் அகத்து அடக்கி மடவாரோடும் – தேவா-அப்:2090/2
உற்றவரும் உறு துணையும் நீயே என்றும் உன்னை அல்லால் ஒரு தெய்வம் உள்கேன் என்றும் – தேவா-அப்:2401/3
மேல்


துணையே (1)

இழிப்ப அரிய பசுபாச பிறப்பை நீக்கும் என் துணையே என்னுடைய பெம்மான் தம்மான் – தேவா-அப்:2492/2
மேல்


துணையை (3)

அரும் துணையை அடியார்-தம் அல்லல் தீர்க்கும் அரு மருந்தை அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி – தேவா-அப்:2090/1
பெரும் துணையை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2090/4
முருகு விரி நறு மலர் மேல் அயற்கும் மாற்கும் முழுமுதலை மெய் தவத்தோர் துணையை வாய்த்த – தேவா-அப்:2920/3
மேல்


துத்தி (2)

துத்தி ஐந்தலைய நாகம் சூழ் சடை முடி மேல் வைத்து – தேவா-அப்:253/2
கரு துத்தி கத நாகம் கையில் ஏந்தி கரு வரை போல் களி யானை கதற கையால் – தேவா-அப்:2347/1
மேல்


துத்தியம்செய (1)

துத்தியம்செய நின்ற நல் சோதியே – தேவா-அப்:2077/4
மேல்


துதி (2)

சூடிய கையர் ஆகி இமையோர் கணங்கள் துதி ஓதி நின்று தொழலும் – தேவா-அப்:137/2
தொக்கு உலாம் சடையினன் காண் தொண்டர் செல்லும் தூ நெறி காண் வானவர்கள் துதி செய்து ஏத்தும் – தேவா-அப்:2386/3
மேல்


துதிக்கல் (1)

சுந்தரம் ஆனார் போலும் துதிக்கல் ஆம் சோதி போலும் – தேவா-அப்:324/2
மேல்


துதிசெய்து (1)

துதிசெய்து துன்று மலர் கொண்டு தூவி சூழும் வலம்செய்து தொண்டு பாடி – தேவா-அப்:2402/3
மேல்


துதிசெய (1)

அரி பிரமர் துதிசெய நின்று அளித்தார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2624/4
மேல்


துதித்து (2)

தொழுது தூ மலர் தூவி துதித்து நின்று – தேவா-அப்:1282/1
சுருதங்களால் துதித்து தூ நீர் ஆட்டி தோத்திரங்கள் பல சொல்லி தூபம் காட்டி – தேவா-அப்:2442/2
மேல்


துதித்தும் (1)

எண்ணியும் துதித்தும் ஏத்த எரி உரு ஆகி நின்று – தேவா-அப்:362/2
மேல்


துதியாதே (1)

சூழ்த்த மா மலர் தூவி துதியாதே
வீழ்த்தவா வினையேன் நெடும் காலமே – தேவா-அப்:1960/3,4
மேல்


துதைந்த (4)

தூ மன் சுறவம் துதைந்த கொடி உடை – தேவா-அப்:162/1
துடி கொண்ட கையும் துதைந்த வெண் நீறும் சுரி குழலாள் – தேவா-அப்:786/2
தூ வெண் நீறு துதைந்த செம்மேனியான் – தேவா-அப்:1725/2
தூயவன் காண் நீறு துதைந்த மேனி துளங்கும் பளிங்கு அனைய சோதியான் காண் – தேவா-அப்:2950/1
மேல்


துதைந்தார் (1)

சுந்தரத்த பொடி-தன்னை துதைந்தார் போலும் தூ தூய திரு மேனி தோன்றல் போலும் – தேவா-அப்:2371/2
மேல்


துதைந்து (6)

நீற்றில் துதைந்து திரியும் பரிசு அதும் நாம் அறியோம் – தேவா-அப்:816/2
சுற்றி வண்டு யாழ்செயும் சோலையும் காவும் துதைந்து இலங்கு – தேவா-அப்:829/1
தூச கரி உரித்தான் தூ நீறு ஆடி துதைந்து இலங்கு நூல் மார்பன் தொடரகில்லா – தேவா-அப்:2509/3
நோக்கார் ஒருஇடத்தும் நூலும் தோலும் துதைந்து இலங்கும் திரு மேனி வெண் நீறு ஆடி – தேவா-அப்:2668/3
தொண்டு இலங்கும் அடியவர்க்கு ஓர் நெறியினாரும் தூ நீறு துதைந்து இலங்கும் மார்பினாரும் – தேவா-அப்:2676/1
துன்னம் சேர் கோவணத்தாய் தூய நீற்றாய் துதைந்து இலங்கு வெண் மழுவாள் கையில் ஏந்தி – தேவா-அப்:3065/1
மேல்


துதைய (2)

சுண்ணங்கள் தாம் கொண்டு துதைய பூசி தோல் உடுத்து நூல் பூண்டு தோன்றத்தோன்ற – தேவா-அப்:2172/3
சுட்ட அங்கம் கொண்டு துதைய பூசி சுந்தரனாய் சூலம் கை ஏந்தினானை – தேவா-அப்:2289/2
மேல்


துதையிலே (1)

தொண்டர் பாதங்கள் சூடி துதையிலே – தேவா-அப்:1458/4
மேல்


துப்பறை (1)

சுருக்கமொடு பெருக்கம் நிலைநிற்றல் பற்றி துப்பறை என்று அனைவீர் இ உலகை ஓடி – தேவா-அப்:2363/1
மேல்


துப்பினை (1)

துப்பினை முன் பற்று அறா விறலே மிக்க சோர்வு படு சூட்சியமே சுகமே நீங்கள் – தேவா-அப்:2358/1
மேல்


துப்பு (1)

துப்பு ஆரும் குறை அடிசில் துற்றி நற்று உன் திறம் மறந்து திரிவேனை காத்து நீ வந்து – தேவா-அப்:2707/2
மேல்


துப்புரவு (1)

துப்புரவு ஆர் சுரி சங்கின் தோடு கொண்டார் சுடர் முடி சூழ்ந்து அடி அமரர் தொழவும் கொண்டார் – தேவா-அப்:3026/3
மேல்


தும்பி (3)

ஏறி வண்டொடு தும்பி அம் சிறகு ஊன்ற விண்ட மலர் இதழ் வழி – தேவா-அப்:202/3
சுட்டாய் என் பாச தொடர்பு அறுத்து ஆண்டுகொள் தும்பி பம்பும் – தேவா-அப்:939/2
சுடர் ஆழி நெடு மாலுக்கு அருள்செய்தானை தும்பி உரி போர்த்தானை தோழன் விட்ட – தேவா-அப்:2982/2
மேல்


தும்புருவும் (1)

பாடுவார் தும்புருவும் நாரதாதி பரவுவார் அமரர்களும் அமரர்_கோனும் – தேவா-அப்:2344/2
மேல்


தும்பை (2)

கோடு அலர் வன்னி தும்பை கொக்கு இறகு அலர்ந்த கொன்றை – தேவா-அப்:704/3
ஏடு ஏறு மலர் கொன்றை அரவு தும்பை இள மதியம் எருக்கு வான் இழிந்த கங்கை – தேவா-அப்:2978/1
மேல்


துய்ப்பனவும் (1)

துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ – தேவா-அப்:3015/3
மேல்


துயக்கம் (1)

தொக்கு நின்று ஐவர் தொண்ணூற்றறுவரும் துயக்கம் எய்த – தேவா-அப்:653/2
மேல்


துயக்கின (1)

துயக்கினவா துக்க நோய் வினை காட்டி துயக்கின நோய் – தேவா-அப்:881/1
மேல்


துயக்கினவா (1)

துயக்கினவா துக்க நோய் வினை காட்டி துயக்கின நோய் – தேவா-அப்:881/1
மேல்


துயக்கு (3)

காய கணை சிலை வாங்கியும் எய்தும் துயக்கு அறுத்தான் – தேவா-அப்:818/2
தொடர அஞ்சும் துயக்கு அறும் காலனே – தேவா-அப்:1899/4
சுருதி-தனை துயக்கு அறுத்து துன்ப வெள்ள கடல் நீந்தி கரை ஏறும் கருத்தே மிக்கு – தேவா-அப்:2703/2
மேல்


துயர் (21)

விண் தங்கு வேள்வி வைத்தார் வெம் துயர் தீர வைத்தார் – தேவா-அப்:299/2
மேவித்து நின்று விளைந்தன வெம் துயர் துக்கம் எல்லாம் – தேவா-அப்:833/1
சுழல் ஆர் துயர் வெயில் சுட்டிடும்போது அடித்தொண்டர் துன்னும் – தேவா-அப்:901/1
மருள் துயர் தீர அன்று அர்ச்சித்த மாணி மார்க்கண்டேயற்காய் – தேவா-அப்:1016/1
அம்மையே பிறவி துயர் நீத்திடும் – தேவா-அப்:1208/2
சுருக்குவார் துயர் தோற்றங்கள் ஆற்றற – தேவா-அப்:1227/3
துன்பம் இன்றி துயர் இன்றி என்றும் நீர் – தேவா-அப்:1378/1
காணில் ஆர்க்கும் கடும் துயர் இல்லையே – தேவா-அப்:1465/4
துன்பம் இல்லை துயர் இல்லை யாம் இனி – தேவா-அப்:1490/1
சொல்லத்தான் வல்லிரேல் துயர் தீருமே – தேவா-அப்:1496/4
தொண்டனாய் திரியாய் துயர் தீரவே – தேவா-அப்:1537/4
அடிகள் எம்மை அரும் துயர் தீர்ப்பரே – தேவா-அப்:1546/4
நண்ணினார் துயர் தீர்த்தலும் நாரையூர் – தேவா-அப்:1628/3
வள்ளலை புகழ துயர் வாடுமே – தேவா-அப்:1656/4
சோதியை தொழுவார் துயர் தீருமே – தேவா-அப்:1657/4
சிந்தைசெய்ய கெடும் துயர் திண்ணமே – தேவா-அப்:1897/4
துயர் இலங்கை வேந்தன் துளங்க அன்று சோதி விரலால் உற வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2326/2
எங்கள்-பால் துயர் கெடுக்கும் எம்பிரான் காண் ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆயினான் காண் – தேவா-அப்:2330/2
தொண்டு படு தொண்டர் துயர் தீர்ப்பான்தான் காண் தூ மலர் சேவடி இணை எம் சோதியான் காண் – தேவா-அப்:2743/1
இறையானை என் பிறவி துயர் தீர்ப்பானை இன் அமுதை மன்னிய சீர் ஏகம்பத்தில் – தேவா-அப்:2752/2
சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீராகில் துயர் நீங்கி தூ நெறி-கண் சேரல் ஆமே – தேவா-அப்:2999/4
மேல்


துயரங்கள் (1)

சொல்லிடீர் நும் துயரங்கள் தீரவே – தேவா-அப்:1835/4
மேல்


துயரம் (8)

மன்றத்து புன்னை போல மரம் படு துயரம் எய்தி – தேவா-அப்:266/1
முற்றினால் ஐவர் வந்து முறைமுறை துயரம் செய்ய – தேவா-அப்:505/3
தோலும் பூண்டு துயரம் உற்று என் பயன் – தேவா-அப்:1463/2
மா துயரம் தீர்த்து என்னை உய்யக்கொண்டார் மழபாடி மேய மணவாளனார் – தேவா-அப்:2595/3
வரும் துயரம் தவிர்ப்பானை உமையாள் நங்கை மணவாள நம்பியை என் மருந்து-தன்னை – தேவா-அப்:2959/2
கலையானை கலை ஆரும் கையினானை கடிவானை அடியார்கள் துயரம் எல்லாம் – தேவா-அப்:2960/2
சூழும் துயரம் அறுப்பார் போலும் தோற்றம் இறுதியாய் நின்றார் போலும் – தேவா-அப்:2967/1
விடை வென்றி கொடி அதனில் மேவ கொண்டார் வெம் துயரம் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3034/4
மேல்


துயரமே (3)

துயரமே ஏற்றம் ஆக துன்ப கோல் அதனை பற்றி – தேவா-அப்:504/2
துச்சுளே அழுந்தி வீழ்ந்து துயரமே இடும்பை-தன்னுள் – தேவா-அப்:676/2
தொழ வலார்-தமக்கு இல்லை துயரமே – தேவா-அப்:1668/4
மேல்


துயரிலே (1)

துக்க மா மூடர்-தம்மை துயரிலே வீழ்ப்பர் போலும் – தேவா-அப்:543/3
மேல்


துயரும் (1)

துன்பமும் துயரும் எனும் சூழ் வினை – தேவா-அப்:1775/2
மேல்


துயில் (14)

இன் துயில் போது கண்டார் இனியர் ஏகம்பனாரே – தேவா-அப்:442/4
துஞ்சும்போதும் துயில் இன்றி ஏத்துவார் – தேவா-அப்:1159/1
காணில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1600/4
நண்ணில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1601/4
கற்கில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1602/4
கற்றால் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1603/4
கல்லேனாகில் என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1604/4
கண்டால் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1605/4
கரையேனாகில் என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1606/4
கூறில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1607/4
கங்குல் ஆக என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1608/4
காணேனாகில் என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1609/4
உரையேனாகில் என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1610/4
புலம்பேனாகில் என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1611/4
மேல்


துர்ச்சனவர் (1)

துன் நாகத்தேன் ஆகி துர்ச்சனவர் சொல் கேட்டு துவர் வாய்க்கொண்டு – தேவா-அப்:46/1
மேல்


துரக்கனை (1)

துரக்கனை தொண்டனேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1111/4
மேல்


துரக்கும் (1)

துண்ணென்று ஒன்றில் துரக்கும் வழி கண்டேன் – தேவா-அப்:1843/2
மேல்


துரகம் (1)

பிடி மத வாரணம் பேணும் துரகம் நிற்க பெரிய – தேவா-அப்:993/3
மேல்


துரந்த (3)

மிண்டரை துரந்த விமலன்-தனை – தேவா-அப்:1654/2
சிலை உருவ சரம் துரந்த திறத்தினான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2333/4
சிலை வளர்த்த சரம் துரந்த திறத்தினான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2335/4
மேல்


துரந்தவன் (1)

துரந்தவன் காண் தூ மலர் அம் கண்ணியான் காண் தோற்றம் நிலை இறுதி பொருளாய் வந்த – தேவா-அப்:2726/2
மேல்


துரந்தனை (1)

பொரு வினை எல்லாம் துரந்தனை பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:846/3
மேல்


துரந்து (2)

நஞ்சு ஆகி வந்து என்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்துமிடீர் – தேவா-அப்:2/3
துன்பே கவலை பிணி என்று இவற்றை நணுகாமல் துரந்து கரந்துமிடீர் – தேவா-அப்:9/2
மேல்


துரப்பது (1)

பொருந்து நோய் பிணி போக துரப்பது ஓர் – தேவா-அப்:1675/3
மேல்


துரப்பர் (1)

துரப்பர் தொடு கடலின் நஞ்சம் உண்பர் தூய மறைமொழியர் தீயால் ஒட்டி – தேவா-அப்:2258/2
மேல்


துரப்பன (1)

தூதரை ஓட துரப்பன துன்பு அற தொண்டுபட்டார்க்கு – தேவா-அப்:897/3
மேல்


துரவை (1)

துரவை ஆக துடைப்பவர்-தம் இடம் – தேவா-அப்:1146/2
மேல்


துரிசர்-தம்மை (1)

துறந்தானை அறம் புரியா துரிசர்-தம்மை தோத்திரங்கள் பல சொல்லி வானோர் ஏத்த – தேவா-அப்:2751/1
மேல்


துரிசு (3)

துரிசு இல் நல் நெறி தோன்றிடும் காண்-மினே – தேவா-அப்:1682/4
துளியானை அயன் மாலும் தேடி காணா சுடரானை துரிசு அற தொண்டுபட்டார்க்கு – தேவா-அப்:2754/2
துகில் உடுத்து பொன் பூண்டு திரிவார் சொல்லும் சொல் கேட்க கடவோமோ துரிசு அற்றோமே – தேவா-அப்:3048/4
மேல்


துரிசுபட்டேனுக்கும் (1)

சொல் திடம் என்று துரிசுபட்டேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:977/2
மேல்


துருத்தி (13)

சோற்றுத்துறை எம் சோதியை துருத்தி மேய தூ மணியை – தேவா-அப்:153/1
துருத்தி ஆம் குரம்பை-தன்னில் தொண்ணூற்று அங்கு அறுவர் நின்று – தேவா-அப்:252/1
துருத்தி அம் சுடரினானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:414/4
தொண்டர்கள் துணையினானை துருத்தி நான் கண்டவாறே – தேவா-அப்:422/4
துறை ஆர் வன முனிகள் ஏத்த நின்ற சோற்றுத்துறை துருத்தி நெய்த்தானமும் – தேவா-அப்:2151/2
சொல்லாதே போகின்றீர் உம் ஊர் ஏது துருத்தி பழமமோ நெய்த்தானமோ – தேவா-அப்:2180/3
திரு துருத்தி திரு பழனம் திரு நெய்த்தானம் திரு ஐயாறு இடம்கொண்ட செல்வர் இந்நாள் – தேவா-அப்:2347/3
தொண்டர் தொழப்படுவாய் என்றேன் நானே துருத்தி நெய்த்தானத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2459/2
விருப்பவனை வேதியனை வேத வித்தை வெண்காடும் வியன் துருத்தி நகரும் மேவி – தேவா-அப்:2632/2
துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை தோணிபுரம் துருத்தி சோமீச்சுரம் – தேவா-அப்:2795/2
விண்ணோர் பரவ நஞ்சு உண்டார் போலும் வியன் துருத்தி வேள்விக்குடியார் போலும் – தேவா-அப்:2899/1
தொலைவிலார் புரம் மூன்றும் தொலைத்தார் போலும் சோற்றுத்துறை துருத்தி உள்ளார் போலும் – தேவா-அப்:2905/3
பூந்துருத்தி பூந்துருத்தி என்பீராகில் பொல்லா புலால் துருத்தி போக்கல் ஆமே – தேவா-அப்:2995/4
மேல்


துருத்தியார் (1)

துருத்தியார் பழனத்து உள்ளார் தொண்டர்கள் பலரும் ஏத்த – தேவா-அப்:443/1
மேல்


துருத்தியானை (8)

சுவையினை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:415/4
துன்னிய துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:416/4
தோன்றலை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:417/4
சுடர்-தனை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:418/4
துள் அலை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:419/4
சோதியை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:420/4
தூ மணல் துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:421/4
துண்டத்து துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:423/4
மேல்


துருத்தியும் (1)

நெல் மலிந்த நெய்த்தானம் சோற்றுத்துறை நியமம் துருத்தியும் நீடூர் பாச்சில் – தேவா-அப்:2215/2
மேல்


துருவி (1)

இனம் துருவி மணி மகுடத்து ஏற துற்ற இன மலர்கள் போது அவிழ்ந்து மது வாய் பில்கி – தேவா-அப்:2222/3
மேல்


துலங்கல் (1)

துலங்கல் மழுவினான் சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:821/3
மேல்


துலங்காமே (1)

துலங்காமே வானவரை காத்து நஞ்சம் உண்ட பிரான் அடி இணைக்கே சித்தம்வைத்து – தேவா-அப்:2699/3
மேல்


துலங்கி (1)

துலங்கி நீ நின்று சோர்ந்திடல் நெஞ்சமே – தேவா-அப்:1846/2
மேல்


துலங்கும் (1)

தொல்லை தொடு கடலே என்றேன் நானே துலங்கும் இளம் பிறையாய் என்றேன் நானே – தேவா-அப்:2458/1
மேல்


துலை (2)

துலை ஆக ஒருவரையும் இல்லாதானை தோன்றாதார் மதில் மூன்றும் துவள எய்த – தேவா-அப்:2284/3
தன் உருவை தந்துவனை எந்தை-தன்னை தலைப்படுவேன் துலை படுவான் தருக்கேன்-மினே – தேவா-அப்:2357/4
மேல்


துவர் (5)

துன் நாகத்தேன் ஆகி துர்ச்சனவர் சொல் கேட்டு துவர் வாய்க்கொண்டு – தேவா-அப்:46/1
செம் துவர் வாயார் செல்வன சேவடி சிந்திப்பார் – தேவா-அப்:214/1
துவர் பெரும் செருப்பால் நீக்கி தூய வாய் கலசம் ஆட்ட – தேவா-அப்:636/2
செம் துவர் வாய் கரும் கண் இணை வெண் நகை தேமொழியார் – தேவா-அப்:997/1
அம் மலர்க்கண்ணியர் அஞ்சனம் செம் துவர் வாய் இளையார் – தேவா-அப்:1004/1
மேல்


துவரால் (1)

உரிந்த உடையார் துவரால் உடம்பை மூடி உழிதரும் அ ஊமர் அவர் உணரா வண்ணம் – தேவா-அப்:2935/1
மேல்


துவலை (4)

சுரும்பு கொப்பளித்த கங்கை துவலை நீர் சடையில் ஏற்ற – தேவா-அப்:239/3
எழுந்த திரை நதி துவலை நனைந்த திங்கள் இள நிலா திகழ்கின்ற வளர் சடையனே – தேவா-அப்:2127/1
தோடு ஏறும் மலர் கொன்றை சடை மேல் வைத்தார் துன் எருக்கின் வடம் வைத்தார் துவலை சிந்த – தேவா-அப்:2224/1
தேன் நல் இளம் துவலை மலி தென்றல் முன்றில் செழும் பொழில் பூம் பாளை விரி தேறல் நாறும் – தேவா-அப்:2830/3
மேல்


துவள (2)

துளைத்தானை சுடு சரத்தால் துவள நீறா தூ முத்த வெண் முறுவல் உமையோடு ஆடி – தேவா-அப்:2275/3
துலை ஆக ஒருவரையும் இல்லாதானை தோன்றாதார் மதில் மூன்றும் துவள எய்த – தேவா-அப்:2284/3
மேல்


துவையூரும் (1)

துறையூரும் துவையூரும் தோழூர்-தானும் துடையூரும் தொழ இடர்கள் தொடரா அன்றே – தேவா-அப்:2800/4
மேல்


துழனி (1)

சூடினார் கங்கையாளை சூடிய துழனி கேட்டு அங்கு – தேவா-அப்:270/1
மேல்


துழாய் (2)

கொய் மலர் கொன்றை துழாய் வன்னி மத்தமும் கூவிளமும் – தேவா-அப்:857/1
தூங்கான் துளங்கான் துழாய் கொன்றை துன்னிய செம் சடை மேல் – தேவா-அப்:861/1
மேல்


துள் (1)

துள் அலை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:419/4
மேல்


துள்ளலை (1)

துள்ளலை பாகன்-தன்னை தொடர்ந்து இங்கே கிடக்கின்றேனை – தேவா-அப்:274/3
மேல்


துள்ளியும் (1)

உழைத்தும் துள்ளியும் உள்ளத்துளே உரு – தேவா-அப்:1229/1
மேல்


துள்ளு (1)

துள்ளு மான் மறி தூ மழுவாளினர் – தேவா-அப்:1928/1
மேல்


துள்ளும் (1)

செய்யர் வெண்நூலர் கரு மான் மறி துள்ளும்
கையர் கனை கழல் கட்டிய காலினர் – தேவா-அப்:156/1,2
மேல்


துள்ளுவர் (1)

துள்ளுவர் சூறை கொள்வர் தூ நெறி விளைய ஒட்டார் – தேவா-அப்:750/2
மேல்


துளக்கம் (1)

சோதியை துளக்கம் இல்லா விளக்கினை அளக்கல் ஆகா – தேவா-அப்:722/3
மேல்


துளக்கிலியை (1)

சோலை தருத்திநகர் மேய சுடரில் திகழும் துளக்கிலியை
மேலை வானோர் பெருமானை விருப்பால் விழுங்கியிட்டேனே – தேவா-அப்:152/3,4
மேல்


துளக்கு (3)

துளக்கு இல் நல் மலர் தொடுத்தால் தூய விண் ஏறல் ஆகும் – தேவா-அப்:748/2
சுரும்பு அமரும் கடி பொழில்கள் சூழ் தென் ஆரூர் சுடர் கொழுந்தை துளக்கு இல்லா விளக்கை மிக்க – தேவா-அப்:2091/3
துளைக்கின்ற துளை ஆகி சோதி ஆகி தூண்ட அரிய சுடர் ஆகி துளக்கு இல் வான் மேல் – தேவா-அப்:2881/2
மேல்


துளக்கும் (1)

துளக்கும் குழை அணி சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:814/3
மேல்


துளங்க (7)

மண் துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி மால் கடலும் மால் விசும்பும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2135/1
விண் துளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி வேழத்து உரி மூடும் விகிர்தா போற்றி – தேவா-அப்:2135/2
பண் துளங்க பாடல் பயின்றாய் போற்றி பார் முழுதும் ஆய பரமா போற்றி – தேவா-அப்:2135/3
கண் துளங்க காமனை முன் காய்ந்தாய் போற்றி கார் கெடிலம் கொண்ட கபாலீ போற்றி – தேவா-அப்:2135/4
துயர் இலங்கை வேந்தன் துளங்க அன்று சோதி விரலால் உற வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2326/2
மரு உற்ற மலர் குழலி மடவாள் அஞ்ச மலை துளங்க திசை நடுங்க செறுத்து நோக்கி – தேவா-அப்:2542/1
முத்து இலங்கு முடி துளங்க வளைகள் எற்றி முடுகுதலும் திரு விரல் ஒன்று அவன் மேல் வைப்ப – தேவா-அப்:2879/2
மேல்


துளங்கா (2)

துடிக்கின்ற பாம்பு அரை ஆர்த்து துளங்கா மதி அணிந்து – தேவா-அப்:989/1
தொண்டர் தொழுது ஏத்தும் சோதி ஏற்றார் துளங்கா மணி முடியார் தூய நீற்றார் – தேவா-அப்:2186/1
மேல்


துளங்காத (1)

சுரும்பு அமரும் குழல் மடவார் கடைக்கண் நோக்கில் துளங்காத சிந்தையராய் துறந்தோர் உள்ள – தேவா-அப்:2092/3
மேல்


துளங்காது (1)

தொக்கு அணா என்று இருவர் தோள் கைகூப்ப துளங்காது எரி சுடராய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2138/3
மேல்


துளங்கான் (1)

தூங்கான் துளங்கான் துழாய் கொன்றை துன்னிய செம் சடை மேல் – தேவா-அப்:861/1
மேல்


துளங்கி (1)

தானம் துளங்கி தலைதடுமாறில் என் தண் கடலும் – தேவா-அப்:1057/2
மேல்


துளங்கில் (1)

வானம் துளங்கில் என் மண் கம்பம் ஆகில் என் மால் வரையும் – தேவா-அப்:1057/1
மேல்


துளங்கு (2)

துஞ்சு அடை இருள் கிழிய துளங்கு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:218/4
சுருளுறு வரையின் மேலால் துளங்கு இளம் பளிங்கு சிந்த – தேவா-அப்:532/1
மேல்


துளங்கும் (2)

சோதியே துளங்கும் எண் தோள் சுடர் மழுப்படையினானே – தேவா-அப்:609/2
தூயவன் காண் நீறு துதைந்த மேனி துளங்கும் பளிங்கு அனைய சோதியான் காண் – தேவா-அப்:2950/1
மேல்


துளி (2)

பட்ட நுண் துளி பாயும் பராய்த்துறை – தேவா-அப்:1372/2
பார் அவன் காண் பார்-அதனில் பயிர் ஆனான் காண் பயிர் வளர்க்கும் துளி அவன் காண் துளியில் நின்ற – தேவா-அப்:2951/1
மேல்


துளியானை (1)

துளியானை அயன் மாலும் தேடி காணா சுடரானை துரிசு அற தொண்டுபட்டார்க்கு – தேவா-அப்:2754/2
மேல்


துளியில் (1)

பார் அவன் காண் பார்-அதனில் பயிர் ஆனான் காண் பயிர் வளர்க்கும் துளி அவன் காண் துளியில் நின்ற – தேவா-அப்:2951/1
மேல்


துளும்புகின்றேன் (1)

நின்று உளே துளும்புகின்றேன் நீசனேன் ஈசனேயோ – தேவா-அப்:754/3
மேல்


துளை (5)

ஒரு முழம் உள்ள குட்டம் ஒன்பது துளை உடைத்தாய் – தேவா-அப்:435/1
துளை கை வேழத்து உரி உடல் போர்த்தவர் – தேவா-அப்:1126/1
துளை கை வேழத்தர் தோயலர் சுடர் மதி – தேவா-அப்:1331/2
துளை இலா செவி தொண்டர்காள் நும் உடல் – தேவா-அப்:1735/2
துளைக்கின்ற துளை ஆகி சோதி ஆகி தூண்ட அரிய சுடர் ஆகி துளக்கு இல் வான் மேல் – தேவா-அப்:2881/2
மேல்


துளைக்கின்ற (1)

துளைக்கின்ற துளை ஆகி சோதி ஆகி தூண்ட அரிய சுடர் ஆகி துளக்கு இல் வான் மேல் – தேவா-அப்:2881/2
மேல்


துளைத்தானை (1)

துளைத்தானை சுடு சரத்தால் துவள நீறா தூ முத்த வெண் முறுவல் உமையோடு ஆடி – தேவா-அப்:2275/3
மேல்


துற்ற (1)

இனம் துருவி மணி மகுடத்து ஏற துற்ற இன மலர்கள் போது அவிழ்ந்து மது வாய் பில்கி – தேவா-அப்:2222/3
மேல்


துற்றவர் (1)

துற்றவர் வெண் தலையில் சுருள் கோவணம் – தேவா-அப்:170/1
மேல்


துற்றி (1)

துப்பு ஆரும் குறை அடிசில் துற்றி நற்று உன் திறம் மறந்து திரிவேனை காத்து நீ வந்து – தேவா-அப்:2707/2
மேல்


துற (1)

துற நெறியாய் தூபமாய் தோற்றம் ஆகி நாற்றமாய் நல் மலர் மேல் உறையாநின்ற – தேவா-அப்:2379/3
மேல்


துறக்கப்படாத (1)

துறக்கப்படாத உடலை துறந்து வெம் தூதுவரோடு – தேவா-அப்:1067/1
மேல்


துறக்கல் (1)

ஏண் இலார் இறப்பும் இல்லார் பிறப்பு இலார் துறக்கல் ஆகார் – தேவா-அப்:276/2
மேல்


துறந்த (1)

மனை துறந்த வல் அமணர்-தங்கள் பொய்யும் மாண்பு உரைக்கும் மன குண்டர்-தங்கள் பொய்யும் – தேவா-அப்:2315/1
மேல்


துறந்தார்-தம் (1)

துறந்தார்-தம் தூ நெறி-கண் சென்றேன்அல்லேன் துணைமாலை சூட்ட நான் தூயேன்அல்லேன் – தேவா-அப்:2563/1
மேல்


துறந்தார்க்கு (1)

துறந்தார்க்கு தூ நெறியாய் நின்றான்-தன்னை துன்பம் துடைத்து ஆள வல்லான்-தன்னை – தேவா-அப்:2281/1
மேல்


துறந்தான்-தன்னை (1)

துறவாதே யாக்கை துறந்தான்-தன்னை சோதி முழுமுதலாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2773/1
மேல்


துறந்தானை (1)

துறந்தானை அறம் புரியா துரிசர்-தம்மை தோத்திரங்கள் பல சொல்லி வானோர் ஏத்த – தேவா-அப்:2751/1
மேல்


துறந்து (5)

தம் கயம் துறந்து போந்து தடம் பொய்கை அடைந்து நின்று – தேவா-அப்:534/2
மற்று இடம் இன்றி மனை துறந்து அல் உணா வல் அமணர் – தேவா-அப்:977/1
மனை துறந்து அல் உணா வல் அமண் குண்டர் மயக்கை நீக்கி – தேவா-அப்:998/3
உடலை துறந்து உலகு ஏழும் கடந்து உலவாத துன்ப – தேவா-அப்:1051/1
துறக்கப்படாத உடலை துறந்து வெம் தூதுவரோடு – தேவா-அப்:1067/1
மேல்


துறந்தேன்-தன்னை (1)

துறவா துன்பம் துறந்தேன்-தன்னை சூழ் உலகில் ஊழ்வினை வந்து உற்றால் என்னே – தேவா-அப்:2558/2
மேல்


துறந்தோர் (1)

சுரும்பு அமரும் குழல் மடவார் கடைக்கண் நோக்கில் துளங்காத சிந்தையராய் துறந்தோர் உள்ள – தேவா-அப்:2092/3
மேல்


துறப்பித்தவா (1)

துறப்பித்தவா துக்க நோய்வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:880/2
மேல்


துறப்பிப்பாய் (1)

துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ – தேவா-அப்:3015/3
மேல்


துறம் (1)

துறம் காட்டி எல்லாம் விரித்தார் போலும் தூ மதியும் பாம்பும் உடையார் போலும் – தேவா-அப்:2098/1
மேல்


துறவா (2)

ஈண்டா இரும் பிறவி துறவா ஆக்கை இது நீங்கல் ஆம் விதி உண்டு என்று சொல்ல – தேவா-அப்:2504/1
துறவா துன்பம் துறந்தேன்-தன்னை சூழ் உலகில் ஊழ்வினை வந்து உற்றால் என்னே – தேவா-அப்:2558/2
மேல்


துறவாதே (2)

துறவாதே கட்டு அறுத்த சோதியானை தூ நெறிக்கும் தூ நெறியாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2192/2
துறவாதே யாக்கை துறந்தான்-தன்னை சோதி முழுமுதலாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2773/1
மேல்


துறவி (6)

துறவி என்று அவம் அது ஒரேன் சொல்லிய சொலவு செய்து – தேவா-அப்:389/1
துறவி தொழிலே புரிந்து உன் சுரும்பு அடியே தொழுவார் – தேவா-அப்:1037/1
துறவி நெஞ்சினர் ஆகிய தொண்டர்காள் – தேவா-அப்:1290/1
சொல் அருளி அறம் நால்வர்க்கு அறிய வைத்தார் சுடு சுடலை பொடி வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2225/3
விண் இரியும் திரிபுரங்கள் எரிய வைத்தார் வினை தொழுவார்க்கு அற வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2226/1
செற்றம் மலி ஆர்வமொடு காமலோபம் சிறவாத நெறி வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2227/3
மேல்


துறும்பு (1)

துறும்பு செம் சடை தூ மதி வைத்து வான் – தேவா-அப்:1814/2
மேல்


துறை (7)

துறை இளம் பல் மலர் தூவி தோளை குளிர தொழுவேன் – தேவா-அப்:24/2
துணை ஆர முயங்கி போய் துறை சேரும் மட நாராய் – தேவா-அப்:120/1
கொங்கு தண் குமரி துறை ஆடில் என் – தேவா-அப்:2067/2
துறை ஆர் வன முனிகள் ஏத்த நின்ற சோற்றுத்துறை துருத்தி நெய்த்தானமும் – தேவா-அப்:2151/2
நீண்டான் உறை துறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2504/4
பெண்ணை அருள் துறை தண் பெண்ணாகடம் பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூரும் – தேவா-அப்:2791/3
மயிலாடுதுறை கடம்பந்துறை ஆவடுதுறை மற்றும் துறை அனைத்தும் வணங்குவோமே – தேவா-அப்:2807/4
மேல்


துறை-தொறும் (1)

சொன்ன துறை-தொறும் தூ பொருள் ஆயின தூ கமலத்து – தேவா-அப்:966/2
மேல்


துறைகள் (1)

துறைகள் ஆர் கடல் தோணிபுரத்து உறை – தேவா-அப்:1524/3
மேல்


துறையராய் (1)

துறையராய் புகுந்து என் உள்ள சோர்வு கண்டு அருளினாரே – தேவா-அப்:407/4
மேல்


துறையனே (1)

நீல மா மயில் ஆடு துறையனே
நூலும் வேண்டுமோ நுண் உணர்ந்தோர்கட்கே – தேவா-அப்:1463/3,4
மேல்


துறையும் (1)

துறையும் போகுவர் தூய வெண்நீற்றினர் – தேவா-அப்:1222/3
மேல்


துறையூர் (1)

துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை தோணிபுரம் துருத்தி சோமீச்சுரம் – தேவா-அப்:2795/2
மேல்


துறையூரும் (1)

துறையூரும் துவையூரும் தோழூர்-தானும் துடையூரும் தொழ இடர்கள் தொடரா அன்றே – தேவா-அப்:2800/4
மேல்


துன் (3)

துன் நாகத்தேன் ஆகி துர்ச்சனவர் சொல் கேட்டு துவர் வாய்க்கொண்டு – தேவா-அப்:46/1
துன் ஆர் கடந்தையுள் தூங்கானைமாட சுடர் கொழுந்தே – தேவா-அப்:1028/4
தோடு ஏறும் மலர் கொன்றை சடை மேல் வைத்தார் துன் எருக்கின் வடம் வைத்தார் துவலை சிந்த – தேவா-அப்:2224/1
மேல்


துன்ப (6)

துயரமே ஏற்றம் ஆக துன்ப கோல் அதனை பற்றி – தேவா-அப்:504/2
இருள் தரு துன்ப படலம் மறைப்ப மெய்ஞ்ஞானம் என்னும் – தேவா-அப்:886/1
துன்ப கடலிடை தோணி தொழில் பூண்டு தொண்டர்-தம்மை – தேவா-அப்:888/1
உடலை துறந்து உலகு ஏழும் கடந்து உலவாத துன்ப
கடலை கடந்து உய்ய போயிடல் ஆகும் கனக_வண்ண – தேவா-அப்:1051/1,2
துன்ப வல்வினை போக தொழுமவர்க்கு – தேவா-அப்:1148/3
சுருதி-தனை துயக்கு அறுத்து துன்ப வெள்ள கடல் நீந்தி கரை ஏறும் கருத்தே மிக்கு – தேவா-அப்:2703/2
மேல்


துன்பங்கள் (1)

ஏயவன் காண் எல்லார்க்கும் இயல்பு ஆனான் காண் இன்பன் காண் துன்பங்கள் இல்லாதான் காண் – தேவா-அப்:2566/1
மேல்


துன்பத்து (1)

இ மாய பிறப்பு என்னும் கடல் ஆம் துன்பத்து இடை சுழிப்பட்டு இளைப்பேனை இளையா வண்ணம் – தேவா-அப்:2709/1
மேல்


துன்பம் (10)

துன்பம் நும்மை தொழாத நாள்கள் என்பாரும் – தேவா-அப்:216/1
பெற்றதேல் பெரிதும் துன்பம் பேதையேன் பிழைப்பினாலே – தேவா-அப்:505/2
துன்பம் இன்றி துயர் இன்றி என்றும் நீர் – தேவா-அப்:1378/1
துன்பம் இல்லை துயர் இல்லை யாம் இனி – தேவா-அப்:1490/1
துஞ்சா பலி தேரும் தோன்றால் போற்றி தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி – தேவா-அப்:2136/2
ஏத்தாதார்க்கு என்றும் இடரே துன்பம் ஈவான் ஆம் என் நெஞ்சத்துள்ளே நின்று – தேவா-அப்:2235/3
துறந்தார்க்கு தூ நெறியாய் நின்றான்-தன்னை துன்பம் துடைத்து ஆள வல்லான்-தன்னை – தேவா-அப்:2281/1
ஏத்து அவனாய் ஏழ்உலகும் ஆயினானே இன்பனாய் துன்பம் களைகின்றானே – தேவா-அப்:2523/2
துறவா துன்பம் துறந்தேன்-தன்னை சூழ் உலகில் ஊழ்வினை வந்து உற்றால் என்னே – தேவா-அப்:2558/2
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம்அல்லோம் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை – தேவா-அப்:3047/2
மேல்


துன்பமும் (2)

துன்பமும் துயரும் எனும் சூழ் வினை – தேவா-அப்:1775/2
துன்பமும் உடனே வைத்த சோதியான் – தேவா-அப்:1817/2
மேல்


துன்பு (3)

துன்பு இலா தொண்டர் கூடி தொழுது அழுது ஆடி பாடும் – தேவா-அப்:399/3
தூதரை ஓட துரப்பன துன்பு அற தொண்டுபட்டார்க்கு – தேவா-அப்:897/3
துன்பு எலாம் அற நீங்கி சுபத்தராய் – தேவா-அப்:1135/1
மேல்


துன்பே (1)

துன்பே கவலை பிணி என்று இவற்றை நணுகாமல் துரந்து கரந்துமிடீர் – தேவா-அப்:9/2
மேல்


துன்மதியால் (1)

தோற்றப்பட சென்று கண்டுகொள்ளார் தொண்டர் துன்மதியால்
ஆற்றில் கெடுத்து குளத்தினில் தேடிய ஆதரை போல் – தேவா-அப்:948/2,3
மேல்


துன்றி (3)

தெற்றி கிடந்து வெம் கொன்றையும் துன்றி வெண் திங்கள் சூடும் – தேவா-அப்:796/3
துன்றி நின்றார் தொல்லை வானவர் ஈட்டம் பணி அறிவான் – தேவா-அப்:965/2
சுடர் திங்கள் சூடி சுழல் கங்கையோடும் சுரும்பு துன்றி
படர்க்கொண்ட செஞ்சடையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1035/3,4
மேல்


துன்று (7)

நகை வளர் கொன்றை துன்று நகு வெண் தலையர் நளிர் கங்கை தங்கு முடியர் – தேவா-அப்:78/1
மது விரி கொன்றை துன்று சடை பாகம் மாதர் குழல் பாகம் ஆக வருவர் – தேவா-அப்:81/3
சோதி வெண் பிறை துன்று சடைக்கு அணி – தேவா-அப்:1147/2
துன்று பொன்சடையானை தொழு-மினே – தேவா-அப்:1486/4
துன்று வார் பொழில் தோணிபுரவர்-தம் – தேவா-அப்:1523/3
துன்று பொழில் கச்சி ஏகம்பன்தான் காண் சோற்றுத்துறையான் காண் சோலை சூழ்ந்த – தேவா-அப்:2391/3
துதிசெய்து துன்று மலர் கொண்டு தூவி சூழும் வலம்செய்து தொண்டு பாடி – தேவா-அப்:2402/3
மேல்


துன்றும் (1)

அளி மலர் கொன்றை துன்றும் அவிர் சடை உடையர் போலும் – தேவா-அப்:701/1
மேல்


துன்ன (2)

துன்ன கோவண சுண்ண வெண் நீறு அணி – தேவா-அப்:1527/1
துன்ன ஆடையர் தூ மழுவாளினர் – தேவா-அப்:1931/1
மேல்


துன்னத்தின் (1)

துன்னத்தின் கோவணம் ஒன்று உடையார் போலும் சுடர் மூன்றும் சோதியுமாய் தூயார் போலும் – தேவா-அப்:2619/1
மேல்


துன்னம் (1)

துன்னம் சேர் கோவணத்தாய் தூய நீற்றாய் துதைந்து இலங்கு வெண் மழுவாள் கையில் ஏந்தி – தேவா-அப்:3065/1
மேல்


துன்னி (1)

தொழற்கு அம் கை துன்னி நின்றார்க்கு தோன்றி அருள வல்லானும் – தேவா-அப்:38/1
மேல்


துன்னிய (7)

துன்னிய துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:416/4
துன்னிய சடையர் போலும் தூ மதி மத்தர் போலும் – தேவா-அப்:698/2
சேர்ந்த கை மா மலர் துன்னிய சோற்றுத்துறை உறைவார் – தேவா-அப்:815/3
தூங்கான் துளங்கான் துழாய் கொன்றை துன்னிய செம் சடை மேல் – தேவா-அப்:861/1
துன்னிய தொண்டர்கள் இன்னிசை பாடி தொழுது நல்லூர் – தேவா-அப்:951/2
துன்னிய செம் சடை மேல் ஓர் புனலும் பாம்பும் தூய மா மதி உடனே வைத்தல் தோன்றும் – தேவா-அப்:2270/3
தோடு ஏறும் மலர் கடுக்கை வன்னி மத்தம் துன்னிய செஞ்சடையான் காண் துகள் தீர் சங்கம் – தேவா-அப்:2843/2
மேல்


துன்னினும் (1)

கொண்ட தொண்டரை துன்னினும் சூழலே – தேவா-அப்:1973/4
மேல்


துன்னு (2)

துன்னு வார்குழலாள் உமையாளொடும் – தேவா-அப்:1925/1
துன்னு கை வளை சோர கண் நீர் மல்கும் – தேவா-அப்:1938/2
மேல்


துன்னும் (1)

சுழல் ஆர் துயர் வெயில் சுட்டிடும்போது அடித்தொண்டர் துன்னும்
நிழல் ஆவன என்றும் நீங்கா பிறவி நிலை கெடுத்து – தேவா-அப்:901/1,2
மேல்


துன்னுவார் (2)

துன்னுவார் நரகம்-தன்னுள் தொல்வினை தீர வேண்டின் – தேவா-அப்:451/2
துன்னுவார் நல் நெறி தொடர்வு எய்தவே – தேவா-அப்:1805/4

மேல்