சா – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சாக்காடு 1
சாக்கிய 1
சாக்கியத்தொடு 1
சாக்கியர்கள் 1
சாக்கியரும் 1
சாக்கியனார் 1
சாகின்றார் 1
சாட 1
சாடி 1
சாடிய 2
சாடினார் 1
சாடினானை 1
சாடும் 1
சாண் 1
சாத்தனை 1
சாத்தி 5
சாத்திர 1
சாத்திரம் 2
சாத்திரமும் 1
சாத்துவான் 1
சாதல் 1
சாதலை 1
சாதனமும் 1
சாதி 1
சாதிக்க 1
சாதிகள் 1
சாதித்து 3
சாதிப்பானை 1
சாதியா 1
சாதியை 2
சாந்த 3
சாந்தநீற்றர் 1
சாந்தம் 7
சாந்தமும் 1
சாந்தமொடு 1
சாந்தவர்க்கு 1
சாந்திலும் 1
சாந்தின் 1
சாந்து 5
சாந்தும் 4
சாந்தை 1
சாந்தோ 1
சாபம் 2
சாம் 2
சாம்பர் 5
சாம்பல் 3
சாம்பலானை 1
சாம்பலும் 2
சாம்பலை 3
சாமத்தின் 1
சாமத்து 1
சாமம் 2
சாமவேத 1
சாமவேதம் 3
சாமவேதர் 1
சாமவேதி 1
சாமியோடு 1
சாமுண்டி 1
சாய்க்காட்டு 10
சாய்க்காடு 12
சாய்க்காடும் 1
சாய்த்தான் 1
சாய்த்து 2
சாய்வனை 1
சாய 1
சாயல் 3
சாயலவள் 1
சாயலார் 1
சாயலோடும் 1
சாயுமே 1
சார் 3
சார்தலால் 1
சார்தற்கு 2
சார்ந்த 3
சார்ந்தார் 1
சார்ந்தார்க்கு 4
சார்ந்தார்கட்கு 1
சார்ந்தாரை 1
சார்ந்து 1
சார்ந்தோர்கட்கு 1
சார்வும் 2
சார 1
சாரணன் 2
சாரதி 1
சாரப்பெறீர் 1
சாரம் 1
சாரல் 2
சாரலே 1
சாரா 1
சாராத 1
சாராதே 11
சாராமே 1
சாரும் 1
சாருமாகில் 1
சால் 1
சால 25
சாலவும் 2
சாலேகம் 1
சாலைக்குடி 1
சாவதும் 1
சாவா 1
சாவாமே 1
சாற்றி 1
சாற்றிலும் 1
சாற்றினேன் 1
சாற்றினோம் 1
சாற்றும் 1
சாற்றுவர் 1
சாற்றை 1
சாறு 1
சான்றுகண்டாய் 1



சாக்காடு (1)

பெருகாமே வெள்ளம் தவிர்த்தார் போலும் பிறப்பு இடும்பை சாக்காடு ஒன்று இல்லார் போலும் – தேவா-அப்:2373/2
மேல்


சாக்கிய (1)

பொய் எலாம் உரைக்கும் சமண் சாக்கிய
கையன்மார் உரை கேளாது எழு-மினோ – தேவா-அப்:1873/1,2
மேல்


சாக்கியத்தொடு (1)

சாக்கியத்தொடு மற்றும் சமண் படும் – தேவா-அப்:1553/1
மேல்


சாக்கியர்கள் (1)

எல்லாரும் என்தன்னை இகழ்வர் போலும் ஏழை அமண் குண்டர் சாக்கியர்கள் ஒன்றுக்கு – தேவா-அப்:2562/3
மேல்


சாக்கியரும் (1)

கையில் உண்டு உழல்வாரும் சாக்கியரும் கல்லாத வன் மூடர்க்கு அல்லாதானை – தேவா-அப்:2945/1
மேல்


சாக்கியனார் (1)

கல்லினால் எறிந்து கஞ்சி தாம் உணும் சாக்கியனார்
நெல்லின் ஆர் சோறு உணாமே நீள் விசும்பு ஆள வைத்தார் – தேவா-அப்:481/1,2
மேல்


சாகின்றார் (1)

முன் நெஞ்சம் இன்றி மூர்க்கராய் சாகின்றார்
தம் நெஞ்சம் தமக்கு தாம் இலாதவர் – தேவா-அப்:2061/1,2
மேல்


சாட (1)

சாட எடுத்தது தக்கன்-தன் வேள்வியில் சந்திரனை – தேவா-அப்:789/1
மேல்


சாடி (1)

பித்தன் காண் தக்கன்-தன் வேள்வி எல்லாம் பீடு அழிய சாடி அருள்கள்செய்த – தேவா-அப்:2949/1
மேல்


சாடிய (2)

பாரிடம் சாடிய பல் உயிர் வான் அமரர்க்கு அருளி – தேவா-அப்:853/1
கழகின் மேல் வைத்த காலனை சாடிய
அழகனே அணி வீழிமிழலையுள் – தேவா-அப்:1202/2,3
மேல்


சாடினார் (1)

சாடினார் காலன் மாள சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:629/4
மேல்


சாடினானை (1)

தக்கனது வேள்வி கெட சாடினானை தலை கலனா பலி ஏற்ற தலைவன்-தன்னை – தேவா-அப்:2825/1
மேல்


சாடும் (1)

வானம் சாடும் மதி அரவத்தொடு – தேவா-அப்:1515/1
மேல்


சாண் (1)

சாண் இரு மருங்கு நீண்ட சழக்கு உடை பதிக்கு நாதர் – தேவா-அப்:655/1
மேல்


சாத்தனை (1)

சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதம் – தேவா-அப்:317/2
மேல்


சாத்தி (5)

அரவு அரை சாத்தி நின்றானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:33/4
கொண்டு இருக்கு ஓதி ஆட்டி குங்கும குழம்பு சாத்தி
இண்டை கொண்டு ஏற நோக்கி ஈசனை எம்பிரானை – தேவா-அப்:726/2,3
மூவாத மூக்க பாம்பு அரையில் சாத்தி மூவர் உரு ஆய முதல்வர் இ நாள் – தேவா-அப்:2669/1
அனல் ஒரு கையது ஏந்தி அதளினோடே ஐந்தலைய மா நாகம் அரையில் சாத்தி
புனல் பொதிந்த சடை கற்றை பொன் போல் மேனி புனிதனார் புரிந்து அமரர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2670/1,2
முறித்தது ஒரு தோல் உடுத்து முண்டம் சாத்தி முனி கணங்கள் புடை சூழ முற்றம்-தோறும் – தேவா-அப்:2671/2
மேல்


சாத்திர (1)

பண்ணிய சாத்திர பேய்கள் பறி தலை குண்டரை விட்டு – தேவா-அப்:982/1
மேல்


சாத்திரம் (2)

சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் – தேவா-அப்:1674/1
பட்டர் ஆகில் என் சாத்திரம் கேட்கில் என் – தேவா-அப்:2068/1
மேல்


சாத்திரமும் (1)

சொல்லும் பொருள் எலாம் ஆனார் தாமே தோத்திரமும் சாத்திரமும் ஆனார் தாமே – தேவா-அப்:2864/2
மேல்


சாத்துவான் (1)

சந்தம் ஆக திரு சடை சாத்துவான்
பந்தம் ஆயின தீர்க்கும் பழனத்தான் – தேவா-அப்:1422/2,3
மேல்


சாதல் (1)

சங்கு ஒத்த மேனி செல்வா சாதல் நாள் நாயேன் உன்னை – தேவா-அப்:733/3
மேல்


சாதலை (1)

பெரியனார் தம் பிறப்பொடு சாதலை
விரியினார் தொழும் வீழிமிழலையே – தேவா-அப்:1191/3,4
மேல்


சாதனமும் (1)

எவரேனும் தாம் ஆக இலாடத்து இட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி – தேவா-அப்:2698/1
மேல்


சாதி (1)

சாதி ஆம் சதுமுகனும் சக்கரத்தானும் காணா – தேவா-அப்:420/3
மேல்


சாதிக்க (1)

சந்த வெண் திங்கள் அணிந்தான்-தன்னை தவ நெறிகள் சாதிக்க வல்லான்-தன்னை – தேவா-அப்:2109/2
மேல்


சாதிகள் (1)

சாதிகள் ஆய பவளமும் முத்து தாமங்கள் – தேவா-அப்:210/3
மேல்


சாதித்து (3)

சாதித்து இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1048/4
சாம்பர் அகலத்து அணிந்தாய் போற்றி தவ நெறிகள் சாதித்து நின்றாய் போற்றி – தேவா-அப்:2132/1
தலை ஆய மலை எடுத்த தகவிலோனை தகர்ந்து விழ ஒரு விரலால் சாதித்து ஆண்ட – தேவா-அப்:2953/3
மேல்


சாதிப்பானை (1)

சாதிப்பானை தவத்திடை மாற்றங்கள் – தேவா-அப்:2001/3
மேல்


சாதியா (1)

சாதியா நான்முகனும் சக்கரத்தானும் காணா – தேவா-அப்:412/3
மேல்


சாதியை (2)

சாதியை சங்க வெண் நீற்று அண்ணலை விண்ணில் வானோர் – தேவா-அப்:722/2
சாதியை கெடுமா செய்த சங்கரன் – தேவா-அப்:1657/2
மேல்


சாந்த (3)

சடை கொள் வெள்ளத்தன் சாந்த வெண்நீற்றினன் – தேவா-அப்:1180/2
சடை கொள் வெள்ளத்தர் சாந்த வெண்நீற்றினர் – தேவா-அப்:1313/2
தழல் கொள் மேனியர் சாந்த வெண் நீறு அணி – தேவா-அப்:1597/2
மேல்


சாந்தநீற்றர் (1)

சடையனார் சாந்தநீற்றர் தனி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:220/1
மேல்


சாந்தம் (7)

விலையிலி சாந்தம் என்று வெறி நீறு பூசி விளையாடும் வேட விகிர்தர் – தேவா-அப்:80/3
சடையும் கொப்பளித்த திங்கள் சாந்தம் வெண் நீறு பூசி – தேவா-அப்:241/2
வெம் முலை சாந்தம் விலை பெறு மாலை எடுத்தவர்கள் – தேவா-அப்:1004/2
பூண் அலா பூணானை பூசா சாந்தம் உடையானை முடை நாறும் புன் கலத்தில் – தேவா-அப்:2197/1
நற படு பூ மலர் தூபம் தீபம் நல்ல நறும் சாந்தம் கொண்டு ஏத்தி நாளும் வானோர் – தேவா-அப்:2389/3
பட்டு உடுத்து பவளம் போல் மேனி எல்லாம் பசும் சாந்தம் கொண்டு அணிந்து பாதம் நோவ – தேவா-அப்:2672/1
சாந்தம் என நீறு அணிந்தான் கயிலை வெற்பை தட கைகளால் எடுத்திடலும் தாளால் ஊன்றி – தேவா-அப்:2917/2
மேல்


சாந்தமும் (1)

தாமம் தூபமும் தண் நறும் சாந்தமும்
ஏமமும் புனைவார் எதிர் செல்லலே – தேவா-அப்:1978/3,4
மேல்


சாந்தமொடு (1)

தழும்பு உளவே வரை மார்பில் வெண் நூல் உண்டே சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி – தேவா-அப்:2127/3
மேல்


சாந்தவர்க்கு (1)

சலம் இலன் சங்கரன் சாந்தவர்க்கு அலால் – தேவா-அப்:109/1
மேல்


சாந்திலும் (1)

நறவம் நாறிய நன் நறும் சாந்திலும்
நிறைய நீறு அணிவார் எதிர் செல்லலே – தேவா-அப்:1977/3,4
மேல்


சாந்தின் (1)

வேய் ஒத்த தோளியர்-தம் மென் முலை மேல் தண் சாந்தின்
ஆயத்திடையானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:189/3,4
மேல்


சாந்து (5)

அம் சாந்து அணிந்தானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:197/4
சோதியாய் சுடரும் ஆனார் சுண்ண வெண் சாந்து பூசி – தேவா-அப்:372/1
சாந்து ஆய வெந்த தவள வெண் நீறும் தகுணிச்சமும் – தேவா-அப்:1041/2
நாறு சாந்து அணி நல் முலை மென் மொழி – தேவா-அப்:1777/1
தணல் முழுகு பொடி ஆடும் செக்கர் மேனி தத்துவனை சாந்து அகிலின் அளறு தோய்ந்த – தேவா-அப்:2914/3
மேல்


சாந்தும் (4)

சுண்ண வெண் சந்தன சாந்தும் சுடர் திங்கள் சூளாமணியும் – தேவா-அப்:11/1
புன் புலால் நாறு காட்டின் பொடி அலால் சாந்தும் இல்லை – தேவா-அப்:399/2
தொடுத்த மலரொடு தூபமும் சாந்தும் கொண்டு எப்பொழுதும் – தேவா-அப்:772/1
தாளானை தன் ஒப்பார் இல்லாதானை சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த – தேவா-அப்:2756/2
மேல்


சாந்தை (1)

தஞ்சை தளிக்குளத்தார் தக்களூரார் சாந்தை அயவந்தி தங்கினார்தாம் – தேவா-அப்:2601/2
மேல்


சாந்தோ (1)

நிலா மாலை செம் சடை மேல் வைத்தது உண்டோ நெற்றி மேல் கண் உண்டோ நீறு சாந்தோ
புலால் நாறு வெள் எலும்பு பூண்டது உண்டோ பூதம் தற்சூழ்ந்தனவோ போர் ஏறு உண்டோ – தேவா-அப்:3038/1,2
மேல்


சாபம் (2)

குன்றாத மா முனிவன் சாபம் நீங்க குரை கழலால் கூற்றுவனை குமைத்த கோனை – தேவா-அப்:2294/1
முடித்தவன் காண் வன் கூற்றை சீற்ற தீயால் வலியார்-தம் புரம் மூன்றும் வேவ சாபம்
பிடித்தவன் காண் பிஞ்ஞகன் ஆம் வேடத்தான் காண் பிணையல் வெறி கமழ் கொன்றை அரவு சென்னி – தேவா-அப்:2732/1,2
மேல்


சாம் (2)

சாம் மனை வாழ்க்கை ஆன சலத்துளே அழுந்தவேண்டா – தேவா-அப்:421/1
சாம் அன்று உரைக்க தகுதி கண்டாய் எங்கள் சங்கரனே – தேவா-அப்:995/4
மேல்


சாம்பர் (5)

சங்கு அணி குழையும் வைத்தார் சாம்பர் மெய் பூச வைத்தார் – தேவா-அப்:379/1
தீ வண சாம்பர் பூசி திரு உரு இருந்த ஆறும் – தேவா-அப்:747/2
வளைந்தான் ஒரு விரலினொடு வீழ்வித்து சாம்பர் வெண் நீறு – தேவா-அப்:807/3
சாம்பர் அகலத்து அணிந்தாய் போற்றி தவ நெறிகள் சாதித்து நின்றாய் போற்றி – தேவா-அப்:2132/1
சதுரா சதுர குழையாய் போற்றி சாம்பர் மெய் பூசும் தலைவா போற்றி – தேவா-அப்:2658/2
மேல்


சாம்பல் (3)

சாம்பல் பூசூவர் தாழ் சடை கட்டுவர் – தேவா-அப்:1323/1
சாம்பல் என்பு தனக்கு அணி ஆகுமே – தேவா-அப்:1685/4
சவம் தாங்கு மயானத்து சாம்பல் என்பு தலை ஓடு மயிர் கயிறு தரித்தான்-தன்னை – தேவா-அப்:2585/1
மேல்


சாம்பலானை (1)

தலை ஏந்து கையானை என்பு ஆர்த்தானை சவம் தாங்கு தோளானை சாம்பலானை
குலை ஏறு நறும் கொன்றை முடி மேல் வைத்து கோள் நாகம் அசைத்தானை குலம் ஆம் கைலை – தேவா-அப்:2974/1,2
மேல்


சாம்பலும் (2)

சங்கினுள் முத்தம் வைத்தார் சாம்பலும் பூச வைத்தார் – தேவா-அப்:301/2
சடை உடையான் சங்க குழை ஓர் காதன் சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி – தேவா-அப்:3055/1
மேல்


சாம்பலை (3)

சாம்பலை பூசி தரையில் புரண்டு நின் தாள் சரண் என்று – தேவா-அப்:963/3
சாம்பலை பூசி சலம் இன்றி தொண்டுபட்டு உய்ம்-மின்களே – தேவா-அப்:986/4
சாம்பலை பூசி தரையில் புரண்டு நின் தாள் பரவி – தேவா-அப்:1031/1
மேல்


சாமத்தின் (1)

சடை ஒன்றில் கங்கையையும் தரித்துக்கொண்டார் சாமத்தின் இசை வீணை தடவிக்கொண்டார் – தேவா-அப்:3034/1
மேல்


சாமத்து (1)

சாமத்து வேதம் ஆகி நின்றது ஓர் சயம்பு-தன்னை – தேவா-அப்:447/2
மேல்


சாமம் (2)

தாயானை சக்கரம் மாற்கு ஈந்தான்-தன்னை சங்கரனை சந்தோக சாமம் ஓதும் – தேவா-அப்:2587/2
சடையானை சாமம் போல் கண்டத்தானை தத்துவனை தன் ஒப்பார் இல்லாதானை – தேவா-அப்:2777/2
மேல்


சாமவேத (1)

சந்திரனை மா கங்கை திரையால் மோத சடா மகுடத்து இருத்துமே சாமவேத
கந்தருவம் விரும்புமே கபாலம் ஏந்து கையனே மெய்யனே கனக மேனி – தேவா-அப்:2118/1,2
மேல்


சாமவேதம் (3)

பாடினார் சாமவேதம் பாடிய பாணியாலே – தேவா-அப்:270/3
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதம்
கூத்தொடும் பாட வைத்தார் கோள் அரா மதியம் நல்ல – தேவா-அப்:317/2,3
பாடினார் சாமவேதம் பைம் பொழில் பழனை மேயார் – தேவா-அப்:666/3
மேல்


சாமவேதர் (1)

சந்து அணி கொங்கையாள் ஓர்பங்கினர் சாமவேதர்
எந்தையும் எந்தை தந்தை தந்தையும் ஆய ஈசர் – தேவா-அப்:625/1,2
மேல்


சாமவேதி (1)

சந்திரன் சடையில் வைத்த சங்கரன் சாமவேதி
அந்தரத்து அமரர் பெம்மான் ஆன் நல் வெள்ஊர்தியான்-தன் – தேவா-அப்:749/1,2
மேல்


சாமியோடு (1)

சாமியோடு சரச்சுவதி அவள் – தேவா-அப்:1292/3
மேல்


சாமுண்டி (1)

சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதம் – தேவா-அப்:317/2
மேல்


சாய்க்காட்டு (10)

தேன் ஒத்து அடியார்க்கு இனியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2898/4
திண் ஆர் புகார் முத்து அலைக்கும் தெண் நீர் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2899/4
தேன் இரிய மீன் பாயும் தெண் நீர் பொய்கை திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2900/4
தேன் உற்ற சோலை திகழ்ந்து தோன்றும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2901/4
சீர் மல்கு பாடல் உகந்தார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2902/4
தேவாதிதேவர்க்கு அரியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2903/4
செடி படு நோய் அடியாரை தீர்ப்பார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2904/4
சிலையின் ஆர் செம் கண் அரவர் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2905/4
தில்லை நடம் ஆடும் தேவர் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2906/4
சிறப்பு உடைய அடியார்கட்கு இனியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2907/4
மேல்


சாய்க்காடு (12)

சாடினார் காலன் மாள சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:629/4
தடம் கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:630/4
தரணிதான் ஆள வைத்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:631/4
சரம் பொலி தூணி ஈந்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:632/4
சந்திரற்கு அருள்செய்தாரும் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:633/4
தாம நல் சண்டிக்கு ஈந்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:634/4
தையலை சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:635/4
தவ பெரும் தேவு செய்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:636/4
சக்கரம் கொடுப்பர் போலும் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:637/4
சயம் பெற நாமம் ஈந்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:638/4
சங்கு திரை உகளும் சாய்க்காடு ஆள்வர் சரிதை பல உடையர் தன்மை சொல்லின் – தேவா-அப்:2255/3
தலையாலங்காடு தடம் கடல் சூழ் அம் தண் சாய்க்காடு தெள்ளு புனல் கொள்ளிக்காடு – தேவா-அப்:2802/2
மேல்


சாய்க்காடும் (1)

மருள் இயலும் சிந்தையர்க்கு மருந்து-தன்னை மறைக்காடும் சாய்க்காடும் மன்னினானை – தேவா-அப்:2421/2
மேல்


சாய்த்தான் (1)

தாமரையான்-தன் தலையை சாய்த்தான் கண்டாய் தகவு உடையார் நெஞ்சு இருக்கை கொண்டான் கண்டான் – தேவா-அப்:2481/1
மேல்


சாய்த்து (2)

முப்போதும் முடி சாய்த்து தொழ நின்ற முதல்வனை – தேவா-அப்:64/2
நின் போல் அமரர்கள் நீள் முடி சாய்த்து நிமிர்ந்து உகுத்த – தேவா-அப்:892/1
மேல்


சாய்வனை (1)

சாய்வனை சலவார்கள் தமக்கு உடல் – தேவா-அப்:2081/3
மேல்


சாய (1)

கிடக்கையால் இடர்கள் ஓங்க கிளர் மணி முடிகள் சாய
முடக்கினார் திரு விரல்தான் முருகு அமர் கோதை பாகத்து – தேவா-அப்:258/2,3
மேல்


சாயல் (3)

தவள மா மதி சாயல் ஓர் சந்திரன் – தேவா-அப்:1356/1
ஆலும் மா மயில் சாயல் நல்லாரொடும் – தேவா-அப்:1555/1
கார் ஊராநின்ற கழனி சாயல் கண் ஆர்ந்த நெடு மாடம் கலந்து தோன்றும் – தேவா-அப்:2339/2
மேல்


சாயலவள் (1)

நளிர் பொறி மஞ்ஞை அன்ன தளிர் போன்ற சாயலவள் தோன்று வாய்மை பெருகி – தேவா-அப்:75/3
மேல்


சாயலார் (1)

கண் காட்டா கருவரை போல் அனைய காஞ்சி கார் மயில் அம் சாயலார் கலந்து காண – தேவா-அப்:3003/2
மேல்


சாயலோடும் (1)

களி மயில் சாயலோடும் காமனை விழிப்பர் போலும் – தேவா-அப்:701/2
மேல்


சாயுமே (1)

தம் கையால் தொழுவார் வினை சாயுமே – தேவா-அப்:1261/4
மேல்


சார் (3)

தான் தலைப்பட்டு நின்று சார் கனலகத்து வீழ – தேவா-அப்:417/2
தணிபு ஆடு தண் கெடில நாடன் அடி தகை சார் வீரட்ட தலைவன் அடி – தேவா-அப்:2147/4
பொய் சார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2637/3
மேல்


சார்தலால் (1)

தம் அச்சம் நீங்க தவ நெறி சார்தலால்
அமைத்து கொண்டது ஓர் வாழ்க்கையனாகிலும் – தேவா-அப்:2047/2,3
மேல்


சார்தற்கு (2)

தன்னில் தன்னையும் சார்தற்கு அரியனே – தேவா-அப்:2054/4
தன் ஆனையா பண்ணி ஏறினானை சார்தற்கு அரியானை தாதை-தன்னை – தேவா-அப்:2715/2
மேல்


சார்ந்த (3)

சார்ந்த வயல் அணி தண்_அமுதை அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:869/4
தண்டி குண்டோதரன் பிங்கிருடி சார்ந்த புகழ் நந்தி சங்குகன்னன் – தேவா-அப்:3001/1
விடை உடையான் வேங்கை அதள் மேல் ஆடை வெள்ளி போல் புள்ளி உழை மான் தோல் சார்ந்த
உடை உடையான் நம்மை உடையான் கண்டீர் உம்மோடு மற்றும் உளராய் நின்ற – தேவா-அப்:3055/2,3
மேல்


சார்ந்தார் (1)

சிரமப்பட வந்து சார்ந்தார் கழல் அடி காண்பதற்கே – தேவா-அப்:798/3
மேல்


சார்ந்தார்க்கு (4)

தலையவனாய் உலகுக்கு ஓர் தன்மையானே தத்துவனாய் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே – தேவா-அப்:2524/1
தன்னவனாய் உலகு எல்லாம் தானே ஆகி தத்துவனாய் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே – தேவா-அப்:2530/1
சந்திரனும் தண் புனலும் சந்தித்தான் காண் தாழ் சடையான் காண் சார்ந்தார்க்கு அமுது ஆனான் காண் – தேவா-அப்:2574/1
தந்த அத்தன்-தன் தலையை தாங்கினான் காண் சாரணன் காண் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனான் காண் – தேவா-அப்:2575/1
மேல்


சார்ந்தார்கட்கு (1)

சரவணத்தான் கைதொழுது சாரும் அடி சார்ந்தார்கட்கு எல்லாம் சரண் ஆம் அடி – தேவா-அப்:2139/2
மேல்


சார்ந்தாரை (1)

தனத்தகத்து தலை கலனா கொண்டாய் நீயே சார்ந்தாரை தகைந்து ஆள வல்லாய் நீயே – தேவா-அப்:2467/2
மேல்


சார்ந்து (1)

தருக்கு அது ஆக நாம் சார்ந்து தொழுதுமே – தேவா-அப்:1557/4
மேல்


சார்ந்தோர்கட்கு (1)

சார்ந்தோர்கட்கு இனியானை தன் ஒப்பு இல்லா தழல் உருவை தலைமகனை தகை நால் வேதம் – தேவா-அப்:2961/2
மேல்


சார்வும் (2)

சேய உலகமும் செல் சார்வும் ஆனானை – தேவா-அப்:189/1
தாய் ஆகி தந்தையாய் சார்வும் ஆகி தாரகையும் ஞாயிறும் தண் மதியும் ஆகி – தேவா-அப்:3009/2
மேல்


சார (1)

மிழலையான் அடி சார விண் ஆள்வரே – தேவா-அப்:1189/4
மேல்


சாரணன் (2)

சாரணன் காண் சந்திரன் காண் கதிரோன் தான் காண் தன்மை-கண் தானே காண் தக்கோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2163/3
தந்த அத்தன்-தன் தலையை தாங்கினான் காண் சாரணன் காண் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனான் காண் – தேவா-அப்:2575/1
மேல்


சாரதி (1)

தருக்கின அரக்கன் தேர் ஊர் சாரதி நிலாது – தேவா-அப்:628/1
மேல்


சாரப்பெறீர் (1)

நீர்கள் சாரப்பெறீர் இங்கு நீங்குமே – தேவா-அப்:1975/4
மேல்


சாரம் (1)

தக்கன்-தன் வேள்வி தகர்த்தவன் சாரம் அது அன்று கோள் – தேவா-அப்:847/1
மேல்


சாரல் (2)

திருக்காட்டுப்பள்ளி கள் ஆர் கமழ் கொல்லி அறைப்பள்ளி கலவம் சாரல்
சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன்பள்ளி செழு நனிபள்ளி தவப்பள்ளி சீர் ஆர் – தேவா-அப்:2797/2,3
மந்தம் ஆம் பொழில் சாரல் வட பர்ப்பதம் மகேந்திர மா மலை நீலம் ஏமகூடம் – தேவா-அப்:2805/2
மேல்


சாரலே (1)

தன்னில் ஒன்று வல்லாரையும் சாரலே – தேவா-அப்:1981/4
மேல்


சாரா (1)

அடையா அவலம் அரு வினை சாரா நமனை அஞ்சோம் – தேவா-அப்:915/2
மேல்


சாராத (1)

வஞ்சனையார் ஆர் பாடும் சாராத மைந்தனை – தேவா-அப்:194/1
மேல்


சாராதே (11)

தட்டானை சாராதே தவம் இருக்க அவம் செய்து தருக்கினேனே – தேவா-அப்:50/4
தண்டத்தில் தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2870/4
தக்கு இருந்த தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2871/4
தத்துவனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2872/4
தவன் ஆய தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2873/4
சங்கரனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2874/4
தடம் கடலை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2875/4
சடையானை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2876/4
தரும் பொருளை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2877/4
தண்டு அரனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2878/4
தத்துவனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2879/4
மேல்


சாராமே (1)

கலை ஞானம் கல்லாமே கற்பித்தானை கடு நரகம் சாராமே காப்பான்-தன்னை – தேவா-அப்:2195/1
மேல்


சாரும் (1)

சரவணத்தான் கைதொழுது சாரும் அடி சார்ந்தார்கட்கு எல்லாம் சரண் ஆம் அடி – தேவா-அப்:2139/2
மேல்


சாருமாகில் (1)

நோய் அவை சாருமாகில் நோக்கி நீ அருள்செயாயே – தேவா-அப்:741/4
மேல்


சால் (1)

உழுத சால் வழியே உழுவான்-பொருட்டு – தேவா-அப்:1961/3
மேல்


சால (25)

ஐவரை அகத்தே வைத்தீர் அவர்களே வலியர் சால
செய்வது ஒன்று அறியமாட்டேன் திரு புகலூரனீரே – தேவா-அப்:526/3,4
சைவனே சால ஞானம் கற்று அறிவு இலாத நாயேன் – தேவா-அப்:602/3
நிலையும் பெருமையும் நீதியும் சால அழகு உடைத்தாய் – தேவா-அப்:795/1
சால கிடக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1043/4
சால நல்லள் ஆகின்றனள் தையலே – தேவா-அப்:1520/4
அண்ணலாருக்கு சால அழகிதே – தேவா-அப்:1521/4
சால நீ உறு மால் தவிர் நெஞ்சமே – தேவா-அப்:1555/2
ஈட்டும் மா நிதி சால இழக்கினும் – தேவா-அப்:1677/1
தாழும் பத்தர்கள் சால சதுரரே – தேவா-அப்:1711/4
தாட்சி சால உண்டாகும் என் தையலே – தேவா-அப்:1940/4
இமைத்து நிற்பது சால அரியதே – தேவா-அப்:2047/4
தங்கும் இடம் அறியார் சால நாளார் தரமபுரத்து உள்ளார் தக்களூரார் – தேவா-அப்:2096/3
பச்சை நிறம் உடையர் பாலர் சால பழையர் பிழை எல்லாம் நீக்கி ஆள்வர் – தேவா-அப்:2260/1
பிச்சை கொள நுகர்வர் பெரியர் சால பிறங்கு சடைமுடியர் பேணும் தொண்டர் – தேவா-அப்:2260/3
தண்டத்தில் தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2870/4
தக்கு இருந்த தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2871/4
தத்துவனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2872/4
தவன் ஆய தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2873/4
சங்கரனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2874/4
தடம் கடலை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2875/4
சடையானை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2876/4
தரும் பொருளை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2877/4
தண்டு அரனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2878/4
தத்துவனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2879/4
தகர்த்தவன் காண் தக்கன்-தன் தலையை செற்ற தலையவன் காண் மலைமகள் ஆம் உமையை சால
மதிப்பு ஒழிந்த வல் அமரர் மாண்டார் வேள்வி வந்து அவி உண்டவரோடும் அதனை எல்லாம் – தேவா-அப்:2934/2,3
மேல்


சாலவும் (2)

சாலவும் ஆகி மிக்க சமயங்கள் ஆறின் உரு ஆகி நின்ற தழலோன் – தேவா-அப்:136/2
இனிது சாலவும் ஏசற்றவர்கட்கே – தேவா-அப்:1970/4
மேல்


சாலேகம் (1)

ஏல்வு உடைத்தா அமைத்து அங்கு ஏழு சாலேகம் பண்ணி – தேவா-அப்:327/3
மேல்


சாலைக்குடி (1)

சடை முடி சாலைக்குடி தக்களூர் தலையாலங்காடு தலைச்சங்காடு – தேவா-அப்:2788/2
மேல்


சாவதும் (1)

சங்கை உள்ளதும் சாவதும் மெய் உமை – தேவா-அப்:1868/1
மேல்


சாவா (1)

சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்ட சமுத்திரத்தின் நஞ்சு உண்டு சாவா மூவா – தேவா-அப்:3058/3
மேல்


சாவாமே (1)

சாவாமே காத்து என்னை ஆண்டாய் போற்றி சங்கு ஒத்த நீற்று எம் சதுரா போற்றி – தேவா-அப்:2413/3
மேல்


சாற்றி (1)

சாற்றி சொல்லுவன் கேண்-மின் தரணியீர் – தேவா-அப்:1676/1
மேல்


சாற்றிலும் (1)

கருப்பு சாற்றிலும் அண்ணிக்கும் காண்-மினே – தேவா-அப்:1684/4
மேல்


சாற்றினேன் (1)

சாற்றினேன் சடை நீள் முடி சங்கரன் – தேவா-அப்:1976/1
மேல்


சாற்றினோம் (1)

தழலை நீர் மடி கொள்ளன்-மின் சாற்றினோம்
மிழலையான் அடி சார விண் ஆள்வரே – தேவா-அப்:1189/3,4
மேல்


சாற்றும் (1)

சாற்றும் நாள் அற்றது என்று தருமராசற்காய் வந்த – தேவா-அப்:477/3
மேல்


சாற்றுவர் (1)

சாற்றுவர் ஐவர் வந்து சந்திக்க குடிமை வேண்டி – தேவா-அப்:672/1
மேல்


சாற்றை (1)

ஆலை கரும்பின் இன் சாற்றை அண்ணாமலை எம் அண்ணலை – தேவா-அப்:152/2
மேல்


சாறு (1)

ஆலை படு கரும்பின் சாறு போல அண்ணிக்கும் அஞ்சுஎழுத்தின் நாமத்தான் காண் – தேவா-அப்:2606/1
மேல்


சான்றுகண்டாய் (1)

சான்றுகண்டாய் இ உலகம் எல்லாம் தனியேன் என்று என்னை – தேவா-அப்:964/2

மேல்