நு – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நுகர் 2
நுகர்தரும் 1
நுகர்வர் 1
நுகர்வானும் 1
நுகர 1
நுங்கள் 2
நுடங்கு 1
நுண் 6
நுண்ணிய 2
நுண்ணியர் 2
நுண்பொருள் 2
நுண்பொருள்கள் 1
நுணங்கு 2
நுண்இடையாள் 7
நுண்இடையாள்_கூறா 1
நுண்இடையாள்_பாகத்தாரும் 1
நுண்இடையாள்_பாகத்தான் 2
நுண்இடையாள்_பாகம் 1
நுணுகாதே 1
நுணுகினானை 1
நுணுகும் 1
நுதல் 10
நுதலர் 2
நுதலாய் 1
நுதலார் 1
நுதலாரும் 1
நுதலானை 1
நுதலி 1
நுதலினார் 1
நுதலே 2
நுதிக்கு 1
நுதியினாலே 1
நுந்தாத 2
நும் 12
நும்மால் 6
நும்முடைய 1
நும்முளே 1
நும்மை 7
நுமக்கு 1
நுரை 1
நுரைக்கும் 1
நுழை 1
நுழைந்த 1
நுழைய 1
நுளைச்சியர் 1
நுன் 2
நுன்பின் 1
நுன்னை 1
நுன 1
நுனை 1


நுகர் (2)

உம் பரமே உம் வசமே ஆக்க வல்லீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர் – தேவா-அப்:2355/2
நிரந்து ஓடி மா நிலத்தை அரித்து தின்பீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர் – தேவா-அப்:2361/2
மேல்


நுகர்தரும் (1)

கிழிந்த தேன் நுகர்தரும் கெடிலவாணரே – தேவா-அப்:100/4
மேல்


நுகர்வர் (1)

பிச்சை கொள நுகர்வர் பெரியர் சால பிறங்கு சடைமுடியர் பேணும் தொண்டர் – தேவா-அப்:2260/3
மேல்


நுகர்வானும் (1)

காய் ஆகி பழம் ஆகி பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானும் தானே ஆகி – தேவா-அப்:3009/3
மேல்


நுகர (1)

நுகர நீ உனை கொண்டு உய போக்குறில் – தேவா-அப்:2041/2
மேல்


நுங்கள் (2)

உன் உருவின் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றத்து உறுப்பினது குறிப்பு ஆகும் ஐவீர் நுங்கள்
மன் உருவத்து இயற்கைகளால் சுவைப்பீர்க்கு ஐயோ வையகமே போதாதே யானேல் வானோர் – தேவா-அப்:2357/1,2
குடைகின்றீர்க்கு உலகங்கள் குலுங்கி நுங்கள் குறி நின்றது அமையாதே யானேல் வானோர் – தேவா-அப்:2360/2
மேல்


நுடங்கு (1)

நொந்தார் போல் வந்து எனது இல்லே புக்கு நுடங்கு ஏர் இடை மடவாய் நம் ஊர் கேட்கில் – தேவா-அப்:2173/3
மேல்


நுண் (6)

நூலும் கொப்பளித்த மார்பில் நுண் பொறி அரவம் சேர்த்தி – தேவா-அப்:245/2
நொய்யவர் விழுமியாரும் நூலின் நுண் நெறியை காட்டும் – தேவா-அப்:285/1
பட்ட நுண் துளி பாயும் பராய்த்துறை – தேவா-அப்:1372/2
நூலும் வேண்டுமோ நுண் உணர்ந்தோர்கட்கே – தேவா-அப்:1463/4
இடுகு நுண் இடை ஏந்து இள மென் முலை – தேவா-அப்:1546/1
மின்னின் நுண் இடை கன்னியர் மிக்கு எங்கும் – தேவா-அப்:1581/1
மேல்


நுண்ணிய (2)

நுரைக்கும் கங்கையும் நுண்ணிய செம் சடை – தேவா-அப்:1528/2
நுண்ணிய வெண் நூல் கிடந்த மார்பா என்றும் நுந்தாத ஒண் சுடரே என்றும் நாளும் – தேவா-அப்:2398/2
மேல்


நுண்ணியர் (2)

பரியர் நுண்ணியர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1325/4
பரியர் நுண்ணியர் பார்த்தற்கு அரியவர் – தேவா-அப்:1339/1
மேல்


நுண்பொருள் (2)

நூலின் கீழவர்கட்கு எல்லாம் நுண்பொருள் ஆகிநின்று – தேவா-அப்:359/2
நூல் அலால் நொடிவது இல்லை நுண்பொருள் ஆய்ந்துகொண்டு – தேவா-அப்:395/2
மேல்


நுண்பொருள்கள் (1)

அறிவு அரிய நுண்பொருள்கள் ஆயினான் காண் ஆயிரம் பேர் உடையவன் காண் அம் தண் கானல் – தேவா-அப்:2846/3
மேல்


நுணங்கு (2)

நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும் – தேவா-அப்:1872/1
நுணங்கு நூல் அயன் மாலும் அறிகிலா – தேவா-அப்:1886/1
மேல்


நுண்இடையாள் (7)

மின் நலத்த நுண்இடையாள் பாகம் வைத்தார் வேழத்தின் உரி வைத்தார் வெண் நூல் வைத்தார் – தேவா-அப்:2223/3
மின் அனைய நுண்இடையாள் பாகம் தோன்றும் வேழத்தின் உரி விரும்பி போர்த்தல் தோன்றும் – தேவா-அப்:2270/2
மின் நலத்த நுண்இடையாள்_பாகத்தான் காண் வேதியன் காண் வெண் புரி நூல் மார்பினான் காண் – தேவா-அப்:2392/2
கொம்பு அனைய நுண்இடையாள்_கூறா போற்றி குரை கழலால் கூற்று உதைத்த கோவே போற்றி – தேவா-அப்:2411/2
மின் உருவ நுண்இடையாள்_பாகத்தான் காண் வேழத்தின் உரி வெருவ போர்த்தான்தான் காண் – தேவா-அப்:2576/3
மின் இலங்கு நுண்இடையாள்_பாகத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2685/4
மின் ஒத்த நுண்இடையாள்_பாகம் கண்டேன் மிளிர்வது ஒரு பாம்பும் அரை மேல் கண்டேன் – தேவா-அப்:3046/2
மேல்


நுண்இடையாள்_கூறா (1)

கொம்பு அனைய நுண்இடையாள்_கூறா போற்றி குரை கழலால் கூற்று உதைத்த கோவே போற்றி – தேவா-அப்:2411/2
மேல்


நுண்இடையாள்_பாகத்தாரும் (1)

மின் இலங்கு நுண்இடையாள்_பாகத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2685/4
மேல்


நுண்இடையாள்_பாகத்தான் (2)

மின் நலத்த நுண்இடையாள்_பாகத்தான் காண் வேதியன் காண் வெண் புரி நூல் மார்பினான் காண் – தேவா-அப்:2392/2
மின் உருவ நுண்இடையாள்_பாகத்தான் காண் வேழத்தின் உரி வெருவ போர்த்தான்தான் காண் – தேவா-அப்:2576/3
மேல்


நுண்இடையாள்_பாகம் (1)

மின் ஒத்த நுண்இடையாள்_பாகம் கண்டேன் மிளிர்வது ஒரு பாம்பும் அரை மேல் கண்டேன் – தேவா-அப்:3046/2
மேல்


நுணுகாதே (1)

நோக்காதே எவ்வளவும் நோக்கினானை நுணுகாதே யாது ஒன்றும் நுணுகினானை – தேவா-அப்:2196/1
மேல்


நுணுகினானை (1)

நோக்காதே எவ்வளவும் நோக்கினானை நுணுகாதே யாது ஒன்றும் நுணுகினானை
ஆக்காதே யாது ஒன்றும் ஆக்கினானை அணுகாதார் அவர்-தம்மை அணுகாதானை – தேவா-அப்:2196/1,2
மேல்


நுணுகும் (1)

நோக்கினால் வணங்குவார்க்கு நோய் வினை நுணுகும் அன்றே – தேவா-அப்:594/4
மேல்


நுதல் (10)

பிறை நுதல் பேதை மாதர் உமை என்னும் நங்கை பிறழ் பாட நின்று பிணைவான் – தேவா-அப்:76/3
பேர்த்தார் பிறை நுதல் பெண்ணின் நல்லாள் உட்க – தேவா-அப்:160/2
மூன்று-கொல் ஆம் அவர் கண் நுதல் ஆவன – தேவா-அப்:179/1
வந்த நன் பயனும் ஆகி வாள்_நுதல் பாகம் ஆகி – தேவா-அப்:470/2
பிறை நுதல் பேதை மாதர் பெய்வளையார்க்கும் அல்லேன் – தேவா-அப்:768/2
பிறை கொள் வாள் நுதல் பெய் வளை தோளியர் – தேவா-அப்:1330/1
மறம் கொள் வேல்கண்ணி வாள்_நுதல் பாகமாய் – தேவா-அப்:1813/2
நா வளம் பெறும் ஆறு மன் நல்_நுதல் – தேவா-அப்:1852/1
சேடு ஏறு திரு நுதல் மேல் நாட்டம் வைத்தார் சிலை வைத்தார் மலை பெற்ற மகளை வைத்தார் – தேவா-அப்:2224/3
நீல நிறமுண்ட கண்டம் கண்டேன் நெற்றி நுதல் கண்டேன் பெற்றம் கண்டேன் – தேவா-அப்:2851/2
மேல்


நுதலர் (2)

தேய் பொடி வெள்ளை பூசி அதன் மேல் ஒர் திங்கள் திலகம் பதித்த நுதலர்
காய் கதிர் வேலை நீல ஒளி மா மிடற்றர் கரி காடர் கால் ஒர் கழலர் – தேவா-அப்:74/1,2
நீறு இட்ட நுதலர் வேலை நீலம் சேர் கண்டர் மாதர் – தேவா-அப்:275/1
மேல்


நுதலாய் (1)

கண் ஆர் நுதலாய் கழல் நம் கருத்தில் உடையனவே – தேவா-அப்:919/4
மேல்


நுதலார் (1)

கண் ஆர் நுதலார் கரபுரமும் காபாலியார் அவர்-தம் காப்புக்களே – தேவா-அப்:2155/4
மேல்


நுதலாரும் (1)

கண் இலங்கு நுதலாரும் கபாலம் ஏந்தி கடை-தோறும் பலி கொள்ளும் காட்சியாரும் – தேவா-அப்:2680/3
மேல்


நுதலானை (1)

நும் பட்டம் சேர்ந்த நுதலானை அந்தி-வாய் – தேவா-அப்:192/2
மேல்


நுதலி (1)

விண் காட்டும் பிறை_நுதலி அஞ்ச காட்டி வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2597/4
மேல்


நுதலினார் (1)

கண்ணினார் கண்ணின் மிக்க நுதலினார் காமன் காய்ந்த – தேவா-அப்:347/3
மேல்


நுதலே (2)

கற்றார் பயில் கடல் நாகைக்காரோணத்து எம் கண்_நுதலே – தேவா-அப்:994/1
கனை கடல் சூழ்தரு நாகைக்காரோணத்து எம் கண்_நுதலே – தேவா-அப்:998/2
மேல்


நுதிக்கு (1)

ஒரு விரல் நுதிக்கு நில்லாது ஒண் திறல் அரக்கன் உக்கான் – தேவா-அப்:696/2
மேல்


நுதியினாலே (1)

உரத்தினால் வரையை ஊக்க ஒரு விரல் நுதியினாலே
அரக்கனை நெரித்த அண்ணாமலை உளாய் அமரர் ஏறே – தேவா-அப்:618/2,3
மேல்


நுந்தாத (2)

நுண்ணிய வெண் நூல் கிடந்த மார்பா என்றும் நுந்தாத ஒண் சுடரே என்றும் நாளும் – தேவா-அப்:2398/2
ஒருத்தனே உமை_கணவா உலகமூர்த்தி நுந்தாத ஒண் சுடரே அடியார்-தங்கள் – தேவா-அப்:2700/2
மேல்


நும் (12)

நும் பட்டம் சேர்ந்த நுதலானை அந்தி-வாய் – தேவா-அப்:192/2
அடைந்து நும் சரணம் என்ன அருள் பெரிது உடையர் ஆகி – தேவா-அப்:630/3
நோக்கி காண்பது நும் பணி செய்யிலே – தேவா-அப்:1155/4
உரைப்ப கேண்-மின் நும் உச்சி உளான்-தனை – தேவா-அப்:1300/1
பொருக்க நும் வினை போய் அறும் காண்-மினே – தேவா-அப்:1375/4
துளை இலா செவி தொண்டர்காள் நும் உடல் – தேவா-அப்:1735/2
சொல்லிடீர் நும் துயரங்கள் தீரவே – தேவா-அப்:1835/4
வணங்கும் நும் வினை மாய்ந்து அறும் வண்ணமே – தேவா-அப்:1872/4
பரஞ்சோதி-தனை காண்பேன் படேன் நும் பண்பில் பரிந்து ஓடி ஓட்டந்து பகட்டேன்-மினே – தேவா-அப்:2361/4
நும் நிலைமை ஏதோ நும் ஊர்தான் ஏதோ என்றேனுக்கு ஒன்று ஆக சொல்லமாட்டார் – தேவா-அப்:2437/3
நும் நிலைமை ஏதோ நும் ஊர்தான் ஏதோ என்றேனுக்கு ஒன்று ஆக சொல்லமாட்டார் – தேவா-அப்:2437/3
கண்டியூர் கண்டியூர் என்பீராகில் கடுக நும் வல்வினையை கழற்றல் ஆமே – தேவா-அப்:3001/4
மேல்


நும்மால் (6)

ஏறுவேன் நும்மால் ஏசப்படுவனோ – தேவா-அப்:1853/4
நல் உருவில் சிவன் அடியே அடைவேன் நும்மால் நமைப்புண்ணேன் சமைத்து நீர் நட-மின்களே – தேவா-அப்:2356/4
அப்பனை செப்பட அடைவேன் நும்மால் நானும் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2358/4
செம் கனக தனி குன்றை சிவனை ஆரூர் செல்வனை சேர்வேன் நும்மால் செலுத்துணேனே – தேவா-அப்:2359/4
உடையானை கடுக சென்று அடைவேன் நும்மால் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2360/4
ஆள்வானை கடுக சென்று அடைவேன் நும்மால் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2362/4
மேல்


நும்முடைய (1)

நாள்-வாயும் நும்முடைய மம்மர் ஆணை நடாத்துகின்றீர்க்கு அமையாதே யானேல் வானோர் – தேவா-அப்:2362/2
மேல்


நும்முளே (1)

மாட்டை தேடி மகிழ்ந்து நீர் நும்முளே
நாட்டு பொய் எலாம் பேசிடும் நாணிலீர் – தேவா-அப்:1901/1,2
மேல்


நும்மை (7)

துன்பம் நும்மை தொழாத நாள்கள் என்பாரும் – தேவா-அப்:216/1
இன்பம் நும்மை ஏத்தும் நாள்கள் என்பாரும் – தேவா-அப்:216/2
குலைக்கின்று நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:925/4
கோள்பட்டு நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:927/4
சுழிப்பட்டு நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:930/4
இறக்கின்று நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:932/4
மீன் உடை தண் புனல் வீரட்டரே நும்மை வேண்டுகின்றது – தேவா-அப்:1005/1
மேல்


நுமக்கு (1)

பொன்றும்போது நுமக்கு அறிவு ஒண்ணுமே – தேவா-அப்:1795/4
மேல்


நுரை (1)

நுரை வாய் நுளைச்சியர் ஓடி கழுமலத்துள் அழுந்தும் – தேவா-அப்:792/2
மேல்


நுரைக்கும் (1)

நுரைக்கும் கங்கையும் நுண்ணிய செம் சடை – தேவா-அப்:1528/2
மேல்


நுழை (1)

இந்து நுழை பொழில் ஆரூர் மூலட்டானம் இடம்கொண்ட பெருமானை இமையோர் போற்றும் – தேவா-அப்:2418/3
மேல்


நுழைந்த (1)

இருளுறு கதிர் நுழைந்த இளம் கதிர் பசலை திங்கள் – தேவா-அப்:532/2
மேல்


நுழைய (1)

நுன்பின் எம்மை நுழைய பணியே என்பாரும் – தேவா-அப்:216/3
மேல்


நுளைச்சியர் (1)

நுரை வாய் நுளைச்சியர் ஓடி கழுமலத்துள் அழுந்தும் – தேவா-அப்:792/2
மேல்


நுன் (2)

கை அம்பு எய்தாய் நுன் கழல் அடி போற்றா கயவர் நெஞ்சில் – தேவா-அப்:958/3
எப்பாலும் நுன் உணர்வே ஆக்கி என்னை ஆண்டவனே எழில் ஆனைக்காவா வானோர் – தேவா-அப்:2707/3
மேல்


நுன்பின் (1)

நுன்பின் எம்மை நுழைய பணியே என்பாரும் – தேவா-அப்:216/3
மேல்


நுன்னை (1)

வள்ள தேன் போல நுன்னை வாய்மடுத்து உண்டிடாமே – தேவா-அப்:742/2
மேல்


நுன (1)

புகழும் ஆறும் அலால் நுன பொன் அடி – தேவா-அப்:2023/3
மேல்


நுனை (1)

எழு நுனை வேலர் போலும் என்பு கொண்டு அணிவர் போலும் – தேவா-அப்:541/2

மேல்