தே – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தே 7
தே_மொழியாளொடும் 1
தேக்காதே 1
தேக்குநீர் 1
தேக்குவர் 1
தேங்கார் 1
தேங்கி 1
தேங்கு 1
தேச 2
தேசங்கள் 1
தேசத்தார் 1
தேசத்தில் 1
தேசத்து 1
தேசம் 7
தேசமூர்த்தி 2
தேசர் 1
தேசன்-தன்னை 1
தேசனே 1
தேசனை 7
தேசு 1
தேட 7
தேடற்கு 1
தேடி 22
தேடிக்கொண்டு 3
தேடிய 1
தேடியும் 2
தேடின 1
தேடினேன் 1
தேடும் 4
தேடுவார் 3
தேடுவான் 1
தேத்தெத்தா 1
தேத்தென 1
தேம் 3
தேம்பல் 1
தேமா 1
தேமொழியார் 1
தேய் 2
தேய்த்தானை 1
தேய்ந்த 2
தேய்ந்தன 1
தேய்ந்து 2
தேய்வித்தான் 1
தேய 2
தேயம் 1
தேயமாய் 1
தேயமும் 1
தேயன 1
தேயுமே 3
தேர் 30
தேர்ந்து 6
தேர்ந்தும் 1
தேர்வது 1
தேர்வர் 3
தேர்வார் 1
தேர்வான் 1
தேர 2
தேரானை 2
தேரினும் 1
தேரும் 8
தேரூரார் 1
தேரை 2
தேரையும் 1
தேரோனை 1
தேவதேவர் 1
தேவதேவன் 3
தேவதேவே 3
தேவதேவை 3
தேவர் 46
தேவர்-தங்கள் 1
தேவர்-தம்மால் 1
தேவர்_கோவினும் 1
தேவர்_கோவே 1
தேவர்_கோவை 1
தேவர்_பிரான் 1
தேவர்_அகண்டனை 1
தேவர்க்கு 3
தேவர்க்கும் 7
தேவர்க்கே 1
தேவர்கள் 7
தேவர்கள்-தம் 2
தேவர்கள்தேவர் 2
தேவர்களுக்கு 1
தேவர்களும் 2
தேவர்தேவே 1
தேவர்பிரான் 1
தேவரும் 1
தேவன் 7
தேவன்-தன்னை 1
தேவன்குடி 3
தேவன்தான் 1
தேவனாய் 1
தேவனை 7
தேவா 2
தேவாதிதேவர் 2
தேவாதிதேவர்க்கு 3
தேவாதிதேவர்கட்கும் 1
தேவாதிதேவன் 1
தேவி 2
தேவியை 1
தேவியொடும் 1
தேவியோடு 1
தேவீச்சுரம் 1
தேவு 5
தேவூர் 2
தேவூரும் 1
தேவே 4
தேற்றப்பட 1
தேற்றம் 1
தேற்றனை 1
தேற்றும் 1
தேற்றுவான் 1
தேறல் 9
தேறலை 2
தேறார் 2
தேறி 5
தேறிய 1
தேறினார் 1
தேறும் 1
தேறுவாரலர் 1
தேன் 50
தேன்_மொழியை 1
தேன 2
தேனத்தை 1
தேனர் 2
தேனவனே 1
தேனவனை 2
தேனனை 1
தேனாய் 2
தேனும் 1
தேனூராய் 1
தேனே 5
தேனை 26
தேனொடு 1
தேனோடு 2


தே (7)

திங்கள் மதிக்கண்ணியானை தே_மொழியாளொடும் பாடி – தேவா-அப்:30/1
தே அரியும் பிரமனும் தேட ஒணா – தேவா-அப்:1801/3
தே இரிய திகழ் தக்கன் வேள்வி எல்லாம் சிதைத்தானை உதைத்து அவன்-தன் சிரம் கொண்டானை – தேவா-அப்:2292/3
தே ஆர்ந்த தேவர்க்கும் தேவே போற்றி திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி – தேவா-அப்:2413/2
தே உற்று அடி பரவ நின்றார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2862/4
தே ஆகி தேவர் முதலும் ஆகி செழும் சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3012/4
தே ஆர்ந்த தேவனை தேவர் எல்லாம் திருவடி மேல் அலர் இட்டு தேடி நின்று – தேவா-அப்:3063/1
மேல்


தே_மொழியாளொடும் (1)

திங்கள் மதிக்கண்ணியானை தே_மொழியாளொடும் பாடி – தேவா-அப்:30/1
மேல்


தேக்காதே (1)

தேக்காதே தெண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2196/3
மேல்


தேக்குநீர் (1)

தேக்குநீர் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:594/3
மேல்


தேக்குவர் (1)

ஆலம் உண்டு அமுதே மிக தேக்குவர்
காலகாலர் கடவூர் மயானத்தார் – தேவா-அப்:1450/2,3
மேல்


தேங்கார் (1)

தேங்கார் திரிபுரம் தீ எழ எய்து தியக்கு அறுத்து – தேவா-அப்:861/3
மேல்


தேங்கி (1)

தெண் திரை தேங்கி ஓதம் சென்று அடி வீழும்-காலை – தேவா-அப்:528/1
மேல்


தேங்கு (1)

தேங்கு நீர் வயல் சூழ் தில்லை கூத்தனை – தேவா-அப்:1091/3
மேல்


தேச (2)

திரு உடை தேச மதியனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:848/4
தேச விளக்கு எலாம் ஆனாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2465/4
மேல்


தேசங்கள் (1)

தேசனை தேசங்கள் தொழ நின்ற திருமாலால் – தேவா-அப்:67/1
மேல்


தேசத்தார் (1)

தேசத்தார் பரவி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:387/3
மேல்


தேசத்தில் (1)

செம்பொனே ஒக்கும் மேனியன் தேசத்தில்
உம்பரார் அவரோடு அங்கு இருக்கிலும் – தேவா-அப்:1390/1,2
மேல்


தேசத்து (1)

தேசத்து ஒளி விளக்கே தேவதேவே திரு ஆரூர் திரு மூலட்டானா என்றும் – தேவா-அப்:2403/2
மேல்


தேசம் (7)

தேசம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுரம்மே – தேவா-அப்:588/4
தேசனை தேசம் ஆகும் திருமால் ஓர்பங்கன்-தன்னை – தேவா-அப்:760/1
திருவினை தேசம் படைத்தனை சென்று அடைந்தேனுடைய – தேவா-அப்:846/2
சென்று அடைந்து ஆடி பொருததும் தேசம் எல்லாம் அறியும் – தேவா-அப்:855/2
தேசம் ஆம் திரு பாண்டிக்கொடுமுடி – தேவா-அப்:1877/2
தேசம் உமை அறிவதற்கு முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2434/4
திரு ஆகி நின்ற திறமே போற்றி தேசம் பரவப்படுவாய் போற்றி – தேவா-அப்:2638/3
மேல்


தேசமூர்த்தி (2)

தேசனே தேசமூர்த்தி திரு மறைக்காடு மேய – தேவா-அப்:743/3
பண் அப்பன் பத்தர் மனத்துள் ஏயும் பசுபதி பாசுபதன் தேசமூர்த்தி
கண்ணப்பன் கண் அப்ப கண்டு உகந்தார் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2207/2,3
மேல்


தேசர் (1)

தேசர் திறம் நினைவார் சிந்தை சேரும் செல்வர் திரு ஆரூர் என்றும் உள்ளார் – தேவா-அப்:2257/1
மேல்


தேசன்-தன்னை (1)

தேசனை தேசன்-தன்னை தேவர்கள் போற்றி இசைப்பார் – தேவா-அப்:332/1
மேல்


தேசனே (1)

தேசனே தேசமூர்த்தி திரு மறைக்காடு மேய – தேவா-அப்:743/3
மேல்


தேசனை (7)

தேசனை தேசங்கள் தொழ நின்ற திருமாலால் – தேவா-அப்:67/1
தேசனை தேசன்-தன்னை தேவர்கள் போற்றி இசைப்பார் – தேவா-அப்:332/1
தேசனை தேசம் ஆகும் திருமால் ஓர்பங்கன்-தன்னை – தேவா-அப்:760/1
தேசனை ஆரூர் திருமூலட்டானனை சிந்தைசெய்து – தேவா-அப்:979/3
தேசனை புகழார் சிலர் தெண்ணர்கள் – தேவா-அப்:1984/2
தேசனை திருமால் பிரமன் செயும் – தேவா-அப்:2064/1
தேசனை செம் மேனி வெண் நீற்றானை சிலம்பு_அரையன் பொன் பாவை நலம் செய்கின்ற – தேவா-அப்:3054/2
மேல்


தேசு (1)

சீர் ஆர் முடி பத்து உடையான்-தன்னை தேசு அழிய திரு விரலால் சிதைய நூக்கி – தேவா-அப்:2384/1
மேல்


தேட (7)

தேடி தேட ஒணா தேவனை என் உளே தேடி கண்டுகொண்டேன் – தேவா-அப்:93/2
தேட எடுத்தது தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் – தேவா-அப்:789/3
தே அரியும் பிரமனும் தேட ஒணா – தேவா-அப்:1801/3
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் சொன்னானை அகத்தியனை உகப்பானை அயன் மால் தேட
நின்றானை கிடந்த கடல் நஞ்சு உண்டானை நேர்_இழையை கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் – தேவா-அப்:2586/1,2
அசைத்தவன் காண் நடம் ஆடி பாடல் பேணி அழல் வண்ணத்தில் அடியும் முடியும் தேட
பசைந்தவன் காண் பேய் கணங்கள் பரவி ஏத்தும் பான்மையன் காண் பரவி நினைந்து எழுவார்-தம்-பால் – தேவா-அப்:2731/1,2
தண் தாமரையானும் மாலும் தேட தழல் பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய் – தேவா-அப்:2818/2
தண் தாமரையானும் மாலும் தேட தழல் உருவாய் ஓங்கி நிமிர்ந்தார் தாமே – தேவா-அப்:2865/2
மேல்


தேடற்கு (1)

செங்கண்மால் அயன் தேடற்கு அரியவர் – தேவா-அப்:1588/3
மேல்


தேடி (22)

தேடி கண்டுகொண்டேன் திருமாலொடு நான்முகனும் – தேவா-அப்:93/1
தேடி தேட ஒணா தேவனை என் உளே தேடி கண்டுகொண்டேன் – தேவா-அப்:93/2
தேடி தேட ஒணா தேவனை என் உளே தேடி கண்டுகொண்டேன் – தேவா-அப்:93/2
தேடி கண்டுகொண்டேன் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:207/4
தேடி மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:596/3
தேடி சென்று திருந்து அடி ஏத்து-மின் – தேவா-அப்:1116/1
தேடி நீர் திரியாதே சிவகதி – தேவா-அப்:1640/2
மாடு தேடி மயக்கினில் வீழ்ந்து நீர் – தேவா-அப்:1842/1
தேடி ஏசறவும் தெரியாதது ஓர் – தேவா-அப்:1854/2
மாட்டை தேடி மகிழ்ந்து நீர் நும்முளே – தேவா-அப்:1901/1
ஆக்கைக்கே இரை தேடி அலமந்து – தேவா-அப்:1958/3
எங்கும் தேடி திரிந்தவர் காண்கிலார் – தேவா-அப்:2015/2
ஒரு பிறப்பு இல் அரன் அடியை உணர்ந்தும் காணார் உயர் கதிக்கு வழி தேடி போகமாட்டார் – தேவா-அப்:2111/1
திரையானும் செந்தாமரை மேலானும் தேர்ந்து அவர்கள்தாம் தேடி காணார் நாணும் – தேவா-அப்:2305/1
நீர் ஊரும் செஞ்சடையாய் நெற்றிக்கண்ணாய் நிலா திங்கள் துண்டத்தாய் நின்னை தேடி
ஓர் ஊரும் ஒழியாமே ஒற்றித்து எங்கும் உலகம் எலாம் திரிதந்து நின்னை காண்பான் – தேவா-அப்:2345/1,2
சினம் திருத்தும் சிறு பெரியார் குண்டர்-தங்கள் செது மதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடி
புனம் திருந்தும் பொல்லாத பிண்டி பேணும் பொறியிலியேன்-தனை பொருளா ஆண்டுகொண்டு – தேவா-அப்:2491/1,2
பரவி பலபலவும் தேடி ஓடி பாழ் ஆம் குரம்பையிடை கிடந்து வாளா – தேவா-அப்:2505/1
செய்ய மலர் மேலான் கண்ணன் போற்றி தேடி உணராமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2655/1
துளியானை அயன் மாலும் தேடி காணா சுடரானை துரிசு அற தொண்டுபட்டார்க்கு – தேவா-அப்:2754/2
ஐம் தலைய நாகஅணை கிடந்த மாலோடு அயன் தேடி நாட அரிய அம்மான்-தன்னை – தேவா-அப்:2944/1
பொய் ஆறா ஆறே புனைந்து பேசி புலர்ந்து எழுந்த-காலை பொருளே தேடி
கையாறா கரணம் உடையோம் என்று களித்த மனத்தராய் கருதி வாழ்வீர் – தேவா-அப்:2997/1,2
தே ஆர்ந்த தேவனை தேவர் எல்லாம் திருவடி மேல் அலர் இட்டு தேடி நின்று – தேவா-அப்:3063/1
மேல்


தேடிக்கொண்டு (3)

தேடிக்கொண்டு அடியேன் சென்று காண்பனே – தேவா-அப்:1366/4
எங்கே என்ன இருந்த இடம் தேடிக்கொண்டு
அங்கே வந்து அடையாளம் அருளினார் – தேவா-அப்:1569/1,2
தேடிக்கொண்டு திரு வாய்மூர்க்கே எனா – தேவா-அப்:1575/3
மேல்


தேடிய (1)

ஆற்றில் கெடுத்து குளத்தினில் தேடிய ஆதரை போல் – தேவா-அப்:948/3
மேல்


தேடியும் (2)

தேடியும் திரிந்தும் காண வல்லாரோ – தேவா-அப்:1080/2
தாமா தேடியும் காண்கிலர் தாள் முடி – தேவா-அப்:1506/2
மேல்


தேடின (1)

கீண்டும் கிளர்ந்தும் பொன் கேழல் முன் தேடின கேடு படா – தேவா-அப்:971/1
மேல்


தேடினேன் (1)

தெள்ளியேன் ஆகி நின்று தேடினேன் நாடி கண்டேன் – தேவா-அப்:728/2
மேல்


தேடும் (4)

விதியை புகழை வானோர்கள் வேண்டி தேடும் விளக்கினை – தேவா-அப்:147/3
மன் உள தேவர்கள் தேடும் மருந்தே வலஞ்சுழியாய் – தேவா-அப்:1011/2
இரைப்பா படுதலை ஏந்து கையா மறை தேடும் எந்தாய் – தேவா-அப்:1066/3
அம் கனக திருமாலும் அயனும் தேடும் ஆர் அழலை அநங்கன் உடல் பொடியாய் வீழ்ந்து – தேவா-அப்:2919/2
மேல்


தேடுவார் (3)

இருவராய் இடுவார் கடை தேடுவார்
தெரு எலாம் உழல்வார் செம்பொன்பள்ளியார் – தேவா-அப்:1430/2,3
தேடுவார் பிரமன் திருமால் அவர் – தேவா-அப்:1740/1
தேடுவார் திருமாலும் நான்முகனும் தீண்டுவார் மலைமகளும் கங்கையாளும் – தேவா-அப்:2344/3
மேல்


தேடுவான் (1)

தேடுவான் உறுகின்றது என் சிந்தையே – தேவா-அப்:1740/4
மேல்


தேத்தெத்தா (1)

தேத்தெத்தா என்ன கேட்டார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:323/4
மேல்


தேத்தென (1)

தேத்தென என்று இசை வண்டுகள் பாடு சிற்றம்பலத்து – தேவா-அப்:785/3
மேல்


தேம் (3)

தேம் காவி நாறும் திரு ஆரூர் தொல் நகரில் – தேவா-அப்:191/3
செங்கயல் சேல்கள் பாய்ந்து தேம் பழம் இனிய நாடி – தேவா-அப்:534/1
தேம் கமழ் சோலை தென் ஆரூர் திருமூலட்டானன் செய்ய – தேவா-அப்:981/3
மேல்


தேம்பல் (1)

தேம்பல் வெண் மதி சூடுவர் தீயது ஓர் – தேவா-அப்:1323/3
மேல்


தேமா (1)

தேமா தீம் கனி போல தித்திக்குமே – தேவா-அப்:1508/4
மேல்


தேமொழியார் (1)

செம் துவர் வாய் கரும் கண் இணை வெண் நகை தேமொழியார்
வந்து வலம்செய்து மா நடம் ஆட மலிந்த செல்வ – தேவா-அப்:997/1,2
மேல்


தேய் (2)

தேய் பொடி வெள்ளை பூசி அதன் மேல் ஒர் திங்கள் திலகம் பதித்த நுதலர் – தேவா-அப்:74/1
தேய் வாய் இளம் பிறை செம் சடை மேல் வைத்த தேவர்பிரான் – தேவா-அப்:802/2
மேல்


தேய்த்தானை (1)

இறுத்தானை எழு நரம்பின் இசை கேட்டானை இந்துவினை தேய்த்தானை இரவி-தன் பல் – தேவா-அப்:2593/2
மேல்


தேய்ந்த (2)

தேய்ந்த திங்கள் கமழ் சடையன் கனல் – தேவா-அப்:1129/1
தேய்ந்த பிறை சடை மேல் வைத்தார்தாமே தீ வாய் அரவு அதனை ஆர்த்தார்தாமே – தேவா-அப்:2451/3
மேல்


தேய்ந்தன (1)

தேய்ந்தன பாவம் செறுக்ககில்லா நம்மை செற்று அநங்கை – தேவா-அப்:911/2
மேல்


தேய்ந்து (2)

தேய்ந்து இலங்கும் சிறு வெண் மதியாய் நின் திரு சடை மேல் – தேவா-அப்:854/1
சீற்றம் ஆயின தேய்ந்து அறும் காண்-மினே – தேவா-அப்:1857/4
மேல்


தேய்வித்தான் (1)

வில் பொலி தோள் விசயன் வலி தேய்வித்தான் காண் வேடுவனாய் போர் பொருது காட்டினான் காண் – தேவா-அப்:2611/2
மேல்


தேய (2)

நகம் எலாம் தேய கையால் நாள் மலர் தொழுது தூவி – தேவா-அப்:401/2
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய – தேவா-அப்:1913/3
மேல்


தேயம் (1)

தேயம் எல்லாம் நின்று இறைஞ்சும் திரு பாதிரிப்புலியூர் – தேவா-அப்:916/3
மேல்


தேயமாய் (1)

தேயமாய் திசை எட்டு ஆகி தீர்த்தமாய் திரிதர்கின்ற – தேவா-அப்:429/2
மேல்


தேயமும் (1)

திரியும் பலியினன் தேயமும் நாடும் எல்லாம் உடையான் – தேவா-அப்:870/2
மேல்


தேயன (1)

தேயன நாடர் ஆகி தேவர்கள்தேவர் போலும் – தேவா-அப்:325/1
மேல்


தேயுமே (3)

சிந்தையால் நினைவார் வினை தேயுமே – தேவா-அப்:1212/4
திருத்தனை தொழுவார் வினை தேயுமே – தேவா-அப்:1661/4
திரு மாற்பேறு தொழ வினை தேயுமே – தேவா-அப்:1662/4
மேல்


தேர் (30)

பூண்ட தேர் அரக்கனை பொரு இல் மால் வரை – தேவா-அப்:103/1
கடுகிய தேர் செலாது கயிலாயம் மீது கருதேல் உன் வீரம் ஒழி நீ – தேவா-அப்:144/1
ஆழி தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:193/4
மிக பெருத்து உலாவ மிக்கான் நக்கு ஒரு தேர் கடாவி – தேவா-அப்:336/1
அந்தரம் தேர் கடாவி ஆர் இவன் என்று சொல்லி – தேவா-அப்:337/1
கடுக்க ஓர் தேர் கடாவி கை இருபதுகளாலும் – தேவா-அப்:338/2
தென்கையான் தேர் கடாவி சென்று எடுத்தான் மலையை – தேவா-அப்:343/2
பொறுத்து உக புட்பக தேர் உடையானை அடர ஊன்றி – தேவா-அப்:453/3
கொடி நெடும் தேர் கொடுத்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:486/4
தேர் வலம் செற்ற மால் செய் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:593/3
தருக்கின அரக்கன் தேர் ஊர் சாரதி நிலாது – தேவா-அப்:628/1
பொறி தேர் அரக்கன் பொருப்பு எடுப்புற்றவன் பொன் முடி தோள் – தேவா-அப்:942/1
தேர் உலாவிய தில்லையுள் கூத்தனை – தேவா-அப்:1090/3
குறை காட்டான் விட்ட தேர் குத்த மா மலை – தேவா-அப்:1162/1
தேர் உலாம் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலி எம் – தேவா-அப்:1484/3
செருத்தனால் தன தேர் செல உய்த்திடும் – தேவா-அப்:1689/1
தென்றல் நல் நெடும் தேர் உடையான் உடல் – தேவா-அப்:1708/1
கடுத்த தேர் அரக்கன் கயிலை மலை – தேவா-அப்:1710/1
உருள் உடைய தேர் புரவியோடும் யானை ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு – தேவா-அப்:2176/1
ஓர் ஆழி தேர் உடைய இலங்கை_வேந்தன் உடல் துணித்த இடர் பாவம் கெடுப்பித்து அன்று – தேவா-அப்:2269/3
தேர் ஊரும் நெடு வீதி பற்றி நின்று திருமாலும் நான்முகனும் தேர்ந்தும் காணாது – தேவா-அப்:2345/3
ஆரும் அறியா இடத்தாய் நீயே ஆகாயம் தேர் ஊர வல்லாய் நீயே – தேவா-அப்:2475/1
பற்றி பாம்பு ஆட்டும் படிறன் கண்டாய் பல் ஊர் பலி தேர் பரமன் கண்டாய் – தேவா-அப்:2478/2
அன்ன தேர் அயன் முடி சேர் அடிகள் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2619/4
தேர் ஆரும் நெடு வீதி திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2841/4
ஆழி தேர் வித்தகரும் தாமே போலும் அடைந்தவர்கட்கு அன்பராய் நின்றார் போலும் – தேவா-அப்:2964/3
அடல் ஆழி தேர் உடைய இலங்கை_கோனை அரு வரை கீழ் அடர்த்தானை அருள் ஆர் கருணை – தேவா-அப்:2982/3
அந்தகனை அயில் சூலத்து அழுத்தி கொண்டார் அரு மறையை தேர் குதிரை ஆக்கிக்கொண்டார் – தேவா-அப்:3029/1
அன்ன தேர் ஊர்ந்த அரக்கன்-தன்னை அலற அடர்த்திட்ட அடியும் கண்டேன் – தேவா-அப்:3046/3
கருவரை சூழ் கானல் இலங்கை_வேந்தன் கடும் தேர் மீது ஓடாமை காலால் செற்ற – தேவா-அப்:3066/3
மேல்


தேர்ந்து (6)

ஒன்றி ஆங்கு உமையும் தாமும் ஊர் பலி தேர்ந்து பின்னும் – தேவா-அப்:558/3
மின் ஒத்து இலங்க பலி தேர்ந்து உழலும் விடங்கர் வேட – தேவா-அப்:788/2
படும் கண் ஒன்று இலாரய் பலி தேர்ந்து உண்பர் – தேவா-அப்:1295/2
மற்றை ஊர்கள் எல்லாம் பலி தேர்ந்து போய் – தேவா-அப்:1308/3
திரையானும் செந்தாமரை மேலானும் தேர்ந்து அவர்கள்தாம் தேடி காணார் நாணும் – தேவா-அப்:2305/1
பலி தேர்ந்து அழகு ஆய பண்பர்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2445/4
மேல்


தேர்ந்தும் (1)

தேர் ஊரும் நெடு வீதி பற்றி நின்று திருமாலும் நான்முகனும் தேர்ந்தும் காணாது – தேவா-அப்:2345/3
மேல்


தேர்வது (1)

பட்டி துட்டங்கனாய் பலி தேர்வது ஓர் – தேவா-அப்:2029/2
மேல்


தேர்வர் (3)

அவனது பெற்றி கண்டும் அவன் நீர்மை கண்டும் அகம் தேர்வர் தேவர் அவரே – தேவா-அப்:72/4
தான் அகம் அழிய வந்து தாம் பலி தேர்வர் போலும் – தேவா-அப்:513/2
காலை போய் பலி தேர்வர் கண்ணார் நெற்றி – தேவா-அப்:1151/1
மேல்


தேர்வார் (1)

கற்ற மா மறைகள் பாடி கடை-தொறும் பலியும் தேர்வார்
வற்றல் ஓர் தலை கை ஏந்தி வானவர் வணங்கி வாழ்த்த – தேவா-அப்:559/1,2
மேல்


தேர்வான் (1)

பாலினொடு தயிர் நறு நெய் ஆடினான் காண் பண்டரங்கவேடன் காண் பலி தேர்வான் காண் – தேவா-அப்:2606/3
மேல்


தேர (2)

ஆடக கால் அரி மால் தேர அல்லன் ஐயாற்றனவே – தேவா-அப்:955/4
மீண்டானை விண்ணவர்களோடும் கூடி விரை மலர் மேல் நான்முகனும் மாலும் தேர
நீண்டானை நெருப்பு உருவம் ஆனான்-தன்னை நிலைஇலார் மும்மதிலும் வேவ வில்லை – தேவா-அப்:2521/2,3
மேல்


தேரானை (2)

தேரானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2584/4
தேரானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2718/4
மேல்


தேரினும் (1)

நன் பகல் பலி தேரினும் நாரையூர் – தேவா-அப்:1629/3
மேல்


தேரும் (8)

தலையாலே பலி தேரும் தலைவனை தலையே நீ வணங்காய் – தேவா-அப்:82/2
பொங்கு ஓத மால் கடலில் புறம்புறம் போய் இரை தேரும்
செம் கால் வெண் மட நாராய் செயல்படுவது அறியேன் நான் – தேவா-அப்:119/1,2
கொண்டு அகம் பலி தேரும் குழகனார் – தேவா-அப்:1124/2
சிட்டர் வானவர் தேரும் நெய்த்தானனை – தேவா-அப்:1412/3
புக்கு பல் பலி தேரும் புராணனை – தேவா-அப்:2039/2
துஞ்சா பலி தேரும் தோன்றால் போற்றி தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி – தேவா-அப்:2136/2
தேரும் அடி என் மேல் வைத்தாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2475/4
கடை சூழ்ந்து பலி தேரும் கங்காளனார் கழுமலத்தார் செழு மலர் தார் குழலியோடும் – தேவா-அப்:2598/3
மேல்


தேரூரார் (1)

தேரூரார் மாவூரார் திங்களூரார் திகழ் புன் சடை முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2339/1
மேல்


தேரை (2)

பாம்பின் வாய் தேரை போல பலபல நினைக்கின்றேனை – தேவா-அப்:454/3
மெய் வலி உடையன் என்று மிக பெரும் தேரை ஊர்ந்து – தேவா-அப்:572/2
மேல்


தேரையும் (1)

தேரையும் மேல் கடாவி திண்ணமா தெழித்து நோக்கி – தேவா-அப்:334/1
மேல்


தேரோனை (1)

சிராமலை தம் சேர்விடமா திருந்த கொண்டார் தென்றல் நெடும் தேரோனை பொன்றக்கொண்டார் – தேவா-அப்:3035/2
மேல்


தேவதேவர் (1)

சீர் ஆர் கழல் வணங்கும் தேவதேவர் திரு ஆரூர் திரு மூலட்டானம் மேயார் – தேவா-அப்:2100/3
மேல்


தேவதேவன் (3)

செம்மை வெண் நீறு பூசும் சிவன் அவன் தேவதேவன்
வெம்மை நோய் வினைகள் தீர்க்கும் விகிர்தனுக்கு ஆர்வம் எய்தி – தேவா-அப்:758/1,2
தேவதேவன் திரு நெறி ஆகிய – தேவா-அப்:1730/3
தேவதேவன் சிவன் பெருந்தன்மையே – தேவா-அப்:2080/4
மேல்


தேவதேவே (3)

தேசத்து ஒளி விளக்கே தேவதேவே திரு ஆரூர் திரு மூலட்டானா என்றும் – தேவா-அப்:2403/2
சிங்கமே உன் அடிக்கே போதுகின்றேன் திரு புகலூர் மேவிய தேவதேவே – தேவா-அப்:3058/4
திரிபுரங்கள் எரிசெய்த தேவதேவே திரு ஆரூர் திரு மூலட்டானம் மேயாய் – தேவா-அப்:3062/2
மேல்


தேவதேவை (3)

சிலந்தி-தனக்கு அருள்செய்த தேவதேவை திரு சிராப்பள்ளி எம் சிவலோகனை – தேவா-அப்:2290/2
சீர்த்தானை சிறந்து அடியேன் சிந்தையுள்ளே திகழ்ந்தானை சிவன்-தன்னை தேவதேவை
கூர்த்தானை கொடு நெடு வேல் கூற்றம்-தன்னை குரை கழலால் குமைத்து முனி கொண்ட அச்சம் – தேவா-அப்:2627/1,2
சிரம் தாங்கு கையானை தேவதேவை திகழ் ஒளியை தன் அடியே சிந்தைசெய்வார் – தேவா-அப்:2781/2
மேல்


தேவர் (46)

அவனது பெற்றி கண்டும் அவன் நீர்மை கண்டும் அகம் தேர்வர் தேவர் அவரே – தேவா-அப்:72/4
பர முதல் ஆய தேவர் சிவனாயமூர்த்தி அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:135/4
அலை நலிவு அஞ்சி ஓடி அரியோடு தேவர் அரணம் புக தன் அருளால் – தேவா-அப்:138/2
முந்திய தேவர் கூடி முறைமுறை இருக்கு சொல்லி – தேவா-அப்:287/2
இந்திரனோடு தேவர் இருடிகள் இன்பம் செய்ய – தேவா-அப்:313/2
இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற – தேவா-அப்:324/1
வான்-தலை தேவர் கூடி வானவர்க்கு இறைவா என்னும் – தேவா-அப்:417/3
ஆத்தம் ஆம் அயனும் மாலும் அன்றி மற்று ஒழிந்த தேவர்
சோத்தம் எம்பெருமான் என்று தொழுது தோத்திரங்கள் சொல்ல – தேவா-அப்:487/1,2
புகைத்திட்ட தேவர்_கோவே பொறியிலேன் உடலம்-தன்னுள் – தேவா-அப்:518/2
தேவர்க்கும் தேவர் ஆவார் திரு புகலூரனாரே – தேவா-அப்:525/4
கடைந்திட எழுந்த நஞ்சம் கண்டு பல் தேவர் அஞ்சி – தேவா-அப்:630/2
திருத்தனை தேவர்_பிரான் திரு வேதிகுடி உடைய – தேவா-அப்:872/3
தொழப்படும் தேவர் தொழப்படுவானை தொழுத பின்னை – தேவா-அப்:1054/3
செண்டு அது ஆடிய தேவர்_அகண்டனை – தேவா-அப்:1138/2
அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர் – தேவா-அப்:1393/1
தேவர் சென்று இறைஞ்சும் செம்பொன்பள்ளியான் – தேவா-அப்:1431/3
பித்தனை பெரும் தேவர் தொழப்படும் – தேவா-அப்:1511/1
நாமே தேவர் எனாமை நடுக்குற – தேவா-அப்:1548/2
தேவர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1591/4
பல்லாரும் பல தேவர் பணிபவர் – தேவா-அப்:1604/1
தேவர்_கோவினும் செல்வர்கள் ஆவரே – தேவா-அப்:1722/4
தெற்று செம் சடை தேவர் பிரான் பதி – தேவா-அப்:1745/2
சுற்றி தேவர் தொழும் கழல் சோதியே – தேவா-அப்:1798/4
யாது ஓர் தேவர் எனப்படுவார்க்கு எலாம் – தேவா-அப்:2079/3
மா தேவன் அலால் தேவர் மற்று இல்லையே – தேவா-அப்:2079/4
ஆர் ஒருவர் அவர் தன்மை அறிவார் தேவர் அறிவோம் என்பார்க்கு எல்லாம் அறியல் ஆகா – தேவா-அப்:2199/2
அ தவத்த தேவர் அறுபதின்மர் ஆறுநூறாயிரவர்க்கு ஆடல் காட்டி – தேவா-அப்:2216/3
திண் குணத்தார் தேவர் கணங்கள் ஏத்தி திசை வணங்க சேவடியை வைத்தார் போலும் – தேவா-அப்:2247/1
ஒரு காலத்து ஒரு தேவர் கண் கொண்டானை ஊழி-தோறு ஊழி உயர்ந்தான்-தன்னை – தேவா-அப்:2350/1
நோக்கும் துணை தேவர் எல்லாம் நிற்க நொடி வரையில் நோவ விழித்தான்-தன்னை – தேவா-அப்:2444/2
புடை சூழ் தேவர் குழாத்தார்தாமே பூந்துருத்தி நெய்த்தானம் மேயார்தாமே – தேவா-அப்:2454/2
தேவர் அறியாத தேவன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2472/4
சில் உருவாய் சென்று திரண்டாய் போற்றி தேவர் அறியாத தேவே போற்றி – தேவா-அப்:2641/1
தேன் அவனை தேவர் தொழு கழலான்-தன்னை செய் குணங்கள் பல ஆகி நின்ற வென்றி – தேவா-அப்:2693/2
இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி இரண்டு ஆட்டாது ஒழிந்து ஈசன் திறமே பேணி – தேவா-அப்:2698/3
இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி இரண்டு ஆட்டாது ஒழிந்து ஈசன் திறமே பேணி – தேவா-அப்:2698/3
செய்யானே திரு மேனி அரியாய் தேவர் குல கொழுந்தே தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2711/3
செந்தாமரை போது அணிந்தான் கண்டாய் சிவன் கண்டாய் தேவர் பெருமான் கண்டாய் – தேவா-அப்:2811/1
தேனை திளைத்து உண்டு வண்டு பாடும் தில்லை நடம் ஆடும் தேவர் போலும் – தேவா-அப்:2898/2
தில்லை நடம் ஆடும் தேவர் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2906/4
செருவில் புரம் மூன்றும் அட்டார் போலும் தேவர்க்கும் தேவர் ஆம் செல்வர் போலும் – தேவா-அப்:2971/2
சேடு எறிந்த சடையானை தேவர்_கோவை செம்பொன் மால் வரையானை சேர்ந்தார் சிந்தை – தேவா-அப்:2978/2
தேனவனை தித்திக்கும் பெருமான்-தன்னை தீது இலா மறையவனை தேவர் போற்றும் – தேவா-அப்:2980/3
தே ஆகி தேவர் முதலும் ஆகி செழும் சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3012/4
சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்ட சமுத்திரத்தின் நஞ்சு உண்டு சாவா மூவா – தேவா-அப்:3058/3
தே ஆர்ந்த தேவனை தேவர் எல்லாம் திருவடி மேல் அலர் இட்டு தேடி நின்று – தேவா-அப்:3063/1
மேல்


தேவர்-தங்கள் (1)

சிலையும் நாண் அதுவும் நாகம் கொண்டவர் தேவர்-தங்கள்
தலையினால் தரித்த என்பும் தலை மயிர் வடமும் பூண்ட – தேவா-அப்:622/2,3
மேல்


தேவர்-தம்மால் (1)

தொழப்படும் தேவர்-தம்மால் தொழுவிக்கும் தன் தொண்டரையே – தேவா-அப்:1054/4
மேல்


தேவர்_கோவினும் (1)

தேவர்_கோவினும் செல்வர்கள் ஆவரே – தேவா-அப்:1722/4
மேல்


தேவர்_கோவே (1)

புகைத்திட்ட தேவர்_கோவே பொறியிலேன் உடலம்-தன்னுள் – தேவா-அப்:518/2
மேல்


தேவர்_கோவை (1)

சேடு எறிந்த சடையானை தேவர்_கோவை செம்பொன் மால் வரையானை சேர்ந்தார் சிந்தை – தேவா-அப்:2978/2
மேல்


தேவர்_பிரான் (1)

திருத்தனை தேவர்_பிரான் திரு வேதிகுடி உடைய – தேவா-அப்:872/3
மேல்


தேவர்_அகண்டனை (1)

செண்டு அது ஆடிய தேவர்_அகண்டனை
கண்டுகண்டு இவள் காதலித்து அன்பு அதுவாய் – தேவா-அப்:1138/2,3
மேல்


தேவர்க்கு (3)

அணியன சேயன தேவர்க்கு ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:885/4
அருமந்த தேவர்க்கு அரசே போற்றி அன்று அரக்கன் ஐ_நான்கு தோளும் தாளும் – தேவா-அப்:2414/3
சீரவன் காண் சீர் உடைய தேவர்க்கு எல்லாம் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2951/4
மேல்


தேவர்க்கும் (7)

விண் பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானை – தேவா-அப்:118/2
தேவர்க்கும் தேவர் ஆவார் திரு புகலூரனாரே – தேவா-அப்:525/4
ஒருத்தனை மூஉலகொடு தேவர்க்கும்
அருத்தனை அடியேன் மனத்துள் அமர் – தேவா-அப்:1690/1,2
தே ஆர்ந்த தேவர்க்கும் தேவே போற்றி திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி – தேவா-அப்:2413/2
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி தேவர்க்கும் தேவனாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2639/3
செறுத்தான் காண் தேவர்க்கும் தேவன்தான் காண் திசை அனைத்தும் தொழுது ஏத்த கலை மான் கையில் – தேவா-அப்:2735/2
செருவில் புரம் மூன்றும் அட்டார் போலும் தேவர்க்கும் தேவர் ஆம் செல்வர் போலும் – தேவா-அப்:2971/2
மேல்


தேவர்க்கே (1)

திருவினால் திரு வேண்டும் இ தேவர்க்கே – தேவா-அப்:1417/4
மேல்


தேவர்கள் (7)

தேசனை தேசன்-தன்னை தேவர்கள் போற்றி இசைப்பார் – தேவா-அப்:332/1
மன் உள தேவர்கள் தேடும் மருந்தே வலஞ்சுழியாய் – தேவா-அப்:1011/2
முழுதும் வான்_உலகத்து உள தேவர்கள்
தொழுதும் போற்றியும் தூய செம்பொன்னினால் – தேவா-அப்:1089/1,2
புரியன் தேவர்கள் ஏத்த நஞ்சு உண்டவன் – தேவா-அப்:1250/2
சித்தர் கன்னியர் தேவர்கள் தானவர் – தேவா-அப்:1583/1
அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள்
திருத்தும் சேவடியான் திகழும் நகர் – தேவா-அப்:1749/1,2
சித்தர் தேவர்கள் மாலொடு நான்முகன் – தேவா-அப்:1932/1
மேல்


தேவர்கள்-தம் (2)

தெரியாத தத்துவனை தேனை பாலை திகழ் ஒளியை தேவர்கள்-தம் கோனை மற்றை – தேவா-அப்:2086/2
சீர்த்தானை செம் தழல் போல் உருவினானை தேவர்கள்-தம் பெருமானை திறம் உன்னாதே – தேவா-அப்:2724/2
மேல்


தேவர்கள்தேவர் (2)

தேவர்கள்தேவர் போலும் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:318/4
தேயன நாடர் ஆகி தேவர்கள்தேவர் போலும் – தேவா-அப்:325/1
மேல்


தேவர்களுக்கு (1)

நஞ்சு உண்டு தேவர்களுக்கு அமுது ஈந்தானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2820/4
மேல்


தேவர்களும் (2)

விண் இயங்கு தேவர்களும் வேதம் நான்கும் விரை மலர் மேல் நான்முகனும் மாலும் கூடி – தேவா-அப்:2398/3
தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும் செம்பவள திரு மேனி சிவனே என்னும் – தேவா-அப்:3052/2
மேல்


தேவர்தேவே (1)

செய்ய நின் கமல பாதம் சேருமா தேவர்தேவே
மை அணி கண்டத்தானே மான் மறி மழு ஒன்று ஏந்தும் – தேவா-அப்:602/1,2
மேல்


தேவர்பிரான் (1)

தேய் வாய் இளம் பிறை செம் சடை மேல் வைத்த தேவர்பிரான்
மூவான் இளகான் முழு உலகோடு மண் விண்ணும் மற்றும் – தேவா-அப்:802/2,3
மேல்


தேவரும் (1)

வண்ண நல் மலரான் பல தேவரும்
கண்ணனும் அறியான் கடம்பந்துறை – தேவா-அப்:1247/2,3
மேல்


தேவன் (7)

திருத்தனாய் நின்ற தேவன் திரு விரல் ஊன்ற வீழ்ந்தான் – தேவா-அப்:462/3
தேவன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1389/4
மா தேவன் அலால் தேவர் மற்று இல்லையே – தேவா-அப்:2079/4
கோ தான் ஆம் கோல் வளையாள் கூறன் ஆகும் கொண்ட சமயத்தார் தேவன் ஆகி – தேவா-அப்:2235/2
இரவன் ஆம் எல்லி நடம் ஆடி ஆம் எண் திசைக்கும் தேவன் ஆம் என் உளான் ஆம் – தேவா-அப்:2236/1
தேவர் அறியாத தேவன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2472/4
தேவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2931/4
மேல்


தேவன்-தன்னை (1)

தேவாதிதேவர்கட்கும் தேவன்-தன்னை திசைமுகன்-தன் சிரம் ஒன்று சிதைத்தான்-தன்னை – தேவா-அப்:2821/2
மேல்


தேவன்குடி (3)

நல்லூரும் தேவன்குடி மருகலும் நல்லவர்கள் தொழுது ஏத்தும் நாரையூரும் – தேவா-அப்:2149/3
தில்லை சிற்றம்பலமும் செம்பொன்பள்ளி தேவன்குடி சிராப்பள்ளி தெங்கூர் – தேவா-அப்:2786/1
புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி புதுக்குடியும் போற்ற இடர் போகும் அன்றே – தேவா-அப்:2799/4
மேல்


தேவன்தான் (1)

செறுத்தான் காண் தேவர்க்கும் தேவன்தான் காண் திசை அனைத்தும் தொழுது ஏத்த கலை மான் கையில் – தேவா-அப்:2735/2
மேல்


தேவனாய் (1)

தேனத்தை வார்த்த தெளிவே போற்றி தேவர்க்கும் தேவனாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2639/3
மேல்


தேவனை (7)

தேடி தேட ஒணா தேவனை என் உளே தேடி கண்டுகொண்டேன் – தேவா-அப்:93/2
தேவனை புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே – தேவா-அப்:1691/4
மா தனத்தை மா தேவனை மாறு இலா – தேவா-அப்:1693/1
தேவனை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2280/4
சோதி சந்திரன் மேனி மறு செய்தானை சுடர் அங்கி தேவனை ஓர் கை கொண்டானை – தேவா-அப்:2348/3
சிட்டனை திரு ஆலவாயில் கண்டேன் தேவனை கனவில் நான் கண்ட ஆறே – தேவா-அப்:3041/4
தே ஆர்ந்த தேவனை தேவர் எல்லாம் திருவடி மேல் அலர் இட்டு தேடி நின்று – தேவா-அப்:3063/1
மேல்


தேவா (2)

தேவா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:933/4
தேவா திருவடி நீறு என்னை பூசு செந்தாமரையின் – தேவா-அப்:1029/3
மேல்


தேவாதிதேவர் (2)

தேவாதிதேவர் என்றும் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:292/4
தேவாதிதேவர் தொழும் தேவே போற்றி சென்று ஏறி எங்கும் பரந்தாய் போற்றி – தேவா-அப்:2644/2
மேல்


தேவாதிதேவர்க்கு (3)

தாயானை தவம் ஆய தன்மையானை தலை ஆய தேவாதிதேவர்க்கு என்றும் – தேவா-அப்:2282/3
மிகை சுடரை விண்ணவர்கள் மேல் அப்பாலை மேல் ஆய தேவாதிதேவர்க்கு என்றும் – தேவா-அப்:2283/3
தேவாதிதேவர்க்கு அரியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2903/4
மேல்


தேவாதிதேவர்கட்கும் (1)

தேவாதிதேவர்கட்கும் தேவன்-தன்னை திசைமுகன்-தன் சிரம் ஒன்று சிதைத்தான்-தன்னை – தேவா-அப்:2821/2
மேல்


தேவாதிதேவன் (1)

தேவாதிதேவன் சிவன் என் சிந்தை சேர்ந்து இருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து – தேவா-அப்:3056/3
மேல்


தேவி (2)

அரி அலால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:398/4
புகல் இடம் அம் அம்பலங்கள் பூமி தேவி உடன்கிடந்தால் புரட்டாள் பொய் அன்று மெய்யே – தேவா-அப்:3048/2
மேல்


தேவியை (1)

தேவியை பாகம் வைத்தார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:320/4
மேல்


தேவியொடும் (1)

செல்வன் தேவியொடும் திகழ் கோயிலே – தேவா-அப்:1804/4
மேல்


தேவியோடு (1)

திருந்த நின்று வழிபட தேவியோடு
இருந்தவன் எழில் ஆர் கச்சி ஏகம்பம் – தேவா-அப்:1549/2,3
மேல்


தேவீச்சுரம் (1)

செழு நீர் புனல் கெடில வீரட்டமும் திரிபுராந்தகம் தென் ஆர் தேவீச்சுரம்
கொழு நீர் புடை சுழிக்கும் கோட்டுக்காவும் குடமூக்கும் கோகரணம் கோலக்காவும் – தேவா-அப்:2153/1,2
மேல்


தேவு (5)

நரியை குதிரை செய்வானும் நரகரை தேவு செய்வானும் – தேவா-அப்:33/1
தவ பெரும் தேவு செய்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:636/4
மா தேவு ஆகிய வாய்மூர் மருவினார் – தேவா-அப்:1574/3
செத்து செத்து பிறப்பதே தேவு என்று – தேவா-அப்:2077/1
சீரால் வணங்கப்படுவார்தாமே திசைக்கு எல்லாம் தேவு ஆகி நின்றார்தாமே – தேவா-அப்:2449/1
மேல்


தேவூர் (2)

திரை ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு ஆரூர் தேவூர் திரு நெல்லிக்கா – தேவா-அப்:2152/1
திண்டீச்சுரம் சேய்ஞலூர் செம்பொன்பள்ளி தேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறை – தேவா-அப்:2794/1
மேல்


தேவூரும் (1)

மறை ஆன்ற வாய்மூரும் கீழ்வேளூரும் வலிவலமும் தேவூரும் மன்னி அங்கே – தேவா-அப்:2308/2
மேல்


தேவே (4)

தே ஆர்ந்த தேவர்க்கும் தேவே போற்றி திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி – தேவா-அப்:2413/2
சில் உருவாய் சென்று திரண்டாய் போற்றி தேவர் அறியாத தேவே போற்றி – தேவா-அப்:2641/1
தேவாதிதேவர் தொழும் தேவே போற்றி சென்று ஏறி எங்கும் பரந்தாய் போற்றி – தேவா-அப்:2644/2
தெருளாதார் மூஎயிலும் தீயில் வேவ சிலை வளைத்து செம் கணையால் செற்ற தேவே
மருளாதார்-தம் மனத்தில் வாட்டம் தீர்ப்பாய் மருந்தாய் பிணி தீர்ப்பாய் வானோர்க்கு என்றும் – தேவா-அப்:3060/1,2
மேல்


தேற்றப்பட (1)

தேற்றப்பட திரு நல்லூர் அகத்தே சிவன் இருந்தால் – தேவா-அப்:948/1
மேல்


தேற்றம் (1)

தேற்றம் வந்து தெளிவுறல் ஆகுமே – தேவா-அப்:1917/2
மேல்


தேற்றனை (1)

தேற்றனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1105/2
மேல்


தேற்றும் (1)

தேற்றும் தகையன தேறிய தொண்டரை செந்நெறிக்கே – தேவா-அப்:972/3
மேல்


தேற்றுவான் (1)

தேற்றுவான் செற்று சொல்ல சிக்கென தவிரும் என்று – தேவா-அப்:568/2
மேல்


தேறல் (9)

தேறல் பாய்ந்து ஒழுகும் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:202/4
சிந்தையுள் தேறல் போலும் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:408/4
தேறல் ஆவது ஒன்று அன்று செம்பொன்பள்ளி – தேவா-அப்:1429/3
உள்ள தேறல் அமுத ஒளி வெளி – தேவா-அப்:1972/2
புலம் கொள் பூம் தேறல் வாய் புகலி கோனை பூம்புகார் கற்பகத்தை புன்கூர் மேய – தேவா-அப்:2311/1
திரு மணியை தித்திக்கும் தேனை பாலை தீம் கரும்பின் இன் சுவையை தெளிந்த தேறல்
குரு மணியை குழல் மொந்தை தாளம் வீணை கொக்கரையின் சச்சரியின் பாணியானை – தேவா-அப்:2375/1,2
எளியானை யாவர்க்கும் அரியான்-தன்னை இன் கரும்பின் தன்னுள்ளால் இருந்த தேறல்
தெளியானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2754/3,4
தேன் நல் இளம் துவலை மலி தென்றல் முன்றில் செழும் பொழில் பூம் பாளை விரி தேறல் நாறும் – தேவா-அப்:2830/3
கொக்கு இனிய கனி சிதறி தேறல் பாயும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2832/4
மேல்


தேறலை (2)

கன்னலை கரும்பு ஊறிய தேறலை
மின்னனை மின் அனைய உருவனை – தேவா-அப்:1989/1,2
தேறலை தெளியை தெளி வாய்த்தது ஓர் – தேவா-அப்:2056/3
மேல்


தேறார் (2)

உற்றலால் கயவர் தேறார் என்னும் கட்டுரையோடு ஒத்தேன் – தேவா-அப்:311/2
கழல் நம் கோவை ஆதல் கண்டும் தேறார் களித்த மனத்தராய் கருதி வாழ்வீர் – தேவா-அப்:2998/2
மேல்


தேறி (5)

தேறி நீ நினைதியாயின் சிவகதி திண்ணம் ஆகும் – தேவா-அப்:752/2
தெள்ளி தேறி தெளிந்து நெய்த்தானனை – தேவா-அப்:1413/3
தேறி வாழ்பவர்க்கு செல்வம் ஆகுமே – தேவா-அப்:1747/4
தெள்ள தேறி தெளிந்து தித்திப்பது ஓர் – தேவா-அப்:1972/1
செறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறி தித்திக்கும் சிவபுவனத்து அமுதம் போலும் – தேவா-அப்:2839/1
மேல்


தேறிய (1)

தேற்றும் தகையன தேறிய தொண்டரை செந்நெறிக்கே – தேவா-அப்:972/3
மேல்


தேறினார் (1)

தேறினார் சித்தத்து இருந்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2863/4
மேல்


தேறும் (1)

சித்தம் தேறும் செறி வளை சிக்கெனும் – தேவா-அப்:1457/1
மேல்


தேறுவாரலர் (1)

தேறுவாரலர் தீவினையாளர்கள் – தேவா-அப்:1424/2
மேல்


தேன் (50)

தேன் உலாம் கொன்றை திளைக்கும் திருமார்பன் என்கின்றாளால் – தேவா-அப்:60/3
தேன் நோக்கும் கிளி மழலை உமை கேள்வன் செழும் பவளம் – தேவா-அப்:63/1
கிழிந்த தேன் நுகர்தரும் கெடிலவாணரே – தேவா-அப்:100/4
கீண்டு தேன் சொரிதரும் கெடிலவாணரே – தேவா-அப்:103/4
வண்டு கொப்பளித்த தீம் தேன் வரி கயல் பருகி மாந்த – தேவா-அப்:248/3
தேன் ஐய மலர்கள் கொண்டு சிந்தையுள் சிந்திக்கின்ற – தேவா-அப்:251/2
தேன் அமர் பொழில்கள் சூழ திகழும் நெய்த்தானம் மேய – தேவா-அப்:369/3
தேன் உடை மலர்கள் கொண்டு திருந்து அடி பொருந்த சேர்த்தி – தேவா-அப்:530/1
தேன் அமர்ந்து ஏறும் அல்லி திசைமுகம் உடைய கோவும் – தேவா-அப்:546/2
தேன் உலாம் பொழில்கள் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:654/4
வள்ள தேன் போல நுன்னை வாய்மடுத்து உண்டிடாமே – தேவா-அப்:742/2
தேன் ஒத்து எனக்கு இனியான் தில்லை சிற்றம்பலவன் எம் கோன் – தேவா-அப்:775/2
தேன் அகம் நாறும் திரு ஒற்றியூர் உறைவார் அவர்தாம் – தேவா-அப்:825/3
தேன் அணைந்து ஆடிய வண்டு பயில் திரு வேதிகுடி – தேவா-அப்:867/3
தேன் சொட்டச்சொட்ட நின்று அட்டும் திரு கொன்றை சென்னி வைத்தீர் – தேவா-அப்:923/2
தேன் உடை கொன்றை சடை உடை கங்கை திரை தவழும் – தேவா-அப்:1005/3
தேன் திகழ் கொன்றையும் கூவிள மாலை திரு முடி மேல் – தேவா-அப்:1025/1
தேன் நிலாவிய சிற்றம்பலவனார் – தேவா-அப்:1075/3
திளைக்கும் வண்டொடு தேன் படு கொன்றையர் – தேவா-அப்:1331/1
தேன் இடை மலர் பாயும் நெய்த்தானனை – தேவா-அப்:1409/3
தேன் அறாத திரு செம்பொன்பள்ளியான் – தேவா-அப்:1427/2
கன்னல் தேன் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1449/2
தேன் அஞ்சு ஆடிய தெங்கு இளநீரொடும் – தேவா-அப்:1515/3
தேன் நோக்கும் திரு வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1560/4
கட்டி தேன் கலந்து அன்ன கெடில வீரட்டனார் – தேவா-அப்:1612/3
விடலையானை விரை கமழ் தேன் கொன்றை – தேவா-அப்:1997/1
தேன் ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு செம்பொன்பள்ளி திரு பூவணமும் – தேவா-அப்:2159/1
தேன பூ வண்டு உண்ட கொன்றையான் காண் திரு ஏகம்பத்தான் காண் தேன் ஆர்ந்து உக்க – தேவா-அப்:2169/1
தேன் அமுதை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2278/4
அம்மை பயக்கும் அமிர்து கண்டாய் அம் தேன் தெளி கண்டாய் ஆக்கம் செய்திட்டு – தேவா-அப்:2324/1
தேன் ஏறும் மலர் கொன்றை கண்ணியான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2328/4
தேன் ஏறு மலர் சோலை திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2388/4
தேன் உற்ற சொல் மடவாள்_பங்கன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2468/4
திரு மணியை தித்திப்பை தேன் அது ஆகி தீம் கரும்பின் இன் சுவையை திகழும் சோதி – தேவா-அப்:2547/3
தேன் அவன் காண் திரு அவன் காண் திசை ஆனான் காண் தீர்த்தன் காண் பார்த்தன்-தன் பணியை கண்ட – தேவா-அப்:2565/2
சிலையவன் காண் செய்ய வாய் கரிய கூந்தல் தேன்_மொழியை ஒருபாகம் சேர்த்தினான் காண் – தேவா-அப்:2569/2
எரி சந்தி வேட்கும் இடத்தார் ஏம கூடத்தார் பாட தேன் இசை ஆர் கீதர் – தேவா-அப்:2603/3
தேன் ஏறு திரு இதழி தாரார் போலும் திரு வீழிமிழலை அமர் செல்வர் போலும் – தேவா-அப்:2615/3
தேன் அவனை தேவர் தொழு கழலான்-தன்னை செய் குணங்கள் பல ஆகி நின்ற வென்றி – தேவா-அப்:2693/2
தேன் ஆரும் கொன்றையனே நின்றியூராய் திரு ஆனைக்காவில் உறை சிவனே ஞானம் – தேவா-அப்:2706/3
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் கண்டாய் பாலோடு நெய் தயிர் தேன் ஆடி கண்டாய் – தேவா-அப்:2811/2
பால் ஆகி தேன் ஆகி பழமும் ஆகி பைம் கரும்பாய் அங்கு அருந்தும் சுவைஅனானை – தேவா-அப்:2827/2
தேன் நல் இளம் துவலை மலி தென்றல் முன்றில் செழும் பொழில் பூம் பாளை விரி தேறல் நாறும் – தேவா-அப்:2830/3
தேன் அகத்தில் இன் சுவையை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2887/4
தேன் ஒத்து அடியார்க்கு இனியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2898/4
தேன் இரிய மீன் பாயும் தெண் நீர் பொய்கை திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2900/4
தேன் உற்ற சோலை திகழ்ந்து தோன்றும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2901/4
தேன் அவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2932/4
தேன் அவன் காண் சென்று அடையா செல்வன்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2946/4
குறி இலங்கு மிடற்றானை மடல் தேன் கொன்றை சடையானை மடை-தோறும் கமல மென் பூ – தேவா-அப்:2991/3
மேல்


தேன்_மொழியை (1)

சிலையவன் காண் செய்ய வாய் கரிய கூந்தல் தேன்_மொழியை ஒருபாகம் சேர்த்தினான் காண் – தேவா-அப்:2569/2
மேல்


தேன (2)

தேன போதுகள் மூன்றொடு ஓர் ஐந்து உடன் – தேவா-அப்:1616/1
தேன பூ வண்டு உண்ட கொன்றையான் காண் திரு ஏகம்பத்தான் காண் தேன் ஆர்ந்து உக்க – தேவா-அப்:2169/1
மேல்


தேனத்தை (1)

தேனத்தை வார்த்த தெளிவே போற்றி தேவர்க்கும் தேவனாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2639/3
மேல்


தேனர் (2)

மறையிடை பொருளர் மொட்டின் மலர் வழி வாச தேனர்
கறவிடை பாலின் நெய்யர் கரும்பினில் கட்டியாளர் – தேவா-அப்:623/1,2
தேனர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1596/4
மேல்


தேனவனே (1)

தேனவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2529/4
மேல்


தேனவனை (2)

தேனவனை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2591/4
தேனவனை தித்திக்கும் பெருமான்-தன்னை தீது இலா மறையவனை தேவர் போற்றும் – தேவா-அப்:2980/3
மேல்


தேனனை (1)

தேனனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1103/2
மேல்


தேனாய் (2)

திருமகட்கு செந்தாமரை ஆம் அடி சிறந்தவர்க்கு தேனாய் விளைக்கும் அடி – தேவா-அப்:2144/1
தேனாய் அமுது ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2500/4
மேல்


தேனும் (1)

தேனும் இன்னமுதும் ஆனார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:284/4
மேல்


தேனூராய் (1)

சிந்தையாய் தேனூராய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2501/4
மேல்


தேனே (5)

அண்டனே அமரர் ஏறே திரு ஐயாறு அமர்ந்த தேனே
தொண்டனேன் தொழுது உன் பாதம் சொல்லி நான் திரிகின்றேனே – தேவா-அப்:384/3,4
அறிவினால் அருள்கள்செய்தான் திரு ஐயாறு அமர்ந்த தேனே – தேவா-அப்:393/4
சிறை ஆர் வரி வண்டு தேனே பாடும் திரு மறைக்காட்டு எந்தை சிவலோகனை – தேவா-அப்:2308/1
திருவே என் செல்வமே தேனே வானோர் செழும் சுடரே செழும் சுடர் நல் சோதி மிக்க – தேவா-அப்:2554/1
திரை ஆரும் புனல் பொன்னி தீர்த்தம் மல்கு திரு ஆனைக்காவில் உறை தேனே வானோர் – தேவா-அப்:2710/3
மேல்


தேனை (26)

மதி தந்த ஆரூரில் வார் தேனை வாய்மடுத்து பருகி உய்யும் – தேவா-அப்:48/3
ஆலங்காட்டில் அம் தேனை அமரர் சென்னி ஆய் மலரை – தேவா-அப்:149/2
தேசத்தார் பரவி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனை
வாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயும் அன்றே – தேவா-அப்:387/3,4
மடுக்களில் வாளை பாயும் திரு ஐயாறு அமர்ந்த தேனை
அடுத்து நின்று உன்னு நெஞ்சே அரும் தவம் செய்த ஆறே – தேவா-அப்:388/3,4
நறவம் ஆர் பொழில்கள் சூழ்ந்த திரு ஐயாறு அமர்ந்த தேனை
மறவு இலா நெஞ்சமே நல்மதி உனக்கு அடைந்த ஆறே – தேவா-அப்:389/3,4
மல்லிகை மலரும் சோலை திரு ஐயாறு அமர்ந்த தேனை
எல்லியும் பகலும் எல்லாம் நினைந்தபோது இனிய ஆறே – தேவா-அப்:390/3,4
தெண் நிலா எறிக்கும் சென்னி திரு ஐயாறு அமர்ந்த தேனை
கண்ணினால் காணப்பெற்று கருதிற்றே முடிந்த ஆறே – தேவா-அப்:391/3,4
அரும் தவ முனிவர் ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனை
பொருந்தி நின்று உன்னு நெஞ்சே பொய்வினை மாயும்அன்றே – தேவா-அப்:392/3,4
தேனை ஆர் குழலாளை ஒர்பாகமா – தேவா-அப்:1150/3
தேனை ஆறு திறந்தாலே ஒக்குமே – தேவா-அப்:1343/4
தேனை காவி உண்ணார் சில தெண்ணர்கள் – தேவா-அப்:1376/2
தேனை வென்ற சொல்லாளொடு செல்வமும் – தேவா-அப்:1902/1
தேனை பாலினை திங்களை ஞாயிற்றை – தேவா-அப்:1988/1
தெரியாத தத்துவனை தேனை பாலை திகழ் ஒளியை தேவர்கள்-தம் கோனை மற்றை – தேவா-அப்:2086/2
செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான்-தன்னை திகழ் ஒளியை மரகதத்தை தேனை பாலை – தேவா-அப்:2094/2
சிந்தையில் தீர்வினையை தேனை பாலை செழும் கெடில வீரட்டம் மேவினானை – தேவா-அப்:2109/3
திரு மணியை தித்திக்கும் தேனை பாலை தீம் கரும்பின் இன் சுவையை தெளிந்த தேறல் – தேவா-அப்:2375/1
கரும்பு தரு கட்டியை இன் அமிர்தை தேனை காண்பு அரிய செழும் சுடரை கனக குன்றை – தேவா-அப்:2415/2
அ தேனை அமுதத்தை ஆவின் பாலை அண்ணிக்கும் தீம் கரும்பை அரனை ஆதி – தேவா-அப்:2628/3
ஏத்தவனை இறுவரையில் தேனை ஏனோர்க்கு இன் அமுதம் அளித்தவனை இடரை எல்லாம் – தேவா-அப்:2686/3
தென் ஆனைக்காவானை தேனை பாலை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2715/4
கரும்பு இருந்த கட்டி-தனை கனியை தேனை கன்றாப்பின் நடுதறியை காறையானை – தேவா-அப்:2877/1
தேனை திளைத்து உண்டு வண்டு பாடும் தில்லை நடம் ஆடும் தேவர் போலும் – தேவா-அப்:2898/2
உருகு மனத்து அடியவர்கட்கு ஊறும் தேனை உம்பர் மணி முடிக்கு அணியை உண்மை நின்ற – தேவா-அப்:2920/1
தித்தித்து என் மனத்துள்ளே ஊறும் தேனை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2924/4
புகழும் அன்பர்க்கு இன்பு அமரும் அமுதை தேனை புண்ணியனை புவனி அது முழுதும் போத – தேவா-அப்:2986/2
மேல்


தேனொடு (1)

செய்யமேனியன் தேனொடு பால் தயிர் – தேவா-அப்:1791/1
மேல்


தேனோடு (2)

வாலியார் வணங்கி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனோடு
ஆலியா எழுந்த நெஞ்சம் அழகிதா எழுந்த ஆறே – தேவா-அப்:385/3,4
மொட்டு இடு கமல பொய்கை திரு ஐயாறு அமர்ந்த தேனோடு
ஒட்டிடும் உள்ளத்தீரே உம்மை நான் உகந்திட்டேனே – தேவா-அப்:386/3,4

மேல்