பெ – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பெட்டை 1
பெடை 2
பெடையொடும் 1
பெண் 44
பெண்_கொடி 3
பெண்கள் 1
பெண்டிர் 1
பெண்டீர் 1
பெண்டு 1
பெண்ணர் 2
பெண்ணனை 1
பெண்ணாகடத்து 1
பெண்ணாகடம் 2
பெண்ணானை 1
பெண்ணின் 1
பெண்ணினானே 1
பெண்ணினோடு 1
பெண்ணுக்கு 1
பெண்ணும் 4
பெண்ணை 4
பெண்ணொடு 2
பெண்ணோடு 1
பெண்பால் 1
பெண்உரு 1
பெம்மான் 12
பெம்மான்-தன்னை 2
பெம்மானை 3
பெய் 10
பெய்த 2
பெய்தார் 2
பெய்தால் 2
பெய்தான் 1
பெய்தானை 1
பெய்திட்டு 1
பெய்து 6
பெய்துறும் 1
பெய்பொருளாம் 1
பெய்ய 1
பெய்வளையார்க்கும் 1
பெய்வானை 1
பெயர் 3
பெயர்த்தும் 2
பெயர்ந்து 1
பெயர 3
பெயராது 1
பெயரார் 1
பெயரும்போது 1
பெரிது 8
பெரிதும் 7
பெரிய 11
பெரியது 4
பெரியர் 2
பெரியவன் 3
பெரியன 1
பெரியனவும் 1
பெரியனார் 1
பெரியாய் 3
பெரியார் 5
பெரியார்கட்கு 1
பெரியான் 2
பெரியானை 2
பெரியையாய் 1
பெரியோய் 3
பெரியோர் 1
பெரியோர்க்கு 1
பெரியோன் 1
பெரு 28
பெருக்க 2
பெருக்கம் 2
பெருக்கி 2
பெருக்கினவா 1
பெருக்கு 1
பெருக்குவர் 1
பெருக்குவார் 1
பெருக 2
பெருகல் 1
பெருகாமே 1
பெருகி 2
பெருகிட 1
பெருகிய 1
பெருகினானை 1
பெருகு 3
பெருகுவித்து 1
பெருங்காடு 1
பெருங்கோயில் 3
பெருத்த 1
பெருத்து 1
பெருந்தகை 2
பெருந்தகையான் 1
பெருந்தகையை 2
பெருந்தன்மையே 1
பெருந்தன்மையை 1
பெருந்துறை 1
பெருந்துறையும் 1
பெருநீர் 1
பெரும் 62
பெரும்பற்றத்தண்புலியூர் 2
பெரும்பற்றப்புலியூர் 2
பெரும்பற்றப்புலியூரானை 10
பெரும்பற்றப்புலியூரும் 1
பெரும்பாலன் 1
பெரும்புலியூர் 2
பெரும்பொருள் 3
பெரும்போது 1
பெருமாள் 1
பெருமாற்கு 1
பெருமான் 32
பெருமான்-தன்னை 6
பெருமான்-தனை 1
பெருமானாய் 1
பெருமானார் 2
பெருமானுக்கு 2
பெருமானே 4
பெருமானை 23
பெருமை 15
பெருமை-தனை 1
பெருமைக்கே 1
பெருமையன் 1
பெருமையாய் 1
பெருமையாலே 1
பெருமையான் 2
பெருமையானே 3
பெருமையானை 2
பெருமையும் 1
பெருமையுமாய் 1
பெருமையே 1
பெருமையை 1
பெருவிரல் 1
பெருவிரல்-அதனை 1
பெருவினை 1
பெருவேளூர் 12
பெருவேளூரும் 1
பெற்ற 7
பெற்றது 2
பெற்றதேல் 1
பெற்றம் 11
பெற்றமே 1
பெற்றவர் 1
பெற்றவள் 1
பெற்றனர்தாமே 1
பெற்றார் 1
பெற்றார்கள் 1
பெற்றானை 3
பெற்றி 2
பெற்றியன் 1
பெற்றியார் 1
பெற்றியானே 1
பெற்றிருந்த 1
பெற்றிலளாகிலும் 1
பெற்றிலேன் 1
பெற்று 3
பெற்றுடையான் 1
பெற்றுடையீர் 1
பெற்றேற்கும் 1
பெற்றேன் 2
பெற 4
பெறல் 1
பெறற்கு 1
பெறு 4
பெறுதல் 1
பெறும் 2
பெறுமாறு 1
பெறுவார் 2
பெறுவித்து 1
பெறுவிப்பார் 1


பெட்டை (1)

மான் பெட்டை நோக்கி மணாளீர் மணி நீர் மிழலை உள்ளீர் – தேவா-அப்:923/3
மேல்


பெடை (2)

அளை பிரிந்த அலவன் போய் புகுதந்த காலமும் கண்டு தன் பெடை
திளைக்கும் தண் கழனி திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:206/3,4
பெடை வாய் மது உண்டு பேராது இருக்கும் பெரும் பதியே – தேவா-அப்:800/4
மேல்


பெடையொடும் (1)

கோழி பெடையொடும் கூடி குளிர்ந்து வருவன கண்டேன் – தேவா-அப்:22/4
மேல்


பெண் (44)

பாகம் பெண் ஆண் பாகமாய் நின்ற பசுபதியை – தேவா-அப்:70/2
இரண்டு-கொல் ஆம் இலங்கும் குழை பெண் ஆண் – தேவா-அப்:178/2
பாதி பெண் உருவம் ஆனார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:360/4
கறையராய் கண்டம் நெற்றிக்கண்ணராய் பெண் ஓர்பாகம் – தேவா-அப்:407/1
பெண் ஒருபாகம் ஆகி பேணும் ஆப்பாடியாரே – தேவா-அப்:468/4
பாகம் பெண் உருவம் ஆனார் பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:564/4
பிறை அணி முடியினானே பிஞ்ஞகா பெண் ஓர்பாகா – தேவா-அப்:613/1
பெண் அகத்தர் ஐயர் காற்றில் பெரு வலி இருவர் ஆகி – தேவா-அப்:624/2
பிறையுறு சடையர் போலும் பெண் ஒருபாகர் போலும் – தேவா-அப்:644/1
பெண் ஒருபாகம் போலும் பேடு அலி ஆணர் போலும் – தேவா-அப்:697/2
பெரும் திரு இமவான் பெற்ற பெண்_கொடி பிரிந்த பின்னை – தேவா-அப்:707/1
வஞ்ச பெண் அரங்கு கோயில் வாள் எயிற்று அரவம் துஞ்சா – தேவா-அப்:730/1
வஞ்ச பெண் இருந்த சூழல் வான் தவழ் மதியம் தோயும் – தேவா-அப்:730/2
வஞ்ச பெண் வாழ்க்கையாளன் வாழ்வினை வாழலுற்று – தேவா-அப்:730/3
வஞ்ச பெண் உறக்கம் ஆனேன் வஞ்சனேன் என் செய்கேனே – தேவா-அப்:730/4
பெண் இட்டம் பண்டையது அன்று இவை பெய் பலிக்கு என்று உழல்வார் – தேவா-அப்:944/1
பாதி பெண் ஒருபாகத்தன் பல் மறை – தேவா-அப்:1357/1
வேறு கோலத்தர் ஆண் அலர் பெண் அலர் – தேவா-அப்:1429/1
உறைவது ஈமம் உடலில் ஓர் பெண்_கொடி – தேவா-அப்:1524/2
இட்டம் ஆயின செய்வாள் என் பெண்_கொடி – தேவா-அப்:1526/1
பெண் காட்டி பிறை சென்னி வைத்தான் திரு – தேவா-அப்:1558/3
ஓத்தன் தாருகன்-தன் உயிர் உண்ட பெண்
போத்தன்தான் அவள் பொங்கு சினம் தணி – தேவா-அப்:1706/2,3
பாடல் ஆக்கிடும் பண்ணொடு பெண் இவள் – தேவா-அப்:1714/1
பாதி பெண் உரு ஆகி பரஞ்சுடர் – தேவா-அப்:2028/3
பிசைந்த திருநீற்றினர் பெண் ஓர்பாகம் பிரிவு அறியா பிஞ்ஞகனார் தெண் நீர் கங்கை – தேவா-அப்:2175/3
பெண் அமரும் சடைமுடியார் பேர் ஒன்று இல்லார் பிறப்பு இலார் இறப்பு இலார் பிணி ஒன்று இல்லார் – தேவா-அப்:2189/2
ஆண் ஆகி பெண் ஆய வடிவு தோன்றும் அடியவர்கட்கு ஆரமுதம் ஆகி தோன்றும் – தேவா-அப்:2265/1
பாதி தன் திரு உருவில் பெண் கொண்டானை பண்டு ஒரு கால் தசமுகனை அழுவித்தானை – தேவா-அப்:2348/1
பேர் ஆர் பெருமை கொடுத்தான்-தன்னை பெண் இரண்டும் ஆணுமாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2384/2
பிறப்போடு இறப்பு என்னும் இல்லாதான் காண் பெண் உருவோடு ஆண் உருவம் ஆயினான் காண் – தேவா-அப்:2389/1
பிரமன்-தன் சிரம் அரிந்த பெரியோய் போற்றி பெண் உருவோடு ஆண் உருவாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2414/1
பாதி ஒரு பெண் முடி மேல் கங்கையானை பாசூரும் பரங்குன்றும் மேயான்-தன்னை – தேவா-அப்:2417/1
பெண் ஆண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே பெரியார்கட்கு எல்லாம் பெரியாய் நீயே – தேவா-அப்:2469/1
பாகத்து ஓர் பெண் உடையார் ஆணும் ஆவார் பசு ஏறி உழிதரும் எம் பரமயோகி – தேவா-அப்:2534/2
பெண் அல்லை ஆண் அல்லை பேடும் அல்லை பிறிது அல்லை ஆனாயும் பெரியாய் நீயே – தேவா-அப்:2541/3
பெண் அவன் காண் ஆண் அவன் காண் பெரியோர்க்கு என்றும் பெரியவன் காண் அரி அவன் காண் அயன் ஆனான் காண் – தேவா-அப்:2570/1
பிறையோடு பெண் ஒருபால் வைத்தான்தான் காண் பேரவன் காண் பிறப்பு ஒன்றும் இல்லாதான் காண் – தேவா-அப்:2579/1
பெண் அவனை ஆண் அவனை பேடு ஆனானை பிறப்பிலியை இறப்பிலியை பேரா வாணி – தேவா-அப்:2691/1
பேர் ஒளியை பெண் பாகம் வைத்தான்-தன்னை பேணுவார்-தம் வினையை பேணி வாங்கும் – தேவா-அப்:2767/3
ஆல் அதனில் அறம் நால்வர்க்கு அளித்தார் போலும் ஆணொடு பெண் அலி அல்லர் ஆனார் போலும் – தேவா-அப்:2833/2
பிறப்பானை பிறவாத பெருமையானை பெரியானை அரியானை பெண் ஆண் ஆய – தேவா-அப்:2886/1
பிறை பிளவு சடைக்கு அணிந்த பெம்மான் போலும் பெண் ஆண் உரு ஆகி நின்றார் போலும் – தேவா-அப்:2907/3
பெண் அவனை ஆண் அவனை பித்தன்-தன்னை பிணம் இடுகாடு உடையானை பெரும் தக்கோனை – தேவா-அப்:2976/2
பெண் ஆகி பெண்ணுக்கு ஓர் ஆணும் ஆகி பிரளயத்துக்கு அப்பால் ஓர் அண்டம் ஆகி – தேவா-அப்:3006/3
மேல்


பெண்_கொடி (3)

பெரும் திரு இமவான் பெற்ற பெண்_கொடி பிரிந்த பின்னை – தேவா-அப்:707/1
உறைவது ஈமம் உடலில் ஓர் பெண்_கொடி
துறைகள் ஆர் கடல் தோணிபுரத்து உறை – தேவா-அப்:1524/2,3
இட்டம் ஆயின செய்வாள் என் பெண்_கொடி
கட்டம் பேசிய கார் அரக்கன்-தனை – தேவா-அப்:1526/1,2
மேல்


பெண்கள் (1)

முலை மறைக்கப்பட்டு நீராட பெண்கள் முறைமுறையால் நம் தெய்வம் என்று தீண்டி – தேவா-அப்:2117/1
மேல்


பெண்டிர் (1)

பெண்டிர் மக்கள் பெரும் துணை நல் நிதி – தேவா-அப்:1831/1
மேல்


பெண்டீர் (1)

இழவு ஒன்று தாம் ஒருவர்க்கு இட்டு ஒன்று ஈயார் ஈன்று எடுத்த தாய்தந்தை பெண்டீர் மக்கள் – தேவா-அப்:2998/1
மேல்


பெண்டு (1)

பெண்டு அணி நாயகன் பேய் உகந்து ஆடும் பெருந்தகையான் – தேவா-அப்:1023/2
மேல்


பெண்ணர் (2)

துணை அமர் பெண்ணர் போலும் தூ மணி குன்றர் போலும் – தேவா-அப்:702/2
ஆல நிழல் இருப்பர் ஆகாயத்தர் அரு வரையின் உச்சியர் ஆணர் பெண்ணர்
காலம் பல கழித்தார் கறை சேர் கண்டர் கருத்துக்கு சேயார் தாம் காணாதார்க்கு – தேவா-அப்:2256/1,2
மேல்


பெண்ணனை (1)

அருமறையனை ஆணொடு பெண்ணனை
கரு விடம் மிக உண்ட எம் கண்டனை – தேவா-அப்:1858/1,2
மேல்


பெண்ணாகடத்து (1)

பெண்ணாகடத்து பெரும் தூங்கானைமாடத்தார் கூடத்தார் பேராவூரார் – தேவா-அப்:2596/3
மேல்


பெண்ணாகடம் (2)

பெருநீர் வளர்சடையான் பேணி நின்ற பிரமபுரம் சுழியல் பெண்ணாகடம்
கருநீலவண்டு அரற்றும் காளத்தியும் கயிலாயம் தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2160/3,4
பெண்ணை அருள் துறை தண் பெண்ணாகடம் பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூரும் – தேவா-அப்:2791/3
மேல்


பெண்ணானை (1)

பெண்ணானை ஆணானை பேடியானை பெரும்பற்றத்தண்புலியூர் பேணினானை – தேவா-அப்:2307/2
மேல்


பெண்ணின் (1)

பேர்த்தார் பிறை நுதல் பெண்ணின் நல்லாள் உட்க – தேவா-அப்:160/2
மேல்


பெண்ணினானே (1)

கூறும் ஓர் பெண்ணினானே கோடிகா உடைய கோவே – தேவா-அப்:490/4
மேல்


பெண்ணினோடு (1)

பிறவாதே எ உயிர்க்கும் தானே ஆகி பெண்ணினோடு ஆண் உருவாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2773/2
மேல்


பெண்ணுக்கு (1)

பெண் ஆகி பெண்ணுக்கு ஓர் ஆணும் ஆகி பிரளயத்துக்கு அப்பால் ஓர் அண்டம் ஆகி – தேவா-அப்:3006/3
மேல்


பெண்ணும் (4)

ஆண் அலார் பெண்ணும் அல்லார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:276/4
பாதியில் பெண்ணும் ஆகி பரவுவார் பாங்கர் ஆகி – தேவா-அப்:467/3
ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணும் ஆம் – தேவா-அப்:2035/1
பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம் உருவும் தாமே ஆகி – தேவா-அப்:3005/3
மேல்


பெண்ணை (4)

பாதி ஓர் பெண்ணை வைத்தாய் படர் சடை மதியம் சூடும் – தேவா-அப்:599/3
பெண்ணை மால்கொடு பெய் வளை கொள்வது – தேவா-அப்:1521/2
பெண்ணை அருள் துறை தண் பெண்ணாகடம் பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூரும் – தேவா-அப்:2791/3
பரிந்தவன் காண் பனி வரை மீ பண்டம் எல்லாம் பறித்து உடனே நிரந்து வரு பாய் நீர் பெண்ணை
நிரந்து வரும் இரு கரையும் தடவா ஓடி நின்மலனை வலம்கொண்டு நீள நோக்கி – தேவா-அப்:2935/2,3
மேல்


பெண்ணொடு (2)

பிறையும் சூடி நல் பெண்ணொடு ஆண் ஆகி என் – தேவா-அப்:1362/1
பெண்ணொடு ஆண் என்று பேசற்கு அரியவன் – தேவா-அப்:1544/2
மேல்


பெண்ணோடு (1)

பிறை அரவ குறும் கண்ணி சடையினான் காண் பிறப்பிலி காண் பெண்ணோடு ஆண் ஆயினான் காண் – தேவா-அப்:2332/1
மேல்


பெண்பால் (1)

பெண்பால் ஒருபாகம் பேணா வாழ்க்கை கோள் நாகம் பூண்பனவும் நாண் ஆம் சொல்லார் – தேவா-அப்:2441/1
மேல்


பெண்உரு (1)

பாதி பெண்உரு ஆய பரமன் என்று – தேவா-அப்:1887/2
மேல்


பெம்மான் (12)

எந்தை பெம்மான் என் எம்மான் என்பார் பாவம் நாசமே – தேவா-அப்:155/4
பேய் அறா காட்டில் ஆடும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
தீ அறா கையர் போலும் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:319/3,4
ஏழையேன் ஏழையேன் நான் என் செய்கேன் எந்தை பெம்மான்
மாழை ஒண் கண்ணினார்கள் வலைதனில் மயங்குகின்றேன் – தேவா-அப்:493/2,3
ஏழையேன் ஆகி நாளும் என் செய்வேன் எந்தை பெம்மான்
வாழ்வதேல் அரிது போலும் வைகலும் ஐவர் வந்து – தேவா-அப்:502/2,3
பேர் இடர் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
கார் உடை கண்டர் ஆகி கபாலம் ஓர் கையில் ஏந்தி – தேவா-அப்:565/1,2
எள்கினேன் எந்தை பெம்மான் இருதலை மின்னுகின்ற – தேவா-அப்:731/3
அந்தரத்து அமரர் பெம்மான் ஆன் நல் வெள்ஊர்தியான்-தன் – தேவா-அப்:749/2
அரும்பு அவிழ் தண் பொழில் சூழ் அணி ஆரூர் அமர்ந்த பெம்மான்
விரும்பு மனத்தினை யாது ஒன்று நான் உன்னை வேண்டுவனே – தேவா-அப்:990/3,4
இழிப்ப அரிய பசுபாச பிறப்பை நீக்கும் என் துணையே என்னுடைய பெம்மான் தம்மான் – தேவா-அப்:2492/2
பேர்ந்தவனே பிரளயங்கள் எல்லாம் ஆய பெம்மான் என்று எப்போதும் பேசும் நெஞ்சில் – தேவா-அப்:2528/3
பிறிந்தானே பிறர் ஒருவர் அறியா வண்ணம் பெம்மான் என்று எப்போதும் ஏத்தும் நெஞ்சில் – தேவா-அப்:2531/3
பிறை பிளவு சடைக்கு அணிந்த பெம்மான் போலும் பெண் ஆண் உரு ஆகி நின்றார் போலும் – தேவா-அப்:2907/3
மேல்


பெம்மான்-தன்னை (2)

பிறவாதே தோன்றிய பெம்மான்-தன்னை பேணாதார் அவர்-தம்மை பேணாதானை – தேவா-அப்:2192/1
பேர் ஆயிரம் உடைய பெம்மான்-தன்னை பிறர் தன்னை காட்சிக்கு அரியான்-தன்னை – தேவா-அப்:2306/3
மேல்


பெம்மானை (3)

பேர்த்தானை பிறப்பிலியை இறப்பு ஒன்று இல்லா பெம்மானை கைம்மாவின் உரிவை பேணி – தேவா-அப்:2627/3
பேர் ஆயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை பிரிவு இலா அடியார்க்கு என்றும் – தேவா-அப்:2633/1
எ திசையும் வானவர்கள் தொழ நின்றானை ஏறு ஊர்ந்த பெம்மானை எம்மான் என்று – தேவா-அப்:2768/1
மேல்


பெய் (10)

பிறை இளங்கண்ணியினானை பெய் வளையாளொடும் பாடி – தேவா-அப்:24/1
பிறை தரு சடையின் மேலே பெய் புனல் கங்கை-தன்னை – தேவா-அப்:366/1
பிறை அது சடை முடி மேல் பெய் வளையாள்-தன்னோடும் – தேவா-அப்:424/2
பெண் இட்டம் பண்டையது அன்று இவை பெய் பலிக்கு என்று உழல்வார் – தேவா-அப்:944/1
பெற்றம் ஏறுவர் பெய் பலிக்கு ஏன்று அவர் – தேவா-அப்:1113/1
எல்லி நின்று இடு பெய் பலி ஏற்பவர் – தேவா-அப்:1320/2
பிறை கொள் வாள் நுதல் பெய் வளை தோளியர் – தேவா-அப்:1330/1
பெண்ணை மால்கொடு பெய் வளை கொள்வது – தேவா-அப்:1521/2
பூ பெய் கூடை புனைந்து சுமந்திலர் – தேவா-அப்:2007/2
கேடிலியை கீழ்வேளூர் ஆளும் கோவை கிறி பேசி மடவார் பெய் வளைகள் கொள்ளும் – தேவா-அப்:2978/3
மேல்


பெய்த (2)

படு குழி பவ்வத்து அன்ன பண்டியை பெய்த ஆற்றால் – தேவா-அப்:498/1
புழு பெய்த பண்டி-தன்னை புறம் ஒரு தோலால் மூடி – தேவா-அப்:499/1
மேல்


பெய்தார் (2)

காதில் குழை இலங்க பெய்தார் போலும் கவலை பிறப்பு இடும்பை காப்பார் போலும் – தேவா-அப்:2297/2
சித்தியினால் அரசாண்டு சிறப்பு செய்ய சிவகணத்து புக பெய்தார் திறலால் மிக்க – தேவா-அப்:2913/2
மேல்


பெய்தால் (2)

குய்யம் பெய்தால் கொடி மா மதில் சூழ் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:958/4
செம்பொனால் செய்து அழகு பெய்தால் போலும் செம் சடை எம்பெருமானே தெய்வம் நாறும் – தேவா-அப்:2126/1
மேல்


பெய்தான் (1)

பற்றி ஆடு அரவோடும் சடை பெய்தான்
நெற்றி ஆர் அழல் கண்ட நெய்த்தானனை – தேவா-அப்:1414/2,3
மேல்


பெய்தானை (1)

பெய்தானை பிறப்பிலியை அறத்தில் நில்லா பிரமன்-தன் சிரம் ஒன்றை கரம் ஒன்றினால் – தேவா-அப்:2753/2
மேல்


பெய்திட்டு (1)

என்பு இருத்தி நரம்பு தோல் புக பெய்திட்டு என்னை ஓர் உருவம் ஆக்கி – தேவா-அப்:43/1
மேல்


பெய்து (6)

பொன் ஆகத்து அடியேனை புக பெய்து பொருட்படுத்த ஆரூரரை – தேவா-அப்:46/3
பொய் மறித்து இயற்றிவைத்து புலால் கமழ் பண்டம் பெய்து
பை மறித்து இயற்றி அன்ன பாங்கு இலா குரம்பை நின்று – தேவா-அப்:656/1,2
வீறு உடைய ஏறு ஏறி நீறு பூசி வெண் தோடு பெய்து இடங்கை வீணை ஏந்தி – தேவா-அப்:2177/1
விரை ஏறு நீறு அணிந்து ஓர் ஆமை பூண்டு வெண் தோடு பெய்து இடங்கை வீணை ஏந்தி – தேவா-அப்:2220/1
பூண்டு பொறி அரவம் காதில் பெய்து பொன் சடைகள் அவை தாழ புரி வெண்நூலர் – தேவா-அப்:2435/2
விலங்காதே நெறி நின்று அங்கு அறிவே மிக்கு மெய் அன்பு மிக பெய்து பொய்யை நீக்கி – தேவா-அப்:2699/2
மேல்


பெய்துறும் (1)

கொள்ளும் காதன்மை பெய்துறும் கோல் வளை – தேவா-அப்:1456/1
மேல்


பெய்பொருளாம் (1)

பிண்டமாய் உலகுக்கு ஒர் பெய்பொருளாம் பிஞ்ஞகனை – தேவா-அப்:65/2
மேல்


பெய்ய (1)

நில்லாதே பல் ஊரும் பலிகள் வேண்டி நிரை வளையார் பலி பெய்ய நிறையம் கொண்டு – தேவா-அப்:2219/1
மேல்


பெய்வளையார்க்கும் (1)

பிறை நுதல் பேதை மாதர் பெய்வளையார்க்கும் அல்லேன் – தேவா-அப்:768/2
மேல்


பெய்வானை (1)

பெய்வானை பிச்சாடல் ஆடுவானை பிலவாய பேய் கணங்கள் ஆர்க்க சூல் அம்பு – தேவா-அப்:2589/2
மேல்


பெயர் (3)

உள்ளம் உள்கி உரைக்கும் திரு பெயர்
வள்ளல் மா மயிலாடுதுறை உறை – தேவா-அப்:1456/2,3
நல்ல நல்லம் எனும் பெயர் நாவினால் – தேவா-அப்:1505/3
பின்னு வார் சடை பிஞ்ஞகன்-தன் பெயர்
உன்னுவாரும் உரைக்க வல்லார்களும் – தேவா-அப்:1805/2,3
மேல்


பெயர்த்தும் (2)

பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் – தேவா-அப்:2343/2
பெரு நோய்கள் மிக நலிய பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழில் ஆகி இறக்கின்றாரே – தேவா-அப்:3020/4
மேல்


பெயர்ந்து (1)

பாணி ஆர் படுதம் பெயர்ந்து ஆடுவர் – தேவா-அப்:1231/1
மேல்


பெயர (3)

பெயர அவற்கு பேர் அருள்கள் செய்தான் கண்டாய் பேரும் பெரும் படையோடு ஈந்தான் கண்டாய் – தேவா-அப்:2326/3
அறை கழலும் திருவடி மேல் சிலம்பும் ஆர்ப்ப அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற – தேவா-அப்:2508/3
பித்தர்தாம் போல் அங்கு ஓர் பெருமை பேசி பேதையரை அச்சுறுத்தி பெயர கண்டு – தேவா-அப்:2537/2
மேல்


பெயராது (1)

பேர் ஆகி எங்கும் பரந்தாய் போற்றி பெயராது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2640/2
மேல்


பெயரார் (1)

பெரியது ஓர் மலை வில்லா எய்தார் போலும் பேர் நந்தி என்னும் பெயரார் போலும் – தேவா-அப்:2365/3
மேல்


பெயரும்போது (1)

பேணிய பதியின்-நின்று பெயரும்போது அறியமாட்டேன் – தேவா-அப்:655/3
மேல்


பெரிது (8)

அடைந்து நும் சரணம் என்ன அருள் பெரிது உடையர் ஆகி – தேவா-அப்:630/3
உரம் பெரிது உடைமை காட்டி ஒள் அமர் செய்து மீண்டே – தேவா-அப்:632/2
வரம் பெரிது உடையன் ஆக்கி வாள் அமர் முகத்தில் மன்னும் – தேவா-அப்:632/3
சீர் மலி செல்வம் பெரிது உடைய செம்பொன் மா மலையே – தேவா-அப்:999/1
இடர்க்கள் போல் பெரிது ஆகிய வண்ணமும் – தேவா-அப்:1354/2
தனியாய் நீ சரண் நீ சலமே பெரிது
இனியாய் நீ எனக்கு எந்தை பிரானிரே – தேவா-அப்:2018/3,4
பேச பொருள் அலா பிறவி-தன்னை பெரிது என்று உன் சிறு மனத்தால் வேண்டி ஈண்டு – தேவா-அப்:2509/1
குலம் பொல்லேன் குணம் பொல்லேன் குறியும் பொல்லேன் குற்றமே பெரிது உடையேன் கோலம் ஆய – தேவா-அப்:3023/1
மேல்


பெரிதும் (7)

அண்ணியார் பெரிதும் சேயார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:249/4
பெற்றதேல் பெரிதும் துன்பம் பேதையேன் பிழைப்பினாலே – தேவா-அப்:505/2
பின்னை நான் பெரிதும் அருள் பெற்றது – தேவா-அப்:1717/2
பேச பெரிதும் இனியாய் நீயே பிரானாய் அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2465/3
மாட்சி பெரிதும் உடையாய் போற்றி மன்னி என் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி – தேவா-அப்:2660/3
காட்சி பெரிதும் அரியாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2660/4
விலங்கு அல்லேன் விலங்கு அல்லாது ஒழிந்தேன்அல்லேன் வெறுப்பனவும் மிக பெரிதும் பேச வல்லேன் – தேவா-அப்:3023/3
மேல்


பெரிய (11)

சுடர் பெரிய திரு மேனி சுண்ண வெண்நீற்றவனே என்கின்றாளால் – தேவா-அப்:61/2
மடல் பெரிய ஆலின் கீழ் அறம் நால்வர்க்கு அன்று உரைத்தான் என்கின்றாளால் – தேவா-அப்:61/3
பெரிய செந்நெல் பிரம்புரி கெந்தசாலி திப்பியம் என்று இவை அகத்து – தேவா-அப்:204/3
பிடி மத வாரணம் பேணும் துரகம் நிற்க பெரிய
இடி குரல் வெள் எருது ஏறும் இது என்னை-கொல் எம் இறையே – தேவா-அப்:993/3,4
பெரிய வான் புரம் சுட்ட சுவண்டரோ – தேவா-அப்:1166/2
பெரிய வான் கதவம் பிரிவிக்கவே – தேவா-அப்:1166/4
பிறை ஆர்ந்த சடை முடி மேல் பாம்பு கங்கை பிணக்கம் தீர்த்து உடன் வைத்தார் பெரிய நஞ்சு – தேவா-அப்:2203/2
பிண்டத்தில் புறந்தது ஒரு பொருளை மற்றை பிண்டத்தை படைத்தானை பெரிய வேத – தேவா-அப்:2352/1
பேரும் பெரிய இலங்கை_வேந்தன் பெரிய முடி பத்து இறுத்தாய் நீயே – தேவா-அப்:2475/2
பேரும் பெரிய இலங்கை_வேந்தன் பெரிய முடி பத்து இறுத்தாய் நீயே – தேவா-அப்:2475/2
விலை பெரிய வெண் நீற்று மேனியானை மெய்யடியார் வேண்டுவதே வேண்டுவானை – தேவா-அப்:2882/3
மேல்


பெரியது (4)

பீலி கை இடுக்கி நாளும் பெரியது ஓர் தவம் என்று எண்ணி – தேவா-அப்:385/1
பிண்டமே சுமந்து நாளம் பெரியது ஓர் அவாவில் பட்டேன் – தேவா-அப்:751/2
மிக தான் பெரியது ஓர் வேங்கை அதள் கொண்டு மெய் மருவி – தேவா-அப்:809/1
பெரியது ஓர் மலை வில்லா எய்தார் போலும் பேர் நந்தி என்னும் பெயரார் போலும் – தேவா-அப்:2365/3
மேல்


பெரியர் (2)

பெரியர் காணும் பெருமான் அடிகளே – தேவா-அப்:1453/4
பிச்சை கொள நுகர்வர் பெரியர் சால பிறங்கு சடைமுடியர் பேணும் தொண்டர் – தேவா-அப்:2260/3
மேல்


பெரியவன் (3)

பெரியவன் சிராப்பள்ளியை பேணுவார் – தேவா-அப்:1911/3
பெண் அவன் காண் ஆண் அவன் காண் பெரியோர்க்கு என்றும் பெரியவன் காண் அரி அவன் காண் அயன் ஆனான் காண் – தேவா-அப்:2570/1
பேரவன் காண் பேர் ஆயிரங்கள் ஏத்தும் பெரியவன் காண் அரியவன் காண் பெற்றம் ஊர்ந்த – தேவா-அப்:2739/3
மேல்


பெரியன (1)

பெரியன புரங்கள் மூன்றும் பேர் அழல் உண்ண வைத்தார் – தேவா-அப்:297/2
மேல்


பெரியனவும் (1)

பெற்றானை பிஞ்ஞகனை பிறவாதானை பெரியனவும் அரியனவும் எல்லாம் முன்னே – தேவா-அப்:2883/2
மேல்


பெரியனார் (1)

பெரியனார் தம் பிறப்பொடு சாதலை – தேவா-அப்:1191/3
மேல்


பெரியாய் (3)

பெண் ஆண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே பெரியார்கட்கு எல்லாம் பெரியாய் நீயே – தேவா-அப்:2469/1
பெண் அல்லை ஆண் அல்லை பேடும் அல்லை பிறிது அல்லை ஆனாயும் பெரியாய் நீயே – தேவா-அப்:2541/3
ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி ஆகாய வண்ண முடியாய் போற்றி – தேவா-அப்:2659/2
மேல்


பெரியார் (5)

பெரியான் பெரியார் பிறப்பு அறுப்பான் என்றும் தன் பிறப்பை – தேவா-அப்:803/3
என் நிறம் என்று அமரர் பெரியார் இன்னம் தாம் அறியார் – தேவா-அப்:850/2
பிணி உடைய அடியாரை தீர்ப்பார் போலும் பேசுவார்க்கு எல்லாம் பெரியார் போலும் – தேவா-அப்:2366/2
சினம் திருத்தும் சிறு பெரியார் குண்டர்-தங்கள் செது மதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடி – தேவா-அப்:2491/1
தானத்தின் முப்பொழுதும் தாமே போலும் தம்மின் பிறர் பெரியார் இல்லை போலும் – தேவா-அப்:2966/3
மேல்


பெரியார்கட்கு (1)

பெண் ஆண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே பெரியார்கட்கு எல்லாம் பெரியாய் நீயே – தேவா-அப்:2469/1
மேல்


பெரியான் (2)

பெரியான் பெரியார் பிறப்பு அறுப்பான் என்றும் தன் பிறப்பை – தேவா-அப்:803/3
பிறந்தார்க்கும் என்றும் பிறவாதார்க்கும் பெரியான் தன் பெருமையே பேச நின்று – தேவா-அப்:2102/2
மேல்


பெரியானை (2)

பெரியானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2086/4
பிறப்பானை பிறவாத பெருமையானை பெரியானை அரியானை பெண் ஆண் ஆய – தேவா-அப்:2886/1
மேல்


பெரியையாய் (1)

திறம் பலவும் வழி காட்டி செய்கை காட்டி சிறியையாய் பெரியையாய் நின்ற நாளோ – தேவா-அப்:2430/1
மேல்


பெரியோய் (3)

பிழைத்தது எலாம் பொறுத்து அருள்செய் பெரியோய் என்றும் பிஞ்ஞகனே மை ஞவிலும் கண்டா என்றும் – தேவா-அப்:2399/2
பிரமன்-தன் சிரம் அரிந்த பெரியோய் போற்றி பெண் உருவோடு ஆண் உருவாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2414/1
பிழை பொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்தன் கடன் அன்றே பேர் அருள் உன்-பாலது அன்றே – தேவா-அப்:2560/3
மேல்


பெரியோர் (1)

பரிவினால் பெரியோர் ஏத்தும் பெருவேளூர் பற்றினானை – தேவா-அப்:586/3
மேல்


பெரியோர்க்கு (1)

பெண் அவன் காண் ஆண் அவன் காண் பெரியோர்க்கு என்றும் பெரியவன் காண் அரி அவன் காண் அயன் ஆனான் காண் – தேவா-அப்:2570/1
மேல்


பெரியோன் (1)

பிரமனும் மாலும் மேலை முடியோடு பாதம் அறியாமை நின்ற பெரியோன்
பர முதல் ஆய தேவர் சிவனாயமூர்த்தி அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:135/3,4
மேல்


பெரு (28)

பெரு வரை சூழ் வையகத்தார் பேர் நந்தி என்று ஏத்தும் – தேவா-அப்:133/3
பெரு முழைவாய்தல் பற்றி கிடந்து நான் பிதற்றுகின்றேன் – தேவா-அப்:435/3
தோள் பெரு வலியினாலே தொலைப்பன் யான் மலையை என்று – தேவா-அப்:570/2
பெரு மருந்து ஆகி நின்றாய் பேர் அமுதின் சுவையாய் – தேவா-அப்:601/2
பெரு வினை பிறப்பு வீடாய் நின்ற எம்பெருமான் மிக்க – தேவா-அப்:611/2
பெண் அகத்தர் ஐயர் காற்றில் பெரு வலி இருவர் ஆகி – தேவா-அப்:624/2
பெரு வரை எடுத்த திண் தோள் பிறங்கிய முடிகள் இற்று – தேவா-அப்:715/2
பெரு நட்டம் ஆடியை வானவர்_கோன் என்று வாழ்த்துவனே – தேவா-அப்:780/4
அலையும் பெரு வெள்ளத்து அன்று மிதந்த இ தோணிபுரம் – தேவா-அப்:795/2
பெருமான் அவன் என்னை ஆள்உடையான் இ பெரு நிலத்தே – தேவா-அப்:1014/4
பெரு வரை குன்றம் பிளிற பிளந்து வேய்த்தோளி அஞ்ச – தேவா-அப்:1034/3
பெரு வெண் காட்டு இறைவன் உறையும் இடம் – தேவா-அப்:1561/3
தங்கு அலப்பிய தக்கன் பெரு வேள்வி – தேவா-அப்:1800/1
பிண்டத்தின் இயற்கைக்கு ஓர் பெற்றியானே பெரு நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆகி – தேவா-அப்:2120/3
உங்கள் பெரு மா நிலத்தின் எல்லை எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே யானேல் – தேவா-அப்:2359/2
சலம் கொள் சடை முடி உடைய தலைவா என்றும் தக்கன் செய் பெரு வேள்வி தகர்த்தாய் என்றும் – தேவா-அப்:2404/2
தாங்கிய சீர் தலை ஆன வானோர் செய்த தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்த நாளோ – தேவா-அப்:2428/2
தரித்தானை தண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்தான்-தன்னை – தேவா-அப்:2553/1
பிரித்தானை பிறை தவழ் செஞ்சடையினானை பெரு வலியால் மலை எடுத்த அரக்கன்-தன்னை – தேவா-அப்:2553/2
சடை ஏறு புனல் வைத்த சதுரனாரும் தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்திட்டாரும் – தேவா-அப்:2679/1
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் ஆகி தாமரை ஆர் நான்முகனும் தானே ஆகி – தேவா-அப்:2770/1
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் கண்டாய் சதாசிவன் காண் சலந்தரனை பிளந்தான் கண்டாய் – தேவா-அப்:2813/2
தக்கனது பெரு வேள்வி தகர்த்தார் போலும் சந்திரனை கலை கவர்ந்து தரித்தார் போலும் – தேவா-அப்:2832/1
பெரு மருவு பேர் உலகில் பிணிகள் தீர்க்கும் பெரும்பற்றத்தண்புலியூர் மன்று ஆடீ காண் – தேவா-அப்:2844/2
அரும் தவத்தின் பெரு வலியால் அறிவது அன்றி அடல் அரக்கன் தட வரையை எடுத்தான் திண் தோள் – தேவா-அப்:2992/1
பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம் உருவும் தாமே ஆகி – தேவா-அப்:3005/3
பேர் ஆகி பேருக்கு ஓர் பெருமை ஆகி பெரு மதில்கள் மூன்றினையும் எய்தான் ஆகி – தேவா-அப்:3013/2
பெரு நோய்கள் மிக நலிய பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழில் ஆகி இறக்கின்றாரே – தேவா-அப்:3020/4
மேல்


பெருக்க (2)

பெருக்க கோவணம் பீறி உடுத்திலர் – தேவா-அப்:2009/2
பெருக்க செய்த பிரான் பெருந்தன்மையை – தேவா-அப்:2085/2
மேல்


பெருக்கம் (2)

ஆவியாய் அவியும் ஆகி அருக்கமாய் பெருக்கம் ஆகி – தேவா-அப்:320/1
சுருக்கமொடு பெருக்கம் நிலைநிற்றல் பற்றி துப்பறை என்று அனைவீர் இ உலகை ஓடி – தேவா-அப்:2363/1
மேல்


பெருக்கி (2)

வேம்பினை பேசி விடக்கினை ஓம்பி வினை பெருக்கி
தூம்பினை தூர்த்து அங்கு ஓர் சுற்றம் துணை என்று இருத்திர் தொண்டீர் – தேவா-அப்:986/1,2
நேசத்தை நீ பெருக்கி நேர் நின்று உள்கி நித்தலும் சென்று அடி மேல் வீழ்ந்து நின்று – தேவா-அப்:2403/3
மேல்


பெருக்கினவா (1)

பெருக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:876/4
மேல்


பெருக்கு (1)

பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும் பெரும் கோயில் எழுபதினோடு எட்டும் மற்றும் – தேவா-அப்:2801/1
மேல்


பெருக்குவர் (1)

எரி பெருக்குவர் அ எரி ஈசனது – தேவா-அப்:2082/1
மேல்


பெருக்குவார் (1)

பெருக்குவார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1227/4
மேல்


பெருக (2)

பேர் இடம் பெருக நின்று பிறங்கு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:223/4
பித்து பெருக பிதற்றுகின்றார் பிணி தீர்த்து அருளாய் – தேவா-அப்:1038/2
மேல்


பெருகல் (1)

பெருகல் ஆம் தவம் பேதைமை தீரல் ஆம் – தேவா-அப்:1934/1
மேல்


பெருகாமே (1)

பெருகாமே வெள்ளம் தவிர்த்தார் போலும் பிறப்பு இடும்பை சாக்காடு ஒன்று இல்லார் போலும் – தேவா-அப்:2373/2
மேல்


பெருகி (2)

நளிர் பொறி மஞ்ஞை அன்ன தளிர் போன்ற சாயலவள் தோன்று வாய்மை பெருகி
குளிர் பொறி வண்டு பாடு குழலாள் ஒருத்தி உளள் போல் குலாவி உடனே – தேவா-அப்:75/3,4
பெருகி அலைக்கின்ற ஆறே போற்றி பேரா நோய் பேர விடுப்பாய் போற்றி – தேவா-அப்:2654/1
மேல்


பெருகிட (1)

பெருகிட மற்று இதற்கு ஒர் பிதிகாரம் ஒன்றை அருளாய் பிரானே எனலும் – தேவா-அப்:134/3
மேல்


பெருகிய (1)

பெருகிய சடையினானை பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:587/3
மேல்


பெருகினானை (1)

பிறவாதும் இறவாதும் பெருகினானை பேய் பாட நடம் ஆடும் பித்தன்-தன்னை – தேவா-அப்:2824/1
மேல்


பெருகு (3)

பெருகு ஆறு அடை சடைக்கற்றையினாய் பிணி மேய்ந்து இருந்த – தேவா-அப்:1061/2
உரு நீர் வளம் பெருகு மா நிருபமும் மயிலாப்பில் மன்னினார் மன்னி ஏத்தும் – தேவா-அப்:2160/2
பெருகு நிலை குறியாளர் அறிவு-தன்னை பேணிய அந்தணர்க்கு மறைப்பொருளை பின்னும் – தேவா-அப்:2920/2
மேல்


பெருகுவித்து (1)

பெருகுவித்து என் பாவத்தை பண்டு எலாம் குண்டர்கள்-தம் சொல்லே கேட்டு – தேவா-அப்:44/1
மேல்


பெருங்காடு (1)

பித்தனை பெருங்காடு அரங்கா உடை – தேவா-அப்:1086/1
மேல்


பெருங்கோயில் (3)

செல் ஏர் கொடியன் சிவன் பெருங்கோயில் சிவபுரமும் – தேவா-அப்:953/1
தண்டலையார் தலையாலங்காட்டில் உள்ளார் தலைச்சங்கை பெருங்கோயில் தங்கினார்தாம் – தேவா-அப்:2602/2
நிலம் மலி நெய்த்தானத்தோடு எத்தானத்தும் நிலவு பெருங்கோயில் பல கண்டால் தொண்டீர் – தேவா-அப்:2796/3
மேல்


பெருத்த (1)

அரி பெருத்த வெள் ஏற்றை உடர ஏறி அப்பனார் இ பருவம் ஆரூராரே – தேவா-அப்:2347/4
மேல்


பெருத்து (1)

மிக பெருத்து உலாவ மிக்கான் நக்கு ஒரு தேர் கடாவி – தேவா-அப்:336/1
மேல்


பெருந்தகை (2)

பிரிவு இலா அமரர் கூடி பெருந்தகை பிரான் என்று ஏத்தும் – தேவா-அப்:398/3
பேயனேனையும் ஆண்ட பெருந்தகை
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய – தேவா-அப்:1913/2,3
மேல்


பெருந்தகையான் (1)

பெண்டு அணி நாயகன் பேய் உகந்து ஆடும் பெருந்தகையான்
கண் தனி நெற்றியன் காலனை காய்ந்து கடலின் விடம் – தேவா-அப்:1023/2,3
மேல்


பெருந்தகையை (2)

பெருந்தகையை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2089/4
பெருந்தகையை பெறற்கு அரிய மாணிக்கத்தை பேணி நினைந்து எழுவார்-தம் மனத்தே மன்னி – தேவா-அப்:2918/1
மேல்


பெருந்தன்மையே (1)

தேவதேவன் சிவன் பெருந்தன்மையே – தேவா-அப்:2080/4
மேல்


பெருந்தன்மையை (1)

பெருக்க செய்த பிரான் பெருந்தன்மையை
அருத்தி செய்து அறியப்பெறுகின்றிலர் – தேவா-அப்:2085/2,3
மேல்


பெருந்துறை (1)

பேரூர் பிரமபுரம் பேராவூரும் பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணும் – தேவா-அப்:2787/2
மேல்


பெருந்துறையும் (1)

குயில் ஆலந்துறை சோற்றுத்துறை பூந்துறை பெருந்துறையும் குரங்காடுதுறையினோடு – தேவா-அப்:2807/3
மேல்


பெருநீர் (1)

பெருநீர் வளர்சடையான் பேணி நின்ற பிரமபுரம் சுழியல் பெண்ணாகடம் – தேவா-அப்:2160/3
மேல்


பெரும் (62)

பெரும் புலர் காலை எழுந்து பெறு மலர் கொய்யா வருவேன் – தேவா-அப்:28/2
விழி உலாம் பெரும் தடம் கண் இரண்டு அல்ல மூன்று உளவே என்கின்றாளால் – தேவா-அப்:56/2
பெரும் தாழ் சடை முடி மேல் பிறை சூடி – தேவா-அப்:158/1
எட்டு-கொல் ஆம் அவர் ஈறு இல் பெரும் குணம் – தேவா-அப்:184/1
பேர் அமுதம் உண்டார்கள் உய்ய பெரும் கடல் நஞ்சு – தேவா-அப்:195/3
கறை பெரும் கண்டத்தானே காய் கதிர் நமனை அஞ்சி – தேவா-அப்:279/1
நிறை பெரும் கடலை கண்டேன் நீள் வரை உச்சி கண்டேன் – தேவா-அப்:279/2
பிறை பெரும் சென்னியானே பிஞ்ஞகா இவை அனைத்தும் – தேவா-அப்:279/3
பெரும் புலர் காலை மூழ்கி பித்தர்க்கு பத்தர் ஆகி – தேவா-அப்:307/1
பிழைத்த தன் தாதை தாளை பெரும் கொடு மழுவால் வீச – தேவா-அப்:478/3
தோல் பெரும் செருப்பு தொட்டு தூய வாய் கலசம் ஆட்டி – தேவா-அப்:482/2
தீ பெரும் கண்கள் செய்ய குருதி நீர் ஒழுக தன் கண் – தேவா-அப்:482/3
மெய் வலி உடையன் என்று மிக பெரும் தேரை ஊர்ந்து – தேவா-அப்:572/2
அரும் பெரும் சிலை கை வேடனாய் விறல் பார்த்தற்கு அன்று – தேவா-அப்:632/1
குவ பெரும் தட கை வேடன் கொடும் சிலை இறைச்சி பாரம் – தேவா-அப்:636/1
துவர் பெரும் செருப்பால் நீக்கி தூய வாய் கலசம் ஆட்ட – தேவா-அப்:636/2
உவ பெரும் குருதி சோர ஒரு கண்ணை இடந்து அங்கு அப்ப – தேவா-அப்:636/3
தவ பெரும் தேவு செய்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:636/4
பெரும் திரு இமவான் பெற்ற பெண்_கொடி பிரிந்த பின்னை – தேவா-அப்:707/1
பெரும்பொருள் கிளவியானை பெரும் தவ முனிவர் ஏத்தும் – தேவா-அப்:718/3
பெற்றிலேன் பெரும் தடம் கண் பேதையார்-தமக்கும் பொல்லேன் – தேவா-அப்:755/3
திரை-வாய் பெரும் கடல் முத்தம் குவிப்ப முகந்துகொண்டு – தேவா-அப்:792/1
பெடை வாய் மது உண்டு பேராது இருக்கும் பெரும் பதியே – தேவா-அப்:800/4
பெற்றுடையான் பெரும் பேச்சு உடையான் பிரியாது எனை ஆள் – தேவா-அப்:827/3
அளித்து பெரும் செல்வம் ஆக்கும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:889/4
பிறை துண்ட வார்சடையாய் பெரும் காஞ்சி எம் பிஞ்ஞகனே – தேவா-அப்:959/4
இடிவு இல் பெரும் செல்வம் எய்துவர் எய்தியும் ஊனம் இல்லா – தேவா-அப்:991/2
பெரும் தலை பத்தும் இருபது தோளும் பிதிர்ந்து அலற – தேவா-அப்:1001/3
விடையும் விடை பெரும் பாகா என் விண்ணப்பம் வெம் மழுவாள் – தேவா-அப்:1039/1
பெரும் கடல் மூடி பிரளயம் கொண்டு பிரமனும் போய் – தேவா-அப்:1056/1
பிறைக்கு அவாவி பெரும் புனல் ஆவடுதுறை – தேவா-அப்:1355/3
பித்தனை பெரும் தேவர் தொழப்படும் – தேவா-அப்:1511/1
பெரும் கை ஆகி பிளிறி வருவது ஓர் – தேவா-அப்:1534/1
பாதி ஆனான் பரந்த பெரும் படை – தேவா-அப்:1728/3
பெண்டிர் மக்கள் பெரும் துணை நல் நிதி – தேவா-அப்:1831/1
பிறப்பு மூப்பு பெரும் பசி வான் பிணி – தேவா-அப்:1841/1
பெரும் துணையை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2090/4
பெரும் பொருளை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2091/4
பெரும் பயனை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2092/4
பெரும் பித்தர் கூடி பிதற்றும் அடி பிழைத்தார் பிழைப்பு அறிய வல்ல அடி – தேவா-அப்:2142/3
செல்வ புனல் கெடில வீரட்டமும் சிற்றேமமும் பெரும் தண் குற்றாலமும் – தேவா-அப்:2149/1
நாரணன் காண் நான்முகன் காண் நால்வேதம் காண் ஞான பெரும் கடற்கு ஓர் நாவாய் அன்ன – தேவா-அப்:2163/1
நடை உடைய நல் எருது ஒன்று ஊர்வான்-தன்னை ஞான பெரும் கடலை நல்லூர் மேய – தேவா-அப்:2310/1
பெயர அவற்கு பேர் அருள்கள் செய்தான் கண்டாய் பேரும் பெரும் படையோடு ஈந்தான் கண்டாய் – தேவா-அப்:2326/3
பொய் மாய பெரும் கடலில் புலம்பாநின்ற புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள் – தேவா-அப்:2354/1
இ மாய பெரும் கடலை அரித்து தின்பீர்க்கு இல்லையே கிடந்ததுதான் யானேல் வானோர் – தேவா-அப்:2354/2
நாட்டகத்தே நடை பலவும் நவின்றார் போலும் ஞான பெரும் கடற்கு ஓர் நாதர் போலும் – தேவா-அப்:2367/2
நன்றாக நடை பலவும் நவின்றார் போலும் ஞான பெரும் கடற்கு ஓர் நாதர் போலும் – தேவா-அப்:2374/1
அலை அடுத்த பெரும் கடல் நஞ்சு அமுதா உண்டு அமரர்கள்-தம் தலை காத்த ஐயர் செம்பொன் – தேவா-அப்:2486/1
நினைத்த பெரும் கருணையன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2507/4
நம்பனை நால் வேதம் கரை கண்டானை ஞான பெரும் கடலை நன்மை-தன்னை – தேவா-அப்:2543/1
பெண்ணாகடத்து பெரும் தூங்கானைமாடத்தார் கூடத்தார் பேராவூரார் – தேவா-அப்:2596/3
பெரும்புலியூர் விரும்பினார் பெரும் பாழியார் பெரும்பற்றப்புலியூர் மூலட்டானத்தார் – தேவா-அப்:2599/1
பெரும் தவத்து எம் பிஞ்ஞகன் காண் பிறை_சூடி காண் பேதையேன் வாதை உறு பிணியை தீர்க்கும் – தேவா-அப்:2740/1
பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும் பெரும் கோயில் எழுபதினோடு எட்டும் மற்றும் – தேவா-அப்:2801/1
அக்கு அரும்பு பெரும் புன்னை நெருங்கு சோலை ஆரூருக்கு அதிபதி காண் அம் தண் தென்றல் – தேவா-அப்:2847/3
விளைத்த பெரும் பத்தி கூர நின்று மெய் அடியார்-தம்மை விரும்ப கண்டேன் – தேவா-அப்:2853/1
நிறை பெரும் தோள் இருபதும் பொன் முடிகள் பத்தும் நிலம் சேர விரல் வைத்த நிமலர் போலும் – தேவா-அப்:2907/2
ஆடினார் பெரும் கூத்து காளி காண அரு மறையோடு ஆறு அங்கம் ஆய்ந்துகொண்டு – தேவா-அப்:2912/3
நல் தவன் காண் அடி அடைந்த மாணிக்கு ஆக நணுகியது ஓர் பெரும் கூற்றை சேவடியினால் – தேவா-அப்:2933/3
அம்பர் நகர் பெரும் கோயில் அமர்கின்றான் காண் அயவந்தி உள்ளான் காண் ஐயாறன் காண் – தேவா-அப்:2948/3
பெண் அவனை ஆண் அவனை பித்தன்-தன்னை பிணம் இடுகாடு உடையானை பெரும் தக்கோனை – தேவா-அப்:2976/2
மேல்


பெரும்பற்றத்தண்புலியூர் (2)

பெண்ணானை ஆணானை பேடியானை பெரும்பற்றத்தண்புலியூர் பேணினானை – தேவா-அப்:2307/2
பெரு மருவு பேர் உலகில் பிணிகள் தீர்க்கும் பெரும்பற்றத்தண்புலியூர் மன்று ஆடீ காண் – தேவா-அப்:2844/2
மேல்


பெரும்பற்றப்புலியூர் (2)

பெரும்பற்றப்புலியூர் எம்பிரானையே – தேவா-அப்:1072/4
பெரும்புலியூர் விரும்பினார் பெரும் பாழியார் பெரும்பற்றப்புலியூர் மூலட்டானத்தார் – தேவா-அப்:2599/1
மேல்


பெரும்பற்றப்புலியூரானை (10)

பெரியானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2086/4
பெற்றானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2087/4
பெருமானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2088/4
பெருந்தகையை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2089/4
பெரும் துணையை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2090/4
பெரும் பொருளை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2091/4
பெரும் பயனை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2092/4
பேரானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2093/4
பெற்றார்கள் பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2094/4
பேர் ஒளியை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2095/4
மேல்


பெரும்பற்றப்புலியூரும் (1)

பிறை ஊரும் சடை முடி எம்பெருமான் ஆரூர் பெரும்பற்றப்புலியூரும் பேராவூரும் – தேவா-அப்:2800/1
மேல்


பெரும்பாலன் (1)

பெரும்பாலன் ஆகி ஒர் பிஞ்ஞக வேடத்தன் என்கின்றாளால் – தேவா-அப்:55/3
மேல்


பெரும்புலியூர் (2)

பெரும்புலியூர் விரும்பினார் பெரும் பாழியார் பெரும்பற்றப்புலியூர் மூலட்டானத்தார் – தேவா-அப்:2599/1
பெண்ணை அருள் துறை தண் பெண்ணாகடம் பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூரும் – தேவா-அப்:2791/3
மேல்


பெரும்பொருள் (3)

பெரும்பொருள் கிளவியானை பெரும் தவ முனிவர் ஏத்தும் – தேவா-அப்:718/3
விண்ணிடை மின் ஒப்பானை மெய் பெரும்பொருள் ஒப்பானை – தேவா-அப்:724/1
அரிய பெரும்பொருள் ஆகி நின்றான்-தன்னை அலை கடலில் ஆலாலம் அமுதுசெய்த – தேவா-அப்:2926/1
மேல்


பெரும்போது (1)

அரும்பினில் பெரும்போது கொண்டு ஆய் மலர் – தேவா-அப்:1990/3
மேல்


பெருமாள் (1)

பிணம் கொள் காடர் பெருமாள் அடிகளே – தேவா-அப்:1454/4
மேல்


பெருமாற்கு (1)

எம்தம் பெருமாற்கு இடம் ஆவது இடைச்சுரமும் எந்தை தலைச்சங்காடும் – தேவா-அப்:2158/3
மேல்


பெருமான் (32)

பேரானே பிறை சூடி பிணி தீர்க்கும் பெருமான் என்று – தேவா-அப்:129/3
உடன் வழிபாடு செய்த திருமாலை எந்தை பெருமான் உகந்து மிகவும் – தேவா-அப்:143/2
மொய் மலர் வேய்ந்த விரி சடை கற்றை விண்ணோர் பெருமான்
மை மலர் நீல நிறம் கருங்கண்ணி ஓர்பால் மகிழ்ந்தான் – தேவா-அப்:857/2,3
எங்கள் பெருமான் ஓர் விண்ணப்பம் உண்டு அது கேட்டு அருளீர் – தேவா-அப்:1000/2
பெருமான் அவன் என்னை ஆள்உடையான் இ பெரு நிலத்தே – தேவா-அப்:1014/4
பிழையும் தீர்ப்பர் பெருமான் அடிகளே – தேவா-அப்:1448/4
பின்னை என்னார் பெருமான் அடிகளே – தேவா-அப்:1449/4
மாலை மார்பர் பெருமான் அடிகளே – தேவா-அப்:1450/4
பிறவி தீர்ப்பர் பெருமான் அடிகளே – தேவா-அப்:1451/4
பித்தர் காணும் பெருமான் அடிகளே – தேவா-அப்:1452/4
பெரியர் காணும் பெருமான் அடிகளே – தேவா-அப்:1453/4
பிரமன் மாற்கும் பெருமான் அடிகளே – தேவா-அப்:1455/4
மாடம் சூழ் மருகல் பெருமான் திரு – தேவா-அப்:1935/3
மனத்தினால் மருகல் பெருமான் திறம் – தேவா-அப்:1936/3
மன்னு தென் மருகல் பெருமான் திறம் – தேவா-அப்:1938/3
மங்கைதான் மருகல் பெருமான் வரும் – தேவா-அப்:1939/2
மாடம் நீள் மருகல் பெருமான் வரில் – தேவா-அப்:1941/3
வந்திடாய் மருகல் பெருமான் என்று – தேவா-அப்:1942/3
ஆதியான் மருகல் பெருமான் திறம் – தேவா-அப்:1943/3
பிறையும் பாம்பும் உடை பெருமான் தமர் – தேவா-அப்:1977/2
செறி கெடில நாடர் பெருமான் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2146/4
மறை உடைய வானோர் பெருமான் தான் காண் மறைக்காட்டு உறையும் மணி_கண்டன் காண் – தேவா-அப்:2170/3
எங்கள் பெருமான் காண் என் இடர்கள் போக அருள்செய்யும் இறைவன் காண் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2390/3
உலந்தார் தலை கலனா கொண்டான் கண்டாய் உம்பரார்-தங்கள் பெருமான் கண்டாய் – தேவா-அப்:2480/3
மீன் அகம் சேர் வெள்ள நீர் விதியால் சூடும் வேந்தனே விண்ணவர்-தம் பெருமான் மேக – தேவா-அப்:2489/3
இருந்து ஆங்கு இடர்ப்பட நீ வேண்டா நெஞ்சே இமையவர்-தம் பெருமான் அன்று உமையாள் அஞ்ச – தேவா-அப்:2511/2
வானவனாய் வண்மை மனத்தினானே மா மணி சேர் வானோர் பெருமான் நீயே – தேவா-அப்:2529/1
மின் அளந்த மேல் முகட்டின் மேல் உற்றான் காண் விண்ணவர்-தம் பெருமான் காண் மேவில் எங்கும் – தேவா-அப்:2580/1
மேல் வைத்த வானோர் பெருமான் போற்றி மேல் ஆடு புரம் மூன்றும் எய்தாய் போற்றி – தேவா-அப்:2656/1
பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும் பெரும் கோயில் எழுபதினோடு எட்டும் மற்றும் – தேவா-அப்:2801/1
செந்தாமரை போது அணிந்தான் கண்டாய் சிவன் கண்டாய் தேவர் பெருமான் கண்டாய் – தேவா-அப்:2811/1
இரை உண்டு அறியாத பாம்பும் உண்டு இமையோர் பெருமான் இலாதது என்னே – தேவா-அப்:3044/4
மேல்


பெருமான்-தன்னை (6)

எறி கெடிலநாடர் பெருமான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2114/4
இறையானை எந்தை பெருமான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2115/4
வல்லையே இடர் தீர்த்து இங்கு அடிமைகொண்ட வானவர்க்கும் தானவர்க்கும் பெருமான்-தன்னை
கொல்லை வாய் குருந்து ஒசித்து குழலும் ஊதும் கோவலனும் நான்முகனும் கூடி எங்கும் – தேவா-அப்:2116/2,3
என்னானை எந்தை பெருமான்-தன்னை இரு நிலமும் அண்டமுமாய் செக்கர் வானே – தேவா-அப்:2544/3
ஏரானை இமையவர்-தம் பெருமான்-தன்னை இயல்பு ஆகி உலகு எலாம் நிறைந்து மிக்க – தேவா-அப்:2748/3
தேனவனை தித்திக்கும் பெருமான்-தன்னை தீது இலா மறையவனை தேவர் போற்றும் – தேவா-அப்:2980/3
மேல்


பெருமான்-தனை (1)

பிரட்டரை பிரித்த பெருமான்-தனை
அருள் திறத்து அணி ஆறை வடதளி – தேவா-அப்:1658/2,3
மேல்


பெருமானாய் (1)

தம் பெருமானாய் நின்ற அரனை காண்பேன் தடைப்படுவேனா கருதி தருக்கேன்-மினே – தேவா-அப்:2355/4
மேல்


பெருமானார் (2)

வேண்டாவே நெஞ்சமே விளம்ப கேள் நீ விண்ணவர்-தம் பெருமானார் மண்ணில் என்னை – தேவா-அப்:2504/2
உண்ணாழிகையார் உமையாளோடும் இமையோர் பெருமானார் ஒற்றியூரார் – தேவா-அப்:2596/2
மேல்


பெருமானுக்கு (2)

மாதுதான் மருகல் பெருமானுக்கு
தூது சொல்ல விடத்தான் தொடங்குமே – தேவா-அப்:1937/3,4
மாட்சி ஆர் மருகல் பெருமானுக்கு
தாட்சி சால உண்டாகும் என் தையலே – தேவா-அப்:1940/3,4
மேல்


பெருமானே (4)

எண்ணார் புரம் எரித்த எந்தை பெருமானே என்கின்றாளால் – தேவா-அப்:57/2
ஆரூரா ஆரூரா என்கின்றார்கள் அமரர்கள்-தம் பெருமானே எங்கு உற்றாயே – தேவா-அப்:2339/4
ஆரூரா ஆரூரா என்கின்றார்கள் அமரர்கள்-தம் பெருமானே ஆரூராயே – தேவா-அப்:2345/4
உழை உரித்த மான் உரி தோல் ஆடையானே உமையவள்-தம் பெருமானே இமையோர் ஏறே – தேவா-அப்:2560/1
மேல்


பெருமானை (23)

விரவாடும் பெருமானை விடை ஏறும் வித்தகனை – தேவா-அப்:62/2
இரவு ஆடும் பெருமானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:62/4
ஏனோர்க்கும் பெருமானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:63/4
ஏறு ஏறும் பெருமானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:66/4
மேலை வானோர் பெருமானை விருப்பால் விழுங்கியிட்டேனே – தேவா-அப்:152/4
பெருமானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2088/4
அரும் தவர்கள் தொழுது ஏத்தும் அப்பன்-தன்னை அமரர்கள்-தம் பெருமானை அரனை மூவா – தேவா-அப்:2089/1
எந்தை பெருமானை ஈசன்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2109/4
விண்ணோர் பெருமானை வீரட்டனை வெண் நீறு மெய்க்கு அணிந்த மேனியானை – தேவா-அப்:2307/1
அடையார்-தம் புரம் மூன்றும் எரிசெய்தானை அமரர்கள்-தம் பெருமானை அரனை ஆரூர் – தேவா-அப்:2360/3
இந்து நுழை பொழில் ஆரூர் மூலட்டானம் இடம்கொண்ட பெருமானை இமையோர் போற்றும் – தேவா-அப்:2418/3
இருள் இயன்ற பொழில் ஆரூர் மூலட்டானத்து இனிது அமரும் பெருமானை இமையோர் ஏத்த – தேவா-அப்:2421/3
சேல் உகளும் வயல் ஆரூர் மூலட்டானம் சேர்ந்து இருந்த பெருமானை பவளம் ஈன்ற – தேவா-அப்:2422/3
வித்தானை வேண்டிற்று ஒன்று ஈவான்-தன்னை விண்ணவர்-தம் பெருமானை வினைகள் போக – தேவா-அப்:2520/2
இருந்தானை இறப்பிலியை பிறப்பிலானை இமையவர்-தம் பெருமானை உமையாள் அஞ்ச – தேவா-அப்:2716/2
எய்தானை செய் தவத்தின் மிக்கான்-தன்னை ஏறு அமரும் பெருமானை இடம் மான் ஏந்து – தேவா-அப்:2719/2
சீர்த்தானை செம் தழல் போல் உருவினானை தேவர்கள்-தம் பெருமானை திறம் உன்னாதே – தேவா-அப்:2724/2
சீறாத பெருமானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2884/4
வானவனை வலிவலமும் மறைக்காட்டானை மதி சூடும் பெருமானை மறையோன்-தன்னை – தேவா-அப்:2980/1
ஏனவனை இமவான்-தன் பேதையோடும் இனிது இருந்த பெருமானை ஏத்துவார்க்கு – தேவா-அப்:2980/2
உமிழும் அம் பொன் குன்றத்தை முத்தின் தூணை உமையவள்-தம் பெருமானை இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2986/3
பூவினின் மேல் நான்முகனும் மாலும் போற்ற புணர்வு அரிய பெருமானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2993/3
ஈசனை எ உலகினுக்கும் இறைவன்-தன்னை இமையவர்-தம் பெருமானை எரியாய் மிக்க – தேவா-அப்:3054/1
மேல்


பெருமை (15)

பிணங்கு கொப்பளித்த சென்னி சடை உடை பெருமை அண்ணல் – தேவா-அப்:244/2
பிணங்கு உடை சடையில் வைத்த பிறை உடை பெருமை அண்ணல் – தேவா-அப்:515/2
பெருமை நன்று உடையது இல்லை என்று நான் பேசமாட்டேன் – தேவா-அப்:551/1
அஞ்சல் என்று ஆண்டுகொண்டாய் அதுவும் நின் பெருமை அன்றே – தேவா-அப்:740/2
கற்றார் பரவ பெருமை உடையன காதல் செய்யகிற்பார்-தமக்கு – தேவா-அப்:895/2
நின்னை ஒப்பார் நின்னை காணும் படித்தன்று நின் பெருமை
பொன்னை ஒப்பாரித்து அழலை வளாவி செம் மானம் செற்று – தேவா-அப்:1059/2,3
பயில்வாரும் பெருமை பெறும் பாலரே – தேவா-அப்:1778/4
பேர் ஆர் பெருமை கொடுத்தான்-தன்னை பெண் இரண்டும் ஆணுமாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2384/2
ஆராவமுதம் ஆனார்தாமே அளவு இல் பெருமை உடையார்தாமே – தேவா-அப்:2449/2
ஆய்ந்து மலர் தூவ நின்றார்தாமே அளவு இல் பெருமை உடையார்தாமே – தேவா-அப்:2451/2
ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய் நீயே அளவு இல் பெருமை உடையாய் நீயே – தேவா-அப்:2472/1
பித்தர்தாம் போல் அங்கு ஓர் பெருமை பேசி பேதையரை அச்சுறுத்தி பெயர கண்டு – தேவா-அப்:2537/2
இலங்கை_தலைவன் சிரங்கள் பத்தும் இறுத்து அவனுக்கு ஈந்த பெருமை கண்டேன் – தேவா-அப்:2859/3
ஆ உற்ற ஐந்தும் உகந்தார் தாமே அளவு இல் பெருமை உடையார் தாமே – தேவா-அப்:2862/1
பேர் ஆகி பேருக்கு ஓர் பெருமை ஆகி பெரு மதில்கள் மூன்றினையும் எய்தான் ஆகி – தேவா-அப்:3013/2
மேல்


பெருமை-தனை (1)

உண்டானை உமிழ்ந்தானை உடையான்-தன்னை ஒருவரும் தன் பெருமை-தனை அறிய ஒண்ணா – தேவா-அப்:2692/2
மேல்


பெருமைக்கே (1)

தக்கது அன்று தமது பெருமைக்கே – தேவா-அப்:1518/4
மேல்


பெருமையன் (1)

பிரமன் மால் அறியாத பெருமையன்
தருமம் ஆகிய தத்துவன் எம்பிரான் – தேவா-அப்:1876/1,2
மேல்


பெருமையாய் (1)

புகழும் பெருமையாய் நீயே என்றும் பூம் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2499/1
மேல்


பெருமையாலே (1)

தவ்வலி ஒன்றன் ஆகி தனது ஒரு பெருமையாலே
மெய் வலி உடையன் என்று மிக பெரும் தேரை ஊர்ந்து – தேவா-அப்:572/1,2
மேல்


பெருமையான் (2)

பெற்றம் ஏறு உகந்து ஏறும் பெருமையான்
மற்றையாரொடு வானவரும் தொழ – தேவா-அப்:1309/2,3
ஆதே ஏயும் அளவு இல் பெருமையான்
மா தேவு ஆகிய வாய்மூர் மருவினார் – தேவா-அப்:1574/2,3
மேல்


பெருமையானே (3)

ஞாலம் ஆம் பெருமையானே நளிர் இளம் திங்கள் சூடும் – தேவா-அப்:491/3
அம்பனே அளவு இலா பெருமையானே அடியார்கட்கு ஆரமுதே ஆன் ஏறு ஏறும் – தேவா-அப்:2527/3
ஆர்ந்தவனே உலகு எலாம் நீயே ஆகி அமைந்தவனே அளவு இலா பெருமையானே
கூர்ந்தவனே குற்றாலம் மேய கூத்தா கொடு மூ இலையது ஓர் சூலம் ஏந்தி – தேவா-அப்:2528/1,2
மேல்


பெருமையானை (2)

உள்குவார் உள்ளத்தானை உணர்வு எனும் பெருமையானை
உள்கினேன் நானும் காண்பான் உருகினேன் ஊறிஊறி – தேவா-அப்:731/1,2
பிறப்பானை பிறவாத பெருமையானை பெரியானை அரியானை பெண் ஆண் ஆய – தேவா-அப்:2886/1
மேல்


பெருமையும் (1)

நிலையும் பெருமையும் நீதியும் சால அழகு உடைத்தாய் – தேவா-அப்:795/1
மேல்


பெருமையுமாய் (1)

அற்பமொடு பெருமையுமாய் அருமை ஆகி அன்புடையார்க்கு எளிமையதாய் அளக்கல் ஆகா – தேவா-அப்:3053/2
மேல்


பெருமையே (1)

பிறந்தார்க்கும் என்றும் பிறவாதார்க்கும் பெரியான் தன் பெருமையே பேச நின்று – தேவா-அப்:2102/2
மேல்


பெருமையை (1)

பெற்றமே உகந்து அங்கு ஏறும் பெருமையை உடையர் போலும் – தேவா-அப்:667/3
மேல்


பெருவிரல் (1)

பெருவிரல் இறைதான் ஊன்ற பிறை எயிறு இலங்க அங்காந்து – தேவா-அப்:735/1
மேல்


பெருவிரல்-அதனை (1)

பேர்த்தலும் பேதை அஞ்ச பெருவிரல்-அதனை ஊன்றி – தேவா-அப்:277/2
மேல்


பெருவினை (1)

பேணி நின்ற பெருவினை போகுமே – தேவா-அப்:1118/4
மேல்


பெருவேளூர் (12)

பெருவேளூர் எம் பிறப்பிலியை பேணுவார்கள் பிரிவு அரிய – தேவா-அப்:150/3
பிறை அணி சடையினானை பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:578/3
பேதனாய் தோன்றினானை பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:579/3
பிறவியை மாற்றுவானை பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:580/3
பிஞ்ஞகன் தன்னை அம் தண் பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:581/3
பேடை சேர் புறவு நீங்கா பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:582/3
பிச்சை சேர்ந்து உழல்வினானை பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:583/3
பித்தனை பிறரும் ஏத்த பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:584/3
பிண்டமே ஆயினானை பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:585/3
பரிவினால் பெரியோர் ஏத்தும் பெருவேளூர் பற்றினானை – தேவா-அப்:586/3
பெருகிய சடையினானை பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:587/3
இல் ஆர்ந்த பெருவேளூர் தளியே பேணி இரா பட்டீச்சுரம் கடந்து மணக்கால் புக்கு – தேவா-அப்:2346/3
மேல்


பெருவேளூரும் (1)

பெண்ணை அருள் துறை தண் பெண்ணாகடம் பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூரும்
கண்ணை களர் காறை கழிப்பாலையும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2791/3,4
மேல்


பெற்ற (7)

எண் அகத்து இல்லைஅல்லர் உளர்அல்லர் இமவான் பெற்ற
பெண் அகத்தர் ஐயர் காற்றில் பெரு வலி இருவர் ஆகி – தேவா-அப்:624/1,2
பெரும் திரு இமவான் பெற்ற பெண்_கொடி பிரிந்த பின்னை – தேவா-அப்:707/1
விளக்கினார் பெற்ற இன்பம் மெழுக்கினால் பதிற்றி ஆகும் – தேவா-அப்:748/1
பாடி பெற்ற பரிசில் பழம் காசு – தேவா-அப்:1575/1
பெற்ற மக்களும் பேணல் ஒழிந்தனர் – தேவா-அப்:1771/2
வாயிலானை மனோன்மணியை பெற்ற
தாய்இலானை தழுவும் என் ஆவியே – தேவா-அப்:1964/3,4
சேடு ஏறு திரு நுதல் மேல் நாட்டம் வைத்தார் சிலை வைத்தார் மலை பெற்ற மகளை வைத்தார் – தேவா-அப்:2224/3
மேல்


பெற்றது (2)

பெற்றது ஓர் உபாயம்-தன்னால் பிரானையே பிதற்று-மின்கள் – தேவா-அப்:413/2
பின்னை நான் பெரிதும் அருள் பெற்றது
அன்னம் ஆர் வயல் கோழம்பத்துள் அமர் – தேவா-அப்:1717/2,3
மேல்


பெற்றதேல் (1)

பெற்றதேல் பெரிதும் துன்பம் பேதையேன் பிழைப்பினாலே – தேவா-அப்:505/2
மேல்


பெற்றம் (11)

பிணிந்தார் பொடிகொண்டு மெய் பூச வல்லீர் பெற்றம் ஏற்று உகந்தீர் சுற்றும் வெண் தலை கொண்டு – தேவா-அப்:3/3
பிணி விடா ஆக்கை பெற்றேன் பெற்றம் ஒன்று ஏறுவானே – தேவா-அப்:267/1
பெற்றம் ஏறுவர் பெய் பலிக்கு ஏன்று அவர் – தேவா-அப்:1113/1
பெற்றம் ஊர்தி என்றான் எங்கள் பேதையே – தேவா-அப்:1244/4
பெற்றம் ஏறு உகந்து ஏறும் பெருமையான் – தேவா-அப்:1309/2
பெற்றம் ஏறில் என் பேய் படை ஆகில் என் – தேவா-அப்:1403/1
பெற்றம் ஏறும் பிறங்கு சடையினர் – தேவா-அப்:1602/2
பெற்றம் ஏறும் பிரான் அடி சேர்-மினே – தேவா-அப்:1904/4
நெறி அதனை விரித்து உரைத்த நேர்மை தோன்றும் நெற்றி மேல் கண் தோன்றும் பெற்றம் தோன்றும் – தேவா-அப்:2271/2
பேரவன் காண் பேர் ஆயிரங்கள் ஏத்தும் பெரியவன் காண் அரியவன் காண் பெற்றம் ஊர்ந்த – தேவா-அப்:2739/3
நீல நிறமுண்ட கண்டம் கண்டேன் நெற்றி நுதல் கண்டேன் பெற்றம் கண்டேன் – தேவா-அப்:2851/2
மேல்


பெற்றமே (1)

பெற்றமே உகந்து அங்கு ஏறும் பெருமையை உடையர் போலும் – தேவா-அப்:667/3
மேல்


பெற்றவர் (1)

பெற்றவர் பிறந்தார் மற்று பிறந்தவர் பிறந்திலாரே – தேவா-அப்:695/4
மேல்


பெற்றவள் (1)

நன் கடம்பனை பெற்றவள் பங்கினன் – தேவா-அப்:1262/1
மேல்


பெற்றனர்தாமே (1)

உற்றவர்தாம் ஒளி பெற்றனர்தாமே – தேவா-அப்:170/4
மேல்


பெற்றார் (1)

பெற்றார் ஆய பிரானார் உறைவிடம் – தேவா-அப்:1272/2
மேல்


பெற்றார்கள் (1)

பெற்றார்கள் பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2094/4
மேல்


பெற்றானை (3)

பெற்றானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2087/4
பெற்றானை பின் இறக்கம் செய்வான்-தன்னை பிரான் என்று போற்றாதார் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:2717/3
பெற்றானை பிஞ்ஞகனை பிறவாதானை பெரியனவும் அரியனவும் எல்லாம் முன்னே – தேவா-அப்:2883/2
மேல்


பெற்றி (2)

அவனது பெற்றி கண்டும் அவன் நீர்மை கண்டும் அகம் தேர்வர் தேவர் அவரே – தேவா-அப்:72/4
பெற்றி கண்டால் மற்று யாவரும் கொள்வர் பிறரிடை நீ – தேவா-அப்:829/2
மேல்


பெற்றியன் (1)

பெற்றியன் காண் பிறங்கு அருவி கழுக்குன்றத்து எம் பிஞ்ஞகன் காண் பேர் எழில் ஆர் காமவேளை – தேவா-அப்:2848/3
மேல்


பெற்றியார் (1)

பெற்றியார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1226/4
மேல்


பெற்றியானே (1)

பிண்டத்தின் இயற்கைக்கு ஓர் பெற்றியானே பெரு நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆகி – தேவா-அப்:2120/3
மேல்


பெற்றிருந்த (1)

பெற்றிருந்த தாய் அவளின் நல்லாய் நீயே பிரானாய் அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2470/3
மேல்


பெற்றிலளாகிலும் (1)

காட்சி பெற்றிலளாகிலும் காதலே – தேவா-அப்:1940/1
மேல்


பெற்றிலேன் (1)

பெற்றிலேன் பெரும் தடம் கண் பேதையார்-தமக்கும் பொல்லேன் – தேவா-அப்:755/3
மேல்


பெற்று (3)

அற்று அருள் பெற்று நின்றாரோடு ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:29/3
அஞ்சினால் இயற்றப்பட்ட ஆக்கை பெற்று அதனுள் வாழும் – தேவா-அப்:263/1
பெற்று நான் பாக்கியம் செய்தெனே – தேவா-அப்:1698/4
மேல்


பெற்றுடையான் (1)

பெற்றுடையான் பெரும் பேச்சு உடையான் பிரியாது எனை ஆள் – தேவா-அப்:827/3
மேல்


பெற்றுடையீர் (1)

பேய்த்தொழிலாட்டியை பெற்றுடையீர் பிடித்து திரியும் – தேவா-அப்:926/2
மேல்


பெற்றேற்கும் (1)

எண் இல் புகழ் ஈசன்-தன் அருள் பெற்றேற்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:982/2
மேல்


பெற்றேன் (2)

பிணி விடா ஆக்கை பெற்றேன் பெற்றம் ஒன்று ஏறுவானே – தேவா-அப்:267/1
இறவாதே வரம் பெற்றேன் என்று மிக்க இராவணனை இருபது தோள் நெரிய ஊன்றி – தேவா-அப்:2295/1
மேல்


பெற (4)

வியன் பெற எய்தி வீழ விரல் சிறிது ஊன்றி மீண்டே – தேவா-அப்:638/3
சயம் பெற நாமம் ஈந்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:638/4
மாணிக்கு உயிர் பெற கூற்றை உதைத்தன மாவலி-பால் – தேவா-அப்:1026/1
வரத்தனை பெற வான்_உலகு ஆள்வரே – தேவா-அப்:1829/4
மேல்


பெறல் (1)

அத்தன் அருள் பெறல் ஆமோ அறிவு இலா பேதை நெஞ்சே – தேவா-அப்:917/4
மேல்


பெறற்கு (1)

பெருந்தகையை பெறற்கு அரிய மாணிக்கத்தை பேணி நினைந்து எழுவார்-தம் மனத்தே மன்னி – தேவா-அப்:2918/1
மேல்


பெறு (4)

விலை பெறு சங்க குழையும் விலை இல் கபால கலனும் – தேவா-அப்:17/2
பெரும் புலர் காலை எழுந்து பெறு மலர் கொய்யா வருவேன் – தேவா-அப்:28/2
பெறு கயிறு ஊசல் போல பிறை புல்கு சடையாய் பாதத்து – தேவா-அப்:264/3
வெம் முலை சாந்தம் விலை பெறு மாலை எடுத்தவர்கள் – தேவா-அப்:1004/2
மேல்


பெறுதல் (1)

அருள் அவா பெறுதல் இன்றி அஞ்சி நான் அலமந்தேற்கு – தேவா-அப்:736/3
மேல்


பெறும் (2)

பயில்வாரும் பெருமை பெறும் பாலரே – தேவா-அப்:1778/4
நா வளம் பெறும் ஆறு மன் நல்_நுதல் – தேவா-அப்:1852/1
மேல்


பெறுமாறு (1)

நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு – தேவா-அப்:2397/1
மேல்


பெறுவார் (2)

பாடுவார் பெறுவார் பரலோகமே – தேவா-அப்:1670/4
வீறுதான் பெறுவார் சிலராகிலும் – தேவா-அப்:1853/1
மேல்


பெறுவித்து (1)

நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ நினைப்ப அரிய தழல் பிழம்பாய் நிமிர்ந்த நாளோ – தேவா-அப்:2426/2
மேல்


பெறுவிப்பார் (1)

பெறுவிப்பார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1225/4

மேல்