கி – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கிஞ்ஞரம் 1
கிட்ட 1
கிடக்கல் 1
கிடக்கின்றேனை 1
கிடக்கினும் 1
கிடக்கும் 1
கிடக்கையால் 1
கிடங்கு 1
கிடத்தா 1
கிடந்த 11
கிடந்தது 3
கிடந்ததுதான் 1
கிடந்தார் 2
கிடந்திட்டு 1
கிடந்து 24
கிடப்பதே 1
கிடப்பார் 1
கிடப்பாரும் 1
கிண்கிணி 3
கிம்புரி 1
கிழமை 2
கிழவன் 1
கிழவனாரை 1
கிழவனை 1
கிழி 2
கிழித்தன 1
கிழித்தானை 1
கிழிந்த 1
கிழிய 3
கிழியின் 1
கிள்ளிட 1
கிளமையே 1
கிளர் 24
கிளர்கின்ற 1
கிளர்தரு 1
கிளர்ந்தார் 1
கிளர்ந்து 1
கிளர்ந்தும் 1
கிளர 1
கிளரும் 16
கிளவியானை 1
கிளறிய 1
கிளி 2
கிளிக்கு 1
கிளை 1
கிளைத்துழி 1
கிளைபிரியேன் 1
கிளையை 1
கிளையோடு 1
கிளைவானை 1
கிறி 1
கிறிப்பானை 1
கிறிபட 3
கின்னரங்கள் 1
கின்னரம் 6
கின்னரம்-தன்னை 2
கின்னரர் 2


கிஞ்ஞரம் (1)

கிஞ்ஞரம் கேட்டு உகந்தார் கெடில வீரட்டனாரே – தேவா-அப்:283/4
மேல்


கிட்ட (1)

கை எலாம் நெய் பாய கழுத்தே கிட்ட கால் நிமிர்த்து நின்று உண்ணும் கையர் சொன்ன – தேவா-அப்:2200/1
மேல்


கிடக்கல் (1)

என்னை கிடக்கல் ஒட்டான் சிவலோகத்து இருந்திடுமே – தேவா-அப்:1009/4
மேல்


கிடக்கின்றேனை (1)

துள்ளலை பாகன்-தன்னை தொடர்ந்து இங்கே கிடக்கின்றேனை
அள்ளலை கடப்பித்து ஆளும் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:274/3,4
மேல்


கிடக்கினும் (1)

அடுக்கல் கீழ் கிடக்கினும் அருளின் நாம் உற்ற – தேவா-அப்:107/3
மேல்


கிடக்கும் (1)

சால கிடக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1043/4
மேல்


கிடக்கையால் (1)

கிடக்கையால் இடர்கள் ஓங்க கிளர் மணி முடிகள் சாய – தேவா-அப்:258/2
மேல்


கிடங்கு (1)

தோடு உடை கைதையோடு சூழ் கிடங்கு அதனை சூழ்ந்த – தேவா-அப்:344/3
மேல்


கிடத்தா (1)

முருட்டு மெத்தையில் முன் கிடத்தா முனம் – தேவா-அப்:1136/1
மேல்


கிடந்த (11)

கிடந்த பாம்பு அருகு கண்டு அரிவை பேதுற – தேவா-அப்:101/1
கிடந்த பாம்பு அவளை ஓர் மயில் என்று ஐயுற – தேவா-அப்:101/2
கிடந்த நீர் சடை மிசை பிறையும் ஏங்கவே – தேவா-அப்:101/3
மறி பட கிடந்த கையர் வளர் இள மங்கை பாகம் – தேவா-அப்:272/1
செறிபட கிடந்த செக்கர் செழு மதி கொழுந்து சூடி – தேவா-அப்:272/2
பொறி பட கிடந்த நாகம் புகை உமிழ்ந்து அழல வீக்கி – தேவா-அப்:272/3
ஆகத்தில் கிடந்த நாகம் அடங்கும் ஆரூரனார்க்கே – தேவா-அப்:509/4
ஏனமாய் கிடந்த மாலும் எழில் தரு முளரியானும் – தேவா-அப்:576/1
நுண்ணிய வெண் நூல் கிடந்த மார்பா என்றும் நுந்தாத ஒண் சுடரே என்றும் நாளும் – தேவா-அப்:2398/2
நின்றானை கிடந்த கடல் நஞ்சு உண்டானை நேர்_இழையை கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் – தேவா-அப்:2586/2
ஐம் தலைய நாகஅணை கிடந்த மாலோடு அயன் தேடி நாட அரிய அம்மான்-தன்னை – தேவா-அப்:2944/1
மேல்


கிடந்தது (3)

இற்று கிடந்தது போலும் இளம் பிறை பாம்பு அதனை – தேவா-அப்:822/2
சுற்றி கிடந்தது கிம்புரி போல சுடர் இமைக்கும் – தேவா-அப்:822/3
ஏரி வளாவி கிடந்தது போலும் இளம் பிறையே – தேவா-அப்:1068/4
மேல்


கிடந்ததுதான் (1)

இ மாய பெரும் கடலை அரித்து தின்பீர்க்கு இல்லையே கிடந்ததுதான் யானேல் வானோர் – தேவா-அப்:2354/2
மேல்


கிடந்தார் (2)

உரிய நின் கொற்ற கடைத்தலையார் உணங்கா கிடந்தார்
புரிதரு புன் சடை போக முனிவர் புலம்புகின்றார் – தேவா-அப்:962/2,3
எரி சுற்ற கிடந்தார் என்று அயலவர் – தேவா-அப்:1073/2
மேல்


கிடந்திட்டு (1)

மாயத்தே கிடந்திட்டு மயங்கிடேல் – தேவா-அப்:1832/2
மேல்


கிடந்து (24)

கிடந்து அழகு எழுதிய கெடிலவாணரே – தேவா-அப்:96/4
கிடந்து தான் நகு தலை கெடிலவாணரே – தேவா-அப்:101/4
பெரு முழைவாய்தல் பற்றி கிடந்து நான் பிதற்றுகின்றேன் – தேவா-அப்:435/3
அரை கிடந்து அசையும் நாகம் அசைப்பனே இன்ப வாழ்க்கைக்கு – தேவா-அப்:757/3
முற்றி கிடந்து முந்நீரின் மிதந்து உடன் மொய்த்து அமரர் – தேவா-அப்:796/1
சுற்றி கிடந்து தொழப்படுகின்றது சூழ் அரவம் – தேவா-அப்:796/2
தெற்றி கிடந்து வெம் கொன்றையும் துன்றி வெண் திங்கள் சூடும் – தேவா-அப்:796/3
நிரவி கிடந்து தொழப்படுகின்றது நீண்டு இருவர் – தேவா-அப்:798/2
தலையாய் கிடந்து உயர்ந்தான்-தன் கழுமலம் காண்பதற்கே – தேவா-அப்:799/3
ஆற்றில் கிடந்து அங்கு அலைப்ப அலைப்புண்டு அசைந்தது ஒக்கும் – தேவா-அப்:816/3
சுற்றி கிடந்து ஒற்றியூரன் என் சிந்தை பிரிவு அறியான் – தேவா-அப்:830/1
கருவாய் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன் – தேவா-அப்:918/1
உருகிற்று என் உள்ளமும் நானும் கிடந்து அலந்து எய்த்தொழிந்தேன் – தேவா-அப்:961/2
பேணி கிடந்து பரவப்படுவன பேர்த்தும் அஃதே – தேவா-அப்:1026/3
சுடலை பொடி சுண்ணம் மாசுணம் சூளாமணி கிடந்து
படர சுடர் மகுடா எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1036/3,4
மறப்பன்-கொலோ என்று என் உள்ளம் கிடந்து மறுகிடுமே – தேவா-அப்:1067/4
கேடு மூடி கிடந்து உண்ணும் நாடு அது – தேவா-அப்:1640/1
உடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே – தேவா-அப்:1957/4
அட்டமாங்கம் கிடந்து அடி வீழ்ந்திலர் – தேவா-அப்:2011/2
பாம்பு உரிஞ்சி மதி கிடந்து திரைகள் ஏங்க பனி கொன்றை சடை வைத்தார் பணி செய் வானோர் – தேவா-அப்:2231/1
நீண்டு கிடந்து இலங்கு திங்கள் சூடி நெடும் தெருவே வந்து எனது நெஞ்சம் கொண்டார் – தேவா-அப்:2435/3
பரவி பலபலவும் தேடி ஓடி பாழ் ஆம் குரம்பையிடை கிடந்து வாளா – தேவா-அப்:2505/1
மிறை படும் இ உடல் வாழ்வை மெய் என்று எண்ணி வினையிலே கிடந்து அழுந்தி வியவேல் நெஞ்சே – தேவா-அப்:2508/1
கருவை என்தன் மனத்து இருந்த கருத்தை ஞான கடும் சுடரை படிந்து கிடந்து அமரர் ஏத்தும் – தேவா-அப்:2985/1
மேல்


கிடப்பதே (1)

என் கடன் பணி செய்து கிடப்பதே – தேவா-அப்:1262/4
மேல்


கிடப்பார் (1)

என் அளவே உனக்கு ஆட்பட்டு இடைக்கலத்தே கிடப்பார்
உன் அளவே எனக்கு ஒன்றும் இரங்காத உத்தமனே – தேவா-அப்:1011/3,4
மேல்


கிடப்பாரும் (1)

பிணிதான் தீரும் என்று பிறங்கி கிடப்பாரும்
மணியே பொன்னே மைந்தா என்பார்கட்கு – தேவா-அப்:209/2,3
மேல்


கிண்கிணி (3)

கூடு அரவத்தர் குரல் கிண்கிணி அடி – தேவா-அப்:171/1
ஆடு அரவ கிண்கிணி கால் அன்னான் ஓர் சேடனை – தேவா-அப்:196/3
சிலம்பும் செறி பாடகமும் செழும் கிண்கிணி திரளும் – தேவா-அப்:894/3
மேல்


கிம்புரி (1)

சுற்றி கிடந்தது கிம்புரி போல சுடர் இமைக்கும் – தேவா-அப்:822/3
மேல்


கிழமை (2)

குருகு ஆம் வயிரம் ஆம் கூறும் நாள் ஆம் கொள்ளும் கிழமை ஆம் கோளேதான் ஆம் – தேவா-அப்:2233/1
கூறு ஏறும் அம் கை மழுவா போற்றி கொள்ளும் கிழமை ஏழ் ஆனாய் போற்றி – தேவா-அப்:2652/3
மேல்


கிழவன் (1)

கிழவன் இருபது தோளும் ஒரு விரலால் இறுத்த – தேவா-அப்:811/3
மேல்


கிழவனாரை (1)

பூவண கிழவனாரை புலி உரி அரையனாரை – தேவா-அப்:747/3
மேல்


கிழவனை (1)

நிதி ஒப்பானை நிதியின் கிழவனை
விதி ஒப்பானை விண்ணோரும் அறிகிலார் – தேவா-அப்:1097/1,2
மேல்


கிழி (2)

சூழும் அரவ துகிலும் துகில் கிழி கோவண கீளும் – தேவா-அப்:19/1
நன் பாட்டு புலவனாய் சங்கம் ஏறி நல் கனக கிழி தருமிக்கு அருளினோன் காண் – தேவா-அப்:2842/2
மேல்


கிழித்தன (1)

கிழித்தன தக்கன் கிளர் ஒளி வேள்வியை கீழ முன் சென்று – தேவா-அப்:884/3
மேல்


கிழித்தானை (1)

கிழித்தானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2761/4
மேல்


கிழிந்த (1)

கிழிந்த தேன் நுகர்தரும் கெடிலவாணரே – தேவா-அப்:100/4
மேல்


கிழிய (3)

துஞ்சு அடை இருள் கிழிய துளங்கு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:218/4
மடலை நீர் கிழிய ஓடி அதனிடை மணிகள் சிந்தும் – தேவா-அப்:281/3
கூர் இருள் கிழிய நின்ற கொடு மழு கையில் வைத்தார் – தேவா-அப்:298/1
மேல்


கிழியின் (1)

உயிராவணம் இருந்து உற்று நோக்கி உள்ள கிழியின் உரு எழுதி – தேவா-அப்:2337/1
மேல்


கிள்ளிட (1)

கிள்ளிட தலை அற்றது அயனுக்கே – தேவா-அப்:1782/4
மேல்


கிளமையே (1)

கிளமையே கிளை ஆக நினைப்பனே – தேவா-அப்:2053/4
மேல்


கிளர் (24)

மறம் கிளர் வேல்கண்ணாள் மணி சேர் மிடற்றவனே என்கின்றாளால் – தேவா-அப்:54/3
கிளர் பொறி நாகம் ஒன்று மிளிர்கின்ற மார்பர் கிளர் காடும் நாடும் மகிழ்வர் – தேவா-அப்:75/2
கிளர் பொறி நாகம் ஒன்று மிளிர்கின்ற மார்பர் கிளர் காடும் நாடும் மகிழ்வர் – தேவா-அப்:75/2
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணம் இயலார் ஒருவர் இருவர் – தேவா-அப்:77/2
மணி கிளர் மஞ்ஞை ஆல மழை ஆடு சோலை மலையான்மகட்கும் இறைவர் – தேவா-அப்:77/3
அணி கிளர் அன்ன வண்ணம் அவள் வண்ண வண்ணம் அவர் வண்ண வண்ணம் அழலே – தேவா-அப்:77/4
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணர் தமியார் ஒருவர் இருவர் – தேவா-அப்:79/2
களி கிளர் வேடம் உண்டு ஒர் கடமா உரித்து உடை தோல் தொடுத்த கலனார் – தேவா-அப்:79/3
அணி கிளர் அன்ன தொல்லையவள் பாகம் ஆக எழில் வேதம் ஓதுமவரே – தேவா-அப்:79/4
கிடக்கையால் இடர்கள் ஓங்க கிளர் மணி முடிகள் சாய – தேவா-அப்:258/2
கெடில வீரட்டம் மேய கிளர் சடை முடியனாரே – தேவா-அப்:281/4
கீள் அலால் உடையும் இல்லை கிளர் பொறிஅரவம் பைம்பூண் – தேவா-அப்:400/1
கேழல் வெண் கெம்பு பூண்ட கிளர் ஒளி மார்பினானே – தேவா-அப்:493/1
கெடுவது இ பிறவி சீசீ கிளர் ஒளி சடையினீரே – தேவா-அப்:745/4
கிழித்தன தக்கன் கிளர் ஒளி வேள்வியை கீழ முன் சென்று – தேவா-அப்:884/3
கிளர் ஒளி வானகம்தான் கொடுக்கும் – தேவா-அப்:895/3
உண்டு சொல்லுவன் கேண்-மின் ஒளி கிளர்
வண்டு சேர் பொழில் சூழ் திரு மாற்பேறு – தேவா-அப்:1667/2,3
கீற்றினானை கிளர் ஒளி செம் சடை – தேவா-அப்:2002/2
கீண்டானை கேதாரம் மேவினானை கேடிலியை கிளர் பொறிவாள் அரவோடு என்பு – தேவா-அப்:2626/3
வளம் கிளர் மா மதி சூடும் வேணியாரும் வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும் – தேவா-அப்:2684/1
கிளர் ஒளியை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2762/4
வளம் கிளர் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிகள் தொழுது எழு பொன் கழலான் கண்டாய் – தேவா-அப்:2817/3
குளம் குளிர் செங்குவளை கிளர் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2817/4
பொங்கு அரவர் புலி தோலர் புராணர் மார்பில் பொறி கிளர் வெண் பூண நூல் புனிதர் போலும் – தேவா-அப்:2837/1
மேல்


கிளர்கின்ற (1)

விட்டு உருவம் கிளர்கின்ற சோதியான் ஆம் விண்ணவர்க்கும் அறியாத சூழலான் ஆம் – தேவா-அப்:2241/1
மேல்


கிளர்தரு (1)

கீறிட்ட திங்கள் சூடி கிளர்தரு சடையினுள்ளால் – தேவா-அப்:275/3
மேல்


கிளர்ந்தார் (1)

கெடுத்து இருந்தாய் கிளர்ந்தார் வலியை கிளையோடு உடனே – தேவா-அப்:842/2
மேல்


கிளர்ந்து (1)

கீர்த்திமைகள் கிளர்ந்து உரை-மின்களே – தேவா-அப்:1920/4
மேல்


கிளர்ந்தும் (1)

கீண்டும் கிளர்ந்தும் பொன் கேழல் முன் தேடின கேடு படா – தேவா-அப்:971/1
மேல்


கிளர (1)

உலம் கிளர எடுத்தவன் தோள் முடியும் நோவ ஒரு விரலால் உற வைத்தார் இறைவா என்று – தேவா-அப்:2232/2
மேல்


கிளரும் (16)

நிறம் கிளரும் குங்குமத்தின் மேனி அவன் நிறமே என்கின்றாளால் – தேவா-அப்:54/2
கீதத்தான் கிளரும் திரு மீயச்சூர் – தேவா-அப்:1182/3
கிளரும் பேர் இசை கின்னரம் பாட்டு அறா – தேவா-அப்:1254/3
கிளரும் பேர் ஒலி கின்னரம் பாட்டு அறா – தேவா-அப்:1271/3
கீதனை கிளரும் நறும் கொன்றை அம் – தேவா-அப்:1683/2
உலம் கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார் உண்டு அருளி விடம் வைத்தார் எண் தோள் வைத்தார் – தேவா-அப்:2229/2
நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார் நிமிர் விசும்பின் மிசை வைத்தார் நினைந்தார் இ நாள் – தேவா-அப்:2229/3
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2229/4
குலம் கிளரும் வரு திரைகள் ஏழும் வைத்தார் குரு மணி சேர் மலை வைத்தார் மலையை கையால் – தேவா-அப்:2232/1
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2232/4
அரும்பு ஓட்டு முலை மடவாள் பாகம் தோன்றும் அணி கிளரும் உரும் என்ன அடர்க்கும் கேழல் – தேவா-அப்:2272/1
கை கிளரும் வீணை வலவன் கண்டாய் காபாலி கண்டாய் திகழும் சோதி – தேவா-அப்:2318/1
மெய் கிளரும் ஞான விளக்கு கண்டாய் மெய்யடியார் உள்ளத்து வித்து கண்டாய் – தேவா-அப்:2318/2
பை கிளரும் நாகம் அசைத்தான் கண்டாய் பராபரன் கண்டாய் பாசூரான் கண்டாய் – தேவா-அப்:2318/3
வை கிளரும் கூர் வாள் படையான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2318/4
தளம் கிளரும் தாமரை ஆதனத்தான் கண்டாய் தசரதன்-தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2817/1
மேல்


கிளவியானை (1)

பெரும்பொருள் கிளவியானை பெரும் தவ முனிவர் ஏத்தும் – தேவா-அப்:718/3
மேல்


கிளறிய (1)

கேழல் அது ஆகி கிளறிய கேசவன் காண்பு அரிதாய் – தேவா-அப்:1024/1
மேல்


கிளி (2)

பைம் கிளி பேடையொடு ஆடி பறந்து வருவன கண்டேன் – தேவா-அப்:30/4
தேன் நோக்கும் கிளி மழலை உமை கேள்வன் செழும் பவளம் – தேவா-அப்:63/1
மேல்


கிளிக்கு (1)

ஓது பைம் கிளிக்கு ஒண் பால் அமுது ஊட்டி – தேவா-அப்:1937/1
மேல்


கிளை (1)

கிளமையே கிளை ஆக நினைப்பனே – தேவா-அப்:2053/4
மேல்


கிளைத்துழி (1)

கிளைத்துழி தோன்றிடும் கெடிலவாணரே – தேவா-அப்:94/4
மேல்


கிளைபிரியேன் (1)

கேட்டிலேன் கிளைபிரியேன் கேட்குமா கேட்டியாகில் – தேவா-அப்:231/1
மேல்


கிளையை (1)

வித்தினை முளை கிளையை வேரை சீரை வினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும் – தேவா-அப்:2545/3
மேல்


கிளையோடு (1)

கெடுத்து இருந்தாய் கிளர்ந்தார் வலியை கிளையோடு உடனே – தேவா-அப்:842/2
மேல்


கிளைவானை (1)

கிளைவானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2758/4
மேல்


கிறி (1)

கேடிலியை கீழ்வேளூர் ஆளும் கோவை கிறி பேசி மடவார் பெய் வளைகள் கொள்ளும் – தேவா-அப்:2978/3
மேல்


கிறிப்பானை (1)

கிறிப்பானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2765/4
மேல்


கிறிபட (3)

கிறிபட உழிதர்வர் கெடிலவாணரே – தேவா-அப்:102/4
கிறிபட நடப்பர் போலும் கெடிலவீரட்டனாரே – தேவா-அப்:272/4
கீள் கொண்ட கோவணம் கா என்று சொல்லி கிறிபட தான் – தேவா-அப்:949/2
மேல்


கின்னரங்கள் (1)

பண்ணினார் கின்னரங்கள் பத்தர்கள் பாடி ஆட – தேவா-அப்:328/2
மேல்


கின்னரம் (6)

பண்ணிடை சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்பார் – தேவா-அப்:426/2
கிளரும் பேர் இசை கின்னரம் பாட்டு அறா – தேவா-அப்:1254/3
கிளரும் பேர் ஒலி கின்னரம் பாட்டு அறா – தேவா-அப்:1271/3
கீதம் கின்னரம் பாட கெழுவினான் – தேவா-அப்:1385/2
முரலும் கின்னரம் மொந்தை முழங்கவே – தேவா-அப்:1630/1
அடுத்த கின்னரம் கேட்கும் வாட்போக்கியை – தேவா-அப்:1915/3
மேல்


கின்னரம்-தன்னை (2)

கீதராய் கீதம் கேட்டு கின்னரம்-தன்னை வைத்தார் – தேவா-அப்:330/1
கீதங்கள் பாட வைத்தார் கின்னரம்-தன்னை வைத்தார் – தேவா-அப்:382/2
மேல்


கின்னரர் (2)

மன்னவர் கின்னரர் வானவர்தாம் தொழும் – தேவா-அப்:175/3
இயக்கர் கின்னரர் இந்திரன் தானவர் – தேவா-அப்:2050/1

மேல்