நை – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு


நைகின்றேனே (17)

ஆராவமுதே என் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2455/4
ஆவா என்று அருள்புரியும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2456/4
அஞ்சாதே ஆள்வானே ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2457/4
எல்லை ஆம் ஐயாறா என்றேன் நானே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2458/4
அண்டத்துக்கு அப்பால் ஆம் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2459/4
அற்றார்க்கு அருள்செய்யும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2460/4
அண்ணா ஐயாறனே என்றேன் நானே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2461/4
அவன் என்றே ஆதியே ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2462/4
அச்சம் பிணி தீர்க்கும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2463/4
அல்லா வினை தீர்க்கும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2464/4
மலை அடுத்த மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2486/4
மறை கலந்த மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2487/4
வரம் கொடுக்கும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2488/4
வானகம் சேர் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2489/4
வரம் ஏற்கும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2490/4
மனம் திருத்தும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2491/4
வழித்துணை ஆம் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2492/4
மேல்


நைஞ்சுநைஞ்சு (1)

நைஞ்சுநைஞ்சு நின்று உள் குளிர்வார்க்கு எலாம் – தேவா-அப்:1380/3
மேல்


நைந்து (2)

பிண்டமே சுமந்து நைந்து பேர்வது ஓர் வழியும் காணேன் – தேவா-அப்:650/2
நாதனே என்றுஎன்று பரவி நாளும் நைந்து உருகி வஞ்சகம் அற்று அன்பு கூர்ந்து – தேவா-அப்:2696/2
மேல்


நைபவர் (1)

உருகி நைபவர் உள்ளம் குளிருமே – தேவா-அப்:1858/4
மேல்


நைபவர்க்கு (1)

உருகி நைபவர்க்கு ஊனம் ஒன்று இன்றியே – தேவா-அப்:1377/3
மேல்


நைய (1)

நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார் – தேவா-அப்:2222/1
மேல்


நையாதே (1)

ஏழைமைப்பட்டு இருந்து நீர் நையாதே
கோளிலி அரன் பாதமே கூறுமே – தேவா-அப்:1644/3,4
மேல்


நையும் (1)

வெம்ப வருகிற்பது அன்று கூற்றம் நம் மேல் வெய்ய வினை பகையும் பைய நையும்
எம் பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம் எங்கு எழில் என் ஞாயிறு எளியோம்அல்லோம் – தேவா-அப்:3016/1,2
மேல்


நையுமே (1)

நாதனை நினைந்து என் மனம் நையுமே – தேவா-அப்:1683/4
மேல்


நைவார்-தம் (1)

கானவனை கயிலாய மலை உளானை கலந்து உருகி நைவார்-தம் நெஞ்சினுள்ளே – தேவா-அப்:2784/3
மேல்


நைவியா (1)

ஞாலம் ஆம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய் – தேவா-அப்:555/3

மேல்