நே – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நேச 1
நேசத்தால் 1
நேசத்தை 1
நேசம் 7
நேசமோடு 1
நேசர் 1
நேசர்க்கு 2
நேசன் 2
நேசன்-தன்னை 1
நேசனை 4
நேட 2
நேடி 4
நேமி 2
நேமியாலே 1
நேயத்தால் 1
நேயம் 1
நேயமே 1
நேயவனை 1
நேர் 23
நேர்_இழை 5
நேர்_இழையாள் 2
நேர்_இழையை 2
நேர்ந்தது 1
நேர்ந்தான் 1
நேர்ந்து 2
நேர்பட 4
நேர்மை 2
நேர்மையும் 1
நேர்மையை 1
நேர்மொழியாள் 1
நேர்வார் 1
நேராய் 1
நேரிடும் 1


நேச (1)

நேச நீலக்குடி அரனே எனா – தேவா-அப்:1794/1
மேல்


நேசத்தால் (1)

நேசத்தால் இருந்த நெஞ்சை நீக்கும் ஆறு அறியமாட்டேன் – தேவா-அப்:387/2
மேல்


நேசத்தை (1)

நேசத்தை நீ பெருக்கி நேர் நின்று உள்கி நித்தலும் சென்று அடி மேல் வீழ்ந்து நின்று – தேவா-அப்:2403/3
மேல்


நேசம் (7)

புரி காலே நேசம் செய்ய இருந்த புண்டரீகத்தாரும் – தேவா-அப்:290/1
நேசம் மிக்கு அன்பினாலே நினை-மின் நீர் நின்று நாளும் – தேவா-அப்:588/3
நிறைவு இலேன் நேசம் இல்லேன் நினைவு இலேன் வினையின் பாசம் – தேவா-அப்:744/1
நேசம் ஆகி நினை மட நெஞ்சமே – தேவா-அப்:1384/1
நேசம் ஆகிய நித்த மணாளனை – தேவா-அப்:1697/2
நேசம் ஏதும் இலாதவர் நீசர்கள் – தேவா-அப்:1808/2
நேசன் காண் நேசர்க்கு நேசம் தன்பால் இல்லாத நெஞ்சத்து நீசர்-தம்மை – தேவா-அப்:2737/1
மேல்


நேசமோடு (1)

நிறைந்த மா மணலை கூப்பி நேசமோடு ஆவின் பாலை – தேவா-அப்:711/1
மேல்


நேசர் (1)

நேசர் அடைந்தார்க்கு அடையாதார்க்கு நிட்டுரவர் கட்டங்கர் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2257/3
மேல்


நேசர்க்கு (2)

நேசன் காண் நேசர்க்கு நேசம் தன்பால் இல்லாத நெஞ்சத்து நீசர்-தம்மை – தேவா-அப்:2737/1
நிலையானை நேசர்க்கு நேசன்-தன்னை நீள் வான முகடு அதனை தாங்கி நின்ற – தேவா-அப்:2749/2
மேல்


நேசன் (2)

இந்திரனை தோள் முறிவித்து அருள்செய்தான் காண் ஈசன் காண் நேசன் காண் நினைவோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2613/2
நேசன் காண் நேசர்க்கு நேசம் தன்பால் இல்லாத நெஞ்சத்து நீசர்-தம்மை – தேவா-அப்:2737/1
மேல்


நேசன்-தன்னை (1)

நிலையானை நேசர்க்கு நேசன்-தன்னை நீள் வான முகடு அதனை தாங்கி நின்ற – தேவா-அப்:2749/2
மேல்


நேசனை (4)

நேசனை நெருப்பன்-தன்னை நிவஞ்சகத்து அகன்ற செம்மை – தேவா-அப்:760/3
நீள் நிலா அரவ சடை நேசனை
பேணிலாதவர் பேதுறவு ஓட்டினோம் – தேவா-அப்:1465/1,2
நேசனை நெஞ்சினுள் நிறைவாய் நின்ற – தேவா-அப்:2064/3
நேசனை நித்தலும் நினையப்பெற்றோம் நின்று உண்பார் எம்மை நினைய சொன்ன – தேவா-அப்:3054/3
மேல்


நேட (2)

நெடியவன் மலரினானும் நேர்ந்து இருபாலும் நேட
கடியது ஓர் உருவம் ஆகி கனல் எரி ஆகி நின்ற – தேவா-அப்:556/1,2
நெடியானும் சதுமுகனும் நேட நின்ற நீல நல் கண்டத்து இறையார் போலும் – தேவா-அப்:2304/2
மேல்


நேடி (4)

நீல நல் மேனி செம் கண் வளை வெள் எயிற்றின் எரிகேசன் நேடி வரும் நாள் – தேவா-அப்:139/1
நெடியானும் நான்முகனும் நேடி காணா நீண்டானே நேர் ஒருவர் இல்லாதானே – தேவா-அப்:2128/1
நெடியானும் மலரவனும் நேடி ஆங்கே நேர் உருவம் காணாமே சென்று நின்ற – தேவா-அப்:2316/1
நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி நாம் இருக்கும் ஊர் பணியீர் அடிகேள் என்ன – தேவா-அப்:2539/3
மேல்


நேமி (2)

நீறு அணிந்த திரு மேனி நிமலர் போலும் நேமி நெடு மாற்கு அருளிச்செய்தார் போலும் – தேவா-அப்:2617/1
நீண்டானை நெடுங்கள மா நகரான்-தன்னை நேமி வான் படையால் நீள் உரவோன் ஆகம் – தேவா-அப்:2626/2
மேல்


நேமியாலே (1)

கடிந்தானை கார் முகில் போல் கண்டத்தானை கடும் சினத்தோன்-தன் உடலை நேமியாலே
தடிந்தானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சில் – தேவா-அப்:2780/2,3
மேல்


நேயத்தால் (1)

நேயத்தால் நினையமாட்டேன் நீதனே நீசனேன் நான் – தேவா-அப்:310/3
மேல்


நேயம் (1)

நேயம் நிலாவ இருந்தான் அவன்-தன் திருவடிக்கே – தேவா-அப்:916/2
மேல்


நேயமே (1)

நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டி – தேவா-அப்:739/3
மேல்


நேயவனை (1)

மெத்த நேயவனை நாளும் விரும்பும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:584/4
மேல்


நேர் (23)

சேலின் நேர் அனைய கண்ணார் திறம் விட்டு சிவனுக்கு அன்பாய் – தேவா-அப்:312/1
நெளித்து அவன் எடுத்திடலும் நேர்_இழை அஞ்ச நோக்கி – தேவா-அப்:461/2
நெடும் பொறை மலையர்பாவை நேர் இழை நெறி மென் கூந்தல் – தேவா-அப்:746/3
படையின் நேர் தடம் கண் உமை பாகமா – தேவா-அப்:1123/3
நீறு அலைத்த செம்மேனியன் நேர்_இழை – தேவா-அப்:1144/2
பண்ணின் நேர் மொழியாள் உமை_பங்கரோ – தேவா-அப்:1163/1
நிறைக்க வாலியள் அல்லள் இ நேர்_இழை – தேவா-அப்:1355/1
குழலின் நேர் மொழி கூறிய கேண்-மினோ – தேவா-அப்:1469/2
நக்கன் நேர் நல்லம் நண்ணுதல் நன்மையே – தேவா-அப்:1497/4
நீற்றின் ஆர் திரு மேனியன் நேர்_இழை – தேவா-அப்:1512/1
தன்னை நேர் ஒப்பு இலாத தலைவனை – தேவா-அப்:1530/2
வித்து ஒப்பானை விளக்கிடை நேர் ஒளி – தேவா-அப்:1995/2
வரு மான திரள் தோள்கள் மட்டித்து ஆட வளர் மதியம் சடைக்கு அணிந்து மான் நேர் நோக்கி – தேவா-அப்:2088/2
நெடியானும் நான்முகனும் நேடி காணா நீண்டானே நேர் ஒருவர் இல்லாதானே – தேவா-அப்:2128/1
நெளிவு உண்டா கருதாதே நிமலன்-தன்னை நினை-மின்கள் நித்தலும் நேர்_இழையாள் ஆய – தேவா-அப்:2204/1
நெடியானும் மலரவனும் நேடி ஆங்கே நேர் உருவம் காணாமே சென்று நின்ற – தேவா-அப்:2316/1
நேசத்தை நீ பெருக்கி நேர் நின்று உள்கி நித்தலும் சென்று அடி மேல் வீழ்ந்து நின்று – தேவா-அப்:2403/3
நீண்டவர்க்கு ஓர் நெருப்பு உருவம் ஆனார்தாமே நேர்_இழையை ஒருபாகம் வைத்தார்தாமே – தேவா-அப்:2453/1
நெற்றி தனி கண் உடையான் கண்டாய் நேர்_இழை ஓர்பாகமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2478/1
மின்_நேர்_இடை_பங்கன் நீயே என்றும் வெண் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2496/1
பொன் நேர் சடை முடியாய் நீயே என்றும் பூத கண நாதன் நீயே என்றும் – தேவா-அப்:2496/2
நெரித்தானை நேர்_இழையாள் பாகத்தானை நீசனேன் உடல் உறு நோய் ஆன தீர – தேவா-அப்:2553/3
நின்றானை கிடந்த கடல் நஞ்சு உண்டானை நேர்_இழையை கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் – தேவா-அப்:2586/2
மேல்


நேர்_இழை (5)

நெளித்து அவன் எடுத்திடலும் நேர்_இழை அஞ்ச நோக்கி – தேவா-அப்:461/2
நீறு அலைத்த செம்மேனியன் நேர்_இழை
கூறு அலைத்த மெய் கோள் அரவு ஆட்டிய – தேவா-அப்:1144/2,3
நிறைக்க வாலியள் அல்லள் இ நேர்_இழை
மறைக்க வாலியள் அல்லள் இ மாதராள் – தேவா-அப்:1355/1,2
நீற்றின் ஆர் திரு மேனியன் நேர்_இழை
கூற்றினான் குழல் கோல சடையில் ஓர் – தேவா-அப்:1512/1,2
நெற்றி தனி கண் உடையான் கண்டாய் நேர்_இழை ஓர்பாகமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2478/1
மேல்


நேர்_இழையாள் (2)

நெளிவு உண்டா கருதாதே நிமலன்-தன்னை நினை-மின்கள் நித்தலும் நேர்_இழையாள் ஆய – தேவா-அப்:2204/1
நெரித்தானை நேர்_இழையாள் பாகத்தானை நீசனேன் உடல் உறு நோய் ஆன தீர – தேவா-அப்:2553/3
மேல்


நேர்_இழையை (2)

நீண்டவர்க்கு ஓர் நெருப்பு உருவம் ஆனார்தாமே நேர்_இழையை ஒருபாகம் வைத்தார்தாமே – தேவா-அப்:2453/1
நின்றானை கிடந்த கடல் நஞ்சு உண்டானை நேர்_இழையை கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் – தேவா-அப்:2586/2
மேல்


நேர்ந்தது (1)

நீலம் உண்ட மிடற்றினன் நேர்ந்தது ஓர் – தேவா-அப்:1421/1
மேல்


நேர்ந்தான் (1)

வைத்த கால் அரக்கனோ தன் வான் முடி தனக்கு நேர்ந்தான்
மொய்த்த கான் முகிழ் வெண் திங்கள் மூர்த்தி என் உச்சி-தன் மேல் – தேவா-அப்:753/2,3
மேல்


நேர்ந்து (2)

நெடியவன் மலரினானும் நேர்ந்து இருபாலும் நேட – தேவா-அப்:556/1
நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்க கண்டு நிலை தளர ஆயிரமா முகத்தினோடு – தேவா-அப்:2995/1
மேல்


நேர்பட (4)

நிருத்தம் நான் காண வேண்டி நேர்பட வந்த ஆறே – தேவா-அப்:230/4
நிருத்தனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே – தேவா-அப்:719/4
நீற்றனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே – தேவா-அப்:720/4
நெருப்பனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே – தேவா-அப்:721/4
மேல்


நேர்மை (2)

நெறி அதனை விரித்து உரைத்த நேர்மை தோன்றும் நெற்றி மேல் கண் தோன்றும் பெற்றம் தோன்றும் – தேவா-அப்:2271/2
நீ ஆகி நான் ஆகி நேர்மை ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3009/4
மேல்


நேர்மையும் (1)

நெறிகளும் அவர் நின்றது ஓர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும் – தேவா-அப்:1959/2,3
மேல்


நேர்மையை (1)

நிலை வலம் வல்லனல்லன் நேர்மையை நினையமாட்டான் – தேவா-அப்:571/1
மேல்


நேர்மொழியாள் (1)

பண்ணின் நேர்மொழியாள் பலி இட்ட இ – தேவா-அப்:1521/1
மேல்


நேர்வார் (1)

நீர் ஆவி ஆன நிழலே போற்றி நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி – தேவா-அப்:2640/3
மேல்


நேராய் (1)

மலைக்கு நேராய் அரக்கன் சென்று உற மங்கை அஞ்ச – தேவா-அப்:557/1
மேல்


நேரிடும் (1)

நேரிடும் போர் மிக வல்ல நிமலன்-தன்னை நின்மலனை அம் மலர் கொண்ட அயனும் மாலும் – தேவா-அப்:2987/2

மேல்