சூ – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சூட்சி 1
சூட்சியமே 1
சூட்ட 3
சூட்டி 1
சூட்டு 1
சூடர் 1
சூடல் 1
சூடலும் 1
சூடி 56
சூடிய 24
சூடியது 1
சூடியே 1
சூடிலும் 3
சூடிற்று 2
சூடின 1
சூடினார் 4
சூடினாரும் 1
சூடினாரே 1
சூடினான் 7
சூடினானே 1
சூடினானை 6
சூடினை 1
சூடு 1
சூடும் 36
சூடுமே 2
சூடுவர் 7
சூத்திரம் 1
சூர் 1
சூரபன்மாவை 1
சூரியர்தாம் 1
சூல் 1
சூல்விப்பதே 1
சூல 9
சூலத்தர் 4
சூலத்தரே 1
சூலத்தன் 5
சூலத்தாய் 1
சூலத்தால் 2
சூலத்தான் 2
சூலத்தானை 3
சூலத்தின் 1
சூலத்தினான் 1
சூலத்தினானும் 1
சூலத்து 2
சூலபாணி-தன் 1
சூலம் 21
சூலமங்கை 1
சூலமும் 5
சூலமே 1
சூலை 5
சூழ் 145
சூழ்-மின்கள் 1
சூழ்ச்சிமை 1
சூழ்த்த 1
சூழ்தர 1
சூழ்தரு 4
சூழ்தரும் 1
சூழ்ந்த 47
சூழ்ந்தது 1
சூழ்ந்தவர் 2
சூழ்ந்து 14
சூழ்ந்துகொண்டு 1
சூழ்வினைகள் 2
சூழ்வுண்ட 1
சூழ 43
சூழல் 3
சூழலாய் 1
சூழலான் 1
சூழலில் 1
சூழலே 1
சூழவே 1
சூழா 1
சூழாராகில் 1
சூழிட்டு 1
சூழும் 5
சூள் 1
சூளாமணி 2
சூளாமணிதான் 1
சூளாமணியும் 3
சூளைகள் 1
சூறை 1


சூட்சி (1)

சூட்சி சிறிதும் இலாதாய் போற்றி சூழ்ந்த கடல் நஞ்சம் உண்டாய் போற்றி – தேவா-அப்:2660/2
மேல்


சூட்சியமே (1)

துப்பினை முன் பற்று அறா விறலே மிக்க சோர்வு படு சூட்சியமே சுகமே நீங்கள் – தேவா-அப்:2358/1
மேல்


சூட்ட (3)

பூ மலி கொன்றை சூட்ட பொறாத தன் தாதை தாளை – தேவா-அப்:634/2
துறந்தார்-தம் தூ நெறி-கண் சென்றேன்அல்லேன் துணைமாலை சூட்ட நான் தூயேன்அல்லேன் – தேவா-அப்:2563/1
கண் துஞ்சும் கரு நெடு மால் ஆழி வேண்டி கண் இடந்து சூட்ட கண்டு அருளுவான் காண் – தேவா-அப்:2610/1
மேல்


சூட்டி (1)

மையினால் கண் எழுதி மாலை சூட்டி மயானத்தில் இடுவதன் முன் மதியம் சூடும் – தேவா-அப்:2702/2
மேல்


சூட்டு (1)

சூட்டு ஆன திங்கள் முடியாய் போற்றி தூ மாலை மத்தம் அணிந்தாய் போற்றி – தேவா-அப்:2657/2
மேல்


சூடர் (1)

தூ வணத்த சுடர் சூல படையினான் காண் சூடர் மூன்றும் கண் மூன்றா கொண்டான்தான் காண் – தேவா-அப்:2329/2
மேல்


சூடல் (1)

சூடினார் சூடல் மேவி சூழ் சுடர் சுடலை வெண் நீறு – தேவா-அப்:250/3
மேல்


சூடலும் (1)

ஆறு சூடலும் அம்ம அழகிதே – தேவா-அப்:1622/4
மேல்


சூடி (56)

பேரானே பிறை சூடி பிணி தீர்க்கும் பெருமான் என்று – தேவா-அப்:129/3
பெரும் தாழ் சடை முடி மேல் பிறை சூடி
கரும் தாழ்குழலியும் தாமும் கலந்து – தேவா-அப்:158/1,2
இன்னருள் சூடி எள்காதும் இராப்பகல் – தேவா-அப்:175/2
போழ் ஒத்த வெண் மதியம் சூடி பொலிந்து இலங்கு – தேவா-அப்:193/1
ஆறனால் ஆறு சூடி ஆய்_இழையாள் ஓர்பாகம் – தேவா-அப்:219/2
கொம்பு கொப்பளித்த திங்கள் கோணல் வெண் பிறையும் சூடி
வம்பு கொப்பளித்த கொன்றை வளர் சடை மேலும் வைத்து – தேவா-அப்:240/1,2
செறிபட கிடந்த செக்கர் செழு மதி கொழுந்து சூடி
பொறி பட கிடந்த நாகம் புகை உமிழ்ந்து அழல வீக்கி – தேவா-அப்:272/2,3
கீறிட்ட திங்கள் சூடி கிளர்தரு சடையினுள்ளால் – தேவா-அப்:275/3
மல்லிகை கண்ணியோடு மா மலர் கொன்றை சூடி
கல்வியை கரை இலாத காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:431/2,3
படம் உடை அரவினோடு பனி மதி அதனை சூடி
கடம் உடை உரிவை மூடி கண்டவர் அஞ்ச அம்ம – தேவா-அப்:441/1,2
மடல் அவிழ் கொன்றை சூடி மன்னும் ஆப்பாடியாரே – தேவா-அப்:466/4
வன்னி வாள் அரவு மத்தம் மதியமும் ஆறும் சூடி
மின்னிய உரு ஆம் சோதி மெய்ப்பொருள் பயனும் ஆகி – தேவா-அப்:471/1,2
வானகம் விளங்க மல்கும் வளம் கெழு மதியம் சூடி
தான் அகம் அழிய வந்து தாம் பலி தேர்வர் போலும் – தேவா-அப்:513/1,2
புளைகைய போர்வை போர்த்து புனலொடு மதியம் சூடி
வளை பயில் இளையர் ஏத்தும் வலம்புரத்து அடிகள்தாமே – தேவா-அப்:531/3,4
நிறை புனல் அணிந்த சென்னி நீள் நிலா அரவம் சூடி
மறை ஒலி பாடி ஆடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன் – தேவா-அப்:692/1,2
உடையான் உடை தலை மாலையும் சூடி உகந்து அருளி – தேவா-அப்:791/2
சூடி நின்றாய் அடியேனை அஞ்சாமை குறிக்கொள்வதே – தேவா-அப்:835/4
சுழிப்பட்ட கங்கையும் திங்களும் சூடி சொக்கம் பயின்றீர் – தேவா-அப்:930/1
வெண் மதி சூடி விளங்க நின்றானை விண்ணோர்கள் தொழ – தேவா-அப்:947/1
சுடர் திங்கள் சூடி சுழல் கங்கையோடும் சுரும்பு துன்றி – தேவா-அப்:1035/3
சிவந்து ஆடிய பொடி நீறும் சிர மாலை சூடி நின்று – தேவா-அப்:1049/3
வெள்ளி தகடு அன்ன வெண் பிறை சூடி வெள் என்பு அணிந்து – தேவா-அப்:1050/3
உன்மத்தக மலர் சூடி உலகம் தொழ சுடலை – தேவா-அப்:1065/1
அட்ட மா மலர் சூடி அடும்பொடு – தேவா-அப்:1157/1
பிறையும் சூடி நல் பெண்ணொடு ஆண் ஆகி என் – தேவா-அப்:1362/1
மந்தம் ஆக வளர் பிறை சூடி ஓர் – தேவா-அப்:1422/1
தொண்டர் பாதங்கள் சூடி துதையிலே – தேவா-அப்:1458/4
திங்கள் சூடி திரு கழிப்பாலையான் – தேவா-அப்:1472/3
கோணல் மா மதி சூடி ஓர் கோவண – தேவா-அப்:1600/1
கார் ஆர் கமழ் கொன்றை கண்ணி சூடி கபாலம் கை ஏந்தி கணங்கள் பாட – தேவா-அப்:2100/1
வெந்தார் வெண் பொடி பூசி வெள்ளை மாலை விரி சடை மேல் தாம் சூடி வீணை ஏந்தி – தேவா-அப்:2173/1
செய்ய திரு மேனி வெண் நீறு ஆடி திகழ் புன் சடை முடி மேல் திங்கள் சூடி
மெய் ஒருபாகத்து உமையை வைத்து மேவார் திரிபுரங்கள் வேவ செய்து – தேவா-அப்:2178/2,3
பேய் தங்கு நீள் காட்டில் நட்டம் ஆடி பிறை சூடும் சடை மேல் ஓர் புனலும் சூடி
ஆ தங்கு பைங்குழலாள் பாகம் கொண்டார் அனல் கொண்டார் அந்தி வாய் வண்ணம் கொண்டார் – தேவா-அப்:2182/2,3
வேத தொழிலார் விரும்ப நின்றார் விரி சடை மேல் வெண் திங்கள் கண்ணி சூடி
ஓதத்து ஒலி கடல் வாய் நஞ்சம் உண்டார் உம்பரோடு அம் பொன்_உலகம் ஆண்டு – தேவா-அப்:2184/2,3
முற்று ஒருவர் போல முழு நீறு ஆடி முளை திங்கள் சூடி முந்நூலும் பூண்டு – தேவா-அப்:2213/1
செத்தவர்-தம் தலை மாலை கையில் ஏந்தி சிர மாலை சூடி சிவந்த மேனி – தேவா-அப்:2216/1
புன் சடையின் மேல் ஓர் புனலும் சூடி புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2217/4
பட்ட அங்க மாலை நிறைய சூடி பல் கணமும் தாமும் பரந்த காட்டில் – தேவா-அப்:2289/3
சீரார் செழும் பவள குன்று ஒப்பானை திகழும் திரு முடி மேல் திங்கள் சூடி
பேர் ஆயிரம் உடைய பெம்மான்-தன்னை பிறர் தன்னை காட்சிக்கு அரியான்-தன்னை – தேவா-அப்:2306/2,3
சின்னம் ஆம் பல் மலர்கள் அன்றே சூடி செம் சடை மேல் வெண் மதியம் சேர்த்தினானை – தேவா-அப்:2309/3
வெள்ளி மிளிர் பிறை முடி மேல் சூடி கண்டாய் வெண் நீற்றான் கண்டாய் நம் செந்தில் மேய – தேவா-அப்:2320/3
தேரூரார் மாவூரார் திங்களூரார் திகழ் புன் சடை முடி மேல் திங்கள் சூடி
கார் ஊராநின்ற கழனி சாயல் கண் ஆர்ந்த நெடு மாடம் கலந்து தோன்றும் – தேவா-அப்:2339/1,2
தீ வணத்த செம் சடை மேல் திங்கள் சூடி திசை நான்கும் வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2340/3
நீண்டு கிடந்து இலங்கு திங்கள் சூடி நெடும் தெருவே வந்து எனது நெஞ்சம் கொண்டார் – தேவா-அப்:2435/3
ஆகத்து உமை அடக்கி ஆறு சூடி ஐ வாய் அரவு அசைத்து அங்கு ஆன் ஏறு ஏறி – தேவா-அப்:2438/1
விண்-பால் மதி சூடி வேதம் ஓதி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2441/4
வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர் மல்கும் மத மத்தம் சேர் சடை மேல் மதியம் சூடி
திண் தோள்கள் ஆயிரமும் வீசி நின்று திசை சேர நடம் ஆடி சிவலோகனார் – தேவா-அப்:2533/1,2
ஆகத்து ஓர் பாம்பு அசைத்து வெள் ஏறு ஏறி அணி கங்கை செம் சடை மேல் ஆர்க்க சூடி
பாகத்து ஓர் பெண் உடையார் ஆணும் ஆவார் பசு ஏறி உழிதரும் எம் பரமயோகி – தேவா-அப்:2534/1,2
கோவாத எரி கணையை சிலை மேல் கோத்த குழகனார் குளிர் கொன்றை சூடி இங்கே – தேவா-அப்:2669/2
மட்டு இலங்கு கொன்றை அம் தார் மாலை சூடி மடவாள் அவளோடு மான் ஒன்று ஏந்தி – தேவா-அப்:2682/1
பொன் இலங்கு கொன்றை அம் தார் மாலை சூடி புகலூரும் பூவணமும் பொருந்தினாரும் – தேவா-அப்:2685/1
பெரும் தவத்து எம் பிஞ்ஞகன் காண் பிறை_சூடி காண் பேதையேன் வாதை உறு பிணியை தீர்க்கும் – தேவா-அப்:2740/1
பார் ஒளியை விண் ஒளியை பாதாளனை பால் மதியம் சூடி ஓர் பண்பன்-தன்னை – தேவா-அப்:2767/2
நீர் ஆரும் செம் சடை மேல் அரவம் கொன்றை நிறை மதியம் உடன் சூடி நீதியாலே – தேவா-அப்:2911/1
தண் காட்ட சந்தனமும் தவள நீறும் தழை அணுகும் குறும் கொன்றை மாலை சூடி
கண் காட்டா கருவரை போல் அனைய காஞ்சி கார் மயில் அம் சாயலார் கலந்து காண – தேவா-அப்:3003/1,2
அம் பவள செம் சடை மேல் ஆறு சூடி அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆட்டு உகந்த – தேவா-அப்:3016/3
மேல்


சூடிய (24)

சூடிய கையர் ஆகி இமையோர் கணங்கள் துதி ஓதி நின்று தொழலும் – தேவா-அப்:137/2
சூடினார் கங்கையாளை சூடிய துழனி கேட்டு அங்கு – தேவா-அப்:270/1
விரை வாய் நறு மலர் சூடிய விண்ணவன்-தன் அடிக்கே – தேவா-அப்:792/3
தன் மத்தகத்து ஒர் இளம் பிறை சூடிய சங்கரனே – தேவா-அப்:1065/4
இரப்பு ஒப்பானை இள மதி சூடிய
அரப்பு ஒப்பானை அரத்துறை மேவிய – தேவா-அப்:1095/2,3
வானனை மதி சூடிய மைந்தனை – தேவா-அப்:1103/1
பழகி நின் அடி சூடிய பாலனை – தேவா-அப்:1202/1
இலையின் ஆர் கொன்றை சூடிய ஈசனார் – தேவா-அப்:1243/1
பிள்ளை வெண் பிறை சூடிய சென்னியான் – தேவா-அப்:1273/3
குஞ்சி வான் பிறை சூடிய கூத்தனே – தேவா-அப்:1303/4
பிளவு சூடிய பிஞ்ஞகன் எம் இறை – தேவா-அப்:1356/2
ஆறு சூடிய அண்ணல் அவனையே – தேவா-அப்:1429/4
மத்த மா மலர் சூடிய மைந்தனார் – தேவா-அப்:1477/1
விண்ணின் ஆர் மதி சூடிய வேந்தனை – தேவா-அப்:1531/1
துண்ட மா மதி சூடிய சோதியே – தேவா-அப்:1807/4
வானம் சேர் மதி சூடிய மைந்தனை – தேவா-அப்:1865/1
நனையும் மா மலர் சூடிய நம்பனை – தேவா-அப்:1892/2
விண்ணத்து அம் மதி சூடிய வேதியர் – தேவா-அப்:1930/2
ஆறு சூடிய அண்ட முதல்வனார் – தேவா-அப்:1949/2
இன்னம் கேண்-மின் இளம் பிறை சூடிய
மன்னன் பாதம் மனத்துடன் ஏத்துவார் – தேவா-அப்:1981/1,2
வான வெண் மதி சூடிய மைந்தனை – தேவா-அப்:1988/2
முந்தி சூடிய முக்கண்ணினான் அடி – தேவா-அப்:2026/3
பேர் இலாய் பிறை சூடிய பிஞ்ஞகா – தேவா-அப்:2032/2
திங்கள் சூடிய தீநிற_வண்ணனார் – தேவா-அப்:2040/2
மேல்


சூடியது (1)

அரவம் அணிதரு கொன்றை இளம் திங்கள் சூடியது ஓர் – தேவா-அப்:824/2
மேல்


சூடியே (1)

விண்ணின் ஆர் விளங்கும் மதி சூடியே
சுண்ண நீறு மெய் பூசி சுடலையின் – தேவா-அப்:1127/2,3
மேல்


சூடிலும் (3)

கூறன் ஆகிலும் கூன் பிறை சூடிலும்
நாறு பூம் பொழில் நாரையூர் நம்பனுக்கு – தேவா-அப்:1622/2,3
நீறு பூசி நிலா மதி சூடிலும்
வீறு இலாதன செய்யினும் விண்ணவர் – தேவா-அப்:2030/2,3
உச்சி வெண் மதி சூடிலும் ஊன் அறா – தேவா-அப்:2031/1
மேல்


சூடிற்று (2)

பின்னும் செம் சடை மேல் பிறை சூடிற்று
மின்னும் மேகலையாளொடு மீயச்சூர் – தேவா-அப்:1179/2,3
ஒன்று போல் ஒளி மா மதி சூடிற்று
ஒன்று போல் உகந்தார் ஒற்றியூரரே – தேவா-அப்:1312/3,4
மேல்


சூடின (1)

சுணங்கு நின்று ஆர் கொங்கையாள் உமை சூடின தூ மலரால் – தேவா-அப்:968/1
மேல்


சூடினார் (4)

சூடினார் சூடல் மேவி சூழ் சுடர் சுடலை வெண் நீறு – தேவா-அப்:250/3
சூடினார் கங்கையாளை சூடிய துழனி கேட்டு அங்கு – தேவா-அப்:270/1
சூடினார் ஒருவர் போலும் தூய நல் மறைகள் நான்கும் – தேவா-அப்:354/3
சூடினார் கங்கையாளை சுவறிடு சடையர் போலும் – தேவா-அப்:666/2
மேல்


சூடினாரும் (1)

செம் சடைக்கு ஓர் வெண் திங்கள் சூடினாரும் திரு ஆலவாய் உறையும் செல்வனாரும் – தேவா-அப்:2683/1
மேல்


சூடினாரே (1)

பொழில் அகம் விளங்கு திங்கள் புது முகிழ் சூடினாரே – தேவா-அப்:510/4
மேல்


சூடினான் (7)

பூ உலாம் சடை மேல் புனல் சூடினான்
ஏவலால் எயில் மூன்றும் எரித்தவன் – தேவா-அப்:1431/1,2
தலை உருவ சிர மாலை சூடினான் காண் தமர் உலகம் தலை கலனா பலி கொள்வான் காண் – தேவா-அப்:2333/1
மலை வளர்த்த மட மங்கை பாகத்தான் காண் மயானத்தான் காண் மதியம் சூடினான் காண் – தேவா-அப்:2335/1
பொன் தாது மலர் கொன்றை சூடினான் காண் புரி நூலன் காண் பொடி ஆர் மேனியான் காண் – தேவா-அப்:2336/1
பின்னு சடை மேல் பிறை சூடினான் காண் பேர் அருளன் காண் பிறப்பு ஒன்று இல்லாதான் காண் – தேவா-அப்:2581/1
வட்ட மதி பாகம் சூடினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2582/4
சொக்கன் காண் கொக்கு இறகு சூடினான் காண் துடி_இடையாள் துணை முலைக்கு சேர்வு அது ஆகும் – தேவா-அப்:2947/2
மேல்


சூடினானே (1)

முற்றாத பால் மதியம் சூடினானே முளைத்து எழுந்த கற்பகத்தின் கொழுந்து ஒப்பானே – தேவா-அப்:2525/1
மேல்


சூடினானை (6)

முற்றாத பால் மதியம் சூடினானை மூஉலகம் தான் ஆய முதல்வன்-தன்னை – தேவா-அப்:2094/1
வெறி ஆர் மலர் கொன்றை சூடினானை வெள்ளானை வந்து இறைஞ்சும் வெண்காட்டானை – தேவா-அப்:2516/1
சுழித்தானை கங்கை மலர் வன்னி கொன்றை தூ மத்தம் வாள் அரவம் சூடினானை
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ ஆலால நஞ்சு அதனை உண்டான்-தன்னை – தேவா-அப்:2761/1,2
நறவு ஆரும் பூம் கொன்றை சூடினானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2824/4
சுரும்பு அமரும் மலர் கொன்றை சூடினானை தூயானை தாய் ஆகி உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:2877/3
சேர்ந்து ஓடும் மணி கங்கை சூடினானை செழு மதியும் படஅரவும் உடன்வைத்தானை – தேவா-அப்:2961/1
மேல்


சூடினை (1)

பிறையும் சூடினை என்பது அலால் பிறிது – தேவா-அப்:2019/3
மேல்


சூடு (1)

காலனை வீடுசெய்த கழல் போலும் அண்டர் தொழுது ஓது சூடு கழலே – தேவா-அப்:139/4
மேல்


சூடும் (36)

எட்டு-கொல் ஆம் அவர் சூடும் இன மலர் – தேவா-அப்:184/2
சோமனை அரவினோடு சூழ்தர கங்கை சூடும்
வாமனை வானவர்கள் வலங்கொண்டு வந்து போற்ற – தேவா-அப்:427/1,2
ஞாலம் ஆம் பெருமையானே நளிர் இளம் திங்கள் சூடும்
கோலம் ஆர் சடையினானே கோடிகா உடைய கோவே – தேவா-அப்:491/3,4
வானிடைமதியம் சூடும் வலம்புரத்து அடிகள்-தம்மை – தேவா-அப்:530/3
அந்தி வான் மதியம் சூடும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:545/4
அலைத்த வான் கங்கை சூடும் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:557/4
கருகிய கண்டத்தானை கதிர் இளம் கொழுந்து சூடும்
பெருகிய சடையினானை பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:587/2,3
பாதி ஓர் பெண்ணை வைத்தாய் படர் சடை மதியம் சூடும்
ஆதியே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:599/3,4
கொத்தினை வயிர மாலை கொழுந்தினை அமரர் சூடும்
வித்தினை வேத வேள்வி கேள்வியை விளங்க நின்ற – தேவா-அப்:716/2,3
தெண் திரை கங்கை சூடும் திரு தகு சடையினானே – தேவா-அப்:751/4
தெற்றி கிடந்து வெம் கொன்றையும் துன்றி வெண் திங்கள் சூடும்
கற்றை சடைமுடியார்க்கு இடம் ஆய கழுமலமே – தேவா-அப்:796/3,4
பவள கண் வால மதி எந்தை சூடும் பனி மலரே – தேவா-அப்:1060/4
கந்த மா மலர் சூடும் கருத்தனே – தேவா-அப்:1120/4
கந்த மா மலர் சூடும் கருத்தினர் – தேவா-அப்:1149/2
ஆறு சூடும் அணி மறைக்காடரோ – தேவா-அப்:1170/1
கந்த மாலைகள் சூடும் கருத்தனார் – தேவா-அப்:1212/2
முற்றிலா மதி சூடும் முதல்வனார் – தேவா-அப்:1215/1
புனலும் கொன்றையும் சூடும் புரி சடை – தேவா-அப்:1277/2
அங்க மாலையும் சூடும் ஐயாறரே – தேவா-அப்:1341/4
மல்கு வெண் பிறை சூடும் மணாளனார் – தேவா-அப்:1489/2
கொன்றை சூடும் குறிப்பு அது ஆகுமே – தேவா-அப்:1523/4
முற்றா வெண் மதி சூடும் முதல்வனார் – தேவா-அப்:1603/1
ஆறு சூடும் அடிகள் உறை பதி – தேவா-அப்:1747/2
அட்ட மா மலர் சூடும் வாட்போக்கியார்க்கு – தேவா-அப்:1922/3
பேய் தங்கு நீள் காட்டில் நட்டம் ஆடி பிறை சூடும் சடை மேல் ஓர் புனலும் சூடி – தேவா-அப்:2182/2
பேர் ஆயிரம் உடையாய் என்றேன் நானே பிறை சூடும் பிஞ்ஞகனே என்றேன் நானே – தேவா-அப்:2455/3
மீன் அகம் சேர் வெள்ள நீர் விதியால் சூடும் வேந்தனே விண்ணவர்-தம் பெருமான் மேக – தேவா-அப்:2489/3
வளம் கிளர் மா மதி சூடும் வேணியாரும் வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும் – தேவா-அப்:2684/1
விருத்தனே வேலை விடம் உண்ட கண்டா விரி சடை மேல் வெண் திங்கள் விளங்க சூடும்
ஒருத்தனே உமை_கணவா உலகமூர்த்தி நுந்தாத ஒண் சுடரே அடியார்-தங்கள் – தேவா-அப்:2700/1,2
மையினால் கண் எழுதி மாலை சூட்டி மயானத்தில் இடுவதன் முன் மதியம் சூடும்
ஐயனார்க்கு ஆள் ஆகி அன்பு மிக்கு அகம் குழைந்து மெய் அரும்பி அடிகள் பாதம் – தேவா-அப்:2702/2,3
விடையானை விண்ணவர்கள் எண்ணத்தானை வேதியனை வெண் திங்கள் சூடும் சென்னி – தேவா-அப்:2777/1
செற்றவனை செம் சடை மேல் திங்கள் சூடும் திரு ஆரூர் திரு மூலட்டானம் மேய – தேவா-அப்:2783/2
வானவனை மதி சூடும் வளவியானை மலைமகள் முன் வராகத்தின் பின்பே சென்ற – தேவா-அப்:2784/2
மெய் தவத்தை வேதத்தை வேத வித்தை விளங்கு இள மா மதி சூடும் விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2872/1
வானவனை வலிவலமும் மறைக்காட்டானை மதி சூடும் பெருமானை மறையோன்-தன்னை – தேவா-அப்:2980/1
சுரை உண்டு சூடும் பிறை ஒன்று உண்டு சூலமும் தண்டும் சுமந்தது உண்டு – தேவா-அப்:3044/2
மேல்


சூடுமே (2)

சுருக்கெனில் சுடரான் கழல் சூடுமே – தேவா-அப்:1983/4
சூடுமே அரை திகழ தோலும் பாம்பும் சுற்றுமே தொண்டை வாய் உமை ஓர்பாகம் – தேவா-அப்:2122/2
மேல்


சூடுவர் (7)

ஒன்று-கொல் ஆம் உயரும் மதி சூடுவர்
ஒன்று-கொல் ஆம் இடு வெண் தலை கையது – தேவா-அப்:177/2,3
நாற்றம் சூடுவர் நன் நறும் திங்களார் – தேவா-அப்:1185/2
பிறையும் சூடுவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1222/4
தேம்பல் வெண் மதி சூடுவர் தீயது ஓர் – தேவா-அப்:1323/3
மேகம் தோய் பிறை சூடுவர் மேகலை – தேவா-அப்:1587/1
புனலும் சூடுவர் போலும் புத்தூரரே – தேவா-அப்:1686/4
ஆறு ஏறும் சடை மேல் பிறை சூடுவர்
பாறு ஏறும் தலை ஏந்தி பல இலம் – தேவா-அப்:2060/2,3
மேல்


சூத்திரம் (1)

கண்டிகை பூண்டு கடி சூத்திரம் மேல் கபால வடம் – தேவா-அப்:1047/2
மேல்


சூர் (1)

சூர் அட்ட வேலவன் தாதையை சூழ் வயல் ஆர் அதிகை – தேவா-அப்:1006/3
மேல்


சூரபன்மாவை (1)

சமர சூரபன்மாவை தடிந்த வேல் – தேவா-அப்:1720/1
மேல்


சூரியர்தாம் (1)

சந்திரன்னொடு சூரியர்தாம் உடன் – தேவா-அப்:1593/1
மேல்


சூல் (1)

பெய்வானை பிச்சாடல் ஆடுவானை பிலவாய பேய் கணங்கள் ஆர்க்க சூல் அம்பு – தேவா-அப்:2589/2
மேல்


சூல்விப்பதே (1)

கறை_கண்ட நீ ஒரு பூ குறைவித்து கண் சூல்விப்பதே
பிறை துண்ட வார்சடையாய் பெரும் காஞ்சி எம் பிஞ்ஞகனே – தேவா-அப்:959/3,4
மேல்


சூல (9)

சூல படையானை சூழ் ஆக வீழ் அருவி – தேவா-அப்:187/1
சூல வஞ்சனை வல்ல எம் சுந்தரன் – தேவா-அப்:1242/1
சூல படை உடையார் தாமே போலும் சுடர் திங்கள் கண்ணி உடையார் போலும் – தேவா-அப்:2244/1
தூ வணத்த சுடர் சூல படையினான் காண் சூடர் மூன்றும் கண் மூன்றா கொண்டான்தான் காண் – தேவா-அப்:2329/2
நீர் ஏறு சுடர் சூல படையினான் காண் நின்மலன் காண் நிகர் ஏதும் இல்லாதான் காண் – தேவா-அப்:2331/3
ஏறு கொடும் சூல கையார்தாமே என்பு ஆபரணம் அணிந்தார்தாமே – தேவா-அப்:2448/3
மை அனைய கண்டத்தாய் மாலும் மற்றை வானவரும் அறியாத வண்ண சூல
கையவனே கடி இலங்கை_கோனை அன்று கால்விரலால் கதிர் முடியும் தோளும் செற்ற – தேவா-அப்:2532/1,2
தூண்டாமை சுடர்விடு நல் சோதி-தன்னை சூல படையானை காலன் வாழ்நாள் – தேவா-அப்:2551/2
அடையாதார் மும்மதிலும் தீயில் மூழ்க அடு கணை கோத்து எய்தானை அயில் கொள் சூல
படையானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2777/3,4
மேல்


சூலத்தர் (4)

காறு கண்டத்தர் கையது ஓர் சூலத்தர்
பாறின் ஓட்டினர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1317/3,4
கை கொள் சூலத்தர் கட்டுவாங்கத்தினர் – தேவா-அப்:1433/1
நிணம் புல்கு சூலத்தர் நீல_கண்டர் எண் தோளர் எண் நிறைந்த குணத்தினாலே – தேவா-அப்:2208/2
தொட்டு இலங்கு சூலத்தர் மழுவாள் ஏந்தி சுடர் கொன்றை தார் அணிந்து சுவைகள் பேசி – தேவா-அப்:2440/1
மேல்


சூலத்தரே (1)

ஏர் பரந்து அங்கு இலங்கு சூலத்தரே – தேவா-அப்:1929/4
மேல்


சூலத்தன் (5)

இரும்பு ஆர்ந்த சூலத்தன் ஏந்திய ஒர் வெண் மழுவன் என்கின்றாளால் – தேவா-அப்:55/1
கை உலாவிய சூலத்தன் கண்நுதல் – தேவா-அப்:1143/2
புனை பொன் சூலத்தன் போர் விடைஊர்தியான் – தேவா-அப்:1186/1
விழுது சூலத்தன் வெண் மழுவாள் படை – தேவா-அப்:1478/1
மூன்றம் ஆயின மூ இலை சூலத்தன்
மூன்று கண்ணினன் தீ தொழில் மூன்றினன் – தேவா-அப்:1946/2,3
மேல்


சூலத்தாய் (1)

இலை ஆரும் சூலத்தாய் எண் தோளானே எவ்விடத்தும் நீ அலாது இல்லை என்று – தேவா-அப்:2712/1
மேல்


சூலத்தால் (2)

அன்று அ அந்தகனை அயில் சூலத்தால்
கொன்றவன் குரங்காடுதுறையனே – தேவா-அப்:1708/3,4
சூலத்தால் அந்தகனை சுருள கோத்து தொல் உலகில் பல் உயிரை கொல்லும் கூற்றை – தேவா-அப்:2916/2
மேல்


சூலத்தான் (2)

அம்மான் காண் ஆடு அரவு ஒன்று ஆட்டினான் காண் அனல் ஆடி காண் அயில் வாய் சூலத்தான் காண் – தேவா-அப்:2327/2
கொலை வளர்த்த மூ இலைய சூலத்தான் காண் கொடும் குன்றன் காண் கொல்லை ஏற்றினான் காண் – தேவா-அப்:2335/3
மேல்


சூலத்தானை (3)

சூலத்தானை துணையிலியை தோளை குளிர தொழுதேனே – தேவா-அப்:149/4
சூலத்தானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2000/4
சில் மணிய மூ இலைய சூலத்தானை தென் சிராப்பள்ளி சிவலோகனை – தேவா-அப்:2312/2
மேல்


சூலத்தின் (1)

மூன்று-கொல் ஆம் அவர் சூலத்தின் மொய் இலை – தேவா-அப்:179/2
மேல்


சூலத்தினான் (1)

எரி ஆர் இலங்கிய சூலத்தினான் இமையாத முக்கண் – தேவா-அப்:803/2
மேல்


சூலத்தினானும் (1)

ஓடு இள வெண் பிறையானும் ஒளி திகழ் சூலத்தினானும்
ஆடு இளம் பாம்பு அசைத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:32/3,4
மேல்


சூலத்து (2)

முன் அளந்த மூவர்க்கும் முதல் ஆனான் காண் மூ இலை வேல் சூலத்து எம் கோலத்தான் காண் – தேவா-அப்:2580/2
அந்தகனை அயில் சூலத்து அழுத்தி கொண்டார் அரு மறையை தேர் குதிரை ஆக்கிக்கொண்டார் – தேவா-அப்:3029/1
மேல்


சூலபாணி-தன் (1)

சூலபாணி-தன் பாதம் தொழு-மினே – தேவா-அப்:1646/4
மேல்


சூலம் (21)

சூலம் கொப்பளித்த கையர் சுடர் விடு மழுவாள் வீசி – தேவா-அப்:245/1
இலையின் ஆர் சூலம் ஏந்தி ஏகம்பம் மேவினாரை – தேவா-அப்:436/3
கை எரி சூலம் ஏந்தும் கடவுளை நினையமாட்டேன் – தேவா-அப்:519/2
விரித்த பல் கதிர் கொள் சூலம் வெடிபடு தமருகம் கை – தேவா-அப்:712/1
ஏந்து கை சூலம் மழு எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:815/4
சுற்றிய பூத படையினன் சூலம் மழு ஒரு மான் – தேவா-அப்:859/3
கையது கால் எரி நாகம் கனல் விடு சூலம் அது – தேவா-அப்:863/1
மின் ஆரும் மூ இலை சூலம் என் மேல் பொறி மேவு கொண்டல் – தேவா-அப்:1028/3
சூலம் மான் மறி ஏந்திய கையினார் – தேவா-அப்:1131/3
சூலம் ஏந்துவர் தோல்உடைஆடையர் – தேவா-அப்:1450/1
சூலம் மான் மழு ஏந்தி சுடர் முடி – தேவா-அப்:1579/3
சூலம் மல்கிய கையும் சுடரொடு – தேவா-அப்:1627/1
வெய்யனே தண் கொன்றை மிலைத்த சென்னி சடையனே விளங்கு மழு சூலம் ஏந்தும் – தேவா-அப்:2121/2
அடைத்தான் ஆம் சூலம் மழு ஓர் நாகம் அசைத்தான் ஆம் ஆன் ஏறு ஒன்று ஊர்ந்தான் ஆகும் – தேவா-அப்:2237/3
சுட்ட அங்கம் கொண்டு துதைய பூசி சுந்தரனாய் சூலம் கை ஏந்தினானை – தேவா-அப்:2289/2
தூண்டு சுடர் மேனி தூ நீறு ஆடி சூலம் கை ஏந்தி ஓர் சுழல் வாய் நாகம் – தேவா-அப்:2435/1
கூர்ந்தவனே குற்றாலம் மேய கூத்தா கொடு மூ இலையது ஓர் சூலம் ஏந்தி – தேவா-அப்:2528/2
மூ இலை நல் சூலம் வலன் ஏந்தினானை மூன்று சுடர் கண்ணானை மூர்த்தி-தன்னை – தேவா-அப்:2973/1
பாரிடங்கள் உடன்பாட பயின்று நட்டம் பயில்வானை அயில் வாய சூலம் ஏந்தி – தேவா-அப்:2987/1
குணி புலி தோலினை ஆடை உடையா கொண்டார் சூலம் கை கொண்டார் தொண்டு எனை கொண்டாரே – தேவா-அப்:3031/4
சொரிகின்ற புனல் உண்டோ சூலம் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3037/4
மேல்


சூலமங்கை (1)

துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை தோணிபுரம் துருத்தி சோமீச்சுரம் – தேவா-அப்:2795/2
மேல்


சூலமும் (5)

தோள் பட்ட நாகமும் சூலமும் சுத்தியும் பத்திமையால் – தேவா-அப்:927/1
சூலமும் பாசமும் கொண்டு தொடர்ந்து அடர்ந்து ஓடி வந்த – தேவா-அப்:1021/3
அனலும் சூலமும் மான் மறி கையினர் – தேவா-அப்:1277/3
அயில் வாய சூலமும் காபாலமும் அமரும் திருக்கரத்தார் ஆன் ஏறு ஏறி – தேவா-அப்:2594/3
சுரை உண்டு சூடும் பிறை ஒன்று உண்டு சூலமும் தண்டும் சுமந்தது உண்டு – தேவா-அப்:3044/2
மேல்


சூலமே (1)

விட்டு இலங்கு சூலமே வெண் நூல் உண்டே ஓதுவதும் வேதமே வீணை உண்டே – தேவா-அப்:2106/3
மேல்


சூலை (5)

துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:3/2
பின்னை அடியேன் உமக்கு ஆளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:4/2
உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய் உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய் – தேவா-அப்:6/3
வயந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:7/2
துடி கொண்டார் கங்காளம் தோள் மேல் கொண்டார் சூலை தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3027/4
மேல்


சூழ் (145)

ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:10/4
அம் கோல வளை கவர்ந்தான் அணி பொழில் சூழ் பழனத்தான் – தேவா-அப்:119/3
கரு வரை சூழ் கடல் இலங்கை_கோமானை கருத்து அழிய – தேவா-அப்:133/1
பெரு வரை சூழ் வையகத்தார் பேர் நந்தி என்று ஏத்தும் – தேவா-அப்:133/3
அரு வரை சூழ் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:133/4
அறம் சூழ் அதிகைவீரட்டத்து அரிமான் ஏற்றை அடைந்தேனே – தேவா-அப்:148/4
கழித்தனர் கல் சூழ் கடி அரண் மூன்றும் – தேவா-அப்:169/3
சூல படையானை சூழ் ஆக வீழ் அருவி – தேவா-அப்:187/1
சூடினார் சூடல் மேவி சூழ் சுடர் சுடலை வெண் நீறு – தேவா-அப்:250/3
துத்தி ஐந்தலைய நாகம் சூழ் சடை முடி மேல் வைத்து – தேவா-அப்:253/2
வரி வரால் உகளும் தெண் நீர் கழனி சூழ் பழன வேலி – தேவா-அப்:273/3
தோடு உடை கைதையோடு சூழ் கிடங்கு அதனை சூழ்ந்த – தேவா-அப்:344/3
கலந்த நீர் காவிரீ சூழ் சோணாட்டு சோழர்-தங்கள் – தேவா-அப்:479/3
கனையும் மா கடல் சூழ் நாகை மன்னு காரோணத்தானை – தேவா-அப்:688/3
கையனை கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட – தேவா-அப்:689/3
கருத்தனை கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட – தேவா-அப்:690/3
கண்டனை கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட – தேவா-அப்:691/3
கறை மலி கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட – தேவா-அப்:692/3
கரு மலி கடல் சூழ் நாகைக்காரோணர் கமல பாதத்து – தேவா-அப்:696/1
சுற்றி கிடந்து தொழப்படுகின்றது சூழ் அரவம் – தேவா-அப்:796/2
கலை ஆர் கடல் சூழ் இலங்கையர்_கோன்-தன் முடி சிதற – தேவா-அப்:799/1
தெளித்து சுவை அமுது ஊட்டி அமரர்கள் சூழ் இருப்ப – தேவா-அப்:889/3
சேர்ப்பது வான திரை கடல் சூழ் உலகம் இதனை – தேவா-அப்:908/2
வல்லேன் புகவும் மதில் சூழ் இலங்கையர்_காவலனை – தேவா-அப்:953/2
குய்யம் பெய்தால் கொடி மா மதில் சூழ் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:958/4
சயசய என்று முப்போதும் பணிவன தண் கடல் சூழ்
வியல் நிலம் முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியல் நகர்க்கும் – தேவா-அப்:974/2,3
அரும்பு அவிழ் தண் பொழில் சூழ் அணி ஆரூர் அமர்ந்த பெம்மான் – தேவா-அப்:990/3
கந்தம் மலி பொழில் சூழ் கடல் நாகைக்காரோணம் என்றும் – தேவா-அப்:997/3
சூர் அட்ட வேலவன் தாதையை சூழ் வயல் ஆர் அதிகை – தேவா-அப்:1006/3
மாட மாளிகை சூழ் தில்லை அம்பலத்து – தேவா-அப்:1080/3
தேங்கு நீர் வயல் சூழ் தில்லை கூத்தனை – தேவா-அப்:1091/3
சோலை சூழ் புறங்காடு அரங்கு ஆகவே – தேவா-அப்:1151/3
ஆக்கும் தண் பொழில் சூழ் மறைக்காடரோ – தேவா-அப்:1168/2
சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடரோ – தேவா-அப்:1173/3
நீண்ட சூழ் சடை மேல் ஒர் நிலா மதி – தேவா-அப்:1192/1
எண்ணினார் பொழில் சூழ் இடைமருதினை – தேவா-அப்:1211/3
சொரிவிப்பார் மழை சூழ் கதிர் திங்களை – தேவா-அப்:1224/1
திரைக்கும் தண் புனல் சூழ் கரக்கோயிலை – தேவா-அப்:1264/3
பரு வரால் குதிகொள்ளும் பழனம் சூழ்
கரு அது ஆம் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1265/3,4
நிறையும் பூம் பொழில் சூழ் திரு நின்றியூர் – தேவா-அப்:1298/3
நிரை பொன் மா மதில் சூழ் திரு நின்றியூர் – தேவா-அப்:1300/2
நிலையின் ஆர் வயல் சூழ் திரு நின்றியூர் – தேவா-அப்:1302/3
உலவு பைம் பொழில் சூழ் திரு ஒற்றியூர் – தேவா-அப்:1311/3
திரையின் ஆர் புடை சூழ் திரு ஒற்றியூர் – தேவா-அப்:1314/3
மாட மா மதில் சூழ் வன்னியூரரே – தேவா-அப்:1326/4
ஓதம் மா கடல் சூழ் இலங்கைக்கு இறை – தேவா-அப்:1385/1
பொங்கு மா கடல் சூழ் இலங்கைக்கு இறை – தேவா-அப்:1426/1
கண் உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம் – தேவா-அப்:1467/3
மை உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம் – தேவா-அப்:1473/3
உறையும் பூம் பொழில் சூழ் கச்சி ஏகம்பம் – தேவா-அப்:1550/3
ஒள்ளிய கணம் சூழ் உமை_பங்கனார் – தேவா-அப்:1559/2
சுற்றும் பாய் புனல் சூழ் திரு வீரட்டம் – தேவா-அப்:1602/3
செந்நெல் ஆர் வயல் சூழ் திரு கோளிலி – தேவா-அப்:1642/3
கோலம் ஆம் பொழில் சூழ் திரு கோளிலி – தேவா-அப்:1646/3
கோலம் ஆம் பொழில் சூழ் திரு கோளிலி – தேவா-அப்:1650/3
வண்டு சேர் பொழில் சூழ் திரு மாற்பேறு – தேவா-அப்:1667/3
தொத்தினை சுடர் சோதியை சோலை சூழ்
கொத்து அலர் குரங்காடுதுறை உறை – தேவா-அப்:1701/2,3
சுற்று மாடங்கள் சூழ் திரு வாஞ்சியம் – தேவா-அப்:1745/3
தெற்று மாடங்கள் சூழ் திரு வாஞ்சியம் – தேவா-அப்:1748/3
கல் ஆரும் மதில் சூழ் தண் கருவிலி – தேவா-அப்:1766/3
கார் கொள் நீர் வயல் சூழ் தண் கருவிலி – தேவா-அப்:1769/3
துன்பமும் துயரும் எனும் சூழ் வினை – தேவா-அப்:1775/2
மஞ்சன் வார் கடல் சூழ் மங்கலக்குடி – தேவா-அப்:1803/1
வண்டு சேர் பொழில் சூழ் மங்கலக்குடி – தேவா-அப்:1807/1
சுற்றின் ஆர் மதில் சூழ் மணஞ்சேரியார் – தேவா-அப்:1926/3
அள்ளல் ஆர் வயல் சூழ் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1928/3
மன்னு வார் பொழில் சூழ் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1931/3
மாடம் சூழ் மருகல் பெருமான் திரு – தேவா-அப்:1935/3
ஏழு மா மலை ஏழ்பொழில் சூழ் கடல் – தேவா-அப்:1950/1
ஏழும் சூழ் அடியேன் மனத்து உள்ளவே – தேவா-அப்:1950/4
திகழும் சூழ் சுடர் வானொடு வைகலும் – தேவா-அப்:2023/1
கற்றானை கங்கை வார்சடையான்-தன்னை காவிரி சூழ் வலஞ்சுழியும் கருதினானை – தேவா-அப்:2087/1
சுரும்பு அமரும் கடி பொழில்கள் சூழ் தென் ஆரூர் சுடர் கொழுந்தை துளக்கு இல்லா விளக்கை மிக்க – தேவா-அப்:2091/3
சீர் ஏறு தண் வயல் சூழ் ஓத வேலி திரு வாஞ்சியத்தார் திரு நள்ளாற்றார் – தேவா-அப்:2099/2
நிலா வெண் மதி உரிஞ்ச நீண்ட மாடம் நிறை வயல் சூழ் நெய்த்தானம் மேய செல்வர் – தேவா-அப்:2103/3
அறை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் ஐயாற்று அமுதர் பழனம் நல்லம் – தேவா-அப்:2151/3
கறை ஆர் பொழில் புடை சூழ் கானப்பேரும் கழுக்குன்றும் தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2151/4
வரை ஆர் அருவி சூழ் மாநதியும் மாகாளம் கேதாரம் மா மேருவும் – தேவா-அப்:2152/3
கரை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் கடம்பந்துறை உறைவார் காப்புக்களே – தேவா-அப்:2152/4
நீர் ஆர் நிறை வயல் சூழ் நின்றியூரும் நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வாயிலும் – தேவா-அப்:2157/3
அம் தண் பொழில் புடை சூழ் அயோகந்தியும் ஆக்கூரும் ஆவூரும் ஆன்பட்டியும் – தேவா-அப்:2158/2
இறையவன் காண் ஏழ்உலகும் ஆயினான் காண் ஏழ்கடலும் சூழ் மலையும் ஆயினான் காண் – தேவா-அப்:2170/1
களி வண்டு ஆர் கரும் பொழில் சூழ் கண்டல் வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2204/3
மாகம் அடை மும்மதிலும் எய்தார்தாமும் மணி பொழில் சூழ் ஆரூர் உறைகின்றாரும் – தேவா-அப்:2248/3
விட்டு இலங்கு மா மழுவர் வேலை நஞ்சர் விடங்கர் விரி புனல் சூழ் வெண்காட்டு உள்ளார் – தேவா-அப்:2263/1
சொல் ஆக சொல்லியவா தோன்றும்தோன்றும் சூழ் அரவும் மான் மறியும் தோன்றும்தோன்றும் – தேவா-அப்:2266/2
பண் நிலவு பைம் பொழில் சூழ் பழனத்தானை பசும்பொன்னின் நிறத்தானை பால் நீற்றானை – தேவா-அப்:2276/2
கார் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2306/4
கண் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2307/4
கறை ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2308/4
அன்னம் ஆம் பொய்கை சூழ் அம்பரானை ஆச்சிராமநகரும் ஆனைக்காவும் – தேவா-அப்:2309/1
கன்னி அம் புன்னை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2309/4
அலங்கல் அம் கழனி சூழ் அணி நீர் கங்கை அவிர் சடை மேல் ஆதரித்த அம்மான்-தன்னை – தேவா-அப்:2311/2
கலங்கல் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2311/4
கல் மணிகள் வெண் திரை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2312/4
கண்டல் அம் கழனி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2313/4
கல்லாலின் கீழானை கழி சூழ் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2314/4
கனை கடலின் தெண் கழி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2315/4
வெய்யன் காண் தண் புனல் சூழ் செஞ்சடையான் காண் வெண் நீற்றான் காண் விசயற்கு அருள்செய்தான் காண் – தேவா-அப்:2334/3
அம் கமலத்து அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை அறுத்தவன் காண் அணி பொழில் சூழ் ஐயாற்றான் காண் – தேவா-அப்:2390/2
செங்கமல வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்த எம் செல்வன்தானே – தேவா-அப்:2390/4
செம் நலத்த வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2392/4
தெண் திரை நீர் வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2393/4
புடை சூழ் தேவர் குழாத்தார்தாமே பூந்துருத்தி நெய்த்தானம் மேயார்தாமே – தேவா-அப்:2454/2
அடைவே புனல் சூழ் ஐயாற்றார்தாமே அரக்கனையும் ஆற்றல் அழித்தார்தாமே – தேவா-அப்:2454/3
கறை கலந்த பொழில் கச்சி கம்பம் மேய கன வயிர திரள் தூணே கலி சூழ் மாடம் – தேவா-அப்:2487/3
துறவா துன்பம் துறந்தேன்-தன்னை சூழ் உலகில் ஊழ்வினை வந்து உற்றால் என்னே – தேவா-அப்:2558/2
அங்கை வைத்த சென்னியராய் அளக்கமாட்டா அனல் அவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:2573/2
மந்திரத்து மறைப்பொருளும் ஆயினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2574/4
வந்து ஒத்த நெடு மாற்கும் அறிவு ஒணான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2575/4
மன் உருவாய் மா மறைகள் ஓதினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2576/4
மாறு ஆய மதில் மூன்றும் மாய்வித்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2577/4
மன்றல் மணம் கமழும் வார் சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2578/4
மறையோடு மா கீதம் கேட்டான்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2579/4
மண் அளந்த மால் அறியா மாயத்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2580/4
மன்னும் மடந்தை ஓர்பாகத்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2581/4
வட்ட மதி பாகம் சூடினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2582/4
மை கொள் மணி மிடற்று வார் சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2583/4
மண் மலிந்த வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2666/4
மல் ஆர் வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2673/4
வங்கம் மலி கடல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2675/4
கண்ணார கண்டிருக்க களித்து எப்போதும் கடி பொழில் சூழ் தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2713/3
என் ஆனை கன்றினை என் ஈசன்-தன்னை எறி நீர் திரை உகளும் காவிரி சூழ்
தென் ஆனைக்காவானை தேனை பாலை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2715/3,4
மது வாரும் பொழில் புடை சூழ் வாய்மூரானை மறைக்காடு மேயானை ஆக்கூரானை – தேவா-அப்:2782/2
கரக்கோயில் கடி பொழில் சூழ் ஞாழற்கோயில் கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில் – தேவா-அப்:2801/2
மலையார்-தம் மகளொடு மாதேவன் சேரும் மறைக்காடு வண் பொழில் சூழ் தலைச்சங்காடு – தேவா-அப்:2802/1
தலையாலங்காடு தடம் கடல் சூழ் அம் தண் சாய்க்காடு தெள்ளு புனல் கொள்ளிக்காடு – தேவா-அப்:2802/2
நெடுவாயில் நிறை வயல் சூழ் நெய்தல்வாயில் நிகழ் முல்லைவாயிலொடு ஞாழல்வாயில் – தேவா-அப்:2803/2
மடு ஆர் தென் மதுரை நகர் ஆலவாயில் மறி கடல் சூழ் புனவாயில் மாடம் நீடு – தேவா-அப்:2803/3
குலை தெங்கு அம் சோலை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2810/4
கொந்து ஆர் பொழில் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2811/4
கொக்கு அமரும் வயல் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2813/4
குரவு அமரும் பொழில் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2816/4
திரு மருவு பொழில் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2844/4
சேம்பு ஆடு வயல் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2845/4
செறி பொழில் சூழ் மணி மாட திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2846/4
அர மதித்து செம்பொன்னின் ஆரம் பூணா அணிந்தவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:2849/3
நீல கடல் சூழ் இலங்கை_கோனை நெரிய விரலால் அடர்த்தார் தாமே – தேவா-அப்:2869/2
தொண்டர்க்கு தூ நெறியாய் நின்றான் தன்னை சூழ் நரகில் வீழாமே காப்பான் தன்னை – தேவா-அப்:2870/1
கண் தலம் சேர் நெற்றி இளம் காளை கண்டாய் கல் மதில் சூழ் கந்தமாதனத்தான் கண்டாய் – தேவா-அப்:2890/1
விண் ஆகி நிலன் ஆகி விசும்பும் ஆகி வேலை சூழ் ஞாலத்தார் விரும்புகின்ற – தேவா-அப்:2908/1
பொன்னி சூழ் ஐயாற்று எம் புனிதன்-தன்னை பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தினானை – தேவா-அப்:2923/2
கலம் சுழிக்கும் கரும் கடல் சூழ் வையம்-தன்னில் கள்ள கடலில் அழுந்தி வாளா – தேவா-அப்:3000/1
விரி சடையாய் வேதியனே வேத கீதா விரி பொழில் சூழ் வெண் காட்டாய் மீயச்சூராய் – தேவா-அப்:3062/1
கருவரை சூழ் கானல் இலங்கை_வேந்தன் கடும் தேர் மீது ஓடாமை காலால் செற்ற – தேவா-அப்:3066/3
மேல்


சூழ்-மின்கள் (1)

அண்ட_நாயகன்-தன் அடி சூழ்-மின்கள்
பண்டு நீர் செய்த பாவம் பறைத்திடும் – தேவா-அப்:1880/2,3
மேல்


சூழ்ச்சிமை (1)

துட்டரேல் அறியேன் இவர் சூழ்ச்சிமை
பட்ட நெற்றியர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1319/3,4
மேல்


சூழ்த்த (1)

சூழ்த்த மா மலர் தூவி துதியாதே – தேவா-அப்:1960/3
மேல்


சூழ்தர (1)

சோமனை அரவினோடு சூழ்தர கங்கை சூடும் – தேவா-அப்:427/1
மேல்


சூழ்தரு (4)

கனை கடல் சூழ்தரு நாகைக்காரோணத்து எம் கண்_நுதலே – தேவா-அப்:998/2
நினையும் தண் வயல் சூழ்தரு நின்றியூர் – தேவா-அப்:1299/3
கொக்கு அமர் பொழில் சூழ்தரு கோளிலி – தேவா-அப்:1632/3
கொத்து அலர் பொழில் சூழ்தரு கோளிலி – தேவா-அப்:1633/3
மேல்


சூழ்தரும் (1)

நெய்தல் ஆம்பல் நிறை வயல் சூழ்தரும்
மெய்யினார் வலம்கொள் மறைக்காடரோ – தேவா-அப்:1158/1,2
மேல்


சூழ்ந்த (47)

கழி உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:56/4
கான் உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:60/4
கடல் கருவி சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:61/4
வெற்றியூரில் விரி சுடரை விமலர்_கோனை திரை சூழ்ந்த
ஒற்றியூர் எம் உத்தமனை உள்ளத்துள்ளே வைத்தேனே – தேவா-அப்:145/3,4
நெதியன் தோள் நெரிய ஊன்றி நீடு இரும் பொழில்கள் சூழ்ந்த
மதியம் தோய் தில்லை-தன்னுள் மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:228/2,3
அரிவரால் வயல்கள் சூழ்ந்த அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:273/4
தோடு உடை கைதையோடு சூழ் கிடங்கு அதனை சூழ்ந்த
ஏடு உடை கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:344/3,4
எழில் தரு பொழில்கள் சூழ்ந்த இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:351/4
ஏற்றினார் இள வெண் திங்கள் இரும் பொழில் சூழ்ந்த காயம் – தேவா-அப்:361/3
நறவம் ஆர் பொழில்கள் சூழ்ந்த திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:389/3
செம் தாது புடைகள் சூழ்ந்த திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:410/4
மந்தம் ஆம் பொழில்கள் சூழ்ந்த மண்ணி தென்கரை மேல் மன்னி – தேவா-அப்:470/3
காய் இரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊரர்க்கு அம் பொன் – தேவா-அப்:538/3
தெண் திரை பழனம் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:650/4
சேல் உடை பழனம் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:651/4
தேன் உலாம் பொழில்கள் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:654/4
குரவொடு கோங்கு சூழ்ந்த கோவல்வீரட்டனாரே – தேவா-அப்:678/4
நலம் திகழ் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:680/4
நண்பு செய் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:681/4
அலை ஆர் புனல் பொன்னி சூழ்ந்த ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:893/4
நாள் கொண்ட தாமரை பூ தடம் சூழ்ந்த நல்லூர் அகத்தே – தேவா-அப்:949/1
சூழ்ந்த பாரிடம் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1406/3
பரு வரால் வயல் சூழ்ந்த பழனத்தான் – தேவா-அப்:1417/3
படை கொள் பாரிடம் சூழ்ந்த பைஞ்ஞீலியார் – தேவா-அப்:1476/2
தாழை தண் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியார் – தேவா-அப்:1480/3
கண்டம் கார் வயல் சூழ்ந்த பைஞ்ஞீலி எம் – தேவா-அப்:1481/3
தேர் உலாம் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலி எம் – தேவா-அப்:1484/3
போதனை புனல் சூழ்ந்த புத்தூரனை – தேவா-அப்:1683/3
மலங்கு பாய் வயல் சூழ்ந்த வலஞ்சுழி – தேவா-அப்:1742/3
சுரும்பித்த வண்டு இனங்கள் சூழ்ந்த அடி சோமனையும் காலனையும் காய்ந்த அடி – தேவா-அப்:2142/2
இண்டை சடைமுடியார் ஈமம் சூழ்ந்த இடு பிணக்காட்டு ஆடலார் ஏமம்-தோறும் – தேவா-அப்:2186/2
ஊகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த உயர் பொழில் அண்ணாவில் உறைகின்றாரும் – தேவா-அப்:2248/1
துன்று பொழில் கச்சி ஏகம்பன்தான் காண் சோற்றுத்துறையான் காண் சோலை சூழ்ந்த
தென்றலால் மணம் கமழும் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2391/3,4
மேகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2438/4
கண் அவன் காண் கருத்து அவன் காண் கழிந்தோர் செல்லும் கதி அவன் காண் மதி அவன் காண் கடல் ஏழ் சூழ்ந்த
மண் அவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2570/3,4
புடை சூழ்ந்த பூதங்கள் வேதம் பாட புலியூர் சிற்றம்பலத்தே நடம் ஆடுவார் – தேவா-அப்:2598/1
உடை சூழ்ந்த புலி தோலர் கலி கச்சி மேற்றளி உளார் குளிர் சோலை ஏகம்பத்தார் – தேவா-அப்:2598/2
விடை சூழ்ந்த வெல் கொடியார் மல்கு செல்வ வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2598/4
சூட்சி சிறிதும் இலாதாய் போற்றி சூழ்ந்த கடல் நஞ்சம் உண்டாய் போற்றி – தேவா-அப்:2660/2
செய் உலாம் கயல் பாய வயல்கள் சூழ்ந்த திரு புன்கூர் மேவிய செல்வனாரும் – தேவா-அப்:2678/3
மடை ஏறி கயல் பாய வயல்கள் சூழ்ந்த மயிலாடுதுறை உறையும் மணாளனாரும் – தேவா-அப்:2679/3
நீரானை காற்றானை தீ ஆனானை நீள் விசும்பாய் ஆழ் கடல்கள் ஏழும் சூழ்ந்த
பாரானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2776/3,4
மலை ஆர் திரள் அருவி பொன்னி சூழ்ந்த வலஞ்சுழியே புக்கு இடமா மன்னினாரே – தேவா-அப்:2808/4
பூ சூழ்ந்த பொழில் தழுவு புகலூர் உள்ளார் புறம்பயத்தார் அறம் புரி பூந்துருத்தி புக்கு – தேவா-அப்:2836/1
மா சூழ்ந்த பழனத்தார் நெய்த்தானத்தார் மா தவத்து வளர் சோற்றுத்துறையார் நல்ல – தேவா-அப்:2836/2
தீ சூழ்ந்த திகிரி திருமாலுக்கு ஈந்து திரு ஆனைக்காவில் ஓர் சிலந்திக்கு அ நாள் – தேவா-அப்:2836/3
கோவியொடு குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2838/4
மேல்


சூழ்ந்தது (1)

கடல் வலயம் சூழ்ந்தது ஒரு ஞாலம் ஆகி காண்கின்ற கதிரவனும் மதியும் ஆகி – தேவா-அப்:2910/2
மேல்


சூழ்ந்தவர் (2)

சுட்ட கொள்கையாராயினும் சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்து குளிர்விக்கும் – தேவா-அப்:1494/2,3
சுட்ட செய்கையர் ஆகிலும் சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்து குளிர்விக்கும் – தேவா-அப்:1598/2,3
மேல்


சூழ்ந்து (14)

நீண்ட திண் தோள் வலம் சூழ்ந்து நிலா கதிர் போல வெண் நூலும் – தேவா-அப்:12/2
சித்த வடமும் அதிகை சேண் உயர் வீரட்டம் சூழ்ந்து
தத்தும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:13/3,4
நாடற்கு அரியது ஒர் கூத்தும் நன்கு உயர் வீரட்டம் சூழ்ந்து
ஓடும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:18/3,4
வேழம் உரித்த நிலையும் விரி பொழில் வீரட்டம் சூழ்ந்து
தாழும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:19/3,4
வரங்கள் கொடுத்து அருள்செய்வான் வளர் பொழில் வீரட்டம் சூழ்ந்து
நிரம்பு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:20/3,4
வேளி சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே – தேவா-அப்:1613/4
விரைகள் சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே – தேவா-அப்:1618/4
வேலி சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே – தேவா-அப்:1619/4
தொத்து ஆம் அமரர் கணம் சூழ்ந்து போற்ற தோன்றாது என் உள்ளத்தின் உள்ளே நின்ற – தேவா-அப்:2234/3
வேதத்தோடு ஆறு அங்கம் சொன்னார் போலும் விடம் சூழ்ந்து இருண்ட மிடற்றார் போலும் – தேவா-அப்:2297/3
கடை சூழ்ந்து பலி தேரும் கங்காளனார் கழுமலத்தார் செழு மலர் தார் குழலியோடும் – தேவா-அப்:2598/3
திருக்கோயில் சிவன் உறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந்து இறைஞ்ச தீவினைகள் தீரும் அன்றே – தேவா-அப்:2801/4
மலை ஆகி மறி கடல் ஏழ் சூழ்ந்து நின்ற மண் ஆகி விண் ஆகி நின்றான்தான் காண் – தேவா-அப்:2953/2
துப்புரவு ஆர் சுரி சங்கின் தோடு கொண்டார் சுடர் முடி சூழ்ந்து அடி அமரர் தொழவும் கொண்டார் – தேவா-அப்:3026/3
மேல்


சூழ்ந்துகொண்டு (1)

தொழுது போற்றி நின்றேனையும் சூழ்ந்துகொண்டு
உழுத சால் வழியே உழுவான்-பொருட்டு – தேவா-அப்:1961/2,3
மேல்


சூழ்வினைகள் (2)

தொல்லை வான் சூழ்வினைகள் சூழ போந்து தூற்றியேன் ஆற்றியேன் சுடராய் நின்று – தேவா-அப்:2116/1
சுற்றி நின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில் சொல்லுகேன் கேள் நெஞ்சே துஞ்சா வண்ணம் – தேவா-அப்:2401/2
மேல்


சூழ்வுண்ட (1)

கயல் பாயும் கண்டல் சூழ்வுண்ட வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2209/3
மேல்


சூழ (43)

பக்கமே பாரிடங்கள் சூழ படுதலையில் – தேவா-அப்:188/1
பத்தர்களோடு பாவையர் சூழ பலி பின்னே – தேவா-அப்:208/2
பொடிகள் பூசி பாடும் தொண்டர் புடை சூழ
அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:215/3,4
பூதனார் பூதம் சூழ புலி உரி அதளனார் தாம் – தேவா-அப்:222/2
பாடு உடை பூதம் சூழ பரமனார் மருத வைப்பில் – தேவா-அப்:344/2
பொறி அரவு அரையில் ஆர்த்து பூதங்கள் பலவும் சூழ
முறி தரு வன்னி கொன்றை முதிர் சடை மூழ்க வைத்து – தேவா-அப்:349/1,2
நிறைதரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் என்று – தேவா-அப்:366/3
நெடி தரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் மேவி – தேவா-அப்:367/3
பாடிய பூதம் சூழ பண்ணுடன் பலவும் சொல்லி – தேவா-அப்:368/2
தேன் அமர் பொழில்கள் சூழ திகழும் நெய்த்தானம் மேய – தேவா-அப்:369/3
நிழல் உமிழ் சோலை சூழ நீள் வரி வண்டு இனங்கள் – தேவா-அப்:494/3
பாடராய் பூதம் சூழ பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:563/4
பொங்கு வெண் நீறு அணிந்து பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2096/4
புறங்காட்டு எரி ஆடி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2098/4
போர் ஏறு தாம் ஏறி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2099/4
போர ஆர் விடை ஏறி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2100/4
போது ஆர் சடை தாழ பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2101/4
புறம் தாழ் சடை தாழ பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2102/4
புலா வெண் தலை ஏந்தி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2103/4
பூதங்கள் சூழ புலி தோல் வீக்கி புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2105/4
பட்டு உடுத்து தோல் போர்த்து பாம்பு ஒன்று ஆர்த்து பகவனார் பாரிடங்கள் சூழ நட்டம் – தேவா-அப்:2106/1
தொல்லை வான் சூழ்வினைகள் சூழ போந்து தூற்றியேன் ஆற்றியேன் சுடராய் நின்று – தேவா-அப்:2116/1
பொருள் உடையர்அல்லர் இலரும் அல்லர் புலி தோல் உடை ஆக பூதம் சூழ
அருள் உடைய அம் கோதை மாலை மார்பர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2176/3,4
பொடி ஏறும் மேனியராய் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2212/4
புற்று அரவ கச்சு ஆர்த்து பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2213/4
போகாத வேடத்தர் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2214/4
பொறி இலங்கு பாம்பு ஆர்த்து பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2218/4
பொல்லாத வேடத்தர் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2219/4
புரை ஏறு தாம் ஏறி பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2220/4
வானம் இது எல்லாம் உடையான்-தன்னை வரி அரவ கச்சானை வன் பேய் சூழ
கானம் அதில் நடம் ஆட வல்லான்-தன்னை கடைக்கண்ணால் மங்கையையும் நோக்கா என் மேல் – தேவா-அப்:2278/1,2
அலைசாமே அலை கடல் நஞ்சு உண்ட நாளோ அமரர் கணம் புடை சூழ இருந்த நாளோ – தேவா-அப்:2426/3
போகம் பல உடைத்தாய் பூதம் சூழ புலி தோல் உடையா புகுந்து நின்றார் – தேவா-அப்:2438/2
சிரித்தானை சீர் ஆர்ந்த பூதம் சூழ திரு சடை மேல் திங்களும் பாம்பும் நீரும் – தேவா-அப்:2519/3
பறை காட்டும் குழி விழி கண் பல் பேய் சூழ பழையனூர் ஆலங்காட்டு அடிகள் பண்டு ஓர் – தேவா-அப்:2600/3
பொன் ஒத்த திரு மேனி புனிதர் போலும் பூத கணம் புடை சூழ வருவார் போலும் – தேவா-அப்:2619/2
மண் அளந்த மணி_வண்ணர்தாமும் மற்றை மறையவனும் வானவரும் சூழ நின்று – தேவா-அப்:2666/1
கலை நவின்ற மறையவர்கள் காணக்காண கடு விடை மேல் பாரிடங்கள் சூழ காதல் – தேவா-அப்:2667/3
போவாரை கண்டு அடியேன் பின்பின் செல்ல புறக்கணித்து தம்முடைய பூதம் சூழ
வாவா என உரைத்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2669/3,4
முறித்தது ஒரு தோல் உடுத்து முண்டம் சாத்தி முனி கணங்கள் புடை சூழ முற்றம்-தோறும் – தேவா-அப்:2671/2
பொக்கணமும் புலி தோலும் புயத்தில் கொண்டார் பூத படைகள் புடை சூழ கொண்டார் – தேவா-அப்:3028/1
பண்டை எழுவர் படியும் உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ – தேவா-அப்:3036/2
தொண்டர்கள் சூழ தொடர்ச்சி உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3036/4
பண் ஆர்ந்த வீணை பயின்றது உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ – தேவா-அப்:3039/1
மேல்


சூழல் (3)

வஞ்ச பெண் இருந்த சூழல் வான் தவழ் மதியம் தோயும் – தேவா-அப்:730/2
நின்ற சூழல் அறிவு அரியான் இடம் – தேவா-அப்:1479/2
சொல் ஆகி சொல்லுக்கு ஓர் பொருளும் ஆகி சுலாவு ஆகி சுலாவுக்கு ஓர் சூழல் ஆகி – தேவா-அப்:3007/3
மேல்


சூழலாய் (1)

சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற சொலற்கு அரிய சூழலாய் இது உன் தன்மை – தேவா-அப்:3018/2
மேல்


சூழலான் (1)

விட்டு உருவம் கிளர்கின்ற சோதியான் ஆம் விண்ணவர்க்கும் அறியாத சூழலான் ஆம் – தேவா-அப்:2241/1
மேல்


சூழலில் (1)

நின்ற சூழலில் நீள் எரி ஆகியே – தேவா-அப்:1435/4
மேல்


சூழலே (1)

கொண்ட தொண்டரை துன்னினும் சூழலே – தேவா-அப்:1973/4
மேல்


சூழவே (1)

ஒன்பதுஒன்பது பல் கணம் சூழவே
ஒன்பது ஆம் அவை தீ தொழிலின் உரை – தேவா-அப்:1952/2,3
மேல்


சூழா (1)

கோல கோபுர கோகரணம் சூழா கால்களால் பயன் என் – தேவா-அப்:90/2
மேல்


சூழாராகில் (1)

ஒருகாலும் திருக்கோயில் சூழாராகில் உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணாராகில் – தேவா-அப்:3020/2
மேல்


சூழிட்டு (1)

சூழிட்டு இருக்கும் நல் சூளாமணியும் சுடலை நீறும் – தேவா-அப்:1044/2
மேல்


சூழும் (5)

சூழும் அரவ துகிலும் துகில் கிழி கோவண கீளும் – தேவா-அப்:19/1
மந்தி பாய் பொழில் சூழும் மாற்பேறு என – தேவா-அப்:1679/3
துதிசெய்து துன்று மலர் கொண்டு தூவி சூழும் வலம்செய்து தொண்டு பாடி – தேவா-அப்:2402/3
உரம் மதித்த சலந்தன்-தன் ஆகம் கீண்ட ஓர் ஆழி படைத்தவன் காண் உலகு சூழும்
வரம் மதித்த கதிரவனை பல் கொண்டான் காண் வானவர்_கோன் புயம் நெரித்த வல்லாளன் காண் – தேவா-அப்:2849/1,2
சூழும் துயரம் அறுப்பார் போலும் தோற்றம் இறுதியாய் நின்றார் போலும் – தேவா-அப்:2967/1
மேல்


சூள் (1)

என்னொடும் சூள் அறும் அஞ்சல் நெஞ்சே இமையாத முக்கண் – தேவா-அப்:1069/3
மேல்


சூளாமணி (2)

சுடலை பொடி சுண்ணம் மாசுணம் சூளாமணி கிடந்து – தேவா-அப்:1036/3
சூளாமணி சேர் முடியான்-தன்னை சுண்ண வெண் நீறு அணிந்த சோதியானை – தேவா-அப்:2381/1
மேல்


சூளாமணிதான் (1)

தூண்டு சுடர் அனைய சோதி கண்டாய் தொல் அமரர் சூளாமணிதான் கண்டாய் – தேவா-அப்:2317/1
மேல்


சூளாமணியும் (3)

சுண்ண வெண் சந்தன சாந்தும் சுடர் திங்கள் சூளாமணியும்
வண்ண உரிவை உடையும் வளரும் பவள நிறமும் – தேவா-அப்:11/1,2
சூழிட்டு இருக்கும் நல் சூளாமணியும் சுடலை நீறும் – தேவா-அப்:1044/2
சோதி திருக்கும் நல் சூளாமணியும் சுடலை நீறும் – தேவா-அப்:1048/2
மேல்


சூளைகள் (1)

உந்தி நின்றார் உன்தன் ஓலக்க சூளைகள் வாய்தல் பற்றி – தேவா-அப்:965/1
மேல்


சூறை (1)

துள்ளுவர் சூறை கொள்வர் தூ நெறி விளைய ஒட்டார் – தேவா-அப்:750/2

மேல்