பூ – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பூ 42
பூக்கள் 1
பூக்கும் 3
பூக்குளால் 2
பூகம் 1
பூங்கணையான் 1
பூங்கணைவேளை 1
பூங்கழலான் 1
பூங்குழலாளை 1
பூங்கொத்து 1
பூங்கோயிலுள் 1
பூச 5
பூசம் 2
பூசல் 3
பூசனை 6
பூசனைகள் 2
பூசா 1
பூசி 30
பூசிக்கும் 1
பூசிய 6
பூசினான் 1
பூசினானே 2
பூசினானை 1
பூசு 1
பூசும் 9
பூசுரர் 1
பூசூவர் 1
பூசை 2
பூட்சி 1
பூட்டி 3
பூடும் 1
பூண் 12
பூண்ட 12
பூண்டது 4
பூண்டவன் 1
பூண்டாய் 2
பூண்டாயும் 1
பூண்டார் 12
பூண்டார்தாமே 1
பூண்டான் 1
பூண்டான்-தன்னை 3
பூண்டானே 1
பூண்டானை 3
பூண்டு 22
பூண்டுகொண்டு 1
பூண்டேனுக்கே 1
பூண்பர் 4
பூண்பனவும் 1
பூண 6
பூணா 2
பூணாய் 1
பூணானை 1
பூணியாய் 1
பூணில் 1
பூணின் 1
பூணினர் 1
பூணுதல் 1
பூணும் 1
பூத்த 2
பூத்தன 1
பூத்தானத்தான் 1
பூத்து 3
பூத 29
பூத_நாயகன் 4
பூதங்கள் 10
பூதங்களாய் 1
பூதத்தர் 1
பூதத்தார் 1
பூதத்தான் 3
பூதத்தின் 2
பூதத்தினானும் 1
பூதத்து 1
பூதநாதர் 1
பூதநாதன் 2
பூதநாதனை 1
பூதம் 37
பூதமாய் 1
பூதமும் 2
பூதலங்கள் 1
பூதலமும் 1
பூதன் 2
பூதனார் 1
பூதி 6
பூதியனை 1
பூந்துகிலாளொடும் 1
பூந்துருத்தி 39
பூந்துறை 1
பூநீர் 1
பூம் 66
பூம்புகார் 1
பூமகள் 1
பூமகள்_கேள்வனும் 1
பூமி 6
பூமியீர் 1
பூமேலானும் 1
பூரணன் 2
பூரித்தான் 1
பூரித்து 1
பூரியா 1
பூலோக 1
பூவண 1
பூவணத்தார் 1
பூவணத்து 12
பூவணம் 1
பூவணமும் 5
பூவணமோ 1
பூவனூர் 9
பூவனூரன் 1
பூவனூரனை 1
பூவாய் 1
பூவின் 3
பூவின்-கண் 1
பூவின்_நாயகன் 1
பூவினில் 1
பூவினின் 1
பூவினுக்கு 1
பூவினை 1
பூவுக்கு 1
பூவும் 2
பூவைகாள் 1
பூவையாய் 1
பூவொடு 1
பூழியான் 1


பூ (42)

பூ கையால் அட்டி போற்றி என்னாத இ ஆக்கையால் பயன் என் – தேவா-அப்:89/2
பூ பிணை திருந்து அடி பொருந்த கைதொழ – தேவா-அப்:113/2
பூ மன் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:162/4
பூ ஆன மூன்றுமுந்நூற்றுஅறுபதும் ஆகும் எந்தை – தேவா-அப்:292/3
சோதியுள் சுயராய் தோன்றி சொல்லினை இறந்தார் பல் பூ
கோதி வண்டு அறையும் சோலை குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:476/3,4
ஏறு உடன் ஏழ் அடர்த்தான் எண்ணி ஆயிரம் பூ கொண்டு – தேவா-அப்:480/1
வேறும் ஓர் பூ குறைய மெய் மலர் கண்ணை மிண்ட – தேவா-அப்:480/3
திரு வரை அனைய பூ மேல் திசைமுகன் அவனும் காணான் – தேவா-அப்:536/2
நீற்றினை நிறைய பூசி நித்தல் ஆயிரம் பூ கொண்டு – தேவா-அப்:626/1
பூ மலி கொன்றை சூட்ட பொறாத தன் தாதை தாளை – தேவா-அப்:634/2
பூ ஆர் அடிச்சுவடு என் மேல் பொறித்துவை போக விடில் – தேவா-அப்:933/2
நாள் கொண்ட தாமரை பூ தடம் சூழ்ந்த நல்லூர் அகத்தே – தேவா-அப்:949/1
கறை_கண்ட நீ ஒரு பூ குறைவித்து கண் சூல்விப்பதே – தேவா-அப்:959/3
பூ ஆர் கடந்தையுள் தூங்கானைமாடத்து எம் புண்ணியனே – தேவா-அப்:1029/4
பொன்னம் பாலிக்கும் மேலும் இ பூ மிசை – தேவா-அப்:1071/2
பொன் அம் கொன்றையும் பூ அணி மாலையும் – தேவா-அப்:1179/1
பூ மென் கோதை உமை ஒருபாகனை – தேவா-அப்:1251/1
பூ வணத்தவன் புண்ணியன் நண்ணி அங்கு – தேவா-அப்:1285/1
பூ கரத்தின் புரிகிலர் மூடர்கள் – தேவா-அப்:1423/2
பூ உலாம் சடை மேல் புனல் சூடினான் – தேவா-அப்:1431/1
பூ கொள் சேவடியான் கச்சி ஏகம்பம் – தேவா-அப்:1553/3
பூ கை கொண்டு அரன் பொன் அடி போற்றிலார் – தேவா-அப்:1958/1
இட்டு கொள்வன பூ உள நீர் உள – தேவா-அப்:1969/2
பூ பெய் கூடை புனைந்து சுமந்திலர் – தேவா-அப்:2007/2
இரு நிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி இன்புற்றார் இட்ட பூ ஏறும் அடி – தேவா-அப்:2143/3
தேன பூ வண்டு உண்ட கொன்றையான் காண் திரு ஏகம்பத்தான் காண் தேன் ஆர்ந்து உக்க – தேவா-அப்:2169/1
பூ ஆய பீடத்து மேல் அயனும் பூமி அளந்தானும் போற்றி இசைப்ப – தேவா-அப்:2221/2
பூ ஆர்ந்த கொன்றை பொறி வண்டு ஆர்க்க புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2221/4
பூ தான் ஆம் பூவின் நிறத்தானும் ஆம் பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற – தேவா-அப்:2235/1
பூ ஆர் புனல் அணவு புன்கூர் வாழ்வர் புரம் மூன்றும் ஒள் அழலா காய தொட்ட – தேவா-அப்:2261/3
பூ விரியும் மலர் கொன்றை சடையினானை புறம்பயத்து எம்பெருமானை புகலூரானை – தேவா-அப்:2292/1
நற படு பூ மலர் தூபம் தீபம் நல்ல நறும் சாந்தம் கொண்டு ஏத்தி நாளும் வானோர் – தேவா-அப்:2389/3
புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டு பூ மாலை புனைந்து ஏத்தி புகழ்ந்து பாடி – தேவா-அப்:2397/2
பூ பிரியா நான்முகனும் புள்ளின் மேலை புண்டரிகக்கண்ணானும் போற்றி என்ன – தேவா-அப்:2400/3
பூ ஆர்ந்த சென்னி புனிதா போற்றி புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி – தேவா-அப்:2413/1
பூ மலரான் ஏத்தும் புனிதன் கண்டாய் புணர்ச்சி பொருள் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2481/2
பூ சூழ்ந்த பொழில் தழுவு புகலூர் உள்ளார் புறம்பயத்தார் அறம் புரி பூந்துருத்தி புக்கு – தேவா-அப்:2836/1
பூ உற்ற நாற்றமாய் நின்றார் தாமே புனித பொருள் ஆகி நின்றார் தாமே – தேவா-அப்:2862/2
இருந்த மணி விளக்கு அதனை நின்ற பூ மேல் எழுந்தருளி இருந்தானை எண் தோள் வீசி – தேவா-அப்:2918/2
குறி இலங்கு மிடற்றானை மடல் தேன் கொன்றை சடையானை மடை-தோறும் கமல மென் பூ
செறி எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2991/3,4
பூ ஆகி பூவுக்கு ஓர் நாற்றம் ஆகி பூக்குளால் வாசமாய் நின்றான் ஆகி – தேவா-அப்:3012/3
பூ ஆர்ந்த பொன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3063/4
மேல்


பூக்கள் (1)

பூக்கள் கொண்டு அவன் பொன் அடி போற்றினால் – தேவா-அப்:1488/3
மேல்


பூக்கும் (3)

கரும்பானல் பூக்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:55/4
பூக்கும் தாழை புறணி அருகு எலாம் – தேவா-அப்:1155/1
பூக்கும் தாழை புறணி அருகு எலாம் – தேவா-அப்:1168/1
மேல்


பூக்குளால் (2)

பூ தான் ஆம் பூவின் நிறத்தானும் ஆம் பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற – தேவா-அப்:2235/1
பூ ஆகி பூவுக்கு ஓர் நாற்றம் ஆகி பூக்குளால் வாசமாய் நின்றான் ஆகி – தேவா-அப்:3012/3
மேல்


பூகம் (1)

ஆலும் நீர் கொண்டல் பூகம் அணி அணாமலை உளானே – தேவா-அப்:617/3
மேல்


பூங்கணையான் (1)

பூத்தானத்தான் முடியை பொருந்தா வண்ணம் புணர்த்தானை பூங்கணையான் உடலம் வேவ – தேவா-அப்:2518/2
மேல்


பூங்கணைவேளை (1)

நஞ்சு அடைந்த கண்டத்து நாதன்-தன்னை நளிர் மலர் பூங்கணைவேளை நாசம் ஆக – தேவா-அப்:2922/1
மேல்


பூங்கழலான் (1)

பூங்கழலான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:981/4
மேல்


பூங்குழலாளை (1)

வார் தரு பூங்குழலாளை மருவி உடன்வைத்தவனும் – தேவா-அப்:37/3
மேல்


பூங்கொத்து (1)

பூங்கொத்து ஆயின மூன்றொடு ஓர் ஐந்து இட்டு – தேவா-அப்:1615/1
மேல்


பூங்கோயிலுள் (1)

பூங்கோயிலுள் மகிழ்ந்து போகாது இருந்தாரே – தேவா-அப்:191/4
மேல்


பூச (5)

பிணிந்தார் பொடிகொண்டு மெய் பூச வல்லீர் பெற்றம் ஏற்று உகந்தீர் சுற்றும் வெண் தலை கொண்டு – தேவா-அப்:3/3
நீறு மெய் பூச வல்லானும் நினைப்பவர் நெஞ்சத்து உளானும் – தேவா-அப்:34/1
சங்கினுள் முத்தம் வைத்தார் சாம்பலும் பூச வைத்தார் – தேவா-அப்:301/2
பொடி-தனை பூச வைத்தார் பொங்கு வெண் நூலும் வைத்தார் – தேவா-அப்:375/1
சங்கு அணி குழையும் வைத்தார் சாம்பர் மெய் பூச வைத்தார் – தேவா-அப்:379/1
மேல்


பூசம் (2)

பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே – தேவா-அப்:1205/4
பூசம் நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1697/3
மேல்


பூசல் (3)

இட்டார் அமரர் வெம் பூசல் என கேட்டு எரி விழியா – தேவா-அப்:801/2
பூசல் நாம் இடுதும் புகலூர்க்கே – தேவா-அப்:1529/4
கூடினார் உமை அவளும் கோலம் கொள்ள கொலை பகழி உடன் கோத்து கோர பூசல்
ஆடினார் பெரும் கூத்து காளி காண அரு மறையோடு ஆறு அங்கம் ஆய்ந்துகொண்டு – தேவா-அப்:2912/2,3
மேல்


பூசனை (6)

பூசனை பூசனைகள் உகப்பானை பூவின்-கண் – தேவா-அப்:67/2
பூசனை ஈசனார்க்கு போற்று அவி காட்டினோமே – தேவா-அப்:739/4
பூசனை புனிதன்-தன்னை புணரும் புண்டரிகத்தானை – தேவா-அப்:760/2
பூசனை பூசுரர் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:979/4
பண்ணின் ஆர் மறை பல்பல பூசனை
மண்ணினார் செய்வது அன்றியும் வைகலும் – தேவா-அப்:1260/1,2
பூசனை புணரில் புணர்வு ஆயது ஓர் – தேவா-அப்:2064/2
மேல்


பூசனைகள் (2)

பூசனை பூசனைகள் உகப்பானை பூவின்-கண் – தேவா-அப்:67/2
மிக்க பூசனைகள் செய்வான் மென் மலர் ஒன்று காணாது – தேவா-அப்:637/2
மேல்


பூசா (1)

பூண் அலா பூணானை பூசா சாந்தம் உடையானை முடை நாறும் புன் கலத்தில் – தேவா-அப்:2197/1
மேல்


பூசி (30)

தேய் பொடி வெள்ளை பூசி அதன் மேல் ஒர் திங்கள் திலகம் பதித்த நுதலர் – தேவா-அப்:74/1
விலையிலி சாந்தம் என்று வெறி நீறு பூசி விளையாடும் வேட விகிர்தர் – தேவா-அப்:80/3
பொடிகள் பூசி பாடும் தொண்டர் புடை சூழ – தேவா-அப்:215/3
நீறு மெய் பூசி நின்று நீண்டு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:219/4
சடையும் கொப்பளித்த திங்கள் சாந்தம் வெண் நீறு பூசி
உடையும் கொப்பளித்த நாகம் உள்குவார் உள்ளத்து என்றும் – தேவா-அப்:241/2,3
சோதியாய் சுடரும் ஆனார் சுண்ண வெண் சாந்து பூசி
ஓதி வாய் உலகம் ஏத்த உகந்து தாம் அருள்கள்செய்வார் – தேவா-அப்:372/1,2
பாலனார் பசுபதியார் பால் வெள்ளை நீறு பூசி
காலனை காலால் காய்ந்தார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:425/2,3
நீற்றினை நிறைய பூசி நித்தலும் நியமம் செய்து – தேவா-அப்:477/1
சுட்டிட்ட நீறு பூசி சுடு பிண காடர் ஆகி – தேவா-அப்:561/2
மெய்யராய் மேனி-தன் மேல் விளங்கு வெண் நீறு பூசி
உய்வராய் உள்குவார்கட்கு உவகைகள் பலவும் செய்து – தேவா-அப்:562/2,3
சுடர்விடு மேனி-தன் மேல் சுண்ண வெண் நீறு பூசி
படர் சடை மதியம் சேர்த்தி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:567/3,4
பொடி கொடு பூசி பொல்லா குரம்பையில் புந்தி ஒன்றி – தேவா-அப்:608/1
நீற்றினை நிறைய பூசி நித்தல் ஆயிரம் பூ கொண்டு – தேவா-அப்:626/1
தீ வண சாம்பர் பூசி திரு உரு இருந்த ஆறும் – தேவா-அப்:747/2
சாம்பலை பூசி தரையில் புரண்டு நின் தாள் சரண் என்று – தேவா-அப்:963/3
சாம்பலை பூசி சலம் இன்றி தொண்டுபட்டு உய்ம்-மின்களே – தேவா-அப்:986/4
பொடிக்கொண்டு பூசி புகும் தொண்டர் பாதம் பொறுத்த பொற்பால் – தேவா-அப்:989/3
சாம்பலை பூசி தரையில் புரண்டு நின் தாள் பரவி – தேவா-அப்:1031/1
சுண்ண நீறு மெய் பூசி சுடலையின் – தேவா-அப்:1127/3
தீ வண திருநீறு மெய் பூசி ஓர் – தேவா-அப்:1285/3
சுட்ட நீறு மெய் பூசி சுடலையுள் – தேவா-அப்:1412/1
நீறு பூசி நிமிர் சடை மேல் பிறை – தேவா-அப்:1747/1
நீறு பூசி நிலா மதி சூடிலும் – தேவா-அப்:2030/2
வரு பிறப்பு ஒன்று உணராது மாசு பூசி வழி காணாதவர் போல்வார் மனத்தன் ஆகி – தேவா-அப்:2111/2
சுண்ணங்கள் தாம் கொண்டு துதைய பூசி தோல் உடுத்து நூல் பூண்டு தோன்றத்தோன்ற – தேவா-அப்:2172/3
வெந்தார் வெண் பொடி பூசி வெள்ளை மாலை விரி சடை மேல் தாம் சூடி வீணை ஏந்தி – தேவா-அப்:2173/1
வீறு உடைய ஏறு ஏறி நீறு பூசி வெண் தோடு பெய்து இடங்கை வீணை ஏந்தி – தேவா-அப்:2177/1
சுட்ட அங்கம் கொண்டு துதைய பூசி சுந்தரனாய் சூலம் கை ஏந்தினானை – தேவா-அப்:2289/2
நரை ஆர்ந்த விடை ஏறி நீறு பூசி நாகம் கச்சு அரைக்கு ஆர்த்து ஓர் தலை கை ஏந்தி – தேவா-அப்:2536/1
விடிவதுமே வெண் நீற்றை மெய்யில் பூசி வெளுத்து அமைந்த கீளொடு கோவணமும் தற்று – தேவா-அப்:2697/1
மேல்


பூசிக்கும் (1)

சிறப்போடு பூசிக்கும் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2389/4
மேல்


பூசிய (6)

வெள்ளி பொடி பவள புறம் பூசிய வேதியனே – தேவா-அப்:1050/4
பொடிகள் பூசிய பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1386/3
சுற்றும் பூசிய நீற்றொடு கோவணம் – தேவா-அப்:1982/2
வெந்த நீறு மெய் பூசிய வேதியன் – தேவா-அப்:2033/3
மெய்யன் மேதகு வெண் பொடி பூசிய
மை கொள் கண்டத்தன் மான் மறி கையினான் – தேவா-அப்:2035/2,3
முல்லை அம் கண்ணி முடியாய் போற்றி முழு நீறு பூசிய மூர்த்தி போற்றி – தேவா-அப்:2131/1
மேல்


பூசினான் (1)

வெந்து ஒத்த நீறு மெய் பூசினான் காண் வீரன் காண் வியன் கயிலை மேவினான் காண் – தேவா-அப்:2575/3
மேல்


பூசினானே (2)

நெற்றி மேல் கண்ணினானே நீறு மெய் பூசினானே
கற்றை புன் சடையினானே கடல் விடம் பருகினானே – தேவா-அப்:488/1,2
நீறு மெய் பூசினானே நிழல் திகழ் மழுவினானே – தேவா-அப்:490/1
மேல்


பூசினானை (1)

பொன் மணி அம் பூம் கொன்றைமாலையானை புண்ணியனை வெண் நீறு பூசினானை
சில் மணிய மூ இலைய சூலத்தானை தென் சிராப்பள்ளி சிவலோகனை – தேவா-அப்:2312/1,2
மேல்


பூசு (1)

தேவா திருவடி நீறு என்னை பூசு செந்தாமரையின் – தேவா-அப்:1029/3
மேல்


பூசும் (9)

செம்மை வெண் நீறு பூசும் சிவன் அவன் தேவதேவன் – தேவா-அப்:758/1
வெந்த நீறு மெய் பூசும் நல் மேனியர் – தேவா-அப்:1149/1
வெந்த வெண் பொடி பூசும் விகிர்தரோ – தேவா-அப்:1169/1
சுண்ண வெண் பொடி பூசும் சுவண்டரோ – தேவா-அப்:1171/1
வெந்த வெண் பொடி பூசும் விகிர்தனார் – தேவா-அப்:1212/1
நீறு ஏற்ப பூசும் அகலத்தானை நின்மலன்-தன்னை நிமலன்-தன்னை – தேவா-அப்:2112/3
முண்டத்து முக்கண் உடையார் போலும் முழு நீறு பூசும் முதல்வர் போலும் – தேவா-அப்:2372/2
சதுரா சதுர குழையாய் போற்றி சாம்பர் மெய் பூசும் தலைவா போற்றி – தேவா-அப்:2658/2
ஊன் ஒத்த வேல் ஒன்று உடையார் போலும் ஒளி நீறு பூசும் ஒருவர் போலும் – தேவா-அப்:2966/2
மேல்


பூசுரர் (1)

பூசனை பூசுரர் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:979/4
மேல்


பூசூவர் (1)

சாம்பல் பூசூவர் தாழ் சடை கட்டுவர் – தேவா-அப்:1323/1
மேல்


பூசை (2)

மட்டு ஆர் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்து அருளும் – தேவா-அப்:939/3
அழுது திருவடிக்கே பூசை செய்ய இருக்கின்றான் ஊர் போலும் ஆரூர்தானே – தேவா-அப்:2338/4
மேல்


பூட்சி (1)

புல் உயிர்க்கும் பூட்சி புணர்ந்தாய் போற்றி போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2641/2
மேல்


பூட்டி (3)

கல் துணை பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும் – தேவா-அப்:104/3
வஞ்சக புலையனேனை வழி அற தொண்டில் பூட்டி
அஞ்சல் என்று ஆண்டுகொண்டாய் அதுவும் நின் பெருமை அன்றே – தேவா-அப்:740/1,2
கல்லினோடு எனை பூட்டி அமண் கையர் – தேவா-அப்:1796/1
மேல்


பூடும் (1)

புல் ஆகி புதல் ஆகி பூடும் ஆகி புரம் ஆகி புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி – தேவா-அப்:3007/2
மேல்


பூண் (12)

அரு மணி தடம் பூண் முலை அரம்பையரொடு அருளி பாடியர் – தேவா-அப்:200/1
பூண் அரவு ஆரத்தானே புலி உரி அரையினானே – தேவா-அப்:492/1
காம்பு அலைக்கும் பணைத்தோளி கதிர் பூண் வன முலை மேல் – தேவா-அப்:1031/3
பூண் நாண் ஆரம் பொருந்த உடையவர் – தேவா-அப்:1609/1
பொருந்து பூண் முலை மங்கை நல்லாளொடும் – தேவா-அப்:1812/3
சுணங்கு பூண் முலை தூமொழியார் அவர் – தேவா-அப்:1886/3
கையனே காலங்கள் மூன்று ஆனானே கருப்பு வில் தனி கொடும் பூண் காமன் காய்ந்த – தேவா-அப்:2121/3
பூண் அலா பூணானை பூசா சாந்தம் உடையானை முடை நாறும் புன் கலத்தில் – தேவா-அப்:2197/1
பூண் நாணும் அரைநாணும் பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2265/4
வார் உருவ பூண் முலை நல் மங்கை-தன்னை மகிழ்ந்து ஒருபால் வைத்து உகந்த வடிவும் தோன்றும் – தேவா-அப்:2274/2
கொக்கரை சச்சரி வீணை பாணியானை கோள் நாகம் பூண் ஆக கொண்டான்-தன்னை – தேவா-அப்:2825/2
பொய்யிலாதவர்க்கு என்றும் பொய்யிலானை பூண் நாகம் நாண் ஆக பொருப்பு வில்லா – தேவா-அப்:2945/2
மேல்


பூண்ட (12)

பூண்ட தேர் அரக்கனை பொரு இல் மால் வரை – தேவா-அப்:103/1
அக்கு அரவு ஆமை பூண்ட அழகனார் கருத்தினாலே – தேவா-அப்:335/3
கேழல் வெண் கெம்பு பூண்ட கிளர் ஒளி மார்பினானே – தேவா-அப்:493/1
தலையினால் தரித்த என்பும் தலை மயிர் வடமும் பூண்ட
விலை இலா வேடர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:622/3,4
பாகம் பூண்ட மால் பங்கயத்தானொடு – தேவா-அப்:1752/3
கச்சை கத நாகம் பூண்ட தோளர் கலன் ஒன்று கை ஏந்தி இல்லம்-தோறும் – தேவா-அப்:2260/2
பல் உருவில் தொழில் பூண்ட பஞ்சபூத பளகீர் உம் வசம் அன்றே யானேல் எல்லாம் – தேவா-அப்:2356/2
நரை ஏற்ற விடை ஏறி நாகம் பூண்ட நம்பியையே மறை நான்கும் ஓலமிட்டு – தேவா-அப்:2490/3
செந்தமிழோடு ஆரியனை சீரியானை திரு மார்பில் புரி வெண் நூல் திகழ பூண்ட
அந்தணனை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2552/3,4
பேரானை மணி ஆரம் மார்பினானை பிஞ்ஞகனை தெய்வ நான்மறைகள் பூண்ட
தேரானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2718/3,4
சோதியனை தூ மறையின் பொருளான்-தன்னை சுரும்பு அமரும் மலர் கொன்றை தொல் நூல் பூண்ட
வேதியனை அறம் உரைத்த பட்டன்-தன்னை விளங்கு மலர் அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை – தேவா-அப்:2721/2,3
பொறி இலங்கு வாள் அரவம் புனைந்து பூண்ட புண்ணியனை பொரு திரை-வாய் நஞ்சம் உண்ட – தேவா-அப்:2991/2
மேல்


பூண்டது (4)

பூண்டது ஒர் கேழல் எயிறும் பொன் திகழ் ஆமை புரள – தேவா-அப்:12/1
ஊழித்தீ அன்னானை ஓங்கு ஒலி மா பூண்டது ஓர் – தேவா-அப்:193/3
மேகம் பூண்டது ஓர் மேருவில் கொண்டு எயில் – தேவா-அப்:1752/1
புலால் நாறு வெள் எலும்பு பூண்டது உண்டோ பூதம் தற்சூழ்ந்தனவோ போர் ஏறு உண்டோ – தேவா-அப்:3038/2
மேல்


பூண்டவன் (1)

பொறி விரவு கத நாகம் அக்கினோடு பூண்டவன் காண் பொரு புலி தோல் ஆடையான் காண் – தேவா-அப்:2846/2
மேல்


பூண்டாய் (2)

விரை ஆரும் மலர் தூவி வணங்குவார்-பால் மிக்கானே அக்கு அரவம் ஆரம் பூண்டாய்
திரை ஆரும் புனல் பொன்னி தீர்த்தம் மல்கு திரு ஆனைக்காவில் உறை தேனே வானோர் – தேவா-அப்:2710/2,3
அங்கமே பூண்டாய் அனல் ஆடினாய் ஆதிரையாய் ஆல் நிழலாய் ஆன் ஏறு ஊர்ந்தாய் – தேவா-அப்:3058/1
மேல்


பூண்டாயும் (1)

அக்கு ஆரம் பூண்டாயும் நீயே என்றும் ஆக்கூரில் தான்தோன்றி நீயே என்றும் – தேவா-அப்:2498/2
மேல்


பூண்டார் (12)

பூண்டார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:164/4
ஏனம் அக்கோடு பூண்டார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:428/4
ஆடு மிக்கு அரவம் பூண்டார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:575/4
நோதங்கம் இல்லாதார் நாகம் பூண்டார் நூல் பூண்டார் நூல் மேல் ஓர் ஆமை பூண்டார் – தேவா-அப்:2182/1
நோதங்கம் இல்லாதார் நாகம் பூண்டார் நூல் பூண்டார் நூல் மேல் ஓர் ஆமை பூண்டார் – தேவா-அப்:2182/1
நோதங்கம் இல்லாதார் நாகம் பூண்டார் நூல் பூண்டார் நூல் மேல் ஓர் ஆமை பூண்டார்
பேய் தங்கு நீள் காட்டில் நட்டம் ஆடி பிறை சூடும் சடை மேல் ஓர் புனலும் சூடி – தேவா-அப்:2182/1,2
நடம் மன்னி ஆடுவார் நாகம் பூண்டார் நான்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார் – தேவா-அப்:2187/3
நீற்றினையும் நெற்றி மேல் இட்டார் போலும் நீங்காமே வெள் எலும்பு பூண்டார் போலும் – தேவா-அப்:2364/1
ஏனத்து இள மருப்பு பூண்டார் போலும் இமையவர்கள் ஏத்த இருந்தார் போலும் – தேவா-அப்:2368/1
எரி அது ஒரு கை தரித்த இறைவர் போலும் ஏனத்தின் கூன் எயிறு பூண்டார் போலும் – தேவா-அப்:2624/2
ஏனத்து எயிறு இலங்க பூண்டார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2966/4
வேற்று தொழில் பூண்டார் புரங்கள் மூன்றும் வெவ் அழல் வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய – தேவா-அப்:2999/3
மேல்


பூண்டார்தாமே (1)

கோலம் பலவும் உகப்பார்தாமே கோள் நாகம் நாண் ஆக பூண்டார்தாமே
நீலம் பொலிந்த மிடற்றார்தாமே நீள் வரையின் உச்சி இருப்பார்தாமே – தேவா-அப்:2450/2,3
மேல்


பூண்டான் (1)

பரு மணி மா நாகம் பூண்டான் கண்டாய் பவள குன்று அன்ன பரமன் கண்டாய் – தேவா-அப்:2809/2
மேல்


பூண்டான்-தன்னை (3)

புள்ளி வரி நாகம் பூண்டான்-தன்னை பொன் பிதிர்ந்து அன்ன சடையான்-தன்னை – தேவா-அப்:2108/2
பொல்லாதார்-தம் அரணம் மூன்றும் பொன்ற பொறி அரவம் மார்பு ஆர பூண்டான்-தன்னை
கல்லாலின் கீழானை கழி சூழ் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2314/3,4
கொற்றவனை கூர் அரவம் பூண்டான்-தன்னை குறைந்து அடைந்து தன் திறமே கொண்டாற்கு என்றும் – தேவா-அப்:2783/3
மேல்


பூண்டானே (1)

அன்ன நடை மடவாள்_பாகத்தானே அக்கு ஆரம் பூண்டானே ஆதியானே – தேவா-அப்:3065/3
மேல்


பூண்டானை (3)

பூண்டானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2521/4
பூண்டானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2626/4
பூண்டானை புறங்காட்டில் ஆடலானை போகாது என் உள் புகுந்து இடம்கொண்டு என்னை – தேவா-அப்:2764/2
மேல்


பூண்டு (22)

தாம் கோல வெள் எலும்பு பூண்டு தம் ஏறு ஏறி – தேவா-அப்:191/1
பணி உடை தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றினாலே – தேவா-அப்:333/2
முளை எயிற்று இள நல் ஏனம் பூண்டு மொய் சடைகள் தாழ – தேவா-அப்:531/1
துன்ப கடலிடை தோணி தொழில் பூண்டு தொண்டர்-தம்மை – தேவா-அப்:888/1
கண்டிகை பூண்டு கடி சூத்திரம் மேல் கபால வடம் – தேவா-அப்:1047/2
என்பு எலாம் பல பூண்டு அங்கு உழிதர்வர் – தேவா-அப்:1368/2
என்பும் ஆமையும் பூண்டு அங்கு உழிதர்வர்க்கு – தேவா-அப்:1428/1
தோலும் பூண்டு துயரம் உற்று என் பயன் – தேவா-அப்:1463/2
என்பு பூண்டு எருது ஏறி இளம் பிறை – தேவா-அப்:1629/1
சோகம் பூண்டு அழல் சோர தொட்டான் அவன் – தேவா-அப்:1752/2
நாகம் பூண்டு கூத்து ஆடும் நள்ளாறனே – தேவா-அப்:1752/4
கண்டி பூண்டு கபாலம் கை கொண்டிலர் – தேவா-அப்:2014/1
ஏன வெண் மருப்போடு என்பு பூண்டு எழில் – தேவா-அப்:2034/1
அக்கும் ஆமையும் பூண்டு அனல் ஏந்தி இல் – தேவா-அப்:2039/1
குலா வெண் தலை மாலை என்பு பூண்டு குளிர் கொன்றை தார் அணிந்து கொல் ஏறு ஏறி – தேவா-அப்:2103/1
நல்ல விடை மேற்கொண்டு நாகம் பூண்டு நளிர் சிரம் ஒன்று ஏந்தி ஓர் நாணாய் அற்ற – தேவா-அப்:2166/3
சுண்ணங்கள் தாம் கொண்டு துதைய பூசி தோல் உடுத்து நூல் பூண்டு தோன்றத்தோன்ற – தேவா-அப்:2172/3
முற்று ஒருவர் போல முழு நீறு ஆடி முளை திங்கள் சூடி முந்நூலும் பூண்டு
ஒற்று ஒருவர் போல உறங்குவேன் கை ஒளி வளையை ஒன்றுஒன்றா எண்ணுகின்றார் – தேவா-அப்:2213/1,2
விரை ஏறு நீறு அணிந்து ஓர் ஆமை பூண்டு வெண் தோடு பெய்து இடங்கை வீணை ஏந்தி – தேவா-அப்:2220/1
பூண்டு பொறி அரவம் காதில் பெய்து பொன் சடைகள் அவை தாழ புரி வெண்நூலர் – தேவா-அப்:2435/2
பூண்டு அரவை புலி தோல் மேல் ஆர்த்தார்தாமே பொன் நிறத்த வெள்ள சடையார்தாமே – தேவா-அப்:2453/2
துகில் உடுத்து பொன் பூண்டு திரிவார் சொல்லும் சொல் கேட்க கடவோமோ துரிசு அற்றோமே – தேவா-அப்:3048/4
மேல்


பூண்டுகொண்டு (1)

பூண்டுகொண்டு ஒழிந்தேன் புறம் போயினால் அறையோ – தேவா-அப்:198/2
மேல்


பூண்டேனுக்கே (1)

எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே – தேவா-அப்:1074/4
மேல்


பூண்பர் (4)

வீரமும் பூண்பர் விசயனொடு ஆயது ஒர் – தேவா-அப்:167/1
தாரமும் பூண்பர் தமக்கு அன்புபட்டவர் – தேவா-அப்:167/2
பாரமும் பூண்பர் நன் பைம் கண் மிளிர் அரவு – தேவா-அப்:167/3
ஆரமும் பூண்பர் அரநெறியாரே – தேவா-அப்:167/4
மேல்


பூண்பனவும் (1)

பெண்பால் ஒருபாகம் பேணா வாழ்க்கை கோள் நாகம் பூண்பனவும் நாண் ஆம் சொல்லார் – தேவா-அப்:2441/1
மேல்


பூண (6)

பூதத்தின் படையர் பாம்பின் பூணினர் பூண நூலர் – தேவா-அப்:619/1
பூண தான் அரவு ஆமை பொறுத்தவன் – தேவா-அப்:1890/2
பொடி நாறு மேனியர் பூதி பையர் புலித்தோலர் பொங்கு அரவர் பூண நூலர் – தேவா-அப்:2205/1
பொடி ஆரும் மேனியர் பூதி பையர் புலித்தோலர் பொங்கு அரவர் பூண நூலர் – தேவா-அப்:2259/2
பூதி அணி பொன் நிறத்தர் பூண நூலர் பொங்கு அரவர் சங்கரர் வெண் குழை ஓர் காதர் – தேவா-அப்:2595/1
பொங்கு அரவர் புலி தோலர் புராணர் மார்பில் பொறி கிளர் வெண் பூண நூல் புனிதர் போலும் – தேவா-அப்:2837/1
மேல்


பூணா (2)

அர மதித்து செம்பொன்னின் ஆரம் பூணா அணிந்தவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:2849/3
முப்புரி நூல் வரை மார்பில் முயங்க கொண்டார் முது கேழல் முளை மருப்பும் கொண்டார் பூணா
செப்பு உருவம் முலை மலையாள் பாகம் கொண்டார் செம் மேனி வெண் நீறு திகழ கொண்டார் – தேவா-அப்:3026/1,2
மேல்


பூணாய் (1)

பொல்லாத புலால் எலும்பு பூணாய் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2266/4
மேல்


பூணானை (1)

பூண் அலா பூணானை பூசா சாந்தம் உடையானை முடை நாறும் புன் கலத்தில் – தேவா-அப்:2197/1
மேல்


பூணியாய் (1)

பூணியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1402/4
மேல்


பூணில் (1)

புற்றில் ஆடு அரவே அது பூணில் என் – தேவா-அப்:1403/2
மேல்


பூணின் (1)

இட்டும் அட்டியும் ஈ தொழில் பூணின் என் – தேவா-அப்:2068/2
மேல்


பூணினர் (1)

பூதத்தின் படையர் பாம்பின் பூணினர் பூண நூலர் – தேவா-அப்:619/1
மேல்


பூணுதல் (1)

அரவும் பூணுதல் அம்ம அழகிதே – தேவா-அப்:1630/4
மேல்


பூணும் (1)

புற்று அரவே ஆடையுமாய் பூணும் ஆகி புறங்காட்டில் எரி ஆடல் புரிந்தான்தான் காண் – தேவா-அப்:2933/2
மேல்


பூத்த (2)

பூத்த பொன் கொன்ற மாலை புரி சடைக்கு அணிந்த செல்வர் – தேவா-அப்:437/1
பூத்த நீள் பொழில் பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1387/3
மேல்


பூத்தன (1)

பூத்தன பொன் சடை பொன் போல் மிளிர புரி கணங்கள் – தேவா-அப்:785/1
மேல்


பூத்தானத்தான் (1)

பூத்தானத்தான் முடியை பொருந்தா வண்ணம் புணர்த்தானை பூங்கணையான் உடலம் வேவ – தேவா-அப்:2518/2
மேல்


பூத்து (3)

பூத்து ஆடி கழியாதே நீர் பூமியீர் – தேவா-அப்:1286/1
கோடல் பூத்து அலர் கோழம்பத்துள் மகிழ்ந்து – தேவா-அப்:1714/3
பூத்து ஆர் கொன்றையினாய் புலியின் அதள் – தேவா-அப்:2020/1
மேல்


பூத (29)

அண்டமாய் ஆதியாய் அரு மறையோடு ஐம் பூத
பிண்டமாய் உலகுக்கு ஒர் பெய்பொருளாம் பிஞ்ஞகனை – தேவா-அப்:65/1,2
ஆர்த்தன கொட்டி அரித்தன பல் குறள் பூத கணம் – தேவா-அப்:785/2
பொறுத்தனை பூத படையனை பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:845/3
கூர்ந்து ஆர் விடையினை ஏறி பல் பூத படை நடுவே – தேவா-அப்:858/2
சுற்றிய பூத படையினன் சூலம் மழு ஒரு மான் – தேவா-அப்:859/3
பொருத்தனை பொய்யா அருளனை பூத படை உடைய – தேவா-அப்:872/2
குண்டிகை கொக்கரை கொன்றை பிறை குறள் பூத படை – தேவா-அப்:1047/3
பூத_நாயகன் பூந்துருத்தி நகர்க்கு – தேவா-அப்:1388/3
பூத_நாயகன் பொன் கயிலைக்கு இறை – தேவா-அப்:1733/2
பூத_நாயகன் புண்ணியமூர்த்தியே – தேவா-அப்:1806/4
கறங்கு பூத கணம் உடை கண்நுதல் – தேவா-அப்:1811/2
பூத_நாயகன் புண்ணியமூர்த்தியே – தேவா-அப்:2076/4
பூத படை உடையார் பொங்கு நூலார் புலி தோல் உடையினார் போர் ஏற்றினார் – தேவா-அப்:2184/1
கையன் காண் கடல் பூத படையினான் காண் கண் எரியால் ஐங்கணையோன் உடல் காய்ந்தான் காண் – தேவா-அப்:2334/2
பொன் இயலும் மேனியனே போற்றிபோற்றி பூத படை உடையாய் போற்றிபோற்றி – தேவா-அப்:2408/1
கள்ளம் கடிந்து என்னை ஆண்டார்தாமே கருத்து உடைய பூத படையார்தாமே – தேவா-அப்:2446/2
கூர் ஆர் மழுவாள் படை ஒன்று ஏந்தி குறள் பூத பல் படையாய் என்றேன் நானே – தேவா-அப்:2455/2
பொன் நேர் சடை முடியாய் நீயே என்றும் பூத கண நாதன் நீயே என்றும் – தேவா-அப்:2496/2
பொன்ற பொடி ஆக நோக்கினான் காண் பூதன் காண் பூத படையாளீ காண் – தேவா-அப்:2578/2
பொட்ட அநங்கனையும் நோக்கினான் காண் பூதன் காண் பூத படையினான் காண் – தேவா-அப்:2582/2
பொன் ஒத்த திரு மேனி புனிதர் போலும் பூத கணம் புடை சூழ வருவார் போலும் – தேவா-அப்:2619/2
பொறை உடைய பூமி நீர் ஆனாய் போற்றி பூத படை ஆள் புனிதா போற்றி – தேவா-அப்:2647/1
புகழ்ந்தாரை பொன்_உலகம் ஆள்விப்பானை பூத கண படையானை புறங்காட்டு ஆடல் – தேவா-அப்:2722/2
பொன் இசையும் புரி சடை எம் புனிதன்தான் காண் பூத கண நாதன் காண் புலி தோல் ஆடை – தேவா-அப்:2745/1
இடி குரல் வாய் பூத படையார் போலும் ஏகம்பம் மேவி இருந்தார் போலும் – தேவா-அப்:2904/2
நக்கன் காண் நக்க அரவம் அரையில் ஆர்த்த நாதன் காண் பூத கணம் ஆட ஆடும் – தேவா-அப்:2947/1
பூத படை ஆள் புனிதர் போலும் பூம் புகலூர் மேய புராணர் போலும் – தேவா-அப்:2968/2
பொல்லாத பூத படையார் போலும் பொரு கடலும் ஏழ்மலையும் தாமே போலும் – தேவா-அப்:2969/3
பொக்கணமும் புலி தோலும் புயத்தில் கொண்டார் பூத படைகள் புடை சூழ கொண்டார் – தேவா-அப்:3028/1
மேல்


பூத_நாயகன் (4)

பூத_நாயகன் பூந்துருத்தி நகர்க்கு – தேவா-அப்:1388/3
பூத_நாயகன் பொன் கயிலைக்கு இறை – தேவா-அப்:1733/2
பூத_நாயகன் புண்ணியமூர்த்தியே – தேவா-அப்:1806/4
பூத_நாயகன் புண்ணியமூர்த்தியே – தேவா-அப்:2076/4
மேல்


பூதங்கள் (10)

பூதங்கள் பாடி ஆடல் உடையவன் புனிதன் எந்தை – தேவா-அப்:348/2
பொறி அரவு அரையில் ஆர்த்து பூதங்கள் பலவும் சூழ – தேவா-அப்:349/1
பூதங்கள் பலவும் வைத்தார் பொங்கு வெண் நீறும் வைத்தார் – தேவா-அப்:382/1
இரிக்கும் பறையொடு பூதங்கள் பாட கழுமலவன் – தேவா-அப்:793/3
பக்கமே பகுவாயன பூதங்கள்
ஒக்க ஆடல் உகந்து உடன் கூத்தராய் – தேவா-அப்:1132/2,3
பக்கம் பூதங்கள் பாட பலி கொள்வான் – தேவா-அப்:1364/1
பூதங்கள் சூழ புலி தோல் வீக்கி புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2105/4
பூதங்கள் ஆய புராணர் போலும் புகழ வளர் ஒளியாய் நின்றார் போலும் – தேவா-அப்:2246/2
பொன் உருவ சோதி புனல் ஆடினான் காண் புராணன் காண் பூதங்கள் ஆயினான் காண் – தேவா-அப்:2576/2
புடை சூழ்ந்த பூதங்கள் வேதம் பாட புலியூர் சிற்றம்பலத்தே நடம் ஆடுவார் – தேவா-அப்:2598/1
மேல்


பூதங்களாய் (1)

பூலோக புவலோக சுவலோகமாய் பூதங்களாய் புராணன் தானே ஆகி – தேவா-அப்:3014/3
மேல்


பூதத்தர் (1)

பசைந்த பல பூதத்தர் பாடல் ஆடல் பட நாக கச்சையர் பிச்சைக்கு என்று அங்கு – தேவா-அப்:2175/1
மேல்


பூதத்தார் (1)

படை கொள் பூதத்தார் வேதத்தர் கீதத்தர் – தேவா-அப்:1313/1
மேல்


பூதத்தான் (3)

பூதத்தான் என்பர் புண்ணியன்-தன்னையே – தேவா-அப்:1182/2
பூதத்தான் பொரு நீலி புனிதன் மேவி பொய் உரையா மறை நால்வர் விண்ணோர்க்கு என்றும் – தேவா-அப்:2432/3
கூறு ஏறு கொடு மழுவாள் படையினான் காண் கொக்கரையன் காண் குழு நல் பூதத்தான் காண் – தேவா-அப்:2577/3
மேல்


பூதத்தின் (2)

பூதத்தின் படையர் பாம்பின் பூணினர் பூண நூலர் – தேவா-அப்:619/1
புடை மலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2267/4
மேல்


பூதத்தினானும் (1)

பாடு இளம் பூதத்தினானும் பவள செ வாய் வண்ணத்தானும் – தேவா-அப்:32/1
மேல்


பூதத்து (1)

விம்மாநின்று அழுவார்கட்கு அளிப்பான்தான் காண் விடை ஏறி திரிவான் காண் நடம்செய் பூதத்து
அம்மான் காண் அகலிடங்கள் தாங்கினான் காண் அற்புதன் காண் சொல்பதமும் கடந்து நின்ற – தேவா-அப்:2734/2,3
மேல்


பூதநாதர் (1)

புரிந்தார் நடத்தின்-கண் பூதநாதர் பொழில் ஆரூர் புக்கு உறைவர் போந்து தம்மில் – தேவா-அப்:2262/1
மேல்


பூதநாதன் (2)

பூதநாதன் தென் பூவனூர் நாதனே – தேவா-அப்:1728/4
பூதநாதன் புலி அதள் ஆடையன் – தேவா-அப்:1781/2
மேல்


பூதநாதனை (1)

பூதநாதனை பூம் புகலூரனை – தேவா-அப்:1238/1
மேல்


பூதம் (37)

பாடல் பயின்ற பல் பூதம் பல் ஆயிரம் கொள் கருவி – தேவா-அப்:18/2
பூதனார் பூதம் சூழ புலி உரி அதளனார் தாம் – தேவா-அப்:222/2
நக்கன பூதம் எல்லாம் நான்மறைக்காடனாரே – தேவா-அப்:341/4
பாடு உடை பூதம் சூழ பரமனார் மருத வைப்பில் – தேவா-அப்:344/2
பாடிய பூதம் சூழ பண்ணுடன் பலவும் சொல்லி – தேவா-அப்:368/2
எடுத்தவன் பேர்க்க ஓடி இரிந்தன பூதம் எல்லாம் – தேவா-அப்:507/2
பாடராய் பூதம் சூழ பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:563/4
அடுவன அஞ்சு பூதம் அவை-தமக்கு ஆற்றல் ஆகேன் – தேவா-அப்:745/2
பூதம் பாட நின்று ஆடும் புனிதனார் – தேவா-அப்:1213/2
கூடு பூதம் குழுமி நின்று ஆர்க்கவே – தேவா-அப்:1582/2
பொங்கு வெண் நீறு அணிந்து பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2096/4
புறங்காட்டு எரி ஆடி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2098/4
போர் ஏறு தாம் ஏறி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2099/4
போர ஆர் விடை ஏறி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2100/4
போது ஆர் சடை தாழ பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2101/4
புறம் தாழ் சடை தாழ பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2102/4
புலா வெண் தலை ஏந்தி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2103/4
பொன் தீ மணி விளக்கு பூதம் பற்ற புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2104/4
கூடுமே குட முழவம் வீணை தாளம் குறு நடைய சிறு பூதம் முழக்க மா கூத்து – தேவா-அப்:2122/3
குழலோடு கொக்கரை கைத்தாளம் மொந்தை குறள் பூதம் முன் பாட தான் ஆடுமே – தேவா-அப்:2124/1
பொருள் உடையர்அல்லர் இலரும் அல்லர் புலி தோல் உடை ஆக பூதம் சூழ – தேவா-அப்:2176/3
பொடி ஏறும் மேனியராய் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2212/4
புற்று அரவ கச்சு ஆர்த்து பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2213/4
போகாத வேடத்தர் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2214/4
பொறி இலங்கு பாம்பு ஆர்த்து பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2218/4
பொல்லாத வேடத்தர் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2219/4
புரை ஏறு தாம் ஏறி பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2220/4
நீறு தடவந்து இடபம் ஏறி நித்தம் பலி கொள்வர் மொய்த்த பூதம்
கூறும் குணம் உடையர் கோவணத்தர் கோள் தால வேடத்தர் கொள்கை சொல்லின் – தேவா-அப்:2254/2,3
போகம் பல உடைத்தாய் பூதம் சூழ புலி தோல் உடையா புகுந்து நின்றார் – தேவா-அப்:2438/2
கொள்ளை குழை காதின் குண்டை பூதம் கொடுகொட்டி கொட்டி குனித்து பாட – தேவா-அப்:2439/1
படையா பல் பூதம் உடையார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2454/4
சிரித்தானை சீர் ஆர்ந்த பூதம் சூழ திரு சடை மேல் திங்களும் பாம்பும் நீரும் – தேவா-அப்:2519/3
போவாரை கண்டு அடியேன் பின்பின் செல்ல புறக்கணித்து தம்முடைய பூதம் சூழ – தேவா-அப்:2669/3
கொடி ஏயும் வெள் ஏற்றாய் கூளி பாட குறள் பூதம் கூத்து ஆட நீயும் ஆடி – தேவா-அப்:2714/1
பாட அடியார் பரவ கண்டேன் பத்தர் கணம் கண்டேன் மொய்த்த பூதம்
ஆடல் முழவம் அதிர கண்டேன் அங்கை அனல் கண்டேன் கங்கையாளை – தேவா-அப்:2850/1,2
திண்டி வயிற்று சிறு கண் பூதம் சில பாட செம் கண் விடை ஒன்று ஊர்வான் – தேவா-அப்:3001/3
புலால் நாறு வெள் எலும்பு பூண்டது உண்டோ பூதம் தற்சூழ்ந்தனவோ போர் ஏறு உண்டோ – தேவா-அப்:3038/2
மேல்


பூதமாய் (1)

மால் ஆகி நான்முகனாய் மா பூதமாய் மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வும் ஆகி – தேவா-அப்:3014/1
மேல்


பூதமும் (2)

படையும் படையாய் நிரைத்த பல் பூதமும் பாய் புலி தோல் – தேவா-அப்:1039/2
படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள் – தேவா-அப்:1743/1
மேல்


பூதலங்கள் (1)

புகை எட்டும் போக்கு எட்டும் புலன்கள் எட்டும் பூதலங்கள் அவை எட்டும் பொழில்கள் எட்டும் – தேவா-அப்:2433/1
மேல்


பூதலமும் (1)

ஒய்வானை பொய் இலா மெய்யன்-தன்னை பூதலமும் மண்டலமும் பொருந்தும் வாழ்க்கை – தேவா-அப்:2589/3
மேல்


பூதன் (2)

பொன்ற பொடி ஆக நோக்கினான் காண் பூதன் காண் பூத படையாளீ காண் – தேவா-அப்:2578/2
பொட்ட அநங்கனையும் நோக்கினான் காண் பூதன் காண் பூத படையினான் காண் – தேவா-அப்:2582/2
மேல்


பூதனார் (1)

பூதனார் பூதம் சூழ புலி உரி அதளனார் தாம் – தேவா-அப்:222/2
மேல்


பூதி (6)

பொய் தலை ஏந்தி நல் பூதி அணிந்து பலி திரிவான் – தேவா-அப்:864/2
வெள்ளி கொண்ட வெண் பூதி மெய் ஆடலும் – தேவா-அப்:1623/2
பொடி நாறு மேனியர் பூதி பையர் புலித்தோலர் பொங்கு அரவர் பூண நூலர் – தேவா-அப்:2205/1
பொடி ஆரும் மேனியர் பூதி பையர் புலித்தோலர் பொங்கு அரவர் பூண நூலர் – தேவா-அப்:2259/2
பூதி அணி பொன் நிறத்தர் பூண நூலர் பொங்கு அரவர் சங்கரர் வெண் குழை ஓர் காதர் – தேவா-அப்:2595/1
பொய்யானை புறங்காட்டில் ஆடலானை பொன் பொலிந்த சடையானை பொடி கொள் பூதி
பையானை பை அரவம் அசைத்தான்-தன்னை பரந்தானை பவள மால் வரை போல் மேனி – தேவா-அப்:2750/2,3
மேல்


பூதியனை (1)

பூதியனை பொன் வரையே போல்வான்-தன்னை புரி சடை மேல் புனல் கரந்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2778/1
மேல்


பூந்துகிலாளொடும் (1)

போழ்இளங்கண்ணியினானை பூந்துகிலாளொடும் பாடி – தேவா-அப்:22/1
மேல்


பூந்துருத்தி (39)

போலனை போர் விடை ஏறியை பூந்துருத்தி மகிழும் – தேவா-அப்:843/3
பொறி உடை வாள் அரவத்தவன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:844/3
பொறுத்தனை பூத படையனை பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:845/3
பொரு வினை எல்லாம் துரந்தனை பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:846/3
புக்கனன் பொன் திகழ்ந்தன்னது ஓர் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:847/3
பொரு படை வேலினன் வில்லினன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:848/3
பொன்றியும் போக புரட்டினன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:849/3
பொன் நிறம் மிக்க சடையவன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:850/3
புந்தியை புக்க அறிவினை பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:851/3
மொய் கை அரக்கனை ஊன்றினன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:852/3
பொடிகள் பூசிய பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1386/3
பூத்த நீள் பொழில் பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1387/3
பூத_நாயகன் பூந்துருத்தி நகர்க்கு – தேவா-அப்:1388/3
பூவின்_நாயகன் பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1389/3
பொன் பொன்னார் செல்வ பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1390/3
புல்லம் பேசியும் பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1391/3
பொருத்தனாகிலும் பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1392/3
பொருத நீர் வரு பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1393/3
பொதுவின்_நாயகன் பூந்துருத்தி நகர்க்கு – தேவா-அப்:1394/3
பொடிக்க ஊன்றிய பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1395/3
புடை சூழ் தேவர் குழாத்தார்தாமே பூந்துருத்தி நெய்த்தானம் மேயார்தாமே – தேவா-அப்:2454/2
பொல்லா என் நோய் தீர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2513/4
புற்று ஆடு அரவு ஆர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2514/4
புன கொன்றை தார் அணிந்த புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2515/4
பொறி ஆடு அரவு ஆர்த்த புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2516/4
புக்கானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2517/4
போர்த்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2518/4
புரித்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2519/4
பொய்த்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2520/4
பூண்டானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2521/4
பொறுத்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2522/4
பொருப்பு_அரையன் மட பாவை இடப்பாலாரும் பூந்துருத்தி நகர் மேய புராணனாரும் – தேவா-அப்:2677/2
புகழ்ந்தானை பூந்துருத்தி மேயான்-தன்னை புண்ணியனை விண்ணவர்கள் நிதியம்-தன்னை – தேவா-அப்:2775/2
பூ சூழ்ந்த பொழில் தழுவு புகலூர் உள்ளார் புறம்பயத்தார் அறம் புரி பூந்துருத்தி புக்கு – தேவா-அப்:2836/1
புற்று ஆடு அரவு அணிந்த புனிதன் கண்டாய் பூந்துருத்தி பொய்யிலியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2893/2
பொன்னி சூழ் ஐயாற்று எம் புனிதன்-தன்னை பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தினானை – தேவா-அப்:2923/2
புரை ஆர்ந்த கோவணத்து எம் புனிதன்-தன்னை பூந்துருத்தி மேயானை புகலூரானை – தேவா-அப்:2941/3
பூந்துருத்தி பூந்துருத்தி என்பீராகில் பொல்லா புலால் துருத்தி போக்கல் ஆமே – தேவா-அப்:2995/4
பூந்துருத்தி பூந்துருத்தி என்பீராகில் பொல்லா புலால் துருத்தி போக்கல் ஆமே – தேவா-அப்:2995/4
மேல்


பூந்துறை (1)

குயில் ஆலந்துறை சோற்றுத்துறை பூந்துறை பெருந்துறையும் குரங்காடுதுறையினோடு – தேவா-அப்:2807/3
மேல்


பூநீர் (1)

வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு வைகல் மறவாது வாழ்த்தி ஏத்தி – தேவா-அப்:2696/3
மேல்


பூம் (66)

அறை இளம் பூம் குயில் ஆலும் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:24/3
கண் ஆர் பூம் சோலை கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:57/4
புதியையாய் இனியை ஆம் பூம் தென்றால் புறங்காடு – தேவா-அப்:117/1
கூவை-வாய் மணி வரன்றி கொழித்து ஓடும் காவிரி பூம்
பாவை-வாய் முத்து இலங்க பாய்ந்து ஆடும் பழனத்தான் – தேவா-அப்:121/1,2
தாள் தழுவு கையன் தாமரை பூம் சேவடியன் – தேவா-அப்:196/1
பூம் கழல் தொழுதும் பரவியும் புண்ணியா புனிதா உன் பொன் கழல் – தேவா-அப்:201/1
நாறு பூம் சோலை தில்லை நவின்ற சிற்றம்பலத்தே – தேவா-அப்:219/3
கடி கொள் பூம் தில்லை-தன்னுள் கருது சிற்றம்பலத்தே – தேவா-அப்:220/3
நாறு பூம் கொன்றை வைத்தார் நாகமும் அரையில் வைத்தார் – தேவா-அப்:381/2
கொந்து ஆர் பூம் குழலினாரை கூறியே காலம் போன – தேவா-அப்:410/1
பொன்னியின் நடுவு-தன்னுள் பூம் புனல் பொலிந்து தோன்றும் – தேவா-அப்:416/3
பூம் தார் நறும் கொன்றை மாலையை வாங்கி சடைக்கு அணிந்து – தேவா-அப்:858/1
ஆம்பல் அம் பூம் பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடி நிழல் கீழ் – தேவா-அப்:986/3
பூம் படிமக்கலம் பொன் படிமக்கலம் என்று இவற்றால் – தேவா-அப்:988/1
வேரி தண் பூம் சுடர் ஐங்கணை வேள் வெந்து வீழ செம் தீ – தேவா-அப்:1033/3
பூம் தாமரை மேனி புள்ளி உழை மான் அதள் புலி தோல் – தேவா-அப்:1041/3
பூதநாதனை பூம் புகலூரனை – தேவா-அப்:1238/1
நிறையும் பூம் பொழில் சூழ் திரு நின்றியூர் – தேவா-அப்:1298/3
அறையும் பூம் பொழில் ஆவடுதண்துறை – தேவா-அப்:1362/3
கடி கொள் பூம் பொழில் கச்சி ஏகம்பனார் – தேவா-அப்:1386/2
பொடி கொள் மேனியன் பூம் பொழில் கச்சியுள் – தேவா-அப்:1546/3
உறையும் பூம் பொழில் சூழ் கச்சி ஏகம்பம் – தேவா-அப்:1550/3
வம்பு பூம் குழல் மாது மறுக ஓர் – தேவா-அப்:1595/1
நாறு பூம் பொழில் நாரையூர் நம்பனுக்கு – தேவா-அப்:1622/3
பொரும் ஆற்றின் படை வேண்டி நல் பூம் புனல் – தேவா-அப்:1662/1
பூம் புனலும் பொதிந்த புத்தூர் உளான் – தேவா-அப்:1685/2
புல்லம் ஊர்தியூர் பூவனூர் பூம் புனல் – தேவா-அப்:1726/1
பூவனூர் தண் புறம் பயம் பூம் பொழில் – தேவா-அப்:1729/1
நறை கொள் பூம் புனல் கொண்டு எழு மாணிக்காய் – தேவா-அப்:1736/1
புடை நிலாவிய பூம் பொழில் வாஞ்சியம் – தேவா-அப்:1743/3
பொலியும் பூம் புனல் வைத்த புனிதனார் – தேவா-அப்:1753/2
பூம் பணை பொலிகின்ற புராணனும் – தேவா-அப்:1758/2
கொய் கொள் பூம் பொழில் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1764/4
நாறு பூம் கொன்றைதான் மிக நல்கானேல் – தேவா-அப்:1853/2
அரும்பு அமரும் பூம் கொன்றைத்தாரான்-தன்னை அரு மறையோடு ஆறு அங்கம் ஆயினானை – தேவா-அப்:2091/2
கார் ஆனை ஈர் உரிவை போர்வையானை காமரு பூம் கச்சி ஏகம்பன்-தன்னை – தேவா-அப்:2093/1
ஞான பூம் கோதையாள் பாகத்தான் காண் நம்பன் காண் ஞானத்து ஒளி ஆனான் காண் – தேவா-அப்:2169/2
கடி நாறு பூம் சோலை கமழ்ந்து நாறும் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2205/3
பூம் கணை வேள் உரு அழித்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2273/4
மடல் அரவம் மன்னு பூம் கொன்றையானை மா மணியை மாணிக்காய் காலன்-தன்னை – தேவா-அப்:2288/3
கலந்தார்-தம் மனத்து என்றும் காதலானை கச்சி ஏகம்பனை கமழ் பூம் கொன்றை – தேவா-அப்:2290/3
பொடி விளங்கு முந்நூல் சேர் மார்பர் போலும் பூம் கங்கை தோய்ந்த சடையார் போலும் – தேவா-அப்:2299/2
புலம் கொள் பூம் தேறல் வாய் புகலி கோனை பூம்புகார் கற்பகத்தை புன்கூர் மேய – தேவா-அப்:2311/1
பொன் மணி அம் பூம் கொன்றைமாலையானை புண்ணியனை வெண் நீறு பூசினானை – தேவா-அப்:2312/1
கடி நாறு பூம் சோலை அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2316/4
வேலை சேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய் விண் தடவு பூம் கயிலை வெற்பன் கண்டாய் – தேவா-அப்:2323/1
பொன் இயலும் திரு மேனி உடையான் கண்டாய் பூம் கொன்றை தார் ஒன்று அணிந்தான் கண்டாய் – தேவா-அப்:2483/1
புகழும் பெருமையாய் நீயே என்றும் பூம் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2499/1
கார் ஆரும் கறை மிடற்று எம்பெருமான்-தன்னை காதில் வெண் குழையானை கமழ் பூம் கொன்றை – தேவா-அப்:2718/1
வண்டு ஆர் பூம் சோலை வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் மறையோடு அங்கம் – தேவா-அப்:2818/3
நறவு ஆரும் பூம் கொன்றை சூடினானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2824/4
தேன் நல் இளம் துவலை மலி தென்றல் முன்றில் செழும் பொழில் பூம் பாளை விரி தேறல் நாறும் – தேவா-அப்:2830/3
கரு மருவு வல்வினை நோய் காற்றினான் காண் கா மரு பூம் கச்சி ஏகம்பத்தான் காண் – தேவா-அப்:2844/1
நாறு பூம் கொன்றை முடியார் தாமே நான்மறையோடு ஆறு அங்கம் சொன்னார் தாமே – தேவா-அப்:2863/1
கங்கை எனும் கடும் புனலை கரந்தான்-தன்னை கா மரு பூம் பொழில் கச்சி கம்பன்-தன்னை – தேவா-அப்:2874/1
வண்டு ஆடு பூம் குழலாள்_பாகன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் கண்டாய் – தேவா-அப்:2891/1
பூத படை ஆள் புனிதர் போலும் பூம் புகலூர் மேய புராணர் போலும் – தேவா-அப்:2968/2
புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3057/4
பொய் உரையாது உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3059/4
பொருள் ஆவாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3060/4
போர் ஏறே உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3061/4
புரி சடையாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3062/4
பூ ஆர்ந்த பொன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3063/4
பொய்யாத சேவடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3064/4
பொன் அம் கழல் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3065/4
பொரு வரையாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3066/4
மேல்


பூம்புகார் (1)

புலம் கொள் பூம் தேறல் வாய் புகலி கோனை பூம்புகார் கற்பகத்தை புன்கூர் மேய – தேவா-அப்:2311/1
மேல்


பூமகள் (1)

பூமேலானும் பூமகள்_கேள்வனும் – தேவா-அப்:1548/1
மேல்


பூமகள்_கேள்வனும் (1)

பூமேலானும் பூமகள்_கேள்வனும்
நாமே தேவர் எனாமை நடுக்குற – தேவா-அப்:1548/1,2
மேல்


பூமி (6)

பார்த்து தான் பூமி மேலால் பாய்ந்து உடன் மலையை பற்றி – தேவா-அப்:323/2
பூ ஆய பீடத்து மேல் அயனும் பூமி அளந்தானும் போற்றி இசைப்ப – தேவா-அப்:2221/2
பொறை உடைய பூமி நீர் ஆனாய் போற்றி பூத படை ஆள் புனிதா போற்றி – தேவா-அப்:2647/1
பொறையவன் காண் பூமி ஏழ் தாங்கி ஓங்கும் புண்ணியன் காண் நண்ணிய புண்டரீக போதில் – தேவா-அப்:2738/1
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய் பூமி மேல் புகழ் தக்க பொருளே உன்னை – தேவா-அப்:3021/3
புகல் இடம் அம் அம்பலங்கள் பூமி தேவி உடன்கிடந்தால் புரட்டாள் பொய் அன்று மெய்யே – தேவா-அப்:3048/2
மேல்


பூமியீர் (1)

பூத்து ஆடி கழியாதே நீர் பூமியீர்
தீத்து ஆடி திறம் சிந்தையுள் வைம்-மினோ – தேவா-அப்:1286/1,2
மேல்


பூமேலானும் (1)

பூமேலானும் பூமகள்_கேள்வனும் – தேவா-அப்:1548/1
மேல்


பூரணன் (2)

பூரணன் திரு பூவனூர் மேவிய – தேவா-அப்:1731/3
பூரணன் காண் புண்ணியன் காண் புராணன் தான் காண் புரி சடை மேல் புனல் ஏற்ற புனிதன் தான் காண் – தேவா-அப்:2163/2
மேல்


பூரித்தான் (1)

பொல்லா புலன் ஐந்தும் போக்கினான் காண் புரி சடை மேல் பாய் கங்கை பூரித்தான் காண் – தேவா-அப்:2166/2
மேல்


பூரித்து (1)

ஆற்று நீர் பூரித்து ஆட்டும் அந்தணனாரை கொல்வான் – தேவா-அப்:477/2
மேல்


பூரியா (1)

பூரியா வரும் புண்ணியம் பொய் கெடும் – தேவா-அப்:1839/1
மேல்


பூலோக (1)

பூலோக புவலோக சுவலோகமாய் பூதங்களாய் புராணன் தானே ஆகி – தேவா-அப்:3014/3
மேல்


பூவண (1)

பூவண கிழவனாரை புலி உரி அரையனாரை – தேவா-அப்:747/3
மேல்


பூவணத்தார் (1)

புன்கூரார் புறம்பயந்தார் புத்தூர் உள்ளார் பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க – தேவா-அப்:2604/1
மேல்


பூவணத்து (12)

புத்தூர் உறையும் புனிதனை பூவணத்து எம் போர் ஏற்றை – தேவா-அப்:154/1
பொடி ஏறு திரு மேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2264/4
பூண் நாணும் அரைநாணும் பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2265/4
பொல்லாத புலால் எலும்பு பூணாய் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2266/4
புடை மலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2267/4
புயல் பாய சடை விரித்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2268/4
போர் ஆழி முன் ஈந்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2269/4
பொன் அனைய திரு மேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2270/4
பொறி அரவும் இள மதியும் பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2271/4
பொருட்டு ஓட்டி நின்ற திண் புயமும் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2272/4
பூம் கணை வேள் உரு அழித்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2273/4
போர் உருவ கூற்று உதைத்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2274/4
மேல்


பூவணம் (1)

புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர் புறம்பயம் பூவணம் பொய்கைநல்லூர் – தேவா-அப்:2796/1
மேல்


பூவணமும் (5)

தேன் ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு செம்பொன்பள்ளி திரு பூவணமும்
வானோர் வணங்கும் மணஞ்சேரியும் மதில் உஞ்சைமாகாளம் வாரணாசி – தேவா-அப்:2159/1,2
பொன் நலத்த நறும் கொன்றை சடையினான் காண் புகலூரும் பூவணமும் பொருந்தினான் காண் – தேவா-அப்:2392/1
பொரும் கை மத கரி உரிவை போர்வையானை பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தினானை – தேவா-அப்:2415/1
பொன் இலங்கு கொன்றை அம் தார் மாலை சூடி புகலூரும் பூவணமும் பொருந்தினாரும் – தேவா-அப்:2685/1
பொந்து உடைய வெண் தலையில் பலி கொள்வானை பூவணமும் புறம்பயமும் பொருந்தினானை – தேவா-அப்:2944/3
மேல்


பூவணமோ (1)

பூவணமோ புறம்பயமோ அன்றாயில் தான் பொருந்தாதார் வாழ்க்கை திருந்தாமேயோ – தேவா-அப்:2340/2
மேல்


பூவனூர் (9)

பூவனூர் புனிதன் திருநாமம்தான் – தேவா-அப்:1722/1
பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன் – தேவா-அப்:1723/3
புற்று அராவினன் பூவனூர் ஈசன் பேர் – தேவா-அப்:1724/3
பூவனூர் புகுவார் வினை போகுமே – தேவா-அப்:1725/4
புல்லம் ஊர்தியூர் பூவனூர் பூம் புனல் – தேவா-அப்:1726/1
பூதநாதன் தென் பூவனூர் நாதனே – தேவா-அப்:1728/4
பூவனூர் தண் புறம் பயம் பூம் பொழில் – தேவா-அப்:1729/1
பூவனூர் புகுதப்பெற்ற நாள் இன்றே – தேவா-அப்:1730/4
பூரணன் திரு பூவனூர் மேவிய – தேவா-அப்:1731/3
மேல்


பூவனூரன் (1)

புக்கு எடுத்தலும் பூவனூரன் அடி – தேவா-அப்:1732/2
மேல்


பூவனூரனை (1)

புனிதனை பூவனூரனை போற்றுவார் – தேவா-அப்:1727/3
மேல்


பூவாய் (1)

குஞ்சி பூவாய் நின்ற சேவடியாய் கோடி இயையே – தேவா-அப்:123/4
மேல்


பூவின் (3)

பூவின்_நாயகன் பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1389/3
பூ தான் ஆம் பூவின் நிறத்தானும் ஆம் பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற – தேவா-அப்:2235/1
புண்டரிக கண்ணானும் பூவின் மேலை புத்தேளும் காண்பு அரிய புராணன்தான் காண் – தேவா-அப்:2393/3
மேல்


பூவின்-கண் (1)

பூசனை பூசனைகள் உகப்பானை பூவின்-கண்
வாசனை மலை நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆம் – தேவா-அப்:67/2,3
மேல்


பூவின்_நாயகன் (1)

பூவின்_நாயகன் பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1389/3
மேல்


பூவினில் (1)

பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே போர் கோலம் கொண்டு எயில் எய்தாய் நீயே – தேவா-அப்:2472/2
மேல்


பூவினின் (1)

பூவினின் மேல் நான்முகனும் மாலும் போற்ற புணர்வு அரிய பெருமானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2993/3
மேல்


பூவினுக்கு (1)

பூவினுக்கு அரும் கலம் பொங்கு தாமரை – தேவா-அப்:105/1
மேல்


பூவினை (1)

புதிய பூவினை புண்ணியநாதனை – தேவா-அப்:1992/1
மேல்


பூவுக்கு (1)

பூ ஆகி பூவுக்கு ஓர் நாற்றம் ஆகி பூக்குளால் வாசமாய் நின்றான் ஆகி – தேவா-அப்:3012/3
மேல்


பூவும் (2)

புலர்ந்த-கால் பூவும் நீரும் கொண்டு அடி போற்றமாட்டா – தேவா-அப்:680/1
பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு – தேவா-அப்:1962/3
மேல்


பூவைகாள் (1)

பூவைகாள் மழலைகாள் போகாத பொழுது உளதே – தேவா-அப்:121/4
மேல்


பூவையாய் (1)

பூவையாய் தலை பறித்து பொறி அற்ற சமண் நீசர் சொல்லே கேட்டு – தேவா-அப்:49/1
மேல்


பூவொடு (1)

சலம் பூவொடு தூபம் மறந்து அறியேன் தமிழோடு இசை பாடல் மறந்து அறியேன் – தேவா-அப்:6/1
மேல்


பூழியான் (1)

முன்னம் அன்னவன் சேரலன் பூழியான்
இன்னம் இன்புற்ற இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1279/3,4

மேல்