கூ – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கூகை 1
கூச்சு 1
கூசன் 1
கூசாதார் 1
கூசுவார் 1
கூட்ட 1
கூட்டகத்து 1
கூட்டம் 1
கூட்டமாய் 1
கூட்டினார் 1
கூட்டினான் 2
கூட்டை 3
கூட 9
கூடத்தார் 2
கூடல் 19
கூடலர்-தம் 1
கூடலும் 1
கூடவே 2
கூடா 1
கூடாதீர் 1
கூடி 45
கூடிய 5
கூடியும் 1
கூடினார் 5
கூடினான் 1
கூடு 5
கூடு-மின் 1
கூடும் 4
கூடுமே 3
கூடுவன் 1
கூடுவார் 1
கூடை 1
கூத்தப்பிரானே 1
கூத்தர் 1
கூத்தர்-கொலோ 1
கூத்தராய் 3
கூத்தரே 1
கூத்தன் 9
கூத்தன்-தன்னை 2
கூத்தன்தான் 1
கூத்தனார் 2
கூத்தனாரே 11
கூத்தனின் 1
கூத்தனுக்கு 2
கூத்தனே 3
கூத்தனை 12
கூத்தா 4
கூத்தின் 1
கூத்து 15
கூத்தும் 4
கூத்தை 1
கூத்தொடும் 1
கூதலாய் 1
கூந்தல் 5
கூந்தலார் 1
கூந்தலூர் 1
கூப்பி 5
கூப்பினான் 1
கூப்பும் 1
கூம்பலை 1
கூம்பி 1
கூர் 18
கூர்ச்சமும் 1
கூர்த்த 3
கூர்த்தானை 1
கூர்த்து 1
கூர்ந்தவனே 1
கூர்ந்து 2
கூர்ப்பு 1
கூர்மை 1
கூர்மையர்க்கு 1
கூர்மையே 1
கூர்வார்க்கு 1
கூர்வித்த 1
கூர்வித்தவா 1
கூர 2
கூரம் 1
கூரிது 1
கூரிய 1
கூரும் 4
கூரை 2
கூவ 2
கூவல் 1
கூவல்தான் 1
கூவலோடு 1
கூவி 1
கூவித்து 1
கூவிள 3
கூவிளம் 5
கூவிளமும் 3
கூவினான் 1
கூவை-வாய் 1
கூழ் 1
கூழை 2
கூழைமையே 1
கூழையூர் 1
கூழையேன் 1
கூளி 1
கூளிகள் 1
கூற்றங்கள் 1
கூற்றத்தை 1
கூற்றம் 16
கூற்றம்-தன்னை 1
கூற்றன் 1
கூற்றனை 1
கூற்றானை 2
கூற்றின் 1
கூற்றினான் 1
கூற்றினை 4
கூற்றினையும் 1
கூற்று 19
கூற்றுக்கும் 1
கூற்றுவர் 1
கூற்றுவன் 2
கூற்றுவனே 1
கூற்றுவனை 4
கூற்றை 18
கூற 1
கூறமாட்டேன் 1
கூறராய் 1
கூறன் 2
கூறனார் 1
கூறா 1
கூறாத 3
கூறி 3
கூறிட்ட 1
கூறிடகிற்றியே 1
கூறிய 1
கூறியே 1
கூறிரேல் 1
கூறில் 2
கூறினர் 2
கூறினார் 1
கூறினான் 1
கூறினும் 1
கூறினேன் 1
கூறினேனே 1
கூறீர் 1
கூறு 24
கூறும் 4
கூறும்-கால் 1
கூறுமா 1
கூறுமே 3
கூறுவதே 4
கூறுவார் 1
கூறுவேன் 1
கூறுவோமே 1
கூறை 3
கூறையன் 1
கூறையால் 1
கூன் 5
கூனல் 1


கூகை (1)

பேய் ஒத்து கூகை ஆனேன் பிஞ்ஞகா பிறப்பு ஒன்று இல்லீ – தேவா-அப்:310/2
மேல்


கூச்சு (1)

கூச்சு இலேன் ஆதலாலே கொடுமையை விடும் ஆறு ஓரேன் – தேவா-அப்:759/2
மேல்


கூசன் (1)

கூசன் காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே குடிகொண்ட குழகன் காண் அழகு ஆர் கொன்றை – தேவா-அப்:2737/2
மேல்


கூசாதார் (1)

கூசன் காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே குடிகொண்ட குழகன் காண் அழகு ஆர் கொன்றை – தேவா-அப்:2737/2
மேல்


கூசுவார் (1)

கூசுவார் அலர் குண்டர் குணம் இலர் – தேவா-அப்:1808/1
மேல்


கூட்ட (1)

திண் சிலைக்கு ஓர் சரம் கூட்ட வல்லாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2473/4
மேல்


கூட்டகத்து (1)

குறும்பி ஊர்வது ஓர் கூட்டகத்து இட்டு எனை – தேவா-அப்:1815/3
மேல்


கூட்டம் (1)

கூட்டம் ஆம் குவிமுலையாள் கூட நீ ஆடும் ஆறே – தேவா-அப்:231/4
மேல்


கூட்டமாய் (1)

கூட்டமாய் ஐவர் வந்து கொடும் தொழில் குணத்தர் ஆகி – தேவா-அப்:652/1
மேல்


கூட்டினார் (1)

கோல மா மதி கங்கையும் கூட்டினார்
சூலம் மான் மழு ஏந்தி சுடர் முடி – தேவா-அப்:1579/2,3
மேல்


கூட்டினான் (2)

கூட்டினான் குரங்காடுதுறையனே – தேவா-அப்:1705/4
கோங்கு மலர் கொன்றை அம் தார் கண்ணியான் காண் கொல் ஏறு வெல் கொடி மேல் கூட்டினான் காண் – தேவா-அப்:2614/3
மேல்


கூட்டை (3)

ஓம்பினேன் கூட்டை வாளா உள்ளத்து ஓர் கொடுமை வைத்து – தேவா-அப்:454/1
கூட்டை விட்டு உயிர் போவதன் முன்னமே – தேவா-அப்:1901/3
தினைத்தனை ஓர் பொறை இலா உயிர் போம் கூட்டை பொருள் என்று மிக உன்னி மதியால் இந்த – தேவா-அப்:2507/1
மேல்


கூட (9)

கூட வல்லார் குறிப்பில் உமையாளொடும் – தேவா-அப்:172/1
கூட்டம் ஆம் குவிமுலையாள் கூட நீ ஆடும் ஆறே – தேவா-அப்:231/4
கூத்தா உன் கூத்து காண்பான் கூட நான் வந்த ஆறே – தேவா-அப்:234/4
கூட நான் வல்ல மாற்றம் குறுகும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:582/4
சித்தி செய்பவர்கட்கு எல்லாம் சேர்விடம் சென்று கூட
பத்தி செய்பவர்கள் பாவம் பறைப்பவர் இறப்புஇலாளர் – தேவா-அப்:627/1,2
குயம் பொன்மை மா மலர் ஆக குலாவின கூட ஒண்ணா – தேவா-அப்:973/2
கூட நீர் சென்று கொண்டீச்சுரவனை – தேவா-அப்:1772/3
கூட வேடத்தர் ஆகி குழுவில் என் – தேவா-அப்:2072/1
பலங்கள் தரித்து உகந்த பண்பும் கண்டேன் பாடல் ஒலி எலாம் கூட கண்டேன் – தேவா-அப்:2859/2
மேல்


கூடத்தார் (2)

பெண்ணாகடத்து பெரும் தூங்கானைமாடத்தார் கூடத்தார் பேராவூரார் – தேவா-அப்:2596/3
எரி சந்தி வேட்கும் இடத்தார் ஏம கூடத்தார் பாட தேன் இசை ஆர் கீதர் – தேவா-அப்:2603/3
மேல்


கூடல் (19)

கூடினார் கூடல் ஆலவாயிலார் நல்ல கொன்றை – தேவா-அப்:250/2
குறைதரும் அடியவர்க்கு குழகனை கூடல் ஆமே – தேவா-அப்:366/4
கூடல் ஆம் திரு கோளிலி ஈசனை – தேவா-அப்:1640/3
கூடல் ஆக்கிடும் குன்றின் மணல் கொடு – தேவா-அப்:1714/2
கூடு நீ என்று கூடல் இழைக்குமே – தேவா-அப்:1941/4
எள்ளும் படையான் இடைத்தானமும் ஏயீச்சுரமும் நல் ஏமம் கூடல்
கொள்ளும் இலயத்தார் கோடிகாவும் குரங்கணில்முட்டமும் குறும்பலாவும் – தேவா-அப்:2156/2,3
கொடி மாட நீள் தெருவு கூடல் கோட்டூர் கொடுங்கோளூர் தண் வளவி கண்டியூரும் – தேவா-அப்:2212/1
திளைத்தானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2275/4
தெள் நிலவு தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2276/4
தீ திரளை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2277/4
தேன் அமுதை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2278/4
சீரானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2279/4
தேவனை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2280/4
சிறந்தானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2281/4
சேயானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2282/4
திகை சுடரை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2283/4
சிலையானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2284/4
தீர்த்தனை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2285/4
கொண்டீச்சுரம் கூந்தலூர் கூழையூர் கூடல் குருகாவூர்வெள்ளடை குமரி கொங்கு – தேவா-அப்:2794/2
மேல்


கூடலர்-தம் (1)

கூடலர்-தம் மூஎயிலும் எரிசெய்தாரும் குரை கழலால் கூற்றுவனை குமைசெய்தாரும் – தேவா-அப்:2681/2
மேல்


கூடலும் (1)

தில்லை சிற்றம்பலமும் தென் கூடலும் தென் ஆனைக்காவும் சிராப்பள்ளியும் – தேவா-அப்:2149/2
மேல்


கூடவே (2)

கூறினான் உமையாளொடும் கூடவே – தேவா-அப்:1424/4
குழுவுக்கு எவ்விடத்தேன் சென்று கூடவே – தேவா-அப்:1967/4
மேல்


கூடா (1)

குடவாயில் குணவாயில் ஆன எல்லாம் புகுவாரை கொடுவினைகள் கூடா அன்றே – தேவா-அப்:2803/4
மேல்


கூடாதீர் (1)

குற்றம் கூடி குணம் பல கூடாதீர்
மற்றும் தீவினை செய்தன மாய்க்கல் ஆம் – தேவா-அப்:1724/1,2
மேல்


கூடி (45)

கோழி பெடையொடும் கூடி குளிர்ந்து வருவன கண்டேன் – தேவா-அப்:22/4
பேடை மயிலொடும் கூடி பிணைந்து வருவன கண்டேன் – தேவா-அப்:25/4
கூடினார் அ நெறி கூடி சென்றலும் – தேவா-அப்:110/2
குணங்கள் பேசி கூடி பாடி தொண்டர்கள் – தேவா-அப்:211/1
மைந்தர்களோடு மங்கையர் கூடி மயங்குவார் – தேவா-அப்:214/2
முந்திய தேவர் கூடி முறைமுறை இருக்கு சொல்லி – தேவா-அப்:287/2
குண்டனாய் சமணரோடே கூடி நான் கொண்ட மாலை – தேவா-அப்:384/1
மாலும் நான்முகனும் கூடி மலர் அடி வணங்க வேலை – தேவா-அப்:395/3
பிரிவு இலா அமரர் கூடி பெருந்தகை பிரான் என்று ஏத்தும் – தேவா-அப்:398/3
துன்பு இலா தொண்டர் கூடி தொழுது அழுது ஆடி பாடும் – தேவா-அப்:399/3
வான்-தலை தேவர் கூடி வானவர்க்கு இறைவா என்னும் – தேவா-அப்:417/3
நாற்ற மா மலர் மேல் ஏறும் நான்முகன் இவர்கள் கூடி
ஆற்றலால் அளக்கலுற்றார்க்கு அழல் உரு ஆயினானே – தேவா-அப்:496/2,3
புகலிடம் ஆகி வாழும் புகலிலி இருவர் கூடி
இகல் இடம் ஆக நீண்டு அங்கு ஈண்டு எழில் அழல் அது ஆகி – தேவா-அப்:516/2,3
குருகு இனம் கூடி ஆங்கே கும்மலித்து இறகு உலர்த்தி – தேவா-அப்:535/3
ஆர் வலம் நம்மின் மிக்கார் என்ற அ அரக்கர் கூடி
போர் வலம் செய்து மிக்கு பொருதவர் தம்மை வீட்டி – தேவா-அப்:593/1,2
மாலும் நான்முகனும் கூடி காண்கிலா வகையுள் நின்றாய் – தேவா-அப்:617/2
பட அரவு அரையர் போலும் பாரிடம் பலவும் கூடி
குடம் உடை முழவம் ஆர்ப்ப கூளிகள் பாட நாளும் – தேவா-அப்:643/2,3
முறைமுறை அமரர் கூடி முடிகளால் வணங்க நின்ற – தேவா-அப்:644/3
ஓலெடுத்து உழைஞர் கூடி ஒளிப்பதற்கு அஞ்சுகின்றேன் – தேவா-அப்:651/3
அரவத்தால் வரையை சுற்றி அமரரோடு அசுரர் கூடி
அரவித்து கடைய தோன்றும் ஆல நஞ்சு அமுதா உண்பார் – தேவா-அப்:685/1,2
அணை உடை அடியர் கூடி அன்பொடு மலர்கள் தூவும் – தேவா-அப்:702/3
நெருக்கின வானவர் தானவர் கூடி கடைந்த நஞ்சை – தேவா-அப்:832/3
கூடி நின்றாய் குவி மென்முலையாளையும் கொண்டு உடனே – தேவா-அப்:835/2
கூடி முழவ குவி கவிழ் கொட்ட குறுநரிகள் – தேவா-அப்:891/2
கூம்பலை செய்த கரதலத்து அன்பர்கள் கூடி பல் நாள் – தேவா-அப்:963/2
கொண்டல்_வண்ணனும் கூடி அறிகிலா – தேவா-அப்:1142/2
அண்ட வானவர் கூடி கடைந்த நஞ்சு – தேவா-அப்:1203/1
குறிப்பினால் சென்று கூடி தொழுதுமே – தேவா-அப்:1551/4
குற்றம் கூடி குணம் பல கூடாதீர் – தேவா-அப்:1724/1
கூடி வந்து குமைப்பதன் முன்னமே – தேவா-அப்:1921/2
கொல்லை வாய் குருந்து ஒசித்து குழலும் ஊதும் கோவலனும் நான்முகனும் கூடி எங்கும் – தேவா-அப்:2116/3
பெரும் பித்தர் கூடி பிதற்றும் அடி பிழைத்தார் பிழைப்பு அறிய வல்ல அடி – தேவா-அப்:2142/3
கூர் அரவத்துஅணையானும் குளிர் தண் பொய்கை மலரவனும் கூடி சென்று அறியமாட்டார் – தேவா-அப்:2199/1
முழுது உலகில் வானவர்கள் முற்றம் கூடி முடியால் உற வணங்கி முற்றம் பற்றி – தேவா-அப்:2338/3
ஓர் ஊரா உலகு எலாம் ஒப்ப கூடி உமையாள்_மணவாளா என்று வாழ்த்தி – தேவா-அப்:2339/3
விண் இயங்கு தேவர்களும் வேதம் நான்கும் விரை மலர் மேல் நான்முகனும் மாலும் கூடி
எண்ண அரிய திரு நாமம் உடையாய் என்றும் எழில் ஆரூரா என்றே ஏத்தாநில்லே – தேவா-அப்:2398/3,4
மென்முலையார் கூடி விரும்பி ஆடும் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2437/4
மருதங்களா மொழிவர் மங்கையோடு வானவரும் மால் அயனும் கூடி தங்கள் – தேவா-அப்:2442/1
ஊரும் புரம் மூன்றும் அட்டாய் நீயே ஒண் தாமரையானும் மாலும் கூடி
தேரும் அடி என் மேல் வைத்தாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2475/3,4
இரவி குலம் முதலா வானோர் கூடி எண் இறந்த கோடி அமரர் ஆயம் – தேவா-அப்:2505/3
மீண்டானை விண்ணவர்களோடும் கூடி விரை மலர் மேல் நான்முகனும் மாலும் தேர – தேவா-அப்:2521/2
பத்தர்கள்தாம் பலர் உடனே கூடி பாடி பயின்று இருக்கும் ஊர் ஏதோ பணியீர் என்ன – தேவா-அப்:2537/3
வல்லராய் வானவர்கள் எல்லாம் கூடி வணங்குவார் வாழ்த்துவார் வந்து நிற்பார் – தேவா-அப்:2539/1
நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி நாம் இருக்கும் ஊர் பணியீர் அடிகேள் என்ன – தேவா-அப்:2539/3
ஐயினால் மிடறு அடைப்புண்டு ஆக்கை விட்டு ஆவியார் போலதுமே அகத்தார் கூடி
மையினால் கண் எழுதி மாலை சூட்டி மயானத்தில் இடுவதன் முன் மதியம் சூடும் – தேவா-அப்:2702/1,2
மேல்


கூடிய (5)

கூடு இள மென்முலையாளை கூடிய கோலத்தினானும் – தேவா-அப்:32/2
கூடிய குழகனாரை கூடும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:368/4
கோழம்பா என கூடிய செல்வமே – தேவா-அப்:1713/4
கோழைமாரொடும் கூடிய குற்றம் ஆம் – தேவா-அப்:1718/2
மடுத்தானை அரு நஞ்சம் மிடற்றுள் தங்க வானவர்கள் கூடிய அ தக்கன் வேள்வி – தேவா-அப்:2763/3
மேல்


கூடியும் (1)

குழைக்கும் வண்ணங்கள் ஆகியும் கூடியும்
மழை கண் மா முகில் ஆகிய வண்ணமும் – தேவா-அப்:1349/2,3
மேல்


கூடினார் (5)

கூடினார் அ நெறி கூடி சென்றலும் – தேவா-அப்:110/2
கூடினார் கூடல் ஆலவாயிலார் நல்ல கொன்றை – தேவா-அப்:250/2
கூடினார் ஒருவர் போலும் குளிர் புனல் வளைந்த திங்கள் – தேவா-அப்:354/2
கூடினார் உமை-தன்னோடே குறிப்பு உடை வேடம் கொண்டு – தேவா-அப்:666/1
கூடினார் உமை அவளும் கோலம் கொள்ள கொலை பகழி உடன் கோத்து கோர பூசல் – தேவா-அப்:2912/2
மேல்


கூடினான் (1)

கூடினான் உமையாள் ஒருபாகமாய் – தேவா-அப்:1563/1
மேல்


கூடு (5)

கூடு இள மென்முலையாளை கூடிய கோலத்தினானும் – தேவா-அப்:32/2
கூடு அரவத்தர் குரல் கிண்கிணி அடி – தேவா-அப்:171/1
கூடு பூதம் குழுமி நின்று ஆர்க்கவே – தேவா-அப்:1582/2
கூடு நீ என்று கூடல் இழைக்குமே – தேவா-அப்:1941/4
மெய் தானத்து அகம்படியுள் ஐவர் நின்று வேண்டிற்று குறை முடித்து வினைக்கு கூடு ஆம் – தேவா-அப்:2503/1
மேல்


கூடு-மின் (1)

கூடு-மின் குரங்காடுதுறையையே – தேவா-அப்:1707/4
மேல்


கூடும் (4)

கூடிய குழகனாரை கூடும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:368/4
கூன் இளமதியினானை கூடும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:369/4
கொள்ளி மேல் எறும்பு என் உள்ளம் எங்ஙனம் கூடும் ஆறே – தேவா-அப்:731/4
உற்று வைத்தாய் உமையாளொடும் கூடும் பரிசு எனவே – தேவா-அப்:839/2
மேல்


கூடுமே (3)

கொட்டிட்டை உறைவான் கழல் கூடுமே – தேவா-அப்:1760/4
கூடுமே குட முழவம் வீணை தாளம் குறு நடைய சிறு பூதம் முழக்க மா கூத்து – தேவா-அப்:2122/3
கூடுமே நாய் அடியேன் செய் குற்றேவல் குறை உண்டே திரு ஆரூர் குடிகொண்டீர்க்கே – தேவா-அப்:2344/4
மேல்


கூடுவன் (1)

கொண்டிருந்து ஆடி பாடி கூடுவன் குறிப்பினாலே – தேவா-அப்:233/2
மேல்


கூடுவார் (1)

கோரம் மிக்கு ஆர் தவத்தால் கூடுவார் குறிப்பு உளாரே – தேவா-அப்:592/4
மேல்


கூடை (1)

பூ பெய் கூடை புனைந்து சுமந்திலர் – தேவா-அப்:2007/2
மேல்


கூத்தப்பிரானே (1)

படரும் சடை மேல் மதியாய் போற்றி பல் கண கூத்தப்பிரானே போற்றி – தேவா-அப்:2650/2
மேல்


கூத்தர் (1)

கொலை நவின்ற களி யானை உரிவை போர்த்து கூத்து ஆடி திரிதரும் அ கூத்தர் நல்ல – தேவா-அப்:2667/2
மேல்


கூத்தர்-கொலோ (1)

நடவார் அடிகள் நடம் பயின்று ஆடிய கூத்தர்-கொலோ
வட-பால் கயிலையும் தென்-பால் நல்லூரும் தம் வாழ் பதியே – தேவா-அப்:945/3,4
மேல்


கூத்தராய் (3)

கூத்தராய் வீதி போந்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:487/4
கூத்தராய் பாடி ஆடி கொடு வலி அரக்கன்-தன்னை – தேவா-அப்:547/3
ஒக்க ஆடல் உகந்து உடன் கூத்தராய்
அக்கினோடு அரவு ஆர்ப்பர் ஆரூரரே – தேவா-அப்:1132/3,4
மேல்


கூத்தரே (1)

குலவிலால் எயில் மூன்று எய்த கூத்தரே – தேவா-அப்:1432/4
மேல்


கூத்தன் (9)

குற்றாலத்து உறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் ஆர் உளரோ – தேவா-அப்:91/2
கொண்டது ஓர் கோலம் ஆகி கோலக்கா உடைய கூத்தன்
உண்டது ஓர் நஞ்சம் ஆகி உலகு எலாம் உய்ய உண்டான் – தேவா-அப்:440/1,2
குடிகொண்டவா தில்லை அம்பல கூத்தன் குரை கழலே – தேவா-அப்:786/4
கோழம் பத்து உறை கூத்தன் குரை கழல் – தேவா-அப்:1711/3
கொக்கு இறகு சென்னி உடையான் கண்டாய் கொல்லை விடை ஏறும் கூத்தன் கண்டாய் – தேவா-அப்:2477/1
கொண்டல் அம் சேர் கண்டத்து எம் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2890/4
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2893/4
கொடி மலிந்த மதில் தில்லை கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2895/4
குழை ஆட நடம் ஆடும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2896/4
மேல்


கூத்தன்-தன்னை (2)

கொக்கு இருந்த மகுடத்து எம் கூத்தன்-தன்னை குண்டலம் சேர் காதானை குழைவார் சிந்தை – தேவா-அப்:2871/2
ஆரமுதாம் அணி தில்லை கூத்தன்-தன்னை வாட்போக்கி அம்மானை எம்மான் என்று – தேவா-அப்:2940/2
மேல்


கூத்தன்தான் (1)

கூத்தன்தான் குரங்காடுதுறையனே – தேவா-அப்:1706/4
மேல்


கூத்தனார் (2)

கொண்டு அணிந்த சடை முடி கூத்தனார்
எண் திசைக்கும் இடைமருதா என – தேவா-அப்:1209/2,3
கூத்தனார் உறையும் திரு கோளிலி – தேவா-அப்:1638/3
மேல்


கூத்தனாரே (11)

கொன் மலிந்த மூ இலை வேல் குழகர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2829/4
கூனல் இளம் பிறை தடவு கொடி கொள் மாட குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2830/4
கூறு அலைத்த மலைமடந்தை_கொழுநர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2831/4
கொக்கு இனிய கனி சிதறி தேறல் பாயும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2832/4
கோல மணி கொழித்து இழியும் பொன்னி நல் நீர் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2833/4
குடிகொண்டு என் மனத்தகத்தே புகுந்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2834/4
கூர் இலங்கு வேல் குமரன் தாதை போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2835/4
கோ சோழர் குலத்து அரசு கொடுத்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2836/4
கொங்கு அரவ சடை கொன்றை கொடுத்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2837/4
கோவியொடு குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2838/4
குறி கொண்ட இன்னிசை கேட்டு உகந்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2839/4
மேல்


கூத்தனின் (1)

கூத்தனின் கூத்து வல்லார் உளரோ என்தன் கோல்_வளைக்கே – தேவா-அப்:785/4
மேல்


கூத்தனுக்கு (2)

கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ நம்-தம் கூழைமையே – தேவா-அப்:784/4
ஆடும் கூத்தனுக்கு அன்புபட்டாள் அன்றே – தேவா-அப்:1714/4
மேல்


கூத்தனே (3)

குழகனே கோல வில்லீ கூத்தனே மாத்தாய் உள்ள – தேவா-அப்:605/3
கூத்தனே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1200/4
குஞ்சி வான் பிறை சூடிய கூத்தனே – தேவா-அப்:1303/4
மேல்


கூத்தனை (12)

குழல் ஆர் கோதை வரை மார்பில் குற்றாலத்து எம் கூத்தனை
நிழல் ஆர் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை – தேவா-அப்:151/2,3
ஆடும் தீ கூத்தனை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:196/4
கொட்டும் பறை உடை கூத்தனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:910/4
அனைத்து வேடம் ஆம் அம்பல கூத்தனை
தினைத்தனை பொழுதும் மறந்து உய்வனோ – தேவா-அப்:1082/3,4
கூத்தனை கொடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1083/4
சிட்டர் வாழ் தில்லை அம்பல கூத்தனை
எள்தனை பொழுதும் மறந்து உய்வனோ – தேவா-அப்:1084/3,4
எழுதி மேய்ந்த சிற்றம்பல கூத்தனை
இழுதையேன் மறந்து எங்ஙனம் உய்வனோ – தேவா-அப்:1089/3,4
தேர் உலாவிய தில்லையுள் கூத்தனை
ஆர்கிலா அமுதை மறந்து உய்வனோ – தேவா-அப்:1090/3,4
தேங்கு நீர் வயல் சூழ் தில்லை கூத்தனை
பாங்கு இலா தொண்டனேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1091/3,4
கொண்டு அணிந்த சடை முடி கூத்தனை
எண் திசைக்கும் இடைமருதா என – தேவா-அப்:1218/2,3
நல் திறம் காட்டிய கூத்தனை
கண்டனை கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1694/2,3
மாண்டார் எலும்பு அணிந்த வாழ்க்கையானை மயானத்தில் கூத்தனை வாள் அரவோடு என்பு – தேவா-அப்:2764/1
மேல்


கூத்தா (4)

கூத்தா உன் கூத்து காண்பான் கூட நான் வந்த ஆறே – தேவா-அப்:234/4
கூத்தா நின் குரை ஆர் கழலே அலது – தேவா-அப்:2020/3
நம்பனே நான்மறைகள் ஆயினானே நடம் ஆட வல்லானே ஞான கூத்தா
கம்பனே கச்சி மா நகர் உளானே கடி மதில்கள் மூன்றினையும் பொடியா எய்த – தேவா-அப்:2527/1,2
கூர்ந்தவனே குற்றாலம் மேய கூத்தா கொடு மூ இலையது ஓர் சூலம் ஏந்தி – தேவா-அப்:2528/2
மேல்


கூத்தின் (1)

குட மால் வரைய திண் தோளும் குனி சிலை கூத்தின் பயில்வும் – தேவா-அப்:14/2
மேல்


கூத்து (15)

கூத்தா உன் கூத்து காண்பான் கூட நான் வந்த ஆறே – தேவா-அப்:234/4
கூத்தனின் கூத்து வல்லார் உளரோ என்தன் கோல்_வளைக்கே – தேவா-அப்:785/4
கூத்து ஆடி உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1286/4
நாகம் பூண்டு கூத்து ஆடும் நள்ளாறனே – தேவா-அப்:1752/4
குற்றாலத்து அமர்ந்து உறையும் குழகன்-தன்னை கூத்து ஆட வல்லானை கோனை ஞானம் – தேவா-அப்:2094/3
கூடுமே குட முழவம் வீணை தாளம் குறு நடைய சிறு பூதம் முழக்க மா கூத்து
ஆடுமே அம் தட கை அனல் ஏந்துமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2122/3,4
கொய் மலர் அம் கொன்றை சடையார் போலும் கூத்து ஆட வல்ல குழகர் போலும் – தேவா-அப்:2249/3
குறைவு உடையார் மனத்து உளான் குமரன்_தாதை கூத்து ஆடும் குணம் உடையான் கொலை வேல் கையான் – தேவா-அப்:2508/2
குயில் ஆய மென்மொழியாள் குளிர்ந்து நோக்க கூத்து ஆட வல்ல குழகர் போலும் – தேவா-அப்:2625/2
கொலை நவின்ற களி யானை உரிவை போர்த்து கூத்து ஆடி திரிதரும் அ கூத்தர் நல்ல – தேவா-அப்:2667/2
கோன் அவனை கொல்லை விடைஏற்றினானை குழல் முழவம் இயம்ப கூத்து ஆட வல்ல – தேவா-அப்:2693/3
கொடி ஏயும் வெள் ஏற்றாய் கூளி பாட குறள் பூதம் கூத்து ஆட நீயும் ஆடி – தேவா-அப்:2714/1
கொய்தானை கூத்து ஆட வல்லான் தன்னை குறி இலா கொடியேனை அடியேன் ஆக – தேவா-அப்:2753/3
குட முழவ சதி வழியே அனல் கை ஏந்தி கூத்து ஆட வல்ல குழகன் ஆகி – தேவா-அப்:2910/3
ஆடினார் பெரும் கூத்து காளி காண அரு மறையோடு ஆறு அங்கம் ஆய்ந்துகொண்டு – தேவா-அப்:2912/3
மேல்


கூத்தும் (4)

அரங்கிடை நூல் அறிவாளர் அறியப்படாதது ஒர் கூத்தும்
நிரந்த கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:16/3,4
நாடற்கு அரியது ஒர் கூத்தும் நன்கு உயர் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:18/3
கொடி ஆர் இடபத்தர் கூத்தும் ஆடி குளிர் கொன்றை மேல் வைப்பர் கோலம் ஆர்ந்த – தேவா-அப்:2259/1
தலை ஆர கும்பிட்டு கூத்தும் ஆடி சங்கரா சய போற்றிபோற்றி என்றும் – தேவா-அப்:2397/3
மேல்


கூத்தை (1)

மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை மணி திகழும் அம்பலத்தை மன்னி கூத்தை
ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ அணி ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2427/3,4
மேல்


கூத்தொடும் (1)

கூத்தொடும் பாட வைத்தார் கோள் அரா மதியம் நல்ல – தேவா-அப்:317/3
மேல்


கூதலாய் (1)

கூதலாய் பொழிகின்ற மாரி ஆகி குவலயங்கள் முழுதுமாய் கொண்டல் ஆகி – தேவா-அப்:2909/2
மேல்


கூந்தல் (5)

நறவு இள நறு மென் கூந்தல் நங்கை ஓர்பாகத்தானை – தேவா-அப்:580/2
விரை தரு கரு மென் கூந்தல் விளங்கு இழை வேல் ஒண்_கண்ணாள் – தேவா-அப்:658/1
நெடும் பொறை மலையர்பாவை நேர் இழை நெறி மென் கூந்தல்
கொடும் குழை புகுந்த அன்றும் கோவணம் அரையதேயோ – தேவா-அப்:746/3,4
வம்பின் நாள் மலர் கூந்தல் உமையாள் காதல் மணவாளனே வலங்கை மழுவாளனே – தேவா-அப்:2126/2
சிலையவன் காண் செய்ய வாய் கரிய கூந்தல் தேன்_மொழியை ஒருபாகம் சேர்த்தினான் காண் – தேவா-அப்:2569/2
மேல்


கூந்தலார் (1)

நெறி இலங்கு கூந்தலார் பின்பின் சென்று நெடும் கண் பனி சோர நின்று நோக்கி – தேவா-அப்:2218/3
மேல்


கூந்தலூர் (1)

கொண்டீச்சுரம் கூந்தலூர் கூழையூர் கூடல் குருகாவூர்வெள்ளடை குமரி கொங்கு – தேவா-அப்:2794/2
மேல்


கூப்பி (5)

கைகாள் கூப்பி தொழீர் கடி மா மலர் தூவி நின்று – தேவா-அப்:88/1
பை வாய் பாம்பு அரை ஆர்த்த பரமனை கைகாள் கூப்பி தொழீர் – தேவா-அப்:88/2
தழைத்தது ஓர் ஆத்தியின் கீழ் தாபரம் மணலால் கூப்பி
அழைத்து அங்கே ஆவின் பாலை கறந்துகொண்டு ஆட்ட கண்டு – தேவா-அப்:478/1,2
நிறைந்த மா மணலை கூப்பி நேசமோடு ஆவின் பாலை – தேவா-அப்:711/1
அணங்கும் குழலி அணி ஆர் வளை கரம் கூப்பி நின்று – தேவா-அப்:900/2
மேல்


கூப்பினான் (1)

கொண்டவன் குறிப்பினாலே கூப்பினான் தாபரத்தை – தேவா-அப்:469/2
மேல்


கூப்பும் (1)

கண் பனிக்கும் கை கூப்பும் கண் மூன்று உடை – தேவா-அப்:1741/1
மேல்


கூம்பலை (1)

கூம்பலை செய்த கரதலத்து அன்பர்கள் கூடி பல் நாள் – தேவா-அப்:963/2
மேல்


கூம்பி (1)

கூம்பி தொழுவார்-தம் குற்றேவலை குறிக்கொண்டு இருக்கும் குழகா போற்றி – தேவா-அப்:2132/2
மேல்


கூர் (18)

கொடுத்தானை குல வரையே சிலைஆக கூர் அம்பு – தேவா-அப்:71/2
கூர் இருள் கிழிய நின்ற கொடு மழு கையில் வைத்தார் – தேவா-அப்:298/1
செ வலி கூர் விழியான் சிரம் பத்தால் எடுக்குற்றானை – தேவா-அப்:572/3
கூர் மழு ஒன்றால் ஓச்ச குளிர் சடை கொன்றை மாலை – தேவா-அப்:634/3
கொண்ட கோவண ஆடையன் கூர் எரி – தேவா-அப்:1130/3
கூர் கொள் வேலினன் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1769/4
கூர் அரவத்துஅணையானும் குளிர் தண் பொய்கை மலரவனும் கூடி சென்று அறியமாட்டார் – தேவா-அப்:2199/1
வை கிளரும் கூர் வாள் படையான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2318/4
கொலை உருவ கூற்று உதைத்த கொள்கையான் காண் கூர் எரி நீர் மண்ணொடு காற்று ஆயினான் காண் – தேவா-அப்:2333/3
கொக்கு உலாம் பீலியொடு கொன்றை மாலை குளிர் மதியும் கூர் அரவும் நீரும் சென்னி – தேவா-அப்:2386/2
கூர் ஆர் மழுவாள் படை ஒன்று ஏந்தி குறள் பூத பல் படையாய் என்றேன் நானே – தேவா-அப்:2455/2
கொலை யானை உரி போர்த்த கொள்கையானை கோள் அரியை கூர் அம்பா வரை மேல் கோத்த – தேவா-அப்:2694/1
கொற்றவனை கூர் அரவம் பூண்டான்-தன்னை குறைந்து அடைந்து தன் திறமே கொண்டாற்கு என்றும் – தேவா-அப்:2783/3
கொடுத்தானை பேரோடும் கூர் வாள்-தன்னை குரை கழலால் கூற்றுவனை மாள அன்று – தேவா-அப்:2785/3
கூர் ஆர் குறுக்கைவீரட்டானமும் கோட்டூர் குடமூக்கு கோழம்பமும் – தேவா-அப்:2787/3
கூர் இலங்கு வேல் குமரன் தாதை போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2835/4
கூர் ஆர் வெம் தழலவனும் காற்றும் நீரும் குல வரையும் ஆயவன் காண் கொடு நஞ்சு உண்ட – தேவா-அப்:2841/2
கூர் ஆர்ந்த மூ இலை வேல் படையான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2894/4
மேல்


கூர்ச்சமும் (1)

கோலும் புல்லும் ஒரு கையில் கூர்ச்சமும்
தோலும் பூண்டு துயரம் உற்று என் பயன் – தேவா-அப்:1463/1,2
மேல்


கூர்த்த (3)

கூர்த்த வாய் அம்பு கோத்து குணங்களை அறிவர் போலும் – தேவா-அப்:663/2
கூர்த்த வேலால் குமைப்பதன் முன்னமே – தேவா-அப்:1920/2
கூர்த்த நடம் ஆடி நீயே என்றும் கோடிகா மேய குழகா என்றும் – தேவா-அப்:2494/2
மேல்


கூர்த்தானை (1)

கூர்த்தானை கொடு நெடு வேல் கூற்றம்-தன்னை குரை கழலால் குமைத்து முனி கொண்ட அச்சம் – தேவா-அப்:2627/2
மேல்


கூர்த்து (1)

கூர்த்து ஆர் மருப்பின் கொலை களிற்ற ஈர் உரி – தேவா-அப்:160/3
மேல்


கூர்ந்தவனே (1)

கூர்ந்தவனே குற்றாலம் மேய கூத்தா கொடு மூ இலையது ஓர் சூலம் ஏந்தி – தேவா-அப்:2528/2
மேல்


கூர்ந்து (2)

கூர்ந்து ஆர் விடையினை ஏறி பல் பூத படை நடுவே – தேவா-அப்:858/2
நாதனே என்றுஎன்று பரவி நாளும் நைந்து உருகி வஞ்சகம் அற்று அன்பு கூர்ந்து
வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு வைகல் மறவாது வாழ்த்தி ஏத்தி – தேவா-அப்:2696/2,3
மேல்


கூர்ப்பு (1)

கூர்ப்பு உடை ஒள் வாள் மழுவனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:908/4
மேல்


கூர்மை (1)

தன் கூர்மை கருதி வரை எடுக்கலுற்றான் தலைகளொடு மலைகள் அன தாளும் தோளும் – தேவா-அப்:2604/2
மேல்


கூர்மையர்க்கு (1)

ஆறு கூர்மையர்க்கு அ சமய பொருள் – தேவா-அப்:1949/3
மேல்


கூர்மையே (1)

சீலமே சிவலோக நெறியே ஆகும் சீர்மையே கூர்மையே குணமே நல்ல – தேவா-அப்:2429/3
மேல்


கூர்வார்க்கு (1)

கண்ட அளவில் களி கூர்வார்க்கு எளியான்-தன்னை காரணனை நாரணனை கமலத்தோனை – தேவா-அப்:2878/2
மேல்


கூர்வித்த (1)

கூர்வித்தவா குற்றம் நோய் வினை காட்டியும் கூர்வித்த நோய் – தேவா-அப்:874/1
மேல்


கூர்வித்தவா (1)

கூர்வித்தவா குற்றம் நோய் வினை காட்டியும் கூர்வித்த நோய் – தேவா-அப்:874/1
மேல்


கூர (2)

கண்ணினால் களி கூர கையால் தொழுது – தேவா-அப்:1196/1
விளைத்த பெரும் பத்தி கூர நின்று மெய் அடியார்-தம்மை விரும்ப கண்டேன் – தேவா-அப்:2853/1
மேல்


கூரம் (1)

கூரம் மிக்கவனை சென்று கொன்று உடன் கடல் படுத்து – தேவா-அப்:592/2
மேல்


கூரிது (1)

கூரிது ஆய அறிவு கைகூடிடும் – தேவா-அப்:1839/2
மேல்


கூரிய (1)

கூரிய குணத்தார் குறி நின்றவன் – தேவா-அப்:1246/2
மேல்


கூரும் (4)

நெஞ்சின் இருள் கூரும் பொழுது நிலா பாரித்து – தேவா-அப்:194/3
பொன் கூரும் கழல் அடி ஓர் விரலால் ஊன்றி பொருப்பு அதன் கீழ் நெரித்து அருள்செய் புவனநாதர் – தேவா-அப்:2604/3
மின் கூரும் சடை முடியார் விடையின் பாகர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2604/4
தீ கூரும் திரு மேனி ஒருபால் மற்றை ஒருபாலும் அரி உருவம் திகழ்ந்த செல்வர் – தேவா-அப்:2668/1
மேல்


கூரை (2)

தோல் உடுத்து உதிரம் அட்டி தொகு மயிர் மேய்ந்த கூரை
ஓலெடுத்து உழைஞர் கூடி ஒளிப்பதற்கு அஞ்சுகின்றேன் – தேவா-அப்:651/2,3
தாம் எடுத்த கூரை தவிர போவார் தயக்கம் பல படைத்தார் தாமரையினார் – தேவா-அப்:2202/2
மேல்


கூவ (2)

கொய் உலா மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் ஆரூரரை – தேவா-அப்:42/3
கழை படு காடு தென்றல் குயில் கூவ அஞ்சுகணையோன் அணைந்து புகலும் – தேவா-அப்:142/1
மேல்


கூவல் (1)

கூவல் ஆமை குரை கடல் ஆமையை – தேவா-அப்:2080/1
மேல்


கூவல்தான் (1)

கூவல்தான் அவர்கள் கேளார் குணம் இலா ஐவர் செய்யும் – தேவா-அப்:355/3
மேல்


கூவலோடு (1)

கூவலோடு ஒக்குமோ கடல் என்றல் போல் – தேவா-அப்:2080/2
மேல்


கூவி (1)

கூவி அமர்_உலகு அனைத்தும் உருவி போக குறியில் அறு குணத்து ஆண்டுகொண்டார் போலும் – தேவா-அப்:2838/2
மேல்


கூவித்து (1)

கூவித்து கொள்ளும்தனை அடியேனை குறிக்கொள்வதே – தேவா-அப்:833/4
மேல்


கூவிள (3)

தேன் திகழ் கொன்றையும் கூவிள மாலை திரு முடி மேல் – தேவா-அப்:1025/1
வெறி விரவு கூவிள நல் தொங்கலானை வீரட்டானத்தானை வெள்ஏற்றினானை – தேவா-அப்:2107/1
கொன்றை அம் கூவிள மாலை-தன்னை குளிர் சடை மேல் வைத்து உகந்த கொள்கையாரும் – தேவா-அப்:2253/1
மேல்


கூவிளம் (5)

நாறு மல்லிகை கூவிளம் செண்பகம் – தேவா-அப்:1177/1
கொன்றை மாலையும் கூவிளம் மத்தமும் – தேவா-அப்:1207/1
குழலும் கொன்றையும் கூவிளம் மத்தமும் – தேவா-அப்:1360/1
கொக்கின் தூவலும் கூவிளம் கண்ணியும் – தேவா-அப்:1625/1
கொய் ஆடு கூவிளம் கொன்றை மாலை கொண்டு அடியேன் நான் இட்டு கூறி நின்று – தேவா-அப்:3064/3
மேல்


கூவிளமும் (3)

கொய் மலர் கொன்றை துழாய் வன்னி மத்தமும் கூவிளமும்
மொய் மலர் வேய்ந்த விரி சடை கற்றை விண்ணோர் பெருமான் – தேவா-அப்:857/1,2
கோங்கு அணைந்த கூவிளமும் மத மத்தமும் குழற்கு அணிந்த கொள்கையொடு கோலம் தோன்றும் – தேவா-அப்:2273/3
கொக்கு இறகும் கூவிளமும் கொண்டை கொண்டார் கொடியானை அடல் ஆழிக்கு இரையா கொண்டார் – தேவா-அப்:3028/3
மேல்


கூவினான் (1)

கூவினான் குளிரும் பொழில் கோளிலி – தேவா-அப்:1637/3
மேல்


கூவை-வாய் (1)

கூவை-வாய் மணி வரன்றி கொழித்து ஓடும் காவிரி பூம் – தேவா-அப்:121/1
மேல்


கூழ் (1)

அன்பு இருத்தி அடியேனை கூழ் ஆட்கொண்டு அருள்செய்த ஆரூரர்-தம் – தேவா-அப்:43/3
மேல்


கூழை (2)

கூழை ஏறு உடைய செல்வா கோடிகா உடைய கோவே – தேவா-அப்:493/4
கூழை பாய் வயல் கோழம்பத்தான் அடி – தேவா-அப்:1718/3
மேல்


கூழைமையே (1)

கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ நம்-தம் கூழைமையே – தேவா-அப்:784/4
மேல்


கூழையூர் (1)

கொண்டீச்சுரம் கூந்தலூர் கூழையூர் கூடல் குருகாவூர்வெள்ளடை குமரி கொங்கு – தேவா-அப்:2794/2
மேல்


கூழையேன் (1)

கூழையேன் ஆகமாட்டேன் கொடுவினை குழியில் வீழ்ந்து – தேவா-அப்:766/1
மேல்


கூளி (1)

கொடி ஏயும் வெள் ஏற்றாய் கூளி பாட குறள் பூதம் கூத்து ஆட நீயும் ஆடி – தேவா-அப்:2714/1
மேல்


கூளிகள் (1)

குடம் உடை முழவம் ஆர்ப்ப கூளிகள் பாட நாளும் – தேவா-அப்:643/3
மேல்


கூற்றங்கள் (1)

கொங்கினும் அரும்பி வைத்தார் கூற்றங்கள் கெடுக்க வைத்தார் – தேவா-அப்:301/1
மேல்


கூற்றத்தை (1)

நிலையவனாய் நின் ஒப்பார் இல்லாதானே நின்று உணரா கூற்றத்தை சீறி பாய்ந்த – தேவா-அப்:2524/2
மேல்


கூற்றம் (16)

கூற்றம் போல் ஐவர் வந்து குலைத்திட்டு கோகு செய்ய – தேவா-அப்:503/3
கொன்று அடைந்து ஆடி குமைத்திடும் கூற்றம் ஒன்னார் மதில் மேல் – தேவா-அப்:855/1
கூற்றம் கண்டு உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:929/4
கோவாய் முடுகி அடு திறல் கூற்றம் குமைப்பதன் முன் – தேவா-அப்:933/1
சுருட்டிய நாவில் வெம் கூற்றம் பதைப்ப உதைத்து உங்ஙனே – தேவா-அப்:1016/3
கூற்றம் பாய்ந்த குளிர் புன் சடை அரற்கு – தேவா-அப்:1174/3
கூற்றம் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1765/4
கூற்றம் வந்து உமை கொள்வதன் முன்னமே – தேவா-அப்:1857/2
கூற்றம் வந்து குமைத்திடும்போதினால் – தேவா-அப்:1917/1
கொன்று அருளி கொடும் கூற்றம் நடுங்கி ஓட குரை கழல் சேவடி வைத்தார் விடையும் வைத்தார் – தேவா-அப்:2230/3
கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை கொடு மழுவாள் கொண்டது ஓர் கையான்-தன்னை – தேவா-அப்:2377/2
கொலை ஆய கூற்றம் உதைத்தார்தாமே கொல் வேங்கை தோல் ஒன்று அசைத்தார்தாமே – தேவா-அப்:2445/2
கொலை ஆன கூற்றம் குமைத்தான் கண்டாய் கொல் வேங்கை தோல் ஒன்று உடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2479/2
கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை குரை கடல்-வாய் நஞ்சு உண்ட கண்டன்-தன்னை – தேவா-அப்:2548/2
கொடிய வன் கூற்றம் உதைத்தாய் போற்றி கோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றி – தேவா-அப்:2645/3
வெம்ப வருகிற்பது அன்று கூற்றம் நம் மேல் வெய்ய வினை பகையும் பைய நையும் – தேவா-அப்:3016/1
மேல்


கூற்றம்-தன்னை (1)

கூர்த்தானை கொடு நெடு வேல் கூற்றம்-தன்னை குரை கழலால் குமைத்து முனி கொண்ட அச்சம் – தேவா-அப்:2627/2
மேல்


கூற்றன் (1)

கூற்றன் மேனியில் கோலம் அது ஆகிய – தேவா-அப்:1792/2
மேல்


கூற்றனை (1)

கூற்றனை கொடியார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1105/3
மேல்


கூற்றானை (2)

கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை கொடு மழுவாள் கொண்டது ஓர் கையான்-தன்னை – தேவா-அப்:2377/2
கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை குரை கடல்-வாய் நஞ்சு உண்ட கண்டன்-தன்னை – தேவா-அப்:2548/2
மேல்


கூற்றின் (1)

மாளாமை மறையவனுக்கு உயிரும் வைத்து வன் கூற்றின் உயிர் மாள உதைத்தான்-தன்னை – தேவா-அப்:2828/2
மேல்


கூற்றினான் (1)

கூற்றினான் குழல் கோல சடையில் ஓர் – தேவா-அப்:1512/2
மேல்


கூற்றினை (4)

கூற்றினை குமைப்பர் போலும் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:477/4
குஞ்சரத்து உரியர் போலும் கூற்றினை குமைப்பர் போலும் – தேவா-அப்:645/2
கூற்றினை உதைத்த பாத குழகனை மழலை வெள் ஏறு – தேவா-அப்:720/1
கூற்றினை உதைத்திட்ட குணம் உடை – தேவா-அப்:1235/3
மேல்


கூற்றினையும் (1)

கூற்றினையும் குரை கழலால் உதைத்தார் போலும் கொல் புலி தோல் ஆடை குழகர் போலும் – தேவா-அப்:2364/3
மேல்


கூற்று (19)

கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நான் அறியேன் – தேவா-அப்:1/1
கூற்றுக்கும் கூற்று அது ஆனாய் கோடிகா உடைய கோவே – தேவா-அப்:496/4
கொடியும் உற்ற விடை ஏறி ஓர் கூற்று ஒருபால் உடையான் – தேவா-அப்:906/2
என் ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல் இரும் கூற்று அகல – தேவா-அப்:1028/2
கடும் கை கூற்று உதைத்திட்ட கருத்தரே – தேவா-அப்:1295/4
கூற்று தண்டத்தை அஞ்சி குறிக்கொண்-மின் – தேவா-அப்:1307/1
வேதனைப்படுத்தானை வெம் கூற்று உதை – தேவா-அப்:1659/2
குறைவு இலா கொடும் கூற்று உதைத்திட்டவன் – தேவா-அப்:1736/2
கொல் ஆர் மழுவாள் படையாய் போற்றி கொல்லும் கூற்று ஒன்றை உதைத்தாய் போற்றி – தேவா-அப்:2129/2
போர் உருவ கூற்று உதைத்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2274/4
கொலை உருவ கூற்று உதைத்த கொள்கையான் காண் கூர் எரி நீர் மண்ணொடு காற்று ஆயினான் காண் – தேவா-அப்:2333/3
வெற்பு உறுத்த திருவடியால் கூற்று அட்டானை விளக்கின் ஒளி மின்னின் ஒளி முத்தின் சோதி – தேவா-அப்:2349/1
கொம்பு அனைய நுண்இடையாள்_கூறா போற்றி குரை கழலால் கூற்று உதைத்த கோவே போற்றி – தேவா-அப்:2411/2
கூற்று அவன் காண் குணம் அவன் காண் குறி ஆனான் காண் குற்றங்கள் அனைத்தும் காண் கோலம் ஆய – தேவா-அப்:2568/1
குனிந்த சிலையால் புரம் மூன்று எரித்தாய் என்றும் கூற்று உதைத்த குரை கழல் சேவடியாய் என்றும் – தேவா-அப்:2704/1
கூறு ஆகி கூற்று ஆகி கோளும் ஆகி குணம் ஆகி குறையாத உவகை கண்ணீர் – தேவா-அப்:2884/2
கூற்று ஆகி கூற்று உதைத்த கொல் களிறும் ஆகி குரை கடலாய் குரை கடற்கு ஓர் கோமானுமாய் – தேவா-அப்:3008/2
கூற்று ஆகி கூற்று உதைத்த கொல் களிறும் ஆகி குரை கடலாய் குரை கடற்கு ஓர் கோமானுமாய் – தேவா-அப்:3008/2
குடமூக்கில் கீழ்க்கோட்டம் கோயில்கொண்டார் கூற்று உதைத்து ஓர் வேதியனை உய்யக்கொண்டார் – தேவா-அப்:3032/2
மேல்


கூற்றுக்கும் (1)

கூற்றுக்கும் கூற்று அது ஆனாய் கோடிகா உடைய கோவே – தேவா-அப்:496/4
மேல்


கூற்றுவர் (1)

கூற்றுவர் வாயில் பட்டேன் கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:672/4
மேல்


கூற்றுவன் (2)

எண்ணி நாளும் எரி அயில் கூற்றுவன்
துண்ணென்று ஒன்றில் துரக்கும் வழி கண்டேன் – தேவா-அப்:1843/1,2
கூற்றுவன் காண் கூற்றுவனை குமைத்த கோன் காண் குவலயன் காண் குவலயத்தின் நீர் ஆனான் காண் – தேவா-அப்:2725/1
மேல்


கூற்றுவனே (1)

கொலையவனே கொல் யானை தோல் மேல் இட்ட கூற்றுவனே கொடி மதில்கள் மூன்றும் எய்த – தேவா-அப்:2524/3
மேல்


கூற்றுவனை (4)

குன்றாத மா முனிவன் சாபம் நீங்க குரை கழலால் கூற்றுவனை குமைத்த கோனை – தேவா-அப்:2294/1
கூடலர்-தம் மூஎயிலும் எரிசெய்தாரும் குரை கழலால் கூற்றுவனை குமைசெய்தாரும் – தேவா-அப்:2681/2
கூற்றுவன் காண் கூற்றுவனை குமைத்த கோன் காண் குவலயன் காண் குவலயத்தின் நீர் ஆனான் காண் – தேவா-அப்:2725/1
கொடுத்தானை பேரோடும் கூர் வாள்-தன்னை குரை கழலால் கூற்றுவனை மாள அன்று – தேவா-அப்:2785/3
மேல்


கூற்றை (18)

கூற்றை கடந்ததும் கோள் அரவு ஆர்த்ததும் கோள் உழுவை – தேவா-அப்:816/1
பொழித்தன போர் எழில் கூற்றை உதைத்தன போற்றவர்க்காய் – தேவா-அப்:884/2
மெலியா வலி உடை கூற்றை உதைத்து விண்ணோர்கள் முன்னே – தேவா-அப்:902/2
நெறுக்கென்று இற செற்ற சேவடியால் கூற்றை நீறுசெய்தீர் – தேவா-அப்:932/2
உய்தல்பொருட்டு வெம் கூற்றை உதைத்தன உம்பர்க்கு எல்லாம் – தேவா-அப்:967/3
மாணிக்கு உயிர் பெற கூற்றை உதைத்தன மாவலி-பால் – தேவா-அப்:1026/1
கூற்றை நீக்கி குறைவு அறுத்து ஆள்வது ஓர் – தேவா-அப்:1676/3
நலியும் கூற்றை நலிந்த நள்ளாறர்-தம் – தேவா-அப்:1753/3
படு முழவம் பாணி பயிற்றும் அடி பதைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்த அடி – தேவா-அப்:2140/2
குரவன் ஆம் கூற்றை உதைத்தான்தான் ஆம் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும் – தேவா-அப்:2236/3
கொடியான் ஆம் கூற்றை உதைத்தான் ஆகும் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும் – தேவா-அப்:2240/3
பால் திரளை பயின்று ஆட வல்லான்-தன்னை பகைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2277/2
குற்றாலம் கோகரணம் மேவினானை கொடும் கை கரும் கூற்றை பாய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2514/1
முடித்தவன் காண் வன் கூற்றை சீற்ற தீயால் வலியார்-தம் புரம் மூன்றும் வேவ சாபம் – தேவா-அப்:2732/1
கொன்று ஆரும் கூற்றை உதைத்தார் தாமே கோல பழனை உடையார் தாமே – தேவா-அப்:2860/3
கோ ஆய முனிதன் மேல் வந்த கூற்றை குரை கழலால் அன்று குமைந்தார் போலும் – தேவா-அப்:2903/3
சூலத்தால் அந்தகனை சுருள கோத்து தொல் உலகில் பல் உயிரை கொல்லும் கூற்றை
காலத்தால் உதைசெய்து காதல்செய்த அந்தணனை கைக்கொண்ட செவ்வான்_வண்ணர் – தேவா-அப்:2916/2,3
நல் தவன் காண் அடி அடைந்த மாணிக்கு ஆக நணுகியது ஓர் பெரும் கூற்றை சேவடியினால் – தேவா-அப்:2933/3
மேல்


கூற (1)

குரவி குடி வாழ்க்கை வாழ எண்ணி குலைகை தவிர் நெஞ்சே கூற கேள் நீ – தேவா-அப்:2505/2
மேல்


கூறமாட்டேன் (1)

குறி இலேன் குணம் ஒன்று இல்லேன் கூறுமா கூறமாட்டேன்
நெறி படு மதி ஒன்று இல்லேன் நினையுமா நினையமாட்டேன் – தேவா-அப்:554/2,3
மேல்


கூறராய் (1)

குரவம் நாறும் குழல் உமை கூறராய்
அரவம் ஆட்டுவர் போல் அன்னியூரரே – தேவா-அப்:1146/3,4
மேல்


கூறன் (2)

கூறன் ஆகிலும் கூன் பிறை சூடிலும் – தேவா-அப்:1622/2
கோ தான் ஆம் கோல் வளையாள் கூறன் ஆகும் கொண்ட சமயத்தார் தேவன் ஆகி – தேவா-அப்:2235/2
மேல்


கூறனார் (1)

கூறனார் உறை கொண்டீச்சுரம் நினைந்து – தேவா-அப்:1777/3
மேல்


கூறா (1)

கொம்பு அனைய நுண்இடையாள்_கூறா போற்றி குரை கழலால் கூற்று உதைத்த கோவே போற்றி – தேவா-அப்:2411/2
மேல்


கூறாத (3)

கோடிகாவனை கூறாத நாள் எலாம் – தேவா-அப்:1854/3
குரவன் ஆம் கூற்றை உதைத்தான்தான் ஆம் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும் – தேவா-அப்:2236/3
கொடியான் ஆம் கூற்றை உதைத்தான் ஆகும் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும் – தேவா-அப்:2240/3
மேல்


கூறி (3)

உள் நிலா புகுந்து நின்று அங்கு உணர்வினுக்கு உணர கூறி
விண் இலார் மீயச்சூரார் வேண்டுவார் வேண்டுவார்க்கே – தேவா-அப்:249/2,3
கோவல்நகர்வீரட்டம் குறுக்கைவீரட்டம் கோத்திட்டை குடிவீரட்டானம் இவை கூறி
நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுக சென்றால் நமன் தமரும் சிவன் தமர் என்று அகல்வர் நன்கே – தேவா-அப்:2798/3,4
கொய் ஆடு கூவிளம் கொன்றை மாலை கொண்டு அடியேன் நான் இட்டு கூறி நின்று – தேவா-அப்:3064/3
மேல்


கூறிட்ட (1)

கூறிட்ட மெய்யர் ஆகி கூறினார் ஆறும் நான்கும் – தேவா-அப்:275/2
மேல்


கூறிடகிற்றியே (1)

கோன் எம் செல்வனை கூறிடகிற்றியே – தேவா-அப்:1865/4
மேல்


கூறிய (1)

குழலின் நேர் மொழி கூறிய கேண்-மினோ – தேவா-அப்:1469/2
மேல்


கூறியே (1)

கொந்து ஆர் பூம் குழலினாரை கூறியே காலம் போன – தேவா-அப்:410/1
மேல்


கூறிரேல் (1)

கோடிகாவனை கூறிரேல் கூறினேன் – தேவா-அப்:1850/3
மேல்


கூறில் (2)

குறி உடையான் குணம் ஒன்று அறிந்தார் இல்லை கூறில் அவன் – தேவா-அப்:844/2
கூறில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1607/4
மேல்


கூறினர் (2)

ஏறினர் ஏறினை ஏழை தன் ஒரு கூறினர்
கூறினர் வேதம் அங்கமும் – தேவா-அப்:95/1,2
கூறினர் வேதம் அங்கமும் – தேவா-அப்:95/2
மேல்


கூறினார் (1)

கூறிட்ட மெய்யர் ஆகி கூறினார் ஆறும் நான்கும் – தேவா-அப்:275/2
மேல்


கூறினான் (1)

கூறினான் உமையாளொடும் கூடவே – தேவா-அப்:1424/4
மேல்


கூறினும் (1)

கொதுகு அறா கண்ணின் நோன்பிகள் கூறினும்
பொதுவின்_நாயகன் பூந்துருத்தி நகர்க்கு – தேவா-அப்:1394/2,3
மேல்


கூறினேன் (1)

கோடிகாவனை கூறிரேல் கூறினேன்
பாடி காவலில் பட்டு கழிதிரே – தேவா-அப்:1850/3,4
மேல்


கூறினேனே (1)

குழல் சடை எம் கோன் என்றும் கூறு நெஞ்சே குற்றம் இல்லை என் மேல் நான் கூறினேனே – தேவா-அப்:2399/4
மேல்


கூறீர் (1)

ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு ஒற்றியூர் உம் ஊரே உணர கூறீர்
நின்றுதான் என் செய்வீர் போவீராகில் நெற்றி மேல் கண் காட்டி நிறையும் கொண்டீர் – தேவா-அப்:2179/1,2
மேல்


கூறு (24)

பாடுவார் பணிவார் பல்லாண்டு இசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்கு – தேவா-அப்:207/3
கூறு கொப்பளித்த கோதை கோல் வளை மாது ஓர்பாகம் – தேவா-அப்:243/2
கூறு உடை மெய்யர் போலும் கோள் அரவு அரையர் போலும் – தேவா-அப்:288/2
கூறு உமை ஆகம் வைத்தார் கொல் புலி தோலும் வைத்தார் – தேவா-அப்:381/3
கூறு இயல் பாகம் வைத்தார் கோள் அரா மதியும் வைத்தார் – தேவா-அப்:432/2
கூறு இடும் உருவர் போலும் குளிர் பொழில் பழனை மேய – தேவா-அப்:662/3
குன்றர் ஐக்கு அண் நல் குலமகள் பாவைக்கு கூறு இட்ட நாள் – தேவா-அப்:828/2
கூறு அலைத்த மெய் கோள் அரவு ஆட்டிய – தேவா-அப்:1144/3
கூறு மாது உமைக்கு ஈந்த குழகரோ – தேவா-அப்:1170/2
கூறு கொண்டு உகந்தாளொடு மீயச்சூர் – தேவா-அப்:1181/3
கூறு செய்த குழகன் உறைவிடம் – தேவா-அப்:1268/2
கூறு ஏறும் உமை பாகம் ஓர்பாலராய் – தேவா-அப்:2060/1
கூறு ஏற்க கூறு அமர வல்லான்-தன்னை கோல் வளை கை மாதராள்_பாகன்-தன்னை – தேவா-அப்:2112/2
கூறு ஏற்க கூறு அமர வல்லான்-தன்னை கோல் வளை கை மாதராள்_பாகன்-தன்னை – தேவா-அப்:2112/2
கூறு ஏறு உமை ஒருபால் கொண்டாய் போற்றி கோள் அரவம் ஆட்டும் குழகா போற்றி – தேவா-அப்:2133/2
கூறு உடைய மடவாள் ஓர்பாகம் கொண்டு குழை ஆட கொடுகொட்டி கொட்டா வந்து – தேவா-அப்:2177/2
குழல் சடை எம் கோன் என்றும் கூறு நெஞ்சே குற்றம் இல்லை என் மேல் நான் கூறினேனே – தேவா-அப்:2399/4
கூறு ஆக உமை பாகம் கொண்டான் கண்டாய் கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய் – தேவா-அப்:2476/2
கூறு ஏறு கொடு மழுவாள் படையினான் காண் கொக்கரையன் காண் குழு நல் பூதத்தான் காண் – தேவா-அப்:2577/3
கூறு ஏறும் அம் கை மழுவா போற்றி கொள்ளும் கிழமை ஏழ் ஆனாய் போற்றி – தேவா-அப்:2652/3
கூறு அலைத்த மலைமடந்தை_கொழுநர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2831/4
கூறு ஆகி கூற்று ஆகி கோளும் ஆகி குணம் ஆகி குறையாத உவகை கண்ணீர் – தேவா-அப்:2884/2
கூறு உடைய கொடு மழுவாள் கையில் உண்டோ கொல் புலி தோல் உடை உண்டோ கொண்ட வேடம் – தேவா-அப்:3040/2
கூறு ஏறு கொடு மழுவாள் கொள்ள கண்டேன் கொடுகொட்டி கை அலகு கையில் கண்டேன் – தேவா-அப்:3043/2
மேல்


கூறும் (4)

கூறும் ஓர் ஆழி ஈந்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:480/4
கூறும் ஓர் பெண்ணினானே கோடிகா உடைய கோவே – தேவா-அப்:490/4
குருகு ஆம் வயிரம் ஆம் கூறும் நாள் ஆம் கொள்ளும் கிழமை ஆம் கோளேதான் ஆம் – தேவா-அப்:2233/1
கூறும் குணம் உடையர் கோவணத்தர் கோள் தால வேடத்தர் கொள்கை சொல்லின் – தேவா-அப்:2254/3
மேல்


கூறும்-கால் (1)

கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம் குக்குடேச்சுரம் அக்கீச்சுரம் கூறும்-கால்
ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் அயனீச்சுரம் அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அம் தண் கானல் – தேவா-அப்:2804/2,3
மேல்


கூறுமா (1)

குறி இலேன் குணம் ஒன்று இல்லேன் கூறுமா கூறமாட்டேன் – தேவா-அப்:554/2
மேல்


கூறுமே (3)

கோளிலி அரன் பாதமே கூறுமே – தேவா-அப்:1644/4
குழகனார் திரு பாதமே கூறுமே – தேவா-அப்:1645/4
கொண்டியீச்சுரவன் கழல் கூறுமே – தேவா-அப்:1770/4
மேல்


கூறுவதே (4)

குற்றம் இல் வேதம் உடையானை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:907/4
கூர்ப்பு உடை ஒள் வாள் மழுவனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:908/4
குட்டம் முன் வேத படையனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:909/4
கொட்டும் பறை உடை கூத்தனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:910/4
மேல்


கூறுவார் (1)

கூறுவார் வினை தீர்க்கும் குழகனார் – தேவா-அப்:1210/2
மேல்


கூறுவேன் (1)

கூறுவேன் கோடிகா உளாய் என்று மால் – தேவா-அப்:1853/3
மேல்


கூறுவோமே (1)

கள் ஆர்ந்த கொன்றையான் நின்ற ஆறும் குளம் களம் கா என அனைத்தும் கூறுவோமே – தேவா-அப்:2806/4
மேல்


கூறை (3)

வெற்று அரை சமணரோடு விலை உடை கூறை போர்க்கும் – தேவா-அப்:667/1
குண்டரை குணமில்லரை கூறை இல் – தேவா-அப்:1654/1
குறியில் நின்று உண்டு கூறை இலா சமண் – தேவா-அப்:1833/1
மேல்


கூறையன் (1)

ஈறு இல் கூறையன் ஆகி எரிந்த வெண் – தேவா-அப்:2030/1
மேல்


கூறையால் (1)

கூறையால் மூட கண்டு கோலமா கருதினாயே – தேவா-அப்:752/4
மேல்


கூன் (5)

கூன் இளமதியினானை கூடும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:369/4
கூன் உடை திங்கள் குழவி எப்போதும் குறிக்கொண்-மினே – தேவா-அப்:1005/4
கூன் திகழ் வாள் அரக்கன் முடி பத்தும் குலைந்து விழ – தேவா-அப்:1025/3
கூறன் ஆகிலும் கூன் பிறை சூடிலும் – தேவா-அப்:1622/2
எரி அது ஒரு கை தரித்த இறைவர் போலும் ஏனத்தின் கூன் எயிறு பூண்டார் போலும் – தேவா-அப்:2624/2
மேல்


கூனல் (1)

கூனல் இளம் பிறை தடவு கொடி கொள் மாட குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2830/4

மேல்