கொ – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கொங்கு 3
கொங்கையில் 1
கொங்கையின் 1
கொட்கும் 1
கொட்பன 1
கொட்பினள் 1
கொடி 75
கொடி-தன்னை 2
கொடி-தான் 4
கொடி_இடை-தன்னை 1
கொடிக்கு 4
கொடியள் 1
கொடியனை 1
கொடியார் 2
கொடியும் 2
கொடு 3
கொடுக்கும் 1
கொடுஞ்சி 1
கொடுத்த 1
கொடுத்ததும் 1
கொடுத்தல் 2
கொடுத்தலும் 2
கொடுத்து 2
கொடுத்தேன் 1
கொடுத்தோர் 1
கொடுத்தோரே 1
கொடுந்தொழிலாளன் 1
கொடுப்ப 1
கொடுப்போர் 1
கொடுபோந்த 1
கொடும் 8
கொடுமரம் 1
கொடை 2
கொண்ட 11
கொண்டதும் 1
கொண்டன்று 1
கொண்டனன் 1
கொண்டால் 1
கொண்டி 1
கொண்டிருந்து 1
கொண்டிருந்தேன் 1
கொண்டிலேன் 1
கொண்டு 51
கொண்டே 1
கொண்டேன் 1
கொண்டோ 1
கொண்டோர் 2
கொண்டோன் 1
கொணர்க 1
கொணர்கேம் 1
கொணர்ந்த 2
கொணர்ந்தது 1
கொணர்ந்திடும் 1
கொணர்ந்து 5
கொணர்வாய் 1
கொணர 1
கொணரவும் 1
கொதித்த 1
கொம்பர் 3
கொம்பர்-அவளொடும் 1
கொம்பின் 1
கொம்பு 1
கொம்பும் 1
கொய்ய 4
கொய்யும் 1
கொய்வேன்-தனை 1
கொல் 1
கொல்லரும் 2
கொல்லா 1
கொல்லும் 1
கொலை 2
கொலை-புரிந்திட்டனன் 1
கொலையும் 3
கொலையே 2
கொலைவன் 1
கொழித்த 1
கொழு 6
கொழுநன் 1
கொழுப்ப 1
கொழும் 1
கொள் 10
கொள்க 10
கொள்கலம் 2
கொள்கை 3
கொள்கையின் 2
கொள்பவர் 1
கொள்வதற்கு 1
கொள்வது 1
கொள்ள 5
கொள்ளல் 1
கொள்ளவும் 1
கொள்ளாய் 1
கொள்ளாள் 1
கொள்ளும் 1
கொள்ளேல் 3
கொள 7
கொளல் 1
கொளாததுவே 1
கொளிய 1
கொளுத்திக்காட்ட 1
கொளும் 1
கொளை 1
கொற்கை 1
கொற்றம் 2
கொற்றவன் 3
கொன்றனன் 1
கொன்றாய் 2
கொன்றையும் 1
கொன்றோன் 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கொங்கு (3)

கொங்கு அலர் நறும் தார் கோமகன் சென்றதும் – மணி:0/68
கொங்கு அவிழ் குழலாள் கோயிலுள் புக்கு ஆங்கு – மணி:23/38
கொங்கு அவிழ் குழலார் கற்பு குறைபட்டோ – மணி:28/189

TOP


கொங்கையில் (1)

தே மரு கொங்கையில் குங்குமம் எழுதி – மணி:25/86

TOP


கொங்கையின் (1)

குங்கும வருணம் கொங்கையின் இழைப்போர் – மணி:19/87

TOP


கொட்கும் (1)

வளி வலம் கொட்கும் மாதிரம் வளம்படும் – மணி:12/91

TOP


கொட்பன (1)

இரு சிறை விரித்து ஆங்கு எழுந்து உடன் கொட்பன
ஒரு_சிறை கண்டு ஆங்கு உள் மகிழ்வு எய்தி – மணி:19/63,64

TOP


கொட்பினள் (1)

கூட வைக்கும் கொட்பினள் ஆகி – மணி:21/77

TOP


கொடி (75)

மற்று அ பாத்திரம் மட_கொடி ஏந்தி – மணி:0/61
பொன் கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும் – மணி:0/86
பூம்_கொடி கச்சி மா நகர் புக்கதும் – மணி:0/90
கொடி தேர் தானை கொற்றவன் துயரம் – மணி:1/19
பூ கொடி வல்லியும் கரும்பும் நடு-மின் – மணி:1/47
பொன் கொடி மூதூர் பொருளுரை இழந்து – மணி:2/40
கரு கொடி புருவத்து மருங்கு வளை பிறை நுதல் – மணி:3/119
கோவியன் வீதியும் கொடி தேர் வீதியும் – மணி:4/37
இளம்_கொடி தோன்றுமால் இளங்கோ முன் என் – மணி:4/125
இளங்கோன் கண்ட இளம் பொன் பூம்_கொடி – மணி:5/1
எ திறத்தாள் நின் இளம்_கொடி உரை என – மணி:5/12
எரி மணி பூ கொடி இரு நில மருங்கு வந்து – மணி:5/106
புல வரை இறந்த புகார் எனும் பூம்_கொடி – மணி:5/109
தேவர் புகுதரூஉம் செழும் கொடி வாயிலும் – மணி:6/40
வந்து தோன்றும் மட கொடி நல்லாள் – மணி:7/25
கோவலன் கூறி இ கொடி_இடை-தன்னை என் – மணி:7/34
உண் கண் சிவந்து ஆங்கு ஒல்கு கொடி போன்று – மணி:7/51
கொடி தேர் வேந்தன் கொற்றம் கொள்க என – மணி:7/79
கொடி மின் முகிலொடு நிலம் சேர்ந்து என்ன – மணி:9/6
பொரு_அறு பூம் கொடி பூமியில் பொலிந்து என – மணி:10/4
பொலம்_கொடி நிலம் மிசை சேர்ந்து என பொருந்தி – மணி:10/17
பொன் கொடி அன்னாய் பொருந்தி கேளாய் – மணி:11/10
பூம் கொடி அன்னாய் யார் நீ என்றலும் – மணி:11/18
மா பெரும் பாத்திரம் மட_கொடி கேளாய் – மணி:11/45
என்று அவள் உரைத்தலும் இளம்_கொடி விரும்பி – மணி:11/53
எழுந்து வலம் புரிந்த இளம்_கொடி செம் கையில் – மணி:11/57
யாங்கு உளர் என்றே இளம்_கொடி வினாஅய் – மணி:12/2
பூ கொடி நல்லாய் கேள் என்று உரைத்ததும் – மணி:12/20
உரைத்த பூம்_கொடி ஒரு_மூன்று மந்திரம் – மணி:12/21
பிறவி-தோறும் மறவேன் மட_கொடி – மணி:12/103
பூ கொடி மாதர் பொருளுரை பொருந்தாய் – மணி:12/107
ஈங்கு இவர் இருவரும் இளம்_கொடி நின்னோடு – மணி:12/110
மா பெரும் பாத்திரம் மட_கொடி பெற்றனை – மணி:12/115
பூம் கொடி நல்லாய் புகுந்தது கேளாய் – மணி:14/2
இன்னும் கேளாய் இளம் கொடி மாதே – மணி:15/1
கொடி கோசம்பி கோமகன் ஆகிய – மணி:15/61
பூம் கொடி மாதர்க்கு புகுந்ததை உரைப்போள் – மணி:16/2
பூ கொடி நல்லாய் பிச்சை பெறுக என – மணி:16/129
இ நாள் போலும் இளம்_கொடி கெடுத்தனை – மணி:17/48
வாள் திறல் குருசிலை மட_கொடி நீங்கி – மணி:18/143
இ நிலை எல்லாம் இளம்_கொடி செய்தியின் – மணி:19/15
சிலை கயல் நெடும் கொடி செரு வேல் தட கை – மணி:19/124
வாயிலாளரின் மட_கொடி தான் சென்று – மணி:19/141
பொன் திகழ் மேனி பூம்_கொடி பொருந்தி – மணி:21/36
இன்னும் கேளாய் இளம் கொடி நல்லாய் – மணி:21/72
பூம்_கொடி வஞ்சி மா நகர் புகுவை – மணி:21/91
என்று அவன் உரைக்கும் இளம் கொடி நல்லாய் – மணி:21/111
கொடி தேர் வீதியும் தேவர் கோட்டமும் – மணி:21/120
என் திறம் கேட்டியோ இள கொடி நல்லாய் – மணி:21/129
வருவது கேளாய் மட கொடி நல்லாய் – மணி:21/146
இ தலம் நீங்கேன் இளம்_கொடி யானும் – மணி:21/169
இளம்_கொடி அறிவதும் உண்டோ இது என – மணி:22/7
மா பெரும் பூதம் தோன்றி மட_கொடி – மணி:22/57
ஈங்கு எழு நாளில் இளம்_கொடி நின்-பால் – மணி:22/74
கொடி மிடை வீதியில் வருவோள் குழல் மேல் – மணி:22/146
என்னோடு இருப்பினும் இருக்க இ இளம்_கொடி – மணி:23/35
பூம் கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை – மணி:23/72
பூ கொடி நல்லாய் புகுந்தது இது என – மணி:23/87
பொரு அறு பூம்_கொடி போயின அ நாள் – மணி:24/43
யாங்கு ஒளித்தனள் அ இளம்_கொடி என்றே – மணி:24/44
பூம்_கொடி வாராள் புலம்பல் இது கேள் – மணி:24/61
புலைமை என்று அஞ்சி போந்த பூம்_கொடி – மணி:24/80
என்று அவன் எழுதலும் இளம்_கொடி எழுந்து – மணி:24/147
ஈங்கு வந்தனள் என்றலும் இளம்_கொடி – மணி:25/20
மை_அறு விசும்பின் மட_கொடி எழுந்து – மணி:25/29
மணிப்பல்லவம் வலம் கொண்டு மட_கொடி – மணி:25/33
புரை தீர் காட்சி பூம்_கொடி பொருந்தி – மணி:25/128
புனிற்று இளம் குழவியொடு பூம்_கொடி பொருந்தி இ – மணி:25/181
பொன் கொடி பெயர் படூஉம் பொன் நகர் பொலிந்தனள் – மணி:26/92
கொடி நிலை வாயில் குறுகினள் புக்கு – மணி:28/28
புரிந்த யான் இ பூம்_கொடி பெயர் படூஉம் – மணி:28/101
பூம்_கொடி முன்னவன் போதியில் நல் அறம் – மணி:28/141
பூம்_கொடி கச்சி மா நகர் ஆதலின் – மணி:28/152
கொடி மதில் மூதூர் குட-கண் நின்று ஓங்கி – மணி:28/164
பொன் கொடி மூதூர் புரிசை வலம் கொண்டு – மணி:28/170

TOP


கொடி-தன்னை (2)

பூம்_கொடி-தன்னை பொருந்தி தழீஇ – மணி:6/210
இறைஞ்சிய இளம்_கொடி-தன்னை வாழ்த்தி – மணி:29/1

TOP


கொடி-தான் (4)

ஏங்கினள் அழூஉம் இளம்_கொடி-தான் என் – மணி:9/71
எழுக என எழுந்தனள் இளம்_கொடி-தான் என் – மணி:11/146
எடுத்தனள் பாத்திரம் இளம்_கொடி-தான் என் – மணி:12/121
வருக வருக மட_கொடி-தான் என்று – மணி:19/139

TOP


கொடி_இடை-தன்னை (1)

கோவலன் கூறி இ கொடி_இடை-தன்னை என் – மணி:7/34

TOP


கொடிக்கு (4)

மா பெரும் பாத்திரம் மட_கொடிக்கு அளித்ததும் – மணி:0/54
ஏது முதிர்ந்தது இளம்_கொடிக்கு ஆதலின் – மணி:7/20
மா பெரும் பாத்திரம் மட_கொடிக்கு அருளிய – மணி:13/1
யான் செயற்பாலது என் இளம்_கொடிக்கு என்று – மணி:19/155

TOP


கொடியள் (1)

தாயோ கொடியள் தகவு இலள் ஈங்கு இவள் – மணி:3/150

TOP


கொடியனை (1)

வான் தேர் பாகனை மீன் திகழ் கொடியனை
கருப்பு_வில்லியை அருப்பு கணை மைந்தனை – மணி:20/91,92

TOP


கொடியார் (2)

பூம்_கொடியார் கை புள் ஒலி சிறப்ப – மணி:7/120
மணிமேகலை முன் மட_கொடியார் திறம் – மணி:12/53

TOP


கொடியும் (2)

கதலிகை கொடியும் காழ் ஊன்று விலோதமும் – மணி:1/52
தூம கொடியும் சுடர் தோரணங்களும் – மணி:6/64

TOP


கொடு (3)

நிரய கொடு மொழி நீ ஒழி என்றலும் – மணி:6/167
நிரய கொடு சிறை நீக்கிய கோட்டம் – மணி:20/2
நிரய கொடு மகள் நினைப்பு அறியேன் என்று – மணி:23/56

TOP


கொடுக்கும் (1)

பூக்கும் இடம் கொடுக்கும் புரிவிற்று ஆகும் – மணி:27/194

TOP


கொடுஞ்சி (1)

மணி தேர் கொடுஞ்சி கையான் பற்றி – மணி:4/48

TOP


கொடுத்த (1)

சிந்தாதேவி கொடுத்த வண்ணமும் – மணி:0/60

TOP


கொடுத்ததும் (1)

மனம் கவல் ஒழிக என மந்திரம் கொடுத்ததும்
தீபதிலகை செவ்வனம் தோன்றி – மணி:0/52,53

TOP


கொடுத்தல் (2)

அயல் ஒன்று ஈயாது அதுவே கொடுத்தல்
ஐதிகம் என்பது உலகு உரை இ மரத்து – மணி:27/48,49
விருத்த ஏதுவிற்கும் இடம் கொடுத்தல்
சத்தம் அநித்தம் செயலிடை தோன்றலின் – மணி:29/268,269

TOP


கொடுத்தலும் (2)

தன் கை பாத்திரம் அவன் கை கொடுத்தலும்
சிந்தாதேவி செழு கலை நியமத்து – மணி:14/16,17
கொற்றவன் மகன் இவன் கொள்க என கொடுத்தலும்
பெற்ற உவகையன் பெரு மகிழ்வு எய்தி – மணி:25/186,187

TOP


கொடுத்து (2)

ஆங்கு அது கொடுத்து ஆங்கு அந்தரம் எழுந்து – மணி:10/92
நம்பிக்கு இளையள் ஓர் நங்கையை கொடுத்து
வெம் களும் ஊனும் வேண்டுவ கொடும் என – மணி:16/76,77

TOP


கொடுத்தேன் (1)

வெம் முது பேய்க்கு என் உயிர் கொடுத்தேன் என – மணி:6/130

TOP


கொடுத்தோர் (1)

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – மணி:11/96

TOP


கொடுத்தோரே (1)

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உயிர் கொடை பூண்ட உரவோய் ஆகி – மணி:11/96,97

TOP


கொடுந்தொழிலாளன் (1)

கொடுந்தொழிலாளன் கொன்றனன் குவிப்ப இ – மணி:6/100

TOP


கொடுப்ப (1)

காணம் பலவும் கை நிறை கொடுப்ப
ஆங்கு அவன் சென்று அ ஆய்_இழை இருந்த – மணி:23/48,49

TOP


கொடுப்போர் (1)

கொடுப்போர் கடை-தொறும் பண்ணியம் பரந்து எழ – மணி:7/124

TOP


கொடுபோந்த (1)

பூமிசந்திரன் கொடுபோந்த வண்ணமும் – மணி:25/75

TOP


கொடும் (8)

குரவர்க்கு உற்ற கொடும் துயர் கேட்டு – மணி:3/18
கோவலன் உற்ற கொடும் துயர் தோன்ற – மணி:4/68
கோதமை என்பாள் கொடும் துயர் சாற்ற – மணி:6/141
கொலை அறம் ஆம் எனும் கொடும் தொழில் மாக்கள் – மணி:6/162
கோதமை உற்ற கொடும் துயர் நீங்கி – மணி:6/188
வெம் களும் ஊனும் வேண்டுவ கொடும் என – மணி:16/77
கோவலன் இறந்த பின் கொடும் துயர் எய்தி – மணி:18/7
குமரி_மூத்த அ கொடும் குழை நல்லாள் – மணி:22/143

TOP


கொடுமரம் (1)

கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி – மணி:13/31

TOP


கொடை (2)

உயிர் கொடை பூண்ட உரவோய் ஆகி – மணி:11/97
கொடை கெழு தாதை கோவலன்-தன்னையும் – மணி:26/3

TOP


கொண்ட (11)

புக்கு அவள் கொண்ட பொய் உரு களைந்து – மணி:0/91
நெஞ்சு இறை கொண்ட நீர்மையை நீக்கி – மணி:4/69
அங்கையில் கொண்ட பாத்திரம் உடையோன் – மணி:5/59
உருவு கொண்ட மின்னே போல – மணி:6/9
உறையுள் குடிகை உள்வரி கொண்ட
மறு_இல் செய்கை மணிமேகலை தான் – மணி:19/29,30
காரியாற்று கொண்ட காவல் வெண்குடை – மணி:19/126
கொண்ட விரதம் தன்னுள் கூறி – மணி:22/110
தலைமையா கொண்ட நின் தலைமை இல் வாழ்க்கை – மணி:24/79
கண்டு மகிழ்வுற்று கொண்ட வேடமொடு – மணி:28/68
போனகம் ஏந்தி பொழுதினில் கொண்ட பின் – மணி:28/242
வழுவா சீலம் வாய்மையின் கொண்ட
பான்மையின் தனாது பாண்டு கம்பளம் – மணி:29/20,21

TOP


கொண்டதும் (1)

அரங்க கூத்தி சென்று ஐயம் கொண்டதும்
நகுதல் அல்லது நாடக கணிகையர் – மணி:24/22,23

TOP


கொண்டன்று (1)

தன் மண் காத்தன்று பிறர் மண் கொண்டன்று
என் என படுமோ நின் மகன் மடிந்தது – மணி:23/17,18

TOP


கொண்டனன் (1)

துச்சயன் என்போன் ஒருவன் கொண்டனன்
அவருடன் ஆங்கு அவன் அகல் மலை ஆடி – மணி:10/54,55

TOP


கொண்டால் (1)

மணிப்பல்லவம் வலம் கொண்டால் அல்லது – மணி:25/25

TOP


கொண்டி (1)

வண்டின் துறக்கும் கொண்டி மகளிரை – மணி:18/109

TOP


கொண்டிருந்து (1)

கழுமிய உவகையின் கவான் கொண்டிருந்து
தெய்வ கருவும் திசைமுக கருவும் – மணி:0/27,28

TOP


கொண்டிருந்தேன் (1)

நல்லாய் ஆண் உரு நான் கொண்டிருந்தேன்
ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அன்றோ – மணி:23/95,96

TOP


கொண்டிலேன் (1)

சிந்தையில் கொண்டிலேன் சென்ற பிறவியில் – மணி:23/99

TOP


கொண்டு (51)

மா பெரும் துன்பம் கொண்டு உளம் மயங்கி – மணி:2/62
எடுத்தனன் எ கொண்டு எழுந்தனன் விசும்பில் – மணி:3/38
மணி அறை பீடிகை வலம் கொண்டு ஓங்கி – மணி:5/97
பூம் பொதி சிதைய கிழித்து பெடை கொண்டு
ஓங்கு இரும் தெங்கின் உயர் மடல் ஏற – மணி:5/125,126
காய் பசி கடும் பேய் கணம் கொண்டு ஈண்டும் – மணி:6/82
அலத்தகம் ஊட்டிய அடி நரி வாய் கொண்டு
உலப்பு இல் இன்பமோடு உளைக்கும் ஓதையும் – மணி:6/110,111
என் உயிர் கொண்டு இவன் உயிர் தந்து அருளில் என் – மணி:6/154
ஆவும் மாவும் கொண்டு கழிக என்றே – மணி:9/25
வலம் கொண்டு ஆசனம் வணங்குவோள் முன்னர் – மணி:10/16
தொழுது வலம் கொண்டு வந்தேன் ஈங்கு – மணி:11/26
கோமகன் பீடிகை தொழுது வலம் கொண்டு
வானூடு எழுந்து மணிமேகலை-தான் – மணி:11/126,127
தொழுது வலம் கொண்டு தொடர் வினை நீங்கி – மணி:12/112
நள் இருள் கொண்டு நடக்குவன் என்னும் – மணி:13/36
அல்லிடை ஆ கொண்டு அ பதி அகன்றோன் – மணி:13/38
ஆ கொண்டு இந்த ஆர் இடை கழிய – மணி:13/42
உதயகுமரன் உளம் கொண்டு ஒளித்த – மணி:15/67
ஊர் திரை கொண்டு ஆங்கு உய்ப்ப போகி – மணி:16/38
உடம்பு விட்டு ஓடும் உயிர் உரு கொண்டு ஓர் – மணி:16/92
தொழுது வலம் கொண்டு துயர் அறு கிளவியோடு – மணி:16/132
கொதித்த உள்ளமொடு குரம்பு கொண்டு ஏறி – மணி:18/3
பொன் தேர் கொண்டு போதேன் ஆகின் – மணி:18/32
கொண்டு இரு மருங்கும் கோதையர் வீச – மணி:18/50
உளம் கொண்டு ஒளித்தாள் உயிர் காப்பிட்டு என்று – மணி:18/79
கண்டோர் நெஞ்சம் கொண்டு அகம் புக்கு – மணி:18/107
கொண்டு இனிது இயற்றிய கண் கவர் செய்வினை – மணி:19/110
ஐய பாத்திரம் ஒன்று கொண்டு ஆங்கு – மணி:19/135
பற்றினன் கொண்டு என் பொன் தேர் ஏற்றி – மணி:20/16
மது கமழ் தாரோன் மனம் கொண்டு எழுந்து – மணி:20/19
வந்து அறிகுவன் என மனம் கொண்டு எழுந்து – மணி:20/90
உள்வரி கொண்டு அ உரவோன் பெயர் நாள் – மணி:22/39
ஐயம் கொண்டு உண்டு அம்பலம் அடைந்தனள் – மணி:22/183
கொற்றம் கொண்டு குடி புறங்காத்து – மணி:23/11
பொய்யாற்று ஒழுக்கம் கொண்டு புறம் மறைத்து – மணி:23/22
மாறு கொண்டு ஓரா மனத்தினள் ஆகி – மணி:23/143
வேந்தரை அட்டோய் மெய் என கொண்டு இ – மணி:24/67
இலகு ஒளி கந்தமும் ஏத்தி வலம் கொண்டு
அந்தரம் ஆறா பறந்து சென்று ஆய்_இழை – மணி:24/162,163
அங்கையில் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும் – மணி:25/9
மணிப்பல்லவம் வலம் கொண்டு மட_கொடி – மணி:25/33
இன்று எனக்கு என்றே ஏத்தி வலம் கொண்டு
ஈங்கு இவள் இன்னணம் ஆக இறைவனும் – மணி:25/67,68
வலம் கொண்டு ஏத்தினன் மன்னவன் மன்னவற்கு – மணி:25/134
அருந்து உயிர் மருந்து முன் அங்கையில் கொண்டு
பெரும் துயர் தீர்த்த அ பெரியோய் வந்தனை – மணி:25/160,161
மா பெரும் பீடிகை வலம் கொண்டு ஏத்துழி – மணி:25/183
கலம் கொண்டு பெயர்ந்த அன்றே கார் இருள் – மணி:25/190
பல் கலன் கொண்டு பலர் அறியாமல் – மணி:26/21
சீற்றம் கொண்டு செழு நகர் சிதைத்தேன் – மணி:26/34
காதல் கொண்டு கடல்வணன் புராணம் – மணி:27/98
சிலம்பினை எய்தி வலம் கொண்டு மீளும் – மணி:28/108
பொன் கொடி மூதூர் புரிசை வலம் கொண்டு
நடு நகர் எல்லை நண்ணினள் இழிந்து – மணி:28/170,171
வணங்கி கொண்டு அவன் வங்கம் ஏற்றி – மணி:29/7
வேற்று உரு கொண்டு வெவ்வேறு உரைக்கும் – மணி:29/41
அதனையே கொண்டு பிறிதோர் இடத்து – மணி:29/106

TOP


கொண்டே (1)

ஊர் முழுது அறியும் உருவம் கொண்டே
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி – மணி:19/34,35

TOP


கொண்டேன் (1)

நா மிசை வைத்தேன் தலை மிசை கொண்டேன்
பூ மிசை ஏற்றினேன் புலம்பு அறுக என்றே – மணி:10/14,15

TOP


கொண்டோ (1)

கொண்டோ பிழைத்த தண்டம் அஞ்சி – மணி:13/6

TOP


கொண்டோர் (2)

கொண்டோர் பிழைத்த குற்றம்-தான் இலேன் – மணி:22/51
பொய்யாற்று ஒழுக்கம் பொருள் என கொண்டோர்
கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ – மணி:23/124,125

TOP


கொண்டோன் (1)

கொண்டோன் அல்லது தெய்வமும் பேணா – மணி:18/101

TOP


கொணர்க (1)

எம் அனை உண்கேன் ஈங்கு கொணர்க என – மணி:10/39

TOP


கொணர்கேம் (1)

அம் தீம் தண்ணீர் அமுதொடு கொணர்கேம்
உண்டி யாம் உன் குறிப்பினம் என்றலும் – மணி:10/37,38

TOP


கொணர்ந்த (2)

ஆங்கு உனை கொணர்ந்த அரும் பெரும் தெய்வம் – மணி:9/67
ஆங்கு நின் கொணர்ந்த அரும் தெய்வம் மயக்க – மணி:21/109

TOP


கொணர்ந்தது (1)

மணிபல்லவத்திடை கொணர்ந்தது கேள் என – மணி:21/186

TOP


கொணர்ந்திடும் (1)

கொணர்ந்திடும் அ நாள் கூர் இருள் யாமத்து – மணி:29/8

TOP


கொணர்ந்து (5)

ஆங்கு அது கொணர்ந்து நின் ஆர் இடர் நீக்குதல் – மணி:6/160
இவைஇவை கொள்க என எடுத்தனன் கொணர்ந்து
சந்திரதத்தன் என்னும் வாணிகன் – மணி:16/123,124
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம் – மணி:17/11
பூவும் புகையும் பொருந்துவ கொணர்ந்து
நா நனி வருந்த என் நலம் பாராட்டலின் – மணி:21/139,140
செல்வர் கொணர்ந்து அ தீவக பீடிகை – மணி:28/77

TOP


கொணர்வாய் (1)

நிகர் மலர் நீயே கொணர்வாய் என்றலும் – மணி:3/15

TOP


கொணர (1)

என் பெயர் தெய்வம் ஈங்கு எனை கொணர இ – மணி:11/15

TOP


கொணரவும் (1)

ஆங்கு அவன் கொணரவும் ஆற்றேன்ஆக – மணி:17/59

TOP


கொதித்த (1)

கொதித்த உள்ளமொடு குரம்பு கொண்டு ஏறி – மணி:18/3

TOP


கொம்பர் (3)

மணி பூ கொம்பர் மணிமேகலை தான் – மணி:3/42
கொம்பர் இரு குயில் விளிப்பது காணாய் – மணி:4/13
கொம்பர் தும்பி குழல் இசை காட்ட – மணி:19/57

TOP


கொம்பர்-அவளொடும் (1)

அணி பூ கொம்பர்-அவளொடும் கூடி – மணி:3/84

TOP


கொம்பின் (1)

வளி எறி கொம்பின் வருந்தி மெய் நடுங்கி – மணி:24/86

TOP


கொம்பு (1)

அணி மலர் பூ கொம்பு அகம் மலி உவகையின் – மணி:15/72

TOP


கொம்பும் (1)

சிவிறியும் கொம்பும் சிதறு விரை நீரும் – மணி:28/10

TOP


கொய்ய (4)

மணிமேகலை-தான் மா மலர் கொய்ய
அணி மலர் பூம்பொழில் அக-வயின் சென்றதும் – மணி:0/37,38
மணிமேகலையொடு மா மலர் கொய்ய
அணி இழை நல்லாய் யானும் போவல் என்று – மணி:3/82,83
மா மலர் கொய்ய மலர்வனம்-தான் புகின் – மணி:3/151
மலர் கொய்ய புகுந்தனள் மணிமேகலை என் – மணி:3/171

TOP


கொய்யும் (1)

தனித்து அலர் கொய்யும் தகைமையள் அல்லள் – மணி:3/43

TOP


கொய்வேன்-தனை (1)

ஆராமத்திடை அலர் கொய்வேன்-தனை
மாருதவேகன் என்பான் ஓர் விஞ்சையன் – மணி:3/32,33

TOP


கொல் (1)

மரம் கொல் தச்சரும் மண்ணீட்டாளரும் – மணி:28/37

TOP


கொல்லரும் (2)

அவந்தி கொல்லரும் யவன தச்சரும் – மணி:19/108
பைம்பொன் செய்ஞ்ஞரும் பொன் செய் கொல்லரும்
மரம் கொல் தச்சரும் மண்ணீட்டாளரும் – மணி:28/36,37

TOP


கொல்லா (1)

தீயும் கொல்லா தீ_வினை_ஆட்டியேன் – மணி:16/35

TOP


கொல்லும் (1)

குடி பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்வி பெரும் புணை விடூஉம் – மணி:11/76,77

TOP


கொலை (2)

கொலை அறம் ஆம் எனும் கொடும் தொழில் மாக்கள் – மணி:6/162
கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி – மணி:13/31

TOP


கொலை-புரிந்திட்டனன் (1)

குற்றம் இலோனை கொலை-புரிந்திட்டனன்
ஆங்கு அவன் மனைவி அழுதனள் அரற்றி – மணி:26/28,29

TOP


கொலையும் (3)

கொலையும் உண்டோ கொழு மடல் தெங்கின் – மணி:3/98
கள்ளும் பொய்யும் களவும் கொலையும்
தள்ளாது ஆகும் காமம் தம்-பால் – மணி:22/171,172
கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
உள்ள களவும் என்று உரவோர் துறந்தவை – மணி:24/77,78

TOP


கொலையே (2)

கொலையே களவே காம தீ விழைவு – மணி:24/125
கொலையே களவே காம தீ விழைவு – மணி:30/66

TOP


கொலைவன் (1)

கொலைவன் அல்லையோ கொற்றவன் ஆயினை – மணி:25/174

TOP


கொழித்த (1)

கடுவரல் அருவி கடும் புனல் கொழித்த
இடு மணல் கான் யாற்று இயைந்து ஒருங்கு இருந்தேன் – மணி:17/25,26

TOP


கொழு (6)

கொலையும் உண்டோ கொழு மடல் தெங்கின் – மணி:3/98
கோடு உடை தாழை கொழு மடல் அவிழ்ந்த – மணி:4/17
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சி – மணி:11/39
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியின் – மணி:14/91
குளன் அணி தாமரை கொழு மலர் நாப்பண் – மணி:15/75
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியொடு – மணி:28/202

TOP


கொழுநன் (1)

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் – மணி:22/59

TOP


கொழுப்ப (1)

வசி தொழில் உதவ மா நிலம் கொழுப்ப
பசிப்பு உயிர் அறியா பான்மைத்து ஆகலின் – மணி:14/57,58

TOP


கொழும் (1)

குடசமும் வெதிரமும் கொழும் கால் அசோகமும் – மணி:3/164

TOP


கொள் (10)

உய் வகை இவை கொள் என்று உரவோன் அருளினன் – மணி:2/69
விண்ணவர் கோமான் விழா கொள் நல் நாள் – மணி:3/47
பண்பு கொள் யாக்கையின் வெண் பலி அரங்கத்து – மணி:6/118
பழ விறல் மூதூர் பாயல் கொள் நடுநாள் – மணி:7/63
பொன் அணி நேமி வலம் கொள் சக்கர கை – மணி:13/57
மொய் கொள் மாக்கள் மொசிக்க ஊண் சுரந்தனள் – மணி:19/136
பண்பு கொள் யாக்கையின் படிவம் நோக்கி – மணி:25/219
முதல் என மொழிவது கரு கொள் முகில் கண்டு – மணி:27/35
அன்பு கொள் அறத்திற்கு அருகனேன் ஆதலின் – மணி:28/96
நல்ல இயல்பு நயம் இவற்றில் நாம் கொள் பயன் – மணி:30/228

TOP


கொள்க (10)

கொடி தேர் வேந்தன் கொற்றம் கொள்க என – மணி:7/79
மந்திரம் கொள்க என வாய்மையின் ஓதி – மணி:10/82
உன் பெரும் தானத்து உறு பயன் கொள்க என – மணி:14/35
ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்க என – மணி:16/119
இவைஇவை கொள்க என எடுத்தனன் கொணர்ந்து – மணி:16/123
ஏடா அழியல் எழுந்து இது கொள்க என – மணி:25/145
கொற்றவன் மகன் இவன் கொள்க என கொடுத்தலும் – மணி:25/186
அணி நகர்-தன்னை அலை கடல் கொள்க என – மணி:25/199
விளை பொருள் உரையார் வேற்று உரு கொள்க என – மணி:26/69
வெதிரேகம் மாறுகொள்ளும் என கொள்க
நாட்டிய இப்படி தீய சாதனத்தால் – மணி:29/468,469

TOP


கொள்கலம் (2)

பற்றின் பற்றிடம் குற்ற கொள்கலம்
புற்று அடங்கு அரவின் செற்ற சேக்கை – மணி:4/116,117
இறத்தலும் உடையது இடும்பை கொள்கலம்
மக்கள் யாக்கை இது என உணர்ந்து – மணி:18/137,138

TOP


கொள்கை (3)

சிறந்த கொள்கை சே_இழை கேளாய் – மணி:10/89
கோலம் குயின்ற கொள்கை இடங்களும் – மணி:28/67
கூறில் அவன் கொள்கை அஃது ஆதலில் – மணி:29/189

TOP


கொள்கையின் (2)

கோமுகி வலம்-செய்து கொள்கையின் நிற்றலும் – மணி:11/56
குமரி பாதம் கொள்கையின் வணங்கி – மணி:13/74

TOP


கொள்பவர் (1)

யாமம் கொள்பவர் ஏத்து ஒலி அரவமும் – மணி:7/65

TOP


கொள்வதற்கு (1)

மணிபல்லவம் வளம் கொள்வதற்கு எழுந்த – மணி:25/120

TOP


கொள்வது (1)

வீற்று_வீற்றாக வேதனை கொள்வது
வேற்றுமை நயம் என வேண்டல் வேண்டும் – மணி:30/221,222

TOP


கொள்ள (5)

தொழுது வலம் கொள்ள வந்தேன் ஈங்கு இ – மணி:10/69
திருவின் செல்வம் பெரும் கடல் கொள்ள
ஒரு_தனி வரூஉம் பெருமகன் போல – மணி:14/70,71
தொழுது வலம் கொள்ள அ தூ மணி பீடிகை – மணி:25/35
கொள்ள தகுவது காந்தம் என கூறல் – மணி:27/56
நகர் கடல் கொள்ள நின் தாயரும் யானும் – மணி:29/35

TOP


கொள்ளல் (1)

புன்கண் கொள்ளல் நீ போந்ததற்கு இரங்கி நின் – மணி:25/236

TOP


கொள்ளவும் (1)

வெம் திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும்
செய் வினை சிந்தை இன்று எனின் யாவதும் – மணி:3/75,76

TOP


கொள்ளாய் (1)

ஏடா அழியல் எழுந்து இது கொள்ளாய்
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது – மணி:14/12,13

TOP


கொள்ளாள் (1)

தற்பாராட்டும் என் சொல் பயன் கொள்ளாள்
பிறன் பின் செல்லும் பிறன் போல் நோக்கும் – மணி:20/71,72

TOP


கொள்ளும் (1)

கொள்ளும் இரண்டும் குறைய காட்டுதல் – மணி:29/366

TOP


கொள்ளேல் (3)

கைம்மை கொள்ளேல் காஞ்சன இது கேள் – மணி:20/122
விடுமாறு முயல்வோய் விழுமம் கொள்ளேல்
என்று இவை சொல்லி இரும் தெய்வம் உரைத்தலும் – மணி:21/34,35
துன்பம் கொள்ளேல் என்று அவள் போய பின் – மணி:23/20

TOP


கொள (7)

கலம் பகர் பீடிகை பூ பலி கடை கொள
குயிலுவர் கடை-தொறும் பண்_இயம் பரந்து எழ – மணி:7/122,123
உளம் மலி உவகையோடு உயிர் கொள புகூஉம் – மணி:12/82
குழலொடு கண்டம் கொள சீர் நிறுப்போர் – மணி:19/83
கடவுள் மா நகர் கடல் கொள பெயர்ந்த – மணி:25/201
கார் மயங்கு கடலின் கலி கொள கடைஇ – மணி:26/83
புணர்ந்திடல் மருந்து என புலம் கொள நினைத்தல் – மணி:27/74
மனம் கவல் கெடுத்ததும் மா நகர் கடல் கொள
அறவண அடிகளும் தாயரும் ஆங்கு விட்டு – மணி:28/80,81

TOP


கொளல் (1)

பொருளின் உண்மை புலம் கொளல் வேண்டும் – மணி:27/13

TOP


கொளாததுவே (1)

புரிவு இன்று ஆகி புலன் கொளாததுவே
அருஉரு என்பது அ உணர்வு சார்ந்த – மணி:30/83,84

TOP


கொளிய (1)

மடுத்த தீ கொளிய மன் உயிர் பசி கெட – மணி:12/120

TOP


கொளுத்திக்காட்ட (1)

குழல் இசை தும்பி கொளுத்திக்காட்ட
மழலை வண்டு இனம் நல் யாழ்-செய்ய – மணி:4/3,4

TOP


கொளும் (1)

காவிரி பட்டினம் கடல் கொளும் என்ற அ – மணி:28/135

TOP


கொளை (1)

கொளை வல் ஆயமோடு இசை கூட்டுண்டு – மணி:7/47

TOP


கொற்கை (1)

பொன் தேர் செழியன் கொற்கை அம் பேர் ஊர் – மணி:13/84

TOP


கொற்றம் (2)

கொடி தேர் வேந்தன் கொற்றம் கொள்க என – மணி:7/79
கொற்றம் கொண்டு குடி புறங்காத்து – மணி:23/11

TOP


கொற்றவன் (3)

கொடி தேர் தானை கொற்றவன் துயரம் – மணி:1/19
கொலைவன் அல்லையோ கொற்றவன் ஆயினை – மணி:25/174
கொற்றவன் மகன் இவன் கொள்க என கொடுத்தலும் – மணி:25/186

TOP


கொன்றனன் (1)

கொடுந்தொழிலாளன் கொன்றனன் குவிப்ப இ – மணி:6/100

TOP


கொன்றாய் (2)

நின் உயிர் கொன்றாய் நின் உயிர்க்கு இரங்கி – மணி:25/172
பின் நாள் வந்த பிறர் உயிர் கொன்றாய்
கொலைவன் அல்லையோ கொற்றவன் ஆயினை – மணி:25/173,174

TOP


கொன்றையும் (1)

குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும்
திலகமும் வகுளமும் செம் கால் வெட்சியும் – மணி:3/160,161

TOP


கொன்றோன் (1)

குருகு பெயர் குன்றம் கொன்றோன் அன்ன நின் – மணி:5/13

TOP