தோ – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தோகை 1
தோகையர் 1
தோகையும் 1
தோட்ட 1
தோட்டிக்கு 1
தோட்டு 3
தோட்டொடு 1
தோடு 2
தோப்பி 1
தோம் 1
தோய் 1
தோய்ந்த 2
தோய 1
தோரண 1
தோரணங்களும் 1
தோல் 2
தோலின் 1
தோழன் 1
தோழி 1
தோள் 2
தோளாய்க்கு 1
தோளி 2
தோளும் 2
தோற்ற 1
தோற்றத்து 2
தோற்றத்தோனும் 1
தோற்றம் 12
தோற்றமும் 5
தோற்றமை 1
தோற்றமொடு 1
தோற்றரவு 2
தோற்றற்கு 1
தோற்றி 2
தோற்றுதல் 1
தோற்றும் 2
தோன்ற 11
தோன்றப்படுவன 1
தோன்றல் 4
தோன்றலின் 1
தோன்றலும் 2
தோன்றற்கு 2
தோன்றா 4
தோன்றாது 2
தோன்றாதோ 2
தோன்றாமைக்கு 1
தோன்றாமையில் 1
தோன்றி 42
தோன்றிடும் 1
தோன்றிய 18
தோன்றியது 5
தோன்றியதும் 1
தோன்றியதூஉம் 1
தோன்றியும் 2
தோன்றிற்று 1
தோன்றினள் 1
தோன்றினன் 3
தோன்றினை 1
தோன்றினையே 1
தோன்று 4
தோன்று-வழி 1
தோன்றுதற்கு 2
தோன்றும் 14
தோன்றும்-காலை 1
தோன்றும்-காறும் 1
தோன்றுமால் 1
தோன்றுமோ 2
தோன்றுவ 4
தோன்றுவர் 2

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


தோகை (1)

சொல் பயன் உணர்ந்தேன் தோகை யானும் – மணி:28/146

TOP


தோகையர் (1)

கரும் கை தூம்பின் மனை வளர் தோகையர்
சுரும் குழல் கழீஇய கலவை நீரும் – மணி:28/5,6

TOP


தோகையும் (1)

மட மயில் பேடையும் தோகையும் கூடி – மணி:19/62

TOP


தோட்ட (1)

தோட்ட செவியை நீ ஆகுவை ஆம் எனின் – மணி:18/135

TOP


தோட்டிக்கு (1)

இயல்பு யானை மேல் இருந்தோன் தோட்டிக்கு
அயல் ஒன்று ஈயாது அதுவே கொடுத்தல் – மணி:27/47,48

TOP


தோட்டு (3)

ஒள் அரி நெடு கண் வெள்ளி வெண் தோட்டு
கரு கொடி புருவத்து மருங்கு வளை பிறை நுதல் – மணி:3/118,119
கேட்டனன் ஆகி அ தோட்டு ஆர் குழலியை – மணி:20/13
தோட்டு அலர் குழலி உள்வரி நீங்கி – மணி:21/10

TOP


தோட்டொடு (1)

வெள்ளி வெண் தோட்டொடு பொன் தோடு ஆக – மணி:5/121

TOP


தோடு (2)

வெள்ளி வெண் தோட்டொடு பொன் தோடு ஆக – மணி:5/121
தோடு அலர் கோதையை தொழுதனன் ஏத்தி – மணி:18/147

TOP


தோப்பி (1)

துழந்து அடு கள்ளின் தோப்பி உண்டு அயர்ந்து – மணி:7/71

TOP


தோம் (1)

தோரண வீதியும் தோம் அறு கோட்டியும் – மணி:1/43

TOP


தோய் (1)

மங்குல் தோய் மாட மனை-தொறும் புகூஉம் – மணி:5/58

TOP


தோய்ந்த (2)

சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை – மணி:6/116
ஆகம் தோய்ந்த சாந்து அலர் உறுத்த – மணி:20/100

TOP


தோய (1)

இரவி குலத்து ஒருவன் இணை முலை தோய
கருவொடு வரும் என கணி எடுத்து உரைத்தனன் – மணி:24/58,59

TOP


தோரண (1)

தோரண வீதியும் தோம் அறு கோட்டியும் – மணி:1/43

TOP


தோரணங்களும் (1)

தூம கொடியும் சுடர் தோரணங்களும்
ஈம பந்தரும் யாங்கணும் பரந்து – மணி:6/64,65

TOP


தோல் (2)

நரைமையின் திரை தோல் தகை இன்று ஆயது – மணி:20/44
நரம்பொடு விடு தோல் உகிர் தொடர் கழன்று – மணி:20/59

TOP


தோலின் (1)

தோலின் துன்னரும் துன்ன வினைஞரும் – மணி:28/39

TOP


தோழன் (1)

ஓவியச்சேனன் என் உறு துணை தோழன்
ஆவதை இ நகர்க்கு ஆர் உரைத்தனரோ – மணி:21/135,136

TOP


தோழி (1)

தத்து அரி நெடும் கண் தன் மகள் தோழி
வயந்தமாலையை வருக என கூஉய் – மணி:2/7,8

TOP


தோள் (2)

தூங்கு எயில் எறிந்த தொடி தோள் செம்பியன் – மணி:1/4
சுரும்பு அறை மணி தோள் துணிய வீசி – மணி:20/107

TOP


தோளாய்க்கு (1)

இள வேய் தோளாய்க்கு இது என வேண்டா – மணி:23/127

TOP


தோளி (2)

வாயில் மருங்கு இயன்ற வான் பணை தோளி
தருநிலை வச்சிரம் என இரு கோட்டம் – மணி:5/113,114
காம்பு அன தோளி கனா மயக்கு உற்றனை – மணி:21/110

TOP


தோளும் (2)

வீழ்ந்தன இள வேய் தோளும் காணாய் – மணி:20/58
தோளும் தலையும் துணிந்து வேறாக – மணி:21/59

TOP


தோற்ற (1)

பெற்ற தோற்ற பெற்றிகள் நிலையா – மணி:30/176

TOP


தோற்றத்து (2)

இளம் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
விளங்கு ஒளி மேனி விரி சடை_ஆட்டி – மணி:0/1,2
அணி அமை தோற்றத்து அரும் தவ படுத்திய – மணி:3/149

TOP


தோற்றத்தோனும் (1)

துடைத்து துயர் தீர் தோற்றத்தோனும்
தன்னில் வேறு தான் ஒன்று இலோனும் – மணி:27/93,94

TOP


தோற்றம் (12)

தோன்று-வழி விளங்கும் தோற்றம் போல – மணி:6/4
தடுமாறு பிறவி தாழ்தரு தோற்றம்
விடுமாறு முயல்வோய் விழுமம் கொள்ளேல் – மணி:21/33,34
பற்றே பவமே தோற்றம் வினை பயன் – மணி:24/107
தக்க தக்க சார்பில் தோற்றம் என – மணி:30/23
தோற்றம் பார்க்கின் மூன்று வகை ஆய் – மணி:30/27
பற்றே பவமே தோற்றம் வினைப்பயன் – மணி:30/47
வருமே ஏனை வழிமுறை தோற்றம்
தோற்றம் சார்பின் மூப்பு பிணி சாக்காடு – மணி:30/114,115
தோற்றம் சார்பின் மூப்பு பிணி சாக்காடு – மணி:30/115
தோற்றம் மீளும் தோற்றம் மீள – மணி:30/129
தோற்றம் மீளும் தோற்றம் மீள – மணி:30/129
தோற்றம் என்று இவை சொல்லும்-காலை – மணி:30/165
துன்பம் தோற்றம் பற்றே காரணம் – மணி:30/186

TOP


தோற்றமும் (5)

தவமும் தருமமும் சார்பின் தோற்றமும்
பவம் அறு மார்க்கமும் பான்மையின் உரைத்து – மணி:21/163,164
சார்பின் தோற்றமும் சார்பு அறுத்து உய்தியும் – மணி:25/5
பன்னிரு சார்பின் பகுதி தோற்றமும்
அ நிலை எல்லாம் அழிவுறு வகையும் – மணி:26/49,50
தோற்றமும் நிலையும் கேடும் என்னும் – மணி:27/181
முயல்_கோடு இன்மையின் தோற்றமும் இல் எனல் – மணி:30/216

TOP


தோற்றமை (1)

மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல் – மணி:27/54

TOP


தோற்றமொடு (1)

நிறை அழி தோற்றமொடு தொடர முறைமையின் – மணி:19/23

TOP


தோற்றரவு (2)

துன்ப கதியில் தோற்றரவு இன்றி – மணி:26/56
தோற்றரவு அடுக்கும் கை நெல்லி போல் எனல் – மணி:29/83

TOP


தோற்றற்கு (1)

தோற்றற்கு ஏற்ற கலம் மூன்று உடைத்தாய் – மணி:30/28

TOP


தோற்றி (2)

தேவரில் தோற்றி முன் செய் தவ பயத்தால் – மணி:28/139
கருவில் பட்ட பொழுதின் உள் தோற்றி
வினைப்பயன் விளையும்-காலை உயிர்கட்கு – மணி:30/61,62

TOP


தோற்றுதல் (1)

சால திரள் மயிர் தோற்றுதல் சாலும் – மணி:27/149

TOP


தோற்றும் (2)

சொல் என தோற்றும் பல நாள் கூடிய – மணி:30/206
நெல் வித்து அகத்துள் நெல் முளை தோற்றும் எனல் – மணி:30/227

TOP


தோன்ற (11)

பொங்கு நீர் பரப்பொடு பொருந்தி தோன்ற
ஆங்கு இனிது இருந்த அரும் தவ முதியோள் – மணி:0/14,15
கோவலன் உற்ற கொடும் துயர் தோன்ற
நெஞ்சு இறை கொண்ட நீர்மையை நீக்கி – மணி:4/68,69
பொன்னின் பொலிந்த நிறத்தாள் தோன்ற
ஆரும்_இல்_ஆட்டியேன் அறியா பாலகன் – மணி:6/145,146
சம்பாபதி-தன் ஆற்றல் தோன்ற
எங்கு வாழ் தேவரும் கூடிய இடம்-தனில் – மணி:6/190,191
மூன்று காலமும் தோன்ற நன்கு உணர்ந்த – மணி:15/9
மணிமேகலை தான் வந்து தோன்ற
அணி மலர் தாரோன் அவள்-பால் புக்கு – மணி:18/150,151
காலை தோன்ற வேலையின் வரூஉ – மணி:21/54
வேலை பிழைத்த வெகுளி தோன்ற
தோளும் தலையும் துணிந்து வேறாக – மணி:21/58,59
தொழுது முன் நின்று தோன்ற வாழ்த்தி – மணி:23/10
தானே தமியள் ஒருத்தி தோன்ற
இன்னள் ஆர்-கொல் ஈங்கு இவள் என்று – மணி:24/32,33
சலத்தில் திரியும் ஓர் சாரணன் தோன்ற
மன்னவன் அவனை வணங்கி முன் நின்று – மணி:24/47,48

TOP


தோன்றப்படுவன (1)

நான்கு நயம் என தோன்றப்படுவன
ஒற்றுமை வேற்றுமை புரிவு_இன்மை இயல்பு என்க – மணி:30/217,218

TOP


தோன்றல் (4)

தன்முன் தோன்றல் தகாது ஒழி நீ என – மணி:22/26
சொல்லின் மாத்திறத்தால் கருத்தில் தோன்றல்
உணர்ந்ததை உணர்தல் உறு பனிக்கு தீ – மணி:27/72,73
காரண காரிய உருக்களில் தோன்றல்
பிணி எனப்படுவது சார்பின் பிறிது ஆய் – மணி:30/97,98
தோன்றல் வீடு என துணிந்து தோன்றியும் – மணி:30/155

TOP


தோன்றலின் (1)

சத்தம் அநித்தம் செயலிடை தோன்றலின்
ஒத்தது எனின் அ செயலிடை தோன்றற்கு – மணி:29/269,270

TOP


தோன்றலும் (2)

வந்து தோன்றலும் மயங்கினை கலங்கி – மணி:10/28
பண்ணப்படுதலும் செயலிடை தோன்றலும்
நண்ணிய பக்கம் சபக்கத்திலும் ஆய் – மணி:29/132,133

TOP


தோன்றற்கு (2)

அநித்த ஏது செயலிடை தோன்றற்கு
விபக்க ஆகாயத்தினும் மின்னினும் – மணி:29/247,248
ஒத்தது எனின் அ செயலிடை தோன்றற்கு
சபக்கமாய் உள்ள கட ஆதி நிற்க – மணி:29/270,271

TOP


தோன்றா (4)

தோன்றா துடவையின் இட்டனள் நீங்க – மணி:13/10
தோன்றா துடவையின் இட்டனன் போந்தேன் – மணி:13/87
பெரியவன் தோன்றா முன்னர் இ பீடிகை – மணி:25/54
சார்பின் தோன்றா ஆரண வேதக்கு – மணி:27/103

TOP


தோன்றாது (2)

சூட்டல் திரிதல் கவர்கோடல் தோன்றாது
கிட்டிய தேசம் நாமம் சாதி – மணி:27/22,23
தோன்றாது ஆகும் அநித்தம் ஆகலின் – மணி:29/235

TOP


தோன்றாதோ (2)

அழிந்து செயலில் தோன்றாதோ எனல் – மணி:29/242
அநித்தம் ஆய் செயலிடை தோன்றாதோ கடம் போல் – மணி:29/252

TOP


தோன்றாமைக்கு (1)

செயலிடை தோன்றாமைக்கு சபக்கம் – மணி:29/237

TOP


தோன்றாமையில் (1)

செவ்விய பக்கம் தோன்றாமையில் எனல் – மணி:29/79

TOP


தோன்றி (42)

பொன் திகழ் நெடு வரை உச்சி தோன்றி
தென் திசை பெயர்ந்த இ தீவ தெய்வதம் – மணி:0/3,4
உணர்ந்தோள் முன்னர் உயர் தெய்வம் தோன்றி
மனம் கவல் ஒழிக என மந்திரம் கொடுத்ததும் – மணி:0/51,52
தீபதிலகை செவ்வனம் தோன்றி
மா பெரும் பாத்திரம் மட_கொடிக்கு அளித்ததும் – மணி:0/53,54
உயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றி
மா மலர் நாற்றம் போல் மணிமேகலைக்கு – மணி:3/2,3
வாணன் பேர் ஊர் மறுகிடை தோன்றி
நீள் நிலம் அளந்தோன் மகன் முன் ஆடிய – மணி:3/123,124
முன்னர் தோன்றி மன்னவன் மகனே – மணி:7/7
இருவர் மன்னவர் ஒரு_வழி தோன்றி
எமது ஈது என்றே எடுக்கல் ஆற்றார் – மணி:8/55,56
மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி
அன்று அ பதியில் ஆர் இருள் எடுத்து – மணி:9/55,56
பாங்கில் தோன்றி பைம்_தொடி கணவனை – மணி:9/68
தீவதிலகை செவ்வனம் தோன்றி
கலம் கவிழ் மகளிரின் வந்து ஈங்கு எய்திய – மணி:11/6,7
வந்து தோன்றி அவர் மயக்கம் களைந்து – மணி:11/131
அமுதபதி வயிற்று அரிதின் தோன்றி
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும் – மணி:11/135,136
ஐயென தோன்றி அருளொடும் அடைந்ததும் – மணி:12/24
தேவி சிந்தாவிளக்கு தோன்றி
ஏடா அழியல் எழுந்து இது கொள்ளாய் – மணி:14/11,12
ஆர் உயிர் முதல்வன்-தன் முன் தோன்றி
இந்திரன் வந்தேன் யாது நின் கருத்து – மணி:14/33,34
குண திசை தோன்றி கார் இருள் சீத்து – மணி:14/99
மது மலர் குழலாள் வந்து தோன்றி
பிச்சை பாத்திரம் கையின் ஏந்தியது – மணி:15/68,69
வட திசை விஞ்ஞை மா நகர் தோன்றி
தென் திசை பொதியில் ஓர் சிற்றியாற்று அடைகரை – மணி:15/81,82
அந்தரம் தோன்றி அசரீரி அறைதலும் – மணி:16/44
நக்க சாரணர் நயம் இலர் தோன்றி
பக்கம் சேர்ந்து பரி புலம்பினன் இவன் – மணி:16/56,57
நெடியோன் மயங்கி நிலம் மிசை தோன்றி
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று – மணி:17/9,10
ஊன் உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி
வயிறு காய் பெரும் பசி வருத்தும் என்றேற்கு – மணி:17/56,57
வந்து தோன்றி இ மா நகர் மருங்கே – மணி:17/70
அமுதசுரபியோடு ஆய்_இழை தோன்றி
ஆபுத்திரன் கை அமுதசுரபி இஃது – மணி:17/94,95
பொன் திகழ் மேனி ஒருத்தி தோன்றி
செங்கோல் காட்டி செய் தவம் புரிந்த – மணி:18/81,82
தவிர்வு இலேன் ஆதலின் தலைமகள் தோன்றி
மணிபல்லவத்திடை என்னை ஆங்கு உய்த்து – மணி:21/14,15
என் பிறப்பு உணர்ந்த என் முன் தோன்றி
உன் பிறப்பு எல்லாம் ஒழிவு இன்று உரைத்தலின் – மணி:21/17,18
மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து – மணி:21/177
உவவன மருங்கில் நின்-பால் தோன்றி
மணிபல்லவத்திடை கொணர்ந்தது கேள் என – மணி:21/185,186
மா பெரும் பூதம் தோன்றி மட_கொடி – மணி:22/57
வாய் வாள் விஞ்ஞையன் ஒருவன் தோன்றி
ஈங்கு இவள் பொருட்டால் வந்தனன் இவன் என – மணி:22/191,192
சொல்லப்பட்ட கருவினுள் தோன்றி
வினை பயன் விளையும்-காலை உயிர்கட்கு – மணி:24/120,121
உணர்வில் தோன்றி உரை பொருள் உணர்த்தும் – மணி:25/148
துன்னிய தூ மணல் அகழ தோன்றி
ஊன் பிணி அவிழவும் உடல் என்பு ஒடுங்கி – மணி:25/215,216
துளக்கம்_இல் புத்த ஞாயிறு தோன்றி
போதி மூலம் பொருந்தி வந்தருளி – மணி:26/46,47
துறவி உள்ளம் தோன்றி தொடரும் – மணி:26/58
உணர்ந்தோன் முன்னர் உயர் தெய்வம் தோன்றி
மனம் கவல் கெடுத்ததும் மா நகர் கடல் கொள – மணி:28/79,80
கார் என தோன்றி காத்தல் நின் கடன் என – மணி:28/161
மயங்குவேன் முன்னர் ஓர் மா தெய்வம் தோன்றி
உயங்காது ஒழி நின் உயர் தவத்தால் ஓர் – மணி:28/192,193
துடிதலோகம் ஒழிய தோன்றி
போதி மூலம் பொருந்தி இருந்து – மணி:30/9,10
சார்பின் தோன்றி தத்தமில் மீட்டும் – மணி:30/17
உணர்வும் உருவும் உடங்க தோன்றி
புனர்தரு மக்கள் தெய்வம் விலங்கு ஆகையும் – மணி:30/157,158

TOP


தோன்றிடும் (1)

உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும்
அ உணர்வு அவ்வவ் பூதத்து அழிவுகளின் – மணி:27/266,267

TOP


தோன்றிய (18)

ஒப்ப தோன்றிய உவவனம் தன்னை – மணி:3/169
வந்து தோன்றிய மலர் கதிர் மண்டிலம் – மணி:6/2
நாம பேரூர்-தன்னோடு தோன்றிய
ஈம புறங்காடு ஈங்கு இதன் அயலது – மணி:6/37,38
விஞ்சையின் தோன்றிய விளங்கு இழை மடவாள் – மணி:8/25
காலை ஞாயிற்று கதிர் போல் தோன்றிய
இராகுலன் தனக்கு புக்கேன் அவனொடு – மணி:9/45,46
வந்து தோன்றிய மணிமேகலா தெய்வம் – மணி:10/5
உவவனம் மருங்கில் உன்-பால் தோன்றிய
உதயகுமரன் அவன் உன் இராகுலன் – மணி:10/42,43
வந்து தோன்றிய வானவர் பெருந்தகை – மணி:11/89
வெயில் விளங்கு அமயத்து விளங்கி தோன்றிய
சாதுசக்கரன்-தனை யான் ஊட்டிய – மணி:11/102,103
முது மறை முதல்வன் முன்னர் தோன்றிய
கடவுள் கணிகை காதல் அம் சிறுவர் – மணி:13/94,95
உஞ்ஞையில் தோன்றிய யூகி அந்தணன் – மணி:15/64
நீலபதி-தன் வயிற்றில் தோன்றிய
ஏலம் கமழ் தார் இராகுலன்-தன்னை – மணி:23/67,68
மா இரு ஞாலத்து தோன்றிய ஐவரும் – மணி:24/10
தோன்று படு மா நகர் தோன்றிய நாள் முதல் – மணி:24/16
வாசமயிலை வயிற்றுள் தோன்றிய
பீலிவளை என்போள் பிறந்த அ நாள் – மணி:24/56,57
தோன்றிய பின்னர் தோன்றிய உயிர்க்கு – மணி:25/107
தோன்றிய பின்னர் தோன்றிய உயிர்க்கு – மணி:25/107
பனி பகை வானவன் வழியில் தோன்றிய
புனிற்று இளம் குழவியொடு பூம்_கொடி பொருந்தி இ – மணி:25/180,181

TOP


தோன்றியது (5)

தரும பீடிகை தோன்றியது ஆங்கு என் – மணி:8/63
இள வள ஞாயிறு தோன்றியது என்ன – மணி:10/11
கருவி மா மழை தோன்றியது என்ன – மணி:17/92
காய் வெம் கோடையில் கார் தோன்றியது என – மணி:25/105
தோன்றியது கெடுமோ கெடாதோ என்றால் – மணி:30/238

TOP


தோன்றியதும் (1)

மணிமேகலா தெய்வம் வந்து தோன்றியதும்
மணிமேகலையை மணிபல்லவத்து உய்த்ததும் – மணி:0/43,44

TOP


தோன்றியதூஉம் (1)

நினக்கு இவன் மகனா தோன்றியதூஉம்
மனக்கு இனியாற்கு நீ மகள் ஆயதூஉம் – மணி:21/29,30

TOP


தோன்றியும் (2)

தோன்றல் வீடு என துணிந்து தோன்றியும்
உணர்வு உள் அடங்க உருவாய் தோன்றியும் – மணி:30/155,156
உணர்வு உள் அடங்க உருவாய் தோன்றியும்
உணர்வும் உருவும் உடங்க தோன்றி – மணி:30/156,157

TOP


தோன்றிற்று (1)

தோன்றிற்று என்றும் மூத்தது என்றும் – மணி:30/203

TOP


தோன்றினள் (1)

வந்து தோன்றினள் மா மழை போல் என – மணி:28/183

TOP


தோன்றினன் (3)

விரி கதிர் செல்வன் தோன்றினன் என்ன – மணி:12/76
ஒரு_தான் ஆகி உலகு தொழ தோன்றினன்
பெரியோன் பிறந்த பெற்றியை கேள் நீ – மணி:15/21,22
துயர் வினையாளன் தோன்றினன் என்பது – மணி:22/211

TOP


தோன்றினை (1)

நீயோ தோன்றினை நின் அடி பணிந்தேன் – மணி:10/12

TOP


தோன்றினையே (1)

நீ தோன்றினையே நிரை தார் அண்ணல் – மணி:25/106

TOP


தோன்று (4)

ஓர் யாண்டு ஒரு நாள் தோன்று என விடுவோன் – மணி:14/92
துயர் நீங்கு கிளவியின் யான் தோன்று அளவும் – மணி:22/36
தோன்று படு மா நகர் தோன்றிய நாள் முதல் – மணி:24/16
தோன்று சார்வு ஒன்றின் தன்மையது ஆயும் – மணி:27/178

TOP


தோன்று-வழி (1)

தோன்று-வழி விளங்கும் தோற்றம் போல – மணி:6/4

TOP


தோன்றுதற்கு (2)

எல்லா பொருளும் தோன்றுதற்கு இடம் என – மணி:27/205
எப்பொருளும் தோன்றுதற்கு இடம் அன்றி – மணி:27/229

TOP


தோன்றும் (14)

வந்து தோன்றும் மட கொடி நல்லாள் – மணி:7/25
போதி தலைவனொடு பொருந்தி தோன்றும்
ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும் – மணி:11/43,44
போதி நீழல் பொருந்தி தோன்றும்
நாதன் பாதம் நவை கெட ஏத்தி – மணி:11/73,74
பேர் அறிவாளன் தோன்றும் அதன் பிற்பாடு – மணி:12/78
கதிரோன் தோன்றும் காலை ஆங்கு அவன் – மணி:12/83
உயிர் காவலன் வந்து ஒருவன் தோன்றும்
குடர் தொடர் மாலை பூண்பான் அல்லன் – மணி:15/12,13
போதி மாதவன் பூமியில் தோன்றும்
காலம் அன்றியும் கண்டன சிறப்பு என – மணி:15/29,30
வங்கம்-தன்னொடும் வந்தனன் தோன்றும்
நின் பெரும் துன்பம் ஒழிவாய் நீ என – மணி:16/42,43
ஆய் தொடிக்கு அ ஊர் அறனொடு தோன்றும்
ஏது_நிகழ்ச்சி யாவும் பல உள – மணி:21/159,160
உலகு உய கோடற்கு ஒருவன் தோன்றும்
அ நாள் அவன் அறம் கேட்டோர் அல்லது – மணி:25/46,47
காரிகை தோன்றும் அவள் பெரும் கடிஞையின் – மணி:28/194
மூன்றாய் தோன்றும் மொழிந்த பக்கத்து – மணி:29/122
சத்தம் செயலிடை தோன்றும் அநித்தம் ஆதலின் எனின் – மணி:29/246
பற்றின் தோன்றும் கரும தொகுதி – மணி:30/112

TOP


தோன்றும்-காலை (1)

புத்த ஞாயிறு தோன்றும்-காலை
திங்களும் ஞாயிறும் தீங்கு உறா விளங்க – மணி:12/86,87

TOP


தோன்றும்-காறும் (1)

புத்த ஞாயிறு தோன்றும்-காறும்
செத்தும் பிறந்தும் செம்பொருள் காவா – மணி:21/167,168

TOP


தோன்றுமால் (1)

இளம்_கொடி தோன்றுமால் இளங்கோ முன் என் – மணி:4/125

TOP


தோன்றுமோ (2)

அழிந்து செயலில் தோன்றுமோ மின் போல் – மணி:29/241
அநித்தம் ஆய் செயலிடை தோன்றுமோ எனல் – மணி:29/253

TOP


தோன்றுவ (4)

உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும் – மணி:24/126
சொல் என சொல்லில் தோன்றுவ நான்கும் – மணி:24/128
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும் – மணி:30/67
சொல் என சொல்லில் தோன்றுவ நான்கும் – மணி:30/69

TOP


தோன்றுவர் (2)

கலங்கிய உள்ள கவலையில் தோன்றுவர்
நல்_வினை என்பது யாது என வினவின் – மணி:24/134,135
கலங்கிய உள்ள கவலையின் தோன்றுவர்
நல்_வினை என்பது யாது என வினவின் – மணி:30/75,76

TOP