மி – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மிக்க (9)

மிக்க மாதவர் விரும்பினர் உறையும் – மணி:6/23
மிக்க நல் அறம் விரும்பாது வாழும் – மணி:6/103
மிக்க மயனால் இழைக்கப்பட்ட – மணி:6/201
மிக்க மா தெய்வம் வியந்து எடுத்து உரைத்த – மணி:7/90
மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும் – மணி:13/104
மிக்க மாதவர் விரும்பினர் வியந்து – மணி:15/32
மிக்க என் கணவன் வினை பயன் உய்ப்ப – மணி:16/27
மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன் – மணி:18/139
மிக்க அறமே விழு துணை ஆவது – மணி:22/138

TOP


மிக்கதனால் (1)

துன்று மிக்கதனால் பெயர் சொலப்படுமே – மணி:27/141

TOP


மிக்குழீஇ (1)

சிறையும் உண்டோ செழும் புனல் மிக்குழீஇ
நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின் – மணி:5/19,20

TOP


மிக்கோய் (2)

மிக்கோய் இதனை புறமறிப்பாராய் – மணி:4/121
மிக்கோய் கூறிய உரை பொருள் அறியேன் – மணி:6/32

TOP


மிக்கோர் (1)

மிக்கோர் உறையும் விழு பெரும் செல்வத்து – மணி:22/105

TOP


மிக்கோள் (2)

பீலிவளை என்பாள் பெண்டிரின் மிக்கோள்
பனி பகை வானவன் வழியில் தோன்றிய – மணி:25/179,180
நாவல் அம் தீவில் தான் நனி மிக்கோள்
அங்கையின் ஏந்திய அமுதசுரபியொடு – மணி:28/180,181

TOP


மிக்கோன் (1)

மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப – மணி:12/74

TOP


மிக (3)

தவ துறை மாக்கள் மிக பெரும் செல்வர் – மணி:6/97
மிக தரும் ஏதுவாய் விளங்கிற்று என்க – மணி:29/135
மிக கூறிட்டு மொழிதல் என விளம்புவர் – மணி:30/243

TOP


மிகுக்கும் (1)

வேணவா மிகுக்கும் விரை மர காவும் – மணி:28/63

TOP


மிகுத்து (1)

மூன்றின் ஒன்றின் இயல்பு மிகுத்து உரைத்தல் – மணி:30/204

TOP


மிகுத்துரை (2)

தொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை
இயைந்துரை என்ற நான்கினும் இயைந்த – மணி:30/192,193
இயல்பு மிகுத்துரை ஈறு உடைத்து என்றும் – மணி:30/202

TOP


மிகை (1)

மிகை நா இல்லேன் வேந்தே வாழ்க என – மணி:5/79

TOP


மிச்சில் (1)

உண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலை மடுத்து – மணி:13/114

TOP


மிச்சிலை (1)

உண்டு ஒழி மிச்சிலை ஒழித்து வைத்து-ஆங்கு – மணி:15/52

TOP


மிசை (14)

அறவண அடிகள் அடி மிசை வீழ்ந்து – மணி:2/61
உரை பெறு மும் முழம் நிலம் மிசை ஓங்கி – மணி:8/45
நா மிசை வைத்தேன் தலை மிசை கொண்டேன் – மணி:10/14
நா மிசை வைத்தேன் தலை மிசை கொண்டேன் – மணி:10/14
பூ மிசை ஏற்றினேன் புலம்பு அறுக என்றே – மணி:10/15
பொலம்_கொடி நிலம் மிசை சேர்ந்து என பொருந்தி – மணி:10/17
நந்தா_விளக்கே நா_மிசை_பாவாய் – மணி:14/18
நெடியோன் மயங்கி நிலம் மிசை தோன்றி – மணி:17/9
அ மலை மிசை போய் அவள் வயிற்று அடங்கினள் – மணி:20/121
மற்று அ பீடிகை தன் மிசை பொறாஅது – மணி:25/59
அனைவரை வென்று அவர் அம் பொன் முடி மிசை
சிமையம் ஓங்கிய இமைய மால் வரை – மணி:26/87,88
தெய்வ கல்லும் தன் திரு முடி மிசை
செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன் – மணி:26/89,90
பூ மிசை பரந்து பொறி வண்டு ஆர்ப்ப – மணி:28/21
மண் மிசை கிடந்து என வளம் தலைமயங்கிய – மணி:28/167

TOP


மிடை (1)

கொடி மிடை வீதியில் வருவோள் குழல் மேல் – மணி:22/146

TOP


மிடைகொண்டு (1)

மிடைகொண்டு இயங்கும் வியன் மலி மறுகும் – மணி:28/30

TOP


மிடைந்த (1)

மறம் கெழு நெடு வாள் வயவரும் மிடைந்த
தலை தார் சேனையொடு மலைத்து தலைவந்தோர் – மணி:19/122,123

TOP


மிடைந்து (1)

பூ மலர் பொழிலும் பொய்கையும் மிடைந்து
நல் தவ முனிவரும் கற்று அடங்கினரும் – மணி:26/73,74

TOP


மிளை (1)

பசு மிளை பரந்து பல் தொழில் நிறைந்த – மணி:28/25

TOP


மிறை (1)

நிறை கல் தெற்றியும் மிறை கள சந்தியும் – மணி:6/61

TOP


மின் (4)

கொடி மின் முகிலொடு நிலம் சேர்ந்து என்ன – மணி:9/6
அழிந்து செயலில் தோன்றுமோ மின் போல் – மணி:29/241
எங்கும் ஆய் ஏகாந்தம் அல்ல மின் போல் – மணி:29/251
சித்தம் உற்பவித்து அது மின் போல் என்கை – மணி:30/212

TOP


மின்னின் (2)

மின்னினும் ஆகாசத்தினும் மின்னின்
நிகழ்ந்து ஆகாசத்தில் காணாது ஆகலின் – மணி:29/238,239
மின்னின் நிகழ்ந்து ஆகாசத்து காணாது – மணி:29/249

TOP


மின்னினும் (2)

மின்னினும் ஆகாசத்தினும் மின்னின் – மணி:29/238
விபக்க ஆகாயத்தினும் மின்னினும்
மின்னின் நிகழ்ந்து ஆகாசத்து காணாது – மணி:29/248,249

TOP


மின்னே (1)

உருவு கொண்ட மின்னே போல – மணி:6/9

TOP