தூ – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


தூ (11)

சுந்தர சுண்ணமும் தூ நீர் ஆடலும் – மணி:2/23
தூ நீர் மாலை தூத்தகை இழந்தது – மணி:3/14
தூ நிற மா மணி சுடர் ஒளி விரிந்த – மணி:3/65
தூ மலர் கூந்தல் சுதமதி உரைப்ப – மணி:5/18
தூ மென் சேக்கை துயில் கண் விழிப்ப – மணி:7/112
துளங்கும் மான் ஊர்தி தூ மலர் பள்ளி – மணி:18/48
தொழுது வலம் கொள்ள அ தூ மணி பீடிகை – மணி:25/35
தூ அற துறத்தல் நன்று என சாற்றி – மணி:25/92
தூ மலர் புன்னை துறை நிழல் இருப்ப – மணி:25/157
துன்னிய தூ மணல் அகழ தோன்றி – மணி:25/215
தூ உரை கேட்டு துணிந்து இவண் இருந்தது – மணி:28/136

TOP


தூக்கலின் (1)

வாடா மா மலர் மாலைகள் தூக்கலின்
கை பெய் பாசத்து பூதம் காக்கும் என்று – மணி:3/50,51

TOP


தூக்கும் (1)

கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும் – மணி:2/19

TOP


தூங்கு (4)

தூங்கு எயில் எறிந்த தொடி தோள் செம்பியன் – மணி:1/4
தலை தூங்கு நெடு மரம் தாழ்ந்து புறம் சுற்றி – மணி:6/51
தூங்கு துயில் எய்திய சுதமதி ஒழிய – மணி:6/209
தூபம் காட்டி தூங்கு துயில் வதியவும் – மணி:7/59

TOP


தூசினும் (1)

தூசினும் அணியினும் தொல்லோர் வகுத்த – மணி:20/68

TOP


தூண்டிய (1)

தூண்டிய சினத்தினன் சொல் என சொல்லும் – மணி:16/83

TOP


தூணத்து (2)

பத்தி வேதிகை பசும் பொன் தூணத்து
முத்து தாமம் முறையொடு நாற்று-மின் – மணி:1/48,49
பவழ தூணத்து பசும் பொன் செம் சுவர் – மணி:18/45

TOP


தூத்தகை (1)

தூ நீர் மாலை தூத்தகை இழந்தது – மணி:3/14

TOP


தூபம் (1)

தூபம் காட்டி தூங்கு துயில் வதியவும் – மணி:7/59

TOP


தூம்பின் (1)

கரும் கை தூம்பின் மனை வளர் தோகையர் – மணி:28/5

TOP


தூம (1)

தூம கொடியும் சுடர் தோரணங்களும் – மணி:6/64

TOP


தூமத்து (1)

விரவிய மகளிர் ஏந்திய தூமத்து
புதல்வரை பயந்த புனிறு தீர் கயக்கம் – மணி:7/74,75

TOP


தூமொழியாரொடும் (1)

தொழுதனர் ஏத்திய தூமொழியாரொடும்
பழுது அறு மாதவன் பாதம் படர்கேம் – மணி:11/144,145

TOP


தூய (2)

தூய காரிய ஏது சுபாவம் – மணி:29/68
தூய புகை நெருப்பு உண்டு என துணிதல் – மணி:29/206

TOP


தூயோய் (1)

சொல்லினள் ஆதலின் தூயோய் நின்னை என் – மணி:28/91

TOP


தூர்த்தரும் (2)

விடரும் தூர்த்தரும் விட்டேற்றாளரும் – மணி:14/61
மெலித்து உகு நெஞ்சின் விடரும் தூர்த்தரும்
கொடி கோசம்பி கோமகன் ஆகிய – மணி:15/60,61

TOP


தூர்ந்து (1)

பொருள் வழங்கு செவி துளை தூர்ந்து அறிவு இழந்த – மணி:10/8

TOP


தூவ (2)

சுருப்பு நாண் கருப்பு வில் அருப்பு கணை தூவ
செரு கயல் நெடும் கண் சுருக்கு வலை படுத்து – மணி:18/105,106
கருப்பு_வில்லி அருப்பு கணை தூவ
தருக்கிய காம கள்ளாட்டு இகழ்ந்து – மணி:25/90,91

TOP


தூவா (1)

தாய் இல் தூவா குழவி துயர் கேட்டு ஓர் – மணி:13/11

TOP